Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 10 ஆண்டுகளுக்குப் பின் பிளே ஆஃப் வாய்ப்பு? - படிப்படியாக முன்னேறும் பஞ்சாப் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஞ்சாப் அணியின் சஷாங் சிங் 59 ரன்கள் எடுத்தார் 18 மே 2025 ஜெய்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் அணி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது, தேஷ்பாண்டே,மபாகா பந்துவீச்சில் முதல் 3 விக்கெட்டுகளை, 34 ரன்களுக்கு இழந்தது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தது இந்த போட்டியில் தான். பஞ்சாப் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்த பரியன்ஸ் ஆர்யா(9), பிரப்சிம்ரன் சிங்(21) ஆகியோர் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே, மிட்ஷெல் ஓவன் ரன் ஏதும் சேர்க்காமல் மபாகா ஓவரில் ஆட்டமிழந்தார். 19 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் பஞ்சாப் அணி தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேகல்வதேரா ஜோடி சேர்ந்த அணியை மீட்டெடுத்தனர். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது. அறியப்படாத ஹீரோ வதேரா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேகல் வதேரா தன்னை நிலைப்படுத்தியபின் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். நேகல் வதேரா தன்னை நிலைப்படுத்தியபின் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதிகம்அறியப்படாத ஹீரோவா ஐபிஎல் தொடரில் வலம் வரும் நேகல் வதேரா தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தார். இந்த ஐபிஎல் சீசனில் 10 இன்னிங்ஸில் களமிறங்கிய வதேரா 6 இன்னிங்ஸில் தனது ஸ்டிரைக் ரேட்டை 150க்கு மேலாகவைத்துள்ளார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட்டை 156 ஆகவும், 86 சரசாரி வைத்துள்ளார், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 160 ஸ்ட்ரேக்ரேட் வைத்துள்ளார். நடுப்பகுதி ஓவரை சிறப்பாகப் பயன்படுத்திய நேகல் வதேரா ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஸ்கோரை உயர்த்தினார் 10.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய வதேரா 25 பந்துகளில் அரைசதம் அடித்தார், இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஃபினிஷர் சஷாங் சிங் ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் ஸ்ரேயாஸ் 30 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து இருவரும் பிரிந்தனர். அடுத்துவந்த சஷாங் சிங், வதேராவுடன் சேர்ந்தார். முக்கியமான கட்டங்களில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய சஷாங் சிங் இந்த ஆட்டத்திலும் தனது பங்களிப்பை அளிக்கத் தவறவில்லை. சஷாங் சிங் களமிறங்கி சிறிது நேரம் தடுமாறினார், ஆனால் ஒரு பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பிய சஷாங் சிங் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார். மறுபுறம் வதேரா சதத்தை நோக்கி நகர்ந்தார். ஆனால் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தநிலையில் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். 5வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஓமர்சாய், சஷாங் சிங்குடன் சேர்ந்தார். பரூக்கி வீசிய 17வது ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்களை சஷாங் விளாசி 27 பந்துகளில் அரைசதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். டெத் ஓவர்களில் சிறந்த ஃபினிஷராக கருதப்படும் சஷாங் சிங் இந்த முறையும் அணியை பெரிய ஸ்கோருக்கு நகர்த்தினார், இவருக்கு துணையாக ஆடிய ஓமர் சாய் பவுண்டரி சிக்ஸர் என கேமியோ ஆடி 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 60 ரன்கள் சேர்த்தது. சஷாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்களிலும், ஓமர் சாய் 21 ரன்களிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 6வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதன் மூலம் ஒரு சீசனில் அதிகமுறை 200 ரன்களை எட்டிய மும்பை, கொல்கத்தா,ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் வைத்துள்ள சாதனையை பஞ்சாப் அணி சமன் செய்தது. ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிரடி தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் தொடங்கினர் 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் தொடங்கினர். ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் போராட்டக்குணத்தை விடவில்லை. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி, சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்தார். யான்சென் வீசிய 2வது ஓவரில் சூர்யவன்ஷி 2 சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது. 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி, அதில் 66 ரன்கள் பவுண்டரி, சிக்ஸரில் மட்டும் சேர்த்தது. பஞ்சாப் அணி வீரர்கள் யார் பந்துவீச்சிலும் பந்து பவுண்டரி, சிக்ஸர் என ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி பறக்கவிட்டனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் அணி வெற்றி சதவீதம் 72% ஆக இருந்தது. ஆனால், 29 பந்துகளில் சூர்யவன்ஷி , ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் வெற்றி சதவீதம் 65% ஆக உயர்ந்தது. வெற்றி இருவரின் பக்கமும் மாறி, மாறி சென்றுவந்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தநிலையில் பிரார் பந்துவீச்சில் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு சேர்த்த 76 ரன்களில் 74 ரன்கள் பவுண்டரி சிக்ஸரிலேயேதான் வந்தது. பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் வரலாற்றிலேயே ராஜஸ்தான் அணி தனது சிறந்த பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்தது. நடுவரிசை ஏமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹர்பிரீத் பிரார் தொடக்கவீரர்கள் இருவரையும் வீழ்த்தி பஞ்சாப்பை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பஞ்சாப் அணிக்கு ஹர்பிரீத் பிரார் தொடக்கவீரர்கள் இருவரையும் வீழ்த்தி பஞ்சாப்பை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். 109 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 5 ரன்களில் கேப்டன் சாம்ஸன் விக்கெட்டையும் இழந்தது. சாம்ஸன் 20 ரன்னில் ஓமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசை பேட்டர்களான ரியான் பராக்(13), ஷிம்ரன் ஹெட்மயர்(11) ஆகியோர் ஏமாற்றமே ராஜஸ்தான் அணி தடுமாறியது. துருவ் ஜூரெல் அணியை வெற்றிக்காக நகர்த்தினார், அதிரடியாக ஆடிய ஜூரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், துருவ் முயற்சிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. நடுவரிசை பேட்டிங்கிற்கு ஹெட்மயர், பராக் இருந்தபோதிலும் இந்த சீசன்களில் எதிர்பார்த்த அளவு இருவரும் சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை. துருவ் ஜூரெல் போராட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜூரெல், ஷுபம் துபே களத்தில் இருந்தனர்.அர்ஷ்தீப் 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஒரு பவுண்டரி மட்டுமே ஜூரெலால் அடிக்க முடிந்ததால் 8 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. யான்சென் வீசிய கடைசி ஓவரில் ஜூரெல், துபே தலா ஒரு ரன் எடுத்தனர். 3வதுபந்தில் தடுமாறிய ஜூரெல்(53) ரன்னில் ஓவனிடம் கேட்ச் கொடுத்தார், அடுத்த வந்த ஹசரங்கா வந்தவேகத்தில் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மபாகா கடைசி நேரத்தில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது இது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. பிரார் 3 விக்கெட்டுகளையும், ஓமர்சாய், யான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,14வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் ராஜஸ்தான் அணிக்கு பக்க பலமாக இருந்தார் 10 ஆண்டுகளுக்குப்பின் ப்ளேஆஃப் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் முழுமையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவில்லை. பஞ்சாப் அணி தற்போது 12 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று ஆர்சிபிக்கு இணையாக இருந்தாலும் நிகர ரன்ரேட் 0.389 என இருப்பதால், 2வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு இன்னும் டெல்லி, மும்பை அணியுடன் இரு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வென்றாலே ப்ளே ஆஃப் உறுதியாகிவிடும். 