Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 10 MAY, 2025 | 05:22 PM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/214386
  2. Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 07:51 PM கம்யூனிசம், சோசலிசம், பெரியாரியம் என்று காலத்துக்குக் காலம் மனுக்குலத்தை வழிநடத்துவதற்காக கோட்பாடுகள் உருவாகி வந்துள்ளன. தற்போது மானுடத்தையும் தாண்டி ஒட்டுமொத்த உலகையுமே உய்விக்க வந்த பெருங்கோட்பாடாகச் சூழலியம் உருவெடுத்துள்ளது. மாணவர்கள் சுற்றுச்சூழலை சூழலியற் கல்வியின் ஊடாக மாத்திரம் அணுகாமல் சூழலியம் என்ற சித்தாந்தத்தின் ஊடாகவும் அணுக முன்வரவேண்டும். அதுவே உலகளாவிய ரீதியில் நாம் இன்று எதிர்கொண்டுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைத் தரும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2027 பிரிவு பயிலுகின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது. இதில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சூழலியற் கல்வி சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். சூழல் விழிப்புணர்வு சூழல் பாதுகாப்பில் எங்களைப் பங்குபற்றுநர்களாக்க வைக்கும். ஆனால், எமது கல்வி முறைமை பூமியையோ, சுற்றுச் சூழலையே அதன் முழுப் பரிமாணங்களோடும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளைத் தரவில்லை. நாம் பாடங்களைக் கலைப்பிரிவு, வர்த்தகப் பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என்றும் புவியியல், உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் என்றும் வரையறுத்தே கற்கிறோம். இந்தப் பாட எல்லைகளைக் கடந்து சிந்திக்க இயலாததால் யாவற்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் பூரண அணுகுமுறை எங்களிடம் இல்லாமற் போய்விட்டது. இதனால், அந்தகர்கள் யானையைப் பார்ப்பது போன்றே, நாம் ஒவ்வொருவரும் நமது துறைசார் கல்வி அறிவின் ஊடாக மட்டுமே பூமியை மதிப்பீடு செய்து வருகிறோம். அறிவியல் என்பது மனுக்குலத்தின் மேம்பாட்டுக்கானவற்றைக் கண்டறிவதற்கென உருவான துறை. ஆனால், அதுவே இன்று இயற்கையைப் பணிவிக்க முயலும், சகல வளங்களையும் அடியோடு அனுபவிக்கத் துடிக்கும் சூழல் விரோத சிந்தனைப் போக்காக உருவெடுத்துள்ளது. ஏனைய உயிரினங்களோடு மனிதனும் ஓர் உயிரினம் என்பதை மறுத்த மனிதனே மையம் என்ற சிந்தனையே சூழல் மீதான ஆக்கிரப்புகளாக வெளிப்படுகின்றது. மனிதனின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பூமியும் அவ்வப்போது தனது எதிர்ப்புகளைக் காட்டி வருகிறது. காலம் தப்பிய அடைமழை, வெள்ளப் பெருக்கு, கடும் வரட்சி, பெரும் புயல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் எல்லாம் மனிதர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான பூமியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தான். சூழலியற் கல்வி சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடையப் போதுமானதல்ல என்பதாலேயே பூமியை ஒரு தனித்த பேருயிரியாகக் காணுகின்ற கயா கோட்பாடு, பூமியை எங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுதலை செய்வதன் மூலம் பூமியின் எதிர்த்தாக்குதல்களில் இருந்து எங்களை விடுதலை செய்யும் விடுதலைச் சூழலியல் கோட்பாடு என்பன சமீப காலமாக மேலெழுந்து வருகின்றன. இக்கோட்பாடுகள் தமிழர்களுக்குப் புதியது அல்ல. பாரதியாரின் காக்கை, குருவி எங்கள் ஜாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாடலில் பிற உயிரினங்களில் மட்டும் அல்லாது கல்லிலும் மண்ணிலும் எங்களைக் காணுகின்ற சூழல்நேயச் சிந்தனை வெளிப்பட்டிருக்கின்றது. இந்தச் சிந்தனை மரபே அனைத்துச் சூழற் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/214385
  3. பாகிஸ்தானின் சோங்கார் டிரோன்கள் - துப்பாக்கி முதல் கையெறி குண்டு வரை சுமந்து செல்லும் அபாய எந்திரம் பட மூலாதாரம்,ASISGUARD.COM படக்குறிப்பு,மே 8ஆம் தேதி, பாகிஸ்தான் ஏராளமான டிரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவை துருக்கியில் தயாரிக்கப்பட்ட சோங்கார் வகை டிரோன்கள் என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். 10 மே 2025, 11:42 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை இரவு (மே 08) பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளை டிரோன்கள் மூலம் குறிவைத்ததாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, பாகிஸ்தான் ராணுவம் வியாழன் இரவு இந்தியாவின் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்து சுமார் 300-400 டிரோன்களை ஏவியதாகக் கூறினார். இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தத் தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். லே முதல் சர் கிரீக் வரையிலான 36 இடங்களில் 300-400 டிரோன்களை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய பாதுகாப்புப் படை அவற்றுக்கு நேரடித் தாக்குதல் மற்றும் மின்னணு தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி அந்த டிரோன்களை வீழ்த்தியதாகவும் கர்னல் சோபியா குறிப்பிட்டார். இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல்களை மேற்கொள்வதன் நோக்கம், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிப்பதும், உளவுத் தகவல்களை சேகரிப்பதுமே என்று கூறிய அவர், "வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் மீதான தடயவியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் அவை துருக்கியின் அசிஸ்கார்ட் சோங்கார் டிரோன்கள் எனத் தெரிய வந்துள்ளது" என்றார். டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?10 மே 2025 பாகிஸ்தானில் எந்தெந்த ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? இந்தியா தகவல் - நேரலை4 நிமிடங்களுக்கு முன்னர் சோங்கார் டிரோன் என்றால் என்ன? பட மூலாதாரம்,ASISGUARD.COM படக்குறிப்பு,கிரனேட் குண்டுகளை வீசக்கூடிய திறன் சோங்கார் டிரோனுக்கு உள்ளதாக அசிஸ்கார்ட் தகவல்கள் கூறுகின்றன. சோங்கார் டிரோன்கள், அசிஸ்கார்ட் என்ற துருக்கியின் பாதுகாப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானங்களாகும். துருக்கிய ராணுவத்தின் ஆயுத உற்பத்தியாளரான அசிஸ்கார்ட் நிறுவனத்தின் இணையதளத் தகவல்படி, சோங்கார் டிரோன்கள் இலக்குகளைக் கண்டறிந்து அழிக்கவல்ல சிறப்புத் திறன்களைக் கொண்டுள்ளன. அதோடு, இவை துருக்கியின் முதல் ஆயுதமேந்திய டிரோன் அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது 2020இல் முதல்முறையாக துருக்கிய ஆயுதப் படைகளில் இணைக்கப்பட்டது. இதில் கண்காணிப்புக்கும் நிகழ்நேர படங்களைப் பதிவு செய்வதற்கும் பயன்படுத்த உதவும் வகையிலான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, தேவைப்பட்டால் தாக்குதலுக்கும் இந்த டிரோன்களை திறம்படப் பயன்படுத்தலாம். "தரைவழி வாகனங்களுடன் ஒருங்கிணைந்து அதிக எண்ணிக்கையிலான குண்டுகளை எறிவதற்கு இதைப் பயன்படுத்தலாம். அதோடு, எல்லையிலும் எல்லை தாண்டியும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சோங்காரை பயன்படுத்தலாம்," என்று அசிஸ்கார்ட் இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வரம்பு 5 முதல் 10 கி.மீ வரை உள்ளது. மேலும், இது தானாகவே பறந்து தரையிறங்கும் திறனையும் கொண்டுள்ளது. இந்தியா vs பாகிஸ்தான் - வல்லரசு நாடுகள் யாரை ஆதரிக்கின்றன? இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் சீனாவுக்கு என்ன ஆபத்து? இந்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்று சுரங்கப்பாதையில் சிக்கிய மசூத் அசார் பதற்றங்களுக்கு மத்தியில் பேசப்படும் ஐஎன்எஸ் விக்ராந்த் - இந்த கப்பல் ஏன் முக்கியமானது? சோங்கார் ட்ரோன் எவ்வாறு செயல்படுகிறது? ஷார்ட் வீடியோ Play video, "இந்தியா பாகிஸ்தான் பதற்றம்: பஞ்சாபில் டிரோன் பாகம் விழுந்து பற்றி எரிந்த வீடு", கால அளவு 0,48 00:48 காணொளிக் குறிப்பு,இந்தியா பாகிஸ்தான் பதற்றம்: பஞ்சாபில் டிரோன் பாகம் விழுந்து பற்றி எரிந்த வீடு அசிஸ்கார்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, தானியங்கி இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது சோங்கார் டிரோனின் சிறப்பம்சங்களில் ஒன்று. இரவிலும் பகலிலும் ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதைத் திறம்படப் பயன்படுத்த முடியும். ஆயுதமேந்திர சோங்கார் டிரோன்களில் தாக்குதல் நடத்துவதற்கான ரைபிள்கள், கிரெனேடுகளை வீசும் கருவி, பல கையெறி குண்டுகளை ஒரே நேரத்தில் வீசக்கூடிய கருவி, மோர்டார் குண்டுகளை வீசும் கருவி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் ஆகியவற்றைப் பொருத்தலாம் என்று அசிஸ்கார்ட் நிறுவனம் கூறுகிறது. இவற்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து அதன் இலக்கைத் தாக்க முடியும். சோங்கார் டிரோன்களில் பொருத்தப்பட்ட தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் ஒரு சில விநாடிகளில் 200 குண்டுகள் வரை சுடக்கூடிய திறன் கொண்டவை. இவை நிகழ்நேர காணொளியைப் பகிரும் திறன் கொண்டவை. மேலும், தரையில் இருந்து இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, அவற்றில் தானாகவே இலக்கை நோக்கி இயக்கப்படுவதற்கான திறனும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன. ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவை என்பதால், அது துல்லியத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாக அசிஸ்கார்ட் கூறுகிறது. தகவல் தொடர்பு செயலிழப்பு, பேட்டரி செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டால், இந்த டிரோன்கள் தாமாகவே கிளம்பிய இடத்திற்குத் திரும்பும் கொண்டவை என்பது இவற்றின் மற்றுமொரு சிறப்பம்சம். சோங்கார் டிரோன்களை தரையில் செல்லும் வாகனங்களிலிருந்து இயக்கலாம் அல்லது தனித்த ஆளில்லா விமானங்களிலிருந்தும் பறக்கவிடலாம் என்று அசிஸ்கார்ட் கூறுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், நெருக்கமான போர் மற்றும் கண்காணிப்பில் உதவுவதற்காக இது 4x4 கவச வாகனத்தில் நிறுவப்பட்டது. 2024ஆம் ஆண்டில், ரெப்கான் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம், அசிஸ்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இதனை மேம்படுத்தியது. சோங்கார் டிரோனில் 40மிமீ மல்டிபிள் கிரெனேட் லாஞ்சருடன் (கையெறி குண்டு) பொருத்தி, அதன் தாக்குதல் திறனை அதிகரித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்திகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்துகிறதா?10 மே 2025 இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வாறு செயல்படும்?10 மே 2025 பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் கடந்த மாதம்தான் துருக்கி அதிபர் எர்துவானை சந்தித்தார் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை தொடங்கியதில் இருந்து துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. மேல் 7ஆம் தேதியன்று பாகிஸ்தானில் இந்திய விமானத் தாக்குதலுக்குப் பிறகு துருக்கி அதிபர் ரசீப் தையிப் எர்துவான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபிடம் பேசினார். துருக்கி அதிபர் அலுவலக தகவலின்படி, பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க துருக்கி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்றும் இதுதொடர்பான தங்கள் ராஜ்ஜீய உறவுகள் தொடரும் என்றும் எர்துவான் கூறினார். பஹல்காம் தாக்குதல் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கான பாகிஸ்தானின் முடிவை துருக்கிய அதிபரும் ஆதரித்துள்ளார். பொதுமக்கள் இடையிலான பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுத் தனது சமூக ஊடக பக்கங்களில் அதிபர் எர்துவான் கவலை தெரிவித்திருந்தார். "பாகிஸ்தான், இந்தியா இடையிலான பதற்றங்கள் ஏவுகணைத் தாக்குதல்களுடன் தீவிர மோதலாக அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாகப் பல பொதுமக்கள் பலியாகலாம் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்," என்றும் அவர் கூறியிருந்தார். "தாக்குதலில் உயிரிழந்த எங்கள் சகோதரர்களுக்கு அல்லாவின் கருணை கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். மேலும், சகோதர மக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார். கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது. மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy904vjze2vo
