Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. இதன் தாக்கங்கள் இப்பொது சொல்ல முடியாது. ஐரோப்பிய ஒன்றியம் எப்படி செய்தது - ருசியா முதலில் வட்டியை பிணையாக பாவித்து கடனை கொடுக்கிறதா அல்லது நேரடியாக வட்டி, முதலை எடுத்து கொடுக்கிறதா எனறு. ருசியா பணத்தில் கைவைப்போம் என்ற போது சவூதி எச்சரித்ததாக, அதாவது யூரோ பினைமுறிகளை விற்கவேண்டி வரும், அதனால் யூரோ சரியும் என்றும் ஓர் கதை இருக்கிறது. இனி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியார் முதலீட்டை கொண்டுவர மிகவும் பின்னிற்றப்பார்கள், அதேபோல யூரோ முதலீட்டையும் நீண்ட கோலினால் (wouldn't touch with long barge pole) தொட்டு பார்ககவும் விருமமில்லாத நிலை உருவாகும். மத்திம, நீண்ட காலத்தில் என்ன விளைவுகள் என்பதை பொருட்டு இருந்து தன பார்க்க வேண்டும்.
  2. கருணாரத்ன போன்றவர்களின் நியாயமான அரசியல் தென்னாசியாவின் (ஆரிய மாயை) கூட்டத்துக்கு சரி வராது. ஆத்மா சாந்தியடையட்டும்.
  3. பெரியார் காசிக்கு போனபடியால் தான் திராவிடர் கழகம் பிறந்தது, பிரமணியத்தை, சாதியத்தை எதிர்க்கும் உதேவகத்தை கிளப்பியது பெரியாரிடம்.
  4. சோதிடதுக்கு இடம் இருக்கிறது. அதை உதாரணத்துடன் சொல்வது தான், அதன் இடத்தை எப்படி எனது பார்வையில் இருக்கிறது என்பதை சொல்ல முடியும். உ.ம். ஆக சோதிடம் வாகனத்தை ஓட்டும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் (சோதிடம் சொல்லும் விளக்கம் கிரக பெயர்ச்சி) என்பது ஒருமுறை வாகனம் ஓட்டும் முறையை மீளாய்வுக்கு உட்படுத்த தூண்டும். அதே போல, வாகனத்தை ஓட்டும் போது மிகுந்த சிரத்தை எடுக்கவும் தூண்டும். மற்றது, வாழ்க்கையில் கடின காலத்தில், கடினத்தை கடந்து செல்ல முயல வைக்கும் உத்வேகத்தை (நம்பிக்கையை) அளிப்பதிலும் பங்கு வகிக்கிறது. அனால், இப்போது சோதிடம் சொல்லுபவர்கள், யதார்த்தத்தை மையப்படுத்தியே சொல்லுகிறர்கள். அண்மையில் பொழுதுபோக்காக சோதிடம் youtube இல் பார்த்தேன். உங்களுக்கு நல்ல காலம் (விளக்கம் கிரக பெயர்ச்சி), ஆனால் அதை அறுவடை செய்வது உங்கள் பொறுப்பு, அதாவது முயல வேண்டும், முயற்சிகளின் பரந்த திசை பற்றியும் சொல்லப்பட்டது, எனவே அதை ஓர் ஒப்பீடு செய்யலாம் மனவோட்டம், மதியோட்டம், எண்ணங்கள், அனுபவம் போன்றவற்றுடன். எனவே, சோதிடத்துக்கு இடம் இருப்பது இப்படியான (யதார்த்தத்தை மையப்படுத்தி ) முறையாலோ தெரியவில்லை.