17 புள்ளிகளை 5 அணிகளும் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு 17 புள்ளிகள் பஞ்சாப்புக்கு பாதுகாப்பானது இல்லை, இன்னும் ஒரு வெற்றி கண்டிப்பாகத் தேவை. ஒருவேளை அடுத்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் ஏறக்குறைய 2014ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பஞ்சாப் அணி செல்லும். அறியப்படாத ஆட்டநாயகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சஷாங் சிங், ஓமர்சாய் ஜோடி பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியது அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் பிரார். இவர் எடுத்த முதல் இரு விக்கெட்டுகள் ராஜஸ்தான் அணியின் ஸ்கோருக்கு பிரேக் பேட்டது. அதன்பின் ரியான் பராக் விக்கெட்டை எடுத்து நடுவரிசை பேட்டிங்கை உலுக்கி எடுத்தார் பிரார். 4 ஓவர்கள்வீசிய பிரார் 22 ரன்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அதேபோல ஆட்டத்தில் அறியப்படாத ஆட்டநாயகர்கள் இருவர் உள்ளனர், அரைசதம் அடித்த நேகல் வதேரா(70), சஷாங் சிங்(59) இருவர்தான். இருவரின் அற்புதமான பங்களிப்பால்தான் பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இருவருமே ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக கடந்த சில சீசன்களாக ஆடி வருகிறார்கள். அதனால்தான் பஞ்சாப் அணி சஷாங்சிங்கை ஏலத்தில் தக்கவைத்தது. உச்சம் தொட்ட கூட்டணி ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் வரை சேர்த்து ஏறக்குறைய வெற்றியின் பாதிதொலைவுவரை அணியை கொண்டுவந்தனர். ஆனால், இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்தடுத்துவந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. 24வயது ஜெய்ஸ்வாலும், 14வயது சிறுவன் சூர்யவன்ஷியும் பேட்டிங்கில் ராஜஸ்தான் அணியை உச்சம் தொட வைத்தனர். இருப்பினும், இருவரின் உழைப்புக்கு அணி வெற்றிபெற்றிருந்தால், மதிப்பு இருந்திருக்கும். ஒரு கட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் இருவரின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ளேஆஃப் சுற்று கனவில் ராஜஸ்தான் மண் அள்ளிபோட்டுவிடும் என்று நினைக்கத் தோன்றி இருக்கும். இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை அரங்கின் நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டனர். ஆனால், ஹர்பிரீத் பிரார் பந்துவீச வந்து இருவரின் விக்கெட்டையும் எடுத்தபின் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி, பஞ்சாப் அணியின் கரங்களுக்கு மாறியது. ஒரு கட்டத்தில் வெற்றியை ராஜஸ்தான் துரத்தி ஓடினாலும், துருவ் ஜூரெலுக்கு துணையாக நடுவரிசை பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. அதேபோல பந்துவீச்சிலும் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆனால், அந்த தருணத்தை பயன்படுத்தி ஆட்டத்தை கடைசிவரை கொண்டு செல்ல நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லை. நேகல்வதேரா, ஸ்ரேயாஸ், சஷாங் சிங், ஓமர்சாய் ஆகியோர் ஆட்டத்தை பெரியஸ்கோருக்கு நகர்த்தியது ராஜஸ்தான் அணியின் கட்டுக்கோப்பில்லாத, துல்லியமில்லாத பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான் அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது தோல்விக்கு மிகப்பெரிய காரணம். ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், அதை அந்த அணி சரியான திட்டமிடல் இல்லாமல் பயன்படுத்தமுடியாமல் தோல்வி அடைந்தது என்றுதான் சொல்ல முடியும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3vqyg51zlo
  2. 19 MAY, 2025 | 12:02 PM 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும், இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி, விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திர சில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் ரீதியில் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறியுள்ளமை குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2020 பெப்ரவரியில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் குறித்தும், மார்ச் மாதம் பிரிட்டன் விதித்த தடைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா பிரிட்டன் தடைகளால் தான் தென்னாசியாவிற்கு கூட பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் போரிட்ட அதிகாரியின் மகளான யொகானி சில்வாவின் லண்டன் நிகழ்ச்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, சக்கி கலகே உட்பட படைப்பிரிவுகளிற்கு தலைமை வகித்தவர்கள் சர்வதேச சமூகத்தின் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் மக்கள் விடுவிக்கப்பட்டதையும் நிச்சயம் கொண்டாடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் முடிவிற்கு கொண்டுவரமுடியாது என பலர் நினைத்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஆயுதப்படையினரும் பொலிஸாரும் பெரும் விலையை செலுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார். இலங்கை இன்னமும் முதலாம் உலக யுத்த, இரண்டாம் உலக யுத்த வெற்றிகளை கொண்டாடுகின்றது. இதன் காரணமாக இந்த யுத்த வெற்றியை கைவிடுவது அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215129
  3. Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 08:20 AM விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன். இந்த குழந்தை பாலசந்திரன் 12 வயதில் கொல்லப்பட்டபோது, நான் அவரின் கதையை எழுதினேன். அவரை நேரடியாக பார்த்திராத போதிலும் நான் அவரை பற்றி எழுதினேன். தந்தையும் தாயும் எவ்வாறு சிந்திப்பார்கள் சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன். கைதுசெய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என எழுதினேன். ஆனால் இன்று பாலசந்திரன் எங்கிருக்கின்றார். பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான். இங்கிருக்கின்ற ஒவ்வொருவரினதும் உடலின் இடது பக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பான். இனப்படுகொலையின் காலடிச்சுவடுகள் என்ற இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு கதையையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். https://www.virakesari.lk/article/215115
  4. Published By: VISHNU 19 MAY, 2025 | 05:22 AM தனியார் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நில அளவை வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணவே தீர்மானிக்கப்பட்டது. இதனூடாக காணிப் பிரச்சினைகளை இதன்மூலம் முறையாக தீர்த்துக் கொள்ள முடியும். தீவின் அனைத்து மாகாணங்களிலும் காணி தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புக்களை வெளியிடுவதன் மூலம் நில தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் விசேடமான முறையில் குறிப்பிட்ட தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு அறிவித்துள்ளது. 1921 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 2025.03.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்புகள் தொடர்பான சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கும் வரை, குறித்த வரைபடப் பகுதிகளில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என காணி அமைச்சு அறிவித்துள்ளது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025.03.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 1921 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் அளந்து தயாரிக்கப்பட்ட 07 நில அளவை கிராம வரைபடங்கள் தொடர்பாக ,07 நிர்ணய அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவித்தல்கள் மேற்கூறப்பட்டுள்ள கட்டளைச் சட்டத்தின் 04ஆம் பிரிவு மற்றும் 01 ஆம் உப பிரிவின் கீழ் பிரத்தியேகமாக குறிப்பிடப்பட்டுள்ள காணி கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதிகளில் காணிகளின் உரிமையை தீர்த்து வைப்பதற்காக மட்டுமே விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், எந்த வகையிலும் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் விளம்பரங்கள் ஏதும் தயாரிக்கப்படவில்லை. தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்பு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுளள்ள நிலப்பதிகளுக்கு ஏதேனும் உரிமைகள் உள்ள தரப்பினர் மூன்று மாதங்களுக்குள் தங்களின் உரிமைகள் அல்லது உரிமைக் கோரல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.அவ்வாறு சம்பந்தப்பட்ட உரிமைக்கோரல்களை ஆய்வு செய்த பின்னர் உரிய காணித் துண்டுகளை களத்துக்குச் சென்று ஆய்வு செய்து, காணிகளை அளந்து ஒதுக்கீடு செய்ததன் பின்னர், உரிமைக்கோருபவர்களுக்கு உரிய முறையில் தீர்த்து வைக்கப்படும். அவ்வாறு தனிப்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றன நிலங்கள் முறையாக காணிப்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு, இறுதி தீர்வு உத்தரவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படுவதன் மூலம், ஒவ்வொரு நிலத்தின் உரிமையும் தனியாருக்குரியதா அல்லது அரசுக்குரியதா என்பது அறிவிக்கப்படும். நிலத்தின் உரிமையாளர் எவரேனும் வெளிநாட்டில் வசித்தால் அவர் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தரணி மூலமாகவும் தனது கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். உரிமைகோரல்களைச் சமர்ப்பிப்பதற்குச் சட்டம் மூன்று மாத காலவகாசம் வழங்கினாலும், 1996 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழ்,இறுதி தீர்வு உத்தரவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் வரை சமர்ப்பிக்கப்பட்ட உரிமைக்கோரல்களை ஏற்றுக்கொள்ளலாம் என்ற சிறப்பு ஏற்பாடு உள்ளது.