Everything posted by ஏராளன்
-
எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர் முதல் தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார்
Published By: DIGITAL DESK 2 14 JUL, 2025 | 12:46 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார். இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும். சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார். சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார். ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார். லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார். இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 - 4, 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். https://www.virakesari.lk/article/219949
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கேல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த கைது செய்யப்பட்டதாக தகவலில்லை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 14 JUL, 2025 | 06:31 PM (எம்.வை.எம்.சியாம்) பல்வேறு திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இதுவரை இராஜதந்திர ரீதியிலான எந்தவித தகவல்களும் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெறவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார். ஏற்கனவே மலோசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 26 சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய பொலிஸ் குழுக்கள் மலோசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவித்த அவர் குறித்த பெயர் பட்டியலில் கேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்டார். சஞ்சீவ குமார சமர ரத்ன என்னும் கனேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே கமாண்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் அண்மையில் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்த விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக்கூறப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கைச் சேர்ந்த இருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கடந்த 11 ஆம் திகதி மலேசிய பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய அவர்களில் 20 வயதுடைய ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மலோசியாவின் குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு ஏற்ப சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 29 பேருடைய பெயர் பட்டியலை மலேசியா பொலிஸார் எமக்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், அரச புலனாய்வு பிரிவு மற்றும் குற்றச் செயல்களை பதிவு செய்யும் பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இதன் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு விசாரணை குழுக்கள் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு அனுப்பட்டுள்ளன. இந்த நாட்களில் பல்வேறு திட்டமிட்டக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் சர்வதேச பொலிஸார் இவ்விடயம் தொடர்பான எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வழங்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/220003
-
ஆயுர்வேதத் துறையில் 304 வைத்தியர்களுக்கு நியமனங்கள்
ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையின் ஆய்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதனை அவர் வெளிப்படுத்தினார். ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் இணைப்பது சாத்தியமில்லை எனவும், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குப் பின்னர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும், சில வைத்தியர்களை சுற்றுலாத் துறையில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் மேற்கத்திய வைத்தியத்துடன் ஆயுர்வேதம், சித்தம், மற்றும் யுனானி வைத்திய முறைகளும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், இவ்வாண்டு பாதீட்டில் உள்ளூர் வைத்தியத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இத்துறைகள் புறக்கணிக்கப்படாமல், அனைத்து வைத்திய முறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்குவது தனது பொறுப்பு எனவும், இவை குறைவாக கவனிக்கப்படும் துறைகள் அல்ல எனவும் அவர் வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmd2z59ml015iqp4kj5eszobo
-
ஐஎன்எஸ் அர்னாலா: இந்திய கடற்படையின் புதிய போர்க் கப்பல் எதிரிகளை முறியடிக்க எவ்வாறு உதவும்?
பட மூலாதாரம்,INDIAN NAVY கட்டுரை தகவல் ஜுஹல் ப்ரோஹித் பிபிசி செய்தியாளர், விசாகப்பட்டினத்தில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அர்னாலா கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த கப்பல் நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது இக்கப்பல். இந்த கப்பல் குறித்து செய்தி சேகரிக்க பிபிசி இந்திக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலின் சில பகுதிகளுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்திய கடற்பாதுகாப்பு அமைப்பில் இந்த கப்பல் எத்தகைய பங்காற்றப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பிபிசி முயன்றது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரபிக் கடல், வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. சர்வதேச போட்டி இந்த பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் இந்த கடல் மார்க்கத்தை எவ்வளவு தூரம் நம்பியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது. பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இந்தியாவின் கடல் எல்லையானது 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 200க்கும் மேற்பட்ட துறைமுகங்களும், பல கடற்கரை நகரங்களும் இந்த எல்லைகளில் அமைந்துள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் தங்களது பலத்தை அதிகரித்து வருகின்ற சூழலில், கடற்பாதுகாப்பு உத்தியானது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்தியா தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் கடற்படையின் திறனையும் அதிகரிக்கிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இந்தியா ஐ.என்.எஸ். அர்னாலாவை அறிமுகம் செய்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன அர்னாலாவின் சிறப்பம்சங்கள் என்ன? நீர்மூழ்கிகளின் தாக்குதலை எதிர்க்கும் (anti-submarine) போர்க்கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா பல வகைகளில் மிகவும் சிறப்பான போர்க்கப்பலாகும். இதன் திறன் என்னவென்றால், குறைவான ஆழத்தில், அதாவது கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிகளைக் கூட கண்டுபிடிக்க முடியும் என்பதாகும். ஐ.என்.எஸ். அர்னாலா போன்ற கப்பல்கள் ஏன் கடற்படைக்கு தேவை என்பதை வருங்காலத்தில் நம்மால் புரிந்து கொள்ள இயலும். இது போன்று மேலும் 15 புதிய போர்க்கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. பாதுகாப்புத்துறை அளித்த தகவலின் படி, இந்த 16 போர் கப்பல்களை உருவாக்குவதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த கப்பல்கள் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினியர்ஸ் லிமிடெட் கப்பல் கட்டும் தளத்திலும், கொச்சியில் அமைந்திருக்கும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்படும். பிபிசி இந்தி குழு ஐ.என்.எஸ். அர்னாலா கப்பலுக்கு சென்ற அந்த நாள் கடற்படை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் எப்போதும் போல் ஒரு வழக்கமான நாள். கப்பலுக்கு தேவையான பல பொருட்களை அவர்கள் உள்ளே எடுத்து வந்தனர். நாங்கள் உள்ளே சென்ற போது வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எந்த ஒரு போர்க்கப்பலும் உணரிகள், ஆயுதங்கள், என்ஜின்கள் மற்றும் தொலைத்தொடர்புக்கு தேவையான உபகரணங்களை உள்ளடக்கியிருக்கும். எனவே உள்ளே நடமாடுவதற்கு போதுமான இடம் இருக்காது. ஐ.என்.எஸ். அர்னாலாவிலும் அதே நிலை இருந்தது. 6 அடுக்குகளைக் கொண்ட அர்னாலாவில் மேலும் கீழும் செல்ல அங்குள்ள பணியாளர்கள் படிகளை பயன்படுத்துகின்றனர். படக்குறிப்பு, அர்னாலாவில் செய்தி சேகரிக்க பிபிசி இந்தி ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது ஐ.என்.எஸ் அர்னாலாவின் கமாண்டிங் அலுவலர் கூறுவது என்ன? எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிக்க இந்த போர்க்கப்பலில் பல சோனார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு சிறப்பு தொழில்நுட்பம். இதனை பயன்படுத்தி ஒலி அலைகளின் உதவியோடு நீருக்குள் இருக்கும் கப்பல்களைக் கண்டறிய இயலும். எதிரிகளின் கப்பல்கள் எங்கே இருக்கிறது என்று அறிந்தால் மட்டுமே தாக்குதல் நடத்த இயலும் என்பதால் இது மிகவும் முக்கியமானது. இந்த போர்க்கப்பலின் திறன் குறித்து புரிந்து கொள்வதற்காக நாம் ஐ.என்.எஸ். அர்னாலாவின் தளபதி அங்கித் க்ரோவரிடம் பேசினோம். "நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்க தேவையான பல ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன. இது நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்க உதவும்," என்று கூறினார். "இந்த கப்பலில் டர்பிடோ ட்யூப்கள் உள்ளன. டர்பிடோ என்பது நீருக்குள்ளே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க இந்த ட்யூப்கள் வழியாக டர்பிடோக்களை ஏவ இயலும். அதேநேரத்தில் டர்பிடோக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான 'ஆன்டி-டர்பிடோ டெகாய் சிஸ்டமும்' இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஐ.