Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறை அவசியம்; உயர்ஸ்தானிகரிடம் வடக்கு சிவில் சமூகம் வலியுறுத்தல் Published By: VISHNU 26 JUN, 2025 | 12:36 AM (நா.தனுஜா) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் ஓரங்கமாக புதன்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மீளக்குடியமர்த்தல், பட்டதாரிகள் முகங்கொடுத்து வரும் வேலையில்லா பிரச்சினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் என்பன தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அதேவேளை வடக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகள் குறித்தும் வோல்கர் டேர்க்கிடம் எடுத்துரைத்த மற்றொரு பிரதிநிதி, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோன்று ஏனைய பிரதிநிதிகளில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், புதிதாக கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள், காணி சுவீகரிப்பு, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி பி.என்.சிங்கம், சிவகுரு ஆதினம் வேலன் சுவாமிகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஏ.டி.தெலீசன், வட-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதி யோகதாஸா கனகரஞ்சனி, கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளர் கருணாகரன் நாவலன் ஆகியோரின் கையெழுத்துடன் பொறுப்புக்கூறலுக்கான நியாயமான செயன்முறையொன்றின் தேவைப்பாட்டினை வலியுறுத்தி உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/218471
  2. பட மூலாதாரம்,ISPR படக்குறிப்பு,சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா, ராணுவ நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். பாகிஸ்தானின் தெற்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சரரோகா பகுதியில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அவர் உயிரிழந்தார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை, ராணுவ அதிகாரி மோயிஸ் ஷா சிறைபிடித்தார். அவரின் இறுதி அஞ்சலி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர் துறையின்(ஐ.எஸ்.பி.ஆர்) தகவல்களின்படி, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மோஹ்சின் நக்வி ஆகியோர் அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர். 'பணியில் இருந்த மேஜர், வீரத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாக அவர் மாறியுள்ளார்' என்று இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற முனீர் குறித்து பேசியதாக ஐ.எஸ்.பி.ஆர் கூறுகிறது. அஞ்சலிக்குப் பிறகு மேஜர் மோயிஸின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். 'உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களின்படி, பாதுகாப்புப் படையினர் தெற்கு வாஜிரிஸ்தானில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையில் ரகசியமாக பதுங்கியிருந்த 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேஜர் மோயிஸ் ஷா மற்றும் லான்ஸ் நாய்க் ஜிப்ரனுல்லா ஆகியோர் கொல்லப்பட்டனர்' என்று ஐ.எஸ்.பி.ஆர் கூறியது. யார் இந்த மேஜர் மோயிஸ்? மேஜர் சையத் மோயிஸ் அப்பாஸ் ஷா (37), சக்வாலைச் சேர்ந்தவர். அவர் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். அவர் அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் என்.எல்.ஐ படைப்பிரிவில் சேர்ந்திருந்தார். பிறகு அவர் பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவில் இடம் பெற்றார். சமீபத்திய காலத்தில் அவர் வாஜிரிஸ்தானில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தில் இருந்த காலத்தில் மேஜர் மோயஸின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். பிப்ரவரி 27, 2019 அன்று மோயஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எல்லை கோட்டை அடைந்து, விமானத்தில் இருந்து அங்கு விழுந்திருந்த அபிநந்தன் வர்தமானை கைது செய்தனர். இந்த வீடியோ பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பட மூலாதாரம்,HAMID MIR/X படக்குறிப்பு, மோயிஸ் மரணமடைந்த செய்தி வெளியான பிறகு, 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஹமித் மிருக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அபிநந்தன் பயணித்த போர் விமானம் விபத்துக்குள்ளாகும் போது, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே விழுந்ததைப் பார்த்தார் அந்த பகுதியில் வசிக்கும் முகமது ரசாக். ரசாக்கும் இதர உள்ளூர் வாசிகளும் அபிநந்தன் விழுந்த இடத்திற்கு சென்ற போது , ஏற்கனவே அங்கே கூடியிருந்த பொதுமக்கள் அபிநந்தன் மீது கல்லெறிந்து தாக்குதல்களை நடத்தினார்கள் என்றும், அங்கிருந்து அபிநந்தன் தப்பிக்க முயன்றார் என்றும் அப்போது பிபிசியிடம் பேசிய ரசாக் கூறினார். மக்கள் அவரை சூழ்ந்துவிட்டனர். ஒரு சிலர் அபிநந்தனை அடிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் கேப்டன் சையத் மோயிஸ் தலைமையிலான ராணுவ வீரர்கள் அங்கே வந்தனர் என்றும் ரசாக் தெரிவித்தார். அப்போது வைரலான வீடியோவில் அபிநந்தனின் முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதையும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை அழைத்துச் செல்வதையும் பார்க்க இயலும். அபிநந்தனை கைது செய்த போது நடந்தது என்ன? இந்த விவகாரம் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அப்போது நடந்தது என்ன என்று, ஜியோ நியூஸின் ஹமித் மிர் என்ற பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார் மேஜர் மோயிஸ். இந்திய விமானியை பார்க்க சென்ற அந்த சமயத்தில் உள்ளூர் மக்கள் அவரை சூழ்ந்துவிட்டதாக தெரிவித்தார் மோயிஸ். "இது மிகவும் சிக்கலான பகுதி. இங்கே இது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட்டு அபிநந்தனை உயிரோடு அங்கிருந்து மீட்க வேண்டும் என்பதே எங்களுக்கு முதல் கடமையாக இருந்தது," என்று மோயிஸ் ஹமிதுக்கு தெரிவித்தார். மோயிஸ் மரணமடைந்த நிலையில், செவ்வாய் கிழமை மாலையில் இருந்து அவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "பொதுமக்கள் அவரை அடிப்பதை நான் கவனித்தேன்," என்று மோயிஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தார். "நான் அங்கே சென்றவுடன் அபிநந்தன் என்னுடைய 'ரேங்க்' என்னவென்று கவனித்தார். பிறகு, 'கேப்டன், நான் விங் கமாண்டர் அபிநந்தன். இந்திய விமானப்படையில் பணியாற்றுகின்றேன். நான் சரணடைகின்றேன். என்னை உயிருடன் காப்பாற்றுங்கள்' என்று கூறினார். அவரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பாக மாறிவிட்டது. ஏன் என்றால் அவர் சரணடைந்துவிட்டார்," என்று அந்த பேட்டியில் மோயிஸ் தெரிவித்தார். அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணையில் இருந்த போது வெளியான வீடியோ ஒன்றில், அபிநந்தன் அவருடைய பெயர், ரேங்க் ஆகியவற்றை கூறினார். மேலும் அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நன்றாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். "பாகிஸ்தான் ராணுவம் என்னை பார்த்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களின் தாக்குதலில் இருந்து கேப்டன் ஒருவர் என்னை காப்பாற்றினார்," என்றும் அவர் தெரிவித்தார். அபிநந்தன் ஒரு நாள் கழித்து மார்ச் 2 அன்று இந்தியாவின் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9kn45z7x0o
  3. இலங்கையில் தமிழருக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும்; தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் பெற வேண்டிய சூழல் இருப்பதாகவும் - வோல்கர் டேர்க் கருத்து Published By: VISHNU 25 JUN, 2025 | 07:49 PM தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இதனை தெரிவித்தார். திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். குறித்த கலந்துரையாடலில் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், போன்ற பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. குறிப்பாக யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னரான சூழ்நிலையிலும் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் நிழல் யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்களின் இருப்பை கேள்விக்கறியாக்கும் வகையில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஒரு இன அழிப்பு எனவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அவர்களிடத்தில் கையளித்து அவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தி இருந்தார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் இன்றுவரை 30 ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? தங்களால் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்னும் தங்களிடம் மீள வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடையங்களுக்கு அரசாங்கத்துடன் ஈடுபட்டு வருகின்றோம் எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படுத்தாதபடியால் இலங்கை அரசை தாங்கள் நம்ப தயார் இல்லை. இதனால் சர்வதேச அமைப்புகளையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச நீதிப் பொறிமுறைதான் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவித்தனர். இலங்கையின் 30/1 தீர்மானத்தின்கீழ் வந்த 25 தீர்மானங்களை நிறைவேற்றவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 46/1 ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வீசாவை அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்தித்து உண்மையான சம்பவங்களை பெற்றுக் கொண்டுசெல்ல வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக அதற்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் திட்டமானது 1948 இல் இருந்து இலங்கை தமிழருக்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை ஆவணமாக்கப்பட்டு அறிக்கை இடப்பட வேண்டும். வட கிழக்கில் 40க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 21 புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த உடலங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுனர்களை இங்கே அழைத்து அவர்கள் கண்காணிப்பில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல விடையங்களை கலந்து கொண்டவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள். இதன்போது பதிலளித்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இந்த விடையங்கள் இலங்கையில் இருப்பதாக தான் உணர்வதாகவும், இதற்கான தீர்வினை இந்த தேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, நீதிப்பொறிமுறை சார்ந்த விடையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது எனவும். அதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஜனாதிபதியை தான் சந்திப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/218468
  4. ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐ.நா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடைபெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் நேரடியாக தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51ஆவது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐ.நா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். https://adaderanatamil.lk/news/cmcbzrn6100dxqp4knhzanbhr
  5. அறிமுக டெஸ்டில் பந்துவீச்சில் சொனால் தினூஷ அபாரம்; பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 220 - 8 விக். Published By: VISHNU 25 JUN, 2025 | 07:16 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. லிட்டன் தாஸ், முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இரண்டு பிரதான வீரர்களின் விக்கெட்களை அறிமுக வீரர் சொனால் தினூஷ கைப்பற்றியதால் பங்களாதேஷினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது. சொனால் தினூஷ மட்டுமல்லாமல் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களும் பங்களாதேஷின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு பெரும் மிரட்டலாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இலங்கை வீரர்கள் களத்தடுப்பில் 3 பிடிகளை தவறவிட்டது பங்களாதேஷுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. இந்தப் போட்டியில் பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் அமினுள் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஆனால், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக் (21) ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு சிறு தெம்பைக் கொடுத்தானர். மொமினுள் ஹக் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ (8) ஆட்டம் இழந்தார். காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஷன்டோவிடம் இருந்து பங்களாதேஷ் நிறைய எதிர்பார்த்தபோதிலும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் அவரால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. ஷன்டோ ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (76 - 4 விக்.) இந் நிலையில் அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொத்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சொனால் தினூஷ ஆட்டம் இழக்கச் செய்தார். அறிமுக வீரர் தினூஷ முதல் 3 ஓவர்களில் ஓட்டம் கொடுக்காதது விசேட அம்சமாகும். லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் பெற்றனர். அதன் பின்னர் சகலதுறை வீரர்களான மெஹிதி ஹசன் மிராஸ் (31), நயீம் ஹசன் (25) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், அவர்கள் இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையின் வேகபந்து வீச்சாளர்களால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டனர். ஆட்ட நேர முடிவில் தய்ஜுல் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஈபாடொத் ஹுசெய்ன் 5 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் சொனால் தினூஷ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய ஆட்ட நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மழையினால் தடைப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாவதுடன் நாளைய தினம் 98 ஓவர்கள் வீசப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/218467
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 25 ஜூன் 2025, 08:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். மனிதன் - காட்டுயிர் மோதல் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது. கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இதைக் குறைக்கவும், தடுக்கவும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது அடுத்தடுத்து நடந்துவரும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்துகின்றன. காட்டுயிர்களால் பலியான மனித உயிர்கள் பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு,மனித–காட்டுயிர் மோதலுக்குக் காடு துண்டாடலும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி ரமேஷ் கடந்த ஜூன் 20 அன்று, வால்பாறையில் பச்சமலை எஸ்டேட் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மனோன் முண்டா–மோனிகா தேவி தம்பதியரின் 4 வயது மகள் ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கிக்கொன்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் 6 வயது மகள் அப்சரா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். 2023 ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ஓரான் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சிறுத்தையால் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்துவிட்டார். நீலகிரியில் 2014ம் ஆண்டு சோலாடா, அட்டபெட்டு, குந்த சப்பை பகுதிகளில் 3 மனித உயிர்களைக் கொன்ற புலியும், 2015ம் ஆண்டு பிதர்காடு பகுதியில் மகாலட்சுமி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியும், 2016ம் ஆண்டு கூடலுார் வுட் பிரேயர் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மது ஒரன் என்பவரைக் கொன்ற புலியும் ஆட்கொல்லிகளாக அறிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டன. பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு,தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிடில் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை 2021 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற டி23 என்று பெயரிடப்பட்ட புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்து மைசூரு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2023 ஜனவரி 31 அன்று முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில், காட்டுக்குள் சென்ற பழங்குடி மூதாட்டியை புலி ஒன்று தாக்கிக் கொன்றது. 2025 மார்ச் 26 அன்று கொல்லகோடு பகுதியைச் சேர்ந்த தோடர் இனத்தைச் சேர்ந்த கேந்தர்குட்டன் என்பவர் வனப்பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தார். காடுகளில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடும் இயல்புடைய புலியும், சிறுத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் ஆட்கொல்லியாக மாறுகின்றன என்பது குறித்து மக்களிடம் விவாதங்கள் வலுத்து வருகின்றன. 'மேன் ஈட்டராக' எப்போது மாறுகின்றன? ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆகிறது என்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன என்று விளக்குகிறார், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரான ராஜேஷ். அவரது கூற்றின்படி, சில புலிகளுக்கு வயதாகி வேட்டையாடும் திறனை இழந்திருந்தால், அவை எளிதில் கிடைக்கும் இரையாக மனிதர்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது. வயது குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் காயமடைந்து வேட்டையாட முடியாத சூழலில் மனிதர்களைத் தாக்கி இரையாக்கிக்கொள்வதுண்டு. சில இடங்களில் காட்டுக்குள் செல்லும் மனிதர்களை ஒரு விபத்தைப் போல புலிகள் தாக்குவதுண்டு. பட மூலாதாரம்,NCF ''பெரும்பாலான புலிகள், காயம்பட்டாலும், வயதானாலும் அவ்வளவு எளிதில் காட்டை விட்டு வெளியில் வராது. பல புலிகள் அங்கேயே இருந்து இறந்துவிடும். அத்தகைய சூழலில் யாராவது மனிதர்கள் சிக்கினால் இரையாக்கிக் கொள்ளும். அப்படி ஒரு முறை மனிதரை எளிதாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் மனிதர்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் ராஜேஷ். ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' என்ற நுாலில், இதுபற்றி விரிவாக எழுதியுள்ளதைக் குறிப்பிடும் நீலகிரி கானுயிர் சங்கத்தின் காட்டுயிர் புகைப்படக்காரர் சத்தியமூர்த்தி, மனிதர்களைக் கொன்று இரையாக்கிக் கொள்ளும் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை, 'மேன் ஈட்டர்'களாக மாறிவிட்டால் அவற்றைக் கொல்வதே தீர்வு என்று ஜிம் கார்பெட் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். 1900 முதல் 1930 -ஆம் ஆண்டு வரை மனித உயிர்களை பலி கொண்ட பல புலிகள் மற்றும் சிறுத்தைகளை சுட்டுக்கொன்ற ஜிம் கார்பெட், புலிகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்க்கை முறை, வேட்டையாடல் குறித்து நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அதே நேரத்தில் புலிகள், சிறுத்தைகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் ஏராளமான நுால்களை எழுதியுள்ளார். ''மனிதத் தசைகளில் உள்ள உப்பின் சுவையை ருசிக்கும் புலிகள், மீண்டும் அதைத்தேடி மனிதர்களை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்று ஜிம் கார்பெட் கூறியுள்ளார். ஆனால், அன்றைக்கிருந்த காட்டுச் சூழலும், இன்றைக்கு உள்ள சூழலும் முற்றிலும் மாறியுள்ளன. காடுகள் துண்டாடப்பட்டு, காடுகளும், மனித குடியிருப்புகளும் நெருங்கி விட்டதால் மனிதர்கள் குறித்த புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அடிப்படைத் தன்மைகளும் மாறியுள்ளன. அதற்கேற்ற புரிதல்கள் மக்களுக்கு வேண்டும்.'' என்கிறார் சத்தியமூர்த்தி. "ஒதுங்கி வாழும் புலி, ஊரைத் தேடி வரும் சிறுத்தை" படக்குறிப்பு,ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' நூலின் அட்டைப்படம் பொதுவாக, புலிகள் மனிதர்களைக் கண்டால் கூச்சத்தில் ஒதுங்குகிற காட்டுயிர், மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதனால் வாழ முடியாது என்று கூறும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், ஆனால் சிறுத்தைகளுக்கு அந்த அச்சம் கிடையாது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் எங்காவது பதுங்கிக்கொண்டு, ஆடு, நாய், கோழிகளைப் பிடித்து இரையாக்கிக் கொண்டு வாழக்கூடியவை என்கிறார். இதே கருத்தைச் சொல்லும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (Nature Conservation Foundation–NCF) மூத்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''எந்தப் புலியையும் நகருக்குள் பார்க்கவே முடியாது. ஆனால், சிறுத்தைகள் காடும், குடியிருப்பும் கலந்துள்ள பகுதிகளில் வாழும். கோவை போன்ற பெரு நகரங்களிலே கூட சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும்.'' என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும்" புலிகள், எல்லா வயதினரையும் தாக்கிக் கொல்வதும், சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளைக் கொல்வதும் கடந்த கால சம்பவங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் உயரம், எடைக்கேற்பவே தனது இரையை வேட்டையாடும் என்கிறார் விஞ்ஞானி ஆனந்தகுமார். "சாதாரணமாக ஒரு பெரிய புலியின் எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஆனால், ஆரோக்கியமான சிறுத்தையாக இருந்தாலும் அதிகபட்சம் 70–80 கிலோ அளவுதான் இருக்கும். புலி 120 செ.மீ. உயரம் வரையிருக்கும். ஆனால், சிறுத்தை அதிகபட்சமே 70 செ.மீ.க்கு உள்ளாகவே இருக்கும். அதனால் அந்த உயரத்துக்குள் இருக்கும் குழந்தைகளை அவை தாக்குவதாக" அவர் கூறுகிறார். ''சிறுத்தைகளின் முக்கிய இரை, காட்டுப்பன்றிகள்தான். புள்ளி மான் குட்டி, கேளையாடு, சருகுமான் (Mouse Deer), காட்டு முயல், காட்டுக்கோழி, தெருநாய் ஆகியவற்றையும் அவை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் பெருக்கான், தவளை, காமன் லங்கூர், நீலகிரி லங்கூர், சாதாரண குரங்குகள் (bonnet macaque) போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணும். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உள்ள கடமான் குட்டிகள் அவற்றுக்கு விருப்பமான வேட்டை உணவு.'' என்கிறார் வனத்துறை மருத்துவர் ராஜேஷ். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும் என்று கூறும் ராஜேஷ், இதனால்தான் குழந்தைகள் அதிகமாக தாக்கப்படுவதாக கூறுகிறார். குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம்,SCIENTIST RAMESH படக்குறிப்பு,புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ் சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தெருநாய்களைக் கொல்லவும் சிறுத்தைகள் அவற்றை நோக்கி வருவதாகச் சொல்கிறார், இந்திய காட்டுயிர் மையத்தின் (WII-Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானி ரமேஷ். அந்த உயரத்திலுள்ள குழந்தைகளையும் தனக்கான இரை என்று கருதி அவை வேட்டையாடுவதாகச் சொல்கிறார் அவர். ஜிம் கார்பெட் நுாலில் எழுதியுள்ளதைக் குறிப்பிடும் விஞ்ஞானி ரமேஷ், ''இரண்டு சம்பவங்களில் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, 2 பெண்களை புலிகள் தாக்கிக் கொன்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே விறகு பொறுக்கக் குனியும் போதும், புலிகள் மற்றும் சிறுத்தைகளால் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். சமீபகால நடைமுறையிலும் இதுபோலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.'' என்கிறார். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி ஆனந்தகுமார் பேசுகையில், ''தெரு நாய்களைத் தேடி சிறுத்தைகள் வருகின்றன. அதே உயரத்தில்தான் குழந்தைகளும் இருப்பதால் அவர்களைத் தாக்குகின்றன. உண்மையில் இதுபற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடும், குடியிருப்பும் கலந்து இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமென்பதை மறுக்க முடியாது.'' என்கிறார். புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ். ''புலிகள் சாதாரணமாக 2 வயதானவுடன் தாயை விட்டுப் பிரிந்து வெளியேறி வேட்டையாடப் பழகும். அப்போது எந்த இரை எளிதாகக் கிடைக்கிறதோ அதைத்தான் அவை தாக்கும். அதேபோன்று, காயம் பட்ட புலிகள் மனிதர்களை வேட்டையாடும். ஆனால், காயம்படும் புலிகள் வெகுநாட்கள் இருக்காது; இறந்துவிடும். '' என்கிறார் ரமேஷ். மனிதரை இரையாக்கிய பின்னும் 'மேன் ஈட்டர்' ஆகாத புலி இதற்கேற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் வனத்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார். கடந்த 2023 ஜனவரி 31 ஆம் தேதியன்று, முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்ற ஒரு பழங்குடி மூதாட்டியை அடித்துக் கொன்ற இரண்டரை வயது புலியை, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாகக் கண்காணித்தும் அதற்குப் பின் எந்த மனிதர்களையும் அது தாக்கியதில்லை என்று அவர் விளக்கினார். இதுபோன்று தற்செயலாக நடக்கும் சம்பவங்களால் புலிகள், உடனே 'மேன் ஈட்டர்'களாக மாற வாய்ப்பில்லை என்பதை இந்த ஆய்வு விளக்குவதாக வனத்துறையினர் விளக்குகின்றனர். அதனால்தான், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிட்டால் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். புலிகளும், சிறுத்தைகளும் ஆட்களைக் கொல்வதிலிருந்து மக்களைக் காக்க, ஒவ்வொரு பகுதியையும் சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகள் பலருடைய ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது. காடுகளை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துகின்றனர். மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி? மனித–காட்டுயிர் மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''நகருக்குள் சாலைகளை ஒட்டி வீடுகள் இருக்கின்றன. அங்கே வாழும் குழந்தைகளை சாலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, காட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இத்தனை மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, விளையாடக் கூடாது என்று குடும்பங்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார். பட மூலாதாரம்,NCF படக்குறிப்பு, புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது இதற்கு ஒரு தீர்வு கிடையாது என்கிறார் விஞ்ஞானி ரமேஷ் வால்பாறையில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதி என இந்தியாவில் குடியிருப்பும், காடும் உள்ள பகுதிகளில் மனித–காட்டுயிர் மோதல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானி ரமேஷ், "புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது ஒரு தீர்வு கிடையாது, அந்தந்தப் பகுதிக்கேற்ப நுண் திட்டங்களை (Micro Plan) உருவாக்க வேண்டும்" என்கிறார். தங்கள் அமைப்பின் ஆராய்ச்சியில், மனித–காட்டுயிர் மோதலுக்கு காடு துண்டாடப்படுவதும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். ''தேசிய அளவில் மனித–காட்டுயிர் மோதலுக்கான மையத்தை கோவையில் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தெரு விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி அளவில் திட்டம் தீட்டுவதுபோல, இதிலும் ஊராட்சி அளவில் திட்டங்களைத் தீட்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பகுதியில் மோதல் வந்தபின் தீர்வு காண்பதை விட வராமல் தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.'' என்கிறார் விஞ்ஞானி ரமேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j4nq3d7g1o
