Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. எப்படி என்றாலும், உக்கிரனும், கிந்தியவும், பத்திரிகையாளர் புடை சூழ்ந்து லபக் என்று செய்தியை சுடச் சுட கெளவுவதற்கு எதிர்பார்த்து நிற்க , பேச்சுவார்தை நடத்தும் புதிய நடைமுறையை படத்துக்காகவாவது செய்து காட்டுவது.
  2. இங்கே மேற்கில் இருக்கும் மாணவருக்கு, பொதுவாக, எந்த போதைப்பொருளும் எப்படி, எந்த இயற்கை / செயற்கை பொருட்களை பாவித்து செய்யப்படுகிறது, அதன் வேதியியல் கூறுகள், எவ்வாறு உடம்பை, நரம்பை, மூளையை பாதிக்கிறது, அல்லது கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பவை தெரியும். இது (இலங்கையில் மட்டும் தான் எனது அனுபவம்), அங்கெ உள்ள மாணவருக்கு பொதுவாக தெரியாது, அக்கறையும் இல்லை. இதுவவே மிகமுக்கியமான காரணம், மேற்கில் மாணவர்கள் போதைப்பொருளை பொதுவாக முதலிலேயே நாடாமல் இருப்பது, மிக முக்கியமாக பாவிக்கும் மாணவரின் தூண்டுதலுக்கு எடுபடாதது. பருவதுடிப்பில், ஓரிருமுறை பாவித்தாலும், பொதுவாக மாணவர் பின் விலத்தி இருப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணம்.
  3. ஹிந்தி சினிமாவையும் கட்டுப்படுத்துவது (ஒப்பீட்டளவில்) சிறு குழு. அதில் சல்மான்ஹான் முக்கிய புள்ளி என்பது பரவலாக தெரிந்த, அனால் ஏற்றுக்கொள்ளப்படாத இரகசியம்.
  4. நல்லூர் கோயில் ஆண்களுக்கு மேற்சட்டையை அகற்றும் படி பணித்ததின் பின் ஒரு சுவாரசிய கதை இருக்கிறது. அது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி நல்லூர் கோயிலுக்குள் வருவதை சாதி அடிப்படையில் ஒரு பகுதியினர் எதிர்த்தனர் (இதில் வேறு பல சாதிகளும் உள்ளடக்கம், இந்த ஒவ்வொரு சாதியும் அவர்களுக்கு இடையில் வேறுபாடு பார்ப்பது வேறு விடயம் - ஒவ்வொரு சாதிக்குள்ளும் 9 ஆக பிரித்து வேறுபாடு. இதில் வேடிக்கை, சித்தார்த் போன்றவர்களின் சாதிக்குள்ளும் அந்த பிரிவுகள் - தமிழினத்துக்கு எப்படி அவர்களே அவர்களை பிரிப்பது என்பதில் புதுமை சிந்தனை பட்டம் வழங்கலாம்). பொதுவாக சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததிக்கு வசதி இல்லை, அதனால் அவர்கள் மேல் சட்டை அணியாமலேயே நாளாந்த வாழ்க்கை எங்கு சென்றாலும். (ஆனால், பொதுவாக, நல்ல உழைப்பு என்று அந்த நேரம் இருந்தவர்கள் கூட வசதியாக இருந்ததாக உணரவில்லை. எனது அம்மா, அப்பா முப்பாட்டன் சந்ததி வயல்களை கொண்டிருந்தது பூநகரியில், புகையிலை வியாபாரம் என்று இலக்கைத் தீவு முற்றாக சுற்றி திரிந்தது. நன்றான வருமானம் ஒப்பீட்டளவில், ஆனாலும் வசதி என்று உணரவில்லை, எனது அப்பா, அம்மா சொன்னவற்றில் இருந்து, அவர்கள் எதிர்நோக்கிய வாழ்க்கை கடினங்களை பற்றி). அதனால் மேல்சட்டை அணியாது வருபவர்கள் தடுக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பொதுவாக இதனால் பாதிக்கப்பட்டது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி. இதை பார்த்த மாப்பாண முதலியார், விதியாக எல்லா ஆண்களும் மேல்ச்சட்டை அகற்றும் படி விதி கொண்டுவந்தார், சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததியை மேல்சட்டை இல்லாததை கொண்டு அடையாளம் பார்த்து நல்லூர் கோயிலுக்குள் வருவது தடுக்கப்படுவதை தவிர்க்க. ஆனால், புதிய வேடிக்கை சித்தார்த் மேல்ச்சட்டையுடன் நல்லூரை வெளிவீதி வலம் வந்தது, அதிகார சிங்கள இனத்தினர் மேல்ச்சட்டை இல்லாமல் வெளிவீதி வலம் வந்தது. மிகவும் வினோதமான உலகமும், காலமும்.
