Everything posted by Kadancha
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இங்கே புலிகளை judge பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
முதலில் சிறிய குழப்பம் வரும், பின்பு சரியாகி விடும். அந்த பெண் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், சிங்களவர் தீவுக்கு வரும் எல்லா வெளி இன மக்களோடும் கலக்கும், கலந்த வீதம் மிக கூட. தமிழரில் அப்ப்படி இல்லை என்றே சொல்லலாம் அந்த சிங்களவரின் வலிதான உயிரணு என்பது, அவர்கள் நாகர், யக்கர், வேடர் மற்றும் சிங்க அடி விஜயனின் கலவை என்று இப்போது நம்ப தொடங்கி இருக்கிறார்கள், அத்துடன் புத்தர் தென்பகுதி காட்டில் பிறந்து கபிலவஸ்து சென்றகாகவும் இப்போது நம்ப தொடங்கி இருக்கிறார்கள்.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
3-4 வெவேறு வடிவம். எல்லாவற்றிலும், விஜயனின் தந்தை சிங்கபாகு பிறந்தது (அல்லது வளர்ந்தது, ஏனெனில் ஒரு வடிவத்தில் சிங்கம் விஜயனின் அப்பமா சிங்கவல்லி , அவரின் இரு பிள்ளைகளையும் காவச்சென்று அதன் காவலில் வைத்து இருந்தகாக) சிங்கத்துக்கும், விஜயனின் அப்பம்மா சிங்கவல்லிக்கும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் சொன்னேன் அல்லவா இரத்த அல்லது தூர உறவு அக்கா - தம்பி அல்ல என்று. 2 உறவும், எரம்பு - எனது உறவின் அம்மா , மதிவதனி - எனது உறவு , அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, அக்கா - தம்பி என்ற நிலைக்கும், இணைபிரியா சகோதரிளுக்கு (உணர்திறன் மிக்க விடயங்களை சொல்லுவூ சரி அல்ல) இடையில் இருக்கும் நட்பான உறவாக உருமாறியது என்று. இதில் அறிமுகம் என்பது முக்கியம். இப்படியான கருத்து வெளியில் வந்திருக்காவிட்டால் மன்னிக்கவும். அருணா மதிவதனியின் சகோதரியாக இருந்தால் - ஆம் அருணா மஹிவதானியின் சகோத்தாரி என்ற எல்லை வரைக்கும் . அதன் மேல் அன்னியோன்னியம் இல்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
பின்பு கதைக்கலாம் என்று தான் இருந்தேன். சுருக்கமாக சொல்கிறேன் நான் பாவித்த வார்த்தைகள் நிலைமைக்கு வேண்டியதை விட கனதியாக இருக்கலாம், அனால் அது அடிப்படையை மாற்றாது. (அசாத்தை கொண்டுவர வேண்டாம். அதை பின்பு கதைப்போம்.) 1. அப்போது tna இல் எந்த அடிப்படையில் மற்ற இயக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டது? மற்ற இயக்கங்கள் , சிங்களத்தின் யாப்பை ஏற்று, சிங்கள பாதுகாப்பில் அல்லவா? அது போராட்டத்தை ... அனால், அநாத நிலையில் அவர்கள் புலிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இல்லை (அல்லது மிக குறைவு). ஆக குறைந்தது, புலிகள் சொன்னதுக்கு முரண் அல்லவா? 2. அனால், பாலசிங்கம் சொன்னதில் கூட effect ஐ எடுத்து விட்டு, cause தவிர்த்து விட்டீர்கள். ஏன் என்று சிந்தித்து பார்க்கவும். மற்ற போராட்டங்களிலும் இப்படி நடந்து இருக்கிறது (big fish .. small fish விழுங்கி இருக்கிறது) என்பதும் விளைவே தவிர .... வேறு எவரும் big fish ... ஏன் முழுங்க எத்தனிக்கிறது என்பதை அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை விட மாட்டார்கள் (சுருக்கமாக 1. வெளிப்படையாக உணவு சங்கிலி 2. முன்பே சொன்னது, இரண்டுமே