Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இடம்பெற்றுள்ளது. இதேபோன்ற தண்டனை தொந்தரவு செய்யும் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/218620
  2. திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் - இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F-35B போர் விமானத்தைப் பழுது பார்க்க பிரிட்டனில் இருந்து பொறியாளர்கள் குழு வரவுள்ளது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தார் சாலையில் நின்றுபோயிருக்கும் F-35B போர் விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக ஹேங்கருக்கு மாற்றப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பொறியாளர்கள் குழு திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு விமானத்தின் பழுது நீக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக, ராயல் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு இந்தப் போர் விமானம் திரும்ப முடியவில்லை. பிபிசி ஹிந்தியின் கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "தரையில் இருக்கும் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதனால்தான், விமானம் கப்பலுக்கு திரும்பவில்லை" என்று தெரிவித்தார். "HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் பொறியாளர்கள் விமானத்தை மதிப்பீடு செய்தனர். அதன் பிறகு, பிரிட்டனை தளமாகக் கொண்ட பொறியியல் குழுவின் உதவி தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. விமானத்தை சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தற்போது எங்களால் கூற முடியாது." மேலும், "சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு வந்த பிறகு, விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு, பழுது பார்ப்பதற்காக விமானம் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, விதிகளின்படி F-35B போர் விமானங்கள் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு, போர் விமானத்தைப் பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தால், விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஹேங்கருக்கு போர் விமானம் கொண்டு செல்லப்படும். "பழுது பார்ப்பு பணிகளுக்கான இடம் தேடப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து வருகை தரும் பொறியியல் குழுவிற்கு விமான நிலையத்திலேயே தங்க வசதி செய்து தரப்படும்" என்று விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. "இந்தப் போர் விமானம் தொடர்பாக இந்திய விமானப் படை, இந்திய கடற்படை மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என அனைத்து அமைப்புகளின் இந்திய அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் கொடுத்த, ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. "இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு, போர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியது, தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஆதரவு ஆகியவை பிரிட்டன் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஆழமான உறவை நிரூபிக்கின்றன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் போர் விமானங்களை நிறுத்துவதற்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய விதிகளின்படி, விமான நிலையத்தில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு கொண்டு வரப்பட்டாலோ, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் அளவு மற்றும் விமான நிலையத்தின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டே விமானத்திற்கான பார்க்கிங் மற்றும் ஹேங்கர் பயன்பாட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, மும்பை அல்லது பெங்களூருவில் உள்ள ஒரு ஹேங்கரில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்க்கப்பட்டாலோ நிர்ணயிக்கப்படும் கட்டணம், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையத்தைவிட அதிகமாக இருக்கும். தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் இடத்திற்கான விதிகள் இந்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. மூன்று பில்லியன் யூரோ மதிப்புள்ள ராயல் கடற்படையின் முதன்மைக் கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், தனது நீண்ட நேர பயணங்களில் ஒன்றுக்காக ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டது. கடலில் இருந்து ஜெட் விமானங்களைத் துரிதமாக இயக்கவும், உலகின் மறுபக்கத்தில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிட்டனின் திறனை நிரூபிக்கும் பயிற்சிகளில் பங்கேற்கவும் விமானம் தாங்கி கப்பல் போர்ட்ஸ்மாவுத்தில் இருந்து புறப்பட்டது. மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 40 நாடுகளுக்கு போர்க்கப்பல்களை வழிநடத்தும் இந்த விமானம் தாங்கிக் கப்பலில், 24 நவீன F-35B ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் உள்ளன. சுமார் 65 ஆயிரம் டன் எடையுள்ள இந்தப் போர்க் கப்பலில் 1,600 ராணுவ வீரர்கள் தங்க முடியும். F-35B விமானம் என்றால் என்ன? ராயல் விமானப்படை வலைதளத்தின்படி, F-35B என்பது பல பணிகளைச் செய்யும் திறன் கொண்ட விமானம். இது வான், தரை மற்றும் மின்னணு போரிலும் ஈடுபடும் திறன் கொண்டது. இந்த விமானம் மின்னணு போர், உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, வானில் இருந்து தரை மற்றும் வான் முதல் வான் வழிப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் கொண்டது. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய மேம்பட்ட சென்சார்கள் F-35Bஇல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்களை பயன்படுத்தி, சேகரிக்கப்பட்ட தகவல்களை பைலட் ஒரு பாதுகாப்பான தரவு இணைப்பு வழியாகப் பிற தளங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98w55g3n39o
  3. ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி 26 JUN, 2025 | 04:09 PM ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை, ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218536
  4. இஸ்ரேலிற்கு எதிரான போரில் வெற்றி - ஈரானின் ஆன்மீக தலைவர் 26 JUN, 2025 | 03:53 PM இஸ்ரேலிற்கு எதிரான போரில் ஈரான் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி அந்த வெற்றிக்காக ஈரான் மக்களிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு சத்தம் எழுப்பப்பட்ட போதிலும் அந்த கூற்றுக்கள் அனைத்திற்கும் மத்தியிலும் சியோனிச ஆட்சி கிட்டத்தட்ட சரிந்து "இஸ்லாமிய குடியரசின் தாக்குதல்களால் நசுக்கப்பட்டது" என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218531
  5. உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர்; தர்ஷானந்த் கண்டனம் 27 JUN, 2025 | 12:48 PM சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்றது. இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம். ஆனாலும் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கேட்ட போது, "எதை வேண்டுமானாலும் எழுத்தில் வழங்குங்கள். இந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. அடுத்த கூட்டத்தில் பார்க்கலாம்" எனக் கூறிவிட்டு முதல்வர் சென்றபோது நாங்கள் முதல்வரை வழிமறித்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு கோரினோம். ஆனால் இதுவரை எந்த ஒரு முதல்வரும் செய்யாத விடயத்தை இந்த முதல்வர் செய்து இருக்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம். நாங்கள் நமது வட்டாரத்தில் வெற்றி பெற்று வந்தவர்கள். நமது மக்களின் பிரச்சினையை நாங்கள் தெருவில் இருந்து கதைக்க முடியாது, சபையில் தான் கதைக்க வேண்டும். அவர் வழமைக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடானது தமக்கு மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது. இது ஒரு தொங்கு சபை. பெரும்பான்மை சபையை நடத்துவது போல இந்த சபையை நடத்த நினைக்கின்றார்கள். 23 பேர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அவரது கட்சியில் 13 பேரே உள்ளனர். எப்போதும் தாங்கள் பெரும்பான்மையுடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சபையை நடாத்த நினைப்பது நல்லதாக தோன்றவில்லை என்றார். https://www.virakesari.lk/article/218618
