Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. (சுமந்திரனை விலத்துவதல்ல நோக்கம், விலத்தினால் இபோதைய நிலையில் பிரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது ஒருபுறம். ஆகவே, இங்கே சில விரும்புவது போன்று, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது.) இங்கே பலர் தோற்றத்தை வைத்து black & white ஆக சிந்திக்கும் போக்கு. தமிழரசு செய்வது அதைவிட sophisticated என்றே நான் நினைக்கிறேன். இதில், முக்கிய மூத்த உறுப்பினர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இப்போது நடைபெற்று இருப்பது, இன்னொரு இடைக்கால சமரச முயற்சியாக. (தவறான கணிப்பாகவும் இருக்கலாம்.)
  2. இந்த சிறை அதிகாரிகளுக்கு என்ன நடக்கும்? - இவர்கள் வேளையில் இருந்து நீக்கப்படலாம் (அதிக்கூடிய தண்டனையாக). அப்படி நீக்கப்பட்டால் = அவர்கள் வேறு state இல் செய்த வேலையின் அனுபவத்தை பாவித்து, கிட்டத்தட்ட அதே தன்மையான வேளையில் சேர்வார்கள் . இவர்களின் New York வேலை செய்யும் வரையிலும் இருந்த ஓய்வூதியம், மற்றும் அதை போன்ற சலுகைகள் கிடைக்கும். நடந்திருப்பது கொலை, கிரிமினல் prosecution அல்லவா New York சட்டமாஅதிபர் சொல்லி இருக்க வேண்டும். அனால் அவரால் சொல்ல முடியாது, ஏனெனில் அவ்வளவு நிச்சயமற்ற தன்மை அமெரிக்கா அதிகாரிகள், குறிப்பாக சட்டத்துறை அதிகாரிகள், அமெரிக்காவில் சட்டத்தின் பிடியில் வரும் போது. நியூ யார்க் புகையிரத சேவையில், கருப்பர் ஒருவர் குழப்பங்காசியாக இருக்கிறார் என்று mob justice ஆக கொலை செய்த முன்னாள் சிறப்பு படை வீரர் ஒருவரை, அண்மையில் நியூ யார்க் சட்டமன்றத்தில் யூரி விடுதலை செய்ததும், அதையிட்டு நியூ யார்க் சட்டமா அதிபர் ஒன்றும் சொல்லாததும்.
  3. அப்போது இருந்த, இப்போது இருக்கும் infant mortality rate ஐ ( சிசு மரண வீதம்)ஒப்பிட முடியுமா? சரி, அப்போது ஏன் அம்மாக்கள் / அம்மம்மாக்கள் மகப்பேறு பார்ப்பது அருகி, இல்லாமல் போய், இப்பொது சொந்த தாய் பார்க்க விருப்பம் என்றாலும், அதை தவிர்த்து, தொழில்சார் சிறப்பு தேர்ச்சி அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர், தாதியர் சிசுவை சிக்கல் இன்றி, தாய் பிரசவிக்க பண்ணிய பின்பே, பிரசவித்த பெண்ணின் தயார் பராமரிப்பு இடது வந்து இருக்கிறார்? இதன் நிலையும் இப்பொது மனிதர்களுக்கு பெலே சொல்லிய நிலைக்கே வந்துள்ளது. நீங்கள் தேவை இல்லாததை ஒப்பிடுகிறீர்கள். வைத்தியர் இல்லாதது உண்மை ஆயினும், தாதிக்கு பொறுப்பு இருக்கிறது தானே? அந்த நிலையில் தாதிக்கு இருக்கும் பொறுப்பு எவ்வாறு நோயாளியை தக்க வைத்து இருப்பது, இந்த நிலைக்கு தான் படிப்பு, பயிற்சி வேண்டும். நீங்கள் சொல்லுவது பொறுப்பற்ற கதை அனால், வைத்தியசாலையில் அவ்வளவு நேரம் ஒரு மருத்துவரும் இல்லை (first inspection) என்பது உண்மையானால், அது மருத்துவ சேவையில் உள்ள பெரும் குறைபாடு (இந்த சொல்ல மிகவும் மென்மையானது நிலையை குறிக்க). மருத்துவ அல்லது தாதி துறையிலா செய்தார்? 