என்.எஸ். அர்னாலாவின் தளபதி அங்கித் க்ரோவர் அர்னாலாவில் வேறென்ன உள்ளது? இந்த போர்க்கப்பல் 77 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 26 அடுக்கு மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இணையானது. கடற்படை அளித்த தகவலின் படி, இதில் 30 எம்.எம். சர்ஃபேஸ் துப்பாக்கி உள்ளது. இது தரை மற்றும் வான்வழி தாக்குதல்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது. கண்ணி வெடிகளை புதைக்கும் திறன் கொண்டது இந்த கப்பல். இது எதிரிகளின் போர்கப்பல்களை அழிக்க உதவும். ஐ.என்.எஸ். அர்னாலாவின் மற்றொரு சிறப்பம்சம் இதன் என்ஜினாகும். கடற்படை அளித்த தகவலின் படி, டீசல் இயந்திரம் மற்றும் வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தில் இயங்கும் மிகப்பெரிய போர்க்கப்பல் இதுவாகும். என்ஜின் அறையை பார்வையிட்ட நாங்கள் அங்கே முலாயம் சிங்கை பார்த்தோம். அவர் ஐ.என்.எஸ். அர்னாலாவின் என்ஜின் அறையில் பணியாற்றும் அதிகாரி. "இந்த என்ஜின் மூன்று 'அட்வான்டேஜ்களைக்' கொண்டுள்ளது. ஒன்று, இதுபோன்ற என்ஜின் போர்க்கப்பலுக்கு அதிக வேகத்தைத் தரும். இரண்டாவதாக என்ஜின் கப்பலின் திசையை வேகமாக மாற்றும் திறன் கொண்டது. மூன்றாவது, இது மிகவும் குறைவாகவே இரைச்சலை ஏற்படுத்தும்," என்று முலாயம் சிங் கூறுகிறார். படக்குறிப்பு, ஐ.என்.எஸ். அர்னாலாவின் என்ஜின் அறையில் பணியாற்றும் முலாயம் சிங் "மிகவும் அமைதியாக இயங்கும் என்ஜினைக் கொண்டிருப்பதால், நம்முடைய கப்பலுக்கு அருகிலேயே எதிரிகளின் போர்க்கப்பல் இருந்தாலும் அதனால் அர்னாலாவை கண்டுபிடிக்க இயலாது," என்றும் அவர் கூறுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்டுள்ளது அர்னாலா.இங்கே பணியாற்றும் நபர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடம், உணவு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்து பிபிசி கேட்டறிந்தது. மூத்த கடற்படை அதிகாரியான கமோடோர் ரஜ்னீஷ் ஷர்மா ஆந்திர பிரதேசத்தின் கடற்படை பகுதி பொறுப்பாளராக உள்ளார். விசாகப்பட்டினத்தில் பிபிசி குழுவிடம் பேசிய அவர், "வருங்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் 15 போர்க்கப்பல்களையும் கணக்கில் கொண்டால், 16 கப்பல்களில் 8 மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், 8 கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் பணியமர்த்தப்படும்," என்று தெரிவித்தார். "கடலுக்கடியில் கண்காணிப்பு மற்றும் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த கப்பல் கொண்டுள்ளது." என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, அர்னாலா கப்பலின் தோற்றம் பெயர்க் காரணம் என்ன? இந்த போர்க்கப்பல் விசாகப்பட்டினத்தில் துவங்கி வைக்கப்பட்டாலும் மும்பையின் வசாய் பகுதியோடு தொடர்பு கொண்டுள்ளது இதன் பெயர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் கடற்கரை பகுதியான வசாய்க்கு அருகே கோட்டை ஒன்று உள்ளது. அதன் பெயர் அர்னாலா. கடற்படையினர் அளித்த தகவலின் படி, இந்த கோட்டை மராத்தா சாம்ராஜ்ஜியத்தால் எதிரிகளின் தாக்குதல்களை தடுக்க 1737-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உண்மையில் அர்னாலா என்ற பெயரில் இந்திய கடற்படை ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை வைத்திருந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அது சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, உண்மையில் அர்னாலா என்ற பெயரில் இந்திய கடற்படை ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை வைத்திருந்தது சீனா, பாகிஸ்தான் கடற்படை எத்தகைய வலிமை கொண்டது? கடந்த ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அளவைப் பொருத்தவரை சீன கடற்படை தான் உலகிலேயே மிகப்பெரிய கடற்படை என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, சீனா 370-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. அதே அறிக்கையில் பாகிஸ்தானின் கடற்படை வலுப்பெற சீனாவின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க 2015-ஆம் ஆண்டு சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானது என்று கூறப்பட்டது. 2024-ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் திரிபாதி பாகிஸ்தான் கடற்படையின் திறன்களை பார்த்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற சூழலில் ஐ.என்.எஸ். அர்னாலா போன்ற போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிக்கையின் படி சீனா 370-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது நிபுணர்கள் கூறுவது என்ன? ஓய்வு பெற்ற கேப்டன் சரப்ஜீத் எஸ். பார்மரிடம் பேசியது பிபிசி இந்தி. இந்திய கடற்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றிய அவர் நீர்மூழ்கிக் கப்பல்கள் (தாக்குதல்) எதிர்ப்பு உத்திகளில் நிபுணராவார். "1971-ஆம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வெளியே நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த கால மற்றும் வருங்கால மோதல்களின் போது இந்திய துறைமுகங்களும், கப்பல்களும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல் இலக்குகளாக இருக்கக் கூடும் என்பதை இது காட்டுகிறது,"என்று கூறினார் அவர். நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் என்பது மிகவும் சிக்கலான போர்களில் ஒன்று என்று அவர் கருதுகிறார். "எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் உங்களின் கடற்கரைக்கு அருகே இருக்கிறது என்றால், கடற்படை முன்னேறுவதற்கு முன்பு அந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இது கடற்படையின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இதுபோன்ற சூழலில் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்குவது கடினமானதாகும். துறைமுகங்களின் இயல்பான செயல்பாடுகளும், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கூட இதனால் பாதிக்கப்படக் கூடும்," என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் என்பது மிகவும் சிக்கலான போர்களில் ஒன்று "ஆனால் அர்னாலா போன்ற நீர்மூழ்கி தாக்குதலை தடுக்கும் பிரத்யேகமான போர்க்கப்பல் இருந்தால், எதிரிகளின் கப்பல்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க இயலும்," என்று சரப்ஜீத் கூறுகிறார். "இதன் மூலமாக, கடற்படை, குறிப்பாக பெரிய கப்பல்கள், அதன் இலக்கை நோக்கி நகர இயலும். இத்தகைய போர்க்கப்பல்களின் இருப்பானது துறைமுகங்கள் வழக்கமாக இயங்குவதை உறுதி செய்யும். இந்திய கடற்படை இந்த வகையில் 16 கப்பல்களை உருவாக்க (அர்னாலாவையும் சேர்த்து) உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உருவாக்க உத்தரவிட்டிருப்பது இதுவே முதல்முறை. கடற்படை தொடர்ச்சியாக இத்தகைய கப்பல்களை உருவாக்க வேண்டும். இந்த கப்பல்களின் இருப்பு அனைத்து நேரத்திலும் இருப்பதையும் கடற்படை உறுதி செய்ய வேண்டும்." என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gpq29d4zo
-
நேற்று இல்லாத மாற்றம்!
கதையாசிரியர்: பாரதிமணியன் ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான். சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வாசலில் இருந்த காரைப் பார்த்து நடந்தான். சங்கீதா அவன் கூடவே வாசல் வரை போய், அமுதன் காரில் ஏறி கிளம்பும் வரை பார்த்துவிட்டு, திரும்பி வீட்டுக்குள் வந்ததும்… கோபமாக ஹாலில் இருந்த சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள். அவளுக்கு கணவன் அமுதன் மீது கோபம் கோபமாக வந்தது. சமீபகாலமாக அவன் முன்பு போல அவளை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் அவளுடைய கோபத்திற்குக் காரணம். அவளுக்குத் திருமணம் ஆன புதிதில், புளித்துப் போன மாவில் தோசை ஊற்றிக் கொடுத்தால் கூட.. ‘அடடா என்ன சுவை!’ன்னு பாராட்டியவன், இப்போதெல்லாம்… அவள் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து, விதவிதமான டிஷ்சை செய்து கொடுத்தாலும் … ‘இது இன்னும் கொஞ்சம் வெந்து இருக்கலாம்!’ ‘உப்பு கொஞ்சம் குறைவா இருக்கிற மாதிரி இருக்கே!’ ‘காரமே இல்லை!’ என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லுகிறான் அல்லது எதுவுமே பேசாமல், மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறான். ஒருவேளை அமுதனுக்கு அவள் சமையல் பிடிக்கவில்லையா? அல்லது அவளையே பிடிக்கவில்லையா?!.. இல்லை முன்பு போல அவனுக்குப் பிடித்த மாதிரி தனக்குச் சமைக்கத் தெரியவில்லையோ?! என்று யோசித்தாள். ‘ஆனால் அவளுடைய குழந்தைகள் எப்போதும் போல அவளுடைய சமையலை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்களே’!’ என்றும் நினைத்தாள். அவள் கணவனைப் பற்றிய தீவிர யோசனையோடு… சோபாவுக்கு முன்பு இருந்த டீப்பாயைப் பார்த்தபோது, அங்கே ஒரு ஃபைல் இருப்பதைக் கவனித்தாள். அது ஒரு பட்டன் டைப் பிளாஸ்டிக் ஃபைல், அது சரியாக மூடாததால், அதில் இருந்த பேப்பர்கள் ஃபேன் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. ‘ம்ம்..இது அமுதனுடைய ஆபீஸ் ஃபைல் தானே! அடடா… காலையில் ஆபீசுக்குக் கிளம்ப ரெடியானவன், ஆபீஸ் பேக்கில் இருந்து இந்த ஃபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சாப்பிட போகும்போது இதை அப்படியே வைத்துவிட்டுப் போனான். பிறகு ஆபீசுக்குப் புறப்படும்போது, போன் பேசிக்கொண்டே… ஃபைலை மறந்துவிட்டு, ஆபீஸ் பேக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் போல!’ என்று நினைத்தபடி, அவள் அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அப்போது அந்த ஃபைல் அவளுடைய கையில் இருந்து நழுவி, கீழே தரையில் விழவே… அதற்குள் இருந்த பேப்பர்கள் சில ஃபைலை விட்டு வெளியில் வந்து விழுந்தன. அவள் உடனே சட்டென்று எழுந்து… அந்த பேப்பர்களை எடுத்து மீண்டும் அந்த ஃபைலில் வைத்தாள். அதில், அமுதனுடைய முத்து முத்தான கையெழுத்தில் தமிழில் எழுதியிருந்த பேப்பர் ஒன்று அவள் கண்ணில் பட்டது. மற்ற பேப்பர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்க, இந்த பேப்பர் மட்டும் தமிழில் இருந்ததால், அந்த பேப்பரில் எழுதியிருந்ததைப் படித்தாள். ‘நீ என் மனைவியாக வந்தது…’ என்று ஆரம்பித்த வரியைப் பார்த்தவுடன், அது அவளுடைய ஆவலைத் தூண்ட, அதை முழுவதுமாகப் படிக்க விரும்பினாள். “நீ என் மனைவியாக வந்தது…நான் செய்த புண்ணியம்!. நீ என்னை அக்கறையோடு கவனித்துப்பார்த்துக்கொள்வதால்தான், நான் வீட்டில் கவலை இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆபீஸ் வேலை, டென்ஷனில் உன்னிடம் இதுவரை மனம் விட்டு பேச முடிந்ததில்லை. என் மனதில் உள்ளதை நேரடியாக சொல்வதை விட, இந்தக் கடிதம் மூலமாக என் உள்ளம் திறந்து சொல்கிறேன்! ‘நீயில்லாமல் என் வாழ்க்கையே இல்லை! உன்னை எனக்கு மனைவியாகக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அதைப்போலவே உன்மீதும் நான் அன்பைப் பொழியவே விரும்புகிறேன்.’ அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கையெழுத்து அமுதனுடையது என்பது தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. ‘ஏன் அமுதன் இதை, ஆபீஸ் ஃபைலில் வைத்திருக்கிறான்?! அவள் அவனிடம் கோபமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவளைச் சமாதானப்படுத்த, இப்படி எழுதி வைத்திருக்கானோ?! அவள் பார்க்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்தப் ஃபைலை வைத்துவிட்டுப் போய்விட்டானோ!’… இப்படி பல விதமாக அவள் யோசித்தாள். அதற்குள் ஆபீசுக்குப் போன அமுதன் திரும்ப வீட்டிற்கு முன்பு வந்து காரை நிறுத்தி, ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே சங்கீதா அந்த லெட்டரை ஃபைலில் வைத்துவிட்டு, அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு அவசரமாக, வீட்டுக்கு வெளியே வந்தாள். “நான் ஒரு ஆபீஸ் ஃபைலை, ஹாலில் சோபா மேலே வைத்துவிட்டுப் போய்விட்டேன். கொஞ்சம் அதை எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு, அவள் கையில் அந்த ஃபைலை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையோடு அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு போனான். அன்று மாலை அமுதன் திரும்ப ஆபீஸில் இருந்து வந்த பிறகு, அவனால் வீட்டில் நடப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. அவன் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய், காரை நிறுத்தும் இடத்துக்கே வந்து வரவேற்கிற சங்கீதாவை அமுதன் ஆச்சரியமாகப் பார்த்தான். முன்பெல்லாம் அவன் ஏதாவது சொல்வதற்கு முன்பு… “உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சும்மா இருங்கள்! எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலை ஆன்லைன் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டு, வீட்டையே கவனிக்கிறதில்லை! இங்கு வீட்டில் ஒருத்தி என்ன சமைக்கிறாள்? என்ன சாப்பிட்டாள்… இப்படி எதுவும் கண்டுகொள்வதில்லை… எப்ப பார்த்தாலும் அந்த போனில் யாருகிட்டயாவது பேசிக்கொண்டே இருக்கிறது. இல்லை அதையே நோண்டிக்கொண்டு இருக்கிறது. வீட்டில் பொண்டாட்டி என்று ஒருத்தி இருக்கிறதே உங்கள் ஞாபகத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை.! பெற்ற பிள்ளைகளிடம் பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை.” எப்பவும் குறை சொல்லிக்கொண்டு, அவனை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிற மனைவி, இப்போது “பாவம்ங்க நீங்கள்… நம்ம குடும்பத்துக்காக இப்படி வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் கூட பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை. ஆபீஸில் எந்த பிரச்னையானாலும், உடனே போன் பண்ணி பேசி.. உங்களைத் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கிற பாசத்தை புரிந்துகொள்ளாமல், நான் வேறு… உங்களிடம் எப்ப பார்த்தாலும் மல்லு கட்டிக்கொண்டு, மூஞ்சை தூக்கிக்கொண்டு இருக்கிறேன்.” சங்கீதா இப்படி பேசுவதைக் கேட்டு… அவனுக்கே நடப்பதெல்லாம் கனவா நனவா என்று தெரியவில்லை. திடீரென்று அவளுடைய நடவடிக்கையில் வந்த இந்த மாற்றத்துக்கு காரணம், ஒருவேளை, ராசிபலனில் சொல்லுவார்களே, அது மாதிரி அவனுடைய ராசியில் இருக்கிற கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றுவிட்டதா?!’ என்று யோசித்தான். மறுநாள் வழக்கம் போல அமுதன் ஆபீஸ் கிளம்பும் போது, சங்கீதா, பளிச்சென்று புன்னகையோடு கூடவே வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவனுடைய லஞ்ச் பாக்ஸ், ஆபீஸ் பேக் எல்லாவற்றையும் அவளே எடுத்துக்கொண்டு வந்து, அவனுடைய காரில் வைத்துவிட்டாள். கல்யாணம் ஆன புதிதில் அவனோடு அன்பாக, சினேகமாக இருந்த மனைவி சங்கீதாவை மீண்டும் பார்ப்பது போல் அமுதனுக்குத் தெரிந்தது. ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ என்ற திரைப்பட பாடல் அவன் நினைவுக்கு வந்தது. இப்படி யோசித்துக்கொண்டே, ஆபீசுக்கு வந்த அமுதனை, அவனுடைய சீட்டில் வந்து உட்கார்ந்ததும்… அவனுடைய ஜூனியர் நவீன் எதிரே வந்து நின்றான். “ரொம்ப தாங்க்ஸ் சார். உங்க அனுபவ அறிவை வெச்சு , என்னோட குடும்பத்தில் இருந்த பிரச்சனையை சரி பண்ணி கொடுத்திருக்கிறீங்க . சூப்பர் சார். இந்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன் சார். உண்மையில் உங்களை போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உங்க வைஃப் கொடுத்து வெச்சிருக்கணும். அவங்க ரொம்ப லக்கி சார்” என்று மகிழ்ச்சியோடு மனம் நெகிழ்ந்து பேசினான். “என்ன பிரச்சனைன்னே தெரியாம, எனக்கும் என் வைஃபுக்கும் இடையில இதுவரை இருந்த சண்டை, நீங்க கொடுத்த யோசனையாலதான் சரியாச்சு. அவளோட இனிமே சந்தோஷமா வாழவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்த நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்னா அது உங்களாலதான் சார். நீங்க எனக்காக ஒரு லெட்டரை எழுதி காண்பித்து, அதே மாதிரி என்னையும் எழுதி, என் வைஃப் கண்ணுல படற மாதிரி வீட்டுல வைக்க சொன்னீங்க. ஆனா நான் அவ கையிலேயே கொடுத்துட்டேன். அவ அதை படிச்சதும் செம ஹாப்பியா ஆகிட்டா… அதுக்கப்புறம் எனக்கு ஒரே கவனிப்புதான்.” என்று சொல்லிவிட்டு, அவன் மனசுல தோன்றிய சில விஷயங்களையும் அமுதன் கிட்ட சொன்னான். “சார், நம்ம கூட வேலை செய்யறவங்களை, நமக்கு கீழ வேலை பார்க்குறவங்களை தட்டிக்கொடுத்து, பாராட்டிட்டு, அதுக்கு பிறகு அவங்களை வேலையை செய்ய சொல்லும் போது, அவங்களோட நட்பும், முழு ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்குது. நாம அதே மாதிரியான அணுகுமுறையை, நம்ம வீட்டில காண்பிக்கிறதில்ல. அவங்களுக்காக உழைக்கிறோமுன்னு சொல்லிட்டு, நாம அவங்ககூட பேசக்கூட நேரம் இல்லாது போல நடந்துக்கறோம்.” வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு… நாள் முழுதும் டென்ஷனோடு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற லேடிஸ்க்கு, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணுமுன்னா… நாம அவங்களோட பேச, நம்ம நேரத்தை ஒதுக்கணும். மனசு விட்டு பேசணும். அப்போதுதான் அவங்களை நாமும், நம்மை அவங்களும் புரிஞ்சிக்க உதவும். இதை உங்க உதவியால நான் புரிஞ்சிக்கிட்டேன். நவீன் உற்சாகமாகப் பேச… பேச… அவனுடைய பாராட்டையும், நன்றியையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அமுதனுக்கு, அப்போது மனசுக்குள் பல்ப் எரிந்தது. அவன் நவீனிடம் பேசி, வாழ்த்தி அனுப்பிவிட்டு… அவசரமாக அவன் வைத்திருந்த அந்த பிளாஸ்டிக் பைலை எடுத்துப் பார்த்தான். வீட்டில் ஒரே சண்டையாக இருப்பதாக நவீன் அமுதனிடம் புலம்பியபோது, நவீனுக்காக, நவீன் மனைவியைப் பாராட்டி எழுதுவதுபோல, ஒரு கடிதத்தை எழுதிக் காண்பித்து, அவனையும் அதைப்போல் எழுதச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கடிதத்தை அந்த பைலில் வைத்திருந்தான். ‘சங்கீதாவின் மாற்றத்துக்குக் காரணம் அந்தக் கடிதம்தான் என்று அமுதனுக்குப் புரிந்துவிட்டது. நேற்று அந்த பைலை அவன் வீட்டில் மறந்துவிட்டுப் போன நேரத்தில், சங்கீதாவும் படித்துவிட்டு… அது அவளுக்காக அமுதன் எழுதியது என்று நினைத்திருக்கலாம்’ என்று நினைத்தான். பொதுவாக அடுத்தவர்களுக்கு ஆலோசனை தருவது சுலபமான விஷயம். ஆனால் அவரவர் குடும்ப விஷயத்தில் அதைப் பின்பற்ற நினைப்பதில்லை. எது எப்படி இருந்தாலும், நவீனுடைய குடும்பச் சண்டைக்கு, அமுதன் கொடுத்த யோசனை அவனுக்கே பலன் தந்துவிட்டது. அவன் மனைவி சங்கீதா பாவம், அவளாகவே கற்பனை பண்ணிக்கொண்டு சந்தோஷமாகிவிட்டாள். அதை நினைத்ததும் அமுதனுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன்மீது அவள் காட்டும் அன்புக்குத் தகுதியானவனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ‘இனிமேல் மனைவி சங்கீதா கூடவும், குழந்தைகளோடும் அதிக நேரம் செலவழித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கணும்’ என்று அமுதன் தனக்குள் சொல்லிக்கொண்டான். – ராணி வார இதழில் (29.06.2025) பிரசுரிக்கப்பட்டுள்ளது. https://www.sirukathaigal.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/
-
வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்!
