Everything posted by Kadancha
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இது நிதி அறிவுரை அல்ல. இதில் ஈடுபட்டால் உருவாகும் ஆபத்துக்கள், விளைவுகள் போன்றவற்றுக்கு ஈடுபடுபவரே பொறுப்பு. கிறிப்பிட்டோ இல் ஒரு பெரிய Airdrop நடக்க இப்பதாக கேள்வி, அது BNB அடிப்படை கிரிப்டோ வலையயில் (Binance Network) உருஅமைப்பு செய்யப்பட்டு இருக்கும் கிரிப்டோ TGE இல் (சில நாட்களுக்கு பின்) நடக்க இருப்பதாக. நீங்கள் எவராவது self custody wallet (உ.ம். metamask) ஐ bnb அடிப்படை கிரிப்டோ ஐ பரிவர்த்தனை செய்து, தற்காலிகமாக கைவிட்டு இருந்தால். அதில் மீண்டும் பரிவர்த்தனை செய்யத் தொடங்குவது நல்லது. இதுக்கு ஒரு சிறிய தொகையே போதும், உ,ம். 10 - 20 டாலர் பெறுமதி உள்ள BNB கிரிப்டோ. மிகவும் சிறிய தொகையை பாவித்து பரிவர்த்தனை தரவுகளை உருவாக்குவது. மத்திய கிரிப்ர்ட்டோ பரிவர்த்தனை தளங்களுக்கும் (CEX) இது கிடைக்க வேண்டும் என்றே நினைக்கிறன், நீங்கள் பாவிக்கும் , மத்திய கிரிப்ர்ட்டோ பரிவர்த்தனை தளங்களில் BNB trade செய்ய முடியும் என்றால், ,முயலலாம். ஏனெனில், அண்மைய பரிவர்த்தனை தரவுகள் உள்ள BNB கிரிப்டோ கணக்குகள் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது தகவல். இதன் X அறிவிப்பு: https://x.com/BNS_Club/status/1887419267903332397 குறிப்பு: நிர்வாகம் இந்த பதிவை சிறிது காலம் தொடர்ந்து முன்பக்கத்தில் நிலையாக வைத்து இருப்ப து
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இது ஊழல் அல்ல. வேலை இருக்கிறது, அதை குடும்பத்தவருக்கு கொடுத்தது, (அப்படி கூடாது இலங்கையில் என்று இல்லை என்றே நினைக்கிறன். ) சம்பளத்தை அன்னாரின் மகன் அர்ச் க்கு கொடுக்கிறார் - இதுக்கும் எதாவது உள் இணக்கப்பாடுகள் - அண்ணரின் மகன் நேரடியக அரச இயக்குனர் மற்றும் சட்டவாக்க திரையில் நேரடி அனுபவம் பெறுவது, தொடர்புகள் ஏற்டுவது (அன்னாரின் மகனுக்கு அது தெரியாவிட்டால் அஹு வேறு விடயம்) ... என்று எல்லோருக்கும் இந்த அனுபவம் கிடைக்காது, குறிப்பாக அவரின் அண்ணரின் மகனின் வயதில், இப்படியான வேலையில்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
எதிர்பார்ப்பிலும், டிரம்ப் கூடவே தருகிறார் உலகத்தை நுனிக்காலில் வைத்து இருக்க. கூத்து என்றால் இதுதான், இதை மிஞ்சாது என்ற அளவுக்கு இருக்கிறது.
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
எலன் தேவை இல்லாமல் அமெரிக்காவின், மேற்றுகின் பல்வேறு உளவுத்துறைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க போகிறார். usaid, வெலிஹத்தோற்றம் மட்டுமே உதவி என்பது எலனுக்கு தெரியவில்லை போலும்,
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
வரலாற்றில், பொதுவாக, ஒரு குறிப்பிட்ட (பொதுவாக இனக்குழு) குழு (இங்கு சீனா) திறமை குறைந்தது, பரிகாசிக்கும் குழுவிலும் (இங்கு அமெரிக்கா, மேட்ற்கு) புதுமை சிந்தனை விருத்தி குறைந்தது ... என்று பரிகசிக்கப்பட்ட குழு, பரிகாசித்த குழுவை விஞ்சியதே பொதுவான வழமை.
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
மற்றவர்களின், அறிவை, நிபுணத்துவத்தை openai, microsoft போன்றவை திருடி, செயற்கை விவேகத்தை கட்டி எழுப்பும் போது ஆஸ்திரேலியாவின், அமெரிக்க கடற்படை போன்றவற்றுக்கு திருடுவது கண்ணு க்கு தனியுரிமை மேலாண்மை போன்றவை கிஞ்சித்தும் தெரியவில்லை. ஏன் உறுத்தி சொல்லியது கூட மூடப்பட்டது, கணிசமான துறைசார் நிபுணர்கள் பல கட்டுப்பாடு சீர்திருத்தங்களுக்கு உள்ளாகினர்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
இதில் டிரம்ப் இந்த வெளித்தோற்றப் போக்கு சரியானது நாம் (us) முன்னணினயில் இருப்போம் (அப்படி இருக்க முயல்வோம்) டிரம்ப், சீனவை தடுக்த்து (அப்படி முயன்று) முன்னணினயில் இருப்போம், இருக்க முயல்வோம் என்று அர்த்தப்பட சொல்லவில்லை.
