Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் - நினைவுத்தூபிக்கு அனுமதி - கனடா உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் ஆட்சேபனை 14 MAY, 2025 | 04:12 PM இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கனடா தூதுவரை அழைத்து வெளிவிவகார அமைச்சர் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார் இது குறித்து அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளதாவது. ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்,அது தொடர்பில் நினைவுத்தூபியை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கியமை குறித்த இலங்கை அரசாங்கத்தின் கடும் ஆட்சேபனையை இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகரிடம் இன்று வெளியிட்டேன். இலங்கையின் பன்முகதன்மை கொண்டே சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளிற்கு இது தடையாகவும் விளங்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தேன். இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது- இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது. 2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது. கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது. இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தியதுடன், இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/214712
  2. இவ்வாறான இளம் சிறார்களை ஊக்கப்படுத்த வேண்டும். வாழ்த்துகள் கஜிசனா.
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஜே-10சி போர் விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 14 மே 2025, 05:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருந்த போது, சீன பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் அந்நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்றத்தைக் கண்டன . குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை வழங்கும் நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டது. இவற்றில் ஒன்று ஜே-10சி போர் விமானங்களை தயாரிக்கும் அவிக் செங்டு விமான கார்ப்பரேஷன் ஆகும். சீனாவின் ஷென்சென் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு மே 7ஆம் தேதியன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன. "இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த ஜே-10சி போர் விமானத்தைப் பயன்படுத்தினோம்" என்று பாகிஸ்தான் கூறியிருந்ததும் இந்த பங்கு அதிகரிப்புக்கு ஒரு காரணம். மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இந்த கூற்றை முன்வைத்தார். பாகிஸ்தானின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்தவொரு தெளிவான பதிலையும் அளிக்காத இந்தியா, ரஃபேல் போர் விமானத்தை இழந்ததாக ஏற்கவும் இல்லை. டிரம்ப் அறிவிப்பால் மகிழும் பாகிஸ்தான் - பொறியில் சிக்குவாரா மோதி? இந்தியாவை ஆதரிக்க ரஷ்யா தயங்கியது ஏன்? பாகிஸ்தானுடன் புதிய உறவு மலர்கிறதா? தனித்தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் - நெப்போலியன் என்ன செய்தார்? தங்கம் விலை உயர்வு எவ்வளவு நாள் நீடிக்கும்? இப்போது முதலீடு செய்வது பாதுகாப்பானதா? End of அதிகம் படிக்கப்பட்டது சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் பாகிஸ்தானின் கூற்று குறித்து கேட்ட போது, அது குறித்து தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். சீனா இதை மறுத்திருக்கலாம். ஆனால் மோதலின் போது மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக அதன் ஆயுதங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை சீனா உன்னிப்பாக கவனித்திருக்கும். "உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மிக நவீன சீன ஆயுதங்களில் பெரும்பாலானவை இன்னும் போர்ச் சூழலில் களப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் தனது பெரும்பாலான ஆயுதங்களை சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது, எனவே அவற்றை களப் பரிசோதனை செய்வது அவர்களின் ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகும்" என்று ப்ளூம்பெர்க் புலனாய்வின் பாதுகாப்பு ஆய்வாளர் எரிக் ஜு கூறினார். ஆயுதங்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் பாகிஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனாவின் விங் லூங் II ட்ரோன் கடந்த நான்கு தசாப்தங்களாக சீனா எந்தவொரு பெரிய போரிலும் பங்கேற்கவில்லை. ஆனால் அதிபர் ஜின்பிங்கின் தலைமையின் கீழ், சீனா தனது ராணுவத்தை வலுப்படுத்துவதிலும், அதிநவீன ஆயுதங்களை உருவாக்குவதிலும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்த ஆயுதங்களை பாகிஸ்தானுக்கும் சீனா வழங்கியுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-24), பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 81% சீனாவைச் சேர்ந்தவை. 2015-19 முதல் 2020-24 வரை பாகிஸ்தான் ஆயுத இறக்குமதியை 61 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெறும் ஆயுதங்களில் நவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும். பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் சில ஆயுதங்களில் சீனாவுக்கும் பங்கு உள்ளது. இவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன அல்லது சீன தொழில்நுட்பம் அவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் பற்றி நாம் பேசினால், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடு. இருப்பினும், 2015-19 மற்றும் 2020-24 க்கு இடையில் அதன் இறக்குமதி 9.3 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ஆயுத இறக்குமதியில் மிகப்பெரிய பங்கு (36 சதவீதம்) ரஷ்யாவிலிருந்து வந்தது, இது 2015-19 (55 சதவீதம்) மற்றும் 2010-14 (72 சதவீதம்) ஐ விட மிகக் குறைந்த பங்காகும். இந்தியாவுக்கான பிரெஞ்சு ஆயுத ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (28 சதவீதம்) மிகப்பெரிய பங்கைப் பெற்றுள்ளது. "ஆசியா மற்றும் ஓசியானியா 2020-24-ம் ஆண்டு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி பிராந்தியமாக இருந்தது, 1990 களின் முற்பகுதியில் இருந்து எப்போதும் இதே நிலை தான் உள்ளது" என்று SIPRI மூத்த ஆய்வாளர் சைமன் வெஸ்மேன் கூறுகிறார். "பெரும்பாலான கொள்முதல் சீனா தொடர்பான அச்சுறுத்தல் உணர்வுகளால் செய்யப்படுகிறது." என்றார் அவர். பாகிஸ்தானிடம் உள்ள சீன ஆயுதங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 1965 இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, அமெரிக்க ஆயுதத் தடைகள் பாகிஸ்தானை சீனாவை நோக்கித் தள்ளிய போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடங்கியது. சீனா போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை வழங்கி நீண்டகால உறவுக்கு அடித்தளம் அமைத்தது. பனிப்போருக்குப் பின்னர் இந்த உறவு ஆழமடைந்தது, அமெரிக்காவிற்கு பதிலாக சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கும் முதன்மை நாடாக மாறியது. இரு நாடுகளும் 1963 ஆம் ஆண்டின் சீன-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது எல்லை தகராறுகளைத் தீர்த்தது. 1966 -ல் ராணுவ ஒத்துழைப்பு தொடங்கியது. பாகிஸ்தானிடம் இப்போது ஏராளமான சீன ஆயுதங்கள் உள்ளன. போர் விமானங்கள்: சீனாவின் ஜே -10 சி மற்றும் ஜேஎஃப் -17 தண்டர் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஜே -10 சி சீன நிறுவனமான செங்டு ஏர்கிராஃப்ட் கார்பரேஷனால் தயாரிக்கப்படுகிறது, ஜேஎஃப் -17 தண்டர் சீனா மற்றும் பாகிஸ்தானால் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனாவின் ஜேஎஃப் -17 தண்டர் போர் விமானங்கள் ஏவுகணை: திங்களன்று, இந்திய இராணுவம் தனது செய்தியாளர் சந்திப்பில் பி.எல் -15 ஏவுகணையின் எச்சங்களைக் காட்டியது . அது இலக்கை நெருங்கும் முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவம் கூறியது. பிஎல்-15 என்பது பாகிஸ்தானால் பயன்படுத்தப்படும் சீன ஏவுகணை ஆகும். சீனாவின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்பரேஷன் (AVIC) உருவாக்கிய PL-15 என்பது நீண்ட தூர ரேடார் வழிகாட்டுதலில் இயங்கும் ஏவுகணை ஆகும். டிரோன்கள்: பாதுகாப்புத் துறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, சீனா மற்றும் துருக்கியிடமிருந்து நவீன ட்ரோன்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது . இவற்றில் சீனாவின் CH-4 மற்றும் விங் லூங் II ட்ரோன்கள், துருக்கியின் Bayraktar TB2 மற்றும் Akinci டிரோன்கள் அடங்கும். வான் பாதுகாப்பு அமைப்பு: பாகிஸ்தானில் சீனாவால் தயாரிக்கப்பட்ட HQ-9, HQ-16 மற்றும் FN-16 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இவற்றில், HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுதங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது ரஷ்யாவின் எஸ்-300 க்கு இணையானதாக கருதப்படுகிறது. இது தவிர, ஹேங்கோர் வகுப்பின் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பாகிஸ்தான் 2015 இல் சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது . இது தவிர, இருநாடுகளும் கூட்டாக அல்-காலித் டாங்கியையும் உருவாக்கியுள்ளனர். பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி கூறுகையில், "சீனா-பாகிஸ்தான் உறவு பல தசாப்தங்கள் பழமையானது, காலப்போக்கில் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தானை தனது இரட்டை சகோதரர் என்று சீனா பலமுறை வர்ணித்துள்ளது. சமீபத்திய போரில், சீனாவின் பி.