  5. சீனர்களிலும் இந்த பழக்கம் இருந்தது, அனால் சீன அரசு அதன் modernisation இல் ஒரு அங்கமாக கடுமையான கட்டுப்பாட்டை விதித்து இளம், மற்றும் மத்திய சந்ததிகளை மீட்டு எடுத்து விட்டது. (இப்பொது சீனா, கழிப்பிடம், கழிவறையில் புதுமை , நவீனம் செய்கிறது, கூகுளில் இல் தேடிபார்கவும், குறிப்பிட்ட இணைப்பை இங்கு தரவில்லை) சீன தொடர்ந்து கழிவிட / கழிப்பறை வசதியை (தனி மனித) அபிவிருத்தியின் முக்கிய அங்கமாக (சுட்டியும் கூட) எடுத்து பல திட்டங்களை செய்து வருகிறது, கிராப்புற கழிவிட / கழிப்பறை தரத்தை உயர்த்துவதற்கு. சீன அதிபர் xi ஜின்பிங் இதில் தனது தனிப்பட்ட ஆணையை பிறப்பிக்கும் அளவுக்கு சீன கழிவிட / கழிப்பறை வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது (https://www.economist.com/china/2023/11/09/xi-jinping-wants-china-to-have-better-toilets?utm_medium=affiliates.content.pd&utm_source=TakeAds%20Networks&utm_campaign=16002&utm_content=Online%20Tracking%20Link&irclickid=RcSUYZxDjxyKRW9X17wYoRaFUkC2DxXlnRelWQ0&channel=Impact&irgwc=1( ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மாறாக, கிந்தியா என்றவுடன் இதை கொண்டே அடையாளப்படுத்தும் போக்கு இருக்கிறது சர்வதேச அளவில். அந்த பெண் சொல்வது போன்று , எவராவது இந்த பழக்கத்தில் பிழையில்லை , ஏனெனில் அவர்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் (கிந்தியாவில்) செய்யப்படுவது என்று நியாயப்படுத்தினார்களா? கிந்தியரின் எண்ணம் இது தான் அங்கெ செய்தால், எங்கும் செய்வதை எல்லோரும் சகித்து கொள்ளா வேண்டும். தமிழ் நாட்டில் நடப்பதும் இது தான், அண்மையில் புகைப்பிடத்தலுக்கு குழுவாக தமிழரை தாக்கியது ( சட்டம் ஒழுங்கை கொண்டு எவர் உள்ளூர் ஆட்சியென்று காட்ட விரும்பாத திமுக). ). தமிழர் சாதி என்றவுடன் வெட்ட ஆயத்தம், வெளியில் இருந்து வந்தவன் அடிக்கிறான் என்று கோழிக்குஞ்சாக போலீஸ் செட்டையை கேட்பது. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இவையும் ஒரு காரணம், எந்த முறைசார் அல்லது அரச படிவதிலும், தேசியம், இனம், மதம் போன்ற இடத்தை நிரப்பாமல் விடுவதில்லை. Other asian என்று தெரிவு செய்து, அதை விளக்கி (அநேகமான முறைசார் படிவத்தில் இடம் இருக்கும்) Eezham Tamil என்று நான் குறிப்பது. எமது இங்கு வளரும் சந்ததிக்கு இதை சொல்லி கொடுக்க வேண்டும். UK இல் முறைசார் அல்லது அரசு படிவத்தில், கிந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் க்கு பிறிம்பான தெரிவு இருக்கிறது, அனால் சொறி லங்கா வுக்கு இல்லை.
  6. லதா மங்கேஸ்கார, அவருக்கு உரிய நேரத்தில் கிடைத்தவற்றை பற்றி ஏன் ஒரு பிரதிபலிப்பும் இல்லை. அவற்றை சொல்லி இருக்க வேண்டும். இப்போதும், மானிடராக, ஒளவையார் சொன்னது போல வாழ்கை இருந்தால் அது அரிதே. லதா மங்கேஷ்கர் போன்றவர்கள், ஒளவை யார் சொன்னதை விட கூடவே அரிதானது கிடைத்து இருக்கிறது. இனியதும் ஒளவை யார் சொன்னதை விட கூடவே கிடைத்து இருக்கிறது. கொட்டியதும் லதா மங்கேஷ்கர் வாழ்க்கையில் இல்லை என்றே நினைக்கிறேன். இவைகள் அனைத்தும் வாழ்க்கையில் கொண்டிருப்பது வாழ்க்கையின் சிறப்பு. லாத மங்கேஷ்கர் (போன்றவர்கள்) இறுதி காலத்தில் கூட கிடந்தது, அழுந்தாமல் போனது / போவது இன்னும் சிறப்பு. அரியது “அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே” இனியது “இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் அதனினும் இனிது அறிவுள் ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே” கொடியது “கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய் அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே”. இவற்றின் பொருள் எவருக்கும் தெரியாது ஆயின், பொருளை பின்பு இணைக்கிறேன்.
