Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 9 பேரும் குற்றவாளிகள் - யாருக்கு என்ன தண்டனை? பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு முழு விவரம் பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவி, தண்டனை விவரத்தை நண்பகல் 12 மணிக்குப் பிறகு அறிவித்தார். அதன்படி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT தீர்ப்பின் முழு விவரம் தீர்ப்பின் விவரங்கள் குறித்து பேசிய அரசு வழக்கறிஞர் சுரேந்திரமோகன், "குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மற்ற பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என தனித்தனியாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது." என்றார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். "சிபிஐ முயற்சி வீண் போகவில்லை. நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். விசாரணையில் சேகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். குற்றவாளிகள் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பலமான சாட்சிகள் உள்ளன, மேல்முறையீடு சென்றாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும் என நான் நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார். "இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை. வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டன. விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேர் விசாரிக்கப்பட்டனர்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் யாருக்கு என்ன தண்டனை? முதல் குற்றவாளி சபரி ராஜனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம், 4 ஆயுள் தண்டனை. இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ரூ.30,500 அபராதம், 5 ஆயுள் தண்டனை. மூன்றாவது குற்றவாளி சதீஷூக்கு ரூ.18,500 அபராதம், 3 ஆயுள் தண்டனை. நான்காவது குற்றவாளி வசந்தகுமாருக்கு ரூ.13,500 அபராதம், 2 ஆயுள் தண்டனை ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம், 5 ஆயுள் தண்டனை ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு ரூ.10,500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை ஏழாவது குற்றவாளி ஹேரன்பாலுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம், 3 ஆயுள் தண்டனை எட்டாவது குற்றவாளி அருளானந்தத்துக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை ஒன்பதாவது குற்றவாளி அருண்குமாருக்கு ரூ.5500 அபராதம், ஒரு ஆயுள் தண்டனை 'நிச்சயம் மேல் முறையீடு செல்வோம்' தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட பின் பிபிசி தமிழிடம் பேசிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன், ''தீர்ப்பின் நகல் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை. சில திருத்தங்கள் செய்து கொண்டிருப்பதால் தீர்ப்பு நகல் கிடைத்து, அதைப் படித்துப் பார்த்த பின்பே, எங்களுடைய எந்தெந்த வாதங்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன என்பதை முழுமையாக அறிய முடியும். அரசு தரப்பு முன் வைத்த 76 குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பு பற்றித் தெரிந்த பின், 60 நாட்களில் மேல் முறையீடு செல்வதற்கு வாய்ப்புள்ளது. நாங்கள் கண்டிப்பாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.'' என்றார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேட்டி தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டம் தன் கடமையை செய்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என கூறினார். வழக்கின் பின்னணி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் வழக்கு கடந்து வந்த பாதை * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12 * முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். * திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார். * திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது. * வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது. * 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. * பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. * சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது. * இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். * இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. * வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. * பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன. * இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. * பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் * குற்றப்பத்திரிக்கைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. * பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. * இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo
  2. 12 MAY, 2025 | 11:18 PM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (12) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். பெரும்பான்மை பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை பலம் இருந்ததையும், அந்த பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவுடன் அரசாங்கம் அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விபரங்கள் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாயின் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. கடந்த காலங்களில் இதனை காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அரசாங்கம் நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது. மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/214550