3-4 மணித்தியாலத்தில் சாதனை செய்தார்? எவ்வாறு சாதனை செய்தார் - பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் ... இப்படி எல்லோரும் risk ஐ எடுத்து, (அனால் அவர்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு கொடுத்து , ஆனால் risk பொதுவாக நேரடியாக உயிரோடு அல்ல ), தான் சாதானை செய்தார்கள், அதுவும் வேறு பணமுதலைகளின் காசை (opm - other peoples' money) பாவித்து. இப்படி மருந்து கண்டுபிடிப்பது இருக்கிறது (அனால், மருத்துவ கண்டு பிடிப்பு இல்லை). (இதை விடயம் அறிந்த எல்லோரும் try பண்ணலாம். அனால், அப்படி அல்ல மருத்துவம், அதன் கண்டுபிடிப்புக்கள்) அப்படியா, மருத்துவ, தாதி துறை? பல சந்தர்ப்பங்களில் இவ்வளவு நேரம் கூட, 3-4 மணித்தியால கிடைக்காது உயிர் பிழைப்பதற்கு. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் தெரிந்தும் முடிச்சு போடுகிறீர்கள்?
  4. சீன செய்கிறது தான், அனால், அது இணங்கிய UN இன் தீர்மானமான, ஆறு மற்ற நாடுகளுக்கும் பங்கு இருந்தால் அதை மதித்து செயற்றப்பட வேண்டும் என்றதை. மற்றது நீர் மின் ஆணை என்றால், ஆம் ஓடுவது ஒரு இடத்தில சேமிக்கப்பட்டு பின் அது திறந்து விடப்படும், மின்பிறப்பாக்கியை இயக்க . அணைக்கட்டு நிரம்பும் வரையிலும் தண்ணீர் ஓட்டம் குறையும் பின்பு, வழமைக்கு திரும்பும் பிரமபுத்திராவில், அதற்கு ஒப்பனை பரிமாணத்தில் கிளைகளும் இருக்கிறது. சீன எங்கு காட்டுகிறது என்பதைப்பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
  5. எல்லாத் துறைக்கும் சரிவராது. நாங்கள் மட்டக்கிளப்பில் பார்த்தோம். மன்னாரில், அந்த பிரசவித்து, சில நாளில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பைப் கண்டோம் - அகிலும் தாதி நிலைமையின் அவசரத்தை, விபரீதத்தை உணரவில்லை என்பதே. இதை வெளியில் தெரிந்தவை. அப்போது ஏன் (மருத்துவ துறை), தாதி துறை என்று விழுந்து, விழுந்து படிக்கச் வேண்டும் முதலில், பின் அதை அடிப்படையாக வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். கனக்க வேண்டாம். நீங்கள் சொல்லுவது போல பயிற்சி எடுத்தார்களா? அனால், தொழில்முனில்லையாக பயிற்றுவிக்கப்படும் தாதி பயிற்சியில் அதில் உள்ள நுணுக்கங்களை அறியாது நீங்கள் சொல்வது. அதில் உண்மையில் அவர்கள் பகுதி நேரம் படிப்பு, பின் படித்தது எவ்வாறு யதார்த்த மருத்துவ நிலைமைகளில் பாவிக்கப்படுகிறது என்பதெல்லாம் பயிற்சி. எல்லாம் பரீட்சைக்கு உட்படும் - எழுத்து, வாய்மொழி என்று எல்லா முறையிலும். குறிப்பாக கட்டமைக்கப்பட்ட கற்கை நெறி வழியே அளிக்கப்படும் பயிற்சி. ஒரு nurse ஆக பணி புரிவதற்கு license தேவை. எந்த முறையில் படித்தாலும்.. உங்கள் தங்கை செய்த நீங்கள் சொல்லும் பயிற்சி - nurse ஆக register செய்வதத்தில் உரிய தகமை என்று எடுத்துக்கொள்ளப்பட்டதா? (10ம் வகுப்பில் வகுப்பில் இருந்து தாதி துறை பயிற்சி , இது எங்கு நடக்கிறது என்று சொல்ல முடியுமா, ஐரோப்பாவில்?) மனித உயிர்களை கையாளுவதை, வேறு தொழில்நுட்ப பயிற்சியுடன் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள் நான் இதை சொல்ல வேண்டும் என்று இல்லை.