  7. உடற்பயிற்சி strength பயிற்சியாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ஆய்வுகளும் இதை காட்டுவதாக சொல்கிறார். (gym க்கு போய்த்தான் strength பயிற்சி செய்யவேண்டும் என்பது அல்ல.) வேறு அறியப்படாத காரணங்களும் இருக்கலாம் (உ.ம். முதல் 20, 30, 40, 50 வருட வாழ்க்கையில் உருவாகிய ஒழுங்குகள், பழக்கவழக்கங்கள்). இது சரி என்றால், வேலை தலத்தில் தொடங்க வேண்டும். Multitasking என்றதை ஓர் வேலை தகுதியாக கேட்க கூடாது.
  8. சீனாவின் சிறு பாதிப்புடன் தவிர்த்தது, உண்மையில் வடிவமைபின் (design) வழியா (அதாவது operational risk analysis, assessment, resiliency and business continuity plan இன் படியா), அல்லது தற்செயலாக நடந்ததா என்பது தெரியவில்லை. அனால், சீன செய்த முறை, அதாவது தொழிநுட்பம் வெளிநாடோ (அல்லது உள்நாடோ), சீன அரசு வேறு ஓர் நிறுவனத்தை நியமித்து, அந்த நிறுவனம் quality, ரிஸ்க் போன்ற ஆய்வு செய்த்த்து, profile செய்த பின்பே சீன அரசு நிறுவனங்கள் தொழிலநுட்ப மேம்படுத்துதலை அனுமதிக்கும். இது உண்மையில், third party risk என்ற வகையிலும் - ஏனெனில் crowdsrtike பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு third party (மூன்றாம் பட்சம்) risk , microsoft (இரண்டாம் பட்சம்), supply chain risk profile ஆகும் . எனவே, third party risk ஐ கையாள்வதிலும், பாரிய அளவு பாதிக்கப்பட்ட நிறுவங்களின் தலைமை தவறி விட்டது (அனால் இது தடுத்து அல்லது விளைவை குறைத்து இருக்க கூடிய யதார்த்த சாத்திய யக்கூறுகள் உள்ள பிரச்சனை ) உண்மையில், முன்பே சொன்னது போல, இது business and operational resiliency, continuity விடயம், இது ceo மற்றும் executive management மட்டத்தில் ஒழுக்காற்று செய்யப்படவேண்டிய நிலை. பாதிக்கப்பட்ட நிறுவங்களின் வேறு எந்த பகுதியாவாது தவற விட்டு இருந்தால் , அந்த பகுதியில் இருந்த பலர் வேலை நீக்கதுக்கு உடனடியாக, கேட்டுகேள்வி இன்றி உட்பட்டு இருப்பார்கள் இந்த கூற்று தான் சீன நிறுவங்களின் ceo, executive management, எவ்வளவு தூரம் business, operational resiliency, continuity இல் கவனம் செலுத்தி உள்ளார்கள் என்றும், மேற்கு நிறுவங்கள் புறக்கணித்து உள்ளன என்பதும் தெளிவு.
  9. ஆனால், இந்த பெரிய நிறுவனங்களில், severe operational disruption or disaster recovery plan இல்லாதது தான் அடிப்படை பிரச்சனை. இது SCADA மற்றும் critical infrastructure , services ஐயும் பாதித்தது தான் முக்கிய பிரச்சனை. சில பாதிப்புக்கள் இன்னமும் தெரியாமல் இருக்கலாம். உ.ம். காற்றாலை, சில வெளியில் வராது உ.ம். உளவு நிறுவன பாதிப்புக்கள், அணுத்துறை பாதிப்புக்கள் போன்றவை. (சிறிய, மற்றும் இடை நிறுவங்களின் நிலை வேறு) இது Operational risk and resiliency இல் ஒன்று, வெளிப்படையானது - single point of failure by vendor-lock-in (vendor-lock-in தவிர்க்க முடியாதது அநேகந்தமான சந்தர்ப்பங்களில், தொழில்நுட்ப சிறப்புத்தேர்ச்சியால்). (தொழில்நுட்ப அடிப்படையில் எந்த ஊற்றாகவும் இருக்கலாம், memory leak, dangling pointers ...) நான் முன்பு சேவை அளித்த ஒரு முக்கிய நிறுவனதிலும் பிரச்சனை வந்தது, அனால், அவர்களின் severe operational disruption or disaster recovery plan படி, 1 - 3 மணி நேரத்தில் சேவைகள் வழமைக்கு திரும்பி விட்டது என்று அறிந்தேன். இன்னொரு