Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. 🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?
  2. ரொம்ப அடிபட்டு மிதிபட்டு இங்க வந்துருக்கேன், ஆனா அது எல்லாத்தையும்! - Rapper Vedan | Manjummel Boys
  3. சென்னைக்கு ரயில் தவறி வந்த மாற்றுத்திறனாளி பெண் கூடைப்பந்து வீராங்கனையானது எப்படி? படக்குறிப்பு, கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருநகர சென்னை மாநகராட்சி, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் எனும் அமைப்புடன் இணைந்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஒரு காப்பகத்தையும், ஒரு பிரத்யேக உடற்பயிற்சி மையத்தையும் நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறது. இங்கு பாரா விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் இலவசமாக தங்கி, பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அப்படி தங்கியிருக்கும் பாரா விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவர், கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி. 10 வருடங்களுக்கு முன், ஒரு ரயில் பயணத்தில் வழிதவறி சென்னை வந்துசேர்ந்த லக்ஷ்மி, இன்று பாரா கூடைப்பந்து வீராங்கனையாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கிறார். லக்ஷ்மி 15 வயதில், ஒரு ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தவர். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தபிறகு, ஒரு கட்டத்தில் கணவர் இறந்துவிட, வறுமையின் காரணமாக முதல் பிள்ளை மற்றும் 3வது பிள்ளையை தனது உறவினர்களிடம் கொடுத்தார் லக்ஷ்மி. இரண்டாவது பிள்ளையான தனலக்ஷ்மியை இவரே வளர்த்து வந்தார். வேலை வாய்ப்பும், தங்குவதற்கு இடமும் அளிப்பதாக உறவினர் ஒருவர் உறுதியளிக்க, தனது மகளுடன் ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளார். "அங்கு சிறிது காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். அதில் பல மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்தார்கள். ஆனால் ஊதியம் மிகக்குறைவு. தினமும் தரையில் தவழ்ந்து தான் பணிக்குச் செல்வேன். ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கே செல்லலாம் என முடிவு செய்தேன். அந்த நிறுவனத்தில் இருந்த ஒருவர், அருகில் உள்ள நகரப் பகுதியில் ஒரு தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமும், ஒரு சக்கர நாற்காலியும் இலவசமாக வழங்குவதாக கூறினார். சரி அதை வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பலாம் என முடிவு செய்து, அவரை நம்பி எனது 5 வயது மகளுடன் சென்றேன்." என்று கூறுகிறார் லக்ஷ்மி. ஆனால் அங்கு கிடைத்த உதவித்தொகையை உடன் வந்தவர் எடுத்துக்கொண்டு, தென்னிந்தியாவை நோக்கிச் செல்லும் ஏதோ ஒரு ரயிலில் லக்ஷ்மியையும் அவரது மகளையும் அனுப்பிவைத்துள்ளார். ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு அன்று நடந்ததை நினைவுகூறும் லக்ஷ்மி, "'உனது ஊருக்குதான் செல்கிறது ஏறு' என அந்த நபர் என்னை மகளுடன் ஏற்றிவிட்டார். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, கிடைத்த 2000 ரூபாயையும், 'நான் தானே உன்னை அழைத்துவந்தேன், அதற்கு கமிஷன்' எனக்கூறி அவர் பிடுங்கிக்கொண்டார். டிக்கெட்டோ அல்லது உணவோ வாங்கித் தரவில்லை. பசியுடன் தான் நானும் எனது மகளும் பயணித்தோம். ஒரு இடத்தில் ரயில் நின்றபோது முழிப்பு தட்டியது. எழுந்துபார்த்தபோது அருகில் வைத்திருந்த அந்த சக்கர நாற்காலியை காணவில்லை. பதறி, எனது மகளுடன் ரயில் நிலையத்தில் இறங்கி அங்குமிங்கும் தவழ்ந்து, சக்கர நாற்காலியை பார்த்தீர்களா என அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ரயில் கிளம்பத் தொடங்கியது. தவழ்ந்து செல்வதற்குள் அது வெகு தூரம் சென்றுவிட்டது" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மகளுடன் பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்தேன். நள்ளிரவு நெருங்க நெருங்க பயம் வந்தது. மொழி தெரியாத ஏதோ ஒரு தென்னிந்திய ஊரில் இருக்கிறேன் என்பது மட்டும் தெரிந்தது. அப்போது அங்கு வந்த ஒரு ரயிலில் மகளுடன் ஏறினேன். நான் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு அதுதான். அந்த ரயில் சென்னை செல்கிறது என்றோ, நான் சில வருடங்களில் ஒரு பாரா விளையாட்டு வீராங்கனையாக மாறப்போகிறேன் என்றோ அப்போது தெரியாது." என்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, பிளாட்பாரத்திலேயே அமர்திருந்த லக்ஷ்மியையும் அவரது மகளையும் கண்ட சிலர், விசாரித்துவிட்டு, ஒரு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். "அந்த காப்பகத்தில் சிறிது காலம், பிறகு வேறொரு தனியார் காப்பகத்தில் சிறிது காலம் என கழித்த பிறகு, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் நடத்திய காப்பகத்தில் எனது மகளுடன் தங்கினேன். மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க அவர்கள் உதவினர். அவ்வப்போது கர்நாடகாவில் எனது உறவினர்களிடம் வளர்ந்துவந்த இரு பிள்ளைகளிடமும் பேசி வந்தேன். ஆனால், இப்படியே வாழ்க்கை கழிந்துவிடக்கூடாது என நினைத்து தையல் தொழில் கற்று வந்தேன். அதன் பிறகு பாரா விளையாட்டு போட்டிகளைப் பற்றி அறிந்துகொண்டேன்." என்கிறார் லக்ஷ்மி. படக்குறிப்பு,சென்னையில், அரசு 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தனது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சென்னை பெருநகர் மாநகராட்சியின் 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தற்போது தனது 15 வயது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி. தனலக்ஷ்மி இப்போது ஒரு தனியார் பள்ளியில், 7ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 8ஆம் வகுப்பிற்கு செல்ல காத்திருக்கிறார். பாரா விளையாட்டில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதைக் குறித்து பேசிய லக்ஷ்மி, "எனக்கு எந்த பாரா விளையாட்டு ஏற்றது என குழப்பத்தில் இருந்தபோது, சக்கர