Everything posted by Kavi arunasalam
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்த பாடல். பாரதிதாசன் பாடல் எழுத ராஜேஸ்வரி பாடியிருப்பார். அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் (பத்மினியன் அக்கா) லலிதாவுடன் (அமலாவின் மாமனார்) நாகேஸ்வரராவ். ஓரு இரவில் அண்ணாதுரை எழுதிய நாடகம் என்பதால் ‘ஓர் இரவு’ என்று பெயர் வைத்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். நாடகம் பெற்ற வெற்றி திரைப்படமாக வந்த போது கிடைக்கவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டு குடும்பங்களோடு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறீர்கள்.😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதற்குள் ஐம்பதா? இளமையுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடித்திருக்கிறார். நாம் படத்தில் நடனம் ஆடி திரையுலகுக்கு வந்த குமாரி கமலா பின்னாளில் நடிக்கவும் ஆரம்பித்தார். சிவகங்கைச் சீமையில் அவர் நடிக்கும் போது பிரபல ஓவியரான லட்சுமணனின் மனைவியாக இருந்தார். அதனால் குமாரி கமலா என்ற அவரது பெயர் கமலா லட்சுமணன் என்று திரையில் வர ஆரம்பித்தது. அந்தப் பெயர் மாற்றம் பலருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது என்பது என்னவோ உண்மை. கண்ணதாசனின் தமையன் ஏ.எல்.சிறீனிவாசின் (இரண்டாவது) மனைவி எஸ்.வரலட்சுமி ஒரே நேரத்தில் வெளிவந்த சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய இரண்டு படத்திலும் நடித்திருந்தார். Suvy, நீங்கள் ரசிக்கும் சீமானாக இருந்து இந்தப் பாடலை கேட்டு கற்சிலையின் கட்டளகில் கற்பனை செய்து சுகங்களில் கலைகளை அறியுங்கள்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இவர் குமாரி கமலா
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Suvy, எஸ்.எஸ்.ஆருடன இருப்பது குமாரி கமலா அல்லவா?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எஸ்.எம. சுப்பையாநாயுடு இசையில் சீர்காழியார் குரல். ஜெயலலிதாஅரசியலில் இருந்த போது அவரை வரவேற்பதற்கு இந்தப் பாடல் பயன் படுத்தப் பட்டிருந்தது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கும் வள்ளுவரைப் பார்க்க ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்தப் படத்துக்கு, “வாழ விரும்புவோருக்கு வள்ளுவரின் தாக்கு” என்று எழுதலாம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லதொரு கலைப் படைப்பு
-
யாருடாப்பா பேரான்டி..நீ..?
சின்ன சந்திரபாபு
-
சிரிக்க மட்டும் வாங்க
உங்களால் வீட்டிலே சந்தோசமாக இருக்க முடிகிறதா தமிழ் சிறி?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீண் காலமாகி விட்டது இந்தப் பாட்டைக் கேட்டு. ராஜசுலோசனாவோடு. அட நம்ம நம்பியார்- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Nunavilan புலிக்கொடியை வடிவமைத்தவர் வேறு ஒருவர். அதில் மாற்றங்கள் செய்தவர் ஓவியர் நடராசன் என்பதுதான் சரியாக இருக்கும்- கருத்து படங்கள்
- பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!
நகைச்சுவையைப் பார்தது சிரியுங்கள். பாட்டைக் கேட்டு அழுங்கள். “சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனிதஜாதி”- பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!