பரா நந்தகுமார் இந்த நிலையை மாற்ற விரும்பின் எமதருமை குழந்தைகளே விஞ்ஞான கல்வியை A/L இல் தேர்ந்தெடுங்கள் O/L பரீட்சையில் விஞ்ஞான கணித பாடங்களில் திறமை சித்தியடைந்த அனைவரும் விஞ்ஞான பாடங்களை கற்க தகைமை உடையவர்கள். பௌதீகவியல் கடினமாக உணரின் மனைப்பொருள் விஞ்ஞானம் அல்லது விவசாயத்தை மூன்றாவது பாடமாக தேர்ந்தெடுக்க முடியும் 3S பெற்றாலே விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகைமையாக ஆங்கிலம் கருத்திற் கொள்ளப்படும் ஆங்கிலம் இல்லாதோர் நீங்கள் C தர சித்தியை A/L கற்கும்போதே மீளத் தோற்றி உறுதிப்படுத்த வேண்டும். தாதியக் கல்லூரியில் பயிலும்போதே ரூபா 60 000 கொடுப்பனவாக பெற முடியும். https://www.facebook.com/jeyachandramoorthy.rajeevan/posts/10037002803016076/
-
பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனை தடை!
பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்! 14 JUL, 2025 | 02:19 PM பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், போதைப்பொருள் பாவனை குறைவடைவதை காணக்கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவர். குறிப்பாக, மாணவர் சமுதாயம். இவ்வாறிருக்க, ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தாங்கள் சிறிலங்காவை துப்புரவு செய்ய முன்வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே துப்புரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம். அவையாவன : 1. பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்களோ, அதேபோல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும். 2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பாவிப்பதைக் கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும். 3. பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும். ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும். இதற்குக் காரணம், பெற்றோருக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே, போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219964
-
மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த பெண்
கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்? படக்குறிப்பு, குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசிக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கிச் சென்றபோது, தங்க நிற முடியுடன் கூடிய ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே ஓடி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். "குகையைச் சுற்றி பாம்புகள் திரிவதைக் காண முடிந்தது. கடந்த ஆண்டு ராமதீர்த மலைகளைச் சுற்றி நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் இந்தப் பகுதி ஆபத்தானதாக உள்ளது. அதனால்தான் ரோந்துக் குழு சுற்றுப்புறங்களைச் சோதனை செய்து வருகிறது" என்று உத்தர கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். நாராயணா பிபிசியிடம் தெரிவித்தார். 'கடவுளுக்கு சேவை செய்வதாகக்' கூறும் ரஷ்யப் பெண் குகைக்குள் நினா குடினா (40) என்ற ரஷ்யப் பெண்ணும், அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். "அங்கு வாழ்வது ஆபத்தானது என்று அப்பெண்ணுக்கு உணர்த்த நேரம் ஆனது" என்கிறார் எஸ்பி நாராயணா. ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த ரஷ்யப் பெண் சில காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். அவர்கள் விறகுகளைப் பயன்படுத்தி சமைத்துள்ளனர். காவல்துறையினர் அங்கு பிரபலமான நூடுல்ஸ் மற்றும் சாலட் பிராண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். "எங்கள் குழுவினர் பாண்டுரங்க விட்டல் சிலையை அவர் வணங்குவதைக் கண்டறிந்தனர். 'கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பினார். நான் தவம் செய்து வருகிறேன்' என்று கூறினார்'' என்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நீனா, காவல்துறையிடம் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் அவரது பாஸ்போர்ட்டை கண்டுபிடித்தனர். அப்பெண் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் அவரது விசா 2017-ல் காலாவதியாகியுள்ளது. எப்போதில் இருந்து அப்பெண் அங்கு வசித்து வருகிறார்? படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார். விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது. அதன்பின், நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74zdez707ko
-
ஹமாஸ் மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - சிஎன்என்
மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - ஹமாஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் வலுவுடன் கெரில்லா போர் தந்திரோபாயங்களை பயன்படுத்த ஆரம்பிக்கின்றது - சிஎன்என் Published By: RAJEEBAN 14 JUL, 2025 | 02:56 PM காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது. . திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய இராணுவவீரர்கள் குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது. தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது. இரண்டாவது குண்டு வெடித்தபோது மேலும் பல இஸ்ரேலியப் படைகள் அவர்களுக்கு உதவ விரைந்தனர். அதுவும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டு வெடித்தபோது அருகில் மறைந்திருந்த ஹமாஸ் படையணி சிறிய ரக துப்பாக்கிச் சூடு மழை பொழிந்தது. சில நிமிடங்களுக்குள் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் சிலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டிலிருந்து எளிதாகத் தெரியும் காசாவின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனூன் நகரில் இந்தத் தாக்குதல் நடந்தது. 24 மணிநேரத்திற்கு முன்னர் குண்டுகளை புதைத்தது என்பதும் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் தயாராகயிருந்ததும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய எல்லைக்கு மிக அருகில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் செயல்படுவதாக இஸ்ரேலிய படையினர் கருதுகின்றனர். இந்த போர்க்காலம் முழுவதும் இஸ்ரேலிய படையினர் பலமுறை காசாவிற்கு மீண்டும் மீண்டும் செல்லவேண்டியிருந்தது - ஏனென்றால் இஸ்ரேல் தான் ஹமாசினை அகற்றியதாக தெரிவித்த பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதே இதற்கான காரணம். ஹமாசின் சமீபத்தைய தொடர் தாக்குதல்கள் அந்த அமைப்பை அழிக்கும் இஸ்ரேலின் இலக்கு மிகவும் கடினமானதாக இலகுவில் சாத்தியப்படாததாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ஹமாஸ் போராளிகள் கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ பொறியியல் வாகனத்தை குறிவைத்து ரொக்கட் மூலம் ஏவப்படும் குண்டுகளை வீசி ஓட்டுநர் தப்பி ஓட முயன்றபோது வாகனத்தை தாக்கினர். இது ஹமாஸ் வெளியிட்ட தாக்குதலின் வீடியோவில் காணப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி அவர்கள் இஸ்ரேலிய இராணுவீரரை கடத்த முயன்றனர். இந்தச் செயல்பாட்டில் அவர் கொல்லப்பட்டார். அந்த முயற்சி அப்பகுதியில் செயல்படும் இஸ்ரேலியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. காசாவின் கொடூரமான கடுமையான போர் ஈரானில் இஸ்ரேலின் விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையுடன் கடுமையாக வேறுபடுகிறது. 12 நாள் இஸ்ரேல்-ஈரான் மோதல் முடிவடைந்ததிலிருந்து காசாவில் குறைந்தது 19 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவிக்கின்றன இதில் பெய்ட் ஹனூன் தாக்குதலும் அடங்கும். இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த நாளில் தெற்கு காசாவில் ஒரு ஹமாஸ் போராளி வெடிக்கும் பொருளை இஸ்ரேலின் இராணுவ வாகனத்தின் மீது வீசி எறிந்தார். இருந்த ஏழு வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காசாவில் ஐ.டி.எஃப்-க்கு பல மாதங்களில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும். போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் 20000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக ஜனவரி மாதம் முன்னாள் ஐ.டி.எஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார். இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரையும் படுகொலை செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் புதிய போராளிகளையும் சேர்த்துக் கொண்டதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறினார் அவர்களின் அணிகளை மீண்டும் நிரப்பினார். மார்ச் மாதத்தில் இஸ்ரேலின் பொது ஒளிபரப்பான கான் நியூஸ்இ ஹமாஸ் "நூற்றுக்கணக்கான" புதிய போராளிகளை சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது. ஐ.டி.எஃப்-இன் செயல்பாட்டு இயக்குநரகத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இஸ்ரேல் ஜிவ் கூறுகையில் காசாவின் நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பில் எஞ்சியிருப்பதைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தக்கூடிய தளர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட போராளிக் குழுக்களின் குழு மட்டுமே எஞ்சியுள்ளது. ஐ.டி.எஃப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஹமாஸுக்கு நேரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஜிவ் சி.என்.என்-க்கு தெரிவித்தார். “அவர்களின் போர் நமது பலவீனங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதேசத்தைப் பாதுகாப்பதில்லை - அவர்கள் இலக்குகளைத் தேடுகிறார்கள்” என்று அவர் கூறினார். இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் படையினரின் பலவீனங்களை ஹமாஸ் பயன்படுத்த அனுமதித்துள்ளது என என்று ஜிவ் கூறினார். "ஹமாஸ் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது - அது சிறிய குழுக்களாக செயல்படும் ஒரு கெரில்லா அமைப்பாக மாறியுள்ளது. அது ஏராளமான வெடிபொருட்களைக் கொண்டுள்ளது அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல் அங்கு வீசிய வெடிமருந்துகளிலிருந்து வந்தவை என்று ஷிவ் கூறினார். https://www.virakesari.lk/article/219974
-
நடிகை சரோஜா தேவி காலமானார்!