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES 10 மே 2025, 12:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும். இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய DGMOவை அழைத்துப் பேசினார். அதன்படி, இரு தரப்பினரும் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த உடன்பாட்டைப் புரிந்துக் கொண்டு செயல்படுத்துமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மே 12 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு மீண்டும் பேசுவார்" என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும் இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,"இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன" என பதிவிட்டுள்ளார். "இரவு முழுவதும் அமெரிக்காவின் மத்யஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடியான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளன என நான் அறிவிக்கிறேன்" என்று டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவு கூறுகிறது. "பொதுஅறிவு மற்றும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் பாராட்டுக்கள். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி" என்றும் டிரம்பின் பதிவில் கூறப்பட்டுள்ளது. ''இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பொதுவான நாட்டில் பரந்த அளவிலான பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்'' என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார் பாகிஸ்தானின் சோங்கார் டிரோன்கள் - துப்பாக்கி முதல் கையெறி குண்டு வரை சுமந்து செல்லும் அபாய எந்திரம்3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு - நேரலை16 நிமிடங்களுக்கு முன்னர் 'போருக்கு அருகில் இந்தியா, பாகிஸ்தான்' - பதற்றத்தைக் குறைக்க வழி என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய ராணுவம் செய்தியாளர்கள் சந்திப்பு இதனை தொடர்ந்து இன்று மாலை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய கடற்படை கேப்டன் ரகு நாயர், ''சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார். மேலும், ''பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்புணர்வுடனும் இருந்தன'' என்றார். செய்தியாளர்களிடம் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங்,'' தவறான தகவல்'' பிரசாரத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் பல முயற்சிகளை எடுத்ததாக கூறினார். ''பாகிஸ்தான் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது'' என்று வியோமிகா சிங் கூறினார். அடுத்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, ''முதலில், பாகிஸ்தான் தனது ஜி.எஃப் 17ஐக் கொண்டு இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல, இரண்டாவதாக சிர்சா, பதான்கோட், ஜம்மு, பட்டிண்டா, நலியா மற்றும் புஜ்-இல் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியதாவும் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவும் பொய்ப்பிரசாரம் தான்'' என்றார். மேலும், ''சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள இந்திய ஆயுதக் கிடங்கு சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதுவும் பொய்யான தகவல். நாங்கள் இன்று காலை கூறியதுபோல, அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.'' ''பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களது மூத்த ராணுவ அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர். இந்திய ராணுவம், மசூதிகளை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நான் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்திய ராணுவம் கலாசாரத்தை மதிக்கிறது. இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய நிலம் மற்றும் வான்வெளி சொத்துக்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார் சோஃபியா குரேஷி. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கர்னல் சோஃபியா குரேஷி இந்தியா பாகிஸ்தானுக்கு உணர்த்துவது என்ன? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முழு அளவிலான போர் மற்றொரு முறை தடுக்கப்பட்டுள்ளது - குறைந்தபட்சம் இப்போதைக்கு, என்கிறார் பிபிசி தெற்காசிய செய்தி ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன் மேலும் அவர், ''சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததில் மீண்டும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது தளத்துக்குத் திரும்பி, தாங்கள் பெற்றதையும், இழந்ததையும் மதிப்பிடும் வேளையில் உலக அமைதி காப்பாளராக டிரம்ப் தன்னை காட்டிக்கொள்ளலாம். மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, இதனைத் தனது முதல் ராஜ்ஜீய வெற்றியாகக் கோரலாம். இந்தியாவின் தாக்குதலை தாங்கள் தடுத்ததாகப் பாகிஸ்தான் மக்களிடம் அந்நாட்டின் ராணுவம் சொல்லலாம். இந்த பதற்றத்தில் மக்கள் ராணுவத்தின் பின் திரண்டுள்ளனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராணுவத்துக்கு எதிராகப் போராடியது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும் பாகிஸ்தானுக்கு உள்ளே''பயங்கரவாத உள்கட்டமைப்பு'' என தாங்கள் கருதும் இடங்களைத் தாக்கத் தயங்க மாட்டோம் என இந்தியா வாதிடலாம்'' என்கிறார் இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடங்கியது எங்கே? கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது. மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5v6zlj0g2o
  5. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் கோரிக்கை 10 MAY, 2025 | 09:39 PM வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும் மே 12 தொடக்கம் 18 வரையில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஜனாதிபதி வரலாறு தெரியாத எங்கள் இளம் சமூகத்திடம் தன்னை நல்லவராக காட்டும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருகின்றார். வெளித்தோற்றத்தில் தன்னை நல்லவராக காட்டிக்கொண்டு சிங்கள அரசியலுக்குள் முழுமையாக சிக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், 16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எங்களுக்கு நடந்த இனஅழிப்புக்கான எந்த நீதியும் கிடைக்கவில்லை.இலங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது. அதனை முன்னிட்டு எதிர்வரும் 12 திகதி தொடக்கம் 18 திகதி வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். ஒரு இனமே அழிக்கப்பட்ட நாள் மே 18.அதனை யாராலும் மறுக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.இந்த இனஅழிப்பானது சர்வதேசத்தின் உதவியுடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது. 16 வருடங்கள் கடந்தும் சர்வதேசமும் எம்மை மறந்திருப்பதை நீனைத்து நாம் வேதனையடைகின்றோம். எதிர்வரும் மே 12ஆம் திகதியிலிருந்து வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்,தமிழ் தேசிய பற்றாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மே 18ஆம் திகதி வரையில் இந்த இனஅழிப்பு வாரத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு கோரிநிற்கின்றோம். இறுதி யுத்ததின்போது பொருளாதார தடையினை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக அப்பாவி மக்கள் சாப்பிட உணவு இல்லாமல்,குடிக்க நீர் இல்லாமல். உப்பில்லா கஞ்சி அருந்தி உயிர்வாழ்ந்தவர்களும் அதுவும் கிடைக்காமல் பட்டினிசாவினையும் இந்த மே 18பேரழிவு நாள் ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் அந்த மக்களை ஞாபகப்படுத்தும் வகையில் மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் இன அழிப்பு வாரத்தில் இளைய சந்ததிக்கு இன அழிப்பு தொடர்பான விடயங்களை கொண்டுசெல்லும் வகையிலும் எமது உள்ளக்குமுறல்களை சர்வதேசம் வரையில் கொண்டுசெல்லும் வகையிலும் உப்பில்லா கஞ்சியை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துவருகின்றோம். இந்த இன அழிப்பு வார காலத்தில் களியாட்ட நிகழ்வுளை நிறுத்தி பல்லாயிரம் உயிர்கள் சிதைக்கப்பட்டு விதைக்கப்பட்ட இடமே முள்ளிவாய்க்கால் மண் அந்த இடத்தில் மே 18ஆம் திகதி அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு அங்கு பெரும் எழுச்சியை ஏற்படுத்தி சர்வதேசத்திற்கும் அனைவருக்கும் எடுத்துக்காட்ட அனைவரும் முன்வரவேண்டும். வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்,தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும். 16 வருடங்களாக இந்த நாட்டில் ஒவ்வொரு அரசு உருவாக்கம் நடைபெறுகின்றபோதிலும் ஒவ்வொரு ஜனாதிபதியும் எங்களை ஏமாற்றியே சென்றார்கள். எங்களுக்கு இலங்கைக்குள் எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அலுவலகம் கூட ஒரு கண்துடைப்பு நாடகத்தையே அரங்கேற்றியிருக்கிறது. நாங்கள் காணாம்போனவர்கள் பற்றி பல்வேறு தகவல்களை வழங்கியபோதிலும் அவர்கள் அது தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கவில்லை.சர்வதேசத்திற்கு போடும் நாடகமே இதுவாகும். அனுர குமாரதிஷாநாயக்க தேர்தல் காலத்தில் சொல்லும்Nபுhது காணாமல்ஆக்கியவர்களின் வலிதெரியும்,தமது குடும்ப உறுப்பினர்களும் காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர். தனது தாய்பட்ட வேதனையையும் உணர்வதாகவும் காணாமல்ஆக்கப்படுதல் என்பது மிகவும் கொடூரமானது என பிரசார காலத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு தீர்வுபெற்றுத்தருவோம் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஆட்சிக்குவந்த பின்னர் அவரது செயற்பாடு மாறுபட்டதாகவே உள்ளது. அவரிடமிருந்து நாங்கள் எந்த மாற்றத்தினையும் உணரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு அவர் தயாரில்லை. அனுரகுமார திசாநாயக்க இங்கு ஒரு பிரச்சாரத்தினை முன்னெடுப்பதுடன் சர்வதேசத்தில் வேறு ஒரு பிரசாரத்தினை முன்னெடுக்கின்றார். 2017ஆம் ஆண்டு காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக சட்டம் வரும்போது சர்வதேச தலையீட்டுடன் காணாமல்ஆக்கப்பட்ட அலுவலகம் செயற்படமுடியும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அதனை ஜேவிபி. தான் மறுத்து பிரசாரம் செய்தது. இவ்வாறான ஒருவர் ஒருபோதும் சர்வதேச விசாரணையை விரும்பமாட்டார். உள்ளக விசாரணை என்ற ஒன்றின் கீழ் முடக்குவதற்கே செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார். குற்றம் செய்தவர்களே இந்த நாட்டு அரசாங்கமாகும்.குற்றம் செய்த அரசிடம் நாங்கள் எப்படி நீதி கோறுவது? சர்வதேசத்திடமே நாங்கள் நீதியை கேட்கலாம். இந்த அரசாங்கமும் இராணுவ கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு எங்களை கூட சுதந்திரமாக நடமாட முடியாமல் பல புலனாய்வாளர்களை விட்டு எம்மை பின்தொடர்கின்றனர். முன்னைய ஆட்சிக்காலத்திலிருந்த அதே செயற்பாடுகள் இன்றும் இருந்துவருகின்றது. இந்த ஜனாதிபதி வரலாறு தெரியாத எங்கள் இளம் சமூகத்திடம் தன்னை நல்லவராக காட்டும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருகின்றார். வெளித்தோற்றத்தில் தன்னை நல்லவராக காட்டிக்கொண்டு சிங்கள அரசியலுக்குள் முழுமையாக சிக்கியுள்ளார். இந்த இன அழிப்பிற்கு சர்வதேசமே தீர்வு தர வேண்டும் அதற்காகவே நாங்கள் 16 வருடங்களாக கண்ணீரோடு காத்திருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/214380
  6. Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 07:52 PM யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் ஒரு பக்கெட் உப்பு 179 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருலிங்கநாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது. எனவே 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று சனிக்கிழமை (10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/214383
  7. 10 MAY, 2025 | 09:27 PM 2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் சனிக்கிழமை (10) நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் ஆரம்பிக்கப்பட்டது. “பஜெத மித்தே கல்யாண - பஜெத புரிசுத்தமெ” (நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்) எனும் தொனிப்பெருளின் நடைபெறும் இம்முறை அரச வெசாக் விழா, மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும். மகாநாயக்க தேரர்கள், அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் அறிவுறுத்தல்களின்படி, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,பௌத்த அலுவல்கள் திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்துள்ளன. மேலும், மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தி, அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப மக்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு பௌத்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது முடிக்கப்படாத விகாரைகளின் அபிவிருத்திப் பணிகளை முப்படைகளின் உதவியுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரச வெசாக் விழாவுடன் இணைந்து, மக்களிடையே ஆன்மீக வளர்ச்சியையும் பௌத்த மத விழிப்புணர்வையும் வளர்க்கும் வகையில் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் மூலம் பல விசேட நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பன்முக மத மற்றும் பன்முக கலாசார சமூகத்தைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் இந்த ஆண்டு அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வது சிறப்பு நிகழ்வாக உள்ளதோடு, நாடு முழுவதும் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதும், உலகெங்கிலும் உள்ள பௌத்த நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். 2025 புத்த வருட அரச வெசாக் விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையும் இங்கு வெளியிடப்பட்டதுடன், அதன் முதல் நினைவு முத்திரை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. மேலும், 2025 ஆம் ஆண்டு அரச வெசாக் விழாவிற்கு இணையாக, கொத்மலை மலியதேவ ரஜமஹா விஹாரையை புனித பூமியாக அறிவிக்கும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்குதல் மற்றும் குருநாகல் ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தை புனித பூமியாக அறிவிக்கும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார். சியாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் பிரதம பதிவாளர், சோமாவதி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, கலாநிதி வண, பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அனுநாயக்க வண, ஆனமடுவே தம்மதஸ்ஸி நாயக்க தேரர் உட்பட மூன்று நிகாயாக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மகாசங்கத்தினர், அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் தலைவர் பேராசிரியர் வண, தும்புல்லே சீலக்கந்த நாயக்க தேரர், அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான பதிவாளர் வண, முகுனுவல அனுருத்த நாயக்க தேரர் உள்ளிட்ட அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் மகாசங்கத்தினர் மற்றும் அனைத்து மதத்தலைவர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உட்பட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் உட்பட பெருந்திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/214394
