Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. தமிழ் நாட்டில் நடந்தது என்று அறிநது - எல்லா இயக்கங்களும் தமிழ் நாட்டில் பலவிதமாக உதவி செய்தவரும், புலிகளுக்கு எந்த விதத்திலும் எதிர்ப்பு இல்லாதவரும, உண்மையில் ஆதரவாளரும் சொல்லியது. பெயர் கூட சொன்னார். இதனால் தான் (வேறு ஒருவர் சொல்லியது) விபரம் நான் சொல்ல இல்லை
  2. எதையும் சொல்லவும். ஆனல், நான் குறிப்பாக நடந்ததை, விபரத்தை சொல்லி இருக்கிறேன். தயவு செய்து திரிக்க வேண்டாம்.
  3. டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில். இது தான் நான் அறிந்தது. அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்). குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள் கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.) அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர எவருக்கும் இது தெரியாது). அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில் புலிகள் செய்ததாக நான் அறிந்தது.
  4. சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு கிடைத்ததற்கு - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின் மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும் உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை தூக்கி பிடிக்கிறது. (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக கைது செய்து போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை - மறுக்க முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
  5. ருசியின் நோக்கில் பார்த்தால் , அதாவது சொந்த சுயநலன் அடிப்படையில், சிரியாவில் அவ்வளவு மாற்றம் இல்லை. ருசியாவுக்கு ( அல்லது எந்த வல்லரசுக்கு) தேவை அதன் நலன்களோடு இணங்கி போகும் அரசு. அது நடக்கிறது. முக்கிய நலன் படைத்தளங்களை வைத்து இருப்பது. மற்றும் படி, சிரியா (அஸாதின் அரசியல் பரிசோதனை) வீண் செலவு. உண்மையில், சிரியாவில் உள்ள பகுதிகள் அப்பச்சண்டை பிடித்தாலே ருசியாவுக்கு (எந்த அரசுக்கும், ஈரானுக்கு கூட, எந்த அரசும் விருப்புவது, நிலைத்தன்மை, கட்டுப்பாடு) பாதகம். hts இன் தலைவர், இரானின் விளையாட்டு திடலாக சிறிய இருக்காது என்பதையே அழுந்தனத்திருத்தமாக சொல்லியது. ருசியா, அமெரிக்கா பற்றி வாய் திறக்கவில்லை - இவற்றின் தளங்கள் வெளிப்படையாக இருந்தும். நடந்தது, சிரிய படை முடிவெடுத்து விட்டது சண்டை பிடிப்பதில்லை என. (இதில் தான் அசாத் பிழை விட்டது ) அத்துடன் அசாத், double game விளையாடுவதாகவும் ரசியாவும் ( இரானுக்கும் ) மிகுந்த சந்தேகமும். அரசின் (அதிகாரத்தின்) அடிப்படை monopoly over violence - அது இல்லை என்ற பின் - எந்த வல்லரசும் அந்த அதிகாரபீடத்தை அகற்றிவிட்டு, வன்முறையை பிரயோகிய கூடிய தரப்பை கொண்டுவரும். அது முன்பு எதிர்த்த தரப்பாகவும் இருக்கலாம். செய்திகள் கூட வந்துள்ளது, அசாத் படை சண்டைபிடிக்கும் என்று நம்பி நிற்பதற்கு முயன்றார் என்றும், ருஷ்யா உளவு தோலவி நிச்சயம் என்று அசாத் சொந்த விருப்பில் விலகுவற்கு இணங்க வைத்ததாக. இதுவே நடந்தது சிரியாவில். சர்வசாதாரணமான cold calculation. முன்பு சொல்லி இருந்தேன் , இந்த சிரிய பகுதிகள் இஸ்ரேல் / அமெரிக்கா மற்றும் மேற்குடன் மத்திம, நீண்டகாலத்தில் ஒட்டு போக முடியாது எனறு. அனால் , இஸ்ரேல் அதை விரைவுபடுத்திவிட்டது. மற்றது, இஸ்ரேல் இப்படி தாக்க, hts வாய் மூடி இருப்பது, hts (இஸ்ரேலுக்கு) பொன்னையன் என்ற பெயர் எடுக்காத குறை. முதலில் அமெரிக்காவிடம் தான் hts கேட்டு இருக்கும் இஸ்ரேல் ஐ தட்டி, அதட்டி வைக்குமாறு . ஏனெனில், hts அமெரிக்காவின் வால் ((ஆக குறைந்தது 2012 இல் இருந்து). அமெரிக்கா மறுத்து இஸ்ரேல் இன் தாக்குதல்களை வேண்டியிருக்கிறது போலும், அல்லது hts ஐ அமெரிக்கா புறக்கணித்து என்பது இஸ்ரேல் தாக்குதல், மற்றும் அமெரிக்கா மௌனத்தின் காரணம் https://www.timesofisrael.com/liveblog_entry/footage-shows-syrian-rebels-in-damascus-vowing-were-coming-for-jerusalem-patience-people-of-gaza/ Footage shows Syrian rebels in Damascus vowing: ‘From here to Jerusalem. We’re coming for Jerusalem. Patience, people of Gaza நான் நினைக்கிறன், hts ருசியா உடன் (அசாத் போல) ஒத்து போவது என்ற நிலைகு செல்வதாக. அசாத்தை விட இது ரசியாவுக்கு வசதியாக இருக்கலாம், ஏனெனில், நன்கு உற்சாகமான படைகள், வன்முறையை வன்முறைக்காக பாவிக்க கூடிய படைகள் - எந்த அரச அதிகார பீடத்தினதும் (அமெரிக்கா கூட) முதல் தெரிவு. பழைய குருடி கதவைத் திறவடி. Who will have the (last) laugh?
  6. இது பொதுவாக. ஆங்கிலேயர் எந்த மதமும் இருக்கலாம். அனால், ஆங்கிலேயர் என்ற இன அடையாளம் மாறாது, உ.ம் ஆக ஆர் இஸ்லாம், பௌத்தம் ... போன்று வெவ்வேறு மதத்தை கொண்டு இருந்தாலும். வேறு இனத்தவர் சந்ததி சந்ததியாக வாழ்ந்து ஆங்கிலேயர் ஆக முடியுமா? இல்லை. கலந்து ஆக முடியும் , அதாவது கலப்பவரின் சந்ததி இன அடையாளம் ஆங்கிலேய இன அடையாளத்துக்குள் சீரழிக்கப்பட்டு. ஆனால், யூதர் என்பவர்கள் யூத மதம் அவர்களின் மதமாக இருக்காமல் யூதராக முடியாது. ஆனால், யூதர் என்பதற்கு யூத மதம் மட்டும் போதாது. உடனடியாக மதம் மாறியும் யூதராக முடியாது. மத தொடர்ச்சி இல்லாமல் இருந்து இருக்கலாம், ஆனால், சந்ததிகள் வழியே யூத மதமாக இருக்க வேண்டும். அதே போல யூத (இன) அடியும் இருக்க வேண்டும். திருமணத்தில் மாத்திரம் வேறு இனத்தவர் (மதத்தவர்) யூத மதத்துக்கு மாறி, யூதர் ஆகலாம், அதிலும் பெரிய சச்சரவு, பிரச்சனைகள் இருக்கிறது. ஏனெனில், dna ஐ மட்டும் வைத்து யூதர் என்று சொல்ல முடியாது, ஏனெனில் இந்த dna வேறு (மத்தியகிழக்கு) மக்களிலும் இருக்கிறது (அது வேறு ஒரு பிரச்சனைக்கும் வழிபோடுகிறது, இப்போது யூதர் என்பவர்கள் தான் உண்மையில் முதிச யூதரின் சந்ததியா என்று.). யூதர் என்பவர் யார் என்ற (இஸ்ரேல் இன்) இறுக்கமான நிபந்தனைகளால் Ethno-religious (உண்மையில் religio-ethnic என்று, ஆனால் அப்படியான சொல்லாடல் இல்லை) பூமியாக, அரசாக இஸ்ரேல் இருக்கிறது. (உ.ம்.இஸ்ரேல் இல் இருக்கும் பலஸ்தீனியர் இஸ்ரேல் இன் பிரசைகள், அனல் இஸ்ரயேலியர் அல்ல; அதனால் அவர்களை ஒடுக்க வேறுபாடு காட்டப்படுவது சட்டவிரோதம் அல்ல. ஆம், இஸ்ரேல் இன் சட்டமன்றம் அதையே செய்யும். சொறிசிங்களம் போல, பௌத்தம் எனும் போது மறுவாதத்துக்கு இடம் இல்லை). (மறுவளமாக, இஸ்ரேல் இன் அமைப்பு வார்த்தைகளால் (செய்யப்பட்டு இருப்பது) சரி என்றால், சொறி சிங்களத்தின் அமைப்பும் சரி என்றாகிறது). எனவே அவர் சொல்லுது சரி (அவர் எந்த துறையாக இருந்தாலும்). (சைவத்திலும் இந்த தன்மை இருக்கிறது. ஏனெனில், முன்பு சொல்லி இருக்கிறேன் சைவம் (மற்றும் யூதம், வேறு மதங்களும் இருக்கலாம்) இரத்த சந்ததி (இன) மதங்கள். இரு மதங்களும் தேடிச் சென்று மாற்றுவதில்லை என்பதும்.). கரீபியனில் இருக்கும் அந்தந்த நாட்டில் உள்ளவர்கள் (சஞ்சிக்கூலிகளாக சென்றவர்களின் சந்ததி) மீண்டும் தமிழர் என அறிய (உணர) தலைப்படுவது சைவசமயத்தை அவர்கள் விடாதபடியால், அல்லது சந்ததியில் சைவமாக இருந்த படியால். அனால் தமிழை விட்டு விட்டார்கள். சுருக்கமாக, மதம், இன அடையாளம் (மறைக்கப்பட்டாலும்) துளிர்ப்பதற்கு ஊற்றாக இருக்கிறது). Islamic ... என்பது சமய அடிப்படையில் மாத்திரம் சகோதரத்துவம் (இஸ்லாமுமுக்கு உடனடியாக மாறி இஸ்லாமியர் ஆகலாம்).
  7. அப்படியான நம்பிக்கை கருத்துருவாக்கத்தை தொடக்கி வைத்தது, சீடர்களை உள்வாங்கி போதித்து என்று .. இயேசுவை தவிர எவராவது உள்ளார்களா?
  8. இதில் சொல்லப்பட்டு இருப்பதை பொதுவாக சிந்தித்தேன். அடித்தளம் என்பது அரசியல் செயற்றப்பட்டால் உருவாக்கப்படுவது, ரசிகர்களால் உருவாக்கப்பட முடியுமா? விஜே அரசியல் செயற்றப்பாட்டில் இதுவரை ஈடுபடவில்லை என்றே நினைக்கிறன் - மிகச்சசுலபன அரசியல் செயற்பாடு இப்பொது நடக்கும் ஆட்சியில் அவரின் கட்சி கொக்கை அடிப்படையில் இவரு பார்க்கப்படுகிறது என்ற அரசியல் விவாதமும், அவ்வப்போது பகிரங்க கூட்டமும். அரசியலை - சினிமா படம் தயாரிப்பதை போல விஜே அணுக முற்படுகிறாரோ?
