Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது அந்தச் செய்தி. இதைத் தொடர்ந்து, "விசாரணை நீதிமன்றம் இளைஞருக்கு முன்ஜாமீன் அளித்தது. பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்" எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதில், "வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ, திருமண வாக்குறுதி அளித்தோ அவரது சம்மதம் பெறப்பட்டதாகத் தோன்றவில்லை. எங்கள் ஒருமித்த கருத்து என்னவென்றால், இது திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்த விவகாரம் அல்ல. ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, அந்த உறவில் பிளவு ஏற்படும்போதோ, கசப்புணர்வு ஏற்படும்போதோ, குற்ற வழக்கு தொடர அந்தச் சம்மத உறவு முகாந்திரம் ஆகாது. இதுபோன்ற நடத்தைகள் நீதிமன்றத்துக்குச் சுமையாவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சட்டப் பிரிவுகளைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம். திருமணம் செய்துகொள்வதாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியையும் போலி வாக்குறுதி என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்வது முட்டாள்தனம். ஏற்கெனவே திருமணமான பெண், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மற்றொருவருடன் உறவு வைத்துக்கொண்டதாகக் கூறுவதையும் நம்ப முடியாது. எனவே, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்," என நீதிபதிகள் கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5y1z7ezpvo
  2. 27 MAY, 2025 | 10:55 AM "நாங்கள் விளையாட்டுக்கு சண்டைபிடித்துக்கொண்டோம்" - விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அளித்த விளக்கம் இதுதான். வார இறுதியில் தென்கிழக்காசிய பயணத்தை ஆரம்பிப்பதற்காக விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் கணவரின் முகத்தில் கைவைத்து தள்ளிவிடுவதை காண்பிக்கும் வீடியோ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தருணம் பிரான்சின் தலைப்புச்செய்திகளில் வேகமாக இடம்பிடித்தது. அப்போதுதான் திறந்த விமானக்கதவு ஊடாக வீடியோக்கள் பார்த்த விடயத்தை பிரான்ஸ் ஊடகங்கள் அர்த்தப்படுத்த முயன்றன. பிரான்சின் லு பரிசியன் நாளேட்டின் இணையத்தளம் அறையா அல்லது சண்டையா என கேள்வி எழுப்பியது. பிரான்ஸ் ஜனாதிபதி தனது மனைவியுடன் விமானத்திலிருந்து இறங்கும் படத்திற்கு பலர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி நான் மாணவனாகயிருந்த வேளை அவர் ஆசிரியராகயிருந்தார், நாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டோம், நாங்கள் விமானத்தில் வேடிக்கையாக விளையாடினோம் என தெரிவித்துள்ளார். நாங்கள் விளையாட்டுக்கு சண்டை பிடித்துக்கொண்டோம், இந்த விடயத்தை அளவுக்கதிகமாக ஏதோ புவிகிரக பேரழிவு போல ஊதிப்பெருப்பிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏபிஊடகவியலாளர் எடுத்த வீடியோவில், பிரான்ஸ் ஜனாதிபதி வியட்நாமிற்கு விமானத்தில் வந்து இறங்குவதையும், சீருடை அணிந்த நபர் ஒருவர் விமானத்தின் கதவை திறந்து பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளே காணப்படுவதை காண்பிப்பதையும் ஜனாதிபதி யாருடனோ கதைத்துக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. பிரிஜிட் மக்ரோனின் கரங்கள் ( சிவப்பு ஆடை) மக்ரோனை தள்ளிவிடுவதையும், ஒரு கை மக்ரோனின் வாயையும் மூக்கின் ஒரு பகுதியையும் மூடுவதையும், மற்றை கை அவரது தாடையை பிடித்திருப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பின்வாங்கி, தலையை திருப்பிகொள்கின்றார், பின்னர் கமராக்கள் தன்னை பதிவு செய்வதை பார்த்ததும், புன்னகைத்து கை அசைக்கின்றார். அதன் பின்னர் ஜனாதிபதியும் மனைவியும் விமானப்படிகளில் காணப்படுகின்றார், ஜனாதிபதி தனது கரங்களை மனைவியை நோக்கி நீட்டுகின்றார், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை, இருவரும் விமானத்திலிருந்து இறங்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது. இந்த படங்களும் அதற்கான எதிர்வினைகளும், தவறான தகவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, கடந்த சிலவாரங்களாக தன்னை பற்றி வதந்திகளிற்காக வேறு வீடியோக்களும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215789
  3. முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் - மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நிலையில் விளையாடப் போகின்றன என்பதற்கான முதல்கட்ட தெளிவு கிடைத்துள்ளது. அதன்படி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகியுள்ளது. மும்பை அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4வது இடத்தைப் பிடித்த ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை. மும்பை கோப்பையை வென்ற 5 முறைகளிலும் அந்த அணி டாப் 2 இடங்களையே பெற்று வந்துள்ளது. பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனால், ஆர்சிபி அணி இன்று நடக்கும் கடைசி லீக்கில் வென்றால் அந்த அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும். இல்லையெனில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதவேண்டிய சூழல் ஏற்படும். ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மோதப் போவது குஜராத் அணியுடனா அல்லது ஆர்சிபியுடனா என்பது இன்றிரவு நடக்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இன்றிரவு நடக்கும் கடைசி லீக்கில் லக்னெள அணியை ஆர்சிபி வென்றால், முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும். ஆர்சிபி தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி பஞ்சாப் அணியுடன் முதல் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணி, 2வது தகுதிச்சுற்றில் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை வென்றாலே முதல் தகுதிச்சுற்றில் இடம் பெற்றுவிடும். ஒருவேளை முதலிடத்தில் இருந்து பஞ்சாப் அணியைக் கீழே இறக்க வேண்டுமெனில், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, லக்னெள அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது 200 ரன்கள் சேர்த்து 21 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் லக்னெள அணியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். லக்னெள அணியிடம் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றாலே முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடும். ஒருவேளை ஆர்சிபி அணி, லக்னெள அணியை வென்றுவிட்டால், குஜராத் அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணி பஞ்சாப் உடன் விளையாட வேண்டுமெனில், அதற்கு இருக்கும் ஒரே வழி ஆர்சிபி தோல்வி அடைவதுதான். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிரியன்ஸ் ஆர்யா(63), ஜாஸ் இங்கிலிஸ்(73) ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர். ஐந்தாவது ஓவரில் சேர்ந்த இருவரையும் பிரிக்க முடியாமல் சிரமப்பட்ட மும்பை பந்துவீச்சாளர்கள் 15வது ஓவரில்தான் பிரித்தனர். வெற்றிக்குத் தேவையான அற்புதமான ஆட்டத்தை வழங்கி, 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த ஜாஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வேறுமுகம் காட்டிய ஆர்யா, இங்கிலிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது பிரியன்ஸ் ஆர்யா இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராக அதிரடி பேட்டிங்கில்தான் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். முதலில் பேட் செய்த போதெல்லாம் ஆர்யாவின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது. அணியின் சூழலை உணர்ந்து, மிகுந்த பொறுப்புடன் நிதானமாகத் தன்னால் ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை வெளிப்படுத்திய ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டராக ஆர்யா இருந்தார். தொடக்கத்தில் போல்ட் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஆர்யா, பிரப்சிம்ரன் ஆட்டமிழந்ததும் நிதானத்திற்கு வந்தார். ஜாஸ் இங்கிலிஸ் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தொடக்கத்தில் இருந்தே இங்கிலிஸ் சிறப்பாகச் செய்தார். இங்கிலிஸ், அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியதும் ஆர்யா நிதானமாக பேட் செய்து, மோசமான பந்துகளில் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி, லாங்ஆனில் சிக்ஸர் விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். அதுமட்டுமின்றி பும்ரா பந்துவீச்சுக்கும் அஞ்சாத ஆர்யா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். அஸ்வனி குமார் பந்துவீச்சில் இங்கிலிஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் ஓவரை கதறவிட்ட இங்கிலிஸ், சிக்ஸர், பவுண்டரி என 2 ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். பவர்ப்ளேவில் 47 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி அதன் பின்னர் சீராக ரன்ரேட்டை உயர்த்தி 6 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வெற்றியை நோக்கி ஓடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜஸ்பிரித் பும்ரா இங்கிலிஸ், ஆர்யா கூட்டணியைப் பிரிக்க ஹர்திக் பாண்டியா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் 10 ஓவர்களாக இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக சான்ட்னர் வீசிய 15வது ஓவரில் யாதவிடம் கேட்ச் கொடுத்து, ஆர்யா 62 ரன்களில்(2 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், இங்கிலிஸுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி உந்தித் தள்ளினார். இங்கிலிஸ் தொடரந்து அதிரிடியாக ஆடி ரன்களையும், பந்துகளையும் சமன் செய்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் கால்காப்பில் வாங்கி இங்கிலிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஸ் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. களத்தில் இருந்த ஸ்ரேயாஸ், அடுத்து களமிறங்கிய நேகல் வதேரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 26 ரன்களிலும், வதேரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பையை காப்பாற்றிய ஸ்கை அரைசதம் இந்த ஆட்டத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. ரிக்கல்டன், ரோஹித் கூட்டணியின் தொடக்கம் பெரிதாக அமையவில்லை. தனது கடைசி லீக்கில் ஆடிய ரிக்கில்டன் 27 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது வீரராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூர்யகுமார் வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் வைஷாக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், வில் ஜேக்ஸும் 17 ரன்களுடன் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மும்பை அணிக்கு நேற்று ரோஹித், ரெக்கில்டன் கூட்டணி எதிர்பார்த்த தொடக்கத்தை வழங்கவில்லை, நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். இதனால் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்துடன் ஆடினார். பஞ்சாப் அணி தரப்பில் யான்சென், அர்ஷ்தீப், வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 'எங்களுக்கு வெற்றி பெறத் தெரியும்' மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் "நாங்கள் 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். இதுவரை நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இன்று இரவு அவ்வாறு ஆடாததால், அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம். ஆகையால், எப்படி வெற்றி பெறுவது எனத் தெரியும். போட்டி கடினமாகத்தான் இருக்கும். எங்கள் அணியின் முன்னோர்களுடைய வழியைப் பின்பற்றினால், மற்ற அணிகளை வெல்ல முடியும். கடந்த காலங்களில் மும்பை பெற்ற வெற்றியின் வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது, நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லலாம்" என்று தெரிவித்தார். மேலும், "எங்கள் பேட்டிங்கில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாகத் தேவை, எங்கள் பந்துவீச்சும் இன்று சிறப்பாக இல்லை. ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர். அதிகமாக பதற்றப்படத் தேவையில்லை, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy90pe2nzxyo