நாற்காலி கூடைப்பந்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதலில் பயிற்சி எடுக்கத் தொடங்கியதும் எளிதாக இருப்பது போல இருந்தது. சரி என நம்பிக்கையுடன் ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது, எதிரணியைச் சேர்ந்த ஒருவர் இடித்ததில் சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. அந்த வலி போகவே சில நாட்களானது. அதன் பிறகுதான் இது எளிதான ஒன்று அல்ல எனப் புரிந்துகொண்டு, தீவிரமாக பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இப்போது நான் ஒரு மாநில அளவிலான பாரா கூடைப்பந்து வீராங்கனை." என்கிறார். மாற்றத்தை ஏற்படுத்திய மாரியப்பன் தங்கவேலுவின் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாரியப்பன் தங்கவேலு (கோப்புப் படம்- 2024) "லக்ஷ்மியைப் போல இன்னும் பல மாற்றுத்திறனாளி பெண்கள், பாரா விளையாட்டுகள் தங்கள் வாழ்வை உயர்த்தும் என நம்புகிறார்கள்" என்கிறார் நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகியும், பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் இயக்குனருமான, டாக்டர் ஐஸ்வர்யா ராவ். இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. "லக்ஷ்மி உள்பட இங்கு தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல் போன்ற தொழில்களைதான் முதலில் கற்றுக்கொடுத்து வந்தோம். ஆனால், ஏதோ ஒரு கைத்தொழில் என்பது அவர்களுக்கான அடுத்த கட்டமாக இருக்காது என்பதை உணர்ந்தோம். அப்போது 2016 பாரா ஒலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் பெற்ற வெற்றி எங்களை சிந்திக்க வைத்தது" என்கிறார். 2016இல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். "அந்த வெற்றியால் தமிழகத்தில் பாரா விளையாட்டுகளுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு எங்கள் காப்பகத்தில் இருக்கும் பெண்களுக்கு பாரா விளையாட்டு பயிற்சிகளை அளித்தோம். அது பலனளிக்க ஆரம்பித்தது. எங்களது பெண்கள் பலரும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்." என்கிறார் ஐஸ்வர்யா ராவ். மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மனச்சோர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், பக்கவாதம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய டாக்டர் ஐஸ்வர்யா, "அதனால்தான் ஏதோ ஒரு தொழில் அல்லது வேலைவாய்ப்பு என அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதை விட பாரா விளையாட்டில் ஆதரவளித்தால், உடல்நலமும் அவர்களுக்கு மேம்படும். எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளால் உடல் உழைப்பு தேவைப்படும் அன்றாட வேலைகளை எளிதில் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் சக்கர நாற்காலி எனும்போது, எளிதாக எடை கூடி, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே தான் எங்கள் காப்பகத்தின் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்வதும், பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்வதும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது." என்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஜிம்கள் படக்குறிப்பு,நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகி டாக்டர் ஐஸ்வர்யா ராவ் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கும் பல பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய உடற்பயிற்சி மையங்கள் மிகவும் குறைவு எனக் குறிப்பிடும் ஐஸ்வர்யா, "இந்த உடற்பயிற்சி மையம்தான் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான முதல் இலவச மையம். இதைப் போலவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்." என்கிறார். இந்த அரசு காப்பகத்தில் தங்கியிருக்கும் தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனையான நதியா, "சாதாரண உடற்பயிற்சி கூடத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் நுழைந்தாலே விசித்திரமாக பார்ப்பார்கள். காரணம், வழக்கமான ஜிம்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த வசதிகள் இருக்காது. எனவே நாங்கள் தவழ்ந்து செல்வோம். உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு அவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையை மறக்கவே முடியாது. மிகவும் அவமானமாக இருக்கும், பிறகு எங்கே நிம்மதியாக உடற்பயிற்சி செய்வது. எனவே அரசு இதுபோன்ற மேலும் சில உடற்பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்" என்கிறார். படக்குறிப்பு,தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனை நதியா மாற்றுத்திறனாளி பெண்களுக்கான புதிய பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது குறித்து பேசிய சென்னை பெருநகர் மாநகராட்சியின் ஆணையர் ஜெ.குமரகுருபரன், "இப்போது நுங்கம்பாக்கத்தில் மட்டுமே காப்பகத்துடன் இணைந்த ஒரு உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளோம். இது பாரா வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் இலவசம்தான். அவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு இதைப் பயன்படுத்தலாம். விரைவில் சென்னையின் பிற பகுதிகளிலும் இத்தகைய 'ஜிம்களை' நிறுவ உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளின் ஆலோசனைபடியே இவை வடிவமைக்கப்படும்." என்று கூறினார். "பாரா விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது வாழ்வாதாரமாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு முறை சாப்பாடு இல்லை என மகள் பார்க்க பிறரிடம் கையேந்தி நின்றிருக்கிறேன். இப்போது அதே மகள் முன் பாரா விளையாட்டு வீராங்கனையாக பதக்கத்துடன் நிற்கிறேன். சீக்கிரமாக எனது மற்ற இரண்டு மகள்களையும் என்னுடன் அழைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்கிறார் லக்ஷ்மி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqzr45r8vo
  4. அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை....