சுட்டுவது big fish இன் survival) 3. எத்தனையோ அரசியல் மற்றும் தத்துவ அறிஞர்கள் theoretical, மற்றும் practical ஆக அவதானித்து, ஆய்வு செய்து அடைந்த முடிவை (அதாவது இருப்பே அடிப்படை காரணம்), புலிகள் முறித்து உள்ளார்கள் என்றால், புலிகள் மனித வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வரும் (இது நான் சொல்வது) 4. மாறாக, அப்படி புலிகள் செய்து இருந்தால், அது அது அரசு சாரா (ஆயுத மற்றும் ஆயுதம் அற்ற) ஒழுங்குபடுத்தப்ட்ட அமைப்பு அரசியலில் ஓர் paradigm shift. நிச்சயம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். 5. புலிகள் வெளியில் சொன்னது அவர்களுக்கு வசதி. (பொய் என்ற வார்த்தையை பாவிக்கவில்லை). புலிகள் அதை நம்பியும் இருக்கலாம். 6. புலிகள் இதை சுகந்திரமாக ஆய்ந்து பார்க்கவில்லை. 7. புலிகள் செய்தது - பாட்டும் நானே, பாவமும் நானே, பாடும் உனை நான் பாடவைத்தானே ... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற போக்கு. 8. இதனால் தான் ஆகக்குறைந்தது முரண்பாடு எழுகிறது. உணர்ச்சிகளை தள்ளி வைத்து பார்க்கவும். இதனால் போராட்டம் மீது புலிகள் வைத்து இருந்த பற்றுறுதியை நான் மறுக்கவில்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் சொன்ன குடும்பங்கள் இதை மூடி, கடந்து விட்டன. பெயர் சொல்லலாம் என்றாலும், எழுத்தில் பதிவதை தவிர்க்கிறேன். ஏனெனில், என்ன விளைவுகள் ஏற்படலாம் அல்லது பிரச்சனைக்குள் சிக்கலாம் என்பதை எதிர் கூற முடியாது குறிப்பிட்ட நபர்களை தவிர, வேறு எவருக்கும் நான் சொன்னது தெரியாது. இப்போது, அவர்களை பொறுத்தவரையில், இயக்க பின்னணி அவர்களுக்கு கிட்டத்தட்ட இல்லை. இங்கே பதியப்போனால், இயக்க பின்னணியை உருவாக்குவதாக முடியும். ஒருமுறை சிந்திக்கவும், அந்த பிள்ளைகளில் (அல்லது மூத்த 1-2 பிள்ளைகளின் பிள்ளைகள்) ஒருவர் அரச வேலைக்கு விண்ணப்பித்து, பின்னணியை தேடும் போது இங்கே பதியப்பட்டதை பின்ணணி தேடும் மென்பொருள் பிடிக்கும் என்றால் (அனால் நிச்சயம் பிடிக்கும்), அவரின் விண்ணப்பம் அதோடு சரி. அப்படியே, வெளிநாட்டு விசா, புலமைப்பரிசில் போன்றவையும். சிலவேளை பயங்கராயத்தை பிரிவு வந்தாலும் ஒரு புதினமும் இல்லை. அதனால் எவர் என்றாலும், கடந்த காலா வரலாற்றில் நடந்ததை இங்கு பதியும் போது மிக ஆழமாக சிந்தித்து பெயர்கள், இடம் போன்றவற்றை பதிவதை தவிர்க்கவும்.. ( ஏனெனில், முன்பு பதிவு (record) என்பது, சிங்கள படைகளுக்கு தெரிய வந்தாலே. இப்பொது பதிவு (record) என்பது ... அதுகுதானே ibm மென்பொருள் செய்கிறது (i2 என்ற மென்பொருளின் விபரத்தை தேடி பார்க்கவும்.) வேறு மென்பொருளும் இருக்கிறது. )
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
ரோஹிங்கியா போலத்தான் தெரிகிறது. இது 3 வது கடல் கலம் அல்லது படகு என்று நினைக்கிறன் பர்மா / அல்லது பர்மா பகுதியில் இருந்து. ஆனல், எல்லாம் வந்தது முல்லைத்தீவு கடலுக்கு. எங்கு வருகிறேன் என்று தெரிகிறதா? விஜயன் என்று அலைக்கட்ட நபரும், அவரின் கூட்டாளிகள் / க்கூடங்கள் வந்தது மன்னார் பக்கம். கடல் சுழி திசை மாறிவிட்டதா? (அல்லது, மன்ன்னர் பக்கம் அப்போதைய வர்த்தக வழியாக இருந்து இருக்குமோ?)