  4. Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215773
  5. Published By: VISHNU 27 MAY, 2025 | 04:02 AM யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார். இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மானிப்பாய் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். தீ காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/215770
  6. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 09:47 AM போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர். வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன. https://www.virakesari.lk/article/215782
  7. பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு, சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 மே 2025 'ஒரு மனிதனின் தாழ்ந்த நிலையைக் காரணம் காட்டி கோவில்களில் நன்கொடை பெற மறுப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்' என, கடந்த ஏப்ரல் 29 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் திருநாகேஸ்வரர் கோவிலில் தங்களை உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறி பட்டியல் பிரிவினர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில் அறங்காவலர்களும் மறுக்கின்றனர். தங்களிடம் மனு கொடுக்காமல் நீதிமன்றத்தை நாடிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். கோவிலில் என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் சிறப்புகளைக் கூறுவதற்கு 45 கல்வெட்டுகள் உள்ளதாக கோவில் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் இணையதளம் கூறுகிறது. கி.பி. 1192 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதாகவும் கோவிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டுக்காக தானம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி. 1546 ஆம் ஆண்டு விஜயநகர மன்னரும் திருநாகேஸ்வரம் வந்துள்ளதாகவும் பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளதாகவும் அறநிலையத்துறை கூறியுள்ளது. குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் கிராமத்தில் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கூலி வேலைகள் பிரதானமாக உள்ளன. 'குறிப்பிட்ட சாதி கட்டுப்பாட்டில் கோவில்' பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார். "கோவிலுக்கு அருகில் முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுவில் உள்ளனர். ஆனால், திருநாகேஸ்வரர் கோவிலை குறிப்பிட்ட சாதியினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாண்டியராஜன். இவர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தான் கோவிலில் உபயதாரராக உள்ளதாகக் கூறும் அவர், "பட்டியல் சாதியைப்போல பிற சாதியினருக்கு உபயதாரராக முக்கியத்துவம் தருவதில்லை. அனைத்து சாதிகளுக்கும் உரிமை கொடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை மூன்று வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார். 'கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல' தீர்ப்பில், 'இந்த நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தன்னைவிட கீழ் நிலையில் உள்ள நபரிடம் நன்கொடைகளை வாங்காமல் இருப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம். கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல' என நீதிபதி கூறியுள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதேபோன்ற ஒரு வழக்கில் (நாமக்கல் மாவட்டம் பொன் காளியம்மன் கோவில் வழக்கு) பிப்ரவரி 5 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். இந்த வழக்கில், 'காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவிலில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உபயதாரராக இருக்க முடியும்' என இந்து அறநிலையத்துறை வாதிட்டதாகக் கூறுகிறார், வழக்கைத் தொடர்ந்த பாண்டியராஜனின் வழக்கறிஞர் சுகந்தன். "சமூக நீதி அரசை நடத்துவதாகக் கூறும் ஆட்சியில் இப்படியொரு பதிலைக் கூற முடியாது. கோவிலில் பக்தர்களிடம் நன்கொடைகளை வாங்குகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சாதியினரின் விழாவாக கொண்டாடுகின்றனர்" எனக் கூறுகிறார். பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE அழைப்பிதழ் சர்ச்சை திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. "பத்து நாட்களாக நடைபெற்ற இந்த விழாவுக்கு அனைத்து சாதியினரிடம் இருந்தும் நன்கொடை பெற்றனர். ஆனால், விழா அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் பெயர் மட்டும் இருந்தது" எனக் கூறுகிறார், குன்றத்தூரை சேர்ந்த வைரமுத்து. கோவில் விழா தொடர்பான அழைப்பிதழை நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சமர்ப்பித்ததாகக் கூறும் வைரமுத்து, "குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" என்கிறார். கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட சாதியின் பெயரில் சங்கம், திருமண மண்டபம் உள்ளதாகக் கூறும் அவர், "இது அவர்களின் மூதாதையரின் கோவிலாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்" என்றார். திருநாகேஸ்வரர் கோவில் கடந்த 1968 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பாண்டியராஜன், "60 பேர் கொண்ட குழுவில் பத்து பேர் உபயதாரராக உள்ளனர். அவர்கள் 10 பேரும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடத்துகின்றனர். வேறு சாதிக்கு அனுமதியில்லை" என்கிறார். "திருவிழாவுக்கு நன்கொடை வசூல் செய்தால் அதற்குரிய ரசீதுகள் கொடுக்கப்படுவதில்லை. கணக்கு வழக்குகளும் இல்லை. அனைத்தும் தங்கள் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், "கோவிலில் வழிபாடு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறும் வைரமுத்து, "கோவிலில் உபயதாரராக பட்டியல் சாதி உள்பட இதர சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நன்கொடைகளையும் பாரபட்சம் பார்த்து தான் வாங்குகின்றனர்" எனக் கூறுகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ்பாபு முழுமையாக மறுத்தார். அறங்காவலர் குழு சொல்வது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE படக்குறிப்பு,திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. "முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் இந்தக் கோவில் வருகிறது. அதன்படி அறங்காவலர் குழுவில் ஒரே சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு நியமிக்கப்படும் ஐந்து அறங்காவலர்களில் 3 பேரை அறநிலையத்துறை ஆணையரும் 2 பேரை துறையின் செயலரும் நியமிப்பார்கள்" என்கிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "எங்கள் சாதியினர் கோவிலை சிறப்பாக நிர்வாகம் செய்வதாகக் கூறி நாயக்கர், செட்டியார், வன்னியர், ஆதிதிராவிடர் என அனைவரும் சேர்ந்து கடிதம் கொடுத்தனர். அதை அடிப்படையாக வைத்து நிர்வாகம் செய்து கொள்வதற்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது" எனக் கூறுகிறார் ராஜ்பாபு. ஒரு சாதியினர் உரிமை கோர முடியுமா? தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினர் கோவிலை நிர்வகிக்க உரிமை கோரினால், அறநிலையத்துறை சட்டப்படி அதனை பரிசீலித்து அனுமதி வழங்கும் நடைமுறையை நிர்வாக திட்டம் (scheme) எனக் கூறுகின்றனர். இவை கிராமங்கள், ஊர்க்காரர்கள், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 'கோவிலுக்கு ஒரு சாதியினர் மட்டும் உரிமை கோர முடியாது' என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவில் வழக்கில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்வதாக தீர்ப்பில் கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, பெரும்பாலான பொதுக் கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறிய நீதிபதி, 'அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது' எனக் குறிப்பிட்டார். "தகவல் சொல்லாமல் வழக்கு" அதேநேரம், தங்கள் வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மனுதாரர் வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் திருநாகேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ் பாபு. "கோவிலில் உபயம் செய்வதற்கு ஏதுவாக பொறுப்பு கொடுக்குமாறு கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், எந்தவித தகவலும் சொல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்" என்கிறார். "அதேநேரம், நன்கொடை பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. கோவிலில் 16 உண்டியல்கள் உள்ளன. ஏராளமான கியு.ஆர் கோடு அட்டைகள் உள்ளனர். யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடைபெற்ற பிரம்மோற்வ விழாவுக்கு உபயதாரர்கள், பக்தர்கள், ஊர் பெரியவர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். "நன்கொடை வாங்காமல் எந்த விழாவையும் நடத்த முடியாது. அனைத்துக்கும் கணக்குகள் உள்ளன. இதில் தவறு நடந்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும்" என்கிறார் ராஜ்பாபு. "அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அவர்களிடம் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்" எனக் கூறும் ராஜ்பாபு, "கோவிலில் கருங்கல் மண்டபம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். அப்போதெல்லாம் உதவி செய்வதற்கு இவர்கள் வரவில்லை" எனக் கூறினார். பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE அறநிலையத்துறை கூறுவது என்ன? கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் பேசியது. "இதுவரை உபயதாரராக சேர்க்குமாறு அவர்கள் எந்த மனுவையும் கொடுக்கவில்லை. ஏதேனும் இடங்கள் காலியாக இருந்திருந்தால் மனுவை பரிசீலித்திருப்போம். ஆனால், நேரடியாக நீதிமன்றம் சென்றுவிட்டனர்" எனக் கூறினார். உபயதாரர்களையும் நன்கொடையாளர்களையும் கோவில் நிர்வாகம் வரவேற்பதாகக் கூறும் சுதாகர், "யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். எந்த சாதி வேறுபாடுகளும் இல்லை" என்கிறார். கோவிலுக்கு குறிப்பிட்ட சாதியினர் பணம் செலவழித்து விழாக்களை நடத்துவதாகக் கூறும் சுதாகர், "உபயதாரர்களாக அவர்கள் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதனைச் செய்து வருகின்றனர்" என்கிறார். முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் நாகேஸ்வரம் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலராக இருக்க வேண்டும் என 1981 ஆம் ஆண்டு சென்னை அறநிலையத்துறை துணை ஆணையர் மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் உரிமை கோர முடியாது" என, நாமக்கல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களை குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலர்களாக இருந்து நிர்வாகம் செய்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில் வழக்கில் இணை ஆணையர் விசாரணை நடத்தி மனுவை பரிசீலனை செய்வார்" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gk2vxx6e4o
