Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 08 JUL, 2025 | 01:03 PM மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா? அல்லது சேர்க்கப்படவில்லையா என்பதைச் அறிந்து கொள்ள ஒன்லைன் போர்ட்டல் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த போட்டல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் வாகனப் புகை பரிசோதனை விதிமுறைகளை அமல்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சேவையாகும். அதன்படி, வாகன உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ Vet.lk இணையத்தளம் மூலம் தங்கள் வாகன நிலை பற்றி அறிந்து கொள்ள கொள்ளலாம். இந்த போட்டலில் வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து தங்கள் வாகனங்களின் கருப்புப் பட்டியலில் உள்ளதா என அறிய முடியும். வாகன உரிமையை மாற்றும் போது ஏற்படும் சிக்கல்களைத் தடுத்தல், தீர்க்கப்படாத போக்குவரத்து விதி மீறல்களைத் தீர்த்தல மற்றும் வாகனங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள விசாரணைகளை நிர்வகித்த்ல ஆகியவை இதன் நோக்கமாகும். அதிகளவான புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் காண, புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறியும் திட்டம் மற்றும் வீதியோர வாகன சோதனைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் தீவிரமாக நடத்துகிறது. அத்தகைய வாகனங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதங்கள் மூலம், வேராஹெரா மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்காக தங்கள் வாகனங்களை கொண்டுவருமாறு அறிவிக்கப்படும். இந்த அறிவிப்புக்களை செவிமெடுக்க தவறினால், வாகனம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன், வாகனம் ஒன்றின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் சான்றிதழ் மற்றும் வருமான உரிமம் சோதனை மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்கு உட்படும் வரை புதுப்பிக்கப்படாது. மேலும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாகனம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, வாகனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ சேவைகள் அல்லது பரிவர்த்தனைகளையும் நிறுத்துகிறது. அனைத்து வாகன உரிமையாளர்களும், குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குபவர்கள், சட்ட அல்லது நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்க இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாகனத்தின் நிலையை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் www.vet.lk என்ற உத்தியோகபூர்வ இணைய சேவையை அணுகி சரிபார்க்கலாம்: உங்கள் வாகனம் கருப்புப் பட்டியலில் உள்ளதா? https://www.virakesari.lk/article/219467
  2. அண்ணை, அந்த சிங்கங்கள் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதும் பூனைகளாக மாறிவிடுகிறார்களே?!
  3. மெய்ப்புப் பார்த்தல் சரிபார்ப்பு மெய்ப்பு நோக்குதல் https://ta.wiktionary.org/wiki/proofreading
  4. Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 11:11 AM guardian காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் ரஃபாவின் இடிபாடுகளில் உள்ள ஒரு முகாமில் தள்ளுவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வகுத்துள்ளார். இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதற்கான திட்டம் என சட்டநிபுணர்களும் கல்விமான்களும் வர்ணித்துள்ளனர். ரஃபா நகரின் இடிபாடுகளில் ஒரு முகாமை நிறுவுவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் "மனிதாபிமான நகரம்" என்று வர்ணித்துள்ளார் பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு "பாதுகாப்பு சோதனை"க்கு உட்படுத்தப்படுவார்கள் உள்ளே நுழைந்தவுடன் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேலிய பத்திரிகையாளர்களுக்கான ஒரு மாநாட்டில்இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறினார். இஸ்ரேலிய படைகள் தளத்தின் சுற்றளவைக் கட்டுப்படுத்தி ஆரம்பத்தில் 600000 பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதிக்குள் "நகர்த்தும்" - பெரும்பாலும் அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள். இறுதியில் காசாவின் முழு மக்களும் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் மேலும் இஸ்ரேல் "குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அது நடக்கும்" என்று என ஹரெட்ஸ் செய்தித்தாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறி அந்தப் பகுதியை "சுத்தப்படுத்த" வேண்டும் என்று பரிந்துரைத்ததிலிருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கட்டாய நாடுகடத்தலை உற்சாகமாக ஊக்குவித்து வருகின்றனர் பெரும்பாலும் இது ஒரு அமெரிக்க திட்டமாக முன்வைக்கின்றனர். காட்ஸின் திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான மைக்கேல் ஸ்ஃபார்ட்தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கான ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்தார்." என்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார்.. "இது காசா பகுதிக்கு வெளியே நாடுகடத்தப்படுவதற்கான தயாரிப்பில் தெற்கு முனைக்கு மக்கள்தொகை பரிமாற்றத்தைப் பற்றியதுஎன்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார் ஒருவரை அவர்களின் தாயகத்திலிருந்து விரட்டுவது ஒரு போர்க்குற்றமாகும் ஒரு போரின் பின்னணியில். அவர் திட்டமிட்டது போல அது மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டால் அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக மாறும்" என்று ஸ்ஃபார்ட் மேலும் தெரிவித்துள்ளார்." https://www.virakesari.lk/article/219461