சரோஜா தேவி காலமானார்: ஒரே காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிக்கு நாயகியாக அசத்திய 'கன்னடத்து பைங்கிளி' பட மூலாதாரம்,UGC 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அடுத்த ஆண்டில் 'இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. விரைவிலேயே கதாநாயகி வேடமேற்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். தமிழ் திரைப்படங்களில் இவரது முகபாவம் மூலம், வெளிக்காட்டும் நடிப்பு திறமைக்காக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. தமிழில் நடிகர் சூர்யா, வடிவேலுவுடன் இணைந்து ஆதவன் என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். திரைப்படத்துறையினராலும், ரசிகர்களாலும், 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரசுவதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் மாநில அரசு விருதுகளையும் வென்றவர் சரோஜா தேவி. சரோஜா தேவியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி சரோஜா தேவி முன்னாள் முதல்வரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் வலம் வந்த எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 26 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுடன் சேர்ந்து 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் இணைந்து 17 படங்களிலும் நடித்துள்ளார் சரோஜா தேவி. 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அன்று அவர் கர்நாடகாவில் பிறந்தவர் அவர். அவருடைய இயற்பெயர் ராதாதேவி கவுடா. அவர் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார். அவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, சரோஜா தேவி திரையுலகினர் இரங்கல் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். "சரோஜா தேவி அம்மா, அனைத்து காலத்திலும் மிகச்சிறந்த நடிகையாவார். தென்னிந்தியாவில் வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர். அன்புக்குரியவர் அவர். அவருடன் நல்ல நட்பில் இருந்தேன். அவரை பார்க்காமல் என்னுடைய பெங்களூரு பயணம் நிறைவுறாது. சென்னைக்கு அவர் வரும்போதெல்லாம் என்னிடம் பேசுவார். அவரின் இழப்பை நிச்சயமாக உணருவேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை சிம்ரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், "ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெருமையான ஒரு நிகழ்வு ஒன்று மிகவும் விலைமதிப்பற்றதாக உணர வைக்கிறது. என்னுடைய மரியாதையையும் பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,@SIMRANBAGGAOFFC/X - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c628d38vz04o
-
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் ஜனாதிபதிக்கு காயம் - ஜூன் மாதம் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தற்போது தகவல்கள்
14 JUL, 2025 | 10:50 AM இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதிக்கு காயமேற்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியானிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் அதிஉயர் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த மிகவும் இரகசியமான பகுதியொன்றின் ( நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்தது) நுழைவாயில்கள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் பகுதிகளை இலக்குவைத்து ஜூன் 16ம் திகதி இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என ஈரான் அரசாங்கத்தின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதியும் ஏனையவர்களும் அவசர சூழ்நிலைகளின் போது வெளியேறுவதற்கான பகுதி ஊடாக தப்பிச்செல்ல முயன்றனர் அவ்வேளை ஜனாதிபதியின் கால்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டன என பார் தெரிவித்துள்ளது. ஈரான் தற்போது இந்த இரகசிய சந்திப்பு குறித்து இஸ்ரேலிற்கு தகவல் வழங்கியது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள பிபிசி இஸ்ரேலும் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது. 12 நாள் யுத்தம் குறித்த சமூக ஊடக வீடியோக்கள் ஈரானின் தலைநகருக்கு வடமேற்கே உள்ள மலைப்பகுதி தொடர்ச்சியாக தாக்கப்படுவதை காண்பித்திருந்தன. இஸ்ரேலிய தாக்குதலின் நான்காம் நாளான்று ஈரானின் முக்கிய தலைவர்கள் காணப்பட்ட பகுதி மீது தாக்குதல் இடம்பெற்றமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலால் நிலத்திற்கடியில் அமைக்கப்பட்டிருந்த அந்த கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாத நிலையேற்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் ஊடகம் உள்ளே செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது, உள்ளேயிருப்பவர்களிற்கான காற்றினை வழங்கும் வசதிகள் பாதிக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது, ஆனால் ஜனாதிபதி தப்பிவெளியேறினார் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219931
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்.நெடுந்தீவில் கைதான 07 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 14 JUL, 2025 | 10:07 AM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். இதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதனை அடுத்து மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/219926
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கேப்டன்சியில் சறுக்கிய கில்: கடினமான களத்தில் கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில் கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 13-ஆம் தேதி அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நான்காம் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே! சம பலத்தில் உள்ள இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டி கொடுக்கும் பரபரப்பை அடித்துக்கொள்ள எதுவுமில்லை. அதற்கு இந்த டெஸ்ட் ஒரு உதாரணம். இரு அணிகளும் சம பலத்தில் 4 நாள்களாக மோதிக்கொள்ளும் ஆட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த டெஸ்ட் நிச்சயம் டிரா ஆகாது என்று நான்காம் நாள் தொடங்கியவுடன் தெரிந்துவிட்டது. நிதானம் தேவை இந்த தொடர் முழுக்க கடும் உழைப்பை கொடுத்தும் விக்கெட்டுகளை அள்ள முடியாமல் தவித்த சிராஜ் கொத்தாக மூன்று தலைகளை வீழ்த்தினார். ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் (Un–even bounce) இருந்ததால் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் எந்த வேகத்தில் (Tempo) ஆடுவது என தெரியாமல் குழம்பிப் போயினர். பும்ராவின் நல்ல லெங்க்த் பந்துகளும் தாறுமாறாக எகிறி ஜாக் கிராலியின் கைகளை பதம் பார்த்தன. நேற்று நேரத்தை கடத்துவதற்காக அடிபட்டது போல நடித்தவர், இன்று உண்மையிலேயே வலியில் தவிப்பதை பார்க்க இந்திய வீரர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும். பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினால் தப்ப முடியாது என உணர்ந்துகொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், கன்னாபின்னாவென்று என்னென்னமோ முயற்சிகள் எடுத்து பரிதாபமாக நடையைக்கட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாக் கிராலி சிராஜ் பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். பும்ராவின் நிழலில் இருப்பதாலேயே சிராஜுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. பஸ்பால் பாணியில் ஒரு ஷாட் அடித்தவுடன் சிராஜ் ஷார்ட் ஆஃப் த லெங்த்தில் வீசிய அடுத்த பந்தை சரியாக கணிக்காமல் விளையாடி டக்கெட் பெவிலியன் திரும்பினார். அப்போது இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. டக்கெட்தான் சிராஜை நோக்கி முட்டும் விதமாக நடந்தார் என்பது பிறகு ரிப்ளேவில் தெரிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கடினமான வேலையை செய்வதால், சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால், அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தி ஆற்றலையும் கவனத்தையும் இழந்துவிடக் கூடாது. பும்ராவிடம் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் நிதானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் சிராஜ் பொறுப்பற்ற ப்ரூக்கின் ஆட்டம் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் சரியும் போது ரூட் மட்டும்தான் பொறுப்பை உணர்ந்து விளையாடினார். இத்தனை சொதப்பல்களுக்கும் பிறகும் கிராலிக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகள் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. முதல் இன்னிங்ஸ் போலவே, இந்த முறையும் இந்திய பந்துவீச்சு படையின் இளம் கன்றான நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் பொறுப்பற்ற ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார் கிராலி. நேற்றைய நாளின் முக்கியமான விக்கெட் என ஆலி போப்பின் விக்கெட்டை சொல்லலாம். ரூட், புரூக் போல அபாயகரமான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் கடினமான சூழல்களில் நின்று விளையாடும் திறன்கொண்டவர் போப். ஏற்கெனவே ஒரு ரெவியூவை கோட்டைவிட்டதால் முதலில் தயக்கம் காட்டிய கில் சிராஜின் ஆக்ரோஷத்துக்கு மதிப்பளித்து டிஆர்எஸ் எடுத்தார். 