Everything posted by ஏராளன்
-
நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா
02 JUL, 2025 | 02:59 PM திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என தெரிவித்துள்ளார். தலாய்லாமா தனது 90வயதை குறிக்குகமாக இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும் என அமைதிக்கான நோபல்பரிசை வென்ற திபெத்தின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கான செய்தியில் தலாய்லாமா தனக்கு பின்னர் ஒருவரை கண்டுபிடித்து அவரை அங்கீகரிக்கும் பொறுப்பு 2015 இல் தான் உருவாக்கிய அமைப்பிற்கே உரியது என குறிப்பிட்டுள்ளார். வேறு எவருக்கும் இந்த விடயத்தில் தலையிட உரிமையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகால பாரம்பரியங்களிற்கு ஏற்ப எதிர்கால தலாய்லாமாவை தேடவேண்டும் என தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா தலாய்லாமாவிற்கு பின்னர் யார் என்பதை சீன அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அடுத்த தலாய் லாமா திபெத்திலிருந்து வர வேண்டிய அவசியமில்லை என்று பின்னர் சீன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தலாய்லாமாவின் இந்த முடிவு சீனாவை சீற்றத்திற்குள்ளாக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அடுத்த மதத் தலைவரை அங்கீகரிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்று சீனா பலமுறை தெரிவித்துள்ளது. மறுபிறவி எடுத்த நபர் சீனாவின் திபெத்திய பகுதிகளில் காணப்பட வேண்டும் என்றும் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்துகிறது. திபெத்திய மதத் தலைமை மூத்த லாமாக்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் பாரம்பரிய ஜோசியம் மூலம் தனது மறுபிறவியை அடையாளம் காணும் பண்டைய செயல்முறையை மேற்கொள்ளும் என்பதை பகிரங்கமாக மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் தலாய் லாமா ஆன்மீக நியாயத்தன்மையையும் திபெத்திய சுயாட்சியையும் வலுப்படுத்த முயன்றுள்ளார். அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்க விரும்புவதாக பெய்ஜிங் நீண்ட காலமாக சமிக்ஞை செய்து வருகிறது . இதன்காரணமாக சீனாவுடன் இணங்கிபோகக்கூடிய ஆன்மீக தலைவர் குறித்து திபெத்தில் அச்சம் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/219019
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
அசலன்க அபார சதம், பந்துவீச்சில் ஹசரங்க, கமிந்து அற்புதம்; பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை Published By: VISHNU 02 JUL, 2025 | 10:37 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 77 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தது. இந்த மூவரும் காலி றிச்மண்ட் கல்லூரி கிரிக்கெட் அணிக்காக 2016இல் ஒன்றாக விளையாடியதுடன் அதே வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியிலும் இடம்பெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இலங்கை அணியின் களத்தடுப்பும் அபரிமிதமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மிலான் ரத்நாயக்க இப் போட்டியில் அறிமுகமானதுடன் அவருக்கான இலங்கை தொப்பியை தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரியா அணிவித்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. பெத்தும் நிஸ்ஸன்க (0), நிஷான் மதுஷ்க (5), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆட்டம் இழந்தனர். எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை அணியை பலமான நிலையில் இட்டார். குசல் மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் ஜனித் லியனகேவுடன் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்கவுடன் 6அவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்கவுடன் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும் சரித் அசலன்க பகிர்ந்தமை விசேட அம்சமாகும். குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 29 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 123 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 74ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சரித் அசலன்க தனது 5ஆவது சதத்தைக் குவித்தார். இதில் நான்கு சதங்கள் ஆர். பிரேமதாச அரங்கில் பெற்றவையாகும். இதன் மூலம் இந்த மைதானத்தில் இலங்கை சார்பாக 4 சதங்கள் குவித்த சனத் ஜயசூரியவின் சாதனையை சரித் அசலன்க சமப்படுத்தினார். பந்துவீச்சில் தஸ்கின் அஹமத் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. இலங்கையை விட பங்களாதேஷின் ஆரம்பம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆரம்ப வீரர்கள் வேகமாக ஓட்டங்ளைப் பெற்றனர். எனினும் 5அவது பர்விஸ் ஹொசெய்ன் ஏமொன் (13) ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தன்ஸித் ஹசன், முன்னாள் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவை மிலான் ரத்நாயக்கவும் குசல் மெண்டிஸும் இணைந்து ரன் அவுட் ஆக்கியவுடன் போட்டியின் சாதகத் தன்மை முழுமையாக இலங்கை பக்கம் திரும்பியது. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த பங்களாதேஷ், அதன் பின்னர் 7 விக்கெட்களை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. ஆனால் மத்திய வரிசையில் ஜேக்கர் அலி திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். முன்வரசையில் தன்சித் ஹசன் 62 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 23 ஓட்டங்களையும் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேக்கர் அலி 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசி இரண்டு விக்கெட்களில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கடைசி விக்கெட்டில் மாத்திரம் ஓட்டம் பெறாமலிருந்த முஸ்தாபிஸுர் ரஹ்மானுடன் 42 ஓட்டங்களை ஜேக்கர் அலி பகிர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் இதேவேளை, இந்தப் போட்டியில் 3 தடவைகள் குறிப்பிட்ட ஒரு நிமிடத்திற்குள் அடுத்த ஓவரை வீச இலங்கை தவறியதால் பங்களாதேஷுக்கு இனாமாக 5 அபாரத ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இப் போட்டியில் லிட்டன் தாஸின் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க தனது 100ஆவது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். இதுவரை 64 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க 103 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள அடங்கலாக 7.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க https://www.virakesari.lk/article/219053
-
கீழடி: 2500 ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓட்டை மனித முகமாக ஆய்வாளர்கள் வடிவமைத்தது எப்படி?
பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY படக்குறிப்பு, கீழடி பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முகங்கள் 3டி டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3 டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகம் மறு உருவாக்கம் பணிகளை செய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதம் இல்லாமல் இருந்துள்ளன. தென்னிந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் நடமாடிய மனிதர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபியல் துறைத் தலைவர் ஜி குமரேசன் கூறுகிறார். முக மறு உருவாக்கம் என்பது மண்டை ஓடுகளை வைத்து, உடற்கூறியல் விதிகளுக்கு உட்பட்டு அறிவியல் ரீதியாகவும், தேவைப்படும் இடங்ளில் கலை நிபுணத்துவம் சார்ந்த விளக்கங்கள் (artistic interpretation) கொண்டும் செய்யப்படுவதாகும். இது போன்ற முக மறு உருவாக்கங்கள் 67% வரை அறிவியல் ரீதியாக செய்யப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY "கீழடியிலிருந்து கிடைக்கப்பெற்ற சுமார் 50 மண்டை ஓடுகளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சேர இருந்த இரண்டு சிறந்த மண்டை ஓடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கு சுமார் 50 வயதிருந்திருக்கலாம். இவர்களுக்கு தென்னிந்திய முக அம்சங்கள் மட்டுமல்லாமல், மேற்கு யுரேசியா மற்றும் ஆஸ்ட்ரோ ஆசியாடிக் அம்சங்களும் சிறிய அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் படங்கள், 3டி ஸ்கேன் படங்கள் எடுத்து லிவர்பூல் பல்கலைக்கு அனுப்பப்பட்டன" என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபணுவியல் (Genetics) துறையின் தலைவர் பேராசிரியர் ஜி.குமரேசன் கூறுகிறார். மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எப்படி எடுக்கப்படுமோ, அதே முறையில் எடுக்கப்படும். 3டி ஸ்கேன் செய்ய தனியாக கருவி உள்ளது. இந்த தரவுகளைப் பெற்ற லிவர்பூல் பல்கலைகழகத்தின் ஃபேஸ் லேப் (Face lab- முக மறு உருவாக்கம் செய்யும் ஆய்வகம்) அதிலுள்ள இடைவெளிகளை அறிவியல்பூர்வமாக நிரப்பி முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளது. பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY இவர்களின் மண்டை ஓடுகள் சேதமடையாமல் அப்படியே இருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகத்தின் ஃபேஸ் லேப் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன். "சில எலும்பு முறிவுகள் இருந்தன, பற்கள் இல்லை. இல்லாத பாகங்கள் பொதுவாக, ஏற்கெனவே உள்ள பாகங்களை பிரதிபலிக்கும் வகையில் மறு உருவாக்கம் செய்யப்படும் (உதாரணமாக வாயின் மேல் பகுதி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து கீழ் பகுதி மறு உருவாக்கம் செய்யப்படும்). எனவே தசைகளின் ஆழம் மற்றும் பிற அமைப்புகளை (மண்டை ஓட்டில் உள்ள) எலும்பியல் தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார். "அந்த முகங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடையது என்றாலும், நமது தாத்தா ஒருவரின் முகத்தை நினைவுப்படுத்துவதாகவே உள்ளது" என்றார் பேராசிரியர் குமரேசன். பட மூலாதாரம்,JOURNAL OF ANATOMY/CAROLINE WILKINSON படக்குறிப்பு, மண்டை ஓடுகளின் மீது தசைகளை பொருத்திய பிறகு காணப்படும் முக வடிவம் மண்டை ஓட்டிலிருந்து முகத்தை மறு உருவாக்கம் செய்வது ஒரு அறிவியல் நடைமுறையாகும். மண்டை ஓடுகளின் வடிவம் கிடைத்த பிறகு, அதன் மீது தசைகள் பொருத்தி பார்க்கப்படும். "Musculature எனப்படுவது தசைகளின் ஆழம் என்னவாக இருந்திருக்கும் என கணக்கிட்டு பொருத்துவதாகும். அது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறுபடும். மண்டை ஓடு தடிமனும் மாறுபடும். இவற்றுடன், ஒரு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட நவீன கால மனிதர்களின் தரவுகளையும் கொண்டு, அவர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படும்" என்கிறார் பேராசிரியர் குமரேசன். தசைகள் பொருத்துவது குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்திருந்த பேராசிரியர் வில்கின்சன், "ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய தசைகளின் தரவுகளை பயன்படுத்திக் கொள்வோம். மண்டை ஓட்டின் அளவையும் வடிவத்தையும் பொறுத்து, ஒவ்வொரு தசையும் மாற்றி அமைக்கப்படும்" என்றார். இதனை மேலும் விளக்கும் வகையில், பேராசிரியர் வில்கின்சன் Journal of Anatomy என்ற இதழில் 2010-ம் ஆண்டு எழுதிய கட்டுரையில், " தசைகளை பொருத்துவதில் எந்தவிதமான கலை நிபுணத்துவமும் இருக்கக் கூடாது. அவை உடற்கூறியல் விதிகளை பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் முகங்களில் சில வேறுபாடுகளை தவிர, (அனைவருக்கும்) ஒரே எண்ணிக்கையிலான தசைகள், (முகத்தின்) ஒரே இடத்திலிருந்து தொடங்குவதும், ஒட்டியிருப்பதும் வழக்கம். இவற்றின் வடிவம், அளவு, இடம் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருக்கலாம்" என்று எழுதியுள்ளார். மேலே உள்ள புகைப்படத்தில் (பேராசிரியர் கரோலின் வில்கின்சன், பிரிட்டனில் உள்ள டண்டீ பல்கலையில் உடற்கூறியல் மற்றும் மனித அடையாளத்துக்கான மையத்தில் பணியாற்றிய போது, ஜர்னல் ஆப் அனாடமி இதழில் "Facial Reconstruction-Anatomical Art or Artistic Anatomy?" என்ற கட்டுரையில் வெளிவந்த புகைப்படம்) , மூன்று வெவ்வேறு மண்டை ஓடுகளில் ஒரே விதமான தசைகளை பொருத்திய போது, முகங்களில் உள்ள வேறுபாடுகளை காணலாம். பட மூலாதாரம்,JOURNAL OF ANATOMY/CAROLINE WILKINSON படக்குறிப்பு, முகத்தின் வலதுபுறத்தில் தசைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மீது தோல் பொருத்தப்படும் போது முகம் எப்படி இருக்கும் என்பதை முகத்தின் இடதுபுறத்தில் காணலாம். தசைகள் பொருத்திய பிறகு, அடுத்து முக்கியமாக செய்ய வேண்டியது, தசைகளின் மீதான தோல் பொருத்துவதாகும். "தசைகளின் அமைப்பு, எலும்புகளின் வடிவம், தசைகளின் ஆழம் ஆகியவற்றைக் கொண்டு தோலின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இளையவர்களை விட வயதானவர்களின் தோலை தீர்மானிப்பது கடினமாகும். ஏனென்றால் வயது முதிர்வு காரணமாக ஒருவருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறு காலத்தில் ஏற்படும். ஒருவருக்கு முன்கூட்டியே ஏற்பட தொடங்கும், மற்றொருவருக்கு தாமதமாக தொடங்கும். எனவே ஒரே வயதிலான இரண்டு நபர்களுக்கு தோல் வேறு மாதிரி இருக்கக் கூடும். எனவே ஒருவரின் சருமம் இந்த தன்மையில்தான் இருந்தது என்று உறுதியாக கூறுவது இயலாது" என்று பேராசிரியர் வில்கின்சன் தெரிவிக்கிறார் . பட மூலாதாரம்,MARK A. ROUGHLEYA AND CAROLINE M. WILKINSONA படக்குறிப்பு, பிரிட்டனின் யோர்க்ஷைர் நகரின் ஃப்யூஸ்டன் தேவாலயத்தின் சுற்றுப்புறத்தில் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகளிலிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட 19-ம் நூற்றாண்டு ஆண் ஒருவர். கணினி மறு உருவாக்கத்தில் தோலில் உள்ள சுருக்கங்கள், மேடு பள்ளங்கள் பொருத்தும் போது (வலது) முக வடிவம் எப்படி உள்ளது என்பதை காணலாம். முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது, சில பாகங்கள் சவாலானவையாக இருக்கின்றன. "வாய் பகுதியை வடிவமைப்பதில் கலை நிபுணத்துவம் அதிகம் தேவைப்படும். உடற்கூரியல்படி, மேல் உள்ள பற்கள் கீழ் உள்ளவற்றை விட எடுப்பாக இருந்தால், மேல் உதடும் அவ்வாறே இருக்கும். இவை வாய் மூடியிருக்கும் நேரத்தில் பற்கள் எவ்வாறு உள்ளன (occlusion pattern) என்பதை பொருத்து மாறுபடுகின்றன. காதுகளின் வடிவத்தை தீர்மானிப்பதும் மிகவும் கடினம்" என்கிறார் பேராசிரியர் வில்கின்சன். 