Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 16 MAY, 2025 | 04:57 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான அமைச்சரவை அனுமதிக்கமைய நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவதானது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனிநபர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளைக் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இன்று (16) முதல் 14 நாட்களுக்குள் செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், எண். 1க்கு அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடித உறையின் இடது மூலையில் 'பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கான பரிந்துரைகள்' என குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைகள் அடங்கிய கடிதங்களை நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, இலக்கம் 19, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அல்லது legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/214907
  2. 16 MAY, 2025 | 09:24 PM ஜப்பான் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் மின்னணு நுழைவு வாயில் அமைப்பை உருவாக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (16) விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா, இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் துணைத் தூதுவர் கமோஷிடா நவோகி ஆகியோர் இந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மின்னணு நுழைவு வாயில் அமைப்பை உருவாக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை, திட்டத்தை விரைவுபடுத்த தேவையான நடவடிக்ககைகள், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/214927
  3. 16 MAY, 2025 | 04:24 PM ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள். காலங்காலமாக எங்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் கறைபடிந்த வரலாற்றின் நாளான குமுதினிப் படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தலில், வலிசுமந்த நெடுந்தீவு மண்ணிலிருந்து, கனேடியப் பிரதமருக்கும் பிரம்டன் நகர மேயருக்கும் எனது நன்றிகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, குமுதினிப் படகில், குருநகர் கடலில், கொக்கட்டிச்சோலையில், சத்துருக்கொண்டானில், வாகரையில், நவாலியில், நாகர்கோயிலில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை கொத்துக்கொத்தாக எங்களை கொன்றொழித்துவிட்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறவே இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், நாமல் ராஜபக்சவும், அலி சப்ரியும் தெரிவித்துள்ள கருத்துகள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கத்தக்க, சிங்கள வல்லாதிக்க வெளிப்பாட்டுக்குரியவை. அத்தகைய கருத்துகளை முன்வைத்தோர்க்கு எதிராக நான் எனது வன்மையான கண்டனங்களைப் பதிவுசெய்கிறேன். இத்தகைய இனவாதம் கொப்பளிக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான சர்வதேச சாட்சியமாக, பிரம்டனில் இனப்படுகொலை நினைவுத்தூபியை நிறுவிய கனேடிய பிரதமர் மாண்புமிகு மார்க் ஹனி, பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் ஆகியோரோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் எமது நன்றிகள் என்றார். https://www.virakesari.lk/article/214916
  4. குற்றவாளிகள் என தீர்பளிக்கப்பட்டவர்களுக்கு தான் என்றாலும் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டால்....
  5. Reverse osmosis (RO) is a water purification process that uses a semi-permeable membrane and pressure to separate water molecules from contaminants. It's essentially the reverse of natural osmosis, where water moves across a membrane from an area of lower solute concentration to an area of higher concentration. இங்கே பெருமளவு வடிகட்டிகள் இந்த தொழில்நுட்பத்தில் இயங்குபவை. RO WITH UV FILTER எமது கிராமத்தில் உள்ளது. இந்த வடிகட்டும் முறையில் உட்செலுத்தப்படும் நீரில் 1/3 நன்னீராகவும் 2/3 கழிவு நீராக வெளியேற்றப்படும் என தம்பி சொன்னவன்.