  8. கேரளாவில் கடலில் மூழ்கிய கப்பல்; கரை ஒதுங்கும் ஆபத்தான கொள்கலன்கள் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 26 MAY, 2025 | 11:24 AM கேரள கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய எம்.எஸ்.சி எல்சா 3 (MSC ELSA 3) சரக்குக் கப்பலில் இருந்த கொள்கலன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. இன்று (மே 26) கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் நான்கு கடலோரப் பகுதிகளில் இந்த கொள்கலன்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையப் பொருட்களிலிருந்து மக்கள் குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கப்பலில் 640 கொள்கலன்கள் கண்டெய்னர்கள் இருந்ததாகவும் அவற்றில் 13 "அபாயகரமான சரக்குகளையும்" 12 கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்ததாகவும் கடலோர காவல்படை தெரிவித்திருந்தது. மேலும்கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசலும் 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் ஆயிலும் இருந்தன. இதையடுத்து மூழ்கிய கப்பலில் இருந்து வரும் கொள்கலன்கள் பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களுடன் மத்திய மற்றும் தெற்கு கேரளக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதால் மாநில அரசு கடற்கரையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தவிர கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கேரளக் கடற்கரையின் எந்தப் பகுதியையும் அடையலாம் என்பதால் அது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் கசிந்த எண்ணெய்யின் மாசு வெளியான 36-48 மணி நேரத்திற்குள் ஆலப்புழா அம்பலப்புழா ஆற்றுப்புழா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய கடலோரப் பகுதிகளை அடையலாம் என்று கூறியிருந்தது. "இந்தக் கடலோரப் பகுதிகள் மாசுபடும் அபாயத்தில் உள்ளன. சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் அது குறிப்பிட்டது. கரைக்கு ஒதுங்கிய கொள்கலன்களுக்கு அருகில் செல்பவர்களுக்கு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. சில கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதால் மக்கள் அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சுங்கத்துறை அவற்றை ஆய்வு செய்யும். தெற்கு மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் ( வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எண்ணெய் கசிவு கரைக்கு வரும் பட்சத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெற்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215704
  9. INNINGS BREAK 69th Match (N), Jaipur, May 26, 2025, Indian Premier League PBKS chose to field. Mumbai Indians (20 ov) 184/7 Current RR: 9.20 • Last 5 ov (RR): 53/3 (10.60) Punjab Kings Win Probability: MI 48.00% • PBKS 52.00%
  10. பெரும் நம்பிக்கை சிறுத்து சிறுத்து தேய்பிறையாக நிற்கிறது, அமாவாசையா பௌர்ணமியா வரும் எனத்தெரியவில்லை! உண்மை. இன்னும் ஓராண்டில் தெரியவரும்.
  11. அண்ணை, உண்மையில் உற்பத்தியாளருக்கே தண்டனை வழங்கப்படவேண்டும். அயோடின் பற்றாக்குறையாலும் வருத்தங்கள் வருமாம், கூடினாலும் வருத்தங்கள் வருமாம். அயோடின் கலந்த உப்பு (Iodised salt) என்பது உணவில் சேர்க்கப்படும் உப்புடன் தனிம அயோடினைக் கொண்டுள்ள பல்வேறு உப்புகளை மிகச்சிறிய அளவில் கொண்டுள்ள உப்பாகும். அயோடின் உட்கொள்வது அயோடின் குறைபாட்டைத் தடுக்கிறது. உலகளவில், அயோடின் குறைபாடு சுமார் இரண்டு பில்லியன் மக்களை பாதிக்கிறது இந்தக் குறைபாடு அறிவு சார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. [1] இக்குறைபாடு தைராய்டு சுரப்பி பிரச்சினைகளையும் "ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குரிய முன்கழுத்துக் கழலை நோய்" உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. பல நாடுகளில், அயோடின் குறைபாடு என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாகும், இப்பிரச்சனையை சோடியம் குளோரைடு உப்பில் சிறிய அளவு அயோடினை வேண்டுமென்றே சேர்ப்பதன் மூலம் எளிதாக தீர்க்க முடியும். அயோடின் என்பது ஒரு நுண்ணூட்டச்சத்து மற்றும் உணவுத் தாது ஆகும், இது இயற்கையாகவே சில பகுதிகளில், குறிப்பாக கடற்கரைகளுக்கு அருகில் உள்ள உணவுப் பொருள்களில் காணப்படுகிறது. ஆனால், பொதுவாக பூமியின் மேலோட்டடில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. ஏனெனில், அயோடின் கனமான தனிமமாகும். வேதியியல் தனிமங்களின் எளிதில் கிடைக்கும் தன்மையானது அணுநிறை அதிகரிக்க, அதிகரிக்க குறைகிறது. மண்ணில் இயற்கையான அயோடின் அளவு குறைவாகவும், காய்கறிகளால் அயோடின் எடுக்கப்படாமலும் இருக்கும்போது, உப்பில் சேர்க்கப்படும் அயோடின் மனிதர்களுக்குத் தேவையான சிறிய ஆனால் அத்தியாவசியமான அயோடினை வழங்குகிறது. அயோடினுடன் கூடிய சாதாரண சமையல் உப்பின் திறந்து வைக்கப்பட்டால், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பத நிலைகளில் அதன் அயோடின் உள்ளடக்கத்தை அது ஆக்சிஜனேற்றம் மற்றும் அயோடின் பதங்கமாதல் செயல்முறையின் மூலம் விரைவாக இழக்கக்கூடும்.[2] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 உப்பில் இத்தனை வகைகளா? உடல் ஆரோக்கியத்திற்கு எது பெஸ்ட் சுருக்கம் உணவில் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் உப்பில் பல வகைகள் உள்ளன. இவற்றில் எந்த வகையான உப்பை பயன்படுத்த வேண்டும்? எதை பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். எல்லா வகை உப்புகளின் அடிப்படை மூலக்கூறு சோடியம் குளோரைடு (NaCl) தான். ஆனால், இந்த மூலக்கூறோடு கலந்திருக்கும் கனிமங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் பொறுத்து உப்பின் சுவை, நிறம் மற்றும் ஆரோக்கியப் பண்புகள் வேறுபடுகின்றன. கருப்பு உப்பு : பெரும்பாலும் இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது எரிமலைப் பாறைகளுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதால் கந்தகத்தின் சுவையை பெறுகிறது. இதன் தனித்துவமான சுவை இந்திய உணவு வகைகளில், குறிப்பாக சாட் மசாலா, ரைதா மற்றும் சில சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. இது கருப்பு நிறத்தில் இருந்தாலும், தூளாக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கடல் உப்பு : கடல் நீரிலிருந்து ஆவியாதல் மூலம் பெறப்படுகிறது. கடல் உப்பு அதன் தோற்றுவாயைப் பொறுத்து பல்வேறு கனிமங்களைக் கொண்டிருக்கலாம். இதனால் அதன் சுவையில் நுட்பமான வேறுபாடுகள் இருக்கலாம். சில கடல் உப்புகள் பெரிய படிகங்களாக இருக்கும். சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய படிக உப்புக்கள் உணவின் மீது தூவி அலங்கரிக்கவும், கூடுதல் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இளஞ்சிவப்பு உப்பு : இதுவும் இமயமலைப் பகுதிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல் உப்பு. இதில் இரும்பு ஆக்சைடு போன்ற தாதுக்கள் இருப்பதால் இது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது சாதாரண உப்பை விட அதிக கனிமங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் அவற்றின் அளவு மிகக் குறைவு. சமையலிலும், ஸ்பா சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கவர்ச்சியான நிறம் காரணமாக உணவு அலங்காரத்திற்கும் பயன்படுகிறது. அயோடைஸ் உப்பு : டேபிள் சால்ட் எனப்படும் இந்த உப்பில், சோடியம் அல்லது பொட்டாசியம் அயோடைடு போன்ற சேர்மங்கள் சேர்க்கப்படுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அயோடின் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம். இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இது மூளை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியம். அயோடின் குறைபாடு தைராய்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எது சிறந்தது? ஒவ்வொரு வகை உப்பும் அதன் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. "சிறந்தது" என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து இது மாறுபடும்: சுவை: கருப்பு உப்பு தனித்துவமான கந்தகச் சுவையைக் கொடுக்கும். கடல் உப்பு அதன் கனிமச் சத்துக்கள் காரணமாக நுட்பமான சுவை வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இளஞ்சிவப்பு உப்பு லேசான சுவையைக் கொண்டிருக்கும். ஆரோக்கியம்: அயோடைஸ் உப்பு அயோடின் குறைபாட்டைத் தடுக்க உதவுகிறது, மற்ற உப்புகளில் உள்ள கனிமங்களின் அளவு மிகக் குறைவு, அவை குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை அளிக்குமா என்பது கேள்விக்குறியே. அதிகப்படியான உப்பு உட்கொள்வது அனைத்து வகை உப்புகளுக்கும் பொதுவானது மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பயன்பாடு: சில உணவுகளுக்கு குறிப்பிட்ட வகை உப்பு சிறந்தது. உதாரணமாக, சாட் உணவுகளுக்கு கருப்பு உப்பு, அலங்காரத்திற்கு பெரிய படிக கடல் உப்பு அல்லது இளஞ்சிவப்பு உப்பு பொருத்தமாக இருக்கும். https://tamil.asianetnews.com/health-food/types-of-salt-which-one-is-good-for-the-body-svj332
  12. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்டது. இவ்வாண்டு கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத் தூபி அந்நாட்டு அரச அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களிடையே புத்தெழுச்சியை கொடுத்துள்ளது. இப்பின்னணியிலேயே இக்கட்டுரை கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியும், அதனை மையப்படுத்தி எழுந்துள்ள உரையாடல்களினதும் அரசியல் வகிபாகத்தை அடையாளங் காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்கள் அரச இயந்திரத்தின் நெருக்கடி பின்னணிகளுக்குள்ளேயே, மக்களின் தன்னார்வ எழுச்சிகளால் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. எனினும் தாயகத்தில் நினைவேந்தல்கள் நிலையான வடிவத்தை பெற முடியவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியான துயராகவே காணப்படுகின்றது. இறுதி யுத்தத்தை தழுவி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று தமிழினப் படுகொலைக்கான பொது நினைவேந்தல் கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. எனினும், முள்ளிவாய்க்காலின் நினைவு முற்றக்காணி தொடர்பிலும் இடையிடையே சில சச்சரவான வாதங்களும் அரச ஆளுகைக்கான முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றது. அவ்வாறே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும் 2021 ஆம் ஆண்டு இராணுவ நெருக்கீட்டில் உடைக்கப்பட்டது. எனினும் மாணவர்கள், மக்களின் தன்னார்வ எழுச்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் மீள் நிர்மாணிப்புக்கு இலங்கை அரசாங்கம் மறுக்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டது. எனினும் அந்நிர்மாணமும் திட்டமிடப்பட்ட முழுமையான வடிவத்தை பெறவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே தாயகத்தில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி வெறுமையாக காணப்படினும், தாயகத்துக்கு வெளியே ஈழத்தமிழர் மீதான இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத கட்டமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் நினைவுத் தூபிகளாக பதிக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு தாய்த் தமிழகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவாலயம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நவம்பர்-08, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும். இந்த நினைவு முற்றத்தில் போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட சுவரில் தனித்தனி கற்களால் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம், முத்தமிழ் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தலைவர்கள் முதல் தமிழீழ விடுதலைப் போரின் போது தன் உயிரை ஈகையாக தந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படங்கள் போன்ற 300க்கும் மேற்பட்டோர் படங்கள் வைக்கப்பட்டது. தற்போது கனடாவின் பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நகர மேயரின் ஈடுபாட்டுடன் தமிழ் இனப்படுகொலைக்கான நினைவுத் தூபி மே-10, 2025 அன்று திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபிக்கான அடிக்கல் ஆகஸ்ட் 14, 2024 அன்று நாட்டப்பட்டது. அன்றிலிருந்து இராஜதந்திர உறவின் அடிப்படையிலும், நீதித்துறையினூடாகவும் இத்தூபி நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எவையுமே சாத்தியப்படவில்லை. இதற்கான உயர்ந்தபட்ச எதிர்வினையாக பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுத்தூபி திறப்பு விழாவில், “இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுபவர்களுக்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை. கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வான உற்சாகத்தை அளித்துள்ளது. ஈழத்தமிழர்களும் சமூக வலைத்தளங்களில் பிரம்டன் மேயரை நாயகனாய் கொண்டாடுகின்றார்கள். கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை அழைத்து தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான படங்களில் இலங்கையின் உடல்மொழி கடுமையானதாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, போர்க்கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும் தமது போர் வெற்றி வாக்குகளை பேணும் வகையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது கனேடிய அரசாங்கத்தின் அரசியல் உந்துதல் நடவடிக்கையாகத் தோன்றுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக பிரிவினையைத் தூண்டிவிட்டன.” என்றவாறு நாமல் ராஜக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். எனினும் கனடா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களையோ அல்லது இலங்கை எதிர்க்கட்சிகளின் இனவாத பிரசாரங்களையோ பொருட்படுத்துவதாக அமையவில்லை. மாறாக தமது செயற்பாட்டின் நியாயப்பாட்டையும் இலங்கையின் இனவாத அரசியலின் முகத்தை தோலுரிப்பதாகவுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்சவின் பதிவை பகிர்ந்து, “தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கு ராஜபக்சவின் எதிர்ப்பானது, இந்தக் குடும்பத்தின் கையால் இழந்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை உணர்ந்து நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்” என்றவாறு பதிலளித்துள்ளார். தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள். கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி நிறுவப்பட்டதும், அது சார்ந்து எழும் உரையாடல்களும் ஈழத்தமிழர்களிடையே எழுச்சிமிகு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை எதிர்கொண்டவர்களை உணர்ச்சிகள் வெகுவாக ஆட்கொண்டு விடுகின்றது. எனினும் இதனை வெறுமனவே உணர்ச்சிக்குட்பட்டதாக கடந்து விடமுடியாது. இது ஆழமான அரசியல் நடைமுறைக்கான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஆதலாலேயே இலங்கை அரசாங்கம் 2024 இல் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து அதனை நிறுத்துவதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. தற்போதும் தனது விசனத்தை கடுமையான உடல்மொழிகள் உள்ளடங்கலாக வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. முதலாவது, கனடா அரசியல் தரப்பினரது செயற்பாடுகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமான படிப்பினையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் தாயக மக்களும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் வாக்குகள் மூலம் அரசியல் அடையாளத்தை பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டதை இனப்படுகொலையாக குறிப்பிட முடியாதென்றவாறு கருத்துரைத்துள்ளனர். எனினும் கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமந்திரனின் வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனினும் தொடர்ச்சியாக சுமந்திரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் கனவை விதைத்து வருகின்றார். இது மக்கள் சுமந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தமது வாக்கு பலத்தால் சரியான போதனையை வழங்க தவறியுள்ளார்கள் என்பதையே அடையாளப்படுத்துகின்றது. இரண்டாவது, சர்வதேச தளத்தில் இலங்கை அரசாங்கங்களால் ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக்கொள்வதனை வெறுமனவே நிகழ்வாக கடந்திட முடியாது. நீண்டதொரு தந்திரோபாய நகர்வுக்கான தளமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கனடா பூகோள அரசியலில் பிரதான சக்தியாக அமைகின்றது. கனடா இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை அங்கீகரித்துள்ளமையானது, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஓர் மைல்கல்லாகும். கனடாவின் உள்ளூர் அதிகார மட்டம் முதல் கனடா மத்திய அரசு வரை இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளமையை உறுதி செய்துள்ளது. இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே இன்றைய தேவையாகும். குறிப்பாக கனடாவில் மே 12 – 18, தமிழர் இனப்படுகொலை கல்வி வாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னரே ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகளைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதனை வினைத்திறனாக கையாள்வதனூடாக வாக்குப்பலத்தினூடாக கிடைக்கப்பெற்ற அரசியல் தளத்துடன் ஏனைய மக்களின் ஒத்துழைப்புகளையும் பெறக்கூடியதாக அமையும். தமிழ்ச் சமூகமும் இளைஞர்களும் ஏனைய மக்களோடு தமிழ் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் தலைமுறைகளுக்கு இடையேயான அதிர்ச்சியை ஏனைய சமூகங்களோடு பகிருவது அவசியமானதாகும். மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும். மூன்றாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது 2009 களுக்கு பின்னர் அடிப்படையில் இனப்படுகொலைக்கான நீதியைக் கோருவதனை மையப்படுத்தியே காணப்படுகின்றது. அதுவே ஈழத்தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான தந்திரோபாய செயற்பாடாகும். எனினும் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள். கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இனப்படுகொலை என்ற சொல்லாடலுடன் அரசொன்றின் ஆதரவுடன் நிறுவப்பட்ட முதலாவது நினைவுத் தூபி ஆகும். இதனை ஈழத்தமிழர்கள் கொண்டாடுவதற்கு சமாந்தரமாக ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இனவாதிகள் என கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இராஜதந்திர ரீதியான ஆட்சேபனைகளையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தனியன்களாக தமது சமூக வலைத்தளங்களில் பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுணை நாயகனாக கொண்டாடுகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சார்பாக கூட்டு நன்றியுணர்வை வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். உயர்ந்தபட்சம் தமிழ் பிரதிநிதிகளின் பிரசன்னம் அந்நிகழ்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையினூடாகவேனும் கனேடிய அரசாங்கத்திற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டு நன்றியினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை செய்ய தவறியுள்ளார்கள். மாறாக உள்ளூ ராட்சி சபை தேர்தல் முடிவுகளின் பின்னரான ஆசன இழுபறிக்குள் ஓய்வின்றி உள்ளார்கள். எனவே கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் கனடா அரசாங்கத்தின் ஆதரவும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை உந்திவிடும் ஓர் ஊக்கக்காரணியமாக அமைகின்றது. இதனைப் பற்றிக்கொண்டு சர்வதேச அளவில் ஏனைய சமூகங்களின் ஈடுபாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை சர்வதேச போராட்டமாக மாற்றுவது ஈழத்தமிழர்களின் அரசியல் வியூகத்திலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் தளம் தமது வாக்குப்பலத்தினூடாக வெகுவாக அரசியல் மட்டத்தில் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஒருங்கு சேர்த்துள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபி மற்றும் சமகாலத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் இம்முன்னேற்றம் அரசியல் மட்டத்தை கடந்து சமூக மட்டத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து கோரும் சூழலை உருவாக்க வேண்டும். இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டங்கள் உணர்வெழுச்சிகளுக்குள் சுருங்காது, தந்திரோபாயமாக நகர்த்தப்படுகையிலேயே நிலையான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். https://thinakkural.lk/article/318257
  13. 26 MAY, 2025 | 06:54 PM ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததனர். இந்நிலையில், கடை உரிமையாளருக்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொது சுகாதார பரிசோகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215743
  14. 26 MAY, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி பழைய மாணவரும் வைத்தியருமான சசிகரனின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த நிகள்வு நடைபெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் மற்றும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. தொற்றா நோய்கள் தொடர்பான கருத்தமர்வை வைத்தியர் சிவரஞ்சனியும், வீதி விபத்துகள் தொடர்பான கருத்தமர்வை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் சயந்தனும் மேற்கொண்டனர். https://www.virakesari.lk/article/215733
  15. இந்த வருடம் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக மாணவர்களில் 60 பேருக்கு நம்பிக்கை கல்வி நிதியம் (Good Hope Education Fund) மூலம் நிதி உதவி வழங்கப்படவுள்ளதென நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் த.தனராஜ் தெரிவித்தார். இந்த நிதி வழங்கும் நிகழ்வு ஜூன் முதலாம் திகதி அட்டன் வெப்ஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் (Webster International School) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் திரு மு. நித்தியானந்தன் கலந்துகொள்கிறார். 1960-களில் பட்டயக் கணக்காளர்களான பி. கந்தசாமி, எஸ். சொக்கலிங்கம் மற்றும் கே. வீரையா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம், 1983 ஆம் ஆண்டு செயலிழந்து பின்னர் 2010 ஆம் ஆண்டில் இது மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தது. இதுவரை சுமார் 500 பேர் இந்த நிதியுதவியின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/318384