  6. பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அலறிய சத்தம் கேட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அடுத்த நாட்களில், கடுமையான நிலப்பரப்பாலும் மூடுபனி வானிலையின் காரணமாகவும், 26 வயதான அவரைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று மீட்புக் குழு அவரது உடலை கண்டடைந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். "மிகுந்த சோகத்துடன், அவர் உயிர் பிழைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மரின்ஸின் குடும்பத்தினர் கூறினர். "நீங்கள் எங்களுக்காக செய்த அனைத்து பிரார்த்தனைகளுக்கும், அன்பும் ஆதரவும் மிக்க செய்திகளுக்காகவும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தோனீசியாவின் லோம்போக் தீவுக்கு வருவதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்குப் பயணம் செய்திருந்தார் மரின்ஸ். சனிக்கிழமை (உள்ளூர் நேரப்படி 06:30 மணி) ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, "எரிமலையின் பள்ளத்திற்கு அருகிலுள்ள பாதையைச் சுற்றியுள்ள பாறையிலிருந்து" மரின்ஸ் தவறி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலப்பரப்பு வழுக்கும் தன்மையுடனும், ஏறுவதற்கு "மிகவும் கடினமாகவும்", சுற்றியுள்ள பகுதியைப் பார்ப்பதற்கு சிரமமாகவும் இருந்தது என்று அந்தக் குழுவில் பயணித்த ஒருவர் பிரேசிலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். மலையேறுபவர்களால் படம்பிடிக்கப்பட்ட டிரோன் காட்சிகள் மற்றும் பிற வீடியோக்கள் இணையதளத்தில் பரவி, பிரேசிலிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், சனிக்கிழமையன்று மரின்ஸ் கவலையுடன் காணப்பட்டாலும் உயிருடன் இருந்ததும், சாம்பல் நிற மண்ணில் உட்கார்ந்து நகர்ந்து கொண்டிருந்ததும் காணப்படுகிறது. அவர் இருந்த இடம் மலையேற்றப் பாதைக்குக் கீழே அமைந்திருந்தது. ஆனால் மீட்புப் பணியாளர்கள் 300 மீ (984 அடி) கீழே இறங்கிய போது, மரின்ஸ் இருப்பதாக நம்பிய இடத்திற்கு அருகே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரை அழைத்தபோதும் மரின்ஸ் பதிலளிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் அந்த இடத்தில் இல்லை என்பதை டிரோன் காட்சிகள் சுட்டிக்காட்டின. எனவே மீட்பு பணிகள் கடுமையான மூடுபனியால் பாதிக்கப்பட்டதாகவும், வெப்பமான இடங்களில் பயன்படுத்தப்படும் டிரோனின் பயன்பாட்டைக் குறைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமையன்று, மீட்புப் பணியாளர்களால் மரின்ஸைக் மீண்டும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவர் முன்பு இருந்த இடத்தில் இருந்து இன்னும் கீழே விழுந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால், 'பருவ நிலை'யின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலை (கோப்புப்படம்) அவரைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியபின், மீட்புப் பணியாளர்கள் ஒரு பள்ளத்தாக்கில் 600 மீட்டர் கீழே இறங்கி, இறுதியாக அவரது உடலை அடைந்ததாக இந்தோனீசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவரது உடலை மீட்க முடியவில்லை. 3,726 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இருப்பினும், கடந்த மாதம் ஒரு மலேசிய சுற்றுலாப் பயணி உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் அதில் ஏற முயன்ற பலர் இறந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரின்ஸ் விழுந்த பிறகு அந்தப் பாதை இன்னும் மூடப்படாதது குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c994pn53xzeo
  7. 27 JUN, 2025 | 11:26 AM உயர்இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு இலங்கையில் உரியதரமான மருத்துவசிகிச்சைகள் இல்லை என்பதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு பிரிட்டனில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை தங்கள் சொந்த நாட்டில் "போதுமானதாக இல்லை" என்று கூறி ஒரு வயதான இலங்கை தம்பதியினர் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளனர். 60 களின் பிற்பகுதியில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத கணவன் மற்றும் மனைவி 2022 இல் தங்கள் மகள் மற்றும் மருமகனைப் பார்க்க பிரிட்டனுக்கு வந்தனர் ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் புகலிடம் கோரினர் இது உள்துறை அலுவலகத்தால் மறுக்கப்பட்டபோது அவர்கள் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்தனர். கணவர் ஒரு குடியேற்ற தீர்ப்பாயத்தில் தான் மனச்சோர்வு கடுமையான பதட்டம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்காசிய நாட்டில் சிகிச்சை பெற "விருப்பமில்லை" என்றும் கூறினார். அவர்களைத் திருப்பி அனுப்புவது அவர்களின் மனித உரிமைகளை மீறும் என்று ஒரு புகலிட நீதிபதி ஒப்புக்கொண்டார். இலங்கையில் தரமற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக அவர்கள் தங்கலாம் என்ற தீர்ப்பை உள்துறை அலுவலகம்சவாலிற்கு உட்படுத்தியது. முதல் நீதிபதி கணவர் "தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார்" என்பதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைக்கவில்லை னஎன்று வாதிட்டது. ஆனால் குடிவரவு மற்றும் புகலிடக் குழுவின் உயர் தீர்ப்பாயம் இதை ஏற்கவில்லை இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் கூற்றை ஆதரித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிட அனுமதி வழங்கப்பட்ட தம்பதியினர் மே 2022 இல் இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக விசாரணையில் கூறப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை மாதம் கணவர் மற்றொரு மருமகனின் குடும்பத்தினரால் செய்யப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக துன்புறுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்து தனது மனைவியுடன் இணைந்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் அவர்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் மேலும் கோரிக்கைகளை முன்வைத்தனர் அவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன. கணவர் முதல்-நிலை தீர்ப்பாயத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அங்கு அவர்கள் பாதுகாப்பு அல்லது புகலிடம் முடிவுகளை சவால் செய்யவில்லை மனித உரிமைகள் கோரிக்கையை மட்டுமே சவால் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதஉரிமை சாசன பிரிவுகள் 3 மற்றும் 8 இன் கீழ் தனது வாதத்தை முன்வைத்தார். இது முறையே மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான உரிமையை உள்ளடக்கியது. கணவர் தனது மன அழுத்தம் கடுமையான பதட்டம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு இலங்கையில் போதுமான சிகிச்சை பெற முடியாது என்று மனு தாக்கல் செய்தார். தம்பதியினர் தங்கள் மனநிலை மற்றும் "அகநிலை பயம்" ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய "உண்மையான ஆபத்து" இருப்பதாகவும் கூறினர். புகலிட தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உள்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்தது சிகிச்சையின் "போதாமை" என்பது சிகிச்சை பெறமுடியாது என்ற அர்த்தமல்ல என வாதிட்டது என்று வாதிட்டது. துணை உயர் தீர்ப்பாய நீதிபதி ஸ்டூவர்ட் நீல்சன் முதல்-நிலை தீர்ப்பாயத்தால் எந்த சட்டப் பிழையும் இல்லை என்று கண்டறிந்தார். நீதிபதி உள்துறை அலுவலகத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார் அதாவது முதல்-நிலை தீர்ப்பாயத்தின் முடிவு செல்லுபடியாகும் மேலும் தம்பதியினர் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் மேல்முறையீட்டை முதல்-நிலை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/218604
  8. பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார் கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி 27 ஜூன் 2025, 04:23 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது. கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறது. இசபெல்லாவுக்கு அப்போது 17 வயதுதான். ஆனால், இரண்டு வயது மகனின் தாய். தனது குழந்தையை பராமரிக்க அவருக்கு பணம் தேவைப்பட்டதால், விசயத்தைத் தெரிந்துக் கொள்ள அவர் சென்றிருக்கிறார். அவர் சென்றடைந்த இடம், ஒரு பாழடைந்த பகுதியில் உள்ள வீடு. அந்த வீட்டில் இருந்த எட்டு அறைகளும், படுக்கையறைகள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன, ஒரு தம்பதியினர் நடத்திவந்த செக்ஸ் கேம் ஸ்டுடியோ அது. சிறிய, குறைந்த பட்ஜெட்டில் செயல்படும் ஸ்டுடியோக்கள் முதல் பெரிய அளவிலான ஸ்டுடியோக்கள் என பல வகை உள்ளன. அவற்றில், விளக்குகள், கணினிகள், வெப்கேம்கள் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய தனி அறைகள் இருக்கும். பாலியல் செயல்களை மாடல்கள் செய்வது ஸ்ட்ரீம் செய்யப்படும். பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல, ஸ்டுடியோக்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ நடத்துபவர்கள் அல்லது இடைத்தரகர்கள்/ கண்காணிப்பாளர்கள் மூலம் பார்வையாளர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள். கொலம்பியாவில் 18 வயதுக்குட்பட்ட வெப்கேம் மாடல்களை ஸ்டுடியோக்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள், இசபெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையைத் தொடங்கிவிட்டார். தனது சம்பளம் என்ன, உரிமைகள் என்ன என்பதை விவரிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார். "எனக்கு அவர்கள் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை, அவர்கள் நேரடியாக என்னை ஸ்ட்ரீமிங் செய்ய வைத்தனர். 