Everything posted by ஏராளன்
-
ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? : இந்திய விமானப்படையின் விளக்கம் என்ன? பட மூலாதாரம்,ANI 11 மே 2025 பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் இன்று (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். ''ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிடுபவர்களை தண்டிப்பதையும், பயங்கரவாத கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டிருந்தது'' என்றார் ராஜீவ் கய். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்தியாவின் முப்படை அதிகாரிகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு '100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' இந்தியாவின் முதல் கட்ட ராணுவ நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூரின்' போது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராஜீவ் கய் கூறினார். மேலும், "துல்லியமாக குறிவைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், உயர்நிலையில் உள்ள பயங்கரவாதிகளான யூசுஃப் அசார், அப்துல் மாலிக் ரவுஃப் மற்றும் முதாஸ்ஸிர் அகமது ஆகியோரும் அடங்குவர்." என்றார் அவர் இந்த மூன்று பேருமே கந்தஹார் விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என ராஜீவ் கய் கூறினார். மேலும், ''இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானால் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன. எதிரியின் பீதியடைந்த, தவறான தாக்குதல்களால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்பட்டன. பல பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்." என்றார் ராஜீவ் கய் 'அலை அலையாக வந்த டிரோன்கள்' ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பேசுகையில், மே 7- ம் தேதி முதன்முறையாக தாக்குதல் நடத்தப்பட்ட போது பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்றார். ''பயங்கரவாத பயிற்சி முகாம்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. துல்லியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது '' என்றார் ஏ.கே.பார்தி. படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக அவர் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார் "மே 7ம் தேதி மாலையில் பாகிஸ்தானிலிருந்து பல டிரோன்கள் இந்தியாவின் விமானப்படைத் தளங்களை தாக்கின. ஜம்மு, உதம்பூர், பதான்கோட், அமிர்தசரஸ், பதிண்டா, டல்ஹவுசி , ஜெய்சல்மர் ஆகிய விமானப்படைத் தளங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த டிரோன்கள் ஒரே நேரத்தில் அலை அலையாக வந்தன. இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்புகள் இதற்காகத் தயார் நிலையில் இருந்தன. இந்த டிரோன்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளால், தளங்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை." என்று கூறினார் ஏ.கே.பார்தி. ரஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதா? ஷார்ட் வீடியோ Play video, "ரஃபேல் குறித்த கேள்விக்கு இந்தியாவின் பதில்", கால அளவு 1,26 01:26 காணொளிக் குறிப்பு,ரஃபேல் குறித்த கேள்விக்கு இந்தியாவின் பதில் மேலும் அவரிடம் இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,"நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார் மேலும் அவர், ''இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார் ''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்'' என்று கூறினார் ஏ.கே.பார்தி. 'கராச்சியைத் தாக்கத் தயாராக இருந்தோம்' - கடற்படை கூறுவது என்ன? ஷார்ட் வீடியோ Play video, "கடற்படை அதிகாரி", கால அளவு 1,07 01:07 காணொளிக் குறிப்பு,கடற்படை அதிகாரி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்," இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது" என்றார். ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்," அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது'' என கூறினார். "தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்," என்று பிரமோத் தெரிவித்தார். கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், "இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்'' என்றார் தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை எப்படி தொடங்கியது? ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய் பேசுகையில், "பாகிஸ்தானிலிருந்து ஹாட்லைனில் வந்த அழைப்பின் பேரில், நேற்று (மே 10) பிற்பகல் 3.35 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் உடன் தொலைபேசியில் பேசினேன். இதன் அடிப்படையில் எல்லை தாண்டிய குண்டு வீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது" என்றார். மேலும், "பாகிஸ்தானுடன் மே12ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தத்தை நீண்ட காலத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிப்பேன்" எனவும் ராஜீவ் கய் கூறினார். "ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில மணி நேரங்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் ராணுவம் அதனை மீறி, எல்லைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரவு முதல் காலை வரை தாக்குதல்கள் தொடர்ந்தது. இவை அனைத்தும் எதிர்கொள்ளப்பட்டன" என கூறிய ராஜீவ் கய், இது குறித்து பாகிஸ்தானுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். 'நடவடிக்கை தொடர்கிறது': இந்திய விமானப்படையின் அறிவிப்பு என்ன? இந்தநிலையில் இன்று பிற்பகல் தனது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னமும் செயல்பாட்டில் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''ஆபரேஷன் சிந்தூரின் கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறை நேர்மையோடும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது'' என இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது. மேலும், 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னமும் செயல்பாட்டில் இருப்பதால், இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் கொடுக்கப்படும் எனவும், இது குறித்த ஊகங்களையும், சரிபார்க்கப்படாத தகவல்களையும் பரப்ப வேண்டாம் என விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது. சண்டை நிறுத்த மீறல் புகார் - பாகிஸ்தானின் பதில் என்ன? சனிக்கிழமை ஏற்பட்ட ராணுவ நடவடிக்கை நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவு ஒன்றில்," இருநாடுகளுக்கிடையே சண்டை நிறுத்தத்தை உண்மையாக அமல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. சில பகுதிகளில் இந்திய படையினர் மீறல்களை நிகழ்த்தியதால் எங்கள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுடன் நிலைமையை கையாண்டு வருகின்றனர். சண்டை நிறுத்தத்தை அமைதியாக அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் சரியான நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சரி செய்யப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். களத்தில் உள்ள படைகள் கட்டுப்பாட்டுடன் உள்ளன" என்று கூறியுள்ளார். "ராவல் பிண்டி வரை தாக்கினோம்" பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,"பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் வரை சென்று தாக்கினோம்" 'ஆபரேஷன் சிந்தூர்' வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது இந்தியாவின் மன உறுதியின் சின்னம் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணைக்கான ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை ராஜ்நாத் சிங் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங்," இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், எல்லை தாண்டி வசித்தாலும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்" என்றார். "இந்தியாவுக்கு எதிரான மற்றும் பயங்கரவாத சக்திகளின் கைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதிகிடைப்பதை பாதுகாப்புப் படைகள் உறுதி செய்திருக்கின்றன" என்றும் ராஜ்நாத்சிங் கூறினார். இந்தியாவின் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியதன் மூலம் சரியான பதிலடி கொடுத்திருப்பதாகக் கூறிய ராஜ்நாத்சிங், "இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகள் மட்டுமல்லாது, நமது ராணுவப்படைகள் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல் பிண்டியையும் எட்டியுள்ளன" என்று ராஜ்நாத்சிங் கூறினார். 'சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல்' இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சனிக்கிழமை இரவில் காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே சனிக்கிழமை மாலை எட்டப்பட்ட உடன்பாட்டை கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் மீறி வருகிறது. எல்லையில் நடக்கும் மீறல்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டு இதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என நம்புகிறோம்'' என்றார் சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ''நிலவரத்தை ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் எந்தவொரு அத்துமீறல்களையும் சமாளிக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். மத்தியஸ்தம் செய்ததாகக் கூறும் அமெரிக்கா சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுமே அதை உறுதி செய்துள்ளன. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்தன. இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில், "அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டிருந்தார். இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில், "அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியா தொடர்ச்சியாக தயங்காமல் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இனியும் தொடரும்." என பதிவிட்டிருந்தார். பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார், தங்கள் நாடு சண்டை நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடங்கியது எங்கே? கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் தீவிரவாத மறைவிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் எந்தவொரு ராணுவ முகாமையோ பொது மக்களையோ குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறியது. மே 8ஆம் தேதி மாலையில், ஜம்மு உள்ளிட்ட மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியா மே 9ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தக் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பதற்றத்தைக் குறைக்குமாறு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தன. இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g3q1ldxxpo
