Everything posted by ஏராளன்
-
அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம் Published By: Vishnu 11 Dec, 2025 | 01:27 AM இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோரும், அன்புக்குரியவர்களுமான நாம், எமது குடும்ப உறுப்பினர்களைத்தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அல்லது நீதியோ இல்லாமல் தொடர்கிறது. இந்த 'சர்வதேச மனித உரிமைகள் தினம்' 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, இனவழிப்பினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனவழிப்பின் மிகக்கொடூரமான வடிவமொன்று 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது. சரணடைந்தவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனப் பொய்யான வாக்குறுதி அளித்து, அதனை நம்பி தாமாகவே சரணடைந்த 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல் எமது வலியும், போராட்டமும் நின்றபாடில்லை. சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது. அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதியை வழங்குவோம் எனக்கூறி சர்வதேச சமூகத்துக்கு முன்பு தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்துகிறது. ஆயினும், ஒவ்வொரு முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கோப்பை மூடுவதற்கும், முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது என்ற மாயையைக் கட்டமைப்பதற்கும் செயற்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்குவழிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் நாம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தேடிய சுமார் 500 பெற்றோர்களும், உறவினர்களும் எவ்வித பதிலோ, நீதியோ கிட்டாமல் மரணித்துவிட்டார்கள். இந்த எண்ணிக்கை சமீபத்திய 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது. ஆயினும் எமத இறப்புகளுக்கு எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை. எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் ஏன் கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது? இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கும் வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியாக இருந்தாலும், எமக்கான நீதியை வழங்குவதற்குத் தயாராகவோ அல்லது எதிர்ப்புக்களை மீறி அதனைச் செய்யக்கூடிய திறனுடையவராகவோ இருக்கமாட்டார். எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும். எனவே நாம் நீண்டகாலமாக முன்வைத்துவரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இனப்படுகொலை, சர்வதேசக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233026
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd என்பன 10 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 10 Dec, 2025 | 08:29 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை (10) Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd என்பன தலா 05 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியதோடு அதற்கான காசோலைகள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், Navesta Pharmaceuticals (Pvt) Ltd சார்பாக சஞ்சய ஜயரத்ன மற்றும் வைத்தியர் ஜனக விக்ரமசிங்க ஆகியோரும் மற்றும் Citihealth Imports (Pvt) Ltd சார்பாக கபில சமரவிக்ரம மற்றும் இந்திக திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233017
-
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி
Bandaranayake Foundation சர்ச்சை – உண்மை என்ன? | Rj Chandru Report
-
Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா
"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது. #Carrom #CarromWorldCup Producer: ShanmughaPriya Shoot & Edit: Ranjith இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC நிதி உதவி Published By: Vishnu 10 Dec, 2025 | 08:21 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC 30 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணவர்தனவினால் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் புதன்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. Ceylinco Holdings PLC பிரதி நிறைவேற்றுத் தலைவர் ஆர். ரங்கநாதன் மற்றும் பணிப்பாளர்/ பிரதான செயற்பாட்டு அதிகாரி பெட்ரிக் அல்விஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233015
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
Generators உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த ரஷ்ய விமானம்
-
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
இரவில் Japan-ஐ தாக்கிய நிலநடுக்கம்... சக்திவாய்ந்த Earthquake-ஆல் பலர் பாதிப்பு இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
-
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி 10 Dec, 2025 | 05:39 PM (செ.சுபதர்ஷனி) தித்வா புயலால் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் புரணர்நிர்மாணப் பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து விசாரிப்பதுடன், அவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்குடன் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க செவ்வாய்க்கிழமை (09) நுவரேலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா புதிய வைத்தியசாலையின் பிரதான கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதம், பழைய வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு, புற்றுநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலும், அபாயம் தொடர்பிலும் கண்காணித்திருந்தார். அத்தோடு 4 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடத்தொகுதியில் உள்ள 8 தாதியர் விடுதிகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் பார்வையிட்டிருந்தார். ஆய்வின் பின்னர் வைத்தியசாலை நிர்வாகம், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கட்டமைப்பு பொறியியலாளர்கள், வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுடன் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது சுகாதார அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமையால் 3 பிரதான வைத்தியசாலைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைபேசி வசதிகள் என்பன சுமார் 4 நாட்களாக தடைப்பட்டிருந்தன. எனினும் நுவரெலியா வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளின் உயிர்களை பாதுகாத்து, இந்த அனர்த்தத்தின் போது மாற்று வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனர்த்தத்தால் வைத்தியர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும். அதேநேரம் விடுதிகளில் தங்கியிருந்த ஒரு சில குழுவினர் வைத்தியசாலையில் தங்கியிருந்து கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சவாலான காலகட்டத்தில் வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை புனரமைக்கும் விதம் குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்தற்கு வைத்தியசாலைகளை பலப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி சுகாதார அமைச்சு உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. வைத்தியசாலைக்குத் தேவையான அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் வைத்தியசாலைகளின் மறுசீரமைப்பு பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலையின் தற்போதைய நிலமை தொடர்பில் பரிசோதித்து வருகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/232980
-
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம் Dec 10, 2025 - 01:16 PM ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்த உதவியானது "திட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதில் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmizphl5j02lfo29nbu2c92bv
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி
திட்டமிட்ட படுகொலை தான், மணல் மாபியாவின் செயற்பாடு.