'இதோ கேமரா இருக்கிறது, லைவுக்கு போகலாம்' என்றார்கள்." இந்த வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, பள்ளியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இசபெல்லாவிடம் ஸ்டுடியோ கேட்டுக் கொண்டது. வகுப்பறையில் தன்னைச் சுற்றியிருந்த சக மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த நிலையில், இசபெல்லா தொலைபேசியை தனது மேசையில் வைத்து, தன்னை காட்டத் தொடங்கினார். தன்னிடம் குறிப்பிட்ட பாலியல் செயல்களைச் செய்யச் சொல்லி பார்வையாளர்கள் கோரிக்கைகள் விடுத்ததைப் பற்றி இசபெல்லா விவரிக்கிறார். கழிப்பறைக்குச் செல்வதாக சொல்லி, ஆசிரியரிடம் அனுமதி கேட்டுவிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறிய இசபெல்லா, ஒரு அறைக்குச் சென்று, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆசிரியருக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. "அதனால் நான் அதை மற்ற வகுப்புகளிலும் செய்ய ஆரம்பித்தேன்" என்று இசபெல்லா கூறுகிறார். "நான், 'இதை என் குழந்தைக்காக செய்கிறேன், அவனுக்காகச் செய்கிறேன்' என்று நினைத்துக்கொள்வேன். அது எனக்கு பலத்தைத் தந்தது." பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு,சில ஸ்டுடியோக்கள் 18 வயதுக்கும் குறைவானவர்களை ஸ்ட்ரீமிங் செய்ய போலி ஐடிகளைப் பயன்படுத்துவதாக மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர் மீள்சுழற்சி செய்யப்படும் பழைய கணக்குகள் மற்றும் போலி ஐடிகள் சர்வதேச அளவில் செக்ஸ்கேம் தொழில் செழித்து வருகிறது. உலகளவில் வெப்கேம் தளங்களின் மாதாந்திர பார்வைகளின் எண்ணிக்கை 2017 முதல் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ஏப்ரல் 2025 இல் கிட்டத்தட்ட 1.3 பில்லியனை எட்டியுள்ளது, என பகுப்பாய்வு நிறுவனமான செம்ரஷ் கூறுகிறது. இப்போது, உலகின் வேறு எந்தவொரு நாட்டையும் விட கொலம்பியாவில் தான் அதிகமான மாடல்கள் (400,000) மற்றும் 12,000 செக்ஸ் கேம் ஸ்டுடியோக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, நாட்டின் 'வயது வந்தோர் வெப்கேம் துறை'யை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஃபெனல்வெப் தெரிவித்துள்ளது. இந்த ஸ்டுடியோக்கள், கலைஞர்களைப் படம் பிடித்து, உலகளாவிய வெப்கேம் தளங்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஒளிபரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. மாடல்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் பார்வையாளர்கள், டிப்ஸ் மற்றும் பரிசுகளை கொடுக்கின்றனர். வீட்டில் தனிமை கிடைக்காதது, உபகரணங்கள் அல்லது நிலையான இணைய இணைப்பு இல்லாதது உட்பட பல காரணங்களால் மாடல்கள் ஸ்டுடியோக்களில் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளாகவோ அல்லது சிறார்களாகவோ இருப்பதும் பெற்றோருடன் இருப்பதாலும் என்று தெரிகிறது. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில், பணம் சம்பாதிக்க சுலப வழி இது என்று ஸ்டுடியோக்கள் ஆசை காட்டியே மக்களை கவர முயற்சிப்பதாக பிபிசியிடம் பெண்கள் தெரிவித்தனர். சில ஸ்டுடியோக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், கலைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பிற ஆதரவை வழங்குவதாகவும் கூறும் மாடல்கள், நேர்மையற்றவர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்வதாக கூறுகின்றனர். ஸ்டுடியோ உரிமையாளர்களை "அடிமைகளின் எஜமானர்கள்" என்று வர்ணிக்கும் கொலம்பியாஅதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அவர்கள் இசபெல்லாவைப் போல பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைப்பதாக கூறுகிறார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் நான்கு பெரிய வெப்கேம் தளங்களான போங்காகேம்ஸ், சாட்டர்பேட், லைவ்ஜாஸ்மின், ஸ்ட்ரிப்சாட் ஆகியவை, 18 அல்லது அதைவிட அதிக வயதானவர்கள் தான் மாடல்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், அதனை உறுதிப்படுத்தும் சோதனைகளையும் மேற்கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்களிக்கும் பாலியல் உள்ளடக்கங்களை விநியோகிப்பதைத் தடைசெய்கின்றன. ஆனால், 18 வயதுக்குட்பட்ட பெண்களைப் பணியமர்த்த ஒரு ஸ்டுடியோ விரும்பினால், இந்தச் சோதனைகளை சுலபமாக தவிர்த்துவிட முடியும் என்று மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தற்போது நிகழ்ச்சிகள் நடத்தாத ஆனால், சட்டப்பூர்வ வயதுடைய மாடல்களின் பழைய கணக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக, "மீள்சுழற்சி" செய்து, அவற்றை 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்குக் கொடுப்பது சுலபமான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். 17 வயதாக இருந்தபோது Chaturbate மற்றும் StripChat இரண்டிலும் மீள்சுழற்சி செய்த கணக்கை வைத்து வேலை செய்ததாக இசபெல்லா கூறுகிறார். "நான் 18 வயது ஆகாதவள் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று ஸ்டுடியோ உரிமையாளர் கூறினார்," என்று சொல்லும் இசபெல்லாவுக்கு தற்போது 18 வயதாகிவிட்டது. "வேறொரு பெண்ணின் கணக்கைப் பயன்படுத்தி, அந்த அடையாளத்தின் கீழ் வேலை செய்யத் தொடங்கினேன்" என்று அவர் சொல்கிறார். பிபிசியிடம் பேசிய மற்ற மாடல்கள், தங்களுக்கு ஸ்டுடியோக்கள் போலி ஐடிகள் வழங்கியதாகக் கூறினார்கள். போலி ஐடியை பயன்படுத்தி 17 வயதிலேயே, தான் போங்கா கேம்ஸ் தளத்தில் தோன்றத் தொடங்கியதாக கெய்னி என்ற இளம்பெண் கூறுகிறார். படக்குறிப்பு,கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, பணி நிலைமைகளை சரிபார்க்க ஸ்டுடியோக்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார் பிபிசியிடம் பேசிய கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, 18 வயதுக்குட்பட்டவர்களை நிகழ்ச்சி நடத்த தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும், இதுபோன்ற விதிமுறைகளை மீறும் கணக்குகளை மூடுவதாகவும் கூறினார். இந்தத் தளம், ஐடிகளை சரிபார்க்கிறது என்று கூறுகிறார். மேலும், "ஒரு மாடல் எங்களைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஸ்டுடியோவை விட்டு வெளியேறியதைத் தெரிவித்தால், அவர்களின் கணக்கை மூடுவதற்கான கடவுச்சொல்லை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்றும் அவர் கூறினார். ஒரு அறிக்கையில், போலி ஐடிகளைப் பயன்படுத்துவதை "முற்றிலும்" நிறுத்தியுள்ளதாக தெரிவித்த Chaturbate, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகளுக்கு அருகில் மாடல்கள் நின்று புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை டிஜிட்டல் முறையிலும், வழக்கமான முறையிலும் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது. "அதிகபட்சம் பத்துக்கும் குறைவான ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு மதிப்பாய்வாளர்" என்ற அளவில் இருப்பதாகவும், கணக்குகளை மீள்சுழற்சி செய்யும் எந்தவொரு முயற்சியும் "தோல்வியடையும்" என்றும், "ஒவ்வொரு ஒளிபரப்பும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படுவதால்" வயது சரிபார்ப்பு செயல்முறை தொடர்கிறது என்றும் அது கூறியது. ஸ்ட்ரிப்சாட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "18 வயதுக்கும் குறைவான மாடல்கள் தொடர்பான விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை" கொண்டிருப்பதாகவும், கலைஞர்கள் "முழுமையான வயது சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது. மேலும் "மாடல்களின் அடையாளங்களைச் சரிபார்க்க" அதன் உள்ளக மதிப்பீட்டுக் குழு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு சேவைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் ஸ்ட்ரிப்சாட் கூறியது. மீள்சுழற்சி செய்யப்பட்ட கணக்குகளை அதன் தளத்தில் பயன்படுத்த முடியாது என்றும், அதன் விதிகளில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அனைத்தும், கணக்கு வைத்திருப்பவரின் ஒவ்வொரு ஸ்ட்ரீமிலும் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது. "எனவே, ஒரு மாடல், சுயாதீனமாக வேலை செய்வதற்காக புதிய கணக்கிற்கு மாறினால், அவர்களுடன் இணைக்கப்பட்ட அசல் கணக்கு செயலற்றதாகவும், ஸ்டுடியோவால் பயன்படுத்த முடியாததாகவும் மாறும்" என்று ஸ்ட்ரிப்சாட் கூறுகிறது. இந்த விவகாரத்தில் லைவ்ஜாஸ்மின் தளத்தின் கருத்தை கேட்டறிய விரும்பிய பிபிசியின் கோரிக்கைகளுக்கு பதிலேதும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு,கொலம்பிய