எல் -15 ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியது. பாதுகாப்புத் துறையைத் தவிர, சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம் மற்றும் குவாதர் துறைமுகத்திற்கும் பாகிஸ்தான் மிகவும் முக்கியமானது." என்கிறார் அவர். இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனா 1947 -ல் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்காக 3 போர்களை நடத்தியுள்ளன. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் இந்தியாவை ஆதரித்தது, அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுடன் நின்றன. பாரம்பரிய அணிசேராக் கொள்கை இருந்த போதிலும், இந்தியா அமெரிக்காவுக்கு நெருக்கமாக இருப்பதாக தெரிகிறது. ஆசியாவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் சூழலில் இந்தியா தனது பக்கத்தில் இருப்பது நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பிற நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதை அதிகரித்துள்ளது, ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது. பேராசிரியர் ஹர்ஷ் வி.பந்த் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் துணைத் தலைவராக உள்ளார். இந்த மோதலை அமெரிக்க-சீன அதிகார சமநிலையின் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். பேராசிரியர் ஹர்ஷ் வி.பந்த், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த மோதலை அமெரிக்க-சீன அதிகார சமநிலை என்ற பார்வையின் மூலமும் பகுப்பாய்வு செய்ய முடியும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு மூலோபாய பங்காளியாக மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான வர்த்தக பங்காளியாகவும் அமெரிக்கா இந்தியாவைப் பார்க்கிறது. இந்த பின்னணியில் சண்டை நிறுத்தத்திற்கான அமெரிக்க முயற்சிகள் பார்க்கப்பட வேண்டும். இந்தியா தனது ஆற்றல், வளங்கள் மற்றும் நேரத்தை பாகிஸ்தானுக்காக வீணடிப்பதை அமெரிக்கா விரும்பாது" என்கிறார். "சீனா பாகிஸ்தானை ஆதரிப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. ஆது மட்டுமல்லாமல், சீனா தனது அறிக்கைகள் மூலம் பாகிஸ்தானை ஆதரித்தது." பாகிஸ்தானின் ஆயுதங்களில் பெரும்பாலானவை சீனாவிடம் இருந்து வாங்கப்படுகின்றன/ இந்தியா அதன் ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வாங்குகிறது. எனவே, ராகுல் பேடி இந்த மோதலை மறைமுகமாக சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலாகப் பார்க்கிறார். "பாகிஸ்தான் போரில் ஈடுபட்டிருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக சீனாவின் ஆயுதங்களை சோதிக்க வேண்டிய நேரம் இது. போரின் போது பி.எல் -15 ஏவுகணை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தவிர, சீனாவின் போர் விமானங்களும் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேலுடன் மோதிக் கொள்ள வேண்டியிருந்தது." என்று சுட்டிக்காட்டுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவத் தாக்குதல்களுக்கு சீனா வருத்தம் தெரிவித்ததுடன், அமைதி மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்திய மோதல்களுக்கு முன்பு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு தொலைபேசி அழைப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார். சீனாவை பாகிஸ்தானின் "உறுதியான நண்பர்" என்று அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgeg92l92wno
  4. தலைமறைவாயிருந்த “டீச்சர் அம்மா” நீதிமன்றில் சரண்! Published By: DIGITAL DESK 3 14 MAY, 2025 | 03:52 PM தலைமறைவாக இருந்த டீச்சர் அம்மா என்றும் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி அனுஜா பிரேமரத்ன, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இளைஞர் ஒருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கட்டான பொலிஸார், டீச்சர் அம்மாவின் கணவரையும் நிறுவனத்தின் தலைவரையும் கைது செய்தனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (13) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரைக் கைதுசெய்ய 3 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், இன்று புதன்கிழமை (14) நீதிமன்றத்தில் சரணடையும் வரை டீச்சர் அம்மாவை கைது செய்ய முடியவில்லை. https://www.virakesari.lk/article/214711
  5. தடையை புறந்தள்ளி வைத்துவிட்டு WTC இறுதிப் போட்டியை ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது 14 MAY, 2025 | 01:40 PM (நெவில் அன்தனி) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்குகின்ற நிலையில் தனது தடையை மறந்துவிட்டு புதுமனிதனாக இறுதிப் போட்டியை கெகிசோ ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது. தடைசெய்யப்பட்பட்ட ஊக்கமருந்து அல்லது போதைப் பொருள் பாவித்த குற்றத்தின்பேரில் ரபாடாவுக்கு தடைவிதிககப்பட்டது. இதனை அடுத்து அவரது நல்வாழ்வு குறித்து கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) தனது கரிசனையை வெளியிட்டது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துதை அல்லது பொதைப் பொருளை ரபாடா பாவித்துள்ளார் என்பது பரிசோதனையில் நிரூபணமானதை அடுத்து அவருக்கு ஒரு மாத கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டது. இந்த விடயத்தை அறிந்த உடனேயே ரபாடாவின் நல்வாழ்வு குறித்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் அக்கறை செலுத்தத் தொடங்கியது. ரபாடா தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து அல்லது போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுபவர் அல்லர் என்பதை பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் டெம்பா பவுமா, தேசிய அணி மற்றும் உயர் செயல்திறன் நிலைய பணிப்பாளர் எனொக் நிக்வே ஆகியோர் புரிந்து கொண்டு ரபாடா குறித்து திருப்தி அடைந்துள்ளனர். இந்தத் தடையைத் தொடர்ந்து நல்வாழ்வு தொடர்பாக நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ள ரபாடா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார். மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்கும் டேர்பன் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான SA20 போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் திகதி ரபாடா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்திருப்பது கண்டறியப்பட்டது. எவ்வாறாயினும் அவர் என்னவகையான தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளைப் பாவித்தார் என்பதை ஜூன் மாதம் 4ஆம் திகதி உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஊக்கமருந்து பாவனை இல்லாத விளையாட்டுத்துறைக்கான தென் ஆபிரிக்க நிறுவனம் அறிவிக்கவுள்ளது. அதாவது ரபாடாவின் மேன்முறையீட்டுக்கான 30 தின கால அவகாசம் முடிவடைந்த பின்னரே அந்த அறிவிப்பு விடுக்கப்படவள்ளது. அந்த நிறுவனத்தின் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான விதிகளின் பிரகாரம் கெனபிஸ், கொக்கெய்ன், ஹெரொய்ன் அல்லது மெய்மறந்த மகிழ்ச்சிக்கான ஊக்கமருந்து ஆகிய நான்கில் ஒன்றை ரபாடா பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது. ரபாடா ஒரே ஒரு தடவை மாத்திரம் பரவசம் அடைவதற்காக அவற்றில் ஒன்றைப் பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளை ரபாடா பாவித்தார் என்ற தகவல் வெளியானது முதல் அவருடன் நல்வாழ்வு குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வந்ததாக ஊடக சந்திப்பில் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பின்போதே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தென் ஆபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க குழாம் பெயரிடப்பட்டுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறியுள்ள தென் ஆபிரிக்கா சந்திக்கவுள்ளது. இறுதிப் போட்டி லண்டன், லோர்ட்ஸ் விளையாட்ரங்கில் ஜூன் மாதம் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களில் போட்டியில் முடிவு கிட்டாவிட்டால் 16ஆம் திகதி போட்டி தொடர்ந்து நடத்தப்படும். இறுதிப் போட்டிக்கான தென் ஆபிரிக்க கிரிக்கெட் குழாத்தில் ரபாடா தலைமையிலான 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களில் மூவர் இறுதிப் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆபிரிக்க குழாம் டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கேஷவ் மஹராஜ், மார்க்கோ ஜென்சன், கோர்பின் பொஷ், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன். https://www.virakesari.lk/article/214689
  6. கனடாவின் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு இலங்கை அரசு கண்டனம் இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (14) கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அத்தகைய நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதிக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்கி, குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/317952