-
வடக்கில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைக்கு அடிமை - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
இந்த வளவில் தான் , அதாவது இளங்கலைஞர் மன்றம் அமைந்துள்ள காணியில் தான், யாழ்ப்பாண இராச்சியத்தின் (போர்த்துக்கேயரால் சுவடு இன்றி அழிக்கப்பட்ட, ஏனெனில் தமிழ் இராச்சியத்தின் வரலாறு சுவடு இருக்க கூடாது என்று அழிக்கப்பட்ட ) தொல்பொருள், வரலாற்று நூதன நிலையமான (மன்றம்) சரசுவதி மகால் இருந்தது. இது ஓர் முக்கிய கரணம் , இளங்கலைஞர் மன்றம் அங்கு அமைக்கப்பட்டடதற்கு.
-
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!
இது தமிழ்வின் இணையதளத்தில் வந்தது - இதில் சொல்லப்பட்டு இருப்பது, இதன் (ஆங்கில) மூலப்பிரதியில் சொல்லப்பட்டு உள்ள கருத்தையே சொல்லி இருந்த்தால், ரஷ்யா எவ்வாறு தாக்குப்பிடிக்கும் (உலகில் அத்திக்கூடிய பொருளாதார தடைக்கு உள்ளன நாடு என்று அமெரிக்கா, மேட்ற்கு ஊடகங்கள் சொல்கின்றன). இதில் இருந்த்து, மேற்றுகின் பொருளாதார தடை ருசியா பொருளாதாரத்தின் கேந்திர போக்கை மாற்றவில்லை என்று ஊகிக்க முடிகிறது.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
ஐயர்கள், ஐயர் தொழில் பற்றி சொல்லும் பொது ஒரு விடயத்தை மறந்துவிட்டேன். பழைய சந்ததி ஐயர்களுக்கு பறவை பாசை பேச (மந்திரம் சொல்ல) பயின்று, பயிற்சி எடுத்து இருப்பார்கள். நான் சொல்லும் ஐயர் சந்ததி, நல்லூரில் பிரதம குருக்களாக இருந்த குமாரசாமி குருக்களின் சந்ததிக்கு கிட்டிய சந்தத்திகளும் , அதன் முதல் சந்ததிகளும்.. எல்லா ஐயர்களும் என்று இல்லை, (குமாரசாமி குருக்கள் ) போல நன்கு பயிற்சியும், அனுபவமும் உள்ளவர்கள். பொதுவாக இவர்களே, பிரதம குருக்களாக அந்தந்த கோயில்களில் பொறுப்பை எடுப்பார்கள். பறவை பாசை என்பது வாய் மூடி, உதடுகள் இறுக்கமாக மூடி இருக்க, குரல் நாணால் பேசுவது அல்லது மந்திரம் சொல்வது. (ஒருமுறை உங்களின் பெயரை சொல்லிப் பாருங்கள். ம் அல்லது ங் அல்லது அவை போன்ற, அல்லது இவை இரண்டும் கலந்த ஒலியே எழுப்ப முடியும். இதை தவிர வேறு எந்த ஒலியும் எழுப்ப முடியாது. ஆயினும் ம், ங் எனும் ஒலிகள் இம்மை, மறுமை எனபதுடன் தொடர்புடைய மந்திரங்களுக்கு அடிப்படை ஆகும்.). விசேட நாட்களில், சந்தர்ப்பத்தில், குழுவாக ஐயர்கள்பூசை செய்யும் போது,, பொதுவாக பூசையின் இறுதி பகுதியில் (அனல் அப்படித் தான் என்று இல்லை) , மற்ற ஐயர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்த, பிரதம குருக்கள் தொடர்வார். அது பொதுவாக பறவை பாசையில் சொல்லும் மந்திரங்கள். பிரதம குருக்கள் எப்போதும் சாமியை பார்த்தபடி நிற்பதால் (அதாவது அவரின் முகம், வாய் பக்தர்களுக்கு தெரியாது ), அது தெரிவதில்லை. முன்பு சொன்னது போல, மந்திரங்கள் சொல்லும் விதத்திலும் அவை உரு, சக்தி எடுக்கும் (என்பது நம்பிக்கை). இதை சொல்வது, ஐயர் என்பது மிகவும் பொறுப்புள்ள தொழில். இந்த பறவை பாசை கலையாக வர ஏறத்தாழ 20-25 வருட பயிற்சி தேவை. எல்லோருக்கும் (அதாவது எல்லா ஐயர்களுக்கும்) கலையாக வராது. (இப்படியான பொறுப்புகளுக்கு மற்றும் பயிற்சிகளுக்கு முன்பு , சைவக் குருக்களின் இடம் எங்கே என்பதை நீங்களே யோசித்து பார்க்கலாம்)
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
தமிழர்களை பொறுத்தவரை குருக்கள் என்பது சாதியின் (இது சாதியை குறித்து அல்ல) அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும். பிராமணர் என்றால் அவர் ஐயர். குறிப்பாக ஐயர் இறந்தவருக்கு கிரியை செய்வதில்லை . குருக்கள் என்பது வேறு எந்த சாதியில் வரமுடியும், உரிய தீட்சை மூலம் (அனால், இதில் யதார்த்த சிக்கல்கள், பிரச்சனைகள் சாதி பாகுபாட்டால் இருக்கிறது). இவர்களைத் தான் , இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் (சைவக்) குருக்கள் என்பது. இந்த வேறுபாடு (அதாவது குருக்கள், ஐயர்) - ஐயர் என்பது பெரும் பொறுப்பு, சிறுவயதில் இருந்தே மந்திர பயிற்சி தொடங்கவேண்டும். அதிகாலை (இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்பது , கிட்டத்தட்ட 4.00 - முதல் சூரிய ஒளி தெரியும் வரை) மந்திர பிரணாயமம் (அதன் முதல் எழுந்து, குளித்து, உடல் (அசைவின் மூலம், கிட்டத்தட்ட யோக போல), மனம், மதி சுத்தப்படுத்தி ஆயத்தம் ஆக வேண்டும் ), உணவு கட்டுப்பாடு வேண்டும். இங்கே நான் (மந்திர) பிரணாயாமம் என்று சொல்வது ஏனெனில், ஒவொரு மந்திரங்களுக்கும் மூச்சு, எங்கே இருந்து எழுவது (அடிவயிற்றில் வயிற்றில், தொண்டையில், குரல் இழையில் ... என்று விதி இருக்கிறது, பொதுவாக இது குறிப்பது மூச்சை (மந்திர) இசையாக்குவது). (முன்பு) பிராமண ஐயர்களின் இருப்பிடம், கிட்டத்தட்ட