-
'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?
தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன் - விஜய் 09 Dec, 2025 | 05:08 PM 'தமிழகத்தை போலவே புதுச்சேரியை புதுச்சேரி மக்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக எம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்து மட்டும் தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன்' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், திரை நட்சத்திரமான விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் களம் காணும் இக்கட்சி தொடர்ந்து மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு பிறகு, 72 நாட்கள் கழித்து தமிழகத்தின் அண்டை பகுதியான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் இக்கட்சி தொடங்கியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறையின் கடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மக்கள் சந்திப்பு ஆக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் வழக்கம் போல் திட்டமிட்டதை விட எதிர்பாராத வகையில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் முன்னிலையில் விஜய் பேசியதாவது, ஒன்றிய அரசு தான் தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் பார்க்கிறது. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... அவர்கள் நம் உறவு தான். 1977 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர் 1974 ஆம் ஆண்டில் புதுச்சேரி ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் எமக்கானவர். அவரை தவற விடாதீர்கள் என தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க இயலுமா...!? தமிழக மக்களைப் போலவே புதுச்சேரி மக்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக எம்மைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்திற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன். அது எனது கடமையும் கூட. புதுச்சேரி அரசு தமிழகத்தில் உள்ள திமுக அரசை போன்றது அல்ல. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும்.. அந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. இதற்காக புதுச்சேரி முதல்வருக்கு எம்முடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை பார்த்தாவது தமிழகத்தை ஆளும் திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் நூறு சதவீதம் கற்றுக் கொள்வார்கள். அதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். புதுச்சேரி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து. ஏமாற்றி விடுவார்கள். மீன் பிடிக்கச்செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படு மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும். வெற்றி நிச்சயம்'' என்றார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் பெயரை உச்சரித்து அவருடைய ரசிகர்களையும் அபிமானிகளையும் கவர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் எம்ஜிஆர் என்ற அஸ்திரம் தான் பொருத்தமானது என்பதை உறுதியாக விஜய் பற்றி கொண்டிருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232888
-
தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்
தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும். தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார். எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார். அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார். இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன. ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். 51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார். இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. 240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/232873
-
கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!
கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! Dec 10, 2025 - 02:36 PM 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியமல் போயுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmizsc9xb02ljo29n6cxw2gch
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
முதல் டி20: தென் ஆப்ரிக்காவை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய ஹர்திக், பும்ராவின் 'சதங்கள்' பட மூலாதாரம்,Getty Images மனோஜ் சதுர்வேதி விளையாட்டு செய்தியாளர் 10 டிசம்பர் 2025, 04:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா சிக்கலில் இருந்தபோது, ஹர்திக் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்தியா கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். பின்னர் தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்திய தரப்பில் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தினர். ஹர்திக்கின் ஆல்ரவுண்டர் செயல்பாடு பட மூலாதாரம்,Getty Images ஹர்திக்கின் அரைசதம் குறித்து பேசிய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, "ஹர்திக்கிற்கு மாற்றாக ஒருவரை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், அவரைப் போன்ற யாரும் இல்லை. இந்திய இன்னிங்ஸை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் அவர் இதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் களமிறங்கியபோது, இந்தியா 11.