  6. ஆம் கனடாவை மறந்து விட்டேன். டிரம்ப் அதியுச்ச பலத்துடன் செய்வது நல்ல பகிடி யாக த்தான் தெரிகிறது. டிரம்ப் நேரம் மிஞ்ச என்ன செய்வதென்று தெரியாமல், tom & jerry வருவது போல Tom க்கு இரட்டை சுரிகுழல் துப்பாக்கியை கையில் கொடுத்து நீ தான் அப்பா இனி ராஜா என்பதை போலவும், Tom அவ்வபோது சுடுவது போலவும். அனால், புட்டின் சீரியஸ் ஆனா போக்கு, கதையும் மிகுந்த நிதானத்துடனும், அளவுடனும், அவரில் பகிடியை எனக்கு தெரியவில்லை. அர்ச்சுனா - சொல்வது கடினம் . சில வேளையில் சீரியஸ், சிலவேளையில் ஒன்றும் தெரியாதது போல. பாப்போம். ( ஆனால், டிரம்ப் கிரீன்லாந்து பற்றி சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை, ஏனெனில், அங்கு சீன முதலில் எத்தனித்தது வளங்கள் ஆராய்ச்சிக்கும், அகழ்வுக்கும். மற்றது, புவி ஏப்பம் அடைவதால் northwest passage எனப்படும் ஆர்டிக் வழியாக கனடா, கிரீன்லாந்தை தழுவி செல்லும், பசிபிக் ஐயும் (குறிப்பாக பெரிங் கடலையும்), அத்தலான்டிக் சமுத்திரத்தையும் இணைக்கும் கடல் பாதை , ((northeast passage , நோர்வே, சைபீரியா தழுவி செல்வது ), இப்பொது ஓர் சில மாதங்களை தவிர பாவிக்கலாம் (புவி வெப்பம் அடைவதால்) இதில் ஆர்டிக் ஐ சுற்றியுள்ள நாடுகளை தவிர, சீனாவும் மிகுந்த அக்கறையாக உள்ளது, பாவிக்கிறது. எனவே, டிரம்ப் சொல்வதில் விடயம் இல்லாமல் இல்லை. அனால், சொல்லும் விதம் பகிடியாக தெரிகிறது. )
  7. சுமந்திரனுக்கு இப்போதாவது தெரிந்து இருக்க வேண்டும், அவற்றிலும் பார்க்க தமிழரசு கட்சி game விளையாடும் என்று. கட்சியில் உள்ள அநேகமானவர்கள், குடும்பம் குடும்பமாக, சந்ததி சந்ததியாக இரத்தத்தை ஊற்றி வளர்த்தவர்களின் சந்ததிகள் , அல்லது அந்த சந்ததிகளோடு நேரடி உறவு, தொடர்பு உள்ளவர்கள். எனவே தமிழரசு பிரிவது , விழுவது ஓருவருக்கும் மனம் வராது. ஆயினும், புதியவர்கள் ஆக்கபூர்வமாக செயற்றப்பட்டால், கட்சி வழிவிடும், அப்படி சுமந்திரனும் கட்சியில் முக்கிய அங்கத்தவராக மாறலாம். இப்போதும் வாய்ப்பு சுமந்திரன் கையில் அடுத்து முழுமையாக அகலவில்லை. அனால், செய்த வேலைக்கு பரிகாரம் என்பது இருக்கிறது என்பதையும் சுமந்திரன் உணர வேண்டும். அனால் , சகுனி வேலை பார்த்தால், எவர் உள்ளிருந்து கொள்ளும் வியாதி என்பது முடிவிலேயே தெரியும்.