  8. இந்திய விமானப்படை தளங்களை தாக்கியதாக கூறும் பாகிஸ்தான்: மறுத்து இந்தியா வெளியிட்ட புகைப்படம் - நேரலை பட மூலாதாரம்,DEFENCE MINISTRY OF INDIA படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்கள் 10 மே 2025, 03:54 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் சிர்சா மற்றும் சூரத்கர் ஆகிய விமானப்படை தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் அரசு கூறியதை இந்தியா மறுத்துள்ளது. அந்த தளங்கள் எவ்வித சேதமும் இன்றி பயன்படுத்த ஏதுவான நிலையில் இருப்பதை தேதி, நேரம் குறிப்பிட்ட புகைப்படங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தான் அதிவேக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அவை அனைத்தையும் முறியடித்து விட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறியுள்ளது. தனது 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ராணுவ தாக்குதலை தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு - பாகிஸ்தான் அமைச்சர் என்ன கூறினார்? படக்குறிப்பு,அதாவுல்லா தரார் ஜம்மு காஷ்மீரில் குடியிருப்புப்பகுதிகளில் நடந்த வான்வழித் தாக்குதலில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சோதமடைந்துள்ளன. ''ஜம்மு நகரின் ரெஹாரி காலனியில் நடந்த தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்'' என பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா கூறினார். பாகிஸ்தான் இந்தியாவில் பொது மக்களைக் குறிவைத்து தாக்குவதாக இந்திய அரசின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தரார் மறுத்துள்ளார். "பாகிஸ்தான் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளது" என்றார் அவர். மேலும், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை இருப்பதாகவும் அவர் கூறினார். Play video, "இரவு முழுவதும் தொடர் வெடிப்புச் சத்தம் - பஞ்சாபின் பதான்கோட், குர்தாஸ்பூர் மக்கள் கூறுவது என்ன?", கால அளவு 3,03 03:03 காணொளிக் குறிப்பு,இரவு முழுவதும் தொடர் வெடிப்புச் சத்தம் - பஞ்சாபின் பதான்கோட், குர்தாஸ்பூர் மக்கள் கூறுவது என்ன? 'இரவு முழுவதும் குண்டு வெடிப்புகள்' – பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் பாகிஸ்தானின் "ஏவுகணை மற்றும் டிரோன்களால்" குறிவைக்கப்பட்ட நகரங்களில் பதான்கோட்டும் ஒன்று என இந்திய அரசின் அறிக்கை ஒன்று கூறியது. பதான்கோட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், "எக்கள் குழுவினர் இரவுநேர துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அதிகாலை வரை தொடர்ந்த குண்டுவெடிப்புகளின் சத்தத்தால் விழித்தே இருந்தோம். விரைவில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நிர்வாகம், ஊழியர்களிடையே பரவியிருந்த அச்சத்தால் ஹோட்டலை மூட முடிவு செய்து, எங்களை வெளியேறுமாறு கூறினார்கள்," என்று தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறும் வழியில், கடைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருப்பதைக் கண்டதாகவும், சாலைகள், பேருந்து நிலையங்கள் காலியாக இருந்ததாகவும் ஜுகல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,ANTARIKSH JAIN/BBC படக்குறிப்பு,பதான்கோட்டை சேர்ந்த 70 வயதான அசோக் மேத்தா, தற்போதைய குண்டுவெடிப்புகள் 1971 போரை நினைவுகூர்வதாக பிபிசியிடம் தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நகரத்தின் இந்திய விமானப்படை தளம் ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "நேற்றிரவு நாங்கள் கண்ட ஓர் அசாதாரண காட்சி இது. இந்த குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் காதுகளைச் செயலிழக்க வைக்கும் அளவுக்கு இருந்தது" என்று 70 வயதான கடைக்காரர் அசோக் மேத்தா ஒரு நாள் முன்னதாகத் தன்னிடம் கூறியதாகவும் ஜுகல் புரோஹித் கூறினார். இந்த குண்டுவெடிப்புகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 1971 போரின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக அசோக் மேத்தா குறிப்பிட்டார். "எனக்கு 16 வயது இருந்தபோது, நானும் என் நண்பர்களும் விமானங்கள் கீழே விழுவதையும் குண்டுகள் வீசப்படுவதையும் தவறாமல் பார்ப்போம். இந்த முறை நடந்தது அவ்வளவு தீவிரமாக இல்லை. கடந்த முறை போல இப்போது நடக்காது என்று நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார். ஹோட்டலில் இருந்து வெளியேறிய பிறகு, சுமார் 5-6 கி.மீ காரில் பயணித்து, அண்டை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தை அடைந்ததாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தானுடன் சௌதி பேச்சுவார்த்தை சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சௌதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்தத் தொலைபேசி உரையாடலின்போது, பதற்றங்களைக் குறைக்கவும், நடந்து கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் தேவையான முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதிலும் இரு நாடுகளுடனும் சமச்சீரான, நெருங்கிய உறவைப் பேணுவதிலும் சௌதி உறுதியாக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பக்கமும் பாகிஸ்தான்: இந்தியாவின் இந்த எல்லையோர கிராமத்தில் மக்கள் என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வுஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அமிர்தசரஸ் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதா? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பாகிஸ்தானின் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை (மே 10) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், "இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்புகள், மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் போன்றவை பெரிய அளவில் அழிக்கப்பட்டதாக வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை" என்று தெரிவித்தார். மேலும், "தயவு செய்து பாகிஸ்தான் அரசால் பரப்பப்படும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்," என்றும் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கேட்டுக்கொண்டார். "அமிர்தசரஸை நோக்கி இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் ஓர் அபத்தமான கூற்றும் வெளியிடப்படுகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் இந்த பலவீனமான முயற்சிகள் தோல்வியடையும்," என்று குறிப்பிட்டார். அதோடு, ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசிய விக்ரம் மிஸ்ரி, "இந்திய ஏவுகணைகள் ஆப்கனை குறிவைத்ததாகச் சொல்வது முற்றிலும் அபத்தமானது," என்றார். "இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த நாடு ஆப்கனின் பொது மக்களையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் பலமுறை குறிவைத்துள்ளது என்பதை ஆப்கன் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார். அதேவேளையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரும் தங்கள் நாட்டின் மீது இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக வெளியான தகவலை உறுதியாக மறுத்துள்ளார். பாகிஸ்தானுடன் மோதல் போக்கு - இந்தியாவில் சமூக ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதா?2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா vs பாகிஸ்தான் - வல்லரசு நாடுகள் யாரை ஆதரிக்கின்றன?7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த அமெரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ (கோப்புப் படம்) அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோரிடம் பேசியுள்ளார். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மார்கோ ரூபியோவுடனான உரையாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். "இன்று காலை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவுடன் நான் உரையாடினேன். இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் ஒரு கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் இருந்து வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். ஜெய்சங்கர் உடனான உரையாடல் குறித்து அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி, "அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேசினார். பதற்றங்களைக் குறைக்கவும் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்கவும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்." இதனுடன் எதிர்காலத்தில் எந்தவொரு சர்ச்சையையும் தவிர்க்க இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உதவ முடியும் என்றும் மார்கோ ரூபியோ கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடனான பேச்சுவார்த்தை குறித்தும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. "இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடன் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, பதற்றங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய இரு தரப்பினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் எதிர்கால மோதலைத் தவிர்க்க பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்க உதவும் என்று தெரிவித்தார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வாறு செயல்படும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - பாகிஸ்தான் மோதல் எவ்வாறு பரிணமிக்கும்? முழு பார்வை9 மே 2025 'பாகிஸ்தானின் அதிவேக ஏவுகணைகளை இந்தியா முறியடித்தது' – கர்னல் சோபியா குரேஷி ஷார்ட் வீடியோ Play video, "'பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை ஏவியது' - கர்னல் சோஃபியா குரேஷி கூறியது என்ன?", கால அளவு 1,30 01:30 காணொளிக் குறிப்பு, இன்று (மே 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதல் குறித்து விளக்கினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லை நெடுகிலும் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் டிரோன் ஊருவல்கள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறினார். அவரது கூற்றுப்படி, ஸ்ரீநகரில் இருந்து நலியா வரை 26 இடங்களில் வான் வழியாக ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் அவற்றில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன. பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில் அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணை ஏவப்பட்டதாகவும் அதை இந்தியா செயலிழக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் குறித்த தகவல்களையும் கர்னல் சோபியா குரேஷி பகிர்ந்து கொண்டார். "பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்த பிறகு, இந்திய ஆயுதப்படைகள் திட்டமிட்ட முறையில் பதிலடி தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தானின் தொழில்நுட்ப கட்டமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டன." "ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹிம்யார் கான், சுக்கூர் மற்றும் சுனியாவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளங்கள் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களால் தாக்கப்பட்டன." என்றார் அவர். பாகிஸ்தானின் பஸ்ரூரில் அமைந்துள்ள ரேடார் தளத்தையும் சியால்கோட்டில் உள்ள விமானப் போக்குவரத்து தளத்தையும் இந்தியா குறிவைத்ததாக கர்னல் குரேஷி கூறினார். பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு, அது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருடன் இணைந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது," என்று கூறினார். இந்தியாவின் இந்தத் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்புப் படம்) பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தனது 3 ராணுவ விமான தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் பேசும்போது, இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உரிய வகையில் "பதிலளிக்கும்" என்று தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். நாட்டின் படைகள் 'முழுமையாக தயாராக' இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறும் விமானப்படைத் தளங்களில் ஒன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் ஆகும். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்திகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்துகிறதா?