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது." என்றார். போட்டி நடந்த கட்டாக் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தில் ரன் சேர்க்க அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறினர். ஆனால் ஹர்திக் மட்டுமே முழு ஃபார்மில் விளையாடினார். அவர் 210-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன் எடுத்தார், ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார். ஹர்திக்கின் ஆக்ரோஷமான பேட்டிங்கால் 150 ரன்களை எட்டுவது கடினமாகத் தோன்றிய ஒரு இன்னிங்ஸ், 175 ரன்களை எட்டியது. பந்துவீச்சில் டேவிட் மில்லரின் விக்கெட்டையும் ஹர்திக் வீழ்த்தினார். இந்த வடிவத்தில் 12 இன்னிங்ஸ்களில் மில்லரை அவர் ஆறு முறை அவுட் செய்துள்ளார். இந்த போட்டியில், ஹர்திக் 100 சிக்ஸர்களை அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் ஆனார். அந்த வரிசையில் 205 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். போட்டி முடிந்த பிறகு, பேசிய வர்ணனையாளர் இர்ஃபான் பதான், "உள்நாட்டு தொடர்களில் விளையாடிய பிறகு ஹர்திக் முழுமையாக தயாராகிவிட்டார். கிரீஸுக்குப் பின்னால் இருந்து விளையாடும் திறன் அவரது ஆட்டத்தின் மிகப்பெரிய பலமாகும். இது பந்தை எதிர்கொள்ள அவருக்கு கூடுதல் அவகாசம் தருகிறது. அவரது ஷாட்கள் அதிக சக்தியைக் கொண்டுள்ளன." என்று அவர் கூறினார். "இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், ஹர்திக் முழு உடற்தகுதியுடன் இருப்பதும், சிறப்பாக விளையாடுவதும் முக்கியம்" என்றார். 'அவசரத்தில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்கள்' பட மூலாதாரம்,Getty Images தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "அவர்களின் ஆட்ட பாணியைப் பார்க்கும்போது, அவர்கள் ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தெரிந்தது. உள்ளே வரும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் மட்டையை சுழற்றுவதை காணலாம். எந்த பேட்ஸ்மேனும் ஆடுகளத்தில் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. அவர்களின் ஆட்ட பாணி, வெற்றி இலக்கு 250-ஆக இருப்பது போல் தோன்றியது. இலக்கு 176 ரன்கள் மட்டுமே இருந்தபோதும், எந்த பேட்ஸ்மேனும் விக்கெட்டின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை." என்றார். தென் ஆப்ரிக்கா தரப்பில் டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்க்ரம் மற்றும் ஜான்சன் ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினர். அதிகபட்சமாக பிரெவிஸ் 22 ரன் எடுத்தார். பும்ரா 'சதம்' பட மூலாதாரம்,Getty Images சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். அவரது நூறாவது விக்கெட்டாக டெவால்ட் பிரெவிஸின் விக்கெட் அமைந்தது. அர்ஷ்தீப் சிங்கிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் இவர் ஆவார். பின்னர் கேஷவ் மகாராஜின் விக்கெட்டை வீழ்த்தி தனது எண்ணிக்கையை 101ஆக அவர் உயர்த்தினார். அனைத்து வடிவங்களிலும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் ஐந்தாவது பந்து வீச்சாளர் ஆனார். முன்னதாக, டிம் சவுதி, ஷாகிப் அல் ஹசன், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். வர்ணனையின் போது இர்ஃபான் பதான், "பும்ராவும் அர்ஷ்தீப்பும் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடுவது அரிதாகவே இருக்கிறது. இந்தியா இந்த ஜோடியை களமிறக்க வேண்டும். இந்த ஜோடிக்கு பவர்பிளேயில் அழுத்தம் கொடுக்கவும், டெத் ஓவர்களில் ஸ்கோரை கட்டுப்படுத்தவும் தெரியும்" என்று கூறினார். அர்ஷ்தீப் தொடக்கத்தில் அதிர்ச்சி தரக்கூடியவர் பட மூலாதாரம்,Getty Images அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 பந்து வீச்சாளர் ஆவார். அவர் தொடக்கத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி தரக் கூடியவர். இந்த போட்டியில், அர்ஷ்தீப் வீசிய ஓவரில், குயின்டன் டி காக் தனது இரண்டாவது பந்தில் கேட்ச் கொடுத்தார். அர்ஷ்தீப், தனது இரண்டாவது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இது போட்டியில் இந்தியாவின் கை ஓங்க உதவியது. இர்பான் பதான் தனது வர்ணனையின் போது, "அர்ஷ்தீப் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். பந்தை இரு திசைகளிலும் ஸ்விங் செய்யும் திறன் அவருக்கு உள்ளது. இந்தத் திறனால், பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் அவருக்கு உள்ளது" என்று கூறினார். தனது முதல் இரண்டு ஓவர்களில் 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை இந்தியாவுக்கு சாதகமாக திருப்பினார் அர்ஷ்தீப் சிங். ஐந்தாவது ஓவரில் அர்ஷ்தீப்பிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கொண்டு வரப்பட்ட போது, அர்ஷ்தீப்பை இன்னும் ஒரு ஓவர் வீசச் செய்யலாம் என்று வர்ணனையாளர்கள் கூறினர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜிதேஷ் பட மூலாதாரம்,Getty Images விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவுக்கு விளையாடும் வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கிறது. அவர் விளையாடும் வாய்ப்புகளைப் பெற்றாலும், அவர் ஐந்து அல்லது ஆறு பந்துகளுக்கு மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அவர் பந்தை அடித்தாட முற்பட்டால் தனது விக்கெட்டை இழக்கும் அபாயம் உள்ளது. ஜிதேஷ் எடுத்த மூன்று அற்புதமான கேட்சுகள், பிளேயிங் லெவனில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளன. ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ஒரு விக்கெட் கீப்பர் மிகவும் மோசமாக விளையாடுவது அல்லது மிகச் சிறப்பாக செயல்படுவது ஆகிய இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே கவனம் பெறுகிறார். அவரது வழக்கமான செயல்திறன் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜிதேஷ் கேட்சுகளை எடுத்த விதத்தைப் பார்க்கையில், அவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படலாம்." என்றார். இர்ஃபான் பதான் பேசுகையில் "அடுத்த உலகக் கோப்பைக்கு அணி நிர்வாகம் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். ஜிதேஷ் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் யாருக்கு அணியில் இடம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg9126p44xo
-
யோஷித ராஜபக்ஷவின் டெய்சி பாட்டி பிணையில் விடுதலை !