  8. குடும்பம் தமிழரசு கட்சியின் முகம் அறியா தாபகர்கள் ஆம். குடும்பம் வழிவழியாக, தமிழரசு கட்சியின் முகம் அறியா தாபகர்கள், போசகர்கள், இரத்த நலன் போற்றுபவர்கள், வளர்த்தவர்கள் .... அது கடினம் (ஆயினும் மனித மனம் குரங்கு). தமிழரசு முடிவுக்கு வந்தால் ஒழிய மாறுவார் என்று நான் நினைக்கவில்லை. இருக்கலாம், ஆனால் அது அவரின் பார்வையில், சுமந்திரன் எண்ணம் என்ன, எதில் ஈடுபாடு, தமிழரசுக்குள் வழிக்கு கொண்டு வருவதற்கு. இப்பொது, சுமந்திரன் cvk இன் உண்மையான சொரூபத்தை கண்டுவிட்டாரோ, அல்லது cvk அசுமந்திரன் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவாகி விட்டதோ, கட்சி உட்பட. cvk, கட்சியின் , ஆகக்குறைந்தது முக்கியமானவர்கள் கருத்தை ஆகக்குறைந்தது அனாமதேயமாக அறியாது, இதுக்கு வாய் திறந்து இருக்கமாட்டார் என்றே நினைக்கிறன். மற்றது, கழற்றுவதற்கு இது ஏற்ற நேரம் அல்லவா, சுமந்திரனுக்கு மக்கள் ஆதரவில்லை என்று தேர்தல் முடிவுகள்.
  9. யார் வேலியில் போகும் ஓணானை தூக்கி மடிக்குள் விட்டது? மாறாக, ருசியா, நேட்டோ, eu இல் இணையும் முயற்சியுடன். ... நேட்டோ, eu வில் இருக்க முடியாது என்றாகி விட்ட பின், ருசியா வலிந்து ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முயன்றத. அதுவும் சேர்பியாவை பிரித்து, கொசோவோவில் நேட்டோ இன் மிகப்பெரிய இராணுவத்தளம் நேட்டோ அமைத்த காலத்தில் இருந்து ... எல்லாவற்றையும் தாம் ஏதோ விண்ணர் என்ற கணக்கில் , ஒன்றில் இருந்த (ஏவுகணை மற்றும் அணு ஒப்பந்தங்களை) முறித்து, மற்றும் செய்த ஒப்பந்தங்களை ருசியாவை லகவகாமக ஏமாற்றி விட்டோம் என்று உக்கிரைன் இலும் (பின் மார்தட்டி), இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது மேற்கு, நேட்டோ. அமெரிக்காவும், மேற்கு நேட்டோ உம் முறித்த ஒப்பந்தங்கள் எத்தனை? இனி ஒருபோதும் ஒப்பந்தங்கள் என்று பெரிதாக நடக்காது.
  10. தெரிந்து இருக்கும், சந்தேகித்து இருக்கலாம், (அனால் இப்போது ஏதாவது உறுதியான ஆதாரங்கள் சிக்கி இருக்கலாம்.) மற்றது, பிரியப்போகுது என்று வெளியில் சொன்னால் பிரிவதன் சாத்தியக்கூறு அதிகம். உள்ளுக்குள் வைத்து முடிகலாம் என்று பலரு சிந்தித்து இருக்கலாம். அனால், சுமந்திரன் தன் வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறாரோ? (ஏனெல், சுமந்திரனுக்கு இப்போது வேறு வேலை இல்லைத்தானே). அல்லது, சுமந்திரன் இப்படி ஆக்கினை கொடுப்பது, தேசியப்பட்டியல், பா.உ அவருக்கு கொடுக்க வைக்கும் அழுத்தமாவும் பாவிக்கலாம்
  11. நான் சொன்னேன் அல்லவா, டிரம்ப் வர முதலே அதிருது என்று. வெளியில் கிரீன்லாந்து, பனாமா கால்வாய் ... சரி உள்ளே என்று பார்த்தல், டிரம்ப் தெரிந்து இருக்கும் வலது கை, சட்டமாதிபராக, பதவியில் இருந்து கொண்டு தனக்கும் , நண்பர்களுக்கும் பாலியல் உறவு வைக்க பெண்களுக்கு பணம் கொடுத்தது. டிரம்ப் ஆட்சி ஏறியவுடன், எப்போதும் உலக அரங்கும், அமெரிக்காவும் துள்ளப் போகுது.