நிறுவனத்தில் பிரச்சனை வரவே இல்லை -ஏனெனில் எந்த (technology) update உம risk profile செய்யப்படும். இது lab இல் சோதனை செய்யப்பட்டு, update நிறுத்ப்பட்டு விட்டது. இந்த நிறுவனங்களின் Operational Risk ஆய்வு, திட்டத்தில் இத்தகைய ஓர் (single point of failure by vendor-lock-in risk) ஐ, technology risk profiling ஐ executive முகாமைத்துவதுடன் கிட்டத்தட்ட அனல் பறக்கும் வாதத்துடன் அந்த நேரத்தில் (பல வருடங்களுக்கு) முன்பு புகுத்தியது எனது மிகச் சிறிய அணி. அதை அவர்கள் பின்பு , தொழிநுட்ப வளர்ச்சி, மாற்றம் ஏற்ப விரிவாக்கி உள்ளார்கள் என்பது போலவே தெரிகிறது. ஆகவே, பிரச்சனை ஊற்று தொழில்நுட்பத்தில் இருந்தாலும், பெரிய நிறுவனங்களின் organisational, operational risk and resiliency இன் திட்டமிடலில் ஓட்டை இருந்ததே மிகப்பெரிய தவறு. பாரிய அளவு பாதிக்கப்பட்ட பெரிய நிறுவங்களின் ceo க்கள்,மற்றும் சிரேஷ்ட முகைமாத்துவம் , தொழிநுட்பத்தை கொண்டு தமது ஓட்டையை மறைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.
  10. நிச்சயமாக, இதை தான் முதலில் சிந்தித்தேன். ஏனெனில், புவியின் காந்தபுலம் ஏற்படுவது மையத்தில் இருக்கு குழம்பின் ஓட்டத்தால் ஏற்படும் இலத்திரன் ஓட்டத்தால். மற்றும், உண்மையில் எதிர்வளமாக (நிரந்தகமாக) மையப்பகுதி சுழன்றால், அநேகமாக இலத்தினரன் ஓட்டத்தின் போகும் மாறுவதற்கு இடம் இருக்கிறது (எனவே காந்த புல போக்கும் மாறுவதற்கு இடம் இருக்கிறது). அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. சூரிய புயல், மற்றும் கதிர் வீசிசில் இருந்து புவியை பாதுகாப்பது இந்த காந்தப்புலத்தின் தொழிற்பாடு, கிட்டத்தட்ட புவியைச் சுற்றி ஒரு கவசமாக இருக்கிறது. உ.ம். கண்ணுக்கு தெரியும் Northern light (aurora borealis) உருவாகுவது, காந்தப்புலம், சூரிய புயல், மற்றும் கதிர் வீச்சை வட துருவத்துக்கு ஏறத்தாழ உறுஞ்சுவதால் என்று சொல்லலாம் (அங்கு தான் செறிவாக தெரிவது, மற்ற பகுதியிலும் தடுப்பது நடக்கும் ஆனால் கண்ண்ணுக்குக்கு தெரிவது குறைவு அல்லது இல்லை), உண்மையில் (உச்ச கட்டத்தில்) அதில் காந்த புலத்தின் காந்த விசை கோடுகள்,படலங்கள் தெரியும். அப்படி கண்ணனுக்கு தெரிவதே northern light. வட துருவத்தில் தெரிவதால் Northern light என்று பெயரிடப்பட்டு உள்ளது, (இதை அவர் சுருக்கமாக சொல்லி இருக்கிறார்) (தென்துருவதிலும் தெரியும், இது aurora australis அல்லது southern lights என்று பெயரிப்பட்டு உள்ளது) இப்போதைய காந்த துருவங்கள், புவியின் புவியியல் துருவங்களோடு ஏறத்தாழ ஒத்து இருக்கிறது. (உ.ம். ஆக, கந்த புல துருவங்கள் மாறி மத்திய கோட்டுக்கு கிடாவாக வந்துவிட்டது என்றால், சூரிய புயல் , கதிர்வீச்சு மதியகோட்டு பகுதியில் உறிஞ்சப்படும், மத்திய கோட்டு பகுதி மனிதன் மற்றும் உயினங்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதி, இங்கே பல வருத்தங்கள், சொல்லமுடியாத, கற்பனை பண்ண முடியாத அழிவுகள், விளைவுகள் ஏற்படும்). மற்றும் புவியின் காந்த புலம், பல (பாரிய தூரங்கள், கண்டங்கள், காலநிலைகளை கடக்க) இடம்பெயரும் பறவைகள், விலங்குகளுக்கு திசை காட்டியாக இருக்கிறது. இது பரிசோதனை நிலையில் தான் இருக்கிறது. அனால், இது biological quantum effect என்பது ஏறத்தாழ முடிவாகி இருக்கிறது. அனால், அவ்வப்போது (மில்லியன் காலக்கணக்கில்) காந்த துருவங்கள், புவியியல் துருவங்களில் இருந்து விலத்தி இருக்கிறது என்பதற்கு (மறைமுகமான) geology (பாறைப்படிவுகள் (sediments), lava உறைந்ததில் ) ஆதாரம் இருக்கிறது. வேறு பல, இதுவரை அறியபடாத பாதுகாப்புக்கள், உயிரினங்களின் வேறு தக்கென பிழைக்கும் நோக்கத்துக்கும் காந்த புலம் இன்றியமையாததாக இருக்கலாம்