  5. இலங்கை தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள்: தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் 08 JUL, 2025 | 10:19 AM சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமானஇமேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாகஇ 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகஇ பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு திருப்பூர் - திருமூர்த்தி நகர் சேலம் தம்மம்பட்டி தருமபுரி - நாகாவதி அணை கேசர்குளி அணை விருதுநகர் - கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். https://www.virakesari.lk/article/219454
  6. Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 07:54 AM இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219444
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி செய்திகள் 7 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், ஒரு சிங்கம் கான்கிரீட் சுவரைத் தாண்டி ஒரு பெண்ணைத் துரத்தியதையும், அங்கிருந்தவர்கள் பயந்து, பாதுகாப்புக்காக ஓடியதையும் சிசிடிவி காட்சிகள் காட்டின. அந்த சிங்கம் தாக்கியதில், அந்தப் பெண்ணுக்கும், ஐந்து மற்றும் ஏழு வயதுடைய அவரது குழந்தைகளுக்கும், கைகளிலும் முகங்களிலும் காயம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, உரிமம் இல்லாமல் ஒரு காட்டு விலங்கை வைத்திருந்ததாகவும், அது தப்பிச் செல்ல வழிவகுத்ததாகவும், சிங்கத்தின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது அந்த சிங்கம் பிடிக்கப்பட்டு ஒரு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் காட்டு விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், பூமாக்கள் மற்றும் ஜாகுவார்களை பதிவு செய்து, ஒரு விலங்குக்கு 50,000 ரூபாய் (176டாலர்; 129யூரோ) என்ற கட்டணத்தை செலுத்திய பிறகு, அவற்றை வைத்திருப்பது சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது. ஆனால், அத்தகைய விலங்குகளை நகரத்தின் எல்லைக்கு வெளியே தான் வைத்திருக்க வேண்டும். பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள லாகூர், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம். புதன்கிழமையன்று தனது குடும்பத்தின் மீது சிங்கம் நகத்தால் தாக்கியபோது, அதன் உரிமையாளர்கள் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதைக் கட்டுப்படுத்த அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் சிங்கத்தால் தாக்கப்பட்ட குழந்தைகளின் தந்தை கூறினார். பிறகு அந்தப் பெண் எழுந்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி கேட்க ஓடுவதை வீடியோ காட்டுகிறது. அவர்களில் சிலர் பீதியில் ஓடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பஞ்சாபில் அதிகாரிகள் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வைத்திருப்பதைத் தடுக்க, கடுமையான நடவடிக்கையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஐந்து பேரைக் கைது செய்து, 13 சிங்கங்களை மீட்டுள்ளனர். முன்னதாக, ஜனவரி மாதம், பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் ஒருவர், சட்டவிரோதமாக சிங்கக் குட்டியை வைத்திருந்ததற்கான தண்டனையாக, விலங்குகளின் நலனைக் குறிக்கும் வீடியோக்களை உருவாக்க அவருக்கு உத்தரவிடப்பட்டது. யூடியூபில் 5.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட ரஜப் பட்டுக்கு, திருமணப் பரிசாக அந்தக் குட்டி வழங்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g267p2n8xo
  8. Published By: VISHNU 08 JUL, 2025 | 01:41 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்தை உண்மையாக்கும் வகையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செயற்படுவாராயின், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றுமுழுதாக சீர்குலைக்கும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை விஜயம் அரசாங்கத்துக்கு சாதகமாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் என்ற பதவியையும், அக்கட்டமைப்பையும் கேள்விக்குரியதாக மாற்றியிருப்பதாக சுட்டிக்காட்டினார். 'எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 60 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பதாக நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாரகள் இணைந்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பிவைத்திருந்தனர். அதற்கு முன்பதாக வருகைதரும் பட்சத்தில் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையின் காத்திரத்ன்மையை வலுவிழக்கச்செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 'இருப்பினும் அக்கரிசனைகளுக்கு மத்தியில், அவற்றை மீறியே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உயர்ஸ்தானிகர் செயற்படாவிடின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீதான நம்பகத்தன்மை முற்றுமுழுதாக இழக்கப்படும்' எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219438