  7. கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி Published By: PRIYATHARSHAN 13 MAY, 2025 | 10:47 PM கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார். பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார். இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார். முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார். மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன். டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன். முடியரசு - பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன். பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி, மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன். கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும் அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214640
  8. Published By: VISHNU 14 MAY, 2025 | 07:32 PM யாழ். நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளதையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி கர்ப்பமாகி 5 மாதங்களான நிலையில் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/214747
  9. 14 MAY, 2025 | 05:13 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் "குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/214732
  10. துருப்புச் சீட்டான ஐபோன்: குற்றவாளிகளின் ஆயுதமே அவர்களுக்கு எதிராக திரும்பியது எப்படி? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 14 மே 2025, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2019-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கசிந்த வீடியோக்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 9 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்ட உதவிய வீடியோக்கள்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக மாறி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்ததாகச் சொல்கிறார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன். சிபிஐ திரட்டிய ஆதாரங்களை வைத்து வாதாடி குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் சுரேந்திரமோகன். இவ்வழக்கில் சிபிஐக்கு மிகவும் உறுதுணையாக தமிழக காவல்துறையின் பெண் அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர். காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டி, குற்றங்களை நிரூபிப்பதற்கு பேருதவியாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன். படக்குறிப்பு,சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன். சிபிஐ சந்தித்த சவால்களும், வழக்கில் உதவிய வீடியோவும்! முதலில் தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு, அதன்பின் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட, 2 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குள் பாலியல் துன்புறுத்தல் வீடியோ ஆதாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை மீட்டெடுத்ததால்தான் வழக்கில் வெற்றி பெற முடிந்ததாகவும் சிபிஐ தரப்பு கூறுகிறது. ''திருநாவுக்கரசின் ஐஃபோனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. உள்ளூர் போலீசார் கைப்பற்றிய அதை சிபிசிஐடி போலீசார், மண்டல தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு (RFSL) அனுப்பி வைத்திருந்தனர். சிபிஐ வழக்கை எடுத்தபின்பே அந்த முடிவுகள் வந்தன. ஆய்வக அதிகாரிகளே அதை மீட்டுக் கொடுத்தனர். அந்த ஐஃபோன்தான் இந்த வழக்கின் இதயமாக இருந்தது என்று சொல்லலாம்.'' என்கிறார் சுரேந்திரமோகன். டிரம்ப் அறிவிப்பால் மகிழும் பாகிஸ்தான் - பொறியில் சிக்குவாரா மோதி? இந்தியாவை ஆதரிக்க ரஷ்யா தயங்கியது ஏன்? பாகிஸ்தானுடன் புதிய உறவு மலர்கிறதா? தனித்தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் - நெப்போலியன் என்ன செய்தார்? இந்தியாவின் 'பிரம்மாஸ்திரமான' பிரம்மோஸ் ஏவுகணைகள் : தற்போது விவாதிக்கப்படுவது ஏன்? End of அதிகம் படிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதே கடினமாக இருந்த போது, அந்த வீடியோதான் அதற்கும் உதவியதாகத் தெரிவிக்கிறார் அவர். வீடியோவை வைத்து பெண்களை அடையாளம் கண்டு விட்டாலும் யாருமே பேச முன்வரவில்லை என்று கூறுகிறார் வழக்கில் சிபிஐக்காக பிரதான விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள். ''வழக்கு பதியப்பட்ட போது புகார் கொடுத்த பெண்ணின் பெயரை காவல்துறை அதிகாரி வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அதே நேரத்தில் சில வீடியோக்களும் வெளியில் பரவிவிட்டன. அதனால் பெண்கள் யாருமே புகார் கொடுக்க முன் வரவில்லை. அவர்களை அடையாளம் காண்பதும், அதற்குப் பின் அவர்களை அணுகுவதும், அவர்களைப் பேச வைப்பதும் பெரும் சவாலாக இருந்தது.'' என்கிறார் சுரேந்திரமோகன். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT வழக்கு தாமதமானதற்கு காரணங்கள் என்ன? கடந்த 2019 ஆம் ஆண்டில் இதற்கான புகார் பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மே 24 ஆம் தேதி, வழக்கில் முதலில் கைதான சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துவிட்டது. அதற்குப் பின் இதே வழக்கில் கைதான அருள் ஆனந்தம், ஹேரோன்பால் மற்றும் பாபு ஆகியோர் மீது, 2021 பிப்ரவரி 22-ஆம் தேதியும், இறுதியாக கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது 2021 ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ''வழக்கை சிபிஐ எடுத்தபின், 2 ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்றுக் காலம் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திப்பதும், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதும் பெரும் கஷ்டமாக இருந்தது. சிலருடைய வீடியோக்கள் வெளியாகிவிட்டதால், நமது வீடியோவும் வந்து விடுமோ என்று பலரும் பேசவே பயந்தனர். இதற்காக ரகசிய அணியாக நாங்கள் களம் இறங்கினோம். பெற்றோர், பக்கத்துவீட்டார் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்களை சந்தித்து பேசினோம்.'' என்கிறார் பச்சையம்மாள். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் வழங்கிய பின்பே, அவர்கள் தங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, துணிச்சலாக வாக்குமூலம் கொடுக்க முன் வந்ததாகக் கூறுகிறார் அவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்தித்துப் பேசியதாகக் கூறிய சிபிஐ போலீசார், பாதிக்கப்பட்டவர்களில் 10க்கும் குறைவானவர்களே வாக்குமூலம் தர முன் வந்ததாகத் தெரிவித்தனர். படக்குறிப்பு,காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் நுாற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தது உண்மையா? பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வெளியில் வந்தபோது, நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருந்ததாகவும் தகவல்கள் பரவியிருந்தன. திருநாவுக்கரசின் ஐஃபோன் மற்றும் சபரிராஜனின் லேப் டாப் இரண்டிலும் நிறைய வீடியோக்கள் இருந்ததை ஒப்புக் கொள்ளும் சிபிஐ தரப்பு, இரண்டிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி வீடியோக்கள் இருந்ததாகவும், சில வீடியோக்கள் மட்டும் லேப் டாப் மற்றும் ஐஃபோனில் வெவ்வேறானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ''நிறைய வீடியோக்கள் இருந்தன. அவற்றில் பல வீடியோக்கள், பணத்துக்காக வந்தவர்கள் மற்றும் விருப்பத்துடன் வந்தவர்களிடம் எடுக்கப்பட்டவை. அவற்றையெல்லாம் கழித்துவிட்டு, உண்மையிலேயே இவர்களால் மிரட்டப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களை மட்டும் கண்டறிந்து, அவர்களிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டது.'' என்கிறார். இவையிரண்டும் இல்லாமலிருந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வழியில்லாமல் போயிருக்கும் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். மின்னணு தடயங்கள்தான் (Electronic Evidence) பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவியதுடன், பிரதான சாட்சியாகவும் இருந்து வழக்கில் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் அனைத்தும் ஒரிஜினல் என்பதையும், தொழில்நுட்பரீதியாக எதுவும் மாற்றப்படவில்லை என்பதையும் ஆய்வகம் மூலமாக உறுதி செய்த பின்பே விசாரணையில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் சுரேந்திர மோகன். படக்குறிப்பு,பொள்ளாச்சி வழக்கை கையாண்ட சிபிஐ வழக்கறிஞர்களும் அதிகாரிகளும். வழக்கில் குற்றத்தை நிரூபிக்க உதவிய முக்கிய சாட்சிகள்! இந்த வழக்கில் மொத்தம் 160 சாட்சிகளை விசாரித்ததாக பிபிசி தமிழிடம் சிபிஐ போலீசார் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், தடயவியல் ஆய்வக அதிகாரிகள், தகவல் பரிமாற்றம் குறித்த சிடிஆர் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள், தமிழக காவல்துறை, சிபிசிஐடி மற்றும் சிபிஐ ஆகிய முகமைகளைச் சேர்ந்த 5 விசாரணை அதிகாரிகளை சிபிஐ தரப்பு சாட்சியாகச் சேர்த்து விசாரித்துள்ளது. ''மொத்தம் 500 ஆவணங்களை சிபிஐ சேகரித்தது. பெண்களை கடத்திச் சென்ற கார்கள், செல்போன்கள், லேப் டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட 50 