Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 20 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மே17-ம் தேதி கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு கர்ப்பிணி யானை தனது குட்டியுடன் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானையை மீட்க கும்கி யானையை வனத்துறை அழைத்து வந்துள்ளனர். கும்கியை பார்த்ததும் குட்டி யானை நகர்ந்தது. ஆனால், கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உடற்கூராய்வில் உயிரிழந்த பெண் யானையின், வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது என தெரியவந்துள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். மேலும் யானையின் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்லீரல் கடுமையாக வீங்கி பாதிக்கப்பட்டிருந்தது என வன கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2qqq41e10o
  2. Published By: VISHNU 21 MAY, 2025 | 09:50 PM வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் புதன்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது…. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்றையதினம் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது கைதுசெய்துள்ளனர். காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நாளையதினம் வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/215362
  3. காசாவின் அல் அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டுள்ளனர் - பிபிசி 21 MAY, 2025 | 05:05 PM காசாவின் அல் அவ்டா மருத்துவமனை இஸ்ரேலிய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார் என பிபிசியின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனை முழுமையான முற்றுகையின் கீழ் உள்ளது, வெளியிலிருந்து நோயாளர்களை உள்ளே எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் ஒன்று மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது, டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் கேட்க முடிகின்றது 400-500 மீற்றர் தொலைவில் இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவரின் குரல் துண்டிக்கப்பட்டுவிட்டது என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அனுப்பிசெய்தியில் நான் பாதுகாப்பாகயிருக்கின்றேன், ஆனால் நிலைமை மிக மோசமாக உள்ளது என அல் அவ்டா மருத்துவமனை இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார். தடைகள் காரணமாக மருத்துவ பொருட்கள் போதாமையினால் இந்த மருத்துவமனை இயங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/215345
  4. 21 MAY, 2025 | 04:50 PM அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக்கொண்டு வந்த NPP 310 படகுகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கும் அமைச்சு. கடல், மீன்பிடி பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக இருந்துகொண்டு கடற்றொழில் பற்றி பேசுவது கிடையாது. பாராளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசும் அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை. உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இனிமேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் எதிர்காலத்தில் மக்கள் இவ்வாறான கட்சிகளை நிராகரிக்க வேண்டும். தனித்து நிற்கும் கட்சிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ வெளிநாட்டில் இருந்து எமது உறவுகள் பணம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே இங்கு உள்ளவர்களை வழிக்கு கொண்டுவர முடியும். அரசு காணி சவீகரிப்பு தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது. 5985 ஏக்கர் காணிகளில் 3500 ஏக்கர் வரையான காணி வடமராட்சி கிழக்கில் காணப்படுகிறது. இக்காணிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பூர்வீகக் காணிகள் இவை. யுத்தம் மற்றும் வேறு காரணங்களால் மக்கள் குறத்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். பலர் வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் இக்காணிகளை அரசுடமையாக்க அரசு முனைவதை நாம் எதிர்க்கிறோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215340
  5. இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 21 மே 2025, 16:02 GMT இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும், ஜனாதிபதித் தலைமையில் நடைபெறுகின்ற நிலையில், இம்முறை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறும் என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண கடந்த 16ம் தேதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். ''2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான கட்டளையிட்ட, இந்த நாட்டில் தற்போது உயர்நிலையிலுள்ள மூன்று மார்ஷல்களும், அதேபோன்று, ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.'' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னணியில், அது தொடர்பில் நாட்டில் மக்கள் மத்தியில் சர்ச்சையாக நிலைமை தோன்றியிருந்தது. இந்த நிகழ்வானது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விட ஆரம்பித்திருந்தனர். ''நான் அவரின் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன். அவரது வேலைப்பளுவான வாழ்க்கையில் ஐந்து நிமிடங்களை இந்த நிகழ்விற்காக ஒதுக்கிடுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். அனைத்து ராணுவத்திற்காகவும் வழங்கப்படும் கௌரவமாக நாம் இதனை பார்க்கின்றோம்.'' என இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியல் அட்மிரல் (ஓய்வு பெற்ற) டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் என கடந்த 18ம் தேதி ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண மீண்டும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ''ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொள்ளவுள்ளார். அதேபோன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மூன்று மார்ஷல்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்கின்றனர்" என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேசியது என்ன? பட மூலாதாரம்,PMD SRI LANKA இதன்படி, கடந்த 19ம் தேதி நடைபெற்ற ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொண்டு பேசினார். ''இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எமது படையினர் பெரும்பாலானோர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த பெயர் பலகை நிரம்புவதற்கு அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோன்று பெரும்பாலானோர் நிரந்த மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர். இந்த நாடு அவர்களுக்கு எப்போதும் கடன்காரர்கள் தான்." என்று கூறினார் அநுர குமார திஸாநாயக்க. மேலும், "இந்த பெயர் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கின்றதா?, தனது கணவரின் பெயர் இருக்கின்றதா? தனது தந்தையின் பெயர் இருக்கின்றதா? என்பதை விரல் விட்டு தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மாத்திரமா, இல்லை வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகள், தனது கணவரை இழந்தோர் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக்கொண்டு தனது கணவர், பிள்ளைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து பெற்றோருக்கும் தனது பிள்ளை ஒரு இரத்தினக்கல். அதிகாரத்திற்காக வடக்கிலும், தெற்கிலும் தமது பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்திற்காக ஒன்றுமே அறியாதோரின் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டனர். தெற்கிலும் சரி, வடக்கிலும் சரி. அவ்வாறே இடம்பெற்றது. அனைத்து படையினரதும் கைகளிலுள்ள துப்பாக்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பிரவேசம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஜனாதிபதி ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ''ஜனாதிபதி முதலில் இருந்தே இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள தீர்மானித்திருந்தார். ஏற்பாடுகள் மாத்திரம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதற்காகவே பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நிகழ்வு நடைபெறுகின்றது என முதலில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்து வெளியிடும் போது ஏற்பட்ட பிரச்னையே இதற்கான காரணம். ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலிலேயே தீர்மானித்திருந்தார்.'' என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு பட மூலாதாரம்,UDAYA GAMMANPILLA FACEBOOK படக்குறிப்பு,பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலில் மறுப்பு தெரிவித்து, பின்னர் நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து எதிர்க்கட்சிகள் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ''விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சத்தினால், ஜனாதிபதி ராணுவ வெற்றி தேசிய நிகழ்வை புறக்கணிக்க தீர்மானித்திருந்தாலும், தேசபற்றாளர்களினால் வெளியிடப்பட்ட எதிர்ப்புகள் காரணமாக ஏற்பட்ட கடும் அழுத்தத்தினால் விருப்பமில்லையேனும், ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது" என்கிறார். மேலும், "எனினும், ராணுவ வீரர்கள் என்ற சொல்லை பயன்படுத்தாதிருப்பதற்கு ஜனாதிபதி செயற்பட்டிருந்தார். ராணுவ வீரர்களை படையினர் என்றே விழித்திருந்தார். அனைத்து ராணுவ வீரர்களும் படையினர் என்ற போதிலும், அனைத்து படையினரும் ராணுவத்தினாராக முடியாது. படையினர் ராணுவ வீரராகுவதற்கு, அவர் போர் களத்தில் போரில் ஈடுபட்டிருக்க வேண்டும். கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, ராணுவத்தினருக்கு முன்பாக நீங்கள் உண்மையாக பேசியிருக்க வேண்டும். மாறாக இனவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதத்துடன் செயற்படுகளின் புலம்பெயர் தமிழர்களின் முன்னிலையிலேயே இந்த பேச்சை பேசியிருக்க வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதிக்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றோம்" என உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,KAVINDA JAYAWARDANA படக்குறிப்பு,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ராணுவ வெற்றி நிகழ்விற்கான ஜனாதிபதியின் பிரவேசம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தை மேற்கோள்காட்டி, காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார். ''விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தில் எங்களுக்கு பிரச்னையொன்று உள்ளது. இந்த நிகழ்விற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவ வெற்றி விழா கொண்டாட்டம், 2025 மே மாதம் 19ம் தேதி மாலை 16 மணிக்கு என குறிப்பிட்டு, அதில் கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் என அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இல்லை. மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்த அழைப்பிதழை வெளியிட்டது யார் என்ற கேள்வி எழுகின்றது" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்புகின்றார். 'தமிழர்களை சமாதானப்படுத்த ஜனாதிபதி செயற்படுகிறார்' பட மூலாதாரம்,WIMAL WEERAWANDSA FACEBOOK படக்குறிப்பு,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச புலம்பெயர் தமிழர்களை சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார். ''அவர் இந்த நிகழ்விற்கு வர இருக்கவில்லை. எனினும், அவர் வரவில்லை என்பது முன்பே தெரியவந்தமையினால் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்ட அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்றி அவர் வருகைத் தந்தார். அவர் அந்த இடத்தில் நிகழ்த்திய உரையில் என்ன சொல்கின்றார். அதில் உரையில் தடை செய்யப்பட்ட பல சொற்கள் உள்ளன. ராணுவம் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது. உயிர் நீத்த படையினர், உயிர் நீத்த படை உறுப்பினர்கள் என்றே கூறுகின்றார். மிகவும் மோசமான செயற்பாடு. வராதிருந்திருந்தால் அதை விட சிறந்ததாக இருந்திருக்கும்" என விமர்சித்துள்ளார் விமல் வீரவங்ச. மேலும், "புலம்பெயர் தமிழர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சமே அதற்கான காரணம். அந்த அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருந்தார். அடுத்த தடை செய்யப்பட்ட சொல். பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்ற சொல் எங்கும் இல்லை. எமது ராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போராடினார்கள். கிளர்ச்சியாளர்களுடனான போராடினார்கள். போருக்காக போராடவில்லை. சமாதானத்திற்காக போராடினார்கள். அப்படியென்றால் பயங்கரவாதிகளும் சமாதானத்திற்காகவே போராடியுள்ளனர். தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது சமாதானத்திற்காக. ஸ்ரீமகா போதியில் இருந்த பக்தர்களை கொலை செய்தது சமாதானத்திற்காக. சமாதானத்திற்காக நன்றாக செய்துள்ளனர். வடக்கிலும், தெற்கிலும், அதிகாரத்திற்காக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறுகின்றார். வடக்கில் கேட்கவில்லை. தெற்கில் எங்கே கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்கில் கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காக தேவை யாருக்கும் கிடையாது.'' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y66ln1neqo