  6. அண்ணை, இனிமேல் அவ்வாறு செய்வது கடினம்(ஏற்கனவே இறுக்கிவிட்டார்கள்). தரமாக வீதிகள், கட்டடங்கள் அமைக்காவிடில் மக்களே இப்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 1954 அழைத்து முறையிடுகிறார்கள். அங்கு முறையிடப்பட்டால் வேலை இழக்கப்படும் அபாயமும் உள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு https://tamil.ciaboc.gov.lk/
  7. 16 MAY, 2025 | 03:44 PM புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில்உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போன்றது. பாகிஸ்தான் மீண்டும் மோசமான நடத்தைக்குத் திரும்பினால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும். நமது விமானப்படை பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் அடையும் திறன் கொண்டது என்பது சிறிய விஷயமல்ல. இது ஆபரேஷன் சிந்தூரின் போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை அதன் வீரம், தைரியம் மற்றும் மகிமையால் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில், நமது ஆயுதப்படைகள் எதிரிகளை ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல், அவர்களை அழிப்பதிலும் வெற்றி பெற்றன. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இரண்டாவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதியுதவியும் பயங்கரவாத நிதியுதவிக்குக் குறைவானது அல்ல. அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கிய 1 பில்லியன் டாலர் உதவியை IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா விரும்புகிறது. IMF-க்கு நாம் வழங்கும் நிதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதை இந்தியா விரும்பவில்லை" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/214909
  8. 1998 இல் அடுத்தடுத்து இரண்டு பயணிகள் விமானம் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட பின் இயக்கத்தினால் விமானங்களை சுட்டு விழுத்தக் கூடிய ஏவுகணைகளை வாங்க முடியாதிருந்ததாக சாத்திரி அண்ணை எழுதி இருந்ததாக நினைவுள்ளது.
  9. தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் 16 MAY, 2025 | 03:37 PM தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவுகூருவதற்காக நான் உரையாற்றுகின்றேன். இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர், உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள், தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம். இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும்கவனம் செலுத்தவேண்டும். அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும், தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும். மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும். நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம். https://www.virakesari.lk/article/214905
  10. நானும் சிறுவனாக இருக்கும்போது ஒரு சில பெரியவர்களின் புளுகு கதையை வியந்து கேட்டிருக்கிறேன்! முன்னேறிப் பாய்தலுக்கு எதிர்ச்சமரான புலிப்பாய்ச்சலின்போது காட்டில் ஆக்களையே சந்திக்காமல் உள்ள மூர்க்கமான சண்டை அணி ஒன்றை வைத்து தான் புலிப்பாய்ச்சல் செய்து உடனடி வெற்றி கிடைத்ததாக கொக்குவிலில் இடம்பெயர்ந்து இருக்கையில் ஒரு அண்ணை அள்ளிவிட்டார்! அங்கிருக்கையில் தவறுதலாக சக்கை பேரோசையுடன் வெடித்து அந்த பகுதியே அதிர்ந்ததை நேரில் உணர்ந்தேன்.
  11. Published By: DIGITAL DESK 2 16 MAY, 2025 | 03:04 PM இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து துறைகளிலும் இந்திய அரசாங்கம் அனைத்து வகையான ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கத் தயாராக உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகரான சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (15) மத்திய மாகாணத்திற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார். இவ் விஜயத்தின் போது, இரு வேறு நிகழ்வுகளின் மூலம் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான பல்வேறு உதவிகளை வழங்கினார். கண்டி பேராதெனிய இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், கல்லூரியின் கோரிக்கையின் பேரில் மாணவர்களுக்கு கணினிகள், இசைக்கருவிகள், நூலகத்துக்கு நூல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்தோடு, அன்று மாலை இந்திய உயர் ஸ்தானிகர் மத்திய மாகாணம் மாத்தளையில் உள்ள எல்கடுவ தோட்டத்தில் இந்திய வீட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டம் செயல்படுத்தப்படும் இடத்தை பார்வையிட்டார். அங்கு அவர் திட்ட பயனாளர்களுடன் சந்தித்து உரையாடியதையடுத்து தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மழைக்கவசங்களை வழங்கி வைத்தார். இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர் சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து துறைகளிலும் இந்திய அரசாங்கம் அனைத்து வகையான ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கத் தயாராக உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய வீட்டு திட்டம் தவிர, நடுத்தர தோட்ட பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், 9 நடுத்தர தோட்ட பாடசாலைகளுக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 2025 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, சீதை அம்மன் கோவிலின் அபிவிருத்திக்கு இந்தியா ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்ததையும் இதன் போது இந்தியத் தூதுவர் நினைவுபடுத்தினார். https://www.virakesari.lk/article/214894
  12. பையா கைத்துப்பாக்கியால் விமானத்தை சுட்டு விழுத்த முடியாது. அதனுடைய ஆகக்கூடிய சுடும் தூரம் 50யார் தான். விமான எதிர்ப்புத் துப்பாக்கி அல்லது ஏவுகணை மூலமாக வீழ்த்தப்பட்டிருக்கலாம்.