  5. அஞ்சலிக்களும், ஆழ்ந்த அனுதாபங்களும். இவரே, பல சிங்கள , மேற்கு அழுத்தங்கள், மறைமுக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து. மேற்கு குழுவாக இனவழிப்பை கட்டியம் கூறி அரங்கேற்றியது, அதன் பின் மறைக்க முற்றப்பட்டது ... போன்றவற்றை வெளியில் கொண்டுவந்து, தமிழர்களின் நியாயத்துக்கு போராடியவர். தமிழர்கள் இவருக்கு இனமாக, தேசமாக அஞ்சலி செலுத்துவது அவசியம். ஏனெனில், வீழ்ந்தவருக்கு அப்படி ஒரு தமிழரே அந்த நேரத்தில் அநேகமாக தவிர்க்கப்பட்டு இருக்கும்
  6. ஆங்கிலேயர், தமது நாட்டில் , 50 வருட கட்டிடத்தை பாதுகாக்கின்றனர். அனால் ,வேறு நாட்டில் அதை அந்த நேரத்தில் மூழ்கடிக்க கூடியவாறு அணை அமைப்பு. அதுவும் அந்த இடத்தில் ஆட்சி செய்த அரச (வம்சத்தின்) கோட்டை.
  7. ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அடர்த்தி குறைந்த இடம், தெரிவுக்கு ஒரு காரணம் , இதை உக்கிரேனே சொல்லி உள்ளது , ஏனெனில் இது பகுதியாக அடர்ந்த காட்டுப் பகுதி. இங்கு ஹங்கரிக்கு (ஸ்லோவோக்கியாவுக்கும்) எண்ணெய் வழங்கும் குழாய் வலையமைப்பு சந்தி கொண்ட இடம், அதாவது வழங்கலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் இந்த குழாய் வலையமைப்பு சந்தியில் இருந்து. இங்கு ருசியா புகையிரத முக்கிய சந்திகள், அதாவது ருசியா புகையிரத வலையைபில் இருக்கும் அனைத்து சேவை தவல்களையும் real-time இல் பெறமுடியும் (இது உண்மை), அனால், உக்கிரேனின் கணக்கில் இது இருக்கிறதா என்பது தெரியாது. அநேகமாக புகையிரத சேனையில் தகவலை பெறமுடியும் என்றால் கட்டுப்படுத்தவும் முடியும், ஏனெனில் புகையிரத சேவைக்கன்னா தகவல் தொழிநுட்ப தொடர்பும், வலைப்பின்னலும் (பொதுவாக SCADA systems, Network என்ற வகைப்படுதலுக்குள் வருவது). இவைகள் தான் அந்த இடத்தில் உக்கிரேனுக்கு உள்ள நன்மைகள். வேறும் இருக்க கூடும்.
  8. உத்தியோக பூர்வமாக நேட்டோ இல்லை. அனால் அவைகள் நிலை எடுத்து இருப்பது பின்புறம். மிக முக்கியமாக வழங்கலை தக்கவைக்க. பிரச்சனை என்றால் விலத்துவதும் வசதி. முன்னோக்கி செல்வது / சென்றது உக்கிரைன் அணிகள். (அனால், இந்த உக்கிரைன் அணிகள் நெப்போலியன், ஹிட்லர் படைகளை ருசியர்கள் எதிர்கொண்டு சிக்கவைத்த வியூகத்தில் சிக்கி விட்டதாக சொல்லப்படுகிறது, அதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்) உக்கிரைன் படைகளின் அசைவு இப்போது முன்னோக்கி செல்வது தடுக்கப்பட, கரை வழியாக அசைவு.
  9. தரவை குறித்து எந்த கருத்தும் என்னிடம் இல்லை. அந்த தரவு உண்மை என்று எடுத்து, உங்களின் ஊகத்தை மட்டும். உக்கிரைன் இராணுவ தலைமை, உங்களில் ஊக முடிவை எடுத்து இருபதற்கான சாத்தியக்கூறுகள். 4000 (நான் சொல்லவில்லை, மேலே சொல்லப்பட்டு இருப்பது ) சண்டை பிடிக்க படையை நீங்கள் சொல்பவது போல சிங்க குகைக்குள் அனுப்புவது.
