Everything posted by ஏராளன்
-
இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற் தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் - ஐங்கரநேசன்
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:08 PM பாரம்பரிய வாழ்விடத்தையும் தனித்துவமான, மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தைத் தேசிய இனங்கள் என்று அரசியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளார்கள். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் எதுவுமில்லை. ஆனால், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் தங்களை உயர்வாகக் கருதிச் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கியொடுக்கி வருகின்றன. இவ்வொடுக்குமுறைக்கு எதிராகச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கிளர்ந்தெழுகின்றன. இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற்தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (29) நடைபெற்ற பசுமை அமைதி விருதுகள் விழாவுக்குத் தலைமை உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், காலத்துக்குக்காலம் மானுடத்தை வழிநடத்துவதற்கென்று சிந்தனையாளர்களால் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டு வந்துள்ளன. சோசலிசக் கோட்பாடு பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் இனங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக உருவானது. ஆனால், சோசலிச நாடுகள் பிற்காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் அடிபணிந்தபோது அங்கு இனங்களுக்கிடையில் மோதல்கள் தலை தூக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்டதும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த உக்ரைன் மீது சோவியத் ரஸ்யா இப்போது படையெடுப்பதும் சோசலிசச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்த குறைபாடுகளால் ஏற்பட்ட விளைவுகள்தான். போர்களில் ஏற்படும் உயிரிழப்புகளைவிட சுற்றுச்சூழல் சீர்குலைவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. வளங்களின் அளவுக்கு மிஞ்சிய நுகர்வால் வளப்பற்றாக்குறைவு ஏற்பட்டு, எஞ்சியுள்ள வளங்களைப் பங்கிடுவதில் முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துள்ளன. பூமியின் வெப்ப உயர்வு காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து தீவு நாடுகளில் கரையோரப்பகுதிகளை மெல்ல மெல்லக் காவுகொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகத் காலந்தப்பிய அடை மழை, கடும் வரட்சி, காட்டுத் தீ, உயிரினங்களின் அழிவு, இதுவரை காணாத புதுப்புது நோய்கள் என்று பல்வேறு சூழற் பிரச்சினைகள் தினந்தினம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள அரசியற் கொள்கைகள், கோட்பாடுகளினால் சூழற் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க இயலாததாலேயே சூழலியம் என்ற புதிய கோட்பாடு முகிழ்த்து வருகிறது. ஒவ்வொரு தேசிய இனமும் தன்னை முதன்மைப்படுத்தும் மனிதமையச் சிந்தனையைத் தவிர்த்து சூழல்நேயச் சிந்தனைக்கு முதலிடம் கொடுத்தால் மட்டுமே அது வாழுகின்ற சூழலைப் பாதுகாக்க முடியும். இதன் மூலமே ஒட்டுமொத்தப் பூமியும் பாதுகாக்கப்படும். ஆபத்தின் விழிம்பில் நிற்கும் உலகை காப்பாற்றுவதற்குச் சூழலியற்தேசியம் என்ற கோட்பாட்டை உலகை வழிநடத்துகின்ற கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே எம்மையும் ஏனைய உயிரினங்களையும் பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற இயலும் என்றார். https://www.virakesari.lk/article/218970
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
முதலமைச்சர் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலமாக உரையாடல்
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க 01 JUL, 2025 | 04:25 PM (எம்.மனோசித்ரா) வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1) கொழும்பிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடங்களுக்குச் சென்று பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டியை அணிந்திருக்கின்றனரா என்று அமைச்சர் கண்காணிப்பில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2011ஆம் ஆண்டு இலகு மற்றும் கனரக வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து மற்றும் லொறி சாரதிகளுக்கு இது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே, கடந்த 3 மாதங்களாக இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இந்த நடவடிக்கை தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாத்திரமின்றி, பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது. வீதி விபத்துக்களின்போது அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இது ஒரு பிரதான காரணியாக உள்ளது. ஆசனப்பட்டிகளை அணிவதால் பெருமளவான விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இலகுரக வாகனங்களிலும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிந்தால் விபத்துக்கள் இடம்பெற்றாலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த முடியும். ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவதானத்துடன் பயணித்து, விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். எனவே, ஆசனப்பட்டி அணிதல் தொடர்பில் இனி தீவிர கண்காணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சில இடங்களில் ஆசனப்பட்டிகள் மறைக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/218941