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வாறு செயல்படும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தகவல் இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐஎஸ்பிஆரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த பதிலடி நடவடிக்கையை 'ஆபரேஷன் பன்யன் மார்ஸ்' என்று பெயரிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை. இந்தியா vs பாகிஸ்தான் - வல்லரசு நாடுகள் யாரை ஆதரிக்கின்றன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாபில் ஏவுகணை போன்ற பொருட்கள் கண்டெடுப்பு - மக்கள் என்ன சொல்கிறார்கள்?2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,ஜம்மு நகரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்முவின் ரெஹாரி காலனியில் தாக்குதல் ஜம்மு நகரத்தின் ரெஹாரி காலனி மீது நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்து போனதாகவும் உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று மக்கள் கூறினர். உள்ளூர்வாசி ராகேஷ் குப்தா கூறுகையில், "ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது. எங்கும் பயம் மற்றும் பீதி நிறைந்த சூழல் நிலவியது. பாகிஸ்தான் ஏன் சாதாரண மக்களைத் தாக்குகிறது?" என்றார். இந்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்று சுரங்கப்பாதையில் சிக்கிய மசூத் அசார்9 மே 2025 இந்தியா பாகிஸ்தான் பதற்றம் - அண்டை நாடுகள் யார் பக்கம்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு,பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ரெஹாரி காலனியில் வாகனங்கள் சேதமடைந்தன. பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, சிலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிபிசி குழு அங்கு இருந்தபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் போர் விமானங்கள் மேலே பறக்கத் தொடங்கிய போது அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதால், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாக். தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அதிகாரி ஒருவர் பலி - உமர் அப்துல்லா பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ராஜௌரியில் இருந்து சோகமான செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் மாவட்டத்தில் இருந்தார். எனது தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்," என்று பதிவிட்டுள்ளார். ராஜௌரி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறினார். "இன்று பாகிஸ்தான் ராஜௌரி நகரத்தை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இதன் போது, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபாவின் வீடு குறிவைக்கப்பட்டு, தாக்குதலில் அவர் இறந்தார்." என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Play video, "32 விமான நிலையங்கள் மூடல்... 26 இடங்களில் டிரோன் தாக்குதலா? இரவு நடந்தது என்ன?", கால அளவு 2,36 02:36 காணொளிக் குறிப்பு,32 விமான நிலையங்கள் மூடல்... 26 இடங்களில் டிரோன் தாக்குதலா? இரவு நடந்தது என்ன? - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglek9re7l2o
  9. 10 MAY, 2025 | 01:07 PM முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த காணிகளுக்கு அண்மையாக சனிக்கிழமை (10) காலை குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் தனது பணியாட்கள் மூலம் உழவு செய்துள்ளார். இதன்போது அவ்விடத்துக்கு வருகை தந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், பொலிஸார் இணைந்து விவசாய நடவடிக்கைகளை தடுத்ததோடு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும், உழவியந்திரத்தினையும் கைது செய்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த காணியின் உரிமையாளர் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் பணியாளர்கள் மூலமாக விவசாய நடவடிக்கைக்கு ஆயத்தங்களை மேற்கொண்ட போதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணியாளர்களான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/214351
  10. 10 MAY, 2025 | 12:12 PM தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியில் ஏற்றுமதிக்காக (Cavendish) கேவண்டிஷ் வாழைச்செய்கைக்காக அரை ஏக்கர் வீதம் இலவச குத்தகை அடிப்படையில் 5 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். இத்திட்டமானது இளைஞர் மற்றும் யுவதிகளை விவசாயத்தினை நோக்கி ஈர்ப்பதற்காகவும், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்திற்காகவும், வறுமையினை ஒழிப்பதற்காகவும், மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள விவசாய காணிகளை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கங்களின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர் யுவதிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட எந்தவொரு கிராம அலுவலர் காரியாலயத்திலும் விண்ணப்ப படிவத்தினை புதன்கிழமை (14) தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை (28) வரை உள்ள வேலை நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்திற்கு ஏற்படும் செலவில் 25% இனை பயனாளிகள் செலுத்தும் இயலுமையை கொண்டிருக்க வேண்டும். பின்வரும் மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வதிவிடத்திற்கான புள்ளிகள் (தேராவில் கிராமம் உடையார்கட்டு கிராமங்கள், அருகே உள்ள கிராமங்களில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில், மாவட்டத்தில் மற்றும் மாகாணத்தில்) பயிர்செய்யும் தன்மை, சமூக நிலை (பெண் தலைமைத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) மற்றும் வயதெல்லை என்பவற்றின் அடிப்படையில் தேர்வுகள் இடம்பெறும். விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் தீர்மானம் மற்றும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் என்பன அனுப்பிவைக்கப்படும். பிரதேச செயலகம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் பயனாளிகள் எனும் அடிப்படையில் நான்கு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். மேலும் வாழைத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கப்படும் விவசாயிகள் கம்பனியில் அங்கத்தவராக சேர்க்கப்படுவார்கள். அத்துடன் பயனாளிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கேவண்டிஷ் வாழை உற்பத்தியினை ஒப்பந்தம் மூலம் ஏற்றுமதிக்காக கைச்சாத்திடும் நிறுவனத்திற்கே வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் விண்ணப்பதாரி வதியும் கிராம ICUL கள உத்தியோகத்தர்களின் சிபார்சினை பெற்றுக்கொள்ளல் வேண்டும் அல்லது திருத்தங்களுடன் சிபார்சினை பெற்றுக்கொள்ளல் வேண்டும். அவ் விண்ணப்பங்களை புதன்கிழமை (28) ஆம் திகதி பிற்பகல் 3 மணி அல்லது அதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளையில் நேரடியாக கையளிக்க வேண்டும் அல்லது பதிவுத்தபாலில் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படல் வேண்டும். பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எக்காலத்திலும் குறித்த காணிகள் பயனாளிகளுக்கு சொந்தமாகாது என்பதுடன் ஏதிர்காலத்தில் தேவையேற்படின் குத்தகை காலத்தினை நீடிப்பது தொடர்பான தீரமானங்கள் எடுக்கப்படும். ஒப்பந்த சரத்துகள் மீறப்படின் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு ஏனைய பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். https://www.virakesari.lk/article/214339
  11. 10 MAY, 2025 | 03:56 PM இளைஞனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, டீச்சர் அம்மா என்பவர் இளைஞன் ஒருவனின் ஆண் உறுப்பில் பலமாக தாக்கியதால் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டீச்சர் அம்மா பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில் டீச்சர் அம்மாவின் கணவரும் முகாமையாளரும் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள டீச்சர் அம்மாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/214375
  12. டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா? பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் கண்காணிப்பு டிரோனை இயக்குகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தெற்காசியாவில் அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையே முதல் டிரோன் போர் வெடித்துள்ளது. வியாழக்கிழமையன்று, தனது 3 ராணுவ தளங்கள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் உடனடியாக மறுத்தது. அதற்குப் பிறகு சில மணிநேரத்தில் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதற்கு இந்தியா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பகையால், தங்கள் எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் பீரங்கிகளை மட்டுமல்ல, ஆளில்லா ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது நிலைமை ஆபத்தான புதிய கட்டத்தை எட்டிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இரு நாடுகளுமே நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமாகிவிட்டன. டிரோன்கள், தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடியவை. ஆனால் தாக்குதல் நடத்தியதை மறுக்கக்கூடிய வாய்ப்புகளும் இருப்பதால், டிரோன்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டன. "டிரோன்களின் சகாப்தத்திற்குள் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நுழைந்துவிட்டது. 'கண்களுக்குப் புலப்படாத கண்கள்' மற்றும் ஆளில்லாவிட்டாலும் அதிக துல்லியத்துடன் தாக்குதலை நடத்தலாம் என்பது டிரோன்களின் முக்கிய அம்சம். டிரோன் போரில் தேர்ச்சி பெற்ற தரப்பே, தெற்காசியாவின் வான் பகுதியில் போர்க்களத்தையும், போரையும் முடிவு செய்யும்" என்று அமெரிக்க கடற்படை போர் கல்லூரியின் பேராசிரியர் ஜஹாரா மதிசெக் பிபிசியிடம் கூறினார். புதன்கிழமை காலை முதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதிலும், எல்லை தாண்டி சுட்டதிலும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. மறுபுறம், பாகிஸ்தானின் ஷெல் தாக்குதல்களில் குறைந்தது 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறும் நிலையில், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என பாகிஸ்தான் கூறுகிறது. வியாழக்கிழமையன்று, கராச்சி, லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், லாகூரில் ஒன்று உள்பட பாகிஸ்தானின் பல வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை செயலிழக்கச் செய்ததாக இந்தியா கூறியது. இந்தியாவின் கூற்றை பாகிஸ்தான் மறுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வியாழக்கிழமை கராச்சியில் டிரோன் எச்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன லேசர் வழிகாட்டுதலில் இயங்கும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகள், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் (UAV) போன்றவை இந்த நவீனப் போரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை, ராணுவ நடவடிக்கைகளின் துல்லியம் மற்றும் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகின்றன. வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் இவை பயன்படும். அவற்றில் சில, லேசர் உதவியுடன் இலக்குகளை நோக்கி நேரடியாக ஏவப்படலாம். எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றவும், மட்டுப்படுத்தவும் டிரோன்களை பயன்படுத்தலாம். எதிரி ரேடாரை தூண்டுவதற்காக, டிரோன்களை வேண்டுமென்றே பறக்கவிடலாம். இதனால் தூண்டப்பட்ட எதிரி ரேடார் சமிக்ஞைகளை வெளியிடும்போது அதன் இருப்பிடத்தை அறிந்து மற்றொரு தாக்குதல் டிரோன் மூலமோ அல்லது கதிர்வீச்சைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலமோ அந்த ரேடாரை அழிக்கலாம். "யுக்ரேன்- ரஷ்யா போரில் இப்படித்தான் நடக்கிறது. விலை மதிப்பு மிக்க, மனிதர்களால் இயக்கப்படும் போர் விமானங்களை ஆபத்தில் ஆழ்த்தாமல் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதில் டிரோன்கள் இவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று பேராசிரியர் மேட்டிசெக் கூறுகிறார். பெரும்பாலும் இஸ்ரேலிய தயாரிப்பான IAI சர்ச்சர், ஹெரான் போன்ற உளவு டிரோன்களின் அடிப்படையிலேயே இந்தியாவின் டிரோன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்பி, ஹாரோப் போன்ற டிரோன்கள் முக்கியமானவை. குறிப்பாக ஹாரோப் டிரோன்கள் மதிப்பு மிக்க, துல்லியத் தாக்குதல் போர் முறைக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் ஹெரான் டிரோன், அமைதிக்கால கண்காணிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய "வானத்தில் மிக உயரத்தில் இருந்து பார்க்கும் கண்கள்" என்று நிபுணர்கள் கூறுகின்றனர். IAI சர்ச்சர் Mk II முன்கள நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. இந்த டிரோன்கள், தொடர்ந்து 18 மணிநேரம் வரை இயங்கக் கூடியவை. மேலும், அதிகபட்சம் 7,000 மீ (23,000 அடி) உயரம் வரை பறந்து 300 கி.மீ. வரை செல்லக் கூடியவை. இந்தியாவிடம் உள்ள போர் டிரோன்களின் எண்ணிக்கை "குறைவு" என்று பலர் கருதுகின்றனர். 