  16. Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 03:31 PM இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் திங்கட்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பெப்ரிசியோ ஒலிவேரா மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்கள் மற்றும் கல்வித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகத் தலைவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உறுதியளித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ஜனாதிபதி பாராட்டியதோடு, அவற்றுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215727
  17. இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் கில்; அறிமுகமாகிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன் Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 01:40 PM (நெவில் அன்தனி) இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் புதிய சகாப்தம் ஆரம்பமாகவுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின், முன்னாள் தலைவர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய மூவரும் ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 'இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாகவம் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆடுகளத்தில் சிறந்த ஆற்றல்கள், ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்துவேன்' என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தனது தலைமைப் பதவியை 25 வயதான ஷுப்மான் கில் தொடங்கவுள்ளார். வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷுப்மான் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களுடன் 1893 ஓட்டங்களை மொத்தமாக பெற்று 35.05 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவராக ரிஷாப் பான்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருடன் இந்தியா ஆரம்பிக்கவுள்ளது. சாய் சுதர்சன் அறிமுக வீரர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு அஜித் அகார்கரின் தலைமையிலான தெரிவுக் குழுவினர் பெயரிட்டுள்ள 18 வீரர்களைக் கொண்ட இந்திய குழாத்தில் சென்னையைப் பிறப்பிடகமாகக் கொண்ட தமிழக துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெறுகிறார். சாய் சுதர்சன் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 29 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 7 சதங்கள் உட்பட 1957 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கை 213 ஓட்டங்களாகும். அவர் பெரும்பாலும் யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் எனவும் விராத் கோஹ்லியின் 4ஆம் இலக்கத்தை வழமையான ஆரம்ப வீரர்களில் ஒருவரான கே.எல். ராகுல் நிரப்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கில் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோருடன் சிரேஷ்ட வீரர்களான கே.எல். ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, மொஹமத் சிராஜ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்றுவந்த த்ருவ் ஜுரெல், ஆகாஷ் தீப் ஆகியோருக்கும் இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழாம்: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உதவித் தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிட்டிஷ் குமார் ரெட்டி, ரவிந்த்ர ஜடேஜா, த்ருவ் ஜுரெல், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ். https://www.virakesari.lk/article/215714
  18. உள்ளூராட்சி தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளிற்கு முதல்வர் தவிசாளர் தெரிவுகளில் ஆதரவு - தமிழ்தேசிய பேரவை 26 MAY, 2025 | 03:21 PM தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் என தமிழ்தேசிய பேரவையின் தலைவரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம தெரிவித்துள்ளார். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பிரதி முதல்வர், மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் யாழ். கச்சேரி அருகாமையிலுள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் தமிழ்த் தேசிய பேரவைத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரிலும் அதன் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மேலதிக ஆசனங்கள் மூலம் கட்சியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடி கொள்கை அடிப்படையில் ஒருமனதாக மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வெளிப்பாடு, சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதில் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பேரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இத் தீர்மானத்துக்கமைய பின்வரும் முடிவுகள் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டன. தீர்மானத்திற்கு அமைய எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, மாநகர சபைகள் உட்பட தமிழர் தாயகத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடந்து முடிந்த தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்ற சபைகளில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு தவிசாளர் தெரிவில் ஆதரவு வழங்குவதுடன் அவ்வாறான சபைகளுக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடமாட்டாது. அதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவை அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சபைகளில் தவிசாளர் தெரிவுக்குப் போட்டியிடும். அதன்போது மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் ஆதரவு வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறது. பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியப் பேரவை இரண்டாவது நிலையில் இருக்கும் சபைகளில் துணைத் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடும். பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் இரண்டாவது நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிக்கு துணைத் தவிசாளர் தெரிவுக்கு ஆதரவு வழங்கும். எந்தவொரு நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கும் அவற்றுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் இவ்வாறான பதவிகளுக்கான தெரிவுகளுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது. இவற்றின் மூலம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளில் வைத்திருப்பதுடன் எதிர்காலத்தில் எவ்வித இடையூறுகளுமில்லாது மக்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று பேரவை எதிர்பார்ப்பதுடன் இதன்மூலம் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க முடியுமென்றும் தமிழ்த் தேசியப் பேரவை நம்புகிறது. https://www.virakesari.lk/article/215726
  19. கோல்டன் டோம்: ஆகாயத்தில் இருந்து வரும் ஏவுகணைகளை கூட முறியடிக்கும் கனவு சாத்தியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் டோம் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜேஆர் பதவி, பிபிசி நியூஸ் இருந்துவெள்ளை மாளிகை 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவுக்கு மேல் ஒரு சிறிய அணுகுண்டு வெடித்தால் கூட அது பேரழிவான முடிவுகளைக் கொண்ட ஒரு மின்காந்த துடிப்பை (electromagnetic pulse) உருவாக்கும். விமானங்கள் வானத்தில் இருந்து கீழே விழும். கையில் இருக்கும் மின்சாதனங்கள் தொடங்கி மருத்துவ உபகரணங்கள், நீரியல் அமைப்புகள் என அனைத்தும் பயனற்றதாகிப் போகும். அப்படி ஒன்று நிகழ்ந்தால் அமெரிக்கா 1,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்கிறார் வடக்கு கரோலினா மாகாணத்தின் மான்ட்ரீட் கல்லூரியில் உள்ள எழுத்தாளரும் ஆயுத ஆராய்ச்சியாளருமான வில்லியம் ஃபோர்ட்ஸ்சென். "நாம் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல மாட்டோம். நாம் அனைத்தையும் இழந்து விடுவோம், அதனை எவ்வாறு மறுகட்டுமானம் செய்வது என நமக்குத் தெரியாது. இது நாம் 1,000 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதற்கு சமமாகும். நாம் அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேரிடும்" என்றார் அவர். இந்த அனுமானமான, அதே நேரம் சாத்தியமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த தலைமுறை ஏவுகணை பாதுகாப்பு கவசமான "கோல்டன் டோம்" என்பதை முன்னிறுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் எனப் பல வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற நிலையில், அதற்கான அதிக செலவினம் மற்றும் தளவாட சிக்கல்கள் ஆகியவை டிரம்பின் திட்டத்திற்குச் சவாலாக இருக்கும். "அமெரிக்காவுக்கான அயர்ன் டோம்" என முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திட்டம் தொடர்பான அரசாணை, அடுத்த தலைமுறை ஆயுதங்களின் அச்சுறுத்தல் என்பது அமெரிக்காவிற்கு மிகவும் தீவிரமான, சிக்கல் நிறைந்த, காலப்போக்கில் பேரழிவை உருவாக்கக் கூடியதாக மாறியுள்ளது என விவரித்துள்ளது. வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச கல்வி மையத்தைச் சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு வல்லுநரான பாட்ரிக்ஜா பாசில்சிக், ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் வட கொரியா போன்ற நாடுகள் பயன்படுத்தும் கண்டங்களுக்கு இடையேயான பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ஐசிபிஎம்) எதிர்கொள்ள தயாரிக்கப்பட்டவை என்று பிபிசியிடம் தெரிவித்தார். சக்தி வாய்ந்த நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் கடல் கடந்துள்ள எதிரிகளையும் தாக்கும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக முதலீடு செய்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள அச்சுறுத்தல்களில் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் ஒலியின் வேகத்தை விடவும் வேகமாக சென்று தாக்குதல் நடத்தும திறன் படைத்தது. இவை அளவில் சிறிதாக இருந்தாலும் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை. "நம்முடைய எதிரிகள் நீண்ட தூரம் தாக்கும் திறன்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவை நாம் இத்தனை வருடங்களாக எதிர்கொண்டு வரும் நம்முடைய சாதாரண ஏவுகணைகள் போன்றவை அல்ல" என்றார் பாசில்சிக். கோல்டன் டோம் எவ்வாறு இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் டோம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் கோல்டன் டோம் எவ்வாறு இருக்கும் என வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில தகவல்களை வழங்கியுள்ளனர். கடந்த மே 20, டிரம்பைத் தொடர்ந்து பேசிய பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த அமைப்பு "விண்வெளி சார்ந்த சென்சார்கள் மற்றும் இண்டர்செப்டர்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி நிலம், கடல் மற்றும் விண்வெளியைக் கடந்து" பல அடுக்குகள் கொண்டிருக்கும் என்று மட்டும் தெரிவித்தார். இந்த அமைப்பு பூமி மட்டுமல்லாது, விண்வெளியில் இருந்தும் கூட ஏவப்படும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் திறன் கொண்டிருக்கும் என்றார் டிரம்ப். இந்தத் திட்டத்தின் பல அம்சங்கள் புளோரிடா, இண்டியானா