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் 01 JUL, 2025 | 05:51 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (30) மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் நேற்றிரவு எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று (1) பகல் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏழு மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/218967
-
மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியத்தாருங்கள் : அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மக்களிடம் வேண்டுகோள்
01 JUL, 2025 | 01:03 PM ( அபிலாஷனி லெட்சுமன் ) கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். அவ்வாறான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம். துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க தெரிவித்தார். அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மேலும் தெரிவிக்கையில், மொழி உரிமை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய அதிகாரத்தை அரச ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது ஆணைக்குழு நான்கு முறைகளில் செயற்பட்டுவருகின்றது. அரச கருமமொழிகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். மொழி தொடர்பான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம்.துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். குறிப்பாக கடந்த காலங்களில் மொழியினால் எத்தகைய மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இலங்கையை போன்ற பல்லின , பல்மத மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட அழகிய தேசம் வேறு எங்கும் கிடையாது. நாம் தமிழர், சிங்களவர் , இஸ்லாமியர் என்ற கொள்கையினை விடுத்து “நாம் இலங்கையர்” என்ற என்ற ஒருமைப்பாட்டுக் கொள்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் இன்றைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஒருமைப்பாட்டு நோக்கமே எங்களது வலிமையான குறிக்கோளாகும். பாடசாலைகள் மட்டுமின்றி, சமுக வளர்ச்சிக்கான அடிப்படையாக மும்மொழித் தேர்ச்சி கட்டாயமாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு குழந்தையை சமூகமயமாக்கும் கட்டத்தில், அதற்குத் தேவையான மொழித் திறன்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றையும் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். மாற்றம் ஆரம்ப நிலையிலிருந்தே நடைமுறைக்கு வந்தால், அரச கரும மொழி கொள்கையின் ஊடாக நல்லிணக்கம் உள்ள நாடாக காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218924
-
இலங்கையின் மின்சார உற்பத்தியில் புதிய மைல்கல்
01 JUL, 2025 | 03:05 PM 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 70 சதவீத மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகூடிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் அதிகளவில் மின்சார பயன்பாடு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்த மின்சார உற்பத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இலங்கையில் 100 சதவீதம் நீர்மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து அதிகளவான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டமை இலங்கை மின்சார சபையின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. https://www.virakesari.lk/article/218931
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ வைரல்! 01 JUL, 2025 | 02:37 PM தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/218933
-
யு.எஸ்.எயிட். நிறுவனத்தின் இறுதி நாள் நேற்று : டிரம்பின் நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதிகள் கடும் விமர்சனம்
01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த அமைப்பின் இறுதிநாளான நேற்று அதன் பணியாளர்கள் உணர்ச்சிகரமான பிரியாவிடை வீடியோவொன்றை வெளியிட்டனர். அதன் பின்னர் வீடியோ கொன்பரன்ஸ் முறை மூலம் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் யுஎஸ்எயிட் சமூகத்தினருடன் உரையாடினர். உங்கள் பணி மிகவும் முக்கியமானது எதிர்கால தலைமுறைக்கும் அது மிகவும் முக்கியமானதாக விளங்கும் என பராக் ஒபாமா யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு தெரிவித்தார். யுஎஸ்எயிட்டினை செயல் இழக்கச்செய்வது ஒரு கேலிக்கூத்து அது ஒரு சோகம் ஏனென்றால் இது உலகில் இடம்பெறும் மிகவும் முக்கியமான பணிகளில் ஒன்றாகும் என பராக் ஒபாமா தெரிவித்தார். யுஎஸ்எயிட் உயிர்களை பாதுகாப்பதுடன் மாத்திரமல்லாமல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாக உள்ளது என அவர் தெரிவித்தார். யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் உதவி பெறும் நாடுகள் சிலவற்றை அமெரிக்காவின் பங்காளிகளாக சந்தையாக மாற்றியுள்ளது என பராக் ஒபாமா தெரிவித்தார். உங்களின் தேவையை விரைவில் இரு தரப்பும் உணரும் என யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு ஒபாமா தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜோர்ஜ் டபில்யூ புஷ் யுஎஸ்எயிட் மூலம் தனது நிர்வாகம் முன்னெடுத்த எயிட்ஸிற்கு எதிரான திட்டங்களை நினைவுபடுத்தியதுடன் 25 மில்லியன் பேர் சர்வதேச அளவில் காப்பாற்றப்பட்டனர் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218908
-
தந்தை-மகன் கொலை: காவல் நிலைய சித்ரவதைக்கு பிறகு சிறையில் 3 நாட்களை கழித்தது எப்படி?