வெப்கேம் மாடல், கெய்னி ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கத் தயாராகிறார் இளமையாக தோன்றுபவர்களையே பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் 20 வயதாகும் கெய்னி, மெடலினில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து வேலை செய்கிறார். இவர், பெரிய சர்வதேச தளங்களுக்குச் செல்லும் பாதையை வழங்கும் மற்றொரு ஸ்டுடியோ வழியாக ஸ்ட்ரீமிங் செய்கிறார். ரிங் லைட்டுகள், ஒரு கேமரா, ஒரு பெரிய திரை என உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லையென்றால், கெய்னியின் அறை, ஒரு குழந்தையின் அறையாகவே தோன்றக்கூடும். சுமார் ஒரு டஜன் ஸ்டஃப்டு விலங்குகள், இளஞ்சிவப்பு யூனிகார்ன்கள் மற்றும் டெடி பியர்ஸ் அவரது படுக்கையறையில் நிறைந்துள்ளன. "மாடல், மிகவும் இளமையாகத் தெரிந்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் கூறுகிறார். "சில நேரங்களில் அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுகிறது என்று நினைக்கிறேன். சில வாடிக்கையாளர்கள் குழந்தையைப் போல நடிக்கச் சொல்கிறார்கள், ஆனால் அது சரியல்ல" என்கிறார் அவர். தனது பெற்றோர் விவாகரத்து செய்ய முடிவு செய்த பிறகு, குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே இந்தத் தொழிலில் தான் இறங்கியதாக அவர் கூறுகிறார். அவள் என்ன தொழில் செய்கிறார் என்பது தன்னுடைய தந்தைக்குத் தெரியும் என்று கூறும் கெய்னி, அவர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறுகிறார். இந்தத் தொழிலில் மிகவும் இளம் வயதிலேயே (17 வயதில்) தான் ஈடுபடுத்தப்பட்டதாக கெய்னி கருதினாலும், அவர் தனது முன்னாள் முதலாளிகளை விமர்சிக்கவில்லை. தற்போது மாதத்திற்கு சுமார் $2,000 (£1,500) சம்பாதிக்கும் கெய்னி, தனது முன்னாள் முதலாளி, வேலையில் சேர தனக்கு உதவியதாகவே நினைக்கிறார். கொலம்பியாவில் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் சுமார் $300 (£225) என்ற நிலையில், இந்தத் தொகை மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. "இந்த வேலையின் மூலம், என்னுடைய அம்மா, அப்பா, சகோதரி என குடும்பம் முழுவதற்கும் உதவுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதேக் கண்ணோட்டத்தையே ஸ்டுடியோக்களும் எதிரொலிக்கின்றன. அவற்றில் சில, தங்கள் கலைஞர்களை நன்றாக கவனித்துக்கொள்வதை நிரூபிக்க ஆர்வத்துடன் செயல்படுகின்றன. மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான ஏ.ஜே. ஸ்டுடியோஸை நாங்கள் பார்வையிட்டோம், அங்கு மாடல்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உளவியலாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அங்கு ஒரு ஸ்பாவும் இருந்தது. அதில், பெடிக்யூர், மசாஜ், போடாக்ஸ் மற்றும் லிப் ஃபில்லர்கள் "தள்ளுபடி" விலையில் கொடுக்கப்பட்டன. அத்துடன் அதிக வருமான ஈட்டும் அல்லது சக மாடல்களை ஆதரிக்கும் பணியாளர்கள் மற்றும் நன்றாக ஒத்துழைப்பவர்களுக்கு "மாதத்தின் சிறந்த ஊழியர்கள்" என்ற பாராட்டு பெற்றவர்களுக்கும் இந்த ஸ்பாவில் உள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. கழிப்பறைக்கு சென்றால் அபராதம் ஆனால் நாட்டின் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாடல்கள் அனைவரும் சரியாக நடத்தப்படுவதில்லை அல்லது நல்ல வருமானம் ஈட்டுவதில்லை. மேலும், அவர் அறிமுகப்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமா என்பதைப் பார்க்க தொழில்துறை காத்திருக்கிறது. ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுவாக பார்வையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் 50% எடுத்துக்கொள்கின்றன என்றும், ஸ்டுடியோக்கள் 20-30% எடுத்துக்கொள்கின்றன என்றும், எஞ்சியத் தொகையே மாடல்களுக்கு கிடைப்பதாக மாடல்களும் ஸ்டுடியோக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர். அதாவது ஒரு நிகழ்ச்சியில் 100 டாலர்கள் கிடைத்தால் மாடலுக்கு பொதுவாக 20 முதல் 30 டாலர் வரை கிடைக்கும். நேர்மையற்ற ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் அதிகமாக வருமானத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எட்டு மணிநேரம் வரையிலான அமர்வுகளில் பணியாற்றி, வெறும் 5 டாலர் வரை மட்டுமே சம்பாதித்த அனுபவங்களும் இருப்பதாக சில மாடல்கள் கூறுகிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லையென்றால் இதுபோல் நிகழலாம். இடைவேளை இல்லாமல் 18 மணி நேரம் வரை ஸ்ட்ரீமிங் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லும் சில மாடல்கள், சாப்பிடவோ அல்லது கழிப்பறைக்குச் செல்வதற்காக ஸ்ட்ரீமிங் செய்வதை இடைநிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுகளை, 2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பக பிரசாரக் குழுவின் அறிக்கை ஆமோதிக்கிறது. மூட்டைப் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த, மிகவும் சிறிய மற்றும் அழுக்கான அறைகளில் ஸ்ட்ரீமிங் செய்யவும், பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும் வேதனையான மற்றும் இழிவான நிலை இருப்பதைக் கண்டறிந்ததாக, பிபிசிக்காக இந்தக் கதை குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த எழுத்தாளர் எரின் கில்பிரைட் கூறுகிறார். பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு,தான் வேலை செய்த ஒரு ஸ்டுடியோ, தான் விரும்பாத பாலியல் செயல்களைச் செய்ய அழுத்தம் கொடுத்ததாக சோஃபி கூறுகிறார் மெடலினைச் சேர்ந்த சோஃபி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய். 26 வயதான அவர், இரவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்தார், ஆனால் வாடிக்கையாளர்களின் தொடர் அவமதிப்புகளால் சலித்துபோய், வெப்கேம் மாடலிங் துறையில் அவர் இறங்கிவிட்டார். தான் பணிபுரிந்த ஒரு ஸ்டுடியோ, வலிமிகுந்த மற்றும் இழிவான பாலியல் செயல்களைச் செய்யவும், அங்கு பணிபுரிந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து நடிக்கவும் அழுத்தம் கொடுத்தது என்று சொல்கிறார். வாடிக்கையாளர்களின் விருப்பக் கோரிக்கைகளை, மாடல்களிடம் கொண்டு செல்லும் இடைத்தரகர்களாகச் செயல்பட பணியமர்த்தப்பட்ட ஸ்டுடியோ கண்காணிப்பாளர்கள், தவறான கோரிக்கைகளுக்கும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொல்கிறார். தன்னால் அப்படி செய்யமுடியாது என்று ஸ்டுடியோவிடம் சொன்னாலும், "உனக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னார்கள்" என சோஃபி கூறுகிறார். "இறுதியில், நான் அவர்கள் சொன்னதை செய்ய வேண்டியிருந்தது, இல்லையெனில் அவர்கள் என் கணக்கை முடக்கிவிடுவார்கள்," என்று சோஃபி சொல்கிறார். விருப்பம் இல்லாவிட்டாலும் வெப்கேம் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து வேலை செய்யும் சோஃபி, கொலம்பியாவில் கிடைக்கும் சாதாரண சம்பளம் தனக்கும் தனது இரண்டு குழந்தைக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார். சட்டக் கல்வி பயில்வதற்காக சோஃபி பணத்தை சேமித்து வருகிறார். படக்குறிப்பு,செக்ஸ்கேம் துறையில் வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பதாகவும், படிப்புக்காக சேமிப்பதாகவும் சோஃபி கூறுகிறார் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது கொலம்பியா மட்டுமல்ல என்கிறார் எரின் கில்பிரைட். பல்கேரியா, கனடா, செக் குடியரசு, ஹங்கேரி, இந்தியா, ருமேனியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் இருக்கும் ஸ்டுடியோக்களிலிருந்து பெரிய நான்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை அவர் கண்டறிந்தார். மேலும், ஸ்ட்ரீமிங் தளங்களில் "மனித உரிமை துஷ்பிரயோகங்களை எளிதாக்கும் அல்லது அதிகப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளில் உள்ள இடைவெளிகளை" அடையாளம் கண்டதாகவும் அவர் கூறுகிறார். ஸ்ட்ரீம் செய்யப்படும் ஸ்டுடியோக்களின் நிலைமைகள் குறித்து நாங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களிடம் கேட்டோம். போங்கா கேம்ஸைச் சேர்ந்த மில்லி அச்சின்டே, "மாடல்களுக்கு பணம் வழங்கப்படுவதையும், அறைகள் சுத்தமாக இருப்பதையும், அத்துமீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்" எட்டு பெண்கள் குழுவில் தானும் இருப்பதாகக் கூறினார். இந்தக் குழு, கொலம்பியாவில் உள்ள சில ஸ்டுடியோக்களுக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமைகளை மதிப்பிடும். StripChat மற்றும் Chaturbate நிறுவனங்கள், அவர்கள் கலைஞர்களின் நேரடி முதலாளிகள் அல்ல என்பதால், ஸ்டுடியோக்களுக்கும் மாடல்களுக்கும் இடையிலான விதிமுறைகளில் தாங்கள் தலையிடுவதில்லை என்றும் கூறின. ஆனால் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு உறுதிபூண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் பிபிசியிடம் கூறின. ஸ்டுடியோக்கள் "மரியாதைக்குரிய மற்றும் வசதியான பணி நிலைமைகளை" உறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் StripChat தெரிவித்துள்ளது. ஒரு செயலைச் செய்ய மாடல் கட்டாயப்படுத்தப்படுவதாகவோ அல்லது அச்சுறுத்தப்படுவதாகவோ நம்பினால், அதில் தலையிட குழுக்கள் இருப்பதாக போங்கா கேம்ஸ், StripChat மற்றும் Chaturbate ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன. 'அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' வெம்கேமிங், படிப்பு, குழந்தை பராமரிப்பு என அனைத்து வேலைகளுக்கும் ஈடுகொடுக்க, அதிகாலை 05:00 மணிக்கே கண் விழிக்க வேண்டியிருந்தது. இந்த வேலைக்கு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் சம்பளத்தைப் பெற இசபெல்லா ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்தத் தொகையில் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் ஸ்டுடியோ தங்கள் பங்கைக் கழித்துக் கொண்ட பிறகு, இசபெல்லாவுக்கு வெறும் 174,000 கொலம்பிய பெசோக்கள் (42 டாலர்கள்) மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். இது தான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானது என்று சொல்லும் இசபெல்லா, ஒப்புக்கொண்டதை விட ஸ்டுடியோ தனக்கு மிகக் குறைந்த சதவீதத்தையே கொடுத்ததாகவும், தனது வருவாயில் பெரும்பகுதியை ஸ்டுடியோ திருடிவிட்டதாகவும் அவர் நம்புகிறார். அந்தப் பணம் மிகக் குறைவு என்று கூறும் அவர், கிடைத்த அந்தப் பணத்தில் பால் மற்றும் டயப்பர்கள் வாங்கியதாக சொல்கிறார். "அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கூறுகிறார். தற்போதும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இசபெல்லா, வெப்கேம் மாடலாக சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். இளம் வயதில் தன்னை இப்படி நடத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளான இசபெல்லா, அதிர்ந்துவிட்டார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த மகளின் மனநிலையை சரிபடுத்த, அவருடைய அம்மா, ஒரு உளவியலாளரிடம் அழைத்துச் சென்றார். இசபெல்லாவும், அவர் பணியாற்றிய ஸ்டுடியோவின் வேறு ஆறு முன்னாள் ஊழியர்களும் சேர்ந்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். சிறார்களைச் சுரண்டுதல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் செய்ததாக ஸ்டுடியோ மீது அனைவரும் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளனர். "18க்கும் குறைவான வயதில் நான் இருந்தபோது எடுக்கப்பட்ட எனது வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் உள்ளன," என்று அவர் கூறுகிறார், அவற்றை அகற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையும்போது மிகவும் சக்தியற்றவளாக உணர்வதாக அவர் கூறுகிறார். "இது என்னை மிகவும் பாதித்துள்ளது, இனி அதைப் பற்றி நினைக்கவே எனக்கு விருப்பமில்லை" என்று இசபெல்லா கூறுகிறார். வூடி மோரிஸின் கூடுதல் செய்தியுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr79288vlz1o
  9. பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் : முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் - ஐ.நா. உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு 27 JUN, 2025 | 10:36 AM (நா.தனுஜா) செம்மணியானது கடந்தகால காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தியதாகவும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசுக்கு சவாலான விடயமாக அமையும் எனவும் தனது விஜயத்தின் நிறைவு நாளில் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்பதும், உண்மைகளை வெளிப்படுத்துவதுமே காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழி என தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள் எனவும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளில் முன்னேற்றம் தேவை எனவும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் எனவும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், வலியுறுத்தியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (24) நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், விஜயத்தின் நிறைவு நாளான நேற்று வியாழக்கிழமை (26) மாலை ஐந்தரை மணியளவில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தனது சந்திப்புகள், ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் தெளிவுப்படுத்தினார். அதன்படி இலங்கை விஜயத்துக்கும், சகல தரப்புகளுடான சந்திப்புக்களுக்கும் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், தனது இவ்விஜயம் இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரத்தையும், கையாள்வதற்கு கடினமான பிரச்சினைகளையும் புரிந்துக்கொள்வதற்கு உதவியதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக மிகமோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கதைகள் தனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் இன்னமும் பலர் மத்தியில் ஆறாமல் இருப்பதை உணர்த்தியது என்றார். 'வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்மையைக் கோருகின்றனர். உதாரணமாக 1989 ஆம் ஆண்டு காணாமல்போன தனது கணவனைத்தேடி இன்றளவிலும் நகரத்துக்குச் சென்றுவரும் ஒரு பெண்ணின் கதையை குறிப்பிட முடியும். இவ்விடயத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் கண்ணீர் ஒன்றுதான்' எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். அதேவேளை தனது யாழ் விஜயத்தின்போது நினைவுக்கூரலுக்கான இடமளிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்ததுடன், அது வரவேற்கத்தக்க விடயமாகும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்வதாகவும் சமூகத்தின் முக்கிய பங்காளியான சிவில் செயற்பாட்;டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். அதேபோன்று நாட்டின் சகல மக்களுக்கும் சம அங்கீகாரமளிப்போம் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனினும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது என்பது அரசுக்கு சவாலானதொரு விடயமாகவே இருக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். 'பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதற்கும், அவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும் உண்மைகளை வெளிப்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடனான உள்ளகப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். 'உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் அடையப்பட வேண்டும்.அத்தகைய முன்னேற்றத்தின் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்' எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டினார். அடுத்ததாக இலங்கையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் சட்டவிரோதமானதே என்ற போதிலும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக விசனத்தை வெளிப்படுத்திய அவர், இதுகுறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அத்தோடு பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனவும் உயர்ஸ்தானிகர் பாராட்டுத்தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 'கடந்த பொதுத்தேர்தலில் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமானதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.இருப்பினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.அதேபோன்று தொழில் வாய்ப்புகளில் பாலின சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்திய வோல்கர் டேர்க், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றார். 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி,வீடு, மற்றும் சம்பளம் உள்ளிட்ட உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். 'மனித உரிமைகளை மேம்படுத்துவதில் சர்வமத தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.அதன்படி மதத்தலைவர்களுடனான சந்திப்பின் போது இவ்விடயத்தில் அவர்கள் தமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும் எனவும் அது நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியழுப்புவதற்கு அவசியமென எடுத்துரைத்தேன். உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் சகஜமாகிவரும் தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையை மிளிரச்செய்வதற்கான முன்னுதாரணமாக திகழக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு உண்டு' எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218575
  10. 27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596
  11. சிறந்த முன்னுதாரணமான செயல் ஐயா. எனக்குள்ளும் இந்த ஆசை இருக்கிறது, இறந்தபின் எனது உடல் கற்றலுக்கு பயன்படுமா என மருத்துவர்களிடம் அறிந்தபின் உயிலை எழுதுவம்.