  5. Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 09:01 PM டென்மார்க் அரசு, தனது நாட்டில் ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன்சென் தெரிவித்துள்ளார். வயது அடிப்படையிலான மக்கள் விநியோகம்: டென்மார்க் நாட்டில் 60–69 வயதினரானவர்கள் சுமார் 7.13 லட்சம் பேர் உள்ளனர். அதேசமயம், 70–79 வயதினர்கள் 5.80 லட்சமாக உள்ளனர். தற்போது 80,000க்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய வயதுக்கு மேல் இருந்தும் பணியாற்றி வருகின்றனர். இது நல்வாழ்வு நிலை, பணியாளர் உரிமைகள் மற்றும் நிதி ஊக்குவிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று F&P அமைப்பு தெரிவித்துள்ளது. F&P இயக்குநர் ஜான் வி. ஹான்சன், “இந்த உயர்வு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், மக்கள் நீண்ட காலம் பணியாற்றும் போக்கே அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ஓய்வூதிய வயது நிலவரம் டென்மார்க் ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70-க்கு மேல் உயர்த்தும் நாடாக மாறுகிறது. இதனால், உலகளவில் லிபியாவுடன் இணையான நிலையை பெற்றுக் கொள்கிறது. பிரான்சில், கடந்த மார்ச் மாதம் 64 வயதிற்கு ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீதியில் பேரணி செய்தனர். செப்டம்பரில், சீன அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதில் ஆண்களின் ஓய்வுபெறும் வயது 60 இருந்து 63 ஆக உயர்த்தப்படுகிறது. பெண்களின் தொழில்களுக்கு ஏற்ப 50 மற்றும் 55 ஆக இருந்த ஓய்வுபெறும் வயது, 55 மற்றும் 58 ஆக உயர்த்தப்பட்டது. இங்கிலாந்தில் 2026 முதல் 2028 வரை ஓய்வூதிய வயது 67 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 68 ஆக உயர்த்தும் ஆய்வும் நடந்து வருகிறது. அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது, ஐக்கிய இராச்சியத்தின் ஓய்வுவயதுக்கு சமானமாகவே இருக்கிறது. இருப்பினும், சில சமூக பாதுகாப்பு நலன்கள் 62வது வயதிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. உலகம் முழுவதும் வாழ்நாள் நீடித்தும், பொருளாதார சவால்களும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் ஒரு கட்டாய நிலையை உருவாக்கி வருகின்றன. டென்மார்க் இந்த மாற்றத்தில் முன்னணி நாடாக மாறி, எதிர்கால சந்ததிகளுக்கான நலத்தைக் கண்காணிக்கும் நோக்கில் 70 வயதுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. இது ஒரு உலகளாவிய போக்காகவே உருவாகி வருகிறது, மக்கள் நீண்ட காலம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/215582
  6. 24 MAY, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது. தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம். மேலும் அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம். இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும். https://www.virakesari.lk/article/215570
  7. "மற்ற ஜிம்களில் எங்களையே உற்றுப் பார்ப்பார்கள்" - சென்னையில் மகிழும் மாற்றுத்திறனாளி பெண்கள் 24 மே 2025, 01:14 GMT மாற்றுத்திறனாளி பெண்களுக்காக செயல்படும் இலவச உடற்பயிற்சிக் கூடம் தற்போது சென்னை மாநகராட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இங்கே உடற்பயிற்சி மேற்கொள்ள வரும் பெண்கள், இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் குறித்து கூறுவது என்ன? அவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த உடற்பயிற்சி கூடங்கள். முழு விவரம் வீடியோவில்! - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c771v21v01vo
  8. வேடன் ஈழத்தமிழனா? | யாழ்ப்பாணத்து பெண் எப்படி கேரளாவில்? | Indian Rapper Vedan| voice of voiceless
  9. 24 MAY, 2025 | 04:05 PM நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/215581
  10. நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு உணவகத்தை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் - வடக்கு ஆளுநரிடம் சைவ அமைப்புகள் வேண்டுகோள் 24 MAY, 2025 | 04:58 PM நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் நல்லை சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை சைவ அர்ச்சகர் சபை, சைவ பரிபாலன சபை, அகில இலங்கை சைவ மகா சபை, சைவ வித்யா விருத்தி சங்கம், இலங்கை சைவசமய பேரவை உட்பட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்துகற்கைகள் பேராசிரியர், திருக்கேதீச்சரம் அறங்காவலர் ஆகியோர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. முதல் கட்டமாக யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட நல்லூர் ஆலயச் சுற்றாடலில் மதுபான கேளிக்கை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனவும் அதை சிவபுண்ணிய பிரதேசமாக மாநகர சபை வர்த்தமானி ஊடாக அறிவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். இதையே ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்றி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலய நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர். மேலும் மேற்படி உணவகம் பன்னாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கையின் சட்டம் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள் எனவும், அவர்கள் நல்லூரில் தமது நிறுவனத்தின் கிளையை எந்தவொரு அனுமதியையும் பெற்றுக்கொள்ளாது திறந்தமை திட்டமிட்ட நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்ச் சைவப்பேரவையினர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், அனுமதியற்ற வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர். இளைய சமூகத்தை வழிப்படுத்தும் வகையில் அறநெறிக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான யோசனை தொடர்பிலும் தமிழ்ச் சைவப்பேரவையினர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து தனியார் கல்வி செயற்பாடுகளையும் வெள்ளி மாலையும், ஞாயிறு மதியம் வரையிலும் மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்து நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரினர். அத்துடன் அறநெறி வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் அறநெறி வகுப்புக்கான வருகை மற்றும் செயற்பாடுகளை கட்டாயக் கல்வியின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர். சில பாடசாலைகளில் மாணவர்களை சைவச் சின்னங்கள் அணிந்து செல்வதை தடைவிதிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஆதாரங்களுடன் தமிழ்ச் சைவப்பேரவையினர் ஆளுநரிடம் முறையிட்டனர். தமிழ்ச் சைவப் பேரவையினரின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/215584