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி; நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான ஒரு நினைவூட்டல் - கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா நாதன் Published By: RAJEEBAN 12 MAY, 2025 | 11:00 AM கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை, என தெரிவித்துள்ள கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா நாதன் நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நேற்றைய தினம் அர்த்தபூர்வமானதாக அமைந்தது, தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை திறக்கும் நிகழ்வில் நான் எனது சமூகத்தவருடன் இணைந்துகொண்டேன். கனடிய தமிழர் தேசிய அவைக்கும், பிரம்டன் தமிழ் சங்கத்திற்கும் மேயர் பட்ரிக் பிரவுனிற்கும் நகரத்தின் கவுன்சிலர்களிற்கும் இந்த நினைவுத்தூபியை சாத்தியமாக்கிய சமூக அமைப்புகள் தலைவர்களிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன். இந்த சக்திவாய்ந்த இடம் தமிழர் இனப்படுகொலையின் நீடித்த அடையாளமாக திகழ்கின்றது, இழக்கப்பட்ட உயிர்கள், துண்டாடப்பட்ட சமூகங்கள் பலர் அனுபவித்த வேதனைகளிற்கான அடையாளமாக திகழ்கின்றது. மேலும் இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் காணப்படும், வலிமை மீள் எழுச்சி தன்மை நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தையும் பிரதிபலிக்கின்றது. மே மாதம் கனடா தமிழர்களிற்கு ஒரு வேதனையான குறிப்பிடத்தக்க மாதமாகும், உயிரிழந்தவர்களையும் தப்பியவர்களையும், அவர்கள் அனுபவித்தவற்றின் அதிர்ச்சிகளை தொடர்ந்து சுமந்துகொண்டிருப்பவர்களையும் நாம் நினைவுகூரும்போது, இந்த நினைவுச்சின்னம் அவர்களின் நினைவை போற்றுவதற்கும், வெறுப்பிற்கு எதிராக எழுந்து நின்று மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு பொறுப்பு குறித்து சிந்திப்பதற்குமான ஒரு இடத்தை வழங்குகின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடு கனடா, அவர்களின் பங்களிப்பு கனடாவை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளது. இந்த நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை, நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் எனஅவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214500
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
'இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை' என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் - பிரம்டன் மேயர் Published By: RAJEEBAN 11 MAY, 2025 | 09:17 AM கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார். நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிசெல்லுங்கள் என அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள் , இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது, என தெரிவித்த பிரம்டன் மேயர் அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர்,இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்தார். தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214404
-
மாணவி தற்கொலை விவகாரம் முறையாக ஆராயப்படவில்லை - சபையில் ஏற்றுக்கொண்டார் பிரதமர்
மட்டக்களப்பில் மாணவி அம்ஷிகாவிற்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டம் 11 MAY, 2025 | 06:21 PM மட்டக்களப்பு காந்திப்பூங்கா வளாகத்தில் என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போது அம்ஷிகாவின் ஆத்மசாந்திவேண்டியும் அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர். இதன்போது "பரிதாபம் வேண்டாம். பாதுகாப்பு வேண்டும்", "ஒன்றாய் எழுந்தால் சீண்டல் அழியும்", "தண்டனை இல்லையெனில் குற்றமும் தொடரும்", "தண்டனை இல்லையென்பதே குற்றவாளியின் தைரியம்","என் உடலை உன் உரிமையென எண்ணாதே', "அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்" போன்ற பதாதைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/214471
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அமெரிக்காவால் சாத்தியமானது எப்படி? அது நீடிக்குமா? பட மூலாதாரம்,ANI/GETTY IMAGES படக்குறிப்பு,சண்டை நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 11 மே 2025, 06:21 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளுமே அதை உறுதி செய்துள்ளன. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக பரஸ்பரம் அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில், "அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டிருந்தார். இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில், "அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியா தொடர்ச்சியாக தயங்காமல் கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது இனியும் தொடரும்." என பதிவிட்டிருந்தார். பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார், தங்கள் நாடு சண்டை நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தன் முயற்சிகளின் வாயிலாக இந்த சண்டை நிறுத்தம் சாத்தியமானதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் இஷாக் தார் கூறுகையில், "முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கான ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இவற்றில், துருக்கி, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அடங்குவர்." என்றார். பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சரும் முக்கிய பங்கை வகித்ததாக அவர் தெரிவித்தார். இந்த சண்டை நிறுத்த அறிவிப்புக்கு சில மணிநேரத்துக்கு முன்பு கூட இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை நிகழ்த்தின; இரு நாடுகளிடமுமே அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் மற்றொரு நாட்டின் விமானப்படைத் தளங்களைத் தாக்கியதாக பரஸ்பரம் கூறின. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 6-ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்களை நடத்தியது. "துல்லியமானது, நன்கு திட்டமிடப்பட்டது" என தன் நடவடிக்கையை இந்தியா விவரித்தது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது, இருநாடுகளும் பரஸ்பரம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தின. இருநாடுகளும் எதிர் தரப்பின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக கூறிக்கொண்டன. இந்தியா தங்களது 3 விமானப்படைத் தளங்களுக்கு சேதம் விளைவித்ததாக, சனிக்கிழமை பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இந்தியாவும் உறுதி செய்தது. காலையில் தாக்குதல், மாலையில் சண்டை நிறுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கராச்சியில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் சனிக்கிழமை காலையில் இந்தியாவில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் உட்பட பல நகரங்களில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது. இந்தியா மீது பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. "இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு மிக நெருக்கமாக வந்துள்ளதாக" சர்வதேச மற்றும் தெற்காசிய விவகாரங்கள் நிபுணரான மைக்கேல் குகல்மேன் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தார். ஆனால், அனைத்துவிதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக இரு நாடுகளும் சனிக்கிழமை அறிவித்தன. வேகமாக சூழல் மாறிவருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பு நிபுணர் பிரவீன் சாஹ்னி கூறுகையில், "சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதி ராணுவ தளபதிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தியா இனி எந்தவொரு பயங்கரவாத தாக்குதலையும் போர் செயலாகவே கருதும் என்ற செய்தி வந்த போது, இந்த விவகாரத்தில் இந்தியா மேலும் எதையும் விரும்பவில்லை என்பது தெளிவானது." என்றார். சனிக்கிழமை காலையில் பாகிஸ்தானின் பதில் தாக்குதலுக்கு பிறகு குகல்மேன் எழுதுகையில், "பாகிஸ்தான் அணுசக்தி நாடாக ஆனதற்கு அடுத்த ஆண்டான 1999-ல், கார்கில் போருக்குப் பிறகு இத்தகைய சூழல் எழுந்துள்ளது. அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்த மிகப்பெரிய சோதனையாக இருக்கும். சர்வதேச மத்தியஸ்தர்கள் தற்போது துரிதமாக செயலாற்றுவார்கள்" என குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்பு நிபுணரும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் ஆய்வு மாணவருமான ஸ்மிரிதி எஸ் பட்நாய்க் கூறுகையில், "இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல் என்ற கட்டத்தை அடைந்துள்ளன. இதற்குப் பிறகும், நிலைமை தீவிரமானால், முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் ஏற்படும், ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை. இப்படியான சூழலில், இரு நாடுகளும் முழு அளவிலான போர் தங்கள் நலனுக்கு நல்லதல்ல என்பதை புரிந்துகொண்டுள்ளன." என்றார். களச்சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிருடன் போனில் உரையாடினார் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிருடன் போனில் உரையாடிய அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடனும் பேசினார். இருநாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சண்டை நிறுத்தம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. பாதுகாப்பு நிபுணரும் இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான ஜீவன் ராஜ்புரோஹித் கூறுகையில், "இரு நாடுகளும் சண்டையை தொடர விரும்பவில்லை. பாகிஸ்தானுக்கு எல்லா வழிகளிலும் உதவிய அமெரிக்கா, இந்த சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்துள்ளது. மறுபுறம், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஒத்த நலன்களைக் கொண்டுள்ளன. அப்படியான சூழலில், சண்டை நிறுத்தம் செயல்பாட்டில் இருப்பதில் சிக்கல் இருக்காது," என்றார். அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றே பிரவீன் சாஹ்னியும் நம்புகிறார். பிரவீன் சாஹ்னி கூறுகையில், "அமெரிக்கா தங்களுக்கு முக்கியம் என்பதாலேயே இரு நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. போரை நிறுத்தியது அமெரிக்கா தான். சண்டை நிறுத்தத்தைப் பொருத்தவரையில், அது நீடிக்கும். ஆனால், இரு நாடுகளும் மே 6-ஆம் தேதிக்கு முன்பு இருந்த அதே சூழலில் தான் தொடர்ந்து இருக்கும்." என்றார். "இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது, ஆனால் களச்சூழலில் எந்தவித மாற்றமும் இருக்காது. வருங்காலத்தில் இருநாடுகளிடமிருந்தும் பகைமை உணர்வுடன் கூடிய கருத்துகளை அதிகம் எதிர்பார்க்கலாம்." என்பது அவரது கணிப்பு. சண்டை நிறுத்தம் நீடிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர் சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ இயக்குநர் ஜெனரல்கள் (DGMO) பேச்சுவார்த்தை நடத்திய இரண்டு மணிநேரங்களில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எதன் அடிப்படையில் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இல்லை. இந்த சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்று கூறிய ஸ்மிரிதி பட்நாயக், எனினும் எதன் அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை பொறுத்தே இது இருக்கும் என கூறினார். பட்நாயக் கூறுகையில், "பாகிஸ்தான் இதிலிருந்து பின்வாங்கினால், அவ்வாறு செய்வதற்கு இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சண்டை நிறுத்தம் ஏற்பட்டதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து அதிக தகவல்கள் இல்லை. ஆனால், இரு நாடுகளும் இதிலிருந்து முன்னோக்கி செல்வது எப்படி என்பதை யோசிப்பதற்கான வாய்ப்பை இந்த சண்டை நிறுத்தம் வழங்கும்" என்றார். மேலும் அவர் கூறுகையில், "மே 12-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கும் போது சூழல் இன்னும் தெளிவாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான தன்னுடைய கடினமான நிலைப்பாட்டில் இந்தியா சமரசம் செய்யாது. இரு நாடுகளும் ஆக்ரோஷமாக இருப்பது குறித்து சர்வதேச சமூகங்கள் கவலை கொண்டுள்ளன. இதை மேலும் நீடிப்பது தங்களுக்கு நல்லதல்ல என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தான் பதற்றத்தைக் குறைத்தால், இந்தியாவும் மேற்கொண்டு எதையும் செய்யாது என்பதை இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது" என்றார். பதற்றத்தை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரு நாடுகளுக்கிடையேயான பதற்றச் சூழலில் கர்னல் சோஃபியா குரேஷி, ஊடக சந்திப்புகளில் இந்திய ராணுவம் சார்பாக விளக்கினார் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, "பாகிஸ்தான் ராணுவம் முன்னோக்கி துருப்புகளை நிறுத்துவதாக தெரிவிக்கிறது, இது நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது" என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்திய ஆயுதப் படைகள் முழு எச்சரிக்கையுடன் உள்ளன. பாகிஸ்தானும் இதே முறையில் நடந்துகொண்டால், பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்பதை இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன." என்றார். நிலைமையை மேலும் மோசமாக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஜீவன் ராஜ்புரோஹித் கூறுகையில், "நிலைமையை மேலும் மோசமாக்குவது தங்கள் நோக்கம் அல்ல என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஏற்கெனவே கூறியுள்ளார்" என்றார். "இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது - நாங்கள் பழிதீர்ப்போம் என இந்தியா கூறியது, அதைத்தான் தற்போது செய்துள்ளது. அதற்கு பழிதீர்க்க பாகிஸ்தான் ராணுவம் முடிவெடுத்தது, அங்கிருந்துதான் நிலைமை மேலும் மோசமானது. மே 7-ஆம் தேதி பாகிஸ்தான் எதிர்வினையாற்றி இருக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது." என்று அவர் கூறினார். இரு நாடுகளும் விரும்புவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தானின் அரசியலிலும் அந்நாட்டு ராணுவம் தலையிடுகிறது இந்த சூழலில் இருந்து மரியாதையான முறையில் வெளியேறுவது எப்படி என்பதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான மிகப்பெரிய பிரச்னை என, ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பிரவீன் சாஹ்னி கூறுகையில், "இந்தியாவும் பாகிஸ்தானும் மேலும் சண்டையிட விரும்பவில்லை என்பது இதுவரையிலான சமிக்ஞையாக உள்ளது. முழு அளவிலான போரில் ஈடுபடுவதை இரு நாடுகளும் விரும்பவில்லை. இந்த சூழலில் இருந்து 'மரியாதையான முறையில் வெளியேற' இரு நாடுகளும் விரும்புகின்றன" என்றார். ஸ்மிரிதி எஸ் பட்நாயக் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் அந்த நாட்டின் அரசியலில் அதிக செல்வாக்கு செலுத்துகிறது. பாகிஸ்தான் பட்ஜெட்டில் அதிகளவு அதன் ராணுவத்துக்கு செலவு செய்யப்படுகிறது. அப்படியான சுழலில், ராணுவம் செயலாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் உணர்வாக உள்ளது. அப்படியான சூழலில், தாங்கள் எதிர்வினையாற்றி இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்திருக்கலாம்" என கூறினார். இதனிடையே, இப்படியான சூழலில் தாங்கள் மரியாதைக்குரிய முறையில் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக இரு நாடுகளும் தங்கள் மக்களுக்குக் கூறலாம். பிரவீன் சாஹ்னி கூறுகையில், "இந்த சூழலில் இருந்து வெளியேறுவது குறித்து கூற வேண்டுமானால், இரு நாடுகளும் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளதாக உணரலாம். இந்தியா பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை நடத்தியது, அதேசமயம் இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இரு நாடுகளும் தாங்கள் என்ன சாதித்தோம் என்பதை தங்கள் நாட்டு மக்களுக்குக் கூறலாம்." என்றார். 'நாங்கள் பழிதீர்த்தோம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவுக்கு 'தகுந்த' பதிலடியை கொடுத்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் சனிக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கு 'தகுந்த' பதிலடியை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்தியா பாகிஸ்தான் மீது எங்கிருந்து தாக்குதல்கள் நடத்தியதோ அந்த ராணுவ தளங்கள் இலக்கு வைக்கப்பட்டன. இந்தியாவுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம், அப்பாவி மக்களின் இறப்புக்கு பழிதீர்த்துள்ளோம்." என்றார். எதிர்கால சூழல் குறித்து பேசிய ஜீவன் ராஜ்புரோஹித், பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுமா என்பதுதான் முக்கியமான கேள்வி என்றார். ராஜ்புரோஹித் கூறுகையில், "பாகிஸ்தான் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெறும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக செயல்பட முடியாது என்பது இந்தியாவின் தெளிவான நிலைப்பாடாகும்." என்றார். "பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறதா என்பதுதான் இப்போதிருக்கும் முக்கிய கேள்வி. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எதிர்கால உறவின் அடிப்படையாக இது இருக்கும்." என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93ly26692ro
-
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு யாரால் ஆபத்து? பிபிசி தமிழுக்கு பேட்டி
