Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 40 போர் விமானங்கள் அழிப்பா? ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி யுக்ரேன் டிரோன் தாக்குதல் பட மூலாதாரம்,SBU SOURCE படக்குறிப்பு,போர் விமானங்களை டிரோன்கள் தாக்கியதாக வெளியான காணொளி கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜாங்க செய்தியாளர் 2 ஜூன் 2025, 03:07 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிறு அன்று, ரஷ்யாவில் உள்ள நான்கு விமான தளங்களில் உள்ள 40 ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட "ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)" என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, குரூயிஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூடிய 34% போர் விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக எஸ்பியூ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. இதில் டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் மீது தூரத்தில் இருந்தே இயக்கக்கூடிய கூரைகள் உடன் விமானப்படை தளங்கள் அருகே கொண்டு வரப்பட்டு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது. ஐந்து பிராந்தியங்களில் யுக்ரேனின் தாக்குதல்களை உறுதிபடுத்தியுள்ள ரஷ்யா இதனை "பயங்கரவாத செயல்" என விமர்சித்துள்ளது. இந்நிலையில் தங்களின் எல்லைக்குள் நள்ளிரவில் பலமான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,SBU SOURCE படக்குறிப்பு,டிரோன் தாக்குதல் திங்களன்று துருக்கியின் இஸ்தான்புலில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த ரஷ்ய - யுக்ரேன் அதிகாரிகள் செல்லும் நிலையில் தான் இவை அனைத்துமே நடக்கின்றன. ஆனால் சண்டையிடும் இரண்டு நாடுகளுக்கும் இடையே இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால் பேச்சுவார்த்தை மீது குறைவான எதிர்பார்ப்புகளே உள்ளன. 2022-ல் பிப்ரவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கினார். 2014-ல் ரஷ்யா ஆக்கிரமித்த யுக்ரேனிய பகுதியான கிரைமியா உடன் சேர்த்து தற்போது 20% யுக்ரேன் நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஸ்பியூ தலைவர் வாசில் மலியுக்கை இந்த ஆபரேஷனின் "அட்டகாசமான முடிவிற்காக" பாராட்டியதாக ஸெலன்ஸ்கி ஞாயிறு அன்று சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 117 டிரோன்களுக்கும் தனித்தனி பைலட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "மிகவும் சுவாரஸ்யமான, நாங்கள் வெளியே தெரிவிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஆபரேஷனுக்கான எங்களுடைய அலுவலகம் ரஷ்யாவின் பிராந்தியங்கள் ஒன்றில் அதன் எஃப்.எஸ்.பி-க்கு அடுத்தே இருந்தது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். எஃப்.எஸ்.பி என்பது ரஷ்யாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஆகும். இந்தத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட நபர்கள் அதற்கு முன்பே பாதுகாப்பாக ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றார் ஸெலன்ஸ்கி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட இடங்கள் ரஷ்ய விமானப்படைக்கு 7 பில்லியன் டாலர் (5 பில்லியன் யூரோ) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்பியூ மதிப்பிட்டுள்ளது. மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் அது உறுதியளித்துள்ளது. யுக்ரேனின் கூற்றுகள் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. யுக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நான்கு ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை எஸ்பியூ தெரிவித்தது. தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரேன் தெரிவித்துள்ள இடங்கள் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெலாயா, சைபீரியா மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒலென்யா, ரஷ்யாவின் வட கிழக்கு எல்லை மத்திய ரியாசான் பிராந்தியத்தில் உள்ள தியாகிலெவோ மத்திய இவாநோவா பிராந்தியத்தில் உள்ள இவாநோவா தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என எஸ்பியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் "தளவாட ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது" என அவர்கள் விவரித்துள்ளனர். பட மூலாதாரம்,SBU SOURCE "எஸ்பியூ முதலில் எஃப்பிவி டிரோன்களை ரஷ்யாவுக்குள் கடத்திச் சென்றது, அதன் பின்னர் மரப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த பிறகு இந்த டிரோன்கள் இந்த மரப் பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டன. அவை சரக்கு வாகனங்களில் வைக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் "சரியான நேரத்தில் தொலைவில் இருந்தே இந்த மரப்பெட்டிகள் திறக்கப்பட்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்க டிரோன்கள் புறப்பட்டுச் சென்றன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்குட்ஸ்க் கவர்னர் இகோர் கோப்சேவ் சைபீரியாவின் ஸ்ரெட்னியில் உள்ள பெலாயா ராணுவத் தளத்தை தாக்கிய டிரோன்கள் ஒரு லாரியில் இருந்து தான் ஏவப்பட்டன என்பதை உறுதி செய்தார். தாக்குதலுக்கு உள்ளான இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் கோப்சேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதர தாக்குதல்களும் இதே போல லாரிகளில் இருந்து கிளம்பிய டிரோன்களில் இருந்து தான் நடந்தன என்று ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு பெட்ரோல் நிலையத்தில் அருகில் இருந்த லாரியில் இருந்து டிரோன்கள் பறந்து சென்றதாக ஒருவர் தெரிவித்துள்ளார். மர்மன்ஸ்கில் நடந்த தாக்குதலைப் பதிவு செய்துள்ள ரஷ்ய ஊடகங்கள் வான் பாதுகாப்பு வேலை செய்ததாகவும் தெரிவிக்கின்றன. இர்குட்ஸ்க் மீது நடந்த தாக்குதலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிபடுத்தியது. பட மூலாதாரம்,SBU SOURCE இவாநோவா, ரியாசான் மற்றும் அமூர் பிராந்தியங்களில் ராணுவ விமானப்படை தளங்களில் அனைத்து தாக்குதல்களும் தவிர்க்கப்பட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி தளம் எஸ்பியூ தரப்பினால் குறிப்பிடப்படாத ஒன்று. டர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பிராந்தியங்களில் "டிரோன்கள் ஏவப்பட்ட பிறகு பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ அணைக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. "இந்த பயங்கரவாத தாக்குதல்களில் பங்கு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு யுக்ரேன் மீதான தொடர் தாக்குதல்களில் 472 டிரோன்கள், 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தான் தற்போது வரை ரஷ்யா நிகழ்த்திய மிகப்பெரிய ஒற்றை டிரோன் தாக்குதலாக உள்ளது. 385 வான் பொருட்களை அழித்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்தின் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj09d1np8g9o
  2. 69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை : தொடர் பணியில் எமது குழுவினர் : ஊழியர்கள் அல்ல அவர்கள் தேசிய வீரர்கள் - இலங்கை மின்சார சபை Published By: VISHNU 01 JUN, 2025 | 09:18 PM கடந்த 69 மணித்தியாலங்களில் 72,012 மின்தடை குறித்த முறைப்பாடுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தமிக்க விமலரத்த தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (1) மாலை 5 மணி வரை கிடைக்கப்பெற்ற மின்தடை தொடர்பான முறைப்பாடுகளில் 41, 684 முறைப்பாடுகளுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சார் தம்மிக்க விமலரத்தன மேலும் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையின் மேலதிக பணியாளர்கள் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் மின்வெட்டு தொடர்பான ஏனைய முறைப்பாடுகளை சீர்செய்வதில் மழை, காற்றையும் பொருட்படுத்தாது களத்தில் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இது குறித்து ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்த ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடும் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியிலும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அமைதியாகவும் உறுதியுடனும் துணிச்சலுடன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். நாட்டின் பல பாகங்களிலும் மின்தடை, இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையிலும் எமது அணியினர் எவ்வித ஆரவாரமும் இன்றி நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். மின் தடை குறித்த முறைப்பாட்டு எண்ணிக்கை எமது நாட்டைப் பொறுத்தவரை அரிதானதாகும். ஆயினும் பெரும் குழப்பத்திற்கு மத்தியிலும் இலங்கை மின்சார சபையின் அணியினர் சரியான தருணத்தில் எவ்வித ஆரவாரமும் இல்லாது மன உறுதியுடன் களத்தில் உள்ளனர். மலையகத்திலும், உறைபனிக்கு மத்தியிலும் விடியற்காலையில் மூடுபனியிலும் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர். தொலைதூர கிராமங்களில், மின்சார பணியாளர்கள் தற்காலிக பாலங்களைக் கடந்தும் வெள்ள நீரில் முழங்கால் ஆழம் வரை நடந்தும் தோள்களில் கனமான மின் கம்பி சுருள்கள் மற்றும் ஏணிகளை சுமந்து சென்றும் கடமையாற்றுகின்றனர். சோர்வடைந்த கண்கள், நனைந்த சீருடைகள் மற்றும் மரத்துப்போன விரல்களுடன் அவர்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றுகின்றனர். சில ஊழியர்கள் 16 மணி நேர கடமைநேரத்தில் இடைவேளை இல்லாமல் வேலை செய்தனர். சிலர் உணவைத் தவிர்த்தனர். ஏனையவர்கள் தூக்கமில்லாது இரவுகளைக் கழித்தனர். குறைந்த ஊழியர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டு அவர்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் கடமையில் ஈடுபட்டனர். இந்த மீளமைப்பு வெறும் தொழில்நுட்பப் பணி அல்ல. இவர்கள் ஊழியர்கள் அல்ல. அவர்கள் தேசிய வீரர்கள். எங்களுக்காக புயலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒவ்வொரு இலங்கை மின்சார சபை ஊழியர்களையும் நாங்கள் நன்றி உணர்வுடன் பார்க்கிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். மேலும் நாங்கள் உங்களை வணங்குகிறோம். அதே போல் உங்கள் தைரியம் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற முறையில் சேவை செய்ய ஊக்குவிக்கட்டும் என அந்த அநிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216290