  11. துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்! 24 MAY, 2025 | 01:40 PM தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215574
  12. 24 MAY, 2025 | 01:05 PM கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கடைகளை அகற்ற சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிகளுக்குள் வியாழக்கிழமை (22) இரவு அனுமதியற்ற முறையில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில இரும்பினால் ஒட்டப்பட்ட கடைகளாகவும் காணப்பட்டுள்ளன. இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை செயலாளர், வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் குறித்த இடத்திற்கு சென்று அனுமதியற்ற கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அது தொடர்பிலான அறிவித்தல்களையும் கடைகளில் ஒட்டியுள்ளனர். அந்நேரம், கும்பல் ஒன்று, அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு , அவர்களை காணொளி எடுத்துள்ளார்கள். அதேவேளை பூநகரி பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமான பணிகள், அரச காணிகளில் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பூநகரி பிரதேச சபை செயலாளர் ரத்தினம் தயாபரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215567
  13. நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ இலாபம் ஈட்டுகிறது; எமக்கு நஷ்ட ஈடு வேண்டாம்; தொழிலே வேண்டும் - சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கம் 24 MAY, 2025 | 01:09 PM (எம்.மனோசித்ரா) பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது. எனவே தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து தொழிலாளர்களுக்கு தொழிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார். பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நெக்ஸ்ட் தொழிற்சாலை கடந்த 19ஆம் திகதி மாலை 5 மணியிலிருந்து மூடப்பட்டமை தொடர்பில் இரண்டாவது முறையாக பிரதி தொழில் அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. கடந்த வியாழனன்று அமைச்சர் நெக்ஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். அந்த பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை எமக்கு வழங்கப்பட்டது. அதற்கமைய முகாமைத்துவத்தினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை காரணிகளுடன் அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இருதரப்புக்குமிடையில் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் காணப்படுகிறது. அந்த ஒப்பந்தத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய நிறுவன முகாமைத்துவம் செயற்படவில்லை என்பதையும் அமைச்சரிடம் தெரிவித்திருக்கின்றோம். இருதரப்பினரையும் ஒரே சந்தர்ப்பத்தில் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அமைச்சிடம் கோரியுள்ளோம். அதற்கு அமைச்சரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனவே நஷ்டஈடு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு மீண்டும் தொழிற்சாலையை திறக்கும் நோக்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். நாம் நஷ்டஈட்டைக் கோரவில்லை. தொழிலையே கோருகின்றோம். தொழில் ஆணையாளரிடம் செல்லாவிட்டால் மேலதிகக் கொடுப்பனவை செலுத்துவதாக நிறுவனம் முன்வைத்துள்ள முன்மொழிவையும் நிராகரித்துள்ளோம். இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது. பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். அந்த வகையில் அமைச்சரும் குறித்த ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுவார் என நம்புகின்றோம். https://www.virakesari.lk/article/215560
  14. மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்! 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்” என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ராப்பர் ஹிரந்தாஸ் முரளி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கடந்த சில நாள்களாக கஞ்சா வழக்கில் கைதாகி வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளியும் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து புலி பல் டாலருக்காக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைக்ககம் மற்றும் என்ஐஏவிடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார். பாடகர் வேடன் கடந்த 2019ஆம் ஆண்டு பாடிய “குரலற்றவர்களின் குரல்” என்ற பாடலில் மத்திய அரசின் உச்சத்தில் இருப்பவர்களைப் பற்றி மறைமுகமாக விமர்சித்திருந்தார். புகாரில் இந்த பாடலை குறிப்பிட்டு, பிரதமரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் பிம்பத்தை அவமதிக்கும், ஆதாரமற்ற, அவமரியாதைக்குரிய மற்றும் புண்படுத்தும் கருத்துக்கள் பாடலில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் சாதியின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி வருவதாகவும், இவரது பின்னணி குறித்தும் விசாரணை செய்ய பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் அளித்தார். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். https://news7tamil.live/complaint-filed-against-malayalam-rapper-vedan-with-home-ministry-and-nia.html