  7. உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து வௌியான தகவல் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம். 2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmcbwbtmh00dkqp4kyv46edvj
  8. இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வோல்கர் டர்க் பாராட்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர். இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது, சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்திற்கு உயர்ஸ்தானிகரை வரவேற்றார். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை சம்பவங்கள் இல்லாமல், மக்களை பிளவுபடுத்தும் இன அரசியலை உறுதியாக நிராகரிப்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உண்மையான நல்லிணக்கம் ஒவ்வொரு தனிநபரின் இதயத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒற்றுமைக்கான அவர்களின் அபிலாஷையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். தற்போதைய பாராளுமன்றத்தின் முற்போக்கான உள்ளடக்கிய தன்மையை எடுத்துக்காட்டிய அவர், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றும் பார்வை குறைபாடுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை என்பவற்றை சுட்டிக்காட்டினார். இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், குறிப்பாக பல நாடுகள் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய சூழலில் சமூகங்களை ஒன்றிணைத்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை அடைதல் என்பன உண்மையில் கடினமான பணியாகும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபரும் வேறுபாடுகள் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்கான அடித்தளம் மனித உரிமைகள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய நாடுகள் சபை இந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதை வலியுறுத்தினார். சபாநாயகருடனான சந்திப்பை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பிரத்தியேக சந்திப்பை நடத்தினார். இதன்போது நாட்டின் சமூக - அரசியல் நிலைமை மற்றும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், இலங்கையின் மனித உரிமை நிலைமை, நல்லிணக்கச் செயன்முறை, தேவையான சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கையில் நிலையான நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வழங்கும் என்றும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். இந்தச் சந்திப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch), மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் ரோரி முங்கோவன் (Rory Mungoven) உள்ளிட்ட ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmcbvq60e00djqp4k6uihh7n6
  9. செம்மணி “அணையா விளக்கு” போராட்டக் களத்திற்கு சென்றார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் Published By: DIGITAL DESK 3 25 JUN, 2025 | 05:46 PM யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/218460
  10. யாழ் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாம் நாளாக தொடரும் போராட்டம் Published By: VISHNU 25 JUN, 2025 | 06:55 PM யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி புதன்கிழமை (25) ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218464
  11. செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு 25 JUN, 2025 | 05:31 PM செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ''அணையா விளக்கு'' போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். செம்மணி போராட்டம் தொடர்பில் யாழில் புதன்கிழமை (25) ஊடக சந்திப்பு ஏற்படுத்தி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செம்மணி போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சம்பவ இடத்துக்கு சென்றிருந்தேன். செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. செம்மணியில் இன்று குழப்பம் விளைவித்த இளைஞர்கள் சிலர், செம்மணி புதைகுழி சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தார்களா என்பதுகூட தெரியாது. இப்படியானவர்களே அரசியல் வாதிகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபட்டனர். அணையா விளக்கு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆளுங்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என சமூகவலைத்தளங்கள் ஊடாக மக்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர். ஒரு அமைச்சராக நான் போராட்டத்தில் பங்கேற்பது அப்போராட்டத்தக்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும். அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக இன்று நான் செம்மணிக்கு வந்தபோது ஒரு சில கும்பல், தமது அரசியல் இலாபத்துக்கு குழப்பம் விளைவித்தனர். இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் மனநிலை என்னவென்பதும், அவர்களின் வலி வேதனையும் எங்களுக்கு தெரியும். செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். செம்மணியில் மட்டும் அல்ல நாட்டில் மேலும் பல இடங்களிலும் புதை குழிகள் உள்ளன. எமது கட்சி தலைவர் உட்பட தோழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்களுக்கு நீதி வேண்டும். அதற்கான தேடலை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். இனவாதம், மதவாத மற்றும் பிரதேச வாதத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எமது ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறு கும்பல் எம்மை, விரட்ட முற்பட்டாலும் நாம் குரோத மனப்பான்மையுடன் செயற்படப்போவதில்லை. ஒரு அமைச்சராக நான் பாதுகாப்பு தரப்புடன் சென்றிருக்கலாம். சம்பவத்தின் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தனி மனிதனாகவே நான் வந்தேன். ஏனெனில் மக்கள் எம்முடன் இருக்கின்றனர். செம்மணியில் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/218458
  12. Published By: VISHNU 25 JUN, 2025 | 07:05 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் " அணையா விளக்கு" போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட "அணையா தீபத்திற்கு" முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/218465
  13. இலங்கையுடனான 2ஆவது டெஸ்ட் : பகல்போசன இடைவேளையின்போது பங்களாதேஷ் 72 - 2 விக். 25 JUN, 2025 | 12:49 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ், முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது 2 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் 5ஆவது ஓவரில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அனாமுல் ஹக் (0) ஆட்டம் இழந்தார். (5 - 1 விக்.) தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக் ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர். அந்த சந்தர்ப்பத்தில் பந்துவீச்சில் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா முதலாவது பந்திலேயே மொமினுள் ஹக்கை (21) ஆட்டம் இழக்கச் செய்தார். பகல் போசன இடைவேளையின்போது ஷத்மான் இஸ்லாம் 43 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சொனால் தினூஷ அறிமுகமானதுடன் உபாதைக்குள்ளான மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக விஷ்வா பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218410
