Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் - சபா குகதாஸ் தெரிவிப்பு! 28 JUN, 2025 | 06:45 PM செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இழிவு படுத்தி ஊடகங்களில் கதறிய சிங்கள இனவாதிகளுக்கும் கடந்த காலத்தில் பேரினவாத அரசுக்கு மீண்டு கொடுத்த தமிழ்க் குழுக்களும் மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிசார் உடையது எனவும் அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர். இனவாதி விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால் பொய்யுரைக்கும் போது செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக் கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப் பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும் கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது. செம்மணிப் பகுதியில் புதைகுழி ஏற்படுத்தப்பட்ட சம காலத்தில் அப்பகுதி இராணுவ முகாமில் இருந்த சிப்பாய்கள் சாட்சியாக இருக்கும் போது கடந்த கால அரசுகளின் கைக்கூலிகளும் தென்னிலங்கை இனவாதிகளும் யாரைக் காப்பாற்ற செம்மணிப் மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218718
  2. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் பதக்கங்களை வென்றுள்ளார். #Shakuntalapandya #Sports #Athlatic இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  3. 28 JUN, 2025 | 06:19 PM (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் இன்று சனிக்கிழமை (28) காலை மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம், பாடல்களை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். மேலும், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது. மேலும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களினால் மன்னார் பஜார் பகுதியில் சிரமதான பணியும் முன் னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218722
  4. ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது. இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmcfywyos00huqp4kvb8hv3bo சீற்பெல்ற் பயணிகளுக்கும் அணிய ஏற்பாடு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நல்லது.
  5. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வீதி விபத்து, வாகன இறக்குமதிக்காக செலவிடும் பாரிய செலவு போன்ற பாதகமான நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே ‘Dream Destination’ திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். இதன்போது, வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார். ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார். மருதானை, இக்ரிகம மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்களை, தேசிய புலமைச் சொத்துரிமை அமைப்பின் (NIO) சார்பாக பட்டய பொறியாளர் எம்.எம்.எஸ். மோரேமடா, விளக்கினார்.மேலும் அவரது அமைப்பு தேவையான இடங்களில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தொண்டரடிப்படையில் முன்வந்து வழங்கும் என்று கூறினார். ‘Dream Destination’ திட்டம் குறித்தும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. https://adaderanatamil.lk/news/cmcfw1soo00hqqp4kmp1pxvs0
  6. 25 JUN, 2025 | 09:14 AM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அண்மைய ஒரு தீர்ப்பில் சுயாதீனமான அரச நிறுவனங்கள் வகிக்க வேண்டிய பாத்திரத்தை எடுத்துக் கூறியிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய தனது கருத்துக்களை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட முஹம்மட் லியாவுதீன் முஹம்மட் ருஸ்டியின் வழக்கில் கோட்பாட்டு அடிப்படையிலான தலையீட்டைச் செய்தமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தேசிய சமாதான பேரவை வெகுவாக மெச்சுகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதனாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனாலும் தோன்றுகின்ற ஆபத்துக்களை இந்த வழக்கு தெளிவாக வெளிக்காட்டுகிறது. ருஸ்டியின் கைது இன, மத அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்கிறது போன்று தோன்றுகிறது. எந்தவிதமான சான்றும் இல்லாமலேயே ருஸ்டி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார். அவரின் சுவரொட்டியில் காணப்பட்ட சுலோகம் ஒரு குற்றச்செயலாக அமையவில்லை என்பதை பொலிசார் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அவர் கைதுசெய்யப்பட்டு, ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டார். பொலிசாரின் உத்தியோகபூர்வ தகவல்களில் அவர் மனநிலை குழம்பியவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவரது சுதந்திரத்தை தடுக்கின்றன. குறிப்பாக, இன, மத அடிப்படையிலேயே ருஸ்டியின் கைது இடம்பெற்றிருக்கிறது போன்று தோன்றுவது கவலையைத் தருகிறது. ருஸ்டி " தீவிரவாதமயப் போக்கை " கொண்டிருப்பதாக பொதுப்படையான, பாரபட்சமான கற்பிதத்தின் அடிப்படையிலேயே பொலிசார் தீர்மானித்திருப்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்திருக்கிறது. அவர் ஒரு முஸ்லிமாக இல்லாமல் இருந்திருந்தால், அவ்வாறு அவருக்கு நடந்திருக்காது என்றும் ஆணைக்குழு கூறியிருக்கிறது. சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டையும் இனம் அல்லது மதத்துக்கு அப்பால் சகல குடிமக்களும் சமத்துவமான பாதுகாப்பை பெறுவதற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தையும் பாரதூரமாக மீறுவதாக இந்தச் அமைந்திருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை அவசரமாக இரத்துச் செய்ய வேண்டிய தேவையை இந்த வழக்கு மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒரு கருவியாக பயங்கரவாத தடைச்சட்டம் பல தசாப்தங்களாக நியாயப்படுத்தப்படடு வந்திருக்கிறது. ஆனால், உண்மையில் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும் எதேச்சையான தடுப்புக் காவல்களை நியாயப்படுத்துவதற்குமான ஒரு பொறிமுறையாகவே அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நம்பகத் தன்மையான சான்றுகள் இல்லாமல் ஆட்களை தடுத்துவைப்பதற்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற விசாரணைகளின் போது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் இறுதியில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்ட வேண்டும் என்பதுடன் அதன் ஒடுக்குமுறை அம்சங்களை வேறுபட்ட பெயர்களில் மீண்டும் அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு சட்டத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் பதிலீடு செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை தேசிய சமாதான பேரவை மீணடும் வலியுறுத்துகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஆதரிக்கும் நாம் அவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, ருஸ்டியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதற்காகவும் அவரது நற்பெயருக்கும் வாழ்வாதாரத்துக்கும ஏற்பட்ட பங்கத்துகாகவும் ஆணைக்குழு கேட்டிருப்பதை போன்று அவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச அமைப்புக்களினால் ஆட்கள் இன,மத அடிப்படையில் சோதனை செய்யப்படுவதை தடுக்கக்கூடிய தெளிவான உத்தரவாத ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகுந்த உன்னிப்பான விசாரணையும் சட்ட நியாயப்பாடும் நிறுவன நேர்மைக்கு ஒரு வகைமாதிரியானதாக விளங்குகின்றன. கடந்த காலத்தில் அரச பொறுப்புக்கூறல் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும தாழ்ந்த நிலையிலேயே இருந்தது. தற்போது நிலைவரம் நன்மைக்கு மாறிவருகின்றது. சுயாதீனமான பொது நிறுவனங்கள் துணிச்சலுடனும் தெளிவுடனும் செயற்படும்போது பயனுறுதியுடைய மேற்பார்வையும் நீதியும் உண்மையில் சாத்தியம் என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் நிரூபிக்கிறது. ருஸ்டியின் விவகாரம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத அதிகாரத்தினாலும் தப்பபிப்பிராயத்தினாலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சகல குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரச நிறுவனங்கள் வகிக்கக்கூடிய முக்கியமான பாத்திரத்தையும் உணர்த்தி நிற்கிறது. https://www.virakesari.lk/article/218382
  7. பட மூலாதாரம்,INSTAGRAM/REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர். ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர். இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. திருமணத்திற்கு பிறகு, 55 வயதான் சான்செஷ் ஆடம்பரமான நகைகள் மற்றும் ஆடைகளை அணிந்து 61 வயதான பெசோஸுக்கு அருகில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. சான் கியோர்கியா என்கிற சிறு தீவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்கு இத்தாலிய பாடகர் ஆண்டியா போசெலியின் மகன் மேட்டியோ போசெலி நிகழ்ச்சி நடத்தினார். இந்த திருமணத்தின் துல்லியமான செலவு எவ்வளவு எனத் தெரியவில்லை என்றாலும் சில மதிப்பீடுகள் 20 மில்லியன் டாலரிலிருந்து 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓப்ரா வின்ஃப்ரே பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிம் கர்தேஷியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேண்டால் ஜென்னர், கைலி ஜென்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறிய மோட்டார் படகில் கையசைக்கும் ஜெஃப் பெசோஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடிகர் ஓர்லாண்டோ ப்ளூம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெஃப் பெசோஸ் வருவதைக் கண்டு ஆர்ப்பரித்த சுற்றுலாப் பயணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெனிஸில் நடைபெற்ற போராட்டம் https://www.bbc.com/tamil/articles/cwyr6y7626ko
  8. சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை 28 JUN, 2025 | 05:16 PM வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர். இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218711