  11. இது நடப்பது அருமை தான். பொதுவாக எகிறுபவை. அவை நீரில் இருந்து எகிறும் போது, காற்றுப்பை (swim / air bladder) நிரம்பி முழு உடலும் முறுக்கெடுத்து, கிட்டத்தட்ட நீண்ட ஆட்டிலறி ஷெல் போலத்தான் வரும். இந்த குடும்ப மீன்களால் (முரல், sword fish, மயில் மீன் (sail fish), பாய் மீன் (marlin குடும்பம்) இப்படியான இறப்பு அல்லது பலத்த காயம், அங்கங்கள் துண்டிக்கப்படுதல் அவ்வப்போது நடக்கிறது. பெரிய சீலா மீன் கூட தடித்த ஈட்டியாக வரும் தன்மை உள்ளது.
  12. இங்கே வசை பாடுபவர்கள், ஒரு வேளை சம்பந்தன் அந்த (2009 இல் இருந்து) இடத்தில இல்லாவிட்டால் என்பதை சிந்தித்தது பார்த்தது உண்டா? ஆனல் 2009 இல் இருந்து இருபதத்திற்கு, சம்பந்தனின் அனுபவமும், சிங்களதுடன் நடத்திய (சட்ட) நாய் சண்டை வாதங்களும், அடிபிடியும், கிந்தியவுடன் அனுபவமும், ஆயுத போராட்டகால அனுபவவும் தான் புடம் போட்டது சம்பந்தனை சம்மந்தன் இல்லாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளாக உடைந்து, பின்பு கட்சிகளும் உதிரிகளாக உடைந்து இருக்கும். கிந்தியா, சிங்களம், ஏன் மேற்கு கூட மனித உரிமை சபையில் நடப்பதை கைகழுவி விடக் கூடிய நிலை வந்து இருக்க சாத்திய கூறுகள் மிக கூட. குறைகள் இருப்பினம், சம்பந்தன் செய்தது காலத்துக்கு ஏற்ற சேவை.
  13. சம்பந்தனின் அபிமானியோ, ஆதரவாளரோ அல்ல நான். ஆனா;, சம்பந்தனின் அனுபவத்தை நிலமைக்கு ஏற்றவாறே பாவித்து உள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும். வேறு யாராவது என்ன செய்து இருக்க முடியும், கிந்திய பேய் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து தடுக்கும் பொது ( இப்பொது பார்க்க போனால் கிந்தியாவுக்கு 13 இல் சொல்லளவில் இருப்பதை கொடுப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது) ? ஆயினும், சம்பந்தன் கிந்தியவை பச்சடி போட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பை தக்க வைத்தார், தேவையான காலத்தில். நாராணனனும், மேனனும் 2009 இல் சொன்னது, உங்களுக்கு தேவையானதை நாங்கள் இனி சொல்கிறோம், சம்பந்தனின் பதில் சொல்லமுடியும், ஆனால் செய்தால் அவர்கள் கடவுள் என்ற கருத்து பட என்பதே நான் கேள்விப்பட்டது . சம்பந்தன் அப்படி சொன்னனரா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனல், பின்பு ந்டைபெற்றவை (மோடி 13 ஐ அமுல்படுத்துமாறு அதிகார தோரணையில் வற்புறுத்தியது), சம்பந்தன் ஏதோ ஒன்றை அவர்களை அதிகார மானத்தை சீண்டும் படி சொல்லி இருக்கிறார் என்பதே ஊகிக்க கூடியது. அனால் பெயர் அளவிலாவது, மோடியை 13 ஐ அமுல்படுத்துமாறு சிங்களத்திடம் பகிரங்க வற்புறுத்தலை முன்வைக்கும் நிலையை உருவாக்கியவர். (சும்மா மோடி வாயை திறந்து இருப்பாரா) இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, பல்வேறு பட்டவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. (இங்கே தலைவர்களின் தனிப்பட்ட திறமை, பலம் என்பது, இந்த நிலையில், தக்கவைத்து கொண்டு போவது தான், சிங்களம், கிந்தியம் என்ற அரசுக்களை எதிர்க்கும் போது.)