  3. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் திரும்பி வருவார்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் தொடர் மே17 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு 12 மே 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட, நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாடு முழுவதும் 6 நகரங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் போட்டிகள் நடைபெறும் 6 நகரங்கள் எவை? ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் திரும்பி வருவார்களா? பிசிசிஐ அறிக்கை அரசு மற்றும் பாதுகாப்பு முகமைகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நடப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பிசிசிஐயின் அறிக்கை கூறுகிறது. எஞ்சிய 17 போட்டிகள் இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும், மே 17ம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூன் 3 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான கால அட்டவணை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாலிஃபயர்1 போட்டி - மே29ம் தேதி எலிமினேட்டர் போட்டி - மே 30ம் தேதி குவாலிஃபயர்2 போட்டி - ஜூன் 1ம் தேதி இறுதிப்போட்டி - ஜூன் 3ம் தேதி பிளேஆஃப் சுற்றுக்கான போட்டிகளின் மைதானங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க உதவிய, இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்திற்கு வணக்கம் தெரிவிப்பதாகவும், கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்துவதோடு, தேச நலனில் உறுதியோடு இருப்பதாகவும் பிசிசிஐ கௌரவ செயலாளர் தேவஜித் ஷைகியா பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடக்கும் 6 நகரங்கள் எவை? ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னௌ, ஆமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஜெய்ப்பூர் தவிர மற்ற அனைத்தும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ள அணிகளின் சொந்த மைதானங்களாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா? ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (ACA) தனது வீரர்களே அதுகுறித்து தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்குத் திரும்புவதா இல்லையா என்பது குறித்து வீரர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளை ஆதரிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது. ஐபில் முடிந்ததும், ஒரு வாரம் கழித்து ஜூன் 11-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட சாத்தியமான கேப்டன் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 4 ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடும் ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்) இங்கிலாந்து வீரர்கள் திரும்புவார்களா? ஐபிஎல் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனாலும், மற்ற வெளிநாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இந்தியாவிலேயே உள்ளனர். லீக்கில் முன்னிலை வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் வார இறுதி நாட்களில் பயிற்சியில் ஈடுபட்டனர். ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 இங்கிலாந்து வீரர்களில், 8 பேர் அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் (அதாவது இறுதிப்போட்டி வரையிலும்) முழுமையாக பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணைப்படி, ஐபிஎல் இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. அதேநேரத்தில், மே 29-ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று டி20 மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்புமாறு வீரர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்களா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஐபிஎல் ஒரு வாரம் ரத்தானதன் பின்னணி முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தால் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் குரூப் சுற்றின் 58வது போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த மே 8ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்ஷாலாவில் நடைபெற்றது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது. போட்டியின் நடுவே சைரன் ஒலிக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq85vw551pqo
  4. 13 MAY, 2025 | 08:02 AM நாட்டில் உள்ளூர் சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இவ்வாறு உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தாலும், அதனை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளாதாகவும் இதனால் உப்புக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட உப்பு எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் எனவும் அதன் பின்னர் உப்புக்கு தட்டுப்பாடு நிலவாதென்றும் அச் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இந்நிலையில், சந்தையில் உப்புக்கான விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் தெரிவிக்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கட்டி உப்பு பையொன்றின் விலை 450 ரூபா முதல் 500 ரூபா வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. உப்புக்கான விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் தங்களின் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், உப்பு விலை அதிகரிப்பு தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/214570
  5. Published By: VISHNU 13 MAY, 2025 | 02:09 AM யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/214566
  6. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது Published By: VISHNU 13 MAY, 2025 | 02:07 AM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆத்மா சாந்தி வழிபாட்டுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இவ் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/214565
  7. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார். இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார். வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் பின்னணி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் வழக்கு கடந்து வந்த பாதை * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12 * முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். * திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார். * திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது. * வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது. * 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. * பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. * சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது. * இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். * இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. * வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. * பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன. * இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. * பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் * குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. * பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. * இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 குற்றவாளிகள் யார்? சபரி ராஜன் திருநாவுக்கரசு சதீஷ் வசந்தகுமார் மணிவண்ணன் ஹெரன்பால் பாபு அருளானந்தம் அருண்குமார் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo
  8. இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு. கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா? கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள். முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும். இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. "ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். திகைத்து நின்றார் அவர். சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். "அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன். படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான். இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா? வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html
  9. மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் விடுதலை 12 MAY, 2025 | 03:58 PM வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திங்கட்கிழமை (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 388 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214537
  10. பட மூலாதாரம்,NARENDRA MODI/YOUTUBE 12 மே 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ''ஏப்ரல் 22ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது மிகவும் குரூரமான செயல். இது நமது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.'' என்றார் நரேந்திர மோதி. மேலும், ''இந்த சூழலில் ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்தோம். நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். மே 6 மற்றும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நம்முடைய மன உறுதியை நாட்டு மக்கள் பார்த்தனர். பயங்கரவாத முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தோம்.'' என்றார் நரேந்திர மோதி. ஆபரேஷன் சிந்தூர் - ஒரு வாய்ப்பு மேலும் தொடர்ந்த நரேந்திர மோதி, ''இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர்களை இந்தியா ஒரே அடியில் ஒழித்துவிட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், பாகிஸ்தான் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஒடிந்துவிட்டது. இதற்குப்பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு ஆதரவளிக்காமல், இந்தியாவின் கோவில், பள்ளிகள், பொதுமக்களின் குடியிருப்புகள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் டிரோன், ஏவுகணைகள் எப்படி இந்தியாவின் முன் தவிடுபொடியாகின என்பதை உலகமே பார்த்தது. பாகிஸ்தானின் தாக்குதல்களை வானத்திலேயே இந்தியா சுக்குநூறாக்கியது. இந்தியாவின் டிரோன், ஏவுகணைகள் துரிதமாக செயல்பட்டு, பாகிஸ்தானின் வான்படை தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட சேதத்தை அந்நாடு முடங்கிப்போனது.'' என்றார் அணு ஆயுத மோதலை நிறுத்தியிருக்கிறோம் - டிரம்ப் சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவுகள் வைத்துக்கொள்ளது என இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ''இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோசமான சண்டையை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து நிறுத்தியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் சக்தி வாய்ந்தவர்கள், அதே நேரத்தில் இந்த சூழ்நிலையையும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்'' என்றார் டிரம்ப், ''நாங்கள் அவர்களுக்கு உதவியுள்ளோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்வோம். இதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம், இல்லையென்றால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறினோம். இந்தநிலையில் சண்டையை நிறுத்துகிறோம் என அவர்கள் கூறினார்கள். '' என்றார் டிரம்ப் ''நிறையக் காரணங்களுக்காகச் சண்டையை நிறுத்தினார்கள். ஆனால் வர்த்தகம் முக்கிய காரணம்'' மேலும், ''நாங்கள் இந்தியா பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகத்தில் ஈடுபடப்போகிறோம். நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்.'' என்றார் டிரம்ப் ''இதுவொரு மோசமான அணு ஆயுத போராக மாறியிருக்கக்கூடும். நாங்கள் அந்த அணு ஆயுத மோதலை நிறுத்தியிருக்கிறோம்.'' பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ராணுவம் கூறியது என்ன? பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டதாக இந்திய ராணுவத்தின் சார்பாக இன்று (மே 12) பிற்பகல் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். இதில் பேசிய ஏர்மார்ஷல் ஏ. கே பார்தி, ''இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிரானது மட்டுமே, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரானது அல்ல. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்த நடவடிக்கையில் தலையிட்டது. எனவே அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு'' என்றார். ''ஆனால், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்காக தலையிட முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது. அதுவே எங்களை பதிலடி கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது.'' என்றார் ஏ. கே பார்தி. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பற்றி குறிப்பிட்ட ஏ. கே பார்தி, ''பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வாகனங்களையும் வீழ்த்துவதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்கு வகித்தன'' என்றார். ''பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் ஏவுகணை மற்றும் பிற ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டன '' ஷார்ட் வீடியோ Play video, "ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி,", கால அளவு 0,23 00:23 காணொளிக் குறிப்பு, அணு ஆயுத அமைப்புகள் மீது தாக்குதலா? "இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு அமைப்பான ஆகாஷின் திறன் சோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கை ஆதரவுகள் மூலமாகவே இது சாத்தியமானது" எனவும் பார்தி கூறினார். மேலும் இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் சீனத் தயாரிப்பான பிஎல்-15 ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக கூறிய ஏ.