  9. Published By: VISHNU 07 JUL, 2025 | 09:42 PM (நா.தனுஜா) உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்வதாகச் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த வாரம் சிங்கள செய்திச்சேவை ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து கருத்துரைத்த சிறிதரன், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச அரங்கில் நிறுத்தமாட்டோம் எனவும், உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீளவலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்கிறார் என விசனம் வெளியிட்டார். அதேவேளை நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் விஜித்த ஹேரத் அவ்வாறு பேசுவதாகக் குறிப்பிட்ட சிறிதரன், இருப்பினும் மீறல்களாலும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டினார். அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் உள்ளகப்பொறிமுறை ஊடாக எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான் தமது தேவை என்னவென்பதைக் கூறவேண்டும் எனக் குறிப்பிட்ட சிறிதரன், இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே விசாரணைகளை முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219435
  10. 08 JUL, 2025 | 08:54 AM யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் காரைநகர் பிரதேச சபையினருக்குமிடையே நேற்று திங்கட்கிழமை (07) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கி காரைநகருக்கு வழங்குதல், பொன்னாலை பாலத்திற்கு 3மைல் நீளத்திற்கு 80 லட்ச ரூபா செலவில் சோலர் லைட் பொருத்துதல், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 175 மில்லியன் செலவில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கல் போன்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/219447
  11. Published By: VISHNU 07 JUL, 2025 | 07:46 PM (நா.தனுஜா) பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரை காத்திரமான முறையில் கையாளவேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்தகட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியம் எனவும், அதனை முன்னிறுத்தி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பேச்சுவார்த்தைகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால், தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக்கட்சியும் இதில் பங்கேற்கவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும், அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219432
  12. "தொடங்கியது தேர்தல் பிரசாரம்" - திமுக, அதிமுக, தவெக கட்சிகளின் திட்டம் என்ன? படக்குறிப்பு, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இன்று (ஜூலை 7) முதல் அ.தி.மு.க பிரசாரம் தொடங்கியுள்ளது. செப்டம்பர் முதல் தமிழ்நாடு முழுவதும் த.வெ.க தலைவர் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்தப் பயணங்கள் கைகொடுக்குமா? கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்கள் உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் பலவும் இப்போதிலிருந்தே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதி 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கவும் தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக கூறுகிறது. தி.மு.க பிரசாரத்தில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, சுமார் 45 நாட்களுக்கு தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். ஜூலை 3 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்தப் பணியில் சுமார் 45 நாட்களுக்கு தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். பிரசாரத்தில் வீடு, வீடாகச் செல்லும் தி.மு.க-வினர், 'மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றால் அவர்களுக்குப் பலன் கிடைத்துள்ளதா?' எனக் கேட்கின்றனர். அவர்கள் தெரிவிக்கும் பதிலை விண்ணப்ப படிவம் ஒன்றில் பூர்த்தி செய்கின்றனர். அடுத்து, 'தி.மு.க ஆட்சியைப் பிடித்துள்ளதா? கட்சியில் உறுப்பினராக சேர விருப்பம் உள்ளதா?' எனக் கேட்கின்றனர். 'ஆம்' எனப் பதில் அளித்தால் அதற்கான காரணம் குறித்து ஆறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. "உறுப்பினராக சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன" எனக் கூறுகிறார், விருகம்பாக்கம் தெற்குப் பகுதி தி.மு.க செயலாளர் கண்ணன். 'ஓடிபி வந்தால் தான் உறுப்பினர்' படக்குறிப்பு, பிரசாரத்தில் விருகம்பாக்கம் தெற்குப் பகுதி தி.மு.