40 மணிநேரம் மற்றும் 40,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய 31 MQ-9B பிரிடேட்டர் டிரோன்களை வாங்க அமெரிக்காவுடன் செய்துள்ள 4 பில்லியன் டாலர் ஒப்பந்தம், தாக்குதல் திறன்களை அதிகரிக்கும் இந்தியாவின் முயற்சிகளைச் சுட்டிக் காட்டுகிறது. டிரோன்களை ஒரே நேரத்தில் திரளாகப் பயன்படுத்தும் தந்திரோபாயங்களை இந்தியாவும் உருவாக்கி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான சிறிய டிரோன்களை பறக்க விடுகையில் அவற்றை அழிப்பதிலேயே எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகள் முழு திறனையும் பயன்படுத்த நேரிடும் என்பதால், தனது மதிப்புமிக்க போர் விமானங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானின் டிரோன் படை, "விரிவானது மற்றும் மாறுபட்டது". இது உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகளை உள்ளடக்கியது என்று லாகூரை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் எஜாஸ் ஹைதர் பிபிசியிடம் தெரிவித்தார். பயங்கரவாத முகாம்கள் குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் அளித்த பதில் என்ன?8 மே 2025 பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல்கள் பற்றி சீனா, அமெரிக்கா கூறுவது என்ன?7 மே 2025 'இந்தியாவின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': பாகிஸ்தான் பிரதமர் - நேரலை8 மே 2025 பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு,வியாழக்கிழமை கராச்சியில் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்கின்றனர். சீனா, துருக்கி மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் மாதிரிகளைக் கொண்ட "ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள்" பாகிஸ்தானிடம் இருப்பதாக அவர் கூறினார். குறிப்பிடத்தக்க தளங்களில் சீனாவின் CH-4, துருக்கியின் பைரக்டர் அகின்சி மற்றும் பாகிஸ்தானின் சொந்த புராக் மற்றும் ஷாபர் டிரோன்கள் உள்ளன. பாகிஸ்தான் விமானப்படை (PAF) கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக ஆளில்லா அமைப்புகளை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக ஹைதர் கூறினார். மனிதர்கள் இயக்கும் போர் விமானங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வடிவமைக்கப்பட்ட "லாயல் விங்மேன் (loyal wingman)" டிரோன்களை உருவாக்குவதிலும் பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். "ஹாரோப் மற்றும் ஹெரான் டிரோன்களை வழங்கும் இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவி இந்தியாவுக்கு முக்கியமானது. அதே நேரத்தில் துருக்கி மற்றும் சீனாவின் டிரோன் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் நம்பியுள்ளது. இது, இந்தியா-பாகிஸ்தான் ஆயுதப் போட்டியை எடுத்துக்காட்டுகிறது" என்று பேராசிரியர் மேட்டிசெக் நம்புகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்திய டிரோன் தாக்குதல்கள் அவர்களின் மோதலில் முக்கியமானதாக இருக்கும். அதே வேளையில், ரஷ்யா - யுக்ரேன் மோதலில் காணப்பட்ட டிரோன்களை மையமாகக் கொண்ட போரிலிருந்து இந்த மோதல் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபடுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அங்கு, டிரோன்கள் ராணுவ நடவடிக்கைகளின் மையமாகிவிட்டது. இரு தரப்பினரும் கண்காணிப்பு, இலக்கு மற்றும் நேரடித் தாக்குதல்களுக்கு ஆயிரக்கணக்கான டிரோன்களை பயன்படுத்துகின்றனர். "போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளுக்குப் பதிலாக [நடந்து கொண்டிருக்கும் மோதலில்] டிரோன்களை பயன்படுத்துவது என்பது ராணுவத்தின் மட்டுப்பட்ட தாக்குதல் விருப்பத்தைக் குறிக்கிறது. டிரோன்கள், மனிதர்களால் இயக்கப்படும் போர் விமானங்களைவிட குறைவான தாக்குதல் திறன் கொண்டவை. எனவே ஒரு வகையில், இதைக் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்றே கூறலாம். இருப்பினும், இந்த முன்னெடுப்பு விரிவான வான்வழித் தாக்குதலுக்கான முன்னோட்டமாக இருந்தால், கணக்கீடு முற்றிலும் மாறுபடும்," என்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் மனோஜ் ஜோஷி பிபிசியிடம் கூறினார். ஜம்முவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டிரோன் தாக்குதலானது, "தூண்டுதல் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் திட்டமிட்ட செயலாகத் தோன்றுகிறது. இது பாகிஸ்தானின் முழு அளவிலான பதிலடி அல்ல" என்று எஜாஸ் ஹைதர் நம்புகிறார். இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் பற்றி சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?8 மே 2025 பாகிஸ்தானில் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பின்னணி8 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமிர்தசரஸின் எல்லைக் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணை பாகங்களைப் பார்வையிடும் இந்திய ராணுவ வீரர்கள் "இந்தியாவுக்கு எதிரான உண்மையான பதிலடித் தாக்குதல் என்பது, அதிர்ச்சியையும் பிரமிப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். அது விரிவானதாக, பல தளங்களை உள்ளடக்கியதாகவும் பரந்த அளவிலான நோக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கும். தற்போதைய 'பழிக்குப் பழி' நடவடிக்கைகளைத் தாண்டி, தீர்க்கமான தாக்கத்தை வழங்குவதாக இருக்கும்" என்று ஹைதர் கூறுகிறார். யுக்ரேன் போரில், அடிப்படைப் போர்க்களமே டிரோன்களால் மறுவடிவம் பெற்றுள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் டிரோன்களின் பங்கு மிகவும் குறைவாகவும் ஒரு குறியீடாகவும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டிரோன் போர் நீண்ட காலம் நீடிக்காது. இது மாபெரும் மோதல் ஒன்றின் தொடக்கமாக இருக்கலாம்" என்று ஜோஷி கூறுகிறார். "இது பதற்றத்தைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். இப்படி இரண்டு சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. நாம் எந்தத் திசையில் செல்வோம் என்பதை நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது." இந்தியா, தனது துல்லியத் தாக்குதல் கோட்பாட்டிற்கு டிரோன்களை பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. எல்லையைக் கடக்காமல் தாக்குதல் நடத்துவதற்கு வழக்கமான போர் விமானங்களுக்கான மாற்றாக டிரோன்கள் இருக்கின்றன. இருப்பினும் சில முக்கியமான கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது. "அரசியல் மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைக்கான வரம்பை டிரோன்கள் குறைக்கின்றன. போரை விரிவுபடுத்தும் அபாயங்களைக் குறைக்க முயலும்போது, கண்காணிப்பு மற்றும் தாக்குதலுக்கான வாய்ப்புகளை டிரோன்கள் வழங்குகின்றன," என்று பேராசிரியர் மேட்டிசெக் கூறுகிறார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmkwrg0y0po
  13. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு! Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 11:24 AM டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில், முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை விராட் கோலியிடம் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, இருபதுக்கு 20 போட்டியில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லையென அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், ரோகித் சர்மா எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு அணியின் தலைவராக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியான நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக விராட் கோலி இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார். விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களை அடித்தமை ஒரு இன்னிங்சில் அதிகபட்ச விராட் கோலியின் டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை ஆகும். https://www.virakesari.lk/article/214345
  14. இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு : பாகிஸ்தான் 10 MAY, 2025 | 09:23 AM இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட் விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர். விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் புகை மண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214332
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசூத் அசார் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 9 மே 2025 ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார், முதன்முதலில் ஜனவரி 29, 1994 அன்று வங்கதேச விமானத்தில் டாக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தார். அவரிடம் போர்த்துகீசிய பாஸ்போர்ட் இருந்தது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் அவரைப் பார்த்து, "நீங்கள் பார்க்க ஒரு போர்த்துகீசியர் போல இல்லை" என்றார். மசூத் உடனே, "நான் குஜராத்தி பூர்வீகம் கொண்டவன்" என்றார். அதைக் கேட்ட பிறகு, அவரை மீண்டும் ஏறெடுத்துப் பார்க்காமல், பாஸ்போர்ட்டில் சீல் வைத்தார் அந்த அதிகாரி. இந்தியா வந்த சில நாட்களுக்குள், ஸ்ரீநகரின் தெருக்களில் உலாவத் தொடங்கினார் மசூத் அசார். அங்கு, இளைஞர்களைத் தூண்டிவிட உரைகள் நிகழ்த்துவது, காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டபோது மத்தியஸ்தம் செய்வது போன்ற செயல்களைச் செய்து வந்தார். அவருக்கு இன்னொரு முக்கியமான பணியும் இருந்தது. காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஈர்ப்பது. ஒருமுறை அவர் அனந்த்நாக்கில், ஒரு ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். உடனடியாக, அவர் ஆட்டோவில் இருந்து குதித்து ஓடத் தொடங்கினார். ஆனால், ராணுவ வீரர்கள் அவர்களைப் பிடித்தனர். "இந்திய அரசாங்கத்திற்கு என்னை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க அதிகாரம் இல்லை", இவ்வாறு மசூத் அசார் அடிக்கடி கூறி வந்தார். மசூத் கைது செய்யப்பட்ட பத்து மாதங்களுக்குள், தீவிரவாதிகள் டெல்லியில் சில வெளிநாட்டினரை கடத்திச் சென்றனர். பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால் தீவிரவாதிகளின் முயற்சி தோல்வியடைந்தது. சஹாரன்பூர் எனும் நகரிலிருந்து பணயக்கைதிகளை விடுவிப்பதில் உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறையினர் வெற்றி பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமன் காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கியவர் ஒரு வருடம் கழித்து, ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பு மீண்டும் சில வெளிநாட்டினரை கடத்திச் சென்று மசூத் அசாரை விடுவிக்க முயற்சித்தது. ஆனால், அதுவும் தோல்வியடைந்தது. ஜம்முவில் உள்ள கோட் பலவால் சிறையிலிருந்து 1999ஆம் ஆண்டில், மசூத்தை தப்பிக்க வைக்க ஒரு சுரங்கப்பாதை கூட தோண்டப்பட்டது. ஆனால் மசூத் அசார் குண்டாக இருந்ததால் அதில் அவர் சிக்கிக்கொண்டார். மீண்டும் அவர் பிடிபட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 1999இல், தீவிரவாதிகள் ஒரு இந்திய விமானத்தைக் கடத்தி கந்தஹாருக்குக் கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்தவர்களை மீட்பதற்காக மூன்று தீவிரவாதிகளை விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதில் ஒருவர், மசூத் அசார். ஆனால் இந்த முடிவுக்கு அப்போது ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா சம்மதிக்கவில்லை. எனவே அவரை சமாதானப்படுத்துவதற்காக, இந்திய உளவுத்துறை முகமையான ராவின் அப்போதைய தலைவர் அமர்ஜீத் சிங் துலத்தை ஸ்ரீநகருக்கு அனுப்பியது மத்திய அரசு. இந்தியா, பாகிஸ்தான் மோதல்: சமூக ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதா? உண்மை என்ன?9 மே 2025 இந்தியா, பாகிஸ்தான் இடையே நீடிக்கும் சச்சரவுக்கு காரணமான காஷ்மீர் பிரச்னையின் முழு பின்னணி9 மே 2025 படக்குறிப்பு,இந்திய உளவுத்துறை முகமையான ராவின் முன்னாள் தலைவர் அமர்ஜீத் சிங் துலத்துடன் ரெஹான் ஃபசல் தீவிரவாதிகள் முஷ்டாக் அகமது சர்கார் மற்றும் மசூத் அசாரை விடுவிக்க முடியாது என அப்துல்லா கூறினார். அவரை சமாதானப்படுத்த துலத் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ரா தலைவர் டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் வந்தார். சர்கார் ஸ்ரீநகர் சிறையிலிருந்தும், மசூத் அசார் ஜம்முவில் உள்ள கோட் பலவால் சிறையிலிருந்தும் ஸ்ரீநகருக்குக் கொண்டுவரப்பட்டனர். துலத்தும் மற்றவர்களும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். "எனது விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அவர்கள் இருவரது கண்களும் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் விமானத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தனர். விமானத்தின் நடுவில் ஒரு திரை இருந்தது. திரையின் ஒரு பக்கத்தில் நானும், மறுபுறம் சர்கார் மற்றும் மசூத் அசாரும் இருந்தனர்," என்று துலத் கூறினார். "விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டெல்லியை விரைவில் அடையுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏனென்றால் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கந்தஹார் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்" என்றார் துலத். "நாங்கள் டெல்லியில் தரையிறங்கியவுடன், அந்த இருவரையும் ஜஸ்வந்த் சிங்குடன் வேறொரு விமானத்தில் ஏற்றிச் சென்றோம். மூன்றாவது தீவிரவாதி உமர் ஷேக் ஏற்கனவே அந்த விமானத்தில் இருந்தார்," என்று கூறினார். ஜஸ்வந்த் சிங் கந்தஹாருக்குச் சென்றதற்கான காரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அஜித் தோவல் அதற்கு முன்னர், மூவரையும் இந்தியாவிலிருந்து கந்தஹாருக்கு யார் அழைத்துச் செல்வது என்ற கேள்வி எழுந்தது. வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் கட்ஜு, புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அஜித் தோவல், ரா-வின் அதிகாரி சிடி சஹாய் என கந்தஹாரில் இருந்த அனைவரும் ஒரே கருத்தையே கூறினர். 