  10. "நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" என்னுடையது ஊகம் என்றால், சாத்திய கூறுகள் நிறையவே இருக்கிறது. உங்களுடடைய ஊகத்தில் சாத்தியக்கூறுகளை விட, ஓட்டைகள் இருப்பதன் சாத்தியக்கூறு அதிகமாக இருக்கிறது.
  11. அனால், இவர்கள் , நேட்டோ நட்டுகள் (விரும்பியவர்களை) அனாமதேயமாக சேர்த்தே, ஒழுங்குபடுத்தியே, UK இல் (மீள்) பயிற்சி அளித்து அனுப்பி உள்ளன என்பது. அனால், தோற்றப்பாடு, முன்பு நடந்தது போல, இவர்கள் தாமாகவே உக்கிரைனுக்கு போய், உக்கிரேனிய படைகளில் இணைந்தார்கள் என்பது போல.
  12. ஒருவரையும் அறிவு, விஷயம் (வேறு எந்த விடயத்திலும்) போன்றவற்றில் எடை போடுவதில்லை . சொல்லப்படுவது எவ்வளவு யதார்த்தத்துக்கு (யதார்த்தம் சிலவேளையில் நம்பமுடியாமல் கூட இருக்கலாம் ) இடம் இருக்கிறது என்பதையே நான் சிந்திப்பது.
  13. நான் கேள்விப்பட்டது. அனால், நன் பார்க்காமல் சொல்லவில்லை, வந்த படங்களில் பொதுவாக முகம் மறைக்கப்ட்டு உள்ளது. உக்கிரனியர்கள் என்றால் முகம் துணியால் (இராணுவ சீருடை பகுதி என்றால் வேறு விடயம்) மூடப்படவேண்டிய அவசியம் இல்லை. கனரக துப்பாக்கி ஆயுதங்களிலும் வேறுபாடு உள்ளது. இந்த திரியில் உள்ள ஒரு படம் தான் பார்க்கவும்.
  14. ஆம், அது தன ருசியா பாதுகாப்பு அமைச்சு veteran சான்றிதழ்களை வழங்கியது வாக்னரில் இராணுவ சேவை செய்தவர்களுக்கு. அந்த சான்றிதழ்கள் விலத்துவோரிடம் இடம் இருந்து ஆயுதங்களை மீளப்பெறுவதற்கு பேரமாகவும் பாவிக்கப்பட்டது. ற்றது, வாகனரில் படை சேவையை தொடர விரும்பியோரை, வேறு படைப்பிரிவுக்குள் உள்வாங்கிய வேகம். உடனடியான விளக்கம் கவிண்டதாக இருந்தால் பறவாயில்லை ஆனல், பிம்பத்தை விலத்தி பார்க்கமாட்டோம் என்றால் ...
  15. பிம்பத்தை மனதில் கொண்டு விளங்க முற்றப்பட்டதால் வந்த வினை. சொன்னது விளங்கவில்லை ஆயின் ஒன்றும் செய்ய முடியாது. "நேட்டோ நாடுகளை சேர்ந்தவர்களை கொண்ட படை" நேட்டோ (நாடுகள்) அனுப்பியுள்ளது, உத்தியோகபூர்வமாக உக்கிரேனிய படை.
  16. இதில் உக்கிரைன் படைகள் அல்ல என்றும் . மேற்கு, UK இல் பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை. (உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) # உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம். நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது
  17. இது உண்மையாக இருபதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம். ஏனெனில், ஆஸ்திரேலியா coco island இல், ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தளம் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிரது. எல்லாமே, பச்சையாகவே வெளியில் சொல்லப்டுகிறது, (யுத்தம் வந்தால்) சீனாவுக்கான வழங்கலை தடுப்பதற்கு உதவியாக என்று. அனால், பங்களாதேஷ Chita Kong துறைமுகத்தை சீனா பங்கு தரராக அபிவிருத்தி செய்தது, அது முழுமையாக இருப்பது பங்களாதேஷ் இடம். இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
  18. வடகிழக்கு தமிழர், அரசியல் கட்சிகள் ஏகோபித்த முதல் குரலை கொடுக்க வேண்டும்
  19. சும்மா, வாய்புளிக்குது என்று சுமந்திரனும், ரணிலும் கதைக்க, செய்தியாகிவிட்டது.