இது நில உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க ஒரு வாய்ப்பை மேலும் வழங்கியுள்ளது. நில உரிமையாளர் உரிமை கோரலை தாக்கல் செய்யும்போது, அந்த காணி தொடர்பான ஆவணங்கள் மூலமாக மாத்திரம் உரிமை கோரலை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் உரிமை கோரல் விசாரணையின் போது, நிலத்தின் உடைமை, அதனை அனுபவித்தல் மற்றும் நிலத்தினை அபிவிருத்தி செய்திருத்தல் போன்ற அம்சங்களும் கவனத்திற்கொள்ளப்படுவதால், அப்போதைய போர் சூழ்நிலை காரணமாக நிலம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்ட அல்லது காணாமல் போன நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்கான உரிமைகளைத் தீர்த்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த செயன்முறையின் மூலம் குறித்த வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காண முடியும்.தனிப்பட்ட காணி உரிமையாளருக்கு அரசாங்கம் அவர்களின் காணியின் தெளிவான உரிமையை இதன்மூலம் உறுதிப்படுத்திக் கொடுக்க வாய்ப்பு கிடைக்கின்றனது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வருகின்றன காணிப் பிரச்சினைகளை இதன்மூலம் முறையாக தீர்த்துக் கொள்ள முடியும்.அரசுக்குச் சொந்தமான நிலங்களைத் தனித்தனியாக அடையாளம் காண முடிவதன் மூலம் ,முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதோடு, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் மற்றும் அரச காணிக் கட்டளைச் சட்டத்தின்படி நிலமற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசுக்குச் சொந்தமான காணிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின்படி, 1931 ஆம் ஆண்டு முதல் காணி நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்தில் 30 சதவீதம், கிழக்கு மாகாணத்தில் 81 சதவீதம், வடமத்திய மாகாணத்தில் 99 சதவீதம், வடமேல் மாகாணத்தில் 99 சதவீதம், சப்ரகமுவ மாகாணத்தில் 99 சதவீதம்,மத்திய மாகாணத்தில் 99 சதவீதம்,மேல் மாகாணத்தில் 100 சதவீதம்,தென் மாகாணத்தில் 100 சதவீதம், ஊவா மாகாணத்தில் 99 சதவீதம், என்ற அடிப்படையில் காணி நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தன. அதன்படி தீவின் அனைத்து மாகாணங்களிலும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரகாரம் தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புக்களை வெளியிடுவதன் மூலம் நில தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் விசேடமான முறையில் குறிப்பிட்ட தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. 2025.03.28 ஆம் திகதியன்று 1921 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட தீர்வுக்கான ஆரம்ப அறிவிப்புகள் தொடர்பான சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கும் வரை, குறித்த வரைபடப் பகுதிகளில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215109
  5. 18 MAY, 2025 | 05:41 PM (எம்.மனோசித்ரா) கொடூரமான 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வந்து தாயகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து விடுவித்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தாய் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமுற்ற சகல பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மலைநாட்டை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, நமது தாயகத்தையும் மக்களையும் கொடூரமான புலி பயங்கரவாத அமைப்பிலிருந்து விடுவித்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நோக்கத்திற்காக தங்கள் கண்கள், காதுகள், சதை, இரத்தம், வியர்வை மற்றும் தங்கள் உயிரைக் கூட தியாகம் செய்த அனைவருக்கும், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் மாவீரர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215089
  6. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு Published By: DIGITAL DESK 2 18 MAY, 2025 | 05:22 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் சாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் சுடர் ஏற்றி மலர் தூபி நெஞ்சறுந்த அஞ்சலியைத் தந்தனர். https://www.virakesari.lk/article/215084
  7. பட மூலாதாரம்,ALI KHAN MAHMUDABAD/FB படக்குறிப்பு,பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் 49 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார். யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியாணாவின் சோனிபட் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி, பேராசிரியர் அலி கான் மீது ஹரியாணா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் போலீசார் தங்கள் வீட்டிற்கு வந்து அலி கானை அழைத்துச் சென்றதாக அவரது மனைவி பிபிசியிடம் தெரிவித்தார். முன்னதாக ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் பேராசிரியர் அலி கானுக்கு சம்மன் அனுப்பி அவரது பதிலைக் கோரியிருந்தது. அலி கான் கைது தொடர்பாக பலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர், பலர் சமூக ஊடகங்களிலும் இதைப் பற்றி விவாதித்து வருகின்றனர். என்ன விஷயம்? மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த தகவல்களை வழங்கினர். இந்தநிலையில் மே 8 அன்று, பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார். இந்தப் பதிவில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தேர்தேடுக்கப்பட்டது குறித்து எழுதியிருந்தார். மேலும் தனது பதிவில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் மற்றும் 'போரை கோருபவர்களின்' உணர்வுகள் குறித்தும், போரின் பாதிப்புகள் குறித்தும் பேராசிரியர் அலி கான் எழுதியிருந்தார். ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் இந்த பதிவு குறித்து, தானாக கவனத்தில் எடுத்துக்கொண்டு மே 12 அன்று பேராசிரியர் அலி கானுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனில், அவரது கருத்துக்கள்'ஆயுதப் படைகளில் உள்ள பெண்களை அவமதிக்கும் வகையிலும், வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிப்பதாகவும்' உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஹரியாணா மகளிர் ஆணையம் தனது சம்மனில் ஆறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 'கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பெண்களை அவமதிப்பது மற்றும் இந்திய ராணுவ அதிகாரிகளான அவர்களின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது' பற்றியும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பேராசிரியர் அலி கானுக்கு ஆணையத்தின் முன் ஆஜராக 48 மணிநேரம் அவகாசம் அளித்து, அவரிடம் எழுத்துப்பூர்வ பதிலைக் கேட்டது. இதன் பின்னர், பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் அவர் சார்பாக மகளிர் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வ பதிலைக் கொடுத்தனர். ''அவர் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியர். அவர் இந்தக் கூற்றுகளை 'தனது கல்வி மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி' வெளியிட்டார், மேலும் அவை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன'' என பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர் அலி கானின் கருத்துக்கள் தொடர்பாக ஹரியாணாவின் சோனிபட்டில் வசிக்கும் யோகேஷ், மே 17 சனிக்கிழமை அன்று போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், ஹரியாணா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அன்று அலி கானை கைது செய்தது. பேராசிரியர் அலி கான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 196 (1)B, 197 (1)C, 152 மற்றும் 299 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹரியாணா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட மூலாதாரம்,VINEET KUMAR படக்குறிப்பு,பேராசிரியர் அலி கானை ஹரியாணா போலீசார் கைது செய்தனர். பேராசிரியர் அலி கான் என்ன சொன்னார்? மே 8 அன்று பேராசிரியர் அலி கான் வெளியிட்ட பதிவில்,"கர்னல் சோபியா குரேஷியைப் புகழ்ந்து பேசும் பல வலதுசாரிகளை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இவர்கள் இதேபோல் கும்பல் படுகொலை, தன்னிச்சையான புல்டோசர் நடவடிக்கை மற்றும் பாஜகவின் வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பலாம். இதன் மூலம் இவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்'' என கூறியுள்ளார். மேலும் "இரண்டு பெண் வீரர்கள் மூலம் தகவலை வெளியியிடும் அணுகுமுறை