3 விக்கெட்டுகள் காலியான நிலையில் களம்புகுந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் புரூக், நெருப்பை நெருப்பால் அணைக்கும் விதமாக பாஸ்பால் (Bazball) பாணியை கையில் எடுத்தார். உடனடியாக கைமேல் பலன் கிடைத்தாலும், பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார் ஹாரி ப்ரூக் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதற்கும் கண்ணை மூடிக்கொண்டு சுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் தெரிந்துகொள்ள வேண்டும். இங்குதான் ரிஷப் பந்த் தனித்து நிற்கிறார். அவரும் ரிஸ்க்கான பேட்டிங்கை தான் கையில் எடுக்கிறார். ஆனால், அதிலும் நுட்பமாக சில தற்காப்பு திட்டங்களை புகுத்தி, ஆபத்தில்லாமல் ரன் சேர்க்கும் வித்தையை தெரிந்துவைத்துள்ளார். ஆனால் புரூக் உள்ளிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் அந்த தெளிவில்லை. வர்ணனையில் சங்கக்காரா விமர்சித்தது போல, இது Bazball ஆட்டமல்ல அல்ல; பொறுப்பற்ற ஆட்டம்! இந்தியாவின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிய சுந்தர் இந்த டெஸ்டில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தி வந்த கில், நேற்று ஓரிடத்தில் சொதப்பினார். ரூட் களத்துக்கு வந்தவுடன், அவர் எதிர்கொள்ள விரும்பாத பும்ராவை உடனடியாக கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று ரூட்டை செட்டிலாக வைத்துவிட்டார். இதுபோன்றதொரு கடினமான ஆடுகளத்தில் ரூட் எடுத்த 40 ரன்கள் முக்கியமானது. சிராஜ் பந்தில் அம்பயர் பால் ரீஃபெலின் LBW முடிவுகள் சில இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொடர் முழுக்கவே DRS முடிவுகள் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரூட், ஜேமி ஸ்மித் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கையை ஓங்கச் செய்தார் சுந்தர். ரூட் தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் சுந்தரின் அட்டகாசமான சுழலுக்கு ஸ்மித் இரையானார். வாஷிங்டன் சுந்தர் விரல்களுக்கு அதிக வலுகொடுத்து சுழற்றுவதால் பந்து காற்றில் அலைபாய்ந்தது (Drift). அப்போது லைனை சரியாக கணிக்க முடியாமல் ஸ்டம்புகளை ஸ்மித் பறிகொடுத்தார். கடைசிக்கட்ட விக்கெட்டுகளை பும்ராவும் சுந்தரும் வாரிச் சுருட்ட இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கேப்டன் கில்லுடன் பகிர்ந்து கொள்கிறார். ஏமாற்றம் அளித்த கில் ஆடுகளம் தாறுமாறாக இருப்பதால், இந்திய தொடக்க வீரர்கள் பொறுப்பாக நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்று விளையாடி நடையைக்கட்டினர். வழக்கமாக ஷாட் பிட்ச் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு விளையாடும் ஜெய்ஸ்வால், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் இலக்கற்று சுற்றி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ராகுல்– கருண் இணை, நம்பிக்கை அளிக்கும் விதமாக சிறிது நேரம் விளையாடியது. ஆனால் நன்றாக தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த கருண், கார்ஸ் வீசிய பந்து உள்ளே வருகிறதா வெளியே போகிறதா என்ற குழப்பத்தில் பேட்டை தூக்கி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இடம் கிடைத்தும் கருண் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டுக்கான மனஉறுதி அவருக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்து உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள கில், எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சியை அளிக்கிறது. கோலியை களத்தில் போலச் செய்வது வேறு கோலி போல வெற்றிகரமாக இலக்கை விரட்டுவது வேறு என்பதை கில் உணர்ந்திருப்பார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கில் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்தார். கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா? தொடக்கத்தில் இந்திய அணி பவுண்டரிகளாக ரன் குவித்த போதும், ஸ்டோக்ஸ் மனம் தளராமல் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து விக்கெட்டுகள் எடுக்க பார்த்தார். ஒருகட்டத்தில் பிறரை நம்பி பிரயோஜனம் இல்லை என அவரே பந்தை கையிலெடுத்தார். நான்காம் நாளின் கடைசி ஓவரில் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப்பை அவர் ஆட்டமிழக்க செய்த விதம் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கும். கார்ஸ் நேற்றைய நாளில் உறுதியுடன் பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது. ஆட்டம் கையை விட்டு போய்விட கூடாது என்று நல்ல லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி கில்லின் கால்காப்பை தாக்கி விக்கெட் எடுத்தார். ஆபத்பாந்தவன் ராகுலின் சலனமில்லாத பேட்டிங் மட்டும்தான் இந்திய அணிக்கு ஒரே ஆறுதல். வெற்றி இன்னும் 135 ரன்கள் தேவை என்கிற நிலையில், ராகுலையே இந்தியா மலை போல நம்பியிருக்கிறது. கடைசி நாளில் ராகுல், பந்த் இருவரும் மூன்றாம் நாளில் கொடுத்தது போல, ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பும். ஆனால், அவ்வளவு எளிதாக ஸ்டோக்ஸ் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்பதை இந்திய அணியினர் உணர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டும். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தின் கை சற்றே ஓங்கியிருந்தாலும், குறைவான இலக்கு என்பதால் இந்தியாவுக்கும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக லார்ட்ஸ் டெஸ்ட் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crenpdg32leo
-
மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
Published By: VISHNU 14 JUL, 2025 | 01:54 AM மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முறையான திட்டத்தின் கீழ் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்.போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் அமைச்சர் கண்காணித்தார். இதன்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், உள்நோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, வைத்தியசாலையின் ஏனைய சிகிச்சை துறைகள் மற்றும் வைத்தியசாலையின் மேம்பாட்டுத் திட்டங்கள் அவற்றின் தற்போதைய நிலை, எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், உள்நோயாளிகளின் நலன் தொடர்பிலும் கேட்டரிந்துக் கொண்டார். மேலும் வைத்திய ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் குறிப்பிடுகையில், மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும். வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு அவசியமான அனைத்து சிகிச்சை சேவைகளையும் முறையாக வழங்கி அவர்களை ஆரோக்கியமான நபர்களாக மாற்றுவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரினதும் பொறுப்பாகும். இந்த நாட்டில் நோய்தாக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரையும் குணப்படுத்துவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் முதல் சுகாதார அமைச்சர் வரையான நாம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆகையால் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம். யாழ்.போதனா வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்துக்கமைய எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219916
-
டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது முறையற்றது - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
13 JUL, 2025 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது, இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடங்கள் செயற்படுத்தப்படவில்லை. இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பு முறைமையை மாற்றியமைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. ஆட்பதிவு திணைக்களம் டிஜிட்டல் ஆளடையாள அட்டைக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் 99 சதவீதமளவில் நிறைவு செய்துள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் ஆளடையாள அட்டையை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்திருந்தது. இந்திய கொள்கையுடன் செயற்பட்ட இந்த அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும், இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. டிஜிட்டல் முறைமையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தான் இந்த திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இலங்கையில் தனிப்பட்ட தரவு சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கான விலைமனுகோரல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் பத்திரத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்புக்கு கசிந்தால் இந்திய நிறுவனம் 10 சதவீதமளவில் தான் பொறுப்புக்கூறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219889
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிள்ளையான் முன்பே அறிந்து இருந்ததாகவும், விரைவில் இலங்கை புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை; அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - உதய கம்மன்பில 13 JUL, 2025 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசதரப்பு எதிர்பார்க்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை பிள்ளையான் சிறையில் இருந்தவாறே முன்கூட்டியதாகவே அறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.04.10 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல விடயங்களை விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக' தெரிவித்தார். இதனை நம்பி ஜனாதிபதியும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துதாக குறிப்பிட்டார். பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவுமில்லை, அவரும் ஏதும் குறிப்பிடவுமில்லை. ஆகவே அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைத்தார் என்பதை ஊடகங்களுக்கு குறிப்பிட்டேன். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடுவது பொய், அவ்வாறு குறிப்பிடுபவர்களுக்கு பைத்தியம்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரை கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துக்காகவே பிள்ளையாள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சுனில் அந்துனெத்தி குறிப்பிட்டிருந்தார். ஆகவே சுனில் அந்துனெத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், ஜனாதிபதிக்கும் பதிலளித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த அண்மையில் பாராளுமன்றத்தில் பிள்ளையான் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பிள்ளையான் தமிழ் மொழியில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியை பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர். தமிழ் மொழிமூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. உபவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றியே கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன். இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்றார். https://www.virakesari.lk/article/219891
-
விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை முதல் தடவையாக சூடினார் இகா ஸிவியாடெக்
13 JUL, 2025 | 02:42 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார். 57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 - 0: 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்டு நேர் செட் வெற்றி இதுவாகும். இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக்கின் வியூகங்கள் நிறைந்த அதிசிறந்த ஆற்றல்களால் திக்குமுக்காடிப்போன அனிசிமோவா போட்டி முடிவில் தோல்வியைத் தாங்க முடியாதவராக தேம்பித் தேம்பி அழுதார். பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நான்கு தடவைகளும் (2020, 2022, 2023, 2024), ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஒரு தடவையும் (2022) சம்பியனான இகா ஸ்வியாடெக், இந்த வருடம் முதல் தடவையாக விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியனானார். மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் (Grand Slam Tennis) அவர் வென்றெடுத்த 6ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இதன்மூலம் களிமண் தரை, கடின தரை, புற்தரை ஆகிய மூன்று வகையான தரைகளிலும் சம்பியனானவர்கள் என்ற வரலாற்றுச் சாதனை ஏடுகளில் இகா ஸ்வியாடெக் இணைந்துகொண்டார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் வெண்மையின் அடையாளமாக நடத்தப்படுவதால் சகல போட்டியாளர்களும் வெள்ளை ஆடைகளை அணிந்தே விளையாடுவர். அத்துடன் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமான்கள் எனவும் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமாட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது. வீர, வீராங்கனைகளின் பைகள் கூட வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/219868