கே பார்தி, அந்த ஏவுகணையின் உடைந்த பாகங்கள் என கூறி புகைப்படங்களை காண்பித்தார். இந்தியா கிரானா ஹில்ஸ் பகுதியை தாக்கியதா என கேட்கப்பட்டபோது,'' கிரானா ஹில்ஸ் பகுதியில் சில அணு ஆயுத அமைப்புகள் இருப்பதாக கூறியதற்கு நன்றி. அது பற்றி எங்களுக்கு தெரியாது. அங்கு என்ன இருந்தாலும் சரி, நாங்கள் அந்த பகுதியை தாக்கவில்லை'' என்றார் ஏ. கே பார்தி. 'விமானத் தளங்களை குறிவைப்பது கடினம்' இந்த சந்திப்பின் போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், "இந்தியாவின் விமானப்படைத் தளங்களை குறிவைப்பது மிகக் கடினம். 1970களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை அடித்து நொறுக்கினார்கள். அப்போது ஆஸ்திரேலியா "சாம்பலோடு சாம்பல், தூசியோடு தூசி" என்று கூறியது. அதே போன்று இந்தியாவின் வான் பாதுகாப்பு அடுக்குகளை நீங்கள் பார்த்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். இந்திய பாதுகாப்பு தளங்களை நெருங்க முயன்றால், இந்த அடுக்குகளில் ஒன்று கண்டிப்பாக தாக்கும்" என்றார். 'பாகிஸ்தான் வான் படை தடுப்பு' வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேசும்போது, இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து, அச்சுறுத்தல்களை தடுத்தது என்றார். ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையின் கை ஓங்கியிருந்தது. கடற்படை போர் கப்பல்களின் நிலை நிறுத்தம் எதிரி அருகில் வருவதை தடுத்தது. இந்தியவின் கப்பல்கள், பாகிஸ்தான் வான் படை சுதந்திரமாக செயல்படுவதை தடுத்தது. அத்துடன் கடல் வழி அச்சுறுத்தல்களையும் குறைத்தது'' என்றார் ஏ.என்.பிரமோத் பாகிஸ்தான் கூறியது என்ன? பாகிஸ்தான் தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீப நாட்களாக நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும். பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தங்களது போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவித்தார். இருப்பினும், அந்த போர் விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை. சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தரை, வான் மற்றும் கடல் வழியிலான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்தன. ஒரே ஒரு பாகிஸ்தான் விமானம் மட்டுமே சிறிதளவு சேதமடைந்ததாக கூறிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அதைத் தவிர வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை. ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் 'போலி சமூக ஊடக தகவல்களை' அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,PTV படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்தார். ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பட மூலாதாரம்,ANI இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,"நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார் மேலும் அவர், ''இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார் ''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்'' என்று கூறினார் ஏ.கே.பார்தி. பட மூலாதாரம்,ANI 'கராச்சியை எந்நேரமும் தாக்க தயாராக இருந்தோம்' - இந்திய கடற்படை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்," இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது" என்றார். ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்," அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது'' என கூறினார். "தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்," என்று பிரமோத் தெரிவித்தார். கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், "இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்'' என்றார் தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார். - இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg747mpp4do
  11. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் விராட் கோலி Published By: DIGITAL DESK 2 12 MAY, 2025 | 12:25 PM இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெஸ்ட் ஓய்வு குறித்து தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள விராட் கோலி, “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுப்பது எளிதானது அல்ல, நான் என்னிடம் இருந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக கொடுத்துள்ளேன், இது நான் எதிர்பார்த்ததை விட எனக்கு அதிகமாக திருப்பித் தந்துள்ளது. நான் எப்போதும் என் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்’’ என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளார். விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களை அடித்தமை ஒரு இன்னிங்சில் அதிகபட்ச விராட் கோலியின் டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை ஆகும். https://www.virakesari.lk/article/214515
  12. Published By: VISHNU 12 MAY, 2025 | 07:17 PM 2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் 10.05.2025 அன்று நடத்தப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் பங்குபற்றியதான வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வட மாகாணத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1ஆம்இடம் முல்லைத்தீவு மாவட்டம் 4தங்கம் 1 வெள்ளி 3வெண்கலம் 2ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் 3ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம்,4வெள்ளி,4வெண்கலம் 4ஆவது மன்னார் மாவட்டம். 1தங்கம் 1வெண்கலம். பெண்கள் பிரிவில் 1ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம். 5தங்கம் ,4வெள்ளி 3வெண்கலம். 2ஆம் இடம் வவுனியா மாவட்டம். 1தங்கம் 1வெள்ளி 1வெண்கலம். 3ஆம் கிளிநொச்சி மாவட்டம். 3,வெண்கலம். முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண் வீர வீராங்கனைக்கான யூடோ பயிற்சியினை வரலாற்று ஆசிரியரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்யுத்த யூடோ பயிற்றுவிப்பாளரான P. ஜெயதர்சன் வழங்கியிருந்தார். https://www.virakesari.lk/article/214556
  13. அமெரிக்காவும் சீனாவும் வரியை குறைக்க இணக்கம் Published By: DIGITAL DESK 3 12 MAY, 2025 | 03:04 PM அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கொருவர் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை தற்காலிகமாகக் குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளும் 90 நாட்களுக்கு பரஸ்பர கட்டணங்களை 115 சதவீதம் குறைக்கும் என அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். சீன இறக்குமதிகள் மீது ட்ரம்ப் 145 சதவீத வரி விதித்திருந்தார். அதேநேரத்தில் சில அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரியை சீனா விதித்தது. இதனால், நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தின, மேலும் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சங்களையும் தூண்டின. சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகள் தற்போது 90 நாட்களுக்கு 30 சதவீதமாகவும், அதேவேளையில் அமெரிக்க இறக்குமதிகள் மீதான சீன வரிகள் 10 சதவீதம் ஆகக் குறைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/214527