  9. யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டது! 28 JUN, 2025 | 06:43 PM யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதியானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218723
  10. தமிழக பள்ளிகளில் 'வாட்டர்பெல் திட்டம்' எவ்வாறு அமலாகும்? மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி செய்தியாளர் 28 ஜூன் 2025, 10:35 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை நாளாக இருந்த சனிக்கிழமையன்று காலை 6 மணியளவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவன், மறுநாள் காலையில் எழவேயில்லை. மயக்கமாக இருந்த அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவன் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்திருந்ததே இதற்குக் காரணமென்று கூறி சிகிச்சை மேற்கொண்டனர். இரு வார சிகிச்சைக்குப் பின், மாணவன் நலம் பெற்று வீடு திரும்பினார். மாணவனின் பெற்றோரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, காலையிலிருந்து மாலை வரை தண்ணீரே குடிக்காமல் விளையாடியதே இதற்குக் காரணமென்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். பொதுவாகவே அந்த மாணவன் மிகவும் குறைவாகவே தண்ணீர் குடித்து வந்ததாக மாணவனின் பெற்றோர் கூறினர். இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகவே, வெளிநாடுகள் பலவற்றிலும் உள்ள 'வாட்டர் பெல்' திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 'வாட்டர் பெல்' தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்டர் பெல் திட்டம் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, அனைத்து மாணவர்களும் தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும். காலைநேர கூட்டத்தின் போது தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கப்படும் பெல்லானது, வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதை அறிவுறுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த பெல் சத்தம் கேட்டதும் மாணவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். வாட்டர் பெல்லுக்கான நேரமானது காலை 11 மணி , பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கேற்ப இருக்கலாம். இந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற அனுமதிக்காமல், வகுப்புச் சூழல் பாதிக்காமலும் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதும் தனிமனித உரிமையும்! பட மூலாதாரம்,DR.SRINIVASAN படக்குறிப்பு,மருத்துவர் சீனிவாசன், குழந்தைகள் சிகிச்சை நிபுணர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். ''பள்ளிக் குழந்தைகள் நிறைய விளையாடுவதால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் மற்றவர்களை விட அவர்கள்தான் அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காத பட்சத்தில் நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும். கவனமின்மை அதிகரிக்கும். அடிக்கடி நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தொற்று வரும். பதின்பருவத்தினருக்கு முகப்பருக்கள் தோன்றும்.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன். இன்றைய காலகட்டத்தில், துரித உணவு முறைகளாலும், தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்காத காரணத்தாலும் ஏராளமான குழந்தைகள், மலச்சிக்கலை சந்திப்பதாக கூறும் மருத்துவர் சீனிவாசன், நமது உடலில் ஏற்கெனவே உள்ள நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், உடல் செயல்பாட்டுக்கேற்பவும் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டுமென்கிறார். பட மூலாதாரம்,DR.DURAIKANNAN படக்குறிப்பு,மருத்துவர் துரைக்கண்ணன், ஊட்டச்சத்து நிபுணர் பொதுவாக நீரிழப்பு (Dehydration) அதிக வியர்வை, விளையாட்டு போன்ற அதிகமான உடல் செயல்பாடு (Activities), அதிக வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் என்று விளக்கும் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், நீரிழப்பால் உடலின் சமநிலை பாதிக்கும் (electrolyte imbalance) என்கிறார். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால்தான் எல்லா வயதினருக்குமே மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ''குழந்தைகளுக்கு முக்கியமாக பதின் பருவத்தினருக்கு உயரம், எடை இரண்டுமே வேகமாக அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீர்ச்சத்து மிக முக்கியம். குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சிக்கேற்ப தாகம் ஏற்படும். அதற்குரிய அளவில் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சமவெளிகளில் ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். நீர்ச்சத்து குறைவதால் வரும் பாதிப்புகள் பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் நீர்ச்சத்து குறையும் போது, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் எலக்ட்ரோலைட் (Electrolytes) சமநிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறும் மருத்துவர் சீனிவாசன், அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும். சில நேரங்களில் ரத்தப்போக்கு (Bleeding) ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார். உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் குறையுமென்றும் அவர் எச்சரிக்கிறார். ''ஒருவருக்கு நீர்ச்சத்து முற்றிலும் குறையும் பட்சத்தில் சிறுநீரகம் செயல்பாட்டை நிறுத்திவிடும். தண்ணீர் குடிக்காமலே வெகுநேரம் விளையாடும் போது தசைப்பிடிப்பு (cramps) ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பாதிப்பு ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது மிகவும் நல்ல திட்டம் என்பதோடு மிகவும் அவசியமானதும் கூட.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன். ஒரே வயதுடைய மாணவர்களிடையே உயரம், எடை போன்றவற்றில் நிறைய மாறுபாடு இருக்கும் நிலையில், 'எல்லோரும் சராசரியாக இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்' என்ற கருத்து சரியானதுதானா என்ற கேள்வியும் பலரிடமும் எழுப்பப்படுகிறது. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், சராசரியாக ஒவ்வொருவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்பாட்டுக்கேற்ப இந்த அளவு மாறுபடும் என்றார். உயரம், எடையை விட பாடம் படிப்பது, பாட்டுப்பாடுவது, விளையாடுவது என அந்தந்த நேரத்தின் செயல்பாட்டின் அளவைக் கணக்கில் கொண்டே தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அவரின் கருத்து. இந்த அளவு குறையும்போது, அவர்களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது; செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்படும் என்கிறார் அவர். கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும், ஒரு நாளுக்கு இதே அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. இதைப் பற்றி விளக்கும் மருத்துவர் சீனிவாசன், மலைப்பகுதியில் வியர்வை வராது என்பதால் அங்கே தண்ணீரின் தேவை குறைவாக இருக்கும் என்கிறார். அதேநேரத்தில் அங்கேயும் உடல் உழைப்பு இருப்பவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால் மலைப்பகுதிகளில் 'வாட்டர் பெல்' வைத்து, தண்ணீர் குடிக்க நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். ''எங்கெங்கே காற்றுப்போக்கு குறைவாயிருக்கிறதோ, வெப்பம் அதிகமாகியிருக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்த வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.'' என்கிறார் அவர். ''சிறுநீர் கழிக்கவும் அனுமதி அளிப்பது அவசியம்'' பட மூலாதாரம்,GETTY IMAGES அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது நல்ல திட்டம் என்றாலும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் போதிய கால இடைவெளியில் அவகாசம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். அதற்கேற்ப கழிப்பறை வசதியையும், சுகாதாரத்தையும் பள்ளி நிர்வாகங்கள் பேணவேண்டியது அவசியம் என்கிறார் அவர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சீனிவாசன், ''பள்ளிக்குழந்தைகளை தண்ணீர் குடிக்க அனுமதித்தால் மட்டும் போதாது. சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்றே பல குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். பெரும்பாலான மாணவிகள், பள்ளிகளில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் அதிகளவில் சிறுநீர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளுக்கு 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.'' என்கிறார். "குளிர் பானங்கள் தண்ணீருக்கு மாற்று அல்ல" பட மூலாதாரம்,GETTY IMAGES தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்கள் (aerated drinks), உற்சாக பானங்கள் குடிப்பது கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார். ''மாணவர்கள் இதுபோன்ற பானங்களை தொடர்ந்து குடிக்கும்போது, முதலில் உடல் பருமன் (obesity) ஏற்படும். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தாகத்துக்கு எதையாவது குடிக்க வேண்டுமென்று இத்தகைய பானங்களைக் குடிக்காமல் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என 3 தரப்பினருக்கும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,'' என்கிறார் மருத்துவர் துரைக்கண்ணன். தமிழகத்திலுள்ள 55 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும், 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 68 லட்சம் மாணவர்களும் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார். ''தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்து பலவிதமான அறிவுறுத்தல்களை சங்கம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான அளவு கழிப்பிடம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறோம்.'' என்று நந்த குமார் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9w184w2vg2o