  13. 16 MAY, 2025 | 01:32 PM உலகின் பல நாடுகளை போல இலங்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால், பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், இதன் காரணமாக இஸ்ரேலில் வேலைபார்க்கும் பல இலங்கையர்கள் வேலையை இழக்கும் நிலையேற்படும். எங்களால் இதனை செய்ய முடியாது. உலகின் பல நாடுகளை போல நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம், ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணுவோம். பாலஸ்தீனிய விவகாரத்திற்காக இலங்கை இஸ்ரேலுடனான பொருளாதார இராஜதந்திர உறவினை துண்டித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாங்கள் சுதந்திர பாலஸ்தீன தேசம், சுதந்தி இஸ்ரேல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றோம், இரண்டையும் வேறுவேறு அரசாங்கங்களாக நாங்கள் கருதுகின்றோம், இலங்கை இஸ்ரேலுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணும். இலங்கை சுதந்திர பாலஸ்தீன தேசம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இஸ்ரேல் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொலை செய்வதை கண்டிக்கின்றது. https://www.virakesari.lk/article/214893
  14. யாழில் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் 16 MAY, 2025 | 12:35 PM இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (16) சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில், முன்னாள் போராளியான ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டா நிமிட அக் வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/214881
  15. கனகராசா சரவணன் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இமேஷ முத்துமால, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். ஏப்ரல் 8 ஆம் திகதி , தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து மட்டக்களப்பு பகுதியில் தன்னைக் கைது செய்ததாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையில் தூங்குவதற்குக் கூட தனக்கு போதுமான வசதிகள் இல்லை எனவும் சட்டத்தரணிகளை சந்திக்க போதுமான வாய்ப்பு தனக்கு இல்லை எனவும் இந்த முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் தனது அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறை தன்னைக் கைது செய்து தடுத்து வைத்தது தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், தன்னைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்கும் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரினார். அதேவேளை தனது சட்டத்தரணிகளை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும் பிள்ளையான் தனது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318055
  16. ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்புத்தான் நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம் என்கிறார் பிரம்டன் நகர முதல்வர் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தநிலையில் நாமல் ராஜபக்சவின் எக்ஸ் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ள பெட்ரிக் பிரவுன், தமிழின் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு, சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும். ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றைக் கைவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்குப் பதிலாக இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது என்றும் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318052
  17. பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் - பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவிய எடுத்துக்காட்டாக பிரகாசிக்கும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 16 MAY, 2025 | 12:06 PM பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவியற்ற உலகலாவிய எடுத்துக்காட்டாக பிரகாசிக்கும் என குறிப்பிட்டுள்ளார். நக்பாவின் 77 வருடத்தை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எங்களின் மொபைல் சாதனங்களிற்குள் 24 மணிநேரமும் ஏழு நாட்களும் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்ட முதலாவது இனப்படுகொலையாக விளங்குகின்ற போதிலும், இந்த படுகொலை 19 மாதங்களாக இடைநிறுத்தப்படாமல் தொடர்கின்றது. இது நாங்கள் வாழும் காலத்தை பற்றியும் உலக ஒழுங்கிற்கும் அடிப்படையானவை என தெரிவிக்கப்படும் விதிமுறைகள் பற்றியும் என்ன சொல்கின்றது? காசாவில் தற்போது