  14. ஈழத்தமிழர்கள் இலங்கையில் வீட்டோடு மாப்பிளை தானே (வெகு அருமையான விதிவிலக்குகளை தவிர )? இப்போதும் இது இலங்கையில் தொடர்கிறது தானே?
  15. இங்கே சிலர் சொல்லி இருப்பது , மேற்கு முறைகளை அறிமுகப்படுத்துவது, அனால் அதை தடுப்பது சாதி ஏன் கிந்தியா, மற்ற நாடுகளில் எவ்வளவு சாதி என்பது பின்பற்றப்படுகிறது என்பதை பொறுத்து, மேற்கு, சென் போல வளர முடியாது என்பதை வீடியோ சொல்கிறது. (இதில் பிராமணர் மட்டும் அல்ல, வேறு உயர் சாதிகள் என்று மார்தட்டுபவையம் உள்ளடக்கம்). இந்த வீடியோ இ பாருங்கள் (இதில் எந்த விதமான உணர்ச்சிகரமாக சாதியை பார்க்காமல், மொத்தத்தில் உணரசிகரமற்ற ஆய்வு நோக்கில், பொருளாதாரம், உள்ளூர் ஆட்சி, வெளிநாட்டு முதலீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. (பொதுவாக வெளியாரின் ஆய்வு காணோட்டம் , எமது கண்கள், மதி காண மறுப்பதை போட்டு உடைத்து காட்டும். முழு வீடியோ ஐயும் பார்த்தல் மேலதிக விளக்கம் ஏற்படும் ) இதனால் தான் சொல்கிறேன், பொருளாதர தங்கி இருப்பதாய் இளக்கினால், சாதி பிடி இளகுவாதற்கு வாய்ப்புகள் கூட.
  16. ஆம், நீங்களே சொல்லி விட்டீர்கள் மேற்கு நாடுகளில் எங்கடை ஆக்கள் என்பது - அது ஏனைய ஈழத்தமிழரை குறிக்கும். அனால், அந்தந்த ஊரில் எங்கடை ஆக்கள் என்பது பொதுவாக, அநேகமான எல்லா சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்ட சாதியை குறிக்கும். சந்தர்ப்பம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில், (இப்பொது) மேற்கில் எங்கடை ஆக்கள் என்பது ஈழ தமிழரை குறிக்கும். அனால், மேற்கிலும் எனந்த சந்தர்ப்பத்தில் எங்கடைஆக்கள் என்பது பாவிப்படுகிறது - அவர்களின் சொந்த பந்தங்களை குறிப்பதற்கா அல்லது ஈழத்தமிழரை குறிப்பதற்கா என்பது சந்தர்ப்பத்தில் தங்கி இருக்கிறது.