  15. Published By: RAJEEBAN 24 MAY, 2025 | 12:56 PM பல அரச நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது . பல அரசநிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றன என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச திணைக்களங்களில் உள்ள அனேக நபர்களின் ஆதரவுடனேயே இது இடம்பெறுகின்றது என இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்பணிப்பாளர் நாயகம் ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார். இலஞ்சமாக பெற்றுக்கொண்ட பணத்தை இலஞ்சம் பெறுவதுடன் தொடர்புபட்ட அந்த திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் பங்கிட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் விசேட சோதனையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்று நாங்கள் சோதனையிட்ட வேளை அதிகாரியொருவரின் அலுவலகத்தில் 4.1 மில்லியன் ரூபாய்களை மீட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215568
  16. Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 11:33 AM மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் சனிக்கிழமை (24) இடம்பெறவுள்ளது. விசேட பயிற்சி செயலமர்வுக்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னால் ஒன்றுகூடுமாறு, அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதற்காக சம்பவதினம் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்ட ஆசிரியரை மாணவியின் சகோதரன் வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்துள்ளார். அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்போது அவர் மீதும் மாணவியின் சகோதரன் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார். இதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் , அதிபர் ஆகிய இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215561
  17. 24 MAY, 2025 | 10:37 AM அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார். பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215555
  18. 24 MAY, 2025 | 09:42 AM யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார். குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார். இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/215550
  19. பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA படக்குறிப்பு,கீழடி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? 982 பக்க அறிக்கை தாக்கல் மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் தளத்தை 2014-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டறிந்தார். இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை மேலும் ஒரு முறை அகழாய்வு நடத்தியது. இதன் பின்பு மாநிலத் தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்டாலும் இந்த அறிக்கையை ஏஎஸ்ஐ வெளியிடவில்லை. தற்போது, இந்த அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணனிடமே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு நிபுணர்களிடம் அனுப்பியதாகவும், அறிக்கையை மேலும் நம்பகத்தன்மையுள்ளதாக ஆக்க, அந்த நிபுணர்கள் சில கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் ஏஎஸ்ஐ தெரிவித்திருக்கிறது. இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, அந்த இடத்தில் மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவு வரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சில கேள்விகள் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு,இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார் ஏஎஸ்ஐயால் எழுப்பப்பட்ட கேள்விகள் 1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறைப்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. 3. அறிவியல்ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். 4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு,கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் இந்தத் தகவல் வெளியான நிலையில், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். "கீழடியின் உண்மைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது. தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். சு. வெங்கடேசன் வேறொரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். "அதாவது, கீழடி ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த பிறகு, அந்த அறிக்கை எப்போது வெளியிடப்படும் என நாடாளுமன்றத்தில் பல முறை கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கூட கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் சமர்ப்பிப்போம் எனத் தெரிவித்தார்கள். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறதா என்பதை ஆராயும் நாடாளுமன்ற உறுதிக்குழுவின் கூட்டம் வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஊட்டியில் நடக்கவிருக்கிறது. கீழடி அறிக்கையை தாக்கல் செய்யாதது ஏன் என அங்கு பதிலளிக்க வேண்டும் என்பதால் இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றனர்," என்கிறார் சு. வெங்கடேசன். பட மூலாதாரம்,SU VENKATESAN MP/FACEBOOK படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம் இது ஒரு வழக்கமான நடவடிக்கையா? இது குறித்து பிபிசியிடம் பேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் Journey of a Civilization: Indus to Vaigai நூலின் ஆசிரியருமான ஆர். பாலகிருஷ்ணன், இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். "இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது. அறிக்கையைத் தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கிறது. இந்த அறிக்கையை உருவாக்கி, பதிப்பிப்பதற்கே நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. இது பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த அகழாய்வு. இது ஒரு தனித்த நிகழ்வல்ல. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கைகூட 15 ஆண்டுகள் கழித்துதான் வெளியானது" என்கிறார் அவர். மேலும், "எந்த ஒரு நாட்டின் தேசிய வரலாறும் பிராந்திய வரலாற்றுப் போக்குகளை ஒரு அடிப்படைக் கட்டுமானமாகக் கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு ஆழத்தையும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் அதற்கான சரியான இடத்தையும் புறக்கணிக்க முடியாது. இது வருத்தத்தை அளிக்கிறது. அறிவியல் கருத்துகள்கூட, கேள்வியெழுப்பப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டியவைதான். ஆனால், ஓர் அனுபவம் மிக்க தொல்லியலாளரின் அறிக்கை பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இம்மாதிரியான ஒரு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்க வேண்டியதில்லை" என்கிறார் அவர். ஆனால், இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்கிறார் ஏஎஸ்ஐயின் முன்னாள் கண்காணிப்பாளரான தி. சத்தியமூர்த்தி. "ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அந்த அறிக்கை நிபுணர்களிடம் கருத்துக்காக அனுப்பப்படும். அவர்கள் சில கேள்விகளை எழுப்புவார்கள். அதாவது, தற்போது அகழாய்வுச் செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த முடிவுகளை வைத்து மட்டும் பார்க்காமல், மற்ற இடங்களோடும் ஒப்பீடு செய்தும் கேள்வியெழுப்புவார்கள். இது வழக்கமான நடைமுறையே தவிர, வேறு இல்லை. எல்லாவற்றையும் தமிழ்நாட்டிற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டியதில்லை" என்கிறார் தி. சத்தியமூர்த்தி. கீழடியில் ஏஎஸ்ஐ மேற்கொண்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சு. வெங்கடேசன், து. ரவிக்குமார், கனிமொழி உள்ளிட்டோர் தொடர்ந்து கேள்வியெழுப்பிவந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிலளித்த ஏஎஸ்ஐ, இன்னும் 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியது. அப்படிக்கூறி ஒன்றேகால் ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை. அவர் தற்போது மத்தியத் தொல்லியல் துறையின் Antiquity பிரிவின் இயக்குநராக இருந்துவருகிறார். பட மூலாதாரம்,R.BALAKRISHNAN/FACEBOOK படக்குறிப்பு, இந்த நடவடிக்கை மிக விசித்திரமானதாக இருக்கிறது என ஆர்.பாலகிருஷ்ணன் கருத்து அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அறிக்கையில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன? கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன: 1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும். 2. கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளத்திற்கு செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 3. கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது. 4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன. 5. இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 6. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை. 7. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14ke648kexo
  20. கனடாவில் தமிழின அழிப்புக்கான அடுத்த தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்! 24 MAY, 2025 | 10:48 AM கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215547
  21. வட, கிழக்கில் உள்ள பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை - பிரதமர் Published By: VISHNU 24 MAY, 2025 | 01:48 AM வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும், காணிகளை சொந்தமாக வைத்திருப்பவர்களிடம் தங்கள் உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன், இதற்கு மக்களின் நம்பிக்கையை வெல்லும் முறையான வேலைத்திட்டம் தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சில குழுக்கள் மோசடியாக நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்தி, சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்றும் மக்களின் நிலங்களை எந்த வகையிலும் கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அதன்படி, மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் ஒரு சரியான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதற்கான தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, மேலதிக அரச தலைமை வழக்குரைஞர் விக்கும் டி அப்ரூ, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், காணி பதிவுத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். https://www.virakesari.lk/article/215544