நடைபெறும் அட்டுழியங்களின் அளவை அறிந்துகொள்வதற்கும் அறியாமல் இருப்பதற்குமான வித்தியாசம் இதுதான். கண்முன்னால் இடம்பெறும் இனப்படுகொலையின் தீவிர ஆதரவாளர்களாகயிருப்பதா அல்லது படுகொலையின் பார்வையாளர்களாகயிருப்பதா என்பதே எம்முன்னால் உள்ள தெரிவு. நம்பகதன்மை மிக்க புகழ்பெற்ற லான்செட் போன்ற தரப்புகள் தெரிவிப்பதை விட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு மடங்காகயிருக்கலாம். கொல்லப்பட்டவர்களில் 18000 சிறுவர்களும், 200 பத்திரிகையாளர்களும் 400 நிவாரணபணியாளர்களும் 150 கல்விமான்களும் 1300 சுகாதார பணியாளர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. காசாவிலும் மேற்குகரையிலும் உட்கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது, பாலஸ்தீனியர்களின் கூட்டு தேசிய வாழ்க்கையின் அத்தியாவசிய அடித்தளத்தின் மீது திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தாக்குதலின் விளைவாகும். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு வாரமும் நீதி கோரியும் இந்த இரத்தகளறிக்கு முற்றுப்புள்ளிவைக்குமாறு கோரியும் வீதிகளில் இறங்கிவருகின்ற போதிலும் உலகம் அதிகார அச்சில் சுழன்றுகொண்டேயிருக்கின்றது. ஆனால் இந்தக் குற்றவியல் தாக்குதல் முடிந்தவுடன் உலகம் மீண்டும் அதே நிலையில் இருக்குமா என்பதுதான் கேள்வியாகவுள்ளது. காசாவுக்குப் பிறகு விதிகளை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் சாசனம் முதல் உலக ஒழுங்கு வரை பொதுவான மனிதகுலத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்வதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது என்பதும் கேள்வியாகவே உள்ளது. உலகின் வேறு பல இடங்களில் செய்தது போல, மன உறுதி வாய்ந்த பாலஸ்தீனிய மக்களை மிக இலகுவாக அகற்றக்கூடிய மனித தூசிகளாகவும் இடிபாடுகளாகவும் மாற்றியுள்ள சக்திவாய்ந்த நபர்களின், குற்றவியல் மதிப்பீடுகள், புவிசார் அரசியல் தந்திரோபாயங்களிற்கு நாங்கள் எப்போது முற்றுப்புள்ளிவைப்போம்? செயலற்ற ஏற்றுக்கொள்ளலுக்கும், ஆன்மா இல்லாத மௌனத்திற்கும் நம்மை உட்படுத்திக்கொள்ளுமாறு திணிக்கப்படும் அழுத்தத்தை எதிர்ப்பதற்காக நாங்கள் இந்த கேள்விகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டேயிருப்போம். இருப்பினும் உலகமே பார்த்திருக்க இந்த எல்லையற்ற கொடுமைகளை அனுபவித்து தனது மண்ணிலே பசியிலும் குண்டுவீச்சுக்களிலும் உயிரிழப்புக்களிலும் கண்ணீருடன் வாழ்ந்து வலிமையுடன் வாழும் பலஸ்தீன மக்களின் உறுதியான நிலைப்பாடு நியாயம் சகிப்புத்தன்மை கண்ணியமான வாழ்வு என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு புரியவைக்கும். குறைந்து வரும் ஒரு நிலத்தில் பட்டினியால் வாடும்வாடப்படும் குண்டுவீசப்படும் ஊனமுற்றோராக்கப்படும் மற்றும் படுகொலை செய்யப்படும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இந்த கொடூரங்களை எதிர்கொண்டு தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும் அடிபணிந்து வெளியேறமாட்டோம் என்றும் மறுப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதி மீள்தன்மை மற்றும் கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு மனிதர்களாகிய நமது புரிதலையும் தூண்டுகிறது. முதல் நக்பாவிலிருந்து தற்போதைய இனப்படுகொலை இரத்தக்களறி வரை, சுதந்திரமாகயிருக்க வேண்டும் என்ற மனித விருப்பத்தின் சுடரை சுமக்கும் பாலஸ்தீனியர்கள், உலகத்தையும் மனித குலத்தையும் மறுவடிவமைப்பார்கள். மனிதர்களாக உணரப்படுவதற்காக நாங்கள் ஏங்கிய, வேறுபட்ட உலகத்தை வேறுபட்ட விழுமியங்களை கனவுகளை அடைவதற்கான மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டு விருப்பத்தினை பாலஸ்தீனியர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள். அவர்கள் தகர்க்க முடியாத மனித விருப்பத்தின் கொடியாக மாறி, மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம் மற்றும் மனித கௌரவம் பற்றிய கூட்டுகனவுகளை தூண்டும் நித்திய சுடர்களாக மாறிவிட்டனர். https://www.virakesari.lk/article/214873
  18. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சுற்றுலா பயணிகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வரும் நிலையில்,மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பில் ஏற்பாட்டாளர்களிடமிருந்து கேட்டறிந்துகொண்ட அதேவேளை,கஞ்சியையும் பெற்று பருகி சென்றது அனைவரினதும் கவனத்தை பெற்றிருந்தது. https://thinakkural.lk/article/318084
  19. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்குமா @Justinஅண்ணை?