  14. இரான், இஸ்ரேல் சண்டையில் நடந்த 8 சம்பவங்கள் : 24 மணி நேரத்தில் நடந்த அதிரடி திருப்பங்கள் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், சீன் செடன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 13 முதல், இஸ்ரேல் இரானின் ராணுவ உள்கட்டமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி அடுத்து 24 மணி நேரத்தில், இன்னும் வேகமாக பல நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின. ஒரு அமெரிக்க விமானப்படைத் தளம் தாக்குதலுக்கு உள்ளானது. அமெரிக்கா இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் முறிந்து விடும் நிலையில் இருந்தது. இப்படித்தான் அந்த நாள் முழுதும் நிலையற்ற சூழல் காணப்பட்டது. ' பாதுகாப்பாக இருங்கள் ' பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் அமெரிக்க ராணுவத் தளத்தின் புகைப்படம். இந்தப் புகைப்படம் 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 23 ஜூன் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான் மத்திய கிழக்கை பாதிப்புக்கு உள்ளாக்கும் மோதல் வளைகுடாவிற்கும் விரைவில் பரவலாம் என்பதற்கான முதல் அறிகுறியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு, அமைதியான மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்க அரசு, "நீங்கள் இருக்கும் இடத்திலேயே தங்குங்கள்" என பரிந்துரை செய்தது. இது "அதிக எச்சரிக்கைக்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், பிரிட்டனும் இதே போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கத்தாரில் அமெரிக்கா மீது பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு, இரானுக்கு எப்போதும் இருந்துள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு வெளியே அமைந்துள்ள பெரிய அளவிலான அல்-உதெய்த் ராணுவத் தளத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமான நடவடிக்கைகள் அங்கிருந்தே திட்டமிடப்படுகின்றன. மலைக்கு அடியில் அமைந்துள்ள இரானின் மதிப்புமிக்க ஃபோர்டோ செறிவூட்டல் தளம் உட்பட, இரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, கடந்த வார இறுதியில், இதற்கு முன்பு இல்லாத வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இரானில் உள்ள தலைவர்கள் அச்சுறுத்தியிருந்தனர். இரானுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமனெயி பதுங்கு குழியில் தங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அங்கிருந்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாயத் தளங்களில் ஒன்றைத் தாக்க வேண்டும் என்று அவர் ஒரு உத்தரவை வெளியிட்டதாகத் தெரிகிறது. 'உண்மையான அச்சுறுத்தல்' 12:00 வாஷிங்டன் டிசி / 17:00 லண்டன் / 19:00 டெல் அவிவ் / 19:30 டெஹ்ரான் கத்தாரின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்தது. தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பயணிகள் விமானங்களை அவசரமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கினர். மேலும் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றிற்குச் செல்லும் விமானங்கள் வளைகுடாவின் வேறு இடங்களில் தரையிறங்கத் தொடங்கின. பின்னர் அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது இரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெறலாம் என்று ஒரு "உண்மையான அச்சுறுத்தல்" இருப்பதாக பிபிசி அறிந்து கொண்டது. கத்தார் திசையை நோக்கி ஏவுகணைகள் குறிவைத்து வருவதைக் கண்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் அவரது மூத்த ஜெனரலும் நிலைமையைக் கண்காணிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்குள் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்களுக்கு மேலே உள்ள வானம், இரானிய ஆயுதங்களை இடைமறித்துத் தாக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் உருவான ஒளிப்பாதைகளால் நிரம்பியிருந்தது. 'பலம் அல்ல, பலவீனம்' 13:00 வாஷிங்டன் டிசி / 18:00 லண்டன் / 20:00 டெல் அவிவ் / 20:30 டெஹ்ரான் இரான் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. சிறிது நேரத்தில், இரானின் புரட்சிகர காவலர் படையும் அச்செய்தியை உறுதிப்படுத்தியது. "இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் பலம் அல்ல, மாறாக பலவீனங்கள்" என அது தெரிவித்தது. ஆனால் அந்த தாக்குதல் விரைவில் முடிவடைந்தது. அமெரிக்காவிற்கு முன்பாக, கத்தார் அந்தத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றியது. தாக்குதலின் இலக்கு அதன் மண்ணில் உள்ள அமெரிக்க தளம் தான் என்றாலும், அதன் இறையாண்மை இந்த "தீவிரமான தாக்குதல்" மூலம் மீறப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டது. ஆனால் முக்கியமாக, தோஹாவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே அந்தத் தளம் காலி செய்யப்பட்டதால், தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை. அதே நேரத்தில், இரான் உச்ச தலைவரின் எக்ஸ் தளப்பதிவில், ஒரு சர்ச்சைக்குரிய படம் பகிரப்பட்டது. அந்தப் படம், ஒரு அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதும், ஒரு கிழிந்த அமெரிக்கக் கொடி எரிவதையும் சித்தரித்தது. இருப்பினும், அழிவைப் பற்றி எந்த அறிவிப்பையும் கொடுக்காமல், "நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை" என்று அவர் பதிவிட்டார். அதனையடுத்து, இரான் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவும் கத்தாரும் முன்கூட்டியே அறிந்திருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வெளிப்புற ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில், இந்தத் தாக்குதல் இரான் தலைவர்கள் தங்களின் மரியாதையைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆனால் மோதலைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றியது. அமெரிக்கர்களுக்கு எதிராக தாங்கள் பழிவாங்கியதாக தங்களது மக்களிடம் கூற இரானுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், மிகவும் சக்திவாய்ந்த எதிரியை நேரடியாகச் சண்டைக்கு இழுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், அவர்கள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தாமல் அந்த தாக்குதலை மேற்கொண்டனர். பிறகு பதற்றம் தணிவதற்கான சூழல் உருவாவதைப் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எப்போது தோன்றுவார் என்பதை எதிர்பார்த்து உலகம் காத்திருந்தது. 'அமைதிக்கான நேரம்' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜூன் 15 அன்று டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஷரன் எண்ணெய் கிடங்கு உட்பட இரான் முழுவதும் உள்ள ராணுவ, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது. 16:00 வாஷிங்டன் டிசி / 21:00 லண்டன் / 23:00 டெல் அவிவ் / 23:30 டெஹ்ரான் "பலவீனமானது." "எதிர்பார்க்கப்பட்டது." "திறம்பட எதிர்கொள்ளப்பட்டது." இரானின் தாக்குதலை டொனால்ட் டிரம்ப் இப்படித்தான் விவரித்தார். ஆனால் அதன் பிறகு அவர் வெளியிட்ட செய்திகளில் சமரசத்துக்கான தொனி காணப்பட்டது. தாக்குதல் குறித்து "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக" நன்றி என, இரானுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், "அவர்கள் தங்களது கோபத்தை வெளியிட்டுவிட்டனர்" என்று கூறினார். "ஒருவேளை இரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம். இஸ்ரேலும் அவ்வாறே செய்ய நான் உற்சாகமாக ஊக்குவிப்பேன்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, இரான் அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் இரானுக்கு எதிராக இதற்கு முன்பு இல்லாத வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த காலங்களில் உலகிற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும், தீய சக்தியாகவும் அந்த நாட்டை விவரித்திருந்த டிரம்ப், சண்டை நிறுத்தம் குறித்து, அதன் தலைவர்களிடம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் வெளியிட்ட தொடர் பதிவுகளை நிறுத்திவிட்டு, "உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்!" என்று பின்னர் பதிவிட்டார் டிரம்ப். '12 நாள் போர்' பட மூலாதாரம்,MAXAR படக்குறிப்பு, சனிக்கிழமை இரவு ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய பின்னர், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு வெள்ளை மாளிகை அழுத்தம் கொடுத்தது. 18:00 வாஷிங்டன் டிசி / 23:00 லண்டன் / 01:00 டெல் அவிவ் / 01:30 டெஹ்ரான் அமெரிக்கா, இரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் திரைக்குப் பின்னால் பரபரப்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரான் உடன் நடைபெற்ற மோதலில் சிறிது காலம் இணைந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாகப் பேசினார். இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் நடந்தாலும், சண்டையை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தான் அதன் செய்தி எனத் தெளிவாக தெரிந்தது. இதற்கிடையில், டிரம்பின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், அவரது தலைமை சர்வதேச பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்பும், இரானியர்களை நேரடியாகவும் ரகசிய ராஜ்ஜீய வழிகளிலும் அணுகினர். மத்திய கிழக்கில் எளிதில் கிடைக்காத ஒன்றாக இருந்தாலும், டிரம்ப் மிகவும் மதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க, அமெரிக்காவில் இருந்து அவரது குழு அவசரமாக செயல்பட்டது. அந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றுவிட்டது என்ற தகவல்களும் அதற்கெதிரான மறுப்புகளும் பரவத் தொடங்கின. ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவந்தவுடன், நிலைமை முன்னேறத் தொடங்கியது. பின்னர், பிஎஸ்டி நேரப்படி காலை 11:00 மணிக்குப் பிறகு, அதிபர் மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். "அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று அவரது செய்தி தொடங்கியது. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முழுமையான சண்டை நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். "செயல்பாட்டில் உள்ள இறுதிப் பணிகள் "நிறைவடைய ஒரு சலுகை காலம் வழங்கப்படும், அதன் பின்னர், அந்த ஒப்பந்தம் ஆறு மணி நேரத்தில் அமலுக்கு வரும். இனி, இந்த மோதல் "12 நாள் போர்" என்று அழைக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். அங்கிருந்து ஆறாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மத்திய கிழக்கில், அடுத்த நாள் விடியத் தொடங்கியது. 