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்துள்ளார். சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். '1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு' மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது. தற்போது சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கு மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வருமாறு இரண்டு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதால் ஆஜராக முடியவில்லை எனவும் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சகாயம் குறிப்பிட்டிருந்தார். கடந்த மே 5-ஆம் தேதியன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கிரானைட் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சகாயம் ஆஜராகவில்லை. இதைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி லோகேஸ்வரன், "சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை. என்ன காரணம் என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார். மேலும், "சகாயத்துக்கு பாதுகாப்பு கொடுக்கப்படாவிட்டால் உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்படும்" எனக் கூறி வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். பிபிசி தமிழிடம் சகாயம் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. "உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?" என சகாயத்திடம் பிபிசி தமிழ் கேட்டது. "2012ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கை ஒன்றை அனுப்பினேன். இது பேசுபொருளாக மாறியதால் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைய குவாரிகள் மூடப்பட்டன. ஏராளமானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டதால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணியைத் தொடங்கினேன். அப்போதே கவனமாக இருக்குமாறு பலரும் எச்சரித்தனர்" என்று கூறினார். இதன் பிறகு கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிப்பதற்காக 2014ஆம் ஆண்டு சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. "இது சவாலான பணி. இதன் பின்புலத்தில் இருந்தவர்களின் பின்னணி, அவர்களின் கடந்தகால செயல்பாடுகள், முறைகேடுகளின் அளவு, நிதி இழப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாதுகாப்பு கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியது" என்றார் சகாயம். சகாயத்துக்கு 2-வது முறையாக பாதுகாப்பு விலக்கம் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சகாயத்தின் பாதுகாப்புக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 2014 டிசம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தப் பாதுகாப்பு தொடர்ந்தது. "2020 அக்டோபர் மாதத்தில், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது" என்றார் சகாயம். 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார். "பதவியில் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை விலக்க முடியாது. பதவிக் காலத்தைத் தாண்டியும் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பது தெரிந்த ஒன்று" என்கிறார் சகாயம். பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியாகவே, 'எங்கள் அனுமதியில்லாமல் பாதுகாப்பை எவ்வாறு விலக்கிக் கொள்ள முடியும்?' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின்போது இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "நீதிமன்றம் கூறியதால் உடனே பாதுகாப்பு வழங்கினார்கள். ஆனால், 2023 மே மாதம் எந்த தகவலும் இல்லாமல் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இதன்பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு சந்தேகத்துக்கு இடமான சிலர் வந்து விசாரித்த நிகழ்வுகள் நடந்தன" என்று சகாயம் கூறினார். தலைமைச் செயலருக்கு கடிதம் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,"கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு என் மீது கோபம் இருக்கலாம்" என்கிறார் சகாயம் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக இதைப் பார்ப்பதாகக் கூறிய சகாயம், "இந்தியாவின் மிகப் பெரிய கிரானைட் ஊழலை வெளியில் கொண்டு வந்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதைத் தான் காவல்துறை சொல்ல விரும்புகிறது" எனவும் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். 2023 மே முதல் தற்போது வரை தனது பாதுகாப்புக்கு காவலர்கள் இல்லை எனக் கூறும் சகாயம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் எழுதியதாக கூறினார். "நான் எழுதிய கடிதத்துக்கு டிசம்பர் மாதத்தில் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவில் (security reveal commitee) விவாதித்து பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டிருந்தது. 2023 மார்ச் மாதம் எடுத்த முடிவைக் கூட டிசம்பர் மாதம் தான் தெரிவித்தனர்" என்கிறார் சகாயம். 'உளவியல் ரீதியாக நெருக்கடி' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது "என்னுடைய நடவடிக்கைக்குப் பிறகு மதுரையில் சட்டத்துக்குப் புறம்பாக கிரானைட் வெட்டி எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். அதனால் என் மீது அவர்களுக்கு (கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்) கோபம் இருக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை விலக்கும் விவகாரத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிய பிறகே காவல்துறை முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றார், சகாயம். ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இதுதொடர்பாக 10 பக்கங்களில் விரிவான கடிதம் ஒன்றையும் தான் அனுப்பியுள்ளதாக, சகாயம் குறிப்பிட்டார். "பாதுகாப்பு பிரச்னை நீடிப்பதால், பொது இடங்களுக்குச் செல்வதை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதாகவே பார்க்கிறேன்" என்றார் சகாயம். காவல்துறை டி.ஜி.பி விளக்கம் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசிவருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2023 மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி, சகாயத்துக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து கவனத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசி வருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 'நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் போது ஏதேனும் குறிப்பிடும் படியான அச்சுறுத்தல் இருந்தால் அவருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்' எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த அறிக்கையில், "சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் இருந்த காலத்தில் 2014 நவம்பர் முதல் 2020 அக்டோபர் வரை மெய்க்காப்பாளர் ஒருவர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு மறு ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது என முடிவெடுப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது. டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?10 மே 2025 இந்தியா vs பாகிஸ்தான் - வல்லரசு நாடுகள் யாரை ஆதரிக்கின்றன?10 மே 2025 'அச்சுறுத்தல் இல்லாத 22 பேர்' ஜனவரி 2021ஆம் ஆண்டு சகாயம் விருப்ப ஓய்வில் சென்றதை சுட்டிக் காட்டியுள்ள சங்கர் ஜிவால், '2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் எந்த அச்சுறுத்தலும் இல்லாத 22 நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது' எனக் கூறியுள்ளார். சகாயத்துக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்பதால்தான் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2023 ஆகஸ்ட், 2023 அக்டோபர் மாதங்களில் தலைமைச் செயலாளர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோருக்கு சகாயம் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள சங்கர் ஜிவால், 'எந்த அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக 2023 டிசம்பர் மாதம் சகாயத்துக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது' என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி கூறியது என்ன? சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கில் தனது விசாரணை அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவிக்கலாம். எந்த விதமான கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் அவருக்கு எந்த தரப்பில் இருந்தும் கொடுப்பதற்கு அரசு அனுமதிக்காது. அச்சமின்றி அவர் நீதிமன்றத்தில் தன்னுடைய விசாரணை அறிக்கை குறித்து கூறலாம்" என்று தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce81vggrp03o
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்
யாழில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! Published By: VISHNU 11 MAY, 2025 | 07:22 PM தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (11) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார். இன்றைய தினம் ஆரம்பமாகிய தமிழின அழிப்பு வாரம் எதிர்வரும் 18.05.2025 நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214479
-
ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
இலங்கை பேருந்து விபத்து, 21 பேர் பலி: உயிர் பிழைத்தவர் விவரிப்பது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை நுவரெலியா - இறம்பொடை பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து இன்று (மே 11) அதிகாலை இடம்பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, இறம்பொடை பகுதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என போலீஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற தருணத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன், 35 பேர் வரை காயமடைந்திருந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்திருந்தது. பட மூலாதாரம்,KRISHANTHAN விபத்து இடம்பெற்ற தருணத்தில் பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல உதவி வழங்கியிருந்தனர். உயிரிழந்தோரின் சடலங்கள் கொத்மலை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெறும் தருணத்தில் பேருந்தில் 50திற்கும் அதிகமானோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெறும் தருணத்தில் பேருந்தில் பயணித்த பயணியொருவர் ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வெளிப்படுத்தியிருந்தார். ''பேருந்து சற்று வேகமாக வந்தது. திடீரென பிரேக் அடிப்பட்டதை உணர்ந்தேன். பேருந்து இடது பக்கம் நோக்கில் வழுக்கி சென்றது. அதன்பின்னர் பள்ளத்தில் வீழ்ந்ததை உணர்ந்தேன். நான் வெளியில் வர ஒரு நிமிடம் அளவில் சென்றது. என்னால் அந்த சந்தர்ப்பத்தில் காப்பாற்ற முடிந்தவர்களை நான் காப்பாற்றினேன். நான் ராணுவத்தில் வேலை செய்கின்றேன்.'' என விபத்தை எதிர்கொண்ட ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகர மற்றும் சபாநாயகர் ஜனத் விக்ரமரத்ன ஆகியோர் ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். விபத்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். ''விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமா அல்லது வீதியின் பிரச்னையா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எம்மால் முடிந்தளவு ஏற்பாடுகளை செய்துள்ளோம். மருத்துவமனைகளுக்கு கதைத்துள்ளோம். நுவரெலியா மருத்துவமனையில் 14 பேர் இருக்கின்றார்கள். அந்த 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை. கொத்மலை மருத்துவமனைக்கு 13 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதியின் அறிவிப்பு பட மூலாதாரம்,KRISHANTHAN இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபா வரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம் மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, இறம்பொடை விபத்து குறித்து அறிய கிடைத்தவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும், இதற்காக 'கிளீன் ஶ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இன்று காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgqx244p2vo
-
அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்
11 MAY, 2025 | 11:52 AM யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் சனிக்கிழமை (10) நடைபெற்றது. அதன் போது, நூற்றுக்கணக்கானவர்கள் விசேட வைத்திய நிபுணர்களை சந்தித்து, தங்களுடைய நோய் நிலைகளுக்கான சிகிச்சைகளையும், தொடர்ந்து மேலதிக சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளையும் பெற்றுள்ளனர். இந்த மருத்துவ முகாமிற்கு யாழ் பிராந்திய கடற்படை தலைமையகம், கனடா அனலைதீவு ஒன்றியம் மற்றும் பல அமைப்புகள் அனுசரணை வழங்கியிருந்தன. https://www.virakesari.lk/article/214419
-
3 மாதத்திற்குள் பயங்கரவாத தடை சட்டம் நீக்கம்; அரசாங்கம் தீர்மானம்
11 MAY, 2025 | 11:16 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக விடுதலை புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டில் நிறைவடைந்த பின்னரும் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி பல்வேறு கைதுகள் இடம்பெற்றது. இதனை சர்வதேச நாடுகளும் உள்ளுர் மனித உரிமைகள் செயல்பாட்டளர்களும் கண்டித்திருந்தனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் போன்ற சர்வதேச அமைப்புகள் பயங்கரவாத தடை சட்டத்தை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களை இலங்கைக்கு எதிராக முன்வைத்திருந்தது. இவ்வாறானதொரு எதிர்ப்பு நிலை இன்றும் தொடர்கின்ற நிலையில், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை போன்ற சர்வதேச ஒத்துழைப்புகளை பெறுவதற்கும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அதன் பயன்பாடு தடையாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் பயங்கரவாத தடை சட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையில் பயனடையும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம கொண்ட 8 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்த பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக கூடிய வளரும் நாடுகளிக் நலன் கருதி இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறும் நாடுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரமுறை மதிப்பீடு செய்து சலுகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். இவ்வாறானதொரு நிலையில் மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் கடும் சவாலாக உள்ளமையினால் அதன நீக்குவதற்கான பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இலங்கைக்கு முன்வைத்துள்ளது. இதேவேளை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214411
-
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை சோதனை செய்தது இந்தியா: எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக இந்திய விமானப்படை தகவல்
இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் துல்லியமானவை என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் 10 மே 2025 மே 8-ஆம் தேதி இரவு, பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாக இந்தியா கூறியது. இதனையடுத்து, வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிலும் குறிப்பாக இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு பற்றி பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவின் கூற்றை மறுத்துள்ள பாகிஸ்தான், தங்கள் ராணுவம் இந்தியாவில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் என எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களை அழிக்கும் தொழில்நுட்பம், நவீன போரில் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லையில் அடிக்கடி பதற்றங்கள் ஏற்படும் சூழலில், இந்த அமைப்புகளின் பங்கு அதிமுக்கியத்துவம் பெறுகிறது ஒரு நாட்டைப் பாதுகாக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு, போர் போன்ற சூழ்நிலைகளில் மூலோபாய நன்மையைப் பெறுவதற்கும் உதவுகிறது. கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் வார்த்தைகளில் 'வான் பாதுகாப்பு அமைப்பு' என்பதும் இடம் பெற்றிருக்கும் நிலையில், வான் பாதுகாப்பு அமைப்பு (Air Defence Systems) என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்வோம். வான் பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன? ஒரு நாட்டின் வான்வெளியை எதிரி விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் அமைப்பை வான் பாதுகாப்பு அமைப்பு என்று அழைக்கிறோம். வான் பாதுகாப்பு அமைப்பானது, ரேடார், சென்சார்கள், ஏவுகணை மற்றும் துப்பாக்கி அமைப்புகளைப் பயன்படுத்தி வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் எதிர்கொள்ளும் பணியைச் செய்கிறது. வான் பாதுகாப்பு அமைப்புகள், நிலையானவை (permanently stationed) அல்லது நகரக்கூடியவை (movable) என இரண்டு வகையாக பயன்படுத்தப்படலாம். சிறிய டிரோன்கள் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்டவை இவை. மக்கள் வசிக்கும் பகுதிகள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள் கட்டமைப்புகளை, வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதே வான் பாதுகாப்பு அமைப்புகளின் முக்கிய நோக்கமாகும். வான் பாதுகாப்பு அமைப்பு நான்கு முக்கிய பகுதிகளாக செயல்படுகிறது. எதிரி விமானங்களை கண்டறியும் ரேடார்கள் மற்றும் சென்சார்களுடன் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கண்டறியும் பணியை இவை செய்கின்றன. வான் பாதுகாப்பு அமைப்பு கொடுக்கும் தரவுகளை செயலாக்கி, முன்னுரிமைகளை முடிவு செய்யும் பணியை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மேற்கொள்ளும். ஆயுத அமைப்புகள் அச்சுறுத்தல்களைத் தடுக்கின்றன. அதே நேரத்தில் மொபைல் அலகுகள் விரைவாக வரிசைப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றன. ஏனெனில் போர்க்களத்தில் துரிதமாக செயல்படுவது மிகவும் அவசியமானதாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணைகளை வாங்கியது அச்சுறுத்தலைக் கண்டறிதல், கண்காணித்தல் மற்றும் அகற்றுதல் என பல கட்டங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் நவீன தொழில்நுட்பமும் செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானவை. முதல் கட்டத்தில், ரேடார் மற்றும் பிற சென்சார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வான்வழி அச்சுறுத்தல்கள் கண்டறியப்படுகின்றன. இங்கு ரேடார் என்பது, மின்காந்த அலைகளை அனுப்பி, எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகளில் பட்டு திரும்பும்போது அவற்றின் நிலையைக் கண்டறியும் முதன்மை சாதனமாகும். தொலைதூர ரேடார்கள், நடுத்தர தூர மற்றும் குறுகிய தூர ரேடார்கள், மின்னணு உணரிகள் (electronic sensors) மற்றும் அகச்சிவப்பு உணரிகள் (infrared sensors) போன்ற உபகரணங்கள் எதிரி விமானங்கள் வெளியிடும் சிக்னல்களைக் கண்டறிந்து, அவற்றின் சரியான இருப்பிடத்தைக் கண்டறியும். இந்தக் கட்டத்தில், அச்சுறுத்தலாக இருக்கும் பொருளின் (ஏவுகணை, விமானம் அல்லது டிரோன்) இயக்கம், தாக்குதலில் எந்த வகையான டிரோன்/விமானம் அல்லது ஏவுகணை பயன்படுத்தப்பட்டது போன்றவை கண்டறியப்படுகின்றன. அச்சுறுத்தல் கண்காணிப்பு என்னும் இரண்டாம் கட்டத்தில், அவற்றின் இயக்கம், பாதை மற்றும் பிற செயல்பாடுகள் தொடர்பான துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படும். ரேடார், லேசர் ரேஞ்ச் ஃபைண்டர்கள் (laser range finders) மற்றும் தரவு இணைப்பு நெட்வொர்க் மூலம், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் வேகம், உயரம் மற்றும் திசையைக் கண்காணிக்க முடியும். தாக்குதல் அல்லது போரின் போது, எதிரியால் ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன்கள் அல்லது போர் விமானங்களை மட்டுமல்ல, அதன் சொந்த போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளையும் இது கண்காணிக்கும் என்பதால் அச்சுறுத்தலைக் கண்காணிப்பது என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு கண்காணிப்பு அமைப்பு சீரானதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் சொந்த நாட்டு உபகரணங்கள், ஏவுகணைகள் அல்லது போர் விமானங்கள் சேதமடையாமல் இருக்கும். தொடர்ச்சியான கண்காணிப்புக்குப் பிறகு, எதிரி நாட்டிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் உரிய நேரத்தில் அகற்றப்பட வேண்டும். பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? - நேரலை தகவல்கள்10 மே 2025 அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்திகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்துகிறதா?10 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரமோஸ் ஏவுகணைகளை நிலம், வான், கடல் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து ஏவ முடியும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? 