சாத்தான்குளம் மரணத்தில் நீதி கிடைத்துவிட்டதா? - திருப்புவனத்தில் மீண்டும் ஒரு லாக் அப் மரணம் நிகழ்ந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் "ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை வேதனையைத் தரும்." இவை பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸின் வார்த்தைகள். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்த இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை, அவர்களது குடும்பத்தினர் நீதிக்காக காத்துக் கிடக்கின்றனர். இதனிடையே தான், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "காவல்நிலைய மரணங்களில் விரைந்து நீதி கிடைத்தால் தானே, இனி இப்படி செய்யக் கூடாது என்ற பயம் காவல் துறையினருக்கு இருக்கும்." என்கிறார் பெர்சிஸ். ஜெயராஜ் - பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது? சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர், சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர். 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்ஸுக்கும் இடையே சிறு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, முதலில் ஜெயராஜை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், பின்னாலேயே பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ பின்னர் வெளியானது. இதையடுத்து, அன்றைய தினம் பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். பின்னர், காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ் -பென்னிக்ஸை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வெண்ணிலா, இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக சான்று அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து, இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதன்பின், அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு, ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் 23ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,TNPOLICE படக்குறிப்பு,இடமிருந்து வலமாக ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் "அப்பா (ஜெயராஜ்) மீதும், பென்னிக்ஸ் மீதும் எந்த குற்ற வழக்கும் இதற்கு முன்பு இருந்ததில்லை. கடைக்கு வந்து அப்பாவை ஏன் காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை, அப்பாவை அடித்துக் கீழே தள்ளியுள்ளனர். இதை பென்னிக்ஸ் கேள்வி கேட்டதற்கு, "போலீஸையே எதிர்த்துப் பேசுகிறாயா?" என கேட்டுதான் போலீஸார் தாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க போலீஸின் 'ஈகோ'வால் நிகழ்ந்தது" என்கிறார், பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸ். ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆரம்பத்தில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்ததாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. இதனிடையே, சம்பவம் நடந்து சில தினங்களிலேயே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. காவலர் ரேவதியின் சாட்சியம் இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின்படி, "காவலர் முத்துராஜா, என் அப்பாவின் தொடை மீது ஏறி நின்றுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார் பெர்சிஸ். மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்ளார். இவர் தவிர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பால்துரை தாமதம் ஏன்? "பொதுமக்கள், இயக்கங்கள் என பலதரப்பினரும் இதற்கு எதிராக போராடியும் இன்னும் வழக்கில் விசாரணையே நிறைவு பெறவில்லை. இத்தனை ஆண்டுகளாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்த வழக்குக்கு நீதிபதியே இல்லாமல் இருந்தது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நீதிபதி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார். பொறுப்பு நீதிபதி இருக்கும்போது வாரத்தில் ஒருமுறைதான் வழக்கை விசாரிக்க முடியும்." என்கிறார் பெர்சிஸ். சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி மாற்றப்பட்டது குறித்த சர்ச்சைகள் முன்பு எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 2022, ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது சர்ச்சையானது. அந்த சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை." என தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுபோன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை முடிவடையும் வரை நீதிபதிகளை மாற்றாமல் இருக்க வேண்டிய தேவை உள்ளது குறித்தும் அவ்வப்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு தாமதமானதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. "குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் தனித்தனி வழக்கறிஞர்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு வழக்கறிஞரும் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்கின்றனர், அதனாலும் மிகுந்த காலதாமதம் ஆகிறது." என கூறுகிறார் பெர்சிஸ். மீளா துயரத்தில் குடும்பத்தினர் நேரடி சாட்சியங்கள், காவல் நிலையத்துக்கு வெளியே இருந்தவர்களின் சாட்சியங்கள், மருத்துவமனை காணொளிகள், ஆடைகளில் ரத்தக் கறை உள்ளிட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளதாக குறிப்பிடுகிறார் பெர்சிஸ் . "மருத்துவமனை வாயிலில் இருவருடைய உடைகளிலும் ரத்தம் கசிந்திருந்ததை சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் காட்டுகின்றன." "இருவருடைய மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் எந்த நல்ல காரியங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்ல முடியவில்லை, எங்கள் குடும்பத்தினர் அழாமல் உறங்கிய நாட்களே இல்லை. அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறோம். நீதி வேண்டி ஐந்தாண்டு கால அலைச்சலும் இதனுடன் சேர்ந்திருக்கிறது." என வேதனைப்படுகிறார் பெர்சிஸ். பென்னிக்ஸுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பென்னிக்ஸின் நண்பரும் வழக்கறிஞருமான ராஜாராம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் இரவில் இருந்தபோது வெளியே தான் இருந்துள்ளார். இருவருடைய அலறல் சத்தமும் தனக்கு கேட்டதாக நினைவுகூர்கிறார் ராஜாராம். "அப்பாவை (ஜெயராஜ்) காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் தான் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றார். இருவருடைய அலறல் சத்தமும் கேட்டது. என் சாட்சியத்தை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறேன். மருத்துவமனை வாயிலில் பென்னிக்ஸை சந்தித்தபோது, 'என்னை விரைவில் வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்' என தெரிவித்தார்" என கூறுகிறார் ராஜாராம். ஜாமீன் கேட்டு இழுத்தடிப்பு ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக இந்த வழக்கில் வாதாடிவரும் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸிடம் பேசினோம். "இந்த வழக்கில் இதுவரை ஐந்து நீதிபதிகள் மாறியுள்ளனர், இது எதேச்சையாக நடக்கிறதா, அரசியல் அழுத்தமா என்பது தெரியவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்றே குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு நினைக்கிறது. குறிப்பாக, ஏ1 ஸ்ரீதர் ஆரம்பத்தில் நானே எனக்காக வாதாடுகிறேன் என்றார். பின்னர், சட்ட உதவி மையத்திலிருந்து அவருக்கு வழக்கறிஞரை அமர்த்தினர். ஆனால், மீண்டும் எனக்கு