  12. பிரார்த்தனைகளும், இழந்தவர்களுக்கு ஆறுதலும்.
  13. இது சிங்கள பகுதிகளில் சகஜம். நான் அறிந்த வரையில், வேண்டாம் என்றால் பெண் வேண்டாம் என்று விட்டு அகன்றுவிடுவது. ஆங்கிலத்தில் சிங்களவர் சொல்வது like our grandma buggered with the lion. (நான் நினைக்கிறன் பெண்களும், ஆண்களை அழைப்பார்கள் என்று). கேள்வி, போலீஸ் (அதனால் உடன்படவேண்டும்) என்றா, அல்லது சாதாரண மக்கள் போல அழைத்தாரா? (இதை சொல்வதால், நான் இதை சகஜம் ஆக்குகிறேன் என்பதல்ல. சிங்களவரின் வெளிதெரியாத கலாசாரம் என்று அறிந்ததை சொல்கிறேன்) (முன்பு இதை சிங்களவர் உள்ளுக்குள் பெருமையாக எடுத்து கொண்டனர். அனால் இப்போது, வெளிநாட்டவர்கள் அறிந்து, வரலாறும் இருப்பதால், பரிகசிப்பை (தாங்காது) சிங்கள புத்திசீவிகள் எப்படியாவது விஜயனை வரலாற்றில் இரண்டு அகற்றி விட வேண்டும் எனும் முனைப்பு; புத்தர் தென்பகுதி காட்டில் பிறந்து கபிலவஸ்து சென்றது எனும் கதை, இந்த நீக்கத்துக்கு போடப்படும் முதல் அடி)
  14. என் வடகிழக்கு மக்கள் சீனாவை வித்தியாசமாக நடத்துவது? சீன எந்த உதவி செய்ததாலும், கிந்தியாவுக்கு எதிராக ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது எமது அரசியல் வாதிகள், பெரும்பகுதி மக்களும் எல்லா நாடுகலும் அதன் நலனை முன்னிறுத்தாமல் ஒருபோதும் எதுவும் செய்யாது, எம்மவர்கள் சொல்வது கிந்தியா அப்படி செய்வது சரி, அனால் சீனா பிழை. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடமும் இந்த போக்கு இருக்கிறது. உலகில், ஏன் சிங்கள இடங்களில் கூட, எமது (மக்களின்) தேவை உள்ளது போல, அல்லது அதற்கு அதிகமாக தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் இப்படி இருந்தால், ஏன் சீன எம்மை கணக்கில் எடுக்க வேண்டும்?
  15. அர்ச்சுனாவை யாரோ பப்பாவில் ஏற்றி விட்டு இருக்கிறார்கள்; கூத்து பார்க்கிறார்கள். அனால் , அர்ச்சுனாவின் horizon (அறிவு, அனுபவப் புலம், தமிழ் சரி என்று நினைக்கிறன், வர வர ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் தேட அல்லது ஆக்க வேண்டி உள்ளது, என் தமிழ் தேய்கிறதோ?) அவ்வளவு விரிவடையவில்லையா? அல்லது, அர்ச்சுனவின் ஆர்வ அவசரத்தை, சிங்கள அரசு அர்ச்சுனவுக்கு தெரியாமல் பாவிக்கிறதா? புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து.