2006-ம் ஆண்டு பேராசிரியர் வில்கின்சன் பங்கேற்ற ஒரு ஆய்வு குறைந்தபட்சம் 67% முக அமைப்புகள் அறிவியல் ரீதியான நடைமுறைகளை பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்படுகிறது என்று கூறியது. முக மறு உருவாக்க தொழில்நுட்பம் தடயவியல் துறை சார்ந்த விசாரணைகளின் போது ஒருவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுத்தப்படலாம். அதே போன்று வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள, மக்களுக்கு தங்கள் கடந்த காலத்துடனான தொடர்பை மேம்படுத்த இந்த மறு உருவாக்கங்கள் பயன்படுகின்றன. 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் மண்டை ஓடு ஒன்று இராக்கிய குர்திஸ்தானில் உள்ள ஷனிதார் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது 40களில் இருந்திருக்கலாம், பற்களில் நோய் இருந்திருக்கலாம் என்பதும் அவரது மண்டை ஓட்டை வைத்து தெரியவந்தது. நூற்றுக்கணக்கான துண்டுகள் சேகரிக்கப்பட்டு, இந்த மண்டை ஓடு ஒருங்கிணைக்கப்பட்டது. அதிலிருந்து அந்தப் பெண்ணின் முகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,BBC STUDIOS/JAMIE SIMONDS அதே போன்று, ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல காலத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் முகம் உட்பட சிலரது முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளனர். மண்டை ஓடுகளிலிருந்து முகங்கள் எப்படி மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதை பார்வையாளர்களே செய்து பார்க்கும் வகையில் விளக்க வீடியோக்களும் அங்கு உள்ளன. பட மூலாதாரம்,PERTH MUSEUM கீழடி விவகாரம் - மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையாவது ஏன்? பிரச்னையின் முழு பின்னணி தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது? மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி சோழர் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிற்றரசர் - எப்படி சாதித்தார்? தமிழர் நாகரிகத்தை உலகிற்குச் சொல்லும் கீழடி அருங்காட்சியம் வழக்கமான முக மறு உருவாக்க முறைகளில் மண்டை ஓடுகளின் படங்கள் அல்லது வார்ப்பு (cast) பயன்படுத்தப்படும். மண்டை ஓடுகளின் படங்கள் மீது தசைகளை வரைவது 2D முறையாகும். வார்ப்புகளை பயன்படுத்தி அதன் மீது மெல்லிய தசைகளை களிமண் அல்லது மெழுகு கொண்டு உருவாக்குவது 3D முறையாகும். கணினி உதவியுடன் கூடிய 3D முக மறு உருவாக்க முறையில், மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மற்றும் 3D ஸ்கேன் தரவுகள் கொண்டு அதன் டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் முகங்கள், வார்ப்புகளை கொண்டு உருவாக்கிய 3D முகங்களை போலவே காணப்படும். அதன் மீது பல்வேறு நவீன மென்பொருள்கள் கொண்டு தசைகள், தோல் ஆகியவற்றை பொருத்தலாம். பட மூலாதாரம்,FACE LAB, LIVERPOOL JOHN MOORES UNIVERSITY படக்குறிப்பு, 3D டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்படும் முகங்கள் "முக மறு உருவாக்க படத்துக்கு உண்மைக்கு நிகரான தன்மையை கொண்டு வர புகைப்படம் எடிட் செய்யும் மென்பொருளை பயன்படுத்துவோம். (கீழடி முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது) இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் (உண்மைக்கு) மிக நெருக்கமான தோல், முடி மற்றும் கண்களின் நிறங்களை அளித்திருந்தனர்" என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார். பட மூலாதாரம்,FACE LAB, LIVERPOOL JOHN MOORES UNIVERSITY AND UNIVERSITY OF GLASGOW. படக்குறிப்பு, ராபர்ட் தி ப்ரூஸ் எனப்படும் ராபர்ட் இரண்டாம் அரசரின் 3D டிஜிட்டல் முக வடிவம். டிஜிட்டல் முக மறு உருவாக்கங்கள் இந்த துறையில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும் என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார். "பாரம்பரியமான களிமண் மாதிரிகளை விட இதன் அணுகுமுறை மேலும் துல்லியமாகவும் வேகமாகவும் இருக்கிறது. கணினி முறையில் மறு உருவாக்கம் செய்யும் போது, அந்த வடிவத்தை தொடர்ந்து சரி பார்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடிகிறது. இதை தவிர CGI - கணினி கிராஃபிக்ஸ் மற்றும் AI - செயற்கை நுண்ணறிவு உண்மைக்கு மிக நெருக்கமான படங்களை உருவாக்குவதில் எங்கள் திறனை அபாரமாக அதிகரித்துள்ளது" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y73dz50jdo
-
சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 03:11 PM குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219101
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கில்லின் 2வது சதம், கைகொடுக்கும் ஜடேஜா: இந்திய அணி 400 ரன்களை கடக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 ஜூலை 2025, 02:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளன். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவாக நங்கூரமிட்டுள்ளனர். வலுவான ஸ்கோர் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 3வது செஷனில் பல்வேறு முயற்சிகள் செய்தும் ஏதும் பலிக்கவில்லை. 125 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கில், 199 பந்துகளில் சதத்தை எட்டினார். லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த கில், தொடர்ந்து அடிக்கும் 2வது சதமாகும். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பு செய்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரிஷப் பண்ட் (25), நிதிஷ் குமார் ரெட்டி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால், கேப்டன் கில், ஜடேஜா ஜோடிதான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஹோம் ஓர்க்கில் வெற்றி சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறையும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கேஎல்.ராகுலை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் "ஹோம் ஓர்க்" செய்து வந்திருந்தனர். அவருக்குரிய வலையை சரியாக விரித்து அவரை தவறு செய்யத் தூண்டினர். ஆனால் ராகுல் அதற்குரிய வாய்ப்பை வழங்காமல் தவறு செய்யாமல் தவறான ஷாட்களை ஆடாமல் தவிர்த்தார். ஆனால், பவுன்ஸரில்தான் வலை விரிக்கப்பட்டுள்ளது என்பதை ராகுல் கணிக்கவில்லை. வோக்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஆப்திசையில் போடப்பட்ட பவுன்ஸரை ராகுல் விளையாட முற்பட்டபோது பேட்டில்பந்து பட்டு க்ளீன் போல்டாகியது. ராகுல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் கே எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். பிராட்மேன் வரிசையில் ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்டில் 4வது வீரராகக் களமிறங்கிய கருண் நாயர், இந்த முறை 3வது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஜெய்ஸ்வால் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கருண் நாயர் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ஜோஷ் டங் ஓவரில் டி20 ஆட்டத்தைப்போன்று தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசி, ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அதிகமான சராசரி வைத்திருக்கும் பிராட்மேனுக்கு அருகே 84 சராசரியில் ஜெய்ஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது செஷனில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் இருவரும் கட்டுக்கோப்புடனே பேட் செய்தனர், தவறுகள் பெரிதாக செய்யாததால் விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். ஆனால், கார்ஸ் பவுன்ஸரில் கருண் நாயர் அவ்வப்போது தடுமாறியதையும், பவுன்ஸரை ஹூக் ஷாட்டில் அடிக்காமல் திணறுவதையும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கண்டறிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அரை சதம் அடித்ததை கொண்டாடுகிறார். கருண் நாயர் ஏமாற்றம் கருண் நாயரை பிரன்ட்புட் எடுத்து ஆடவைக்கும் வகையில் கார்ஸ் தொடர்ந்து பந்துகளை வீசினார், ஆனால் தனக்கு வலை விரிக்கப்பட்டுவிட்டது என்பதை கருண் நாயர் உணரவில்லை. கார்ஸ் திடீரென ஒரு பந்தை பவுன்சராக வீசவே, இதை கருண் நாயர் எதிர்பார்க்கவில்லை. இதனால் மார்புக்கு அருகே வந்த பந்தை பேட் வைத்து தடுக்கவே 2வது ஸ்லிப்பில் இருந்த ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கருண் நாயர் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களுடன் இருந்தது. 2வது செஷனில் கில், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். ஜெய்ஸ்வால் மெதுவாக ரன்களைச் சேர்க்க, கில் நிதானமாக பேட் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்திய வீரர் கருண் நாயர் கில் பொறுப்பான பேட்டிங் முதல் டெஸ்டில்கூட கில், வேகமாக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஷாட்களை அவ்வப்போது ஆடினார். ஆனால், இந்த டெஸ்டில் முதிர்ச்சியடைந்த டெஸ்ட் பேட்டர் போன்று மிகுந்த கவனத்துடன் டிபென்ஸ்ப்ளே செய்தார். இதனால் சுப்மன் கில் தவறு செய்யவைக்க இங்கிலாந்தின் திட்டம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது. 2வது சதத்தை நோக்கி நகர்ந்த ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கில்,ஜெய்ஸ்வால் கூட்டணி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். விக்கெட் சரிவு அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரிஷப் பண்ட் இந்தமுறை களமிறங்கியபோது, மிரட்சியுடனே இங்கிலாந்து வீரர்கள் பார்த்தனர். ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்புவரை சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு குறைவான ஓவர்கள் வழங்கப்பட்டநிலையில், பண்ட் வந்தபின் பஷீருக்கு கூடுதலாக ஓவர்களை கேப்டன் ஸ்டோக்ஸ் வழங்கினார். நிதானமாக பேட் செய்த சுப்மன் கில் 125 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடக்கம். ரிஷப் பந்தை அடித்து ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கில் பஷீர் பந்தை நன்கு "டாஸ்" செய்து வீசினார். அதற்கு ஏற்றார்போல் ரிஷப் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பஷீர் வீசிய பந்தை லாங்ஆன் திசையில் ரிஷப் பண்ட் தூக்கி அடிக்கவே கிராலி அதை கேட்ச் பிடித்தார். ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற நிதிஷ் ரெட்டி களமிறங்கினார். வோக்ஸ் பந்துவீச்சை சரியாகக் கணிக்காமல் பந்தை லீவ் செய்ய நிதிஷ் ரெட்டி முயன்றார். ஆனால் பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஆப்ஸ்டெம்பை பதம்பார்த்துச் சென்றது. நிதிஷ் ரெட்டியின் தவறான கணிப்பால்விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது. கில்-ஜடேஜா ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆனால், ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய கில், 3வது செஷசன் ஆட்டம் தொடங்கியதும் ரன் சேர்க்கும் விதத்தை வேகப்படுத்தினார். அரைசதம் அடிக்க 125 பந்துகளை எடுத்துக்கொண்ட கில், அடுத்த 50 ரன்களை 74 பந்துகளில் எட்டினார். 6 பவுண்டரிகளையும் கில் அடித்து, ஸ்கோரை வேகமாக உயர்த்தி 199 பந்துகளில் சதம் அடித்தார். சுப்மான் கில்லுக்கு துணையாக ஆடிய ஜடேஜா, சரியான பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு விரட்டினார், அவ்வப்போது இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் தவறவில்லை. ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். இருவரும் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் களத்தில் உள்ளனர். புதிய பந்து நேற்று மாலை எடுக்கப்பட்டும் விக்கெட்டை இங்கிலாந்தால் வீழ்த்த முடியவில்லை, அதே பந்து 2வது நாளிலும் பயன்படுத்தப்படும் என்பதால் ஸ்விங் அதிகமாக இருக்கும். இதில் கட்டுக்கோப்பாக பேட் செய்து 30 ஓவர்களை நகர்த்திவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்லக்கூடும். இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஜடேஜா, கில் கூட்டணி பேட் செய்தால், நிச்சயமாக 400 ரன்களை எட்டும். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் என இரு பேட்டர்கள் இருப்பதால், முதல் டெஸ்டைப் போன்று 400 ரன்களுக்கு மேல் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82z1zy600o