பொருட்கள் சாட்சிகளாகக் காண்பிக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் யாரும் விசாரிக்கப்படவில்லை. அந்த பெண்களில் பலருடைய பெற்றோருக்கு இந்த விஷயம் இப்போது வரை தெரியாது.'' என்கிறார் சிபிஐ வழக்கறிஞர். பாலியல் வன்கொடுமை நடந்த பண்ணை வீடு! பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள், சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில்தான் நடந்துள்ளதாக சிபிஐ கண்டறிந்துள்ளது. அது கிராமம் என்பதால் யாருமே அந்தப் பக்கம் வருவதில்லை என்றும், அங்கே சிசிடிவி எதுவுமில்லை என்றும் சிபிஐ போலீசார் தெரிவித்தனர். இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை நடந்துள்ளதாகக் கூறும் சிபிஐ போலீசார், ஆனால் முதல் புகாரே 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் பதிவானதால் அதற்குள் சிசிடிவி காட்சிகள் தானாக அழிந்திருக்க வாய்ப்புள்ளதால் அவை வழக்கில் சாட்சியாக உதவவில்லை என்றனர். ''பல பெண்களை நட்பு ரீதியாகவும், காதலிப்பது போன்றும் ஏமாற்றியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அம்மா பார்க்க வேண்டுமென்கிறார், என் சகோதரி உன்னை வீட்டிற்கு அழைக்கிறார் என்று சொல்லியே அந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே வைத்து அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் சுரேந்திரமோகன். போக்சோ வழக்கு பதியப்படாததற்கான காரணம்! வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்குட்பட்ட எந்தச் சிறுமியும் இல்லாத காரணத்தால்தான் குற்றவாளிகள் யார் மீதும் போக்சோ வழக்கு பதியப்படவில்லை என்று சிபிஐ போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் வேறு விதமான ஒரு சவாலையும் சிபிஐ எதிர் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர், பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிப்பது தவறு என்றும், அதற்கெனவுள்ள தனி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்தரப்பில் ஒரு வாதம் வைக்கப்பட்டது. பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு பாதிப்பு என்பதால், டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரிதான் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரி விசாரிப்பதும் தவறு என்றும் எதிர் தரப்பு வாதிட்டுள்ளது. அதை முறியடித்தது பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ''மணிப்பூர், வாச்சாத்தி போன்று இங்கு குறிப்பிட்ட ஓர் இனம் அல்லது சமுதாயம் குறி வைக்கப்படவில்லை. சாதிய அடிப்படையில் யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, குற்றவாளிகளிலும் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருப்பதை எடுத்துக் கூறி அந்த வாதத்தை உடைத்தோம்.'' என்றார். தீர்ப்பில் 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை என்றாலும், சிலருக்கு ஓர் ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3, 4 மற்றும் 5 ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது எப்படி என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சுரேந்திரமோகன். ''ஒவ்வொரு குற்றவாளியாலும் எத்தனை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர் என்பதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒன்று முதல் 5 வரையிலான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு ஆயுள் தண்டனை பெற்றவர், விரைவில் விடுதலையாகிவிடுவார் என்று அர்த்தமில்லை. அனைவருக்குமே சாகும் வரை சிறைத்தண்டனை என்பதே இந்த தீர்ப்பு. '' என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த அவர், ''கடந்த 2013 நிர்பயா வழக்கிற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, ஆயுள் தண்டனை என்பது, ஒரு குற்றவாளியின் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பது என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்த பிரிவில் குறைந்தபட்ச தண்டனையே 20 ஆண்டுகளாக்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகள் அனைவர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், தண்டனைக் குறைப்பு (remission) என்ற பேச்சுக்கே இடமில்லை.'' என்றார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் பெண்களுக்கான இழப்பீட்டில் வேறுபாடு ஏன்? இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில், ஒருவருக்கு ரூ.25 லட்சம், இருவருக்கு தலா ரூ.15 லட்சம், இருவருக்கு தலா ரூ.10 லட்சம், ஒருவருக்கு ரூ.8 லட்சம், ஒருவருக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் 7 பேருக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். இந்த இழப்பீடு எப்படி நிர்ணயிக்கப்பட்டது, அதில் ஒருவருக்கு மட்டும் அதிகமாகவும், மற்றவர்களுக்கு குறைவாகவும் இருப்பது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. ''ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டு இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பெண் ஒரே நாளில் 9 பேராலும் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து அதைக் காண்பித்து மிரட்டி, ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. அவருக்கு நேர்ந்த கொடுமைக்கு இது ஈடாகாது.'' என்கிறார் சுரேந்திரமோகன். ''மரண தண்டனையை விட இதுவே சிறந்த தண்டனை!'' இந்த வழக்கு விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் துவங்கிய காலகட்டத்தில், குற்றவாளிகள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். அதேபோன்று மே 13-ஆம் தேதி காலையில் நீதிபதி நந்தினி தேவி, ''வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும்.'' என்று அறிவித்த போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதுபற்றி விளக்கிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திரமோகன், ''இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் மரணமடையவில்லை. அப்படியிருந்திருந்தால் அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் விட இதுபோன்று சாகும் வரை ஆயுள் தண்டனைதான் மிகச்சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y64ey2vnzo
  11. கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுரவின் நிர்வாகம் அமைந்துள்ளது - சஞ்ஜீவ எதிரிமான்ன 14 MAY, 2025 | 05:46 PM (இராஜதுரை ஹஷான்) தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத இலங்கையர்கள் கனடாவில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரம்டன் நகர மேயர் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. தமிழ் இனப்படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. கனடாவில் வாழும் விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நிர்வாகம் அமைந்துள்ளது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கனடாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு, கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். 2024.08.14ஆம் திகதியன்று கனடாவில் பிரம்டன் நகரில் பொதுப் பூங்காவில் இந்த நினைவுத் தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி இந்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கடும் அதிருப்தியை கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிப்படுத்தினார். அத்துடன் இலங்கையில் தமிழ் இன அழிப்பு படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் தேசிய நல்லிணக்க உறுதிப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இலங்கை சார்பில் அப்போதைய வெளிவிவகாரத்துறை அலி சப்ரி முறைப்பாடு அளித்திருந்தார். நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் உத்வேகமடைந்துள்ளார்கள். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கடனா சென்றிருந்த போது புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார். இந்த நினைவுத் தூபி திறப்பு விழாவில் கலந்துகொண்ட கனடாவின் பிரம்டன் நகர மேயர் பெற்றிக் ப்ரொய்லர் 'தமிழ் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத இலங்கையர்களை பிரம்டன் நகரம் அங்கீகரிக்காது, கனடாவும் அங்கீகரிக்காது. அவ்வாறானவர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்று மிகவும் பாரதூரமானது. தமிழ் இனப்படுகொலை என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றார். https://www.virakesari.lk/article/214740
  12. இன்று சலூனுக்கு சென்று வந்தேன். அங்கே கனடாவில் வசிக்கும் தம்பி ஒருவர் தந்தையின் மரணத்திற்கு வந்து கடமைகளைச் செய்துவிட்டு நாளை கீரிமலையில் தெர்ப்பைச் சூடு, சலூன் வைத்திருப்பவரோடு நல்ல நட்பு. அப்ப காதில விழுந்தது இங்க எழுத்தில போடுறன்! தாய், தந்தை இருவரும் 3 மாத இடைவெளியில் இறந்துவிட்டார்கள். இவருக்கு ஒரு அண்ணா பிரான்சில் இருந்து வந்து அவரும் பெற்றோருக்கான கடமைகளைச் செய்தவர். கொழும்பு, யாழில் வீடுகள், வங்கியில் நிலையான வைப்புகள், லொக்கரிலும் நகைகள் என்று தந்தையார் சேமித்து வைத்துள்ளார். அண்ணன் பேராசையில் நிற்கிறார். தந்தை உயிரோடு இருக்கையில் தம்பிக்கு உரியவற்றை எழுதி வைக்க கேட்க தம்பி இப்ப ஒன்றும் அவசரம் இல்லை என மறுத்துவிட்டார். இப்போது அண்ணனின் பேராசையால் பெரிய குழப்பத்தில் இருக்கிறார். கொழும்பு வீடு அண்ணனுக்கு, யாழில் உள்ள வீட்டிலும் பங்கு கேட்கிறாராம்!