  3. உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலிக்கு இடையே பேசிய பிரான்ஸ் நாடாளுமன்ற துணை தலைவர் ஆலிவர் ஃபலோர்னி, “கடந்த ஒரு தசாப்தமாக குணப்படுத்த முடியாத நிலையில் நோயுற்று இருப்போர், அவரது உறவினர்களை சந்தித்திருக்கின்றேன். பலர் நீண்ட நாட்கள் வாழவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று என்னிடம் எப்போதுமே சொல்லி இருக்கின்றனர்” என்றார். இந்த மசோதாவின் படி, மரணத்துக்கு உதவக் கூடிய மருந்து என்று வகைப்படுத்தபட்ட மருந்தை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே எடுத்துக் கொள்வதை அனுமதிக்கிறது. நோயுற்றோர் தனியாக இதனை போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அத்தகையோருக்கு ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் மரணத்துக்கான மருந்தைக் கொடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும், எதிராக 199 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா செனட் அவைக்கும் அனுப்பப்படும். அங்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இதில் சட்டத்திருத்தம் கோரப்படும் என்ற தெரிகிறது. எனினும், செனட்டை விடவும் தேசிய அவையே பிரான்ஸ்சில் அதிகாரம் மிக்கதாகும். மசோதாவில் உள்ள நிபந்தனைகள் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நபர் 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும். பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவராக பிரான்சில் வசிப்பவராக இருக்க வேண்டும். நோயாளி உண்மையிலேயே குணப்படுத்த முடியாத நோயால் துன்படுகிறார் என்பதை அறிய நோயாளியை மருத்துவக் குழு பரிசோதிக்கும். அதன் பின்னரே இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மருந்தை எடுத்துக் கொள்ள முடியும். தீவிர மனநலன் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள், அல்சமீர் போன்ற நரம்புச் சிதைவு கோளாறுகளால் அவதிப்படும் நோயாளிகள் இந்த விருப்பத்தை தேர்வு செய்ய முடியாது. ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவ குழு ஒப்புதல் வழங்கிய பின்னர், எந்த மருந்தை எடுத்துக் கொண்டு அந்த நோயாளி மரணிக்க வேண்டும் என்பதற்கான மருந்தை மருத்துவர் எழுதிக் கொடுப்பார். இதனை வாங்கி வீட்டிலேயோ அல்லது மருத்துவமனைக்கு சென்றோ செலுத்திக் கொண்டு உயிரிழக்கலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெரும்பாலான பிரான்ஸ் மக்கள், உயிரை மாய்த்துக்கொள்ளும் விருப்பத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு மத தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டமானது மானுடவியல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர். இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலுக்கு வந்துள்ளன. இதே போல நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளன. https://thinakkural.lk/article/318600
  4. யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அக்ஷயன் பிரபாகரன் உயிரிழப்பு Published By: VISHNU 01 JUN, 2025 | 10:19 PM யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிக்சை பிரபாகரன் அக்ஷயும் சிகிச்சைகள் பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி ஒமந்தையில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்திருந்தார். ஏற்கனவே இந்த விபத்தில் யாழ்.இந்தியதுணைத்தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரன் உயிரிழநதிருந்தார். அவருடைய மனைவியாரான பிரபாகரன் சீதாலச்சுமி மற்றும் மாமனார் ஆகியோர் தொடாந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/216291
  5. தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு Published By: VISHNU 01 JUN, 2025 | 08:40 PM உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216288
  6. Published By: VISHNU 01 JUN, 2025 | 08:04 PM குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216285
  7. 01 JUN, 2025 | 05:19 PM கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216271
  8. தொடரும் ஊடக அச்சுறுத்தல் ; படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் அநுர அரசும் பாராமுகம் - இரா.மயூதரன் 01 JUN, 2025 | 03:30 PM ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் பாராமுகமாக செயற்பாட்டு வருகின்றமையே காரணம் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் சனிக்கிழமை (31) மாலை இடம்பெற்ற, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரை நிகழ்த்திய யாழ். வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சியை சேர்ந்த நடேசன் அவர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த நிலையில் தென் தமிழீழ மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்டு ஊடக செயற்பாட்டின் மூலம் துணநின்றவர். அதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் ஓய்ந்து ஒதுஙகாது இறுதி மூச்சு உள்ளவரை ஊடகப்பணி ஆற்றியவர் நடேசன் அண்ணா. இறுதியாக இதே நாளில் 2004 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச படைகளோடு சேர்ந்தியஙகிய துணை ஆயுத குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு தமிழர் தாயகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளரகள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலியகொட உள்ளிட்ட சிங்கள ஊடகவியலாளர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகிறது. அன்று ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் இன்று வன்முறை வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயராலும் தாக்குதல்கள், விசாராணகள் என்ற வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன. அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று ஆறு மாதங்களை கடந்துள்ள போதிலும் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாராமுகமாக செயற்பட்டுவருகின்றது. பல தசாப்தங்கள் கடந்தும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்கின்றமைக்கு முன்னைய படுகொலைகள் உள்ளிட்ட அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் நிதியான விசாரணை எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அது மாத்திரமல்லாது அவற்றுடன் தொடர்புடையவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் இதே நிலை தொடர்கின்றமையே ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் இன்றும் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது. இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குள்ளாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. சர்வதேச விசாரணை மூலமே உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு பாரபட்சமற்ற முறியில் நீதியின் முன் நிறுத்தப்பட முடியும் என்பது யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஆணித்தரமான நிலைப்பாடு ஆகும். அந்த வகையில் தற்போது அமைந்துள்ள அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆவது அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக ஊடகத்துறையின் சுயாதீனத்தன்மையினை உறுதிசெய்யுமாறு இன்றைய நாளில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/216258
  9. Published By: VISHNU 01 JUN, 2025 | 08:44 PM ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216289
  10. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீறுகின்ற சட்டவிரோத தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை அதிர்ச்சி அளிக்கும் – வெட்கக்கேடான செயல் ஆகும். 1. ஒன்று இத்தீர்மானத்தின் அடிப்படை தவறுகள். 2. இத் தீர்மானம் செயற்படுத்த முடியாத ஒன்று. இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபை நிரல். ஒன்பதாம் அட்டவணையின் 11ஆம் பிரிவின் முதல் (11.1) பகுதியின் பிரகாரம்; ‘போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர, பொது மருத்துவமனைகள் யாவையும், கிராமிய மருத்துவமனைகளையும் மகப்பேற்று மருத்துவமனைகளையும் தாபித்தலும் பேணுதலும்’ மாகாண சபைக்கு உரித்தானது. இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? இக்கூட்டத்தில் ஒருவர் கூட இது அரசியல் யாப்பை மீறும் செயல். இது மாகாண சபை அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய தீர்மானத்தை இயற்றுவது சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்ததாக தகவல் இல்லை. மேலும் இத்தீர்மானத்தை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றளவில் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இத் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் யாப்புக்கு முரணாக ஜனாதிபதியால் கூட செயல்பட முடியாது. எனவே இத்தீர்மானம் நடவடிக்கைக்குதவாத ஒன்று என்பதை கூட இங்கிருந்த அதிகாரிகள் புரிந்து கொள்ளாமை அவர்களது ஆற்றல், ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறது. இவை அனைத்துக்கும் மேலாக இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். கிடைக்கப்பெறும் தகவல்களின்படி செல்வம் அடைக்கலநாதன் இங்கிலாந்தில் இருப்பதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; மருத்துவரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சத்தியலிங்கம் கலந்து கொள்ளவில்லை; ரவிகரன் மட்டுமே கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. ஏனையோர் தமிழ் தேசியப் பரப்பு சாராத ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஸ்தானுமே. இங்கு இத்தீர்மானத்தை எதிர்த்து, மாகாண அதிகாரங்களை மத்தியிடம் தாரை வார்க்கும் இத்தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்தினால் பெறப்பட்ட அதிகாரங்களை வேண்டாம் என்று மீழளிக்கும், வெட்கம் கெட்ட செயற்பாடு என்பதை அறைந்து சொல்லி இருக்க வேண்டியவர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவிகரனே. ஆனால் ‘இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கும் ஓர் செயல்பாடாக பார்க்கப்படக்கூடும்’ என்று அச்சம் வெளியிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, மிகப்பெரும் போராட்டத்தால் பெறப்பட்ட மாகாண அதிகாரங்களை மத்திக்கு மீண்டும் வழங்குவதில் எனக்கு சிக்கல் ஏதும் இல்லை எனக் கூறும் இவர், எதைப் பெறுவதற்காக நாடாளுமன்றம் சென்றிருக்கிறார் என்பதற்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ‘இது மாகாணங்களின் அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதாக பார்க்கப்படக்கூடும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பார்க்கப்படக்கூடும் அல்ல இது மிகப்பெரும் தியாகங்களால் கிடைத்த அதிகாரம். இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இருப்பது போல் உள்ளது. மேலும் இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் வெட்கம் கெட்ட செயல் என்பது அவருக்குமே புரியவில்லையா? இவற்றை புரியாமல் நாடாளுமன்றத்தில் என்ன உரிமை கேட்பார்? இந்த அரசியல் யாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு மேலாக இங்கிருந்த உயர் மட்டத்தினர் எவருக்கும் 75 ஆண்டு காலத்துக்கு மேலாக தமிழ் மக்களும் தலைமைகளும் அதிகார பகிர்வுக்காகவே போராடினார்கள் என்பது தெரியாதா? அதற்காக எத்தனை லட்சம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டது என்பது தெரியாதா? இன்றும் 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தமிழ் தலைமைகளாலும் இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியாதா? இத்துணை தியாகங்கள் மத்தியில் பெறப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்தியிடம் வழங்குவது எமது கையாலாகத் தனத்தை எதிரியிடம் காண்பிக்கும் செயல் என்பது புரியாதா? அதிகாரப் பகிர்வு பற்றி தமிழ் தலைமைகளோ இந்தியாவோ ஆட்சியாளரிடம் பேசும்போது; வழங்கப்பட்டதையே திருப்பித் தருகிறார்கள். அவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரப் பகிர்வு தேவையில்லை. சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காகவே அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றனர் என்ற சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் பொய்யான – போலியான பிரசாரங்களுக்கு இது தீனி போடுவதாகும். விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது ஆகும். யாப்புக்கு முரணான சட்டவிரோதமான இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மீறி அதனை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் 650 வரையிலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்க மத்திய அரசு முனைந்த போது இது 13 வது திருத்தத்திற்கு முரணானது- சட்டவிரோதமானது என வழக்குத்தாக்கல் செய்து அவை நிறுத்தப்பட்டது போல் இதுவும் தடுக்கப்படும். வடக்கிலிருந்து 50 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மத்திய அரசு கையகப்படுத்த முனைந்தது. பல பாடசாலைகளின் அபிவிருத்தி குழுக்கள் இதற்காக செயல்பட்டனர். இது சட்டவிரோதமானது என்பது தெரிந்தே மத்திய அமைச்சர்கள் இதனை செயல்படுத்த முற்பட்டனர். ஆனால் இக்கட்டுரையாளர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்ததுடன், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து