நானே தான் வாதாடுவேன் என கூறினார் ஸ்ரீதர். அதன்பின், இன்னொரு வழக்கறிஞரை வைத்து நடத்த அனுமதியுங்கள் என மனு போட்டார், திரும்பவும் நானே வாதாடுகிறேன் என கூறுகிறார். வேண்டுமென்றே கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டு விசாரணையை இழுத்தடிக்கிறார்." என காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கினார் அவர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக ஜாமீன் கேட்டு மனு போடுவதன் மூலமும் வழக்கை இழுத்தடிப்பதாகக் கூறுகிறார் அவர். தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த வழக்குக்கு என ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் விசாரித்திருந்தால் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும் என்கிறார் அவர். "ஆனால், சிபிஐ நடத்தும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது, விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் என, அரசு அறிக்கை வேண்டுமானால் வெளியிடலாம். அரசு இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். படக்குறிப்பு, ஜெயராஜின் மனைவி செல்வராணி இன்னும் அந்த கொடூர சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை சிபிஐ தங்களால் முடிந்தளவுக்கு சாட்சிகளை விசாரித்திருக்கிறது எனக்கூறிய வழக்கறிஞர் ராஜீவ், மருத்துவமனைக்கு அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட அழைத்துச் சென்ற காட்சிகள், அவர்கள் அமரவைக்கப்பட்ட இருக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். "காவல்நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் அவர்களுடையதுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார். இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம், "விரைவான விசாரணை நடந்தால்தான் நீதி கிடைக்கும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 50 முறைக்கு மேல் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். இத்தனை பேரின் கடும் உழைப்புக்கு மத்தியிலும் இவ்வழக்கில் இன்னும் நீதி கிடைக்காதது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெரியளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய சாட்சியான ரேவதி மன அழுத்தத்தில் உள்ளார், அவரால் இன்னும் சுதந்திரமாக வெளியே செல்லக்கூட முடியவில்லை." என்றார். இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வழக்கு விசாரணை முடிவடையவில்லை. "உயர் நீதிமன்றம் தலையீடு செய்யும் வழக்கிலேயே இந்த நிலை என்றால், மற்ற வழக்குகளின் நிலை என்ன" என கேள்வி எழுப்புகிறார் ஆசீர்வாதம். "மாநில அரசின் வழக்கறிஞர் விரைவான நீதி வேண்டி தலையீடு செய்யலாம். தங்கள் அரசுக்கு அழுத்தம் இருக்கிறது என்றவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. காவல்துறை தவறு செய்தால் அதை மறைக்க வேண்டும் என்பதே எந்த அரசாக இருந்தாலும் நினைக்கின்றன." என்றார். போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம் 'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ. கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது - என்ன நடந்தது? தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக, காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் உள்ளது. "காவல் நிலைய மரணங்களை இந்த அரசு மூடி மறைக்கவில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறது. எல்லா சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன். இவை அனைத்துக்கும் மத்தியில், விரைந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgjgg670jv0o
-
செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:18 PM செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால், அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/218971
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது 01 JUL, 2025 | 03:57 PM எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 7 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று (30) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் ஏழு பேரும் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரகள் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/218938
-
கனடா தின வாழ்த்துச் செய்தி - உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்
இலங்கையில் கனடாவின் இருப்பு எமது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் அடித்தளமாக காணப்படுகின்றது : கனடா தின வாழ்த்துச் செய்தியில் உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் 01 JUL, 2025 | 10:45 AM இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம் என இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், கனடா தினத்தை முன்னிட்டு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உலகம் முழுவதும் உள்ள கனேடியர்கள் ஒருமித்தாகக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நாளில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் வாழும் அனைத்து கனேடிய பிரஜைகள் மற்றும் இந்த தினத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கனடா தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார். கனடா தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துக் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கனடா தினம் என்பது நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் முக்கியமான மதிப்புகளை பன்முகத்தன்மை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, மனித உரிமைகளுக்கான மரியாதை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்முடைய நீடித்த அர்ப்பணிப்பு பிரதிபலிக்கக் கூடிய சிறப்பான ஒரு வாய்ப்பாகும். இந்த தினம், நமது நாடு இன்று இருக்கும் நிலையில் அடித்தளமிட்டு, அதன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய முன்னோடி தலைமுறைகளின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் தருணமாகவும், கூட்டமைப்பிற்கு முந்தையதும் பிந்தையதுமான வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கான வலிமையையும், ஞாபகப் பாக்கியத்தையும் கௌரவிக்கும் ஒரு சிறப்புநாளாகவும் அமைகிறது. கனடாவின் துடிப்பான உருவாக்கத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். கல்விக் கூட்டாண்மைகள், அபிவிருத்தி ஒத்துழைப்புகள், பாலியல் சமத்துவம் மற்றும் சமநிலை மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உலகத்தை நோக்கிய பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் ஊடாக, கனடாவும் இலங்கையும், மாலைத்தீவுகளும் வலுவான உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலிருந்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருவதும், அதே சமயம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடர்ந்து செழித்து வளரும் எங்கள் கூட்டுறவுகள் குறித்து நான் பெருமை அடைகிறேன். இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் இந்தோ - பசிபிக் வர்த்தக பிரதிநிதி இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் விஜயம் செய்தமையில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விஜயம், கனடாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிலும் குறிப்பாக இலங்கையில் வேரூன்றியவர்களின் இந்த நாட்டில் முதலீடு செய்யவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் காணப்படும் ஆழமான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டில் கனடாவின் இந்தோ - பசிபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இந்த பிராந்தியத்தின் மக்களுடனான எங்களது உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பை ஆதரிப்பதில் எங்கள் பங்களிப்பை ஆழப்படுத்தவும், கனடா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடா தினத்தைக் கொண்டாடும் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் இது, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எட்டிய சாதனைகள் குறித்து சிந்திக்கவும், எதிர்காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும் என்பதை நினைவு கூரவும் உதவும் ஒரு அரிய தருணமாக அமைய வேண்டும் என கனேடிய உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218900