  6. "காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினி" - உலக அரங்கில் அனுதாபத்தை இழக்கிறதா இஸ்ரேல்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் அதற்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்காக இஸ்ரேல் பல ஆயுதங்களை வைத்திருந்தது. அந்த ஆயுதங்களில் பலவும் அமெரிக்காவால் வழங்கப்பட்டவை, அல்லது அமெரிக்கா வழங்கிய நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டவை. இந்த நெருக்கடியான நேரத்தில் இஸ்ரேலின் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அதனுடன் நின்றன. 2023 அக்டோபர் 7 அன்று 1,200 பேர் உயிரிழந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு பிற நாடுகள் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தின. பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, ஹமாஸ் 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து, காஸா பகுதிக்குள் இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகின. அந்த படங்கள் உலகளாவிய அளவில் இஸ்ரேலுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தின. ஆனால் இப்போது இஸ்ரேல் மீதான அந்த அனுதாபம் மெல்ல குறைந்து வருவது போல தோன்றுகிறது. குறிப்பாக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளை கருத்தில் கொள்ளும்போது, இவ்வாறு கூறலாம். பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கருத்து என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்ததிலிருந்து இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களால் காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மூன்று நாடுகளும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் "புதிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும்" என்று அந்த நாடுகள் கூறுகின்றன. அதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அத்தகைய தாக்குதல்கள் மட்டுமே "ஹமாஸை அழித்து மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும்" என்று கூறுகிறார். 'இதற்குப் பிறகு முழு காஸாவும் இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்' என்று நெதன்யாகு கூறுகிறார். மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் வாதங்கள் நிராகரிக்கப்பட்டு, போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன. மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் சேர்ந்து "காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதை கடுமையாக எதிர்ப்பதாக" கூறியுள்ளன. மேலும் "காஸாவில் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு தாங்க முடியாதது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு மூன்று நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. அக்டோபர் 7 அன்று நடந்த "கொடூரமான தாக்குதலைத்" தொடர்ந்து, இஸ்ரேலுக்கு "பயங்கரவாதத்திலிருந்து தனது குடிமக்களைப் பாதுகாக்க உரிமை உண்டு" என்று அவர்கள் நம்பினர், ஆனால் "இப்போது தாக்குதல்களைத் தொடர்வது முற்றிலும் தேவையற்றது" என்று நம்புகின்றனர். "நெதன்யாகு காஸாவிற்கு அனுப்ப அனுமதிக்கும் உணவின் அளவும், அவர் குறைந்தபட்ச தேவையான உணவு என்று அழைக்கும் அளவும் போதுமானதாக இல்லை." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவிற்கு உதவி கிடைக்கவில்லை என்றால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்தார். "அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறேன்" என்றும் அவர் கூறினார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்- ஐக்கிய நாடுகள் சபை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் உணவுக்காக தவிக்கும் மக்கள். பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய டாம் பிளெட்சர், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா வெளியிட்ட கூட்டு அறிக்கையைப் பாராட்டினார். காஸாவுக்குள் அதிகமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதில் உலக நாடுகள் "எங்களுடன் இணைய வேண்டும்" என்று உலக நாடுகளை ஐ.நா. அழைப்பதாக டாம் பிளெட்சர் கூறினார். திங்களன்று உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற ஐந்து லாரிகள் காஸாவிற்கு வந்ததாக கூறிய பிளெட்சர், அந்த உதவி "கடலில் ஒரு துளி மட்டுமே" என்று விவரித்தார். 10 வார மனிதாபிமான முற்றுகைக்குப் பிறகு, திங்களன்று காஸாவிற்கு "அத்தியாவசியப் பொருட்கள்" கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் அனுமதித்தது. பதிலடி கொடுக்கும் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலின் புதிய தாக்குதல்களுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவை கடுமையாக சாடியுள்ளார். "ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பி, ஆயுதங்களை ஒப்படைத்து, அதன் தலைவர்களை நாடுகடத்த ஒப்புக்கொண்டு, தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் போர் முடிவுக்கு வரக்கூடும்" என்று நெதன்யாகு தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில் எந்த நாடும் இதை விடக் குறைவானதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், இஸ்ரேல் நிச்சயமாக அவ்வாறு செய்யாது என்றும் நெதன்யாகு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்ட வாரண்டின் கீழ் நெதன்யாகு தேடப்படுகிறார், ஆனால் அதை "யூத எதிர்ப்பு" என்று நிராகரித்துள்ளார் நெதன்யாகு . காஸா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர நெதன்யாகு கடும் சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார், ஏனெனில் ஒரு சர்வதேச கணக்கெடுப்பு அங்கு பஞ்சம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான லண்டன் உச்சிமாநாட்டில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை "சர்வதேச சட்டம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. காஸா மக்கள் முழுவதும் ராணுவ பலத்தினால் துன்புறுத்தப்படுகிறார்கள்" என்று விவரித்தார். "மக்கள் மனிதாபிமான உதவிகளைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும், தடையின்றியும் அணுக வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காஸாவிற்குள் அத்தியாவசிய பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே அனுமதிப்பது தொடர்பான நெதன்யாகுவின் முடிவை அவரது கடுமையான தேசியவாத கூட்டணியின் கூட்டாளிகளும் கடுமையாக கண்டித்துள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், "நெதன்யாகுவின் இந்த முடிவு ஹமாஸுக்கு தைரியமும் ஊக்கமும் அளிக்கும். அதே சமயம் நமது பணயக்கைதிகள் சுரங்கங்களில் அழுகிக் கொண்டே இருப்பார்கள்" எனக் கூறினார். 2007ஆம் ஆண்டு பென்-க்விர் இனவெறியை ஊக்குவித்ததாகவும், இஸ்ரேல் ஒரு "பயங்கரவாத" அமைப்பாகக் கருதும் ஒரு தீவிரவாத யூதக் குழுவை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். காஸாவின் சமீபத்திய நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திங்களன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகள் மட்டுமே காஸாவை அடைந்தன. இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை தொடர்ந்தபோது, திங்களன்று மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகள் மட்டுமே காஸாவுக்குள் நுழைந்தன. அவர்கள் மேற்கொண்ட வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களில் பல இளம் குழந்தைகள் உட்பட ஏராளமான பாலத்தீனப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்தும் அழிவு மற்றும் ஆயிரக்கணக்கான பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டதுக்கு எதிரானவர்கள், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா அரசுகள் மிகவும் தாமதமாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறுவார்கள். அவர்களில் பலர் காஸாவில் ஏற்பட்ட மரணம், அழிவு மற்றும் பாலத்தீன பொதுமக்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை எதிர்த்து பல மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாலத்தீன பிரதேசத்தின் மறுபுறத்தில் உள்ள மேற்குக் கரையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளுக்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் சில நேரங்களில் போர் அரசியலில் ஒரு நிகழ்வு அந்த சூழ்நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகுந்த குறியீட்டு முக்கியத்துவம் பெற்றிருப்பதால், அது அரசாங்கங்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. மார்ச் 23 அன்று காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 15 துணை மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதும் அத்தகைய ஒரு சம்பவமாக உள்ளது. இரண்டு மாத கால போர் நிறுத்தம் முறிந்த பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் மீதான அணுகுமுறை மாறியதற்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,VIDEO GRAB படக்குறிப்பு,மார்ச் 23 அன்று, காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 துணை மருத்துவர்களும் உதவிப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தத்திற்குப் பிறகு, போர் மீண்டும் தொடங்கிய ஐந்து நாட்கள் கழித்து, இஸ்ரேலிய ராணுவப் பிரிவு ஒன்று மருத்துவ வாகனங்களைத் தாக்கியது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களும், குண்டு துளைத்த அவர்களின் வாகனங்களும் மணலில் புதைந்தன. இந்தப் புதைகுழியில் ஒரு சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு மொபைல் போன் வீடியோ, இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்று பொய்யானது என்பதை நிரூபித்தது. அந்த வாகனங்கள் முகப்பு விளக்குகள் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் "சந்தேகத்திற்கிடமான முறையில்" நகர்ந்ததால், இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று இஸ்ரேல் முன்னர் கூறியது. இந்த வாகனங்கள் நகர்வதற்கு முன்னர், ராணுவத்திற்கு அவர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை அல்லது அதற்கு ராணுவத்தால் முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. கொல்லப்பட்ட துணை மருத்துவர்களில் ஒருவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், காயமடைந்தவர்களுக்கு உதவி கோரி வாகனங்களின் விளக்குகள் எரிந்திருப்பதைக் காட்டியது. பின்னர், இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கொல்லப்பட்டவர்கள் எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டது. அப்போதிருந்து, இஸ்ரேலின் வழக்கமான எதிரிகளிடையே கவலை வேகமாக வளர்ந்துள்ளது மட்டுமல்லாமல், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தலைமையிலான அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி, "நெதன்யாகு அரசாங்கம் இந்த கொடூரமான செயல்களை தொடரும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை அகற்றாவிட்டால், பதிலுக்கு நாங்கள் இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அந்த அறிக்கை கூறுவது தான் இஸ்ரேலுக்கு இன்னும் முக்கியமான விஷயம். அவை எந்த மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்பதை அந்த அறிக்கை விரிவாகக் கூறவில்லை. இந்த நாடுகள் இஸ்ரேல் மீது சிலவகையான தடைகளை விதிக்க வாய்ப்பு இருக்கலாம். பாலத்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய நகர்வாக இருக்கலாம். ஏனெனில் ஜூன் தொடக்கத்தில் நியூயார்க்கில் சௌதி அரேபியாவுடன் இணைந்து நடைபெற உள்ள ஒரு மாநாட்டில், 148 நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து பிரிட்டன் பிரான்சுடனும் பேசியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த நாடுகள் ஹமாஸுக்கு வெற்றியைத் தரும் என்று கூறியுள்ளது. ஆனால் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவின் அறிக்கைகளில் வெளிப்படும் தொனி, இஸ்ரேல் அவற்றின் மீது அழுத்தம் செலுத்தும் திறனை இழந்து வருவதைக் காட்டுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqee374n29o
  7. 21 MAY, 2025 | 04:49 PM மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற உலக சுகாதார மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ இதன் காரணமாக இலங்கையின் சுகாதார துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 முதல் 2025 முதல் ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 726 மருத்துவர்கள், 116 மருத்துவ அதிகாரிகள், 2800 மருத்துவ தாதிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என சர்வதேச மாநாட்டில் தெரிவித்துள்ள அமைச்சர், எங்கள் சுகாதார பணியாளர்களை உருவாக்குவதற்கு பெருமளவு பணத்தை செலவிட்ட பின்னர் நாங்கள் தற்போது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215342
  8. மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது; இதற்கு மக்கள் ஒருபோதும் துணை நிற்கக்கூடாது - அருட்தந்தை எஸ்.மாக்கஸ் 21 MAY, 2025 | 04:07 PM மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களும் முன் நின்று செயற்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று புதன்கிழமை (21) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் எவ்வித அனுமதியுமின்றி கணிய மணல் அகழ்வு நடவடிக்கை மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதனையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் மக்களின் எதிர்கால பிரச்சினைகளை உள்வாங்காமல், அரச திணைக்களங்களின் ஆதரவுடன் பல நிறுவனங்கள் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன. மக்களை அழிவிலிருந்து காப்பாற்றாது, இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படும் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு வருகின்ற எந்த நிறுவனங்களுக்கும் மக்கள் எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டாம். இரண்டு கணிய மணல் அகழ்வு நிறுவனங்களும் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் மன்னார் மக்களுக்கு எதிராக மிக வேகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பலரை பணம் கொடுத்து வாங்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி, மக்களின் வாழ்வாதாரத்துக்காக தாம் கை கொடுப்பதாக கூறி, மக்களே இத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. மேலும், மக்களின் காணிகளை அதிக பணம் கொடுத்து வாங்கி காணியை தமக்கு சொந்தமாக்கிக்கொண்டு வாழ்விடங்களை பறிக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராட முன்வர வேண்டும். மக்கள் இத்திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதியை வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/215335
