ஆன்புக்குரிய நிழலி,
இது சிலருக்கு பூனை எலி விழையாட்டாக இருக்கு. ஆனால் எனக்கோ உயிர் மானபிரச்சினை. பிரச்சினை. பொத்தாம் பொதுவாக பேசாமல் உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை என் அறிக்கையில் இருந்து வெட்டி ஒட்டுங்கள்.
நிழலி, நான் அறிக்கை என எழுதாமல் முதல் அறிக்கை என்று எழுதியதன் பொருளென்ன? என் தோழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தியபின் 2, அறிக்கை எழுதுவேன் என சொன்னதுகூட உங்களுக்கு புரியவில்லையா?
நிழலி, ஜெயபாலன் ஏன் தயங்கவேண்டும் களத்தில் அவருக்கு தகவல்கள் தந்தவர்கள் அதன்பின்னர் புலம் பெயர்ந்திருப்பார்கள்தானே. தயங்க வேன்டியதில்லை என நினைதீர்களா?. ஆனால் அவர்கள் இன்னும் புலம்பெயராமல் ஊரில் இலங்கை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அதனால்தான் என் அறிக்கையை பிரித்து ,முதல் அறிக்கையை மட்டும் வெளியிட்டேன்.
தயவு செய்து உங்கள் பக்கம் தவறிருந்தால் மனச்சாட்சியுடன் தவறை என்று ஒத்துக்கொள்ளுங்கள். தவறில்லையெனில் தொடர்ந்தும் அப்படியே எழுதுங்கள். நான் உயிரோடிருப்பது முஸ்லிம் மக்களதும் எரிக் சோல்கைமினதும் ஆதரவால் நிகழ்ந்தது. அது என் தவறல்ல என்பதையாவது நம்புங்கள் நிழலி.
தன்நெஞ்சறிவது பொய்யற்க்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.