Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நீண்ட காலம் முதல்வர் பதவியில் வீற்றிருக்கும் நந்தன் அண்ணைக்கு வாழ்த்துகள்.
  2. LIVE 70th Match (N), Lucknow, May 27, 2025, Indian Premier League RCB chose to field. Lucknow Super Giants (14/20 ov) 149/1 Current RR: 10.64 • Last 5 ov (RR): 65/0 (13.00) Live Forecast: LSG 224 Royal Challengers Bengaluru
  3. 27 MAY, 2025 | 03:10 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது. இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்துக்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிட்டல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி, போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம் மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு பற்றி உலக வங்கி பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது. 1. யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி 2. கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம் 3. மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம் 4. யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம் 5. யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல் 6. யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி 7. அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள் 8. உள்ளூராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம் இக்கலந்துரையாடலின்போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் அரசாங்க அதிபரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்துக்கு உலக வங்கிக் குழுவினரை அரசாங்க அதிபர் அழைத்துச் சென்றதையடுத்து, புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகர சபை பிரதம பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215817
  4. விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின்” அல்லாத ”லிம்போமா” பாதிப்பு வழக்குகளும் அடங்கும். அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது. ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வல்லுநர்கள், TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். https://thinakkural.lk/article/318407
  5. 'விண்வெளியில் அணு ஆயுதப் போர்' - அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கீலீ ங் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் எதிர்கால "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது. இந்த முயற்சி "விண்வெளியை அணு ஆயுதப் போர் களமாக மாற்றும் சாத்தியங்கள் உள்ளதாக" வட கொரியா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்காவிற்கு "அடுத்த தலைமுறை" வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக (cruise missiles - தானாகவே வழிநடத்தி செல்லக் கூடியவை) ஏவுகணைகளும் அடங்கும். வட கொரிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் திட்டத்தை "சுயநீதி மற்றும் ஆணவத்தின் உச்சம்" என்று சாடியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "விண்வெளியை ராணுவமயமாக்க... எதுவும் செய்யத் தயாராக" இருப்பதாக அமெரிக்காவை வட கொரியா குற்றம் சாட்டியது, மேலும் இந்தத் திட்டம் "உலகளாவிய அணு ஆயுத மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை" தூண்டக்கூடும் என்றும் எச்சரித்தது. வட கொரியா, அமெரிக்காவை எதிரியாகக் கருதுகிறது, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கண்டித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கோல்டன் டோம், வட கொரியாவின் அணு ஆயுதக் கிடங்கை "கணிசமாக பலவீனப்படுத்தக்கூடிய" ஒரு அச்சுறுத்தலாக வட கொரியா கருதுகிறது என்று கொரியா தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "அமெரிக்கா தனது புதிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை நிறைவு செய்தால், அதை எதிர்க்க அல்லது ஊடுருவுவதற்கு வட கொரியா மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். 2022ஆம் ஆண்டில், தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை வட கொரியா இயற்றியது, மேலும் அது அண்மை ஆண்டுகளில் பல்வேறு பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் ) திறனுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வட கொரியா கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளர்களையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என்றும் அந்நாடு கூறியது. அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டத்தை விமர்சிக்கும் சீனாவுடன் வட கொரியாவும் இணைகிறது. கடந்த வாரம் கோல்டன் டோம் பற்றி "தீவிரமாக கவலை கொண்டுள்ளது" என்று சீனா கூறியது, இது "வலுவான தாக்குதல் விளைவுகளைக்" கொண்டுள்ளது என்று கூறியது. "அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையைப் பின்பற்றும் அமெரிக்கா, தனக்கான முழுமையான பாதுகாப்பைத் தேடுவதில் வெறித்தனமாக உள்ளது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. "இது அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக்கூடாது என்ற கொள்கையை மீறுகிறது மற்றும் உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவது அவசியம் என்று பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் சிலர் கோல்டன் டோமை உருவாக்கும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுடன் அரசியல் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் கோல்டன் டோம் தயாரிப்பு மொத்த செலவு, அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும். புதிய பட்ஜெட் மசோதாவில் முதல்கட்டமாக $25 பில்லியன் (£18.7 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பல தசாப்தங்களாக செலவிடப்பட்ட தொகையைவிட 20 மடங்கு செலவாகும் என்று அமெரிக்க அரசு மதிப்பிட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly3l270we3o