டெய்சி பாட்டிக்கு நாளை மனநலப் பரிசோதனை; யோஷித ராஜபக்ஷ, டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 10 Dec, 2025 | 05:33 PM பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுமளவுக்கு மன ரீதியாக தயார் நிலையில் உள்ளாரா என்பதை கண்டறிய, நாளை வியாழக்கிழமை (11) அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று புதன்கிழமை (10) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பு சட்டத்தரணி ஒக்ஸ்வால்ட் பெரேரா இதனை அறிவித்தார். அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை பரிசீலிக்கும் நோக்கில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும், பிரதிவாதிகளுக்கு எதிரான மற்றொரு வழக்கு உயர்நீதிமன்ற எண் 08இல் விசாரணைக்காக இருப்பதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் இல்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். அதன்படி, நீதிமன்றம் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி மூலம் சிறப்பு வைத்திய அறிக்கையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதிவாதி டெய்சி ஃபொரஸ்ட் நாளை குறித்த மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகவுள்ளதோடு, பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, முறைப்பாடு பரிசீலிக்கப்படும் என்றும், அதற்கிடையிலான விசாரணை ஒத்திவைக்கப்படும் என்றும் அரசு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த வழக்கு, சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மூன்று வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்புச் செய்தமைக்கான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232990
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு
தரம் 6 இற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிப்பு Dec 10, 2025 - 12:40 PM 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழி (Online) முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இணையவழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வசதி டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு அந்தத் திகதி டிசம்பர் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, 2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான முதலாவது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யான பிரச்சாரங்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு 06 ஆம் தரத்திற்காக முதலாம் சுற்றில் பாடசாலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்காக இணையவழி ஊடாக மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmizo6l7n02ldo29nqte47sxr
-
நிவாரணங்களுடன் வந்தது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் விமானம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 04:23 PM ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 27 டொன் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் 8 பேர் உள்ள நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த விமானம் இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232885
-
வெள்ளத்தில் மூழ்கிய Sri Lanka; தமிழர்களின் நிலை என்ன? | Ditwah Cyclone
'டாடா காப்பாத்துங்க' : மண்சரிவில் சிக்கிய வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல் | Srilanka Srilanka-ல் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? #Srilanka #Ditwah #SrilankaLandslide Reporter - Muralitharan Kasiviswanathan Shoot and Edit - Sam Daniel இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்?
இலங்கையில் உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி - தற்போது நிலைகுலைந்து போய் உள்ளது ஏன்? படக்குறிப்பு,ரமேஷ் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயலின் தாக்கம், இலங்கையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியலில் ரமேஷ், நவமணிதேவி தம்பதிகளும் அடங்குகின்றனர். கண்டி - போபிட்டிய - பௌலான தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலை தனது வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்தார். ஒரு நாள் மரமொன்றை வெட்டுவதற்காக சென்ற போது, அவர் வெட்டிய மரமே அவர் மீது வீழ்ந்துள்ளது. இதனால் ரமேஷ் மாற்றுத்திறனாளியானார். மரம் வீழ்ந்தமையினால் முதுகெலும்பு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் எழுந்து நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த சில வருடங்களாகவே ரமேஷ் இவ்வாறு ஓரிடத்திலேயே இருந்து வருகின்றார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்டத்தின் (சமூக நலத்திட்டம்) ஊடாக 10000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவின் ஊடாக 10000 ரூபாயும் மாத்திரமே இவருக்கு மாத வருமானமாக கிடைக்கின்றது. ரமேஷின் மனைவி நவமணிதேவிக்கு வேலைக்கு செல்வதற்கான இயலுமை இருக்கின்ற போதிலும், தனது கணவருக்கு உதவிகளை செய்வதற்காக அவருடனேயே இருந்து வருகின்றார். ரமேஷுக்கு 6 வயதான ஒரு மகன் இருக்கின்றார். ரமேஷுக்கு கிடைக்கும் நலத்திட்ட கொடுப்பனவுகளே அவரது மகனின் படிப்புக்கும் செலவிடப்படுகின்றது. வாரத்திற்கு ஒரு முறை மருத்துவமனைக்கு கட்டாயம் செல்ல வேண்டிய நிலைமையையும் ரமேஷ் எதிர்நோக்கியுள்ளார். நடக்க முடியாத காரணத்தினால் தனிவாகனத்தை வாடகைக்கு எடுத்தே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளதாகவும், ஒரு தடவை மருத்துவமனைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு 5000 ரூபாய் செலவிட வேண்டும் எனவும் ரமேஷ் கூறுகிறார். படக்குறிப்பு,ரமேஷின் மனைவி நவமணிதேவி 'நள்ளிரவில் சரிந்த சுவர்' பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள ரமேஷின் குடும்பத்திற்கு, திட்வா புயல் மீண்டும் அடியை கொடுத்துள்ளது. 