-
வர்த்தகம், முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்து இந்திய தொழில்துறை சம்மேளன அதிகாரிகள் குழுவுக்கும் பிரதமர் ஹரிணிக்கும் இடையில் சந்திப்பு
01 JUL, 2025 | 09:51 AM இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தூதுக்குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையேயான விசேட சந்திப்பு ஜூன் 30ஆம் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, குறிப்பாக பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் தனது பாராட்டினைத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் மூலம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகள் மேலும் பலப்பட்டுள்ளதாக இந்திய தூதுக்குழு இங்கு மேலும் உறுதிப்படுத்தியது. தொழில்நுட்பம், உற்பத்தி, கல்வி, புத்தாக்கம், தொழில்முனைவு, விவசாயம், வலுசக்தி மற்றும் சுற்றுலா துறை போன்ற முக்கிய பிரிவுகள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர்களை வலுவூட்டுதல், பெண் தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்பட நியாயமான முதலீட்டு மூலோபாயங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் இந்திய உயர்மட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளும், இலங்கை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளியுறவு அமைச்சின் தெற்காசிய மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலூக்க கதுருகமுவ மற்றும் அதே அமைச்சின் தெற்காசிய பிரிவின் துணை பிரதி பணிப்பாளர் பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/218895
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள்! 01 JUL, 2025 | 09:48 AM செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக் கூடுகளில் நேற்றைய தினம் வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், புதிதாக எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/218897
-
யாழ். அராலியில் குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு
குறி சொல்லும் கோவிலில் பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு; வெளியாகிய காரணம்! Published By: VISHNU 01 JUL, 2025 | 04:35 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மரண விசாரணைகளின்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் நாய்கடிக்கு இலக்காகியுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் நீர் வெறுப்பு நோய்க்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தவகையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த நாய் மேலும் சிலருக்கு கடித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/218891
-
கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க எவராலும் முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
Published By: VISHNU 01 JUL, 2025 | 04:28 AM "சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால் கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். தமிழ் நாட்டில் தேர்தலொன்று நெருங்கும்வேளை கச்சத்தீவு விவகாரம் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும், அதனை மீளப்பெறுவோம் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வாக்கு வேட்டை நடத்தப்படும். இது எந்நாளும் கூறப்படும் கதையாகும். எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு கருத்தை வெளியிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் ரோலர் படகுகள்மூலம் மீன்வளத்தை மட்டுமல்ல எமது கடல்வளத்தையும் நாசமாக்குகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தால் இன்னும் 15 - 20 வருடங்களில் எமது கடல்வளம் பாலைவனமாகிவிடும். அதேவேளை, இராஜதந்திர ரீதியில் - சட்டப்பூர்வமாக - சர்வதேச சட்டத்தின் பிரகாரமே இலங்கைக்கு கச்சத்தீவு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அதனை எவராலும் மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது."- என்றார். https://www.virakesari.lk/article/218890
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானில் பயன்படுத்திய Bunker buster இன் சோதனைக் காட்சி
-
யாழில் மின்சாரம் தாக்கியதில் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி
01 JUL, 2025 | 12:58 PM யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218926
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
'காவலர்கள் தாக்கிய வீடியோ': நீதிபதியிடம் போட்டுக் காட்டிய வழக்கறிஞர்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,SCREENGRAB படக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது) கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் வீடியோ ஒன்றை காட்டியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு. இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது? நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோவில் காவலர்களாக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டிய நபர்கள் காவலர் உடையில் அல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. மறைவிடத்தில் இருந்தபடி ஒருவர் பதிவு செய்த வீடியோ இது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். "தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமாரை காவலர்கள் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தும் போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் எதற்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28ஆம் இரவு 12 மணி வரை, தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., உங்கள் மகன் இறந்து விட்டார் என அஜித்தின் அம்மாவிடம் கூறி உள்ளார்" என ஹென்றி திபேன் வாதிட்டார். "அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல் கதை கூறுகின்றனர்" எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, ஹென்றி திபேன் "திமுகவின் சேங்கைமாறன் (அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்), மகேந்திரன் திருப்புவனம் திமுக செயலர், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித் இறந்த பின்பு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்." என்றும் நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டினார். "திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. உடற்கூராய்வு அறிக்கை தற்போது வரை அஜித்தின் தாயிடம் வழங்கப்படவில்லை" என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், "காவல்துறையினர் 6 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், 5 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் 'நன்றாக கவனியுங்கள்' என கூறியதாக, சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். நகை காணாமல் போன சம்பவத்தில் புகார்தாரர் நிகிதா, ஒரு ஐ ஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர். அதனால் தான் வழக்குப் பதிவு செய்யாமல் தாக்கி உள்ளனர்." என்று கூறினார். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் அப்போது நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நகை காணாமல் போன வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர். பதியவில்லை? காவல்துறையினர் மாமூல் வாங்குவது தொடர்பாக வீடியோக்கள் வருகின்றன. இதுதொடர்பாக சிறப்புப் படை விசாரித்து 2 மணிநேரத்தில் நிறுத்த முடியுமென்றால் நிறுத்துங்கள். விசாரிப்பார்களா? சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? யார் இந்த வழக்கை தனிப் படையிடம் ஒப்படைத்தது? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது. மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை.(பொதுமக்களை) அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள். காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கின்றனவா? சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? பின் ஏன் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கிறீர்கள்? அஜித்குமாரை 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? மாஜிஸ்திரேட்டுக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை அனுப்பப்படாதது ஏன்? காவல்துறை, நீதித்துறை குடும்பங்களில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை ஏன் விசாரிக்க அனுமதிக்கவில்லை? எஸ்.பி., யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? எதிர்கொள்ள வேண்டியதுதானே? நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும். மேலும், "நடவடிக்கை முக்கியம். ஆனால் எந்த வழக்கை எப்படி விசாரிக்க வேண்டுமென்பது முக்கியம். ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்லவில்லை. மக்களைக் காக்கவே காவல்துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்ட மாநிலம். இருப்பினும் இது போல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல" என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசுத்தரப்பில், "அஜித் இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் (இறந்திருப்பார். தொடக்க நிலை விசாரணை நடந்த பிறகு தான், (நகை காணாமல் போன) வழக்கு பதிவு செய்ய முடியும். மேலும், "தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன? மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அங்கே வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமாருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது. அதன்படி, குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் அஜித் குமார் விசாரணையின் போது போலீசாரால் தாக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. 5 காவலர்கள் கைது - விடியவிடிய நடந்தது என்ன? அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையின் பேரில், விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் உடனே அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியது. சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து இரவு 9 மணியளவில் 5 காவலர்களையும் அழைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது. இரவு 11 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்தை அந்த வேன் சென்றடைந்தது. திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. மற்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் நள்ளிரவு 1.15 மணியளவில் 5 காவலர்களும் வேனில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நள்ளிரவு 1.45 மணியளவில் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பாக 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் 5 காவலர்களும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படக்குறிப்பு,ஐந்து காவலர்களும் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர் 5 காவலர்கள் கைது: திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு கொலை வழக்காக மாற்றம் - போலீஸ் காவலில் என்ன நடந்தது? மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவமா? சிவகங்கை இளைஞர் மரணத்தில் நடந்தது என்ன? லண்டனில் போன் திருடிய நபர் ஒற்றை ஷூவால் சிக்கியது எப்படி? 'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,அஜித்குமார் வழக்கின் பின்னணி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு, நகை திருடு போனதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0566166nl9o
-
அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாலியல் துஸ்பிரயோகம் - 1200 சிறுவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்
01 JUL, 2025 | 04:31 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,குறிப்பிட்ட நபர் 2017 முதல் வேறு 17 சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றியுள்ளதால் அங்கும் துஸ்பிரயோகம் இடம்பெறலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அந்த நபரின் பராமரிப்பி;ன் கீழ் இருந்தனரா என்பதை உறுதி செய்ய உதவுவதற்காகவே சந்தேகநபரின் பெயரை வெளியிட்டதாக விக்டோரியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு தங்கள் பிள்ளையை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கும் குறிப்பிட்ட நபர் அங்கு பணியாற்றினாரா என்பது தெரியவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218948
-
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், BOOPATHY கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 30 ஜூன் 2025 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.] ''போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்...என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மன்னிச்சிருங்கம்மா...!'' திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை. அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா(வயது 27). ரிதன்யா, எம்.எஸ்.சி.