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
டிரம்ப் வரமுதலே சும்மா லகலகலகலகலக ... என்று அதிருதல்ல, தூள் பறக்குதில்ல ஹொந்தாய் வேணும் என்றால் ரம்ப் சொந்தத்தில் இருக்க வேண்டும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புலிகளுக்கு, புலிகள் அல்லாதோர் என்ன செய்தார்கள் என்று முழுமையாக தெரியாது. அப்படி உண்மையில் நடந்தது எண்பத்து கூட புலிகளுக்கு தெரியாது. இப்படியான, வேறு கட்டுப்பாட்டு பகுதியில். சில விடயங்களை செய்யும் போது , இப்படியான புலிகள் அல்லாதோர், ஈடுபடும் புலிகளிடம் சொன்னார்கள் எங்களை வெளியில் சொல்லவேண்டாம், உங்களை எங்களுக்கு தெரியாது, எங்களை உங்களுக்கு தெரியாது. செய்த விடயமே நடக்கவில்லை. உதாரணமாக, ஆயுத்தங்கள் இடம் மாற்றப்படும்போது, அவற்றை இடம் மாற்றும் புலிகள் அல்லாதோர் , புலிகளை சந்த்திக்கும் போது முகத்தை சேட்டால் மறைத்து. அளது பொதிகளை புலிகள் குறிப்பிட்ட இடடத்தில் வைத்து செல்வது, மாற்றுபவர் வந்த்த்ஹு எடுப்பது. அப்படி இடம் மாற்றுபவர், பொதுவாக (அந்த ஊரில்) புலிகளில் உள்ள வேறு அங்கத்தவர் மூலம் விடயத்துக்குள் கொண்டுவரப்படுவார். அநேகமாக, வேறு புலி உறுப்பினரின் நட்பு. ஈடுபடும் புலிகளுக்கு யார் என்றே தெரியாது, அது சரியும் கூட. இந்த அமைப்பை புலிகள் உருவாகவில்லை. வேறு கட்டுப்பாடு பகுதி என்பதால் தேவையின் நிமித்தம் உருவாகியது. எனவே, மிக கூரிய, கொடிய ஆபத்துகளை எதிர் கொண்டு செய்த முகம் ஆற்றிய பலர் இப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு, திருப்தி போராஹில் எந்தவொரு அடையாளமும் இன்றி பங்காளித்தோம் என்பதே, மனசுத்தியுடன் திருகுதாளம் செய்யாமல் ஈடுபட்டு இருந்தகால். இப்போதும் சொல்கிறேன், எந்த இயக்கத்திலும் முழுமையாக தெரிந்த எவரும் இல்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அதை செய்தால், இங்கே பெயர் குத்துதல் . நான் பின்னிற்கமாட்டேன். ஏற்கனவே சொல்லிவிட்டேன் . நேரம் கிடைக்கும் போது, கோசானுடன், மற்ற இயக்க அழிப்பை அலசி ஆராயப்படும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சிலவேளையில் நீங்களும், நானும் அல்லது இங்குள்ள சிலர் இப்படி உரையாடுவது சினிமாவில் நடப்பது போல இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், வேலும்மயிலும், திருவடிவேல் எனது உறவுக்கு அறிமுகமுகமாகி, நட்பு வளர்ந்த்து, யார் என்று பார்த்த போது இரு பகுதியின் முப்பாட்டனுக்கும் ஒருவரை ஒருவர் அறிந்து இருந்தகர்கள். வேலுப்பிள்ளை (பிரபாவின் தகப்பன் ) எனது உறவுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்து யார் என்று பார்த்த போது முனைய சந்ததிகள் அறிந்து இருந்தன. ஆனால் போர்த்துக்கேயர் வருகைக்கு முதல் உள்ள சந்ததிகள் வியாபாரத்தில் தொடர்பு இருக்க மிக கூடிய சாத்தியக்கூறுகள் தெரிந்தது. அதேபோல, பிரபாவின் மனைவி (மதிவதனி), எனது இன்னொரு உறவுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, தேவை நிமித்தம் எனது எனது உறவு வீட்டில் அவ்வப்போது தங்கி சென்றார் (இது பிரபாவை மணம் முடிக்க முதல்). அப்போது, முதல் தரம் அப்படி தங்க நேர்ந்த போது, மதிவதனியின் பெற்றோருக்கு சங்கடம், தயக்கமும், ஏனெனில் ஒரு பெண் அந்த நேரத்தில் அவரின் ஊரில் (புங்குடுதீவு) இருந்து உடனடியாக யாழ் நகரத்துக்கு உடனடியாக வரமுடியாத நிலையில், தெரியாத ஒருவரின் வீட்டில் தங்குவது. அதனால், மதிவதனி எனது உறவின் வீட்டில் முதல் தங்க வரும் போது தகப்னும் (ஏரம்பு) வந்தார். எனது உறவின் தாயோ அல்லது மதிவதனியின் தகப்பனோ (ஏரம்பு) ஒருவரை ஒருவர் அடையாளம் காணவில்லை. யார் என்று எரம்பு விசாரிக்கிறார் என்னுடைய உறவின் அம்மாவை , கதை தொடர்கிறது ... சிறிது