  14. Published By: VISHNU 12 MAY, 2025 | 07:33 PM குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 10.05.2025 அன்று தமிழ் விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிசார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் குறித்த நிலங்கள் முழுவதும் தமிழ் மக்களின் நிலங்கள் எனக்குறிப்பிட்டுள்ள வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்லியல் பகுதிக்குள் குறித்த விவசாயிகளால் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால்கூட, அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடு செய்திருக்கவேண்டும்மெனவும், இது தொடர்பில் பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்வார்களானால் தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளது கூடாரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு இனவாதத்தைத் தூண்டுகின்றவகையில் செயற்படுகின்ற இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கெதாராக தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார். குருந்தூர்மலைப் பகுதியில் தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனமான இனவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் விவசாய நிலங்களில் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 10.05.2025 சனிக்கிழமையன்று மூன்று தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் 11.05.2025அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் விவசாயக்காணிகள் பூர்வீகமாக தமிழ்மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகளாகும். இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்களையிட்டு அபகரித்துவைத்துள்ளனர். குறித்த விவசாயநிலங்களில் கடந்த வருடம்கூட விவசாயிகளால் பயீற்செய்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந் நிலையில் இவ்வருடமும் குறித்த வயற்காணிகளில் விவசாயம் செய்யும்நோக்கில் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட விவசாயிகளே இவ்வாறு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந் நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச்சென்று இவ்வாறு கைதுசெய்யப்பட்ட விவசாயிகளைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியதுடன், எமது விவசாயிகளது சுதந்திரமான தொழில்செய்யும் உரிமை மறுக்கப்படுவதுதொடர்பில் எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தேன். பௌத்த பிக்குகளின் முறைப்பாட்டிற்கமையவே இவ்வாறு பொலிசாரால் எமது விவசாயிகள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். எமது தமிழ் மக்கள் காலங்காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்த தமிழ்மக்களது பூர்வீக விவசாய நிலங்களில் தொல்லியல் திணைக்களம் அத்துமீறியே எல்லைக்கற்களையிட்டுள்ளது. அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி இடப்பட்ட பகுதிக்குள் பண்படுத்தல் இடப்பட்டிருந்தால் அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடுசெய்திருக்கவேண்டும். ஆனால் அதுதொடர்பில் பௌத்த பிக்குகளே முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு பௌத்த பிக்குகள் முறைப்பாடுசெய்து பொலிசார் கைதுசெய்வதெனில், தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா எனக் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன். இங்கு தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளைப் பறித்ததோடு மாத்திரமின்றி, அக்காணிகளுக்குரிய தமிழ் மக்கள், வாழ்வாதாரத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றபோது பௌத்த பிக்குகளின் முறைப்பாட்டிற்கமைய பொலிசார் கைதுசெய்யப்படுகின்ற அவலமும் அரங்கேறுகின்றது. இந்தவிடயத்தில் உரியவர்கள் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும். இவ்வாறாக இனவாதத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளுக்கெதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும். ஏன்எனில் இனவாதத்தை எவரும் வெளிப்படுத்தக்கூடாது, அனைத்து இன மக்களையும் சேர்த்துக்கொண்டு பயணிப்போமென்று கூறிக்கொண்டு ஆட்சிசெய்துகொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனமெடுக்கவேண்டும். இவ்வாறாக்இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/214558
  15. Published By: DIGITAL DESK 3 12 MAY, 2025 | 04:21 PM நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது. நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று அறிவிப்பார். 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது. ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட்டு ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது. சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214538
  16. பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரணார்ட், கேட் ஸ்டீஃபன்ஸ் மற்றும் டோனி ஜாலிஃப் பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன. மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம். பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே பிரிட்டன் விஞ்ஞானி. 'தங்கத் துகள்களை விட மதிப்பு மிக்க பொருள் இது' என்கிறார் அவர். "சீனாவின் மாதிரிகளை உலகில் யாரும் நெருங்க முடியாது. அவை இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,MAHESH ANAND படக்குறிப்பு,இந்த மாதிரிகளைப் பெற்று வர சீனா வரை சென்றார் பேராசிரியர் மகேஷ் ஆனந்த் 'புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும்' லேசர் மூலம் இந்த துகள்களை ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் ஆனந்தின் குழு, நிலவு எப்படி உருவானது, பூமியின் ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தை ஒத்த அளவில் இருந்த கிரகம் ஒன்று பூமி மீது மோதிய பிறகு அதன் இடிபாடுகளில் இருந்து பிறந்ததுதான் நிலவு என்னும் விஞ்ஞானிகளின் கோட்பாட்டுக்கான ஆதாரம் இந்த தூசித் துகளின் உள்ளே கிடைக்கலாம். 