–சிஎஸ் படித்தவர். இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். பட மூலாதாரம்,BOOPATHY 'திருமணமாகி 2 வாரங்களில் திரும்பிய ரிதன்யா' அவினாசி–சேயூர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே, ரிதன்யாவும், கவின்குமாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதற்குப்பின், பிரச்னையாகி ரிதன்யா தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 20 நாட்கள் இருந்துள்ளார். அப்போது கவின் அவ்வப்போது வந்து பார்த்துச்சென்றுள்ளார். பெற்றோர் மீண்டும் ரிதன்யாவிடம் பேசி, அவரை கவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கும், வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இரு வாரங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூன் 22 அன்று ரிதன்யாவை கவின் அழைத்து வந்து, அவரின் தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ரிதன்யா மிகவும் சோகமாக இருந்துள்ளார். தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று ரிதன்யா கூறிய நிலையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஒரு வாரம் அப்பாவின் வீட்டில் இருக்க ஆசைப்பட்டதால் கொண்டு வந்து விட்டதாக அண்ணாதுரையிடம் கவின் கூறியுள்ளார். ரிதன்யாவை விட்டுச்சென்ற பின், ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ஆகிய இரு நாட்களும் கவின் வந்து பார்த்துச் சென்றுள்ளார். மறுநாள் ஜூன் 28 அன்று, சேயூர் மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி காரை தனியாக எடுத்துச் சென்றுள்ளார் ரிதன்யா. வாரம் ஒரு முறை அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால் அவரை தனியாக அனுப்பியுள்ளனர். அன்று மதியம் ஒரு மணிக்கு ரிதன்யாவின் தாயார் ஜெயசுதாவுக்கு ரிதன்யாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், இந்த எண் யாருடையது என்று கேட்டு, செட்டிபுதுார் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண் மயங்கிக் கிடக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார். உடனே ரிதன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு செல்வதற்குள் அவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். முதலில் ரிதன்யாவின் தற்கொலை குறித்து, அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் போலீசில் தெரிவிக்கவில்லை. அதனால் சேயூர் போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஜூன் 28 மதியம் 12 மணியளவிலேயே அவர் ஆடியோ பதிவு செய்து, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார். அப்போது மொபைலில் 'நெட்'டை அணைத்து வைத்திருந்ததால் வாட்ஸ்ஆப் தகவலை பெற முடியவில்லை. அன்றிரவு, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக, இரவு 11 மணியளவில் அண்ணாதுரையின் மொபைலில் 'நெட்'டை அவருடைய உறவினர் ஒருவர் 'ஆன்' செய்தபோது, ரிதன்யாவின் மொபைல் எண்ணிலிருந்து 10 ஆடியோ பதிவுகள் வந்துள்ளன. அதில் தன்னுடைய தற்கொலை முடிவு பற்றி, அழுதவாறே பேசியுள்ள ரிதன்யா, அந்த ஆடியோக்களை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த ஆடியோக்களில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு கவினும், அவருடைய தாயும், தந்தையுமே காரணமென்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,BOOPATHY படக்குறிப்பு,கணவர் குடும்பத்துடன் ரிதன்யா '300 சவரன் நகை, புது வால்வோ கார், திருமண செலவு ரூ.3 கோடி' இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரிதன்யாவின் தந்தை, சேயூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது (IPC 306) உள்ளிட்ட பிரிவுகளில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாயார் சித்ரா தேவி ஆகியோர் மீது சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவின்குமாரும், ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். உடல்ரீதியான பாதிப்பு காரணமாக, சித்ரா தேவியை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ''300 சவரன் போட்டு 70 லட்ச ரூபாய்க்கு வால்வோ காரும் வாங்கிக்கொடுத்தோம். அதில் 150 சவரன் அங்கே இருந்தது. மீதம் என் வீட்டில் இருந்தது. ஆனால் அதற்கு மேலும் கேட்டு, டார்ச்சர் செய்து, இரண்டே வாரத்தில் மகளை என் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நானும் எல்லாம் சரியாகிவிடுமென்று சமாதானப்படுத்தி பேசி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியில் சொல்லவே முடியாத அளவுக்கு உடல்ரீதியான கொடுமைகளை அவள் அனுபவித்துள்ளார்.'' என்றார். ''என்னிடமும் என் மனைவியிடமும் கூட முழுமையாக எதையும் சொல்லாமல், அவள் மாமியாரை வரச்சொல்லி, என் வீட்டில் வைத்தே ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசினாள். அதன்பின், மாமியார் எங்களிடம் வந்து, 'எங்க பையன் இப்படி இருப்பான்னு எங்களுக்கே தெரியலை. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.' என்று கூறி அழைத்துச் சென்றார். மறுபடியும் 20 நாளில் திரும்பிவிட்டாள். பையனுக்கு தொழில் இல்லை. உறவினர்களில் பலர் 100 கோடி ரூபாய் செலவழித்து அவரவர் மாப்பிள்ளைக்குத் தொழில் செய்து கொடுத்துள்ளனர். உங்க அப்பா 500 சவரன் போடுவதாகக் கூறி பாதியளவும் போடவில்லை என்று எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.'' என்றும் அண்ணாதுரை தெரிவித்தார். மாப்பிள்ளைக்கு தனியாக தொழில் இல்லாவிடினும், 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை வாடகை வந்ததால் வருமானம் இருக்கிறதென்று திருமணத்துக்கு 3 கோடி ரூபாய் செலவழித்ததாக பிபிசி தமிழிடம் கூறிய ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா, தன் தந்தைக்குப் பேசி அனுப்பிய ஆடியோக்களை பிபிசிடம் பகிர்ந்தார். அதில் பேசியுள்ள ரிதன்யா, தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக மீண்டும் மீண்டும் பல முறை தெரிவித்துள்ளார். தன்னுடைய தற்கொலை முடிவுக்கு, கவினும், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய தாயார் சித்ராதேவியும்தான் காரணமென்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,BOOPATHY படக்குறிப்பு, பெற்றோருடன் ரிதன்யா மகளுக்கு நீதி வேண்டுமென்று கேட்கும் தந்தை! தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை. கவின் குடும்பத்தினருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, பிபிசி தமிழிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார். ரிதன்யாவின் ஆடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு கவின் மற்றும் அவருடைய தாய், தந்தை இருவரும் காரணமென்று தெளிவாகக் கூறியிருந்தும் கவினையும், அவருடைய தந்தையை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி சேயூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபுவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அவருடைய தாயார் வயது முதிர்ந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விசாரணையின் போதே, அவர் அடிக்கடி மயக்கமாகிவிட்டார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே உடனடியாக அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.'' என்றார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தரப்பில் அவர்களுடைய உறவினர் யாரிடமும் கருத்துப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சண்முகானந்தன், ''கவின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி யாரும் பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் சார்பில் நானும் எந்தக் கருத்தும் கூற முடியாது. '' என்றார். திருமணம் முடிந்த 77 நாட்களில் இந்த மரணம் நடந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தனது விசாரணையை இன்று காலையில் துவக்கியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ''தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் ஆடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், அவரின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிதன்யாவின் ஆடியோவில் எந்த மாதிரியான கொடுமை நிகழ்ந்தது பற்றி எதுவும் கூறவில்லை. அதனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது. இரு தரப்பிலும் விசாரித்தபின்பே தெளிவான காரணங்கள் தெரியவரும்.'' என்றார். பட மூலாதாரம்,BOOPATHY நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4nnp0wq7yo
-
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர்கள் குறித்து கண்காணிக்க திட்டம்!