நேரத்தில் ஏரம்பு அதிர்ச்சியான சந்தோசத்துடன் ... அடே என்னுடைய அக்காவின் (சொந்த அல்லது தூரத்து உறவு அக்கா அல்ல) வீட்டிலா எனது மகள் தங்கப்போகிறார் என்று அதிர்ச்சியான நிம்மதியும், ஆனந்தமடைகிறார். எனது உறவின் அம்மாவுக்கும் ஆனந்தம் அவரின் அடையாளம் மாறிய தம்பியை கண்டதில். வந்திருப்பது எனது (தொலைந்த தம்பி உறவின் ) மகள் என்று, அவர்களை வாசலில் நிறுத்தி, எனது உறவின் அம்மா சாமி தட்டில் இருந்த விளக்கு, விபூதி , சந்தணம், குங்குமம் தட்டை எடுத்து வந்த்து தீபம் ஏற்றி ஆரார்த்தி எடுத்து ... வரவேற்றார். அப்போது, எனது உறவின் அம்மாவும், மதிவதனின் தகப்பனும் (ஏரம்பு) கிட்டத்தட்ட ஒரேநேரத்தில் ஒருவரை ஒருவர் குறுக்கிட்டு மதிவதனியை சுட்டி சொல்கிறார்கள், இது உன் வீடு எப்போதும் வந்து போகலாம், ஏரம்பு சொல்கிறார் நீ (மவதனியை சுட்டி) என்னிடம் எதுவும் சொல்லவேண்டியதில்லை இங்கு வரும் போது என்று . படம் அல்லவா? அன்றில் இருந்து மதிவதனி எனது உறவுக்கு ஓர் (உறவு மீட்கப்பட்ட) தங்கை, எனது உறவின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இன்னொரு மகள். எனக்கு ... நீங்களே ஊகித்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுக்கு முன்பே, மதிவதனிக்கும், எனது உறவுக்கும் வேறு பல பெண்கள் நட்பாக வாய்ப்பு இருந்தும், இவர்கள் இருவருமே ஏறாத்தாழ உடன்பிறவா சகோதரிகள் ஆகிய நட்பு உருவாகி இருந்தது (அதனால் தான் மதிவதனி எனது உறவின் வீட்டில் தகுவதற்கு விருப்பப்பட்டார்). அதேபோல, எனது உறவின் அம்மாவின், அப்பாவின் முனைய சந்ததிகளும், ஏரம்பு, மற்றும் அவரின் மனைவி முன்னைய சந்ததிகளும் ஒன்றையொன்று அறிந்து இருந்ததாக, அவர்கள் அறிமுகமாகி அக்கா - தம்பி என்று உறவு வளர்ந்த நேரத்தில் யார் என்று அறிந்தபோது தெரியவந்தது. நான் நினைக்கிறன், யாழ்ப்பாணம் குக்கிராமம், அதுக்குள் இருந்து கொண்டு பீலா விடுறம் நகரம் என்று, இல்லையா?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எனது அப்போதைய அனுபவ கண்ணனுக்கு தெரிந்தது. எனதுஉறவுக்கு தெரிந்தது வேலும்மயிலும், திருவடிவேல், அதனால் , பின் அவர்களை தெரிய வந்தது. அனாலும் முதல் நிலை அறிமுகம், நட்பு, தொடர் நட்பு, பரீட்சியம், சந்திப்பு, குசலம் விசாரிப்பு, பிடிப்பிக்கப்பட்டவரின் நிலை, எவ்வாறு அது முழு குடும்பத்தையும் பாதித்தது, புலிகளுடன் தொகையை குறைப்பது அவர்கள் கதத்தளித்து என்று ... பல சம்பாஷணைகள் ... எல்லாம் வேலும்மயிலும், திருவடிவேல் உடன் தானே. அப்படியே அவர்களின் உறவும் நிலைத்து விட்டது திருவடிவேலின் ... ஒருத்தரும் சொல்லலை, இடைக்கிடை சந்திக்கும் சந்தர்ப்பம் அப்போது எனது உறவு ககதைத்ததில் இருந்த்து நான் ளங்கியது, பொறுக்கியது. அவருக்கு (தெஇருவடிவேலின் உறவு) கெட தொகையை கேட்டு, சில நொடிகள் எனது மதியில் அது பதியவில்லை, பின் ஆயிரம் , இலட்சம், 10 இலட்சம் என்று யோசித்து, தொகையின் பரிமாணத்தை எடை போட்டேன். புலிகள் இப்படி பணம் பெற்றதை, அதன் தேவையை நியாயப்படுத்தி இருக்கிறேன். அப்போது உனது (உறவுக்கு வந்தால்) என்று மற்றவர்கள் வையா குறை கதை சூடாகும் போது .. பின் எனது உறவுக்கும் வந்தது.. எனக்கு ஆதங்கம் (எனக்கு அவரை யார் என்றே தெரியாது) என்னவென்றால் , ஒரு முறை (ஹிந்தியா படைகள் காலத்தில் 88-89 ரன்றே நினைவு) அவரை பிடித்து கறந்து விட்டு, 2ம் தரமும் அவருக்கு செய்தது என்று நான் அறிந்தது
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆம், நடந்தால் சொல்லிவிடுகிறேன்
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஏற்றும்போது விசில் அடித்து கத்தியையும் குடுத்து தானே ஏத்துறது. பிறகு, பாபா காய் குலுங்கும் தண்டு பகுதியை வெட்டி பார் கீழே போடு என்று ...