  13. Published By: DIGITAL DESK 2 13 MAY, 2025 | 04:00 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் ஊழல், மோசடிகளுக்கு ஜப்பான் இரையாகியுள்ளது. முதலீட்டு வாய்ப்புக்களை ஆராயும் போது இலங்கை முக்கிய இடத்தில் காணப்படுகின்ற போதிலும், நியாயமான நம்பிக்கை மிக்க, வெளிப்படை தன்மையுடைய வர்த்தக சூழலை இங்கு அவதானிக்கக் கூடியதாக இல்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாடா தெரிவித்துள்ளார். எனவே முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு அதற்கு பொறுத்தமான ஊழல் அற்ற வெளிப்படை தன்மையுடனான வர்த்தக சூழலை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜப்பான் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். பாத்பைன்டர் அமைப்பினால் திங்கட்கிழமை (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வட்டமேசை கலந்துரையாடலொன்றிலேயே ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஊழல், மோசடிகளால் இலங்கை அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது. இவ்வாறான நிலைமைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் பொறுத்தமான வழிமுறைகளைப் பின்பற்றும் என்று நம்புகின்றோம். இலங்கையில் முதலீடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளின் போது சில ஜப்பான் நிறுவனங்கள் வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலஞ்சம் வழங்குதல், தரகுப்பணம் வழங்குதல் உள்ளிட்ட மோசடிகளுக்கு இடமளிக்கவில்லை. இதற்கு முன்னர் ஜப்பான் நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராயும் போது இலங்கைக்கு மிக முக்கிய இடம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் நியாயமான நம்பிக்கை மிக்க, வெளிப்படை தன்மையுடைய வர்த்தக சூழலை இலங்கையில் அவதானிக்கக் கூடியதாக இல்லை. ஜப்பான் நிறுவனங்கள் பலவும் இவை தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஊழலை ஒழிக்கும் இலக்குடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றமை மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறான ஊழல் ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்று நாம் நம்புகின்றோம். பல்வேறு வழிகளிலும் இலங்கையானது ஜப்பானுக்கு மிக முக்கியமான பங்காளியாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துடன் இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இனிவரும் காலங்களில் ஜப்பானின் முதலீட்டு திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பது குறித்து ஆராயப்படும். எனவே அதற்கு பொறுத்தமான சூழலை இலங்கையில் உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/214615
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 13 மே 2025, 02:46 GMT புதுப்பிக்கப்பட்டது 13 மே 2025, 02:50 GMT தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட இது குறைவாகும். இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 2.0 ஆக உள்ள நிலையில், பிஹார் மாநிலத்தில் உச்சபட்சமாக இந்த விகிதம் 3.0 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேசம் (2.7), மத்திய பிரதேசம் (2.6), ராஜஸ்தான் (2.4), ஜார்கண்ட் (2.3) என தேசிய சராசரிக்கும் கூடுதலாக கொண்டுள்ளன. தென் மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1க்கு குறைவாக உள்ளது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 1.4 ஆக குழந்தைப் பிறப்பு விகிதம் உள்ளது. இதுபோன்ற ஏற்றத்தாழ்வான நிலைமை புதிதாக உருவாகவில்லை என்றாலும், கடந்த கால தரவுகளுடன் ஒப்பு நோக்கினால் தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் மேலும் சரிந்திருக்கிறது. முன்னர் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வு NFHS -5 தரவுகள் படி தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.8 ஆக இருந்தது. தற்போது 0.3 புள்ளிகள் குறைந்துள்ளது. இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 1950-ம் ஆண்டில் 5.7 ஆக இருந்தது. தற்போது SRS 2021 தரவுகள் படி அது தற்போது 2.0 ஆக உள்ளது. ஒரு நாட்டில், நிலையான மக்கள் தொகையை பராமரிக்க இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். கேரள மாநிலம் இந்த நிலையை 1988 ஆம் ஆண்டில் எட்டியது. அதையே தமிழ்நாடு 1993 ஆம் ஆண்டிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 2000 ஆம் ஆண்டுகளிலும் எட்டின. குழந்தைப் பிறப்பு விகிதம் சரியும் போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் குறையும். அதே சமயம், மக்களின் நல்வாழ்வில் ஏற்படும் தாக்கம் சராசரி ஆயுளை அதிகரிக்கும். இந்த இரண்டு போக்குகளையுமே SRS 2021 தரவுகளில் பார்க்கலாம். அதன்படி, 0-14 வயது பிரிவில் மக்கள் தொகை மெல்ல குறைந்து வந்துள்ளது. 1971-ல் 41.2% ஆக இருந்தது 2021-ல் 24.8% ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பங்களிக்கும் 15-59 வயது பிரிவினரின் மக்கள் தொகை 54.4%லிருந்து 66.2% ஆக அதிகரித்துள்ளது. அதே போல, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 5.3% லிருந்து 5.9% ஆக உயர்ந்துள்ளது, அதே போல, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 6% லிருந்து 9% ஆக அதே காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மக்கள் தொகையை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட தென் மாநிலங்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. முதியவர்கள் அதிகம் இந்தியாவின் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை குறித்து, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம், 2023-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% பேர் 60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பர் என்று கூறுகிறது. 2046-ம் ஆண்டுக்குள் முதியவர்கள் 0-15 வயது பிரிவினரை விட அதிகமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நாட்டிலேயே அதிக முதியவர்கள் கொண்ட மாநிலங்கள் வரிசையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. கேரள மக்கள் தொகையில் 14.4% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இது 12.9% ஆக உள்ளது என்று SRS 2021 தரவுகள் கூறுகின்றன. பிஹாரில் மிகக் குறைவாக 6.9%, அசாமில் 7%, தில்லியில் 7.1% முதியோர் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம், தமிழ்நாடு இரண்டாவது இடம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானம், "முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, மக்கள் தொகை மாற்றத்தின் போக்கில் ஏற்படும் இயல்பான வேறுபாடுதான். முதியவர்களுக்கு தேவையான உடல்நலம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், முதியவர்கள் காப்பகம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டை பாதிக்காது என்று கருதுகிறேன்," என்று கூறினார். "ஏனென்றால், தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்தவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் திறன்மிக்கவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள். எனவே, வேலை செய்யும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அவர்களின் உற்பத்தித் திறன் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது. 1990களின் பிற்பகுதியில் மக்கள் தொகையின் பலன்களை நாம் (demographic dividend) அனுபவித்தோம். பணியாற்றும் வயதிலான மக்கள் தொகை அதிகரித்தது. இப்போது நாம் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம். வளர்ந்த நாடுகளை போல முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது" என்றார் அவர். படக்குறிப்பு,முதியவர்கள் மக்கள் தொகை அதிகரிப்பை ஒரு பிரச்னையாக பார்க்க வேண்டாம் என்கிறார் பேரசிரியர் ஜோதி சிவஞானம் முதியோர் விகிதம் மேலும் உயரும்! "கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து வருகிறது. எனவே, முதியவர்களின் பராமரிப்பு சுமை அரசுக்கு அதிகரிக்கும். அதே நேரம், உள்ளூரில் வேலை செய்வதற்கான இளைஞர்கள் குறைவாக இருப்பார்கள்" என்று கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக மக்கள் தொகை ஆய்வுகள் மையத்தின் தலைவர் டாக்டர் சத்யவான். அவர் மேலும் கூறும்போது, "ஒரு நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும் போது எழும் முக்கிய சவால் முதியவர்களை பராமரிப்பது. அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும். முதியவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் வேண்டும்." என்று கூறினார். இந்தியாவில் வயது முதிர்ந்தவர்கள் 40% ஏழைகளாக இருக்கின்றனர். இந்தியாவில் முதியோர் மக்கள் தொகையில் தென் மாநிலங்களுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி 2036-ம் ஆண்டுக்குள் மேலும் விரிவடையும் என்கிறது ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதியோர் நலன் சார்ந்த திட்டங்களையும், சேவைகளையும் வழங்க அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது? "ஒரு பிராந்தியத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது அந்த பகுதி பின் தங்கியிருப்பதன் அறிகுறியாகும். எனவே, இந்த பிரச்னையின் அரசியல் விளைவுகளை பார்க்க வேண்டும்" என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம். அவர் கூறும்போது, "படிப்பறிவு அதிகமாக உள்ள இடத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும். இந்த விகிதம் அதிகரிப்பது பின் தங்கிய நிலையின் ஒரு நேரடி அறிகுறியே" என்றார். கல்வியறிவு குறைந்திருப்பதாலேயே இது நடப்பதாக கூறினார், டாக்டர் சத்தியவான், அவர் கூறுகையில், "தென் மாநிலங்களில் கல்வியறிவு காரணமாக ஒரு குழந்தை அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்டனர். எண்ணிக்கையா? அல்லது