முக்கியமானது. ஆனால் இந்த அணுகுமுறை யதார்த்தமாக மாற்றப்படவில்லையென்றால் அது வெறும் பாசாங்குத்தனமான ஒன்றாகதான் இருக்கும் " என்று பேராசிரியர் அலி கான் கூறினார். இருப்பினும், பேராசிரியர் அலி கான் தனது பதிவில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாராட்டினார். "பொதுவான முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கள யதார்த்தம் அரசாங்கம் காட்ட முயற்சிப்பதை விட வேறுபட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு (கர்னல் சோபியா மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு) இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை காட்டுகிறது. இந்த கருத்தாக்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதையும் காட்டுகிறது" என்று அவர் எழுதியுள்ளார். பேராசிரியர் அலி கான் தனது பதிவின் இறுதியில் 'ஜெய் ஹிந்த்' என்று எழுதினார். அலி கானின் மனைவியும் வழக்கறிஞரும் என்ன சொன்னார்கள்? பட மூலாதாரம்,ALI KHAN MAHMUDABAD/FB பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது குறித்து அறிய, பிபிசி நிருபர் தில்னாவாஸ் பாஷா அவரது மனைவியிடம் பேசினார். "காலை 6:30 மணியளவில், போலீஸ் குழு திடீரென எங்கள் வீட்டிற்கு வந்து, எந்த தகவலும் கொடுக்காமல் பேராசிரியர் அலி கானை அழைத்துச் சென்றது." என அலி கானின் மனைவி ஒனைசா பிபிசியிடம் கூறினார். "நான் ஒன்பது மாத கர்ப்பிணி. விரைவில் குழந்தை பிறக்கபோகிறது. என் கணவர் எந்த உறுதியான காரணம் இல்லாமல் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்" என்று ஒனைசா கூறினார். பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் பிபிசியிடம், "அவர் கைது செய்யப்பட்டு, சோனிபட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரை அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம். இப்போது நாங்கள் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க முயற்சிக்கிறோம்" என்று கூறினார். பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்டதை ஹரியாணா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து கருத்து தெரிவித்ததற்காக காவல்துறை அவரை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைவர்கள் கூறியது என்ன? பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்ட பிறகு, பலர் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றியுள்ளனர். பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்வராஜ் அபியான் அமைப்பின் இணை நிறுவனர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். "இந்தப் பதிவைப் படித்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இதில் பெண்களுக்கு எதிரானது என்ன? இந்தப் பதிவு எப்படி மத வெறுப்பைப் பரப்புகிறது? மேலும் இது இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை எவ்வாறு ஆபத்தில் ஆழ்த்துகிறது? (முதல் தகவல் அறிக்கையில் இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 152).இத்தகைய புகாரின் அடிப்படையில் காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்?" என அலி கானின் பதிவை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் யோகேந்திர யாதவ். "கர்னல் சோபியாவை உண்மையில் அவமதித்த மத்தியப் பிரதேச அமைச்சருக்கு ஏதாவது நடந்ததா என்றும் கேளுங்கள்?" எனவும் யோகேந்திர யாதவ் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்ட செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து "ஜனநாயகத்தின் தாய்" என எழுதியுள்ளார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா "ஹரியாணா காவல்துறை அலி கான் மஹ்முதாபாத்தை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது" என்று எழுத்தாளரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான அபூர்வானந்த் கூறியுள்ளார். "ஹரியாணா காவல்துறை அலி கானை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு டிரான்சிட் ரிமாண்ட் இல்லாமல்( ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை ஒரு மாநிலத்தில்/நகரில் இருந்து வேறு மாநிலத்துக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் அளிக்கும் தற்காலிக ஆணை) அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இரவு 8 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மறுநாள் காலை 7 மணிக்கு போலீசார் அவரது வீட்டை அடைந்தனர்!" என அபூர்வானந்த் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார், மேலும் பிரபிர் புர்காயஸ்தா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,ANI ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜாவும் அலி கான் மஹ்முதாபாத் கைது குறித்து பதிவிட்டுள்ளார். "தங்கள் கருத்துக்களை அச்சமின்றி கூற மக்கள் அனுமதிப்பதே உண்மையான ஜனநாயகம்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார் . பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 'தி இந்து' செய்தித்தாளின் பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், பேராசிரியர் அலி கானின் பதிவு பாகுபாடு பற்றியது என்று கூறியுள்ளார். "இந்த கருத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இதே விஷயம் தொடர்பாக ஒரு அமைச்சர் மோசமான வகுப்புவாத கருத்தை கூறினார். அவர் இன்னும் சுதந்திரமாகதான் உள்ளார்'' என சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹரியாணா மாநில மகளிர் ஆணையத்தின் சம்மனுக்கு எதிரான கடிதத்தில் 1203 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் "சம்மனை திரும்பப் பெற்று, பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று இந்தக் கடிதத்தின் மூலம் மக்கள் கோரியுள்ளனர். இதனுடன், அசோகா பல்கலைக்கழகத்திடம் தனது பேராசிரியருடன் நிற்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் பேராசிரியர் அலி கான் யார்? பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். இது ஒரு தனியார் பல்கலைக்கழகம். அலி கான் மஹ்முதாபாத் அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர். அவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராகவும் உள்ளார். பேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் உத்தரபிரதேசத்தின் மஹ்முதாபாத்தை சேர்ந்தவர். அசோகா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, அவர் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். இதன் பிறகு சிரியாவின் டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில், அவர் சிரியாவுக்கு மட்டுமல்ல, லெபனான், எகிப்து மற்றும் யேமென் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். மேலும் இரான் மற்றும் ஈராக்கிலும் சிறிது காலம் இருந்தார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce802d4wz45o
  8. மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் அனுஸ்டிப்பு Published By: VISHNU 18 MAY, 2025 | 07:09 PM மட்டக்களப்பு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (18) தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னண மே 18 தமிழ் இன அழிப்பின் நினைவேந்தல் வாகரை முகத்துவாரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மீனவர் கட்டித்தில் கட்சியில் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்படகட்சியின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர். https://www.virakesari.lk/article/215096
  9. Published By: VISHNU 18 MAY, 2025 | 07:55 PM உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215098
  10. மட்டு. மாவட்டத்தில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு 18 MAY, 2025 | 04:52 PM மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது இனஅழிப்பு வாரம் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலமாக சென்று காந்திபூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் அகவணக்கமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இறுதி யுத்ததில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதன்போது இறுதி காலப்பகுதியில் பரிமாறப்பட்ட கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215082