  6. 27 MAY, 2025 | 02:33 PM (எம்.மனோசித்ரா) அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்காக ஆசிரியர் பற்றாக்குறைக்காக 199 நியமனங்கள், சப்ரகமுவ மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்காக 3661 நியமனங்கள் உட்பட சுமார் 6000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் பொது நிர்வாக அமைச்சின் கீழ் 1658 நியமனங்களும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் தபால் சேவை என்பவற்றுக்கு சுமார் 300 நியமனங்களும் வழங்கப்படவுள்ளன. இவற்றை உள்ளடக்கி 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215809
  7. வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் வட மாகாண ஆளுநரை சந்தித்தார் Published By: VISHNU 27 MAY, 2025 | 07:44 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை (20.05.2027) ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215848
  8. மன்னார் மாவட்டத்தில் இந்திய நன்கொடை ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு Digital News Team 27 மே, 2025 மன்னார் ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமத்தினை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டிபி சரத் ஆகியோர் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து 24 பயனாளி குடும்பங்களிடம் கையளித்தனர். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் ஆரியரத்ன, மன்னார் மாவட்ட செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபை தலைவர் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், வடக்கு மாகாண சபை மற்றும் மன்னர் மாவட்ட நிர்வாகத் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்திய அரசாங்கத்தின் நன்கொடை மூலமாக இலங்கை அரசின் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்படும் குறித்த மாதிரி கிராம வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மாவட்ட வீடமைப்பு குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளுக்கு அமைவாக இலங்கை முழுவதிலும் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு மாவட்ட வீடமைப்பு சபைகளால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் 24 வீடுகள் இம்மாதிரிக் கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318469
  9. 25 MAY, 2025 | 10:01 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்தவும், வணிகப் தொடர்புகளை எளிதாக்கவும், மேலும் பல்வேறு துறைகளில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வழிகளை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த விஜயத்தில் இரு நாடுகளுக்க இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்தவம் பெறுகிறது. ஏனெனில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பிராந்தியத்தின் வணிக இராஜதந்திரம் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு தொடர்ந்தும் சவால்களை ஏற்படுத்துவதாக உள்ளது. வரி கட்டண அளவீடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலின் அளவு குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆறு சுற்றுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கின. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்ய ஒப்புக்கொண்டாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்க வில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பெய்ஜிங்கின் முக்கிய செய்தியுடனேயே சீன அமைச்சர் இலங்கை வருகிறார். https://www.virakesari.lk/article/215610
  10. இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318449
  11. ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஈழத் தமிழர்கள் இருவர் தெரிவு ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசி ரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆசிய விஞ்ஞானி’ என்ற சஞ்சிகை ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் -100 பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். அதன்படி விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதேவேளை ஆசிய பிராந்தியத்தின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பெருமையுடன் பட்டியலிடப்பட்டுள்ள கணிதத் துறையின் மூத்த பேராசிரியர் எஸ்.திருக்கணேஷின் குறிப்பிடத்தக்க சர்வதேச சாதனையை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், கணிதத் துறையில் மூத்த பேராசிரியர் திருக்கணேஷ் ஆற்றிய விதிவிலக்கான ஆராய்ச்சிப் பங்களிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் ஆசியாவின் முன்னணி அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை அங்கீகரிக்கிறது. https://thinakkural.lk/article/318413