மற்றும் அலாஸ்கா எனத் தொலைதூர பிரதேசங்களில் அமைந்திருக்கும். கோல்டன் டோம் என்பது ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் குறிவைத்து அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பின் மீதே உருவாக்கப்படும் என விண்வெளிப் படை ஜெனரலும் இந்தத் திட்டத்தின் மேற்பார்வையாளருமான மைக்கேல் குட்லின், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த புதிய அமைப்பு கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் இதர அச்சுறுத்தல்களை கண்டறிந்து தடுக்கும் பல அடுக்குகளைச் கொண்டிருக்கும். இதன்மூலம் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக அல்லது ஏவப்பட்ட பிறகும் அதனை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்த முடியும். தற்போது அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு மையம் அலாஸ்கா மற்றும் கலிபோர்னியாவில் உள்ள குறுகிய தூர ஏவுகணை தாக்குதல்களை தடுக்க வடிவமைக்கப்பட்ட 44 தரை சார்ந்த இண்டர்செப்டர்களைச் (interceptors - ஏவுகணைகளை இடைமறித்து நிறுத்தும் அமைப்பு) சார்ந்தே உள்ளது. அமெரிக்க நிலப்பரப்பை ரஷ்யா அல்லது சீனா தாக்கினால் அதனைத் தடுப்பதற்கு தற்போது உள்ள அமைப்பு போதுமானதாக இருக்காது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இரு நாடுகளும் நூற்றுக்கணக்கான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல்களில் ஏவப்படும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைச் சேர்த்து தங்களின் ஆயுதங்களை விரிவுபடுத்தியுள்ளன. "தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்பு வட கொரியாவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என நியூ அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு வல்லுநரான முனைவர் ஸ்டேசி பெட்டிஜான் தெரிவித்துள்ளார். "இவற்றால் ரஷ்யா அல்லது சீனாவிடம் உள்ள ஆயுதங்களை இடைமறிக்க முடியாது" என்றார். நம்மை நோக்கி வருகின்ற ஏவுகணைகளுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கக்கூடிய நூற்றுக்கணகான அல்லது ஆயிரக்கணக்கான விண்வெளி சார்ந்த தளங்கள் தேவைப்படும் என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அலுவலகம் (சிபிஓ) தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அயர்ன் டோம் ஒரு உதாரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன் டோம் அமைப்பைத் தான் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் கோல்டன் டோம் பற்றிய தன்னுடைய திட்டத்தை மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் வெளிப்படுத்தினார். அதைப்பற்றி குறிப்பிடுகிற போது, "இஸ்ரேல் அதை வைத்துள்ளது, மற்ற இடங்களிலும் அது உள்ளது, அமெரிக்காவும் அதை வைத்திருக்க வேண்டும்" என்றார். 2011-ல் இருந்து ஏவுகணைகள் மற்றும் எறிகணைகளை இடைநிறுத்த இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன் டோம் அமைப்பைத் தான் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இஸ்ரேலின் அயர்ன் டோம் குறுகிய தூர அச்சுறுத்தல்களைத் தடுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. டேவிட்ஸ் ஸ்லிங் மற்றும் அரோ என்கிற இதர அமைப்புகள், இரான் மற்றும் ஏமனில் இருந்து ஹூதிக்கள் செலுத்தும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கின்றன. அயர்ன் டோம் என்பது காஸா அல்லது தெற்கு லெபனானில் இருந்து வரும் எறிகணைகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது என்கிறார் பாசில்சிக். கோல்டன் டோம் என்பது அதையும் கடந்து தொலைதூர ஏவுகணைகளையும் கண்டறியும் என்றார் அவர். அதனைச் சாத்தியமாக்க வெவ்வேறு திறன்களை ஒருங்கே சேர்க்க வேண்டிய தேவை உள்ளது என்றார். மேலும் அவர், "இவை அனைத்தையும் சேர்த்து கையாளும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைப் பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்" தெரிவித்த அவர், தற்போது அதுபோன்ற எதுவும் இல்லை என்றும் கூறினார். கோல்டன் டோமை உருவாக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் டோமை விளக்கும் சந்திப்பில் டிரம்ப் உடன் அதிகாரிகள் அந்த அமைப்பை உருவாக்குவது சிக்கலானது மற்றும் அதிக செலவு பிடிக்கக் கூடியதும் கூட. கோல்டன் டோம் தன்னுடைய பதவிக் காலத்திற்குள் முடிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார். அதற்கு மொத்தமாக 175 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரம்பின் மதிப்பீடு சிபிஓவின் மதிப்பீட்டுடன் தொடர்பில்லாமல் இருக்கிறது. அவர்களின் மதிப்பீட்டின்படி 20 ஆண்டுகளில் விண்வெளி சார்ந்த அமைப்புகளுக்கு மட்டுமே 542 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதியாகும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். முனைவர் பெட்டிஜான் இதனைச் சாத்தியமற்றது என்கிறார். மேலும் அவர், "இது மிகவும் சிக்கலானது, இதில் பல அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் ஒவ்வொரு கட்டமும் அதன் ஆபத்துகள், செலவுகள் மற்றும் கால அளவைக் கொண்டுள்ளன" "மேலும் அவசரம் காட்டுவதால் கூடுதல் செலவாவதுடன் ஆபத்துகளையும் சேர்க்கும். நீங்கள் நன்றாக மதிப்பீடு செய்யப்படாத ஒன்றை உற்பத்தி செய்யப் போகிறீர்கள். அதில் தோல்விகள் ஏற்படும், நீங்கள் உற்பத்தி செய்யும் எதுவானாலும் அதில் பெரிய மாறுதல்கள் தேவைப்படும்" என்றார் அவர். கோல்டன் டோம் உருவாக்கம் என்பது புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் எதிரிகள் அதனை தகர்ப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம், விண்வெளியை ஒரு போர்க்களமாக மாற்றும் ஆபத்துகளை அதிகரித்துள்ளது என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க பாதுகாப்பு கொள்கையை ஆய்வு செய்பவர்கள் இந்தக் கவலைகளை பெரிதாக்க வேண்டாம் என்கின்றனர். சாத்தியமான எதிரிகள் தங்களுடைய தாக்கும் திறன்களில் ஏற்கெனவே அதிகம் முதலீடு செய்து வருவதாக அவர்கள் வாதிடுகின்றனர். கோல்டன் டோம் என்பது நம்முடைய எதிரிகள் போடும் கணக்குகளை மாற்ற முயற்சிக்கிறது என்கிறார் பாசில்சிக். மேலும் அவர், "உள்நாட்டு வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பை மேம்படுத்துவது நம்மை எந்தக் காரணத்திற்காகவும் தாக்க நினைப்பவர்களின் நம்பிக்கையை குறைக்கும்" என்கிறார். பகுதியளவு முடிக்கப்பட்ட கோல்டன் டோம் கூட அச்சமூட்டும் காட்சிகள் நிகழாமல் தடுக்கும் என்கிறார் ஃபோர்ட்ஸ்சென். மேலும் அவர், "நான் பெருமூச்சு விடுவேன். நமக்கு அத்தகைய அமைப்பு தேவை. அதற்கு கோல்டன் டோம் தான் பதில்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdj9zy94dj7o
  20. வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு; உரிமையாளர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை கூட்டம் 26 MAY, 2025 | 11:06 AM வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவிகரிப்பதற்கு அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது. அரசாங்கத்தினால் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் 28. 03 .2025யில் 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டு இருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கிலே மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை, மூன்று மாத காலத்துககுள் எவரும் உரிமை கோரதவிடத்து அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்ததுடன் அதனை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெற்றிலைக் கேணியில் உள்ள பொது மண்டத்தில் கடந்த மாதமும் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. அதன் போது பத்துக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகளை வழங்கினர். தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (25) வெற்றிலைக் கேணியில் உள்ள றம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் சட்ட உதவி வழங்கும் கூட்டம் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட உதவி வழங்கியதுடன் யாழ். பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களும் இதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் பெருமளவான காணி உரிமையாளர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் இவ் இலவச சட்ட உதவி வழங்கும் கூட்டமானது கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைதீவுகளிலும் காணி சுவீகரிக்கப்படும் இடங்களில் இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215695
  21. படக்குறிப்பு,கனமழை பாதிப்பு 26 மே 2025, 08:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் மழை பெய்வதன் மூலம் தனது வருகையை அறிவிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 27-ம் தேதியே தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் முதல் முறையாக பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் மே 24-ம் தேதியே தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே நீலகிரி, கோவை மாவட்டங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மற்ற இடங்களுக்கும் இது பரவும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் சில பகுதிகளிலும், ஆந்திர மற்றும் தெலங்கானாவில் பல இடங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலை என்ன? படக்குறிப்பு,நீலகிரியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக உதகை அருகே உள்ள அவலாஞ்சியில் அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது இந்த கன மழையின் காரணமாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, அவலாஞ்சி சூழல் சுற்றுலா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் லேம்ஸ் ராக், பைகாரா நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மரம் விழுந்ததில் உயிரிழந்த சிறுவன் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை வடகரை தாலுகாவைச் சேர்ந்த பிரசித் என்பவரது குடும்பம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள பைன் ஃபாரஸ்ட் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு மரம் விழுந்ததில் பிரசித்தின் மகனான 15 வயது நிரம்பிய ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்டை மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை படக்குறிப்பு,மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க கோரிக்கை விடுத்ததாகவும், மேலும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியருக்கும் நீலகிரி மாவட்டத்தின் மழை எச்சரிக்கை கொடுத்து தங்களது மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்த கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காருக்குள் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூச்சலிட்டதை அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் கூடலுார் அருகேயுள்ள வடவயல் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக, வீடுகள் மிகவும் சேதம் அடைந்திருப்பதால் அரசு பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொரப்பள்ளி அருகே உள்ள தேன்வையில் கிராமத்தை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். வால்பாறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு படக்குறிப்பு,வால்பாறையில் சரிந்து விழுந்த மரம் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வால்பாறையை அடுத்த பாலாஜி கோயில் செல்லும் பிரதான சாலையான கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாலைகளில் விழுந்து அக்கா மலையிலிருந்து வால்பாறை நோக்கி வரும் பேருந்து லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முழு கொள்ளளை எட்டிய பில்லூர் அணை படக்குறிப்பு,பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 97 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பருவ மழை பெய்து வருவதால் அனைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18000 கன அடியாக இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் நான்கு மதகுகள் மூலம் உபரியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக நெல்லித்துறை மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்க ராயன் ஓடை, சிறுமுகை, ஆலங்கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர். கோவையில் பழமையான மரங்கள் அகற்றம் படக்குறிப்பு,கோவையில் வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது கோவையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகராட்சியால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் காணப்படும் பழமையான மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று மாலை உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள 35 ஆண்டு கால பழமையான மே பிளவர் மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்ளாக வின்சென்ட் ரோடு சாலை மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. குனியமுத்தூர் பகுதியில் மின் நகரில் கனமழையின் காரணமாக வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். ராமநாதபுரத்தில் சூறைக்காற்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சாலைகளில் புழுதி காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகின்றன. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன. தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் உள்ளதால் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீசி வரும் சூறைக்காற்று ஏற்பட்ட புழுதியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலுக்குச் செல்லாத நாட்டுப்படகு மீனவர்கள் படக்குறிப்பு,நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 600 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூடங்குளம், உவரி, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், பஞ்சல், இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில், இன்று தொடங்கி வருகிற 29 வரை சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே போன்று சுற்றுலா பயணிகளும் கடற்கரை, நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சிறுவாணி அருகே அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு மேல் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசி மாவட்டம் குற்றால நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு படக்குறிப்பு,முல்லைப் பெரியாறு அணை தமிழக - கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 115.65 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 1,648.03 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 1844.00 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 55.08 மில்லி மீட்டரும் அளவும் தேக்கடி பகுதியில் 36.2 மில்லி மீட்டர் அளவும் மழை பதிவாகியிருந்தது. இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைவு கேரளாவிற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர். அரக்கோணத்தை மையமாகக் கொண்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரள மாநிலம் விரைகின்றனர். கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 30 பேர் கொண்ட மூன்று குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் பிரின்ஸ் மற்றும் மிக்கி ஆகியோர் கொண்ட குழுவினர் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள விரைவதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2j7ye5z8o
  22. கிளாசன் மின்னல் வேக சதம்! வரலாற்றில் அழுத்தமாக தடம் பதித்து விடைபெற்றது சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த பல சீசன்களாகவே பெரிய ஸ்கோர்களையும், அதிரடி வெற்றிகளையும் கிளாசன் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் நேற்றைய ஆட்டமும் முக்கிய மைல்கல்லாகும். 39 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசன் கணக்கில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார், இறுதியாக முடிக்கும்போது 269 ஸ்ட்ரைக் ரேட்டில் கிளாசன் இருந்தார். 3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் பேட் செய்த கிளாசன் 20 பந்துகளில் அரைசதம் அடித்தனர். 19வது ஓவரில்தான் கிளாசன் 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனுடன் 3வது விக்கெட்டுக்கு கிளாசன் 83 ரன்கள் சேர்த்தார். கிளாசன் அதிரடி ஆட்டத்தை நிகழ்த்துவதற்கு முன் டிராவிஸ் ஹெட் தனது வானவேடிக்கையை முடித்துவிட்டு சென்றார். 6 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த பல போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த டிராவிஸ் ஹெட் கடைசி லீக்கில் சிறப்பாக ஆட்டத்தை முடித்திருப்பது, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு செல்லும்போது நம்பிக்கையளிக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஹெட்டின் ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 79ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக், ஹெட் 92 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 2வது விக்கெட்டுக்கு ஹெட், கிளாசன் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும் தான் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாகும். பாவப்பட்ட கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேலாக கொடை வள்ளலாக மாறி ரன்களை வாரிக் கொடுத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் நோர்க்கியா, அரோரா, ராணா ஆகியோர் மட்டும் 11 ஓவர்கள் வீசி 139 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர்கள் நரேன், வருண் இருவரும் 7 ஓவர்கள் வீசி 96 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஸல் 2 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். ஆன்ரிச் நோர்க்கியா 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 60 ரன்களை வழங்கினார், வருண் 54 ரன்கள் என மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். டெல்லி மைதானம் சிறியது, இதில் அதிகவேகமாக பந்துவீசும்போது, பேட்டர்கள் வேகமாக டிபெண்ட் செய்தாலே பந்து பவுண்டரிக்கு பறந்துவிடும், சிக்ஸருக்கு லேசாக முயற்சித்து சரியான ஷாட்களை ஆடினால் எளிதாக சிக்ஸருக்கு பறந்துவிடக்கூடிய மைதானம். இதில் ராணா, நோர்க்கியா ஆகியோர் மணிக்கு 145 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசியது பெரிய தவறாகும். அதேபோல வருண், நரேன் பந்துவீச்சில் வழக்கமான லைன் லென்த் கிடைக்காமல் திணறினர். இதனால் இருவரும் சிறிய தவறு செய்து பந்தை ஸ்லாட்டில் போட்டவுடன் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்து பறந்தது. குறிப்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாமல் சில நேரங்களில் செயல்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. சுனில் நரேனால் பவுண்டரி கொடுக்காமலும் ஒரு ஓவரை வீச முடிந்தது, இருப்பினும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த அவரால் முடியவில்லை. ஆடுகளமும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக மாற்றப்பட்டிருந்ததால், பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக இருந்தது. 3-வது அதிகபட்ச ஸ்கோர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்பாக, 2024ம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக 284 ரன்களையும், இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்களை பதிவு செய்ததும் சன்ரைசர்ஸ் அணிதான். இப்போது 3வது அதிகபட்சமாக ஸ்கோராக நேற்று டெல்லியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 278 ரன்களையும் பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் 6 இடங்களில் ஐந்தில் சன்ரைசர்ஸ் அணியே இருக்கிறது. 3வது அதிவேக சதம் 3வது இடத்தில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை கிளாசன் பெற்றார். சுனில் நரேன் பந்துவீச்சில் 10 பந்துகளில் 24 ரன்கள், வருண் பந்துவீச்சில் 12 பந்துகளில் 36 ரன்கள் என கிளாசன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 30 பந்துகளிலும், வைபவ் சூர்யவம்சி 35 பந்துகளிலும் அதிவேகமாக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை. இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 37 ரன்களும், ஹர்சித் ராணா 34, சுனில் நரேன் 31 ரன்களும் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். மிகப்பெரிய இலக்கு, ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டோம், இதில் வென்றாலும் பலன் இல்லை என்ற வெறுமை ஆகியவை நேற்று கொல்கத்தா பேட்டர்களிடம் தெளிவாகத் தெரிந்தது. இதனால் எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை. களத்துக்கு வருவதும், போவதுமாக பேட்டர்கள் இருந்தனர், ஹர்சித் ராணா, மணிஷ் பாண்டே தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் 20 பந்துகளுக்கும் குறைவாகவே சந்தித்து ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் உனத்கட், மலிங்கா, ஹர்ஸ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். "அற்புதமாக முடித்துள்ளோம்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், "அற்புதமாக தொடரை முடித்துள்ளோம். இந்த சீசனில் கடந்த சில போட்டிகளில் சில விஷயங்கள் சிறப்பாக நடந்தன. எங்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால், சில போட்டிகளில் தவறுகளை சரி செய்து விளையாடவில்லை. பலமுறை பைனல் சென்றிருக்கிறோம், ஆனால் இந்த ஆண்டு எங்களால் முடியவில்லை. போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அணியில் உள்ள சில வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை அவர்கள் சரியாக பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டபோதிலும், 20 வீரர்களையும் பயன்படுத்தி, வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார். சன்ரைசர்ஸ் 6-வது இடம் இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனில் 6 வெற்றிகள், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் முடித்தது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.241 என்ற அளவே இருந்தது. கடைசி இரு போட்டிகளில் பெற்ற வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு எந்தப் பலனும் இல்லாவிட்டாலும் 2 வெற்றிகளும் முன்பே கிடைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கலாம். நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 14 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 போட்டிகள் மழையால் ரத்தால் 12 புள்ளிகளுடன் -0.305 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் முடித்துள்ளது. ரஹானே தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெரிய எதிர்பார்ப்புடன் சீசனுக்குள் வந்து, 8வது இடத்தோடு முடித்தது. எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: ஜெய்பூர் நேரம்: இரவு 7.30 ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே) 24 விக்கெட்டுகள்(14போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 23 விக்கெட்டுகள்(14 போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9447x789o