  11. செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்: சீமான்! 28 JUN, 2025 | 12:12 PM செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. செம்மணி மனித புதைகுழிகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் ஒரு சிலரின் உடல்களே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அதற்கான விசாரணையும்கூட முழுமையாக நிறைவடையவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள இனவெறி ராணுவ அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவுமில்லை. அவ்வப்போது புதைகுழிகள் தோண்டப்படுவதும், விசாரணை நடைபெறுவதும், சில நாட்கள் ஊடகங்கள் அவை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு அவ்வழக்குகளும், விசாரணைகளும் நீர்த்துப்போவதும் வழக்கமான ஒன்றாகிப்போனதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த பேரவலம். கொல்லப்பட்டவர்கள் யார், யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? எப்போது கொல்லப்பட்டார்கள்? எப்படிக் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்று எந்த விசாரணையும் இல்லாமல், எந்த நீதியும் கிடைக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இனத்தில் பிறந்த ஒற்றைக்காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உடல்கள், செம்மணி புதைகுழிகளில் இன்றளவும் புதைந்து கிடக்கின்றன. மரிக்கும் முன் எழுப்பிய தங்களது இறுதி மரண ஓலங்களுக்கான நீதியானது, தமிழனாய் மரணித்த தங்களின் இறுதி பார்வைக்கான நியாயமானது, புதைக்கப்பட்ட தங்கள் எலும்புகள் முழுவதுமாய் அரிக்கும் முன்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மண்ணுக்கடியில், ஈழத்தாய்மடியில் அவ்வுடல்கள் காத்து கிடக்கின்றன. செம்மணி மட்டுமல்ல ஈழத்தாயகம் முழுவதுமே சிங்கள இனவெறி ராணுவத்தாலும், இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதத்தாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் நிரம்பியுள்ளன. இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படி சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும். 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கண் முன்னே 2 இலட்சம் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ, உரிய நீதியையோ பெற முடியாமல், பன்னாட்டு அவைகளில் முட்டி மோதி முற்றாகச் சோர்ந்து போயுள்ளது தமிழினம். ஈழத்தாயக விடுதலைத்தான் பெறமுடியவில்லை குறைந்தபட்சம் இனப்படுகொலை செய்யப்பட்ட நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். 2 இலட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையையே பெற முடியாமல், அரசியல் அதிகாரம் ஏதுமற்றுத் தவித்துப்போயுள்ள தமிழினம், யாருக்கும் தெரியாமல் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கான நீதியை எப்படிப் பெறப்போகிறோம்? என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து நிற்கும் நிலைதான் மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் அருகே அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஈழத்தாயக மக்கள் முன்னெடுத்த ‘அணையா தீபம்’ தொடர்ப்போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளை நேரில் கண்டு விசாரணை மேற்கொண்டது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது இனவெறி இலங்கை அரசு மேற்கொண்ட கடலளவு தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே; செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசு நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போட்டு 2009 இல் 2 இலட்சம் தமிழ் மக்களைத் தம்மால் நேரடியாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான சுதந்திரமான நீதி விசாரணையையே நடைபெறவிடாமல் முற்று முழுதாக முடக்கியுள்ள இனவெறி இலங்கை அரசு, எவ்வித குற்றச்சாட்டும் இன்றி, எவ்வித விசாரணையும் இன்றி, எவ்வித காரணங்களும் இன்றி, எவ்வித ஆதாரங்களும் இன்றி, பல்வேறு காலகட்டங்களில், மறைமுகமாகக் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் குறித்தும், அப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் குறித்தும் முறையான நீதி விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியோ, ஒத்துழைப்போ வழங்கப்போவதில்லை. ஆகவே, செம்மணி உட்பட ஈழத்தாயகத்தில் மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தத் தேவையான பொறிமுறையை உருவாக்கி, புதைகுழிகளை அகழாய்வு செய்து, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும். தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம்! எங்களைக் கொன்று மண்ணில் புதைத்தாய்! – எங்கள் மண்ணைக் கொண்டுபோய் எங்கே புதைப்பாய்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218686
  12. 'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? பட மூலாதாரம்,KRISHNAKULASEKARAN/INSTAGRAM & ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 28 ஜூன் 2025, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை விற்பனை செய்த கெவின் என்பவரையும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்துள்ளதாக, ஜூன் 26 அன்று சென்னை மாநகர காவல்துறை கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள்களைப் பெற்று வந்ததாகக் காவல்துறை கூறுகிறது. இதனை கிருஷ்ணாவின் வழக்கறிஞர் முற்றிலுமாக மறுத்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எதிர்க்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகியாக இருந்ததால் அரசியல் ரீதியான பழிவாங்கலில் கிருஷ்ணா சிக்கியிருப்பதாகவும் கிருஷ்ணாவின் வழக்கறிஞர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கலாம்? வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன? சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் விடுதியில், கடந்த மே 22 ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை விசாரிப்பதற்காக போலீஸார் சென்றபோது, அங்கிருந்தவர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்ததாக தெரியவந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்த பிரசாத், நாகேந்திர சேதுபதி, அஜய் வாண்டையார், தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திற்கு பின்னர் பிரசாத் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கைதானவர்களில் ஒருவரான அ.தி.மு.க பிரமுகர் பிரசாத்துடன் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் அறிந்தனர். இதையடுத்து, ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேநேரம், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தாக காவல்துறை தெரிவித்தது. ஸ்ரீகாந்துக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப் பரிவர்த்தனை, அவருடைய வீடு முழுமையாக சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளதாக, ஜூன் 24 அன்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் ஆகியோர் மூலமாக போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஸ்ரீகாந்தை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா கைது விசாரணையின் தொடர்ச்சியாக, 'கழுகு' உள்பட பல்வேறு படங்களில் கதாநாயனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கெவின் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தனக்கு இதயநோய் உள்ளதாகவும் அதற்கு மருந்து உட்கொள்வதால் கொகைன் எடுத்துக் கொள்ளவே முடியாது எனவும் கிருஷ்ணா கூறியதாக தகவல் வெளியானது. படக்குறிப்பு, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கெவின் 'வாட்ஸ்ஆப் குழு மூலம் கொகைன் விற்பனை' வாட்ஸ்ஆப் குழு மூலம் நடிகர்கள் ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், போதைப் பொருள் விற்பனையாளர் கெவின் உள்ளிட்டோர் அடங்கிய நெட்வொர்க் இயங்கி வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. "கெவினிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி கிருஷ்ணா பயன்படுத்தி வந்துள்ளார். அதை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்" என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து போதைப்பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றையும் ஸ்ரீகிருஷ்ணா பகிர்ந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது. இந்த வழக்கில் ஜெஸ்வர் என்ற கெவினை, வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது. அவரிடம் இருந்து அரை கிராம் கொகைன், 10.30 கிராம் மெத்தம்பெட்டமைன், எம்டிஎம்ஏ (MDMA) 2.75 கிராம், ஓஜி கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சிறிய அளவிலான எடை போடும் இயந்திரம், செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இவர்களின் வங்கிப் பணப்பரிவர்த்தனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கெவின் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவை கைது நடவடிக்கைக்கு உட்படுத்தியதாகவும் காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எந்த தொடர்பும் இல்லை" - ஸ்ரீகிருஷ்ணா வழக்கறிஞர் ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீகிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " போதைப் பொருள் வழக்கிற்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார். வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாக காவல்துறை குறிப்பிடுவது குறித்துக் கேட்டபோது, "கெவின் என்பவருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை வைத்து போலீஸ் இவ்வாறு கூறுகிறது. அதற்கும் ஜூனில் நடந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்றார். "ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை. ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது" எனவும் இன்ஃபேன்ட் தினேஷ் குறிப்பிட்டார். நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவின் ஜாமீன் மனு திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. படக்குறிப்பு, வழக்குக்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறுகிறார் ஶ்ரீ கிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் "10 ஆண்டு சிறைத் தண்டனை" - வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் "கொகைன் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது?" என போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும், பா.ஜ.க-வை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. "கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மெத்தம்பெட்டமைன் 50 கிராமுக்கு மேல் இருந்தால் 20 வருட தண்டனை கிடைக்கும்" எனக் கூறுகிறார். என்டிபிஎஸ் (Narcotic Drugs And Psychotropic Substances Act, 1985) சட்டப்பிரிவு 22(a), 22(b), 22(c) என போதைப்பொருளின் தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீகாந்துக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா? ஸ்ரீகாந்த் மீதான வழக்கு குறித்து விவரித்த பால்கனகராஜ், "அவர் கையில் கொகைன் வைத்திருந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படவில்லை. என்டிபிஎஸ் சட்டப் பிரிவு 27 என்பது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப் பற்றிக் கூறுகிறது. அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார். "இதன்படி போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை காவல்துறை கைது செய்யக் கூடாது. அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் பத்திரமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று காவல்துறையினர் அவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் வழங்கும் நடவடிக்கையும் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். "ஸ்ரீகாந்த் வாங்கிப் பயன்படுத்தியதாக கூறப்பட்டாலும், அவர் வாங்கி யாருக்கும் விற்றதாக தகவல் இல்லை." என்கிறார், பால்கனகராஜ். பிரிவு 64 ஏ என்ன சொல்கிறது? போதைப்பொருள் தடுப்பு (NDBS) சட்டப்பிரிவு 27ன்படி போதைப்பொருள் பயன்படுத்துவது குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு பிரிவு 64ஏ படி சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசால் பராமரிக்கப்படும் அல்லது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற முன் வந்தால் அவர் மீது எந்தப் பிரிவின் கீழும் வழக்குத் தொடரக் கூடாது என சட்டம் கூறுகிறது. அவ்வாறு சிகிச்சை எடுப்பதற்கு முன்வராவிட்டால் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கொண்டாட்டங்களுக்கு (Party) அதிகளவில் போதைப் பொருள்களை எடுத்துச் சென்றதாக கண்டறியப்பட்டால் அவருக்கு விலக்கு அளிப்பதற்கு 64 ஏ பிரிவின்படி வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl0dpk7j54o
  13. ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத்தளத்தை இலக்குவைத்தது - அந்த தளம் ஏன் முக்கியமானது - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன? Published By: RAJEEBAN 24 JUN, 2025 | 12:12 PM cbs news அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கத்தார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலை "மிகவும் பலவீனமான பதில்" என்று ஜனாதிபதி டிரம்ப் வர்ணித்தார். அதை அமெரிக்கா எதிர்பார்த்தது மற்றும் "மிகவும் திறம்பட எதிர்கொண்டது" என்று அவர் ஒரு சமூக ஊடக இடுகைகளில் கூறினார். மேலும் "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காகவும், இதனால் யாரும் கொல்லப்படாமலும் யாரும் காயமடையாமலும் இருந்ததற்காக" ஈரானுக்கு நன்றி தெரிவித்தார். வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது. அல் உதெய்த் தளம் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு அது வகிக்கும் பங்கு பற்றி இங்கே மேலும் ஆராயலாம். மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளம் அல் உதெய்த் விமானத் தளம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் சமீபத்திய தளமாகும். இது தோஹாவின் தென்மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ளது. இது 1996 இல் நிறுவப்பட்டது மற்றும் CENTCOM என்றும் அழைக்கப்படும் அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கி தலைமையகமாக செயல்படுகிறது. இது மேற்கில் எகிப்திலிருந்து கிழக்கில் கஜகஸ்தான் வரை நீண்டுள்ள ஒரு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்துகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா சுமார் 40000 இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. கத்தாரில் உள்ள இந்த தளத்தில் தற்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் உள்ளனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் உச்சத்தில் இருந்தபோது அங்கு சுமார் 10000 பேர் இருந்தனர். மே மாதம் ஜனாதிபதி டிரம்ப் அல் உதெய்திற்கு விஜயம் செய்தார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க இராணுவ சொத்துக்களுக்கு அல் உதெய்த் ஒரு முக்கிய தளமாக இருந்தது. மே மாதத்தில் திரு. டிரம்பின் வருகையை அது வரவேற்றது. அவர் துருப்புக்களிடம் "மோதல்களைத் தொடங்குவது அல்ல அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதே எனது முன்னுரிமை" என்று கூறினார். "ஆனால் அமெரிக்காவையோ அல்லது எங்கள் கூட்டாளிகளையோ பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க சக்தியைப் பயன்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்". . "நாங்கள் அச்சுறுத்தப்படும்போது அமெரிக்காவின் இராணுவம் அதைப் பற்றி யோசிக்காமலேயே நமது எதிரிகளுக்கு பதிலளிக்கும். எங்களிடம் அபரிமிதமான பலமும் பேரழிவு தரும் சக்தியும் உள்ளது." மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க இராணுவ தளங்கள் கத்தாரைத் தவிர அமெரிக்க இராணுவம் பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளில் தளங்கள் மற்றும் பிற நிறுவல்களைக் கொண்டுள்ளது பஹ்ரைன் பாரசீக வளைகுடா செங்கடல் அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் இந்த தளத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்தி வருகிறது. அப்போது இந்த தளம்பிரிட்டனின் கடற்படையால் இயக்கப்பட்டது. பஹ்ரைனில் சுமார் 9000 அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர். குவைத் குவைத்தில் பல அமெரிக்க இராணுவ நிறுவல்கள் உள்ளன: காம்ப் அரிஃப்ஜன் தளம் அலி அல் சேலம் விமான தளம் மற்றும் காம்ப் புஹ்ரிங். காம்ப் அரிஃப்ஜன் என்பது அமெரிக்க இராணுவ மையத்தின் முன்னோக்கிய தலைமையகம் ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட கரடுமுரடான சூழலுக்காக "தி ராக்" என்று அழைக்கப்படும் அலி அல் சேலம் ஈராக் எல்லையிலிருந்து சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. ஈராக் போருக்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு புஹ்ரிங் நிறுவப்பட்டது மேலும் அமெரிக்க இராணுவ வலைத்தளத்தின்படி ஈராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க இராணுவப் பிரிவுகளின் ஒரு நிலைப் புள்ளியாகும். குவைத்தில் சுமார் 13000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன அபுதாபி ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியின் தெற்கே அமைந்துள்ள அல் தஃப்ரா விமானத் தளத்தைக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தில் முக்கிய முக்கிய நடவடிக்கைகளிற்கு ஆதரவை ஆதரித்து வரும் ஒரு முக்கியமான அமெரிக்க விமானப்படை மையமாகும். இது ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில்சுமார் 3000 அமெரிக்க படையினர் உள்ளனர். ஈராக் ஈராக்கில் உள்ள ஐன் அல் அசாத் விமானப்படை தளத்தில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈராக்கிய இராணுவத்தினருக்கும் நேட்டாவின் நடவடிக்கைக்கும் இவர்கள் தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.வடக்கு ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள எர்பில் விமானப்படைத் தளம் பயிற்சிப் பயிற்சிகள் மற்றும் போர் பயிற்சிகளை நடத்தும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளுக்கான மையமாக செயல்படுகிறது. ஈராக்கில் சுமார் 2500 அமெரிக்க துருப்புக்கள் .உள்ளனர். சவூதி அரேபியாவில் சுமார் 2700 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள னர்.அவர்களில் பெரும்பாலோர் ரியாத்தின் தெற்கே அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் உள்ளனர். ஜோர்தான் ஜோர்தானின் முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்க விமானப்படை மையத்தின் 323வது விமானப் பயணப் பிரிவை நிலைகொண்டுள்ளது.அம்மானுக்கு வடகிழக்கே சுமார் 60 மைல் (100 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அஸ்ராக்கில் அமைந்துள்ள இந்த தளத்தில் சுமார் 3800 துருப்புக்கள் உள்ளன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள டவர் 22 தளம் உட்பட பல சிறிய அமெரிக்க தளங்களும்இங்கு உள்ளன அங்கு கடந்த ஆண்டு ட்ரோன் தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர் இதற்கு ஈரான் ஆதரவு குழுக்களே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிரான சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாக சிரியாவும் அமெரிக்க துருப்புக்களைக் கொண்டுள்ளது. சிரியாவில் சுமார் இ000 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த தளங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்களன்று சிபிஎஸ் செய்திக்குத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218304