  9. இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது - இஸ்ரேலின் முன்னாள் இராணுவ அதிகாரி கடும் சீற்றம் Published By: RAJEEBAN 21 MAY, 2025 | 02:03 PM இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது என இஸ்ரேலின் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் சாடியுள்ளார். ஒரு நல்லறிவு உள்ள நாடு பொதுமக்களிற்கு எதிராக போர்தொடுக்காது, குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக கொல்லாது, மக்களை மிகப்பெரிய அளவில் இடம்பெயரச்செய்யாது என இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளரும் இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் பிரதி பிரதானியுமான யயிர் கொலான் வானொலி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறவெறிக்காலத்து தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுள்ள அவர் தமது வரலாறு முழுவதும் படுகொலைகளை துன்புறுத்தல்களை சந்தித்த யூதமக்கள், தற்போது முற்றிலும் மனச்சாட்சிக்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்துக்களிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்து இஸ்ரேலின் வீரமிக்க படைவீரர்களிற்கும், எதிரான மூர்க்கத்தனமான தூண்டுதல் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்தக் கருத்துக்களை "எங்கள் வழக்கமான மற்றும் ரிசர்வ் வீரர்களுக்கு எதிரான மோசமான இரத்தக்களரி அவதூறு" என்று அழைத்தார். அதே நேரத்தில் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கோலன் "தெரிந்தே பொய்களைப் பரப்புகிறார் இஸ்ரேலையும் ஐ.டி.எஃப்-ஐயும் உலகின் பார்வையில் அவதூறு செய்கிறார்" என்று கூறினார். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் எகுட் பராக் கோலனை "ஒரு துணிச்சலான நேரடியான மனிதர்" என்று அழைத்தார். மேலும் அவரது கருத்துக்கள் இஸ்ரேலின் அரசியல் தலைவர்களைக் குறிக்கின்றன வீரர்களை அல்ல என்றும் கூறினார். https://www.virakesari.lk/article/215323
  10. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கே? இந்தியா - பாகிஸ்தான் மோதலில் விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவ வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், இஷாத்ரிதா லஹிரி பதவி, பிபிசி செய்தியாளர் 21 மே 2025, 02:14 GMT இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பத்து நாட்கள் ஆன நிலையில் இன்னும் விடை கிடைக்காத பல வினாக்கள் எஞ்சி நிற்கின்றன. ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இவற்றை 'பயங்கரவாதிகள் மறைந்து இருந்த முகாம்கள்' என்று இந்தியா கூறியது. இதற்குப் பிறகு, எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான், டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின் போதும் அதற்குப் பின்னரும், இரு தரப்பினரும் பரஸ்பரம் பலவிதமான கூற்றுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்தக் கூற்றுகளில் சில உறுதிப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இந்த முழு சம்பவத்திலும், பல்வேறு ராணுவ, ராஜ்ஜிய மற்றும் அரசியல் தொடர்பான கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை நேரடியாக பதில் கிடைக்கவில்லை அல்லது விடையளிக்கப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் ராஜ்ஜிய விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் விடை கிடைக்காத வினாக்களுக்கு பதிலை நிபுணர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்வோம். படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நடத்தியது யார்? பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பேரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி, இருவர் பாகிஸ்தானியர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். காவல்துறை கூற்றுப்படி, அனந்த்நாக்கில் வசிக்கும் ஆதில் ஹுசைன் டோகர், ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகிய 3 பேரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழித்துவிட்டனர், எனவே இந்தியா அவர்களின் பயங்கரவாத தலைமையகங்களை அழித்துவிட்டது. இந்தியா நடத்திய இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார். ஆனால் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. எனவே பிபிசி இந்தக் கேள்வியை ராணுவ பிரிகேடியர் (ஓய்வு) ஜீவன் ராஜ்புரோஹித்திடம் கேட்டது. நமது கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர் ராஜ்புரோஹித், "இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பது கடினம், ஏனென்றால் இவர்களுக்கு உள்ளூர் ஆதரவு வலையமைப்பு உள்ளது. இரண்டாவதாக, அவர்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து உதவி கிடைக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் இணைந்து, இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க, பயங்கரவாதிகளைக் கொல்வது மட்டுமே போதுமானதல்ல. அதை இயக்கும் முழு கட்டமைப்பையும் தகர்க்க வேண்டியது அவசியம்." "இந்த பயங்கரவாதிகளைக் கொல்வதை விட பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம் தொடர்பான முழு சித்தாந்தத்தையும் ஒழிப்பது மிக முக்கியமானது. ஒருசில பயங்கரவாதிகளைக் கொல்வதால் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது" என்று அவர் கூறுகிறார். எல்லை தாண்டிய தாக்குதல்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். பிபிசி உட்பட பல ஊடக அமைப்புகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசியுள்ளன. இருப்பினும், அரசு தரப்பில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இங்கு எழும் கேள்வி என்னவென்றால், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் எல்லைப் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டாமா? என்பதுதான். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராணுவ ஏர் மார்ஷல் (ஓய்வு) திப்தேந்து செளத்ரி, "இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு என சில நிலையான தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் பிரத்யேக நெறிமுறை உள்ளது. காஷ்மீரின் எல்லைப் பகுதியில் மக்கள் தொகை மிகக் குறைவாகவே உள்ளது. ஜம்முவிலும், பஞ்சாபிலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது" என்று கூறுகிறார். "எல்லை அருகே வசிக்கும் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக ஷெல் தாக்குதலை எதிர்கொண்டுள்ள அவர்கள், ஏற்கனவே தயாராக உள்ளனர். பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன, அவசர நிலையை சமாளிக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சைரன் ஒலிக்கும் போதோ அல்லது மின்தடை ஏற்படும்போதோ என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார். "போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது அல்லது ராணுவம் நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே, மக்களை அங்கிருந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போதுதான் எல்லைப் பகுதிகள் காலி செய்யப்படுகின்றன. அதற்கு போதுமான நேரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது போர்ச்சூழல் இல்லை என்பதால், எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படவில்லை. திடீரென்று ஷெல் தாக்குதல் நடக்கிறது, எனவே எந்தவித முன்னெச்சரிக்கையும் கொடுக்க முடியாது" என்று அவர் விளக்கமாக விடையளிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் இரு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மையா இல்லை பொய்யா? ஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதியில் பெரிய அளவிலான உலோகத் துண்டு ஒன்று விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக இந்தியா எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. மறுபுறம், இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தியிடம் கேட்கப்பட்ட போது, "நாம் போர் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும். தற்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? அதற்கு பதில் ஆம் என்பதே." என்று பதிலளித்தார். "தற்போது கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. அது எதிரிகளுக்கு சாதகமாக அமையலாம்... இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்... நமது விமானிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்" என்று ஏர் மார்ஷல் பார்தி கூறினார். பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "அவர்களின் விமானங்கள் நமது எல்லைக்குள் நுழைவதைத் தடுத்துவிட்டோம். அவற்றின் சிதைவுகள் எங்களிடம் இல்லை" என்றார். ஏர் மார்ஷல் செளத்ரியின் கூற்றுப்படி, ஒரு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் போது இழப்புகளை பகிரங்கமாக வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. "உதாரணத்திற்கு பாலகோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நமது சாதனைகளை பகிரங்கமாக வெளியிட நாங்கள் தயாராக இல்லை. இருந்தபோதிலும் அப்போது வெளியுறவு அமைச்சகம் பகிரங்கமாக தகவல்களை அளித்து வந்தது. பாதுகாப்பு அமைச்சகமும் பின்னர் அதில் இணைந்தது. பாதுகாப்பு அமைச்சகம் களத்திற்குள் வந்த நேரத்தில், நிலைமை மாறியிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் பிடிபட்டார். அதற்குப் பிறகு, உலகின் முழு கவனமும் தடம் மாறிவிட்டதால், பயங்கரவாதத்தை குறிவைக்கும் இந்தியாவின் அடிப்படை நோக்கம் மாறிவிட்டது." "ராணுவத்திற்கு இழப்புகள் ஏற்படும். இது அவர்களின் வேலையின் ஒரு பகுதி. அது எவ்வளவு என்பதோ, எண்ணிக்கையோ முக்கியமானதல்ல. எத்தனை ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது முக்கியமல்ல. நமது அடிப்படை நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோமா என்பதுதான் முக்கியமானது. இழப்புகள் இருக்கும், ஆனால் முக்கியமான நோக்கம் எட்டப்பட்டதா என்பதே முக்கியம்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை இந்தியா - அமெரிக்கா ஆலோசனை விவரம் மோதலில் ஈடுபட்டிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை வெளியிட்டார். தனது அரசாங்கத்தின் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் "உடனடியாகவும் முழுமையாகவும் மோதலை நிறுத்த" ஒப்புக்கொண்டதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கூறினார். மறுபுறம், இந்த சண்டை நிறுத்தம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) முன்முயற்சியின் பேரில் நடந்ததாக இந்தியா கூறியது. டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை. இந்த விஷயம் குறித்து முன்னாள் இந்திய தூதர் திலீப் சிங்குடன் பிபிசி பேசியது. இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. இதற்குப் பிறகு அமெரிக்கா இந்தியாவுடன் பேசியிருக்க வேண்டும். சண்டை நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம், ஆனால் முன்முயற்சி பாகிஸ்தானிடமிருந்து வர வேண்டும் என்று இந்தியா கூறியிருக்க வேண்டும். இதற்குப் பிறகு பாகிஸ்தான் தனது டிஜிஎம்ஓவை இந்தியாவின் டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொள்ள வைத்தது. நமது டிஜிஎம்ஓ சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் சண்டைநிறுத்தம் செயல்படுத்தப்பட்டிருக்கும்" என்று ஊகிக்கிறார். "அமெரிக்காவுடனான உறவை இணக்கமாக வைத்திருப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. பல விஷயங்கள் நெருக்கடியில் உள்ளன. இந்த உறவு அதிபர் டிரம்புடன் மட்டும் நின்றுவிடவில்லை" என்று அவர் கூறுகிறார். எதிர்ப்பும் போர் நிறுத்தமும் சண்டை நிறுத்தம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த முழுத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள், சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கை தெளிவாக விளக்குமாறும் கேட்கின்றன. இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டால், அது தொடர்பாக அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த வினாவிற்கு விடையளிக்கும் திலீப் சிங், "அப்படி எந்தவித நெறிமுறைகளும் இல்லை. இதுபோன்ற அதிமுக்கியமான மற்றும் ராணுவ நடவடிக்கைகளில், அரசாங்கம் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும். எனவே, நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாதவர்களிடமிருந்து ஆலோசனையை பெற முடியாது. நடவடிக்கையின் விவரங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. நடவடிக்கை பற்றிய தகவல்களை வெளிப்படையாக சொல்வது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம்" என்று சொல்கிறார். டெல்லி பல்கலைக் கழகத்தின் இந்து கல்லூரியின் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் இதுபற்றி கூறுகையில், ராணுவக் கொள்கை விஷயங்களில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்ததற்கான முன்னுதாரணம் எதுவும் இல்லை என்கிறார். "1971 இந்தியா-பாகிஸ்தான் போரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அப்போதும் போர் உத்தி குறித்து எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற அமைப்பில், ராணுவம் தொடர்பான முடிவுகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை, அவை பின்னர்தான் விவாதிக்கப்படுகின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "ராணுவம் தொடர்பான முடிவுகளை எடுப்பது ராணுவ உளவுத்துறை தொடர்பான விவரங்களை பெறுபவர்கள் தான். அதேபோல சண்டை நிறுத்தம் தொடர்பான முடிவை எடுப்பதும் அவர்கள் தான். எனவே, எதிர்க்கட்சிகளிடம் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்கவோ, கேட்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது" என்று பேராசரியர் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04eelkpwwko