குருகுலம் போல. அப்போதைய நிலையில் (ஏன் இப்போதும் இலங்கையில்) அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. இதனால், பரம்பரையாக ஐயர் தொழில் செய்தவர்கள் விலத்துகிறார்கள். அதில் உள்ள பிரச்சனை, பரம்பரையாக வழங்கி வரும் அறிவு மற்றும் அனுபவம் இழக்கப்படுவது. இதை சொல்லி புரிவது கடினம், ஐயர்களின் வாழ்க்கையோடு பழகினால் தான் அதன் யதார்த்தம் புரியும். பொதுவாக் சைவக் குருக்கள் இப்படியாக கிரியை செய்யமுடியாது, ஏனெனில் பயிற்சி இல்லை. (ஒரு நம்பிக்கை இப்போதும் இருக்கிறது - அதாவது பிராமணர் ஏன் விவேகமாக வந்துளார்கள் என்பதற்கு - அதாவது அரசர் காலத்தில் இருந்து, காலனித்துவம் , அதன் பின்னும் பல முக்கிய பொறுப்புகளில் - அவர்கள் செய்யும் மந்திர பயிற்சியால் என்று. இங்கேயும் பல வேறு தளங்களிலும் பிராமணர் தம்மவர்களை கூடி சேர்ப்பது என்ற வாதம் இருந்தாலும், உலகப் புகழ்பெற்ற விவேக மேதைகள் பெரும்பாலும் பிராமண (ஐயர்கள்), அதிலும் மந்திர பயிற்சி செய்தவர்கள், பின் விலத்தியவர்கள்) இறந்தவர் கிரியைக்கு பொதுவாக வருவது, கிரியை செய்வது குருக்கள். அனால், இப்போது வெளிநாடுகளில் (பிராமண) ஐயரும் இறந்தவர் கிரியைக்கு வருகிறார்கள், செய்கிறார்கள். ஆயினும், சிலர் (பிராமண ஐயர்) இறந்தவர் கிரியைக்கு அழைத்தும் வர மறுத்துள்ளதை அறிந்து, கண்டு இருக்கிறேன். (இவர்களில் தமிழ்நாட்டை மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்) இந்துவில் குருக்கள் என்பது, குருஜி என்று வடக்கு இந்தியாவில் அழைக்கப்படுபவர்களுக்கு ஒப்பானது. அனால், அப்படியான இந்து குருக்கள் என்று தமிழரில் பொதுவாக இல்லை.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழ் சோதிடத்தை பற்றி சொல்லும் போது வக்கிர பெயர்ச்சி பற்றி சொல்லி இருந்தேன். ஆனால், அந்த வக்கிர பெயர்ச்சி ஏன் தை பொங்கலை (மற்றது வருடக் கணிப்பை) பொறுத்தவரை முக்கியம் என்பதை பதிய யோசித்து விட்டு, விடுபட்டு விட்டது. ஆயினும், சென்ற இருநாட்களில் ஆங்கிலத்தில் வந்த ஓர் ஆக்கம் (விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்) படித்தபோது, தமிழரின் சோதிடமுறை சந்திரனை மையப்படுத்தியதாக இருப்பது, எமது முன்னோர் சந்திரனை பற்றி ஏதாவது அறிந்து தான் அப்படி சோதிட முறையை உருவாக்கினார்களா என்றும் சந்தேகிக்க (யோசிக்க) வேண்டி இருக்கிறது. அந்த ஆய்வின் சாராம்சம், ஆதிப்புவியின் (proto earth) மீது செவ்வாய் அளவு உள்ள விண்கல் அல்லது கோள் (இது Theia என்பது) ஏறத்தாழ 4.5 பில்லியன் வருடத்துக்கு முதல் நடந்த மோதுதலில் புவியில் இருந்து வெளித்தள்ளப்பட்ட குளம்பு நாளடைவில் குளிர்ந்து உருவாகியதே சந்திரன். அப்படி (புவியின் மீது) Theia மோதல் நடக்காமல், குளம்பு வெளித்தள்ளப்படாமல் இருந்து இருந்தால், இப்போதுள்ள சந்திரன் இப்போதுள்ள புவியின் core (மையக்கருப் புகுதி) என்ற பகுதியாக இப்போதும் இருந்து இருக்கும். சுருக்கமாக, சந்திரனை ஆதிப்புவி என்று சொல்லலாம். (அந்த ஆக்கம் கீழே முழுமையாக இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படை விஞ்ஞான ஆய்வின் இணைப்பும் ஆக்கத்தில் இருக்கிறது ) சூரியன், சந்திரன் வக்கிர பெயர்ச்சி அடையும் என்றால், அதாவது பூமியை பொறுத்தவரை, சோதிட முறையில் பின்னோக்கி நிலை எடுக்கும் அல்லது (மாயத்) தோற்றமாக பின்னோக்கி நகரும் என்றால், சூரியன் (மற்றும் சந்திரனால் கூடி வரும் திதி) மீண்டும், மீண்டும் (ஒரு வருடத்துக்குள்) மகரத்துக்குள் நுழையும் , சந்தினரால் மீண்டும், மீண்டும் திதி உருவாகும் சாத்தியக்கூறு இருக்கிறது. எனவே தைப்பொங்கல் திதி (அதாவது மகர சங்கிராந்தி, மகரத்துக்குள் சூரியன் நுழையும் நாள்) மீண்டும், மீண்டும் கூடும் சாத்தியக்கூறு இருக்கிறது, அனால், திதி சந்திரன் நிலையிலும் தங்கி இருக்கிறது. அதுவும் மீண்டும், மீண்டும் ஏற்படும் நிலை உருவாக கூடிய சாத்திய கூறு இருக்கிறது. ராகு - கேதுவைப் பொறுத்தவரை , தமிழ் சோதிடப்படி எப்போதும் 7 இராசிகள் (வீடுகள் என்று வாய்மொழியில் அழைப்பது, இது சரி, அல்லது பிழை ஆயின் குறிப்பிட்ட எண்ணிக்கை வீடுகள்) இடை வெளியிலேயே இருக்கும. இதுவே, ராகு -கேதுவுக்கு ஒரு போதும் வக்கிரப்பெயர்ச்சி இல்லாமைக்கான காரணம். அதனால் தான், சூரியன், சந்திரன், இராகு , கேது தமிழ் சோதிட முறைப்படி ஒரு போதும் வக்கிர பெயர்ச்சி அடையாது. விஞ்ஞான ஆக்கம்: https://interestingengineering.com/space/study-says-moon-formed-from-earth-mantle?utm_source=webpush&utm_medium=article (விஞ்ஞான ஆய்வு: https://www.pnas.org/doi/10.1073/pnas.2321070121). இது சிறிது ஆழம் தான், இரசாயன அறிவும் வேண்டும். Earth