  22. ஆஸி. வீரரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தடுமாறும் ஆர்சிபி - வெற்றியை நெருங்கி தடம்புரண்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 மே 2025, 02:03 GMT ஆர்சிபி அணி, லீக் ஆட்டங்களின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசி கட்ட போட்டிகளில் சொதப்புவது, அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 இடங்களில் வர முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரில் 65வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டு 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே ஆர்சிபி அணிக்கு இருப்பதால், டாப்-2 இடங்களில் வருவதற்கு பெரிய வெற்றியும், மற்ற அணிகளின் தோல்வியையும் ஆர்சிபி எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது. ஆட்டநாயகன் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற இஷான் கிஷன் தனது முதல் ஆட்டத்தில் சதம் அடித்ததைத் தொடர்ந்து அதன்பின் 10 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே சேர்த்து பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்தார். ஆனால், நேற்று 48 பந்துகளில் 94 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோருக்கு செல்லக் காரணமாக இருந்தார். சன்ரைசர்ஸ் அணி கடைசியாக சேர்த்த 86 ரன்களில் 54 ரன்கள் இஷான் கிஷன் பேட்டிலிருந்து வந்தவையாகும். சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் அணியில் இஷான் கிஷனைத் தவிர்த்து பெரிதாக எந்த பேட்டரும் பெரிய ஸ்கோர் செய்யவில்லை. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் என அதிரடியாகச் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் மீண்டும் சொதப்பலாக பேட் செய்து 17 ரன்னில் வெளியேறினார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்தது. அடுத்தடுத்து வந்த வீரர்களான கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள், அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள், என கேமியோ ஆடி வெளியேறினர். ஆனால் மற்ற பேட்டர்களை களத்தில் தனக்கு ஒத்துழைப்பாக வைத்து தான் இஷான் கிஷன் தனிநபராக இருந்து ஸ்கோரை உயர்த்தினார். 12-வது ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என வலுவாக இருந்தது. கேப்டன் பாட் கம்மின்ஸுடன் 12 பந்துகள் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிஷன் 43 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் என்ற ஒற்றை பேட்டரால் மட்டுமே நேற்று சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்டியது. அவர் நேற்று சொதப்பி இருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிளாசன் ஃபார்முக்கு வந்த கம்மின்ஸ் கடந்த சில போட்டிகளில் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டுவந்தார், லைன் லென்த் கிடைக்காமல் கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்தார். ஆனால், நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே விராட் கோலி, பில் சால்ட்டை திணறவிட்டார். கம்மின்ஸ் மின்னல் வேக பவுன்சரில் சால்ட்டின் ஹெல்மெட் மீது பந்து பட்டு பவுண்டரி சென்றது. கோலிக்கும் இதே போன்று தொடையில் அடி விழுந்தது. 4 ஓவர்கள் வீசிய கம்மின்ஸ் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் நேரத்தில் கம்மின்ஸ் மீண்டும் இயல்பான பந்துவீச்சுக்கு திரும்பியுள்ளார். மலிங்கா 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி, ஹர்ஷல் படேல், உனத்கட், துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கம்மின்ஸ் ஹேசல்வுட் வெற்றிடம் ஆர்சிபி அணி லீக் சுற்றுகளில் பெரிய வெற்றி பெற்றதற்கு ஹேசல்வுட்டின் பந்துவீச்சு பிரதான காரணமாக இருந்தது. ஐபிஎல் ஒருவாரம் நிறுத்தப்பட்ட போது, தோள்பட்டை காயத்தால் ஆஸ்திரேலியா சென்ற ஹேசல்வுட் மீண்டும் வருவது குறித்து தெளிவாக தெரியவில்லை. அவர் இல்லாத வெற்றிடம் ஆர்சிபி பந்துவீச்சில் தெளிவாகத் தெரிந்தது. இங்கிடி, யாஷ் தயால், புவனேஷ்வர், சூயஷ் சர்மா என 4 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை வாரி வழங்கினர். குர்னல் பாண்டியாவும், ஷெப்பர்டும் கூட பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹேசல்வுட் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்தே 11 ஓவர்கள் வீசி 130 ரன்களை வாரி வழங்கினர், 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். ஆர்சிபியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களின் திறமையற்ற செயல்பாடும் முக்கியக் காரணமாகும். கட்டுக்கோப்பாக பந்துவீசி 30 முதல் 40 ரன்களை சுருக்கி இருந்தால், ஆர்சிபிக்கு வெற்றி கிடைத்திருக்கும். இந்த ஆட்டத்தில் மட்டும் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் 15 சிக்ஸர்களையும், 16 பவுண்டரிகளையும் சன்ரைசர்ஸ் பேட்டர்களை அடிக்க அனுமதித்தனர். வலுவான தொடக்கம் கிடைத்தும் சறுக்கிய ஆர்சிபி ஆர்சிபி அணிக்கு பில் சால்ட், விராட் கோலி இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து பவர்ப்ளே முடிவில் 80 ரன்கள் சேர்த்து, கோலி(42) ஆட்டமிழந்தார். அதன்பின் பில் சால்ட்(62) அரைசதம் அடித்து விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி அணி 173 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை நோக்கித்தான் நகர்ந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி - பில் சால்ட் இணை ஆர்சிபி வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கடைசி வரிசை பேட்டர்கள் சொதப்பியதால், 16 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களில் ஆர்சிபி அணிசுருண்டது. விராட் கோலி, பில் சால்ட் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளம் வீணாகிப் போனது. நடுவரிசை பேட்டர்கள் மயங்க் அகர்வால் (11), பட்டிதார் (18), ஜிதேஷ் (24), ஷெப்பர்ட் (0), குர்னல் பாண்டியா (8), டிம் டேவிட் (1), புவனேஷ்வர் குமார் (3) என ஏமாற்றம் அளித்தனர். ஏற்கெனவே ஆர்சிபி அணி முந்தைய சீசன்களில் ப்ளேஆஃப் சுற்றுவரை வந்து அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற முடியாமல் தான் வெளியேறியிருக்கிறது. கடந்த 6 சீசன்களில் 5 சீசன்களில் ப்ளேஆஃப் சுற்றில் இடம் பிடித்த ஆர்சிபி ஒருமுறை மட்டுமே 3வது இடத்தைப் பிடித்தது, மற்றவற்றில் ப்ளே ஆஃப் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியிருக்கிறது. ஆனால், இந்த முறை அந்த துரதிர்ஷ்டத்தை உடைக்கும் வகையில் லீக் சுற்றில் ஆடினாலும், நேற்றைய ஆட்டம் மீண்டும் ஆர்சிபிக்கு "பழைய நினைவுகள்" வந்துவிட்டதை காண்பிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. பேட்டர்கள் வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று