'சுதர்சன சக்ரம்' என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு S-400 பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, அதன் பல அடுக்குகள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளுக்கு பெயர் பெற்றது. இது ரஷ்ய, இஸ்ரேலிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களின் கலவையாக உருவாக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளில் ஐந்தை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. S-400 ஏவுகணை அமைப்பானது, அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் 5.43 பில்லியன் டாலர்கள் மதிப்பில் செய்யப்பட்டது. S-400 என்பது ஒரு நகரும் வான் பாதுகாப்பு அமைப்பு, அதாவது சாலை வழியாக கொண்டு செல்ல முடியும். உத்தரவிடப்பட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம். படக்குறிப்பு, ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதற்கான விளக்கப்படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, S-400ஐத் தவிர, இந்தியாவிடம் பாரக்-8 மற்றும் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை அமைப்புகளும் உள்ளன. இவை வான் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறுகிய தூர அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஸ்பைடர் மற்றும் இக்லா போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. "இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமலேயே இதைக் கூறுகிறேன்," என்று ஓய்வு பெற்ற மேஜர் டாக்டர் முகமது அலி ஷா, பிபிசியிடம் கூறினார். "நமது படைகளால் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், பல இடங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும், ஜம்முவில் பறந்த டிரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து S-400 வாங்கும் போது அந்த முயற்சி தடைபடும் அபாயம் இருந்தது, ஆனால் இன்று அதே அமைப்புதான் எண்ணற்ற இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது," என்று அவர் தெரிவித்தார். மே 8-ஆம் தேதி, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பல ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றதாகவும் அவை இந்தியாவால் முறியடிக்கப்பட்டன என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்த பாகிஸ்தான், இந்தியா மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. இரு நாடுகளின் கூற்றுகளையும் பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை. டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?10 மே 2025 டிரோன் தாக்குதல், மின் தடை, 32 விமான நிலையங்கள் மூடல் - ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை என்ன நடந்தது?10 மே 2025 பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? 2019-க்குப் பிறகு, ரஷ்ய S-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்கியது. அதே நேரத்தில் சீனாவிடமிருந்து HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் வாங்கியது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு சீனா மற்றும் பிரான்சின் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் முக்கிய பகுதி HQ-9 ஆகும், இது 120 முதல் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறன் கொண்டது. பிரான்சிடம் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஸ்பாடா வான் பாதுகாப்பு அமைப்பு, விமான தளங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களைப் பாதுகாக்க பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் துணை விமான மார்ஷல் இக்ரமுல்லா பட்டி பிபிசி உருதுவிடம் கூறுகையில், "பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூர, நடுத்தர தூர மற்றும் நீண்ட தூர தரையிலிருந்து தரைக்கு பாயும், கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனைக் கொண்டுள்ளது," என தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் மோதல் எவ்வாறு பரிணமிக்கும்? முழு பார்வை9 மே 2025 இந்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்று சுரங்கப்பாதையில் சிக்கிய மசூத் அசார்9 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-16 FE பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தனது பாதுகாப்பு அமைப்பில் இணைத்துள்ளது. இது ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர். இருப்பினும், வானிலிருந்து தரை இலக்குகளை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்பு எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக மேம்பட்டிருந்தாலும், அவை பல சவால்களையும் எதிர்கொள்கின்றன. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் திரளான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவது போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களால், இந்த அமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டியதற்கான தேவை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் லேசர் அடிப்படையிலான ஆயுதங்கள் வான் பாதுகாப்புக்கான செலவை குறைப்பதுடன், மிகவும் திறமையானதாகவும் மாற்றக்கூடும். அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிக்க செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உதவும். அதே நேரத்தில், லேசர் தொழில்நுட்பம் ஆபத்தான தாக்குதல்களின் போது துல்லியமாக செயல்படுவதை உறுதிப்படுத்தும். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gre1erdy4o
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
Published By: RAJEEBAN 11 MAY, 2025 | 09:00 AM கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர். https://www.virakesari.lk/article/214402
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
உண்மையா எல்லா சிறைகளிலும் இருந்து நன்நடத்தை அடிப்படையில் விடவேண்டும் அண்ணை, விடுகிறார்களா என்பது சந்தேகமே?!
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
என்னண்ணை அதிசயமாக கேக்கிறியள்?! இப்ப இவர்கள் தானே கதாநாயகர்கள்!
-
இளைஞனை தாக்கி காயப்படுத்திய 'டீச்சர் அம்மாவை' கைது செய்ய உத்தரவு!
கணவரும் முகாமையாளரும் எல்லோ கம்பி எண்ணுகினம் அண்ணை!
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
"உடன்படிக்கையை மீறுகிறது பாகிஸ்தான்" - வெளியுறவு செயலாளர் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES 10 மே 2025, 03:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியான நிலையில் காஷ்மீரில் சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே இன்று மாலை எட்டப்பட்ட உடன்பாட்டை கடந்த சில மணி நேரமாக பாகிஸ்தான் மீறி வருகிறது. எல்லையில் நடக்கும் அத்துமீறல்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இந்த அத்துமீறல்களுக்குப் பாகிஸ்தான்தான் காரணம், இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்துக்கொண்டு அத்துமீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என நம்புகிறோம்'' என்றார் சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ''நிலவரத்தை ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எந்தவொரு அத்துமீறலையும் சமாளிக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீநகரில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஸ்ரீநகர் முழுவதும் வெடிப்பு சத்தம் கேட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். அவரது எக்ஸ் வலைத்தள பதிவில், உமர் அப்துல்லா இதனை குறிப்பிட்டுள்ளார். எங்கிருந்து இந்த சத்தம் வருகிறது எனது தெளிவாக தெரியவில்லை என்கின்றனர் பிபிசி செய்தியாளர்கள். சண்டை நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் இந்த வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது பஞ்சாபின் சில பகுதிகளில் முழு மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி, "கட்ச் பகுதியில் பல டிரோன்கள் காணப்பட்டுள்ளன. இப்போது முழுமையான மின் தடை உள்ளது" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது https://www.bbc.com/tamil/articles/cglek9re7l2o
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவங்களா இல்ல, வடக்கால இருந்து மேற்கால போய் இவங்களா அடிக்கிறது அண்ணாச்சி?!
-
இளைஞனை தாக்கி காயப்படுத்திய 'டீச்சர் அம்மாவை' கைது செய்ய உத்தரவு!
மாணவன் இல்லை அண்ணா, அவருடைய உதவியாளராக இருந்த ஆணைத் தான் தாக்கியிருக்கிறார்! இங்கே என்னுடைய நண்பனுடைய மகனை தனியார் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் கண்டபடி அடித்துவிட்டார். இப்போது உள்ளே இருக்கிறாராம். வேறு யாரோ மொட்டை என அழைத்ததை இவர் என தவறாக விளங்கி போட்டுத் தாக்கிவிட்டார்.
-
மாணவி தற்கொலை விவகாரம் முறையாக ஆராயப்படவில்லை - சபையில் ஏற்றுக்கொண்டார் பிரதமர்
கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர், விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸ் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு 10 MAY, 2025 | 08:47 PM கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர் மற்றும் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸ் குழுவினருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் பாடசாலை மற்றும் மேலதிக நேர வகுப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.. சம்பவம் பதிவான தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சு தற்போது ஒரு உள்ளக விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/214393
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
பிணை வழங்கப்பட்டுவிட்டது அண்ணை.