gave birth to Moon with a little outside help, new study surprises The study suggests that the Moon likely formed largely from Earth’s mantle material — with minimal involvement from Theia. Updated: Jan 17, 2025 07:29 AM EST Mrigakshi Dixit a day ago Moon has been Earth’s celestial companion for over four billion years. However, the formation of this natural satellite was catastrophic. It was long believed that the Moon was born from a cataclysmic collision between Earth and a Mars-sized protoplanet named Theia. But new research is challenging this long-held theory. A team of scientists from the University of Göttingen and the Max Planck Institute for Solar System Research analyzed oxygen isotopes in lunar rocks. sconutesThey uncovered another clue about how the Moon formed and how Earth got its water. The study suggests that the Moon likely formed largely from Earth’s mantle material — with minimal involvement from Theia. The Apollo era lunar samples stored at NASA’s Johnson Space Centre in Houston. Andreas Pack The cosmic mystery behind Moon’s formation The research aimed to investigate the origin of the Moon and the early history of water on Earth Oxygen isotope analysis was performed on 14 lunar samples, while 191 measurements were conducted on terrestrial minerals for the study. Isotopes are variations of the same element with differing atomic weights. The researchers employed an enhanced “laser fluorination” technique. This method involves using a laser to extract oxygen from rock samples. The measurements revealed a remarkably high similarity in the abundance of oxygen-17 (17O) isotope between samples from both Earth and the Moon. This finding has puzzled scientists for years, earning it the nickname “the isotope crisis.” This crisis in cosmochemistry refers to the long-standing puzzle that the Earth and Moon have similar isotopic compositions, particularly in oxygen. This similarity is unexpected because the prevailing theory of the Moon’s formation, the Giant Impact Hypothesis, predicts that the Moon should have a significantly different isotopic signature due to the involvement of a separate protoplanet (Theia). “One explanation is that Theia lost its rocky mantle in earlier collisions and then slammed into the early Earth like a metallic cannonball,” said Professor Andreas Pack, Managing Director of Göttingen University’ “If this were the case, Theia would be part of the Earth’s core today, and the Moon would have formed from ejected material from the Earth’s mantle. This would explain the similarity in the composition of the Earth and the Moon,” Pack added. Water delivery The study also shed light on the history of water on Earth. The Late Veneer hypothesis suggests that Earth’s water was delivered after the Moon’s formation event. This theory proposes that a series of impacts from water-rich meteorites delivered large amounts of water to Earth. The researchers found that many types of meteorites can be ruled out as the source of Earth’s water. Instead, the data strongly supports the idea that a class of meteorites called “enstatite chondrites” could have delivered the majority of Earth’s water The findings support the hypothesis that water may have arrived on Earth early in its formation — not exclusively through late impacts. “However, since the new data shows this is not the case, many types of meteorites can be ruled out as the cause of the ‘late veneer’,” said Meike Fischer, first author. “Our data can be explained particularly well by a class of meteorites called ‘enstatite chondrites’: they are isotopically similar to the Earth and contain enough water to be solely responsible for the Earth’s water,” Fischer added in the press release. The findings were published in the Proceedings of the National Academy of Sciences (PNAS).
