Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,508
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by ஏராளன்

 1. அடங்கொக்கமக்கா நான் முதலாவதா வந்திட்டன்! போட்டியில் நான்காவதா கலந்து கொண்டதால இரிக்கும். வாழ்த்தலாமே பிரண்ட்ஸ். Sri Lanka (19.6/20 ov)171/7 Ireland
 2. ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. https://ta.wikipedia.org/wiki/இரமண_மகரிசி
 3. என்னமோ ஏதோ நடந்திருக்கு! அது சரி போர் என்ற சொல் பிடிக்காத சனநாயகவாதி எல்லோ!
 4. ஓமண்ணை, இப்ப நல்லெண்ணையும் கொஞ்சம் விலை குறைஞ்சிருக்கு. போத்தல் 1500 போனது, இப்ப 1200-1300 ரூபா. ஆனைக்கோட்டையில 800 ரூபா போகுதாம்.
 5. என்ன புண்ணாக்கா இருக்கும்? எள்ளுப்புண்ணாக்கு கிலோ 60 ரூபா.
 6. தமிழக மீனவர் கொல்லப்பட்டாரா? - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட் பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, காணாமல் போன ராஜ்கிரணுக்காக சொந்த ஊரில் கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பத்தினர் இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு திங்கட்கிழமை இரவு இலங்கை கடல் பகுதியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மேலும் ஒருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் காணாமல் போன மீனவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்திய ஊடகங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இத்தகைய சூழலில் அங்குள்ள சமீபத்திய நிலவரத்தை தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் நிருபர்கள் பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் விசாரித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து திங்கள்கிழமை காலையில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 118 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா? மீன்வள மசோதா 2021: பாதிப்பு தரும் 3 விஷயங்கள் - முழு விவரம் பிடிபட்ட தமிழக மீனவர்கள் இவர்கள் இலங்கை கோவளம் கடற்பகுதியில் திங்கள்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. .அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்றனர். இதில் தமிழக மீன்பிடி விசைப்படகு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மீது மோதியதில் மீன்பிடி விசைப்படகு நடுக்கடலில் முழ்கியதாக அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். மீனவர்கள்; இருவருக்கும் உடலில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். திருமணமாகி 40 நாட்களே ஆனவர் படக்குறிப்பு, இலங்கை கடல் பகுதியில் தேடப்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் இதற்கிடையே, நடுக்கடலில் மாயமான மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படையைச் சேர்ந்த 'ஸ்கூபா டைவர்கள்' கடலுக்கு அடியில் சென்று தொடர்ந்து தேடி வருகின்றனர். ராஜ்கிரணுக்கு திருமணமாகி 40 நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய இலங்கை ஃபைபர் படகு மீனவர் ஒருவர் கடலில் சட்டை ஒன்று மிதப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இலங்கை கடற்படை வீரர்கள் அந்த பகுதியில் தேடும் பணியை மேற்கொண்டனர். பின் முழ்கிய படகை கடற்படையினர் கடலில் இருந்து மீட்டு அதில் ராஜ்கிரண் உள்ளாரா என தேடினர். ஆனால், அவர் அதற்குள் இல்லை. மீனவர் ராஜ்கிரணின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியாததால் அவரது உறவினர்கள் சோகத்துடன் தமிழ்நாட்டில் காத்திருக்கின்றனர். இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு படக்குறிப்பு, இலங்கை கடற்படையிடம் உள்ள மீனவர் சுகந்தன் இந்த சம்பவம் குறித்து விசைப்படகு உரிமையாளர் ராஜேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், திங்கள்கிழமை காலை 3 மீனவர்ளுடன் எனது படகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றது. இரவு 9 மணி அளவில் ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் கோட்டைப்பட்டிணம் மீன்துறை உதவி இயக்குநரிடம் எனது படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கபட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீன் வளத்துறை அதிகாரிகள் வாயிலாக எனக்கு தகவல் கிடைத்தது," என்றார். உடனடியாக நான் எனது படகில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், முடியவில்லை. பின் என் படகுடன் மீன் பிடிக்க சென்ற சக மீனவர்களிடம் கேட்ட போது, கோடியாக்கரைக்கு வடக்கே 12 கடல் மைல் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எனது படகையும் அதில் இருந்த 3 மீனவர்களையும் கைது செய்து இலங்கை கடற்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். தமிழக கடற்பரப்பு மிகவும் குறுகிய கடற்பரப்பு. இங்கு கடல் வளம் மிகவும் குறைவாக உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் போதிய மீன் கிடைப்பதில்லை. இதனால் இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகாமையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். என்னுடைய படகும் நேற்று இப்படித்தான் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அதை இழுத்துச் சென்று எனது மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை சித்ரவதை செய்திருக்க வேண்டும். ராஜ்கிரனை அவர்கள் கொலைகூட செய்திருக்கலாம் என்றார் ராஜேஷ். நம்பிக்கையுடன் காத்திருக்கும் மனைவி படக்குறிப்பு, இலங்கை கடற்படையிடம் உள்ள தமிழக மீனவர்கள் சுகந்தன், சேவியர் "ராஜ்கிரணை இலங்கை கடற்படை திட்டமிட்டே கொலை செய்து எனது படகை நடுக்கடலில் மூழ்கடித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. ராஜ்கிரனுக்கு திருமணமாகி 40 நாட்கள் மட்டுமே ஆகின்றன. அவரது மனைவி செய்வதறியாது மன வேதனையுடன் ராஜ்கிரண் திரும்பி வருவார் என கண்ணீருடன் காத்திருக்கிறார்," என்றார் ராஜேஷ். "இலங்கை மீனவர்கள் எனது படகை மீட்க வேண்டும். அங்கு பிடிபட்டுள்ள இரண்டு மீனவர்களையும் மாயமான மீனவரையும் உடனடியாக மீட்க இந்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ராஜேஷ் கேட்டுக் கொண்டார். "எனது விசைப்படகு புதிய படகு. அதை நம்பி நான் மற்றும் இந்த மூன்று குடும்பங்களும் உள்ளோம். தற்போது இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து நிற்கிறோம். தமிழக மீன்வளத் துறை புதிய படகு வாங்க நிதி உதவி செய்ய வேண்டும்," என்றும் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். நடுக்கடலில் என்ன நடந்தது? திங்கள்கிழமை இரவு நடுக்கடலில் என்ன நடந்தது என்ன என்பது குறித்து இலங்கை கடற்படையின் ஊடக பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வாவிடம் இலங்கையில் உள்ள செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் கேட்டார். படக்குறிப்பு, இலங்கை கடற்படை அப்போது, "திங்கள்கிழமை இரவு இலங்கை கடல்; பகுதியான கோவளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இந்திய படகுகள் சில இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்தது," என்று கூறினார். மேலும், இலங்கை கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டனர். கைது நடவடிக்கைக்கு பயந்து இந்திய மீன்பிடி விசைப்படகுகள் நாளா புறமும் சிதறி ஓடின. அதில் கடல் சீற்றம் காரணமாக இந்திய மீன்பிடி படகு இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீது மோதியது. இதனால் இந்திய விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. உடனடியாக கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்கும் முயற்சியில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகிறோம்," என்று இந்திக்க டி சில்வா கூறினார். 'இலங்கை கடற்படை எந்த சந்தர்ப்பத்திலும் இந்திய படகுகள் மீது மோதாது, அப்படி மோதுவதற்கு எங்களுக்கு விருப்பமும் இல்லை," என்றும் இலங்கை கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-58971756
 7. சந்தன கடத்தல்' வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2021 தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்? 2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே `ஆபரேஷன் கக்கூன்' என்ற பெயரில் தமிழ்நாடு அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜய்குமார் ஐ.பி.எஸ், வீரப்பனுக்கு முடிவு கட்டிய நாளாகவும் இதனைக் கொண்டாடுகின்றனர். அதேநேரம், வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தாலும், அதுகுறித்து அதிரடிப்படை தரப்பிலோ அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காகச் சென்றவர்களிடம் இருந்தோ எந்தப் பதிலும் வெளிவரவில்லை. அன்றைய காலகட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாகவும் இதனை ஜெயலலிதா கருதினார். 184 வழக்குகள்; 15 கொலைகள் சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட வீரப்பன், 108 நாள்கள் `கன்னட சூப்பர் ஸ்டார்' ராஜ்குமாரை சிறை வைத்ததை மிகப் பெரிய கடத்தலாக காவல்துறையினர் கருதுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநில வனத்துறைக்கும் சிம்ம சொப்பனமாக வீரப்பன் இருந்தாலும் கேரளாவில் ஒரே ஒரு குற்ற வழக்கு மட்டுமே அவர் மீது பதிவாகியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடியில் பதிவாகியுள்ள அந்த வழக்கு, அந்தப் பகுதியில் அவர் ஆயுதங்களோடு சுற்றியதாக விவரிக்கிறது. வீரப்பன் மீது பதிவாகியுள்ள 184 வழக்குகளில் 99 வழக்குகள் தமிழ்நாட்டிலும் 84 வழக்குகள் கர்நாடகாவிலும் ஒரே ஒரு வழக்கு கேரளாவிலும் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பதிவான வழக்குகளில் 15 வழக்குகள் கொலைகள் தொடர்புடையவை. மற்றவை ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இதில் முக்கியமான வழக்குகள் என்றால் தமிழ்நாடு டி.எஸ்.பி சிதம்பரநாதன் கடத்தல், கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல், நடிகர் ராஜ்குமார் கடத்தல் ஆகியவை. 'வீரப்பன் வழிபாடு' நடக்கக்கூடாது என எதிர்பார்க்கிறேன் - விஜயகுமார் பிபிசியிடம் பகிர்வு 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு - வீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் `தமிழ்நாட்டின் ஒகேனக்கல், பாலக்கோடு முதல் கர்நாடகாவின் குடகு மலை வரையிலும் கேரள மாநிலம் வரையில் சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல், வீரப்பனைப் போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை' என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். காடுகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கம், விலங்குகள், பறவைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்தையும் துல்லியமாக அறிந்தவராகவும் பார்க்கப்படுகிறார். வீரப்பன் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் ஆனாலும், தற்போதும் அவரை கொண்டாடும் வழக்கம், வட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் உள்ளது. அதிகரித்த நிலங்களின் மதிப்பு `` வீரப்பன் இல்லாத காடுகளின் தற்போதைய நிலை என்ன?" என மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். இவர் பலமுறை வீரப்பனை பேட்டி எடுத்தவர். இதற்காக சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது, அரசு தூதுவராக காட்டுக்குள் சென்றவர். தற்போது `வீரப்பன்; வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக புத்தகங்களை எழுதியுள்ளார். `` வீரப்பன் உயிரோடு இருந்தவரையில், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதி, பர்கூர் ஆகிய பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் நிலம் என்பது 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை போனது. 