  12. காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 27 MAY, 2025 | 06:57 PM காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார் . யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடமாகாணத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து இந்த வர்த்தமானி வாபஸ்பெற வைத்தது பெரும் வெற்றி என்றே செல்லவேண்டும். அந்த வகையில் பாராளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் எனைய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுவதுடன் நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை வாபஸ்பொறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்களும் எமக்கு வாக்குறுதியளித்திருந்தார்கள். நாங்கள் இவற்றைக் கலந்துரையாடுவோம் என்று அவர்களும் இதனைச் செய்திருக்காவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது எனவே இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்த அரசாங்கம் எங்கள் கருத்துகளைக் கேட்டு இவற்றைச் செய்யும் என்றால் இனப்பிரச்சினையே இருக்காது. பாராளுமன்றத்தில் இவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது. மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி நிசாம் காரியப்பர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் றவுப் ஹக்கிம் அவர்களுக்கும் விசேட நன்றிகள். பிரதமருடன் சந்திப்பில் இவர்கள் இருவரும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார்கள். இதில் முக்கியமாக இந்த வர்தகமானி வாபஸ் பெறப்பட்டமையானது தமிழ்பேசும் மக்களாக நாங்கள் இணைந்து விவாதித்தது கூட்டு முயற்சியாக வெற்றியளித்தது. இதனைத் தமிழ், முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் என்று கூறுவது மட்டுமல்லாது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பொருன்பான்மைக்கு அதிகமாக அவர்கள் இருக்கும் நிலையில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைந்து செயற்பட்டதன் வெற்றியாகும். சிங்கள மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு நாம் கேடுதல் செய்யவில்லை என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு எதிராக நடக்க வேண்டும் என்பது எமது அடிப்படை கோட்பாடு அல்ல. முஸ்லிம் மக்களையும் நாம் இணைத்துச் செயற்படுவதன் மூலம் நாம் அசைக்க முடியாத பலத்தை வெற்றியை அடையலாம். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், மற்றும் அருந்தவபாலன் கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/215846
  13. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 02:20 PM சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சில நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளிலும் அலைகளின் உயரம் (சுமார் 2.5 மீ - 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/215810
  14. வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் சுமந்திரன் - இன்றிரவே வர்த்தமானியில் இதனை பிரசுரிக்கவேண்டும் என வேண்டுகோள் 27 MAY, 2025 | 01:48 PM வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ்பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு இன்று இலங்கை தமிழரசுக்கட்சி எழுதிய கடிதமொன்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மேற்படி வர்த்தமானி அறிவிப்பில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான நிலங்கள் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு முல்லைத்தீவில் மூன்று சட்ட ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னர் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மேலதிகமாக சுனாமிக்கு பின்னர் அரசாங்க பொறிமுறைகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டுஇ பல்வேறு திட்டங்கள் ஊடாக பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றிற்கான உறுதிகள் எவையும் பலருக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் இந்த காணிகளில் வீடுகளில் 10 வருடங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த தருணத்தில் இந்த சட்டத்தை பிரயோகிப்பது இன்னமும் குழப்பகரமான நிலையை உருவாக்கும். இந்த பகுதிகளில் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விதிகளை குறிப்பாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்துவதுமிகவும் பொருதமற்றது என்பதை நாங்கள் மீள வலியுறுத்துகின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதுதாங்கள் எந்த தவறும் இழைக்காத நிலையிலும்தங்கள் நிலங்களிற்கு முழுமையாக உரிமை கோரும் நிலையிலும் இல்லாத பலருக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும். இந்த செயற்பாடு தமிழ் மக்களிடையே பாரிய சமூக அமைதியின்மையை உருவாக்கும் என்பதுடன்போருக்கு பின்னரான சூழலில் நல்லிணக்கத்தை பாதிப்பதாக அமையும். அத்தோடு ஏராளாமான தனியார் நிலங்கள் இன்னமும இராணுவகட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பதுடன் தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் விடுவிப்பதாக கூறியும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. எனவே மேலும் தாமதிக்காமல்மேற்படி வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு மீண்டும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இல்லையெனில் இது எமது மக்களை வெகுஜனபகிஷ்கரிப்புகளிலும்சட்டமறுப்பு போராட்டங்களிலும் நாம் வழிநடத்தவேண்டிய நிலையேற்படும். நல்லிணக்கம் சம்பந்தமாக உங்கள் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவில் இருத்திஇவ்வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக மீள கைவாங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215806
  15. பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X படக்குறிப்பு,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 54 நிமிடங்களுக்கு முன்னர் துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் விமானங்களின் மீது பாயும் லேசர் ஒளி ஏன் விமானங்களைத் தடுமாற வைக்கிறது? மே 25ஆம் தேதியன்று துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானபோது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் தொந்தரவுக்கு உள்ளான விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். இதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஒளி நின்றுவிட்டது. இதன் பிறகு, விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. ஆனாலும் இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முந்தையை சம்பவங்கள் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, 2023, 2024ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோல விமானப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோர் குறித்துத் தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்குள் மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. சென்னை விமான நிலைய காவல்துறையினரும் இதுதொடர்பாக தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டைகளை நடத்தினர். பிறகு இந்தச் சம்பவங்கள் நின்றுவிட்டன. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவர், "சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஓடுபாதையில் இறங்குவதற்காகத் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மீது இதுபோன்று பல வண்ணங்களில் லேசர் ஒளிக்கற்றைகள் அடிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இது நடக்கிறது. இது விமானிகளுக்குப் பல பிரச்னைகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார். அதாவது, "விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்" என்று விளக்கினார். பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X படக்குறிப்பு,விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள் அதேபோல, விமானக் கட்டுப்பாட்டு அறையின் மீது இதுபோன்ற லேசர் ஒளியை அடித்தால், அதுவும் அங்கு இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். சென்னை போன்ற விமான நிலையங்களில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு விமானம் தரையிறங்கவோ, மேலேறவோ செய்துகொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கவனமாக உத்தரவுகளை வழங்க வேண்டிய தருணத்தில் இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி. 'உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்' விமானிகளுக்கு இது ஆபத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய விமானப் படையின் முன்னாள் வீரரான செல்வ ராமலிங்கம். "விமானங்களைத் தரையிறக்குவது என்பது மிகச் சிக்கலான ஒரு செயல்பாடு. ரன்வேயின் லைட்டை ஃபோகஸ் செய்துதான் வருவார்கள். தேவையில்லாத லைட் வந்தால் குழப்பம் ஏற்படும். இந்த விளக்கு ஏன் வருகிறது என யோசிப்பார்கள். அந்தச் சந்தேகம் வரும்போது மறுபடியும் ஏடிசியை தொடர்புகொள்வர்கள். நான் லேண்ட் செய்யலாமா எனக் கேட்பார்கள். டே டைமில்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ரன்வேயில் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு சமிக்ஞை இருக்கிறது. எல்லோர் உயிரும் அதைக் கண்டறிந்து இயக்கும் விமானியின் கையில்தான் இருக்கிறது" என்றார். சிறிய டார்ச் அளவுக்கு உள்ள லேசர் கருவிகளைக் கொண்டு ஒளியை அடித்தால், அது சில நூறு மீட்டர் தூரத்துக்கே பாயும். ஆனால், விமான நிலையங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளைப் பயன்படுத்தினால், அந்த லேசர்கள் விமானத்தில் பட்டால் அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானிகளுக்கே குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் அதிகாரிகள். தற்காலிக பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருக்கிறது என்கிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன் ஆனால், சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன். "விமானத்தைத் தரையிறக்குவது என்பது மிகவும் சிக்கலான தருணம். அந்த நேரத்தில் விமானிகள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அளவைக் காட்டும் பல்வேறு மீட்டர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஓடுபாதையையும் விமானத்தையும் ஒரே நேர்கோட்டில் பொருத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். அப்போது ஒரு மில்லிவிநாடியைக்கூட வீணாக்க முடியாது. அந்த நேரத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி கண்ணில் அடித்தால், தற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படும்" என்கிறார் அவர். "இதனால் மிக அரிதான தருணங்களில் இதன் காரணமாக, missed approach செய்ய வேண்டியிருக்கும். அதாவது விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் பறக்கச் செய்து, மறுபடியும் ஏடிசியின் அனுமதியைப் பெற்றுத் தரையிறக்க வேண்டியிருக்கும். இதுபோல தீவிர கவனத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் லேசர் ஒளி கண்ணில் படுவது, விமானிகளுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும், அது மிக அபாயகரமானது" என்கிறார் அசோகன். 'கண்டுபிடிப்பதே கடினம்' பிற நாடுகள் இதுபோன்ற விவகாரங்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார், இந்தியாவில் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத விமானி ஒருவர். "இதுபோல, லேசர் ஒளியை அடிப்பதால், விமானம் விபத்தில் சிக்காது. ஆனால், வேறு பல பிரச்னைகள் ஏற்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோலச் செய்தால், மிகக் கடுமையான அபராதமும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும். இந்தியாவில் இதுபோலச் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது" என்கிறார் அவர். இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கிறார். "பொதுமக்களின் கையில் இதுபோன்ற கருவிகள் கிடைத்த பிறகு அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், இதுபோன்ற கருவிகளைத் தயாரிப்பவர்கள், இறக்குமதி செய்பவர்களைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் யாருக்கு விற்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரிக்கச் சொல்ல வேண்டும். அப்படித்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்" என்கிறார் அந்த விமானி. இந்தியாவில் சென்னை தவிர, மைசூர், கொல்கத்தா விமான நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce81zvln4kko