  9. அசாத்தின் 9 பில்லியன் டாலர்கள் ரஸ்சியாவிடம் தானே இருக்கிறது. இதுக்கு தானே சிரியா சின்னாபின்னமாக்கப்பட்டது us மற்றும் அதன் வாலான நேட்டோ ஆலும். (வேறு நோக்கங்கள், இஸ்ரேல், ஈரான் போன்றவையும் இருக்கிறது. ) ஆனால் தொடங்கியது அசாத் 9 பில்லியன் ஐ cia இன் கண்ணில் மண்ணைத் தூவி வெட்டியாடியபடியால். என்ன மக்களை அசாத் போட்டு வதைக்கிறார் என்றா? மத்திய கிழக்கில் அசாத் செய்தது - ஆட்சியை எதிர்த்தவர்களுக்கு - அங்கே நடக்காதது ஒன்றும் அல்ல. அசாத்தை ஐடா கொடுமைகள், அப்பாவிகளுக்கு அமெரிக்காவின் வாலுகள் செய்து இருக்கின்றன, இப்போதும் செய்வதாக முன்னணி துருக்கி, இஸ்ரேல் (பலஸ்தீனியரின் காணியை திருடுவதற்கு, அவர்களை வதைத்து அகற்றுவதற்கு us, மேற்கின் இன் முழமையான விருப்பம்)
  10. செய்தது தமிழர் என்றா அல்லாது சிங்களவர் என்றா சந்தேகம்? தமிழர் என்றால், என்ன செய்யப்பட வேண்டும் விசமிகளுக்கு?
  11. ஆனால், நான் சொல்வது, அசாத் எதிர்ப்பு கூட்டம், அமெரிக்கா, மேற்கை அணைப்பது அசாத்தை எதிர்க்க. ஆனால், இவர்களின் பிராந்திய அரசியல், இராணுவ போக்கு, மேற்கு சொல்வதுடன் ஒத்து வராது. இஸ்ரேல், ஈரான் போன்றவற்றில் - இவர்கள் உள்ளுக்குள் (சமயத்தால்) அடிபாடு இருந்தாலும்.
  12. ஆம், ருஷ்யா அதிகாரிகள் மட்டத்தில் வாய் விட்டு ருசியா சொல்கிறது - அசாத் எதிர்ப்பு பகுதியுடன் பேரம் பேசப்பட்டு, முடிக்கப்பட்டு உள்ளது என்று. https://news.sky.com/story/syrias-president-bashar-al-assad-is-in-moscow-and-has-been-granted-asylum-confirms-russian-state-media-13269955 "Mr Assad's location was confirmed as Russian news agencies said Moscow had struck a deal with Syrian opposition leaders. A source said the rebels have guaranteed the safety of Russian military bases and diplomatic institutions in Syria." பார்க்கப் போனால், (மத்திம , நீண்ட காலத்தில்) us, மேற்கு பொல்லைக்கொடுத்து அடிவங்கப்போகும் கதையாக இருக்கலாம்.
  13. அடுத்த கட்ட அகதிகள் ஐரோப்பாவுக்குள், uk சனம் யோசிக்குது நல்லகாலம் பிரெக்ஸிட் வந்தது என்று.
  14. அமெரிக்காஇந்த தளம் கண்ணுக்கு படவில்லையோ? ரஷ்யா தளம் வைத்து இருந்தாலும், எண்ணையை சிரியவே எடுக்கிறது, விற்கிறது அமெரிக்கா தளம் (சிறிது என்பது அமெரிக்கா சொல்வது), என்னை எடுப்பது, விற்றது, முழுமையாக அமெரிக்கா கம்பனிகள். ஆட்சி அசாத்தோ அல்லது சமய, இன பயங்கரவாதிகளோ, ஒற்றுமை என்னவென்றால், வெளிநாட்டு படைகள் சிரியாவில் தொடர்ந்து இருப்பது. அரசன் ஆண்டால் என்ன ஆண்டி ஆண்டால் என்ன, வலாதிக்கங்கள் அவர்களின் நலன், வேலை ஆக வேண்டும். உக்ரைனிலும் இதுவே (அனால் சேலன்ஸ்கியின் மடைத்தனம், ஏன் சொறி சிங்களம் செய்யவில்லை, மேற்றுகின் அறிவுரை சொறி சிங்களத்துக்கு, கிநதியாவுடன் எபோதும் இணங்கி போகவேண்டும், ஏன் அப்போது உக்கிரனுக்கு ருசியாய் எதிர்க்குமாறு அறிவுரை?)