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மறைவுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டில் இருந்து ஒரு ஏக்கர் நிலம் 2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரையில் விலை போனது. அதாவது, சமவெளியில் வசித்த மக்கள், காடுகளில் உள்ள பழங்குடிகளிடம் இருந்து நிலங்களை வாங்கினார்கள். தற்போது 25 லட்ச ரூபாய் வரையில் ஒரு ஏக்கர் நிலம் விலை போகிறது. நிலத்தின் விலை உயர்ந்தாலும் பூர்வகுடி மக்களின் நிலங்கள் பறிபோய்விட்டன" என்கிறார் சிவசுப்ரமணியம். தொடர்ந்து பேசியவர், `` காடுகளில் வசித்த மக்கள் தங்களின் உணவுத் தேவைக்காக ராகியை பயிரிட்டு வாழ்ந்தனர். கொஞ்சம் தேவைப்பட்டால், மொச்சை, தட்டைப் பயிர் எனப் பணப் பயிர்களை பயிரிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. தங்களின் உணவுக்காக மட்டும் விளைவித்து வாழ்ந்த அந்த சமூகத்திடம் பண ஆசை உள்பட பல்வேறு காரணங்களைக் காட்டி சமவெளியில் உள்ளவர்கள் நிலம் வாங்கிக் கொண்டனர். தற்போது பழங்குடி மக்களின் நிலங்கள் என ஓரளவுக்கு மட்டுமே உள்ளன. பழங்குடிகளுக்கு என கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் நிலங்களும் உள்ளன. வனக்கொள்ளை அதிகரித்ததா? அவர்களிடம் நிலங்கள் இருந்த வரையில் மானாவாரி பயிர்களை மட்டும் விளைவித்தனர். சமவெளியில் இருந்து அங்கு சென்றவர்கள், 1,200 அடி வரையில் போர் போட்டு வாழை, கரும்பு, உருளைக் கிழங்கு, இஞ்சி எனப் பணப் பயிர்களை விளைவிக்கின்றனர். இதனால் கடந்த 2,3 ஆண்டுகளாக வனப்பகுதியில் உள்ள பெரும்பாலான சிற்றோடைகள் எல்லாம் வறட்சியை நோக்கிச் செல்கின்றன. மழைக்காலத்தில் மட்டுமே அங்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் விலங்குகள் எல்லாம் மடைமாற்றப்படுகின்றன. பழங்குடிகளின் மேய்ச்சல் தொழிலும் அருகிப் போய்விட்டது. அடுத்த தலைமுறை பழங்குடிகள் எல்லாம் லாரி டிரைவர்களாகவும் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டுபவர்களாகவும் மாறிவிட்டனர். அவர்களின் பாரம்பரியமான ராகி, கம்பு, சோளம் என்பது கடந்துபோய் ரேசன் அரிசியை வாங்கி சாப்பிடத் தொடங்கிவிட்டனர். மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் விலங்குகளும் உணவுக்காக ரெவின்யூ நிலங்களுக்கு வரத் தொடங்கிவிட்டன. வீரப்பன் இருந்த வரையில் அங்கு நிலம் வாங்குவதற்கே சமவெளி மக்கள் அச்சப்பட்டனர்" என்கிறார். ``யானை தந்தம் கடத்தல் உள்பட வனக் கொள்ளைகளும் அதிகரித்துவிட்டதை அறிய முடிகிறதே?" என்றோம். `` உண்மைதான். வீரப்பன் என்ற தனி நபரைத் தேடி கர்நாடகா அதிரடிப்படை தரப்பில் ஆயிரம் போலீஸாரும் தமிழ்நாடு அதிரடிப்படையில் 750 போலீஸாரும் இருந்தனர். அந்த 1,750 பேரும் காட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்ததால் வனக் கொள்ளை என்பது அறவே இல்லாமல் இருந்தது. வீரப்பன் மறைவுக்குப் பிறகு இவர்கள் 1,750 பேரும் வெளியே வந்துவிட்டதால் வனக்கொள்ளை அதிகரித்துவிட்டது. பழங்குடிகளுக்கு பாதிப்பா? வீரப்பன் உயிரோடு இருந்த வரையில் கர்நாடகா அரசியல் தலைவர்களும் வனத்துறையும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி காட்டுக்குள் சென்றது கிடையாது. தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் செல்கின்றனர். வீரப்பன் இருந்திருந்தால் மேக்கேதாட்டு பக்கம் அணை கட்டுவதற்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிரடிப்படை அதிகாரிகளே வருத்தப்படுகின்றனர்" என்கிறார். இதையடுத்து, காடுகளில் வசிக்கும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பேசிய சிவசுப்ரமணியம், `` கடந்த ஒரு வாரகாலமாக தருமபுரி வனக்கோட்டத்தில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். 1847 ஆம் ஆண்டு வன உயிரின சட்டத்தின்படி, `இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது, நீங்கள் எல்லாம் குடும்பத்துடன் வெளியேற வேண்டும்' எனக் கூறி வருகின்றனர். அங்கு 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பத்தினர் அனைவரும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளையொட்டி வசிக்கின்றனர். தண்ணீர் வடிந்த பிறகு விவசாயம் செய்வது அவர்களின் வழக்கம். மற்ற நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்ப்பது அவர்களின் வழக்கம். இவர்களில் பலர் 100 மாடுகளை வைத்திருக்கிறார்கள். இந்த மாடுகள் சராசரியாக ஆண்டுக்கு 40 கன்றுக் குட்டிகளை போடும். பால் கறப்பதற்கு இவர்கள் மாடுகளை பயன்படுத்த மாட்டார்கள். இவர்கள் மாடுகளை விட்டு வெளியேறினால் நாட்டு மாடு இனங்கள் அழியும். வீரப்பன் இல்லாததால்தான் வன எல்லையைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர்" என்கிறார். வீரப்பனின் நிறைவேறாத ஆசை ``வீரப்பனோடு நீங்கள் நெருங்கிப் பழகியவர். அவருக்கு என்று எதாவது விருப்பங்கள் இருந்ததா?" என்றோம். `` ஆமாம். வீரப்பனுக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்தது. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை குறித்தும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் 2000 ஆம் ஆண்டில் சதாசிவம் கமிஷன் அமைக்கப்பட்டது. இப்படியொரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 97 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. ஆணையமானது, 2004 வரையில் விசாரணை நடத்தியது. 2007 ஆம் ஆண்டில் 89 குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக 295 பேர் கொடுத்த புகார்களை வடிகட்டி அதில் 195 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அதிரடிப்படையின் நடவடிக்கையால் கண் பார்வை பறிபோனது, கால் இழந்தது, நடை பிணமாக மாறியவர்கள் என 89 பேரின் துயரங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டது. மற்றவர்களின் பாதிப்புகளுக்கு போதிய ஆதாரம் இல்லை. இதற்குக் காரணம், காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது போலீஸ் அழைத்துச் சென்றது மட்டுமே தெரியும். அவர்கள் கொல்லப்பட்டு எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் நிரூபிக்க முடியவில்லை. `அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்' என்பது வீரப்பனின் விருப்பமாக இருந்தது. அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. இந்தக் கொடூர சம்பவங்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் சதாசிவம் கமிஷன் முன்வைத்தது. அது இன்றளவும் கிடப்பில்தான் உள்ளது" என்கிறார். வீரப்பனின் கடைசி நிமிடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடர்ந்து வீரப்பனின் கடைசி நிமிடங்கள் குறித்துப் பேசிய சிவசுப்ரமணியம், `` அவர் பலமிழந்த நிலையிலும் உடல் மெலிந்த நிலையிலும் தடுமாற்றத்தில் இருந்ததாக காவல்துறையினர் சொல்கின்றனர். அது நம்பும்படியாக இல்லை. அவரின் கூட்டாளிகளின் எண்ணிக்கையும் நான்காக குறைந்துவிட்டது. தமிழ்நாடு மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் புரட்சிகர எண்ணம் கொ ண்ட இளைஞர்களைக் காட்டுக்குள் கூட்டி வந்து ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இருந்தார். அதற்காக ஆயுதங்கள் வாங்குவது, ஆள்களை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்" என்கிறார். அடுத்ததாக, வீரப்பனின் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த `ஆபரேஷன் கக்கூன்' குறித்துப் பேசியவர், `` கைகள் கட்டப்பட்ட நிலையில் வீரப்பன் பிடிபட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகம்தான் அது. 2002 ஆம் ஆண்டு `ஆபரேஷன் ரூட்ஸ்' என்ற பெயரில் வீரப்பனின் வேர்களைத் தேடி என்ற நடவடிக்கையை அதிரடிப்படை தொடங்கியது. அது 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மரணத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. வீரப்பனுக்குத் தேவையான ஆயுதங்களை ஒரு பிரிவினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு நடந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் ஒரு கிரானேடை வெடிக்கச் செய்து வீரப்பனை சாய்த்துள்ளனர். பின்னர் ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் அவரை வைத்த பிறகு மறுநாள் அதிரடிப்படை அரங்கேற்றிய நாடகம்தான் `ஆபரேஷன் கக்கூன்'. டி.எஸ்.பி உசேன் தலைமையிலான 12 பேர் கொண்ட கமாண்டோ படையினர், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரப்பன் சென்றதாகச் சொல்லப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த 12 பேரில் 7 பேரை நான் சந்தித்துப் பேசிவிட்டேன். அந்த ஏழு பேரும், `எங்களை எதற்காக சுடச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், ஆம்புலன்ஸில் இருந்து வீரப்பன் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை' என்றனர். அந்த ஆம்புலன்ஸில் வீரப்பன் உயிரோடு இருந்ததற்கான எந்தத் தடயங்களும் இல்லை. அந்த ஆம்புலன்ஸில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு துப்பாக்கிகளும் கடைசி நேரத்தில் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த முரண்பாடுகளை எல்லாம் `வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்' புத்தகத்தில் விரிவாகக் கூறியிருக்கிறேன்" என்கிறார் சிவசுப்ரமணியம். வீரப்பன் புதைத்து வைத்த பணம் ``ஆள் கடத்தல் மூலம் கிடைத்த பெரும் பணத்தை காடுகளுக்குள் வீரப்பன் புதைத்து வைத்திருந்ததாகவும் அதனைத் தேடி சிலர் சென்றதாகவும் கூறப்பட்டதே, உண்மையா?" என்றோம். `` ஆமாம். வீரப்பன் புதைத்து வைத்த பணத்தைத் தேடி பொதுமக்களில் சிலர் சென்றனர். அவர் வழக்கமாக தங்கும் பாறைகள், நீர் நிலைகளையொட்டியுள்ள பகுதிகளில் சென்று பார்த்தனர். ஒரு சில இடங்களில் அரிசி, பேட்டரி செல்கள், மைக்ரோ டேப்ரிகார்டர் போன்றவற்றை எடுத்துள்ளனர். ஆனால், பணம் யாருக்கும் கிடைக்கவில்லை. அவருடைய பணம் அதிகப்படியாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் புதைத்து வைக்கப்பட்டதாகவும், ` எனக்கு உதவி செய்தவர்களுக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை' என 2004 ஆம் ஆண்டு வாக்கில் பென்னாகரம் காட்டுப்பகுதியில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வீரப்பன் கூறியிருக்கிறார். மேலும், `இனி சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குச் சென்று வந்தால்தான் பணம் கிடைக்கும்' எனவும் கூறியுள்ளார். அந்தப் பணத்தை தற்போது கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். காட்டுப்பகுதிகளில் நீர் நிலைகளின் அருகில் புதைத்து வைத்திருந்தால் மண் சரிவு, மண் அரிப்பு போன்றவற்றால் அந்தப் பணம் புதைந்து போயிருக்கும். இவர்கள் எப்போதும் மேட்டுப்பகுதிகளில் மண் மூடாத பகுதிகளில்தான் புதைத்து வைப்பார்கள். தொடர்ந்து மழை பெய்தாலும் அந்தப் பணத்துக்கு எந்த சேதாரமும் ஏற்படாது. அந்தப் பகுதிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கும் வாய்ப்பில்லை. அவை மண்ணோடு புதைந்து போவதற்கே வாய்ப்புகள் அதிகம். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அந்தப் பணமும் செல்லாததாக ஆகிவிட்டன" என்கிறார். அரசு செய்யத் தவறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ``காடுகள் மற்றும் காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போது அதே சூழலில்தான் அந்தப் பகுதிகள் உள்ளன. அங்குள்ள பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. காட்டுக்குள் பாதுகாப்பாக அவர்கள் வாழ்வதற்கான சூழல்கள் இல்லை. அங்குள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. வனத்துறையில் பழங்குடிகளை பணியமர்த்தினால், அவர்கள் காட்டுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இதன்மூலம் வெளியில் இருந்து வருகிறவர்கள் நடத்தும் வனக்கொள்ளை தடுப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். காட்டில் மூங்கில்களை வெட்டவே கூடாது என தமிழ்நாடு வனத்துறை சொல்கிறது. ஒரு மூங்கிலை வெட்டினால் அது ஆறாகப் பெருகும். அதை வெட்டி கூடை பின்னி விற்பார்கள். காடு காடாகவே இருக்க வேண்டும் என வனத்துறை நினைப்பதால் அவர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதேநேரம், காட்டைவிட்டு பழங்குடிகள் வெளியே செல்லாதவாறு அவர்களின் வாழ்வாரத்தை கர்நாடக அரசு பாதுகாக்குகிறது. ஆனால், தமிழ்நாடு வனத்துறை அவர்களை வெளியே தள்ளுவதற்கே விரும்புகிறது. வீரப்பனை போன்று இன்னொரு நபர் உருவாகக் கூடாது என்றால், அதற்கான பிரச்னைகளை களைவதுதானே சிறப்பான ஒன்றாக இருக்கும்?" என்கிறார் பெ.சிவசுப்ரமணியம். https://www.bbc.com/tamil/india-58951331
 8. இந்திய மொழி வரலாறு: கணக்கெடுப்பில் காணாமல் போன 1500 மொழிகள் எங்கே? அக்னி கோஷ் பிபிசி ஃபியூச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1961 மற்றும் 1971 க்கு இடையில், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து சுமார் 1500 மொழிகள் மறைந்துவிட்டன. முற்றிலுமாகக் காணாமல் போவதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடிக்க ஒருவர் முடிவு செய்தார். அது 2010. இந்தியாவின் மொழிகள் பற்றிய விரிவான தரவு இல்லாதது பற்றி கணேஷ் என் தேவி கவலைப்பட்டார். "1961 [இந்திய] மக்கள் தொகை கணக்கெடுப்பு 1,652 தாய் மொழிகளை அங்கீகரித்தது. ஆனால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 109 மொழிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டது. எண்ணிக்கையில் உள்ள முரண்பாடு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது,"என்று தேவி கூறுகிறார். எனவே, என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க தேவி முடிவு செய்தார். உலக அளவில் மொழி பன்முகத்தன்மை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்வார்த்மோர் கல்லூரியின் மொழியியலாளர் டேவிட் ஹாரிசன், இந்தியாவை "மொழி ஹாட்ஸ்பாட்" என்று குறிப்பிடுகிறார். உயர் மொழி பன்முகத்தன்மை, மொழி காணாமல்போகும் ஆபத்து மற்றும் குறைந்த அளவிலான ஆவணப்படுத்தல் இங்கு இருப்பதாக, ஹாரிசன் கூறுகிறார். குஜராத்தில் உள்ள பரோடாவின் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக உள்ள தேவிக்கு மொழிகள் மீது எப்போதுமே ஆர்வம் உண்டு. பரோடாவில் உள்ள பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம், தேஜ்கட்டில் உள்ள ஆதிவாசி அகாடமி, டிஎன்டி உரிமைகள் நடவடிக்கை குழு உள்ளிட்ட பல அமைப்புகளை, மொழிகளின் ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பிற்காக அவர் நிறுவினார். சிந்து சமவெளியில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல் 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' தனது பணியின் ஒரு பகுதியாக, அவர் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று அவர்களை ஆய்வு செய்தார். இந்த பழங்குடியினருக்கு அவர்களின் சொந்த மொழிகள் இருப்பதை அவர் கவனிக்கத் தொடங்கினார். இது பெரும்பாலும் அதிகாரப்பூர்வ அரசு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்படுவதில்லை. "மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கொண்ட சமூகங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்கள் அல்லது நாடோடி சமூகங்கள் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் மறைந்துவிடுகின்றன என்று எனக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது" என்று தேவி கூறுகிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியையும் ஆவணப்படுத்த நீண்ட, கடினமான செயல்முறை தேவைப்படும் என்று தேவி உணர்ந்தார். எனவே அவர் உதவ முன்வந்தார். அவர் 2010 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பை (PLSI) தொடங்கினார், இதற்காக அவர் நாடு முழுவதிலுமிருந்து 3,000 தன்னார்வலர்களைக் கொண்ட குழுவை அமைத்தார். இந்த தன்னார்வலர்களில் பெரும்பாலானவர்கள் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. தங்கள் தாய் மொழியுடன் நெருக்கமான உறவுப்பிணைப்பைக் கொண்ட எழுத்தாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை மொழியியலாளர்கள் அல்லாதவர்கள் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 2010 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், தேவி மற்றும் அவரது குழு , நாடு முழுவதும் 780 மொழிகளையும் 68 எழுத்து வடிவங்களையும் பதிவு செய்தது. ஏறக்குறைய 100 மொழிகளை ஆவணப்படுத்த முடியவில்லை என்று தேவி கூறுகிறார். பல பிராந்தியங்கள் தொலைதூரத்தில் இருப்பது அல்லது மோதல்களே இதற்கான காரணம் என்கிறார் அவர். எனவே இந்தியாவில் உள்ள மொழிகளின் உண்மையான எண்ணிக்கை தொடர்ந்து நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு முதல், பிஎல்எஸ்ஐ, 68 தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இதில் தேவி கண்ட ஒவ்வொரு மொழியின் விரிவான சுயவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 27 தொகுதிகள், 2025ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பழங்குடி சமூகங்களைக் கொண்ட ஒடிசா மாநிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு மொழியியல் தங்கச் சுரங்கம் என்று தேவி எப்போதுமே கருதினார். ஆனால் இந்த தொலைதூரப்பகுதிகளில் இருக்கும் மொழிகளைப் பயன்படுத்தும் ஒரு மொழியியலாளரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாங்ஸா பழங்குடி சமூகத்தில் சுமார் 40 துணை பழங்குடியின சமூகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் சொந்த பேச்சுவழக்கை கொண்டுள்ளது இந்த நேரத்தில் ஒடிஷாவில் மாவட்ட ஆட்சியரிடம் பணிபுரிந்த ஒரு டாக்ஸி டிரைவரை தேவி கண்டார். மாவட்ட ஆட்சியர் கிராமங்களுக்கு பயணம் செய்யும்போதெல்லாம், டிரைவர் காரில் உட்கார்ந்திருப்பதை விட கிராம மக்களுடன் பேசுவதை விரும்பினார். "சில ஆண்டுகளில் அவர் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றார். மேலும் அவர் அந்த நான்கு மொழிகளுக்கான இலக்கணத்தை உருவாக்கி, நாட்டுப்புற பாடல்களையும் கதைகளையும் சேகரித்தார்," என்கிறார் தேவி. "இது அவருக்கு முனைவர் பட்டம் கொடுக்க தகுதியான பணி. ஒருவேளை இரண்டு முனைவர் பட்டங்களைக்கூட அவருக்கு கொடுக்கலாம்."என்று தேவி குறிப்பிடுகிறார். ராஜஸ்தானின் ஒரு மொழியிலிருந்து முழு காவியத்தையும் ஆவணப்படுத்திய குஜராத்தின் ஒரு பள்ளி ஆசிரியர் உட்பட பலரை தேவி கண்டார். காவியத்தை ஆவணப்படுத்த அவருக்கு 20 ஆண்டுகள் ஆனது. இந்த முழு திட்டத்தையும் தனது சொந்த பணத்தின் மூலம் அவர் செய்தார். "இதன் மூலம் நான் கண்டறிந்தது என்னவென்றால், மக்கள் மொழிகளைக் கற்பதும், நேசிப்பதும், பணத்தின் காரணங்களுக்காக அல்ல" என்று தேவி குறிப்பிடுகிறார். "ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே மொழிகளை நேசிக்கிறார்கள் என்றும் தங்கள் பணியை ஆதரிக்க மானியங்கள் மற்றும் நிதிகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும்தான் நான் முன்பு நினைத்திருந்தேன்," என தேவி விளக்குகிறார். "மொழி நிபுணர்கள் பலரை குறிப்பாக முறையான கல்வி இல்லாத மக்களிடையே இவர்களை கண்டுபிடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை," என்கிறார் அவர். மொழியியல் ஆய்வுக்கு, இது போன்ற மக்களின் அறிவு விலைமதிப்பற்றது என்று நிரூபணமானது. பாமர மக்களுக்கு மொழிகள் மீது அன்பு இருந்தபோதிலும், காலப்போக்கில் 220 மொழிகள் காணாமல் போய்விட்டதாக தேவி மதிப்பிடுகிறார். வடகிழக்கு மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள தொலைதூர சமூகங்கள் பேசும் மொழிகள், காணாமல் போகக்கூடிய பெரும் ஆபத்தில் இருப்பதாக மொழியியலாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கனடாவின் சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தில் இண்டியன் ஸ்டடீஸின் வருகைப் பேராசிரியரான அன்விதா அபி, 2003 ஆம் ஆண்டில், வேனிஷிங் வாய்சஸ் ஆஃப் தி கிரேட் அண்டமானீஸ் (வோகா) என்கிற ஆவணத் திட்டத்தை மேற்கொண்டார். அந்தமான் பழங்குடியினர் பற்றிய அபியின் ஆய்வு இந்தியாவில் ஆறாவது மொழி குடும்பத்தை அடையாளம் காண வழிவகுத்தது. அதுதான் அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்களால் பேசப்படும் தி கிரேட் அண்டமானீஸ். இதன் முக்கிய மொழிகளான சாரே, போ, கோரா மற்றும் ஜெரு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். 2010 இல், போவா சீனியர் அந்தமான் தீவுகளில் காலமானார். கற்காலத்திற்கு முந்தைய காலங்களில் இருந்தே பேசப்படும் உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான 'போ' மொழியை, சரளமாகப் பேசும் கடைசி நபர் அவர்தான். "போவா சீனியர் இறந்தார் மற்றும் போ மொழி அழிந்துவிட்டது. பிறகு சாரே மற்றும் கோரா மொழிகளின் கடைசி பேச்சாளர்களும் இறந்துவிட்டனர்" என்று அபி கூறுகிறார். "உண்மையைச் சொல்வதானால், ஒரு உதவியற்ற உணர்வு நம்மை, குறிப்பாக மொழியியலாளர்களை ஆட்கொள்கிறது. ஏனென்றால் நாங்கள் இந்த மொழிகளை ஊக்குவிக்க முயன்று வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். உதவி கேட்டு அரசியல்வாதிகளுக்கு பல கடிதங்களை எழுதியதாகவும், ஆனால் அதை யாரும் செவிமடுக்கவில்லை என்று உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். 