  16. இதுக்கெல்லாம் நல்ல மருந்து, புளிக்கஞ்சியும், கீரைக்கஞ்சியும் (இறால், முருங்கை இலை, தேங்காய்ப்பாலும் போடவேண்டும்)
  17. உதாரணமாக, அன்று மட்டக்கிளப்பில் கொளுத்தும் வெயிலில் ஓட்டப்போட்டி ஓடி ..வயிறு கொழுவி, மயக்கமுறும் தறுவாயில் வைத்தியசாலை சென்று... இவருக்கு, அப்படி படிப்பு, பயிற்சி இல்லாதவர் பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? (அந்த பையனை 2-3 மணித்தியாலம் கவனிக்காதது மாத்திரம் அல்ல, பார்த்த போது சும்மா தண்ணீரை கொடுத்தார்கள் என்றே செய்தி வந்தது. பார்த்தது வைத்தியர் அல்ல என்றும் ...) இது எப்படி நடைபெற்றது? நன் அன்றே யோசித்தது இது போன்றது நடந்து இருக்கலாம் - அதாவது படிப்பு, பயிற்சி இன்றி, வேளையில் கட்டமைக்கப்பட்ட வேலையில்-பயிற்சி இல்லாது வேலை பழக்க எத்தனிப்போர். சொன்னது நடைபெற்று இருக்கிறது 1. பணிகள் சுமத்தப்பட்டது. 2. விடயத்தை அறியாது, தண்ணி விடாய் என்று விளங்கி ... நான் நினைக்கிறன், அப்படி பார்த்த போது கூட உப்பு நீரை கொடுத்து இருந்தால் அந்த பையன் பாதிப்புகளுடன் தப்பி இருக்கலாம்.
  18. உங்களின் responsibility கம்பனிக்கு மட்டும் தான், சட்ட responsibility கம்பனிக்கு. பொதுவாக responsibility க்கு சட்ட வலு /பிடி இல்லை, duty என்பதற்கு உள்ள சட்ட பிடி / வலு போல. உங்களுக்கு வந்தால், கம்பனியின் முறையை (instruction) பாவித்து, , assurance level க்கு ஏற்ப, கம்பனி ஏற்றுக்கொள்ளும் இயங்கு அபாய மட்டத்துக்கு (இதை அந்த இயங்கு அபாயத்தை கண்காணிக்கும் பிரிவு உறுதிசெய்யும் ) ஏற்ப எனது முடிவு. உங்களின் முடிவு அந்த மட்டம், அல்லது அதற்குள் இருத்தல் வேண்டும். பொறுப்பு (responsibility) எடுக்காததன் காரணம் பொதுவாக கம்பனிகளில், சிறு தவறுக்கும், வேலை நீக்கம், பணி இறக்குதல், சம்பளத்தை குறைதல். கட்டுப்பாடு நடவடிக்கைகள் (disciplinary action) போன்றவை.
  19. எந்த துறையில் வேலை செய்தார்கள் என்பதும். மருத்துவ சேவை இல்லாவிட்டால் தொடர்வதில் - அது ஒரு அரசியல் பிரச்சனை போலவே தெரிகிறது. மருத்துவ சேவை துறை என்றால், பணிகள் சுமத்தப்படாது என்ற பகிரங்க வாக்குறுதியும். அனால், எந்தவொரு மருத்துவமனையும் அதை வழங்காது. பிழைவிட்டால் உயிராபத்து இருப்பதால். அவர்களை அறியாமலே தவறு இழைப்பதற்கான சாத்திய கூறுகள் கூட. அனால், இதை முன்பே யோசித்து இருக்க வேண்டும். (மருத்துவ துறையில் தகமை, பயிற்சி இல்லாதார் (அது யார் என்றாலும் வைத்தியர், தாதி, உதவித் தாதி) என்றால், உங்களுக்கு மருத்துவ செய் செய்யும் சேவையை ஏற்றுக்கொள்வீர்களா?) மருத்துவராக அவர் பயின்று, பயிற்சி எடுத்து தானே இருக்கிறார். நீங்கள் சொல்வதில் தரம் (அது கூட வேறுபாட்டால்) தான் கேள்வி? எப்படி கொரன முன் / பின் வேறுபாட்டை கடந்தது என்பதை பொறுத்தத்து. ஆயினும், குறித்த நாட்டு (ஜேர்மனி) மருத்துவ ஒழுங்குபடுத்தல் அமைப்பு (medical regulatory authority), மற்றும் மருத்துவ துறைசார் அமைப்பு (மெடிக்கல் professional body) அங்கீகரிக்காது இது நடக்க முடியாது. எனவே, அவர்கள் தகமைகளே சரி, பொருத்தம் பார்த்தே இது நடைபெறுகிறது. ஏனெனில், அநேகமான europe, america, canada , australia, newzealand, japan, now china மருத்துவ படிப்பு வருடாவருடம் update பண்ணுவது, கோரான காலத்தில் அவை உங்கள் நாட்டு தரத்தை அடைந்து இருக்கலாம்.