கழுதைக்குப் பிறந்த பசங்கள் என்று பாலையா தன்னையே இரண்டு தடவைகள் குத்திக் காட்டுவது நகைச்சுவை. இதேபாணியில் ஒரு நகைச்சுவை பாடல் இருவர் உள்ளம் திரைப்படத்தில் இருக்கிறது. அதில் “அசட்டுப்பய பிள்ளை ஆராரோ” என்று எம்.ஆர்.ராதா தன்னையே குறிப்பிட்டு பாடுவதாக இருக்கும் இந்த நகைச்சுவை பகுதிக்குப் பின்னால் வரும் பாடல் என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் ஆழமானவை “இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா இருவிழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா சிதறிவரும் வார்த்தைகளில் தெரியவில்லையா சிந்தையிலே தெளிவுடையோர் யாருமில்லையா சிரிக்கச் சொன்னார் சிரித்தேன் பார்ககச் சொன்னார் பார்த்தேன்” நல்ல பாடல்கள் நகைச்சுவைகள் இருந்தும் கண்ணதாசனை கவலையுள்ள மனிதனாக்கிய படம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னுடய இளமைக் காலத்தில் காதலித்தலே ஒரு பாரதூரமான குற்றச் செயலாகப் பார்ககப் பட்டது. பெண்களுடன் பேசுவது பழகுவது எல்லாம் பிழை என்ற காலம் அது. என்னுள் எழுந்த பல காதல்கள் இதயத்துக்குள்ளேயே செத்துப் போய் ஏக்கப் பெருமூச்சாக வெளியேறிவிட்டன. Suvy, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நன்றி Suvy. இந்தப் பாடலும் சோகம்தன். அன்றைய காலங்களில் அழுகைப் படங்கள்தான் அநேகருக்குப் பிடிக்கும். அதுவும் காதலில் தோற்றுப் போன ஆண்களின் படப் பாடல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. எங்கள் ஊரில் சென்றல் தியேட்டர் என்ற பெயரில் ஒரு சினிமா அரங்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்குனி மாதத்தில் தேவதாஸ் படம் போடுவார்கள். பங்குனி கள்ளை ‘அடித்து’ விட்டு இரண்டாம் காட்சியில் சோகத்துடன் தேவதாஸ் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிசுகளை அன்று நான் பார்ததிருக்கிறேன். ‘நான் தேடும் போது நீ ஓடலாமோ’ பாடும் ஆண்குரல் சோகத்துக்கு நன்றாக ஒத்துப் போகிறது. இதே இசையில் ஆனால் சந்தாசமாக ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு பாடலை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் “திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ”- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Suvy எங்கே. இருந்து இந்தப் பாடலை எடுத்தீர்கள்? எப்போதோ கேட்ட ஞாபகம் மட்டும் இருக்கிறது. பாடியவரைத் தெரியவில்லை. ஒரு சமயத்தில் கண்டசாலா போல் இருக்கிறது. இன்னொரு தடவை மோதியின் குரல் போல் தெரிகிறது. பாடியவர் யாராயிருந்தாலும் சோகத்தையும் ஏக்கத்தையும் கலந்து தரும் குரல்👍🏾- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பி.பீ. சிறீனிவாஸை விட ஏ.எம். ராஜவின் குரல் ஜெமினிக்குப் பொருத்தமானது என்பது என் கருத்து. இந்தப் பாடலைக் கேட்கும் போது “வானோரும் காணாத பேரின்பமே” என்று சொல்லிக் கொள்ளலாம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல் இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன் பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன்மலரோ? மேகம் யாவும் பேரொலியோடு மேளம் போலே முழங்குவதாலே கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண வேடிக்கையோ? மண்ணில் பெருகும் வெள்ளம் போலே மனதில் பொங்கும் ப்ரேமையினாலே காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ...என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜீவனாம்சம் படத்தில் தொடங்கிய சிவகுமார் - லட்சுமி ஜோடிப் பொருத்தம் பல படங்களில் தொடர்ந்தது. அது கண்மணி ராஜாவிலும் தெரிகிறது பொதுவாக வெளிநாட்டவர்கள் கடற்கரையில் கோர்ட் சூட்டோடு உலாவருவதில்லை. ஆனால் தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு அது ஏனோ பிடிப்பதில்லை. நீண,ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன். பதிவுக்கு நன்றி Suvy- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆக, விழுந்தால்தான் வருடப்பிறப்பு என்கிறீர்கள் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.