'ஏவுகணைத் தாக்குதல்களின் கடைசி சுற்று' பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேலின் பீர்ஷெபாவில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. 22:00 வாஷிங்டன் டிசி / 03:00 லண்டன் / 05:00 டெல் அவிவ் / 05:30 டெஹ்ரான் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்ல மக்கள் உத்தரவிடப்பட்டனர். இரானிலிருந்து ஏவுகணைகள் வந்துகொண்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தன. 60 நிமிடங்களுக்குள், இரான் மூன்று சுற்றுகளாக ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்தது. காலைக்குப் பிறகு, மேலும் பல ஏவுகணைகள் பாய்ந்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இரானிய ஏவுகணை நேரடியாக தாக்கியது. பாதுகாப்பு அறையில் தஞ்சம் புகுந்திருந்த மூன்று பேர் உட்பட, நால்வர் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இரான், தங்களின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றை குடியிருப்புகள் மீது பயன்படுத்தியதாக இஸ்ரேலின் பிரதமர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், இரானிய ஊடகங்கள், வடக்கு நகரமான அஸ்தானே-யே அஷ்ரஃபியேவில் இஸ்ரேல் இரவு முழுவதும் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தெரிவித்தன. உயிரிழந்தவர்களில் அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபேரியும் இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் "முற்றிலும் அழிக்கப்பட்டன. அங்கு ஏற்பட்ட வெடிப்பால் சுற்றியுள்ள வீடுகளும் பல சேதமடைந்தன" என்று பிராந்திய துணை ஆளுநர் கூறினார். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில், வீடுகளால் சூழப்பட்ட ஒரு தெருவில் சிதறிக் கிடந்த இடிபாடுகள் தெளிவாகக் காணப்பட்டன. பட மூலாதாரம்,BBC PERSIAN படக்குறிப்பு, இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இரானின் காட்சி. சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதற்குமுன், இஸ்ரேல் 'கடைசி சுற்று' ஏவுகணைகளை ஏவியதாக இரான் குற்றம் சாட்டியது." இஸ்ரேலிய ராணுவம் இரவு முழுவதும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக பின்னர் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், இராக் அரசு, டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள தளங்களைக் குறிவைத்ததாகக் கூறியது. இரானிய ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள் இராக்கில் செயல்பட்டு வருகின்றன. எந்த தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கடைசி நிமிடம் வரை மோதல் தொடர்ந்து நடைபெற்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ' சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் திங்கட்கிழமை இரவு படம்பிடிக்கப்பட்டன. 01:00 வாஷிங்டன் டிசி / 06:00 லண்டன் / 08:00 டெல் அவிவ் / 08:30 டெஹ்ரான் "சண்டை நிறுத்தம் இப்போது அமலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!' என டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய அரசாங்கம் சண்டை நிறுத்த ஏற்பாடுகளை முறையாக ஏற்றுக்கொண்டது. இரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை அழித்ததன் மூலம், இஸ்ரேல் தனது நோக்கங்களை நிறைவேற்றியதாகவும், இப்போது அது 'உலக வல்லரசுகளின்' வரிசையில் இணைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இரான் தயாராக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சி, நள்ளிரவு நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் தனது தாக்குதல்களை உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:00 மணிக்குள் நிறுத்தினால், "அதற்குப் பிறகு எங்கள் பதிலடியை தொடர எங்களுக்கு எந்தவித எண்ணமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்த சண்டை நிறுத்தம் ஆபத்தில் இருப்பது போல் தோன்ற அதிக நேரம் ஆகவில்லை. இரானிலிருந்து ஏவுகணை பாய்ந்ததையடுத்து, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இரான் அந்த கூற்றுகளை மறுத்தபோதிலும், டெஹ்ரானின் மையத்தில் உள்ள ஆட்சியின் இலக்குகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களுக்கு" உத்தரவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், "தெஹ்ரான் அதிர்ச்சியடையும்" என்று எச்சரித்தார் வலதுசாரி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச். அதனையடுத்து, சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், டிரம்ப் விரைவாக ஏற்படுத்திய ஒப்பந்தம் சீர்குலையத் தொடங்கியது போல் தோன்றியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானின் தலைநகரை நோக்கிச் சென்ற நிலையில், "அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் வீசினால், அது ஒரு பெரிய ஒப்பந்த மீறலாகும். உங்கள் விமானிகளை உடனே நாட்டுக்கு அழைத்து வாருங்கள்!" என்று டிரம்ப் மீண்டும் பதிவிட்டார். ' இஸ்ரேலும் இரானும் அமைதியடைய வேண்டும்' பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 07:00 வாஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 டெஹ்ரான் வாஷிங்டன் டிசியில் மறுநாள் காலைப் பொழுது விடிந்ததும், அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடந்து வந்தார். அங்கு ஒரு ஹெலிகாப்டர் அவரை நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது. அறிவிப்புகள், கூற்றுகள் மற்றும் மறுப்புகளால் குழப்பமடைந்த இரவிற்குப் பிறகு, அதிபர் டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க செய்தியாளர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இஸ்ரேலும் இரானும் சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக டிரம்ப் அவர்களிடம் கூறினார். ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். ஜெட் விமானங்களைத் திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதைக் குறிப்பிட்ட டிரம்ப், "ஒரு [இரானிய] ஏவுகணை இருந்தது, அது காலக்கெடுவுக்குப் பிறகு கடலில் ஏவப்பட்டதாக நான் நினைக்கிறேன். இப்போது இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கச் செல்கிறது. இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்" எனக் கூறினார். இரானிய ஏவுகணை "ஒருவேளை தவறுதலாக" ஏவப்பட்டிருக்கலாம் என்றும், அது "தரையிறங்கவில்லை" என்றும் டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்ப் கோபமாகக் காணப்பட்டார். ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், "நான் இதற்கு முன்பு பார்த்திராத" அளவிலான தாக்குதல்களை நடத்தியதற்காக, "இஸ்ரேலிடம் நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார். "இரானைக் குறித்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை," என்றும் டிரம்ப் கூறினார். டிரம்ப் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, இஸ்ரேல் மற்றும் இரான் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 'இவர்கள் இவ்வளவு நாட்களாக சண்டையிட்டு வருகிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை' என்று அவர்களைக் கடுமையாகச் சாடினார். நெதர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குச் செல்ல ஹெலிகாப்டர் மூலம் மேரிலாந்தில் உள்ள ராணுவத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்கவிருந்தார். விமானத்தில் ஏறிய பிறகு, டிரம்ப் நெதன்யாகுவை அழைத்தார். அந்த உரையாடல் மிகவும் பதற்றமாக இருந்ததாகத் தெரிகிறது. இஸ்ரேலிய பிரதமருடன் அதிபர் "மிகுந்த உறுதியுடனும் நேரடியாகவும்" பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரம் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தது. நெதன்யாகு, சூழ்நிலையின் தீவிரத்தையும் அதிபர் டிரம்ப் வெளிப்படுத்திய கவலைகளையும் புரிந்து கொண்டார்" எனக் கூறப்பட்டது. இரானைத் தாக்க தயாராக இருந்த இஸ்ரேலிய விமானங்களை திரும்ப அழைக்குமாறு நெதன்யாகுவிடம் கூறியதாக, விமானப் பயணத்தின் போது டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இரானில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை, அணு ஆயுதத்தை உருவாக்குவது, இப்போது அவர்களின் மனதில் "கடைசி விஷயமாக"இருக்கும் என்று கூறினார் டிரம்ப். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3en488x5dko
  15. பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன் - தேசபந்து தென்னக்கோன் 25 JUN, 2025 | 12:40 PM “2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்னை தேடிய நாட்களில் நான் எனது வீட்டில் தான் இருந்தேன்” என தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் விசாரணை குழுவில் தெரிவித்துள்ளார். தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த போதே தேசபந்து தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவிக்கையில், “2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னை கைதுசெய்யுமாறு கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.” “பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளையில் நான் குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் தான் இருந்தேன்.” “ஆனால் பொலிஸார் என்னை தவறான இடங்களில் தேடினர்.” “குருணாகல் - கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள எனது வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தினேன்.” “நான் அந்த வீட்டில் தனியாக தான் இருந்தேன்” என தெரிவித்துள்ளார். தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்ட துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குறித்த விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் சார்பில் 15 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. விசாரணை குழு நாளை வியாழக்கிழமை (26) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் கூடும். https://www.virakesari.lk/article/218412