-
யாழ். செம்மணி மனித புதைகுழி விவகாரம் : விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – அரசாங்கம்
02 JUL, 2025 | 05:27 PM (எம்.மனோசித்ரா) செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி – மனித புதைக்குழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம். தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எவ்வாறிருப்பினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். செம்மணி – சித்துபாத்தி பகுதியில் இனங்காணப்பட்ட மனித புதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் சிறுவர்கள் பயன்படுத்தக் கூடியவாறான நீல நிற பையொன்று மீட்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (01) பொம்மை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219028
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
STUMPS • Starts 3:30 PM 2nd Test, Birmingham, July 02 - 06, 2025, India tour of England Day 1 - England chose to field. India (85 ov) 310/5 Current RR: 3.64 • Last 10 ov (RR): 48/0 (4.80) Shubman Gill* (rhb) 114 216 12 0 52.77 Ravindra Jadeja (lhb) 41 67 5 0 61.19 England
-
உயர்தரத்தில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பிற்கு அரசாங்கத்திடமிருந்து புலமைப் பரிசில்
02 JUL, 2025 | 06:08 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கமைய 'நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனிதவளத்தை' உருவாக்கும் நோக்கத்தை அடைவதற்காக உயர்தர பரீட்சையில் உயர்வான தேர்ச்சியைப் பெறுகின்ற மாணவர்கள் தமது முதலாவது பட்டப்படிப்பை சர்வதேச ரீதியாக உயர் தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்குத் தேவையான புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனை மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தரப்படுத்தல் குறிகாட்டிகளில் முதல் 500 இடங்களைப் பிடித்துள்ள, ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்வதற்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆண்டுக்காக 20 தொடக்கம் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்;க்கப்படுகின்றது. உயர்தர பரீட்சையில் பிரதான பாடத்துறைகளின் கீழ் உயர்வான இசட் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. குறித்த விண்ணப்பங்களில் பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கூடிய தேர்ச்சிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/219040
-
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
"காஸாவில் போர் நிறுத்தம்" - இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் ஜேம்ஸ் சேட்டர் பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் செய்வதற்கான "அவசியமான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தின் போது, "போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம்", என ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் டிரம்ப் தெரிவித்தார். "அமைதியை கொண்டு வர மிகக் கடுமையாக பணியாற்றிய கத்தார் மற்றும் எகிப்தியர்கள் இறுதி முன்மொழிவை தருவார்கள். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன், ஏனென்றால் இது இதைவிட சிறந்ததாக மாறாது, இதைவிட மோசமானதாகத்தான் மாறும்," என டிரம்ப் தனது பதிவில் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் உறுதி செய்யவில்லை, அதே நேரம் ஹமாஸிடமிருந்தும் எந்த உடனடியான கருத்தும் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம் என டிரம்ப் தெரிவித்தார். இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் 'பணயக் கைதிகளை மீட்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு' அரசாங்கத்தில் பெரும்பான்மை உள்ளது மற்றும் இந்த வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அடுத்த வாரம் சந்திக்கவிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் "மிகவும் உறுதியாக நடந்துகொள்வேன்" என டிரம்ப் தெரிவித்திருந்தார். காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர நெத்தன்யாகு விரும்புகிறார் என தாம் நம்புவதாக டிரம்ப் செவ்வாய்கிழமை தெரிவித்தார். "போரை நிறுத்த அவர் விரும்புகிறார் என என்னால் சொல்ல முடியும். அடுத்த வாரம் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன், " என டிரம்ப் மேலும் கூறினார். இஸ்ரேலின் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரான் டெர்மர் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோரை வாஷிங்டனில் சந்திக்கவிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். முன்னதாக ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசி செய்தி சேனலில் பேசிய டேனான், ஹமாஸ் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறினார். "நாங்கள் ஹமாஸ் மீது அழுத்தம் தருகிறோம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், பணயக்கைதிகளை திரும்ப கொண்டுவர எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கூடுதலாக ராணுவ அழுத்தத்தை தருவதுதான்," என்றார் டேனன். "பணயக்கைதிகள் வீடு திரும்பியதும் போர் முடிவுக்கு வரும்," என அவர் மேலும் கூறினார். காஸாவில் இன்னமும் சுமார் 50 பணயக்கைதிகள் இருக்கின்றனர், இவர்களில் குறைந்தது 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. காஸாவில் புதிய போர்நிறுத்தம் ஏற்படுத்தவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் மத்தியஸ்தர்கள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனஎர். ஆனால் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கடந்த வாரம் தெரிவித்தார். ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர்தான் போர் முடிவுக்கு வரமுடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்நிறுத்தமும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறவேண்டும் என்பதையும் ஹமாஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க வடக்கு காஸாவில் மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட பின்னர் டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளன. திங்கட்கிழமை காஸா நகரில் கடற்கரையை நோக்கி அமைந்துள்ள ஒரு உணவகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், நேரடிச் சாட்சிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கூற்றுப்படி குறைந்தது 20 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலைத் தொடங்கியது. அந்த பகுதியில் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி அப்போதிலிருந்து காஸாவில் குறைந்தது 56,647 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிவாரண முகாமில் உணவு பெற காத்திருக்கும் மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (Gaza Humanitarian Foundation - GHF) காஸாவில் நடத்தும் உதவி விநியோக மையங்களை அணுகும் பொதுமக்கள் "பாதிக்கப்பட்டதாக" வெளியான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் இந்த வாரம் தெரிவித்தது. ஜூன் 28 வரை ஜிஹச்எஃப் முகாம்களுக்கு நிவாரணம் பெறச் செல்ல முயன்று 408 போர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. 170-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சர்ச்சைக்குரிய இந்தக் குழு மூடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. உதவி தேடி வரும் பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் "வழக்கமாக" துப்பாக்கிச்சூடு நடத்துவதாக ஆக்ஸ்ஃபேம் (Oxfam), சேவ் த சில்ரன் (Save the Children) போன்ற அமைப்புகள் சொல்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இஸ்ரேல், உதவி விநியோகத்தில் ஹமாஸின் தலையீட்டை தவிர்க்க இந்த அமைப்பு தேவையானது எனக் கூறுகிறது. மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவின் மீது புதிய தாக்குதல்களை தொடுத்தபோது முந்தைய போர்நிறுத்தம் தோல்வியடைந்தது. " பயங்கரவாத தாக்குதல்களை நிறைவேற்றவும், படைகளை திரட்டவும், மீண்டும் ஆயுதமேந்தவும் ஹமாஸின் தயார்நிலையை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட முன்கூட்டிய தாக்குதல்கள்" என்று இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய ராணுவம் விவரித்தது. ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட முந்தைய சண்டைநிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்படவிருந்தது, ஆனால் முதல் கட்டத்தைக் கூட தாண்டவில்லை. நிரந்தர போர்நிறுத்தம், காஸாவில் உயிரோடு இருக்கும் பணயக்கைதிகளை, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு மாற்றிக்கொள்வது, இஸ்ரேல் படைகள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறுவது ஆகிய சண்டை நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இடம் பெற்றிருந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg5dyjgdx6o
-
மாரடைப்பு வருவது எப்படி? அறிகுறிகளும் வராமல் தடுக்கும் வழிமுறைகளும்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். கட்டுரை தகவல் அமீர் அஹ்மது பிபிசி உலக சேவை 2 ஜூலை 2025, 02:48 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்க கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் (CVDs) எனப்படும் இதய நோய்கள்தான் இறப்புக்கான முக்கிய காரணம். ஐந்தில் நான்கு கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. இதயநோய் மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் தினமும் செய்யக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஆரோக்கியமான இதயம் என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கும். "நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் இளம் வயதிலேயே இதயத்துக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பையும் குறைக்கலாம்," என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த இதயநோய் மருத்துவரான எவன் லெவின். ஆனால், இது ஆரோக்கியமான இதயம் உங்கள் மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும் என சொல்லுமளவு எளிதானதா என்கிற கேள்வியும் உள்ளது மாரடைப்பு என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவசர உதவியை அழைக்க வேண்டும் இதயத்துக்கான ரத்த ஓட்டம் திடீரென தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்துக்கு ஆக்சிஜன் கொண்டுசெல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது, இதய தசைகள் சேதமடையலாம் அல்லது இறக்க தொடங்கலாம். உரிய சிகிச்சை இல்லாவிட்டால் இதயத்தின் தசைகள் மீட்டெடுக்க முடியாத சேதத்தைச் சந்திக்கலாம். இதயத்தின் ஒரு பெரும் பகுதி இதுபோல் சேதமடைந்தால், மரணத்தை விளைவிக்கும் வகையில் இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது (இது கார்டியாக் அரெஸ்ட் அல்லது மாரடைப்பு என அழைக்கப்படுகிறது). மாரடைப்பு மரணங்களில் பாதி, அறிகுறிகள் ஏற்பட்ட முதல் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் நிகழ்கின்றன. எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகள் மருத்துவ அவசரமாக கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியம். பிளேக்ஸ் (plaques) எனப்படும் கொழுப்புப் பொருள்கள் இதய ரத்த நாளங்களில் தேங்கி, ரத்தம் எளிதில் பாய முடியாத அளவு அதனை குறுகலாக்கும் கரோனரி இதய நோய்தான் மாரடைப்புக்கு பொதுவான காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் சுமார் 805,000 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதில், 605,000 பேர் முதல் முறையாக மாரடைப்பை அனுபவிக்கிறார்கள், 200,000 பேர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிக்கு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு வரலாம் என்பதை ஒருவர் அறிவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பின் வலி நெஞ்சிலிருந்து கைகளுக்குச் செல்லலாம் மாரடைப்பு பலவிதமான அறிகுறிகளுடன் ஏற்படலாம், இதில் மிகவும் பொதுவானது மார்பு வலி – ஆனால் இது ஒரு கூர்மையான வலியாக மட்டும் இல்லாமல் மார்பு முழுவதும் கடுமையான அழுத்தம் மற்றும் இறுக்கமாக இருக்கும். சில பெண்கள் இந்த மார்பு வலியோடு, கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வலியை உணரலாம். கலிபோர்னியாவைச் சேர்ந்த இதயவியல் மருத்துவர் ஐலின் பார்சேகியன், மாரடைப்பு தொடக்கத்தில் அஜீரணக் கோளாறு என தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறுகிறார். ஆனால், அஜீரணக் கோளாறு போலல்லாமல் இடது கை, தாடை, முதுகு மற்றும் வயிறு போன்ற உங்கள் உடலின் பிற பகுதிகளிலும் மாரடைப்பு பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகிறது. தலைச்சுற்றல், அதிக வியர்வை, மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையும் இதில் அடங்கும். மாரடைப்பு திடீரென ஏற்பட்டாலும், சமயங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்களுக்கு முன்பே கூட எச்சரிக்கை அறிகுறிகள் தென்படலாம். ஓய்வு எடுத்தாலும் நெஞ்சுவலி