மாகாண கல்வி அமைச்சு செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்களுக்கு இவ்வனைத்து பாடசாலைகளிலும் உள்ள தேசிய பாடசாலை பெயர் பலகைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டமும் கைவிடப்பட்டது. மத்திய ஆட்சியாளர்கள் எவருக்கும் தமிழ் மக்களுக்கு அல்லது வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வது அறவே விருப்பம் இல்லாத ஒன்று. எவ்வாறு மாகாண சபையை ஒழித்துக் கட்டலாம் என திட்டங்கள் தீட்டும் இனவாத ஆட்சியாளர்களுக்கு நாமே வலிந்து உதவும் மோசமான செயற்பாடே இத்தீர்மானம். நெருப்பு வைக்கும் ராசாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரிகள் செயல்பாடு போன்றது இத் தீர்மானம். அடுத்து வரும் கூட்டத்தில் இத் தீர்மானத்தை மீள பெறுவது மட்டுமே ஓரளவான பிராயச்சித்தமாக அமையும். வைத்தியசாலையின் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்தல் என்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் கீழ் அன்றைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, மன்னார் வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக (தேசிய பாடசாலை போல்) பெயர் பலகை மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்தபோது அப்படியானால் நீங்களே அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என ஏதோ தனது வீட்டு பணத்தில் செலவு செய்வது போல் பதிலளித்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்; வடக்குக் கிழக்கில் வரிகளை வசூலிப்பதை மாகாண அரசிடம் விடுங்கள், எமது வைத்தியசாலைகளை நாமே பார்த்து கொள்கிறோம் என பதிலளித்திருந்தார். இவ்வாறு மத்திய மாகாணத்து குறித்தான அதிகாரங்களை பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே தக்கவைக்கப்படுகின்றன. ஆனால் இத்தீர்மானம் ‘நீங்கள் பறிக்க வேண்டாம்; நாங்களே தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருகிறோம்’ என்பதாக அமைந்துள்ளது. மாகாணத்திற்கு உரித்தான கல்வி அதிகாரத்தை தேசிய பாடசாலை என்கிற சட்டவிரோத யாப்பு விரோத கருத்துருவாக்கத்தின் ஊடாக பறிக்க முனைந்து சட்டப் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோன்று சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த வன்னி மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை மதிக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை மனதில் நிறுத்தி எதிர்கால செயற்பாடுகள் அமைந்தால் மட்டுமே தமிழினம் உரிமைகளுடனும் அதிகாரத்துடனும் வாழ முடியும். அதிகாரத்துடன் வாழ்வதா? அடிமையாக வீழ்வதா? தேவை சிந்தனைத் தெளிவு. https://thinakkural.lk/article/318640
  11. கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என்னை டெல்லி அழைத்து வந்த கணவர் இப்போது இல்லை. மகனும் இறந்து விட்டார். இப்போது வீட்டை இடித்து விட்டார்கள். நான் எங்கே செல்வேன்?" என்கிறார் கண்ணம்மா. கடலூர் மாவட்டம் விருத்தசாலத்தைச் சேர்ந்த 70 வயதான கண்ணம்மா அவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்ததால் அவருடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறினார். அன்று முதல் டெல்லியே அவரது நிரந்த முகவரி ஆனது. சொந்த ஊரில் தனக்கென யாரும் இல்லை எனக் கூறும் கண்ணம்மா, தன்னால் அரசு கூறும் புதிய இடத்தில் வாழ முடியுமா என கவலையுடன் யோசிக்கிறார். புதுடெல்லியில் உள்ள ஜங்புராவில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்பில் சுமார் 370 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டன. நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வசித்த சுமார் 189 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பங்கள் வீடுகளைப் பெற தகுதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் புதிய இடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். புதுடெல்லியில் உள்ள ஜங்புரா பகுதிக்கு நாங்கள் சென்ற போது, காலை 8 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணியை தெற்கு டெல்லி மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொக்லைன் எந்திரங்கள் வீடுகளை இடிக்கும் முன்னதாக போது வீடுகளிலிருந்து மின்சார மீட்டர்கள், போன்றவற்றை மின்துறை பணியாளர்கள் அகற்றிவிட்டு வெளியேறினர். பொதுமக்கள் யாரும் இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். கேள்விக்குறியாகும் கல்வி படக்குறிப்பு, மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த ரந்தன் டெல்லி ஜங்புராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரந்தன் 10ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவரது தலைமுறையில் முதன்முறையாக தனது குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் ரந்தன் குமார், தற்போது மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என அச்சப்படுகிறார். ஆனால் தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக தமது குழந்தைகளை உருவாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார் ரந்தன். "எனது மகன் 7வது வகுப்பு படிக்கிறார், மகள் 3 ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் இங்கு லோதிபார்க் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் இங்கிருந்து புதிதாக வீடுகள் வழங்கப்படும் நரேலா பகுதிக்கு சென்றால் அங்கிருந்து பள்ளிக்கு வரவே 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது வரும்" என்கிறார் ஜங்புராவில் வசித்து வரும் ரந்தன். இவரது மகன் "ஞாலம் கருதினுங் கைகூடுங்" என்ற திருக்குறளை மனப்பாடமாக கூறினார். "வருவாய் ஆதாரம் பறிபோகும்" படக்குறிப்பு, "புதிய வசிப்பிடத்தினருகே தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை" ஜங்புரா மதராசி கேம்ப்பில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று பணிகளைச் செய்கின்றனர். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கார்களை கழுவும் பணிக்குச் செல்கின்றனர். கார் ஒன்றுக்கு மாதம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைப்பதாகவும் இதன் மூலம் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிவதாக சிவா என்பவர் குறிப்பிடுகிறார். இதுவே இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் தற்போது குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நரேலா பகுதிக்கு சென்றால் இந்த வாழ்வாதாரமே இல்லாது போய்விடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார். இதே போன்று பெண்களும் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர். சுற்றுவட்டார குடியிருப்புகளிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றால் வாழ்வாதாரம் எப்படி கிடைக்கும்? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிருந்தா என்ற பெண், தனது தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது போதுமான நேரம் கொடுக்கப்படாமல் தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். வீடுகளை இடிக்கும் பணிக்கு நடுவே பெண்களில் சிலர் தடுப்புகளை மீறி தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். "ஆக்கிரமிப்பு எனில் வீடு கட்ட அனுமதித்தது ஏன்?" படக்குறிப்பு, குடிசை அகற்றம் என கூறப்பட்டாலும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளே உள்ளன ஜங்புராவில் மதராசி கேம்ப் இடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுவது, இதன் அருகில் ஓடக் கூடிய பாராபுலா ஓடை தான். கடந்த 2024ம் ஆண்டு பருவமழையின் போது இந்த ஓடை நிறைந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆக்கிரமிப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஓடையின் குறுக்கே உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்தே தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த காலத்தில் அதிகாரிகளின் அலட்சியம் இதில் இருப்பதாக அங்கு வசிப்பவர்கள் குற்றம் சாட்டினர். பிபிசி தமிழிடம் பேசிய சரவணன் என்ற ஜங்புராவாழ் தமிழர், கடந்த ஆண்டு தான் 3 முதல் 4 லட்ச ரூபாய் செலவிட்டு தனது வீட்டைக் கட்டியதாக கூறுகிறார். குடிசை அகற்றம் என்று தான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்றுக்குமாறாக இங்கு அனைத்தும் காங்கிரீட் வீடுகளாக உள்ளன எனச் சுட்டிக்காட்டும் அவர் வீடு கட்டுவதற்காக தானே அதிகாரிகளுக்கு சுமார் 20,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு அரசின் வாக்குறுதி என்ன? படக்குறிப்பு,போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் "குடிசை எங்கோ, அங்கேயே வீடு" (aha Jhuggi Waha Makaan) என்ற வாக்குறுதியின் பேரில் டெல்லியில் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததாகக் கூறும் மக்கள், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மதராசி கேம்ப் எனக் குறிப்பிடப்படும் பகுதியிலிருந்து மேலும் 50 மீட்டர் வரையிலும், புறம் போக்கு நிலத்தில் தான் வீடு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கவில்லை என்பது அங்குவசிக்கும் மக்களின் புகாராக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய தெற்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) அனில் பங்கா," நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறினார். "பாராபுலா ஓடை ஆக்கிரமிப்புகள் காரணமாக மிகவும் குறுகிவிட்டது. கனழை பெய்யும் போது ஆக்கிரமிப்புகள் காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் இங்கு வீடுகள் இடிக்கப்பட்டு , நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார். "சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 189 குடும்பங்கள் மறுகுடியேற்றத்திக்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 181 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை" எனக் கூறினார். டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது. குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என ரேகா குப்தா அதில் கூறியுள்ளார். இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் டெல்லி "மதராசி கேம்ப்" குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாடு திரும்பி வர விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9q0e881lyvo
  12. உகந்தமலையில் புத்தர் சிலை இல்லை; கோடீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு சொந்தமான ஏழு ஏக்கர் பரப்பில் எந்த ஒரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை. யாரும் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். உகந்தமலை புத்தர் சிலை விவகாரம் ஊடகங்களில் வைரலாக எரிந்து வருகையில், இதுவரை மௌனம் சாதித்து வந்த அந்த மாவட்டத்திற்குரிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முதல் தடவையாக வாய் திறந்திருக்கிறார்.. அவரிடம் இவ்விவகாரம் பற்றி சனிக்கிழமை (31) கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் எனக்கு மக்களால் தெரிவிக்கப்பட்டது. இது உணர்வு பூர்வமான விடயம். கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக இதுவரை நான் ஒரு கருத்தும் கூறவில்லை. இன்று நான் அங்கு நேரடியாக சென்றேன். அங்கு ஆலய குருக்கள் முதல் வண்ணக்கர் வரை சந்தித்து கலந்துரையாடினேன். விளக்கம் கிடைத்தது. அதாவது குறித்த சிலை உகந்தமலை சூழலில் வைக்கப்படவில்லை என்பது. மாறாக, உகந்த மலைக்கு அப்பால் கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. அது அண்மையில் நிறுவப்படவில்லை. பல மாதங்களுக்கு முன்பே நிறுவப்பட்டது. அப்போது இந்த அறிக்கை வெளியிடும் சமூக செயற்பாட்டாளர்கள் எங்கே? இருந்தார்களோ தெரியாது. நிற்க, அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது என்பதை நேரடியாக அறிந்தேன். வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அச் சூழலில் மீன்வாடிகளும் உள்ளன. பெரும்பான்மையின மீனவர்கள் உள்ளனர். ஆனால், இதனை சில ஊடகங்களும் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் சிலரும் முண்டியடித்துக்கொண்டு வழமைபோல் அறிக்கை வெளியிட்டனர். அவ்வளவு தான். “உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என்று மக்கள் கோருகின்றனரே? கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறது? என்று மக்கள் கேட்கின்றனரே?” இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று எமது ஊடகவியலாளர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு கூறினார். உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்தது உண்மைதான். அதற்கு அதே மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருப்பதாக கூறுவது பொய். அபத்தம் கதிர்காமத்தை போல் உகந்தையையும் மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். https://thinakkural.lk/article/318626