'தேவைப்பட்டால், முக்கிய முடிவுகளை உடனடியாக களத்தில் எடுக்கக்கூடியவர்களை மட்டுமே இங்கு அனுப்ப வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு முடிவுக்கும் டெல்லியின் அனுமதிக்காக காத்திருக்கக்கூடிய சூழ்நிலை இங்கு இல்லை.' ஜஸ்வந்த் சிங்கின் விமானம் கந்தஹார் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, நீண்ட நேரம் தாலிபன் தரப்பிலிருந்து யாரும் அவரைச் சந்திக்க வரவில்லை. அவர் விமானத்தில் அமர்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் சீனாவுக்கு என்ன ஆபத்து?9 மே 2025 இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் அதிகரித்த போர்ப் பதற்றம் குறைக்கப்பட்டது எப்படி?9 மே 2025 படக்குறிப்பு,ஜஸ்வந்த் சிங்கின் சுயசரிதை, 'A Call to Honour - In Service of Emergent India' ஜஸ்வந்த் சிங் தனது சுயசரிதையான 'A Call to Honour - In Service of Emergent India' புத்தகத்தில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வாக்கி-டாக்கியின் சத்தத்தைக் கேட்டேன். கவலையுடன் விவேக் கட்ஜு என்னிடம் வந்து, 'சார், பணயக்கைதிகளை அவர்கள் விடுவிப்பதற்கு முன்பாகவே, இந்த தீவிரவாதிகளை நாம் விடுவிக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்' என்று கூறினார். அந்த முடிவுக்கு சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை." "மூன்று தீவிரவாதிகளும் விமானத்தின் கதவருகே வந்தபோது, அவர்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்கப்பட்டதைக் கண்டேன். ஆனால், அவர்கள் கீழே இறங்காமல் இருக்க விமானத்தின் படிகளை அகற்றினோம். கீழே இருந்த மக்கள் மகிழ்ச்சியால் சத்தமாகக் கத்தினர்," என்று கூறியுள்ளார். அதற்கான காரணத்தை விவரித்த துலத், "நாங்கள் உண்மையான நபர்களைதான் கொண்டு வந்தோமா இல்லையா என்பதைக் கண்டறிய, பாகிஸ்தானிலிருந்து அந்த மூன்று தீவிரவாதிகளின் உறவினர்களை, ஐ.எஸ்.ஐ (ISI) கந்தஹாருக்கு அழைத்து வந்தது. அவர்கள் உண்மையான நபர்கள்தான் என்று அந்த உறவினர்கள் உறுதியாக நம்பியதும், அவர்கள் மீண்டும் எங்கள் விமானத்திற்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே இருட்டியிருந்தது. குளிரத் தொடங்கியது" என்றார். பரிசாக வழங்கப்பட்ட பைனாகுலர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கந்தஹாரில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐந்து மணிக்கு, கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை அஜித் தோவல் சந்திக்கத் தொடங்கினார். அவர் விமானத்திலிருந்து இறங்கும்போது, கடத்தல்காரர்கள் அவருக்கு ஒரு சிறிய பைனாகுலரை பரிசாகக் கொடுத்தனர். "விமானத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க இந்த பைனாகுலர்களை பயன்படுத்தியதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பின்னர் நான் கந்தஹாரிலிருந்து டெல்லிக்குச் சென்றபோது, அந்த பைனாகுலரை வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் காட்டினேன். அது கந்தஹாரில் எங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைவூட்டுவதாக அவர் என்னிடம் கூறினார். அந்த பைனாகுலரை அவருக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்தேன்," என்று தோவல் கூறினார். சோஃபியா குரேஷி: இந்தியாவின் தாக்குதலை உலகிற்கு வெளிப்படுத்திய இவர் யார்?8 மே 2025 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தானும் இந்தியாவின் பதிலும்8 மே 2025 விமானத்தில் எழுந்த துர்நாற்றமும், கோழி எலும்புகளும் பட மூலாதாரம்,GETTY IMAGES வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் இந்திய அதிகாரிகள் குழுவும் கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளுடன் அதே நாளில் இந்தியா திரும்பினர். இருப்பினும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த ஏ.ஆர்.கன்ஷ்யாம், கடத்தப்பட்ட இந்திய விமானத்திற்கு எரிபொருள் நிரப்பவும், அதை மீண்டும் டெல்லிக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் கந்தஹாரில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் இது தொடர்பாக கருத்து கூறுகையில், "எல்லோரும் சென்ற பிறகு, நான் அந்த விமானத்திற்குள் சென்றேன். மிக மோசமான துர்நாற்றம் வீசியது. விமானியின் கேபின் வரை கோழி எலும்புகளும் ஆரஞ்சு தோல்களும் கிடந்தன. கழிப்பறை மிகவும் மோசமாக இருந்தது. அது பயன்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இருந்தது" என்று தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.கன்ஷ்யாம் சிவப்பு சூட்கேஸ் குறித்த மர்மம் பட மூலாதாரம்,GETTY IMAGES கமாண்டர் கேப்டன் சூரி இரவு சுமார் 9 மணியளவில் கன்ஷ்யாமை சந்தித்தார். "ஐசி 184 விமானம் புறப்படுவதற்கு தாலிபன்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு எரிபொருள் நிரப்புவது குறித்து கூட அவர்கள் கவலைப்படவில்லை," என்று அவர் கூறினார். விமானத்தில் இருந்த கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ஒரு சிவப்பு சூட்கேஸை மீட்டு தங்களிடம் கொடுக்காவிட்டால் விமானத்தை இயக்க விடமாட்டோம் என்று தாலிபன்கள் நிபந்தனை விதித்தனர். "கேப்டன் சூரி 11 மணி வரை விமானத்திற்குள் இருந்தார். விமானத்தின் முன் ஒரு சிவப்பு நிற பஜெரோ கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். அதன் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன," என்று கன்ஷ்யாம் கூறினார். "கேப்டன் ராவ் என்ஜினை ஸ்டார்ட் செய்துவிட்டார். சில தொழிலாளர்கள் இன்னும் விமானத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தனர். விமானத்தில் இருந்து ஒரு சிவப்பு சூட்கேஸை எடுத்து பஜெரோ காரில் இருந்தவர்களுக்கு அவர்கள் காண்பித்ததாக கேப்டன் ராவ் என்னிடம் கூறினார். சூட்கேஸைக் அடையாளம் காண அந்தக் காருக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடத்தல்காரர்கள் இருந்திருப்பார்கள் போல". "பின்னர், அவர்கள் எதிர்பார்த்த அந்த சிவப்பு சூட்கேஸ் கிடைத்துவிட்டதாக கேப்டன் சூரி கூறினார். அதில் 5 கையெறி குண்டுகள் இருந்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு, கேப்டன் ராவ் எங்களிடம் திரும்பி வந்தார். நாங்கள் அனைவரும் அன்று இரவு விமான நிலைய ஓய்வறையில் தங்கினோம்," என்று கன்ஷ்யாம் கூறினார். இந்தியாவின் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் தடுக்க முடியாதது ஏன்?8 மே 2025 பாகிஸ்தானின் அதிகார மையமான பஞ்சாபில் உள்ள பஹாவல்பூரை இந்தியா ஏன் தாக்கியது?8 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கந்தஹாரில் கடத்தப்பட்ட விமானம் டெல்லிக்கு புறப்பட்ட இந்திய விமானம் மறுநாள் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்திய விமானம் ஆப்கானிஸ்தான் நேரப்படி காலை 9.43 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது. அதன் பிறகு, தாலிபன்களில் இருந்து ஒருவர் கூட கந்தஹார் விமான நிலையத்திற்கு வரவில்லை. விமான நிலையத்திலேயே இருந்த கன்ஷ்யாமுக்கு, கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு அருகில் ஒரு அதிகாரி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது, சில பாதாம்கள், உலர் திராட்சைகள், ஒரு சிறிய சீப்பு, ஒரு நகவெட்டி, ஆகியவை இருந்தன. தாலிபனின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவற்றை கன்ஷ்யாமுக்கு பரிசாக அனுப்பியிருந்தார். ஏனென்றால், கன்ஷ்யாம் கந்தஹார் விமான நிலையத்தில் இருந்தபோது, நகரத்திற்குள் செல்ல அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். கன்ஷ்யாம் நண்பகல் 12 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் விமானத்தில் ஏறினார். மூன்று மணி நேரம் கழித்து அவர் இஸ்லாமாபாத்தை அடைந்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wd632389jo
  16. 10 MAY, 2025 | 11:54 AM கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றுமொரு நபரான தனியார் வகுப்பு ஆசிரியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (09) முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தனியார் வகுப்பு ஆசிரியர் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனியார் வகுப்பு ஆசிரியர் , கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டிருந்தார். உயிரிழந்த மாணவி ஜனவரி 18 ஆம் திகதி எனது தனியார் வகுப்பில் இணைந்தார். முதல் வாரத்தில் மாணவி திடீரென சுயநினைவை இழந்தார். இதன்போது மாணவிக்கு முதலுதவி அளித்து, அவருடைய தந்தையை அழைத்து அவருடன் அனுப்பி வைத்தேன். மற்றொரு சந்தர்ப்பத்தில், மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்தார். பின்னர் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து. மாணவிக்கு முதலுதவி அளித்து, தந்தையுடன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். மூன்றாவது வாரத்தில், மாணவி அசாதாரண நடத்தையை வெளிப்படுத்துவதை அறிந்ததாக ஆசிரியர் கூறினார். அவர் செய்த ஒரு கண்காணிப்பின் போது மாணவியின் அசாதாரண நடத்தையை கவனித்து அவள் ஏன் தனியாக இருக்கிறார் என்று கேட்டேன். நான் அவரது அம்மாவை அழைத்தேன். பிரதான மண்டபத்திற்குச் சென்று, அங்கே காத்திருந்து அவருடைய அம்மாவிடம் பேசினேன்.. இந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவருடைய அம்மாவிடம் விளக்கினேன். சமூக ஊடகங்களில் பரவிய ஒரு அறிக்கையில், "நான் வகுப்பறைக்குச் சென்று, மாணவியை எழுப்பி, அவருடைய பெயரைச் சொல்லி, உன் பாடசாலையில் உனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, அதனால் நீ வகுப்பிற்கு வருவதை நிறுத்த வேண்டும்' என்று சொன்னேன் என கூறப்படுகிறது. அது என் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டு என்றும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் வகுப்பறைக்கு சென்றதில்லை. உண்மையில், நான் வகுப்பறைகளுக்கு அருகில் கூட செல்வதில்லை. "ஒரு வகுப்பறையில் ஐந்து மாணவர்கள் இருந்தாலும், நான் உள்ளே சென்று மாணவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சம்பவம் நடந்து 13 நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார். உண்மை விரைவில் வெளிவரும். நான் இதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை, ஆனால் உண்மை வெளிவரும், என்று தனியார் வகுப்பு ஆசிரியர் கூறுகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் அரசியல் என்று ஆசிரியர் கூறுகிறார். "நான் ஒரு அரசியல்வாதி என்பதால் இவ்வளவு தாக்கப்படுகிறேன். கடந்த 6-7 நாட்களாக எனக்கு எந்த நிம்மதியும் இல்லை. எனது அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் கொழும்பு பகுதியில் நான் ஒரு வெறுக்கத்தக்க நபராக மாற்றப்பட்டேன் என்றும் தனியார் வகுப்பு ஆசிரியர் கூறினார். தனது பின்னணியை விளக்கி, ஆசிரியர் கூறுகையில், அவர் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு வடக்கு அமைப்பாளராகவும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றுவதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 35,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக இருந்ததாகவும் கூறுகிறார். அவர் இதுவரை மாணவர்களுடன் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்றும், கல்வித் துறையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதற்காகக் கூட பாடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/214344
  17. 09 MAY, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்தும், ஆசிரியர் தொடர்பிலும் ஏன் கல்வி அமைச்சுக்கு முறையாக அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை மற்றும் நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கொழும்பு பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்டமை கவலைக்குரியது. இது உணர்வுபூர்வமானதொரு விடயமாகும். இவ்வாறான சம்பவங்களை எவருக்கும் குறிப்பாக பெற்றோருக்கு தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து பேசுவதிலும், தலையிடுவதிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் ரீதியானதொரு விடயமாக கருத கூடாது. 15 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவே சமூகம் என்ற அடிப்படையில் அனைவரும் தோல்வியடைந்துள்ளோம். இதற்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். இவ்வாறான சம்வங்கள் இனியும் தோற்றம் பெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை. குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன் அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன். கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சு , சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு தொடர்பாடல் நிலையில் செயற்படுவதற்கான பொறிமுறை ஒன்றை வகுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/214309
  18. Published By: DIGITAL DESK 2 09 MAY, 2025 | 04:14 PM (எம்.மனோசித்ரா) சரோஜா போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருக்கான பொறுப்பிலிருந்து விலகி, சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே அவர் இந்த அமைச்சுப்பதவியை வகிப்பதற்கு பொறுத்தமற்றவர். சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (9) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுகின்றார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார். பாடசாலையில் துன்புறுத்தலுக்கு உள்ளானதோடு மாத்திரமின்றி, மேலதிக வகுப்பொன்றிலும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுகின்றார். அந்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? இது தொடர்பில் கேள்வியெழுப்புவதற்காக பாராளுமன்றத்தில் நான் முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் எனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை. பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் முன்னிலையான குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியரைப் பாதுகாப்பதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது? மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு அவர் பொறுத்தமற்றவர் என்பது தெளிவாகியுள்ளது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/214294