க செயலாளர் கண்ணன் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் இதன்பிறகு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயலியில் (App) உறுப்பினராக சேர விரும்பும் நபரின் வட்டம், பாகம் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது, வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது பெயரை செயலியில் காட்டுகிறது. "வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேர்வு செய்யும்போது தொடர்புடைய நபரின் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைக் குறிப்பிட்டால் மட்டுமே அவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார். இதனால் போலி உறுப்பினரைச் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார் கண்ணன். இதுதவிர, 'நீட் தேர்வு ரத்து, மாநிலத்துக்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் போராடுவதை ஏற்கிறீர்களா?' என்ற தொனியிலும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுவதால் கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் வேலை பார்ப்பதாகவும் கூறுகிறார் கண்ணன். தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளாக அமையாத கூட்டணி ஆட்சி 2026இல் அமைய வாய்ப்புள்ளதா? விஜயின் 2026 தேர்தல் திட்டம் என்ன? – திமுக கூட்டணியை குழப்பும் நோக்கமா? 'கூட்டணி யாருக்கு அவசியம்': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் vs திமுக எதிர்க்கருத்தால் கூட்டணியில் பிளவா? 'அதிருப்தியை சரிசெய்யவே பிரசாரம்' பட மூலாதாரம்,SHYAM படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "பல மாவட்டங்களில் அமைச்சர்களைச் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதை சரிசெய்வதற்கும் தொண்டர்களின் தேவையை சரிசெய்வதற்கும் தி.மு.கவுக்கு இந்தப் பிரசாரப் பயணம் உதவி செய்யலாம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எந்தக் காலத்திலும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை ஒரு கட்சியால் சரிசெய்ய முடியாது. ஆனால், அந்த அதிருப்தியை மென்மைப்படுத்த முடியும்" எனவும் குறிப்பிட்டார். "மக்களிடம் சில வருத்தங்கள் இருந்தால் அதைக் குறுகிய காலத்தில் சரிசெய்வதும் பிரசாரப் பயணத்தின் நோக்கமாக உள்ளது" எனக் கூறுகிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "பெரும்பான்மையான மக்களிடம் இந்த அரசுக்கு ஆதரவான மனநிலை தான் உள்ளது" என பிபிசி தமிழிடம் கூறிய கான்ஸ்டன்டைன், "தேர்தலுக்கு முன்பு எந்தவொரு ஆளும்கட்சியும் மக்களைச் சந்தித்ததாக வரலாறு இல்லை. அது தி.மு.கவுக்கும் பொருந்தும். தற்போது சந்திப்பதன் மூலம் ஆட்சியின் திறத்தை அளவிடலாம்" என்கிறார். "தவிர, எந்தவோர் அரசிலும் 100 சதவீத அளவு மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. அப்படி இருந்தால் ஒரே அரசு தான் தொடர முடியும். மக்கள் அதிகமாக எதிர்பார்ப்பதால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது" எனவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் பட மூலாதாரம்,AIADMKOFFICIAL/X PAGE படக்குறிப்பு, பிரசாரத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க-வைத் தொடர்ந்து, 'மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 7) தொடங்கும் தனது சுற்றுப்பயணத்தை வரும் 23 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அவர் நிறைவு செய்ய உள்ளார். இதற்காக பிரத்யேக பேருந்து ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ரோடு ஷோ ஒன்றை நடத்தி மக்களின் குறைகளைக் கேட்கவும் இந்தப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்டு வந்த 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு, தற்போது 'இசட் பிளஸ்' என மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்ரக பாதுகாப்பில் 12 கமாண்டோ வீரர்களும் 52 காவலர்களும் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். "தி.மு.க ஆட்சியை அகற்றுவதற்காக இந்த சுற்றுப்பயணம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய எடப்பாடி பழனிசாமி, "எனது பயணம் மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்று அ.தி.மு.க ஆட்சியமைக்கும்" எனக் கூறினார். "பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு?" மேட்டுப்பாளையம் பிரசார பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சி கொண்டுவந்தது. மிசா சட்டத்தில் தன்னை சிறையில் அடைத்ததாக ஸ்டாலின் சொல்கிறார். நீங்கள் மிசாவில் கைதுசெய்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்கள். நாங்கள் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு." என கேள்வி எழுப்பினார். அதிமுக எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்ன? படக்குறிப்பு, அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தமிழ்நாட்டில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது" எனக் கூறியுள்ளார். கூட்டணி என்பது தற்காலிக ஏற்பாடு எனவும் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை எனவும் அன்வர்ராஜா பேசியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "கூட்டணி தொடர்பான பல்வேறு கேள்விகளை இந்தப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டியது வரும்" எனக் கூறுகிறார். "ஒவ்வொரு கூட்டத்திலும் பா.ஜ.க தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்" எனக் கூறும் ஷ்யாம், "முதலமைச்சரிடம் கேள்வி கேட்பதில் சில சிரமங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்பதில் பிரச்னை இருக்காது" என்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. "தற்போதும் அ.தி.மு.க அணியில் பா.ஜ.