  13. 👑">Miss World 2025 TOP 20 ANNOUNCEMENT 👑 Miss World 2025 Crowning Moment (HD)
  14. காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம் 01 JUN, 2025 | 12:50 PM காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். இறந்தவர்களினது உடல்களையும் காயமடைந்தவர்களையும் கழுதைவண்டிகளில் செஞ்சிலுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பெருமளவு பாலஸ்தீனியர்கள் அல்அலாம் சுற்றுவட்டத்தில் காணப்பட்டவேளை இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலில் ஈடுபட்டன என கரீப் என்ற உள்ளுர் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் நீண்டநேரம் நிலத்தில் விழுந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த பகுதிக்கு மீட்புபணியாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மக்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்தி காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 26 கொல்லப்பட்டுள்ளனர் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என செஞ்சிலுவை மருத்துவமனை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216250
  15. 01 JUN, 2025 | 04:20 PM ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (31) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மட்டு.ஊடக அமையம்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,வடகிழக்கு,தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் அமரர் நடேசனின் உருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களான நடராசா மற்றும் பெடிகமகே ஆகியோரினால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் சுடரை மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு தெற்கிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/216263
  16. 01 JUN, 2025 | 12:11 PM ஆர்.ராம் நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவித்தார். அத்துடன், அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதான நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் ஆனந்த விஜயபாலவைத்தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையத்தில் குடிவரவு, குடிகல்வு அதிகாரிகளால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை. அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன். அதேநேரம், இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களில் காணப்படுகின்ற ஏற்பாடுகளால் தான் இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. ஆனால் அகதிகளாக சென்றவர்களோ, புலம்பெயர்ந்தவர்களோ மீண்டும் நாடு திரும்பும் போது அவர்களைக் கைது செய்வது எமது அரசாங்கத்தின்கொள்கை அல்ல. அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும். அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன். ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். https://www.virakesari.lk/article/216242
  17. கட்டுரை தகவல் எழுதியவர், ஜீன் மெக்கன்ஸி பதவி, சியோல் பத்திரிகையாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடர்த்தியாக இருக்கும் முள்கம்பி வேலிகளாலும், நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினராலும் வட மற்றும் தென்கொரியாவின் எல்லை பிரிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையின் நடுவே ஆங்காங்கே வழக்கத்திற்கு மாறாக பெரிய, பச்சை நிறத்தில் ஒலிபெருக்கிகளும் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் ஒரு மதிய வேளையில் நான் வட கொரியாவில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து புரட்சிகரமான கருத்துகளை உதிர்க்கும் பாடல்கள் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தன. "நாங்கள் வெளிநாடு சென்றால், அது உத்வேகம் அளிக்கும்," என்று பொருள் தரக் கூடிய பாடல் ஒன்று பெண் ஒருவரின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. வட கொரியர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்ற அரசு முடிவை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பாடல் இருந்தது. வட கொரியாவில் இசைக்கப்படும் ராணுவ பிரசார பாடலின் இசையையும் என்னால் கேட்க முடிந்தது. வட கொரியாவும் தென் கொரியாவும் இன்னும் போரில் தான் இருக்கின்றன. ஆனால் ஆயுதங்கள் ஏந்தி நடத்தப்படும் போர் அல்ல. அமைதியான முறையில் அங்கே ஒரு மறைமுக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தென் கொரியா, வட கொரியாவுக்கு தகவல்களை அனுப்ப முயல்கிறது. ஆனால், வெளியில் இருந்து வரும் தகவல் மக்களிடம் சேராத வகையில் வட கொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் தடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். உலகிலேயே இணையம் ஊடுருவாத ஒரே ஒரு நாடாக வட கொரியா உள்ளது. தொலைக்காட்சிகள், ரேடியோ நிலையங்கள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. மறைமுக போர் "கிம் குடும்பம் குறித்து பரவி வரும் செய்திகளை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காரணம் கூறப்படுகிறது. ஆனால் மக்களிடம் அவர்கள் கூறும் பெரும்பாலான தகவல்கள் பொய்யாகவே உள்ளன," என்று கூறுகிறார் மார்டின் வில்லியம்ஸ். அவர் வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் ஸ்டிம்சன் மையத்தில், வட கொரிய தகவல் மற்றும் தொழில்நுட்ப நிபுணராக இருக்கிறார். வடகொரியாவில் இத்தகைய பொய்களை மக்களிடம் வெளிச்சமிட்டால், அங்கு ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற எண்ணம் தென் கொரியாவில் உள்ளது. இதற்காக தென்கொரிய அரசாங்கம் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று தான் ஒலிபெருக்கி. ஆனால் இதற்கு பின்னால், மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு இயக்கம் உருவாகியுள்ளது. தகவல் ஒளிபரப்பும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்புகள் மூலமாக தகவல்கள் வட கொரியாவுக்குள் நள்ளிரவில் அனுப்பப்படுகிறது. இவை குறு மற்றும் நடுத்தர ரேடியோ அலைகள் வழியாக, வட கொரியர்கள் ரகசியமாக கேட்கும் வகையில் செய்திகளாக ஒலிபரப்பப்படுகின்றன. ஆயிரக்கணக்கான யூ.எஸ்.டி. டிவைஸ்கள், மைக்ரோ எஸ்-டி கார்டுகள் ஒவ்வொரு மாதமும் எல்லையில் கடத்தப்படுகின்றன. தென்கொரிய படங்கள், டிவி நாடகங்கள், பாப் பாடல்கள், செய்திகள் உள்ளிட்ட வெளியுலக தகவல்கள் பலவும் அந்த கருவிகள் மூலம் வட கொரியாவுக்குள் அனுப்பப்படுகின்றன. இவை அனைத்தும் வட கொரியாவின் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டவை. இந்த விவகாரத்தில் வடகொரியாவின் கைகள் தற்போது ஓங்கி வருவதால், களத்தில் பணியாற்றும் நபர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த தகவல்களுடன் பிடிபடுபவர்களை கிம் கடுமையாக தண்டிக்கிறார். வருங்காலத்தில் இப்பணியை மேற்கொள்வதும் சிக்கலாகியுள்ளது. இந்த பணிக்கான நிதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வந்தது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிதி அளிப்பை குறைத்துள்ள காரணத்தால் இப்பணி சிக்கலாகியுள்ளது. அப்படியென்றால், நீண்ட காலமாக தொடரும் தகவல் போரில் இரு தரப்புகளின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பி.டி.எஸ். இசைக்குழுவினர் பாப் பாடல்கள், சினிமா ஒவ்வொரு மாதமும், தென்கொரியாவில் இயங்கி வரும் யூனிஃபிகேஷன் மீடியா குழு (UMG) என்ற லாப நோக்கமற்ற அமைப்பானது, சமீபத்திய செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை தரம் பிரித்து, வட கொரியாவின் அரசியல் சூழலுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை தயார் செய்கிறது. பிறகு அவற்றை முறையே தகவல் பரிமாற்ற கருவிகளில் ஏற்றி, ஆபத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் வகைப்படுத்துகிறது. ஆபத்து குறைவான கருவி என்றால், அதில் தென் கொரிய படங்களும், பாப் பாடல்களும் இருக்கும் என்று அர்த்தம். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில், தென் கொரிய பாடகர் மற்றும் ராப் இசைக்கலைஞர் ஜெனி நடிப்பில் வெளியான "வென் லைஃப் கிவ் யூ டேங்கரின்ஸ்" என்ற வலைத்தொடரையும் இந்த பட்டியலில் இணைத்துள்ளனர். அதிக ஆபத்து கொண்ட அல்லது அதிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய கருவிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தால், அதில் கற்றல் திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். வட கொரியர்களுக்கு ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் அதில் வழங்கப்படுகின்றன. இது தான் கிம்மிற்கு அதிக அச்சத்தை அளிக்கும் உள்ளடக்கமாக கருதப்படுகிறது. வகைப்படுத்தப்பட்ட கருவிகள், பிறகு சீன எல்லைக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே இந்த நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் மூலமாக, ஆற்றைக் கடந்து, அதிக ஆபத்துகளை தாண்டி வடகொரியாவுக்குள் அவை கொண்டு செல்லப்படுகின்றன. தென் கொரிய டிவி நாடகங்கள் மிகவும் இயல்பானவை. சராசரி மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள், வேகமாக இயக்கப்படும் கார்கள், உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள் என்று இயல்பான காட்சிகளைக் கொண்டவை அவை. ஆனால் இது அவர்களின் சுதந்திரமாக செயல்படுவதைக் காட்டுகிறது. வடகொரியா எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. தென் கொரியா மிகவும் ஏழ்மையான நாடு, அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்று கிம் தன் நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ள தவறான பிம்பத்தை இந்த படங்களும் நாடகங்களும் கேள்விக்குள்ளாக்குகின்றன. "இந்த நிகழ்ச்சிகளை பார்த்து கண்ணீர் விட்ட சில மக்கள், முதல்முறையாக அவர்களின் வாழ்க்கை குறித்த சொந்த கனவுகள் பற்றி சிந்தித்ததாக தெரிவித்தனர்," என்று யூனிஃபிகேஷன் மீடியா குழுவின் இயக்குநர் லீ க்வாங்க்-பீக் தெரிவிக்கிறார். எத்தனை நபர்களுக்கு இந்த தகவல்கள் சென்று சேர்கின்றன என்பதை கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் அந்த நாட்டைவிட்டு வெளியேறியவர்களிடம் இருந்து சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, தென் கொரியாவில் இருந்து அனுப்பும் தகவல்கள் பரவுகின்றன. அதன் தாக்கம் உணரப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. "நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் மற்றும் அகதிகள், இந்த உள்ளடக்கங்கள் தான் அவர்களை நாட்டு விட்டு வெளியேறுவதற்கு உத்வேகம் அளித்தது என்று கூறுகின்றனர்," என்கிறார் சொகீல் பார்க். அவருடைய 'லிபர்டி இன் நார்த் கொரியா' என்ற அமைப்பு, தென் கொரியாவில் இருந்து கடத்தப்பட்ட தகவல்களை வட கொரிய மக்களுக்கு பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளோ, மாற்றுக் கருத்து கொண்டவர்களோ வட கொரியாவில் இல்லை. அங்கே ஒன்று கூடி போராட்டம் நடத்துவதும் அபாயகரமானது. ஆனால் சிலர் தனிமனித நடவடிக்கைகள் மூலம் எதிர்ப்பை காட்டுவார்கள் என்று நம்புவதாக பார்க் கூறுகிறார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,தென் கொரிய டிவி நாடகங்கள் மிகவும் இயல்பானவை. சராசரி மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை வெளிப்படும் ஒன்றாக இருக்கும். வட கொரியாவில் இருந்து தப்பிப் பிழைத்தல் 24 வயதான காங்க் க்யூரி வட கொரியாவில் வளர்ந்தவர். அவர் அங்கே மீன்பிடி தொழில் செய்து வந்தார். 