2013 ஆம் ஆண்டில் அபி, பத்மஸ்ரீ விருதை வென்றார். பல்வேறு துறைகளில் பொதுமக்களின் பங்களிப்புக்காக இந்திய அரசால் வழங்கப்படும் விருது இது. அந்தமானிய மொழிகளின் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தலில் அவரது பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அந்தமான் தீவுகளில் வசிக்கும் பாரம்பரிய பழங்குடியினரால் பேசப்படும் தி கிரேட் அண்டமானீஸ் மொழிகளின் தொகுதி, அழிவின் விளிம்பில் உள்ளது தங்களின் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு, சில நேரங்களில் சமூகங்களின் மீதே சுமத்தப்படுகிறது. அத்தகைய ஒரு முயற்சியை, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாங்லுங் மொசாங் என்ற விவசாயி சமீபத்தில் மேற்கொண்டார். மொசாங், டாங்ஸா மொழியை பேசுகிறார். இது சீன-திபெத்திய மொழி. அதாவது வடகிழக்கு இந்தியாவில் டாங்ஸா மக்களால் இந்த மொழிகளின் திரள் பேசப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் டாங்ஸா பழங்குடி, 40 துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணைப் பிரிவிற்கும் அதன் சொந்த பேச்சுவழக்கு உள்ளது. டாங்ஸா சமூகத்தின் மக்கள் தொகை சுமார் ஒரு லட்சம் மட்டுமே. எனவே பல்வேறு கிளைமொழிகள் கொண்ட இந்த மொழிக் குடும்பம், அழியும் ஆபத்து அதிகமாகிறது. "நான் சமூகத்தில் உள்ள பெரியவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு முன்பு தெரியாத ஏராளமான சொற்களையும் ,வாக்கியங்களையும் கண்டுபிடித்தேன்," என்கிறார் மொசாங். "நான் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி இந்த வார்த்தைகளை எழுத விரும்பினேன் ஆனால் சொற்றொடர் இலக்கண வேறுபாடுகளால் அது கடினமாக இருந்தது," என்கிறார் அவர். டாங்ஸா சமூகத்தின் அனைத்து பழங்குடியினரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான எழுத்துவடிவத்தை 1990 இல், லக்ஹூம் மொசாங் (வாங்லுங்கிற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை) கண்டுபிடித்துள்ளார் என்பதை வாங்லுங் கண்டறிந்தார். லக்ஹும் மொசாங் 2020 இல் இறந்த பிறகு டாங்ஸா மொழியைப் பாதுகாக்கும் பணியை வாங்லுங் மொசாங் ஏற்றுக்கொண்டார். பொதுவான டாங்ஸா எழுத்துக்களில் 48 உயிரெழுத்துக்களும், 31 மெய் எழுத்துக்களும் உள்ளன. எழுத்துவடிவம் நான்கு வெவ்வேறு ஒலிவடிவங்களைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு ஒலிவடிவத்திற்கும் அதற்கான ஒரு தனி அர்த்தம் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொசாங் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில், பொதுவான டாங்ஸா மொழியை கற்பிக்க இரண்டு வாரங்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தினார். இது மொழியைப் பாதுகாப்பதற்கான மொசாங்கின் செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டும்தான். "பொதுவான டாங்ஸா எழுத்துவடிவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் 2019 ல் ஒரு ஸ்கிரிப்ட் மேம்பாட்டுக் குழுவை உருவாக்கியுள்ளோம். ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்தில் பொதுவான டாங்ஸா ஸ்கிரிப்டை அறிமுகப்படுத்தும் யோசனையுடன் அந்த குழு மாநில அரசை அணுகியது. அவர்கள் எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது மிகவும் திருப்தியாக இருந்தது" என்கிறார் மொசாங். அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர், இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று, டாங்ஸா ஸ்கிரிப்ட் புத்தகத்தை வெளியிட்டார். அது விரைவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும். இப்போது டாங்ஸா எழுத்து முறை, Microsoft Word ஆல் எழுத்துரு பாணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், பல இந்திய மொழிகள் இன்னும் ஆபத்தில் உள்ளன. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாநிலத்திலிருந்து அல்லது சமூகத்திலிருந்து, சம்பாதிப்பதற்காக வேறு இடங்களுக்கு செல்லும்போதும், குழந்தைகளுக்கு தாய்மொழி கற்பிக்கப்படாதபோதும் தங்கள் மொழிகளை இழக்கிறார்கள் என்று மொசாங் கூறுகிறார். குழந்தைகள் பள்ளியில் மாநில மொழிகளைக் கற்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை இது வழங்கும் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள், தாய்மொழியை ஒதுக்கிவிட்டு இந்த மொழிகளை ஊக்குவிக்கிறார்கள். "மக்கள் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அழகின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. நாம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த வேண்டும் மற்றும் பழங்குடி மொழிகளை நம் மக்களுக்கு கற்பிக்க பட்டறைகளை நடத்த வேண்டும். ஆனால் இந்த விஷயங்களை நாம் சொந்தமாக செய்ய முடியாது. நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க, நிதி உதவி மற்றும் அரசின் ஆதரவு தேவை ," என்கிறார் மொசாங். பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, ஒடிஷா மாநிலத்தில் அழியக்கூடிய அபாயத்தில் உள்ள பல மொழிகள் உள்ளன. அவற்றில் இரண்டு, மொழியியலாளர்களால் கடந்த சில ஆண்டுகளில்தான் கண்டுபிடிக்கப்பட்டது மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அழியும் ஆபத்தில் இருக்கும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தலுக்கான திட்டத்தை (SPPEL) 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. எதிர்காலத்தில் அழியும் ஆபத்து இருக்கும் மொழிகள் மற்றும் தற்போது அழிந்துவரும் மொழிகளை ஆவணப்படுத்துவதே இதன் நோக்கம். சிக்கிம் பல்கலைக்கழகத்தில் 2016 இல் நிறுவப்பட்ட , அழியும் ஆபத்தில் இருக்கும் மொழிகளுக்கான மையம், இது போன்ற மொழிகளை ஆவணப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்துவதன் மூலம் சிக்கிம், வங்க தேசத்தின் வடமேற்கு பகுதி மற்றும் மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியை உள்ளடக்கிய பிராந்தியத்தில், அழிவின் விளிம்பில் உள்ள மொழிகளை பேணிக்காப்பதை இந்த மையம் ஊக்குவிக்கிறது. சிக்கிம் - டார்ஜிலிங் - இமயமலை பகுதிகளில் அழியும் விளிம்பில் உள்ள மொழிகள் காப்பகம் (சித்தேலா) என்பது சிக்கிம் பல்கலைக்கழகத்தின், அழியும் ஆபத்தில் உள்ள மொழிகளுக்கான மையம் மற்றும் பல்கலைக்கழக மைய நூலகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பிராந்திய காப்பகமாகும். சிக்கிம், கிழக்கு இமயமலைப் பகுதியின் மற்ற பகுதிகளைப் போலவே, பல இன கிராமங்கள் மற்றும் பல இன - மொழி அடையாளங்களைக் கொண்ட மக்களால் ஆனது. மாநிலத்தின் மேலாதிக்க கலாச்சாரம் நேபாளி அல்லது கோர்காலி அவர்களுக்கிடையே பொதுவான பண்டிகைகள் மற்றும் உணவு வகைகள் உள்ளன. பொதுவாக அனைவரும் பேசும் மொழி நேபாளி. அதே நேரம் இந்தி மற்றும் ஆங்கில மொழியின் பரவலில் நவீன பள்ளிகள் மற்றும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2017 ஆம் ஆண்டில், சிதேலாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக ராய் - ரோக்டங் சமூகத்தை கண்டுபிடித்தனர். அவர்களுடைய பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் அவர்களுக்கு இது பற்றி தகவல் கொடுத்தார். ரோக்டங் என்பது ராய் சமூகத்தில் உள்ள பந்தவா குலத்தின் பச்சா பிரிவுகளில் ஒன்றாகும். ரோக்டங் குலம் பெரும்பாலும் கிழக்கு சிக்கிமில் அமைந்துள்ளது. பந்தவாவை சாராத ஒரு தனி மொழியை தாங்கள் பயன்படுத்துவதாக, சமூகத்தின் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இப்பகுதியின் மொழியியல் வரலாற்றில் இந்த மொழி பற்றி முன்னர் குறிப்பிடப்படவில்லை. அப்போதிலிருந்து வெறும் 200 பேர் மட்டுமே கொண்ட இந்த சமூகம் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ராய் ரோக்டங் சமூகத்தின் மொழியை ஆவணப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்த சிதேலாவின் மொழியியலாளர் ஹிமா கிடியென், பெரும்பாலான ரோக்டங் சமூக உறுப்பினர்கள் ராய் குழுக்களின் உறுப்பினர்களாக எப்படி அடையாளம் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார். சிலர் நேபாளி என்று தங்களை கூறிக்கொள்கின்றனர். ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே தங்களை ரோக்டங் யுபாச்சாவின் ஒரு பகுதியாக அல்லது யாகுவாக அடையாளம் காண தேர்வு செய்கிறார்கள். "ராய் - ரோக்டங் மொழி பேசக்கூடிய 20 பேரை மட்டுமே நாங்கள் கண்டோம்," என்கிறார் கிடியென். பள்ளியில் ஒரு மொழி கற்பிக்கப்படாவிட்டால், அந்த மொழியைப் பயன்படுத்த எந்த வழியும் இல்லை. எனவே மக்கள், பெரும்பான்மையினரின் மொழியை ஏற்றுக்கொண்டு சமூகத்தில் ஒருங்கிணைய முயல்கின்றனர். அதன் காரணமாக மக்கள் மற்ற மொழிகளுக்கு மாறத் தொடங்கியதால் ராய் - ரோக்டங் மொழி பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லக்ஹூம் மொசாங் 1990 இல் டாங்ஸா பழங்குடியினர் தங்கள் மொழிகளைப் பதிவு செய்ய பயன்படுத்தக்கூடிய ஒரு எழுத்துவடிவத்தை கண்டுபிடித்தார் "பள்ளிகள் மற்றும் பிற தளங்களைப்போலவே ஊடகங்களும், மாநிலத்தில் பெரும்பான்மையினர் பேசும் பிற மொழிகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்கின்றன. மேலும் மக்கள் வீட்டிலும் அந்த மொழிகளைப் பேசத் தொடங்கினர். அப்போதுதான் மொழி அழிந்து போகிறது, ஏனென்றால் மக்கள் பேச்சுவழக்கு மொழியை மறந்துவிடுகிறார்கள். அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து வருவதில்லை,"என்கிறார் கிடியென். சிக்கிமில், பல்வேறு இன-மொழியியல் குழுக்கள் "நேபாளி" என்ற ஒன்றிணைந்த கலாச்சார அடையாளமாக ஒருங்கிணைக்கப்படும் காரணமாக சிறிய மொழிகள் மறக்கப்படுகின்றன. "மொழிகள் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு செல்வதற்கு ஒரு பெரிய காரணம், ஒரு சமூகம் தங்கள் சொந்த அடையாளம் மற்றும் மொழியின் மீது கொண்டுள்ள பெருமையே ஆகும். எனவே ஒரு மொழி, வெளி உலகில் ஒரு சமூகத்திற்குப் பயனற்றதாக மாறும் போது, அதிகம் அறியப்படாத மொழியின் பேச்சாளராக அவர்கள் தங்களை அடையாளம் காண விரும்பவில்லை," என்று கிடியென் குறிப்பிடுகிறார். இது வேலை செய்ய வேண்டிய அவசியம் போன்ற சமூக காரணிகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. "ஒரு சிறிய மொழிக் குழுவின் பேச்சாளர் தங்கள் சொந்த மொழியை மட்டுமே பேசினால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை," என்கிறார் கிடியென். பெரியவர்கள் தங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகளுடன் பேசும்போது மட்டுமே ரோக்டங் மொழியை பயன்படுத்துவது, ராய் - ரோக்டங் சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. வீட்டின் குழந்தைகள் ரோக்டங் மொழியை பேசுவதில்லை. பெரும்பாலும் அவர்களிடம் நேபாளி மொழி பேசப்படுகிறது. "வீடு மற்றும் சமய இடங்கள் தவிர, ரோக்டங் இன்று வேறு எந்த இடத்திலும் பயன்படுத்தப்படுவதில்லை," என்கிறார் கிடியென். ஆனால் தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கண்டதாக கிடியென் என்னிடம் கூறினார். ரோக்டங் மொழியைப் பேசுபவர்கள் வாரந்தோறும் ஒன்றாகக்கூடி மொழிக்கு புத்துயிர் ஊட்ட முயற்சிப்பதை 2020 ஜனவரியில் தங்களின் களப்பயணத்தின் போது, கவனித்ததாக அவர் குறிப்பிட்டார். பெரும்பாலும் தாத்தா பாட்டிகளான பழைய தலைமுறையினர், பெரும்பாலும் பெற்றோரான இளைய தலைமுறையினருக்கு மொழியைக் கற்றுக்கொடுக்க முயல்கின்றனர். இந்த ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அவற்றை பேசும்போது பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். "மொழியை ஆவணப்படுத்தும் எங்கள் பணியின் மூலம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்கிறார் கிடியென். https://www.bbc.com/tamil/india-58948039
 9. பெரிய தலைட்ட நம்மாக்கள் போட்டு குடுத்திட்டாங்கள் போல! இனி எல்லாம் சுபமே.
 10. Scotland 140/9 Bangladesh (10/20 ov, target 141)59/2 Bangladesh need 82 runs in 60 balls. அவசரப்படவேணாம்!
 11. காவலூர் கண்மணி அக்கா மற்றும் தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரியின் பிரிவால் துயருற்று இருக்கும் சகோதரிக்களுக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.