2020இல் சீனாவின் சேங்'இ 5 (Chang'e 5) விண்வெளிப் பயணத்தின் மூலமாக, மான்ஸ் ரும்கெர் எரிமலைப் பகுதியில் இருந்து இந்தக் கற்களை சேகரித்து வந்திருக்கிறது சீனா. கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமான பொருளை ஒரு எந்திரக் கை மூலம் தோண்டி எடுத்து, பூமிக்கு ஒரு கலம் மூலமாக எடுத்து வந்தது சீனா. அந்த விண்கலம் மங்கோலியாவின் உட்பகுதியில் தரையிறங்கியது. 1976இல் சோவியத் விண்வெளிப் பயணங்களில் நிலவின் துகள் மாதிரிகள் கொண்டு வரப்பட்ட பிறகு சீனா 2020இல் எடுத்து வந்தது தான் அடுத்த மாதிரி. இந்தச் செயல்பாடு சீனாவை நவீன விண்வெளிப் பந்தயத்தில் முன்வரிசைக்கு உந்தியது. உலகம் முழுவதும் இருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் நீண்ட பாரம்பரியம், உலகம் முழுவதும் உள்ள 7 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மாதிரிகள் கிடைக்க வழி செய்திருக்கிறது. அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும். பட மூலாதாரம்,MAHESH ANAND படக்குறிப்பு,துகள்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் பெய்ஜிங்கில் சென்ற வாரம் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் ஆனந்துக்கு நிலவின் துகள் நிரம்பிய குப்பி வழங்கப்பட்டது. அங்கு அவர் தன்னைப் போலவே இந்தத் துகள்களைப் பெறுவதற்காக ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், ஐரோப்பாவிலிருந்து இருந்து வந்திருந்த சக விஞ்ஞானிகளைச் சந்தித்தார். "அது ஏதோ வேறு உலகம் போல இருந்தது - விண்வெளி திட்டங்களைப் பொருத்தவரை சீனா, பிரிட்டனைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது," என்றார் அவர். தனக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பரிசை, தன்னுடைய கைப்பையிலேயே மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பிரிட்டன் வந்தார் அவர். மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது பரிசோதனைக் கூடத்திற்கு நாம் சென்றதும் அங்கிருக்கும் காலணிகளை நன்றாகத் துடைத்து பிளாஸ்டிக் கையுறைகள், மேலுடைகள், தலையை மூடும் வலைகள் எனப் பலவற்றைப் போட்டுக் கொண்டோம். இந்த உயர் பாதுகாப்பு அறை மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. பூமிக்கு அப்பாற்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கும் இந்தத் துகள்களுடன் பூமியைச் சேர்ந்த பொருள் ஏதாவது கலந்தால், அது பேராசியர் ஆனந்த் குழு செய்யும் ஆய்வை நிரந்தரமாகக் சீர்குலைத்துவிடக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சந்திரன் நிலாவின் தூசி வரிசையாக வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களின் முன் நாங்கள் கீழே தரையில் அமர்ந்தோம். அவற்றில் ஒன்றைத் திறந்த பேராசிரியர் ஆனந்த் அதன் உள்ளே இருந்து ஸிப்லாக் பையை எடுத்தார். ஒரு நெக்லெஸ் வைக்கும் அளவிலான மூன்று பெட்டிகளை அதனுள் இருந்து எடுத்தார் அவர். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குப்பி இருந்தது. அவற்றுக்குள் கருஞ்சாம்பல் நிறத்தில் உள்ள துகள்களைக் காண முடிந்தது. அவை நிலாவின் துகள் மாதிரிகள் பார்ப்பதற்கு பெரிதாகத் தெரியாவிட்டாலும், அதன் விண்வெளிப் பயணத்தை நினைத்துப் பார்த்தால் நமக்கு பிரமிப்புதான் ஏற்படுகிறது. மொத்தமாக 60 மில்லிகிராமுக்கு மேல் தங்களுக்குத் தேவைப்படாது என்கிறார் அவர். "இங்கே சிறியதுதான் மிக அதிகமானது. எங்களது பல வருட ஆய்வுப் பணிகளுக்கு இது போதுமானது. நாங்கள் நுண்துகள்களில் வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,தொழில்நுட்ப வல்லுநர் கே நைட் கே நைட் என்பவர் மற்றொரு ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர் . இந்தக் குப்பிகள் திறக்கப்பட்டதும் நிலவின் துகள்களில் வேலை செய்யப்போகும் முதல் நபர் அவர்தான். அவர் கடந்த 36 வருடங்களாக பாறைகளை அறுத்து, துகள்களாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார். ஆனால் நிலாவின் மேற்பரப்பில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஒன்றில் அவர் வேலை செய்யப்போவது இதுதான் முதல் முறை. "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்ற அவர் ஒரு வைர பிளேடை வைத்து விண்கற்களை எப்படி அறுப்பார் என்று எங்களுக்கு செய்து காட்டினார். "ஆனால் எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது, காரணம் நம்மிடம் அதிக அளவிலான துகள்கள் இல்லை. திரும்பப் போய் எடுத்துவர முடியாது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்று கூறினார் அவர். இன்னும் இரண்டு ஆய்வுக்கூடங்களுக்கு அவை எடுத்துச் செல்லப்படும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,தான் சொந்தமாக தயாரித்த கருவியான Finesse உடன் ஷாஷா வெர்சோவ்ஸ்கி அப்படிப்பட்ட ஆய்வுக்கூடம் ஒன்றில் எண்ணற்ற குழாய்கள், வால்வுகள், வயர்களுடன் மிக நுணுக்கமான வலைப்பின்னலைக் கொண்டிருந்த ஒரு கருவியைக் கண்டோம். கிட்டத்தட்ட 1990களில் இருந்து இந்தக் கருவியை உருவாக்கி வருகிறார் தொழில்நுட்ப வல்லுநர் ஷாஷா வெர்சோவ்ஸ்கி. அதில் இருக்கும் ஒரு சிறிய சிலிண்டரை நம்மிடம் காட்டுகிறார். அதில் இந்தத் துகள்களை 1400 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க முடியும். இதில் இருந்து கார்பன், நைட்ரஜன் மற்றும் சில வாயுக்களை பிரித்தெடுக்க முடியும். இது மிகவும் தனித்தன்மை வாய்ந்த கருவி. தன்னுடைய ஆய்வகத்திற்கு இந்த அரிதான மாதிரிகள் கிடைக்க இந்தக் கருவியும் ஒரு காரணம் என்று நம்புகிறார் பேராசிரியர் ஆனந்த். பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,நிலாவின் துகள்களைப் பரிசோதனை செய்யப் பயன்படுத்தும் இன்குபேட்டர் போன்ற கருவி ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான ஜேம்ஸ் மாலி, இந்தத் துகள்களுக்குள் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் கருவியை இயக்கப் போகிறார். தான் செய்யப் போவதை நமக்கு பரிசோதனை ஓட்டமாகச் செய்து காட்டினார் அவர். "இந்த தட்டில் துகள்களை வைத்து அதில் லேசரைப் பாய்ச்சுவேன்," என்ற அவர், அந்தக் காட்சி கணினித் திரையில் பெரிதாவதைக் காட்டினார். "அது மெல்லமெல்ல ஒளிர ஆரம்பித்து பின்னர் உள்ளூர உருகத் தொடங்குவதைப் பார்க்கலாம்," என்றார் அவர். பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,சீனா எடுத்து வந்துள்ள நிலவின் துகள் மாதிரிகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் வழிவகுக்கும் என நம்புகிறார் இந்த ஆய்வை செய்வதற்கு இந்தக் குழுவிடம் ஒரு வருடம் இருக்கிறது. அது முடியும் சமயத்தில் அவர்களிடம் இருக்கும் மாதிரிகள் மொத்தமும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் சேங்'இ 5 திட்டத்திற்குப் பிறகு சீனா அதிக தூரம் சென்றுவிட்டது. 2024ஆம் வருடம் சேங்'இ 6 நிலவின் அடுத்த பக்கத்தில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்தது. நிலவில் முன்பு எரிமலைக் குழம்பு ஓடியதற்கான ஆதாரம் இந்த ஆழமான மர்மமான பகுதியில் கிடைக்கலாம். "சீனா மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இடையிலான நெடுநாள் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான ஆரம்பமாக இது இருக்கும்," என்று கூறுகிறார் பேராசிரியர் ஆனந்த். "அப்போலோ பயணங்களில் கொண்டு வரப்பட்ட நிலவின் துகள் மாதிரிகளில் இருந்துதான் எங்களில் பலர் தங்கள் தொழில்வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இது ஒரு அருமையான பாரம்பரியம். மற்ற நாடுகளும் இதே விஷயத்தைப் பின்பற்றும் என்று நம்புகிறேன்," என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c20npxldy49o