27ம் தேதி பெய்த கடும் மழையின் போது, ரமேஷின் குடிசை வீட்டு சுவர் நள்ளிரவில் சரிந்து வீழ்ந்துள்ளது. உடனே ரமேஷின் மனைவி, தனது கணவரை சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து, தனது பிள்ளையையும் சுமந்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் ''கடும் மழைக்கு மத்தியில் விடிய விடிய செல்ல இடமில்லாமல், ஒரு குன்றின் மீதுள்ள இடத்தில் குளிருக்கு மத்தியில் தங்கியிருந்தோம்'' என்கிறார் ரமேஷ் விடிந்த பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் வேறொரு இடத்திற்கு ரமேஷின் குடும்பம் அழைத்து செல்லப்பட்டுள்ளது. இன்று அந்த பிரதேசத்திலுள்ள ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக இவர்கள் தங்கியுள்ளனர். படக்குறிப்பு,ரமேஷின் வீடு ரமேஷின் வீடு, மண்சுவர்களில் செய்யப்பட்ட ஒரு சிறிய குடிசை. நான்கு குச்சிகளை நான்கு புறத்திலும் வைத்து, அதற்கு துணியை சுற்றி மறைத்ததே அவர்களது கழிப்பறை. ''எனக்கு தொழில் எதுவும் செய்ய முடியாது. மனைவிதான் என்னை பார்த்துக்கொண்டிருக்கின்றார். மண்சரிவால் இருந்த வீடும் உடைந்தது. நான் தற்காலிக இடத்திலேயே இருக்கின்றேன். சொந்தக்காரரின் இடத்தில் இருக்கின்றேன். என்னை பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லாமை காரணமாக மனைவியும் வீட்டில்தான் இருக்கின்றார்.'' என்றார் ரமேஷ். ''மண்சரிவின் போது என்னுடைய வீட்டில் தான் இருந்தோம். சுவர் ஒரு பக்கம் உடைந்து. மறுபக்கம் சுவர் வெடித்திருக்கின்றது. எந்த நேரத்திலும் முழுமையாக வீழ்ந்து விடலாம். எனக்கு எழுந்து போக முடியாது என்பதனால், குடும்பத்தோடு இங்கு வந்து இருக்கின்றோம்.'' என அவர் கூறினார். தனக்கு சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க யாரேனும் முன்வந்தால், அதனூடாக தனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியும் என ரமேஷ் நம்பிக்கை தெரிவிக்கின்றார். ''சுயதொழில் ஒன்று செய்தால், அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மகனின் படிப்பை பார்த்துக்கொள்வேன். மனைவியால் வேலைக்கு போக முடியாது. எனக்கு கழிப்பறை செல்வது, எனக்கு ஆடை மாற்றி விடுவது. எல்லாவற்றையும் அவரே பார்க்கின்றார். தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்றாலும் அவரின் உதவி வேண்டும்.'' என அவர் தெரிவித்தார். தமது குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்துகொடுத்தால், ஏதோ ஒரு வகையில் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என ரமேஷின் மனைவி நவமணிதேவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62nzg72798o
-
'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?
'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன? பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து கடுமையான திமுக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவரும் நிலையில், அக்கட்சியின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையான விமர்சித்து வந்தனர். ஆனால், இந்தக் கூட்டம் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் என்பதால் இங்கே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சுமார் 11 மணியளவில் கூட்டம் துவங்கியதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச ஆரம்பித்தார். புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாட்டில் எங்கேயும் நம்மை விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 2026ல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TVK Party HQ/x படக்குறிப்பு,புதுச்சேரியில் விஜய் பேசிய போது இதற்குப் பிறகு பேச வந்த அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.கவை விமர்சிப்பதில் துவங்கி, புதுச்சேரிக்கென பல திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறி முடித்தார். அவர் பேசுகையில், "இங்கிருக்கும் முதலமைச்சருக்கும் காவல்துறைக்கும் நன்றி. இதுபோன்ற பாதுகாப்பை தமிழகத்தில் கொடுத்ததில்லை. சி.எம். சார் (மு.க. ஸ்டாலின்), உங்கள் அரசியலைத் தூக்கிப்போட்டுவிட்டு, தைரியம் இருந்தால் தேர்தலில் மோதுங்கள். காவல்துறையை வைத்து எங்களை நிறுத்துவதை விடுங்கள்" என்றார். மேலும், புதுச்சேரியில் தவெக கூட்டம் நடத்துவது ஏன் என்பது குறித்தும் அவர் பேசினார். "ஏன் புதுச்சேரியில் கூட்டம் எனக் கேள்வியிருக்கிறது. இது போலத்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, கல்வி, போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக ஏங்குகிறார்கள். எங்கள் தலைவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் திட்டம் வைத்திருக்கிறார். அடுத்த 50 வருடத்திற்கான புதுச்சேரியின் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்" என்றார் அவர். விஜய் பேசியது என்ன? இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு மிகச் சுருக்கமாகவே அமைந்திருந்தது. எல்லா ஊர்களிலும் பேசுவதைப் போலவே முதலில் அந்த ஊரைப் பற்றிப் பேசினார். அதற்குப் பிறகு அ.தி.மு.க. முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்ததைப் பற்றிப் பேசினார். "1977ல்தான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. அவரை 'மிஸ்' பண்ணிவிடக்கூடாது என 'அலர்ட்' செய்ததே புதுச்சேரிதான்" என்றார் விஜய். பட மூலாதாரம்,TVK Party HQ/x மத்திய அரசு பற்றி என்ன சொன்னார்? அடுத்ததாக, தங்கள் கூட்டத்திற்கு காவல்துறை சிறப்பான பாதுகாப்பை அளித்ததாக என்.ஆர். காங்கிரஸ் அரசைப் பாராட்டினார் விஜய். "இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்" என்றார். அடுத்ததாக, புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினார். "கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்வதில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பிய தீர்மானம், அப்படி அனுப்பப்பட்ட 16வது தீர்மானம்." என்றார். மேலும், புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விஜய் பேசினார். "புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல தொழிற்சாலைகளைத் திறக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இங்கே ஒரு ஐ.டி நிறுவனம் வர வேண்டுமென்ற எண்ணமே இல்லை. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை." என்றார். காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் கைவிடப்பட்ட பகுதியாக உள்ளது என குறிப்பிட்ட விஜய், புதுச்சேரிக்கு கடலூர் மார்க்கமாக ரயில் வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை என்றார். படக்குறிப்பு,புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சுமார் 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவில் இடம்பெற்றவில்லை என பேசிய விஜய், இதனால் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை, தோராயமான நிதியே ஒதுக்கப்படுகிறது என்றார். அப்போது, "அந்த நிதி சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கே சென்றுவிடுகிறது. அதனால் பிற செலவுகளுக்கு புதுவை கடன் வாங்குகிறது. இந்த நிலைமை மாற மாநில அந்தஸ்து தேவை." என்றார். மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வதாக கூறிய அவர், மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார். இந்தப் பேச்சின் நடுவிலேயே யார் பெயரையும், எந்த அரசையும் சுட்டிக்காட்டாமல் சில விமர்சனங்களை அவர் முன்வைத்தார். "இங்கே ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, புதிய அமைச்சரை நியமித்தார்கள். அந்த அமைச்சருக்கு இலாகாவே தரவில்லை. இந்தச் செயல் சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் செயல் என மக்களே சொல்கிறார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போலவே இங்கேயும் அந்த முறை சீராக்கப்பட வேண்டும்" என்றதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார். எனினும், பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரேஷன் கடைகள் குறித்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நமச்சிவாயம், "புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. அவற்றின் மூலமாகத்தான் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்." என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,MGR FAN CLUB படக்குறிப்பு,"1977ல்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது." என விஜய் பேசினார் விஜய் பேச்சு எத்தகையது? ''புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026ல் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட விஜய், தற்போதுள்ள ஆட்சி குறித்து எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதுபோன்ற நிலைப்பாடு அக்கட்சிக்கு பலனளிப்பது கடினம்'' என்கிறார், புதுச்சேரியின் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ம. இளங்கோ. "தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் த.வெ.க. அங்கே ஆளும் தி.மு.கவைக் கடுமையாக எதிர்க்கிறது. ஏன் தி.மு.கவை மட்டும் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டால், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.கவையா எதிர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பவர்கள், என்.ஆர். காங்கிரஸை விமர்சிக்காமல் பேசுகிறார்கள். இங்கே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் புதுச்சேரிக்கென தனியான அரசியல் தேவை." என்கிறார் ம. இளங்கோ. புதுச்சேரி குறித்து விஜய் பேசிய விஷயங்கள் பல ஆண்டுகளாக இருப்பவைதான் என்று கூறும் ம. இளங்கோ, சமீபத்தில் வெடித்த போலி மருந்து விவகாரம் குறித்து எதுவும் சொல்லாமல் கடந்து சென்றது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார். சில நாட்களுக்கு முன்பாக, பிரபலமான மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து விற்றதாக இரண்டு மருந்து நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களையும் உடந்தையாக இருந்தவர்களையும் காப்பாற்றுகிறது எனக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து விஜய் எதையும் பேசாததையே ம. இளங்கோ சுட்டிக்காட்டுகிறார். விஜய், அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியுடனான தனிப்பட்ட நல்லுறவை அரசியல் உறவாகக் கருதுகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி. "ஆனால், அரசியலில் இதுபோன்ற தனிப்பட்ட உறவுகளுக்கு பெரிய இடம் இல்லை. புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறார் என்றால் அது என். ரங்கசாமியுடன் மட்டும் முடிவதில்லை. அங்கிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. பா.ஜ.கவைக் கொள்கை எதிரி எனக் கூறுபவர், எப்படி இதுபோலச் செய்ய முடியும்?" என்கிறார் ஆர். மணி. புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால், இந்தக் கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தபடியே இருந்தன. இதன் காரணமாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.கவுடன் கூட்டணி அமைக்கும் எனக் கருதுகிறாரா விஜய்? "அப்படி ஒரு ஆசை விஜய்க்கு இருக்கலாம். ஆனால், அது போன்ற ஒரு முடிவை என்.ஆர். காங்கிரஸ் எடுக்காது" என்கிறார் ம. இளங்கோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjdr1pl03g3o
-
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன்
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது புனேவில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியாலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பாலும் நிஜமாக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த நபர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டனர். அதன் பிறகு அவர் மகாராஷ்டிராவில் உயிரோடு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் வைஜாபூர் தாலுகாவில் உள்ள ஒரு கோவிலில் திருட்டில் ஈடுபட்டபோது சிலர் பிடிபட்டனர். அப்போது அந்த திருடர்கள், 'இங்கு வாழும் ஒருவரின் கூட்டாளி தான் திருடியது' என்று கிராமத்தினரிடம் கூறினர். அந்தக் கோவிலில் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் வாழ்ந்து வந்தார். அவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் மனநலம் சரியில்லை என்று நீதிமன்றத்துக்கு பின்னர் தெரிய வந்தது. அந்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பலவீனம் இருந்ததால் நடக்க முடியவில்லை என்றும் நீதிபதிக்கு தெரிய வந்தது. அந்த நபர் சில வார்த்தைகளை முணுமுணுப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் எந்த கேள்வி கேட்டாலும், அவர் 'ஓம் நம சிவாய' என்றுதான் பதிலளித்துள்ளார். அதன் பிறகு புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலையின் மனநலப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை 'சிவம்' என்று அழைக்கத் தொடங்கினர். இது அவரது உண்மையான பெயர் அல்ல, அங்குள்ள ஊழியர்கள் வழங்கிய பெயர். அவரின் வயது சுமார் 50–52 இருக்கும் என்று அந்த மருத்துவமனையின் சமூக சேவைத் துறையின் கண்காணிப்பாளர் ரோஹினி போஸாலே பிபிசி மராத்திக்கு தெரிவித்தார். சிவம் யாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். ஊழியர்கள் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டு, செய்துவிடுவார். 