தரமா? என்ற கேள்வியில் தென் மாநிலங்கள் தரத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. ஒரு குழந்தைக்கு தரமான சுகாதாரம், கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது. ஆனால், வட மாநிலங்கள் இன்னும் இந்த நிலைக்கு வரவில்லை" என்றார். மேலும் அதனால், "வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் தென் மாநிலங்களுக்கு குடும்பம் குடும்பமாக வருவதை காண முடிகிறது, வேலை செய்பவர்களாக மட்டுமல்ல, தொழில் தொடங்குபவர்களாகவும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். மற்ற தென் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நகரங்கள், சிறு நகரங்கள் அதிகமாக இருப்பதால் இடம்பெயர்ந்து வருபவர்கள் அதிகமாக உள்ளனர்" என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதியவர்கள் மக்கள் தொகை தொடர்ந்து அதிகமாக இருந்து வரும் நாடுகளில் ஒன்று ஜப்பான். உத்திகள் மாற வேண்டும் ! இதன் அரசியல் விளைவுகளை பற்றி பேசிய பேராசிரியர் ஜோதி சிவஞானம், மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி வெட்டப்படுவதாக கூறினார். அவர், "மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பெரும்பாலும் மக்கள் தொகை அடிப்படையிலும், தனி நபர் வருமானத்தின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் என்பதும் மக்கள் தொகை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எனவே, கிட்டத்தட்ட 45% நிதி மக்கள் தொகையை கொண்டு வழங்கப்படுகிறது. உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிட்டால், குறைந்த மக்கள் தொகை இருந்தாலும் அதிக உற்பத்தி கொண்டதாக தமிழ்நாடு இருக்கும், ஆனால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை" என்கிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா, "நாம் ஒரு சமூகமாக செயல்பட முடியுமா, இல்லையா என்ற விளிம்பில் இருக்கிறோம்" என்று குறைந்து வரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கும் முதியவர்களின் மக்கள் தொகையையும் குறிப்பிட்டு 2023-ம் ஆண்டில் பேசியிருந்தார். அந்நாட்டின் தேசிய தரவுகள் படி ஜப்பானின் மக்கள் தொகையில் 29.1% பேர் 65வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். அதே போன்று, இத்தாலியில் 24.5% ஆகவும், பின்லாந்தில் 23.6% ஆகவும், இந்த வயதினரின் மக்கள் தொகை இருந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்ரி பி.குலூஜ், "ஐரோப்பாவின் மக்கள் தொகை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. குறைந்து வரும் பிறப்பு விகிதம், நகரமயமாக்கல், இடப்பெயர்வு ஆகியவை நமது சுகாதாரம், பராமரிப்பு, சமத்துவம் குறித்த அணுகுமுறையை மறுவடிவமைத்து வருகிறது. இதனை அச்சப்பட வேண்டிய பிரச்னையாக பார்க்க வேண்டாம், மாறாக ஆதாரத்தின் அடிப்படையிலான உத்திகளை வகுத்தெடுப்போம்" என்று பேசியிருந்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg71gnxvzl9o
  15. 13 MAY, 2025 | 05:36 PM (எம்.நியூட்டன்) நூலகம் ஒன்று எவ்வளவு தூரத்துக்கு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் - சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட 'மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்' செவ்வாய்க்கிழமை (13) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ந.வில்லியம் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் சிறப்பு விருந்தினராகவும், தீவக வலய கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரன் விருந்தினராகவும் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது, இந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் கட்டுமானங்கள் எல்லாம் சீர்குலைந்துபோனது. இடப்பெயர்வுடன் பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள் இன்று எமது கிராமமும், சமூகமும் முன்னேற வேண்டும் என்பதற்காக இத்தகைய அளப்பெரிய உதவியைச் ggசெய்திருக்கின்றார்கள். நான் எல்லா இடங்களிலும் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறிவருகின்றேன். தலைமைத்துவம் எங்கு சரியாக இருக்கின்றதோ அந்த நிறுவனம் உயர்வை நோக்கிச் செல்லும். இது அரசாங்க நிறுவனத்துக்கு மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். சில பாடசாலைகளின் அதிபர்கள் கணக்குகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையையுடன் நடந்துகொள்வதில்லை. அவ்வாறான அதிபர்களின் தலைமைத்துவக் குறைபாட்டால் அந்தப் பாடசாலைக்கு உதவிகளைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதனால் பாடசாலை பௌதீக ரீதியிலோ எந்தவொரு வகையிலுமோ வளர்ச்சியடைய முடியாத நிலைமை இருக்கின்றது. ஆனால் உங்கள் பாடசாலையின் அதிபர் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர் சமூகம் பல உதவிகளைச் செய்திருக்கின்றது. இதைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற வேண்டும். பாடசாலைக்கான வகுப்பறையின் தேவை உள்ளிட்ட சில விடயங்களை அதிபர் கோரியிருந்தார். உங்களின் கல்வித் தரம் உயர்வதற்கு எங்களாலான முயற்சிகளைச் செய்வோம். அடுத்த ஆண்டிலாவது உங்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு நாம் நிச்சயம் முயற்சிப்போம் என்றார். https://www.virakesari.lk/article/214628
  16. பார்க்க பழுதடைந்தது போல தெரிகிறது! சில வேளை பாவிக்கக்கூடிய பழைய இயந்திரமாகவும் இருக்கலாம் அண்ணை.
  17. Published By: DIGITAL DESK 2 13 MAY, 2025 | 02:22 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு, தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்படாத பிரதேசமாகும். எனவே, இப்பகுதிக்கு மின் விநியோகம் மின்பிறப்பாக்கிகள் மூலமாகவே நடைமுறையில் இருக்கின்றது. இந்தநிலையில், கடந்த வாரம் முக்கிய மின்பிறப்பாக்கி ஒன்று திடீரென பழுதடைந்தது. இதன் காரணமாக நெடுந்தீவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. கடந்த 10ஆம் திகதி இரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக, நெடுந்தீவு வைத்தியசாலையில் டார்ச் லைட் உதவியுடன் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சந்திரசேகர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பவானந்தராஜா மற்றும் இளங்குமரன் ஆகியோரது தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்பிறப்பாக்கி விரைவில் நெடுந்தீவுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/214606
  18. 13 MAY, 2025 | 02:21 PM காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கண்ணீர் சிந்திய எத்தனையோ கண்கள் இன்று மூடி விட்டன. இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கு சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றது? என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (13) மதியம் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு தாய்மாரும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழினமும் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்ட அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தமும், சதையும் சிந்தப்பட்டு அந்த நாளை கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் நினைவு கூர்ந்து கஞ்சி காய்ச்சி வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த கஞ்சி 16 வருடங்களுக்கு முன் ஒரு பிடி அரிசி கூட கிடைக்காமல் இருந்த அரிசியை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பும் இல்லாமல் அங்கிருந்த அமைப்புகள் குறித்த கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர். அதில் சிலருக்குத்தான் இந்த கஞ்சி கிடைத்தது.வரிசையில் நின்று இந்த கஞ்சியை வாங்கி பசியை போக்குவோம் என்ற நேரத்தில் கூட கொடூர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது அந்த அரசாங்கத்தினால். கஞ்சிக்காக வரிசையில் நின்ற எத்தனையோ உறவுகள் கஞ்சி கிடைக்காமல் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.இன்று அதை மறக்கவும் முடியாது.மன்னிக்கவும் முடியாது. எம் இனத்திற்கு நடந்த கொடூரத்தை உலக நாடுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.இன்று வரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த கஞ்சியை நாம் வழங்குவதற்கு காரணம் தற்கால இளைய சமூகத்திற்கு 16 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தெரியாது. 16 வருட கால இடைவெளியில் நிறைய நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை எல்லாம் எம் சமுதாயத்தின் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இன்று வரையும் இரத்தமும் சதையும் சிந்திக் கொண்டே இருக்கிறது. அதனை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி ஒவ்வொரு இறந்த ஆத்மாக்காகவும் நினைவு கூற வேண்டும். அது தான் நாம் எம் இனத்திற்கு செய்கின்ற பரிகாரம். அதை தான் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாமும் நினைவு கூர்ந்து 16 வருடமாக அங்கே சென்று வந்து கஞ்சி காய்ச்சி நினைவு படுத்திக் கொண்டு வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு உள்ளங்களும் இன்று வீதியில் நின்று போராடிக் கொண்டு, எம் உறவுகள் மீண்டும் எம்மிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் காவல் நிற்கின்றோம். எம் கண்ணீர் என்று துடைக்கப் படுமோ தெரியாது. ஆனால் கண்ணீர் சிந்திய எத்தனையோ உறவுகளின் கண்கள் மூடி விட்டன.அந்த மூடிய கண்களுக்கு இந்த சர்வதேசம் என்ன பதில் சொல்லப் போகின்றதோ தெரியாது. இன்னும் எத்தனை கண்கள் மூடப் போகின்றதோ தெரியாது. இதற்கிடையில் வீதியில் நிற்கும் உறவுகளாகிய எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/214602
  19. இந்த படுகுழியில் விழுந்த பலியாடாகவும் இருக்கலாம் அண்ணை.