  12. Highlights | West Indies v Australia | 1st Test Day 1 14 Wickets Fall On Day 1 Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown
  13. பெத்தும் நிஸ்ஸன்க 146 ஆ.இ., தினேஷ் சந்திமால் 93; பலமான நிலையில் இலங்கை Published By: VISHNU 26 JUN, 2025 | 07:26 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை, பெத்தும் நிஸ்ஸன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், தினேஷ் சந்திமால் குவித்த அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது. பங்களாதேஷை முதல் இன்னிங்ஸில் இன்று காலை 247 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது. தனது 18ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெத்தும் நிஸ்ஸன்க, தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலிருந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை மிகுந்த தன்னம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி தனது 4ஆவது சதத்தைக் குவித்தார். பங்களாதேஷுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்து அசத்தியிருந்தார். இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மூவரும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது. குறிப்பாக மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்ப விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் 88 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் மேலும் 194 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தினேஷ் சந்திமால் அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் ஷொட் அடிக்க முயற்சித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்து சதத்தை 7 ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் 153 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார். பெத்தும் நிஸ்ஸன்க, 238 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆரம்ப வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களைப் பெற்றார். இன்றைய தினம் முழு நாளும் துடுப்பெடுத்தாடி 550க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷுக்கு நெருக்கடிக்கைக் கொடுப்பதே இலங்கையின் திட்டமாகும். பந்துவீச்சில் நயீம் ஹசன், தய்ஜுல் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களிலிருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 2 விக்கெட்களை 27 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. தய்ஜுல் இஸ்லாம் திறமையாக துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். முதல் நாள் துடுப்பாட்டத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் நயீம் ஹசன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை பந்துவீச்சில் அறிமுக வீரர் சொனால் தினூஷ 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9.3 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218573
  14. 26 JUN, 2025 | 05:03 PM செம்மணி மனித புதைகுழி குறித்த விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் உறுதி செய்யவேண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ் செம்மணி மனிதபுதைகுழி காணப்படும் பகுதிக்கு வோல்க்கெர் டேர்க் விஜயம் மேற்கொண்டவேளை அவருடன் சேர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணிகள் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியை தோண்டும் பணிகளிற்கான நிதியை தாமதமின்றி தடையின்றி இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் சேமிப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் போதியளவு இல்லாததால் நீண்டகால தீர்வு காணப்படும் வரை மனித எச்சங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லவேண்டும். மனித எச்சங்களை சேமித்து வைப்பதற்கும், விஞ்ஞான ஆய்வுகளிற்கு அதனை கொண்டு செல்வதற்கும் யாழ்ப்பாணத்தில் தடயவியல் ஆய்வுகூடமொன்றை ஏற்படுத்தவேண்டும். முறையான அகழ்வாராய்ச்சி மற்றும் மனித எச்சங்களை அடையாளம் காண அதிநவீன தடயவியல் கருவிகள் சாதனங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் அவசியம். பக்கசார்பின்மை மற்றும் தலையீடுகளை தவிர்ப்பதற்காக செம்மணிமனித புதைகுழியை அகழ்வும் நடவடிக்கைளை சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/218552
  15. Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 04:25 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர். https://www.virakesari.lk/article/218530
  16. உண்மையை கண்டறியக்கூடிய சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் - வோல்க்கெர் டேர்க் 26 JUN, 2025 | 03:29 PM உண்மையை கண்டறியக்கூடிய தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நிபுணர்களின் மூலம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிக்கும் அணையாவிளக்கு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கும் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நான் செம்மணியில் மனித புதைகுழிகள் காணப்படும் பகுதியில் தற்போது இருக்கின்றேன். எம்மை விடாமல் துரத்துகின்ற கடந்தகாலங்கள் தற்போது வெளித்தெரியும் இடங்களிற்கு விஜயம் மேற்கொள்வது எப்போதும் உணர்வுபூர்வமான விடயம். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உறவுகளை நான் சந்தித்தேன். 90களின் நடுப்பகுதியில் தனது உறவினர் காணாமல்போன பெண்ணொருவரை நான் சந்தித்தேன் காணாமல்போனவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் கடும் கவலை கொண்டிருந்தார். தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என தெரியாதவர்களுடன் உரையாடும்போது இந்த வலியை வேதனையை நீங்கள் உணர்வீர்கள். மிகவும் வேதனைய விடயத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் நீதிக்கும் பொறுப்புக்கூறலிற்கும் இது ஒரு படி முன்னோக்கிய நடவடிக்கை. வலுவான விசாரணைகளின் மூலம் உண்மையை கண்டறியக்கூடிய தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச நிபுணர்களின் மூலம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேதனைகளிற்கு துயரங்களிற்கு முடிவை காணவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிக்கும் அணையாவிளக்கு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கும் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218526
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பகுதிகளை புதிதாக ஆதியில் இருந்து உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் க்விண்டாஃப் ஹ்யூக்ஸ் அறிவியல் ஒளிப்பதிவாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மனித உடலின் கட்டுமானத் தொகுதிகளான டிஎன்ஏவை புதிதாக உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்படுவதாக நம்பப்படுகிறது. எதிர்கால சந்ததியினரை தங்கள் விருப்பம் போல வடிவமைத்துவிடலாம் மற்றும் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் காரணமாக டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இதுவரை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மருத்துவ தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட், இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பத் தொகையாக 10 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது. பல குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவுபடுத்துவதன் மூலம் செயற்கை டிஎன்ஏ, தீமைகளைவிட நன்மைகளையே அதிகமாகச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக வெல்கம் டிரஸ்ட் கூறுகிறது. இந்தத் திட்டத்தில் முக்கிய உறுப்பினரும், கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜூலியன் சேல், இந்த ஆராய்ச்சியானது உயிரியலில் அடுத்த மிகப் பெரிய முன்னெடுப்பு என்று பிபிசியிடம் தெரிவித்தார். "வானமே எல்லை. முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சைகள் தேவை. வயதாகும்போது நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான முதுமைக்கு வழிவகுக்கும் சிகிச்சைகளை நாம் தேடுகிறோம்." "அதற்கு செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்தலாம், சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக கல்லீரல், இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் உள்பட, நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்த முடியும்," என்று அவர் கூறினார். மனித மரபணுவை செயற்கையாக உருவாக்கும் முயற்சி ஆனால், மேம்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களை உருவாக்க முயலும் நேர்மையற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவி செய்துவிடும் என்பதே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்களின் கவலையாக இருக்கிறது. Beyond GM என்ற பிரசாரக் குழுவின் இயக்குநர் டாக்டர் பாட் தாமஸின் கருத்துப்படி, "விஞ்ஞானிகள் அனைவருமே நல்லதுதான் செய்வார்கள் என்று நம்ப வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தீமைக்கும், போருக்கும்கூட அறிவியலைப் பயன்படுத்த முடியும்." மனித டிஎன்ஏவில் உள்ள மூலக்கூறுகளை வரைபடமாக்கிய மனித மரபணு திட்டம் நிறைவடைந்த 25வது ஆண்டு விழாவில் இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் பிபிசிக்கு வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு வெல்கம் டிரஸ்ட் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் டிஎன்ஏ எனப்படும் ஒரு மூலக்கூறு உள்ளது. அதில் மரபணு தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஏ, ஜி, சி, டி எனக் குறிப்பிடப்படும் நான்கு மிகச் சிறிய தொகுதிகளில் இருந்து டிஎன்ஏ கட்டமைக்கப்படுகிறது. அவை பல்வேறு சேர்க்கைகளில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. உடல் ரீதியாக நாம் யார் என்பதை உருவாக்கும் அனைத்து மரபணு தகவல்களையும் டிஎன்ஏ கொண்டுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் அறிவியல் உண்மை. விஞ்ஞானிகள் அனைத்து மனித மரபணுக்களையும் ஒரு பார் குறியீடு போலப் படிக்க, மனித ஜீனோம் திட்டம் உதவியது. செயற்கை மனித ஜீனோம் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய திட்டம், இதை மிகப் பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் செல்லும். இது, டிஎன்ஏவின் மூலக்கூறுகளை ஆய்வாளர்கள் படிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மூலக்கூறின் பகுதிகளை, (ஒருவேளை அனைத்தையும்) புதிதாக உருவாக்க அனுமதிக்கும். மனித டிஎன்ஏ-வை புதிதாக உருவாக்கும் விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன? பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பெரிய பகுதிகளை உருவாக்குவதற்கான கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கத் தொடங்குவார்கள் மனித டிஎன்ஏவின் பெரிய தொகுதிகளை உருவாக்குவதற்கான வழிகளை உருவாக்குவதே விஞ்ஞானிகளின் முதல் நோக்கம். அவை செயற்கையாக மனித குரோமோசோமை உருவாக்கும் வரை இது தொடரும். டிஎன்ஏவின் தொகுதிகள், நமது வளர்ச்சி, பழுது மற்றும் பராமரிப்பை நிர்வகிக்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன. பின்னர் இவற்றை ஆய்வு செய்து பரிசோதித்து, மரபணுக்கள் மற்றும் டிஎன்ஏக்கள் நம் உடல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதைப் பற்றி மேலும் அறியலாம். "மரபணுக்கள் தவறாகச் செல்லும்போது பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே ஆய்வுகள், நோய்களுக்குத் தேவையான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும்" என்று கூறுகிறார், மனித மரபணுவின் மிகப்பெரிய விகிதத்தை வரிசைப்படுத்திய வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மேத்யூ ஹர்ல்ஸ் கூறுகிறார். "புதிதாக டிஎன்ஏவை உருவாக்குவது என்பது டிஎன்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சோதிக்கவும் புதிய கோட்பாடுகளைச் சோதிக்கவும் அனுமதிக்கிறது. ஏனெனில் தற்போது வாழும் அமைப்புகளில் ஏற்கெனவே இருக்கும் டிஎன்ஏவில், புதிய டிஎன்ஏவை மாற்றுவதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்." செயற்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டால்... பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, மனித டிஎன்ஏவை படிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் விரைவில் டிஎன்ஏவின் பகுதிகளை எழுதவும் பயன்படுத்தப்படலாம் இந்தத் திட்டத்தின் பணிகள் சோதனைக் குழாய்கள் மற்றும் கருவிகளுடன் மட்டுமே இருக்கும். செயற்கை உயிர்களை உருவாக்கும் எந்த முயற்சியும் இந்தத் திட்டத்தில் இருக்காது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு மனித வாழ்க்கை அமைப்புகள் மீது இதுவரை இருந்திராத கட்டுப்பாட்டை வழங்கும். இந்தத் திட்டம் மருத்துவ ரீதியிலான நன்மைகளை இலக்கு வைத்து செய்யப்பட்டாலும், நேர்மையற்ற விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் எதுவும் இல்லை. உதாரணமாக, உயிரியல் ஆயுதங்கள், மேம்பட்ட மனிதர்கள் அல்லது மனித டிஎன்ஏ கொண்ட உயிரினங்களை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று மரபணு விஞ்ஞானி பேராசிரியர் பில் எர்ன்ஷா கவலை தெரிவிக்கிறார். இவர், செயற்கை மனித குரோமோசோம்களை உருவாக்குவதற்கான செயல்முறை ஒன்றை வடிவமைத்தவர். அதோடு, எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பிரபல மரபணு விஞ்ஞானி ஆவார். "பூதம் பாட்டிலுக்கு வெளியே வந்துவிட்டது," என்று அவர் இதுகுறித்து பிபிசியிடம் விவரித்தார். மேலும், "இப்போது நமக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் பொருத்தமான இயந்திரங்களை அணுகக்கூடிய ஓர் அமைப்பு இதைச் செய்ய முடிவு செய்தால், அதைத் தடுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்" என்றார். ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் சுகாதார நிறுவனங்களால் தொழில்நுட்பம், வணிகமயமாக்கப்படும் என்பது குறித்து டாக்டர் பாட் தாமஸ் கவலைப்படுகிறார். "செயற்கை உடல் பாகங்களையோ அல்லது செயற்கை மனிதர்களையோ நம்மால் உருவாக்க முடிந்தால், அவை யாருக்குச் சொந்தமானவை. இந்தப் படைப்புகளில் இருந்து வரும் தரவுகள் யாருடையது?" என்று அவர் கேள்விகளை எழுப்புகிறார். தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு நிதியளிக்கிறார்கள் என்பதுதான் தற்போது வெல்கம் நிறுவனத்திடம் கேட்கப்படும் கேள்வி. இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை என்று நிதியுதவி அளித்த வெல்கம் நிறுவனத்தின் டாக்டர் டாம் காலின்ஸ் கூறினார். "இதற்கு நிதியளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை எங்களிடம் நாங்களே கேட்டுக்கொண்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "இந்தத் தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு நாள் உருவாக்கப்பட உள்ளது. எனவே இப்போதே அதைச் செய்வதில் தவறேதும் இல்லை. குறைந்தபட்சம் பொறுப்பான முறையில் அதைச் செய்ய முயல்கிறோம். அத்துடன், நெறிமுறை மற்றும் தார்மீக கேள்விகளை முடிந்தவரை வெளிப்படையாக எதிர்கொள்ள முயல்கிறோம்." ஒரு பிரத்யேக சமூக அறிவியல் திட்டமும், இந்தத் திட்டத்தின் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து இயங்கும். கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் ஜாய் ஜாங் தலைமையில் இந்த சமூக அறிவியல் திட்டம் நடைபெறும். "செயற்கை மனித மரபணு திட்டம் தொடர்பாக, நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் குறிப்பாக பொது மக்களின் கருத்துகளை அவர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றியும், முக்கியமாக அவர்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்தும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdm68j4gdo
  18. கதிர்காம முருகன் ஆலய பாதயாத்திரை: காட்டுவழியாக 5 நாட்கள் பயணம் நிறைவு Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 04:37 PM யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், வியாழக்கிழமை (26) அன்று கதிர்காம முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். இந்த பாதயாத்திரை, நேத்திக்கடனை நிறைவேற்றும் ஒரு ஆளுமைமிக்க பக்திப்பயணமாகும். இந்த ஆண்டுக்கான பாதையாத்திரை, கிழக்கு மாகாணத்தின் பாணமை உகந்தமலை முருகன் ஆலயத்தை கடந்த ஜூன் 19 அன்று சென்றடைந்து, அதனுடன் இணைந்த காட்டுவழிப் பாதை வெள்ளிக்கிழமை (20) சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது. இததனையடுத்து, 5 நாட்கள் காட்டுவழியில் பக்தர்கள் கடுமையான நடைபயணத்தை மேற்கொண்டு, இறுதியில் வியாழக்கிழமை (26) கதிர்காமத்தை அடைந்தனர். இந்த ஆண்டுக்கான காட்டுவழி பாதை ஜூலை 4 ஆம் திகதிக்கு பின் மூடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை, பாதைபயணத்தின் போது தண்ணீர் வசதி இல்லாமல் பக்தர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இது முந்தைய ஆண்டுகளில் இல்லாத புதிதான பிரச்சினையாக இருந்ததாகவும், அதற்காக பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218538
  19. செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் 26 JUN, 2025 | 05:12 PM செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை (26) தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து, அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு, கடல் நீரில் விடப்பட்டது மூன்றாம் நாள் போராட்டமான நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் வருகை தந்து, அணையா தீபம் முன் நின்று வணங்கி மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218554
  20. Published By: VISHNU 26 JUN, 2025 | 09:02 PM புதன்கிழமை (25) யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதன்போது இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் ஜீவன்சன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் தந்தையின் மரக்காலைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு தெல்லிப்பழையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தொட்டியினுள் தண்ணீர் நிரப்பிவிட்டு நீச்சலடித்துள்ளார். இதன்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பின்னர் மகனை காணாத நிலையில் பெற்றோர் அவரை தேடியவேளை அவரது சடலம் தண்ணீர் மிதந்தவாறு காணப்பட்டது. பின்னர் அவரது சடலமானது மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/218576