  11. 21 MAY, 2025 | 03:30 PM ரொபட் அன்டனி தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொண்டு நாங்கள் இந்த நன்மையை அடையப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். பார்த் பைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த ஐந்தாவது வங்காள விரிகுடா மாநாடு நேற்று (20) கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிந்தனை குழாம் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில், வங்காள விரிகுடா தொடர்பான மாநாடு மிகவும் தீர்க்கமான கட்டத்தில் நடைபெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடுகளுக்கு தீர்வை வரிகளை விதித்திருக்கின்றார். உலகமயமாதல் செயல்பாடு மாற்றமடையாது. ஆனால் அது தொடர்பான முறையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்யப்போகிறோம்? நாம் ஒரு பிராந்திய அமைப்பாக முன்வரப் போகின்றோமா? அப்படியானால் எந்த அமைப்பு இதற்கு தலைமை தாங்கும்? பீம்ஸ்டெக் அல்லது பட்டுப்பாதை (BRI) அல்லது ஆசியான் அமைப்பு இவற்றில் எது இந்த மாற்றத்தை நோக்கி நகர்வதில் தலைமைத்தும் வகிக்கப்போகிறது? நாம் ஒரு பிராந்தியமாக செயல்படுவதா? போன்று கேள்விகள் எம்முன் எழுகின்றன. அமெரிக்கா ஜனாதிபதி இந்த தீர்வை வரிகளை விதித்தவுடன் இந்தியா ஜப்பான் சீனா கொரியா போன்ற நாடுகள் அந்த நாட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தின. இந்நிலையில் எமது இந்த வங்காள விரிகுடா நாடுகள் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகின்றன? எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியா 30 ட்ரில்லியன் டொலர்களுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க போகிறது. இந்தோனேசியா நான்காவது பொருளாதாரமாக உருவெடுக்கும். பங்களாதேஷ் தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகள் முதல் 30 நாடுகளுக்குள்ளே வந்துவிடும். இந்த இடத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்? எவ்வாறு இந்த அபிவிருத்தியை நாம் பயன்படுத்த போகிறோம் என்பது எமன் இருக்கின்ற கேள்வியாகும். இதில் இந்த பீம்ஸ்டேக் அமைப்பு அல்லது வங்காள விரிகுடா நாடுகள் என்ன செய்யப் போகின்றன? நாம் ஒரு பிராந்தியமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். தற்போது நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றன. பொருளாதார வழித்தடங்கள் அவசியமாகின்றன. சீனா - சிங்கப்பூருக்கு இடையில் தொடர்பு காணப்படுகிறது. சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையில் ரயில் பாதை தொடர்பு காணப்படுகிறது. இந்தியா மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் ரயில்வே துறையுடன் ஒரு பொருளாதார வழித்தடம் காணப்படுகிறது. இந்நிலையில் நாம் எவ்வாறு எமது தொடர்புகளை வலுப்படுத்த போகிறோம் என்பது முக்கியமாக இருக்கின்றது. என்னை பொறுத்தவரையில் தெலுங்கானா ஆந்திரா தமிழ்நாடு இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் அவசியமாகின்றது. அதன் ஊடாகவே நாம் எமது பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். மேலும் இலங்கை தற்போது மிக முக்கியமாக ஆடை துறையில் தங்கியிருக்கிறது. அதிலிருந்து நாங்கள் வெளியே வர வேண்டும். இலங்கை பிராந்திய ரீதியான வர்த்தகங்களை செய்கின்ற ஒரு தளமாக மாற்றமடைய வேண்டும். இதற்கு நாங்கள் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று புதிய துறைமுகத்தை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும். எமது பொருளாதார ஐந்து முதல் பத்து வீத வளர்ச்சி அடைய வேண்டுமானால் வருகின்ற கொள்கலன்களை எங்கே நாம் தரையிறக்குவது? அதற்கான வசதிகள் எம்மிடம் இருக்கின்றதா? இலங்கை இந்திய தரை தொடர்பு தொடர்பாக நாம் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்திருக்கிறது. ஆனால் இந்தியா இலங்கைக்கு இடையிலான பாலம் உருவாக வேண்டும். அதற்கு முன்னர் பொருளாதாரம், கலாசாரம், அரசியல் மற்றும் சுற்றாடல் ரீதியான விடயங்கள் ஆராயப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டி இருக்கின்றது. புதிய வர்த்தக தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/215333
  12. அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை - வைகோ 21 MAY, 2025 | 02:10 PM அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும்.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கை தமிழரான சுபாஷ்கரன் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, ராமநாதபுரம் நீதிமன்றம் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றம் இவர் தண்டனையை ஏழாண்டு காலமாக 2022-ம் ஆண்டில் குறைத்தது இவரது தண்டனை காலம் இந்த ஆண்டுடன் முடிவதை முன்னிட்டு, தண்டனைக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், அவர் முறையிட்ட போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான திபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வு “உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல, இந்தியாவில் தொடர்ந்து தங்கும் உரிமை உங்களுக்கு இல்லை, இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்குச் சென்று புகலிடம் கோருங்கள்” என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்கு உரியதாகும். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலரை இந்திய அரசு, இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டபோது, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், “இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப் படுத்தி வெளியேற்றக் கூடாது” என ஆணை பிறப்பித்தது. இதன் விளைவாக இலங்கை தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள். நீதிபதிகள் இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்துமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/215325
  13. பாடம் எடுத்த 14 வயது சிறுவன்: ராஜஸ்தானுடன் தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2025 சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் முடித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் 8 போட்டிகளில் சேஸிங்கில் தோற்ற ராஜஸ்தான் அணி கடைசி முயற்சியாக நேற்றைய ஆட்டத்தில் சேஸிங்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் 7 முறை ராஜஸ்தான் அணி டாஸ் வென்றபோதும் அதில் 7 முறையும் சேஸிங் செய்யவே முயன்றது. ஆனால், 6 முறை தோற்றாலும் மனதை தளரவிடாத கேப்டன் சாம்ஸன் நேற்றும் நம்பிக்கையுடன் சேஸிங்கை தேர்வு செய்து முடிவில் அதில் வெற்றியும் பெற்றார். டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 14வயது பேட்டர் சூர்யவம்சி(57), ஜெய்ஸ்வாலின்(36) அதிரடி தொடக்கம் முக்கியக் காரணமாக இருந்தாலும், பந்துவீச்சில் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய ஆகாஷ் மத்வால் முக்கிய காரணமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆயுஷ் மாத்ரே மாத்ரே, பிரெவிஸ் சிறப்பான ஆட்டம் இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு தலைவலியாகவும், தோல்விக்கு காரணமாகவும் இருந்தது பேட்டர்களும், பேட்டிங்கும்தான்.அது நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளையும், 7.4 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நடுப்பகுதி பேட்டர்களுக்குத்தான் அழுத்தம் கொடுத்தது. சுதந்திரமாக ஆடவேண்டிய நடுப்பகுதி பேட்டர்களுக்கு அழுத்தம், நெருக்கடி கொடுத்தால் எவ்வாறு பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியும் என்பது தெரியவில்லை. சிஎஸ்கே அணியில் நேற்று அதிகபட்ச ஸ்கோர் தொடக்க ஆட்டக்காரர் மாத்ரே(43), பிரெவிஸ்(42) துபே(39) ஆகியோர் மட்டும்தான். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது எனத் தெரிந்தவின் சிறந்தகலவை வீரர்களைக் கண்டறியும் பணியில் 2ம் பகுதி சுற்றில் இறங்கியது. ஆனாலும், இன்னும் அந்த அணியால் சிறந்த பேட்டிங் கலவையை தேர்ந்தெடுக்கமுடியவில்லை. சிஎஸ்கேயின் நடுவரிசைக்கு ரெய்னா, ராயுடு சென்றபின் யாரைக் கொண்டுவருவது என இதுவரை தேடியும் கிடைக்கவில்லை. ஜடேஜாவையும், அஸ்வினையும் நேற்று நடுவரிசையில் களமிறக்கி கையைச்சுட்டுக்கொண்டனர். அஸ்வினை 4வது வரிசையில் களமிறக்கும் அளவுக்கு டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டரா எனத் தெரியவில்லை. இந்த சீசன் முழுவதும் ஜடேஜாவின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரெவிஸ் கடைசிக் கட்டத்தில் தோனி சொதப்பல் பிரெவிஸ், துபே களத்தில் இருந்தவரை சிஎஸ்கே அணி 200 ரன்களுக்குமேல் சேர்த்துவிடும் என்று உணரப்பட்டது. ஆனால், இருவரும் சென்றபின் தோனியால் இவ்வளவுதான் பேட் செய்ய முடியும் என்பது நேற்று ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். 200 ரன்களுக்கு மேல் உயர வேண்டிய ஸ்கோரை இழுத்துப்பிடித்து 188 ரன்களோடு நிறுத்திவிட்டனர். தோனி களத்துக்கு வந்தவுடனே ஹசரங்கா, ரியான் பராக் இருவரையும் அழைத்து சாம்ஸன் சுழற்பந்துவீசச் செய்து தோனியைக் கட்டிப்போட்டார். தோனியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்து 16 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். டெத் ஓவர்களில் மத்வால், துஷார் தேஷ்பாண்டே இருவரும் சிஎஸ்கே பேட்டர்களை திணறவிட்டனர் இருவரும் சேர்ந்து வைடு யார்கர்களையும், யார்கர்களையும் வீசி, சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே 27 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி சிஎஸ்கேவை திணறவிட்ட ஜெய்ஸ்வால் 188 ரன்களை சேஸ் செய்யப் போகிறோம் என்ற பதற்றமோ கடைசி ஆட்டம்தானே என்ற அலட்சியமோ ராஜஸ்தான் அணியிடம் இல்லை. ஜெய்ஸ்வால் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து எவ்வாறு அதிரடியாக பேட் செய்தாரோ அதேபாணியை மாற்றாமல் பொறுப்பாகவும், அதிரடியாகவும் தொடங்கினார். 13-வது முறையாக முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினார். கலீல் அகமதுவின் முதல் ஓவரில் சற்று திணறிய ஜெய்ஸ்வால் 3வது ஓவரிலிருந்து ஃபார்முக்குத் திரும்பி சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். ஆனால், கம்போஜ் பந்துவீச்சில் பந்து லேசாக ஸ்விங் ஆகாததை கணிக்காமல் ஜெய்ஸ்வால் ஆடியதால் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகி 19 பந்துகளில் 36 ரன்களில் வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெய்ஸ்வால் சீனியர்களை மிரட்டிய சூர்யவம்சி அடுத்துவந்த சாம்ஸன், சூர்யவம்சியுடன் சேர்ந்தார். 14 வயது சிறுவன் சூர்யவம்சிக்கு ஒரு திசையில் மட்டும் ஷாட் அடிக்கத் தெரியும், பெரிய ஷாட்களைத் தவிர பொறுமையாக ஆடத் தெரியாது என்ற விமர்சனங்களுக்கு நேற்று சூர்யவம்சி பதில் அளித்தார். அதிரடியாகவும் அதேநேரத்தில் களத்தில் நிலைத்தும் விளையாடுவது எப்படி என்று சிஎஸ்கே வீரர்களுக்கு பாடம் எடுப்பது போல் அவரது ஆட்டம் இருந்தது. தன்னால் நிதானமாகவும் பேட் செய்ய முடியும், டிபென்ஸ் செய்து ரன்களைச் சேர்க்க முடியும் என்பதை சூர்யவம்சி வெளிப்படுத்தினார். இருப்பினும் அவ்வப்போது தனது அதிரடி ஆட்டத்தால் சிக்ஸர் பவுண்டரிகளை விளாச சூர்யவம்சி தவறவில்லை. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற அஸ்வின், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது இவர்கள் யாருடைய பந்துவீச்சுக்கும் சூர்யவம்சி அஞ்சவில்லை. ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர், பவுண்டரி அடித்து ஓரம்கட்டினார். அஸ்வின் பந்துவீச்சிலும் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து பிரமிப்பூட்டினார் சூர்யவம்சி. நூர் அகமது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளை துவைத்து எடுத்தார் சூர்யவம்சி. 14வயது சிறுவன் தங்கள் பந்துவீச்சை இந்தமாதிரி அடித்து நொறுக்கிறாரானே என மனதிற்குள் புலம்பிக்கொண்டே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ஆனாலும் சூர்யவம்சியின் அதிரடிக்கு பிரேக்போட முடியவில்லை. 27 பந்துகளில் சூர்யவம்சி தனது 2வது அரைசதத்தை இந்த சீசனில் பதிவு செய்தார். இதில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி அஸ்வின் திருப்புமுனை சூர்யவம்சியை தட்டிக்கொடுத்து, ஒத்துழைத்து கேப்டன் சாம்ஸனும் பேட் செய்தார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றனர். இருவரும் களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் வெற்றி எளிதாகவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால், அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் சாம்ஸன்(41), சூர்யவம்சி(57) இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் சிஎஸ்கே கரங்களுக்கு மாறுகிறதா என எண்ணத் தோன்றியது. ரியான் பராக் 3 ரன்னில் விரைவாக வெளியேறினார். ஜூரெல் அதிரடி ஆட்டம் துருவ் ஜூரெல், ஹெட்மெயர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.அதிரடியாக ஆடிய ஜூரெல் அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸர்களும், நூர் அகமது, ஜடேஜா ஓவர்களில் சில பவுண்டரிகளும் அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். ஹெட்மெயரும் கேமியோ ஆடவே ராஜஸ்தான் எளிதாக வென்றது. ஜூரெல் 12 பந்துகளில் 31 ரன்களும், ஹெட்மெயர் 5 பந்துகளில் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அந்த அணி வீரர் துருவ் ஜூரெல் அஸ்வின் சுழற்பந்து எடுபடவில்லையா? இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற அஸ்வின் நேற்றைய பந்துவீச்சு சொதப்பலாக இருந்தது. அதிலும் சிறுவன் சூர்யவம்சி அஸ்வின் பந்துவீச்சை வெளுத்துவிட்டார். இந்த ஆட்டத்தில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரின் எக்னாமி ரேட்டை பார்த்தால் படுமோசமாக உள்ளது. 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவரின் ஓவரில் 6 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசப்பட்டன. கேரம் பால், நக்குல் பால் என அஸ்வின் வீசவதையெல்லாம் பேட்டர்கள் எளிதாக ஆடக் கற்றுக்கொண்டுவிட்டனர். அஸ்வின் பாரம்பரிய ஆஃப் ஸ்பின் வீசியிருந்தாலே ரன்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனியுடன் அஸ்வின் தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள் சிறந்த கேப்டன் என அறியப்பட்ட தோனி நேற்று கேப்டன்ஷியில் பல தவறுகளைச் செய்தார். நடுவரிசையில் ஜடேஜாவை முன்கூட்டியே களமிறக்காமல் அஸ்வினை ஏன் களமிறக்கினால் என்பது தெரியவில்லை. விக்கெட் சரிந்துவரும்போது, நிலைத்து ஆடக்கூடிய பிரெவிஸ், அல்லது ஜடேஜா, துபேயை முன்கூட்டியே களமிறக்கி இருக்காலம். அதைவிடுத்து, பிரெவிஸை ஏன் 6வது பேட்டராக களமிறக்கினார் எனத் தெரியவில்லை. அதேபோல பதிரணாவுக்கு தொடக்கத்தில் ஓவர் அளித்தார் அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார், தொடர்ந்து பதிராணாவுக்கு ஓவர் வழங்கியிருக்கலாம் ஆனால், பந்துவீச வாய்ப்புத் தராமல் கடைசி நேரத்தில்வாய்ப்பு வழங்கினார். பதிராணா நேற்று 2.1 ஓவர்கள் மட்டுமே வீச வாய்ப்புக் கிடைத்தது. சூர்யவம்சி, ஜெய்ஸ்வால் அதிரடியால் பதற்றமடைந்த தோனி எந்த பந்துவீச்சாளரை பந்துவீச வைப்பது எனத் தெரியாமல் நேற்று சற்று தடுமாறியதைக் காண முடிந்தது. கேப்டன் கூல் என்ற பெயரெடுத்த தோனியின் முகத்தில் பதற்றத்தின் தடங்கள் தெளிவாகத் தெரிந்தது. அந்த பதற்றம்தான் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன் கிடைத்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற முடியாமல் தடுமாற்றத்தை தோனியால் தடுமாற்றத்தை சந்திக்க முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி இதுவே பழைய தோனியாகஇருந்திருந்தால் கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பைக் கூட வெற்றியாக மாற்ற முயற்சி எடுத்து முடிவை எந்த சூழலிலும் மாற்றியிருப்பார். ஆனால், செட்டில் பேட்டர்கள் சாம்ஸன், சூர்யவம்சி இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்துமே அந்த தருணத்தை வெற்றியாக தோனியால் மாற்ற முடியவில்லை ஏனோ தெரியவில்லை. பேட்டிங்கிலும் தோனி நேற்று ஜொலிக்கவில்லை. தோனி களமிறங்கும் போது மீதம் 6 ஓவர்கள் இருந்தது, ஸ்கோர் 138 ஆக இருந்தது. தோனி நல்ல ஃபினிஷிங் அளி்த்திருந்தால் ஸ்கோர் நிச்சயமாக 200 ரன்களைக் கடந்திருக்கும். தோனி களத்துக்கு வந்து மந்தமாக ஆடத் தொடங்கியபின் ரன்ரேட் சரிந்தது. இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " சிறந்த ஸ்கோர்தான். பிரெவிஸ் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் ரன் ரேட்டை உயர்த்தும் அளவு பேட் செய்திருக்க வேண்டும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். கம்போஜ் பந்துவீச்சு நன்றாக இருந்தது, நன்றாக ஸ்விங் செய்கிறார். பவர்ப்ளேயில் அவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இளம் வீரர்கள் நிலைத்தன்மையைக் கொண்டுவர உழைக்க வேண்டும். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் போது நிலைத்தன்மையை கொண்டுவருவது கடினம்தான். ஆனாலும் எந்த நேரத்திலும் சிக்ஸர் அடிக்கும் திறனை வளர்க்க வேண்டும். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது சீனியர் வீரர்களிடம் இருந்தும், பயிற்சியாளர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும். அனைத்து இளம் வீரர்களுக்கும் இது எனது அறிவுரை" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனியுடன் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் சிஎஸ்கேவுக்கு இது மோசமான சாதனை இந்த வெற்றியால் ராஜஸ்தானுக்கும், தோல்வியால் சிஎஸ்கே அணிக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மற்ற அணிகள் மீதும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் முடித்தது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் அதில் வென்றாலும்கூட நிகரரன்ரேட்டில் மோசமாக இருப்பதால் 10-வது இடத்தில்தான் முடிக்க முடியும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு 2025 ஐபிஎல் சீசன் வரலாற்றில் மிகமோசமான கருப்பு சீசனாக என்றென்றும் இருக்கும். இதுநாள்வரை சிஎஸ்கே வரலாற்றில் கடைசி இடத்தில் சிஎஸ்கே அடைந்து தொடரை முடித்தது இல்லை. அந்த மோசமான சாதனையோடு சிஎஸ்கேயின் சீசன் முடியப்போகிறது. ஆட்டங்களின் விவரம் மும்பை vs டெல்லி கேபிடல்ஸ் நாள் – மே 21 இடம்: மும்பை நேரம்: இரவு 7.30 மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே நாள் – மே 25 இடம் – ஆமதாபாத் நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாய் சுதர்ஸன் ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்) ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 559 (14 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq855dq7jkdo
  14. 21 MAY, 2025 | 01:39 PM இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்துக்கு அமைய முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட சட்டமூலம் இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது. இவை அனைத்தும் முழுமையாக அரசுக்குச் சொந்தமானதாக அமையும். வலுசக்தி துறையில் செயற்றிறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களின் விரைவு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/215318
  15. Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 12:08 PM யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை மாவட்ட செயலர் வலியுறுத்தினார். மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார். இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது. அதன் போது, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215308
  16. காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது. இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின்னரும் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. தற்போது, காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நெதன்யாகு, ஹமாஸ் மீதான தாக்குதல் நடவடிக்கை விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும், காசா முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/318197
  17. இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா திரிபு - மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொரோனா-19 பாதிப்பு அதிகரித்துள்ளது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல ஆசிய நாடுகளில் கொரோனா-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது. சிங்கப்பூரில், 2025 ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதற்கு முந்தைய வாரத்தில், 11,100 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கைத் தவிர, கடந்த சில மாதங்களில் சீனாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிப்பதற்கு, கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு JN.1 தான் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின் படி இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும், அவற்றில் 53 பேர் மும்பையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,JN.1 கொரோனா வைரஸ் JN.1 என்றால் என்ன? சிங்கப்பூரில் இதுவரை மரபணு வரிசை ஆய்வு செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளில், பெரும்பாலானவை JN.1 மாறுபாட்டைச் சேர்ந்த வைரஸ் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. JN.1 வைரஸ்கள் முற்றிலும் புதியவை அல்ல, நீண்ட காலமாக உலகம் முழுவதும் பரவியிருந்த ஓமிக்ரானின் துணை மாறுபாடாகும். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) சமூக மருத்துவத் துறைப் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய், கோவிட் தடுப்பூசியின் (இணை-தடுப்பூசி) சோதனையின் மூன்று கட்டங்களிலும் தலைமை ஆராய்ச்சியாளராக இருந்தவர். கொரோனா வைரஸின் இந்தப் புதிய மாறுபாடு குறித்து பிபிசி செய்தியாளர் சந்தன் ஜஜ்வாரே, டாக்டர் சஞ்சய் ராயுடன் பேசினார். "JN.1 என்பது கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடுகளின் ஒன்று. இது அடையாளம் காணப்பட்டு ஓராண்டிற்கும் மேலாகிவிட்டது, இதுவொரு புதிய வைரஸ் அல்ல. எனவே இதன் தீவிரத்தன்மை முதல் இந்த வைரஸ் மாறுபாடு தொடர்பான விவரங்கள் அனைத்தும் நமக்குத் தெரியும்" என்று அவர் கூறுகிறார். "JN.1 மாறுபாட்டைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அது பெரிய அளவில் பாதிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. தற்போது நம்மிடம் உள்ள ஆதாரங்களின்படி, சாதாரண சளி ஏற்பட்டால் இருப்பது போலவோ அல்லது அதை விட குறைவாகவோ இந்த ஜேஎன்.1 மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார். நிபுணர்களின் அறிவுறுத்தல்கள் "சாதாரண சளியை ஏற்படுத்துவதும் ஒரு வகை கொரோனா வைரஸ் தான், அதாவது, அதுவும் கொரோனோவின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆயிரக்கணக்கான கொரோனா வைரஸ் குடும்பங்கள் உள்ளன, ஆனால் ஏழு குடும்பங்கள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துபவை, அவற்றில் நான்கு குடும்பங்கள் ஏற்கனவே இருந்தன, அவை சளியுடன் தொடர்புடையவை" என்று டாக்டர் சஞ்சய் ராய் கூறுகிறார். "2003-04ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வந்தது SARS-1. MERS (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி) 2012-13 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கிலிருந்து வந்தது. பிறகு, கொரோனா வைரஸ்-2 2019 ஆம் ஆண்டில் வந்தது, இது ஏற்படுத்தும் பாதிப்பையே நாம் கோவிட்-19 நோய் என்று அழைக்கிறோம்." சஞ்சய் ராயின் கூற்றுப்படி, வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் ஏற்பட்டால், அது வீட்டினர் அனைவருக்கும் தொற்றலாம் என்றாலும், அது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல. அதேபோலத் தான் கொரோனாவும் சளியின் அளவுக்கே பாதிப்பு ஏற்படுத்துவதாக மாறிவிட்டது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகத்தின்படி, "தற்போது, சிங்கப்பூரில் பரவும் கோவிட்-19 இன் முக்கிய வகைகள் LF.7 மற்றும் NB.1.8 இரண்டுமே JN.1 இன் துணை வகைகள் ஆகும். இதுவரை மரபணு வரிசை ஆய்வு செய்யப்பட்ட வைரஸ்களில் மூன்றில் இரண்டு பங்கு இவற்றுடன் தொடர்புடையவை. JN.1 தான், தற்போதைய கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிங்கப்பூரில் பரவும் கோவிட்-19 இன் முக்கிய வகைகள் LF.7 மற்றும் NB.1.8 இரண்டுமே JN.1 இன் துணை வகைகள் முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது இந்த JN.1 வகை வைரஸ் மனிதர்களை கடுமையாக பாதிக்காது என்று கூறும் நிபுணர்கள், ஆனால் இது துரிதமாக பரவுவதுதான் கவலைக்குரிய விஷயம் என்று கூறுகின்றனர். இருப்பினும், "சளி மற்றும் காய்ச்சலைப் போலவே, இது ஒரு முறை மட்டும் ஏற்படாது, பல முறை பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கொரோனாவிலும் 10,000 வகைகள் உள்ளன. அதுமட்டுமல்ல, தற்போது அது முற்றிலும் மாறிவிட்டது" என்று டாக்டர் சஞ்சய் ராய் கூறுகிறார். "கோவிட் காலத்தில் நாங்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பு ஒன்றில், கிட்டத்தட்ட அனைவரிடமும் ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பதைக் கண்டறிந்தோம், அதாவது கிட்டத்தட்ட அனைவரும் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறுகிறார். தற்போது கொரோனா பாதித்தவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையின் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இதைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் பிரகாஷ் ஆபிட்கர் தெரிவித்துள்ளார். தற்போது ஒருவருக்கு சளி, ஜலதோஷம் பாதித்தாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் என்று சஞ்சய் ராய் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே நோய் பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படும் JN.1 அறிகுறிகள் மற்றும் இந்தியாவின் நிலைமை தற்போதைய கொரோனா வைரஸின் அறிகுறிகள், ஓமிக்ரானிலிருந்து மிகவும் வேறுபட்டவை அல்ல. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டை புண், சோர்வு, தலைவலி மற்றும் இருமல் போன்றவை ஏற்படும், இவையே புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஆகும். இருப்பினும், ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அறிகுறிகள் வெளிப்படும். JN.1 வகை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு அல்லது தலைவலி ஆகியவை அடங்கும். சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்தியாவில் திங்களன்று ஒரு உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், அவசர மருத்துவ நிவாரணப் பிரிவு, பேரிடர் மேலாண்மைப் பிரிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? மக்களுக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா? "இந்தியாவில் கொரோனா-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கருத்துடன் கூட்டம் முடிந்தது. 2025 மே 19 நிலவரப்படி, இந்தியாவில் 257 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு அவதானிக்கும்போது, இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn8zz93k48ko
  18. பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ' கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025, 03:08 GMT செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையமைத்த 12 பாடல்களும் உள்ளன. கதாநாயகன், கதாநாயகி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் ஏஐ உருவாக்கியவையே. இந்தியத் திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல, ஆனால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு, மத்திய அரசின் தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழ் வழங்கப்பட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு வெளியானது, சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தகைய ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், திரைப்படத்துறையில் என்ன மாற்றங்களை கொண்டுவரும்? வழக்கமான திரைப்படங்களுக்கு ஈடாக, மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்களா? முழுக்க 'ஏஐ' மூலம் உருவான திரைப்படம் பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு,இந்தப் படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை. 'லவ் யூ'- பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர் நூதன் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை. அதற்கு பதிலாக, சுமார் 30 செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயன்படுத்தி திரைப்படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள், இசை மற்றும் டிரோன் பாணி காட்சிகளை கூட உருவாக்கியுள்ளனர். அதாவது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சி, கலை இயக்குநர் என அனைத்திற்கும் 'ஏஐ' (AI) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. கதை, திரைக்கதை, பாடல் வரிகள் மற்றும் இறுதி எடிட்டிங் மட்டுமே மனிதர்களால் கையாளப்பட்டது. ஆறு மாதங்களில் 10 லட்சம் ரூபாய் என்ற பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. கடந்த மே 16-ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தின் கதை என்பது, "நூதன் எனும் பாடகர் மணாலிக்கு சுற்றுலா செல்லும்போது, அஷ்வினி எனும் பாடகியைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் போராட்டங்களும் தான்" என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது. இந்த ஏஐ திரைப்படத்தில் உள்ள குறைகளையும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. "தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக, குறிப்பாக 'லிப் சிங்க்' போன்ற பிரச்னைகளால் வசனங்கள் குறைவாகவே உள்ளன. திரைப்படத்தின் பெரும்பகுதி பாடல்களைச் சார்ந்துள்ளது." காட்சிகள் யதார்த்தமாகவும் இல்லை, அனிமேஷன் படங்களில் வருவது போலவும் இல்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. 'ஏஐ' மூலம் திரைப்படங்களை உருவாக்கும் போது, நல்ல கதையும் சிறந்த தொழில்நுட்பமும் அவசியம் என அந்த விமர்சனம் கூறுகிறது. 