சரியாகாவிட்டால் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். "மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ரத்த ஓட்டம் சீரமைக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட இதய தசைகள் இறக்கத் தொடங்கலாம், அவசர மருத்துவ பணியாளர்கள் வரும்வரை ஒரு ஆஸ்பிரினை மெல்லும்படி நான் அறிவுறுத்துகிறேன்," என்கிறார் மருத்துவர் ஐலின் பார்சேகியன். உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். "உங்கள் வயது, எடை, புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் உடல்நலம் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களுக்கு எதிராக இருந்து, மார்பு அழுத்தத்தை உணர்ந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழையுங்கள்," என்கிறார் அமெரிக்க இதயநோய் நிபுணர் மருத்துவர் இவான் லெவின். மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியமானதாகிறது. உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது உட்பட மாரடைப்பு அபாயத்தையும் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்வதற்காக உங்கள் ரத்தத்தில் காணப்படுவதுதான் (கொழுப்பு) கொலஸ்ட்ரால். அதே நேரம், சில வகை கொழுப்பு அதிக அளவில் இருந்தால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. நமது இதயத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது தினசரி வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய ஒன்று என இதயநோய் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகமுள்ள உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால் தினசரி உட்கொள்ளும் உப்பின் அளவு 6 கிராமுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறை கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த உணவுகளில் இறைச்சி பை (meat pie), கேக்குகள், பிஸ்கட்கள், சாசேஜ்கள், வெண்ணெய் மற்றும் பனை எண்ணெய் உள்ள உணவுகள் அடங்கும். நிறைவுறாத கொழுப்புகள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மற்றும் ரத்த நாள அடைப்புகளை நீக்க உதவக் கூடியவை என்பதால் சமச்சீரான உணவாக அவை சேர்க்கப்பட வேண்டும். இந்த உணவுகளில் எண்ணெய் மீன்கள், அவகேடோ, கொட்டைகள் மற்றும் காய்கறி எண்ணெய்கள் அடங்கும். ஆரோக்கியமான உணவை வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான எடை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 30 நிமிடம் வீதம் வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி செய்வதை இதயநோய் மருத்துவ நிபுணர் இவான் லெவின் பரிந்துரைக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு "எப்போதும்" புகைப்பிடிக்கவோ அல்லது வேப் (Vaping) செய்யவோ கூடாது என்பதுதான் அவரது மிக முக்கிய அறிவுறுத்தல். 24,927 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சாதாரண சிகரெட்டுகளை மட்டும் புகைப்பவர்களுக்கு உள்ள இதய நோய் அபாயம் இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் இருப்பதாக அமெரிக்க இதய சங்கம் தெரிவிக்கிறது. இருப்பினும் இ-சிகரெட்டுகளை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30-60% குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ஏற்கெனவே ஒரு மாரடைப்பை அனுபவித்தவர்களில், சுமார் ஐந்தில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டாவது மாரடைப்புக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஸ்டேடின்கள் மற்றும் எஸெடிமிப் (ezetimibe) மருந்துகளை பரிந்துரைப்பது இரண்டாவது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரண்டு மருந்துகளும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள். "எல்டிஎல் (LDL) கொலஸ்ட்ரால் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவு இதய கோளாறுகளின் அபாயம் குறைகிறது என்பதை பல பத்தாண்டுகளின் தரவு காட்டுகிறது," என்கிறார் டாக்டர் ஐலின் பார்சேகியன். இளம் தலைமுறையினரிடம் மாரடைப்பு அதிகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளைஞர்களின் வாழ்க்கை முறை மாரடைப்பை அதிகரிப்பதில் பங்கு வகிப்பதாக இதய நோய் மருத்துவர்கள் கவலை கொள்கின்றனர். மாரடைப்பு அபாயம் பொதுவாக வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, ஆனால் அமெரிக்க தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் (US National Center for Health Statistics) தரவுகள் இளைஞர்களிடையே மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. 2019இல், 18 முதல் 44 வயது வரையிலானவர்களில் 0.3% பேர் மாரடைப்பை அனுபவித்தனர். 2023ஆம் ஆண்டு இது 0.5% ஆக உயர்ந்தது. 2019-ல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 0.3% பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டில் இது 0.5% ஆக அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்புக்கு, இந்த வயதினரிடையே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அதிகரித்தது மற்றும் உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களைக் காரணமாக கூறுகிறார் மருத்துவர் இவான் லெவின். "நாம் அனைவரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, ஆனால் சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். கோவிட்டுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் நச்சான, அதிகம் நகரவே தேவையில்லாத உடல் இயக்கமே இல்லாத வாழ்க்கை முறைக்குள் செல்வது கவலை அளிக்கிறது," என்கிறார் அவர். இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கும் அத்திரோஸ்கிளிரோசிஸ் (atherosclerosis) உருவாக்குவதற்கு புகைப் பிடிப்பது ஒரு காரணியாக அறியப்படுகிறது, ஆனால் இளைஞர்கள் மீது வேப் (vapes) பயன்படுத்துவதன் அறியப்படாத தாக்கம் பற்றிய கவலைகளும் மருத்துவர் இவான் லெவின் போன்ற இதயநோய் நிபுணர்களுக்கு உள்ளது. டாக்டர் ஐலின் பார்சேகியன் கூறுகையில் "பரம்பரை ஹைப்பர்லிபிடமியா (familial hyperlipidaemia) போன்ற மரபணு ஆபத்து காரணிகளும் இள வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் போன்ற சூழல்களும் இதற்கு பங்களிக்கின்றன என்று புரிந்து கொள்ளப்படுகிறது." என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdd5y14ppo
-
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு? வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில் அரிதான நிகழ்வொன்றும் அல்ல. அது ஊடகத்தின் ‘பிரதான கவனம்’ பெறுவதுதான் அரிதான நிகழ்வு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமான 4-ம் நாளில் 24 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கும், 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ரிதன்யா தற்கொலை செய்யப்பட்டதற்கும் இந்தச் சமூகம் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே மாதிரியான அக்கறையோடு கருத்துகள் தெளிக்கப்படவில்லை. எதிலும் அரசியல் என்பதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் எதற்கு அதிக கவனம் என்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்றாலே பெரும் அரசியல்தான். 100+ சவரன் நகை என்பதால் கேரளத்து விஸ்மயாவையும், தமிழகத்து ரிதன்யாவையும் ஹைலைட் செய்துவிட்டு வெறும் 1 பவுன் நகை என்பதால் திருவள்ளூர் மகேஸ்வரியை துணுக்குச் செய்தியாக்காமல் இருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு உட்பட்ட நடக்கும் ஒவ்வொரு வரதட்சிணைக் கொடுமையையும் அதே முக்கியத்துவதோடு அணுகும்போது சமூகத்தில் அது அடிக்கடி பேசப்படும் பொருளாகும். வரதட்சிணைக் கொடுமைகளில் ஈடுபட நினைப்போருக்கு சமூகப் பார்வை நம் மீது இருக்கிறது என்று உள்ளூர ஓர் அச்ச உணர்வு ஏற்படக் கூடும் என்ற அக்கறையை பதிவு செய்து கொண்டு, ‘வரதட்சிணை கொடுமைக்கு பெண்கள் ‘பலி’ ஆக பெற்றோரும் காரணமா?’ என்ற வாதத்துக்கு நகர்வோம். ரிதன்யாவும் பெற்றோரும்.. - “மாற்று வாழ்க்கையை அமைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. என் பொண்ணு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லி இறந்துட்டா. அதுல எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. பெண்ணை இழந்தால் கூட. அதேமாதிரி எல்லா பொண்ணும் இருக்கணும்னு நான் நினைக்கல. வாழுறதுக்கு வழி இருக்கு. வாழலாம். தன் வாழ்க்கைய மாய்ச்சுதான் இந்த உலகத்தைவிட்டுப் போகணும்னு முடிவெடுப்பது தவறுதான்” - சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ரிதன்யாவின் தந்தை பேசிய வீடியோவில், அவர் இவ்வாறு கூறுவது பதிவாகியுள்ளது. அவரது இந்தப் பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. உண்மையில் ஓர் அரதப் பழசான, ஆணாதிக்கம் தடித்த வாக்கியம் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம். எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர், 12-ம் வகுப்பு படிக்கும் மகளின் திருமணம் பற்றி அடிக்கடி கனவுகளோடு பேசுவார். “என் மகளுக்கு 300 பவுனாவது நகை போட்டு, ஜாம் ஜாம்னு திருமணம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார். அவர் 40+ இளைஞர்தான். படித்தவர். வியாபாரத்தில் வெற்றி கண்டவர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பவர். செல்போன் முதல் கார் வரை எல்லாவற்றையும் லேட்டஸ்டாக அப்கிரேட் செய்பவர். ஆனால், அவர் வரதட்சிணை ஐடியாலஜியை மட்டும் சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. அதாவது, அவரது வெற்றியும், கவுரவமும் மகளின் திருமணத்தை எவ்வளவு பகட்டாகச் செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார். அல்லது, அவ்வாறு நம்ப இந்தச் சமூகத்தால் பழக்கப்படுத்தப்பட்டுள்ளார். 5 பவுனோ, 500 பவுனோ மகளை கல்யாணச் சந்தையில் வியாபாரம் செய்துவிடுவதுதான் தகப்பனின் தலையாயக் கடமையாக இருக்கிறது. இதில் ரிதன்யாவின் தந்தையோ, மகேஸ்வரியின் தந்தையோ விதிவிலக்கல்ல. மகளுக்கு வரதட்சிணை கொடுப்பது ஒரு குற்றம் என்று புரியாமலேயே அதை ஊக்குவிக்கும் அனைத்து பெற்றோருமே வரதட்சிணை மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் தான். வரதட்சிணை கொடுப்பது குற்றம் என்பதால், வரதட்சிணை மரணங்கள் நிகழும்போது பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்வதும் வழக்கத்துக்கு வர வேண்டும். மகளை தொலைத்த துயரத்தில் இருப்பவர்களுக்கா? என்று கேட்காமல், இதை ஊக்குவிக்க வேண்டும். பெண்ணின் பெற்றோர்கள் எப்படி வரதட்சிணையை தங்களின் பெருமித அடையாளமாகக் கருதுகிறார்களோ, ஆணின் பெற்றோர்கள் வரதட்சிணையை அவர்களின் உரிமையாகக் கருதுகிறார்கள். அந்த வகையில், வரதட்சிணைக் கொடுமைகளுக்கு பெருங்காரணம் ஆணின் பெற்றோர் தான் என்றால் அது மிகையாகாது. தங்கள் மகனை எத்தனை பணத்துக்கு வியாபாரம் செய்யலாம் என்று கணக்குப் போடுபவர்கள் அவர்கள்தான். வரதட்சிணை கேவலம் என்று எந்த ஆண் மகனின் பெற்றோரும் அவரிடம் சொல்வதாகத் தெரிவதில்லை. மாறாக “உனக்கு இருக்கும் அழகுக்கும், சம்பாத்தியத்துக்கும்.. ” என்று கல்யாணச் சந்தையில் தன்னை ஒரு “பிராண்டாகக்” கருதப் பழக்குவதே ஆணின் பெற்றோர்கள் தான். திருமணத்துக்கான தகுதி என்பது பெண்ணை இணையராக நடத்தும் பக்குவம் மட்டுமே. இதை எத்தனை பெற்றோர் ஆண் பிள்ளைக்கு சொல்லி வளர்க்கிறார்கள். அப்பா, அண்ணன், அக்கா / தங்கையின் கணவர் எப்படி வாழ்க்கைத் துணையை நடத்துகிறார்களோ அப்படியே தனக்கு வரும் பெண்ணையும் அணுகுவது அவனுக்கு இயல்பானதாக இருக்கிறது. மேலும், மனைவி என்றால் நம் பாலியல் தேவைக்கான நுகர்பொருள் என்ற போக்கும் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுகிறது. பெண்ணின் மனது என்னவென்பதை தாராளமாக வெளிப்படையாக தாய் தன் மகன்களிடம் பேசலாம். குற்றாச்சாட்டுகளை சுமத்தும் முன்... - ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம் எல்லாம் 27 வயதான, கல்லூரி படிப்பு முடித்த, கார் ஓட்டத் தெரிந்த, தந்தையின் தொழிலை நிர்வகித்து பழக்கமுள்ள, வசதியாக வளர்ந்த பெண்ணின் மனதில் பதிவாகிறது என்றால், அதற்கு குடும்பச் சூழலும் தூபம் போடாமல் இருந்திருக்க முடியாதல்லவா? ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு இயல்பாகக் கடத்தப்பட்டுவிடும். சிலர் மட்டுமே கல்வி, வாசிப்பு என்ற சிறகை விரித்து தேவையற்றதை விட்டொழிப்பார்கள், இல்லை குடும்பத்துக்கே புரிய வைப்பார்கள். ரிதன்யாவுக்கு என்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்பது வெளியில் இருந்து இந்த தற்கொலை விவகாரத்தை அணுகும் நமக்கு முழுமையாகத் தெரியாது என்றாலும் கூட மகளின் மரணத்துக்கு அவர் சொன்ன காரணத்தை உயர்த்திப் பிடிக்கும் தந்தையின் பேச்சு பிற்போக்கானது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. அதேவேளையில் தற்கொலை முடிவு தவறானது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை ரிதன்யாவின் தந்தை கூறியுள்ளார். மறுமணம் அவரவர் விருப்பம் என்பதிலும் உடன்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தும் முன்னர் அவருடைய இந்த நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டுவது அவசியம். நமக்கு நாமே... - பெண் சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் தானமாகக் கொடுப்பது அல்ல. இந்தா வைத்துக் கொள் என்று யாரும் நமக்கு பொட்டலம் கட்டிக் கொடுக்க மாட்டார்கள். பெண் சுதந்திரத்துக்கான பெரிய திறவுகோல் கல்வி. கல்லூரிக் கல்விவரை இன்றைய பெண்கள் கற்பது எளிதாகவே வசப்படுகிறது. கல்லூரியில் நீங்கள் என்னப் பாடம் வேண்டுமானாலும் படியுங்கள், ஆனால் அங்கேயும் சென்று பணக்காரர்களாக திரள்வது, ஊர்க்காரர்களாக திரள்வது, சாதிக்காரர்களாக திரள்வது என்று சுருங்காதீர்கள். பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசியுங்கள். சினிமா, பொழுதுபோக்கு தாண்டி அரசியல் பேசுங்கள். இன்னமும் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்று கூடத் தெரியாமல் பட்டம் பெறும் மாணவிகள் உள்ளனர். நீங்கள் பெறும் பட்டம், திருமணப் பத்திரிகையில் பதிவு செய்வதற்காக மட்டுமே இருக்குமாயின் நீங்கள்தான் வேண்டி விரும்பி அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிக்கத் தேவையில்லை என்றாலும் பணிக்குச் செல்லுங்கள். நட்பு, வாசிப்பு, பணியிடம் என பயணப்படும்போது வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி குறைந்த பட்ச அறிவாவது பெண்களுக்கு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு இந்தச் சட்டங்கள் பற்றிய கையேடுகளைக் கொடுக்கலாம். அது பற்றிய விவாதங்களை ஊக்குவிக்கலாம். பெற்றோர், சமூகம், கல்வி நிறுவனங்கள் தாண்டி பெண்கள் தங்களுக்காக நிற்க வேண்டும். ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பழமொழி எழுதப்பட்ட கால, சூழல் வேறு. அதற்கான களமும் வேறு. ஆனால், வெகு நிச்சயமாக பெண்களுக்காக பொருத்திப் பார்க்கலாம். நீங்கள் உங்களுக்கான சுதந்திரத்தை யாராவது கொடுப்பார்கள் என்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்காகப் போராட உங்களைவிட மிகத் திறமையானவர், தகுதியானவர் யாரும் இருக்க முடியாது. எந்தச் சூழலில் மீண்டெழ கல்வி அவசியம். அதை வாழ்க்கைக்குமானதாக மாற்றிக் கொள்வது உங்கள் வசம். இப்போது அதை செய்யாவிட்டால், எப்போது செய்யப்போகிறீர்கள் பெண்களே..! இது ஒரு கூட்டுப் பொறுப்பு: இங்கே சமூகத்தையும், பெறோரையும் பெண் சுதந்திரத்தை மதியுங்கள் என்று அறிவுரை சொல்லும் அதேவேளையில் ஆண்களுக்கும் முக்கியமாக சில அறிவுறுத்தல்கள் உள்ளன. எத்தனை காலம் தான் நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களாக, வரதட்சிணைக் கொடுமை செய்பவர்களாக, பெண் அடிமைத்தனம் செய்பவர்களாக, குடும்பத்தின் கவுரவத்தை பெண்ணின் தலையில் சுமத்துபவர்களாக இருப்பீர்கள். கொஞ்சமேனும், வெட்கப்பட மாட்டீர்களா? சிறிதளவேனும் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த மாட்டீர்களா?. உங்கள் கல்வியை சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாது சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் பயன்படுத்தும் வகையில் கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பாலின சமத்துவத்தை மதியுங்கள். அதுவே இல்வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும். படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள், எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? டிரீம் வெட்டிங் செய்வீர்களா? என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறா பெண்கள். வரதட்சிணைக் கொடுமையால் நிகழும் மரணங்களில் இவர்கள் எல்லோருமே ஸ்டேக் ஹோல்டர்ஸ்தான். இதனை ஒழிப்பதென்பது சமூக கூட்டுப் பொறுப்பே! https://www.hindutamil.in/news/life-style/1367877-will-the-rithanya-case-serve-as-a-wake-up-call-for-parents-who-perpetuate-dowry-culture-4.html
-
நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
நாடு கடத்தல்களை எதிர்க்கும் - பாலஸ்தீனியர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிக்கும் ஜனநாயக கட்சியின் நியுயோர்க்கிற்கான மேயர் வேட்பாளர் - குடியுரிமையை இரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முயற்சி Published By: RAJEEBAN 02 JUL, 2025 | 11:38 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியேற்றவாசிகளை நாடுகடத்தும் நடவடிக்கை போன்றவற்றை எதிர்க்கும் நியுயோர்க் நகரத்திற்கான ஜனநாயக கட்சியின் மேயர் வேட்பாளர் ஜொஹ்ரான் மம்டானியின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வது குறித்து வெள்ளை மாளிகை ஆராய்கின்றது. வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க பிரஜைகள் சில குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டால் அவர்களின் பிரஜாவுரிமையை பறிக்கலாம் என்ற சட்டத்தினை வெள்ளை மாளிகை பயன்படுத்த முயல்கின்றது. குடியுரிமை செயற்பாட்டின் போது பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை மம்டானி மறைத்திருக்கலாம் இதன் காரணமாக அவரின் குடியுரிமையை இரத்து செய்யலாம் என குடியரசுக்கட்சியின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளதை ஏற்க்கும் விதத்தில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை நியுயோர்க் மேயராக தெரிவு செய்யப்பட்டால் எங்கள் அயலவர்களை நாடு கடத்துவதை தடுப்பேன் என மம்டானி தெரிவித்துள்ளமை குறித்து பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, மம்டானி அவ்வாறு செயற்பட்டால் அவரை நாங்கள் கைதுசெய்யவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள மம்டானி அமெரிக்க ஜனாதிபதி என்னை கைதுசெய்யப்போவதாக மிரட்டியுள்ளார், எனது பிரஜாவுரிமையை பறிக்கப்போவதாக தெரிவித்துள்ளார், இதற்கு நான் சட்டங்களை மீறியது காரணமல்ல, நான் எங்கள் நியுயோர்க் நகரத்தை சுங்க மற்றும் குடிவரவுதுறையினர் அச்சுறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தமையினாலேயே டிரம்ப் இவ்வாறு மிரட்டுகின்றார் என குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அறிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மாத்திரமல்ல, நிழலில் மறைய மறுக்கும் ஒவ்வொரு நியுயோர்க் பிரஜை மீதான தாக்குதல் என தெரிவித்துள்ள மம்டானி நீங்கள் குரல் எழுப்பினால் அவர்கள் உங்களை தேடிவருவார்கள் நாங்கள் இவ்வாறான அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். உகன்டாவில் இந்திய வம்வாவளி பெற்றோருக்கு பிறந்த 33 வயது மம்டானி பாலஸ்தீனியர்களிற்கான உரிமைக்கான ஆதரவின் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். https://www.virakesari.lk/article/219001
-
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01) நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலான சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்ன நடக்கிறது? அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் எலும்புக்கூடு நீல நிறத்திலான புத்தக பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையொன்றின் எலும்புக்கூடு இரு தினங்களுக்கு முன்பு முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்ட இடத்திலிருந்து பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''ஏற்கெனவே அடையாளப்படுத்தி பாடசாலை புத்தக பையுடன் இருந்த மனித உடல், முழுமையாக நாள் முழுவதையும் செலவிட்டு, நிலத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளது, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலுடன் காலணியும், அதேநேரத்தில் சிறிய குழந்தைகள் விளையாடுகின்ற பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.'' என வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள் யாழ்ப்பாணம் - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்றைய தினம் பின்னிப் பிணைந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார். இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 5 எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தென்படுகின்ற நிலையில், அந்த தொகுதியில் சரியாக எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளமை குறித்து தற்போதைக்கு சரியாக கூற முடியாது எனவும் அவர் கூறுகின்றார். ''இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வு பணிகளில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததான மேலதிக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாக சொல்ல முடியாது. அதுவொரு குழப்பமான முறையில் அந்த உடலங்கள் காணப்பட்டுள்ளன.'' என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பொம்மை செம்மணி மனிதப் புதைகுழி வழக்கை ஒன்றாக தொட முயற்சி யாழ்ப்பாணம் - செம்மணி பழைய மனிதப் புதைகுழி வழக்கையும், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி வழக்கையும் ஒன்றாக இணைந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். 'செம்மணி பழைய புதைகுழி தோண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சட்ட மருத்துவ அதிகாரி பெரேரா அகழ்வு நடந்த பிரதேசத்துக்கு வருகைத் தந்தார். தற்போது அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்ற சட்ட மருத்துவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடி கடந்த அகழ்வு பணிகளின் தகவல்களை வழங்கியிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது. "கிட்டத்தட்ட அந்த வழக்கும் இந்த வழக்கும் இருவேறு வழக்குகளாக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புப்படுத்த வேண்டிய நிலைமை இருக்கின்றது. இதனால், முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய வழக்கை இந்த வழக்குடன் சேர்ந்து அழைப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் செய்வதற்கான கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றது" என அவர் குறிப்பிடுகின்றார். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து யாழ்ப்பாணம் 1995ம் ஆண்டு காலப் பகுதியில் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுவோர் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், செம்மணி பகுதியில் 1999-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வு பணிகளில் போது அந்த பகுதியில் மனிதப் புதைகுழி காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மனிதப் புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இந்த செம்மணியை அண்மித்த பகுதியிலிருந்து தற்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன 'செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரித்தால் சட்ட நடவடிக்கை' சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஆதாரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் வெவ்வேறு விதங்களில் சித்தரித்து வருகின்றமையை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதாரங்களை சித்தரிக்கும் செயற்பாடு தொடரும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''இந்த புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எலும்பு மாதிரிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக பிழையான விதத்திலான படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான தகவல்கள் வெளியிலும் பரப்பப்படுகின்றது. இதுவொரு குற்றவியல் விசாரணை நடவடிக்கையின் ஊடாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், இனிவரும் காலங்களில் அப்படியானது வருமாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நாங்கள் உத்தேசித்திருக்கின்றோம்.'' என அவர் குறிப்பிடுகின்றார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக படங்கள் வெளியிடப்படும் பட்சத்தில், அது விசாரணைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பகரமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார். அதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வழக்கறிஞர் மேலும் தெரிவிக்கின்றார். ஐநா மனித உரிமை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க், செம்மணி பகுதிக்கு அண்மையில் சென்றிருந்தார். செம்மணி பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய மனித உரிமை ஆணையாளர், நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்ததையும் காண முடிந்தது. இலங்கையில் தொடரும் மனிதப் புதைகுழிகள் இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளன. புதைகுழிகள் யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம் யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைகுழி கிளிநொச்சி - மனிதப் புதைகுழி கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைகுழி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைகுழி மன்னார் - மன்னார் மனிதப் புதைகுழி மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைகுழி கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைகுழி கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைகுழி கொழும்பு - கோகந்தர மனிதப் புதைகுழி கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைகுழி மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைகுழி இரத்தினபுரி - இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைகுழி மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைகுழி மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைகுழி கண்டி - அங்கும்புர மனிதப் புதைகுழி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dg05qgl3wo
-
150 கி.மீ நீளம்; போர்த்துக்கலில் சுனாமி அலைகள் போல் தோன்றிய மேகங்கள்!