  16. மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் : ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 25 JUN, 2025 | 12:58 PM நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படாமல் இருத்தலானது சமாதானத்தின் நிலைபேறான தன்மையைப் பாதிக்கும். மாறாக என்ன நேர்ந்தது என்ற உண்மைகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவே நிலையான சமாதானத்தை நோக்கிய பாதையில் பயணிக்க முடியும் என அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செவ்வாய்க்கிழமை (24) மாலை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கலந்துரையாடலில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மனித உரிமைகளே சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் முன்நோக்கிப் பயணிப்பதற்குமான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் நீண்டகால உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது நிலவும் சமாதானத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது அவசியம். உள்நாட்டு மோதல், தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த இலங்கை, தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், நல்வாழ்வுக்கான உரிமை உள்ளிட்ட சகல உரிமைகளையும் அழுத்தங்களின்றிப் பேண வேண்டும். தற்போது இலங்கை தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை ஆகிய இரண்டு பொறிகளுக்குள் சிக்கியிருக்கின்றது. இதிலிருந்து நாட்டை மீட்பதற்குரிய வழிமுறைகளை இலங்கையர்கள் ஆராய வேண்டும். நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நினைவுகூரல் என்பன இன்றியமையாதனவாகும். அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதிசெய்வதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்தவதற்கும் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உண்மை பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படாவிடின் அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நிலவும் தாக்கங்கள் மேலும் தீவிரமடைவதற்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு வலுவடைவதற்கும் வழிவகுக்கும் என்றார். அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் என சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் “தீர்வுகளை நோக்கிய பாதையாக மனித உரிமைகள்” எனும் தலைப்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218420
  17. ஆக்ஸியம் 4: 28,000 கிமீ வேகத்தில் சென்றாலும் 400 கிமீ உயரத்தில் உள்ள ஐஎஸ்எஸ்சை அடைய 28 மணி நேரமாவது ஏன்? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்ரீகாந்த் பாக்‌ஷி பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் விண்வெளி பயணத்தில் இந்தியா மற்றுமொரு சாதனையை புரிய உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 27 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவர் கூட இந்தியர் இல்லை. அந்த சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தாலும், பூமியில் இருந்து வெறும் 400 கி.மீ. உயரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இந்த குழுவுக்கு ஏன் 28 மணி நேரமாகிறது? பட மூலாதாரம்,X/INTERNATIONAL SPACE STATION படக்குறிப்பு, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் குழுவினர் நீண்ட பயணம் ஏன்? ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு மணிநேரத்தில் 28,000 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் அதனால் பயணிக்க முடியும். ஆக்ஸியம் 4 திட்டம், பூமிக்கு மேலே தோராயமாக 370 முதல் 400 கி.மீக்கு மேலே பூமியின் தாழ்வட்டப் பாதையில் (low-Earth orbit) சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும். இன்று மதியம் 12 மணியளவில் செலுத்தப்படும் ஃபால்கான் 9 ராக்கெட் 28 மணிநேரம் பயணித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 26 அன்று மாலை 5 மணிக்கு தான் அடையும். மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட், 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய ஏன் 28 மணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்? அதற்கான காரணத்தை இங்கே அறியலாம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, கணக்கு பாடத்தில் காலம், வேகம் மற்றும் தொலைவு குறித்து படித்திருப்போம். அதன்படி, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒரு கார், 400 கி.மீ. தொலைவை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை கணக்கிட்டிருப்போம். அதாவது, 4 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த கணக்கு விதிமுறைகள் பூமியில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும், விண்வெளி பயணத்துக்கு அல்ல. ஏனெனில், பூமியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் போது அது மாறாத, நிலையான ஒன்றாக உள்ளது. அந்த இரு இடங்களுக்கு இடையேயான தொலைவு மாறாது. ஆனால், விண்வெளி பயணம் அப்படியல்ல. விண்வெளியில் உள்ள எந்தவொரு பொருளும் நிலையானது அல்ல. அவை, ஒவ்வொரு சுற்றுப் பாதையிலும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. உதாரணமாக, கோள்கள் சூரியனையும் செயற்கைக்கோள்கள் கோள்கள் மற்றும் சிறுகோள்களையும் தொடர்ந்து சுற்றிவருகின்றன. அவை அப்படி சுழலவில்லை என்றால், அவை கோள்களின் ஈர்ப்புவிசைக்கு உட்பட்டு, அவற்றின் திசையிலேயே சென்று அவற்றுடன் மோதிவிடும். இதே விதிமுறை, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் பொருந்தும். சர்வதேச விண்வெளி நிலையம், தாழ்வட்டப் பாதையில் பூமியை மணிக்கு 28,000 கி.மீ எனும் வேகத்தில் சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் அது சுழலவில்லை என்றால், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழுந்துவிடும். அதனால்தான் அது நிலையான வேகத்தில் பூமியை சுற்றிவருகிறது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார் (கோப்புப்படம்) பயணத்தின் வெவ்வேறு கட்டங்கள் ஆக்ஸியம் 4 திட்டத்தின்படி, பூமியின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படுவதிலிருந்து தப்பிக்க (escape velocity) ஃபால்கான் 9 ராக்கெட் விநாடிக்கு 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்தால் தான் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி விண்வெளிக்குள் நுழைய முடியும். இந்த பாதை நேரானது அல்ல. அந்த பாதை ஓர் கூம்பு வெட்டு வடிவத்தில் (parabola) இருக்கும். புவியீர்ப்பு புலத்தைக் கடந்து பயணித்த பின், அந்த ராக்கெட்டில் உள்ள முதல் கட்ட உந்துகலன்கள் அதிலிருந்து பிரிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கும். ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டதிலிருந்து ராக்கெட் இரண்டாம் கட்டத்தை அடைய சில நிமிடங்களே எடுக்கும். அங்கிருந்து ராக்கெட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் என்கிறார், தி பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன். முதல் கட்டத்தில் புவியீர்ப்பு விசையை தாண்டி பயணிக்க ராக்கெட்டுக்கு அதிகளவிலான எரிபொருள் தேவை. ஆனால், பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து பயணித்த பின், குறைந்த எரிபொருள் மூலமாகவே நீண்ட தொலைவு மிக வேகமாக பயணிப்பது சாத்தியம். ஃபால்கான் 9 ராக்கெட்டின் இரண்டாம் கட்ட செயல்பாடு என்பது சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு தேவையான வேகம் மற்றும் உயரத்தை அடைய வேண்டும். இதன்பின், அந்த ராக்கெட் பூமியை தொடர்ந்து சுற்றி, அதன் வேகம், திசை மற்றும் சுற்றுவட்டப் பாதையை மாற்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும். எனினும், இந்த முழு செயல்முறையையும் ராக்கெட்டில் உள்ள வழிகாட்டும் அமைப்பே கவனித்துக்கொள்ளும். இத்திட்டத்தின் தலைவர் பெக்கி விட்சன் மற்றும் பைலட் சுபான்ஷு சுக்லா ராக்கெட்டில் தங்கள் முன்பு உள்ள மானிட்டர்கள் மூலம் இதை கண்காணித்து, அது சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள். சில நிமிடங்களில் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது என எடுத்துக்கொண்டால், இரண்டாம் கட்டம் நிறைவடைய 23 முதல் 25 மணி நேரமாகும் என ரகுநந்தன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. கடினமான