  14. 27 JUN, 2025 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார். தனியார் தொக்காட்சி நிகழ்ச்சின்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் பாராளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிவிக்காமல் வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை. ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கைச்சாத்திடுவதற்கு முன்னர் நாட்டுக்கு தெரிவிக்கவும் இல்லை. கைச்சாத்திட்ட பின்னரும் அதனை தெரிவிக்க மறுத்து வருகிறது. கரம்போட் விநியோகித்த குற்றச்சாட்டுக்காக அண்மையில் நீதிமன்றம் 25 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அப்படியானால் இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தளவு காலம் சிறைத்தண்டனை வழங்கப்படும்? நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் வெறு நாடொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மாத்திரமல்லாமல், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்துமாறு கேடடால், அதனையும் வழங்க முடியாது என தெரிவிப்பது பாரிய விடயமாகும். அதனால் இந்த விடயங்களை எப்போதாவது எங்களுக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டி ஏற்படும். இந்தியாவுடன் இணைந்து ஆயுத உற்பத்திக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்துக்கு புதுமையான மன நிலையே இருக்கிறது. அத்துடன் இந்தியாவுடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதாக இருந்தால், அதில் ஏதாவது ஒருவிடயம் இருக்க வேண்டும். அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது, இந்த அரசாங்கத்தை முற்போக்கான அரசாங்கம் என நான் ஒருபோதும் தெரிவிப்பதில்லை. ரணில் விக்ரமசிங்கவைவிட வலதுசாரி வெளிநாட்டுக்காெள்கை மற்றும் தொடர்புகளே இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது. இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது பல நாடுகள் இஸ்ரேலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த அரசாங்கத்தினால் அவ்வாறான கண்ட அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போயிருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றுக்கு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்வது தவறு என்றாவது தெரிவித்திருக்க முடியும். ஈரான் எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடு. மேலும் இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் எமது நாட்டுக்கு வந்து பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். எமது நாட்டில் யுத்தத்தின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே கலந்துரையாடியுள்ளார். ஆணையாளர் அரசாங்கத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். ஆனால் காசாவில் உணவுக்காக வரிசையில் இருப்பவர்கள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்துவதை காண்கிறோம். அங்கு பாரிய இனப்படுகொலை இடம்பெற்று வருகிறது. இது தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நீங்கள் இறுதியாக காசாவுக்கு எப்போது சென்றீர்கள் என ஆணையாளரிடம் இவர்கள் கேட்டிருக்கலாம். காசாவில் நாளாந்தம் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை தொலைக்காட்சிகளில் காணும் நிலையில், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல், இலங்கையில் முடிவடைந்த யுத்தம் தொடர்பில் கதைத்து எமக்கு ஆலாேசனை வழங்கிச்செல்லும்போது வாய்மூடி இருக்கும் அளவுக்கு பலவீனமான அரசாங்கமா இந்த நாட்டில் இருக்கிறது என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/218640
  15. 27 JUN, 2025 | 07:21 PM யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடிய பொதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்துடனேயே வந்துள்ளதாகத் தெரிவித்த சபையின் தலைவர் ஜூலை மாதம் இரு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக கொழும்பிலிருந்து 100 இயந்திரங்கள் (High power water gun) கொண்டு வரப்படவுள்ளன. அத்துடன் அதை இயக்குவதற்கான ஆட்களும் அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களுடன் நான் உட்பட உயர் அதிகாரிகளும் இங்கு வரவுள்ளோம். https://www.virakesari.lk/article/218655
  16. படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்." கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்றி மீட்பதற்கு, பெண் உதவி ஆய்வாளர் மீரா செய்தது என்ன? அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை மிரட்டல் சென்னை தியாகராய நகரில் உள்ள நானா தெருவில் வசித்து வரும் தம்பதியின் 27 வயது மகள், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு "அவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவே, தங்கள் மகளை அந்தத் தம்பதி அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரிவை அந்த இளம்பெண் ஏற்கவில்லை," என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. "அது மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால், நான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அந்தத் தெரு இருந்தது. எனவே விவரம் அறிந்தவுடன் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். அதற்குள் புகார் கூற வந்த நபரே தனது டூவீலரில் என்னை அழைத்துச் சென்றார்" என நடந்ததை விவரித்தார் உதவி ஆய்வாளர் மீரா. "நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் வீட்டு ஜன்னல்களுக்கு தடுப்புக் கம்பிகள் எதுவும் அமைக்கப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசியபோது, "சம்பவ இடத்திற்குச் சென்றபோது பெண்ணின் தாய், பாட்டி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவரது தாய் தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு கூறினார். பெண்ணின் படுக்கையறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது," என்றார். போர்வைகளால் உருவாக்கப்பட்ட வலை படக்குறிப்பு, இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தனது அறையில் இருந்து தற்கொலைக்கு முயலப் போவதாக அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். அதுகுறித்து விளக்கிய மீரா, "அவர் பேசுவது வீட்டின் ஹாலில் கேட்டது. யாரும் காப்பாற்ற உள்ளே வரக்கூடாது என மிரட்டினார். என்னால் எதுவும் செய்ய முடியாமல் தரைத் தளத்திற்கு வந்தேன்" என்றார். இதற்கிடையே இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை மீட்பதற்கு வலை போன்று மீட்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த போர்வைகளைக் கட்டி அதன் மூலம் வலை போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் மீரா ஈடுபட்டார். ஆனால், அப்படியே அந்தப் பெண்ணை தாங்கிப் பிடிக்க நினைத்தாலும் எடை தாங்க முடியாமல் பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளதையும் அவர் கணித்தார். மீட்பு முயற்சிக்கு மாற்று வழிகள் இல்லாத சூழலில், அவரது கையில் செல்போன் இருந்ததை உதவி ஆய்வாளர் மீரா கவனித்துள்ளார். அதுகுறித்து விவரித்த அவர், "அவரை மீட்க அதுதான் ஒரே வழியாக இருந்தது. ஏனெனில், அவரை ஜன்னல் வழியாக மட்டுமே மீட்க முடியும். வேறு வழிகளும் இல்லை. எனவே, தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்" என்றார். சமாதானம் ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மீரா தொடர்பு கொண்டுள்ளார். "யார் நீ?" எனக் கேட்டு ஒருமையில் உதவி ஆய்வாளரைத் திட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த மீரா, "உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். என்னை நம்பி வெளியில் வா" எனக் கூறியுள்ளார். "எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" எனக் கூறி அந்தப் பெண் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது மீராவின் அழைப்பை அவர் ஏற்றுள்ளார். "சுமார் 8 நிமிடம் கடும் கோபத்துடன் அவர் பேசினார். ஒரு நபரின் பெயரைக் கூறி, 'அவன் என்னை விட்டுட்டுப் போய்விட்டான்' எனக் கூறினார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்" என்கிறார் மீரா. அவரைச் சமாதானப்படுத்திய மீரா, "அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன். ஒரு தங்கையாக நினைத்து என்னிடம் பிரச்னையை கூறினால் சரி செய்து தருகிறேன். வேறு யாரையும் நம்ப வேண்டாம்" எனக் கூறியதாகத் தெரிவித்தார். இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது தாயுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது அம்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உதவி ஆய்வாளர் மீரா தெரிவித்தார். "ஒரு கட்டத்தில், 'நீ மட்டும் உள்ளே வா' என அந்தப் பெண் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்ட மறு விநாடியே, தீயணைப்பு வீரர் மூலமாகக் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அந்தப் பெண்ணை உடனடியாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டேன்" என்று விவரித்தார். 'நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை உணர்ந்து நம்பிக்கையளித்தால் மனநிலை மாறும் என்கிறார் உதவி ஆய்வாளர் மீரா (சித்தரிப்புப் படம்) தற்போது தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். "பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதல் விவகாரத்தில் அவருக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அந்த நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன்" என்கிறார் மீரா. "அவர் கையில் செல்போன் இருந்ததால் அவரை அமைதிப்படுத்த முடியும் எனத் தோன்றியது. மேலும், அவரது மனநிலை தெரியாமல் உள்ளே நுழைந்தால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார். "ஒருவர் தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை அறிந்து, உணர்ந்து அதில் நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும் என நினைத்தேன். வேறு காவல் எல்லையாக இருந்தாலும் அந்தப் பெண்ணை மீண்டும் சந்தித்துப் பேசுமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்கிறார் மீரா. தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வானார். தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்துள்ளார். உதவி ஆய்வாளர் பணிக்கு மூன்றாம் முறையாக முயற்சி செய்து தேர்வானதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். தொடரும் காவல்துறையின் மீட்பு சம்பவங்கள் மீராவை போலவே, கடந்த சில வாரங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை மீட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 30 அன்று மெரினா கடற்கரையில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த, அப்போது பணியில் இருந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார், முருகன் ஆகியோர் மீட்டனர். பெற்றோர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து அப்படியான முயற்சியில் ஈடுபட்டதாக, போலீஸ் விசாரணையில் சகோதரிகள் கூறியுள்ளனர். அவர்களை உறவினர்களிடம் காவல் துறை ஒப்படைத்தது. திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினார். அவரிடம் சமாதானமாகப் பேசி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவலர் தேவராஜ் மீட்டுள்ளார். தற்கொலையை தடுக்க உதவும் 4 முக்கிய வழிகள் தற்கொலை மற்றும் அதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைத் தடுப்பதற்கு நான்கு முக்கிய வழிகளையும் பட்டியலிட்டுள்ளது. தற்கொலை செய்வதற்கான வழிமுறைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துதல் தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதற்கான பொறுப்புகள் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெரிவித்தல் வளரிளம் பருவத்தினர் இடையே சமூகம் சார்ந்த திறன்களை (socio-emotional life skills) வளர்த்தல் தற்கொலை நடத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அவர்களைப் பின்தொடர்தல் தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரம், கல்வி, தொழிலாளர், விவசாயம், வணிகம், நீதி, சட்டம், பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் எனப் பல துறைகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,DR MALAIYAPPAN படக்குறிப்பு, மருத்துவர் மாலையப்பன் மேலும், தற்கொலைகளைத் தடுப்பதில் சமூகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கூறுகிறது. இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன், "இந்திய சமூகத்தில் தற்கொலை எண்ணம் என்பது இயல்பாகவே உள்ளது. குடும்ப உறவுகள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுவது வழக்கம்" என்கிறார். "தேர்வு, காதல், வணிகம் ஆகியவற்றில் தோல்வி வரும்போது தற்கொலை எண்ணம் வரும். உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளவர்கள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கோபத்தில் இந்த முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன," எனக் கூறுகிறார் மருத்துவர் மாலையப்பன். தொடர்ந்து பேசிய அவர், "மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும். அதைச் செயல்படுத்தவும் திட்டமிடுவார்கள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்" என்கிறார். அதோடு, மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் மருத்துவர் மாலையப்பன் பட்டியலிட்டார். "போதிய உற்சாகம் இல்லாமல் இருப்பது, மெதுவாக நடப்பது, மெதுவாகப் பேசுவது போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். முன்பு போல வேகமாகச் செயல்பட மாட்டார்கள். உறக்கம் குறைந்துவிடும். எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார். "பிரச்னைகள் வரும்போது மரணம் ஒரு தீர்வல்ல என்ற எண்ணம் வர வேண்டும். மானம் போனால் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. மானத்தைவிட உயிர் மிக முக்கியம் என எண்ணும் அளவுக்கு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். "உளவியல் ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை அளிக்கலாம். நேரத்தைக் கடைபிடிப்பது, கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டக் கூடாது, உற்சாகமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" எனக் கூறுகிறார் மாலையப்பன். உதவி எண்கள் நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8z0k5d4zwo
  17. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27: பங்களாதேஷை வீழ்த்தி முதலாவது வெற்றிப் புள்ளிகளை இலங்கை சம்பாதித்தது 28 JUN, 2025 | 12:10 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27 சுழற்சிக்கான அத்தியாயத்தில் இலங்கை தனது முதலாவது வெற்றியையும் முதலாவது வெற்றி புள்ளிகளையும் ஈட்டிக்கொண்டது. காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மொத்தமாக 16 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று 66.67 சதவீத புள்ளிகளுடன் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பெற்ற அரைச் சதங்கள், ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது இன்னிங்ஸில் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று சனிக்கிழமை (28) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 4 விக்கெட்களை 16 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் கடைசி 4 விக்கெட்களை வீழ்த்துவதற்கு இன்றைய தினம் இலங்கைக்கு 5.4 ஓவர்களும் 29 நிமிடங்களுமே தேவைப்பட்டது. இதற்கு அமைய எஸ்.எஸ்.சி. மைதானத்தில் தான் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுததாடிய பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஷத்மான் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய நால்வரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இரண்டு தினங்கள் துடுப்பெடுத்தாடி 458 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க அபார சதம் குவித்ததுடன் தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் கணிசமான ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். மிகவும் நெருக்கடியான நிலையில் 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் மோசமாகத் துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. முஷ்பிக்குர் ரஹிம் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் பின்னர் தனது துடுப்பாட்டம் குறித்து விளக்கிய பெத்தும் நிஸ்ஸன்க, மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசிக்க கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் தனது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ச்சியாக பேணும் வகையில் துடுப்பாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார். 'இன்னும் ஒரு வருட காலத்திற்கு டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு இல்லை. எனவே உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக விளையாடி எமது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ந்து சிறப்பாக பேண வேண்டியது டெஸ்ட் விளையாடும் வீரர்களின் கடமை' எனவும் பெத்தும் நிஸ்ஸன்க தெரிவித்தார். எண்ணிக்கை சுருக்கம் பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஷத்மான் இஸ்லாம் 46, முஷ்பிக்குர் ரஹிம் 35, லிட்டன் தாஸ் 34, தய்ஜுல் இஸ்லாம் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 31, நயீம் ஹசன் 25, சொனால் தினூஷ 22 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 51 - 3 விக். விஷ்வா பெர்னாண்டோ 45 - 2 விக்.) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 458 (பெத்தும் நிஸ்ஸன்க 158, தினேஷ் சந்திமால் 93, குசல் மெண்டிஸ் 84, லஹிரு உதார 40, கமிந்து மெண்டிஸ் 33, தய்ஜுல் இஸ்லாம் 131 - 5 விக்., நயீம் இஸ்லாம் 87 - 3 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 133 (முஷ்பிக்குர் ரஹிம் 26, அனாமுல் ஹக் 19, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19, ப்ரபாத் ஜயசூரிய 56 - 5 விக்., தனஞ்சய டி சில்வா 13 - 2 விக்., தரிந்து ரத்நாயக்க 19 - 2 விக்.) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/218685
  18. 27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் முகவர்களின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என ஈரான் கருதுகின்றது. இந்த கொலைகளின் துல்லியத்தன்மை மற்றும் அளவு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள ஈரான் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலக்குவைக்கின்றனர். நாட்டின் பாதூகாப்பிற்காக இந்த நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும் ஒரு வழியாகும் என்று பலர் அஞ்சுகின்றனர். 12 நாள் மோதலின் போது இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்தனர். போர் நிறுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை இதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று நபர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் உளவு பார்த்ததாக பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் பல கைதிகளிடமிருந்து வரும் வாக்குமூலங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. மனித உரிமைகள் குழுக்களும் ஆர்வலர்களும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஈரானின் நீண்டகால நடைமுறையான கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி. அதைத் தொடர்ந்து மேலும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன. ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வலையமைப்புகள் - CIA மொசாட் மற்றும் MI6 எதிராக "இடைவிடாத போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி "இஸ்ரேலிய உளவு வலையமைப்பு நாட்டிற்குள் மிகவும் தீவிரமாகிவிட்டது". 12 நாட்களில் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் "இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 700 க்கும் மேற்பட்ட நபர்களை" கைது செய்ததாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தொடர்பான சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் தோன்றியதாக ஈரானியர்கள் பிபிசி பாரசீகத்திடம் தெரிவித்தனர். இந்தப் பக்கங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிபிசி பாரசீகம் லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் மற்றும் மனோட்டோ டிவி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பாரசீக மொழி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மீது ஈரானிய அரசாங்கம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/218621