காணொளி https://www.youtube.com/shorts/-b-j9uoRVnE
-
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!
இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது - டிரம்ப் 02 JUL, 2025 | 10:21 AM இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார். சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக பாடுபட்ட எகிப்தும் கத்தாரும் இந்த யுத்த நிறுத்த யோசனையை ஹமாசிடம் கையளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கின்றேன் இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முற்றிலும் தயாராகவுள்ளது என ஐக்கியநாடுகளிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இஸ்ரேலிய பிரதமர் காசாவில் மோதல்களை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப் இது தொடர்பில் அடுத்த வாரம் உடன்பாடு ஏற்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218991
-
செம்மணி மனித புதைகுழி - தமிழினப்படுகொலை - சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் - கனடிய தேசிய தமிழர் அவை
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது - கனடிய தேசிய தமிழர் அவை Published By: RAJEEBAN 02 JUL, 2025 | 11:02 AM செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில் கனடிய தேசிய தமிழர் அவை மேலும் தெரிவித்துள்ளது. ஜூன் 25 2025 அன்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் தமிழ் மக்கள் காணாமல் போனதுடன் தொடர்புடைய செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டார். இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்சவின் வாக்குமூலத்தின் பின்னர் இந்த மனித புதைகுழி முதலில் 1998 இல் உறுதிப்படுத்தப்பட்டது.1996இல் இவர் கிருஷாந்தி குமாரசுவாமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தார் என்பது நிருபிக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது ராஜபக்ச செம்மணியில் காணாமல்போன 300 முதல் 400 வரையிலான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு;ளதாக தெரிவித்தார். இவரது வாக்குமூலமும் சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையும் ( சர்வதேச மன்னிப்புச்சபை தனது முன்னைய அறிக்கைகளில் பெருமளவானவர்கள் காணாமல்போனது,இரகசிய புதைப்புகள் குறித்து நம்பகதன்மைமிக்க ஆதாரங்களை முன்வைத்திருந்தது.) இது தொடர்பில் ராஜபக்ச மிகவும் திட்டவட்டமான தகவல்களை வெளியிட்டிருந்தார், அவர் கடத்தல்,சித்திரவதை கொலைகளில் உயர் அதிகாரிகளிற்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். வதைமுகாம்கள் காணப்பட்ட பகுதிகள்,பாதிக்க்பபட்டவர்கள்,ஆகியவை குறித்த தகவல்களை வழங்கியதுடன் உடல்கள் புதைக்கப்பட்ட சில இடங்களையும் காண்பித்திருந்தார். கடும் பாதுகாப்பின் மத்தியில் திறந்த நீதிமன்றத்திற்கு அவர் தனது வாக்குமூலத்தினை வழங்கினார்,இலங்கை அரசாங்;கம் அதுவரை தெரிவித்து வந்ததை அவர் நேரடியாக சவாலிற்கு உட்படுத்தியதுடன் இலங்கையில் திட்டமிடப்பட்ட தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் காணப்படுவதை வெளிப்படுத்தினார். பலவருட மௌத்திற்கு பின்னர் இந்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் செம்மணி கவனத்i ஈர்த்தது.அரியாலை சித்துபாத்தி மயானத்தில் தகனமேடையை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்தனர்.ஜூன் 8ம் திகதியளவில் இந்த பகுதி மனித புதைகுழி காணப்படும் பகுதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று குழந்தைகளினது உடல்கள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஜூன் 29ம் திகதி இடம்பெற்ற அகழ்வின் போது சிறுபிள்ளையொன்றின் எலும்புக்கூடுகளும் நீலநிற புத்தகபையும் மீட்கப்பட்டது,அந்த பையில் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் காணப்பட்டன. சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும்,புத்தகபைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையும்,இந்த பகுதியில் சிறுவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் என நீண்டகாலமாக தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேச கண்காணிப்புடனான தடயவியல் சோதனை குறித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் ஆதாரங்களை மறைக்கும் நீதியை குழப்பும் வரலாற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். செம்மணியில் இதுவரை 33 மனிதஎச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன,மேலும் செய்மதி படங்கள் இந்த பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன,இவற்றை எதிர்காலத்தில் அகழ்வதற்கான திட்டங்கள் உள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் போது முழுமையான விசாரணைகளை கோரினார்.சர்வதேச நிபுணர்கள் தடயவியல் நிபுணர்களின் வலுவான விசாரணைகள் மூலமேஉண்மையை வெளிக்கொணர்ந்து காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு முடிவை காணமுடியும் என அவர் தெரிவித்திருந்தார். செம்மணி மனித புதைகுழி தோண்டப்படுவது தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கையின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பதற்கான தெளிவான சான்றாகும். தமிழ் இனப்படுகொலைகள் ஆரம்பித்தது முதல் வடக்குகிழக்கில் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித புதைகுழிகளிற்கு பின்னால் உள்ள உண்மையை மறைக்க முயன்றுள்ளனர். பொறுப்புக்கூறல் இன்மை தொடர்வது இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/218996
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா ஒருமுறை கூட வெல்லாத ஆடுகளம் எப்படி உள்ளது? பும்ரா ஆடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில்லும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹாமில் இன்று(ஜூலை2ம் தேதி) தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிக்கு உதவிய அதே வீரர்களோடு, மாற்றமில்லாமல் 2வது டெஸ்டிலும் களமிறங்குகிறது. ஆனால், இந்திய அணி இதுவரை ப்ளேயிங் லெவனை வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை. பிரம்மாஸ்திரம் பும்ராவை விளையாட வைக்கலாமா அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிக்கு இடம் கிடைக்குமா என கணிப்புகள் வந்தாலும் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் நிர்வாகத்திடம் இருந்து இல்லை. டாஸ் நிகழ்வுக்குப்பின்புதான் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஏமாற்றாத இளம் அணி விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத, நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் டெஸ்டில் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பந்த் இரு சதங்கள், கேப்டன் கில், ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் ஆகியவை மனநிறைவை அளித்தன. ஆனால், இவர்கள் தவிர இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்பு குறிப்பாக கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பங்களிப்பு ஏமாற்றத்தை அளித்தது. பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸில்தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததேத் தவிர 2வது இன்னிங்ஸில் பெரிதாக பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. வேகப்பந்துவீச்சில் பும்ரா தவிர பிரசித் கிருஷ்ணா, ஷர்துல், சிராஜ் ஆகியோரின் எக்னாமி ரேட், விக்கெட் வீழ்த்தும் திறன் கவலைக்குரியதாக முதல் டெஸ்டில் இருந்தது. ஷர்துல் தாக்கூர் அணியில் கொண்டுவந்ததே கேள்விக்குரியதாக மாறிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் சுப்மன் கில் கேப்டன்ஷிப் மீதான கேள்வி இளம் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு ஸ்திரத்தன்மையுடன் இருந்தாலும், பந்துவீச்சில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாள வேண்டும், எந்த சூழலில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது, புதிய பந்தில் யாரை பந்துவீசச் செய்வது, யாருக்கு அதிக ஓவர்கள் வழங்குவது என்பதில் முடிவெடுப்பதில் இன்னும் தடுமாற்றத்தைச் சந்திக்கிறார். இந்த சூழலில் 2வது டெஸ்ட் போட்டி இன்று பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று துணைப் பயிற்சியாளர் ரேயன் டான் டஸ்சே தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையான மாற்றம் என்பதில்தான் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. புதிய வரலாறு படைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி விளையாடும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 2011ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது, 2018ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 18 ரன்களில் இந்திய அணி தோற்றது. 2022ம் ஆண்டில் பும்ரா கேப்டன்ஷிப்பில் நடந்த போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 1986ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி டிரா செய்துள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து எப்போதுமே இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து பதிலடி கொடுத்தாலும் இதுவரை இந்த மைதானத்தில் வெற்றிக்கொடி நாட்டியதில்லை. பிரிம்மிங்ஹாமில் நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் அது வரலாற்று வெற்றியாக, இந்த நூற்றாண்டிலேயே முதல் வெற்றியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. 'பாஸ்பால்' உத்தியில் தொடர் வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிராண்டம் மெக்கலம் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பிரெண்டம் மெக்கலம் வந்தபின் பாஸ்பால் உத்தியை கையில் எடுத்து தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் வந்தபின், உள்நாட்டில் நடந்த 21 டெஸ்ட் போட்டிகளில் 16 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 4 வெற்றிகளையும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்று, ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஷஸ் தொடரில் மட்டும் இங்கிலாந்து பேட்டர்கள் 3938 பந்துகளைச் சந்தித்து 2920 ரன்கல் சேர்த்தனர். 85 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 93 விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆஷஸ் தொடரில் இருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் 41% "குட்லென்த்"தில்(6முதல்8மீட்டருக்குள்) வீசிவருகிறார்கள். பேட்டர்களும் சராசரியாக 39 ரன்களும், ஓவருக்கு 3.69 ரன்களும் சேர்த்து வருகிறார்கள். இது ஆஷஸ் மட்டுமல்ல, அடுத்து நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைத் தொடர்களிலும் இங்கிலாந்து வீரர்களின் நிலைத்தன்மை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சீராக இருந்து வருகிறது. இங்கிலாந்து அணி வோக்ஸ், ஸ்டோக்ஸ், கார்ஸ், டங்க் ஆகிய இளம் பந்துவீச்சாளர்களை வைத்துதான் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களும் இரு இன்னிங்ஸிலும் 47% பந்துகளை "குட்லென்த்தில்" வீசியதாக கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் டெஸ்டில் மைதானம் தட்டையாக இருந்தபோதிலும் அதில் ஸ்விங் செய்த சதவீதமும் இந்திய அணியைவிட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிகமாகவே பந்தை திருப்பினர். ஒட்டுமொத்தத்தில் பாஸ்பால் உத்தியைக் கையாண்டு இங்கிலாந்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் அந்த அணி செய்யாமல் 2வது டெஸ்டில் விளையாடுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்தபோதிலும் அவரை 2வது டெஸ்டில் பயன்படுத்தாமல் மாறாத ப்ளேயிங் லெவனில் இங்கிலாந்து களமிறங்குகிறது பேட்டிங்கில் பிளங்கெட், போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ஸ்மித் என பேட்டிங்கிலும் வலுவாக இருக்கிறார்கள். இதில் டெய்லெண்டர்கள் வோக்ஸ், கார்ஸ் வரை சிறப்பாக பேட்செய்வது அந்த அணிக்கு பெரிய பலமாகும். அதனால்தான் முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். டெஸ்ட் போட்டியில் கூட பாஸ்பால் உத்தியில் வேகமாக ரன்களைச் சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்வது இந்திய அணிக்கு பெரிய சவாலாகும். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு இணையாக முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்தனர், 2வது இன்னிங்ஸிலும் 370 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பேட்டிங் வரிசையை உடைக்க ஆடுகளம், காலநிலை சாதகமாக இல்லாதபட்ச்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாகவே 2வது டெஸ்ட் போட்டி இருக்கும். 'ப்ளேயிங் லெவனில் சஸ்பென்ஸ்' இந்திய அணியின் ப்ளேயிங்கில் லெலவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், அவரை பயன்படுத்துவது என்பது கடைசி நேரத்தில்தான் முடிவாகும். ஏனென்றால் 3 டெஸ்டில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதால் அவருக்கு சுமையைக் குறைக்கும் வகையில் சரியாக பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்துவரக்கூடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவின் பங்களிப்பு தேவை என்பதையும் உணர்ந்துள்ளது நிர்வாகம். ஆதலால், பும்ரா அணியில் இடம் பெறுவது என்பது கடைசி நேரத்தில் ஆடுகளத்தின் தன்மை, காலநிலையைப் பொருத்துதான் முடிவாகும். அதேநேரம், வேகப்பந்துவரிசையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. கடந்த டெஸ்டில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஷர்துல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக நிதிஷ் ரெட்டி அழைக்கப்படலாம். நிதிஷ் ரெட்டி ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து, பந்துவீச்சிலும் ஓரளவு 5வது பந்துவீச்சாளர் பணியை சிறப்பாகச் செய்தார் என்பதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர் பும்ரா நிதிஷ் ரெட்டியை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நடுவரிசை பேட்டிங் இன்னும் ஸ்திரமாகும். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். பும்ரா அல்லது கருண் நாயர் இல்லாத பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வரலாம். சுந்தர் வருகையால் பேட்டிங் வரிசையும் ஸ்திரமாகும், அதேநேரம் கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் கிடைக்கக்கூடும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா, சிராஜ் ஆகிய இருவரும் தங்களின் எக்கானமி ரேட்டை குறைக்கும் வகையில் 2வது டெஸ்டில் பந்துவீசுவது அவசியமாகும். கடந்த டெஸ்டில் இருவரும் ஓவருக்கு 6 ரன்ரேட்டை சராசரியாக விட்டுக்கொடுத்தனர். ஐபிஎல் தொடரில்கூட இருவரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. கடந்த டெஸ்டில் வெற்றி இந்திய அணியிடம் கைநழுவி சென்றதற்கு பந்துவீச்சில் சொதப்பியது முக்கியக் காரணமாகும். அதேசமயம், பீல்டிங்கிலும் கடந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்பட்டு பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு டெஸ்டில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் வந்தது. ஜெய்ஸ்வால், மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக தீவிரமான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டார். இந்த டெஸ்டில் பீல்டிங்கில், குறிப்பாக கேட்ச் பிடிப்பதில் கூடுதல் கவனத்தை இந்திய வீரர்கள் செலுத்துவது அவசியமாகும். ஆடுகளம் எப்படி உள்ளது? பிர்மிங்ஹாமில் இருக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் வரலாற்று ரீதியாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு நிலவும் காற்று, காலநிலையால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும். ஆனால், இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக மாறிவிட்டன. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் வெட்டி குறைக்கப்படும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று 2வது டெஸ்ட் போட்டியும் இரு அணிகளின் பேட்டர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கக்கூடும். முதல் இருநாட்களில் காலநிலையை நன்கு பயன்படுத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய இயலும், நன்கு பவுன்ஸ் செய்யலாம். அதிலும் டியூக் பந்தில் தொடக்கத்தில் 30 ஓவர்கள் வரை டாப்ஆர்டர் பேட்டர்கள் நிதானமாக பந்து சற்று தேயும் வரை ஆடுவது அவசியமாகும். ஆனால், பெரும்பாலும் 3வது நாளில் இருந்து ஆடுகளம் வறண்டு இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஓங்கக்கூடும். குளிர்ந்த காலநிலை, மழை சூழல், காற்றின் வேகம் ஆகியவற்றைப் பொருத்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் தன்மை மாறக்கூடும். முதல் நாளிலும், கடைசி நாள் ஆட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள், பிளவுகளால் பந்து திடீரென பவுஸ்ஆகலாம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதுதான் இந்த மைதானத்தில் சிறந்ததாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljj2yyz80o
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் : சமூக செயற்பாட்டாளரான சகோதர மொழி இளைஞன் 02 JUL, 2025 | 10:14 AM யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம். யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார். https://www.virakesari.lk/article/218985
-
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம்! 02 JUL, 2025 | 10:02 AM இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10 சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார். ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார். "முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது." தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார். செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. https://www.virakesari.lk/article/218984
-
இந்தியை மூன்றாவது மொழியாக்கும் முயற்சியில் இருந்து மகாராஷ்டிர அரசு பின்வாங்கியது ஏன்?