  16. 27 MAY, 2025 | 12:56 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வதெனவும், மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது என இணங்கிக் கொண்டுள்ளனர். அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீ தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது எனவும் இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர். இதைவிட திருகோணமலை மாநகரசபை, நகரமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215799
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 27 மே 2025, 01:29 GMT மாதவிடாய் சுகாதாரம் குறித்த ஆலோசனைகளும், விவாதங்களும், பேச்சுகளும் மிகவும் அரிதாகவே இந்திய வீடுகளில் நடைபெறுகின்றன. உங்கள் வீட்டில் வெளிப்படையாக மாதவிடாய் பற்றிப் பேசுகிறீர்களா? ஆம் என்றால் எவ்வளவு முறை பேசுகிறீர்கள் என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இது தொடர்பான விழிப்புணர்வு வளர்ந்து வந்தாலும்கூட, மாதவிடாய் என்பது பேசக்கூடாத, அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேசுபொருளாகவே இன்றும் நீடிக்கிறது. ஆம், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தங்களின் மாதவிடாய் அனுபவம், அதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உடல் பிரச்னைகள் குறித்துப் பெண்கள் பேசும் வீடியோக்களும் பதிவுகளும் வரவே செய்கின்றன. பெண் முதல்முறையாக மாதவிடாயை எதிர்கொள்ளும் போது அது இந்திய சமூகத்தில் கொண்டாட்டமாகிறது. ஆனால், இது தொடர்பான சம்பாஷனைகள் பள்ளிகளிலோ, வீடுகளிலோ மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன. இது தொடர்பாக நீடிக்கும் மௌனம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மாண்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மாதவிடாய் சுகாதார தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 28ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறப்பான மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் என்பவை யாவை? பெண்கள் இதில் செய்யும் தவறுகள் என்ன? இது தொடர்பாக அறிந்துகொள்ள மகப்பேறு மருத்துவரும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான பிரேமலதாவிடம் பிபிசி தமிழ் பேசியது. மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான நடைமுறைகள் பற்றி அவர் அளித்த விளக்கங்களை இங்கு காண்போம். நேப்கின்களை தேர்வு செய்வது எப்படி? பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், அவை எளிதில் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும், எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதையும் தவிர்க்கின்றன. நைலான் போன்ற பொருட்களால் செய்யப்படும் நேப்கின்களை காட்டிலும், இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இதற்காகப் பணம் செலவழிப்பதில் தவறில்லை. அதோடு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பருத்தி துணிகளால் ஆன 'ப்ரீயட் பேன்டீஸ்' மற்றும் 'மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்' போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் வகையில் இவை தயாரிக்கப்பட்டாலும்கூட, இதுபோன்ற பொருட்களை முறையாகப் பயன்படுத்தவில்லை அல்லது சுத்தம் செய்யவில்லை என்றால், பெண்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களை பராமரிப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES "பீரியட் பேன்டீஸ்' மற்றும் 'மறுபயன்பாடு செய்யக்கூடிய பருத்தி பேட்கள்' போன்ற பொருட்களைத் தான் அதிகம் பரிந்துரை செய்வதில்லை என்கிறார் மருத்துவர் பிரேமலதா. ஆனால், "பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதுபோன்ற பொருட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிதமான வெந்நீரில் அதை நனைத்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்." அதோடு, "ஆன்டிசெப்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்தாமல், மிதமான சோப்பில் துவைத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்த பிறகு பயன்படுத்த வேண்டும். இப்படிச் சரியான முறையில் துவைத்து, காயவைக்கவில்லை என்றால் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும். எனவே, இத்தகைய பொருட்களை உபயோகிக்கும்போது சுகாதாரமான பயன்பாடு என்பதே முதலில் நினைவுக்கு வர வேண்டும்" என்றும் அவர் அறிவுறுத்துகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பருத்தி இழைகளால் ஆன நேப்கின்களை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் எவ்வளவு மணிநேரத்துக்கு ஒரு முறை பேட்களை மாற்ற வேண்டும்? "பொதுவாக நாள் ஒன்றுக்கு நான்கு முறை பேட்களை மாற்றுவது நல்லது. 'மென்ஸ்ட்ருவல் கப்' (menstrual cup) பயன்படுத்தும்போது 6 முதல் 8 மணிநேரத்துக்கு ஒரு முறை அதை 'அன்லோட்' செய்வது நல்லது. ஆனால், இதே நேர அளவைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். அப்போது நேப்கின்கள் முழுமையாக நனையும் வரை காத்திருக்காமல், மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நேப்கினை மாற்றுவது நல்லது." மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? மென்ஸ்ட்ருவல் கப்பும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டுதான் அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏதுவானது. மேலும் பயணம் செய்யும் காலத்திலும் இவை பயன்படுத்தப்படும். அதுகுறித்து விளக்கிய மருத்துவர் பிரேமலதா, "பீரியட் பேன்டீஸ், மறுபயன்பாடு செய்யவல்ல பருத்தி பேட்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதைப் போன்றே, கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்களுக்கு நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் கழுவ வேண்டும்" என்றார். மாதவிடாய் காலத்தில் தங்களுடன் எப்போதும் ஒன்றுக்கும் மேலான