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மன்னிக்கவும், உதவி அரசாங்க அதிபர் வேலும்மயிலின் சகோதரம் திருவடிவேல் (கொழும்பில் பிரபல பல் சிகிச்சை நிபுணர்), திருவவடிவேலின் மனையின் வழி உறவினர், மனைவியின் தகப்பனாகவும் இருக்கலாம். அவர்கள், பிசினஸ், கொஞ்சம் வசதி சராசரியிலும் கூட, அவரை , கிந்திய படை காலத்தில் அளம்பில் காட்டில் பிடித்து வைத்து காசு கேட்டது - உறவினர் சென்று பார்க்க முடியாது ஏனெனில், காடு, ஹிந்தியை படைகள், புலிகள் காட்டில் இடம் மாறுவது .. என்று ஹிந்தியை படைகள் வெளியேறி கட்டுக்குப்பதில் அந்த பின் இரண்டாவது தடவையும், அப்போது யாழில் தான் பிடித்து வைத்து இருந்ததாக.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இப்போது தெளிவு தானே.. 1 க்கு பின்பபு வருகிறேன் தேவை என்றால். 2 இல் ஒரு குறையும் உங்களுக்கு இல்லைத்தானே அப்படியானால் 2 க்கு, 2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு. நீங்கள் சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க. முதல் கேள்வி உங்களிடம் ஒருபோதும் எழவில்லையா? ஏன் பாலசிங்கம் நீங்கள் சொல்லிய போராட்டத்தை பாதுகாக்க (அல்லது அதற்கு கிட்டத்தட்ட ஒப்பான ஓர் கருத்தை) (நேரடியாக) சொல்லவில்லை. நேரடியாக நான் சொல்வதன் காரணம் - நீங்கள் நம்புகிறீர்கள் வேறு ஏதாவது சொல்லி , அதை நிருபர்கள் சொல்லவில்லை என்று. அல்லது பேட்டியில் வேறு ஏதாவது சூழ்நிலை இருக்கலாம் என்று. நீங்கள் சொல்லும் போராட்டத்தை பாதுகாப்பது என்பது, என்பது மட்டும் தான் என்றால், அதற்காக மற்ற இயக்கங்களை அழித்து இருந்தால் - கிட்டத்தட்ட மிக கூடிய போராட்ட தார்மீக நியாயாதிகமாக இருக்கிறது அல்லவா - அது, அது மட்டும் தானே உடனடியாக மதி, மனம் (state of mind - உங்களுக்கு சட்டத்துறை பரீட்சயம் இருக்கிறது , இதன் அர்த்தம் நன்றாக புரியும்) ஆக வாயில் வந்து இருக்க வேண்டும். வேறு எந்த பதில்களும் வந்து இருக்க கூடாது அல்லவா? ஆகவே, வேறு அடிப்படை காரணம் இருக்கிறது என்ற சந்தேகம் நியாயமானது தானே?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
1. நான் சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்) - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு - வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள் இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இப்பொது தெளிவாக இருக்கிறது தானே. 2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு. நீங்கள் சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதில் வெளியில் சொல்லப்படாத தரப்பு சிரியா படைகள்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இங்கே பொதுக்கத்தான் கேட்கிறேன். பொதுமக்களை , பொதுவாக மைம்மல் பொழுதில் குறித்த பொதுமகன் வீடு வந்து, கூட்டிக் சென்று , கேட்ட அளவு அல்லது அததற்கு கிட்டவான தொகை பணம் கொடுக்கும்வரையும் அல்லது அப்படி 3-4 த்தவனையில் பணம் செலுத்தும் இணக்கப்பாட்டுக்கு வந்து, முதல் டதொகை செலுத்தும் வரையிலும், கூட்டிச் செல்லப்படுபவர் விடுவிக்கப்படமாட்டர். பின்பு psycological pressure என்பதும் பாவிக்கப்பட்டது. வடக்கில் இது பொதுவான வழக்கமகா இருந்தது. இப்படி நடக்கவில்லை என்று எவராது இங்கு மறுக்கிறார்களா? இதில் எனது குடும்பத்தில் பணம் கேட்கப்பட்டு, கூட்டிச் செல்லப்பட்டு, மன , மதிநிலை குழம்பியோரும் உண்டு, இயல்பு