  15. இது நான் எதிர்பார்த்தது, சிறிய ராணுவம் டமாஸ்கஸ் ஐ சுற்றி ராணுவ இரும்பு கூட்டை இருக்கிறது என்று சொல்லும் போது, ஆனால் எதிர்ப்பு டமாஸ்கஸ் இந்த அயலில் வந்த போது. மருவளமாக அலப்போ, ஹோமோஸ் என்று விழுந்தபோது, அப்படியே அந்த முன்னேற்றம் டாம்ஸக்ஸ் ஐ நோக்கியே, அசாத் எதிர்ப்பு மேற்கு பக்கமாக செல்லவில்லை , இங்கேயே ருசியா இராணுவ, கடல் படை தளங்கள் உள்ளது. ருசியா தளங்கள் அப்படியே இருக்கிறது. அதை நோக்கியே அசாத்தின் flight உம் சென்றதாக பிபிசி சொல்கிறது. நிச்சயமாக பேசித் தான் முடிக்கப்பட்டு இருக்கிறது - ரசிய விட்டுக்கொடுத்த தோற்றம், அதன் நலன்கள் பாதிப்பு இல்லை என்பதால். ருசியா இநக்கிய பின், ஈரானுக்கு தெரிவு இல்லை. bbc: https://www.bbc.co.uk/news/articles/cqx89reeevgo
  16. ருசியாவோ (அல்லது அமெரிக்காவோ) ஆட்சியாளரை பற்றி ஒரு எல்லை வரைக்கும் தான் கவனம் - அவர்களின் நலன் பாதுகாக்கப்படும் வரை. இந்த அசாத் எதிர்ப்பு (உண்மையில் பயங்கரவாத) பகுதி, ருஷ்யாவின் முக்கிய தரை, கடல் படை தளங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாளர்கள் போல இருக்கிறது. அனால் அசத்துக்கு, ருசியாவின் ஒரு கடப்பாடு உள்ளது. சிரிய யுத்தம் தொடங்கியது, சிறியவை மேற்கு திட்டமிட்டு சின்னாபின்னமாகியது, 9 பில்லியன் டாலர் பணத்தை 2 மணி நேரத்தில் cia அசாத் இடம் இருந்து கைப்பற்ற முடியததால். அந்த பணத்தை ஸத் ரஷ்யாவுக்கு மாற்றி விட்டார் அந்த குறுகிய காலத்த்தில். ஆசாத்தின் குடும்பம் ரஷ்யாவுக்கே சென்றுள்ளது என்பதும்.
  17. பகிடி என்னவென்றால் அமெரிக்காவுக்கு ஒன்றுமே தெரியாதாம். அனால். Assad சிரியாவை ஒப்பீட்டளவில், எல்லா இனத்துக்கும் இடம் கொடுத்து வைத்து இருந்த ஆட்சி. சமயத்தால் அரசுக்கு மதம் பிடிப்பதை தடுத்து, கட்டி வைத்து இருந்த ஆட்சி. வரப்போவது மேற்கு நல்லது என்று சொல்லும், மதத்தால், இனத்தால் மதம் பிடித்த ஆட்சி. Assad இலும் கொடுமையானதாக இருக்கும்.
  18. நான் நினைத்தது சட்ட துறையில் உள்ள bar என்று. பின்பு அனுமதி என்பதை பார்த்து ஆம் இது அதுவல்ல, மதுபானம் விற்கும் bar க்கு அனுமதி என்று. ( ஏனெனில் சட்ட துறையில் உள்ள bar க்கு (தகமை பெற்றவர்களை) அழைப்பது என்பதே மரபு)
  19. இது அடிபட்டு போன வாதம். கிந்தியவுடன் மயிலே இறகு போடு என்பது சரி வராது. ஆக குறைந்தது சொல்வதை, கொஞ்சம் கறாராக, இலங்கையின் வடக்கு கிழக்ல் தமிழிரிடம் இறைமை இல்லாவிட்டால், கிந்தியவுக்கு நீண்ட கால ஆபத்து (எம் கண்முன்னே தெரிகிறது). இறைமை பலவழிகளில் ,பலவடிவங்களில் யதார்த்தத்தில் இருக்கலாம்.