2023-ஆம் ஆண்டு அவர் தென் கொரியாவுக்கு படகு மூலம் தப்பித்து வந்தார். "மிகவும் அழுத்தமாக உணர்ந்தேன். பிறகு ஒரு நாள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது," என்று கூறும் அவர், வெளிநாடுகளில் எடுக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் அந்த முடிவை எடுக்க ஒரு உந்து சக்தியாக இருந்தன என்று கூறுகிறார். சியோலில் ஒரு பூங்காவில் அவரை கடந்த மாதம் சந்தித்த போது, சிறு வயதில் அவர் அம்மாவுடன் அமர்ந்து ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்ததை நினைவு கூறுகிறார். 10 வயது இருக்கும் போது கொரிய நாடகங்களை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார் க்யூரி. பிற்காலத்தில் பழங்களை ஏற்றி வரும் அட்டைப் பெட்டிகளில் யூ.எஸ்.பி மற்றும் எஸ்.டி. கார்டுகள் கடத்தி வரப்படுவதை அறிந்தார். அவர் அதில் இருந்து கிடைத்தவற்றை அதிகமாக பார்க்க நேர்ந்த போது, அவருடைய அரசாங்கம் அவரிடம் பொய் கூறுகிறது என்பதை உணர்ந்தார். "அரசாங்கம் எங்களை ஒடுக்குவது என்பது மிகவும் இயல்பானது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மற்ற நாட்டினரும் இப்படியான கட்டுப்பாடுகளுடன் தான் வாழ்கின்றனர் என்று நினைத்தேன். ஆனால் வட கொரியாவில் மட்டுமே அந்த நிலை நிலவுகிறது என்பது பின்னர் புரிந்தது," என்று அவர் விளக்கினார். அவருக்குத் தெரிந்த அனைவரும் தென்கொரிய நாடகங்களை பார்த்து ரசித்துள்ளனர். அவரும் அவருடைய நண்பர்களும் தங்களிடம் இருக்கும் படங்களை கைமாற்றிக் கொள்வார்கள். "நாங்கள் பிரபலமடைந்த நாடகங்கள், நடிகர்கள், அழகாக இருக்கும் பி.டி.எஸ். இசைக்குழுவின் சில உறுப்பினர்கள் பற்றியும் பேசிக் கொள்வோம்." "தென்கொரியாவின் பொருளாதாரம் எப்படி வளர்ந்துவிட்டது என்பது குறித்தும், வட கொரிய அரசை எங்களால் விமர்சிக்க இயலவில்லை என்பது குறித்தும் நாங்கள் நிறைய பேசியதுண்டு." இந்த நாடகங்கள் க்யூரி மற்றும் அவரின் நண்பர்கள், பேசுவது நடந்து கொள்வது உட்பட அனைத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. "வடகொரிய இளைஞர்கள் வேகமாக மாறி வருகின்றனர்." படக்குறிப்பு,நாட்டை விட்டு வெளியேறும் உத்வேகத்தை தென் கொரிய படங்கள் மற்றும் நாடகங்கள் அளிக்கின்றன என்று இளைஞர்கள் கருதுகின்றனர் தண்டனைகள் இத்தகைய நடவடிக்கையால் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்று கிம்-ஜோங் -உன் உணர்ந்திருக்கிறார். அதனால் இத்தகைய போக்குகளுக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் போது சீனாவுடனான எல்லைப் பகுதியில் மின்சார வேலி அமைத்து, தகவல் கடத்தப்படுவதை கடினமாக்கினார். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பது மற்றும் பகிர்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரித்து 2020-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றினார். இத்தகைய உள்ளடக்கத்தை விநியோகிக்கும் நபர்கள் சிறையில் அடைக்கப்படலாம், அல்லது கொல்லப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உடலை சில்லிட வைக்கும் தாக்கத்தை கொண்டுள்ளது. "இந்த படங்கள் பொதுவாக சந்தைகளில் கிடைக்கும். மக்கள் அதனை விற்பனை செய்வார்கள். ஆனால் தற்போது, இத்தகைய உள்ளடக்கங்களை நீங்கள் நம்பும் நபர்களிடம் இருந்தே வாங்குவீர்கள்," என்று கூறுகிறார் லீ. இந்த சட்டமும், தேடுதல் நடவடிக்கையும் அமலுக்கு வந்த பிறகு க்யூரியும் அவருடைய நண்பர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். "இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு நாங்கள் பேசிக் கொள்வதில்லை. நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தாலும் கூட, இது மிகவும் ரகசியமாக இருந்தது," என்று அவர் ஒப்புக்கொண்டார். தென் கொரிய உள்ளடக்கங்களுடன் பிடிபட்ட வட கொரிய இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து நன்றாக அறிந்திருப்பதாக கூறுகிறார் அவர். சமீபத்தில் கொரிய நாடகங்கள் பார்ப்பது மட்டுமின்றி அது தொடர்புடைய நடவடிக்கைகளையும் கிம் கண்டித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு தென் கொரிய பேச்சுவழக்கில் இருக்கும் சொற்றொடர்களை பேசுவதையும், அவர்களின் உச்சரிப்பில் பேசுவதையும் குற்றம் என்று அறிவித்தார் கிம். தென் கொரிய உள்ளடக்கங்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக சோதனை மேற்கொள்ள படைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் சாலைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். இளைஞர்களின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிப்பார்கள். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு, தென் கொரிய பெண்களைப் போன்று சிகை அலங்காரம் மற்றும் உடைகள் உடுத்தியிருப்பது தொடர்பாக பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக க்யூரி பிபிசியிடம் தெரிவித்தார். தென் கொரிய உள்ளடக்கங்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள இப்படையினர் அவரின் போனை வாங்கி சோதனை நடத்தினார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். 2024-ஆம் ஆண்டு வடகொரிய செல்போன் ஒன்று அந்த நாட்டில் இருந்து டெய்லி என்.கே என்ற செய்தி சேவை நிறுவனத்தால் கடத்தப்பட்டது. இந்த செய்தி நிறுவனம் சியோலைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூனிஃபிகேஷன் மீடியா குழுவின் செய்தி சேவைப் பிரிவாகும். அந்த போனை சோதனைக்கு உட்படுத்திய போது, தென்கொரிய வார்த்தை ஒன்றை உள்ளீடாக செலுத்தினால் அது திரையில் தோன்றாமல் மறைந்து வட கொரிய வார்த்தை தெரியும் வகையில் போன் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. வடகொரிய மக்களுக்கு போதிக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளில் ஸ்மார்ட்போன்கள் ஒன்றாகிவிட்டன என்று வில்லியம்ஸ் கூறுகிறார். தகவல் பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை வட கொரியா தீவிரமாக மேற்கொண்டு வருவதால் இந்த தகவல் போரில் வட கொரியாவின் ஆதிக்கம் தற்போது அதிகமாகியுள்ளது என்று அவர் நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வட மற்றும் தென்கொரியாவின் எல்லை கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது டிரம்ப் ஆட்சியின் தாக்கம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டது. இதனால் பாதிப்புக்கு ஆளான அமைப்புகளில், வட கொரிய மக்களுக்கு தகவல் பரிமாறும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைப்புகளும் அடங்கும். இரண்டு செய்தி சேவைகளான ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான நிதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா "தீவிரமாக" இருப்பதாகவும், டிரம்பிற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். தீவிர பிரசாரம் செய்பவர்களுடன் வரி செலுத்துபவர்களின் தொடர்பு துண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று மீண்டும் ஆட்சிக்கு வந்த போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் சியோலைச் சேர்ந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஹெர்மன், "வட கொரிய மக்களுக்கு வெளியுலகத்தைக் காண கிடைத்திருக்கும் வெகு சில வாய்ப்புகளில் இதுவும் ஒன்று. தற்போது எந்தவிதமான விளக்கமும் இன்றி இது அமைதியாக்கப்பட்டது," என்று அவர் கூறினார். யூனிஃபிகேஷன் மீடியா குழு, தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டிருப்பது நிரந்தர முடிவா என்பதை அறிந்து கொள்ள இன்னும் காத்துக் கொண்டிக்கிறது. லிபர்டி இன் நார்த் கொரியாவின் பார்க் இது குறித்து பேசும் போது, டொனால்ட் டிரம்ப் 'தற்செயலாக' கிம்மிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் என்று கூறுகிறார். இது குறுகிய பார்வை கொண்ட ஒரு நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார். வடகொரியாவில் அணு ஆயுதங்களை குவிப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிடும் அவர், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடை, ராஜாங்க மற்றும் ராணுவ அழுத்தம் போன்றவை, அணு ஆயுத குறைப்பை ஊக்குவிக்கவும் தகவல் பரிமாற்றமே சிறந்த கருவி என்பதை நிரூபிக்கவும் தவறிவிட்டது என்று விளக்குகிறார். நாங்கள் வட கொரியாவின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கான தீர்வைக் காண விரும்புகிறோம். "அதனை செய்ய நாட்டின் தன்மையை மாற்ற வேண்டும்," என்று கூறுகிறார் அவர். "நான் அமெரிக்காவின் ஜெனரலாக இருந்திருந்தால், "இதற்கு ஆகும் விலை என்ன? நம்முடைய வளத்தை இப்படி ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்தலாம் என கூறியிருப்பேன்." பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,வட கொரிய மக்களுக்கு வெளியுலகத்தைக் காண கிடைத்திருக்கும் வெகு சில வாய்ப்புகளையும் டிரம்பின் நிர்வாகம் மூடிவிட்டது என்று குற்றம்சாட்டுகிறார் ஸ்டீவ் ஹெர்மன் இனி யார் நிதி அளிப்பார்? இந்த பணிகளுக்கான நிதியை யார் வழங்குவார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதை ஏன் அமெரிக்கா மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. தென்கொரியா இதற்கான நிதியை வழங்கலாம் என்று கூறினாலும், வட கொரிய விவகாரம் அதிகமாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தாராளவாத எதிர்க்கட்சி வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கிறது. இது தகவல் பரிமாற்ற போருக்கான தடையாக பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இக்கட்சியின் வேட்பாளர், தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். இருப்பினும் பார்க் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். "நல்ல விசயம் என்னவென்றால் தற்போது வட கொரிய அரசு, ஏற்கனவே மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெற இயலாது," என்று சுட்டிக்காட்டுகிறார். தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால், தகவல்களை பரப்புவது இனி எளிமையாகிவிடும் என்று நம்புகிறார் அவர். "நீண்ட காலத்தை கருத்தில் கொண்டால், இது வட கொரியாவை மாற்றும் ஒரு அம்சமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்." - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj41y8ve7no
  18. 01 JUN, 2025 | 12:10 PM (நமது நிருபர்) மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்கவேண்டும். மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. 1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம். குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது, ஆளுந்தரப்பில் பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம். அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட. வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முனனெடுக்கப்பட்டன. குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம். அதேபோன்று, 1000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம் எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம். இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல் அபிலாஷைகளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது. எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/216234