-
"குழந்தை பெற்றுக்கொள்ள நேரமில்லை" - உலக அளவில் கருவுறுதல் விகிதம் குறைய காரணம் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டெபனி ஹெகார்டி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: 'அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?' மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,"நாங்கள் வெறுமனே பள்ளிக்கு செல்வோம். பாடத்திட்டத்திற்கு வெளியே எதுவும் இல்லை, ஆனால் இன்று நீங்கள் உங்கள் குழந்தையை நீச்சல் வகுப்புகளுக்கும், ஓவிய வகுப்புகளுக்கு அனுப்பவேண்டியுள்ளது. அவர்கள் வேறு எதையெல்லாம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்," என்றார் நம்ரதா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குழந்தைகளின் பள்ளி செலவுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள் எச்சரிக்கும் யு.என்.எஃப்.பி.ஏ. இனப்பெருக்க உரிமைகளுக்கான ஐநாவின் முகமையான ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund) அறிக்கையின்படி, நம்ரதாவின் நிலை சர்வதேச அளவில் காணப்படும் இயல்பாக உள்ளது. கருவுறுதல் விகிதம் குறைவது குறித்து இதுவரை இருந்ததிலேயே வலுவான நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் எடுத்துள்ளது. குழந்தை வளர்ப்பதால் ஏற்படும் கடுமையான செலவு, பொருத்தமான துணை இல்லாதது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பல நூறு மில்லியன் மக்களால் தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளமுடியவில்லை என எச்சரித்துள்ளது. 14 நாடுகளில் இருக்கும் 14,000 பேரிடம் அவர்களுடைய கருவுறும் நோக்கம் குறித்து UNFPA ஆய்வு நடத்தியது. ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை அல்லது பெற்றுக்கொள்ளமாட்டோம் என தெரிவித்தனர். ஆய்வு நடத்தப்பட்ட தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, ஜெர்மனி, ஸ்வீடன், பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, இந்தியா, இந்தோனீசியா, மொரோக்கோ, தென்னாப்ரிக்கா, மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,14 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகளில் ஐந்து பேரில் ஒருவர், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றக் கொள்ள இயலாது என்று கூறியுள்ளனர் உண்மையான நெருக்கடி இது குறைவான, நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் குறைந்த மற்றும் அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகளின் கலவை அவை. யுஎன்எஃப்பிஏ (UNFPA) இளம் வயது வந்தோரிடமும், தங்களது இனப்பெருக்க காலத்தை கடந்தவர்களிடமும் ஆய்வு நடத்தியது. யுஎன்எஃப்பிஏ அமைப்பின் தலைவரான டாக்டர் நடாலியா கானெம், "கருவுறுதல் விகிதத்தில் உலகம் முன்பெப்போதும் இல்லாத சரிவை தொடங்கியிருக்கிறது," என்று கூறினார். "ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்புகின்றனர். கருவுறுதல் விகிதம் குறைய பெருமளவு காரணம் தாங்கள் விரும்பும் குடும்பத்தை உருவாக்க முடியவில்லை என பலரும் நினைப்பதுதான். அதுதான் உண்மையான நெருக்கடி," என்கிறார் அவர். "இதை நெருக்கடி என அழைப்பது, அது உண்மையானது என சொல்வதாகும். அது ஒரு மாற்றம் என நான் நினைக்கிறேன்," என்கிறார் அன்னா ராட்கெர்ச். ஐரோப்பாவில் கருவுறும் விருப்பங்கள் குறித்து ஆய்வு நடத்தியவரும், பின்லாந்து அரசுக்கு மக்கள்தொகை கொள்கை குறித்து ஆலோசனை வழங்குபவருமான மக்கள் தொகை ஆய்வாளர் அவர். "ஒட்டுமொத்தமாக, கருவுறுதல் நோக்கங்களை மிஞ்சுவதை விட அதைவிட குறைவாக எட்டுவதே அதிகமாக உள்ளது," என்கிறார் அவர். இவர் இதை ஐரோப்பாவில் விரிவாக ஆய்வு செய்திருப்பதால், உலக அளவில் எத்தகைய பிரதிபலிப்பை கொண்டிருக்கிறது என்பதை காண்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். தாங்கள் விரும்பியதை விட குறைவாகவே குழந்தை பெற்றுக்கொண்டதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோரில் எவ்வளவு பேர்(31%) கூறியிருக்கிறார்கள் என்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 நாடுகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வின் முன்னோடியான இந்த ஆய்வின் நோக்கம் குறுகலானது. உதாரணமாக நாடுகளுக்குள் வயது பிரிவுகள் என வரும்போது, முடிவு எதுவும் எட்டமுடியாத அளவு குறைவான மாதிரிகளே கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில முடிவுகள் தெளிவாக உள்ளன. அனைத்து நாடுகளிலும், 39% பேர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிதி குறைபாடுகள் தடுப்பதாக தெரிவித்தனர். அதிகபட்ச பதில் கொரியாவிலும்(58%), குறைந்தபட்சம் ஸ்வீடனிலும்(19%) பதிவாகின. மொத்தத்தில், 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுற இயலாமை– அல்லது கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை தாய்லாந்து(19%), அமெரிக்கா(16%), தென்னாப்பிரிக்கா (15%), நைஜீரியா(14%) மற்றும் இந்தியா(13%) உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 12% பேர் மட்டுமே தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாததற்கு கருவுறுதலில் சிரமம் என்பதை காரணமாக சொல்லியிருந்தனர். "குறைந்த கருவுறுதல் விகித பிரச்சனைகள் குறித்து [ஐநா] உண்மையில் முழுமையாக முன்னெடுத்துள்ளது இதுதான் முதல்முறை," என்கிறார் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மக்கள் தொகை ஆய்வாளர் ஸ்டூவர் கீடெல்-பாஸ்டென். அண்மைக் காலம்வரை , தங்களின் விருப்பத்தை விட அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்கள் மற்றும் கருத்தடைக்கான "பூர்த்தி செய்யப்படாதத் தேவை" குறித்தே முகமை அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இருந்தாலும், கருவுறுதல் குறைவதற்கு எதிராக பதில் நடவடிக்கை குறித்து கவனமாக இருக்கும்படி யுஎன்எஃப்பிஏ வலியுத்துகிறது. "தற்போது, அதிக மக்கள்தொகை அல்லது சுருங்கும் மக்கள் தொகை என பேரழிவு பற்றிய வெற்றுப் பேச்சுக்களைத்தான் பெரிய அளவில் பார்க்கிறோம். இது இதுபோன்ற அதிகபடியான எதிர்வினையையும் சில நேரம் சூழ்ச்சியான எதிர்வினையையும் உண்டாக்குகிறது," என்கிறார் காணெம். "அதாவது பெண்களை அதிக குழந்தைகள் அல்லது குறைவான குழந்தைகள் பெற்றுக்கொள்ள செய்யும் வகையில்." 40 வருடங்களுக்கு முன்பு சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் எல்லாம் தங்களது மக்கள் தொகை அதிகமாக இருப்பதாக கவலைப்பட்டதாக அவர் சுட்டிக்கட்டுகிறார். ஆனால் 2015ஆம் ஆண்டில் அவர்கள் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினர். "அந்த நாடுகள் பயத்தில் அவசரகதியில் ஏதேனும் கொள்கையை இயற்றாமல் தடுக்க நாம் முடிந்தவரை முயற்சி செய்யவேண்டும்," என்கிறார் கீடெல்- பாஸ்டென். "குறைவான கருவுறுதல், வயதாகி வரும் மக்களின் தொகை, மக்கள்தொகை தேக்கம் போன்றவை தேசியவாத, குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் பாலின பாரம்பரிய கொள்கைகளை அமல்படுத்த ஒரு சாக்காக பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்," என்கிறார் அவர். குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரத்தை விட பெரிய தடையாக இருப்பது போதிய நேரமின்மைதான் என்பதை யுஎன்எஃப்பிஏ (UNFPA) கண்டறிந்தது. மும்பையில் இருக்கும் நம்ரதாவுக்கு இது உண்மையாக் தோன்றுகிறது. அவர் தனது அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு தினமும் குறைந்தது நான்கு மணி நேரத்தை செலவிடுகிறார். அவர் வீடு திரும்பும்போது முற்றிலும் சோர்வடைந்திருக்கிறார், ஆனால் தனது மகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார். அவரது குடும்பத்திற்கு அவ்வளவு தூக்கம் கிடைப்பதில்லை. "ஒரு வேலை நாளுக்கு பிறகு, உங்கள் குழந்தையுடன் போதிய நேரம் செலவிடவில்லை என ஒரு தாயாக உங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இயல்பிலேயே வரும்.," என்கிறார் அவர். "எனவே நாங்கள் ஒரே ஒரு குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்தப் போகிறோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvy8e4nwwo
-
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்
அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது நேர்ந்தால் மத்திய, மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் - இயக்குனர் கௌதமன் சீற்றம்! 13 JUL, 2025 | 05:36 PM நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி சிறப்பு முகாமில் நீராகாரம் அருந்தாமல் உண்ணா நோன்பில் ஈடுபடும் யோகராசா நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய ஒன்றிய அரசும் மதிக்க வேண்டும் என பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யோகராசா நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல. அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது. தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களை இங்கு குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து ஈழ அகழிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்ப கூடாது. தமிழ் நாட்டில் இருந்து ஈழத்தமிழர்களை அரசியல் வேலைகளை செய்வதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும். முன்னாள் விடுதலை புலிகள் என்னும் சந்தேகத்தின் பெயரில் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு, இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருக்கும் ஈழத்தமிழர்களை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பனவே அந்த நான்கு அம்சக் கோரிக்கைகள். ஈழத்தில் இருந்து அடைக்கலம் கோரி தமிழ்நாட்டுக்கு வந்துள்ள எமது தொப்புள்கொடி உறவுகளின் குறைந்தபட்ச கோரிக்தைகளை கூட நிறைவேற்றுவதற்கு இதற்கு முன்னர் இருந்த இந்திய ஒன்றிய, மாநில அரசாங்கங்களும், தற்போது ஆட்சியில் இருக்கின்ற ஒன்றிய, மாநில அரசாங்கமும் முன்வராத நிலையை பார்க்கும்போது மிகவும் கவலையாகவும் அதை விட கோபமாகவும் உள்ளது. சிறப்பு முகாம்களில் அவர்களை வைத்து உடலாலும், உள்ளத்தாலும் எவ்வளவோ துன்புறுத்தி விட்டீர்கள். இதற்கு