  11. Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 05:25 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நாளை திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார். இன்று ஞாயிறுக்கிழமை (18) போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றியவர்களை கௌரவித்து நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதியின் முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாட்டிலுள்ள மார்ஷல் பதவி நிலைகளை வகிக்கும் முன்னாள் படைத்தளபதிகள் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர். அதற்கமைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த முப்படைகளின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த வருடாந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உயிரிழந்த ஆயுதப்படை வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அமைச்சு மற்றும் முப்படைகளின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகின்றோம். 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்வதற்காக 27000 படை வீரர்கள் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையிலான நிகழ்வுகள் நாடளவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரால் நாடு தழுவிய சமூக நலத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜனாதிபதியின் பிரதிநிதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் நிகழ்வுக்கு தலைமை தாங்குவார் எனத் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215086
  12. தமிழ் இனத்திற்கு என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் : அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் - ரவிகரன் எம்பி. Published By: DIGITAL DESK 2 18 MAY, 2025 | 04:51 PM பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் மே -18, தமிழினத்தை அழித்த நாளாக இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. குண்டுகள் பொழிந்து பலரையும் அழித்தொழிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசாங்கத்தினுடைய இனவாதிகள் சேர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறையை எங்களுடைய தமிழினத்தின் மேல் பாய்ச்சப்பட்ட நாளாக மே 18 இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றது. இந்நாளுக்கு யாராவது பதில் கூறியே ஆகவேண்டும். பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக சொல்கின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் சொல்லியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் . எம் மக்களுடைய ஆத்மா சாந்தியடைய மக்கள் கூடி அனுஷ்டிக்கின்றார்கள் என்றால் அம்மக்களின் வேதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மே 18 நாளுக்குரிய தீர்வினை இலங்கை அரசாங்கமும் , சர்வதேச நாடுகளும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/215081
  13. 18 MAY, 2025 | 08:08 PM பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகின்றோம். அத்துடன் தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும் கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கின்றோம். பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கின்றது. இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும் போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215099
  14. கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை நினைவுபடுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ Published By: RAJEEBAN 18 MAY, 2025 | 03:01 PM கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு 16வருடங்களாகியுள்ளதை குறிக்கும் விசேட நீண்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 'எங்கள் தாய் நாடு பிரிவினைவாத பயங்கரவாத ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை உங்களிற்கு தெரியும். இன்று முதல் நாட்டின் ஒவ்வொரு அடிநிலமும் இலங்கையின் இறைமையுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆளப்படும்". நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து 2009 மே 19ம் திகதி நான் வெளியிடப்பட்ட இந்த பிரகடனத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. சிங்க கொடியின் கீழ் ஒன்றுபட்ட மற்றும் பெருமைமிக்க தேசத்தின் ஜனாதிபதியாகவும், முப்படை தளபதியாகவும் நான் இந்த பிரகடனத்தை வெளியிட்டேன். உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத குழுக்களில் ஒன்றை முற்றிலுமாக அழித்து, ஒவ்வொரு குடிமகனும், இந்த நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும், சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும், சமஉரிமைகளுடனும் வாழக்கூடிய ஒரு தேசத்தை என்பது நம் அனைவராலும் நீண்டகாலமாக காணப்பட்ட ஒரு கனவாகும். ஒரு மக்கள் தலைவராக அது எனது தனிப்பட்ட கனவாகவும் காணப்பட்டது. 2005ம் ஆண்டு நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவேளை, விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தனிநாட்டிற்கான தயாரிப்பில் வடக்குகிழக்கில் ஏற்கனவே நிர்வாக மையங்களை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் எமது தாய்நாட்டின் மூன்றிலொரு பகுதியையும் கடற்கரையின் ஒரு பகுதியையும் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர். வடக்கில் உள்ள எங்களின் சொந்த தமிழ் பேசும் மக்களை அவர்கள் பயமுறுத்தி, பிணைக்கைதிகளாக மிரட்டி பிடித்து, அநியாயமாக வரிவிதித்து, இளைஞர்கள் பெண்களை பாடசாலை மாணவர்களை தங்கள் அணிகளில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டனர். அவர்களின் தாக்குதல்கள் நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், மத அரசியல் தலைவர்கள் பொதுமக்களை குறிவைத்தன. இறுதியில் மக்களின் தாகத்தை தணித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிற்கு நீர் வழங்கும் நீர்ப்பாசன நீரை கூட அவர்கள் தடுத்துவைத்திருந்தனர். இது அவர்களின் தீவிரவாதத்தின் கொடுரமான அளவை காட்டுகின்றது. அவர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் அப்பாவி மக்களின் குருதிகளை சிந்தி, இலங்கைக்கான புதிய வரைபடத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர். உலகின் வல்லரசுகள் கூட பயங்கரவாதம் குறித்த அச்சத்தில் சிக்குண்டிருந்தவேளை, நான் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள திட்டமிட்டேன் இது மனிதாபிமான நடவடிக்கை. கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்ற என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது. பிரம்டன் மேயர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். யுத்தம் நடைபெற்றவேளை முப்படை தளபதியாக விளங்கியவன் என்ற அடிப்படையில் அதனை நான் முற்றாக மறுக்கின்றேன். https://www.virakesari.lk/article/215062
  15. 18 MAY, 2025 | 02:41 PM நான் உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி போர் வெற்றி நாள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215060
  16. 'தொடர்ந்தும் நீதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் - முள்ளிவாய்க்கால் அவலங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" - உமாகுமரன் Published By: RAJEEBAN 18 MAY, 2025 | 01:28 PM முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர்16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை.காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது,குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன,உயிர்பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர் மேலும் எங்களின் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழதுகள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம். 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை.காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது,குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன,உயிர்பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர் மேலும் எங்களின் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழதுகள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.மே 18 என்பது எங்கள் அனைவருக்கும் ஆறாத காயங்கள் நீதிக்கான கதறல் ஆகியவற்றின் வலிமிகுந்த நினைவுபடுத்தல். தமிழ் பாரம்பரியத்தை உடைய பிரிட்டனின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்,பிரிட்டிஸ் சமூகத்திற்கான எனது பங்களிப்பு குறித்த பெருமிதத்தை மாத்திரம் நான் சுமக்கவில்லை,உண்மைக்காக பொறுப்புக்கூறலிற்காக மனித உரிமைகளிற்காக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பையும் நான்சுமக்கின்றேன். முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதி என்ற விடயம் தமிழர் விவகாரம் இல்லை மனிதாபிமான விவகாரம். நாங்கள் உயிர்பிழைத்தவர்களின் குரல்களிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கவேண்டும், அவர்களின் குரல்கள் மௌனமாக்கப்படாததை உறுதி செய்யவேண்டும். இலங்கையில் நிரந்தர அமைதி சமாதானம் நல்லிணக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும். நீதிக்கான பாதை கடினமானதாக வலிமிகுந்ததாக காணப்படுகின்ற போதிலும், உலக நாடுகளிலும் பிரிட்டனிலும் காணப்படுகின்ற எங்கள் மக்களின் வலிமை மற்றும் மீள் எழும் தன்மை, நம்பிக்கை நீடிப்பதை வெளிப்படுத்துகின்றது.கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் உண்மைக்கான குரல் மேலும் வலுவடைகின்றது,பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள் மேலும் வலுவடைகின்றது. பிரிட்டனில் தொழில்கட்சி அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்த வருடம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முக்கிய தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது. தடைகள் ஒரு முக்கியமான திருப்புமுனையை குறி;;க்கின்றன,நீpதி என்பது ஒரு தெரிவல்ல அவசியமான விடயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது போல,கடந்த கால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வது,நிரந்தர அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமானதாகும்.மேலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியையும் இது தெரிவித்துள்ளது. நாங்கள் எப்போதும் கடந்தகாலத்தை கௌரவிப்போம் ஆனால் எதிர்காலத்தை நாங்கள் நம்பிக்கையுடன் நோக்கவேண்டும்,நீதிநிலவும் எதிர்காலம்,உயிர்பிழைத்தவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படும் எதிர்காலம்,நல்லிணக்கம் காயங்களை ஆற்றுவதற்கு வழிசமைக்கும் எதிர்காலம். எதிர்கால தலைமுறைகள் ஒருபோதும் மறக்காத ஆனால் ,வரலாறு ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவம் மதிக்கப்படும் அவர்களுடைய உரிமைகள் நிலைநாட்டப்படும் உலகில் வாழும் எதிர்காலம். இன்று இந்த நாளை நினைவுகூரும் அனைவருக்கும் - நீங்கள் தனியாக இல்லை.நாங்கள் நினைவுகூருகின்றோம்,நாங்கள் துயருகின்றோம்,துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம். எங்கள் ஐக்கியம் விடாமுயற்சி எங்கள் கூட்டு குரல்கள் நாங்கள் முன்னோக்கி செல்லும் நிலையை ஏற்படுத்தும். நாங்கள் இணைந்து இழக்கப்பட்டவர்களின் நினைவுகளை நினைவுகளை கௌரவிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவோம்,மீண்டும் அந்த கொடுமைகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வோம். https://www.virakesari.lk/article/215056
  17. 18 MAY, 2025 | 01:14 PM தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும். அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் முள்ளிவாய்க்கால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பபட்டு 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடரை இறுதி யுத்தத்தில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா அவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. குறித்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது. இங்கு வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் பின்வருமாறு, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று வரைக்கும், கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி, அவர்கள் ஸ்ரீலங்கா அரசினால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட மண்ணில், அவர்களின் இரத்தம் தோய்ந்த புனித பூமியில், அவர்களின் தேசத்திற்கான கனவுகளை அகவயப்படுத்தி, சுதந்திர வேட்கைக்கான மூச்சுக் காற்றுடன் கலந்து, எமது இன அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போரை வன்முறையற்ற வழியில் முன்னெடுக்க, உறுதி பூண, முள்ளிவாய்க்கால் திடலில் இன்று ஒன்று கூடியுள்ளோம். சிங்கள-பௌத்த பேரினவாதம் இந்தத்தீவின் சக தேசமான தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றி கொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் காரணமாக தமிழ்தேசம் படிப்படியாக அழிந்து வருகின்றது. இன அழிப்பு எதார்த்தத்தின் விளைவாக எமது இருப்பை பாதுகாப்பதற்கும், உரிமைகளைப் பெறுவதற்குமாக எழுந்த அசாத்தியமானதும், ஈகங்கள் நிறைந்ததுமான உரிமைப் போராட்டத்தினதும் விடியலுக்காக ஒரு தேசமாக நாங்கள் அணி திரண்டு நின்றதற்கானதுமான அடையாளமாகவும் உள்ள முள்ளிவாய்க்காலையும் நாம் இன்று நினைவு கூருகின்றோம். ஸ்ரீலங்கா தீவில் சமூகங்கள் இனவாதமயப்படுத்தப்பட்டு ஜனநாயக வாக்குத் தெரிவினூடாக பிரதிநிதிகள் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட முறையிலிருந்து, இன்னும் வரலாற்றை பின்நோக்கி நகர்த்துகின்ற போது, வெவ்வேறு அரசாட்சிப் பரப்புக்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, மையத்தை நோக்கி அதிகாரங்கள் குவிக்கப்பட்டு, ஒற்றையாட்சி அரசியல் அலகில் பெரும்பான்மையினரிடம் காலனித்துவம் ஆட்சியை கைமாற்றுகையில், தமிழ் இன அழிப்புக்கான வரலாற்றுச் செயன்முறை உருவாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டதை வரலாறு தெட்டத்தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளது. தமிழ் இன அழிப்பில் பிரித்தானிய காலனித்துவத்தின் வகிபங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிரித்தானிய காலனித்துவம் தனது பேரரசின் புவிசார் நலன்களுக்காக, சிறி லங்காவின் கேந்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை தனது இராணுவ நலன்களுக்காகத் தக்க வைப்பதற்காக ஒற்றையாட்சி அரசியல் அலகாக கட்டமைத்தது. ஒற்றையாட்சி அரசியல் அலகு எப்போதுமே பெரும்பான்மான்மையிடம் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும். பிரித்தானிய காலனித்துவத்திடம் பரிசாகக் கிடைத்த ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை, தமிழ் இன அழிப்பிற்கான ஒரு கருவியாக சிங்கள-பெளத்த பேரினவாதம் ஸ்ரீலங்காவின் சுதந்திரத்தின் பின்னான அரசியல் வரலாற்றில் பயன்படுத்தியது. 19 ம் நூற்றாண்டில் நவீன சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம், காலனித்துவத்தின் அடக்குமுறை உத்திகளை உள்வாங்கி, வன்வலுவை பயன்படுத்தி தமிழர் தேசம் மீதான பெரும் போரை திணித்தது. அப்போரை மகாவம்ச இதிகாச வரலாற்றுப் புனைவின் விவரணங்களுக்கூடாக நியாயப்படுத்திக் கொண்டது. இவ் வரலாற்று விவரணங்களுள் ஸ்ரீலங்கா ஒற்றையாட்சித் தன்மையை சரியெனக் காட்டி, ஏக தேச-நாட்டை சிங்கள-பெளத்த நாடாக கட்டமைக்க, பூர்வீக தமிழர் தாயகத்தை அபகரிக்கின்ற அரசியல் செயற்திட்டத்தை முன்னெடுத்தது. 2009 ற்கு முன்னர் தமிழர் தாயகத்தை அபகரிக்கரிப்பதற்கு இராணுவ வன்வலுவைப் பயன்படுத்திய கொழும்பு அதிகார மையத்தை கையகப்படுத்திய அரசாங்கங்கள், 2009 க்குப் பின்னர், பௌத்த மதத்தையும், அபிவிருத்தியையும், மென் வலுவாகப் பயன்படுத்தி தமிழர் மீதான அடக்குமுறையையும், தமிழரின் பூர்வீக தாயகப் பரப்பான வடக்கு-கிழக்கையும் தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கூடாக அபகரித்து வருவதும், தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்குவதும் எம் கண்முன்னே நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. 21 ம் நூற்றாண்டில் ஏக துருவ உலக ஒழுங்கிற்கான போட்டி பல முனைகளில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்கும் போது, ஏக துருவ பேரரசுக் கட்டமைப்பு, தனது புவிசார் நலன்களுக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவுள்ளதை, அன்று முள்ளிவாய்க்காலும், இன்று பலஸ்தீனமும் வெளிக்கொண்டு வருகின்றது. தமிழ் இனத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டம் வெறுமனே ஸ்ரீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் மட்டுமல்ல; ஏக துருவ பேரரசை கட்டமைக்க முயலும் உலக ஒழுங்கிற்கெதிரான போராட்டமும் என உணர்ந்த மேற்குலக வல்லாதிக்க சக்திகள், ஸ்ரீலங்கா அரசை கருவியாகப் பயன்படுத்தி தமிழ் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை 2009 இல் இரும்புக்கரம் கொண்டு மௌனிக்கச் செய்தது. தமிழ் இன அழிப்பில் ஸ்ரீலங்கா அரசு பிரதான குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டிருந்தாலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தமிழ் இன அழிப்பு குற்றப் பொறுப்பில் உடந்தையர்களாக அடையாளம் காணப்பட்டன. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! தற்போது அதிகாரத்திலுள்ள அரசாங்கம், தமிழ் இனத்தின் நில மீட்பை மையப்படுத்திய விடுதலைப் போராட்டத்தை, இனவாதமாகச் சித்திகரிக்க முயற்சிக்கின்றது. இனவாதமாகச் சித்தரிப்பதன் மூலம் அதை உள்ளூர் பிரச்சினையாக சோடித்து, ஈழத்து தமிழர்களின் தேசத்திற்கான அரசியல் வேணவாவையும், அரசியல் அறக்கோரிக்கைகளையும் இல்லாதொழித்து, ஸ்ரீலங்காவை சிங்கள-பௌத்த ஏக அடையாளத்துடன் கட்டமைக்க முனைவது, இத்தீவின் பல்லினத் தன்மையை சாகடிப்பதாகும். தற்போதைய அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந் தேசியவாத விழுமியங்களை நிலை நிறுத்தி ஸ்ரீலங்காவை ஏக அரசியல் - மத - பண்பாட்டு நாடாக கட்டியமைப்பதன் மூலம் சிங்கள-பௌத்த மக்களுக்கு விசுவாசியாக காண்பிப்பதோடு, ஏக துருவ பேரரசை கட்டமைக்க முயலும் உலக ஒழுங்கின் வல்லாதிக்கத்திற்கும் நம்பிக்கைக்கு பாத்திரமானதாகக் தோன்ற முயற்சிக்கின்றது. தமிழ் தேசம் வரலாற்றுப் பட்டறிவுக்கூடாக பயணித்தது என்பதை அண்மைய அரசியல் தெளிவுள்ள முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் இன அழிப்பு மறுப்பை தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன அழிப்பின் மறுப்பே இன அழிப்பின் இறுதி ஆயுதமாகும் என்ற வரிகள் தற்போது ஆட்சிக் கதிரையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் பதிவிட்டே ஆக வேண்டும். தமிழ் இன அழிப்பை நினைவு கூர்வதற்கான நினைவுச்சின்னங்களை கட்டமைக்க தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் தடையை அமுல் படுத்தி வருகின்றது. தமிழ் இன அழிப்பு பொறுப்பு கூறலிலும், அதற்கான நீதிப் பொறிமுறையிலும் அநுர அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கை கையாண்டு வருவது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஸ்ரீலங்காவின் உள்ளூர் விசாரணைப் பொறிமுறையில் நம்பகத் தன்மையை இழந்த ஒட்டுமொத்தத் தமிழ் இனம், 2009 இலிருந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கோரி வருகின்றது. தமிழ் இன அழிப்புக்கு நீதி வேண்டிய சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான போராட்டங்கள் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்திற்குள் தமிழ் இனம் வலிந்து தள்ளப்பட்டுள்ளது. தமிழ் இன அழிப்பு குற்றத்தை மலினப்படுத்துகின்ற செயன்முறையில் ஈடுபடும் தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல, அவை தமிழின விடுதலைப் போராட்டத்தின் திசையை மாற்றுவதோடு, ஸ்ரீலங்கா அரசிற்கும், உலக வல்லாதிக்க சக்திகளுக்கும் விலை போனதாக வரலாறு அவர்களை நினைவு கொள்ளும். தற்போது ஆட்சி அமைத்த அநுர அரசாங்கம், தமிழ் இனத்தின் கூட்டு அரசியல் வேணாவை புறந்தள்ளி வருவதோடல்லாமல், தமிழ் தேசியத்தின் விழுமியங்கள் மீதான நம்பிக்கையை உடைத்து வருகின்றது. அதை ஒரு போர் முறையாக முன்னெடுக்கின்றது. தமிழ் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்களை தற்போதைய உலக ஒழுங்கிற்கு பொருத்தப்பாடற்றதாக கட்டமைத்து, தமிழ் இனத்தின் கூட்டு அரசியல் நம்பிக்கை மீதான உளவியல் போரை கட்டவிழ்த்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியத்தின் நம்பிக்கை மீது தொடுக்கப்படும் போர், ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்காலில் சந்தித்ததை விட மிகக்கொடூரமான போர், தமிழ் இனத்தின் கூட்டு இருப்பினதும் அதனது அடிப்படைப் பண்புகள் மீதும் தொடுக்கப்படும் போர். தற்போது எமக்குமுன் உள்ள வரலாற்றுத்தெரிவு தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தி அக் குடையின் கீழ் நம்பிக்கை வேறுபாடுகளுடன் அல்ல, உத்தி வேறுபாடுகளுடன் ஒன்று கூடுவது. இது எம் இனத்திற்கு வரலாறு தரும் இறுதித் தெரிவாகவும் நோக்க வேண்டி இருக்கும். இவ் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறுவதை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. வரலாறு கொடுக்கும் இறுதி சந்தர்ப்பத்தை நழுவ விடாது, தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி தமிழ் இன அழிவிற்கான நீதி கோரி அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி, எமக்காகவும், எம் தேசத்திற்காகவும், தேச இன விடுதலைக்காகவும் இறந்து போன எம் மறவர்களையும், இரத்த சொந்தங்களையும் நினைவு கூர்வதோடல்லாமல் அவர்களது கனவு நனவாக, இந்த இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம். பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரசு அடக்குமுறைக்கெதிராகவும், சிங்கள ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்குமுறைக்கெதிராகவும், போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்பட வில்லை. இரத்தம் தோய்ந்த இம் மண்ணிலிருந்து போராட, கனத்த காற்றுச் சுமந்து வரும் எம்மவர்களின் நினைவுகளின் மீதும், நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலை நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம். சிங்கள-பௌத்த மயமாக்கப்படும் தமிழ் தாயகத்தை தடுக்கவும், தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும், ஈழத்தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி, அரச பொறுப்பையும், மேற்குலக நாடுகளின் உடந்தைத் தன்மையையும் வலியுறுத்தி, குற்றவாளிகளை குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தவும், தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒரு போதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும், கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவீழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை தடுக்கவும், தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழ் இன அடக்கு முறைக்கெதிராக தமிழ் இன விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம். மே 18 தமிழ் இன அழிப்பிற்கு எதிரான தேசிய எழுச்சி நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வடக்கு-கிழக்கு. மே 18, 2025 https://www.virakesari.lk/article/215053
  18. பி.எஸ்.எல்.வி - சி 61 ராக்கெட் தோல்வி - இஸ்ரோ கூறியது என்ன? இன்றைய முக்கிய செய்திகள் பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP PHOTO/INDIAN SPACE RESEARCH ORGANISATION (ISRO)" படக்குறிப்பு,பி.எஸ்.எல்.வி சி 61 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. 18 மே 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தில் (18/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையாதங்களில் வந்துள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி சி 61 ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை தாங்கிச் சென்றது. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சென்ற பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் 2 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது இதனால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது https://www.bbc.com/tamil/articles/c0qg1vlwj17o
  19. முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம். 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது, குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர்பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர். மேலும் எங்களின் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மே 18 என்பது எங்கள் அனைவருக்கும் ஆறாத காயங்கள் நீதிக்கான கதறல் ஆகியவற்றின் வலிமிகுந்த நினைவுபடுத்தல். தமிழ் பாரம்பரியத்தை உடைய பிரித்தானியாவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பிரித்தானிய சமூகத்திற்கான எனது பங்களிப்பு குறித்த பெருமிதத்தை மாத்திரம் நான் சுமக்கவில்லை, உண்மைக்காக பொறுப்புக்கூறலிற்காக மனித உரிமைகளிற்காக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பையும் நான் சுமக்கின்றேன். முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதி என்ற விடயம் தமிழர் விவகாரம் இல்லை மனிதாபிமான விவகாரம். நாங்கள் உயிர்பிழைத்தவர்களின் குரல்களிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கவேண்டும், அவர்களின் குரல்கள் மௌனமாக்கப்படாததை உறுதி செய்யவேண்டும். இலங்கையில் நிரந்தர அமைதி சமாதானம் நல்லிணக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும். நீதிக்கான பாதை கடினமானதாக வலிமிகுந்ததாக காணப்படுகின்ற போதிலும், உலக நாடுகளிலும் பிரித்தானியாவிலும் காணப்படுகின்ற எங்கள் மக்களின் வலிமை மற்றும் மீள் எழும் தன்மை, நம்பிக்கை நீடிப்பதை வெளிப்படுத்துகின்றது. பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடை கடந்து செல்லும் ஒவ்வொரு வருடமும் உண்மைக்கான குரல் மேலும் வலுவடைகின்றது, பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள் மேலும் வலுவடைகின்றது. பிரித்தானியால் தொழில்கட்சி அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதை நோக்கி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வருடம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முக்கிய தனிநபர்களிற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தது. தடைகள் ஒரு முக்கியமான திருப்புமுனையை குறிக்கின்றன, நீதி என்பது ஒரு தெரிவல்ல அவசியமான விடயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது போல, கடந்த கால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வது, நிரந்தர அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமானதாகும். மேலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியையும் இது தெரிவித்துள்ளது. நாங்கள் எப்போதும் கடந்தகாலத்தை கௌரவிப்போம் ஆனால் எதிர்காலத்தை நாங்கள் நம்பிக்கையுடன் நோக்கவேண்டும், நீதிநிலவும் எதிர்காலம், உயிர்பிழைத்தவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படும் எதிர்காலம், நல்லிணக்கம் காயங்களை ஆற்றுவதற்கு வழிசமைக்கும் எதிர்காலம். எதிர்கால தலைமுறைகள் ஒருபோதும் மறக்காத ஆனால் ,வரலாறு ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவம் மதிக்கப்படும் அவர்களுடைய உரிமைகள் நிலைநாட்டப்படும் உலகில் வாழும் எதிர்காலம். இன்று இந்த நாளை நினைவுகூரும் அனைவருக்கும் - நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் நினைவுகூருகின்றோம், நாங்கள் துயருகின்றோம், துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம். எங்கள் ஐக்கியம், விடாமுயற்சி, எங்கள் கூட்டு குரல்கள் நாங்கள் முன்னோக்கி செல்லும் நிலையை ஏற்படுத்தும். நாங்கள் இணைந்து இழக்கப்பட்டவர்களின் நினைவுகளை நினைவுகளை கௌரவிக்கும் எதிர்காலத்தை உருவாக்குவோம், மீண்டும் அந்த கொடுமைகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/tamil-genocide-remembrance-day-uk-mp-uma-kumaran-1747560081