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
ஆம்,சுனாமி வந்த போது. அன்று பலரிடம் இந்த கேள்வியை எழுப்பி இருந்தேன் சோமாலியாவுக்கு, காலிப் பக்கமாக இருக்கும் இலைங்கைத்தீவு பகுதிகளுக்கு பிடரியால் சுற்றி வளைத்து அடித்தது போல தாக்கிய சுனாமி, ஏன் யாழ் குடாநாடு மேல்புறம், தீவு பகுதிகள், மற்றும் மன்னாரை கண்ணால் பார்க்ககூடிய அளவு ஒன்றும் செய்யவில்லை. ஆயினும்,இந்த பகுதிகள் சுனாமி மையத்துக்கு நேரடியாக, எந்த தடைகளும் இல்லாமல் (கடல்படுக்கை உயர்வதை தவிர, வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் பகுதிகள் அலைகள் (shock waves ) வந்து இருக்கலாம், ஆனால், அந்த மலைபோல உயரும் கடல்படுக்கை அமைப்பால் கொந்தளிப்புடன் அடங்கிவிட்டது போலும். (மற்றது, shock waves கடற்படுக்கை அமைப்பை சிதைக்க கூடிய அளவு இல்லை என்றே ஊகிக்க வேண்டி இருக்கிறது) இதை பற்றி அன்று நான் யோசிக்கவில்லை.
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
விஜயன் இப்போதைய ஒரிசா பகுதியில் இருந்து வந்து இருந்தால், ஒரிசாவில் கப்பல் பயணத்தை தொடங்கி வரவில்லை (என்றே உறுதியாக நம்புகிறேன்). விஜயன் மற்றும் கூட்டாளிகள் என்று அடையாளப்படுத்தப்படும் கூட்டம், தரைவழி பிரயாணித்து, இப்போதைய ராமேஸ்வரம் பகுதியை அல்லது அதற்கு அண்மித்த பகுதியை அடைந்து அங்கிருந்து கடல் பயணம் செய்து இருக்க வேண்டும். fluid மற்றும் hydro mechanics அடிப்படையில், ஒரிசா வங்காளவிரிகுடாபகுதியில் இருந்து வரும் நீரோட்டம் இலங்கைத் தீவின் கடல்படுக்கை விளிம்பை தட்டும் போது திசை மாற தொடங்கி விடும். பருவக்காற்று ஓட்டத்துடன் ஒப்பிடலாம். பருவக்காற்று மலைநாட்டின் அடிவாரத்தை தட்டும்போது , பக்கவாட்டாக விலத்தி, உயர்ந்து அதன் ஓட்டம் மாறும் அதே போலவே, நீர்ச்சுழிக்கும், இலங்கைத்தீவின் கடல்படுக்கை அடிவாரத்தை தட்டும்போது உயர, மற்றும் பக்கவாட்டாக விலத்தும். அனால் இலைகத்தீவின்புவிஅமைப்பு, தென்பகுதியில் பரந்த திறந்த வெளி கடல் மற்றும் ஒப்பீட்டளவில் ஆழமும் கூடியதால், சுழியின் ஓட்டம் அதை நோக்கியே செல்லும் (least resistance அடிப்படையில்) யாழ்குடாநாடு - மன்னார் கடல் வெளியும் கடல் படுக்கையும் ஒடுக்கமும், ஒப்பீட்டளவில் வெகுவாக உயர்வதும் (செய்மதி படங்களில் மன்னார் - இராமேஸ்வரம் இடையே உள்ள கடல் படுக்கை தெரிகிறது) நீர்ச்சுழியிற்கு ஒப்பீட்டளவில் மிகக் கூடிய தடை. அதாவது, அந்த பகுதி வங்காளவிரிகுடாவில் இருந்து வரும் நீர்ச்சுழி யாழ்குடாநாடு - மன்னார் கடலை தாண்ட வேண்டுமாயின் ஒடுங்கும் இடைவெளியையும், யாழ் குடாவின் மேற்கு பக்கத்தில் இருந்து மன்னார் நோக்கி உயரும் கடல் படுக்கையயும் கடக்க வேண்டும் (காற்று கூட முதலில் பக்வடாகவே விலத்தும், அப்படி விலத்துவத்து கடினம் என்றால் தான் உயர்வது வரும் வேகத்துக்கு அழுத்தம் அதிகரிக்க.) இதனாலேயே, இலங்கைத் தீவின் கிழக்கு பக்கமாக அந்த பகுத்தியில் ஒன்றில் விடப்பட்ட, அல்லது தொலைந்த கடல்கலங்கள், மிதக்க கூடிய பொருட்கள் நீங்கள் சொல்லும் பகுதி கடலில் அவ்வப்போது கண்டறியப்படுகிறது. நான் நினைக்கிறன் நீங்கள் சொல்லும் பகுதி கடல் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஆழம் கூடியவையாக இருக்க வேண்டும் (உ.ம். காங்கேசன்துறை , வல்வெட்டித்துறை, பருத்தி துறையுடன், அதாவது குடாநாட்டின் மேல்விளிம்பு கடல் ஆழத்துடன் ஒப்பிடும் போது)