அழகை திரும்ப மிக கடினமான நீண்ட நாட்கள் காரணம், ,அதில் இன்னொரு பிரச்னை, அறவிடுப்பார்கள் ,கூட்டிச் செல்வோரையும், அவரை பார்க்க செல்லும் உறவினரையும் அறவிடுப்பார்கள் அடிமை போன்று நடத்த வெளிக்கிட்டது. இது அறவிடுப்பார்கள் முடிவாக தெரியவில்லை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முறையாகவே தெரிந்தது பணம் கேட்கப்பட்ட தொகை முடியாயில்லை, அக்கினி சொன்னது போல கெஞ்சி குறைத்து, தவணை முறையில் செலுத்தப்பட்டது. இங்கே யாழில் இருக்கார் வடமராட்சியை சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் வல்வெட்டுத்துறை அல்லது அததற்கு கிடாவாக அவரின் ஊர். வேலும் மயிலும் என்பவரின் குடும்பம் கொஞ்சம் வசதி, அவர்கள் இதில் இரு முறை பாதிக்கப்பட்டார்கள். இப்படு பல கண்ணுக்கு தெரியாமல், பரவலாக தெரியாமல் நடந்தன. ஆயினும் இவற்றை நான் மக்கள் துன்புறுத்தலில் ஒன்றாக பார்க்கவில்லை. ஆயுத போராட்டம் நடக்க பணம் வேண்டும், அனால் இப்படி அல்லாமல் வேறு ஏதாவது வழியை பாவித்து இருக்கலாம் என்பதே அன்றில் இருந்து நான் எண்ணிக்கொண்டு இருப்பது. உறவினருடன் வாதாடுவது இதனால், எனது உறவுகள் முறியும் வரையும் வந்து, ஒருமாதிரி முறியாமல் பாதி முறிந்த கிளை போல தொடர்கிறது. ஆயினும், உறவுகளை போராட்டத்தில் இழந்தது என்பதற்கு ஈடு இணையாகாது. அப்படி உறவுகளை இழந்தார்கள் இங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இந்த நிகழ்வு, அது எனது உராய் கூட்டிச் சென்று பணம் கேட்டு.. அவர் மன, மதி குழப்பத்துக்கு ஆளாகி ... பின் தவணையில் பணம் கொடுத்து ... என்பது ஒருபோதும் நான் சொன்ன புலிகள் இருப்புக்காக மற்ற இயக்கங்கங்களை அழித்தார்கள் என்பதில் எந்த வித செல்வாக்கும் செலுத்தாது. அது, ஆய்வின் அடிப்படையில் தரவில் இருந்து பெறப்பட்ட முடிவு. (அதற்கு, என்ன பெயர் எனக்கு சூட்டினாலும் என்னை தாக்காது) (ஆயினும், அக்கினி சொன்ன மாவீரனுக்கு STF செய்துததுக்கு, STF க்கு தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு இருந்தால் மிகச் சிறந்த பழிவாங்கல்.)
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
முதலில் இப்படியாக குறியிடுவதை நிறுத்துங்கள். ஆதரிக்கப்படுவதற்காக எழுதுவது தான் நீங்கள் சொல்லும் உண்மையான conspiracy. ஏனெனில் ஆதரிக்க உள்ளிருந்து அரிப்பது தெரியாமல், எல்லாம் சுகமயம் என்ற போலி உணர்வு ஏற்படுத்த முனைவது. அதை நான் ஏற்படுத்த மாட்டேன், அதாவது ஒருவரையும் comfort-zone இல் வைத்து சிந்திக்காமல் இருக்க விடக்கூடாது. அனால் , நீங்கள் செய்வது கருத்தை shape பண்ணி, தளம் ஒரு சிந்தனை இன்றிய அல்லது உங்களோடு ஒத்து போகும் சிந்தனை ஓட்டத்தை உருவாக்க , comfort zone இல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போல இருக்கிறது. அதற்கு இணக்கங்கதாருக்கு பட்டங்கள், பெயர்கள் ... அதெல்லாம் எனக்கு ஒரு தாக்கமும் இல்லை. ஆனால், ஆதரிக்காவிட்டால் என்ன, (வரலாற்று உட்பட) தரவுகள் சுட்டுவதை தவிர்க்கிறீர்கள் (மற்ற தவிர்ப்பர்வர்களும் சேர்த்து) உணர்ச்சியால். ஆனால் தரவுகள் உணர்ச்சி அற்றவை, பொய்சொல்லாது. புலிகள் சொல்லுவதை critical ஆக பார்க்க விருப்பம் இல்லை என்றால், அது சார்பு நிலை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் இதை போட்டியாக எடுக்கவில்லை எப்போதும். ஆனால் போட்டியாக நீங்களே எடுத்து, நீங்களே இழந்துவிட்ஈர்கள் என்பதை இன்னமும் உணரவில்லையா?