  21. தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு Published By: VISHNU 26 JUN, 2025 | 09:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார். தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரம் இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இருப்பதால் இரு நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார். நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் செண்டில் ஷால்க் ( Sandile Schalk), தபோ ம்பெக்கி நிதிய பிரதம நிர்வாக அதிகாரி மெக்ஸ்வெல் போக்வானா (Maxwell Boqwana), தபோ ம்பெக்கி நிதிய பிரதம செயல்பாட்டு அதிகாரி லுக்ஹன்யோ நீர் (Lukhanyo Neer) ஆகியவர்களும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். கெபிடல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்றுக் குழுமப் பணிப்பாளர் ஷெவன் டெனியல் மற்றும் கெபிடல் மகாராஜா குழுமத்தின் பணிப்பாளர் அனுஷ்கா லெவ்கே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218578
  22. Published By: DIGITAL DESK 2 26 JUN, 2025 | 11:14 AM சூரிய மின் சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு செலுத்தப்படும் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்து, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்கள் குழுவினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் ஆஜரான மனுதாரர்கள் கூறியதாவது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் (LECO) ஆகியவை செலுத்தும் கட்டணத்தை அமைச்சரவை தன்னிச்சையாக குறைத்துள்ளது. மின்சாரச் சட்டத்தின் கீழ், இவ்வாறான கட்டண மாற்றங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதல் அவசியம். ஆனால், மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்த போதிலும், அரசாங்கம் அதைப் புறக்கணித்துள்ளது.. அமைச்சரவை தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மின்சார கட்டண குறைப்பு நடைமுறைக்கு வருவது சட்டவிரோதமானது. எனவே சூரிய மின் சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை திருத்தியமைக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவை இரத்து செய்யுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218484
  23. 26 JUN, 2025 | 07:13 AM அபிலாஷனி லெட்சுமன் இந்தியாவின் கேரள கடற்பரப்பில் இடம்பெற்ற MSC என்ற கப்பல் விபத்தினால் தொன் கணக்கான பிளாஸ்ரிக் துகள்கள் தென் ஆசிய கடற்பரப்பில் கலந்துள்ளளன. பிளாஸ்ரிக் துகள்களினாலான மாசாக்கத்தினால் இலங்கை பாதிக்கப்படுகின்றமையால் அதற்கான பொறுப்புக்கூறலை சிவில் சமூக அமைப்புக்கள் கப்பல் நிறுவனங்களிடம் கோருகின்றன. கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சிவில் அமைப்புக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளன. “எக்ஸ்பிரஸ் பேரள் (X-Press Pearl) அனர்த்தம் இடம்பெற்று 4 ஆண்டுகளின் பின்னர் பிளாஸ்ரிக் துகள்கள் தெற்காசியா மற்றும் இலங்கைக் கரையோரங்களை அலைகளினூடு வந்தடைவதை கிறீன் பீஸ் தெற்காசியா வன்மையாக கண்டிக்கின்றது” என Centre for Environmental Justice இன் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி எம். எஸ். சீ. எல்சா - 3 (MSC ELSA 3) எனும் கப்பல் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் ஜூன் 9 ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் மற்றொரு பாரிய சரக்குக் கப்பலான வான்ஹாய் 503 (WAN HAI 503) இலிருந்து மேலதிக கொள்கலன்கள் காணாமல் போனமையையும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகினது. இதற்கு நாம் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். தெற்காசிய கடற்பரப்பில் சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க அளவு எரிபொருள், நச்சுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் துகள்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல் மூழ்கியிருப்பது அல்லது மூழ்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலமையாகும். பருவப்பெயர்ச்சிக் காலநிலை மற்றும் பருவகால நீரோட்டங்களால் ஆபத்தான பதார்த்தங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கடலோரப் பல்வகைமை மற்றும் உள்ளூர் சமூகங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் கடல்சார்குழல், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறீன் பீஸ் (Greenpeace) மற்றும் பிற கூட்டணி அமைப்புக்கள் இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் இலங்கைக் கடற்கரையின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் MSC ELSA3 கப்பல் விபத்தினையே சுட்டிக் காட்டுகின்றன. "எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தத்திலிருந்தே இலங்கை இன்னும் மீளவில்லை. அவ்வாறிருக்க தற்போது இன்னொரு மாசாக்கத்தினை எதிர்கொள்கின்றோம். இது வெறும் விபத்து அல்ல. மாறாக இது ஒரு ஒழுங்குமுறையின் தோல்வி மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையே ஆகும். எனவே மாசாக்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வலுவான பிராந்திய வழிமுறை எமக்கு தேவை என மேலும் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த உயிர்ப்பல்வகைமையியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளரும் வழிப்படுத்துனருமாகிய ககனி ரணசிங்க தெரிவிக்கையில், "ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்கள் எவ்வாறு இத்தகைய தவிர்க்கப்படக்கூடிய கப்பல் விபத்துக்களால் மோசமடைகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. பிளாஸ்ரிக்கின் துகள்கள் சிறியதாக இருந்தாலும் அவை எமது சுற்றாடல், சமூகம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அளவிடமுடியாதது. அவை நச்சுத் தன்மையை உறிஞ்சவும் வெளிவிடவும் கூடியவை, கடல்வாழ் உயிரினங்களின் சுவாசத்தை பாதிக்க கூடியவை, மற்றும் சூழலில் பல தசாப்த காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியவை. பிளாஸ்ரிக் உற்பத்தியை நிறுத்த அல்லது ஒழுங்குமுறைப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்காதுவிடின் நாம் எமது நீரை பிளாஸ்ரிக் கூழாக மாற்றிக்கொள்கின்றோம் என தெரிவித்தார். தெற்காசிய அமைப்பின் பிரசாரகர் அனிதா இதன்போது கருத்து தெரிவிக்கையில், "எக்ஸ்பிரஸ் பேர்ள்” இன் விபத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு கப்பல் விபத்தினால் இலங்கையின் கரையோரம் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. தன்னார்வலர்களினதும் பொது மக்கள் குழுவினதும் உதவியுடனும் அதனை மீட்டிருந்தோம். இலங்கை அரசாங்கம் தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் இத்தகைய அனர்த்தங்களுக்கு பொறுப்பான தனியார் நிறுவனங்கள் முழுமையாக பொறுப்பேற்காத போது தூய்மைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செலவு வீணாக பொது மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும் "இந்த அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையின் தொடர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கப்பலிற்குரிய தனியார் நிறுவனமே அதற்கான செலவை கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல. இலங்கை அரசாங்கம் பொருளாதார நட்டத்திற்கும் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கும் எம்.எஸ்.சி இனை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார். Climate Action Now அமைப்பின் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக தெரிவிக்கையில், எல்லைதாண்டிய பிளாஸ்ரிக் மாசுபாடு கடலினுள் சிந்தப்படும் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. மாறாக அவை கடந்து பிராந்தியம் முழுவதும் எல்லைகளை உள்ள கடற்சூழலையும் கரையோரப் பிரதேசங்களையும் பாதிக்கின்றது. இந்த தொடர்ச்சியான சம்பவானது அபாயகரமான சரக்குகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிளாஸ்ரிக் உற்பத்தியின் உலகளாவிய உற்பத்தியின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துகின்றது. எனவே, அரசாங்கம் பிராந்தியங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மாசாக்கத்திற்கு காரணமான மாசாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சுகாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களை பாதுகாக்கவும் உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்புக்கள் மற்றும் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை ஆகியவற்றிற்கான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும். தொடர்புடைய சர்வதேச விதிகளை ஆதரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். எனவே, கிறீன்பீஸ் ஆனது மெடிரறேனியன் கப்பல் நிறுவனத்திடம் (MSC) இருந்து கப்பலிலிருந்த சரக்குப் பொருட்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் விரைவான துப்பரவு நடவடிக்கையையும், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் சுதந்திரமான மதிப்பீட்டிற்கும் எம். எஸ். சீ எல்சா 3 கப்பல் விபத்தினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு உயிர்ப்பல்வகைமை இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றது. மேலும் எம். எஸ். சீ நிறுவனமானது அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. எனவே பொறுப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதும் எம். எஸ். சீ நிறுவனத்திற்கு நினைவூட்டுகின்றோம். https://www.virakesari.lk/article/218456
  24. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு Published By: VISHNU 26 JUN, 2025 | 12:41 AM செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர். செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு புதன்கிழமை (25) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218472

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.