 12. தமிழர் தாய் சமயங்களுக்குத் திரும்ப சீமான் அழைப்பு சர்ச்சையானது ஏன்? சைவம், வைணவம்தான் தமிழர் சமயங்களா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 17 அக்டோபர் 2021, 12:38 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SEEMANOFFICIAL படக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துவம் ஐரோப்பிய சமயம், இஸ்லாம் அரேபிய சமயம். சைவமும் மாலியமும்தான் (வைணவம்) தமிழர் சமயம். செக்கு எண்ணெய்க்கு திரும்பி வருவதைப் போல தாய் சமயத்துக்கு திரும்பி வரவேண்டும் என்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. சைவம், வைணவம் மட்டுமல்ல, சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்று பல்வேறு சமயங்களை தமிழர்களின் பல பிரிவினர் பல்வேறு காலகட்டங்களில் தழுவியுள்ளனர். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்கம், வைகுண்டரின் அய்யாவழி போன்ற மார்க்கங்களும் தமிழர்களை ஈர்த்துள்ளன. இதைத்தவிர பரவலாக இருக்கும் நாட்டார் வழிபாட்டு மரபுகள் உள்ளன. இவற்றில் ஒன்றையோ, சிலதையோ தமிழர்களின் தாய் சமயம் என்று கூற முடியுமா? அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன? மரச்செக்கு எண்ணெய், கருப்பட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக `பனை திருவிழா' நிகழ்ச்சியை கடந்த 16 ஆம் தேதி சென்னையில் சீமான் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்கள் இந்துக்களே இல்லை, அவர்களை இந்துக்கள் எனக் கூறுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என கூறினார். மேலும், "தமிழர்கள் தங்களின் சமயங்கள் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம், மாலியம் (வைணவம்) என்று மீண்டு வர வேண்டும்" என்றார். அப்போது, `கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களைப் பற்றி நீங்கள் பேசுவதில்லையே?' என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, `அவை வெளியில் இருந்து வந்த சமயங்கள்தானே. அதில் ஒன்று ஐரோப்பிய சமயம், இன்னொன்று அரேபிய சமயம்' என்றார். அத்துடன், ``மரச்செக்கு எண்ணெய்க்கும் கருப்பட்டிக்கும் மாறியதுபோல, தமிழர்கள் மீண்டும் தாய் சமயத்துக்குத் திரும்ப வேண்டும்" என்று சீமான் கூறினார். ஆர்எஸ்எஸ் அனுதாபியா சீமான்? விசிக சுமத்தும் 3 குற்றச்சாட்டுகளின் பின்னணி சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை வலுக்கும் எதிர்ப்பு சீமானின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எழுத்தாளர் இரா.முருகவேள், `சைவம், வைணவத்துக்கு திரும்புங்கள் என்ற சீமானின் அழைப்பு, மதத்தை சீர்திருத்தும் நோக்கம் கொஞ்சமும் இல்லாத வெற்று உரை. சீமான் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இன்று இந்து மதத்தின் அடிப்படையாக சைவமும் வைணவமும்தான் இருக்கின்றன. சைவத்திலும் வைணவத்திலும் இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார். `உதாரணமாக, வைதீக கோவில்கள், மடங்களின் அன்றாட பூசைகள், நிர்வாகம், பரம்பரை உரிமை எல்லாவற்றிலும் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள் ஆகியோரின் ஆதிக்கமே இருக்கிறது. தலித்துகள், பெண்கள் இதை நினைத்துப் பார்க்க முடியாத நிலையே உள்ளது. சைவத்தையும் வைணவத்தையும் சுற்றி பின்னப்பட்டுள்ள ஜோதிடமும் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்து பஞ்சாங்கமும் சமூகத்துக்கு பெரும் சுமையாக இருக்கின்றன. சாதி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதையெல்லாம் சரிசெய்யும் முயற்சிகளை எடுக்காமல் பெயரை மட்டும் மாற்றி தாய் மதம் திரும்புங்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது,' என்கிறார் முருகவேள். Facebook பதிவை கடந்து செல்ல, 1 தகவல் இல்லை மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. Facebook பதிவின் முடிவு, 1 மேலும், `எந்தப் பொறுப்புணர்வும் அக்கறையும் இல்லாமல் இப்போது உள்ள வடிவத்திலேயே பெயரை மட்டும் மாற்றி சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்ற வேண்டும் என சீமான் சொல்கிறார். கிறிஸ்துவம், இஸ்லாம் தவிர எண்ணற்ற தாய் தெய்வ வழிபாடுகள், பழங்குடி வழிபாடுகள் இருக்க சைவமும் வைணவமும் மட்டுமே தமிழர்களின் அடையாளம் என்பது அபாயகரமான ஒன்று. சீமானின் பார்வையில் மதுரை வீரன் வழிபாடு எந்த இடத்தை பெறும்? சீமானுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் மதம் இருக்க, அங்கே போய் சேர்ந்து கொள் என்பது விசித்திரமானது. இதுதான் இந்துத்துவம்," என பதிவிட்டுள்ளார். தமிழர்களின் தாய் மதம் எது? இதையடுத்து, எழுத்தாளர் இரா.முருகவேளிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சைவமும் வைணவமும் தமிழர் மதங்கள் என சீமான் சொல்கிறார். சைவமும் வைணவமும் இல்லாவிட்டால் இந்து மதம் என்பதே இல்லை. தேவாரம், திருவாசகம் எல்லாம் சமஸ்கிருத்தத்தில் உள்ளவற்றின் தமிழ் பதிப்புகள்தான். கைலாயம், கங்கை, திருவிளையாடல் போன்றவை எல்லாம் இந்தியா முழுக்க உள்ள பொதுவான ஒன்றுதான். எனவே, சைவமும் வைணவமும் தமிழர் மதம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது," என்கிறார். தொடர்ந்து பேசியவர், ``தமிழர் மதம் என எதுவும் சொல்லப்படவில்லை. சைவம், வைணவம் ஆகியவற்றில் தமிழர், தெலுங்கர், வங்காளிகள் தொடங்கி பலர் இருக்கின்றனர். இந்து மதத்தையே இன்னொரு வடிவில் தமிழர் மதம் என சீமான் சொல்கிறார். அடுத்ததாக, `தமிழர் மதம்' என புதிதாக ஒரு வழிபாட்டு முறையை இவர்கள் சொல்லவில்லை. ஏற்கெனவே உள்ள தஞ்சை பெரிய கோவில், வடபழனி முருகன் கோவில் ஆகியவற்றையும் அதன் நிர்வாக முறைகளையும் அர்ச்சகர், பண்டாரம், சமஸ்கிருதம் ஆகியவற்றையும் அப்படியே வைத்துவிட்டு, `இது தமிழர் மதம்' என்பதை மட்டும் ஏற்க வேண்டும் என்கின்றனர். இது அபத்தமானது," என்கிறார். ``அப்படியானால், தமிழர்களுக்கான தாய் மதம் எது?" என்றோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தமிழர்களில் சைவர், வைணவர், பைளத்தர்கள், சமணர்கள், நாட்டார் தெய்வங்களை வழிபடுகிறவர்கள், தாய் வழிபாடு, மதத்தை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் எனப் பலர் இருந்துள்ளனர். அதனால் தமிழர்களுக்கு ஒரு மதம், இரு மதங்கள் என்ற அடையாளம் எதுவும் கிடையாது. இவர்கள் சொல்லும் சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்றியவர்கள் 20 சதவிகிதம் பேர்தான் இருந்தனர். மற்றவர்கள் எல்லாம் மாரியம்மன் உள்பட தாய் தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். அப்படியானால், கோவிலுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படாதவர்கள் எல்லாம் யார்? நாட்டார் தெய்வங்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் மதுரை வீரன் கோவிலில் சீமான், தனது மகனுக்கு காது குத்தும் நிகழ்வை நடத்தியிருக்கலாமே? தேவாரம், திருவாசகத்துக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மதுரை வீரன் கதைப் பாடலுக்கு இவர் எங்காவது கொடுத்துள்ளாரா? இவர்கள் பேசுவது வைதீக மதம். `முப்பாட்டன் முருகன்', `பெரும்பாட்டன் சிவன்' என்றுதான் பேசி வருகிறார். சீமான் பேசுவது இந்துத்துவ அரசியல்தான்" என்கிறார். இந்து என்பதற்கான அடையாளம் இல்லை பட மூலாதாரம்,@NAAMTAMILARORG "சீமான் மேற்கொள்ளும் பணிகள் எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. பூனைக் குட்டி இப்போதுதான் வெளியே வந்து கொண்டிருக்கிறது. "தமிழர்கள் எல்லாம் இந்துக்களாகத்தான் இருக்க முடியும். இந்துக்கள்தான் தமிழர்களாக இருக்க முடியும்' என்ற கருத்து அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. கீழடி உள்பட அகழ்வாராய்ச்சி நடக்கக் கூடிய இடங்களில் எல்லாம் சாமி சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. தமிழர்கள், இந்துக்களாக இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்கிறார், பச்சைத் தமிழகம் அமைப்பின் நிறுவனர் சுப.உதயகுமார். தொடர்ந்து பேசியவர், "தமிழர்கள், முன்னோர்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கி வந்தனர். அந்த வழிபாடு இன்றளவும் நடக்கிறது. இது முழுக்க மக்களின் அரசியலை மடைமாற்றும் வேலையாகத்தான் பார்க்கிறேன். அடிப்படையில், ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவராக சீமான் இருக்கிறார். இவரது தந்தையின் பெயர் செபாஸ்டியன். இவரது பெயர் சைமன். இவரின் வீட்டு முற்றத்திலேயே லூர்து மாதா சிலை உள்ளது. நான் நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவ மதத்தில் இருந்து இவர் மாறியுள்ளதைப் பார்க்கிறேன். இவரைப் பற்றிய மத அடையாளமே கேள்விக்குள்ளாக இருக்கும்போது யாரை மகிழ்ச்சிப்படுத்த இவ்வாறு பேசுகிறார் எனத் தெரியவில்லை. அடையாள அரசியலை பேசிவிட்டு அடிப்படை அரசியலை காலி செய்வது என வலதுசாரி அரசியலை முன்னெடுக்கிறார்," என்கிறார். திரிக்கப்பட்டதா சீமானின் கருத்து? பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK படக்குறிப்பு, இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் "சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதே?" என நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கேட்டோம். "சீமானின் பேச்சை தெளிவுபடுத்த விரும்புகிறேன், செய்தியாளர் சந்திப்பில், தமிழ் இந்து என்ற கேள்வி எழுப்பப்பட்டது. `அந்தக் கருத்தில் எங்களுக்கும் ஐயா மணியரசனுக்கும் முரண்பாடு உள்ளது, அவர் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை' என்றார். மேலும், `தமிழர்கள் இந்துக்களே இல்லை என்பதுதான் எங்களின் கோட்பாடு. வில்லியம் ஜோன்ஸ் என்ற வெள்ளைக்காரர் போட்ட கையொப்பத்தின்படிதான் நாங்கள் இந்துக்களாக ஆக்கப்பட்டோம். வரலாற்றின்படி, நாங்கள் இந்துக்கள் இல்லை' என்பதை விளக்கினார். அப்போது செய்தியாளர் ஒருவர் இடைமறித்துக் கேள்வி எழுப்பியபோது, `இஸ்லாம், கிறிஸ்துவம் என்பது தமிழர் சமயங்களே இல்லை, ஒன்று அரேபிய சமயம், இன்னொன்று ஐரோப்பிய சமயம்' என்று குறிப்பிட்டார். அதன் பொருள், `இஸ்லாம், கிறிஸ்துவ சமயங்களை தமிழர்கள் பின்பற்றக்கூடாது என்பதல்ல. இந்து மதம் குறித்தான கேள்விகள் அம்மதங்களுக்கு பொருந்தாது' என்பதாகும். இதனைக் கூறிவிட்டு முந்தைய கேள்விக்கான பதிலின் தொடர்ச்சியாக, `சைவத்தையும், வைணவத்தையும் தழுவிக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது இந்து மதத்தை தழுவியுள்ளவர்களைத்தானே தவிர, இஸ்லாம், கிறிஸ்துவத்தை தழுவியுள்ளவர்களை அல்ல. சீமான் கூறியது தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது" என்றார் இடும்பாவனம் கார்த்தி. தொடர்ந்து பேசியவர், ``முதன்முதலாக நடந்த மதமாற்றம் என்பது தமிழர்களை இந்துக்களாக மாற்றியதுதான். ஆகவே, தமிழர்களின் சமயங்களான சைவத்துக்கும் மாலியம் எனக் கூறப்படும் வைணவத்துக்கும் இந்து மதத்திலிருந்து திரும்ப வேண்டும் என்கிறோம். இந்தக் கருத்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை தாய் மதத்துக்குத் திரும்புமாறு கூறியதாக திரிக்கப்படுகிறது. சபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும் சபரிமலை சர்ச்சை: சாஸ்தா வழிபாட்டு மரபில் பெண்கள் விலக்கப்படுகிறார்களா? - உண்மை என்ன? நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளராக பெஞ்சமின் என்பவர் இருக்கிறார். அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராகவே இயக்கப்பணியில் தொடர்கிறார். அதேபோல, வீரத்தமிழர் முன்னணியின் மற்ற பொறுப்பாளர்களாக உள்ள அலாவுதீன், நூர்ஜகான் போன்றோரும் இஸ்லாமிய மதத்தை தழுவிக்கொண்டேதான் அப்பொறுப்பில் இருக்கிறார்கள். சீமான் அறிவித்தது ஏன்? அவர்கள் சைவத்துக்கும் மாலியத்துக்கும் மாறவுமில்லை. அவர்களை யாரும் மாறச் சொல்லவும் இல்லை. இந்து மதம் என்பது வருணாசிரமக் கொள்கைகளைக் கொண்டதாக இருக்கிறது. அதற்கு மாற்று மதமாகத்தான், தமிழர் சமயங்களை முன்வைக்கிறோம். தெய்வத்தின் குரலில், `நாங்கள் இந்துக்கள் என்று கூறியதால் தப்பித்தோம்' என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார். இந்த ஆரிய சதியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான், கர்நாடகத்தில் லிங்காயத்துகள் அறிவித்ததுபோல இந்துக்கள் இல்லையெனும் பரப்புரையை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது" என்றார் இடும்பாவனம் கார்த்தி. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "தமிழர்களை இந்துக்கள் எனக்கூறி, ஒட்டுமொத்த மக்களையும் ஆரியம் அபகரித்துக்கொண்டது. ஆரிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க மத நம்பிக்கை கொண்டவர்களுக்காக, இந்து மதத்திற்கு மாற்றாக சைவம், மாலியம் எனும் தமிழர் சமயங்களை முன்வைக்கிறோம். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். சீக்கியர்களுக்கென ஒரு மதம் இருப்பதைப் போல, தமிழர்களுக்கென இருந்த சமயங்களை மீட்டுருவாக்கம் செய்கிறோம். இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அவர்கள் மதத்திலேயே தொடரலாம். இது அவர்களுக்குப் பொருந்தாது. எல்லோரையும் இந்துக்கள் எனக்கூறி, தங்களோடு இணைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களையும் பகையாளிகளாகக் காட்ட முனையும் இந்துத்துவத்தை பலவீனப்படுத்தவே இந்துக்கள் இல்லையெனும் அறிவிப்பை செய்கிறோம். இந்து மதத்திலிருந்து சைவத்துக்கும் மாலியத்துக்கும் திரும்பக் கோருகிறோம்" என்று இடும்பாவனம் கார்த்தி கூறினார். இந்தியச் சட்டப்படி இந்துதான் இதையடுத்து, ``சைவத்திலும் வைணவத்திலும் ஏராளமான பிரச்னைகள் இருக்கும்போது, பெயரை மட்டும் மாற்றிவிட்டு தாய் மதத்துக்கு திரும்புங்கள் எனக் கூறுவது சரியல்ல என்கிறார்களே?" என்றோம். அதற்கு இடும்பாவனம் கார்த்தி, ` இஸ்லாமியர், கிறிஸ்துவர் அல்லாதவர்களை இந்து என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வந்துவிட்டனர். நான் பௌத்த மதத்தைத் தழுவுகிறேன் என அம்பேத்கர் கூறினாலும் அதுவும் இந்தியச் சட்டப்படி இந்துதான். மத மறுப்பாளரும், கடவுள் மறுப்பாளரும் சட்டப்படி இங்கு இந்துதான். தான் விரும்பாவிட்டாலும் இந்து என்ற சொல் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள்தான் என்ற வேர் ஊன்றப்பட்டிருப்பதால் அதனை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் பேசும்போது, `மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் எனப் பதிவு செய்யக் கூடாது' என்றார். `கம்பராமாயணமும் பெரியபுராணமும் சைவர்களையும் வைணவர்களையும் இந்துக்களாக மடைமாற்றம் செய்கின்றன, தமிழர்கள் இந்துக்களே அல்ல' என அண்ணா பதிவு செய்கிறார். ஆனால், 90 சதவிகிதம் இந்துக்களைக் கொண்ட கட்சி என தங்களைப் பதிவுசெய்கிறது திமுக. 