க உள்ளதால் கூட்டணியில் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அப்போது எடப்பாடியுடன் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க-வில் இல்லாமல் இருப்பதை மைனஸாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம். தொடர்ந்து பேசிய அவர், "சிறையில் இருந்து வந்த பிறகு அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியிருந்தார். ஆனால், இந்த தேர்தலில் அவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் எனத் தெரியவில்லை" என்கிறார். ஆட்சி மீதான அதிருப்தி ஓட்டாக மாறுமா? படக்குறிப்பு, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி "தி.மு.க ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி தனக்கு ஓட்டாக மாறும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். ஆனால், அது முழுமையாக கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். இதனை மறுத்துப் பேசும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி, "சட்டம் ஒழுங்கை சரிவர இந்த ஆட்சியால் கையாள முடியவில்லை. அதற்கு ஆம்ஸ்ட்ராங் படுகொலை, திருப்புவனம் காவல் மரணம் என அன்றாட நிகழ்வுகளே சாட்சியாக உள்ளன. அ.தி.மு.கவின் வெற்றிக்கு இது போதுமானதாக இருக்கும்" எனக் கூறுகிறார். அதையொட்டியே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும் பிரதானமாகப் பேசப்படுகிறது. "தி.மு.க மற்றும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை" என, அக்கட்சியின் செயற்குழுவில் நடிகர் விஜய் அறிவித்தது பேசுபொருளாக மாறியது. "தங்கள் கூட்டணிக்கு த.வெ.க வருவதற்கான வாய்ப்புள்ளதாக அ.தி.மு.கவில் உள்ள ஒரு சாரார் எதிர்பார்த்தனர். செலவு செய்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் இருந்தனர். கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டதால், அவர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "விஜய்க்கு வரவேற்பு இருக்கும்" பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க தலைவர் விஜய், சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க தலைவர் விஜய், சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்தார். சென்னை பனையூரில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய எஸ்.ஆனந்த், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தப் பயணம் நடைபெற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார். "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 12,500 கிராமங்களில் கட்சியின் கொள்கைக் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன" எனவும் எஸ்.ஆனந்த் தெரிவித்தார். த.வெ.க-வுக்கு இந்தப் பயணம் பலன் கொடுக்கும் எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "திரை நட்சத்திரமாக இருப்பதால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும். தி.மு.க-வை பொறுத்தவரை எந்தக் கூட்டமாக இருந்தாலும் அது ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும்" என்கிறார். தமிழ்நாடு அரசியல் களத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்கள் முக்கியமாக உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அதன்பிறகு மழைக்காலம் தொடங்கிவிடும். ஜனவரியில் தேர்தல் பேச்சுகள் தொடங்கிவிடும்" எனக் கூறுகிறார். தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் தாமதமாக தொடங்கினால் மழையில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிருப்தி வாக்குகள் யாருக்கு? "திரைப் பிரபலம் என்ற கவர்ச்சி உள்ளதால் த.வெ.க குறித்து அ.தி.மு.க தான் கவலைப்பட வேண்டும்" எனக் கூறும் ஷ்யாம், "தி.மு.க எதிர்ப்பு வாக்கு வங்கியை த.வெ.க பிளவுபடுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார். கடந்தகால தேர்தல்களில் தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் அ.தி.மு.க மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு மடைமாறிய நிலையில், தற்போது இந்த வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்தைச் நோக்கிச் செல்லலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதி, "புதிய வாக்காளர்களின் வாக்குகளை மட்டுமே த.வெ.க பிரிக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் அ.தி.மு.க-வுக்கும் வரப் போவதில்லை" என்கிறார். "அ.தி.மு.க-வில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் த.வெ.க பக்கம் சென்றிருந்தால் மட்டும் இதைப் பற்றிப் பேசலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m8xjkv4lyo
  13. Published By: VISHNU 07 JUL, 2025 | 08:54 PM 3 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை (07) போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கினார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இருப்பினும், புடின் எந்த காரணத்திற்காக அவரை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் என்பது இன்னும் தெரியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219434