  19. அமைச்சர் பிமல் தனது கருத்தை உடன் மீளப்பெற வேண்டும்; சபையில் சிறிதரன் எம்.பி வலியுறுத்து 09 MAY, 2025 | 08:38 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சி மக்களுக்கு கசிப்பையும் பணத்தையும் வழங்கியே உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள கருத்து முறையற்றது. நிராகரிக்கத்தக்கது. இந்தக் கருத்தை அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை குறைத்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி கசிப்பு மற்றும் பணத்தை வழங்கியே வென்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க முறையற்ற வகையில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். அவர் அந்தக் கருத்தை மீளப் பெற வேண்டும். உண்மையான நியாயமான ஜனநாயகவாதியாக இருந்தால் அவர் அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சியற்ற இனவாதமற்ற அரசியலை இந்த நாட்டில் செய்ய விரும்புகின்றார் என்றால் மற்றும் இனங்களை மதிக்கின்றார் என்றால் தன்னுடைய அந்த கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும். 1940 ஆம் ஆண்டில் தமிழரின் தேசியத் தந்தை செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்டு 27 வருடங்களாக கிடப்பில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சி 2004ஆம் ஆண்டில் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனால் வெளியில் கொண்டுவரப்பட்டு தமிழரின் தேசிய அடையாளமாக தரப்பட்ட கட்சி . ஒருகாலமும் தமிழரசுக் கட்சி எவருக்கும் மதுவை கொடுப்பதையோ, மதுவுக்கான அனுமதிகளை பெறுவதற்கோ அல்லது மதுபானசாலைகளை திறப்பதற்கோ சம்மதம் தெரிவித்த கட்சியுமல்ல, அதற்காக உடந்தையாக இருந்த கட்சியுமல்ல. அதேபோன்று நாங்கள் பணம் கொடுத்து வாக்கு பெற்றவர்களும் அல்ல. ஒரு தேசிய இனத்தினுடைய அடையாளத்தை அவர்களின் இருப்பை, அவர்கள் இந்த மண்ணிலே வாழ வேண்டியதற்கான வாழ்க்கை முறையை இழந்த இறைமையை மீட்பதற்காக போராடுகின்ற, தனித்துவமான இனத்தினுடைய விடுதலை இயக்கமே இலங்கை தமிழரசுக் கட்சி. எனவே எங்களுடைய கட்சி சார்பாக பொறுப்புடன், எங்களுடைய கட்சி அவ்வாறாக கசிப்போ, பணமோ வழங்குகின்ற கட்சி அல்ல என்பதனை மீண்டும் பதிவு செய்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/214308
  20. இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தம் 09 MAY, 2025 | 05:34 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் 2025 கிரிக்கெட் போட்டிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் தேவாஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பங்குதாரர்களுடனும் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்தாலோசித்த பின்னர் புதிய அட்டவணை மற்றும் மைதானங்கள் தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்' என சைக்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தங்களது வீரர்கள் தொடர்பாக வெளியிட்ட கரிசணை மற்றும் உணர்வுகளையும் ஒளிபரப்பாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு ஐபிஎல் ஆளுநர் பேரவை சகல முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் நமது ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலை ஆகியவற்றின்மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முழு நம்பிக்கை வைத்துள்ளது. அத்துடன் அனைத்து பங்குதார்களினதும் கூட்டு நலனுக்காக செயல்படுவது விவேகமானது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கருதுகிறது' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், சைக்கியா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோரிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தம் தொடர்பாக சகல அணிகளினதும் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே இந்திய நேரப்படி இந்த அறிக்கை பிற்பகல் 2.40 மணி அளவில் வெளியிடப்பட்டது. அணிகள் ஏற்கனவே கலைந்து செல்லத் தொடங்கியுள்ளதுடன் வீரர்களும் அதிகாரிகளும் அடுத்து கிடைக்கக்கூடிய முதலாவது விமானங்களில் இந்தியாவுக்கு வெளியேயும் உள்ளேயும் பயணிக்க தயாராகிவிட்டனர். தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்வது பொருத்தமல்ல என அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையில் தரம்சாலாவில் வியாழக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விமானத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்த இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/214307
  21. Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 12:16 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒய்வுபெறுவதாக இந்திய டெஸ்ட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, தனது இன்டக்ராம் கணக்கில் பதவிட்டுள்ளார். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் புதன்கிழமை (07) இரவு பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். அவரது இந்தத் தீர்மானம் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அவுஸ்திரேலியாவுக்கான டெஸ்ட் தொடர் விஜயத்தில் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியிருந்தார். எனினும் அந்தத் தொடர் 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தோல்வியில் முடிவடைந்து நான்கு மாதங்கள் கழித்தே ரோஹித் ஷர்மா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது நாட்டை வெள்ளை அங்கியுடன் பிரதிநிதித்துவம் செய்வது பெருங் கௌரவமாகும். கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறுகிறேன். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவேன்' என இன்டக்ராமில் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். போடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் ரோஹித் ஷர்மா, கடைசிப் போட்டியிலிருந்து தானாகவே விலகிக்கொண்டிருந்தார். ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற சூட்டோடு சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்திருந்தார். 2023 ரி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியாவுக்கு தலைமை வகித்த ரோஹித் ஷர்மா, இந்த வருடம் பாகிஸ்தானினும் துபாயிலும் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சம்பியனாக வழிநடத்தி இருந்தார். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ள ரோஹித் ஷர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளார். ஆனால், ஆபிரிக்கக் கண்டத்தில் 2027இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் வரை அவரால் தொடர முடியுமா என்பது சந்தேகமே. இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கான அணித் தலைவர் பதவியை ரோஹித் ஷர்மாவுக்கு கொடுக்க தெரிவாளர்கள் விரும்பவில்லை என்ற தகவல் புதன்கிழமை மாலை கசிய ஆரம்பித்தது. இதனை அடுத்தே அவர் தனது ஓய்வு குறித்து அறிவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 2013இல் அறிமுகமான ரோஹித் ஷர்மா, இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 18 அரைச் சதங்களுடன் 4301 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். அவரது சராசரி 40.6 ஆகும். தனது அறிமுக டெஸ்ட் தொடரில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக 288 ஓட்டங்களை மொத்தமாக குவித்து துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் டெஸ்ட் அணியில் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ரோஹித் ஷர்மா கடுமையாக போராட வேண்டி இருந்தது. எனினும் 2019இல் ஆரம்ப வீரர் ஸ்தானத்தை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான ரோஹித் ஷர்மா அதன் பின்னர் அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டார். 2021, 2023 ஆகிய வருடங்களில் நடைபெற்ற இரண்டு ஐசிசி டெஸ்ட் சம்பயின்ஷிப் இறுதிப் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரிய ரோஹித் ஷர்மா, அவுஸ்திரேலியாவை அந்த சொந்த மண்ணில் 2021இல் இந்தியா ஈட்டிய வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றியிலும் பங்களிப்பு செய்திருந்தார். https://www.virakesari.lk/article/214177
  22. யார் இந்த புதிய பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர்? Published By: DIGITAL DESK 3 09 MAY, 2025 | 04:27 PM அமெரிக்காவிலிருந்து தெரிவான முதல் பாப்பரசர் இவர் ஆவார். பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர் ( 14 ஆம் லியோ ) வின் இயற்பெயர் ரொபர்ட் பிரான்சிஸ் பிரெவஸ்ட் ஆகும். 1955 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி சிக்காக்கோவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் லூயி மாரியஸ் பிரெவஸ்ட், தாயாரின் பெயர் மில்ட்ரெட் மார்டினெஸ் ஆகும். இவர் தனது சிறுவயதில் சிக்காக்கோவிலுள்ள விண்ணேற்ப்பு அன்னை ஆலயத்தில் பீடப்பணியாளராக பணியாற்றினார். 1973இல் புனித ஆகுஸ்தினார் துறவர சபையின் சிறிய குருமடத்தில் தன்னுடைய உயர்நிலை கல்வியை முடித்தார். 1977இல் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டப்படிப்பை (B.Sc.) பெற்றார். இவர் ஜூன் மாதம் 19 ஆம் திகதி 1982 ஆம் ஆண்டு அருட்பணியாளராக திருநிலை படுத்தப்பட்டார். புதிய ஆகுஸ்தீனார் சபையில் துறவியாக இணைந்து, அவரது ஆரம்ப கால பணியை பெரு நாட்டில் ஆற்றினார். 1985–1986 மற்றும் 1988–1998 காலப்பாகுதிகளில் பெரு நாட்டில் பங்கு தந்தையாகவும் , மறைமாவட்ட அதிகாரியாகவும் , குருமட ஆசிரியராகவும் ,நிர்வாகியாகவும் பணியாற்றினார் . 2001 முதல் 2013 வரை ஆகுஸ்தீனார் துறவர சபை தலைவராகவும் பணியாற்றினார் . இவர் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார். 2015 முதல் 2023 வரை பெரு நாட்டின் சிக்லாயோ மறைமாவட்டத்தில் ஆயராகவும் பணியாற்றினார். இவர் 2023இல் மறைந்த பாப்பரசர் பிரான்சினால் கர்த்தினாலாக நியமிக்கப்பட்டார். இவர் ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீஸ் மொழிகளில் பேசக்கூடியவரும், லத்தீன் மற்றும் ஜேர்மன் மொழிகளை வாசிக்கக்கூடியவருமாவார். பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி புதிய பாப்பரசராக தெரிவானார். https://www.virakesari.lk/article/214262
  23. Published By: DIGITAL DESK 2 09 MAY, 2025 | 08:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சித் சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி அங்கு கசிப்பும் பணமும் விநியோகித்துள்ளது. அதேபோன்று இனவாதத்தை முன்னெடுத்தனர்.இதனை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தையும் தற்போது 341 உள்ளுராட்சி சபைகளில் 79 சதவீதமான அதிகாரத்தை கொண்டுள்ள கட்சியாகும். அதேபோன்று தொழிற்சங்க அதிகாரத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். இவ்வாறான எங்களின் பணிவு நிலை தொடர்பில் மக்களும் விமர்சிக்கின்றனர். கடந்த 15 வருடங்களில் மூன்று தடவைகளே உள்ளுராட்சித் தேர்தல்கள் நடந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவர்களின் கட்சி 270 சபைகளை வென்றது. 2611 உறுப்பினர்களையே கொண்டிருந்தனர். பின்னர் 2018ஆம் ஆண்டில் அந்த அதிகாரத்துடனேயே உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றினர். 231 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றனர். அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே இருந்தது. தமது ஜனாதிபதி, பிரதமர் பதவியை வைத்துக்கொண்டே 31 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்றியது. அப்போது அவர்கள் ஆட்சியில் இருந்து போனார்களா இல்லையே . 2018ஆம் ஆண்டில் எங்களிடம் ஒரு உள்ளூராட்சி சபைகளும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் பூச்சியத்தில் இருந்து 267 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் 3000க்கும் அதிகமான உறுப்பினர்களை பெற்றுள்ளோம். இப்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு 14 சபைகளே கிடைத்துள்ளன. அவற்றில் ஆட்சி அமைக்கக்கூடிய சபைகள் எத்தனை உள்ளன என்று தெரியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துப்பார்த்தால் 34 சபைகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி 14 சபைகளாக குறைந்துள்ளது. இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்தவொரு சபையும் கிடைக்கவில்லை.இலங்கை வரலாற்றில் தேசிய மக்கள் சக்தியே அதிகளவான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது . இந்நிலையில் வடக்கில் நாங்கள் இல்லாமல் போயுள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் வன்னி மாவட்டத்தில் எங்களின் வாக்குகள் அதிகரித்துள்ளன. வன்னி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி கசிப்பு விநியோகித்தது. பணமும் கொடுத்தனர். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். பச்சையான இனவாதத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவ்வாறு எங்களுக்கு விநியோகிப்பதென்றால் எவ்வளவோ விநியோகித்திருக்கலாம். குறைந்தது இந்த வீதியை திருத்துவோம் என்று கூறிக்கூட நாங்கள் ஒரு வாக்கையேனும் பெறவில்லை. கணக்கு வாக்கெடுப்பில் குறிப்பிடப்பட்ட வீதிகளை மாத்திரம் நாங்கள் சொல்லியிருக்கலாம். எந்தவொரு உறுப்பினரையும் நாங்கள் பணத்திற்காக வாங்கவில்லை. நாங்கள் இனவாதத்தை பயன்படுத்தவில்லை. நாங்கள் சுத்தமான அரசியல் செய்தோம். வடக்கில் வன்னி மாவட்டத்தில் மன்னாரில் தேசிய மக்கள் சக்தியே பெரிய கட்சியாக இருக்கின்றது. ஷொப்பிங் பேக்குடன் மன்னாரில் இருந்து புத்தளம் போய் இப்போது கப்பலில்கூட ஏற்றமுடியாதளவுக்கான சொத்துக்களை கொண்டவர்கள் நாங்கள் அல்ல. வவுனியாவிலும் நாமே பெரிய கட்சி , முல்லைத்தீவிலும் வாக்குகள் அதிகரித்துள்ளன. வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் வாக்குகளை அதிகரித்துள்ள ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி மட்டுமே. அதேபோன்று யாழ். மாவட்டத்தில் எமது கட்சிக்கு வரலாற்றில் உள்ளூராட்சி சபைகளில் ஒரு ஆசனமேனும் இருந்ததில்லை. ஆனால் இன்று 81 உறுப்பினர்கள் அங்கே இருக்கின்றனர். கிளிநொச்சியை சேர்த்தால் நூறு வரையிலான உறுப்பினர்கள் உள்ளனர். யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியே வரலாற்றில் சகல சபைகளையும் ஆட்சி செய்துள்ளது. யாழ். நகர சபையின் நிலைமை என்ன? பெரும் கதைகளை கதைத்துக்கொண்டிருக்கும் அந்தக் கட்சிக்கு 13 ஆசனங்களே கிடைத்துள்ளன. பொன்னம்பலத்தின் கட்சிக்கு 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் அந்த சபையை ஆட்சி செய்தவர்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி 10 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒன்றும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒன்றும் என்றே ஆசனங்கள் கிடைத்துள்ளன. நாங்கள் அங்கே புதியவர்கள். அந்த மண்ணை மிதிக்காதவர்கள் இப்போது அங்கே 150 உறுப்பினர்கள் உள்ளனர். வன்னியில் முதலிடத்தில் இருக்கும் கட்சி நாங்களே, முழு வடக்கிலும் தேசிய கட்சிகளில் பெரிய கட்சி நாங்களே.இம்முறை நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்யும் என்றார். https://www.virakesari.lk/article/214302