  20. மிகவும் நல்லது, இதை கொள்கை மட்டம் வரைக்கும் கொண்டு போகவேண்டும். ( எல்லா தமிழ் கட்சிகளும் ஏற்கும் கொள்கையாக, ஏனெனில் இது தமிழ் மக்களின் மிக ஆழமான, பரந்த நலன்). சொறி சிங்களத்தை வேறு ஒரு நாடு / தேசம் என்ற முறையில் அணுகினால், இப்படியான (வெளிநாட்டு) கொள்கை இருக்கும், இருக்கவேண்டும், கொள்கை மாறாது என்பதை போல. அனால், இதை பறைதட்டாமல், இயலுமானவரை அனாமதேயமாக, ஆரவாரம் இல்லாமல், தினந்தோறும் நடக்கும் அரசியல் போல நடைமுறைப்படுத்தவேண்டும்.
  21. மொழிபெயர்ப்பு சரி என்றால். கோவிட் வைரஸ் ஆகக்குறைந்தது வேறு ஏதோ இடத்திலும் இருந்து இருக்கிறது. வூஹானை தவிர, வேறு எந்த உயிரியல் பரிசோதனை கூடங்களில் கோவிட் வைரஸ் இருக்கவில்லை என்பதை ஏன் அமெரிக்கா விசாரணை உறுதிப்படுத்தமுடியவில்லை? அப்படி உறுதிப்படுத்தும் விசாணையே நடக்கவில்லை. அமெரிக்காவும் சேர்ந்தே இந்த ஆய்வில் ஈடுபட்டது, அந்த பக்கத்தை மறைகிறது போலும்.
  22. இந்த முழுப்பிரச்சனையும் வந்தது டாலரை வன்(முறை)பலத்துக்கு துணையாக ஆயுதமயப்படுத்தியதால். டாலர் எவ்வாறு reserve currency ஆக வந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது , ஆனால், அதன் வரலாற்று குறிப்புகள் வெள்ளைமாளிகையில் இருக்குமா என்பதும், அப்படி இருந்தாலும் வெள்ளைமாளிகை அதை வெளியிடுமா என்பதும் சந்தேகம். இந்த கதையை பல வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டது. ஆனால் இப்போது கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதி, மற்றும் பொருளாதார அமைச்சரும் கிட்டத்தட்ட அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக சொல்கிறார். அதாவது இது நடந்து, மற்றும் இதன் பிரதான காரணகர்த்தா கிசிங்யர், இவர் ராஜாங்க அமைசரக இருந்த போதிலும் 1970 களில் அமெரிக்காவின் தேசிய கடன் கூடிக் கொண்டே சென்றது. அத்துடன், 1971 இல், அதுவரை டாலரை தங்கத்துக்கு மாற்றீடு செய்யும் பரிவர்த்தனை அமைப்பான Bretton Woods உம் குழம்பி, முறிந்து விட்டது. ஆனால், இதை முறித்தது US தான், ஏனெனில் தங்கத்துக்கு கொடுக்க வேண்டிய டாலரின் தொகை கூடியதால் , அதனால் US இன் தேசிய கடனும் கூடியது. ( Bretton Woods பரிவர்த்தனை திட்டமும் , ஒப்பந்தமும் 1944 இல் UN இல் செய்யப்பட்டது, 2ம் உலக யுத்தத்தில் ஓரளவு கை ஓங்கிய நிலையில், அதாவது d