  20. ஆங்கிலத்தில் சொல்கிறேன். நீங்கள் சொல்வது assurance (process). இது கம்பனி நிர்ணயித்த எதோ ஓர் மட்டத்தில் (எண்ணாகவும், சொல்லல் வர்ணிக்கப்படும் அல்லது இவை இரண்டும் கலந்து), உங்கள் (அல்லது கொடுப்பவர்) அனுபவ புரிதலில், அந்த மட்டத்தில் அல்லது அதை விடக் கூட உள்ளது. மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இருப்பது accounabilitty (பொறுப்பு). அத்துடன், மருத்துவர் செய்வது , இருக்கும் பொறுப்பு duty (of care) - இங்கு duty என்ற சொல்லே சட்டவலு, சட்ட அடிப்படையிலான பொறுப்பு ஆக்கி விடுகிறது. எனவே, வேறுபாடு இருக்கிறது.
  21. இது தகமை அடையாளத்தை திருடி செய்தது. (சரி பார்க்காமல்) நிறுவனம் அவ்வாறு சொன்னதை நம்பி, அந்த நிலையில் அவரை பணிக்கு அமர்த்தியது. அந்த தகமை உள்ள உரிய வைத்தியர் வந்த்து இருந்தாலும், உங்கள் நிறுவனம் அந்தப்பணியில் அமர்த்தி இருக்கும் தானே ? மற்றது, நீங்கள் சொல்வது வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் போல தெரிகிறது. நான் சொல்வது தகமை அடிப்படையில் , சிகிச்சை, மருத்துவ சேவைகள் வழங்கும் வைத்தியசாலையில், குறிப்பாக அரச வைத்தியசாலையில், ஒவொருவரின் படிநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது.
  22. மனித வைத்திய, உயிரியல் துறையில் நீங்கள் சொல்வதை கண்டீர்களா? குறிப்பாக வைத்தியசாலையில்? இவை மிகவும் குறித்த, சிறப்பு அறிவு, பயிற்சி போன்றவை. (அவற்றில் உள்ள சொற்களை வாசித்து, விளங்கி திருப்பி கருத்தை உணர்ந்து சொல்லுவதற்கே நேரம் ஒதுக்க வேண்டும், ஏனெனில் அவை பொதுவாக இருப்பது லத்தீன் மொழியில், அல்லது லத்தீன் மொழி சீரமைக்கப்பட்ட சொற்கள், பொதுவாக உச்சரிப்பு நீண்டவையும்) எனவே படிக்காதவர்களால், பயிற்சி எடுக்காதவர்களால் ஒரு போதும் செய்ய முடியாது. இதில் கூட, (நான்) வைத்தியர் , தாதியருடன் நின்றேன் பார்த்தேன், (தொழில்) பழகினேன் என்பது வைத்தியர், தாதியர் செய்த அந்த குறித்த அனுபவ அவதானம் மாத்திரமே. (அது கூட படித்து, பயின்று இருக்காவிட்டால் மனதில் இருக்காது, ஏன் என்று விளங்காது.). சிறு நுணுக்கமான வேறுபாட்டுடன் இருக்கும் இரு வேறு அவதானங்கள் பயிலாதவருக்கு ஒன்றாகவே தெரியும். இதில் உள்ள நுணுக்கங்கள் மிக அதிகம். ஆனால், நன் இதை சொல்வது, பொதுவாக வைத்திய, உயிரியல் துறையில் படித்து, பயின்று இக வேண்டும் என்பதன் காரணம் மருதத்துவத்துறையிலும் duty (பணி) creep up இருக்கிறது, அதாவது பணி செய்பவர்கள் அறிந்தோ அறியாமலோ சுமத்தப்படுவது (மனிதரின் பொதுக் குணம்), பல உடனடியாக நேரம் /மனித வலு தேவை என்பதற்காக. ஏனெனில், மருத்துவம், குறிப்பாக வைத்தியசாலை பரிமாணத்தில் ஓர் குழு பணி (team work). இவர்கள் (தொண்டர்) அந்த நிலைக்கு ஆளாகலாம் அப்படியான பணிகளில் (உதவி தாதி