'திராவிட நாட்டில் இந்துக்களுக்கு என்ன வேலை? சமத்துவத்தை விரும்புபவன் எப்படி தன்னை இந்து என கூறிக்கொள்வான்?' என அண்ணா கேட்டார். இன்றைக்கு அவரது கட்சியிலே பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறார்கள் என பேசுகின்றனர்" என்றார். கண்ணன், முருகனை மீட்கும் முயற்சி பட மூலாதாரம்,@NAAMTAMILARORG "நாட்டார் தெய்வங்கள் என சில வழிபாட்டு முறைகள் இருக்கும்போது `தமிழர் சமயம்' என தனியாக ஒன்றைக் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?" என்றோம். ``மூத்தோர் வழிபாடு, இயற்கை வழிபாடு என்பது ஆதித் தொன்ம வழிபாடு. நடுகல் வழிபாடு போன்றவை அதில் வருகின்றன. சைவம், வைணவம் போன்ற தமிழர் சமயங்களை, இதுதான் தாய் மதம் என நாங்கள் கூறவில்லை. இந்து என்ற கட்டமைப்பை உடைக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டார் வழிபாட்டை கையில் எடுக்காத ஆரியம், முருகன், கண்ணன், வருணன், இந்திரன், கொற்றவை போன்றோரைக் கையில் எடுத்துக்கொண்டது. மராட்டிய சிவாஜியை, இந்துத்துவவாதி இல்லை எனக்கூறி எவ்வாறு கோவிந்த பன்சாரே மீட்க முயன்றாரோ, அதேபோல,கண்ணன், முருகன் போன்றோரை மீட்க வேண்டிய பெரும்பணி உள்ளது. இதில் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் அவர்களின் வழிபாட்டுக்கான ஜனநாயக உரிமையை 100 சதவிகிதம் நாம் தமிழர் கட்சி உறுதிசெய்து வருகிறது. இந்து என்ற சொல்லை மடைமாற்றுவதற்கு வேறு ஒரு பெயர் தேவைப்படுகிறது. இந்து என்பது ஆரியத்துக்குத்தான் வலிமைசேர்க்கும் என்பதை வலியுறுத்துகிறோம். சைவம், வைணவம் மட்டுமில்லாமல் இஸ்லாம், கிறிஸ்துவ மதத்துக்குக்கூட தமிழர்கள் திரும்பலாம். அதேநேரம், இந்து என்ற அடையாளம் வேண்டாம் என்கிறோம். அந்த மதமே தீண்டாமையின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறியது போல, `இந்து என்பது ஆரிய மாயை. அதிலிருந்து உளவியல் விடுதலை வேண்டும்' என்கிறார். அதனைத்தான் நாங்கள் கோருகிறோம்" என்று கூறினார் இடும்பாவனம் கார்த்தி. "சைவம், வைணவம்தான் அடையாளம் என்றால் மதுரை வீரன் வழிபாட்டை சீமான் எப்படிப் பார்க்கிறார் என்கிறார்களே?" என்றோம். "இறந்து போன முன்னோர்கள், எங்களின் தெய்வம். இந்து என்கிற அடையாளம் வேண்டாம் என்பதுதான் கூறுகிறோம். ஆரியத்தால் திருடி சிதைக்கப்பட்ட தமிழர் சமயங்களை மீட்டுருவாக்கம் செய்து, இந்து எனும் அடையாளத்திற்குள் தமிழர்கள் கரைந்துபோகாது தடுக்க சைவத்துக்கும் மாலியத்துக்கும் மடைமாற்றம் செய்கிறோம். இது இந்து மதத்திற்கு மாற்றாக எதிர்ப்புரட்சி மூலம் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களைத் தழுவி நிற்போருக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பது போல தி.மு.கவினர் கருத்துருவாக்கம் செய்வது இழிவான அரசியலாகத்தான் பார்க்கிறேன்" என்கிறார். https://www.bbc.com/tamil/india-58946411
 13. இவனுடைய இழப்புத் தான் எனது தயக்கத்தை உதறி முன் செல்ல தூண்டுகிறது.
 14. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது? 15 அக்டோபர் 2021, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK PARLIAMENT கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் தாங்கள் தேடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். 1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பி ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அவரது இறப்பு குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவேத் கூறுகையில், "டேவிட் ஒரு சிறந்த மனிதர், சிறந்த நண்பர், மற்றும் சிறந்த எம்.பி., தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர் கொல்லப்பட்டுள்ளார்," என்று குறிப்பிட்டார். பிரிட்டன் நிதித்துறை செயலாளர் (சான்சலர்) ரிஷி சுனக், "வன்முறையின் மோசமான அம்சமே அது மனிதாபிமானமற்று இருப்பதுதான். அது உலகின் மகிழ்ச்சியைத் திருடுகிறது, நாம் மிகவும் விரும்புவதை நம்மிடமிருந்து பறிக்கிறது," என்று கூறியுள்ளார். "இன்று அது ஒரு தந்தை, கணவர் மற்றும் மரியாதைக்குரிய சக மனிதரை பறித்து விட்டது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சர் டேவிட்டின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன," என்று ரிஷி சுனக் கூறியுள்ளார். நியூயார்க்கில் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து - ஐவர் காயம் லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு "இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியைத் தொடர்ந்து டேவிட் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கோபமூட்டும் மற்றும் வன்முறை நடத்தையை அரசியலிலோ அல்லது வேறு எந்த வாழ்க்கையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது," என்று அவர் கூறியுள்ளார். படக்குறிப்பு, தாக்குதல் நடந்த பகுதியை காட்டும் படம் 69 வயதாகும் டேவிட் அமேஸ், செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி எம்.பி ஆக இருக்கிறார். பெல்ஃபேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டபோது தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். சம்பவ இடத்துக்கு உடனடியாக வான் வழியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. பட மூலாதாரம்,ANTHONY FITCH படக்குறிப்பு, டேவ்ட் அமேஸ் தாக்கப்பட்ட தேவாலயத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர். சம்பவம் நடந்த இடத்தில் செளத் எண்ட் கவுன்சிலர் ஜான் லேம்ப் இருந்துள்ளார். "எப்போதும் பிறருக்கு உதவக் கூடிய நிலையில் இருந்தார் டேவிட். குறிப்பாக, அகதிகளுக்காக உதவ எப்போதும் முயற்சி எடுத்து வந்தார். தான் நம்பும் ஒரு விஷயத்தில் எப்போதும் உள்ளப்பிடிப்பு மிக்கவராகவும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுபவராகவும் விளங்கினார் டேவிட்," என்றார் ஜான் லேம்ப். "தொகுதிவாசிகளை அவர்கள் வசிக்கும் வெவ்வேறு பகுதிகளுக்கே நேரில் சென்று குறைகளை கேட்டறிவதை டேவிட் அமேஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இப்படியொரு தாக்குதலில் அவர் பலியாவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை," என்றார்ஜான் லேம்ப். சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனைக்கு டேவிட் கொண்டு செல்லப்படவில்லை என்றும் சம்பவ பகுதியிலேயே அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர் என்றும் ஜான் லேம்ப் பிபிசியிடம் தெரிவித்தார். டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். 2016இல் கொல்லப்பட்ட ஒரு எம்.பி.யின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜோ காக்ஸ் ஃபவுண்டேஷன், "'டேவிட் கத்திக்குத்து சம்பவம் கொடூரமான செயல்," என்று கூறியுள்ளது. தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கேர் ஸ்டார்மெர், "'டேவிட்டுக்கு நடந்த கொடூரமான மற்றும் துயரமான சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பம், ஊழியர்கள் மீதே எனது நினைவு இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார். டேவிட் அமேஸின் மறைவுக்கு கட்சி வித்தியாசமின்றி பிரிட்டனில் உள்ள அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/global-58928921
 15. சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள். மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். மின் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகளை கையாள்வது தொடர்பான சர்வதேச வல்லுநர் குழு ஒன்று இந்த மதிப்பீட்டை செய்துள்ளது. 5.7 கோடி டன் என்பது சீனப் பெருஞ்சுவரின் எடையைவிட அதிகம். இதுவரை புவியில் செயற்கையாகப் படைக்கப்பட்ட பொருள்களிலேயே அதிக எடை கொண்டது சீனப்பெருஞ்சுவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கெட்டில்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்னணு பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவை இந்தக் கழிவுப் பொருள்களில் அடக்கம். தூக்கி வீசப்பட்ட அந்த மின்னணு கழிவுகளின் மதிப்பு பிரும்மாண்டமானது என்கிறது அந்த வல்லுநர் குழு. உலக மின்னணு கழிவுப் பொருள்களின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்கிறது வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் வெளியிட்ட ஓர் அறிக்கை. இது பெரும்பாலான நாடுகளின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பைவிட அதிகம். "ஒரு டன் வீசியெறியப்பட்ட மொபைல் போன்களில் 1 டன் தங்கத் தாதுவில் இருப்பதைவிட அதிகம் தங்கம் இருக்கும்," என்கிறார் ஐ.நா. நீடித்த நிலைத்த சுழற்சித் திட்டத்தின் இயக்குநர் ரியூடிஜெர் கியூயர். குவியும் சாதனங்கள் இ-கழிவுகள் என்று கூறப்படும் இந்த மின்னணு கழிவு உற்பத்தி ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் டன் அதிகரிக்கிறது. மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சிக்கு உள்ளாகிறது. பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா? அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி? குறைவான ஆயுளும், சீர் செய்வதற்கான குறைவான வாய்ப்புகளும் உள்ள பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த இ-கழிவுகள் அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று மின், மின்னணு கழிவுப் பொருள்களைக் கையாள்வதற்கான வல்லுநர் குழுவின் தலைமை இயக்குநர் பாஸ்கல் லெராய் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்ஜ், டிவி, பிற மின்னணு கழிவுகளின் குவியல். "மொபைல் போன்களில் அதிவேகமாக செய்யப்படும் வளர்ச்சிகளால் பழை போன்களை மாற்றவேண்டிய நிலை சந்தையில் ஏற்பட்டுள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். தங்கள் தனிப்பட்ட மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வதற்கு நுகர்வோரிடமும் தயக்கம் இருக்கக்கூடும். பிரிட்டனில் 4 கோடி பயன்படுத்தப்படாத சாதனங்கள் வீட்டில் உறங்குவதாக ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி 2019ல் செய்த ஓர் ஆய்வில் தெரியவந்தது. திறன் பேசிகளை செய்வதற்குத் தேவையான சில அரிதான, மதிப்பு மிக்க தனிமங்களின் சப்ளையில் இது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நூற்றாண்டில் தீரப்போகும் இத் தனிமங்கள் செல்போன் செய்யத் தேவை கேலியம் (Gallium): மருத்துவ வெப்பமானிகள், எல்.இ.டி.கள், சோலார் பேனல்கள், டெலஸ்கோப்புகள் ஆகியவற்றில் பயன்படும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆர்சனிக் (Arsenic): பட்டாசுகளில் பயன்படும். வெள்ளி (Silver): கண்ணாடிகளில், எதிர்வினையாற்றும் லென்ஸ்களில், பாக்டீரியா எதிர்ப்பு துணி மற்றும் கையுறைகளில் பயன்படுகின்றன. இரிடியம் (Indium): டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், தீயணைப்பதற்கான நீர் தூவும் இயந்திரம், ஃபார்முலா 1 கார்களுக்கான பால் பேரிங்குகள், சோலார் பேனல்களுக்கான மேல்பூச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. யிட்ரியம் (Yttrium): வெள்ளை எல்.இ.டி. விளக்குகள், கேமரா லென்ஸ்கள், சில வகை புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படும். டான்டலம் (Tantalum): அறுவை சிகிச்சைகளில் உள்ளே வைக்கப்படும் இம்ப்ளான்டுகள், நியான் விளக்குகளின் எலக்ட்ராடுகள், டர்பைன் பிளேடுகள், ராக்கெட் நாசில்கள், சூப்பர்சானிக் விமானங்களின் நோஸ் கேப்புகள், காது கேட்கும் கருவிகள், பேஸ் மேக்கர்கள் போன்றவற்றில் பயன்படுகிறது. பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY படக்குறிப்பு, திறன்பேசிகளில் 30 வகை தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில புவியில் வேகமாகத் தீர்ந்துவருகிறவை. "சரியானதை செய்ய நுகர்வோர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும். அத்துடன் இ-கழிவுகளை சரியான முறையில் அகற்றுவது சமூக நெறியாக மாறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் வேண்டும்," என்கிறார் பாஸ்கல் லெரோய். மின்னணு பொருள்களை தூக்கி வீசாமல் அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு டன் மின், மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் இரண்டு டன் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்க முடியும். எனவே பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டுக்கு நமது அரசுகள் செல்லும் நிலையில், கார்பன் உமிழ்வை குறைக்க இந்த நடவடிக்கை முன்னெப்போதையும்விட முக்கியம்" என்கிறார் அவர். பிரிட்டனில் உள்ள மெட்டீரியல் ஃபோகஸ் என்ற நிறுவனம் அஞ்சல் குறியீட்டை அடிப்படையாக வைத்து மக்களுக்கு அவர்களுக்கு அருகே உள்ள இ-கழிவு மறுசுழற்சி மையம் குறித்த தகவல்களை அளிக்கிறது. https://www.bbc.com/tamil/global-58925076