  20. இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்கள் - 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி 18 MAY, 2025 | 01:56 PM இஸ்ரேல் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை முதல் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலில் 125 பேர் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அல்ஜசீரா அல் மவாசியில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது. நள்ளிரவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 20 பேரின் உடல்கள் கான்யூனிஸ் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மவாசியில் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வீடுகள் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. மத்திய காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்வெய்டா என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் நான்கு பெண்கள் உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை டெய்ர் அல் பலாவில் இடம்பெற்ற தாக்குதலில் பெற்றோரும் அவர்களின் பிள்ளையும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/215061
  21. பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் புதிய இணைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறுகின்றது. முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குருவினால் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியள, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இணைப்பு தமிழினப் படுகொலையின் 16 ஆண்டு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுமுன்னர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆரம்பமாகியுள்ளன. இரண்டாம் இணைப்பு தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாரான முள்ளிவாய்க்கால் மண்...குவிந்துள்ள மக்கள் தமிழினப் படுகொலை நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நினைவேந்தலுக்கு தயாராகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏராளமான மக்கள் நினைவு முற்றத்தில் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகள் - பா.பிரியங்கன் முதலாம் இணைப்பு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது. பொதுச் சுடர் ஏற்றுதல் அதன்படி, முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும். இதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்படும். பொதுச் சுடர் ஏற்றப்படும் சமநேரத்தில் நினைவேந்தலில் பங்கேற்பவர்கள் தீபங்களை ஏற்றுவர். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்படும். பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக காலை 6.30மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் போரில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெறவுள்ளன. அத்துடன், “தமிழினப் படுகொலை நாளான மே 18 தினத்தில் (இன்று) நாம் அனைவரும் திரளாகக் ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் அநீதிக்கு நீதி வேண்டியும் ஒன்றுபடுவோம். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்ற விடயத்தை உரத்துச் சொல்ல இணைவோம்" என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு, கிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆமஸ்ரோங் அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்துவதற்கு அரசியல் கட்சிகள், பொதுக் கட்டமைப்புகள், பொது நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. தமிழின அழிப்பின் அடையாளம் தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் 4 கட்ட ஈழப் போர்களாக நடைபெற்றன. இறுதிப் போர் கட்டம் 2006 - 2009 மே வரை நீடித்தது. மோதலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டனர். இறுதியாக முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்புக்குள் மக்கள் முடக்கப்பட்டபோது மனித குலத்துக்கு எதிரான விரோத செயல்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்கள் - துயரங்களை - அழிவுகளைச் சந்தித்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் திகதி தமிழின அழிப்பின் அடையாள நாளாக தமிழ் மக்கள் நினைவேந்தி வருகின்றனர். கொல்லப்பட்ட தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட தமது இன மக்களுக்காக நீதி கோரும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/mullivaikkal-remembrance-day-2025-may-18-1747537623#google_vignette
  22. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: சம்பியன் அணிக்கு 107 கோடி ரூபா, தோல்வியுறும் அணிக்கு 62 கோடி ரூபா Published By: VISHNU 16 MAY, 2025 | 02:01 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்தின் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படவுள்ள பணப்பரிசு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி உறுதி செய்துள்ளது. இதற்கு அமைய சம்பியனாகும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 107 கோடியே 53 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (62 கோடியே 68 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவும் முதல் தடவையாக தென் ஆபிரிக்காவும் பங்குபற்றுகின்றன. இந்த இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இப் போட்டியில் 5 நாட்களில் முடிவு கிட்டாவிட்டால் 6ஆம் நாளன்று போட்டி தொடரும். கடந்த இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களில் சம்பியன்களான நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் பெற்ற பணப்பரிசைவிட இம்முறை பணப்பரிசு இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தும், அவுஸ்திரேலியாவும் கடந்த இரண்டு அத்தியாயங்களில் சம்பியனானபோது 1.6 மில்லியன் அமெரிக்கா டொலர்களைப் பணப்பரிசாக வென்றெடுத்தன. அந்த இரண்டு அத்தியாயங்களிலும் தோல்வி அடைந்த இந்தியாவுக்கு தலா 800,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக கிடைத்தது. மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி பருவ முடிவில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 69.44 புள்ளிகளுடன் முதலாம் இடத்தையும் அவுஸ்திரேலியா 67.54 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இதேவேளை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 4ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கைக்கு 840,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 25 கோடி ரூபா) கிடைக்கவுள்ளது. ஏனைய பணப்பரிசுகள் இந்தியா 3ஆம் இடம் - 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நியூஸிலாந்து 4ஆம் இடம் - 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இங்கிலாந்து 5ஆம் இடம் - 960,000 அமெரிக்க டொலர்கள் பங்களாதேஷ் 7ஆம் இடம் - 720,000 அமெரிக்க டொலர்கள் மேற்கிந்தியத் தீவுகள் 8ஆம் இடம் - 600,000 அமெரிக்க டொலர்கள் பங்களாதேஷ் 9ஆம் இடம் - 480,000 அமெரிக்க டொலர்கள். https://www.virakesari.lk/article/214843
  23. 18 MAY, 2025 | 07:20 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழநனதவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்லில் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியவரான இரத்தினம் ஜெகதீசனும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215011
  24. 17 MAY, 2025 | 11:14 PM தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு இன்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்புகளை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை துஷித ஹல்லொலுவ வெளியிட்டதுடன், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215009
  25. Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 11:07 AM திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்று சனிக்கிழமை (17) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு இரு வாரங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாம பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215031

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.