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 1 ஜூலை 2025 மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாங்க ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். மும்மொழிக் கொள்கையை எந்த வகுப்பிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசின் சார்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறிய ஃபட்னாவிஸ், இந்தக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், "எங்களுக்கு மராத்தி முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, அதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார். நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு "இந்தப் பிரச்னையில் தவறான அரசியல் நடக்கிறது. எனவே, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதித்தோம். எந்த வகுப்பிலிருந்து இந்த கொள்கையை செயல்படுத்த வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும், மும்மொழிக் கொள்கை தொடர்பாக குழந்தைகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய நரேந்திர ஜாதவ் தலைமையில் மாநில அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். "இந்தக் குழுவின் அறிக்கை வந்த பிறகே மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும். அதனால், 2025ம் ஆண்டு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியான இரு அரசு உத்தரவுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். புதிய குழு, மும்மொழிக் கொள்கையைச் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்யும்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார். "இந்தக் குழு மும்மொழிக் கொள்கை குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களின் கருத்துகளையும் கேட்கும். அதன் பிறகு, எங்கள் மாணவர்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுக்கும். மாநில அரசு அந்த முடிவை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். மராத்தி (மொழி) மற்றும் மராத்தி மாணவர்கள் மட்டுமே எங்களுக்கு முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, மராத்தி மாணவர்களை மையமாகக் கொண்டது. இதில் நாங்கள் எந்த அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். ஜூலை 5-ஆம் தேதி பேரணி அல்லது கூட்டம் நடைபெறும் - உத்தவ் தாக்கரே "மராத்தி மக்களின் அதிகாரத்தின் முன் அரசாங்கம் தோற்றுவிட்டது. சம்யுக்த மகாராஷ்டிரா காலத்திலும் இதேபோன்ற இயக்கம் நடந்தது, அந்த நேரத்திலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அப்போது, இந்த சதியை நாங்கள் முறியடித்தோம், அதேபோல், இந்த முறையும் இந்த சதியை முறியடித்தோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். மராத்தி மக்களைப் பிரித்து அமராதி வாக்குகளை ஈர்க்க அரசாங்கம் ஒரு மறைக்கப்பட்ட செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், நாங்கள் மொழியை எதிர்க்கவில்லை, அதனை திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் என்ற நியாயமான நிலைப்பாட்டை மராத்தி மொழி பேசும் மக்கள் எடுத்தனர். எனவே, மராத்திக்கும் அமராதிக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை. இந்தப் பிரிவு தங்களுக்கு நன்மை தரும் என்று அரசாங்கம் நினைத்தது. ஆனால் இன்றைய போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 5ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணி தடுக்கப்படவும், மராத்தி மக்கள் ஒன்று கூடாமல் இருக்கவும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக பொய்கள் மற்றும் வதந்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. பொய்யான வழிகளில் வெற்றி பெறுவது பாஜகவின் தொழிலாகிவிட்டது. மராத்தி மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். நெருக்கடி வந்த பிறகுதான் ஒன்றாகச் சேர வேண்டுமா? என்கிற கேள்வியுடன் நான் மராத்தி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜூலை 5ஆம் தேதி, மொழித் திணிப்புக்கு எதிராக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது, அதை வெற்றிப் பேரணியாக மாற்றி, அதன் வடிவத்தை முடிவு செய்யப் போகிறோம். இந்த இயக்கத்தின் போது ஒன்றாகக் கூடிய அனைத்து கட்சிகளும், ஜூலை 5ஆம் தேதி என்ன செய்ய வேண்டும் என்பதை சேர்ந்து முடிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். "அந்தக் குழுவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. யார் குழுவை நியமித்தாலும், அவர்கள் எங்களை கட்டாயப்படுத்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. யார் நியமித்தாலும், அவர்கள் எங்களை வற்புறுத்த அனுமதிக்க முடியாது. ஜூலை 5ஆம் தேதி ஒரு கூட்டம் அல்லது பேரணி இருக்கும். மராத்தி மக்களே, இப்போது உறங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். "மஷேல்கர் குழு அறிக்கையை இன்னும் வாசிக்கவே இல்லை"-உத்தவ் தாக்கரே பட மூலாதாரம்,FACEBOOK/SHIVSENA படக்குறிப்பு, "மராத்தி மக்களே, இப்போது தூங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார். "மஷேல்கர் குழு அறிக்கையைப் பற்றி பேசும் பாஜகவுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் 'ரூமர் பேக்டரி' என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன் போஸ்டரில் தேவேந்திர ஃபட்னாவிஸின் புகைப்படத்தை வையுங்கள்" என்று மஷேல்கர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். "முதலமைச்சருக்கு மராத்தி மொழி புரியுமா? இந்தக் குழு முதலில் உயர் கல்விக்காகவே நியமிக்கப்பட்டது. அப்போது உதய் சமந்த் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். அந்தக் குழுவில் தொடக்கக் கல்வி தொடர்பான யாரும் இல்லை. இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்த வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ய எனது தலைமையில் ஒரு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டதால், அந்த அறிக்கையின் பக்கத்தைக் கூட என்னால் திருப்ப முடியவில்லை. முதலமைச்சர் மராத்தியை கற்றுக்கொண்டு, அதைப் படித்த பிறகுதான் விமர்சிக்க வேண்டும். ஏனெனில் நான் அந்த அறிக்கையை இன்னும் படிக்கவே இல்லை" என்று உத்தவ் தாக்கரே கூறினார். மேலும், "தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழு ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. அந்த அறிக்கையில் என்ன இருந்தாலும், இந்தியை கட்டாயமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்த நேரத்தில் அவர்கள் துரோகம் செய்து எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர்" என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். "ஒரு நெருக்கடிக்குப் பிறகு ஒன்று சேர்வதற்குப் பதிலாக, அது நடப்பதற்கு முன்பு நாம் ஒன்று சேர்ந்தால், எந்த நெருக்கடியும் இருக்காது. தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைவார்கள் என அரசாங்கம் பயந்ததால் தான் இந்த உத்தரவை ரத்து செய்தது" என்று தாக்கரே கூறினார். இந்தி பற்றிப் பேசிய உத்தவ் தாக்கரே, "நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கும், குஜராத்தில் குஜராத்திக்கும், மகாராஷ்டிராவில் மராத்திக்கும் நீதி கிடைக்க வேண்டும். மக்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களை சாணக்கியர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்றார். "அரசாங்கத்துக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?" - ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் இந்த விவகாரம் தொடர்பான சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். "ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைக் கற்பித்தல் என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் முடிவு நிரந்தரமாகத் திரும்பப் பெறப்பட்டது. இது தொடர்பாக, அரசாங்கம் இரண்டு அரசாணைகளை ரத்து செய்துள்ளது. இதைத் தாமதமாக பெறப்பட்ட ஞானம் என்று சொல்ல முடியாது, ஏனெனில் மராத்தி மக்களின் எதிர்ப்பினால் மட்டுமே இது திரும்பப் பெறப்பட்டது" என்று ராஜ் தாக்கரே பதிவிட்டுள்ளார். அரசாங்கம் இந்தி மொழியை இவ்வளவு பிடிவாதமாக திணிக்க முயன்றதற்கும், அதற்கான அழுத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்ட போது, பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதில் பங்கேற்கத் தயாராக இருந்தன. அந்தப் பேரணி நடந்திருந்தால், அது மிகப் பெரிதாக இருந்திருக்கும். அது சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் நாட்களை நமக்கு நினைவூட்டியிருக்கும். ஒருவேளை இந்த ஒற்றுமையால் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பரவாயில்லை. அப்படி ஒரு பயம் இருக்கவேண்டும்" என்று ராஜ் தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே தொடர்ந்து பேசுகையில், "இன்னொரு விஷயம், அரசாங்கம் மீண்டும் ஒரு புதிய குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு அறிக்கை வெளிவருகிறதோ, இல்லையோ, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் சகித்துக்கொள்ளப்படாது. அரசாங்கம் இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இந்த முடிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம், மகாராஷ்டிர மக்களும் அவ்வாறே எண்ணுகின்றனர். " என்றும் அவர் கூறினார். தாக்கரே சகோதரர்களின் ஐக்கிய முன்னணி தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவால் மும்பையில் நேற்று (ஜூன் 30) ஒரு அடையாள ஹோலி போராட்டம் நடத்தப்பட்டது. வரும் வாரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா மற்றும் சிவசேனா (தாக்கரே) ஆகியவை ஒன்றிணையும், இதன் விளைவாக, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரும் 'இந்தி சக்தி'யை எதிர்க்க ஒன்றிணைவார்கள். ஏற்கெனவே, தாக்கரே சகோதரர்களின் கூட்டு இயக்கம் உட்பட இந்தி மொழி திணிப்பு தொடர்பான பிரச்னை மகாராஷ்டிரா அரசியலைக் கிளறி வருகிறது. 'இந்தி கட்டாயம்' குறித்த சர்ச்சை தேசிய கல்விக் கொள்கையின்படி, மகாராஷ்டிராவில் முதலாம் வகுப்பிலிருந்தே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும், இந்தி மொழியை மூன்றாம் மொழியாக 'கட்டாயமாக்க'வும் மாநில அரசு ஏப்ரல் மாதம் முடிவு செய்தது. இருப்பினும், மாநிலம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் அதே மாதத்தில், ஜூன் மாதத்தில் 'கட்டாய' என்ற வார்த்தையை திரும்பப் பெற்று, 'பொது' என்ற வார்த்தையைச் சேர்த்து திருத்தப்பட்ட அரசாங்க முடிவை வெளியிட்டது. இருப்பினும், மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகள், 'மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்காமல் வேறு இந்திய மொழியைக் கற்க விருப்பம் இருந்தால், ஒப்புதல் வழங்கப்படும். இருப்பினும், இந்த மொழியைக் கற்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக இருக்க வேண்டும், அப்போதுதான் ஒரு ஆசிரியர் கிடைக்கப் பெறுவார், இல்லையெனில் அது ஆன்லைனில் கற்பிக்கப்படும்.' இந்த 'திருத்தப்பட்ட' அரசாங்க முடிவுக்கு கல்வித் துறை வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e007l478zo
-
பழைய மற்றும் புதிய செம்மணி புதைகுழி வழக்குகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை - சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
Published By: VISHNU 02 JUL, 2025 | 01:53 AM பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஐந்தரை நாட்கள் முடிவடைந்தது. இன்றைய நாளில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித உடல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் உடலுடன் சப்பாத்து குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. அதனுடைய எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அகழ்வு நடந்த பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். தற்போது அகழ்வு பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரியோடு பேசி கடந்த அகழ்வு பணி தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார். பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது. ஏற்கனவே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பகுதிகள் நீதிமன்ற அனுமதிக்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய தொல்லியல் துறை மாணவர்களின் உதவியுடன் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் சேர்ந்து தற்போது துப்பரவாக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/218978