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின் அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன். ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல குறியீடுகள் உள்ளது (சூரியனுக்கு நன்றி, உழவர் நன்றி திருநாள் .. போன்றவை , இங்கே உழவர் என்றே பொதுவாக வழங்கப்பட்டு வந்து இருக்கிறது என்பதையும், விவசாயி, கமக்காரர் .. என்று வழங்கப்படவில்லை என்பதும்). அனால் தமிழரை பொறுத்தவரையில் சமயம் சார்ந்தது அல்ல என்பதற்கு, தைபொங்கல் திதி எப்படி கூடி வருகிறது, வரலாறையும் பார்க்க வேண்டும். உ.ம். ஆக போத்துக்கேயர் வருகை, கிறிஸ்தவ மதம் வலோற்கார மாற்றம், போன்றவை தமிழ் கிறிஸ்தவர்களை பொங்கலில் இருந்து விலத்தியது என்பது உண்மை. (ஆயினும் கிறிஸ்தவம் போர்த்துக்கேயருக்கு முதலே வந்து பரவத் தொடங்கி விட்டது. உ.ம். தமிழ்நாடு பறங்கி மலையில் இருக்கும் Apostle (இயேசுவின் சீடர்) St Thomas இன் சமாதியும், அதன் பின் கட்டப்பட்ட தேவாலயாமும், இவர் இயேசுவை சந்தேகித்ததாக சொல்லப்படுகிறது.) இன்னொரு வளமாக, தமிழரின் தைப்பொங்கல் ( (மகர) சங்கராந்தி) திதி கூடுவது (இது முக்கியம், திதி கணிப்பது சந்திரனின் நிலையை கொண்டு, தமிழருக்கே உரிய சோதிட முறை, வாக்கிய பஞ்சாங்கம் ) சூரியன் மகரத்தில் நுழையும் முதல் நாள், தமிழ் வருடத்தின் படி தை மாதம் 1 ம் நாள். இதை உத்தராணாய காலம் என்பது, அதாவது பூமியை பொறுத்தவரை (பூமியின் சுழற்சியால்) சூரியன் வடக்கு சார்ந்து (வடவரைக் கோள ம்சார்ந்து) நிலைக்கு வர ஆரம்பிப்பது. உத்தராணாய காலம் தமிழ் தைமாதத்தில் இருந்து தமிழ் ஆனி மாதம் வரைக்கும். சூரியன் பூமியை பொறுத்தவரை தென்னரை கோளம் சார்ந்து நிலை எடுப்பதை தட்சிணாய காலம் என்பது, இது தமிழ் ஆடியில் இருந்து தமிழ் மார்கழி வரை. (தமிழரின் சோதிடத்தை பொறுத்தவரை, சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு வக்கிர பெயர்ச்சி இல்லை, வக்கிர பெயர்சி என்பது புவியின் சார்பாக குறிப்பிட்ட கிரகம் பின்னோக்கி செல்வதான (மாயத்) தோற்றம். இந்த தோற்றம் சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு ஏற்படாது. ) ஆகவே, பொங்கல் தமிழ் சோதிட (காலக்கணிப்பின்) படி தமிழரின் விழா (அங்கே மதம் இல்லை). இதில் உள்ள முரண்பாடு எண்னென்றால், தமிரின் மற்ற எல்லா சோதிட விடயங்களும் சந்திரனை மையமாக வைத்து (ஆம் தைபொங்கலின் திதி சந்திரனை வைத்து கணிக்கப்படுவது). ஆனால், திதி கூடுவது சூரியன் மகரத்தில் நுழையும் நாள், தமிழ் தை முதல் நாள். எதை சொன்னாலும் சூரிய நிலையயும்ம் கொண்டு கணிப்பை எடுப்பது, ஆரிய அடிப்படையும் கலந்துள்ளது. (தைப்பொங்கலை, அந்த காலத்தை, அகத்தியரின் அறிவுரை படி ) இந்திர விழா என்று சோழர் தொடக்கி கொண்டாடிய காலமும் என்றும் இருக்கிறது (என்று மணிமேகலையில் இருக்கிறது). அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் சூரியனின் நிலையை கொண்டு தைபொங்கல் நாள் (இப்போதும்) கணிக்கப்படுவதால். (மற்றது, சோழர் அவர்களை சூரிய வம்சம் என நம்பிக்கையும், இது எனது தனிப்பட்ட முடிவு). மாறாக, சூரியன் மட்டும் தான் அடிப்படை என்றால், மேற்கு நாட்டவர்களும் அதை கொண்டாடி இருக்க வேண்டும், ஏனெனில் மேற்கு சோதிட கணிப்பு, முழுமையாக சூரியனை அடிப்படையாக வைத்து. ஆனால், அப்டி இல்லை. அதனால், தைப்பொங்கல் (மகர சங்கராந்தி) இந்தப் பிராந்தியதுக்கான கலாசார நாளும், கொண்டாட்டமும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அது அதன் ஒரு குறியீடே தவிர, அது தான் என்று இல்லை. அப்படி ஆயின், வேறு தினங்களில், வேறு நிகழுவுகளில் அப்படி பொங்கப்படுவதையும் பொங்கல் என்று ஏன் அழைக்க வேண்டும்? உண்மையில் பொங்கலின் அர்த்த குறியீடு, ((உணவு) வளம் கைக்கு கிடைத்து (வாழ்க்கை)) பொங்கும் (ஒரு) நாள். பொங்கி பிரவகித்து (பொஙங்கலை போல ) எழுவது ஒன்றேயொன்று தான் நீர் (ஆறு அல்லது கடல்), அடிப்படை வளம் (பொங்குவது). இதுவே பொங்கலின் அர்த்தக் குறியீடு.