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
அர்ச்சுனா அவரின் கேள்வியை கேட்டு இருக்க வேண்டியது, அதிகாரிகளை நியமனம் செய்த அமைச்சரிடம். இது அரசுன்னாவில் எதிர்பார்த்தது. அர்னா இந்த கேள்வியை அரச அதிகாரிகள் அலுவகத்தில் கேட்பது முறைகேடு. ஒரு அதிகார (பீட) அலுவலகத்துக்கு உள்நுழைவது குறிப்பது, அந்த அதிகாரத்துக்கு உட்படுவது எவராகிலும் ஆண்டியை இருந்து அதிபர் வரை. அதுபோலவே, வ்வேறு எந்த அரச பீடத்துக்கும் இதுகளை யாராவது அர்ச்சுனாவுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அர்ச்சுனவுக்கு தெரியில்லை போலும் - ஸ்ரீதரனும் அவரும் சமம் என்று, அர்ச்சுனா எந்த தகமை உள்ள மருத்துவர் ஆயினும். சிறிதரன் கண்டித்து இருக்க வேண்டும் அர்ச்சுனாவை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆம், சொல்ல மறந்த்துவிட்டேன். நான் சொன்னதுக்கு ஒத்த கரூத்தை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள், அமெரிக்காவின் யாப்பின் முதல் வரைபில் இருந்தது என்றே எங்கோ வாசித்த நினைவு. குறிப்பாக, internal threats என்பது பாவிக்கப்பட்டு இருந்ததாக. திருத்தங்கள், மொழியை மாற்றியுள்ளதே தவிர, கருத்தை மாற்றவில்லை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
(இது எல்லோருக்கும் தான்.) புலிகளையும், அசாத்தையும் அல்ல. அவர்களின் பார்வையில், அவர்களுக்குத் தெரிந்த அச்சுறுத்தல்களும், அவற்றை எதிர் கொண்ட (அழித்த) விதமும் (வன்முறை பிரயோகம்). எவ்வாறாயினும், அது நான் சொல்லியதை மாற்றவில்லை. அதாவது, அவர்களின் (அசாத், புடினும் நீங்கள் விரும்பினால் சேர்த்து கொள்ளுங்கள்) பார்வையில் இருப்புக்கான அச்சுறுத்தல், இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்றுவது. நீங்கள் உட்பட, எல்லோரும் அவர்களை அறியாமலே நான் சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர். அதை தவிர்ப்பதற்கு, அவர்கள் கின்டியா, மேற்கு, மூளைச்சலவை, டெல்லி அழைப்பு என்று மதி, மனம் போன போக்கில் சுற்றிவளைத்தும், நியாயப்படுத்தியும் அவர்களால் அவர்களை அறியாமல் நான் சொல்லும் நிலைக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதன் சுருக்கமான காரணம், விளக்கம் - பாலசிங்கம் சொல்லியத்தில் தான். அனால், அதற்கு வசதிக்கு ஏற்ற விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாலசிங்கம் துறைசார் அரசியல் புலமை உள்ளவர் - அந்த புலமையின் அடிப்படையில் அவர் சொன்னதின் (big fish ... ) என்பதன் கருத்து அரசியலுக்கும், அரசுக்கும் பொருந்தி வருவது. அரசியலில், big fish .. என்பது ஓர் குறிப்பிட்ட உட்கருத்து வலியது இருப்புக்கு வாய்ப்பு கூடிய (ஆயுத) அரசியல் எனும் விதியில்லா காட்டில் அல்லது ஆட்டத்தில், (big fish ... என்பது) எவ்வாறு அச்சுறுத்தல்களை விதியில்லாது (அழித்து) நீக்குவது, ஏனெனில் விதியில்லா காட்டில் ஒவ்வொன்றும் மற்றதுக்கு அச்சுறுத்தல், அவை ஒவ்வொன்றின் பார்வையிலும், இது பின் (பலம் ஓங்கியவுடன்) அமைக்கப்படும் அரசு என்பதோடு ஒத்துப்போவது. state (அரசு) என்பதன் பொருள் என்ன - state of mind. பலவேறு அச்சுறுத்தல் மத்தியில் மதி தடுமாறாமல், ஒருமுகப்படுத்தி, இருப்பை எந்தவழியேனும் (வேண்டுமாயின் அதன் விதிகளை கூடி புறந்தள்ளி) தக்கவைப்பது. இதுவே தமிழ் அரசு, ஆங்கிலத்தில் state என்பதன் கருத்து. (பாலசிங்கம் சொன்னதுக்கு