  23. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 11:04 AM யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215702
  24. ஐபோன் உற்பத்தி: டிரம்ப் அறிவிப்பால் தமிழ்நாட்டில் 'ஆப்பிள்' திட்டங்களுக்கு பாதிப்பு வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டேல் பதவி, பிபிசி செய்தியாளர் 25 மே 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் விரும்பினால் அதை அவ்வாறே செய்து கொள்ளலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அமெரிக்காவில், சுங்க வரி இல்லாமல் விற்பனை செய்ய இயலாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிபர் மாளிகையில் சில நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டப் பிறகு இதனை அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தம் ஆரம்பமாவதற்கு முன்பாக, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்க இருப்பதாக அவர் அறிவித்தார். சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் வரியை அதிகரித்த நிலையில், இந்தியாவை உற்பத்தி மையமாக மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் டிரம்பிடம் இருந்து அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு கருத்துக்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன் என்றால் ஆப்பிளின் மொத்த ஐபோன் உற்பத்தியில் 15% உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்கிறது. தற்போது இந்த உற்பத்தித் திறனை 25% ஆக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதனால் ஆப்பிளுக்கு என்ன ஆபத்து? டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பான்மையான ஐபோன்கள் இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 1.49 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது, ஆப்பிள் பொருட்களை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தரும் ஃபாக்ஸ்கான். இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸானின் யுஸான் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் இந்த முதலீட்டை செலுத்த இருப்பதாக லண்டன் பங்கு சந்தையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்திருந்தது. சென்னையில் இதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ரூ. 13,180 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை நிறுவ கடந்த அக்டோபர் மாதம், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை பி.கே.சி. ஆப்பிள் விற்பனை மையத்தில் வாடிக்கையாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் டிம் குக் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன? ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும். இந்தியாவிலோ வேறெந்த நாட்டிலோ உற்பத்தி செய்யக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்த டொனால்ட் டிரம்ப், "அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என நான் டிம் குக்கிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் இந்தியாவில் ஆலை அமைக்க உள்ளார். எனக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறிவிட்டேன். ஆனால் அமெரிக்காவில் வரி ஏதுமின்றி ஐபோன்களை விற்பனை செய்ய இயலாது," என்று எழுதியிருந்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய இயலுமா? மேலும் இந்த நடவடிக்கையால் ஆப்பிள் நிறுவனம் மற்றும் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு எத்தகையது? ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யும் போது அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தால் லாபம் ஈட்ட இயலுமா? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நாம் க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேடிவ் (ஜி.டி.ஆர்.ஐ) அமைப்பின் நிறுவர் அஜய் ஶ்ரீவஸ்தாவிடம் பேசினோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யும் போது அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்வது எவ்வளவு மலிவானது? பிபிசியிடம் பேசிய அவர், "ஒரு ஆப்பிள் போனின் விலை 1000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனை உற்பத்தி (அசெம்பிள்) செய்து தரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு போனுக்கு 30 டாலர்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஐபோன்களின் முக்கியமான உற்பத்தி மையமாக இவ்விரு நாடுகள் இருக்கும் போதிலும், ஐபோன்களின் சில்லறை விலையில் 3 சதவீதத்தை மட்டுமே இவ்விரு நாடுகளும் பெறுகின்றன," என்றார். இதுமட்டுமின்றி, இந்தியாவில் ஐபோன்கள் மிகவும் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏன் என்றால் இங்கே உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் சம்பளம் மிகவும் குறைவு என்று அவர் கூறுகிறார். ஐபோன்களின் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து உற்பத்தி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இங்கே சராசரியாக மாதத்திற்கு ரூ. 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது அமெரிக்க டாலர்களில் அதன் மதிப்பு 230 டாலர்கள் மட்டுமே. ஆனால் அமெரிக்காவில் பின்பற்றப்படும் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம் காரணமாக அங்கே ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 2900 டாலர்களை சம்பளமாக வழங்க வேண்டும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒருவருக்கு அளிக்கும் சம்பளத்தைக் காட்டிலும் 13 மடங்கு அதிக சம்பளத்தை ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வழங்க நேரிடும். ஜி.டி.ஆர்.ஐயின் மதிப்பாய்வின் படி, இந்தியாவில் ஒரு ஐபோனை அசெம்பிள் செய்வதற்கு 30 டாலர்கள் செலவாகின்றது. அமெரிக்காவில் இந்த செலவு 390 அமெரிக்க டாலர்கள். இதுமட்டுமின்றி இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பி.எல்.ஐ. திட்டத்தின் (Production Linked Incentive) மூலமாகவும் ஆப்பிள் நிறுவனம் பயனடைகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிளின் மூன்று பெரிய உற்பத்தி ஆலைகளான ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் (தற்போது இது ஒரு டாடா நிறுவனம்), இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் ரூ. 6600 கோடியை பெற்றுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் ஒரு ஐபோனை அசெம்பிள் செய்வதற்கு 30 டாலர்கள் செலவாகின்றது. அமெரிக்காவில் இந்த செலவு 390 டாலர்கள். தமிழ்நாட்டில் 'ஆப்பிள்' திட்டங்களுக்கு பாதிப்பு வருமா? இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்த போது புதிய வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. ஒரு அறிக்கையின் படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1,64,000 பேருக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆப்பிளின் ஐபோன் உற்பத்தி ஆலைகள் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஶ்ரீபெரும்புதூர் ஆலை மிகவும் பெரியது. சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த உற்பத்தி ஆலையில் 40 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் தான். ஆப்பிள் உற்பத்தி மையம் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டால் இங்குள்ள மக்கள் வேலைகளை இழக்க நேரிடும். ஆனால் இந்த குறைந்த ஊழியத்தில், அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வது இயலாத காரியம் என்பதால் ஆப்பிள் இத்தகைய முடிவை எடுக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தாலும் இது ஆப்பிளுக்கு தான் நன்மையளிக்கும் என்று அஜய் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்பிள் உற்பத்தி மையம் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டால் இங்குள்ள மக்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும். (சித்தரிப்புப் படம்) இந்தியாவுக்கு அழுத்தம் தருவதற்காக பின்பற்றப்படும் உத்தியா இது? டிரம்பின் எச்சரிக்கை குறித்து பிபிசியிடம் சமீபத்தில் பேசிய, டெலிகாம் எக்யூப்மெண்ட் மெனுஃபேக்சரிங் அசோசியேசன் அமைப்பின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான என்.கே. கோயல், "உற்பத்தியாளருக்கு சாதகமான சூழல் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது," என்று கூறினார். "நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலி மேம்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை மேம்படுத்த கொள்கைகளில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் உற்பத்தி செய்வது மிகவும் மலிவானது. ஆனால் நிறுவனங்கள் பி.எல்.ஐ போன்ற திட்டங்களால் பயனடைந்தன. மேலும் இந்தியா ஒரு போட்டியாளராக உருவெடுத்தது." டிரம்பின் அறிவிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு முன்பு பொறுமையாக சிந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "டிரம்பின் பார்வை மாறிக் கொண்டே இருப்பதால், இன்று இந்தியாவும் இதர உலக நாடுகளும் அவர் கூறும் அறிக்கையை பொறுமையாக கவனிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஆப்பிள் என்ன முடிவெடுத்தாலும், அதனை தீவிர சிந்தனைக்குப் பிறகே மேற்கொள்ளும்," என்று கோயல் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரம்பின் அறிவிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு முன்பு பொறுமையாக சிந்திக்க வேண்டும் "லாபம் மற்றும் நஷ்டங்களை கருத்தில் கொண்டே அந்த நிறுவனம் ஒவ்வொரு முடிவையும் மதிப்பிடும். ஆப்பிளைப் பொறுத்தமட்டில், உற்பத்தி மையத்தை இந்தியாவுக்கு நகர்த்துவது என்பது வர்த்தக அடிப்படையிலானது. ஏன் என்றால் சீனாவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் சீனாவில் இருந்து வெளியேறவும் அந்த நிறுவனம் விரும்பியது. இந்தியாவில் வாய்ப்புகளும் வளங்களும் இருக்கும் போது ஆப்பிள் நிறுவனம் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இங்கே உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் உற்பத்திக்குத் தேவையான சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இங்கே உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிருந்து வெளியேறுவது என்பது எளிதான முடிவல்ல," என்று கோயல் கூறுகிறார். அஜய் ஶ்ரீவதஸ்தாவும் கோயலின் கருத்துகளை ஆமோதிக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்படும் ஆப்பிள் போன்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையானது மிகவும் யோசித்து மேற்கொள்ளப்பட்ட உத்தியாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இந்த விவகாரத்தின் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்ததில் அழுத்தம் தர அவர்கள் முயற்சிக்கலாம். இந்தியாவில் இருந்து மேலும சில சலுகைகளைப் பெறுவதை அவர்கள் நோக்கமாக கொண்டிருக்கலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2016x05rdro
  25. 26 MAY, 2025 | 10:44 AM வவுனியா ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/215689

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.