நாளுக்கு முடிந்து சில வாரங்கள் கடந்து) அமெரிக்காவின் தேசிய கடனை தீர்ப்பதற்கு வழிவகைகளை வெள்ளைமாளிகை ஆராய்ந்தது. கிசிங்யர் வெள்ளை மாளிகை, மற்றும் அமெரிக்கா நிதித்துறை சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களிடம், எப்படி இதை கையாளலாம் என்பதை, அவர்களின் கருத்தை அரைப்பக்கத்தில் எழுதி விளக்கம் கொடுப்பதற்கு ஓர் முறை சாரா கூட்டத்தினை ஒழுங்கு செய்தார் (இப்பொது இதை brainstorming என்கிறது மனிதவள துறை). ஒருவரை தவிர, எல்லோரும் சொல்லியது கடனை எவ்வாறாவது குறைக்க வேண்டும், எப்படி குறைக்கலாம் என்று. அந்த ஒருவர் சொல்லியது, கடனை (வரையறை இல்லாமல்) கூட்ட வசதி இருக்க வேண்டும், அந்த கடனை அமெரிக்கா தவிர்ந்த மிகுகி உலகம் கட்டக்கூடியதாக டாலர் இருக்க வேண்டும். அவர் சொல்லியது மிகுதி உலகின் சேமிப்பை அமெரிக்காவுக்கு இறக்குமதி (அதாவது கடனாக) செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படி இருக்க வேண்டுமாயின், மிகுதி உலகத்துக்கு (நிதி மற்றும் வணிக பரிவர்த்தனைக்கு) டாலர் இன்றியமையாததாக இருக்க வேண்டும். இஹை நடைமுறை படுத்துவதில் தொடக்கமே, எண்ணையை டாலரில் மட்டும் விலை குறிப்பதற்கு, விற்பத்திற்கு சவூதியுடன் அமெரிக்கா 1973 இல் ஒப்பந்தம் செய்தது, டாலரை petrodollar ஆக அழைப்பதற்கு வலிவுதா ஒப்பந்தம் அனால், எப்படி கிசிங்யர் நிதிதுறைக்குள் தீர்க்கமான முடிவு எடுக்கும் நிலைக்கு வந்தார் என்பது தெரியாது. இது சுருக்கமாக. இதில் இருந்து தெரிவது,ஆககுறைந்தது டாலருக்கு பதிலாக வேறு நாணயம் அல்லது து முறை வழியே வர்த்தகம் நடந்தால் அமெரிக்காவை மிகவும் படிக்கும் ஏனெனில் அமெரிக்கா ஏறத்தாழ இலவசமாக கடன் எடுக்க முடியாது. உடனடியாக விளைவு தெரியாது - அனால் நாள் செல்ல படிப்புகள் தெரிய வரும் மறுவளமாக, யூரோ வந்தபோது டாலருக்கு தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டத, ஆயினும் யூரோ சர்வதே நிதி பரிவர்த்தனையில் டாலரின் பங்கை குறைத்தததை தவிர இரு ஒரு தாக்கமும் இல்லை. நான் நினைக்கிறன், யூரோ மேற்கு நாணயமும் மற்றது நேட்டோ யூரோ நாட்கள் எலாம் நேட்டோ இல் அமெரிக்கா மேலாண்மைக்கு கீழ் இருப்பதால். இது மிக முக்கிய வெறுப்பது இப்போது சொல்லப்படும் டாலர் பரிவர்த்தனை மாற்றீடு திட்டத்தில், அதாவது சீன, ரஷ்யா, ஹிந்தியை, பிரேசில் போன்றவை.