'லவ் யூ' திரைப்படத்தைத் தொடர்ந்து, இன்னும் பத்துக்கும் மேற்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் வெளியாகும் எனக் கூறுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரியான செந்தில் நாயகம். இவரது முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸ், திரைப்படங்களுக்கான ஏஐ தொடர்பான சேவைகளை வழங்கிவருகிறது. "என்னிடம் ஒரு நல்ல கதை, திரைக்கதை இருக்கிறது என்றால், நான் ஒரு தயாரிப்பாளருக்காகவோ அல்லது நடிகர், நடிகர்களுக்காக காத்திருக்க தேவையில்லை. இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் ஒரு முழு படத்தை எடுத்துவிடலாம் எனும்போது இது நிச்சயம் உதவியாக இருக்கும்" என்கிறார் செந்தில் நாயகம். தொடர்ந்து பேசிய அவர், "இனி வரும் எல்லா திரைப்படங்களிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கும். அது எந்த அளவில் என்பது தான் விஷயம். வருங்காலத்தில், 100 சதவீதம் ஏஐ மூலம் உருவாகும் படங்கள் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிடும். ஒரு வரி கதையைக் கொடுத்தால், ஏஐ திரைக்கதை எழுதிக் கொடுத்துவிடும் எனும்போது அனைத்தும் சாத்தியம்" என்கிறார். செயற்கை நுண்ணறிவு எழுதும் கதை- திரைக்கதைகள் பட மூலாதாரம்,DEEPA/INSTAGRAM படக்குறிப்பு,எழுத்தாளர் தீபா "கதை-திரைக்கதை என்பது தனிமனித அனுபவங்களில் அல்லது எண்ணங்களில் இருந்து உருவாகும் போது தான் அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். ஏஐ சொல்லும் கதை-திரைக்கதைகள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும், அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும்" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். இது தொடர்பாக ஒரு உதாரணம் கூறும் அவர், "சில நாட்களுக்கு முன்பாக ஒரு காட்சி ஊடகவியல் (VisCom) கல்லூரிக்கு சிறப்பு வகுப்புகளுக்காக சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களிடம், ஒரு வரி கதையைக் கொடுத்து, ஒரு முழு கதையாக மாற்றச் சொன்னேன். அரை நாள் நேரமும் கொடுத்திருந்தேன். மாலை, அவர்கள் கொடுத்த கதைகளைப் பார்த்தபோது ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட கதைகள் ஒரே நபர் எழுதியது போன்று நிறைய ஒற்றுமைகள் இருந்தன. விசாரித்தபோது, மாணவர்கள் பலர் 'சாட்ஜிபிடி'-யிடம் அந்த ஒருவரிக் கதையைக் கொடுத்து, அதை முழு கதையாக மாற்றச் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது" என்கிறார். திரைப்படங்களின் ஒருவரிக் கதைகள் பலவும் நமக்கு பரிட்சயமானவை தான், ஆனால் அதை திரைக்கதையாக மாற்றுவதில் தான் ஒருவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது, அதுவே மக்களையும் கவர்கிறது. அதை ஏ.ஐ மூலம் ஈடுசெய்ய முடியாது என்கிறார் ஜா.தீபா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்டுடியோக்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஸ்கிரிப்ட்களை எழுதவோ அல்லது திருத்தவோ ஏ.ஐ பயன்படுத்தக்கூடாது என முடிவுசெய்யப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டில், அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தால் (WGA) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஹாலிவுட் திரைப்படத்துறை எழுத்தாளர்கள் பலரு ஒன்று திரண்டு, 148 நாட்கள் நீடித்த ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்திற்கு முக்கிய காரணம், திரைப்படம்/தொலைக்காட்சி துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகும். ஏ.ஐ மூலம் ஸ்கிரிப்ட்களை எழுதுவது அல்லது திருத்துவது, ஒரு கதையை ஏ.ஐ மூலம் தயார் செய்துவிட்டு பிறகு அதை மெருகேற்ற மட்டும் ஒரு எழுத்தாளரை அழைப்பது, எழுத்தாளர்களின் அனுமதி பெறாமல் அல்லது நஷ்டஈடு வழங்காமல் அவர்களது படைப்புகளைக் கொண்டு 'ஏ.ஐ'-க்கு பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் திரைப்பட ஸ்டுடியோக்களும், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களும் ஈடுபடக் கூடாது என்பதே அந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது. அதைத் தொடர்ந்து ஸ்டுடியோக்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஸ்கிரிப்ட்களை எழுதவோ அல்லது திருத்தவோ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது. ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மூலப் பொருளாகப் பயன்படுத்த முடியாது. எழுத்தாளர்கள் விரும்பினால் ஏ.ஐ உதவியை நாடலாம், ஆனால் ஸ்டுடியோக்கள் அதை கட்டாயப்படுத்த முடியாது. எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட உள்ளடக்கத்தில் ஏ.ஐ பயன்படுத்தப்பட்டதா என்பதை ஸ்டுடியோக்கள் முறையாக தெரிவிக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஏ.ஐ திரைப்படங்கள் மக்களை கவருமா? பட மூலாதாரம்,RAVIKUMAR / INSTAGRAM படக்குறிப்பு, ஏ.ஐ திரைப்படங்கள் மக்களை பெரிதும் கவராது என்கிறார் தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். ரவிக்குமார். "ஏ.ஐ மனிதர்களின் படைப்புத் திறனுக்கு ஒரு மாற்றாகவே முடியாது. பார்க்காத விஷயத்தை அல்லது தெரிந்த விஷயத்தை புதிய கோணத்தில் பார்ப்பதையே மக்கள் விரும்புவார்கள். ஏ.ஐ தொழில்நுட்பமோ ஏற்கனவே இருப்பவற்றின் அடிப்படையில் தான் காட்சிகளை உருவாக்கப்போகிறது. இதனால், அது மக்களை பெரிதும் கவராது" என்கிறார் தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். ரவிக்குமார். இன்று நேற்று நாளை, அயலான ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஏ,ஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படத்தை முதல்முறை பார்க்கும்போது ஒரு ஆச்சரியம் இருக்குமே தவிர அது வழக்கமான சினிமாவுக்கு நிச்சயம் மாற்றாக இருக்காது என்று கூறும் அவர், "இது ஒரு தொழில்நுட்பத்தை தேவையான அளவு பயன்படுத்தலாம். இன்று எல்லோர் கைகளிலும் நல்ல கேமரா கொண்ட கைப்பேசிகள் உள்ளன, ஆனால் எல்லோரும் ஒரு நல்ல புகைப்படக் கலைஞரை போல படமெடுக்க முடியாது அல்லவா. அதேசமயம், ஏ.ஐ. தரும் சில பயன்களையும் புறக்கணிக்க முடியாது. எனவே ஏஐ என்பது ஒரு திரைப்பட இயக்குநருக்கு/கலைஞருக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, மாற்றாக அல்ல" என்கிறார். ஆனால், முழு திரைப்படத்தையும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுப்பதில் ஒரு மிகப்பெரிய நன்மை இருப்பதாகக் குறிப்பிடுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸ் தலைமைச் செயல் அதிகாரி செந்தில் நாயகம். "கங்குவா போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களை, முதலில் ஏஐ மூலம் உருவாக்கி, குறிப்பிட்ட சில பார்வையாளர்களுக்கு மட்டும் காண்பித்து அதன் பின் வழக்கமான முறையில் படமாக்கும் போது ஒரு 'மினிமம் கியாரண்டி' கிடைக்கும்" என்கிறார் அவர். "ஒரு முழு ஏ.ஐ திரைப்படம் தயாரிக்க 10-15 லட்சம் தான் எனும் போது ஏன் இதை முயற்சி செய்து பார்க்கக்கூடாது. பல அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா தொழில்நுட்பத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு, செயற்கை நுண்ணறிவும் அப்படித்தான்" என்கிறார் செந்தில் நாயகம். யாருக்கு பாதிப்பு? பட மூலாதாரம்,SY_GOWTHAMRAJ படக்குறிப்பு,திரைப்பட இயக்குனர் கௌதம்ராஜ் "இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு பெரிய சந்தை இல்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தால் இப்போதைக்கு அனிமேஷன் திரைப்படங்களில் பணிபுரிகிறவர்களுக்கு தான் ஆபத்து" என்கிறார் திரைப்பட இயக்குநர் கௌதம்ராஜ். ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். "நிஜ மனிதர்களை, தத்ரூபமாக உருவாக்கி அதை திரையில் உலாவ விடும் திறன், அதாவது இப்போது நாம் பார்க்கும் திரைப்படங்கள் போலவே கொண்டுவரும் திறன் ஏ.ஐ-க்கு என்று வருகிறதோ, அன்று தான் உண்மையான ஆபத்து" என்கிறார் கௌதம்ராஜ். அப்படி ஒரு நிலை ஏற்படுவதன் மூலம், நடிகர்கள் பலரும் வேலை இழப்பது மட்டுமல்லாது 'நாயக பிம்பங்கள்' சரிந்து, கதாபாத்திரங்கள் மட்டுமே மக்கள் மனதில் நிற்கும் என்று குறிப்பிடுகிறார் கௌதம்ராஜ். "பேட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற காமிக்ஸ்- அனிமேஷன் கதாபாத்திரங்களே, அதில் நடித்த நடிகர்களை விட மனதில் இன்றும் நிற்கிறது. ஒருவேளை ஏ.ஐ. அதீத வளர்ச்சி அடைந்தால், வழக்கமான திரைப்படங்களிலும் அது நடக்கும்" என்று கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpd44zqjznjo
  19. Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 11:49 AM முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித் தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடற்தொழில் திணைக்களத்தினர் , கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகுகளையும், இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சட்டவிரோத மீன்பிடிக்கு வெளிச்சத்தை பாய்ச்சிய படகுகள் பற்றிய விசாரணைகளை கடற்தொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். புத்தள மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களும் கொக்குதொடுவாய் பகுதியை சேர்ந்த ஒருவருமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/215306
  20. தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இரு பெண்கள் கைது கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் போது, அந்த துப்பாக்கி தங்கமுலாம் பூசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. https://thinakkural.lk/article/318237 கொழும்பில் ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி : இரு பெண்கள் கைது Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 11:52 AM கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண்ணுடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, ஹெவ்லொக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் ரி - 56 ரக துப்பாக்கியை எடுத்துச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டார். ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் ரி - 56 ரக துப்பாக்கியுடன் பெண்ணொருவர் செல்வதற்கு முற்பட்டபோது அவர் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகளால் 119 அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்புக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸாரால் நேற்று நண்பகல் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட துப்பாக்கி தங்க மூலாம் பூசப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கி என்பதுடன் குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வரும் 68 வயதுடைய பெண்ணொருவரால் துப்பாக்கி கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளவத்தை பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ளதுடன், அவர் வசம் இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 40 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (20) தெரிவித்துள்ளனர். கொழும்பு 06 மற்றும் பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த இந்த இரு சந்தேக நபர்களும் இன்று (21) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/215299
  21. 20 MAY, 2025 | 05:33 PM பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் செவ்வாய்க்கிழமை (20) சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்க தூதரையும் சந்தித்தனர். இதனை தொடர்ந்து பிற்பகலில் சுவிற்சர்லாந்து தூதரகத்தில் அந்நாட்டு தூதுவரை சந்தித்து தமிழ் மக்களுக்கு சமஸ்டியிலான நிரந்தர தீர்வு மற்றும் வடக்கில் தற்போது அரசாங்கம் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். https://www.virakesari.lk/article/215258
  22. Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 11:26 AM படம் - 2006 செப்டம்பர் மாதம் முகமாலையில் இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழ் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலின் பின்னர் ஏ9 வீதியில் காணப்பட்ட பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் வெடிபொருட்கள் I do not see the war in Sri Lanka as a victory Anuruddha Lokuhapuarachchi நாங்கள் முன்னர் வெற்றி என அழைத்தது உண்மையில் மௌனமான ஒரு தருணம், காயங்களை ஆற்றுவதன் மூலம் இடம்பெறாத ஒரு விடயம், ஆனால் சோர்வின் மூலம் சாத்தியமான ஒரு விடயம். இது அமைதியின் விடியல் இல்லை, மாறாக உயிர்பிழைத்தலின் நிழல். யுத்தம் ஈவிரக்கமற்ற தன்மைக்கு முடிவை காணவில்லை, மாறாக அதனை இயல்பான விடயமாக்கியது. அது ஒரு தலைமுறைக்கு உடைந்த இதயங்களுடன் வெற்று நம்பிக்கைகள் மற்றும் சொல்லப்படடாத துயரங்களுடன் வாழ கற்றுக்கொடுத்தது. மிகவும் அடிப்படையான மனித பண்புகளான இரக்கம், சமத்துவம், கண்ணியம் ஆகியவை சுயநலம் மற்றும் பயத்தின் கீழ் புதைக்கப்பட்டன. தேசிய ஒற்றுமை என்ற பெயரில், வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்கள், தேசபக்தர்கள் துரோகிகள் நினைவில் இருப்பவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் என புதிய சமூக பிளவுகளை உருவாக்கினோம். இந்த அடையாளங்கள் உண்மை அல்லது நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை. மாறாக விலக்கிவைத்தல் என்ற பலவீனமான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டன. பதினைந்து ஆண்டுகளின் பின்னரும் இலங்கையில் நாங்கள் இந்த மரபினால் துயரங்களை அனுபவிக்கின்றோம். இனம், மதம் அல்லது பிராந்தியத்தை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பிரஜையும் சமமாக பங்கேற்கவும், சுதந்திரமாக பேசவும் கண்ணியமாக வாழவும், அனுமதிக்கும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப தவறிவிட்டோம். வீதிகளை அமைத்துள்ளோம். ஆனால் நல்லிணக்கத்தை உருவாக்கவில்லை. தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஆனால் பொறுப்புக்கூறலை இன்னமும் உருவாக்கவில்லை. இறந்தவர்களை எண்ணிவிட்டோம். ஆனால் உயிருடன் உள்ளவர்களை இன்னமும் செவிமடுக்கவில்லை. போரின் உளவியல் காயங்களை நாங்கள் உண்மையிலேயே குணப்படுத்திவிட்டோமா?அந்த காயங்கள் தொடர்ந்தும் மாறாமலிருப்பதாக நாம் நினைத்தால் நாங்கள் ஏன் இன்னமும், வெற்றிக்காக செலுத்திய விலையை பற்றி சிந்திப்பதற்கு பதில் யுத்தவெற்றியை கொண்டாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்? நாம் இன்னமும் மௌனத்தை அமைதி என்றும், ஒழுங்கை நீதி என்றும் தவறாக புரிந்துகொள்கின்றோம். போர் முடிவடைந்து மற்றுமொரு ஆண்டை நாங்கள் குறிக்கும் இந்த தருணத்தில்வென்று நிலம் கொள்ளுதலை கொண்டாடுவதை தவிர்ப்போம். பணிவுடனும் நேர்மையுடனும் நாம் சிந்திப்போம். ஒவ்வொரு இலங்கையரும் தனது சொந்த வீட்டில் இருப்பதாக உணரும்போதுதான், உண்மையான வெற்றி கிடைக்கும், எந்த சமூகமும் அச்சுறுத்தலானதாக காணப்படாமலும், எந்த பிரஜையும் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதாக உணராமல் இருக்கும்போதுதான் உண்மையான வெற்றி சாத்தியம். அதுதான் நாங்கள் ஒருவருக்குகொருவர் கடன்பட்டிருக்கும் அமைதி, அதுதான் நாம் இன்னமும் வெல்லப்படாத சுதந்திரம். https://www.virakesari.lk/article/215126
  23. நல்லது அண்ணை. பியர் பிரியர்கள் சிறுநீர் நன்றாக பிரிவதால் சிறுநீரகக்கல் தோன்றாது என்ற காரணத்தையும் குறிப்பிடுவார்கள்.