  14. "அக்காவுக்காக அர்ப்பணித்து விளையாடினேன்" - எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்குப் பின் ஆகாஷ் தீப் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்." எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய உதவினார். இரண்டாவது டெஸ்டில் பந்து வீசும்போது, தனக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார். அது அவரது மூத்த சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. போட்டிக்குப் பிறகு, ஜியோ-ஹாட்ஸ்டாருக்காக வர்ணனை செய்து கொண்டிருந்த புஜாராவிடம் ஆகாஷ் தீப் பேசினார். "உங்கள் கையில் பந்து இருக்கிறது. உங்கள் கையில் ஸ்டம்ப் இருக்கிறது. நீங்கள் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளீர்கள். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்களா?" என்று ஆகாஷ் தீப்பிடம் புஜாரா கேட்டார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் தீப், "நான் யாரிடமும் சொல்லாத மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், என் அக்கா கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார். "அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள், ஏனென்றால் அவள் கடந்து செல்லும் மனநிலையைக் கருத்தில் கொண்டால், இந்த மகிழ்ச்சி அவளுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும்." "இந்தப் போட்டியை அவளுக்கு அர்ப்பணித்து விளையாடினேன். அவள் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். "என்னுடைய இந்த நிகழ்ச்சி உனக்காகத்தான் சகோதரி. நான் பந்தை கையில் வைத்திருக்கும் போதெல்லாம், உன் முகம் என் கண் முன்னே இருந்தது. உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்பினேன். நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்" என்று ஆகாஷ் தீப் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக அவர் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப் தனது தேர்வு சரியானது என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றையும் படைத்தார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 187 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது பிரிட்டன் மண்ணில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறப்பாக பந்துவீச்சாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, ஆகாஷ் தீப் ஒரு சிறப்பு உத்தியை வகுத்திருந்தார். "இந்தியாவில் இதுபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் நிறைய விளையாடியுள்ளோம். விக்கெட்டுக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கவில்லை என்பதை பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அது எங்கள் கையில் இல்லை. நான் சரியான பகுதிகளில் பந்து வீச வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில், இங்கிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு ஆகாஷ் தீப் பந்து வீசினார். அவருடைய ஒரு பந்து பெரிதும் பேசப்பட்டது. "ஆரம்பத்தில் நான் ஜோ ரூட்டுக்கு நேராக பந்துகளை வீசினேன். ஆனால் அந்த பந்தில், நான் கார்னரிலிருந்து கொஞ்சம் கோணமாக பந்து வீசினேன். அந்த பந்தில் நான் நினைத்தது நடந்தது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES லார்ட்ஸ் டெஸ்ட் பற்றி ஆகாஷ் தீப் என்ன சொன்னார்? இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஹாரி புரூக்கின் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார். "இரண்டாவது இன்னிங்ஸில் ஹாரி புரூக் தற்காப்புடன் விளையாடினார். அவர் விக்கெட்டை மறைத்து விளையாடினார். இரண்டு-மூன்று ஓவர்கள் எப்படி பந்து வீசுவது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. நல்ல பகுதியில் பந்தை கடுமையாக வீசுவதே எனது ஒரே இலக்கு" என்று ஆகாஷ் தீப் கூறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கிடைத்த வெற்றி, தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்று ஆகாஷ் தீப் நம்புகிறார். "இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அதை அனுபவிக்கிறோம். இந்த வெற்றியிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். எங்கள் பீல்டிங்கும் நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் தொடங்குகிறது. லார்ட்ஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், எட்ஜ்பாஸ்டனில் செய்த அதே திட்டத்துடன் பந்து வீச முயற்சிப்பேன் என்று ஆகாஷ் தீப் கூறினார். "எனது பலத்திற்கு ஏற்ப பந்து வீசுவேன். ஒரு நாள் அது பலனைத் தரும் அல்லது பலன் அளிக்காமல் போகலாம். ஆனால் நான் அதையே கடைப்பிடிப்பேன்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பிகாரை சேர்ந்தவர் ஆகாஷ் தீப் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் பிகார் தலைநகர் பாட்னாவிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தில் வசிப்பவர். இருப்பினும், ஆகாஷ் தீப் ரஞ்சி டிராபியில் பிகாருக்குப் பதிலாக மேற்கு வங்கத்திற்காக விளையாடியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்திய அணிக்காக அறிமுகமான பிறகு, ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது. இதுவரை, ஆகாஷ் தீப் இந்தியாவுக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9k4g99j73o