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும் (குறியீட்டு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே பதவி, பிபிசி நிருபர் 40 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார். "நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது . 25 இந்திய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் கூற்றுக்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தப் பதற்றம் குறித்து இந்தியா - பாகிஸ்தானின் அண்டை நாடுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் சமூக-பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நீண்ட காலமாகத் தொடர்ந்தால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரியது" என்று மிடில் ஈஸ்ட் இன்சைட்ஸ் பிளாட்பார்மின் நிறுவனர் முனைவர் சுபாதா செளத்ரி கூறுகிறார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு இந்த அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் போராடி வருவதாகவும், அத்தகைய நாடுகளுக்கு பொருளாதார நலன்கள் மிகவும் முக்கியமானவை என்றும் சுபாதா செளத்ரிகூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடுகள் இந்த பதற்றத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் நினைகிறார். இந்தியாவா, பாகிஸ்தானா? வல்லரசு நாடுகளின் ஆதரவு யாருக்கு?4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்று சுரங்கப்பாதையில் சிக்கிய மசூத் அசார்5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் சீனாவுக்கு என்ன ஆபத்து?9 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் பெரும்பாலானவை தங்கள் சொந்த பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட அண்டை நாடுகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் பூட்டான் போன்ற அண்டை நாடுகளுக்கு பல வழிகளில் மிகவும் முக்கியமானது. "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால், அது பல்வேறு அண்டை நாடுகளுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். நேபாளத்தில் இருந்து தொடங்கினால், நேபாளத்தின் வர்த்தகத்தில் 60 சதவீதம் இந்தியாவுடன் நடைபெறுகிறது. அது பாதிக்கப்படலாம். துறைமுகங்கள் மற்றும் வர்த்தக பாதைகளின் அடிப்படையில் நேபாளம் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட எல்லை உள்ளது. நேபாளம் இந்த பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறது, அதே நேரத்தில் சீனா இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நேபாளத்துடனான தனது உறவை மேலும் மேம்படுத்தலாம்" என்று சுபாதா செளத்ரி கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இதேபோன்ற பொருளாதார நெருக்கடி பூட்டானிலும் ஏற்படக்கூடும், ஏனெனில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அங்குள்ள சுற்றுலா துறையும் பாதிக்கப்படும். தெற்காசிய புவிசார் அரசியல் நிபுணரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, ஆப்கானிஸ்தானைத் தவிர, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தில் அனைத்து நாடுகளும் நடுநிலை வகிக்கும் என்று நம்புகிறார். இந்த விஷயத்தில் மற்ற அனைத்து அண்டை நாடுகளும் அமைதியாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். இந்தியா, பாகிஸ்தான் மோதல்: நள்ளிரவில் நடந்த டிரோன் தாக்குதல் - நேற்று முதல் நடந்தது என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் அதிகரித்த போர்ப் பதற்றம் குறைக்கப்பட்டது எப்படி?9 மே 2025 இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து கவலை தெரிவித்த துருக்கி அதிபர்9 மே 2025 பட மூலாதாரம்,X/SHEHBAZ SHARIF படக்குறிப்பு,வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார் "இந்தியா, இந்தப் பிராந்தியத்தில் ஒரு பெரிய பொருளாதார சக்தியாக இருக்கிறது. சிறிய அண்டை நாடுகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியாவுடன் ஆழமாக தொடர்புடையவையாக உள்ளன. இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா வருமானம் முக்கியம் என்பதால், இவ்வாறு நிலவும் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அவற்றின் விருப்பம்," என்று அரசியல் ஆய்வாளர் தனஞ்சய் திரிபாதி கூறுகிறார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.மேலும் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு நிறைய உதவியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோதியும் இலங்கைக்குப் பயணம் செய்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை விரைவில் தீர்க்க வேண்டும் என தனஞ்சய் திரிபாதி கூறுகிறார் இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் வெளியுறவு நிபுணர் கமர் ஆகா, இந்தியா அண்டை நாடுகளுடன் வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்கிறார். "மோதல் அதிகரித்தால் அது பொருளாதாரத்தைப் பாதிக்கும். போரின் போது பாதுகாப்புச் செலவு அதிகரிக்கிறது. அது வேலைவாய்ப்பு பாதிக்கும்" என்று கமர் அகா விளக்குகிறார். இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இருந்தபோதிலும், முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் பல விஷயங்களில் இந்தியாவுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. ''சீனா பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதன் முதலீட்டிலிருந்து சீனா அதிக நன்மைகளைப் பெறுகிறது என்று கருதப்படுகின்றது. எனவே மாலத்தீவுகள் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமாகிவிட்டன.'' என்கிறார் கமர் அகா இந்திய எல்லையில் நள்ளிரவு நடந்த தாக்குதலின் விளைவு என்ன? பாகிஸ்தான் கூறியது என்ன?9 மே 2025 பாகிஸ்தானில் இந்திய தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் பின்னணி8 மே 2025 இந்தியாவின் வான் தாக்குதல்: உடைந்த பாகங்கள் பற்றி தெரியவந்தது என்ன?7 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் நிலைப்பாடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், சீனாவின் நிலைப்பாட்டை பலர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. மேலும் அதன் வணிக நலன்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. சீனா தற்போது அமெரிக்காவுடன் வரிப் போரில் சிக்கியுள்ள நிலையில், இது சீனாவின் சொந்தப் பொருளாதாரத்திற்கும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் 'வருந்தத்தக்கவை' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் நிலையற்ற சூழலை ஏற்படுவதை சீனா ஒருபோதும் விரும்பாது என்றும், கோடிக்கணக்கான ரூபாயில் செய்யப்பட்டுள்ள அதன் முதலீடு வீணாகிவிடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். 2005 முதல் 2024 வரை சீனா பாகிஸ்தானில் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது . இது தவிர, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) மற்றும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் சீனா மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் ஆதரவு யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆண்டு ஜனவரியில், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் துபையில் சந்தித்தனர் ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதனைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறைப்பதாகவும் கூறியது. இந்த பதற்றம் குறித்து கவலை தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தை மூலம் இந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. "பாகிஸ்தானுடனான எல்லையை, அதாவது 'துராந்த் கோட்டை', இதுவரை எந்த ஆப்கானிஸ்தான் அரசும் அங்கீகரிக்கவில்லை. எனவே பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைத் தகராறு உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்தால், ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் நிற்பதைக் காணலாம்" என்று கமர் அகா கூறுகிறார். "இந்த எல்லைப் பிரச்னை, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த காலக்கட்டத்திலே நிலவியது. அப்போது நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலோ–ஆப்கான் போரின் முடிவில், இரு நாடுகளுக்குமிடையிலான எல்லையாக துராந்த் கோடு வரையறுக்கப்பட்டது." 1893 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் மன்னருக்கும் பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சர் மோர்டிமர் துராந்த்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. 1947 இல் பாகிஸ்தான் உருவானதற்குப் பிறகு, பல ஆப்கானிய ஆட்சியாளர்கள் துராந் ஒப்பந்ததை கேள்விக்குள்ளாக்கினார்கள். இதன் மூலம் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இடையே நீடித்துவரும் சிக்கலுக்கான விதை விதைக்கப்பட்டது. "தெற்காசியாவின் பெரும்பாலான நாடுகளுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது, இந்த மோதல் அதிகரித்தால் இந்த நாடுகளின் கவலைகளும் அதிகரிக்கும்" என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை இந்தியாவால் உண்மையில் தடுக்க முடியுமா?7 மே 2025 நிலத்தடியில் ஆயிரம் ஆண்டுகள் தாங்கி நிற்கும் அணுக் கிடங்கை அமைக்க முயலும் பிரான்ஸ்6 மே 2025 இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலம் என்ன? யாருக்கு வலிமை அதிகம்?7 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சியுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார். இதன் பிறகு அராக்சி இந்தியா வந்தார் இரான் முன் உள்ள சிக்கல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், இந்த வாரம் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கும் வருகை தந்தார். பஹல்காம் தாக்குதலை இரான் கண்டித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அங்கு நிலவும் பதற்றம் குறித்து பேசினார். இரானும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட எல்லை உள்ளது. "இந்தியா-பாகிஸ்தான் மோதல் விரைவில் முடிவுக்கு வருவதை இரான் விரும்புகிறது, ஏனெனில் பிராந்தியத்தில் மோதல் தீவிரமடைந்தால், பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால் இரானும் பாதிக்கப்படலாம்" என்று கமர் அகா கூறுகிறார். அதே நேரத்தில், உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார காரணங்களால் இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுவாக உள்ளன. இரானின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இரானுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை அனுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவிற்கான இரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் பத்து சதவீதத்தை இரானிய எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வந்தது. இது தவிர, இரானின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்தியா, சபாஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் சந்தைகளை அணுக விரும்புகிறது. ''இரான் இரு நாடுகளுடனும் உறவுகளை பேணுகிறது. அமைதியை நிலைநாட்ட அதன் முயற்சிகள் தொடரும்'' என்று பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.virakesari.lk/article/214302
  25. 09 MAY, 2025 | 05:36 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பவற்றுக்கு 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வெதுப்பகப் பொருட்களை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெதுப்பகச் சுற்றாடலில் இளையான்கள் பெருக இடமளித்தமை, அழுகிய உருளைக்கிழங்குகளை உணவு தயாரிப்புக்கு களஞ்சியப்படுத்தியமை, வெதுப்பகப் பொருட்களுடன் தொற்று ஏற்படும் வண்ணம் இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வேளை தன் மீதான குற்றச்சாட்டை வெதுப்பக உரிமையாளர் ஏற்றுக்கொண்டதையடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், அவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்யத் தவறியமை, சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருட்களை தொற்று ஏற்படும் வண்ணம் களஞ்சியப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து, மேற்கூறப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தது. https://www.virakesari.lk/article/214306

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.