டொலருக்கு ஆசைப்பட்டு வருகிறவர்களையும் கலைக்கும்படி செய்யப்போறாங்க!
-
பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!
வேகக்கட்டுப்பாடு அதாவது அக்சிலேற்றரை ஏறி நின்று உழக்கினாலும் 70 km/h மேல ஓடாதவாறு செய்யுங்கோ புண்ணியமாப்போகும்.
-
ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி
Published By: VISHNU 30 JUN, 2025 | 09:44 PM அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். கல்னேவா மகாவலி மைதானத்தில் திங்கட்கிழமை (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை செவிசாய்த்த ஒரு நாட்டிற்கு இன்று நேர்ந்துள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனவே, ஒழுக்கமான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பௌத்த மதத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதில் உபசம்பதா போன்றன மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார். மேலும், சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும் தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியானதாகவும் தெரிவித்தார். இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் திறன் இருந்தாலும், இனவாதம் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். எனவே, இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் என்றும், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார். பிக்குமாரின் ஒழுக்கம் குறித்த கருத்தாடல் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். அதில் மகாநாயக்க தேரர்கள் ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டினால் அந்த கருத்தாடலை அரசாங்கம் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் கூறினார். விஹார தேவாலகம் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான கோரிக்கை புத்தசாசன அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்கனவே சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இங்கு உரை நிகழ்த்திய இலங்கை ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக் தேரர் அதி வணக்கத்திற்குரிய மக்குலேவே ஸ்ரீ விமல தேரர், சாசனத்தில் மிகச் சிறிய குழுவினர் செய்த தவறான செயல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்திக் காண்பித்து முழு பிக்கு சமூகத்தையும் அவதூறு செய்யப்படுவதன் ஊடாக பக்தியுள்ள மக்கள் மகா சங்கத்திலிருந்து தூரமாக அது வழிவகுத்துள்ளதாகக் கூறினார். இந்த நாட்டின் பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதிலும், நாட்டிற்குத் தேவையான பல்துறை மற்றும் ஒழுக்கமான பிக்குகளின் தலைமுறையை உருவாக்குவதிலும் இத்தகைய உபசம்பதா முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடமத்திய மாகாணத்தின் பிராந்திய பிக்கு சபைகள் மற்றும் உபசம்பதா மஹோத்சவ குழுவின் ஏற்பாட்டில் கலாவெவ, கலாகரம்பாவ மற்றும் ஸ்ரீ வித்யாதர மஹா பிரிவேனாவை மையமாகக் கொண்டு இவ்வருடம் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நிகாயாவின் உபசம்பதா நிகழ்வு இன்று (30) முதல் ஜூலை 08 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா பீடம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், 1864 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காலி வெலிவத்தை விஜயானந்த பிரிவேனையை மையமாகக் கொண்டு மஹமோதர உதகுக்கேப பிரதேசத்தில் முதலாவது உபசம்பதா நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த முறையும், பண்டைய பாரம்பரியத்தின்படி, இலங்கை ராமான்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே ஸ்ரீ விமல தேரரின் தலைமையில் நடைபெற்றதோடு, 400 பிக்குகள் உபசம்பதா பெற்றனர். "சசுன" உபசம்ப மலர் , "பதிபதா" தொகுப்பு மற்றும் இலங்கை ராமான்ய மகா பீடத்தின் "உருமயக அபிமான" புத்தகம் ஆகியவையும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உன்னதமான மத மற்றும் ஆன்மீக சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை ராமன்ய பீட பிக்குமார்களுக்கு கௌரவப் பட்டங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். இலங்கை ராமான்ய மகா பீட முக்கிய மகாசங்கத்தினர் , புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி , வெளிநாட்டலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், வடமத்திய மாகாண ஆளுநர் ஜினதாச விமலசிறி, அநுராதபுர மாவட்டச் செயலாளர் கே.ஜி.ஆர். விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பொது மக்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218884
-
நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
Decode | Zohran Mamdani | அமெரிக்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மம்தானி | New York Mayor | N18G Zohran Mamdani | அமெரிக்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி மம்தானி | டிரம்ப் முதல் நடிகை கங்கனா வரை பலரின் எதிர்ப்பை சந்தித்து வரும் மம்தானி யார் தெரியுமா? | New York Mayor Zohran Mamdani | Donald Trump | America