கப்களை வைத்திருப்பது நல்லது. ஒரு நாள் முழுவதும் ஒரே கப்பை பயன்படுத்துவற்குப் பதிலாக, தூய்மையாக இருக்கும் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்தார். வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'கொதிக்கும் நீரில் நான்கு நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு, மிதமான, வாசனையற்ற சோப்பில் மென்ஸ்ட்ருவல் கப்களை கழுவ வேண்டும்' முன்பு கூறியதைப் போன்றே மாதவிடாய் என்பது மிகவும் இயல்பான இயற்கை நிகழ்வு. இந்த நேரத்தில் பலருக்கும் வயிற்று வலி ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் பிரேமலதா. "அதில் தவறு ஒன்றும் இல்லை. வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியால் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது. அதேவேளையில், கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்," என்றும் பிரேமலதா தெரிவிக்கிறார். மாதவிடாய் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய இதர ஆரோக்கியமான பழக்கங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'கடுமையான வயிற்று வலி இருந்தால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்' காற்றோட்டமான உள்ளாடைகளை அணிய வேண்டும் மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணுறுப்பைச் சுற்றி இருக்கும் முடியை சவரம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். இது பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து உணர்ச்சி மிகுந்த பகுதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதால், மாதவிடாய் காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கலாம். அதிகப்படியான உதிரப்போக்கு, நாற்றம் போன்றவை ஏற்படும்போது மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்யும்போது முன்பிருந்து பின்புறமாகச் சுத்தம் செய்ய வேண்டும். யூ.டி.ஐ., (சிறுநீர்ப் பாதை தொற்று) மற்றும் இதர தொற்றுகளில் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் பழக்கமாக இது பரிந்துரை செய்யப்படுகிறது. டேம்பான்கள் (Tampon) போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சிலருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவேளை நோய்த் தொற்று, எரிச்சல், துர்நாற்றம் போன்றவற்றை உணர்ந்தால் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது. பாதுகாப்பான மாதவிடாய் பொருட்களின்றி அவதியுறும் பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் உலகம் முழுவதும் தோராயமாக, 500 மில்லியன் பெண்கள், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான, பாதுகாப்பான, தூய்மையான பொருட்களின்றி அவதிப்படுவதாக 2022ஆம் ஆண்டில் வெளியான உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. "இன்று மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களின் பற்றாக்குறை மட்டுமே பெண்கள் சந்திக்கும் பிரச்னையல்ல. மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் நிகழும் ஓர் இயல்பான, ஆரோக்கியமான நிகழ்வுதான் என்றாலும்கூட பல்வேறு சமூகங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். பல கலாசாரங்களில் பேசக்கூடாத ஒன்றாகவும் அது இருக்கிறது" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் மாதவிடாய் தொடர்பான தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் காரணமாக, ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற மாதவிடாய் கால நடைமுறைகளைப் பெண்கள் பின்பற்ற நேரிடுகிறது. மாதவிடாய் குறித்து நிலவி வரும் எதிர்மறையான கருத்துகள் பெண்களை அவமானப்படுத்த, கேலிக்கு உள்ளாக்க மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு வழிவகை செய்வதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. அதோடு, "இதன் காரணமாகப் பல தலைமுறைகளாக, ஆரோக்கியமற்ற மாதவிடாய் செயல்பாடுகள் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து, அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, மனித வளர்ச்சி ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கிறது," என்றும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvx3wx25qo
  18. 27 MAY, 2025 | 02:05 PM நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்றைய தினம் (27) வழங்கிவைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குப்பிள்ளையால் கையளிக்கப்பட்டது. இதன்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. https://www.virakesari.lk/article/215805
  19. வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசாங்கம் 27 MAY, 2025 | 12:02 PM வடமாகாண காணிதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215797
  20. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 01:40 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 'பரஸ்பர மதிப்பீடு' எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது. இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. https://www.virakesari.lk/article/215804