  19. தாய்லாந்து பெண் உலக அழகியாக தேர்வு - இந்தியாவின் நந்தினி எந்த இடத்தை பிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலக அழகியாக தேர்வான ஒபல் சுசாதா சௌசி. 1 ஜூன் 2025, 02:38 GMT இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுசாதா சௌசி பட்டம் வென்றுள்ளார். இதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் மே 31, சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மே 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் பல்வேறு நாட்டில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். 1951-ஆம் ஆண்டு முதல் 'ப்யூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,OPAL SUCHATA/ FB படக்குறிப்பு,1951-ஆம் ஆண்டு முதல் 'ப்யூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூதராக விருப்பம் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக படித்து வரும் ஒபல் சுசாதா சௌசி, ஒரு நாள் தூதுவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்காலத் திட்டம் பற்றி பேசியதாக மிஸ் வேர்ல்ட் இணைய தளம் தெரிவிக்கிறது. மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அவர். ஒபல் அவருடைய வீட்டில் 16 பூனைகள் மற்றும் 5 நாய்களை வளர்த்து வருகிறார். பட மூலாதாரம்,OPAL SUCHATA/ FB படக்குறிப்பு,மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர்கள் யார்? தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா, எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹஸெட் டெரிஜி, போலந்தைச் சேர்ந்த மஜா லாஜா, மார்டினிகைச் சேர்ந்த ஆரேலியா ஜோச்சேம் என இந்த நான்கு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஒபல் உலக அழகிப் பட்டத்தை வென்றார். எத்தியோப்பியாவின் டெரிஜி இரண்டாம் இடத்தையும், லாஜா மூன்றாம் இடத்தையும் ஜோச்சேம் நான்காம் இடத்தையும் பிடித்தனர். பட மூலாதாரம்,MISS WORLD/FB படக்குறிப்பு,ஒபல் உலக அழகிப் பட்டத்தை வென்றார். எத்தியோப்பியாவின் டெரிஜி இரண்டாம் இடத்தையும், லாஜா மூன்றாம் இடத்தையும் ஜோச்சேம் நான்காம் இடத்தையும் பிடித்தனர். 108 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்கள் 108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். முதல்சுற்று போட்டிகளுக்குப் பிறகு, அமெரிக்காஸ் கரீபியன், ஆப்ரிக்கா, ஐரோப்பியா, ஆசியா-ஓசினியா என்று ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் மூன்று கட்டங்களாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பங்கேற்றனர். காலிறுதிப் போட்டியின் முதல் சுற்று கடந்த ஞாயிறு அன்று நிறைவுற்றது. ஒவ்வொரு கண்டத்திலும் இருந்தும் தலா 10 நபர்கள் என்று தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 40 போட்டியாளர்களில், காலிறுதிக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்கள் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். பட மூலாதாரம்,IPR TELANGANA படக்குறிப்பு,108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட ஐந்து நபர்களில் முதல் இடம் பிடித்த இரண்டு நபர்கள் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, ஏற்கனவே ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலக அழகிப் பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா. பட மூலாதாரம்,IPR TELANGANA படக்குறிப்பு,சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலக அழகிப் பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா. கேள்வி எழுப்பிய நடுவர்கள் இறுதிச் சுற்றில் நடுவர்கள், போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர். நம்ரதா ஶ்ரீரோத்கர் போலந்தின் லாஜாவிடம் கேள்வி எழுப்பினர். தகுபதி ராணா எத்தியோப்பிய போட்டியாளரிடமும், முன்னாள் உலக அழகிப் பட்டம் பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார் மார்டினிக் போட்டியாளரிடமும், சோனு சூட் தாய்லாந்து போட்டியாளரிடம் கேள்விகள் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா சார்பில் பங்கேற்ற போட்டியாளர் நந்தினி குப்தா, முதல் 20 இடங்களில் இடம் பிடித்திருந்தார். ஆனால் இறுதிச்சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை. பட மூலாதாரம்,IPR TELANGANA படக்குறிப்பு,இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போட்டியாளர்கள் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d10v20p43o
  20. 01 JUN, 2025 | 10:57 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன. அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார். வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது, இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/216228
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "அதிகாலையே உடம்பு சரியில்லை என என்னையும் அவரது மகனையும் அவரின் அறைக்கு அழைத்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, மூச்சுத் திணறல் இருந்தது எனக் கூறினார். நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை வீட்டிலேயே பரிசோதித்துப் பார்த்தார். நான் மருத்துவரை அழைத்து வரச் சென்றேன். ஆனால் பாதி வழியிலே உடல்நிலை சீராகிவிட்டது, வேண்டாம் என திரும்பி வந்துவிடச் சொன்னார். நான் வீட்டிற்கு வந்தபோது அவரின் நண்பரான சித்த மருத்துவர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டே இரண்டு மணி நேரம் கால தாமதம் செய்துவிட்டார். அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் வழியிலே இறந்துவிட்டார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்" என்றார். இந்த நிகழ்வு மருத்துவ சிகிச்சையில் கோல்டன் ஹவரின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கோல்டன் ஹவர் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிகிச்சை வழங்குவதற்கான நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நோய் அல்லது மருத்துவம் தேவை என்கிற நிலை ஏற்படுகிற போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை வழங்கிவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது. கோல்டன் ஹவர் என்பது ஒவ்வொரு நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோல்டன் ஹவர் என்பது சாலை விபத்து தொடங்கி இதய நோய், பக்கவாதம் மற்றும் பிரசவம் வரை அனைத்துக்கும் பொருந்தும் என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி. முதலுதவி வழங்குவதில் தொடங்கி முறையான சிகிச்சைக்கு பரிந்துரைப்பது வரை அனைத்துமே கோல்டன் ஹவர் என்று தெரிவித்தார் அவர். இதனை மேலும் விவரித்தவர், "கோல்டன் ஹவர் என்பது சுய விழிப்புணர்வில் இருந்தே தொடங்குகிறது. ஒருவர் தனக்கு உடல்நிலை மோசமடைகிறது என உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சுய பரிசோதனை அல்லது சிகிச்சை செய்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்" என்றார் அவர். முதலுதவியின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது என்கிறார் குழந்தைசாமி. "ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று வைத்துக் கொண்டால் முதலாவதாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்ஸில் உள்ளவர்கள் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உடனடி சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கோல்டன் ஹவரில் தான் வருகின்றன." "இதனை மருத்துவத் துறையில் Right side error, Wrong side error என அழைப்பார்கள். ஒருவர் தான் நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து பார்க்கிறார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு எந்தத் தீவிரமான பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தால் அது Right side error ஆகும். அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டுள்ளார். இதற்கு ஆகின்ற நேரம் மற்றும் செலவை விரயமாக கருதக்கூடாது." "அதே நேரம் ஒருவர் தனக்கு பெரிய பாதிப்பு இல்லை என எண்ணி சிகிச்சை எடுக்காமலோ அல்லது மருத்துவமனைக்குச் சொல்லாமலோ தவிர்த்து அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதனை Wrong side error என்பார்கள். முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்றார். உடன் இருப்பவர்களின் பங்கு என்ன? உடல்நலக் குறைவு ஏற்படுகிறபோது பாதிக்கப்படுவரால் துரிதமாக முடிவெடுக்க முடியவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதும் கோல்டன் ஹவரில் தான் அடங்கும் என்றார் குழந்தைசாமி. "உதாரணத்திற்கு ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என்றால் அவரை நடக்க வைக்கக்கூடாது. பரவலாக ஏற்படுகிற நோய் பாதிப்புகளின் போது என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும். அது தாமதமாகிறது என்றால் உடனடியாக சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியுமா என்பதைப் பார்க்க முடியும். எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமோ செல்ல வேண்டும்" என்றார். பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்னைகள் ஏற்படுகிறபோது தான் கோல்டன் ஹவர் முக்கியமாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிற போது நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார் நரம்பியல் மருத்துவரான சதிஷ்குமார். "ஒவ்வொரு நிமிடமும் 1.9 மில்லியன் செல்கள் செயலிழக்கும். நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பேச்சுத்திறன், சிந்திக்கும் திறன் பாதிப்படைந்துவிடும். இந்த நிலை தீவிரமடைந்தால் மூளை ரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பாதிப்பு ஏற்படாமல் சரி செய்துவிட முடியும்." "அதற்கு முன் முழுமையாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் எங்கு இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்காது. இதில் உடனடி மரணம் ஏற்படுவது அரிதென்றாலும் நாள்பட்ட பாதிப்புகள் உருவாகும். 30-40 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கான சுகாதாரப் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டு தொடக்க நிலையிலே கண்டறிந்தால் எளிதாக சரி செய்துவிட முடியும்" என்றார். மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மாரடைப்பு ஏற்படுகிறபோது ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்கிறார் இதயவியல் மருத்துவரான மதன் மோகன். மாரடைப்பு என்பது ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுகிறபோது வருகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் செல்லாத சதைகளில் வலி உருவாகும். ரத்தத்தை உந்தி செலுத்தும் திறன் குறைந்து இதய தசைகள் இறந்துபோக ஆரம்பிக்கும். எனவே ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மாரடைப்பு சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை அடங்கும். மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தக் கட்டை முறிக்கிற மருந்து வழங்கப்பட வேண்டும். மிகவும் தீவிரமான நிலை என்றால் ஆஞ்சியோகிராம் வரை செல்லும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான மருந்துகள் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c787vq23xpxo
  22. 01 JUN, 2025 | 10:11 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது. இதன் பிரகாரம் பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதன் பிரகாரம், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் ஆளும் கட்சியின் உள்வீட்டு மோதல்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இருப்பினும் ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடின்மையை சரிசெய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216216