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, காவலாளி அஜித் குமாரும் அவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "என் கண் எதிரிலேயே அவனை அடித்தார்கள். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். வாயில் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினார்கள். கோவிலின் பின்புறம் கூட்டிப் போய் நகை எங்கே என்று கேட்டு அடித்தனர். அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான்" எனக் கூறி கண்கலங்கினார், காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார். "எங்கள் புகாரால் ஓர் உயிர் பறிபோகும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" என்கிறார், காவலாளி மீது புகார் கொடுத்த நிகிதா. திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் போட்டுக் காண்பித்தனர். கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மடப்புரம் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம் அமைந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த கூலி தொழில்கள் பிரதானமாக உள்ளன. மடப்புரம் கிராமத்தில் என்ன நிலவரம்? மடப்புரம் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சென்ற போது, கோவிலைச் சுற்றி கடை வைத்திருந்த வணிகர்கள் பலரும் பேசவே தயங்கினர். ஒரு சில பெண்கள், "நாங்கள் வெளியூரில் இருந்து வந்து வியாபாரம் செய்கிறோம். போலீஸ் அடித்து அந்தப் பையன் இறந்துபோன தகவலைக் கேள்விப்பட்டோம். அவர் யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததில்லை" எனக் கூறினர். கோவிலுக்கு அருகில் பூ வியாபாரம் செய்து வரும் ஆறுமுகத்தாய் பிபிசி தமிழிடம் பேசும்போது, "இந்த வழியாக அந்தப் பையன் வேலைக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு போலீஸ் அழைத்துக் கொண்டு போனதாக கூறினார்கள். போலீஸ் அடித்ததை நான் பார்க்கவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு பிபிசி தமிழ் சென்றது. மிகப் பழைமையான அந்த வீடு அமைந்துள்ள தெருவில் சில அரசியல் கட்சி நிர்வாகிகளின் கார்கள் நின்றிருந்தன. படக்குறிப்பு, மாலதி "சடலமாக வருவான் என நினைக்கவில்லை" அஜித்குமாரின் தாய் மாலதியிடம் பிபிசி தமிழ் பேசுகையில், "சாமி கும்பிட வந்த ஒரு பெண், தனது காரை பார்க்கிங் செய்வதற்காக சாவியை என் மகனிடம் கொடுத்துள்ளார். அவன் தனக்குத் தெரிந்தவர்களிடம் சாவியைக் கொடுத்துள்ளான். சாமி கும்பிட்டுவிட்டுக் கிளம்பி போன அவர்கள், திரும்பி வந்து நகையைக் காணவில்லை எனக் கூறி கோவில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்" என்றார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் நகை மற்றும் 2,500 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரித்துள்ளனர். "மாலை நான்கு மணியளவில் என் மகனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருப்பது தெரிந்தது. அங்கு அவனிடம், 'அரிசி மாவு ஆட்டி உங்களை எல்லாம் காப்பாத்தினேன். நகை எடுத்திருந்தால் கொடுத்துவிடு' எனக் கூறி அழுதேன். நான் எடுக்கவில்லை எனக் கூறினான். அங்கிருந்து போலீஸார் என்னை விரட்டிவிட்டனர்" எனக் கூறினார் மாலதி. "மறுநாள் என் மகனை சடலமாகக் கொடுப்பார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்றவாறு மாலதி கதறி அழுதார். இவரது கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாவு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நிகிதா கொடுத்த புகாரின்பேரில் ஜூன் 28ஆம் தேதி காலையில் அஜித்குமாரின் வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். படக்குறிப்பு, நவீன்குமார் "மிளகாய் பொடியை கரைத்து ஊற்றினர்" "தனிப்படை காவலர்கள் 3 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். வெளியில் இருந்த வேனில் என் அண்ணன் இருந்தான். சட்டை எல்லாம் மண்ணாக இருந்தது. தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது நன்றாக அடித்துள்ளனர் எனத் தெரிந்தது" என்று அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் கூறினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரவு முழுக்க என் அண்ணனை தூங்கவிடவில்லை. 'உன் தம்பியை அடித்தால் சொல்வாயா?' எனக் கேட்டு என்னையும் அடித்தனர். மதியம் சாப்பிட்ட பிறகு 3 தனிப்படை போலீஸார் அண்ணனை கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாக கூறியுள்ளான்" என்கிறார். கோவிலின் பின்புறம் நகை உள்ளதாகக் கூறியதால் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அங்கு அழைத்து சென்றுள்ளனர். " அங்கு நகை இல்லை எனத் தெரிந்ததும் கோபப்பட்டு காவலர்கள் கடுமையாக அடித்தனர். அவனது அலறல் சத்தம் கேட்டு கோவில் அருகே கடை வைத்திருந்த வியாபாரிகள் ஓடிவந்தனர்" எனக் கூறினார். "போகும் போது என் அண்ணன் நடந்து போனான். வரும்போது தூக்கிக் கொண்டு வந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது மிளகாய்ப் பொடியை கரைத்து வாயில் ஊற்றினர். அருகில் கம்பியெல்லாம் கிடந்தது. கடைசியாக என் சட்டையை கழட்டிக் கொடுத்தேன்." எனக் கூறி கண்கலங்கினார், நவீன்குமார். கோவிலின் பின்புறத்தில் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாட்டுத்தொழுவத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அந்த இடமே சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதாக வெளியில் பேசப்படும் தகவல் குறித்து நவீன்குமாரிடம் கேட்டபோது, "அரசு தரப்பில் உதவி செய்வதாகக் கூறினர். ஆனால், அப்படி எந்த உதவிகளும் வரவில்லை" எனக் குறிப்பிட்டார். "அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களிடம் சாவியைக் கொடுத்ததாகக் கூறினான்." என்று அவரது நண்பரும் அவருடன் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிபவருமான வினோத் கூறினார். காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படும் 5 பேரில் வினோத்தும் ஒருவர். அவர் குறிப்பிடும் இரு ஆட்டோ டிரைவர்களும் காவல்துறை அழைத்துச் சென்ற 5 பேரில் அடங்குவர் என்று வினோத் கூறினார். படக்குறிப்பு, வினோத் காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் அங்கிருந்து திருப்புவனம் காவல் நிலையத்துக்கு பிபிசி தமிழ் சென்றபோது, குடும்பம் சகிதமாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அவர்கள், "நன்றாக வேலை பார்த்ததாக உயர் அதிகாரிகள் நற்சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதை வைத்து எங்கள் குழந்தைகளை வளர்க்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினர். "இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்கும் நியாயம் வேண்டும்" என்று குறிப்பிட்ட அவர்கள், " உயர் அதிகாரிகள் கூறும் போது கீழே உள்ளவர்கள் அதைக் கேட்டு செயல்படத்தான் செய்வார்கள். அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை" எனக் கூறினர். ஆனால், உரிய அனுமதியின்றி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்களை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் "மூன்று மாதங்களாக சம்பளம் வரவில்லை" "பத்தாவது படித்த பிறகு தனியார் கம்பெனியில் என் அண்ணன் வேலை பார்த்து வந்தான். கோவிலில் காவலாளி பணி உள்ளதாகக் கூறியதால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக வேலை பார்த்து வந்தான். மூன்று மாதங்களாக அந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார். கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்த பெண்ணின் மேலிட செல்வாக்கு காரணமாகவே தன் அண்ணனை காவல்துறை தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தினார். புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஓர் உயிர் போனதில் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினால் அழைத்து விசாரிப்பார்கள் என்று தான் தெரியும். காவலாளி இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது" எனக் கூறுகிறார். தானும் 76 வயதான தாய் மட்டுமே வசித்து வருவதாகக் கூறும் அவர், "எனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறுவது தவறானது. ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக சார்பாய்வாளரிடம் புகார் கொடுத்தேன். மதியம் 2.30 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு தான் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தோம்" என்கிறார். "நகையை பின்சீட்டில் வைத்திருந்ததாகக் கூறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என்று கேட்டபோது, "என் தாயார் வயதானவர் என்பதால் யாரும் பறித்துவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக காரின் பின்சீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வேண்டும் என்றே செய்யவில்லை" எனக் கூறுகிறார். "என் நகையை இறந்து போன காவலாளி எடுத்திருப்பாரா என உறுதியாக தெரியாது. என்னிடம் சாவி வாங்கிச் சென்றது அவர் தான். அதைத் தான் கூறினேன். எங்களுக்குக் கடவுளைத் தவிர வேறு யாரையும் தெரியாது" என்கிறார் நிகிதா. படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடந்த காட்சி (இடது), காவலாளி அஜித்குமார் (வலது) "எந்த அதிகாரமும் இல்லை" - ஆஷிஷ் ராவத் காவல்துறை மீதான விமர்சனங்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் ராவத்திடம் விளக்கம் பெறுவதற்காக பிபிசி தமிழ் நேரில் சென்றது. "புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டதால், தற்போது தனக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று மட்டும் அவரது தரப்பு பதிலாக பிபிசி தமிழுக்கு சொல்லப்பட்டது. அஜித்குமார் மரண வழக்கு உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. 5 காவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgk3ryvpekzo
-
பேடோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்து பிரதமராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை
01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கு காசாவின் பிரபலமான சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 30க்கும் அதிகமானவர்கள் பலி 01 JUL, 2025 | 11:51 AM மேற்குகாசாவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளுர் மக்கள் அடிக்கடி செல்லும் பிரபல கடற்கரை சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடற்கரையோரத்தில் கூடாரங்களை கொண்ட அல்பக்சா சிற்றூண்டிச்சாலையில் இருந்து மீட்புக்குழுவினர் 20க்கும் அதிகமான உடல்களை மீட்டுள்ளதுடன் காயமடைந்த பலரை மருத்துவமனைகளிற்கு கொண்டு சென்றுள்ளனர் என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். குண்டுதாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாரிய குழிக்குள் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். நான் இணையத்தை பயன்படுத்துவதற்காக அங்கு சென்றுகொண்டிருந்தேன் நான் சில மீற்றர் தொலைவில் இருந்தவேளை பாரிய சத்தம் கேட்டது என உள்ளுர் ஊடகநிறுவனத்தின் கமரா பணியாளர் தெரிவித்துள்ளார். நான் உடனடியாக அங்கு ஓடினேன் எனது சகாக்களும் அங்கு இருந்தனர்- நான் நாளாந்தம் சந்திப்பவர்கள் - அங்கு நான் கண்ட காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக காணப்பட்டன- எங்கும் உடல்கள்இ குருதி . அலறல்கள் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் போர்விமானத்திலிருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/218910
-
முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு - நான்கு கருத்தோவியர்கள் கைது
01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷமெழுப்பினர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் சஞ்சிகையின் நடவடிக்கை குறித்து துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்த கருத்தோவியம் ஒரு தூண்டும் நடவடிக்கை என தெரிவித்துள்ள துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் அலி யெர்லிகயா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கேலிச்சித்திரம் கருத்து சுதந்திரத்தினால் அல்லது பேச்சு சுதந்திரத்தினால் பாதுகாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218918