-
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு
அனால், இது உத்தியோகப்பூர்வ வருகை, சந்திப்பு இல்லை என்றே நினைக்கிறன். தனிப்பட்ட வருகை என்றே நினைக்கிறன். அப்படி உத்தியோகபூர்வம் ன்றால் , கனேடிய தூதரகத்தில் நடந்து இருக்கும்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
சருகுகள் தானே மரங்களுக்கு பசளை, அதைவிட அது அந்த eco system இன் ஓர் இன்றியமையாத பகுதி. இப்போதுதீயணைப்பு படையினர் தண்ணீரால் அணைக்க கூடியதாக இருப்பதும், ஏனெனில் வளி வெக்கையாக இருக்கும் போது தண்ணீரை நிலத்துள் தங்க வைத்து இருப்பதும், பின் வெக்கையால் ஆவியாகி வளியுடன் கலந்து, புழுக்கத்தை உருவாக்கும் போது நெருப்பு இலகுவில் பரவாது. (வேகமான காற்றுத்தான் புழுக்கத்தை அகற்றுவது , நெருப்பு பரவுவது, அந்த வேகத்துக்கு ஏற்றவாறு தீயணைப்பு படையினர் தண்ணீரை கொட்ட முடியவில்லை என்பது வேறு விடயம்) அப்படி காற்று இருந்தாலும், சருகு படை தான் பரவலை குறைக்கிறது. காடு எரிவது சமநிலையை உருவாக்க (செயற்கையாக தீ வைத்து தொடங்கவிட்டால்) முன்பு இருந்த அடர்த்தி இப்போது அதிகமாகிவிட்டது, ஏனெனில் புவி ஏப்பம் அடைவதால். அப்படி தொடர்ந்து இருந்தால், மரங்கள் நீரை உறிஞ்ச, நிலம் கட்டாம் தரையாகி, பின் முழுக்காடே அழிந்து விடும். எனவே கடு எரிவது, தொடர்ந்து காடு நலமாக இருக்க அவசியம். eco system இன் ஒருபகுதி. எதிர்கால மனித சந்ததிக்கு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். (அனால்,காட்டுக்குள் போய் இருந்து கொண்டு வீடு எரிகிறது என்றால் என்ன செய்வது?)
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
போன (2024) ஆடியில் இஞ்சியை காணவும் கிடைப்பதில்லை என்ற நிலை இருந்தது. uk இல் இருந்து சென்ற எனது உறவினர், அவர் இலங்கைக்கு வெளிக்கிட முதல் நாள் தொலைபேசியில் அழைப்புப்பு வந்து, பொதிகளின் நிறையை மிகவும் குறைத்து, அந்த நிறைக்கு நான் நினைக்கிறன் 8-10 kg இஞ்சி uk இருந்து வாங்கி சென்றார். அவரிடம் நான் சொல்லி அனுப்பினேன், உங்கள் கைப்பையில் 1 kg வரை கொண்டு போய்க்கொடுங்கள், நீஙக்ள் கொண்டு போன இஞ்சியை பாவிக்க தொடங்க முதல் , அந்தக கைப்பையில் இருக்கும் இஞ்சியை விளைவுக்கு விதைக்குமாறு. அனால், அங்குள்ளவர்கள் அப்படி வீட்டில் விளைவிக்க விரும்பவில்லை (ஏனெனில் பஞ்சி?) எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? அங்கெ இருப்பவர்கள், யன்னலை திறப்பதில்லை நுளம்பு வந்து விடும் என்று. பயன்தரு மரங்கள், செடிகள் (வாடகை வீடு என்றாலும்) தறிக்கிறார்கள், குப்பை வருகிறது என்று, அதை கூட்ட வேண்டும் என்றும். இப்படி போய்ட்டு வந்தவர் சொன்ன வினோதங்கள் பல.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எதுவென்றாலும்,எல்லாருக்கும் அவரவரின் தேவைகள். விளையாட்டோ,எதுவோ எத்தனை கலியாணம் நடந்தது இந்த அமளிதுமளியில்? நான் யோசிக்கிறேன் இப்படி இயற்கை சீறும் போது அதன் அருகில் கலியாணம் போன்றவை நடத்தும் சேவையை ஆரம்பிக்கலாம் என்று (சிலருக்கு இவை போன்றவற்றில் நாட்டம்), ஏனெனில் காடு எரிவது புதுப் பிறவி எடுக்கத்தானே - அதுக்குள் போய் இருந்து கொண்டு எரிகிறது என்பது?
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
நீங்கள் கண்டீர்களா அல்லது அறிந்தீர்களா? இல்லை, நீங்கள் சொல்வதில் இருந்தே தெரிகிறது எழுந்தமான கருத்து என்று.