  17. பொதுவாக , இங்கே சிலர் சொல்லி இருப்பது, நடந்தால் நல்லது, அனால் யதார்த்தம் இல்லை. சட்டங்கள் போடுவது ஒரு பகுதி தான். அனால், அது கூட பெயர் அளவிலேயே விளைவு. பொருளாதாரத்தை உயர்த்துவதும் ஒரு பகுதி தான். அனால், பொருளாதாரத்தை உயர்த்தும் போது மிக முக்கியமான விளைவு - ஒரு சாதியில் இருக்கும் பெரும்பான்மையோர், இன்னோர் சாதியில் வாழ்வாதாரத்துக்காக தங்கி இருப்பது குறைக்கப்படும் (உண்மையில் நீக்கப்பட வேண்டும், அனால், உடனடியாக சாத்தியம் இல்லை). இது இரண்டு விளைவுகளுக்கு ஈட்டி செல்லும் - ஒன்று சாதியால் ஒரு சாதியனர் இன்னொரு சாதியை சமூக, பொருளாதார அடிப்படையில் ஒதுக்குவது, அடக்குவது குறையும்; மற்றும் எந்த சாதியும் தைரியமாக ஒதுக்குவத்து, அடக்குவதை எதிர்க்கும். இது மிக முக்கியமானது. குறிப்பிட்ட சாதி வளங்கள், சமூக, அரசியல் வெளியை கட்டுப்படுத்துவதிலேயே, ஒரு குறிப்பிட சாதிக்கு மற்ற்ற சாதிகளை அடக்குவது, ஒதுக்குவது செய்ய முடிகிறது. இதை முற்றாக உடனடியாக நீக்க முடியாது; அனால் எவ்வளவு குமுடியுமோ அவ்வளவு செய்யப்பட வேண்டும் பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது (இங்கே சொல்லப்பட்ட மேற்கு முறைகள்) நீண்ட காலா திட்டம். அதுவும் வெளியில் சொல்லி செய்ய முடியாது. (வெளியில் சொல்லி ) முனையும் அரசியல் கட்சி அடிபட்டு போகும் வாய்ப்பு இருக்கிறது . இப்படி பல பிரச்சனைகள். (சாதி வரலாறு அறிந்தது தான் சொல்கிறேன்).
  18. உங்களின் தரவே சொல்கிறது, (சங்கத்)தமிழோடு சிங்களம் கலக்கவில்லை. (ஒரு போதும் முடியாது என்பது வேறு விடயம்). புத்த சமயம், மற்றும் அரச மொழியில் பாளி உள்வாங்கப்பட்டது, பாவிக்கப்பட்ட தமிழ் சொற்கள் பாளி மயப்படுத்தப்பட்டது (அப்படி உருவாகியது தான் சிங்களம்).
  19. இலங்கையில் (ஈழத்தமிழர்கள்) பாவிக்கும் பதம் எங்கடை ஆக்கள் (மொழி அடிப்படையில் சரியானதும் கூட), குறித்த நபர்கள் சொல்லுபவரின் சாதியை சேர்ந்தவர் என்பதற்கு. இனம் என்ற பதப்பிரோயோகத்தில் இலங்கை (ஈழத்தமிழர்கள் பெரும்பாலோனோர்) மிக தெளிவானர்வகள். தமிழ்நாட்டில் இனம் சாதியை குறிக்கலாம்.
  20. அசாஞ், குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பேரத்தின் படியே (plea bargain) வெளியே வருவது, உண்மையான ஊடகவியலாளர் / பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டு உள்ளது.
  21. இருப்பதில் சரியான அணுகுமுறை. சும்மா சாதி இல்லை (அல்லது புலிகள் போல தடை செய்து) என்று சட்டம் போட்டு செய்யும் விடயம் அல்ல. அப்படி செய்வது (அள்ளது புலிகள் செய்தது) சாதியை பதுங்கு குழிக்குள் தள்ளியது, காற்றழுத்தமாக அடைத்தது ; அந்த காற்றழுத்த மூடியான புலிகள் அகன்றவுடன் வீறு கொண்டு எழுந்துள்ளது. தமிழ் நாட்டில் எல்லா சாதிகளும் அவை பிற்றப்படுத்தப்பட்டவை என்ற அரச முத்திரையை வலிந்து வரவேற்றுக்கும் போக்கு இருக்கிறது. ஏனெனில், இட ஒதுக்கீடு, சலுகைகளுக்காக. எனவே, உண்மையாக (பொருளாதாரத்தில்) பின்னுக்கு சமூக மட்டத்தில் இருக்கும் சாதிகளை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.
  22. பூட்டன் பூட்டிக்கு அடுத்த (அல்லது முதல் தலைமுறையை?) தலைமுறையை, நாம் (இலங்கையில் ) அழைப்பது கொப்பாட்டன், கொப்பாட்டி கோந்துறு, மாந்துறு என்றல்லவா? நீங்கள் சொல்லியது, தமிழ்நாட்டில் என்று நினைக்கிறேன். ஏனெனில், இலங்கை தீவாகையால், பழைய சங்கத் தமிழ் பல சொற்கள் நிலைத்து விட்டது.
  23. ஆம், எப்படியும் அழைக்கலாம். உறவை சொல்லுவதற்கே சந்ததி என்பதை பாவித்தேன் இப்போதும் அப்படித்தானே, ஆண் வழிதானே துடக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.