அவரவர் தமக்கு விரும்பிய தொப்பியை போடலாம்.) ஆனால், ஒரு தொப்பி தான் அரசோடு, அதன் தன்மையோடு ஒத்து வரும். புலிகள் செய்த அழிப்பை, பாலசிங்கத்துக்கு நியாயப்படுவதில் வேறு பல சொல்லாடல்கள் இருந்தும், குறிப்பிட்ட big fish ... என்பதையே பாவித்து உள்ளார் என்பதும். அரசியல் துறை சார் புலமை உள்ள பாலசிங்கம் சரியாகவே பாவித்து உள்ளார் (அனால் இங்கே பாலசிங்கதுக்கு இங்கே பாடம் எடுக்கப்படுகிறது என்பது வேறு விடயம்). பாலசிங்கம் எதை சொல்லி இருப்பார் என்பதை வாசகர்கள் கணித்து பார்க்கலாம். தவிர, எமது இடத்தில், புலிகளும் அதையே செய்தனர், பிரயோக தன்மையே வேறுபாடு. அதே போல , மற்ற இயக்கங்கள் ஆயுத எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால், புலிகளின் வன்முறை பிரோயோகம் பரவி இருக்கும். மாறாக, பகுதி மக்கள் (மற்ற இயக்கங்கள்) மீது குழுமமாக வன்முறை பிரோயோகித்த பின், தொடருமாயின், எல்லை எது? இருப்பை தக்கவைத்தல். வேடிக்கை, அரசியல் துறை சார் புலமை பெற்ற பாலசிங்கம் சொல்லுவதை, வளைக்க முயற்சித்தும் சூழ்நிலை என்பதை தவிர்க்க முடியவில்லை. பாலசிங்கத்துக்கு பாடம் எடுக்கப்படுகிறது. இங்கே தார்மீகம், நீதி ... போன்றவை பொருட்டு அல்ல இருப்புக்கு அதிகாரத்தை பிரயோகிக்கும் போது. (இது அரசியலிலிருந்து வர்த்தக உலகத்துக்கும் தொத்தி கொண்டுள்ளது என்பதும், குறிப்பாக swot இல், வர்த்தக உலகின் அரசியல் என்று அழைக்கலாம்). ஆனால், இதை முதலில் எழுதும் போது பாலசிங்கம் சொன்னது எனது நினைவில் வரவில்லை, ஆனால் வசித்து இருக்கிறேன் நான் சொன்னது. ... சைரஸ் ... அலெக்சாண்டர் ... ... சோழர் ... (சோழர் கடைசியில் இதில் பிழை விட்டு விட்டனர் அரசின் தந்தையான ஒட்டக்கூத்தர் சொல்லைத் தட்டி. விக்கிரம சோழனின் தகப்பன் இழவு படுக்கையில் இருக்கும் போது அரசின் தந்தையான ஒட்டக்கூத்தரின் கையை பிடித்து, பாண்டியருக்கு சுயாட்சி கொடுத்து, பாண்டிய இளவரசியை விக்கிரம சோழன் மணம் முடிக்க அனுமதிக்கும் படி, அதுவே சோழ இராச்சியத்தின் முடிவின் தொடக்கம்) ஆங்கிலேயர்... ... என்று எல்லோரும் அவரவர் சூழ்நிலை அடிப்படையில் வன்முறையை உள்ளுக்குள் இருப்புக்கு பிரயோகித்தனர். அதெ போன்று, உள்ளுக்குள் இருப்புக்கு வன்முறையையை பிரயோகித்த பின், எல்லை எது புலிகளுக்கு சூழ்நிலையே தீர்மானிக்கும். இருப்பே அடிப்படை காரணமும் உந்துதலும். இங்கே புலிகள் விதிவிலக்கு என்பதே மற்றவர்கள் சொல்லுதுவது. அப்படி இல்லை என்று, பாலசிங்கம் முற்றுப்புள்ளி வைத்தார், அதாவது புலிகளே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். (பாலசிங்கம் சொல்லுவதை வளைப்பது அவர்களின் பிரச்சனை).
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இவ்வளவு பந்தி பந்தியாக புலிகளுக்கு எழுதியதை , புலிகளின் சிந்தனை ஓட்டத்தின் ஆசிரியர், பொறுப்பானவர் ஓரூ வரியில் சொன்னது தவிடுபொடியாக்கி விட்டது. வெளிநாட்டு நிருபர் பாலசிங்கத்திடம் கேட்டது, சுதாரிக, சிந்திக்க நேரம் இல்லாமல் (சிக்க வைக்கும் பேட்டி உத்தியுடன்) கேட்டது . பாலசிங்கமம் எந்த வித சுதாகரிப்பும், அவகாசமும் இன்றி பிளந்தே வைத்தார் புலிகளின் சிந்தனை ஓட்டத்தை. "big fish swallow(s) small(er) fish." (இதன் உட்கருத்து தெரியா விட்டால் தேடிப்பார்க்கவும்) நான் சொன்னதையே சொல்லி இருக்கிறார். மிகவும் பகிரங்கமாக.