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
பிறந்த நாள் வாழ்துக்கள்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
ஒரு போதும், எந்த திரியானாலும், நான் எண்ணுவதும் இல்லை, தாழ்த்துவதும் இல்லை, அதேவேளை படித்தவர் என்று (ஒப்பிட்டு) உயர்த்துவதும் இல்லை. ஆனால், ஒளவையருக்கு உங்களின் பதில் என்ன? "ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது"
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
சிறிய, நான் அறிந்த சமகால வரலாறை (இது எங்கும் இணையத்தில் இருக்காது என்றே நினைக்கிறன்) சொல்லி விட்டு, வேறு நடந்த சுவாரசியமான விடயத்தையும் சொல்லி விட்டு, இதன் பதிலை சொல்கிறேன். (இதை சொல்வதால் உங்கள் தங்கையை, அவர் பயின்றதாக நீங்கள் சொல்லுவதில் எந்தவொரு விமர்சனமும் இல்லை, அனால், மருத்துவ அமைப்பு, சேவை எங்கே சென்று இருக்கிறது என்பது) நீங்கள் சொல்வது, நான் அறிந்த வரலாறோடு பொருந்தி வருகிறது. இலங்கையில் கடைசியாக சரத்வத்தேச தரத்தில் இருந்த மருத்துவ படிப்பு, பயிற்சிகன நுழையும் வருடமாக 1964 இருந்தது. ( அதாவது 1964 பின் நுழைவோரின் மருத்துவ படிப்பு சர்வதேச தரத்தில் இல்லை) அப்போதுவரை, இலங்கையில் மருத்துவம் படித்த ஒருவர், படித்த பின் 3-4 வருட அனுபவத்துடன் எந்த ஆங்கிலோ பின்னணி கொண்ட நாட்டிலும் சென்று, வைத்தியராக இணைய முடியும், அந்த நாட்டு வைத்திய துறைக்கும் வைத்தியர் தேவை, எடுக்கிறாரக்ள் என்றால். இந்த நாடுகள் - எல்லா பிரித்தானிய, காலனித்துவ பின்னணி நாடுகள், common wealth நாடுகள். மற்ற ஐரோப்பிய , மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பின்னணி கொண்ட நாடுகளிலும் இலங்கை மருத்துவ படிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் வேலை செய்வதில் மொழி பிரதான தடையாக இருந்தது. (1964 இல் படிப்பு தொடங்கினால் , 6 வருட படிப்பு, 1970 படிப்பு முடிவு , 3-4 வருட அனுபவம் - 1974 வரைக்கும் வருகிறது.) சிறிமா 2ம் தடவை ஆட்சி ஏறிய கட்டத்தில் இந்த சர்வதேச அங்கீகாரம் இழக்கப்படுகிறது. எல்லாரும் சொன்னது, ஸ்ரீமாவின் டொமினியன் (ceylon) இல் இருந்து குடியரசாக மாற்றியதே காரணம் என்று. அனால், அது முக்கிய காரணம் அல்ல என்பது நீங்கள் சொல்லிய 10ம் வகுப்பில் இருந்து தாதிக்கு பயிற்சிக்கு தெரிவாகியது. அனால், அதுவல்ல முக்கிய காரணம், சிறிமா அறிமுகப்படுத்திய HNC என்ற உயர்தர படிப்பு. மருத்துவ படிப்புக்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது. மற்றது, தரப்படுத்தல் வழியாக, மிகப் புள்ளிகள் குறைந்தோர் மருத்துவம் போன்ற உணர்திறன் உள்ள துறைக்கு தெரிவாகியது (ஆனால் இதில் பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள தமிழர்களும் உள்ளடக்கம்). அனால், எதுவென்றாலும், நிகரவிளைவு, இலங்கை மருத்துவ மற்றும் அதனுடன் நேரடி தொடர்பு உள்ள தாதி துறை தரம் இறங்கியது சர்வதேச பார்வையில். அனால் நான் கேட்பது உங்கள் தங்கை தாதி பயிற்சி செய்தார் என்பதற்கு எதாவது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வழங்கப்பட்டதா? இது உங்களையோ, நீங்கள் சொல்லுவதையோ, தங்கை கேள்வி கேட்பது, குறை சொல்லுவது அல்ல. (நீங்கள் சொல்லுவதை பார்த்தல், அப்படி ஒன்றும் வழங்கப்படவில்லை என்பதே தோற்றம்.) இலங்கை அந்த நேரத்தில் எதை தரச் சுட்டியாக பாவித்தது , அதாவது குறிப்பிட்ட காலம் தாதி பயிற்சி என்ற குறியீட்டுடன் (அந்த தனியார் வைத்திய சாலையில்) வந்த அனுபவத்தையா? அப்படி நடந்து இருந்தால், பயிற்சியால் வந்த தொழில்சார் நுட்ப அறிவு, புரிதல்கள், பிரக்ஞைகள், உள்ளுணர்வால் உருவாகும் அறிவு போன்றவை சரிபார்க்கப்படவிலைத்தானே? (அப்படி இருந்தால், அதை பயிற்சி என்று எப்படி எடுப்பது?, குறிப்பாக மனித உயிர்களை கையாள வேண்டிய தொழில் துறைக்கு). மாறாக, அப்போது (1975 - 1980) களில் மிகவும் குறுகிய மனப்பான்மை, மற்றும் மதி நிலையை உள்ள சிங்கள தலைமை எடுத்த முடிவுகளால் நடந்ததை, (அதே சிங்களவர் சரி செய்து விட, முற்றாக இலை விட்டாலும்), நாம் அதை இப்பொது செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? ( இன்னொரு சுவாரசியமான சம்பவம் , சிறிமா ஆட்சியில், சிறிமா (விஞ்ஞானம்), பொருளாதாரம், சமூகம் என்பதில் அறிந்த நிலை எங்கு இருந்தது என்பதை அறிவதகு ஒரு கூட்டத்தில், சிறிமாவிடம் அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களின் மூத்த இலிகிதர்கள் என்று பிரசன்னமாகி இருந்தனர், முறையிட்டனர் பாணுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை இருப்பதாக. சிறிமா அப்போது சொல்லியது , பாண் இல்லவிட்டால் என்ன, cake சாப்பிடலாம் தானே, cake க்கும் பஞ்சமா என்று )