கட்டம் நாசாவால் வெளியிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய படங்கள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் மிக குறைவான வேகத்தில் நகர்வது போன்று காட்டுகின்றன. ஆனால், உண்மையில் அது மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய (docking) ஒரே வேகத்திலும் ஒரே திசையிலும் பயணிக்க வேண்டும். இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக பயணிக்கும். பயணம் தொடங்கி 25 மணிநேரம் கழித்து, டிராகன் விண்கலம் அதே வேகத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செல்லும். அதன்பின், மெதுவாக வேகத்தை அதிகரித்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணையும் செயல்முறை தொடங்கும். அந்த சமயத்தில், இரண்டும் விண்வெளியில் நிலையாக உள்ளது போன்று தோன்றும், ஆனால் உண்மையில் இரண்டும் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இந்த சூழலை பூமியில் நடப்பதாக கற்பனை செய்து பார்ப்போம். அருகருகே மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் கார்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தால், ஒரு காரில் உள்ளவர்கள் மற்றொரு காருக்குள் செல்வதைப் போன்றது. அதனால்தான் டிராகன் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நெருக்கமாக செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிறது. அனைத்து சூழல்களும் சரியாக இருந்தால், டாக்கிங் செயல்முறைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அடாப்டருடன் டிராகன் விண்கலம் இணையும். இந்த செயல்முறைக்குப் பிறகும் இருபுறமும் உள்ள கதவுகள் உடனடியாக திறக்காது. சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சேர்ந்து, விண்கலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் சமன் செய்யப்பட்ட பிறகு, காற்று வெளியேறாமல் தடுக்கும் வகையில் மூடப்பட்ட பின்னரே, இரண்டுக்கும் இடையேயான கதவுகள் (hatches) திறக்கப்படும். இந்த செயல்முறை முடிந்த பின்னர், விண்கலத்தில் உள்ள விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இறங்குவார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglz0knxe8wo
  18. பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆற சில காலம் தேவை - அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு 25 JUN, 2025 | 12:19 PM பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் ஆறுவதற்கு சில காலம் தேவை. இருப்பினும் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவேண்டியது மிக அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (Volker Turk) தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை செவ்வாய்க்கிழமை (24) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218408
  19. 25 JUN, 2025 | 12:16 PM யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது. தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, https://www.virakesari.lk/article/218407
  20. 25 JUN, 2025 | 12:04 PM அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/218406
  21. 25 JUN, 2025 | 10:31 AM யாழ் - பளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை நிறுத்த பொலிஸார் ஆணிக்கட்டைகளை டயரில் வீசி மடக்கி பிடித்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரணத்தினாலேயே பொலிஸார் டயரிற்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர். ஆணிகட்டைகள் டயரில் சிக்கியதால் கனரக வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில் வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் கனரக வாகனத்தினை மீட்ட பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/218385
  22. 25 JUN, 2025 | 10:22 AM மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று கனரக வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெற்று, பொலிஸார் பார்த்தபோது, அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து மூன்று கனரக வாகனங்களையும் கைப்பற்றிய பொலிஸார், அதன் சாரதிகளையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதிகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/218388
  23. இஸ்ரேல் நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஈரான் போர் நிறுத்தத்தை மதிக்கும் Published By: VISHNU 24 JUN, 2025 | 08:18 PM அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் இஸ்ரேலும் அதே நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மதிக்கப்படும் என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெகியான் கூறியுள்ளார். "சியோனிச ஆட்சி போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றால், ஈரானும் அதை மீறாது" என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தொலைபேசி உரையாடலில் பெசெகியான் கூறியதாக வெளிநாட்டு வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218366
  24. இரான் அணுசக்தி கட்டமைப்பு முற்றிலும் அழியவில்லையா? அமெரிக்காவின் தாக்குதல் பற்றி கசியும் புதிய தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அணுசக்தி திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கூற்றுகளில் அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடு சந்தேகம் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களை "பதுங்கு குழி" குண்டுகள் மூலம் அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் இரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் "அப்படியே" இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. "இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கான நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன, சில உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன, ஆனால் நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன." என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் இரான் அணுசக்தி திட்டத்தை "சில மாதங்கள்" பின்னுக்குத் தள்ளியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது சேதங்களை சரி செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைப் பொருத்தது என்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரான் கையிருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்னரே வேறிடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலனாய்வுத் தகவல்கள் கசிவு - டிரம்ப் விமர்சனம் இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார். "போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'தேசத்துரோகம்' என்று சாடும் டிரம்ப் சிறப்புத் தூதர் இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை "தேசத் துரோகம்" என்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார். "இது கொடியது, இது துரோகம். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார். அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் "அழிக்கப்பட்டன" என்பதில் "சந்தேகமில்லை" என்றும் அவர் கூறினார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஃபாக்ஸ் டிவிக்கு விட்காஃப் அளித்த நேர்காணலின் ஒரு கிளிப்பை இடுகையிட்டு அவரது கருத்துகளை டிரம்ப் எதிரொலித்தார். "ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது விதானத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது!" விட்காஃப் கூறியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்: - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c056mjgqp8go
  25. கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 11:39 AM அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர். சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்ப்பிழைத்தவர்களின் உறவினர்களின் அறிவிப்புகள் வரும் வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்த போது 30 மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகள் 6 முதல் 8 அடி வரை உயர்ந்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நாள் முழுவதும் தஹோ வாவியில் துடுப்புப் படகு சவாரி செய்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய படகில் இருந்தவர்கள் உட்பட பலர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க கடற்படை மக்களுக்கு முன்னாயத்த நிலைமைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வலியுத்தியுள்ளது. "அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் எப்போதும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும், தண்ணீரில் இறங்குவதற்கு முன்னர் வானிலை நிலைமைகளைச் சரிபார்க்கவும், படகில் செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அறிக்க வேண்டும், உதவிக்கு அழைக்க ஒரு செயல்பாட்டு VHF வானொலியை எடுத்துச் செல்ல வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்படுவதாக அமெரிக்க கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218301

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.