 16. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'விஜயகாந்த் வெற்றிக்கு ஆதாரம் உள்ளது; விஜய் வென்றாரா?' ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 13 அக்டோபர் 2021 புதுப்பிக்கப்பட்டது 14 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,XB CREATIONS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்து வந்தாலும், அவ்வாறு வென்றவர்கள் விஜய் மக்கள் மன்றத்தில் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிடவில்லை. தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடக்கம். இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன. மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட ஆட்கள் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23,978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளோம் என்கின்றனர் விஜய் மக்கள் மன்றத்தினர். விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் தரும் விளக்கம் என்ன? விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது? 'இயக்கத்தின் கொடி, பெயர் பயன்படுத்தியதால் வெற்றி' `மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் நின்றதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது' என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன். என்ன நடந்தது? தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை ஆளும்கட்சியான தி.மு.க பெற்றுள்ளது. பல மாவட்டங்களில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க படுதோல்வியடைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அ.ம.மு.க வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்தமுறை படுதோல்வியை சந்தித்துள்ளது. போட்டி 169 இடங்கள்.. வெற்றி? அதேநேரம், 109 இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நேற்று மாலை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரம், 55 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று இரவு முழுக்க வாக்கு எண்ணும் பணிகள் நீடித்தன. முடிவில் 110 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் நடிகர் விஜய் இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நடிகர் விஜய்யை சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பிரதானமாக இருப்பதில்லை என்பதால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கானவர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கின. சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானப் பங்கு வகித்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை மிக முக்கியமான ஒன்றாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். போட்டியின்றி தேர்வான 13 பேர் உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி தலைவருமான சரவணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னரே ஒன்பது மாவட்டங்களில் போட்டியின்றி 13 பேர் தேர்வானார்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இந்த வெற்றி எங்களுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது" என்கிறார். தொடர்ந்து பேசிய சரவணன், `` உள்ளாட்சியில் 169 இடங்களில் போட்டியிட்டோம். இந்த நிமிடம் வரையில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2019 உள்ளாட்சித் தேர்தலில் 32 மாவட்டங்களில் சுயேச்சையாக கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் போட்டியிட்டோம். அப்போது 135 பேர் வெற்றி பெற்றனர். இந்தமுறை மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அறிய முடிந்தது. உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு படுதோல்வி ஏன்? 'அண்ணாத்த' ரஜினி உருக்கம்: "எஸ்பிபி 45 வருடங்களாக எனது குரலாகவே வாழ்ந்தவர்" விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறோம். எங்களின் சேவைகளைப் பார்த்து மக்களும் ஆதரவு கொடுத்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, `100 இடங்களில் வெற்றி பெறுவோம்' என உறுதியாக நம்பினோம்" என்கிறார். ``தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து எதாவது தகவல்கள் வந்ததா?" என்றோம். `` மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டலில்தான் நாங்கள் தேர்தலில் நின்றோம். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்தவித சிக்கல்களும் வரவில்லை. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வந்தோம்" என்கிறார். என்ன ஆதாரம் இருக்கிறது? `` உள்ளாட்சியில் வெற்றி பெற்றதை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். பட மூலாதாரம்,ACTOR VIJAY `` தாங்கள் வெற்றி பெற்றதற்கு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விஜய்யை முன்வைத்து உரிமை கோருகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில்தான் அனைவரும் போட்டியிட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் யாரும் போட்டியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது, `நடிகர் விஜய்யின் ஆதரவில்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்' என இவர்கள் கூறுவதை யாரும் சென்று சரிபார்க்கப் போவதில்லை" என்கிறார். தொடர்ந்து பேசிய சிகாமணி, `` ஊரக உள்ளாட்சியில் இவர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பில்லை. தனது தந்தை புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அதனை மறுத்து விஜய் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்றால், அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. அதேநேரம், விஜய் ரசிகர்கள் தரப்பில் கற்பனையான, நிரூபிக்க முடியாத தகவல்களைக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார். மேலும், `` தற்போதைய அரசியல் சூழலில், யாராவது ஒருவர் வந்துதான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் எதுவும் தற்போது இல்லை. உள்ளாட்சியில் எதாவது ஒரு காரணத்தால் சிலர் வெற்றி பெற்றிருக்கலாம். அதற்காக, விஜய்க்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதன்மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 110 இடங்களில் வெற்றி பெறுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?" என்கிறார். https://www.bbc.com/tamil/india-58895863
 17. நாகப்பட்டினத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை - தலித் கணவர் புகார் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 13 அக்டோபர் 2021, 05:32 GMT படக்குறிப்பு, பெண்ணின் தந்தை (வலது) மற்றும் உறவினர் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அவரை இழுத்துக்கொண்டு வெளியே வந்தனர். தலித் இளைஞர் ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தபோது, அப்பெண்ணின் தந்தையும் வேறு சிலரும் அடித்து இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர். இதில் என்ன நடந்தது? நீதிமன்றம் இருந்த வளாகத்துக்குள்ளேயே சட்டத்தை மீறிய பெண்ணின் தந்தை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 21. இவரும் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மதன்ராஜ் என்பவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பாரதி, மதன்ராஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேற்கொண்டு இவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை திமுக பிரமுகர் தூண்டுதலில் ஆணவப் படுகொலையா? இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? இந்த சூழலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள கோயில் ஒன்றில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு நீடித்தது வந்த காரணத்தால் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு கடந்த 10ஆம் தேதி திருச்சியிலிருந்து மதன்ராஜின் சொந்த ஊரான நாகப்பட்டினம் வந்துள்ளனர். பிறகு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) காலை வழக்கறிஞர் மூலமாக முறைப்படி பதிவு திருமணம் செய்ய நாகபட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு மதன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர். படக்குறிப்பு, பெண்ணை மீட்டு அழைத்துச் செல்லும் பெண் காவலர்கள். பதிவு திருமணத்தின் போது இறுதியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர். நீதிமன்ற வளாகத்தின் வெளியே இழுத்து சென்ற பாரதியை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் இதை தடுக்கும்‌ முயற்சியில் ஈடுபட்டபோது, அவரையும்‌ மீறி பாரதியை காரில் ஏற்றினர். இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அருகே இருந்த பொதுமக்கள் அவர்களது காரை மறித்து பெண்ணை காரிலிருந்து இறக்கிவிட வலியுறுத்தினர். நீதிமன்ற வளாகம் அருகே வந்த பெண் காவலர் அப்பெண்ணை அவர்களின் பிடியில் இருந்து விடுமாறு கூறும்போது, தாம் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என்றும் அது தமது மகள் என்றும் பெண்ணின் தந்தை கூறினார். தலித் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி ஆய்வு முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள் பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தமேலதிக காவல்துறையினர் பெண்ணை மீட்டு அருகே இருக்கும் போக்சோ நீதிமன்றத்துக்கு பாதுகாப்பிற்காக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே மனைவியின்‌ உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை, மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் மதன்ராஜ் புகாரளித்தார். காவல்துறை பெண் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? அவர் கொடுத்த புகாரில், "திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது பாரதியின் பெற்றோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சுமார் 5 நபர்களுடன் நுழைந்து என்னையும், எனது மனைவி பாரதியை அடித்து கீழே தள்ளவிட்டு, எனது மனைவியை அடித்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்," என்று குறிப்பிட்டிருந்தார் . படக்குறிப்பு, பெண்ணின் கணவர் மதன்ராஜ் சம்பவம் குறித்து பிபிசி தமிழுக்கு கூறிய மதன்ராஜ் தரப்பினர், "மதன்ராஜ் கொடுத்த புகாரில் அடிப்படையில், இருவரையும் விசாரித்த காவல்துறையினர், பெண்ணின் விருப்பப்படி கணவருடன் சேர்த்து வைத்தனர். பெற்றோருடன் செல்ல பெண் மறுப்பு தெரிவித்ததால், எங்களுக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பெண்ணிடம் அவரது பெற்றோர்‌ எழுதி வாங்கிக்கொண்டனர்." என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவஹரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது விளக்கமளித்த அவர், "அந்த பெண்ணை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் பையனுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்" என்று கூறினார். "பெண் 21 வயது ஆனவர் என்பதால் யாருடன் இருக்க விருப்புகிறாரோ அவருடன் இருக்க உரிமையுள்ளது என்பதால் அந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைத்தோம். பெண்ணின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்துவந்த நிலையில், இனிவரும் நாட்களில் பெற்றோரால் இவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கியுள்ளோம்" என நாகை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால் கணவர் கொடுத்த புகார் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று வெளிப்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். தம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவோ, தாக்கியதாகவோ பாதிக்கப்பட்ட பாரதி புகார் அளித்தால் பெண்ணின் குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசு வளாகத்துக்குள்ளேயே இந்த நிகழ்வு நடந்து இருந்தாலும் காவல்துறை தாமாக முன்வந்து இது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்துக் கேட்டபோது, அப்பெண் புகார் அளிக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் மீண்டும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-58893860
 18. இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை 2 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களுக்குள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று (13) மேற்கொண்டிருந்தனர். இதன்போது, போலீஸ் மாஅதிபருடன் சென்ற உயர் போலீஸ் அதிகாரியொருவர், பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படமொன்றை பகிர்ந்து, அதிகளவானோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு பாதணியுடன் ஆலயத்திற்குள் செல்லும் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள் இன்று முற்பகல் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் − தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கே போலீஸ் மாஅதிபர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு ஆலயங்களும், இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் என்பது விசேட அம்சமாகும். இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா? இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி - என்ன நடந்தது? இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுக்குள், போலீஸ் அதிகாரி பாதணியுடன் சென்றமை, ஆலயத்தின் மகிமையை அவமதிப்பதாக இந்துக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பானது - போலீஸ் யாழ்ப்பாணத்தில் போலீஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த போலீஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அதைவிடுத்து, ஆலயத்திற்குள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். போலீஸார் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் மேல் சட்டையை கழற்ற கூடாது என்ற போதிலும், யாழ்ப்பாணம் − நல்லூர் ஆலயத்திற்குள் போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழற்றுவதாக அவர் கூறினார். அது இந்து மதத்திற்கு போலீஸார் வழங்கும் கெளரவம் எனக் கூறிய அவர், ஆலய நுழைவாயிலுக்கு அருகில் போலீஸ் அதிகாரி சென்றமை கூட தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவித்தார். தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கெளரவத்துடன் மதிப்பார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-58901201
 19. உங்கள் மக்கள் மீதான கரிசனத்திற்கு தலை வணங்குகிறேன். எங்கடை சனம் தப்பிப்பிழைக்குங்கள், கொஞ்சம் உடலை வருத்தத் தயாராக வேண்டும். இப்பவே வீட்டுத்தோட்டங்கள் செய்ய தொடங்கிற்றினம், தூசு அடுப்பெல்லாம் தூசி தட்ட வெளிக்கிட்டாச்சு காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துடன்.