பின்னர் கூட உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? அப்படி என்ன அவர்கள் பெரிதாக உங்களை கேட்டார்கள்? அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஏன் இதன் பின்னும் உங்களால் செய்துகொடுக்க முடியவில்லை? ஈழத்தில் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிறபடியால்தான் அவர்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களை நீங்கள் பார்க்கின்ற விதமோ, நடத்துகின்ற விதமோ அறமற்ற சிங்கள அதிகார வர்க்கத்திற்கு சமமானது என்று கூட சொல்ல முடியாது அதைவிடவும் சற்று மேலானது என்பது எத்தகைய குரூரம். ஈழத்தில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்ற விடயம் என்பது நூறு சதவிகித உண்மை என்பதை தற்போதைய ஈழத்தின் செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை அகழும்போது அங்கே எங்களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு நிகழ்ந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் கண்கூடாக பார்க்கக்கூடியதே ஆகப் பெரும் சாட்சியாக நிற்கின்றது. இதனை வைத்து பார்க்கும்போது இதற்கு மேலும் உங்களுக்கு பட்டவர்த்தனமாக தெரியவில்லையா அவர்களுக்கு அங்கே உயிர் அச்சுறுத்தல் இருக்கிறதென்கிற விடயம்? அரசியல் ஆதாயத்திற்காக தொப்புள்கொடி உறவுகள் என்று நாம் வாய் கிழிய கத்தினால் மட்டும் போதாது. அந்த தொப்புள் கொடி உறவுகள் அடைக்கலம் புகுந்த நமதிடத்தில் அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அத்தனை பேருக்கும் உள்ளது என்பதை தமிழ்நாடு அரசும், தமிழ் நாட்டு மக்களும் மறந்து விடாதீர்கள். ஏற்கனவே ஒரு தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாத பாவிகளாக இந்திய ஒன்றியம் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது. மேலும் அதுபோல் ஒரு பாவச் செயல் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது எமது கடமை. எனவே யோகராசா நவநாதனின் கோரிக்கைகளுக்கு இனியாவது செவி சாயுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள். அன்னம் தண்ணி நீர் ஆகாரமின்றி எட்டாவது நாளை கடந்து உண்ணா நிலையிலிருக்கும் சகோதரர் யோகராசா நவநீதன் அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை தர வேண்டும். இதன் பிறகும் தமிழ் நாட்டில் இருக்கின்ற ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் இந்திய அரசோ மாநில அரசோ நீங்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என காட்டமாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219899
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடிகளுடன் பங்களாதேஷை அதிரவைத்தது இலங்கை Published By: VISHNU 10 JUL, 2025 | 10:30 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. பங்களாதேஷுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட மொத்தமாக 225 ஓட்டங்களைப் பெற்று தொடர்நாயகனான குசல் மெண்டிஸ், தனது தொடர்ச்சியான திறமையை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியிலும் வெளிப்படுத்தினார். பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மிக பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பெத்தும் நிஸ்ஸன்க 16 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த பின்னர் இலங்கையின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. எனினும் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலமான நிலையில் இட்டனர். குசல் பெரேரா 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் சர்வதேச அரங்கில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அசத்தினார். எனினும் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது குசல் மெண்டிஸ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார். குசல் மெண்டிஸ் கொடுத்த மிகவும் கடினமான பிடியை இடப்புறமாக ஓடிய ஷமிம் ஹொசெய்ன் உயரே தாவி இடதுகையால் பிடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அவிஷ்க பெர்னாண்டோ 11 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர் முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 8 ஓவர்களில் 65 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த ஏழு ஓவர்களில் 43 ஓட்டங்களையே பெற்றது. எனினும் கடைசி 5 ஓவர்களில் 46 ஓட்டங்களை எடுத்து கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தன்ஸித் ஹசன் ஆகிய இருவரும் 30 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தன்ஸித் ஹசன் 16 ஓட்டங்ளுடனுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு விக்கெட்கள் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. அணித் தலைவர் லிட்டன் தாஸ் 6 ஓட்டங்களுடனும் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது தௌஹித் ஹிரிதோய் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார். (89 - 4 விக்.) தொடர்ந்து மொஹம்மத் நய்ம், மெஹிதி ஹசன் மிராஸ் (29) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். மொஹம்மத் நய்ம் 32 ஓட்டங்களுடனும் ஷமிம் ஹொசெய்ன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அணிக்கு ஒரு வருடத்திற்கு பின்னர் மீளழைக்கப்பட்ட தசுன் ஷானக்க 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜெவ்றி வெண்டசே 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 32 ஓட்டங்களுக்கு ஒரு ? விக்கெட்டையும் விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை சரவ்தேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/219695
-
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
13 JUL, 2025 | 06:36 PM மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது. இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/219906
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனித புதைகுழி; கார்பன் பரிசோதனைகள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்; தமிழரசுகட்சியின் வேண்டுகோள்கள் பயனுள்ளவை - காணாமல்போனோர் அலுவலக அதிகாரி கருத்து Published By: RAJEEBAN 13 JUL, 2025 | 02:26 PM செம்மணி மனித புதைகுழி அகழ்வும் நடவடிக்கைகள் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.தற்பரன் இதனை தெரிவித்துள்ளார். உடல்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு முறையாக கார்பன் பரிசோதனையை பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பயன்படுத்தப்படும் ஒரு முறை குறிப்பாக வேறு பொருட்கள் ஆதாரங்கள் இல்லாதபோது இந்த முறையை பயன்படுத்துவது வழமை என தெரிவித்துள்ள அவர் எனினும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை பயன்படுத்த வேண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கையிடம் இதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் மாதிரிகளை அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவிற்கே அனுப்பவேண்டும். செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஜூன் இறுதி வாரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் இடம்பெற்றன. இந்த 15 நாட்களில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி மனித புதைகுழியை அகழும் பணிகளிற்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ராஜ்சோமதேவ எதிர்வரும் 15ம் திகதிக்குள் முதல் 15 நாட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து கரிசனைஎழுப்பியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சில நடவடிக்கைகளை கோரியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி இலங்கையின் தார்மீக மற்றும் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உண்மை மற்றும் நீதியை நோக்கிய நம்பமான பாதையை உருவாக்குவதற்கும் இது அவசியம் என தெரிவித்துள்ளது. இந்த கடிதம் குறித்து பதிலளித்துள்ள காணாமல்போனோர் அலுவலக அதிகாரி தற்பரன் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பயனுள்ளவையாக அர்த்தபூர்வமானவையாக அமையும் என தெரிவித்துள்ளார். சுயாதீன மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் இதுபோன்ற கூட்டுப் பணிகள் அதிக ஈடுபாட்டிற்கான வளங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எவ்வாறு தலையிட முடியும் என்பதற்கான கூடுதல் சூழமைவை தமிழரசுக்கட்சியின் வேண்டுகோள்கள் நமக்கு வழங்குவதால் நாங்கள் நிச்சயமாக அதில் கவனம் செலுத்துவோம். மற்ற தரப்பினரிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் பெற வேண்டும்" .என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் அலுவலகம் இன் பணியைத் தொடர நாட்டில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கோரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து தலைவர் மற்றும் மற்றும் அரசாங்கமே கூட்டாக முடிவு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219871
-
இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எஸ். சிறிதரன் தெரிவிப்பு
13 JUL, 2025 | 02:41 PM இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். கொட்டகலையில் சனிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும். மேலும் தெரிவிக்கையில், 10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர். நபரொருவர், பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது. ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது. வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாகூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/219869
-
இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு
குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் - அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர் Published By: RAJEEBAN 11 JUL, 2025 | 12:35 PM குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர் காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் - உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது, நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார். காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு அனுமதித்தது ஏன்? என இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும் அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ், கிரேக்க, இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/219717
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ். நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் கைது 13 JUL, 2025 | 02:24 PM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். அதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/219867