  20. இது போன்றவற்றில், வெளியில் சொல்லப்படாத விடயங்களும், பேரத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கலாம். (அமெரிக்கா (cia இன் தூண்டுதலில்), எமது மொழியில் சொல்லப்போனால், வசியக்காரரை பயன்படுத்தி படம் கீறிப்பார்த்தது, சோவியத் யூனியன் என்ன செய்யுது (அந்த நேரத்தில்) என்பதற்கு. அந்த நேரத்தில் எந்த உடன்பாடு, பேரத்தில் தனக்கு ஏதும் தெரியாமல் இருக்க கூடாது என்பதற்காக.)
  21. இந்த தொகை தான் தேர்தல் முடிவுகளில், முடிவை மற்ற கூடியவாறு முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதற்கு மறைமுக முனைப்பு.
  22. ஆம், அதை தொடர்ந்து வைத்திருப்பதை போற்ற வேண்டும் பிரிட்டானியா காலனித்துவ நாடுகளில், பொதுவாக, வேறு பெரிய அரசியல், சமூக, சமய, இன, அரச பிரச்சனைகள், வன்முறைகள் போன்ற்வவற்றை குறை க்கவில்லை. அனால், பொதுவாக, (உணவு) தரக்கட்டுப்பாடு, சமூக சுகாதாரம் போன்றவற்றில் பிரித்தானியா நிர்வாகம் மிகவும் இறுக்கமாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளிலும், பொதுவாக இந்த நிலை காணப்படுகிறது. , (உணவு) தரக்கட்டுப்பாடு, சமூக சுகாதாரம் பிரித்தானிய காலனித்துவ ஆபிரிக்க நாடுகளில், ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் உள்ளது. இது பிழைத்தது, கிந்தியாவில். வேறு சில நாடுகளும் இருக்கலாம்.
  23. இதை நீங்கள் இங்கு சொல்வது நகைசுவைக்காவே. அனால், சோழன் பூர்வ பட்டயம் - உலோக ஏடுகளில் 1 - 3 ம் நூற்றாண்டு அளவில் (carbon dating வழியாக கண்டறிந்தது) எழுதப்பட்ட ஏடுகளில், இராவணன் இராச்சியம் பற்றி சொல்லப்பட்டு உள்ளது. (சோழன் பூர்வ பட்டயம் நூல் வடிவில் உள்ளது, google இல் தேடி, தரவிறக்கம் செய்யலாம். உலோக ஏடுகள் தமிழ்நாடு தொல்பொருள், வரலாறு காட்சியகத்தில் உள்ளது). அதில் உள்ளத்தின் படி, இப்போதைய திருச்சிராப்பள்ளி, இராவண இராச்சியத்தின் வடக்கு எல்லை என்றும், இராவணனுக்கு சகோதரன் உறவு முறைகொண்ட, திருச்சிரன் என்ற சிற்றரசன் அந்த வடக்கு எல்லையை ஆண்டபடியால் தான் , காலப்போக்கில் மருவி, திருச்சிராப்பள்ளி என்று வந்தது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இதை (சோழன் பூர்வ பட்டயம் ) இங்கு பல இடத்தில சொல்லி விட்டேன்.
  24. தேர்தல் முடிவுகள் சரி பலவே தென்படுகிறது, மேற்கு மற்றும் அமெரிக்காவின் மதுராவை தூற்றும், கறுவும் நோக்கில் இருந்து பார்த்தாலும் (அனால், தேர்தல் நடக்கும் அரசுகள் (சொறி சிங்கள லங்கா உட்பட) மேட்ற்கு / us க்கு சனநாயகம் தானே.; ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் மேற்கு, us ஆதரவு அதிபர்கள் வெனிசுவேலா இல் நடந்தது போல தெரிவு செய்யப்படுகிறார்கள்.) ஏறத்தாழ, 15% சனத்தொகை வெனிசுவேலாவை விட்டு இடம்பெயர்ந்து விட்டது. இருக்கும் மிகுதி சனத்தொகை, மதுரோவுக்கு பெரும்பான்மை கொடுப்பதில், ஒன்றும் முறைகேடு (மேற்கு சொல்வது போல) அல்ல. மேட்ற்கு, us க்கு தாளம் போடும் அதிபர், ஆட்சி வெநிசுவேலாவில் இல்லை என்பதே மேற்கு, us இன் கறார் கறுவுறதுக்கும், புழுங்குறதுக்கும், திட்டுறத்துக்கும் காரணம்.
  25. மலிபன் இன், அதாவது தொடக்கியவரின் தரக்கட்டுப்பாடு ஒழுங்கை உருவாக்கியது, பிரித்தானிய நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாடு, மற்றும் சுத்தம், சுகாதாரம் மீதான மிகுந்த இறுக்கமான கட்டுப்பாடு என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.