  15. Published By: VISHNU 07 JUL, 2025 | 06:35 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் உள்ள விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்து எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (7) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் சிகிச்சையளிக்க வேண்டிய விபத்துகளில் சிக்க நேரிடும். ஒவ்வொரு நிமிடமும் 6-8 பேர் வரை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வேண்டிய விபத்துகளுக்கு ஆளாகுகின்றனர். அந்தவகையில் அன்றாட வாழ்வில் நிகழும் விபத்துகளை கருத்தில் கொள்ளும் போது ஒவ்வொரு இலங்கையரும் வருடத்துக்கு ஒருமுறையேனும் விபத்துக்குள்ளாகலாம். 15 தொடக்கம் 44 வயதுக்குட்பட்டவர்களே பெருமளவில் விபத்துகளில் சிக்குவதுடன், இவ்வயதினரிடையே மரண வீதம் அதிகரிப்பதற்கு விபத்துகள் முக்கிய காரணமாக உள்ளது. வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் குறிப்பிடத்தக்க தொகை விபத்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் சிகிச்சைக்காக செலவிடப்படுகிறது. விபத்துகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகையால் தேசிய விபத்து தடுப்பு வாரத்திற்கு ஏற்ப இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூலை 7 ஆம் திகதி வீதி விபத்து தடுப்புக்கும், ஜூலை 8 ஆம் திகதி பணியிடங்களில் இடம்பெறும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 9 ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் சம்பவிக்கும் விபத்து தடுப்புக்கும், ஜூலை 10 ஆம் திகதி நீர் நிலை விபத்து தடுப்புகும், ஜூலை 11 ஆம் திகதி பாலர் பாடசாலை, பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலைய விபத்து தடுப்புப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில், சுகாதார அமைச்சு விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்யவது எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219425
  16. 07 JUL, 2025 | 06:00 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (7) மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இதன்போது நடைபெற்றது. அவ்வேளை, படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின்போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர். பின்னர், அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர் எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். கடந்த யுத்த காலத்தில் சம்பூர் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 1. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி (அதிபர்) 2. இராசேந்திரம் பத்மநாதன் (உயர்தர மாணவன்) 3. பொன்னம்பலம் சச்சிதானந்தகுரு (தரம் 7 மாணவன்) 4. மயில்வாகனம் பிரேமானந்தராஜா (உயர்தர மாணவன்) 5. கோணலிங்கம் சோமேஸ்வரன் (தரம் 7 மாணவன்) 6. மனகசிங்கம் நித்தியசீலன் (தரம் 7 மாணவன்) 7. ச.கனகசிங்கம் 8. கனகசூரியம் சண்முகராஜா (தரம் 10 மாணவன்) 9. ஒப்பிலாமணி இந்திரன் 10. முத்துக்குமார் விஜயகுமார் (தரம் 10 மாணவன்) 11. முத்துக்குமார் விஜயகாந்தன் 12. வைரமுத்து வெற்றிவேல் 13. சங்கரலிங்கம் உதயநாதன் 14. தங்கராசா தில்லைநாயகம் 15. பேச்சுமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்) 16. கணபதி கானசரஸ்வதி 17. க.பேச்சிமுத்து (பரியாரியார்) 18. இ.சொக்கன் 19. இ.ஜெகதீஸ்வரன் 20. இராசேந்திரம் (கூனித்தீவு) 21. இராசேந்திரம் வாமதேவன் (தரம் 10 மாணவன்) 22. சுப்பிரமணியம் விநாயகநேசன் 23. வைரமுத்து சுப்பிரமணியம் 24. கணபதிப்பிள்ளை செல்வராசா (பொலிஸ் உத்தியோகத்தர்) 25. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை) 26. வைரமுத்து அழகம்மா 27. பொன்னுத்துரை அரசரெத்தினம் 28. பொன்னுத்துரை கதிர்காமத்தம்பி 29. முருகேசுப்பிள்ளை கணேசலிங்கம் 30. பியதாச சோமதாஸ் 31. பியதாச கருணதாஸ் 32. வீ.அரசமணி 33. இ.ரவிநேசன் 34. இ.சிவநேசன் 35. சி.சிங்கராசா 36. சி.கோணலிங்கம் 37. சி.கவிரூபன் 38. கோ.நாகரெத்தினம் 39. ந.அருணாச்சலம் 40. க.யோகநாதன் 41. சித்திரவேல் குணராசா 42. சித்திரவேல் மாணிக்கராசா 43. தாமோதிரம்பிள்ளை சிவகுமார் 44. இ.நிர்மலநாதன் 45. வீரசிங்கம் யோகாம்பிகை 46. வீரசிங்கம் ஜீவசாந்தி 47. பரணி 48. பரமானந்தம் 49. அல்லிராசா (சூடைக்குடா) அவருடைய மகன்கள் இருவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த காளி கோவில் பூசகர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். https://www.virakesari.lk/article/219418
  17. பிறந்தநாள் வாழ்த்துகள் நில்மினி அக்கா, வளத்துடன் வாழ்க.
  18. காற்று வீசுவதால தான் உயிரோட இருக்கிறம் அண்ணை!!
  19. தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வானது இன்று(7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள் இந்த நிலையில், தமிழகத்தின் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்காக, விழிப்புரம், விருதுநகர், திருப்பூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 729 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த வீடுகள் சுமார் 38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் சிறைத்தண்டனையின் பின்னரான நாடுகடத்தலை தடுக்குமாறு இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/home-in-india-for-sri-lankan-tamils-1751881957
  20. அப்ப நம்ம ஊர்லயும் ஒரு கல்யாணத்தை நடத்தவேண்டியது தான்! (வெக்கை தாங்க முடியல) முதலைக்கு எங்க போறது?!