  20. டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவை சங்கடத்தில் தள்ளியுள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்த அமெரிக்காவின் செயல்பாடு இந்தியாவின் எதிர்வினை, அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னீஷ் குமார் பதவி, பிபிசி செய்தியாளர் 13 மே 2025, 06:04 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "பொது அறிவு மற்றும் சிறந்த புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியதற்கு வாழ்த்துகள்." இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சண்டை நிறுத்தம் குறித்து விவரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் இவை. மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு டிரம்ப் திடீரென சண்டை நிறுத்தத்தை அறிவித்த போது, அது பல வழிகளில் இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. டிரம்ப் இந்த அறிவிப்பை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். சண்டை நிறுத்தம் குறித்த முதல் தகவல் இந்தியாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அதிபரிடமிருந்து அந்த தகவல் வந்தது. அமெரிக்கா இந்த தகவலை மட்டும் வழங்காமல் பல விஷயங்களை தெரிவித்தது. அத்தகவல்கள் இந்திய வெளியுறவு கொள்கையிலிருந்து முரண்பட்டதாக உள்ளன. டிரம்ப் தன் சமூக ஊடக பதிவில், "இரவு முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. இதையடுத்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன." என தெரிவித்திருந்தார். காஷ்மீர் இருதரப்பு விவகாரம் என்பதும் எந்தவொரு மூன்றாவது நாட்டுடைய மத்தியஸ்தமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் இந்தியாவின் கொள்கையாக உள்ளது. எந்தவொரு இருதரப்பு விவகாரத்திலும் மூன்றாம் தரப்பு நாட்டின் மத்தியஸ்தத்தை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது. சீனாவுடனான எல்லை விவகாரத்திலும் இதே கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜூலை 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முறையாக பதவி வகித்த போது அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்வதாக கூறியிருந்தார். அப்போது இதை உடனடியாக இந்தியா நிராகரித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தாண்டு பிப்ரவரியில் பாரிஸில் நடைபெற்ற ஏ.ஐ. மாநாட்டில் மோதியும் வான்ஸும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாத இந்தியா அமெரிக்காவின் சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்த இந்தியாவின் எதிர்வினை, அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் எக்ஸ் தள பதிவிலிருந்து, இந்த அறிவிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும், அந்த அறிவிப்பு தொடர்பாக எல்லா விவகாரங்களையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் தெளிவாக தெரிந்தது. சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக, ஜெய்சங்கர் தன்னுடைய பதிவில் குறிப்பிடவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் தன் பதிவில், "ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா சமரசம் செய்துகொள்ளாது, இந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும்" என தெரிவித்திருந்தார். மார்கோ ரூபியோ இதை எக்ஸ் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார். ஆனால் இருவருடைய கருத்துகளிலும் தெளிவாக வித்தியாசம் இருந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாகவோ, நடுநிலையான இடத்தில் பிரச்னையை தீர்க்க பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றோ ஜெய்சங்கர் எங்கும் குறிப்பிடவில்லை. மறுபுறம் அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாகிஸ்தான், டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய முன்னாள் ராஜ்ஜிய அதிகாரி பார்த்தசாரதியிடம், சண்டை நிறுத்தத்தை அறிவித்து இந்தியாவை அமெரிக்கா சங்கடப்படுத்தியுள்ளதா என கேள்வி எழுப்பினோம். ஜி பார்த்தசாரதி கூறுகையில், "டிரம்பின் மொழியை அடிப்படையாக வைத்து விவாதித்தால், அது இந்தியாவுக்கு சங்கடம் தான். ஆனால், இதை வேறொரு விதமாக பார்க்க வேண்டும். டிரம்பின் மொழி மற்றும் உரையை வைத்து அவரை எடை போடக் கூடாது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். பாகிஸ்தானின் பஞ்சாபில் டிரம்பின் அனுமதி இல்லாமலா தாக்குதல் நடந்தது? டிரம்ப் அதற்கு அனுமதி அளித்தார் என்பது தெரிந்ததே. இந்தியா தன்னுடைய இலக்கை அடைந்துள்ளது, அதன் பிறகு யார் சண்டை நிறுத்தத்தை அறிவித்தால் என்ன? அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடும்?" என்றார். வெளியுறவு துறை முன்னாள் செயலாளரும் அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதருமான நிரூபமா மேனன் ராவ், இந்த முழு விவகாரத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே அளவுகோலில் வைத்திருக்க டிரம்ப் முயற்சிப்பதாக நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்காது என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது. 'ஒரே அளவுகோலில் இந்தியா-பாகிஸ்தான்' நிரூபமா ராவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "மே 10-ஆம் தேதி டிரம்ப் தன்னுடைய கருத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை ஒரே மாதிரி பாராட்டுவது, தெற்காசியாவின் புவிசார் அரசியலின் சிக்கலான தன்மையை தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை அமெரிக்கா ஒரே அளவுகோலில் வைக்கிறது. அதேசமயம், சீனாவை எதிர்ப்பதில் இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு மிகப்பெரிதாக உள்ளது." என தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் ஊடகங்களில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவே சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. பதற்றம் நிறைந்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதம் குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் கூட்டாளி என நான் நம்புகிறேன், தற்காலிகமாக நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த கூட்டுறவை பார்க்கக் கூடாது." என்றார். சிந்தனை மையமான அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் வெளியுறவு கொள்கை இயல் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி பண்ட்-ம் சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவித்த போது, இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை காட்டியதாக நம்புகிறார். அவர் கூறுகையில், "இந்தியா தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது, டிரம்பின் அறிவிப்பில் உள்ள குழப்பம் குறித்து பதில் அளித்துள்ளது. யாருடைய அழுத்தத்தின் கீழும் இந்தியா உள்ளதாக நான் கருதவில்லை. டிரம்பின் மொழியில் நிச்சயமாக பிரச்னை இருந்தது, ஆனால் அதுகுறித்து டிரம்புக்கு இதற்கு பின்னால் பெரிய சிந்தனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. டிரம்பின் மொழி இப்படித்தான் இருக்கும். மிகவும் ஒருசார்பாகத்தான் அவர் சில சமயங்களில் பேசுவார்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சௌதி அரேபியாவுக்கு மோதி சென்றிருந்த போது பஹல்காமில் தாக்குதல் நிகழ்ந்தது 'டிரம்பின் பேச்சை வைத்து எடை போடக் கூடாது' பேராசிரியர் பண்ட் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம், அதை இந்தியா கேட்கும் என்ற நிலை இப்போது இல்லை. அமெரிக்காவில் டிரம்பின் நிர்வாகம் உள்ளது என இந்தியாவுக்கு தெரியும், எனினும் பாகிஸ்தானின் பஞ்சாபை இந்தியா தாக்கியது. தன்னுடைய பேச்சின் வாயிலாக டிரம்ப் நிச்சயமாக அதிக சிக்கலை ஏற்படுத்தியுள்ளார், இதனால் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசை சூழந்து கொண்டு கேள்வி எழுப்பும். 24 மணிநேரத்தில் யுக்ரேன்-ரஷ்யா போரை நிறுத்துவதாக டிரம்ப் கூறினார், ஆனால் அதை அவரால் செய்ய முடியவில்லை. அமெரிக்கா வருவது இயல்பானதுதான், ஆனால் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை செய்ய வேண்டியிருந்தது. டிரம்ப் பாகிஸ்தானை சமாதானப்படுத்தினால், அதை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவுக்கு ஏன் சிக்கல் இருக்கும்?" என அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அப்படியான சூழலில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் இருந்தது. அதேசமயம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் வேண்டும், அதுதொடர்பாக அந்நாட்டுக்கும் அழுத்தம் இருந்திருக்கும். ஐ.