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பெ.சிவசுப்ரமணியம் பிபிசி தமிழுக்காக 27 ஜூன் 2025 தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது. இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். மூன்று வயது குட்டிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன. நான்கு புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார். இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், நான்கு புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது. "புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது. 'புலிகள் - வன வளத்தின் குறியீடு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த நான்கு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ். மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார். ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார். மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார். புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு பட மூலாதாரம்,GETTY IMAGES புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார். ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார். மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9x2870lv4o
  20. பங்களாதேஷை இரண்டாவது டெஸ்டில் வெற்றிகொள்ளும் நிலையில் இலங்கை; நான்காம் நாள் காலையுடன் போட்டி முடிவடையும் அறிகுறி 27 JUN, 2025 | 07:07 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றிபெறும் தருவாயில் இருக்கிறது. பெரும்பாலும் இந்தப் போட்டி சனிக்கிழமை (28) முதலாவது ஆட்டநேர பகுதியில் இலங்கைக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் லிட்டன் தாஸ், நயீம் ஹசன் ஆகிய இருவரும் இலங்கையின் வெற்றியைத் தாமதிக்க முயற்சிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் முன்னாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி இலங்கைக்கு சாதகமாக அமைந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கையை விட 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ், இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இலங்கையை விட 96 ஓட்டங்களால் பங்களாதேஷ் தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கிறது. இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை தனது கடைசி 8 விக்கெட்களை 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. பெத்தும் நிஸ்ஸன்க தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 158 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (07), ப்ரபாத் ஜயசூரிய (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிய மற்றைய பக்கத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி ஆட்டம் மூலம் இலகுவாக ஓட்டங்களைப் பெற்ற வண்ணம் இருந்தார். இதனிடையே சொனால் தினூஷ (11), தரிந்து ரத்நாயக்க (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். குசல் மெண்டிஸ் உபாதைக்குள்ளானார் குசல் மெண்டிஸ் இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைத் தாரைவார்த்ததுடன் உபாதைக்கும் உள்ளானார். 87 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். ரன் அவுட்டைத் தவிர்ப்பதற்காக குசல் மெண்டிஸ் டைவ் செய்த போது அவரது வலது தோற்பட்டை நிலத்தில் பட்டதால் கடும் உபாதைக்குள்ளானார். இதனை அடுத்து அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபபடவில்லை. அவருக்குப் பதிலாக லஹிரு உதார விக்கெட் காப்பாளராக விளையாடினார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தேவைப்படின் MRI ஸ்கான் செய்ய நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 131 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நயீம் ஹசன் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 55ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தய்ஜுல் இஸ்லாம் 17ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதவுசெய்தார். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்து மேலும் அழுத்தத்தை எதிர்கொண்டது. அனாமுல் ஹக் (19), ஷத்மான் இஸ்லாம் (12) ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து மொமினுள் ஹக் 15 ஓட்டங்களுடனும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும், லிட்டன் தாஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், ப்ரபாத் ஜயசூரியவின் சுழற்சியில் சிக்கிய முஷ்பிக்குர் ரஹிம் 26 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். (100 - 5 விக்.) மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது மெஹிதி ஹசன் மிராஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லிட்டன் தாஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/218665
  21. RESULT 1st Test, Bridgetown, June 25 - 27, 2025, Australia tour of West Indies Australia 180 & 310 West Indies (T:301) 190 & 141 Australia won by 159 runs PLAYER OF THE MATCH Travis Head, AUS 59 & 61
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது. கட்டுரை தகவல் பிரபாகர் மணி திவாரி பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து 27 ஜூன் 2025 மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமூல் காங்கிரஸ் சத்ரா பரிஷத் (TMCP) உடன் தொடர்புடையவர் என்ற கூற்றுகளும் இந்த வழக்குக்கு அரசியல் சாயத்தைப் பூசியுள்ளன. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் திரிணாமூல் காங்கிரஸையும் அதன் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்று கோரியுள்ளன. இந்த விவகாரத்தில் பல அமைப்புகள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தக் கூற்றுகளை அக்கட்சியின் மாணவர் அமைப்பான டிஎம்சிபி நிராகரித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர், சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவில் பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மூன்று நாட்களுக்குள் கொல்கத்தா காவல் ஆணையர் விரிவான அறிக்கையைக் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர், காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தச் சம்பவம் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கூடுதலாக, பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் புகார் அடிப்படையில் மூவர் கைது மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மூவரும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு, 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அந்த நேரத்தில், கல்வி வளாகங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்தன. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் ஜூன் 25ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.50 மணி வரை தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்தது" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி டவுன் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் பிறகு, பார்க் சர்க்கஸ் தேசிய மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, புதன்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மூன்றாவது நபர் இரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரின் பெயர்கள் பிரமித் முகர்ஜி மற்றும் ஜே அகமது. இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோஜித் மிஸ்ரா, அவர் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம் வெள்ளிக்கிழமை, காவல்துறையினரை தவிர, தடயவியல் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டது. "திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்பின் கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த புதன்கிழமை மனோஜித் தன்னை கல்லூரிக்கு அழைத்து அமைப்பின் தலைவராக ஆக்குவதாக உறுதியளித்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி மதியம் 12 மணிக்குப் பிறகு கல்லூரிக்கு வந்துள்ளார். பிறகு மனோஜித் மாணவியிடம் ஆபாசமான முறையில் காதலை முன்மொழிந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துவிட்டார். காவல்துறை அளித்த தகவல்களின்படி, "பின்னர் மனோஜித்தும் அவரது இரண்டு கூட்டாளிகளும் மாணவியை வலுக்கட்டாயமாக காவலாளியின் அறைக்கு இழுத்துச் சென்றனர். காவலாளியை அங்கிருந்து விரட்டியடித்த பிறகு இந்தக் குற்றம் நடந்துள்ளது." இந்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான மனோஜித் மிஸ்ராவின் ஃபேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் தெற்கு கொல்கத்தா மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் அமைப்புச் செயலாளராக உள்ளார். அவர் முன்பு சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால் திரிணாமூல் மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் ஒரு சிறிய பதவி வழங்கப்பட்டது, ஆனால் தலைவர் பதவி அல்ல. அவர் பல ஆண்டுகளாக சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவுக்கு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை" என்று கூறினார். தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேரும் டிஎம்சிபியுடன் தொடர்புடையவர்கள். ஆனால் இதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில், முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவுடன் பல டிஎம்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தத் தலைவர்களில் டிஎம்சிபி மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யாவும் ஒருவர். விசாரணைக் குழு அமைக்கப்படும் – கல்லூரி முதல்வர் பட மூலாதாரம்,SANJAY DAS படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தீவிரமாகத் தொடர்புடையவர்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமான நபர், அந்த அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். தெற்கு கொல்கத்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சர்தாக் பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," என்று தெரிவித்தார். மறுபுறம், செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் கல்லூரியின் தற்காலிக ஊழியர். அவருக்கு கட்சியின் மாணவர் அணியுடன் எந்தத் தொடர்பும் இல்லை," என்று கூறினார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் அக்கட்சியின் மாணவர் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டக் கல்லூரியின் முதல்வர் நயனா சாட்டர்ஜி, வெள்ளிக்கிழமை பேசியபோது, "இந்த விஷயம் எனக்குத் தெரியாது. கல்லூரியில் வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது," என்றார். அதோடு, இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டவர் கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் அவர் கூறினார். கல்லூரி நேரத்திற்குப் பிறகு அவர் வளாகத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தா தத்தா டே, "இந்தச் சம்பவம் குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த முழு அறிக்கை கல்லூரி முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது," என்றார். அதோடு, செவ்வாய்க்கிழமைக்குள் விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் அதன் பிறகு பல்கலைக்கழக நிர்வாகம் இதுகுறித்த எழுத்துப்பூர்வ தகவலை கல்லூரி முதல்வருக்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மமதா பானர்ஜியை விமர்சிக்கும் பாஜக பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இதற்கிடையில், மனோஜித்தின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது மகனுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்றும் அவர் வீட்டிற்குக்கூட வருவதில்லை எனவும் கூறியுள்ளார். அதோடு, தனது மகன் கல்லூரியின் உள் அரசியலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "மனோஜித் சிறு வயதில் இருந்தே திரிணாமூல் காங்கிரஸால் ஈர்க்கப்பட்டு, கல்லூரியில் படிக்கும்போது தீவிர அரசியலில் இணைந்தார்," என்று அவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறினார். முதலமைச்சர் மமதா பானர்ஜி, ரத யாத்திரை தொடர்பாக தற்போது திகாவில் உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரி இதை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர், "முதலமைச்சரின் பாதுகாப்பில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது," என்றார். செய்தியாளர்களிடம் பேசிய சுபேந்து அதிகாரி, "சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த நாற்காலியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. மமதா பானர்ஜியுடைய அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது," என்று கூறினார். இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார், "முதல்வர் முன்பு பாலியல் வன்கொடுமைகளை 'சிறிய சம்பவம்' என்று வர்ணித்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இயற்கையானவை. கல்வி வளாகங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டக் கல்லூரியிலேயே சட்டம் மீறப்படுகிறது," என்று விமர்சித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள் பட மூலாதாரம்,SANJAY DAS படக்குறிப்பு, கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. மதியம் அந்தப் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பாக ஜனநாயக மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ) மாநில செயலாளர் தேபாஞ்சன் டே இதுகுறித்துப் பேசியபோது, "தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் திரிணாமூல் மாணவர் அணி நீண்ட காலமாக கலவரத்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையும் நிர்வாகமும் மௌனம் காத்து வருகின்றன. முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மீது ஊழல், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ளன," என்றார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஒருவர் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தெற்கு கொல்கத்தா திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் கிளைச் செயலாளர் என்று கூறினார். மற்ற இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மற்றுமோர் அமைப்பான அபயா மன்ச், கஸ்பா காவல் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தியது. காங்கிரஸ் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மாணவியின் குடும்பத்தினரைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் மாநில தலைவர் சுபாங்கர் சர்க்கார், "இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். காவல் நிர்வாகம் தீவிரமாக இருந்தால் இத்தகைய சம்பவங்கள் மாநிலத்தில் நடக்காது," என்றார். எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கட்சி கூறியுள்ளது. ஒவ்வொரு திரிணாமூல் உறுப்பினரும் இதைக் கண்டித்துள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார். திரிணாமூல் மாணவர் அமைப்பின் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிறிய பதவிகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர் மாணவர் அமைப்பின் தலைவர் அல்ல என்று தெரிவித்தார். தனிப்பட்ட உரையாடல்களில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்கும் ஆர்.ஜி. கர் சம்பவத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது எதிர்காலத்தில் அரசுக்கும் கட்சிக்கும் சிக்கல்களை உருவாக்கக்கூடும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது, ஆளுங்கட்சி மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் இதை ஒரு பெரிய பிரச்னையாக மாற்ற முயலும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசியல் நிபுணர் ஷிகா முகர்ஜி, "குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, தலைநகரில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம். இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அது கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்," என்று கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqx24zz181ro
  23. 28 JUN, 2025 | 11:20 AM கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாசவின் தலைமையில் உத்தியோகபூர்வ பிரான்ஸ் விஜயத்தை மேற்கொண்ட தூதுக்குழுவின் மூன்றாம் நாளில் சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு முக்கியமான நிறுவனங்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கலந்துரையாடல்கள் தற்போதைய ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Concarneau, Brest இல் அமைந்துள்ள பிரெஞ்சு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர், அங்கு நிலையத்தின் தலைவர் கலாநிதி Guillaume Massé யுடன் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் ஒரு விசேட அருங்காட்சியகக் கண்காட்சியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயப்பட்டதுடன் சமுத்திர மீன்வளப் பயிற்சியை மையமாகக் கொண்ட பரிமாற்றத் திட்டங்களை ஆரம்பித்தல், கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகள் போன்றவற்றை பெருக்கும்போது இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உட்பட நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்ளுதல், பல கலாசார ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்தல் போன்றவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டன. பின்னர், CLS (Collecte Localisation Satellites SA) நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், அவர்களின் செய்மதி தரவு பெறுதல் மற்றும் பகுப்பாய்வு வசதிகள் குறித்து அறிந்துகொள்ளப்பட்டது. இதன்போது பல நிறுவனப் பயன்பாட்டிற்காக (MEPA, NARA, DFAR, முதலியன) செய்மதி அடிப்படையிலான தொழில்நுட்ப மையத்தை நிறுவுதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட செய்மதி புகைப்படங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள், NEMO சிறிய படகு கண்காணிப்பு அமைப்பின் நடைமுறைப் பயன்பாடு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மேலும், Quiet Oceans நிறுவனத்தின் Maud Duma வுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்போது கடல் பாலூட்டிகளின் சத்தங்களைக் கண்டறிதல் மற்றும் நடத்தை பகுப்பாய்வுக்கான அவர்களின் Smartpam போன்ற தனியுரிம கருவிகளின் பயன்பாடு குறித்து முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இந்தக் கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் முகாமைத்துவத்திற்கு அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும், புதிய செயற்பாடுகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/218677
  24. 27 JUN, 2025 | 02:04 PM சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp, Telegram, Skype, We Chat போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாம் முறைப்படி; விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இரண்டாம் முறைப்படி; வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி விளம்பரங்களை பதிவிட்டு, அதன் ஊடாக அறிமுகமான நபர்களின் வங்கி கணக்குகளை பெற்றுக்கொண்டு அதில் பணத்தை வைப்புச் செய்து அந்த பணத்தை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தால் பெரியளவிலான பணத்தொகை இலாபமாக கிடைக்கும் என கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் முதலாம் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் வங்கி கணக்குகளில் பணத்தொகையை முதலீடு செய்த நபர்களின் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218623

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.