 20. ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன? சல்மான் ராவி பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு தயாரிப்பிலிருந்து உயரே பறப்பது வரை அனைத்தும் சாத்தியம் என்று மீண்டும் ஒரு முறை மார்தட்டிக்கொள்ளலாம் டாடா குழுமம். ஏர் இந்தியாவின் சின்னமான மஹாராஜா மீண்டும் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனத்திடம் வந்துள்ளது இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை அதிகத் தொகைக்கு வாங்கிய டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ உரிமையாளராகிறது. ஜே ஆர் டி டாடா-வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியாவை மீண்டும் உரிமை கொள்வதில் 'டாடா சன்ஸ்' மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. 1953 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்ட போதிலும், டாடா சன்ஸ் தான் அதனைத் தொடர்ந்து இயக்கியது. பின்னர் எழுபதுகளில், ஜனதா கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது, அதன் மேலாண்மை டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து முற்றிலும் திரும்பப் பெறப்பட்டது. அதன் பிறகும் கூட, 1993 வரை, ஏர் இந்தியாவின் தலைவராக, அதில் பல்வேறு பதவிகளை வகித்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் பின்னர் இந்தப் பதவிக்கு சிவில் விமானத் துறையின் சவால்கள் குறித்த புரிதல் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர். ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம் ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா - நிபந்தனைகள் என்ன? வரலாறு என்ன? ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தியதையடுத்து, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்ட ஒர் அறிக்கையில் இதை ஒரு "வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்" குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மிக முக்கியமான விமான நிறுவனத்தின் உரிமை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். சந்திரசேகரன் தனது அறிக்கையில், "ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய ஒரு உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை இயக்குவது எங்கள் முயற்சியாக இருக்கும். மஹாராஜா சின்னம் மீண்டும் உரிமையாவது, இந்தியாவில் விமான சேவையில் முன்னோடியாக இருந்த ஜேஆர்டி டாடாவுக்குச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிவில் விமானப் போக்குவரத்தில் இரண்டாவது பெரிய நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் விஸ்தாரா விமான சேவையையும் மலேஷியன் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் ஏஷியா விமான சேவையையும் நடத்தும் டாடா சன்ஸிடம் இப்போது மூன்றாவதாக ஏர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு, 'சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில்' டாடா சன்ஸ் 'இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' உள்நாட்டுச் சந்தையில் 57 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. ஏர் இந்தியாவை கையகப்படுத்திய பிறகு, டாடா சன்ஸ் 27 சதவீத சந்தைப் பங்கைப் பெறும். ஏர் இந்தியாவைக் கையகப்படுத்திய பிறகு, 'டாடா சன்ஸ்' முன் நிற்கும் சவால்களும் கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், ஏனெனில் அது ஏற்கனவே இந்தியாவில் மேலும் இரண்டு 'விமான நிறுவனங்களை' இயக்கி வருகிறது. பிபிசியிடம் பேசிய சிவில் ஏவியேஷன் விவகார நிபுணரும் மூத்த பத்திரிக்கையாளருமான அஷ்வினி ஃபட்னிஸ், "அவர்கள் இரண்டு விமான நிறுவனங்களுடன் சேர்த்து ஏர் இந்தியாவையும் எப்படி சிறப்பாக இயக்கப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏர் இந்தியாவின் சேவைகளை உலகத் தரத்திற்கு வழங்க முடியுமா என்பது அடுத்த சவால். இரண்டு விமான நிறுவனங்களில் டாடா சன்ஸ் மூலம் வழங்கப்படும் சேவைகள் மிகச் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது." என்று கூறினார் பட மூலாதாரம்,GETTY IMAGES இழப்பு எவ்வாறு ஈடு செய்யப்படும்? மேலும் அஷ்வினி ஃபட்னிஸ், 'ஏர் இந்தியாவின் இழப்பு எப்படி ஈடு செய்யப்பட்டு லாபகரமான விமான நிறுவனமாக்கப்படவிருக்கிறது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்று கூறுகிறார். அரசின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 'ஏர் இந்தியா' ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ .20 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது என்றும் அரசு இதைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்ததற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறுகிறார். "இப்போது அரசின் சுமை குறைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், கிடைத்ததைக் கொண்டு டாடா சன்ஸ் என்ன செய்யப்போகிறது என்பதும் ஒரு சவாலாக முன் நிற்கிறது. பெரும் இழப்பைச் சந்தித்து வந்த ஒரு விமான நிறுவனத்தைத் தலைகீழாக எப்படி மாற்றப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதற்காக அவர்கள் மொத்த அமைப்பையுமே மாற்ற வேண்டியிருக்கும்" என்று அவர் கூறுகிறார். இருப்பினும், கையகப்படுத்தலின் போது டாடா குழுமத்திற்கு அரசாங்கம் விதித்த நிபந்தனைகளும் குறிப்பிடத்தக்கவை. நிபந்தனைகளை விளக்கிய இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சல், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம், ஓராண்டிற்கு எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய முடியாது என்றும் ஓராண்டுக்குப் பிறகும், பணி நீக்கம் செய்யாமல் ஊழியர்கள் தாமாக முன்வந்து பணி ஓய்வு பெற வழி வகை செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார். இதனுடன், 'வருங்கால வைப்பு நிதி' மற்றும் 'கிராச்சுட்டி' ஆகியவையும் கொடுக்கப்பட வேண்டும் என்பவையும் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,MANJUNATH KIRAN/AFP VIA GETTY IMAGES தற்போது, 'ஏர் இந்தியா' மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - ஒன்று 'ஏர் இந்தியா இன்டர்நேஷனல்' வெளிநாட்டுச் சேவை, மற்றொன்று 'ஏர் இந்தியா' உள்நாட்டுச் சேவை மற்றும் மூன்றாவது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' வளைகுடா நாடுகளுக்கும் தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கும் இடையேயான விமானச் சேவை. 'ஏர் இந்தியா'வில் 12,085 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் சுமார் 4,000 பேர் ஒப்பந்தப் பணியாளர்களாகவும் 8084 பேர் நிரந்தரப் பணியாளர்களாகவும் உள்ளனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் 1434 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். எனவே, ஊழியர்களின் நிர்வாகமும் 'டாடா சன்ஸ்' முன் ஒரு பெரிய சவாலாக இருக்கும். அஷ்வினி ஃபட்னிஸ் குறிப்பிடும் மற்றொரு சவால் விமானங்களின் மேலாண்மை. இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில், 'ஏர் இந்தியா'வில் 107 விமானங்கள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார். ஏர்பஸ் மற்றும் போயிங்கின் நவீன விமானங்களான சிறிய மற்றும் பெரிய விமானங்கள் இதில் அடங்கும். நவீன 'ஜம்போ ஜெட்' 'ஏர் இந்தியா' -வில் இணைக்கப்பட்ட 1971-ல் நிர்வாகம் டாடாவின் கையில் தான் இருந்தது என்றும் ஃபட்னிஸ் கூறுகிறார். அனைத்து பெரிய 'விமான நிறுவனங்களும்' இப்போது விமானங்களை வாங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன, ஏனெனில் வாங்குவதற்கு அதிக அளவு பணம் செலுத்த வேண்டும், அதேசமயம் விமானத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்வதற்கு, கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். உள்நாட்டு விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் போயிங் -737 விமானமாக இருந்தாலும், ஏர்பஸ் அல்லது ட்ரீம்லைனராக இருந்தாலும், அவற்றின் கட்டணமும் மாதத்திற்கு 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட அனைத்து 'விமான நிறுவனங்களும்' இந்த முறையில் தான் இயங்குகின்றன என்று ஃபட்னிஸ் கூறுகிறார். அதாவது, வாடகைக்கு விமானத்தை எடுத்துக்கொண்டு அவற்றை இயக்குகிறார்கள். இந்தக் கையகப்படுத்தல் மூலம் டாடா குழுமத்திற்கு 1500 பயிற்சி பெற்ற விமானிகளும் 2000 பொறியாளர்களும் கிடைப்பது ஒரு நல்ல விஷயம். இதை விடப் பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்களுக்கான 'ஸ்லாட்'கள் கிடைப்பதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஸ்லாட்' என்பது என்ன? விமான நிலையங்களில் விமானங்களும் அதிகரித்து வருகின்றன; பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், 'விமான நிறுவனங்கள்' ஒவ்வொரு விமான நிலையத்திலும் தங்கள் விமானங்கள் சீராக இயங்குவதற்குத் தேவையான இடங்களைப் பெற வேண்டியது அவசியம். இதுவும் ஒரு வகையில் வாடகை இடம் தான். இதற்காக நிறைய பணமும் செலுத்த வேண்டும். தற்போது ஏர் இந்தியாவிற்கு 6200 உள்நாட்டுச் சேவை இடங்களும் 900 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சேவை இடங்களும் உள்ளன. ஃபட்னிஸ் மற்றும் விமான வல்லுநர்கள் விமான நிறுவனங்களுக்கிடையில் இந்த 'ஸ்லாட்டுகளை' வாங்க ஒரு வர்த்தகப் போர்ச் சூழலே நிலவுகிறது என்று கூறுகிறார்கள். 'ஜெட் ஏர்வேஸ்' லண்டன் விமான நிலையத்தில் தனது இடங்களை 'எத்திஹாட் ஏர்வேஸ்'க்கு பல பில்லியன் டாலர்களுக்கு விற்ற உதாரணத்தை மேற்கோள் காட்டி ஃபஜ்னிஸ் இதைக் கூறினார். 'டாடா சன்ஸ்' நிறுவனம் 'ஏர் இந்தியா'வை வாங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அதற்குச் சாதகமாகவே உள்ளன. மொத்தமாக ரூ.18,000 கோடி சுமை இருந்தாலும், இதில் ரூ.15,000 கோடி கடனாகவும் மற்றும் ரூ.2,700 கோடி சொத்தின் பேரிலும் செலுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' போன்ற ஒரு நிறுவனமும் அவர்களிடம் இருப்பதுதான் 'டாடா சன்ஸ்' இன் மிகப்பெரிய பலம் என்று பட்னிஸ் கூறுகிறார். அது அவர்களிடம் இருப்பது அவர்களுக்கு லாபத்தை அளிக்கும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/india-58891677
 21. அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா? அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.