  17. 12 MAY, 2025 | 02:20 PM இத்தாலிய கப்பலான AIDAstella சொகுசு கப்பல் திங்கட்கிழமை (12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) இரவு அம்பாந்தோட்டையை வந்தடைந்த இந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 254 மீட்டர் நீளமுள்ள AIDAstella சொகுசு கப்பல் திங்கட்கிழமை (12) இரவு மாலைத்தீவை சென்றடையவுள்ளது. AIDAstella சொகுசு கப்பல் 2022 சுற்றுலா பயணிகளையும் 628 பணியாளர்களையும் கொண்டுள்ளது. இந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் திங்கட்கிழமை (12) இரவு கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர். https://www.virakesari.lk/article/214520
  18. 12 MAY, 2025 | 01:05 PM இறுதி யுத்தத்திலே கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய காலத்திலே தற்போதைய அரசும் கடந்த கால சூழ்நிலைகளை அவதானிக்கின்ற போது போரிலே இறந்த அனைவருக்குமான ஒரு பொது நினைவுத் தூபி ஒன்றை அமைக்க திட்டமிடுறார்கள். அதுவும் முள்ளிவாய்க்காலிலே நாங்கள் நிறுவ இருக்கின்ற தூபியும் வித்தியாசமானது. அது எங்களுடைய இன அழிப்பை இல்லாமல் போக செய்கின்ற ஒரு முயற்சியாக இருக்கிறது. இது நாங்கள் இனமாக அழிக்கப்பட்டோம் என்பதை உரத்து கூறுகின்ற ஒரு நிகழ்வாக இருக்கிறது. ஆகவே அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் செய்ய முனைந்தாலும் நாங்கள் எங்களுடைய உணர்வுகளின் அடி தளத்திலே இந்த இடத்திலே நிறுவுகின்ற நினைவுத்தூபி என்பது வருடாவருடம் காலாகாலமாக நாங்கள் அழிக்கப்பட்டோம் சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் தொகைவகையின்றி கொல்லப்பட்டோம் உரத்து கூறுகின்ற ஒரு விடயமாகவே நாங்கள் அதனை பார்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இன்றையநாளிலே கனடாவில் பிரண்டன் நகரில் பிரண்டன் மேஜருடைய ஒத்துழைப்பில் பிரமாண்டமான நினைவுத்தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட அந்த நிகழ்விலே நானும் பிரசன்னமாகி கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது. இன்றைய நாளில் அதனை நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த இடத்திலேயே அவர்களுக்கு இருக்கிற சுதந்திரம் நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கின்றது. எமது மண்ணிலும் அவ்வாறான ஒரு நினைவுத் தூவியை நாங்கள் அமைக்க வேண்டும். இந்த இடத்திலே அதற்குரிய பல்வேறு விடயங்களை நாங்கள் உருவாக்க வேண்டும். அதற்கு இந்த காணியை உரியவர்களிடமிருந்து பெற்று மிக விரைவிலே தொடர்கின்ற ஆண்டுகளிற்குள்ளே இந்த இடத்திலே அதனை நினைவு கூரக்கூடிய வகையில் இங்கே கொல்லப்பட்ட மக்கள் இந்த இடத்திலே இறுதி யுத்தத்திலே இறந்து போனவர்களை நாங்கள் நினைவு கூருகின்ற வகையில் அவர்களுடைய பெயர்களையும் தாங்கி வரக்கூடிய வகையில் சில நினைவு விடயங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஆகவே அதற்கான காலம் எமக்கு நெருங்கி வருகின்றது. அதனை தொடர்கின்ற நாட்களிலேயே நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். அதற்கு பலருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்கு நாங்கள் ஆரம்பிக்கின்ற போது அத்தனை சிவில் சமூகங்களோடும், மக்களோடும் அரசியல் சமூகங்களோடும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுடைய ஒத்துழைப்போடும் இங்கு வாழ்கின்ற மக்களுடைய ஒத்துழைப்போடும் நினைவு முற்றத்தை நிச்சயமாக நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதை இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/214517
  19. பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் பார்வையிட்டார் பிரதமர் Published By: DIGITAL DESK 3 12 MAY, 2025 | 11:52 AM கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பஸ் ஒன்று சுமார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், இது மிகவும் துன்பகரமான நிகழ்வு. இது போன்ற விடயங்களைத் தாங்கிகொள்வது மிகவும் கடினமானதாகும். சிறுவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்திருப்பது வேதனையானது. எமது நாட்டில் தினமும் ஏராளமான போக்குவரத்து விபத்துகள் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க எமது போக்குவரத்து அமைச்சர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நேரத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்துவருகின்ற எமது வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதுபோன்று தங்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நோயாளிகளை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்த அனைவரையும், அந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்த அனைவரையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். இதுதான் எமது நாட்டின் தனித்துவம். இந்த மனித பண்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த நேரத்தில், அரசாங்கம் முடியுமான அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதற்காக நாங்கள் தலையிடுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன். இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/214507 குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய்! Published By: DIGITAL DESK 3 12 MAY, 2025 | 12:39 PM நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய 45 வயதுடைய தாய் பின்னர் உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். இதனை அடுத்து தாயும் குழந்தையும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், 9 மாதங்களேயான குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மே மாதம் 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டப்பட்ட வேளையில் இந்த துயரச் சம்பவத்தின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமூக ஊடகங்களில் பேசுப்பொருளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214514