  20. அண்ணை, தமிழரசுக் கட்சியின் ப.பொ.செ அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு தவிசாளர் பதவி அளிக்க முனைவது உண்மை. வலி.மேற்கில் முன்னாள் பா.உ உதயன் உரிமையாளரின் வலது கை இப்போ ப.பொ.செ இன் விசுவாசி, அவருக்கு தான் தவிசாளர் பதவி வரும் என அவரின் நட்பு வட்டம் அலப்பறை கிளப்பிறாங்கள். உதயன் உரிமையாளர் திட்டிக்கொண்டு திரிகிறாராம்.
  21. Published By: DIGITAL DESK 2 16 MAY, 2025 | 10:17 AM பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். 'நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வு, விளாழக்கிழமை (15) கொழும்பு 07 இல் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகம் மற்றும் பாலஸ்தீன பேரழிவை நினைவுகூரும் இலங்கை ஒருமைபாட்டுக் குழு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/214858
  22. வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் கஞ்சி பரிமாறல் 16 MAY, 2025 | 10:15 AM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது. இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் செ.கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/214856
  23. Published By: VISHNU 16 MAY, 2025 | 03:18 AM இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார். புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ளும் விகிதம் குறைவடைந்து வருகிறது. உண்மையில் இது கவலை தருகின்ற விடயமாகும். பொது அறிவு என்பது அனைத்து வகையிலும் எதிர்காலத்திற்கு பங்காற்றக்கூடியது. அதனை வளர்த்துக்கொளள அக்கறை செலுத்தவேண்டும். உயர் பதவிகளை வகிப்பதற்கான அடிப்படைகூட பொது அறிவுத் தேடல் தான் என்றால் அது மிகையில்லை என்றும் மேலும் தெரிவித்தார். புளியங்கூடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் இன்று இலவச குடிநீர் வழங்கும் திட்டம் திறக்கப்பட்டுள்ளமை பாராட்டுதற்குரியது. இன்றைய சூழலுக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் சமூக அக்கறை கொண்ட மக்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். இதனை பயன்படுத்துபவர்கள் இதன் முக்கியத்துவதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ஙில் மண்டபத்தில் நடைபெற்ற தையல் பயிற்சி ஆரிவேக் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கும், வினாடி விடை போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர் உட்பட்ட அரச அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/214848
  24. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி Published By: VISHNU 16 MAY, 2025 | 03:01 AM ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்ததோடு அதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கினார். மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணகுலசூரிய, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/214846
  25. கோலி ஓய்வு: டெஸ்ட் கேப்டனாக தோனியை விஞ்சி படைத்த சாதனைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்பனாக விராட் கோலியின் சாதனை அளப்பறியது. கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 12 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 13 மே 2025 இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். ரோகித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது விராட் கோலியின் அறிவிப்பும் வந்திருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஒன்றாக ஓய்வு பெற்றனர். இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளார் விராட் கோலி. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் 269ஆவது வீரராக அறிமுகமானார் விராட் கோலி. இந்த அறிவிப்பை அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்திருக்கிறார் விராட் கோலி. அதில் வெள்ளை உடையில் விளையாடுவது மிகவும் நெருக்கமானது எனத் தெரிவித்துள்ளார் கோலி. அந்தப் பதிவில், "நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வடிவம் என்னை இத்தகைய பயணத்திற்கு எடுத்துச் செல்லும் என நான் எப்போதும் நினைத்திருக்கவில்லை. இது என்னை சோதித்துள்ளது, என்னை வடிவமைத்துள்ளது, நான் வாழ்நாளுக்கும் எடுத்துச் செல்லும் பாடங்களை எனக்கு கற்பித்துள்ளது. வெள்ளை உடையில் விளையாடுவதில் மிகவும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒன்று உள்ளது. அந்த அமைதியான கடின உழைப்பு, நீளமான நாட்கள், யாரும் பார்க்காத ஆனால் எப்போதும் உங்களுடன் இருக்கும் சிறிய தருணங்கள்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "நான் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கையில், அது எளிதானதாக இல்லையென்றாலும், அது தான் சரி எனத் தோன்றுகிறது. நான் என்னிடம் இருந்த அனைத்தையும் இந்த வடிவத்திற்காக கொடுத்துள்ளேன். அது எனக்கு நான் எதிர்பார்த்ததைவிட அதிகம் கொடுத்திருக்கிறது. நான் இந்த விளையாட்டிற்கும், என்னுடன் சேர்ந்து களத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இந்தப் பயணத்தில் நான் காணப்பட்டதாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் விடை பெறுகிறேன். நான் என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் ஒரு புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES டெஸ்ட் கேப்டன்சியில் சாதனை 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 சதங்கள், ஏழு அரை சதங்கள் மற்றும் 46.85 சராசரியுடன் 9230 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 254 ரன்களை அவர் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலியின் சாதனை அளப்பரியது. இது வரை 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள விராட் கோலி அதில் 40 போட்டிகளில் வென்று 11 போட்டிகளை டிராவில் முடித்துள்ளார். கேப்டனாக அவரின் வெற்றி சதவிகிதம் 58 ஆக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்திய கேப்டன்களில் வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் விராட் கோலியே முதலிடம் வகிக்கிறார். அந்த வகையில், தோனி, கங்குலி உள்ளிட்ட கேப்டன்களைக் காட்டிலும் கோலியே சிறந்தவராக இருக்கிறார். புள்ளிவிவரங்களை விடவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் முக்கியமானது. இந்திய கிரிக்கெட்டிற்கு இக்கட்டான ஒரு காலகட்டத்தில் டெஸ்ட் அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பு கோலி வசம் வந்தது. 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது டெஸ்ட் தொடரின் நடுவிலே கேட்பனாக இருந்த தோனி ஓய்வு பெற விராட் கோலி வசம் தலைமை பொறுப்பு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சச்சின், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றிருந்த நிலையில் வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பணிச்சுமை காரணமாக ஜாம்பவானும் தன்னுடைய வழிகாட்டியுமான தோனி உடனடியாக ஓய்வு பெற்ற தருணத்தில் கேட்பன்சி கோலியின் கைகளுக்கு வந்தது. டெஸ்ட் வடிவத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை வலுவாக மீண்டும் கட்டமைத்து நம்பர் ஒன் அணியாக வெளிநாட்டு தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்த வைத்தார் கோலி. அதுவரை தடுப்பாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்த இந்திய அணிக்கு கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை புது ரத்தம் பாய்ச்சியது. இந்தியாவை முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் கோலி. டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்காக அதிக இரட்டை சதங்கள் (7) அடித்த இந்திய வீரர், கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவர் எனப் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் கோலி. இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் சேர்த்து தனது சகாப்தத்தின் நான்கு சிறந்த பேட்டர்களில் ஒருவராக கோலி