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே. கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 1 ஜூன் 2025, 02:13 GMT உலகின் மிகவும் சவாலான விஷயங்களுள் ஒன்று, எவரெஸ்ட் மலை உச்சியை ஏறி அடைவது. தற்போது வரை வெகு சிலரே இதனைச் சாதித்துள்ள நிலையில் பலர் இந்த ஆபத்தான மற்றும் சவால் நிறைந்த பயணத்தில் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 330-க்கும் அதிகமானோர் இத்தகைய பயணங்களில் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. 1953-ம் ஆண்டு தான் முதல் முறையாக மனிதர்களால் எவரெஸ்ட் உச்சியை அடைய முடிந்தது. இதனைச் சாதித்தவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளியரான டென்சிங் நோர்கே. உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்களுக்கு எவரெஸ்ட் ஏன் சொர்க்கபுரியாக உள்ளது, அங்கு அவ்வாறு என்ன தான் உள்ளது, அதன் உச்சியை முதலில் அடைந்த இருவர் எவ்வாறு அதனைச் சாதித்தனர்? உலகத்தின் உச்சியை அடைந்தபோது எப்படி இருந்தது? படக்குறிப்பு,எட்மண்ட் ஹிலாரி பிபிசிக்கு அளித்த பேட்டி எவரெஸ்ட் உச்சியை அடைய எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே உலகின் ஆபத்தான மலைப்பகுதியில் கடினமான பாறைகளை ஏறி, உறைய வைக்கும் பனி மற்றும் ஆக்சிஜன் போதாமை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. 72 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த இந்த சாதனை பற்றி இருவரும் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர். உலகின் உயரமான புள்ளியை அடைந்த போது ஏற்பட்ட உணர்வை விவரித்த ஹிலாரி, "நான் முதலில் நிம்மதியாக உணர்ந்தேன்" என்று 1953-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நாங்கள் மலை உச்சியை கண்டுபிடித்தோம் என்பதும் அந்த இடத்தை அடைந்தோம் என்பதும் நிம்மதி அளிக்கக் கூடியதாக இருந்தது" என டென்சிங் தனது மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்தார். கர்னல் ஜான் ஹண்ட் தலைமையிலான குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டது. "முதலில் பெரு நிம்மதி அடைந்தோம், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்" எனத் தெரிவித்தார். இருவரும் நிம்மதி அடைந்ததற்கு நியாயமில்லாமல் இல்லை, ஏனெனில் எவரெஸ்ட் உச்சியை அடைவதற்குள் இவர்கள் மலையின் ஆபத்தான பகுதியில் ஏறவே முடியாத 40அடி உயரமுள்ள பாறையை ஏறி கடந்து தான் செல்ல வேண்டும். இந்த இடம் மரணப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 8,849மீட்டர் (29,032 அடி) உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. இதற்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், இந்த மலைக்கு 1856-ல் சர்வேயர் ஜார்ஜ் எவரெஸ்டின் பெயரை வைத்தது. நேபாளில் இது சாகர்மாதா என்றும் திபெத்தில் சோமோலுங்மா (பூமாதேவி) என்றும் அழைக்கப்படுகின்றது. மரணப் பிரதேசத்தில் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது. மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது. டென்சிங் இந்தக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்தப் பெயர் 8000 மீட்டருக்கு (26,000 அடி) மேல் மலையேறுபவர்கள் அடைகின்ற இடத்தைக் குறிக்கின்றது. அங்கு நிலவும் குறைந்த ஆக்சிஜன் சூழ்நிலையானது உடலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும், உடலில் உள்ள அணுக்கள் சாகத் தொடங்கும். எவரெஸ்ட் மலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மரணப் பிரதேசத்தில் தான் உயிரிழந்துள்ளனர். இத்தகைய குளிர்ந்த வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைவான ஆக்சிஜனில் பிழைப்பதற்கு மனிதர்கள் பழக்கப்படவில்லை. மலையேறுபவர்கள் ஹைபோக்ஸியாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் முக்கியமான உறுப்புகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் மெல்ல மெல்ல சிதைய ஆரம்பிக்கும். மூளைக்கும் நுரையீரலுக்கும் ஆக்சிஜன் குறைவதால் இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பிற்கான ஆபத்துகள் அதிகமாகும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் அது வீங்கி தலைவலியை, குமட்டலை உண்டாக்கும். இதனால் பதற்றம் உருவாவதால் மலையேறுபவர்களின் முடிவெடுக்கும் திறன் மட்டுப்படும். மூளை வீக்கம் அடைவதால் மலையேற்ற வீரர்கள் மயக்க நிலையை உணர்வார்கள். இதனால் இல்லாத நபர்களிடம் பேசுவது, பனியில் தோண்டுவது அல்லது துணிகளைக் கழற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு எப்படி தயாராகினர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவரெஸ்ட் மலையேற்றம் டென்சிங் மற்றும் ஹிலாரி இந்தப் பயணத்தில் உள்ள மற்றவர்களுடன் இமயமலையில் உள்ள கடினமான சூழ்நிலைகளுக்குப் பழகிக் கொள்ள உயரமான இடங்களில் தொடர்ந்து முகாமிட்டனர். அதன் பின்னர், 1953ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படிப்படியாக ஏறத் தொடங்கினர். இது அவர்களின் நுரையீரல் திறனை அதிகரிக்கவும் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவும் ரத்தத்தில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை அதிகமாக உற்பத்தி செய்யவும் அனுமதிக்கிறது. இதன்மூலம் எவரெஸ்ட் உச்சியை நோக்கி செல்ல செல்ல ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டை ஈடு செய்ய முடிகிறது. இவ்வாறு புதிய தட்பவெட்ப நிலைக்குப் பழக்கப்படுவதில் சிக்கல்களும் உள்ளன, ஏனென்றால் கூடுதல் ஹீமோகுளோபின் அளவு என்பது ரத்தத்தை தடிமனாக்கும். இது சுழற்சியை மேலும் கடினமாக்கும், இதனால் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மற்றும் நுரையீரலுல் திரவங்கள் சேர்வதை அதிகரிக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 6000மீட்டருக்கு (19,700 அடி) அதிகமான உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கும் 8,790 மீட்டர் (28,839) உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் அவர்கள் கடக்க வேண்டிய செங்குத்தான பாறையை கடப்பதற்கும் உடலை பழக்கப்படுத்துவதும் என்பது சாத்தியமற்றது. எனவே அந்த உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையின் தாக்கங்களை சமாளிப்பதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் உபகரணங்களை அவர்கள் எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவர்களை எதிர்நோக்கி இருக்கும் சவால்களை பற்றி அவர்கள் எந்த கற்பனையும் கொண்டிருக்கவில்லை. இதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் அதே குழுவைச் சேர்ந்த டாம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் எவன்ஸ் உச்சியை அடைவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது செயலிழந்த ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் நடுங்க வைக்கும் குளிர்ந்த காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற முடியாமல் திரும்பினர். குழு முயற்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டென்சிங் மற்றும் ஹிலாரியின் குழு 29 மே 1953 அன்று டென்சிங் மற்றும் ஹிலாரி குழுவின் இரண்டாவது முயற்சியை தொடங்கினர். பனிக்கு நடுவே மலை முகடுகளைக் கடந்து உச்சியை நோக்கிச் சென்றனர். பனியைக் கடந்து பயணித்தபோது தங்களால் தொடர்ந்து செல்ல முடியுமா என ஹுல்லாரிக்கு சந்தேகங்கள் எழுந்ததாக அவரின் மகன் பீட்டர் 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். "எனக்கு நினைவில் இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்த சறுக்கலான பனி மற்றும் பாதையைக் கடந்தது பற்றி அவருடைய விவரிப்புகள் தான். அவர் அந்தப் படிகள், பனிப் போர்வை மற்றும் உடைந்துவிழும் பனிக்கட்டிகளைக் கடந்து திபெத்தை நோக்கியுள்ள எவரெஸ்டின் காங்ஷுங் பக்கத்தை நோக்கி (கிழக்கு பக்கம்) சென்றார். அவர் இதைக் கூறியுள்ளார், நான் அவரின் நாட்குறிப்பிலும் பார்த்துள்ளேன். அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தொடர்ந்து செல்வது பாதுகாப்பாக இருக்குமா ஆகியன குறித்து சந்தேகம் வரத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்" என்றார் பீட்டர். மேலும், "அவர் இந்தக் கதையை கண்களில் பிரகாசத்துடனும் ஒரு புன்னகையுடனும் சொன்னது எனக்கு நினைவிக்கிறது. தானும் டென்சிங்கும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடியே அந்தச் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றோம் எனக் கூறினார்" என்றார். ஹிலாரி உடன் சென்ற டென்சிங் இதனை விதி என உணர்ந்தார், "அவருக்கு மலைகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. இது அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மலையாகும்" என அவரின் மகன் ஜாம்லிங் நோர்கே 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார். "ஏற்கெனவே 21 வருடங்களில் 6 முறை இந்த மலையை ஏற முயற்சித்திருந்தார். சுவிஸ் அணியுடன் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு உச்சிக்கு 400 மீட்டர் வரைச் சென்று திரும்ப வேண்டியதாயிற்று. அவர் எப்போதுமே அது தான் ஏற வேண்டிய மலை என்றே உணர்ந்தார்" என்றார். செங்குத்தான பாறையை கடந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது. இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது. கை அல்லது கால் பிடிமானத்திற்கு எதுவுமே இல்லாத அதன் மென்மையான மேற்பரப்பு ஏறுவதற்கு சாத்தியமற்றதாகத் தெரிந்தது. டென்சிங் பிடியில் இருந்த கயிற்றை தன் மீது கட்டிக் கொண்டு ஹிலாரி தன்னுடைய உடலை பாறை முகடு மற்றும் அருகில் உள்ள பனி மேட்டிற்கு இடையே உள்ள ஒரு குறுகிய விரிசலான பகுதிக்குச் சென்றார், பனிக்கட்டி உடைந்து செல்லக்கூடாது என வேண்டிக் கொண்டே இருந்தார். அதன் பின்னர் வலியுடனே மெல்ல மேல்நோக்கிச் சென்றார். அவர் மேலே சென்ற பிறகு கயிற்றை கீழே விட அவரைப் பின் தொடர்ந்து டென்சிங்கும் சென்றார். அவர் கடந்து சென்ற பாறை, அவர் நினைவாக பிற்காலத்தில் ஹிலாரி ஸ்டெப் (Hillary step) எனப் பெயரிடப்பட்டது. இது 2015-ம் ஆண்டு நிகழ்ந்த மிக பயங்கரமான நிலநடுக்கத்தால் அழிந்துபோனது. "கடைசி தருணங்களில் நாங்கள் அந்த மேட்டில் சென்றபோது அதன் உச்சியை காண முடியவில்லை" என 1953-ல் பிபிசியிடம் ஹிலாரி தெரிவித்தார். "அது எங்களிடமிருந்து வலதுபக்கம் விலகிச் சென்றுகொண்டே இருந்தது. நாங்கள் அதைக் கடந்து வடக்கு பக்கம் உச்சி இருப்பதைப் பாரத்ததும் நிம்மதி அடைந்தோம். எங்களுக்கு மேல் 30, 40 அடி தூரத்தில் தான் உச்சி இருந்தது. நாங்கள் உச்சி மீது ஏறி நின்றோம்" என்றார் ஹிலாரி. உலகத்தின் உச்சியை அடைந்ததும் இரு மலையேற்ற வீரர்களும் உற்சாக மிகுதியில் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டனர். ஹிலாரி தன்னுடைய கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். இந்தியா, நேபாளம், ஐ.