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் 12 மே 2025, 09:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை 10% ஆக குறைக்கும். சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் பரஸ்பரம் விதித்த வரிகளில் 115% வரியை புதன்கிழமை முதல் குறைக்கும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார். இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து தொடர்ந்து விவாதிக்க ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என்றும், அதற்கு அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீனாவின் துணை பிரதமர் ஹி லிஃபாங் தலைமை தாங்குவர் என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மற்றும் உலக பொருளாதாரத்துக்கும் முக்கியம் என்பதை உணர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கட்ட பதிலடிக்கு பிறகு உடன்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரம்ப் உலக நாடுகள் மீதான வரிகளை அதிகரித்தார் பல கட்ட பதிலடி வரி விதிப்புக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளன. தனது வர்த்தக போரின் மூலம் உலக பொருளாதாரத்தில் டிரம்ப் அதிர்வலைகளை ஏற்படுத்திய வேகத்தைக் கருத்தில் கொண்டால் இந்த 90 நாட்கள் என்பது நீண்ட காலமாகக் கருதப்படும் என்கிறார் பிபிசி வணிக செய்தியாளர் ஜோனாதன் ஜோசப்ஸ் கூறுகிறார். மேலும், ''கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதிலிருந்து அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றம் உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த உடன்பாடு, பதற்றத்தைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது'' என பிபிசி வணிக செய்தியாளர் ஜோனாதன் ஜோசப்ஸ் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg7wqgdq2xo
  21. பாகிஸ்தான் ராணுவம் தனது போர் விமானம் சேதமடைந்ததாக ஒப்புதல் - நேரலை தகவல்கள் பட மூலாதாரம்,PTV படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்தார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீப நாட்களாக நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும். பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தங்களது போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவித்தார். இருப்பினும், அந்த போர் விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை. சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தரை, வான் மற்றும் கடல் வழியிலான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்தன. ஒரே ஒரு பாகிஸ்தான் விமானம் மட்டுமே சிறிதளவு சேதமடைந்ததாக கூறிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அதைத் தவிர வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை. ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் 'போலி சமூக ஊடக தகவல்களை' அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பட மூலாதாரம்,ANI இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,"நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார் மேலும் அவர், ''இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார் ''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்'' என்று கூறினார் ஏ.கே.பார்தி. பட மூலாதாரம்,ANI 'கராச்சியை எந்நேரமும் தாக்க தயாராக இருந்தோம்' - இந்திய கடற்படை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்," இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது" என்றார். ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்," அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது'' என கூறினார். "தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்," என்று பிரமோத் தெரிவித்தார். கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், "இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்'' என்றார் தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார். - இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg747mpp4do
  22. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஜார்விஸின் முயற்சிகள் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினத்தை முறையாகக் கடைப்பிடிக்க வழிவகுத்தன. இது தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நாள் மனமார்ந்த நன்றியுணர்வின் அடையாளமாக கருதப்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் பூக்கள், கையால் செய்யப்பட்ட அட்டைகள் மற்றும் பரிசுகளை வழங்குகிறார்கள். அதே நேரத்தில் குடும்பங்கள் உணவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் நீடித்த நினைவுகளை உருவாக்கவும் ஒன்றுகூடுகின்றன. இந்தியாவில் அன்னையர் தினம் ஒப்பீட்டளவில் சமீபத்திய கலாச்சாரமாக இருந்தாலும், அது தலைமுறைகளாக அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த கொண்டாட்டம் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மட்டுமல்லாமல், பாட்டி, அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் வளர்ப்புப் பாத்திரத்தை வகிக்கும் எந்தவொரு பெண்ணையும் அங்கீகரிக்கிறது. https://tamil.newsbytesapp.com/news/lifestyle/mother-s-day-2025-on-may-11-history-significance-and-traditions/story
  23. வவுனியாவில் 7 சிறைக்கைதிகள் விடுதலை 12 MAY, 2025 | 11:24 AM வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், திங்கட்கிழமை (12) வவுனியா சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெசாக் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலும் சிறு குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் பி. டபிள்யு.எச். மதுசங்க தலைமையில் கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/214504
  24. சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்! Published By: DIGITAL DESK 3 12 MAY, 2025 | 10:16 AM சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214495
  25. 12 MAY, 2025 | 10:08 AM மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகைதரும் மாணவன் ஒருவர் 'பட்டப் பெயர்' கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்புவேளையில் அடித்துத் தாக்கியுள்ளார். இந்தநிலையில் மாணவனின் பெற்றோர் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது கைதுசெய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/214494

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.