சீராக விக்கெட்டுகளை இழந்தனர். விராட் கோலி, சால்ட் இருவரும் திட்டமிட்டு நிகர ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் அணியைக் கொண்டு சென்ற நிலையில் வெற்றிக்கு அருகே வந்துவிட்டு, கடைசி 16 பந்துகளில் ஆர்சிபி சொதப்பியதற்கு தேவையற்ற அழுத்தத்தை தலைக்குள் திணித்ததுதான் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கம்மின்ஸ் "தோல்வி நல்லதுதான்" ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா பேசுகையில் "கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் கொடுத்துவிட்டோம். சன்ரைசர்ஸ் அணியினர் சிறப்பாக ஆடினர். அவர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கு பந்துவீச்சில் எங்களிடம் பதில் இல்லை. சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான், அப்போதுதான் நம்மைப் பற்றி தீவிரமாக பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் முடியும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன் எங்களை ஆய்வு செய்ய கிடைத்த வாய்ப்பு. எங்களின் பாதகமான அம்சங்களை ஆய்வு செய்வோம், அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார். ஆர்சிபிக்கு பின்னடைவு இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. 13 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருக்கிறது. அதேசமயம், ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் இருக்கிறது, இந்தத் தோல்வியால் ஆர்சிபியின் நிகர ரன்ரேட் கடுமையாகச் சரிந்து, 0.255 எனக் குறைந்ததால், 3வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே இருப்பதால் அதில் வென்றால் 19 புள்ளிகள் வரை பெற முடியும், நிகர ரன்ரேட்டை எவ்வளவு உயர்த்தினால் 2வது இடத்துக்கு முன்னேறலாம் என்பது பஞ்சாப் அணியின் வெற்றி தோல்வியில்தான் முடிவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி ஆர்சிபி 2வது இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்துக்கு முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் அடைந்த தோல்வி, குஜராத், பஞ்சாப் அணிக்கும் கீழே சறுக்க வைத்துவிட்டது. லக்னெள அணிக்கு எதிராக ஆர்சிபிக்கு கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் லக்னெளவிடம் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால்,டாப்-2 ரேஸிலிருந்து வெளியேறி, 3 அல்லது 4வது இடத்துக்கு சரியும். ஒருவேளை ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 19 புள்ளிகள் பெறும். ஆனாலும் இது டாப்-2 இடத்துக்கு ஆர்சிபி வருவதற்கு போதாது. ஏனென்றால் குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றுவிட்டால் 20 புள்ளிகள் பெறும், பஞ்சாப் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் போட்டிகளிலும் வென்றால் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடிக்கும், 20 புள்ளிகளுடன் குஜராத் 2வது இடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி 19 புள்ளிகளுடன் 3வது இடத்தையே பிடிக்க முடியும். ஆதலால், சிஎஸ்கே அணியிடம் குஜராத் அணி தோற்க வேண்டும், அவ்வாறு நடந்து, ஆர்சிபி அணி லக்னெளவை வென்றால் டாப்-2 இடத்தில் வரலாம். ஒருவேளை குஜராத் அணி சிஎஸ்கே அணியை வென்றால், பஞ்சாப் அணி தனது கடைசி இரு லீக் போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும். அவ்வாறு பஞ்சாப் தோற்றால், பஞ்சாப் நிகரரன்ரேட்டைவிட எவ்வளவு ரன்கள் அதிகமாக எடுத்து வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தில் இடம் பெற முடியும் என்பது ஆர்சிபிக்கு தெரிந்துவிடும். ஆதலால் ஆர்சிபி அணி 2வது இடத்துக்கு முன்னேற, குஜராத் தோல்வி அல்லது பஞ்சாப் தோல்வி என்பது கண்டிப்பாகத் தேவை. முக்கிய ஆட்டங்களின் பட்டியல் இன்றைய ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: ஜெய்பூர் நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே நாள் – மே 25 இடம் – ஆமதாபாத் நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e61p9d8kxo
  23. Published By: VISHNU 23 MAY, 2025 | 07:09 PM வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடைகளுடன் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்தனர். அவரது வீட்டை மேலும் சோதனை செய்தபோது, பாவனைக்கு உதவக்கூடிய ரவைகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட ரவைகள் T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 296 ரவைகள், 12-போர் வகை 27 ரவைகள், M-16 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 19 ரவைகள், T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகளின் தொகுப்பு, T-56 துப்பாக்கிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 124 பயிற்சி ரவைகள், 9 மிமீ தானியங்கி கைத்துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 365 வெற்று ரவைகள் மற்றும் 24 பயன்படுத்தப்பட்ட T-56 வெற்று ரவைகள் ஆகியவை அடங்கும். வீட்டை சோதனை செய்தபோது, சூழ்ச்சுசமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரவைகள் அடங்கிய பொதிகள், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை சீருடைகள், அதற்கான பிரத்தியேக பொருட்கள், காலணிகள், கால்சட்டை, தொப்பிகள் மற்றும் காலில் அணிந்திருந்த துப்பாக்கிக்கான கொள்கலன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனரா. சந்தேக நபரிடம் மேலும் விசாரித்ததில், வீட்டின் உரிமையாளர் ஒரு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை வீரர் என்பதும், அவர் தொடர்ந்து இவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளரான சிறப்புப் படை வீரரும் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215528

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.