2023-ல், ரோஹினி போஸாலே அந்தப் பிரிவின் சமூக சேவை கண்காணிப்பாளராக வந்தார். சிவம் எனும் நபருடைய கோப்பைப் பார்த்த ரோஹினி, அவரிடம் பேச முயன்றுள்ளார். அந்த நபருக்கு மராத்தி தெரியாது. ஆனால் அவர் இந்தியில் பேச முயற்சிப்பதை ரோகிணி கவனித்ததும், அவரிடம் இந்தியில் பேசத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் சிவம், இந்தியில் பேசுவதை அவர் உணர்ந்தார். சிவம் குடும்பம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? படக்குறிப்பு,புனேவில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியாலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பாலும் நிஜமாக்கப்பட்டது. சிவம் என்ற அந்த நபரால் தனது குடும்பத்தைப் பற்றியோ, பழைய நினைவுகளைப் பற்றியோ அதிகம் விவரிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த ரோஹினி, அவர் படித்த பள்ளியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி குறித்த பேச்சு வந்தபோது, சிவம் ரூர்க்கி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பெயரைக் கூறியுள்ளார் (அந்த நபருடைய அடையாளத்தை பாதுகாக்க அந்தப் பெயர் வெளியிடப்படவில்லை) "அந்தப் பள்ளியின் பெயரைக் கேட்டதும், அது எந்த நகரத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பின்னர் உரையாடலில் ஹரித்வார் பற்றி பேச்சு வந்தது. உடனே ஹரித்வாரிலும் அதன் அருகிலும் அந்தப் பெயர் கொண்ட பள்ளி இருக்கிறதா என்று கூகுளில் தேடத் தொடங்கினேன்" என்று ரோகினி பிபிசி மராத்தியிடம் கூறினார். "சிவம் கூறிய பெயருடன் பொருந்தும் ஒரு பள்ளியை கண்டேன். அந்தப் பள்ளியின் புகைப்படத்தை அவரிடம் காட்டியதும் அவர் உடனே அதை அடையாளம் கண்டுகொண்டார். அவரின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது" என்கிறார் ரோகிணி. பட மூலாதாரம்,BBC Hindi படக்குறிப்பு,கேதார்நாத் வெள்ளம் (2013) ஆவண புகைப்படம் அதன் பிறகு ரோஹினி ரூர்க்கி மற்றும் ஹரித்வார் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டார். அங்கு இத்தகைய நபர் ஒருவரை அவர்கள் பராமரித்து வருகின்றனர் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் காவல்துறை அவரைக் குறித்துத் தேடியபோது, இத்தகைய விவரங்களுடன் கூடிய ஒரு நபரைப் பற்றிய பதிவு இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த நபர் 2013-ஆம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், விசாரணை முடங்கியது. முதலில், 'இத்தகைய ஒருவர் காணாமல் போனதாக உங்களுக்குத் தெரியுமா?' என்று காவல்துறை அந்த நபருடைய குடும்பத்தினரிடம் விசாரித்ததாக ரோஹினி கூறுகிறார். அப்போது, கேதார்நாத் வெள்ளத்தில் தங்களது சகோதரர் அடித்துச் செல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உடல் கிடைக்காததால் அடையாள இறுதிச் சடங்கு செய்தோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை குடும்பத்தினரிடம் காட்டியபோது, அது தங்களது சகோதரன் தான் என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவம் வைஜாபூரை எப்படி அடைந்தார்? சிவம் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் பல வருடங்களாகக் காணாமல் போயிருந்தார். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அவர் காணாமல் போயிருந்தார். சுமார் இருபது வருடங்களாக அவர் வீட்டை விட்டு தனித்து வாழ்ந்து வந்துள்ளார் என ரோகிணி கூறுகிறார். உத்தராகண்டிலிருந்து வைஜாபூரை எப்படி அடைந்தார் என்பது பற்றி அந்த நபருக்கு எதுவும் நினைவில் இல்லை. அதைப் பற்றி அவரால் எதையும் சொல்ல இயலாது. 2015-ஆம் ஆண்டு, சிவம் வைஜாபூரில் உள்ள ஒரு கோவிலில் பராமரிப்பாளராக பணிபுரியத் தொடங்கினார். அங்கேயே உணவு உண்டு, அங்கேயே தூங்கி, கோவிலின் மரம் செடிகளை பராமரித்து வந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது என்கிறார் ரோகிணி. குடும்பத்தினர் அவரை எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள்? உத்தராகண்டில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ காலில் பேச சிவம் அனுமதிக்கப்பட்டார். சிவமின் சகோதரர் அவருடன் வீடியோ காலில் பேசியவுடன், அவரை அடையாளம் கண்டுகொண்டார். அதுமட்டுமின்றி, சிவமும் தனது சகோதரனை அடையாளம் கண்டுகொண்டார். இருவருக்கும் கண்ணீர் மல்கியது. "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நாங்கள் இங்கு புரிந்துகொண்டோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாலும், அந்த ரத்த சொந்தம் மிகவும் வலுவானது. அதை நாங்கள் நேரில் கண்டோம். அதன் பிறகு சிவமும் மிகவும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்," என்று மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீநிவாஸ் கோலோட் கூறினார். அவருடைய குடும்பத்தினர் அவரைச் சந்திக்க புனேவுக்கு வந்தனர். ஆனால் அவரை அழைத்துச் செல்வதில் ஒரு சிக்கல் இருந்தது. சிவம் மீதான திருட்டு குற்றச்சாட்டுகள் என்ன ஆயின? அவருடைய குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட காரணமான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. கைதிகளுக்கான மனநல வார்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை அவரால் வீடு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து எனக்கு தகவல் கிடைத்ததும், இந்த வழக்கின் நிலையை சரிபார்த்ததாக ரோகிணி கூறுகிறார். ஆனால் அப்போது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இல்லை. இது குறித்து காவல்துறைக்கும் நீதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, 2023 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வழக்கு விசாரிக்கப்பட்டது. சிவம் நடக்க முடியாத நிலையில் இருந்ததால், வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்கள், சிவம் திருட்டில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் கிராமவாசிகள் எங்களைப் பிடித்தபோது, அவர்கள் எங்களை