  23. இதுவரையில் டொலரை மாற்றீடு செய்யும் நிதி பரிவர்த்தனை திட்டங்களுக்கு அமெரிக்கா எந்த விமரிசனமும் சொல்லாமலே இருந்தது. ஆனால், அண்மையில், ஸ்விஸ் உள்ள BIS (The Bank for International Settlements), தீடிரென, எதேச்சையாக mBridge cross-border payments என்ற, பரிசோதனை நிலையி உள்ள, mBridge cross-border payments (BRICS நாடுகளால் அமைக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுகிறதுது) என்ற டொலரை மாற்றீடு செய்யும் நிதி பரிவர்த்தனை திட்டத்தில் இருந்து விலத்தி விட்டது. அமெரிக்காவின் அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், mBridge cross-border payments, வேலைசெய்யக்கூடிய முதல் படிநிலையை (அதாவது, mvp - minimum value product (or project, நான் நினைக்கிறன் இதில் p குறிப்பது program) அடைந்துள்ளது. எனவே, மேற்கு அல்லாத மத்திய வங்கிகள் வேண்டும் என்றால், சிறு பரிவர்த்தனைகளை செய்ய முயற்சிக்கலாம். பரிவர்த்தனை தொகை, எண்ணிக்கை கூடும் போதே, எந்த திட்டத்தினதும் தாக்குப்பிடிக்கும் நிலை தெரியும். இந்த திட்டத்தின் நோக்கம் டாலரை அகற்றுவது அல்ல, அது முடியாது. ஏனெனில் வர்த்தக, நிதி உலகில் அதன் நீள, அகல, ஆழ, ஆல, கால ஊடுருவலால். அமெரிக்காவின் பலமும் ஓர் முக்கிய காரணம். மாறாக, டாலரை வைத்து அமெரிக்கா வர்த்தகத்தை தடை செய்யும் அதிகாரத்தை குறைப்பதற்கு, அகற்றுவதற்கு. அது சாத்தியம் என்பதையே இப்போதுள்ள நிலை காட்டுகிறது. அனால், டாலரின் செல்வாக்கு பாதிக்கப்படுவதற்கு இடம் இருக்கிறது. அமெரிக்கா செலவழிக்க கூடியதும், டாலரின் பலமும், அதனால் ஏறத்தாழ இலவசமாக கடன் எடுக்க கூடியதாக இருப்பதும், அமெரிக்கா பொருளாதாரம் , தொழிநுட்ப, இராணுவ பலமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஒன்றில் ஆட்டம் வந்தால், மற்றவை ஆட்டம் காணும்; காலம், இடம் போன்றவை வேறுபடலாம் Trump வெளிப்படையாக மிரட்டியது, மற்ற நாடுகள் mBridge திட்டத்தை விரைவு படுத்தக்கூடும். திருத்தம்: mvp என்ற சுருக்கத்தின் விளக்கமாக நான் புரிவது : minimum viable program (நுணலும் வாயால் கெடும்).
  24. அம்பாந்தோட்டை துறைமுகம் உண்மையில் பெரிய வணிக கதிர் வீச்சு நிலையாக மாறும் போக்கு இருக்கிறது. Las vegas கட்டப்படும் போது அது சரிவராது என்று ஒரு சாரார்,, மாபியாக்களும் அதில் முதலிட்டன, பல தடவைகள் தடங்கல் வந்து அவ்வப்போது நிறுத்தப்பட்டு, நட்டத்தில் ஓடியது, அதனால் las vegas இல் ஈடுபட தலைமை மாபியா சுட்டுக்கொல்லப்பட்டார். Las vegas கட்டப்படுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய மாபியா தலைமை, Bugsy Siegel, ஒரு யூதர். இவரும் வேறு கொலைகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், இன்று Las vegas இல் எந்தவொரு வணிக சொத்துக்கள் வாங்குவது, வாடைக்கு எடுப்பது கூட மிகவும் கடினம். அனால், Las vegas இல் சூழல், காலநிலை, அம்பாந்தோட்டையை விட கடுமையானது, பாலைவனக் கால நிலை (அனால், பாலைவனத்தில் தான் புடம் போடப்பட்ட உயிரினங்கள் தக்கென பிழைக்கும் eco system) மேற்கு, கிந்தியா அம்பாந்தோட்டையை பற்றி பிரகாரம் செய்தது, அவற்றின் நலனை அடிப்படையாக கொண்டு. மறந்து விட்டேன், port city யும் இப்படியான நிலைக்கு, அதாவது Dubai போன்று வருவதற்கு இடம் இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.