நா மற்றும் பிரிட்டன் கொடிகள் அடங்கிய கோடாரியை டென்சிங் அசைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். உலகத்தின் உச்சியிலிருந்து தெரிகின்ற காட்சிகளை அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பனியில் ஒரு குழியை ஏற்படுத்தி சில இனிப்புகள் மற்றும் பிஸ்கட்டுகளை பௌத்த முறை படி புதைத்தார். "அங்கு எப்போதும் இருக்கக் கூடியது மாதிரியான பொருள் எங்களிடம் எதுவும் இல்லை" என ஹிலாரி பிபிசியிடம் தெரிவித்திருந்தார். "அங்கு ஒரு கற்குவியலை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனென்றால் பாறைகள் உச்சியில் இருந்து 30, 40 அடிக்கு கீழ் இருந்தன. டென்சிங் சில உணவுகளை பௌத்த கடவுள்களுக்கு காணிக்கையாக விட்டுச் சென்றார். நாங்கள் நான்கு கொடிகளை உச்சியில் விட்டுச் சென்றோம், ஆனால் அவை நிலைத்திருக்க வாய்ப்பில்லை" என்றார். மலையேற்றமும் உயிரிழப்புகளும் படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே பேட்டி இருவரும் 1924-ல் காணாமல் போன மலையேற்ற வீரர்களான ஜார்ஜ் மல்லோரி மற்றும் ஆண்ட்ரூ "சாண்டி" இர்வின் ஆகியோர் பற்றிய தடயங்களைத் தேடினர். மல்லோரி தான் எவரெஸ்ட் மலையை ஏன் ஏற வேண்டும் என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஏனென்றால் அது அங்கு உள்ளது" என்கிற பிரபலமான பதிலை அளித்திருந்தார். இருவர் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மல்லோரியின் உடல் 1999-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது அவரின் கூட்டாளி இர்வினின் உடலின் சில பகுதிகள் 2024-ல் உருகிய பனிப்பாறையால் வெளிப்பட்டது. டென்சிங்கும் ஹிலாரியும் 15 நிமிடங்கள் தான் உச்சியில் இருந்தனர். "ஆக்சிஜன் குறைந்து கொண்டே வந்ததால் நாங்கள் திரும்பி கீழே வருவதில் குறியாக இருந்தோம்" என்றார் ஹிலாரி. எவரெஸ்ட் உச்சியை அவர்கள் ஒரு குழுவாகத் தான் அடைந்தார்கள் என்பதால் யார் முதலில் உச்சியால் ஏறினார் என்பதை தெரிவிக்கக்கூடாது என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் 1955-ல் வெளியான டைகர் ஆப் தி ஸ்னோஸ் (Tiger of the Snows) என்கிற தனது சுயசரிதையின் மூலம் ஹிலாரி தான் முதலில் ஏறினார் என்பதை வெளிப்படுத்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டென்சிங். அவர்கள் சோர்வுடன், கீழறங்கி முகாமை அடைந்தபோது அந்தக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் லோவிடம் "நாங்கள் அந்த இடத்தை எட்டி விட்டோம்" எனத் தெரிவித்தார் ஹிலாரி. அவர்களின் சாதனை பற்றிய செய்தி ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிய ஜூன் 2-ம் தேதி வரை வெளியுலகத்திற்குத் தெரியவில்லை. எட்மண்ட் மற்றும் கர்னல் ஹண்டுக்கு அரச பதக்கங்கள் வழங்கிய ராணி, டென்சிங்கிற்கு ஜார்ஜ் பதக்கத்தை வழங்கினார். இது அவர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை ஏன் வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சையை உருவாக்கியது. அடுத்தடுத்த வருடங்களில் அதிக அளவிலான சாகச வீரர்கள் அவர்களின் சாதனையை மீண்டும் செய்ய முயற்சித்துள்ளனர். இந்த மலையேற்றம் நேபாள அரசுக்கு முக்கியமான வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 800 பேர் உச்சியை அடைய முயற்சித்தாலும் அது ஆபத்தான பயணமாகவே இருந்து வருகிறது. 2024-ல் ஒன்பது பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர் என்றும் அதற்கு முந்தைய வருடம் 18 உயிரிழந்துள்ளனர் என்றும் நேபாள சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. நூற்றாண்டுக்கு முன்பு இந்தத் தரவுகள் எல்லாம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து சுமார் 330-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த உறைந்த உடல்கள் பல வருடங்களாக மலையிலே இருந்துள்ளன. ஆனால் புவிவெப்பமடைதலால் பனிப் பாறைகள் மற்றும் போர்வைகள் உருக இந்த உடல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. 2019-ஆம் ஆண்டு நேபாள அரசு மலையேற்ற வீரர்களின் உடல்களை மீட்கும் முடிவை எடுத்தது. கடந்த ஆண்டு மீட்பாளர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மலையின் ஆபத்தான மரணப் பிரதேசத்தில் இருந்து ஐந்து உடல்களை மீட்டு வந்தனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0gyz7g9l4o
  24. 01 JUN, 2025 | 09:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (03) இலங்கைக்கு வருகிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது 'அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு பேரவையின் மாநாட்டில் பங்பேற்றிருந்தார். இதன் போது குவாட் அமைப்பின் பங்காளிகளான அமெரிக்கா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற முதல் சந்திப்பு என்பதால் முத்தரப்புமே மிக ஆர்வமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டனர். அதே போன்று மூன்று நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இதன் போது ஒப்புக்கொண்டன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒத்துழைப்பின் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதுடன், இரு நாடுகளுக்க இடையில் 78 வருடகால இராஜதந்திர உறவுகள் உள்ளன. அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பொதுவான நலன்களை பாதுகாப்பதிலும் பொருளாதாரம், பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் உட்பட பரந்துப்பட்ட ஒத்துழைப்புகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகள் வலுப்படுகின்ற நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216215
  25. பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? முப்படைத் தலைமைத் தளபதி பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார். சிங்கப்பூரில் இன்று (2025 மே 31 சனிக்கிழமை) ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், 'எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்பதை தெரிந்துக் கொள்வதை விட, சேதம் ஏன் ஏற்பட்டது என்பதை அறிவதே மிக முக்கியமானது' என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஆறு இந்திய விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தான் கூறியதை அவர் மறுத்தார். "ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்த அவர், சேதமடைந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் தான் ப்ளூம்பெர்க்கிற்கு அவர் நேர்காணலை வழங்கியுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில், முப்படைகளின் பிரதிநிதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "நாம் போர்ச் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா இந்தக் கூற்றுகளை நிராகரித்தது. படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் ஜெனரல் அனில் செளகான் தெரிவித்த கருத்துக்கள் இந்த மாதம் பாகிஸ்தானுடனான நான்கு நாள் ராணுவ மோதலில் இந்திய போர் விமானம் ஏதேனும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று சிடிஎஸ் அனில் செளகானிடம் கேட்கப்பட்டது. இந்த பேட்டியின் ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் கொண்ட ஒரு பகுதியை ப்ளூம்பெர்க் டிவி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், ஜெனரல் அனில் செளகானிடம், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தானின் கூற்றை உறுதிப்படுத்த முடியுமா என்று ப்ளூம்பெர்க் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் செளகான், "ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமல்ல, இது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்" என்றார். முப்படைகளின் தளபதியிடம் இருந்து விஷயத்தை தெரிந்துக் கொள்ள கேள்வி வேறுவிதமாக கேட்கப்பட்டது. "குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சரியா?" என பத்திரிகையாளர் வினா எழுப்பினார். "ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து, பிறகு அதை செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு நாங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்." "ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. அந்த நாடு சொல்லும் கணக்கு சரியானதா?" என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்டார். "இது முற்றிலும் தவறு. ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்." என்று ஜெனரல் அனில் செளகான் பதிலளித்தார். இதற்கு முன்பு ராணுவம் என்ன சொன்னது? மே 7ஆம் தேதியன்று, இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது . அதற்கு பிறகு, பாகிஸ்தான் விமானப்படை ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறினார், அதில் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் விமானங்களும் அடங்கும் என்று கூறப்பட்டது. "இதுவரை, மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு எஸ்.யூ-30 மற்றும் ஒரு மிக்-29 உட்பட ஐந்து இந்திய விமானங்கள் மற்றும் ஒரு ஹெரான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி தெரிவித்த வீடியோவை, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை பகிர்ந்தது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் இந்தக் கூற்றுக்கு இந்தியா எந்தவித பதிலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை. இருப்பினும் மூன்று படைகளின் பிரதிநிதிகளான, டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை டிஜிஏஓ (விமான நடவடிக்கைகள்) ஏர் மார்ஷல் ஏகே பார்தி மற்றும் கடற்படையைச் சேர்ந்த டிஜிஎன்ஓ (கடற்படை நடவடிக்கைகள்) வைஸ் அட்மிரல் ஏஎன் பிரமோத் மற்றும் மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஷார்தா ஆகியோர் மே 11 அன்று பாகிஸ்தானுடனான மோதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய தகவல்களை வழங்கினார்கள். பட மூலாதாரம்,ANI ரஃபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி , "நாம் ஒரு போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகளும் அதில் ஒரு பகுதி தான். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? என்பதாகவே இருக்கவேண்டும். அதற்கான பதில் ஆம்" என்று சொன்னார். "நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம், நமது அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும்" என்றும் அவர் கூறியிருந்தார். எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது. இந்தியா-பாகிஸ்தான் மோதலை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் ஒரு மதிப்பாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் ஊடகப் பதிவில், இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்டிருந்தார். ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா சுமத்திய குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரித்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 6 மற்றும் 7ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் மொத்தம் ஒன்பது இடங்களை இந்தியா தாக்கியது. மே 7ஆம் தேதி மாலை ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவம் இந்தத் தகவலை வழங்கியது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய ஆயுதப்படைகள் 2025 மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் கூறினார். பட மூலாதாரம்,ANI காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சிடிஎஸ் ஜெனரல் அனில் செளகான் ப்ளூம்பெர்க் டிவிக்கு வழங்கிய பேட்டியின் காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1999 ஜூலை 29ஆம் தேதியன்று, அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம், தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் தந்தையும், மூலோபாய விவகார நிபுணருமான கே. சுப்பிரமணியம் தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழுவை அமைத்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தக் குழு அமைக்கப்பட்டு, 5 மாதங்களில் விரிவான அறிக்கையை மறுஆய்வுக் குழு சமர்ப்பித்தது. தேவையான திருத்தங்களுக்குப் பிறகு, மறுஆய்வுக் குழுவின் 'From Surprise to Reckoning' என்ற அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது என ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் பாதுகாப்புப் படைத் தலைவர் அளித்த தகவலுக்குப் பிறகு மத்திய அரசு இப்போது அத்தகைய நடவடிக்கை எடுக்குமா? என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், ஆனால் இப்போது அந்த அபாயம் நீங்கி வருவதாகவும் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கார்கில் மறுஆய்வுக் குழுவின் மாதிரியில், நாட்டின் பாதுகாப்பு தயாரிப்புகளை ஒரு சுயாதீன நிபுணர் குழு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோருவதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93l1ergk6eo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.