  24. நீங்கள் ஒரு பியர் பிரியரோ அண்ணை?! அப்படியென்றால் பெரிய வண்டி வந்திருக்கவேண்டுமே?!
  25. 20 MAY, 2025 | 12:46 PM டி.பி.எஸ். ஜெயராஜ் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்' என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் 'பொய்ச்செய்தியை' பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்” என்ற மாயைக்கு பின்னால் இருக்கும் குழுவே விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார் என்ற பொய்ச்செய்திப் பிரசாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டது என்று அறியவருகிறது. பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனியும் கூட உயிருடன் இருக்கிறார்கள் என்ற மாயையையும் இந்த குழுவே பிரசாரம் செய்தது. ஐரோப்பாவில் இருக்கும் மதிவதனியின் சகோதரர்கள் உட்பட பல்வேறு நபர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் முக்கியமான ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்களும் இந்த 'உயிருடன் இருக்கும்' புரளிக்கு ஆதரவளித்தார்கள். போலி துவாரகா, பிரபாகரன் மற்றும் மதிவதனியை கொண்டுவருவதற்கான நடவடிக்கை 'தலைவரின்' குடும்பத்தின் எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஆதரவாளர்களிடம் இருந்து நிதி சேகரிப்பதற்கு ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் புலிகளினால் முன்னெடுக்கப்படும் ஏமாற்று வேலையின் ஓர் அங்கமாகும். இதைப் பற்றி நான் 2023 மார்ச்சில் 'பிரபாவையும் குடும்பத்தையும் பயன்படுத்தி போலிச்செய்தி மோசடி' என்ற தலைப்பில் விரிவாக எழுதினேன். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய அந்த மோசடி வேலை பரிதாபத்துக்குரிய சிணுங்கலாக இப்போது தணிந்துபோய்விட்டது. துவாரகாவாக பாசாங்கு செய்தவர் அஞ்சி நடுங்கி தற்போது வெளியில் தலைகாட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. விடுதலை புலிகளின் பெருமளவு ஆதரவாளர்களை ஏமாற்றி அவர்களது யூரோக்களை, பிராங்குகளை, குரோனர்களை, ஸ்ரேர்லிங் பவுண்களை கறந்த மோசடிக்காரர்கள் பொன்முட்டையிடும் அந்த வாத்தை கைவிட்டுவிடத் தயாராக இல்லை. இப்போது அவர்கள் பொட்டு அம்மானை பிடித்திருக்கிறார்கள். அவர் உக்ரெயின் நாட்டில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பொட்டு அம்மானின் 'மீள்வருகைக்கும்' அதைத் தொடர்ந்து நிதி திரட்டலுக்குமான களம் அமைக்கப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில விவேகமுள்ள, அக்கறையுடைய உறுப்பினர்கள் இவ்வாரம் பொட்டு அம்மானின் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதன் மூலம் இந்த பாசாங்கை அம்பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேவேளை, இந்த நிகழ்வுப் போக்குகளினால் குழப்பமடைந்த சில நபர்கள் உண்மை நிலையை எழுதுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டவர்களில் பலர் ஐரோப்பாவில் வளர்ந்த இளைஞர்களே. அவர்களில் சிலர் பொட்டு அம்மானை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். அதனால் இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை முன்னைய எனது எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் பொட்டு அம்மான் மீது கவனம் செலுத்துகிறது. பொட்டு அம்மான் என்ற சண்முகநாதன் சிவசங்கர் விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக 2009ஆம் ஆண்டில் மரணமடையும் வரை 21 வருடங்கள் செயற்பட்டார். விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பொட்டு அம்மான் நடப்பின்படி அந்த இயக்கத்தின் இரண்டாவது பெரிய தலைவராக இருந்தார். உரிமைப்படி மூப்பின் அடிப்படையில் பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என்றால் அது பேபி சுப்பிரமணியமே. ஆனால், இரண்டாவது தலைவராக நடைமுறையில் பொட்டு அம்மானே செயற்பட்டார். பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக சட்டப்படியாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவரது சடலமோ அல்லது எச்சங்களோ ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் அவர் இறக்கவில்லை என்று சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன. பொட்டுவும் குடும்பமும் உயிருடன் இல்லை இந்த கட்டத்தில் நான் பொட்டு அம்மானின் மரணத்துடன் தொடர்புடைய விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்துக்கு நேர்ந்ததைப் போன்றே பொட்டு அம்மானும் அவரது குடும்பத்தினரும் கூட இறந்துவிட்டனர். பிரபாகரனும் மனைவி மதிவதனி, பிள்ளைகள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரனும் போரின் இறுதிக்கட்டத்தில் மரணமடைந்தனர். அதேபோன்றே பொட்டு அம்மானும் அவரது மனைவி வத்சலா, மகன்களான பார்த்திபன், அருள்வேந்தன் மற்றும் கலைக்கண்ணன் ஆகியோரும் இன்று உயிருடன் இல்லை. பொட்டுவின் மூத்தமகன் பார்த்திபனும் இரண்டாவது மகன் அருள்வேந்தனும் விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்து ஆயுதப் பயற்சிகளை பெற்றனர். போர்க்களத்தில் முன்னரங்கத்தில் நின்று போராடிய அவர்கள் இருவரும் வெவ்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டனர். இருவரும் 2009 ஜனவரிக்கும் மேயிற்கும் இடைப்பட்ட மாதங்களிலலேயே கொல்லப்பட்டனர். திகதிகளை அறியக்கூடியதாக இல்லை. இளைய மகன் கலைக்கண்ணன் 2009 மே 13ஆம் திகதி கொல்லப்பட்டான். ஒன்பது வயதான அவன் தாயுடன் சேர்ந்து மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து வெளியேறி அருகாமைப் பதுங்குகுழியில் இருந்த நண்பர்களுக்காக தண்ணீர் எடுக்கச் சென்றான். அந்தவேளை ஹெலிகொப்டரில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவன் இரத்தம் சிந்திய நிலையில் தாயாரின் கரங்களிலேயே உயிர்விட்டான். பொட்டுவின் மனைவி வத்சலா 2009 மே 16ஆம் திகதி மரணமடைந்தார். ஆட்டிலறி ஷெல் வெடிப்பு ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது சடலத்தை கணவர் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. பொட்டு 2009 மே 18ஆம் திகதி மரணமடைந்தார். வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்த அவர் அதை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தான் தூள்தூளாகப் போவதை உறுதிசெய்வதற்காக பொட்டு தனது அங்கியில் மிகையான அளவுக்கு வெடிபொருட்களை நிரப்பியதாகவும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது உதவியாளர்களையும் மெய்க்காவலர்களையும் வேறிடத்துக்கு செல்லுமாறு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு திரும்பிவந்து பார்த்த அவர்கள் சிதறிய பொட்டுவின் உடலில் எஞ்சிக்கிடந்தவற்றை அழித்தனர். முன்னர் குறிப்பிட்டதை போன்று பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் மூன்று பிள்ளைகள். தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் இருவரும் பெயர்களைச் சூட்டியதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பிரபாகரன் - மதிவதனி தம்பதியரின் மூத்த மகனுக்கு பிரபாகரனின் சிறந்த நண்பனும் மூத்த இராணுவ தளபதியுமான - சாவகச்சேரி மீசாலையில் இறந்த சார்ள்ஸ் அந்தனியின் பெயர் சூட்டப்பட்டது. அவர்களின் மகளுக்கு துவாரகன் (மயூரன்) என்ற அவரின் மிகுந்த விருப்பத்துக்குரிய மெய்க்காவலரின் நினைவாக துவாரகா என்று பெயர் சூட்டப்பட்டது. இளையமகனுக்கு விடுதலை புலிகளில் இணைந்து சண்டையில் உயர்துறந்த மதிவதனியின் சொந்தச் சகோதரன் பாலச்சந்திரனின் பெயர் சூட்டப்பட்டது. பொட்டு அம்மானும் வத்சலாவும் தங்களது மூத்த மகனுக்கு பாரத்திபன் என்று பெயர் சூட்டினார்கள். 1987ஆம் ஆண்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் உண்மையான பெயர் பார்த்திபன். அவர் சிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு விற்பன்னர். அதேபோன்றே பொட்டுவின் மகன் பார்த்திபனும் சதுரங்கத்தில் திறமையுடையவர். இரண்டாவது மகனுக்கு அவர்கள் கொழும்பில் தன்னைத்தானே வெடிக்கவைத்து இறந்த ஒரு கரும்புலியின் நினைவாக அருள்வேந்தன் என்று அவர்கள் பெயர் வைத்தனர். பொட்டுவின் பிரதி கேணல் சார்ள்ஸும் கூட விடுதலை புலிகள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் இயக்கத்தை ஆரம்பித்தபோது தனக்கு அருள்வேந்தன் என்று இயக்கப்பெயரை வைத்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. பொட்டு தம்பதியர் தங்களது இளையமகனுக்கு சண்டையில் இறந்த மேஜர் கண்ணனின் பெயரைச் சூட்டினர். கண்ணன் வத்சலாவின் தாய்மாமனும் கூட. 2000ஆம் ஆண்டில் பிறந்த கலைக்கண்ணனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் பார்த்திபன், அருள்வேந்தன் ஆகியோருக்கு இடையில் நீண்ட வயது வித்தியாசம். அதேபோன்றே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா ஆகியோருக்கும் இடையில் நீண்ட வயது வித்தியாசம். பாலச்சந்திரன் 1997ஆம் ஆண்டில் பிறந்தவர். பொட்டுவின் சகோதரி கெப்டன் அருந்ததி இரு மகன்களுக்கும் புறம்பாக பொட்டு குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து சண்டையில் இறந்தார். பொட்டுவின் இளைய சகோதரி காப்டன் அருந்ததி என்ற சிவரஞ்சனி சண்முகநாதனே அவராவார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தச்சன்காடு பகுதியில் 1990 நவம்பரில் நடைபெற்ற மோதல்களில் அவர் கொல்லப்பட்டார். சிவரஞ்சனியின் இயக்கப்பெயர் அருந்ததியாக இருந்தபோதிலும், பொட்டுவின் சகோதரி என்பதால் தோழர்கள் அவரை 'பொட்டு' என்றே அழைத்தார்கள். பல வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட பொட்டுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானார். அவரின் இளைய சகோதரரும் வத்சலாவின் ஒரு உடன்பிறப்பும் லண்டனில் வசிக்கிறார்கள். பொட்டு இரு தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலை புலிகளின் பலம் பொருந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மிகவும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டார். அவர் 1962ஆம் ஆண்டில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பொட்டு சுமார் 30 வருடங்கள் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். 1983 ஜூலை 23ஆம் திகதி விடுதலை புலிகள் திருநெல்வேலியில் இலங்கைப் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் 23 முழுநேர உறுப்பினர்களும் ஏழு பகுதிநேர உதவியாளர்களும் மாத்திரமே இருந்தனர். பொட்டு இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் 30 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியாலை - நாயன்மார்கட்டு அவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டில் வசித்தபோதிலும், அவர்கள் அயல் அரியாலையைச் சேர்ந்தவர்கள். சிறுவர் பராயத்தில் இருந்தே அரியாலையில் இருந்த தனது வயதையொத்த சிறுவர்களுடன் பொட்டு நெருங்கிப் பழகி நாயன்மார்கட்டையும் விட கூடுதலான நேரத்தை அரியாலையிலேயே கழித்தார். சிவசங்கரின் தந்தையார் சண்முகநாதன், சண்முகலிங்கம் என்றும் அறியப்பட்டிருந்தார். கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் பல வருடங்களாக ஒரு எழுதுவினைஞராக அவர் பணியாற்றினார். பிள்ளைகளின் கல்விக்காக குடும்பம் யாழ்ப்பாணத்திலேயே வசித்தது.1990 களின் பிற்பகுதி வரை பொட்டுவின் தந்தையார் மலையகத்திலேயே தொடர்ந்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொட்டுவைப் பற்றி இலங்கை அதிகாரிகளுக்கு பெரிதாக எதுவும் தெரியாத காரணத்தால் தந்தையாருக்கு ஆபத்து எதுவும் நேராது என்பதில் மகன் மிகுந்த நம்பிக்கை உடையவராக இருந்தார். பொட்டு மகேஸ்வரி வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி) மன்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைப் பெற்றார். மிகவும் உயரமான, அழகான தோற்றமுடைய பொட்டு அவரது நண்பர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கினார். கல்வியிலோ அல்லது விளையாட்டுகளிலோ அவர் சிறந்து விளங்கவில்லை. ஆனால், பெருமளவு கட்டுரைப் போட்டிகளில் அவர் பரிசுகளை வென்றார். விடுதலை புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியான பஷீர் காக்காவினாலும் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதியான சந்தோசம் மாஸ்டரினாலுமே சிவசங்கர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார். இது 