எம்.எஃப் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு துருப்புச் சீட்டாக அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். இதனால், இரு நாடுகளுக்கிடையே ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப்-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வக்களிக்கவில்லை." என கூறினார். ஆனால், சமீப ஆண்டுகளாக உலகம் முழுவதும் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு நம்பகமான கூட்டாளியாக அமெரிக்காவை கருத முடியாது என்ற அச்சம் எழுந்தது. தாலிபன் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற பயம் நிலவிய சூழலில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தன் துருப்புகளை திரும்ப பெற்றுக்கொண்டது, இதையடுத்து அந்த பயம் உண்மை என நிரூபணமானது. பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருந்துள்ளது, ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் இருந்த போதிலும், இந்தியா மற்றும் அமெரிக்க உறவுக்கிடையே சந்தேகம் மற்றும் நம்பகமின்மை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnv1j0n27rqo
  21. 13 MAY, 2025 | 04:51 PM புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன. இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, "பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்கத் துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன்கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை திறப்போம், பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்" என கோஷமிட்டு, பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கேட்டு பதிவுசெய்வதற்கு பொலிஸார் முனைந்தனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது படங்களை வேண்டுமானால் எடுக்குமாறும், பெயர்களை கூற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியதுடன், “இது எமக்கு மாத்திரமல்ல, உங்களது வீட்டில் உள்ள பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சினை. எனவே, இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம்” எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதால் பொலிஸார் ஒரு கட்டத்தில் ஒதுங்கி நின்றனர். பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தை கூற அநுர அரசு பொலிஸாரை வைத்து அடக்குகிறது என்றால் ஏனைய விடயங்களுக்கான செயற்பாடுகளை இந்த அரசு எவ்வாறு முன்னெடுக்கும் என்றும் கூறி மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். https://www.virakesari.lk/article/214629
  22. களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 13 MAY, 2025 | 04:19 PM மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுளை நினைந்து வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று செவ்வாய்கிழமை (13 ) நடைபெற்றது. பி.ஜெபநேசனின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் முன்னால் வைத்து கஞ்சி காய்சி சிரட்டையில் மக்களுக்கு பகிரப்பட்டன. https://www.virakesari.lk/article/214626
  23. 13 MAY, 2025 | 04:19 PM வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று (13) அருட்தந்தை மா.சத்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஈழத் தமிழர்களின் அரசியல் எழுச்சியையும், அதன் தாகத்தையும், அதற்கான போராட்ட வலிமையையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்க சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய போர் தொடுத்து இறுதியில் இனப்படுகொலையை நிகழ்த்தி மனித பேரவலத்தை ஏற்படுத்தினாலும், வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும். எனினும், தமிழர் தேசத்தில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் அரசியல், தலைமைத்துவ போட்டிகள் காரணமாகவும் சுகபோக அரசியலுக்காகவும் கொள்கை தடம் மாறியவர்களாலும் அவர்களின் வழிகாட்டலில் இனப்படுகொலையாளர்களுக்கே வாக்களிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதன் குற்றப் பலியை தடம் மாறிய அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவங்களும் ஏற்றேயாக வேண்டும். இதன் காரணமாக தமிழ் இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் துணை நின்ற பிரதான சக்தி எமது மண்ணில் கோட்டை அமைத்து அதனை விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது. இதற்கு எம்மவர்களே துணை நிற்கும் அரசியல் சூழ்நிலை என் மண்ணில் தோன்றியிருப்பதை அவதானிக்கலாம். இது நாம் அனுபவித்த முள்ளிவாய்க்கால் அவலத்தை விட மிகப் பயங்கரமான அரசியல் அவலத்துக்கே வித்திடும் என்பதை இச்சந்தர்ப்பத்திலாவது அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவம் உணர வேண்டும். இல்லையேல், வரலாறு இவர்களை மன்னிக்காது. ஆதலால் தமிழர் தேசம் காக்க போராடியவர்கள் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்று அரசியல் செய்யும் கட்சிகள் தனது வரலாற்று தவறினை திருத்திக்கொள்ளவும் அதன் அடையாளமாகவும் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளில் எவ்வாறு கூட்டாக செயற்படப் போகிறோம் என்று தொடரில் பொது கூட்டு கொள்கை பிரகடனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இக்கூட்டுப் பிரகடனம் எம் தேசத்துக்கும், தேசியத்துக்கும் எதிராக எம் மண்ணில் சதி வலை விரிக்கும் அரசியல் சக்திக்கும் அவர்களின் அரசியல் துணை படையினருக்கும் எமது வலிமையை வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும். யுத்த காலத்தில் படையினரின் மூலம் எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசும் அதன் காவலர்களான ஆட்சியாளர்களும் தாம் உருவாக்கிய அதே கருத்தியல் கொண்ட பல்வேறு திணைக்களங்கள் ஊடாகவும் நேரடியாக விகாரைகளை கட்டியும் நிலங்களை கையகப்படுத்தியவர்கள், தற்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் வளம் மிகுந்த கரையோர பிரதேசங்களை கையகப்படுத்தி எம்மவர்களை நிலமற்றவர்களாக்கி வறுமைக்குள் தள்ளுவதற்கான வர்த்தமானி வெளியிட்டிருப்பது தற்போதைய ஆட்சியாளர்களின் உண்மை அரசியல் கோரமுகத்தினை அம்பலப்படுத்தியுள்ளது. இதனை கூட்டாக மக்கள் சக்தியோடு எதிர்த்து நிலம் காத்திட அவசர வேலைத்திட்டமும் வேண்டும். இதனை நோக்காகக் கொண்டும் செயற்படுவதற்கான முன்னோடி செயற்பாடாக அடிமட்ட மக்களைத் திரட்டிட நம்பிக்கையூட்டும் செயற்பாடாக உள்ளூராட்சி மன்றங்களின் இயக்கம் தொடர்பில் அரசியல் கொள்கையில் தடம் மாறாத நம்பிக்கை மிகு கொள்கை பிரகடனம் செய்திட கட்சித் தலைவர்கள் முன்வர வேண்டுமென அவசர வேண்டுகோளையும் இவ்வேளையில் விடுக்கின்றோம். மீண்டும் கூறுகின்றோம்... கூட்டு அரசியல் பிரகடனம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை தாம் சார்ந்த கட்சி வசப்படுத்துவதற்காவோ, கட்சி அரசியலை பலப்படுத்துவதற்காகவோ, தனிநபர் பிம்பத்தை ஏற்படுத்துவதற்காகவோ அமையக்கூடாது. தாயகம் மற்றும் தேசிய அரசியலை நோக்கிய மக்கள் அரசியலை மையப்படுத்தி, உள்ளூராட்சி சபைகள் மூலம் அபிவிருத்தியோடு மக்கள் அரசியலை முன்னெடுக்க அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவங்கள் தியாக உணர்வோடு விட்டுக் கொடுப்புகளோடு வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணமாக தமிழர் தேசியம் நோக்கு நிலையினின்று கூட்டுப் பொது பிரகடனம் செய்திட வேண்டும். அதுவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அங்கு ஏற்றும் சுடருக்கும் உயிர் கொடையானவர்களுக்கும் கௌரவமாகவும் வாக்களித்த மக்களுக்கும் தேசத்துக்கும் தேசியத்துக்கும் கவசமாக அமையும் என்பதையும் உறுதியுடன் கூறுகின்றோம் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/214625
  24. வெட்டுவதிலும் பார்க்க செயலற்றதாக்க வேண்டும் அண்ணை. சட்டத்திலேயே இது இடம்பெற வேண்டும்.
  25. யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு! 13 MAY, 2025 | 03:33 PM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று (13) பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/214619

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.