  21. 07 JUL, 2025 | 11:03 AM பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து மேலதிகமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 வீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உச்சிமாநாட்டிற்காகபிரிக்ஸ் கூட்டமைப்பு கூடியிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/219370
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் பிபிசி நியூஸ் முண்டோ 6 ஜூலை 2025 சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார். அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது. வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார். திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக, 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார். 'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்: குழந்தைகள் (இறைவன் நாடினால்). உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்). விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது). வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும். இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும். "இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார். "அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: "லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்." பின்னர் அவர் 'திருமணம் செய்யாதீர்கள்' என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்: எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம். மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது. கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல். உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்). நேர விரயம். மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது. உடல் பருமன் மற்றும் சோம்பல். பதற்றம் மற்றும் பொறுப்பு. புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம். உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது). ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில் சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம். தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: "எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு." திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்? ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: "திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னரா?" "நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு" சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது. "முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது" ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார். நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார். "என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை" என்று அவர் எழுதினார். ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: "உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது." மேலும், "கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்." என்றும் குறிப்பிட்டார். நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், "மிகவும் சிறந்த நாள்!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். எம்மாவின் "சம்மதம்" மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல. டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், டார்வினின் 'திருமண ஆசை மற்றும் முன்மொழிவு' எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார். ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான "கிரேட் வைவ்ஸ்"-இல் சுட்டிக்காட்டுகிறார். தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது. பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது. அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது. 'எம்மா- ஒரு அற்புதமான துணைவி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டவுன் ஹவுஸ் தோட்டத்தில் சார்லஸ் டார்வின் (1870). இங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை நடைபயிற்சி மற்றும் சிந்திப்பதில் செலவிட்டார். இந்த வீட்டில்தான் அவர் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர். அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார். மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றியது. டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார். அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார், பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது. ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது. 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும். ஒரு காதல் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேரா (1902-1991) விளாடிமிர் நபோகோவ் (1899-1977) உடன், 1923இல் பெர்லினில். ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது. வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார். வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளைச் சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார். கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார். ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு 'மோசமான இல்லத்தரசி' என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார். மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார். 12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான "லோலிடா" வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார். பின்னர் அவர் எழுதினார்: "என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது." வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார். அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை 'லெட்டர்ஸ் டு வேரா' என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட "தி க்ரூட்ஸர் சொனாட்டா" என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது. அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார். அவர் "அன்னா கரேனினா"-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார். "தி க்ரூட்ஸர் சொனாட்டா"வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார், வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார். "பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மைச் சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்," என்று அந்தக் கதாபாத்திரம் கூறும். டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரைக் காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார். டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாகப் பார்க்கலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டால்ஸ்டாயின் சீடர்கள் சோபியாவை ஒரு மந்தமான, அறிவற்ற பெண்ணாக, பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டவராக சித்தரித்தனர். டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது. சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார். டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாண்டார். மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார். இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட "போர் மற்றும் அமைதி" (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார். 'தி க்ரூட்ஸர் சொனாட்டா' வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார். அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார். எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது. எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார். 'சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக' செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார். அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார். டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது. ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார். "நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்." என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார். "எல்லோரும் கேட்கிறார்கள், 'ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று" எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, "அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், 'எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20w9wqqexgo
  23. Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 03:21 PM சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219380
  24. செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்! யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது. மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல. செம்மணியில் நடப்பவை என்ன? அவர்கள்தான் இவர்கள்!! நேரடி சாட்சியம்!!! பூநகரியிலிருந்து கொழும்புதுறைக்கு படகில் வந்தவர்களே எலும்புகூடுகளாக மீட்பு | Chemmani Mass Graves https://tamilwin.com/article/chemmani-mass-graves-jaffna-1751829524
  25. Published By: DIGITAL DESK 3 07 JUL, 2025 | 04:00 PM ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பள விபரத்தை இவ்வாறு பகிரங்கப்படுத்தியமை இதுவே முதல் தடவையாகும். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆரம்பத்தில் எனது சம்பளத்தை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. பின்பு அதை சமூக சேவைகளுக்கு செலவிட நான் முடிவு செய்தேன். எனக்கு சம்பளம் அவசியமில்லை நான் ஒரு வர்த்தகர் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219393

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.