1981ஆம் ஆண்டில் நடந்தது. முதலில் அவர் பகுதிநேர உதவியாளராகவே செயற்பட்டார். முழுநேர உறுப்பினராக மாறியதும் சிவசங்கருக்கு குமணண் என்ற இயக்கப்பெயரே கொடுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அவர் பொட்டு என்ற அறியப்படலானார். பாடசாலை நாட்களில் இருந்து அவரை நண்பர்கள் பொட்டு என்றே அழைத்தார்கள். பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் மிகவும் சுவாரஸ்யமானது. பொட்டு என்பது நெற்றியில் வைத்துக் கொள்வது. கோவில்களில் அல்லது சுப வைபவங்களில் பொட்டு வைப்பதற்கு சந்தனம் அல்லது குங்குமமே பயன்படுத்தப்படும். தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியவாதக் கொள்கையுடைய இலங்கை தமிழ் அரசு கட்சியினதும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் எழுச்சி போராட்டம் மற்றும் தியாகம் என்ற கோட்பாடுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. இதன் ஒரு தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இரத்தத் திலகமிடும் பழக்கம் வந்தது. தமிழ் அரசியல் தலைவர்களினால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மேடைகளில் ஏறி தங்களது விரல்களை குத்தி அதில் இருந்து வெளிவரும் இரத்தத்தால் தலைவர்களின் நெற்றியில் பொட்டு வைத்து தங்களது இரத்தத்தையும் உயிரையும் தமிழ் இலட்சியத்துக்காக அர்ப்பணிப்பதாக சூளுரைப்பார்கள். இளம் சிவசங்கரும் ஒரு சந்தர்ப்பத்தில் உணர்சிவசப்பட்டவராக மேடையில் ஏறி பிளேட்டினால் தனது கையைக் கிழித்து தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரின் நெற்றிகளில் பொட்டு வைத்தார். தமிழர் அரசியலில் மிகவும் உணர்ச்சிவசமான பிரசாரங்களைக் கண்ட 1977 பொதுத்தேர்தலின் போதே இது நடந்தது. அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டது. யோகேஸ்வரன் அந்த தேர்தலில் கூட்டணியின் யாழ்ப்பாணம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். சிவசங்கரின் இந்த உணர்ச்சிவசமான சைகை அவரது நண்பர்களினால் பெரும் வேடிக்கையாக நோக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் அவரை சீண்டிக் குறும்பு செய்து பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு புதிய தோழர்களும் அவரை பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். இயக்கத்தில் அவரின் மூப்புநிலை அதிகரிக்கவே பொட்டுவுடன் 'அம்மான்' என்ற விகுதியும் சேர்ந்து கொண்டது. விடுதலை புலிகள் மத்தியில் மூப்புநிலையில் இருந்தவர்களை 'அண்ணன்', 'மாஸ்டர்' அல்லது 'அம்மான்' என்று அழைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. பொட்டுவின் சர்வதேச வானொலி சமிக்ஞை 'பாபா ஒஸ்கார் ' (Papa Oscar) என்பதாகும். விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குண்டுகளை வெடிக்கவைக்கத் தொடங்கிய பின்னரான வருடங்களில் விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் பொட்டு அம்மானை கிண்டலாக 'வெடியரசன்' என்று அழைத்தனர். உத்தர பிரதேசத்தில் முதல் பயிற்சி அணி 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நாடுபூராவும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத அட்டூழியமும் அதன் விளைவுகளும் தமிழர் அரசியலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அன்று 'பொடியன்கள்' என்று அறியப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சியை வழங்கியதன் மூலம் இந்தியா துடிப்பான பாத்திரம் ஒன்றை வகித்தது. விடுதலை புலிகளின் முதலாவது அணியின் ஒரு உறுப்பினராக ஆயுதப் பயிற்சிக்காக வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சிவசங்கர் சென்றார். முதலாவது அணி பயிற்சி பெறுனர்களில் இயக்கத்தின் பழைய உறுப்பினர்களும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களும் கலந்திருந்தனர். இந்தியாவில் பயிற்சியைப் பெற்ற பிறகு குறுகிய காலம் பொட்டு பிரபாகரனின் மெய்க்காவலராக பணியாற்றினார். அந்த காலப்பகுதியில்தான் பொட்டு தனது தலைவரின் வெறிபிடித்த ஒரு சீடராக மாறினார். அடிமைத்தனமான அர்ப்பணிப்புடன தனது தலைவருக்கு பொட்டு சேவை செய்தார். பிரபாகரன் மீதான பொட்டுவின் விசுவாசம் தடுமாற்றம் இல்லாததும் கேள்விக்கு இடமின்றியதுமாகும். என்றாலும் பொட்டுவின் புலனாய்வு ஆற்றலே அவரை மேல்நிலைக்கு கொண்டுவந்தது. முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு லவ்னெனிற்றி பேரியா போன்று பிரபாகரனுக்கு பொட்டு இருந்தார். சீட்டாட்டம் சீட்டாட்டத்தில் பொட்டுவின் நிபுணத்துவம் அவரது ஆற்றலுக்கும் திறமைக்குமான அடையாளமாக இருந்தது. சீட்டாட்டத்தில் அவர் மிகுந்த பிரியம் கொண்டவர். சீட்டாட்டத்துக்காக பொட்டுவை இரவில் நித்திரையில் இருந்துகூட எழுப்ப முடியும் என்று அவரின் முன்னாள் இயக்கச் சகா ஒருவர் என்னிடம் கூறினார். எந்த நேரத்திலும் சீட்டாடுவதற்கு பொட்டு தயாராயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், இராணுவத்தின் ரோந்து அணியொன்று நெருங்கி வந்துகொண்டிருந்த காரணத்தால் மறைவிடம் ஒன்றில் இருந்து விடுதலை புலிகள் தப்பியோட வேண்டியிருந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரனேட்டுகள் அடங்கிய பையொன்றை தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்த பொட்டு சீடடுப்பக்கெட்டை எடுத்துச் செல்ல மறக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை. பொட்டு 'திறீ நோட் ஃபோர்' விளையாட்டில் வியத்தகு திறமைசாலி. ஒரு குறுகிய நேரத்திற்குள் தன்னுடன் சீட்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் எந்த வகையான சீட்டுக்கள் இருக்கின்றன என்பதை அவர் கண்டு பிடித்துவிடுவார். அதன் பிரகாரம் விளையாட்டில் அவர் தனது சீட்டுக்களை பயன்படுத்துவார். ஏமாற்றி வீம்பு பேசுவதிலும் எதிராளிகளை அம்பலப்படுத்துவதிலும் பொட்டு இயற்கைமீறிய திறமையைக் கொண்டிருந்தார். அவரது இந்த குணாதிசயம் புலனாய்வு தலைவராக திறமையுடன் செயற்படுவதற்கு உதவியது. 1985ஆம் ஆண்டில் பொட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். வெவ்வேறு காலப் பகுதிகளில் கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பாக பஷீர் காக்கா, அருணா, குமரப்பா ஆகியோர் இருந்தபோது அவர்களின் முக்கியமான ஒரு தோழராக பொட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்டார். பொட்டு கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதி நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. மட்டக்களப்பில்தான் பொட்டு வத்சலாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். வத்சலா மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரில் ஒருவர் மகழடித்தீவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் உறவினர்கள்.முன்னாள் கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர், சம்பந்தமூர்த்தியின் மனைவியின் தந்தையார். மட்டக்களப்பில் செயற்பட்ட காலத்தில் பொட்டு அம்மான் தனது திறமையை நிரூபித்தார். மாங்கேணி முகாம், கறுத்தப்பாலம் சோதனை நிலை மற்றும் பொலன்னறுவை வீதியில் இராணுவ ரோந்துப் பிரிவு மீதான தாக்குதல்கள் போன்ற குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளுக்கு பொட்டு தலைமை தாங்கினார். ஒரு தடவை காரைதீவில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது பொட்டு அகப்பட்டுக்கொண்டார். ஆனால், சாரம் அணிந்திருந்த அவர் படையினரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பொட்டு அம்மான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் புவியியலை தனது பிறங்கையைப் போன்று அறிந்திருந்தார். படுவான்கரை என்று அறியப்பட்ட மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியில் நடமாடித் திரிந்தபோது அவர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டியையே பயன்படுத்தினார். பணத்தைப் பெறுவதற்காக தனவந்த நிலச்சுவாந்தார்களையும் வர்த்தகர்களையும் கடத்துவதில் பொட்டு ஈவிரக்கமற்றவராக நடந்துகொண்டார். அது விடயத்தில் அவர் பன்குடாவெளியில் அரிசி ஆலை மற்றும் நகைக்கடை உரிமையாளரான சின்னத்தம்பி (சம்பந்தமூர்த்தியின் தந்தையார்) உட்பட வத்சலாவின் உறவினர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. 1987 அக்டோபரில் இந்திய இராணுவத்துடன் போர் மூண்டபோது பொட்டு அம்மான் மட்டக்களப்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து விநியோகங்கள் இடையூறின்றி வந்து சேருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்காக தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பதில் யாழ்ப்பாண தளபதி பிறகு யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்ததும் பொட்டு இந்திய இராணுவத்துக்கு எதிரான கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் இம்ரான், பாண்டியன் மற்றும் மதி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்ததை அடுத்து அவர் ஒரு குறுகிய காலத்துக்கு பதில் யாழ்ப்பாணத் தளபதியாக செயற்பட்டார். இந்திய இராணுவத்தினருடனான சண்டையொன்றில் பொட்டு வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு வன்னியில் சிகிச்சை பெற்றார். பிரபாகரனும் அப்போது வன்னிக்கு நகர்ந்திருந்தார் . அதற்கு பிறகு மேலதிக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக பொட்டு இரகசியமாக தமிழ்நாட்டுக்கு சென்றார். இலங்கை மண்ணில் இந்திய இராணுவத்துடனான மோதல்களில் காயமடைந்த விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் இரகசியமாகச் சிகிச்சை பெறக்கூடியதாக இருந்தது உண்மையில் ஒரு விசித்திரமாகும். வத்சலாவும் தமிழ்நாட்டுக்கு சென்றார். அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் இருவரும் வைபவரீதியாக தாலிகட்டித் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் மட்டக்களப்பில் பதிவுத் திருமணமே செய்திருந்தனர். புலனாய்வு தலைவர் முழுமையாக குணமடைந்து பொட்டு இலங்கை திரும்பிய பிறகு விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிருவகிக்கும் பொறுப்பு 1988 பிற்பகுதியில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பிரிவு புலிகளின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை (Tiger Organization Security Intelligence Service or TOSIS) என்று அழைக்கப்பட்டது. அந்த பிரிவின் தலைவராக இருந்த வசந்தன் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார். புலனாய்வுப் பிரிவை பொறுப்பேற்ற பிறகு பொட்டு அம்மான் அதை முற்றாக மாற்றியமைத்து 21 வருடங்களாக தலைவராக இருந்தார். வருடங்கள் கடந்தோட அவர் மிகவும் அஞ்சப்படுகிற ஒருவர் என்ற 'புகழைப்' பெற்றார். இயக்கத்திற்குள்ளும் அவரின் அந்தஸ்து வளர்ந்தது. அதற்கு பிறகுதான் அவர் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படலானார். விடுதலை புலிகளின் தலைவரை சென்றடைய வேண்டிய விடயங்கள் பொட்டுவின் ஊடாகவே தெரியப்படுத்தப்படுகின்ற அளவுக்கு அவரது நிலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு வாரத்தில் பொட்டு பிரபாகரனை குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து தடவைகள் சந்திப்பார். விடுதலை புலிகளின் மூத்த தலைவர்களினால் சந்திக்க முடியாதவராக பிரபாகரன் மாறிய ஒரு காலகட்டம் வந்தது. ஆனால், எந்த நேரத்திலும் பொட்டுவினால் பிரபாகரனைச் சந்திக்க முடியும். ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்கக்கூடிய ஒரேயொரு இயக்கத் தலைவராகவும் பொட்டு விளங்கினார். மற்றவர்கள் எல்லோரும் தங்களின் ஆயுதங்களை கையளித்த பின்னரே பிரபாகரனைச் சந்திப்பதற்கு அரிதாக அனுமதிக்கப்பட்டனர். சகல வல்லமையும் கொண்ட பொட்டு பிரபாகரனுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்த நிலைமை ஏற்பட்டது. 'உள்ளேயிருக்கக்கூடிய எதிரிகள்' பற்றிய அச்சம் விடுதலை புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பிரபாகரன் பெருமளவுக்கு அன்னியப்பட்டவராக மாறும் நிலையை தோற்றுவித்தது. பொட்டு அம்மான் சசகல வல்லமையும் பொருந்தியவராக மாறினார். ஒரு கட்டத்தில் தலைவரின் அன்றாட நடவடிக்கைகளை 'கட்டுப்படுத்துபவராக' அவர் விளங்கினார். https://www.virakesari.lk/article/215215

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.