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
அவர் விசாரணைக் கைதி தானே அண்ணை? குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 04:47 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண் சிறைக்கைதிகளும் உள்ளடங்குகின்றனர். வெசாக் பௌர்னமி தினத்தன்று இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையிலிருந்து 38 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 36 கைதிகளும், மஹர சிறைச்சாலையிலிருந்து 30 கைதிகளும் உள்ளடங்களாக 388 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். மேலும் திங்கட்கிழமையும் (12), செவ்வாய்கிழமையும் (13) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கைதிகளை பார்ப்பதற்கும், அவர்களுக்கு வீடுகளில் சமைத்த உணவுகளையும் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. எனினும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எவற்றையும் வழங்க முடியாது. இவை தவிர சிறைச்சாலைகளில் வெசாக் நிகழ்வுகளும் மத வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/214381
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
'ஸ்ரீநகரில் வெடிச்சத்தம்', பஞ்சாபில் மின் தடை - நேரலை பட மூலாதாரம்,BBC NEWS INDIA/YOU TUBE 10 மே 2025, 03:54 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீநகரில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஸ்ரீநகர் முழுவதும் வெடிப்பு சத்தம் கேட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். அவரது எக்ஸ் வலைத்தள பதிவில், உமர் அப்துல்லா இதனை குறிப்பிட்டுள்ளார். எங்கிருந்து இந்த சத்தம் வருகிறது எனது தெளிவாக தெரியவில்லை என்கின்றனர் பிபிசி செய்தியாளர்கள். இது குறித்து இந்தியாவோ, பாகிஸ்தானோ கருத்து தெரிவிக்கவில்லை. சண்டை நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் இந்த வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது பஞ்சாபின் சில பகுதிகளில் முழு மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி, "கட்ச் பகுதியில் பல டிரோன்கள் காணப்பட்டுள்ளன. இப்போது முழுமையான மின் தடை உள்ளது" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் 'நிலம், வான் மற்றும் கடல் வழி' தாக்குதலை இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணி முதல் நிறுத்தும் என கூறியுள்ளார். ''பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இன்று பிற்பகல் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலிடம் பேசினார். இரு தரப்பும் முழு சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன'' எனவும் விக்ரம் மிஸ்ரி கூறினார். பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார். "பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் எப்போதும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று அவர் கூறினார். ''ராணுவ நடவடிக்கை மற்றும் வெடிகுண்டு தாக்குதலை நிறுத்துவதற்கான புரிதலை இந்தியாவும் பாகிஸ்தானும் எட்டியுள்ளன'' என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும் இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார். டிரம்ப் கூறியது என்ன? சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், ''அமெரிக்காவின் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன'' என கூறியுள்ளார். பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ள டிரம்ப், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். ''இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பொதுவான நாட்டில் பரந்த அளவிலான பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்'' என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தானும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸும் கடந்த 48 மணிநேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய ராணுவம் செய்தியாளர்கள் சந்திப்பு இதனை தொடர்ந்து இன்று மாலை இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய கடற்படை கேப்டன் ரகு நாயர், ''சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படுகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார். மேலும், ''பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொறுப்புணர்வுடனும் இருந்தன'' என்றார். செய்தியாளர்களிடம் பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங்,'' தவறான தகவல்'' பிரசாரத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் பல முயற்சிகளை எடுத்ததாக கூறினார். ''பாகிஸ்தான் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது'' என்று வியோமிகா சிங் கூறினார். அடுத்து பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, ''முதலில், பாகிஸ்தான் தனது ஜி.எஃப் 17ஐக் கொண்டு இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல, இரண்டாவதாக சிர்சா, பதான்கோட், ஜம்மு, பட்டிண்டா, நலியா மற்றும் புஜ்-இல் உள்ள விமானப்படைத் தளங்களை தாக்கியதாவும் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவும் பொய்ப்பிரசாரம் தான்'' என்றார். மேலும், ''சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள இந்திய ஆயுதக் கிடங்கு சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதுவும் பொய்யான தகவல். நாங்கள் இன்று காலை கூறியதுபோல, அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.'' ''பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களது மூத்த ராணுவ அதிகாரிகள் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளனர். இந்திய ராணுவம், மசூதிகளை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நான் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்திய ராணுவம் கலாசாரத்தை மதிக்கிறது. இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய நிலம் மற்றும் வான்வெளி சொத்துக்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார் சோஃபியா குரேஷி. இந்தியாவில் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாக குற்றச்சாட்டு - பாகிஸ்தான் அமைச்சர் என்ன கூறினார்? படக்குறிப்பு,அதாவுல்லா தரார் ஜம்மு காஷ்மீரில் குடியிருப்புப்பகுதிகளில் நடந்த வான்வழித் தாக்குதலில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சோதமடைந்துள்ளன. ''ஜம்மு நகரின் ரெஹாரி காலனியில் நடந்த தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்'' என பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா கூறினார். பாகிஸ்தான் இந்தியாவில் பொது மக்களைக் குறிவைத்து தாக்குவதாக இந்திய அரசின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அதாவுல்லா தரார் மறுத்துள்ளார். "பாகிஸ்தான் ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளது" என்றார் அவர். மேலும், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை இருப்பதாகவும் அவர் கூறினார். Play video, "இரவு முழுவதும் தொடர் வெடிப்புச் சத்தம் - பஞ்சாபின் பதான்கோட், குர்தாஸ்பூர் மக்கள் கூறுவது என்ன?", கால அளவு 3,03 03:03 காணொளிக் குறிப்பு,இரவு முழுவதும் தொடர் வெடிப்புச் சத்தம் - பஞ்சாபின் பதான்கோட், குர்தாஸ்பூர் மக்கள் கூறுவது என்ன? 'இரவு முழுவதும் குண்டு வெடிப்புகள்' – பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் பாகிஸ்தானின் "ஏவுகணை மற்றும் டிரோன்களால்" குறிவைக்கப்பட்ட நகரங்களில் பதான்கோட்டும் ஒன்று என இந்திய அரசின் அறிக்கை ஒன்று கூறியது. பதான்கோட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், "எக்கள் குழுவினர் இரவுநேர துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அதிகாலை வரை தொடர்ந்த குண்டுவெடிப்புகளின் சத்தத்தால் விழித்தே இருந்தோம். விரைவில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நிர்வாகம், ஊழியர்களிடையே பரவியிருந்த அச்சத்தால் ஹோட்டலை மூட முடிவு செய்து, எங்களை வெளியேறுமாறு கூறினார்கள்," என்று தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறும் வழியில், கடைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருப்பதைக் கண்டதாகவும், சாலைகள், பேருந்து நிலையங்கள் காலியாக இருந்ததாகவும் ஜுகல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,ANTARIKSH JAIN/BBC படக்குறிப்பு,பதான்கோட்டை சேர்ந்த 70 வயதான அசோக் மேத்தா, தற்போதைய குண்டுவெடிப்புகள் 1971 போரை நினைவுகூர்வதாக பிபிசியிடம் தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நகரத்தின் இந்திய விமானப்படை தளம் ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "நேற்றிரவு நாங்கள் கண்ட ஓர் அசாதாரண காட்சி இது. இந்த குண்டுவெடிப்புகளின் பலத்த சத்தம் காதுகளைச் செயலிழக்க வைக்கும் அளவுக்கு இருந்தது" என்று 70 வயதான கடைக்காரர் அசோக் மேத்தா ஒரு நாள் முன்னதாகத் தன்னிடம் கூறியதாகவும் ஜுகல் புரோஹித் கூறினார். இந்த குண்டுவெடிப்புகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 1971 போரின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக அசோக் மேத்தா குறிப்பிட்டார். "எனக்கு 16 வயது இருந்தபோது, நானும் என் நண்பர்களும் விமானங்கள் கீழே விழுவதையும் குண்டுகள் வீசப்படுவதையும் தவறாமல் பார்ப்போம். இந்த முறை நடந்தது அவ்வளவு தீவிரமாக இல்லை. கடந்த முறை போல இப்போது நடக்காது என்று நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார். ஹோட்டலில் இருந்து வெளியேறிய பிறகு, சுமார் 5-6 கி.மீ காரில் பயணித்து, அண்டை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தை அடைந்ததாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தானுடன் சௌதி பேச்சுவார்த்தை சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சௌதி வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்தத் தொலைபேசி உரையாடலின்போது, பதற்றங்களைக் குறைக்கவும், நடந்து கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் தேவையான முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதிலும் இரு நாடுகளுடனும் சமச்சீரான, நெருங்கிய உறவைப் பேணுவதிலும் சௌதி உறுதியாக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பக்கமும் பாகிஸ்தான்: இந்தியாவின் இந்த எல்லையோர கிராமத்தில் மக்கள் என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு7 மணி நேரங்களுக்கு முன்னர் டிரோன் போர்: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?10 மே 2025 பாகிஸ்தான் அமிர்தசரஸ் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதா? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பாகிஸ்தானின் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை (மே 10) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், "இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்புகள், மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் போன்றவை பெரிய அளவில் அழிக்கப்பட்டதாக வெளியாகும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை" என்று தெரிவித்தார். மேலும், "தயவு செய்து பாகிஸ்தான் அரசால் பரப்பப்படும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்," என்றும் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கேட்டுக்கொண்டார். "அமிர்தசரஸை நோக்கி இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் ஓர் அபத்தமான கூற்றும் வெளியிடப்படுகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் இந்த பலவீனமான முயற்சிகள் தோல்வியடையும்," என்று குறிப்பிட்டார். அதோடு, ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசிய விக்ரம் மிஸ்ரி, "இந்திய ஏவுகணைகள் ஆப்கனை குறிவைத்ததாகச் சொல்வது முற்றிலும் அபத்தமானது," என்றார். "இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த நாடு ஆப்கனின் பொது மக்களையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் பலமுறை குறிவைத்துள்ளது என்பதை ஆப்கன் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார். அதேவேளையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரும் தங்கள் நாட்டின் மீது இந்தியா ஏவுகணைகளை ஏவியதாக வெளியான தகவலை உறுதியாக மறுத்துள்ளார். பாகிஸ்தானுடன் மோதல் போக்கு - இந்தியாவில் சமூக ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதா?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா vs பாகிஸ்தான் - வல்லரசு நாடுகள் யாரை ஆதரிக்கின்றன?10 மே 2025 இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த அமெரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ (கோப்புப் படம்) அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோரிடம் பேசியுள்ளார். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மார்கோ ரூபியோவுடனான உரையாடல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். "இன்று காலை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவுடன் நான் உரையாடினேன். இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் ஒரு கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் இருந்து வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். ஜெய்சங்கர் உடனான உரையாடல் குறித்து அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி, "அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேசினார். பதற்றங்களைக் குறைக்கவும் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்கவும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்." இதனுடன் எதிர்காலத்தில் எந்தவொரு சர்ச்சையையும் தவிர்க்க இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உதவ முடியும் என்றும் மார்கோ ரூபியோ கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடனான பேச்சுவார்த்தை குறித்தும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. "இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருடன் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, பதற்றங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய இரு தரப்பினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் எதிர்கால மோதலைத் தவிர்க்க பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்க உதவும் என்று தெரிவித்தார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வாறு செயல்படும்?10 மே 2025 இந்தியா - பாகிஸ்தான் மோதல் எவ்வாறு பரிணமிக்கும்? முழு பார்வை9 மே 2025 'பாகிஸ்தானின் அதிவேக ஏவுகணைகளை இந்தியா முறியடித்தது' – கர்னல் சோபியா குரேஷி ஷார்ட் வீடியோ Play video, "'பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை ஏவியது' - கர்னல் சோஃபியா குரேஷி கூறியது என்ன?", கால அளவு 1,30 01:30 காணொளிக் குறிப்பு, இன்று (மே 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதல் குறித்து விளக்கினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லை நெடுகிலும் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் டிரோன் ஊருவல்கள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறினார். அவரது கூற்றுப்படி, ஸ்ரீநகரில் இருந்து நலியா வரை 26 இடங்களில் வான் வழியாக ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் அவற்றில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன. பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில் அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணை ஏவப்பட்டதாகவும் அதை இந்தியா செயலிழக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் குறித்த தகவல்களையும் கர்னல் சோபியா குரேஷி பகிர்ந்து கொண்டார். "பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்த பிறகு, இந்திய ஆயுதப்படைகள் திட்டமிட்ட முறையில் பதிலடி தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தானின் தொழில்நுட்ப கட்டமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டன." "ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹிம்யார் கான், சுக்கூர் மற்றும் சுனியாவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளங்கள் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களால் தாக்கப்பட்டன." என்றார் அவர். பாகிஸ்தானின் பஸ்ரூரில் அமைந்துள்ள ரேடார் தளத்தையும் சியால்கோட்டில் உள்ள விமானப் போக்குவரத்து தளத்தையும் இந்தியா குறிவைத்ததாக கர்னல் குரேஷி கூறினார். பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டு, அது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருடன் இணைந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது," என்று கூறினார். இந்தியாவின் இந்தத் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்புப் படம்) பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தனது 3 ராணுவ விமான தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சியில் பேசும்போது, இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உரிய வகையில் "பதிலளிக்கும்" என்று தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். நாட்டின் படைகள் 'முழுமையாக தயாராக' இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறும் விமானப்படைத் தளங்களில் ஒன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் ஆகும். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்திகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்துகிறதா?10 மே 2025 இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? எவ்வாறு செயல்படும்?10 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தகவல் இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐஎஸ்பிஆரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த பதிலடி நடவடிக்கையை 'ஆபரேஷன் பன்யன் மார்ஸ்' என்று பெயரிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை. இந்தியா vs பாகிஸ்தான் - வல்லரசு நாடுகள் யாரை ஆதரிக்கின்றன?10 மே 2025 பஞ்சாபில் ஏவுகணை போன்ற பொருட்கள் கண்டெடுப்பு - மக்கள் என்ன சொல்கிறார்கள்?8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,ஜம்மு நகரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்முவின் ரெஹாரி காலனியில் தாக்குதல் ஜம்மு நகரத்தின் ரெஹாரி காலனி மீது நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், பல வாகனங்களின் ஜன்னல்கள் உடைந்து போனதாகவும் உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று மக்கள் கூறினர். உள்ளூர்வாசி ராகேஷ் குப்தா கூறுகையில், "ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது. எங்கும் பயம் மற்றும் பீதி நிறைந்த சூழல் நிலவியது. பாகிஸ்தான் ஏன் சாதாரண மக்களைத் தாக்குகிறது?" என்றார். இந்திய சிறையில் இருந்து தப்பிக்க முயன்று சுரங்கப்பாதையில் சிக்கிய மசூத் அசார்9 மே 2025 இந்தியா பாகிஸ்தான் பதற்றம் - அண்டை நாடுகள் யார் பக்கம்?7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ரெஹாரி காலனியில் வாகனங்கள் சேதமடைந்தன. பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, சிலர் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிபிசி குழு அங்கு இருந்தபோது ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் போர் விமானங்கள் மேலே பறக்கத் தொடங்கிய போது அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதால், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பாக். தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அதிகாரி ஒருவர் பலி - உமர் அப்துல்லா பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ராஜௌரியில் இருந்து சோகமான செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் மாவட்டத்தில் இருந்தார். எனது தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்," என்று பதிவிட்டுள்ளார். ராஜௌரி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறினார். "இன்று பாகிஸ்தான் ராஜௌரி நகரத்தை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இதன் போது, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபாவின் வீடு குறிவைக்கப்பட்டு, தாக்குதலில் அவர் இறந்தார்." என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Play video, "32 விமான நிலையங்கள் மூடல்... 26 இடங்களில் டிரோன் தாக்குதலா? இரவு நடந்தது என்ன?", கால அளவு 2,36 02:36 காணொளிக் குறிப்பு,32 விமான நிலையங்கள் மூடல்... 26 இடங்களில் டிரோன் தாக்குதலா? இரவு நடந்தது என்ன? - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglek9re7l2o
-
பதவியை இராஜினாமா செய்தார் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர்
10 MAY, 2025 | 04:46 PM அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட விடயங்கள் காரணமாக இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மிக்க தசநாயக்க கடந்த 2023ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அதே ஆண்டில் அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214379
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் ! 10 MAY, 2025 | 07:39 PM இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன. இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் உதவி பிரதமர் இஷாக் டார்ரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களை நடத்திய பின்னர், "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" இணங்கயுள்ளமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் மேற்கொண்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானுக்கிடையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214391