போல) அவர்களை அறியாமல், அதே போல அவர்களை அறியாமல் ஓர் புதிதாக வரும் நோயாளியை மதிப்பு (அவசரம், ஆபத்து போன்றவை) செய்யும் நிலைக்கு உள்ளாகலாம். ஆனாலும், இவற்றை தொடங்கும் போது (சத்தியமூர்த்தி) மற்றும் சத்தியமூர்த்தியை நெருக்கிய அமைச்சர்கள் யோசித்து இருக்க வேண்டும். ஆயினும், அருச்சுனா வைத்தியர் தானே, இதை யோசிக்காமல் கொண்டு போனது , அல்லது இந்த விடயமும் அலசப்பட்டதோ தெரியாது? குறிப்பு: இங்கே uk இல் இப்போதும் எம்மவர்களின் ஓர் பெரும் பகுதி grammar school (இது ஜெர்மனி, சுவிஸ் இல் கிட்டத்தட்ட Gymnasium) என்பதில் அவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற அவாவின் முக்கிய ஓர் காரணம் (இதுக்காக இடம் பெயர்ந்து ...), இவற்றில் இப்போதும் லத்தீன் மொழி பொதுவாக கற்பிக்கப்படுவது, அது அவர்களின் பிள்ளைகள் மருத்துவத்துறை போவதற்கு (விருப்பம் என்றால், ஆனால் எமது பெற்றோர் பிள்ளைகள் பிறக்கும் போதே மருத்துவர் என்று கணக்கு போடுவது ... ஆனால் இது இப்பொது மாறி வருகிறது பிள்ளைகள் தமது விருப்பில் நாண்டு பிடிப்பதால்) போடும் முதல் பிள்ளையார் சுழி (சீர்காழியின் பாட்டுத்தான் நினைவு வருகிறது, பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை (டாக்குத்தரை) தொடங்கிவிடு ... இன்னொரு நினைவு, சிங்களத்தின் குற்றச்சாட்டு, தமிழர்கள் விடைத்தாளில் பிள்ளையார் சுழிபோட்டே அதிக புள்ளிகள் பெற்றார்கள் உயர்தர பரீட்சையில்.) மருத்துவ, தாதி துறையில் அல்ல. senior என்றால் மேலும் கற்கை நெறிகள், பயிற்சிகள் முடித்து, அதில் அனுபவமும் இருக்க வேண்டும். மருதுவ, தாதி துறைகள் கற்கை நெறி, பயிற்சி போன்றவற்றால் படியமைகப்பட்டது (regimental hierarchy என்று சொல்லலாம், இராணுவம் போல இறுக்கமானது). கம்பனிகளில் செய்வது போல முடியாது, ஏனெனில் அந்த குறிப்பிட்ட நாட்டு மருத்துவ துறை வகுத்து வைத்து உள்ளது படிநிலைகளை பகிரங்கமாக. ஆனாலும், கம்பனிகளில் நடையேறுவது போல மேல்வைத்தியரின் ஆமோதிப்பும் தேவை, இதில் பாரபட்சம் காட்டப்படுவது இருக்கிறது.
  23. ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்? வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா? அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது . இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா? அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார. சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர். இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?
  24. நான் சொன்னதையே செய்கிறீர்கள். எனவே தொடர்வதில் அர்த்தமும் இல்லை. (ஆயினும், நீங்கள் சொன்னவர்கள் முடிவுகளை எடுக்கவில்லை, அதாவது உந்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.