கொன்றுவிடக்கூடும் என்ற பயத்தில், அங்கே வேலை செய்த நபரின் பெயரை பொய்யாகக் கூறினோம் என அவர்கள் கூறியதாக ரோஹினி விவரித்தார். அவர்களின் வாக்குமூலங்களுக்கு பின்னர், 2025-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அந்த வழக்கில் தீர்ப்பு வந்தது, அதில் சிவம் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இந்த உத்தரவு நகல் நவம்பரில் வந்ததும், சிவம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். குடும்பத்தினர் வருகையும் சிவம் பிரியாவிடையும் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தது எங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்று ரோகிணி கூறுகிறார். "கடந்த நான்கு ஆண்டுகளாக, வார்டில் சகோதரர் நிலேஷ் திகே மற்றும் சகோதரி கவிதா காதே ஆகியோர் அவரை கவனித்துக்கொண்டனர். சிவம் அனைவருக்கும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல மாறிவிட்டதால், அவருக்கு விடைகொடுப்பது எங்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. ஆனால் அவர் தனது குடும்பத்தினரிடம் செல்வதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று ரோகிணி பகிர்ந்து கொண்டார். "நான்கைந்து வருடங்களாக, நாங்கள் அவருடன் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை வளர்த்துக் கொண்டுள்ளோம். அவர் மிகவும் அமைதியான மற்றும் மென்மையான மனிதர். அவர் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார். உணவுக்குப் பிறகு தட்டுகளைக் கழுவுவதாக இருந்தாலும் சரி, படுக்கைகளைச் சரிசெய்வதாக இருந்தாலும் சரி, அவர் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார்," என்று கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கோலோட் கூறினார். கைதிகளுக்கான மனநல வார்டில் இருந்த ஒருவர் இவ்வாறு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவது இது தான் முதல் தடவை எனவும் அவர் குறிப்பிட்டார். சிவம் என்ற அந்த நபருடைய சகோதரர் அரசு வேலையில் இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் ரோகிணி தெரிவித்தார். அவரது குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதே நேரத்தில், அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் ரோஹினி கூறினார். எனவே பிபிசி மராத்தி அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து இதுகுறித்து எந்தக் கருத்தும் பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly313wle0ko
-
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
ஜப்பான் நிலநடுக்கம்; 30 பேர் காயம் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 12:19 PM வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை (08) இரவு 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டது. திங்கட்கிழமை இரவு அந்நாட்டு நேரப்படி 11.15 க்கு ஜப்பானின் வடக்கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 10 அடி உயரத்திற்கு இராட்சத சுனாமி அலைகள் எழலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) அறிவித்தது. அதன்படி, ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ (7 முதல் 27 அங்குலம்) உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில், 50 கிலோ மீற்றர் (30 மைல்) ஆழத்தில் பதிவாகியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. உடைந்து விழுந்த பொருட்களாலே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹச்சினோஹேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், டோஹோகுவில் கார் குழி ஒன்றுக்குள் விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. "ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோரங்களில், கொக்கைடோ நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ (620 மைல்) தொலைவில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை விரைவாக வெறியேறுமாறு பிரதமர் சானே தகைச்சி வலியுறுத்தினார். சுமார் 2,700 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 480 குடியிருப்பாளர்கள் ஹச்சினோஹே விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். சேத மதிப்பீட்டிற்காக 18 பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார். ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் 200 பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது. வடகிழக்கு கரையோர பகுதிகளில் சில ரயில் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருவதாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது. புகுஷிமா அணு மின் நிலையத்தில் எந்தவொரு அசாதாரண சம்பவங்களும் இடம்பெறவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். என்.எச்.கே செய்திச் சேவை அறிக்கைகளின்படி, குறைந்தது ஒரு வாரமாவது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். நில அதிர்வு மிகுந்த நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், உலகளாவிய ரீதியில் அதிகளவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். உலகில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவில் சுமார் 20 சதவீதமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் பதிவாகிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு ஜப்பான் கடுமையாக பாதிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/232849
-
இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 03:05 PM இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் அத்தியாவசிய தேவை காரணமாக மீண்டும் இந்தியா நோக்கி இன்று பயணமாகியது. இதனையடுத்து, இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அனர்த்த நிவாரண சேவைக்காக இந்த ஹெலிகொப்டரில் 14 இந்திய வீரர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232875
-
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது - ஐ.நா. அறிக்கை Dec 9, 2025 - 01:23 PM 25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் 'டித்வா' சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyaacge02jxo29nvdz25k6s