கருதப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் சில சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார் - 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் விராட் கோலி டெஸ்ட் தலைமை பொறுப்பேற்ற போது இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது. விராட் கோலி கேட்பனாக பொறுப்பேற்ற இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே 2016ஆம் ஆண்டு அக்டோபரில் இந்திய அணி தரவரிசைப் பட்டியில் முதல் இடத்தைப் பிடித்தது. தோனிக்குப் பிறகு இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர் விராட் கோலி தான். அது மட்டுமில்லாது, அப்போது தொடங்கி மார்ச் 2020 வரை 42 மாதங்கள் முதல் இடத்தில் நீடித்தது. இந்திய அணியை நீண்ட காலம் முதல் இடத்தில் தக்கவைத்த டெஸ்ட் கேப்டனும் விராட் கோலி தான். - ஒரு பேட்டராக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தபோது 937 புள்ளிகளைப் பெற்றிருந்தார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இந்திய பேட்டர் பெற்ற அதிகபட்ச புள்ளி அது தான். - விராட் கோலி தலைமையில் தான் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை (2018-2019 பார்டர் கவாஸ்கர் கோப்பை) வென்றது. - 2015-2017 இடைப்பட்ட காலத்தின் விராட் கோலி தொடர்ந்து ஒன்பது டெஸ்ட் தொடர்களை வென்றார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஆடிய சிறந்த இன்னிங்ஸ் 119 & 96 vs தென்னாப்பிரிக்கா 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸில் நடைபெற்ற தனது முதலாவது போட்டியில், 119 மற்றும் 96 ரன்கள் விளாசினார் விராட் கோலி. முதல் இன்னிங்ஸில் அவர் அடித்த சதம் இந்தியாவின் வலுவான ஸ்கோருக்கு அடித்தளமாக அமைந்தது. அதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்கள் விளாசிய அவருக்கு, இரட்டை சதங்களை எட்டும் வாய்ப்பு மிக அருகில் இருந்தது. தென்னாப்பிரிக்காவின் சூழலுக்கு ஏற்ப விளையாடிய அவரது திறமைக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES 115 & 141 vs ஆஸ்திரேலியா எம்.எஸ். தோனி காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அப்போது அடிலெய்டில் முதல் முறையாக இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டனாகப் பொறுப்பேற்ற விராட் கோலி, முதல் போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 115 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்கள் குவித்து இரட்டை சதங்களைப் பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸ் முழுக்கவே தன்னம்பிக்கையுடன் விளையாடிய கோலி, ஆஸ்திரேலிய பந்துவீச்சைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அதிரடியான ஸ்ட்ரோக்குகளால் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அடித்த 141 ரன்கள் என்பது அவரது சிறந்த இன்னிங்ஸாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. வெற்றி பெற 364 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி, ஆட்டம் சென்று கொண்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து பார்ட்னெர்ஷிப்பை இழந்த கோலி, துணிச்சலாக விளையாடினார். ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம், வெற்றியை நோக்கி இந்தியாவை போராட வைத்தார் விராட் கோலி. அந்த போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், கோலியின் தலைமைத்துவமும், அவரது பேட்டிங் திறனும் பரவலாகப் பாராட்டைப் பெற்றன. 235 vs இங்கிலாந்து 2016 ஆம் ஆண்டு, வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணியின் நான்காவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி 235 ரன்கள் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராக இது உள்ளது. ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்த பிச்சில் பேட்டிங் செய்த கோலி, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் திறமையாக எதிர்கொண்டார். இந்தியா '631 ரன்கள்' எனும் பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு முதுகெலும்பாக கோலியின் இன்னிங்ஸ் அமைந்தது. கோலி கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் பேட்டிங் செய்து, 340 பந்துகளைச் சந்தித்தார். 