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது அந்தச் செய்தி. இதைத் தொடர்ந்து, "விசாரணை நீதிமன்றம் இளைஞருக்கு முன்ஜாமீன் அளித்தது. பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்" எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதில், "வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ, திருமண வாக்குறுதி அளித்தோ அவரது சம்மதம் பெறப்பட்டதாகத் தோன்றவில்லை. எங்கள் ஒருமித்த கருத்து என்னவென்றால், இது திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்த விவகாரம் அல்ல. ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, அந்த உறவில் பிளவு ஏற்படும்போதோ, கசப்புணர்வு ஏற்படும்போதோ, குற்ற வழக்கு தொடர அந்தச் சம்மத உறவு முகாந்திரம் ஆகாது. இதுபோன்ற நடத்தைகள் நீதிமன்றத்துக்குச் சுமையாவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சட்டப் பிரிவுகளைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம். திருமணம் செய்துகொள்வதாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியையும் போலி வாக்குறுதி என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்வது முட்டாள்தனம். ஏற்கெனவே திருமணமான பெண், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மற்றொருவருடன் உறவு வைத்துக்கொண்டதாகக் கூறுவதையும் நம்ப முடியாது. எனவே, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்," என நீதிபதிகள் கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5y1z7ezpvo
  22. 27 MAY, 2025 | 10:55 AM "நாங்கள் விளையாட்டுக்கு சண்டைபிடித்துக்கொண்டோம்" - விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அளித்த விளக்கம் இதுதான். வார இறுதியில் தென்கிழக்காசிய பயணத்தை ஆரம்பிப்பதற்காக விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் கணவரின் முகத்தில் கைவைத்து தள்ளிவிடுவதை காண்பிக்கும் வீடியோ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தருணம் பிரான்சின் தலைப்புச்செய்திகளில் வேகமாக இடம்பிடித்தது. அப்போதுதான் திறந்த விமானக்கதவு ஊடாக வீடியோக்கள் பார்த்த விடயத்தை பிரான்ஸ் ஊடகங்கள் அர்த்தப்படுத்த முயன்றன. பிரான்சின் லு பரிசியன் நாளேட்டின் இணையத்தளம் அறையா அல்லது சண்டையா என கேள்வி எழுப்பியது. பிரான்ஸ் ஜனாதிபதி தனது மனைவியுடன் விமானத்திலிருந்து இறங்கும் படத்திற்கு பலர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி நான் மாணவனாகயிருந்த வேளை அவர் ஆசிரியராகயிருந்தார், நாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டோம், நாங்கள் விமானத்தில் வேடிக்கையாக விளையாடினோம் என தெரிவித்துள்ளார். நாங்கள் விளையாட்டுக்கு சண்டை பிடித்துக்கொண்டோம், இந்த விடயத்தை அளவுக்கதிகமாக ஏதோ புவிகிரக பேரழிவு போல ஊதிப்பெருப்பிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏபிஊடகவியலாளர் எடுத்த வீடியோவில், பிரான்ஸ் ஜனாதிபதி வியட்நாமிற்கு விமானத்தில் வந்து இறங்குவதையும், சீருடை அணிந்த நபர் ஒருவர் விமானத்தின் கதவை திறந்து பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளே காணப்படுவதை காண்பிப்பதையும் ஜனாதிபதி யாருடனோ கதைத்துக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. பிரிஜிட் மக்ரோனின் கரங்கள் ( சிவப்பு ஆடை) மக்ரோனை தள்ளிவிடுவதையும், ஒரு கை மக்ரோனின் வாயையும் மூக்கின் ஒரு பகுதியையும் மூடுவதையும், மற்றை கை அவரது தாடையை பிடித்திருப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பின்வாங்கி, தலையை திருப்பிகொள்கின்றார், பின்னர் கமராக்கள் தன்னை பதிவு செய்வதை பார்த்ததும், புன்னகைத்து கை அசைக்கின்றார். அதன் பின்னர் ஜனாதிபதியும் மனைவியும் விமானப்படிகளில் காணப்படுகின்றார், ஜனாதிபதி தனது கரங்களை மனைவியை நோக்கி நீட்டுகின்றார், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை, இருவரும் விமானத்திலிருந்து இறங்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது. இந்த படங்களும் அதற்கான எதிர்வினைகளும், தவறான தகவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, கடந்த சிலவாரங்களாக தன்னை பற்றி வதந்திகளிற்காக வேறு வீடியோக்களும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215789
  23. முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் - மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நிலையில் விளையாடப் போகின்றன என்பதற்கான முதல்கட்ட தெளிவு கிடைத்துள்ளது. அதன்படி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகியுள்ளது. மும்பை அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4வது இடத்தைப் பிடித்த ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை. மும்பை கோப்பையை வென்ற 5 முறைகளிலும் அந்த அணி டாப் 2 இடங்களையே பெற்று வந்துள்ளது. பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனால், ஆர்சிபி அணி இன்று நடக்கும் கடைசி லீக்கில் வென்றால் அந்த அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும். இல்லையெனில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதவேண்டிய சூழல் ஏற்படும். ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மோதப் போவது குஜராத் அணியுடனா அல்லது ஆர்சிபியுடனா என்பது இன்றிரவு நடக்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இன்றிரவு நடக்கும் கடைசி லீக்கில் லக்னெள அணியை ஆர்சிபி வென்றால், முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும். ஆர்சிபி தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி பஞ்சாப் அணியுடன் முதல் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணி, 2வது தகுதிச்சுற்றில் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை வென்றாலே முதல் தகுதிச்சுற்றில் இடம் பெற்றுவிடும். ஒருவேளை முதலிடத்தில் இருந்து பஞ்சாப் அணியைக் கீழே இறக்க வேண்டுமெனில், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, லக்னெள அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது 200 ரன்கள் சேர்த்து 21 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் லக்னெள அணியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். லக்னெள அணியிடம் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றாலே முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடும். ஒருவேளை ஆர்சிபி அணி, லக்னெள அணியை வென்றுவிட்டால், குஜராத் அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணி பஞ்சாப் உடன் விளையாட வேண்டுமெனில், அதற்கு இருக்கும் ஒரே வழி ஆர்சிபி தோல்வி அடைவதுதான். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிரியன்ஸ் ஆர்யா(63), ஜாஸ் இங்கிலிஸ்(73) ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர். ஐந்தாவது ஓவரில் சேர்ந்த இருவரையும் பிரிக்க முடியாமல் சிரமப்பட்ட மும்பை பந்துவீச்சாளர்கள் 15வது ஓவரில்தான் பிரித்தனர். வெற்றிக்குத் தேவையான அற்புதமான ஆட்டத்தை வழங்கி, 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த ஜாஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வேறுமுகம் காட்டிய ஆர்யா, இங்கிலிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது பிரியன்ஸ் ஆர்யா இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராக அதிரடி பேட்டிங்கில்தான் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். முதலில் பேட் செய்த போதெல்லாம் ஆர்யாவின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது. அணியின் சூழலை உணர்ந்து, மிகுந்த பொறுப்புடன் நிதானமாகத் தன்னால் ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை வெளிப்படுத்திய ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டராக ஆர்யா இருந்தார். தொடக்கத்தில் போல்ட் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஆர்யா, பிரப்சிம்ரன் ஆட்டமிழந்ததும் நிதானத்திற்கு வந்தார். ஜாஸ் இங்கிலிஸ் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தொடக்கத்தில் இருந்தே இங்கிலிஸ் சிறப்பாகச் செய்தார். இங்கிலிஸ், அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியதும் ஆர்யா நிதானமாக பேட் செய்து, மோசமான பந்துகளில் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி, லாங்ஆனில் சிக்ஸர் விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். அதுமட்டுமின்றி பும்ரா பந்துவீச்சுக்கும் அஞ்சாத ஆர்யா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். அஸ்வனி குமார் பந்துவீச்சில் இங்கிலிஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் ஓவரை கதறவிட்ட இங்கிலிஸ், சிக்ஸர், பவுண்டரி என 2 ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். பவர்ப்ளேவில் 47 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி அதன் பின்னர் சீராக ரன்ரேட்டை உயர்த்தி 6 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வெற்றியை நோக்கி ஓடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜஸ்பிரித் பும்ரா இங்கிலிஸ், ஆர்யா கூட்டணியைப் பிரிக்க ஹர்திக் பாண்டியா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் 10 ஓவர்களாக இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக சான்ட்னர் வீசிய 15வது ஓவரில் யாதவிடம் கேட்ச் கொடுத்து, ஆர்யா 62 ரன்களில்(2 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், இங்கிலிஸுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி உந்தித் தள்ளினார். இங்கிலிஸ் தொடரந்து அதிரிடியாக ஆடி ரன்களையும், பந்துகளையும் சமன் செய்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் கால்காப்பில் வாங்கி இங்கிலிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஸ் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. களத்தில் இருந்த ஸ்ரேயாஸ், அடுத்து களமிறங்கிய நேகல் வதேரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 26 ரன்களிலும், வதேரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பையை காப்பாற்றிய ஸ்கை அரைசதம் இந்த ஆட்டத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. ரிக்கல்டன், ரோஹித் கூட்டணியின் தொடக்கம் பெரிதாக அமையவில்லை. தனது கடைசி லீக்கில் ஆடிய ரிக்கில்டன் 27 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது வீரராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூர்யகுமார் வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் வைஷாக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், வில் ஜேக்ஸும் 17 ரன்களுடன் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மும்பை அணிக்கு நேற்று ரோஹித், ரெக்கில்டன் கூட்டணி எதிர்பார்த்த தொடக்கத்தை வழங்கவில்லை, நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். இதனால் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்துடன் ஆடினார். பஞ்சாப் அணி தரப்பில் யான்சென், அர்ஷ்தீப், வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 'எங்களுக்கு வெற்றி பெறத் தெரியும்' மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் "நாங்கள் 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். இதுவரை நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இன்று இரவு அவ்வாறு ஆடாததால், அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம். ஆகையால், எப்படி வெற்றி பெறுவது எனத் தெரியும். போட்டி கடினமாகத்தான் இருக்கும். எங்கள் அணியின் முன்னோர்களுடைய வழியைப் பின்பற்றினால், மற்ற அணிகளை வெல்ல முடியும். கடந்த காலங்களில் மும்பை பெற்ற வெற்றியின் வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது, நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லலாம்" என்று தெரிவித்தார். மேலும், "எங்கள் பேட்டிங்கில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாகத் தேவை, எங்கள் பந்துவீச்சும் இன்று சிறப்பாக இல்லை. ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர். அதிகமாக பதற்றப்படத் தேவையில்லை, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy90pe2nzxyo
  24. Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215773

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.