25 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து, ஆடுகளத்தில் சகிப்புத்தன்மையோடும், ஆட்டத்தில் கூர்மையான கவனத்தோடும் விளையாடினார். இந்த இன்னிங்ஸ், கோலியின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகி, அவரது சாதனைகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஏனென்றால் அதே ஆண்டில் அவர் அடித்த மூன்றாவது இரட்டைச் சதம் அது. அந்த சமயத்தில் எந்த இந்திய கேப்டனும் இந்த சாதனையை எட்டவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 149 vs இங்கிலாந்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, 2018 இல் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி 149 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இது தான் இங்கிலாந்தில் விராட் கோலி அடித்த முதல் சதம் . 2014 இல் இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, மிகுந்த அழுத்தத்துடன் இந்த தொடரைச் சந்தித்த கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் வலிமையான பந்து வீச்சை தைரியமாக எதிர்கொண்டார். 54/2 என்ற ஸ்கோரோடு களமிறங்கிய கோலி, கடினமான பந்துவீச்சுகளையும் தைரியமாக எதிர்கொண்டு ஒரு அபாரமான சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தபோதிலும், கிட்டத்தட்ட தனி ஆளாக நின்று, இந்தியாவை ஆட்டத்தில் தக்க வைத்துக் கொண்டார். அவரது இன்னிங்ஸில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பொறுமையாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாடி, அருமையான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தினார். இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்டில் தோல்வியடைந்தாலும், கோலியின் ஆட்டம் ஒரு இந்திய வீரரின் சிறந்த வெளிநாட்டு சதங்களில் ஒன்றாக பரவலாகப் பாராட்டப்பட்டது. 153 vs தென்னாப்பிரிக்கா 2018 ஆம் ஆண்டு, செஞ்சுரியனில் கோலி கடினமான சூழ்நிலைகளில் தனது மிகச்சிறந்த இன்னிங்ஸில் ஒன்றை விளையாடினார். மாறுபட்ட பவுன்ஸ் கொண்ட பிச்சிலும், மோர்னே மோர்கெல், காகிசோ ரபாடா மற்றும் வெர்னான் பிலாண்டர் தலைமையிலான தரமான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சுக்கும் எதிராக, இந்தியாவின் மொத்த ஸ்கோரான 307 இல், கோலி 153 ரன்களை எடுத்து அபாரமாக விளையாடினார். மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும், கோலி எவ்வாறு உறுதியாக விளையாடினார் என்பதுதான் அந்த இன்னிங்ஸை சிறப்பு வாய்ந்ததாக மாற்றியது. மற்ற எந்த இந்திய வீரரும் அந்த இன்னிங்ஸில் 50 ரன்களைக் கடக்கவில்லை. அந்தப் போட்டியில் திறமையான ஸ்ட்ரோக் ஆட்டத்தை வெளிப்படுத்தி, 15 பவுண்டரிகள் விளாசினார் கோலி. 254 vs தென்னாப்பிரிக்கா 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புனேவில் நடந்த போட்டியில் விராட் கோலி தனது சிறந்த டெஸ்ட் ஸ்கோரான 254ஐ பதிவு செய்தார். தொடக்க வீரர்கள் உறுதியான அடித்தளத்தை அமைத்த பிறகு, 136/2 என்ற நிலையில் களமிறங்கிய கோலி, அவரது இன்னிங்ஸை மிகுந்த கட்டுப்பாட்டோடு எடுத்துச் சென்றார். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் கிரீஸில் மிகச் சரியான வேகத்தில் ஆடினார். 33 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் கொண்ட அவரது இன்னிங்ஸ், காகிசோ ரபாடா, வெர்னான் பிலாண்டர் மற்றும் அறிமுக வீரர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரைக் கொண்ட தரமான தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்தது. அவர்களால் கோலியின் நேர்த்தியான ஆட்டத்திறனை சமாளிக்க முடியவில்லை. கோலி அந்தப் போட்டியில் ஆட்டமிழக்கவில்லை. அவரது இரட்டை சதம் இந்தியா 601/5 என்று ஸ்கோரில் வெற்றியடைய உதவியது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyw518ygr0o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.