Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 19 DEC, 2024 | 04:13 PM (எம்.மனோசித்ரா) இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயத்தை நீண்ட கால இராஜதந்திர போக்குடனேயே அணுகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்றது. இதன் போது, ஆய்வுக்கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட தூதுக்குழுவின் கரிசணை குறித்தும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆய்வுக் கப்பல்கள் குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இராஜதந்திர ரீதிலேயே நகர்வுகளை முன்னெடுக்கின்றோம். இவ்வாரம் சீனாவின் மருத்துவ கப்பலொன்று இலங்கை வரவுள்ளது. அக்கப்பல் எமது சுகாதார துறைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கிலேயே விஜயம் செய்யவுள்ளது. அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால் ஆய்வுக் கப்பல்கள் வருகை தரும் போது, அவை எந்த நாட்டு கப்பல்களானாலும் அது குறித்து நாம் ஆழமாக ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்போம். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனுடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தீர்மானங்களை எடுப்போம். நீண்ட கால இராஜதந்திர நோக்குடனேயே நாம் செயற்படுகின்றோம். ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் படிப்படியாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இது குறித்து அறிவித்திருக்கின்றார். ஆய்வுக்கப்பல்கள் வருவதற்கான நோக்கம் குறித்து தெளிவாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமைய அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/201662
  2. 19 DEC, 2024 | 06:42 PM ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு வியாழக்கிழமை (19) ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு கோரிக்கை கடிதமொன்றையும் கையளித்துள்ளார். அக்கடித்தில், ஈழத்தமிழர் மீது திட்டமிடப்பட்ட தொடர்தேர்ச்சியான இன அழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றக் குழுத் தலைவராக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய திருகோணமலைப் பிரகடனத்தில் எவ்வாறு இந்தத் திட்டமிடப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசு கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தந்தை செல்வா அவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கியிருந்தார். அதன் ஒரு வடிவமாகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு தொழிற்படுகிறதென்று சர்வதேச தரப்புகளை நோக்கி இலங்கை எதிர்நோக்கும் சிக்கல் என்ற வெளியீட்டை முதல் முதலாக சர்வதேசம் நோக்கி தமிழரசுக்கட்சி முன்வைத்திருந்தது. இது தொடர்பில் அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்தின் பங்கை மக்கள் பிரதிநிதிகளாக நாம் வலியுறுத்திவருகிறோம். இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது: 1)தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல் 2)இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல் 3)மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும். மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ளவகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவவேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/201684
  3. பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, லடாக்கில் உள்ள இந்தியாவின் ஹேப்-1 விண்வெளி அனலாக் திட்டம். கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் மேலே உள்ள படத்திலுள்ள முட்டை வடிவிலான இந்த அமைப்புகள், வருங்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழும் வீடுகளாக இருக்க முடியுமா? நிலத்தில் இருந்துகொண்டே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேப்-1 என்றழைக்கப்படும் ஹேபிடட்-1 என்ற சோதனைத் திட்டத்தை முதல் முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. லடாக்கில் உள்ள இமயமலைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு இந்த சோதனை முயற்சி நடைபெற்றது. விண்வெளி போன்ற ஒரு சூழலை உருவாக்கி இந்தச் சோதனைகள் நடத்தப்படும்போது, விண்வெளி வீரர்களுக்கும் மற்ற உபகரணங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று குஜராத்தை சேர்ந்த விண்வெளி நிறுவனமான ஆகாவில் (Aaka), விண்வெளி பொறியாளராகப் பணிபுரியும் ஆஸ்தா கச்சா-ஜாலா பிபிசியிடம் தெரிவித்தார். ஹேப்-1, விண்வெளி தரத்திலான டெஃப்ளான் உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் பாதுகாக்கப்பட்ட ஃபோம் (foam) அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மெத்தை, வேலை செய்வதற்கான மடித்து வைக்கக்கூடிய ஒரு மேசை, தினசரி மற்றும் அவசரக்கால தேவைகளுக்கான பொருட்களை வைப்பதற்கான ஓர் இடம், சிறிய சமையலறை மற்றும் கழிவறை இருக்கின்றன. இந்தச் சோதனைக்காக மூன்று வாரங்கள் வரை விண்வெளி வீரர் ஒருவர் இங்கு தங்கியிருந்தார். "செவ்வாய் கிரகமோ, நிலவோ எதுவாக இருந்தாலும் அங்கிருக்கும் சுற்றுச்சூழலில் நிலவும் மிகக் குறைந்த அளவிலான வசதிகள் மற்றும் கட்டுமான சவால்களைக் கருத்தில் கொண்டே ஹேப்-1 கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தண்ணீருக்கு சிக்கல் இருக்கும் என்பதால் நீர் இன்றி இயங்கும் கழிவரையை உருவாக்கியுள்ளோம். அதில் துர்நாற்றம் வெளிவராத வகையில் கழிவை வெளியேற்றும் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளோம்," என்கிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா. இஸ்ரோவின் முதல் 'விண்வெளிக் குடியிருப்பை', அதாவது விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதிரி குடியிருப்பை லடாக்கில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஜாலா ஈடுபட்டுள்ளார். விண்வெளி: கிறிஸ்துமஸ் மரம் போலக் காட்சியளிக்கும் விண்மீன் திரள் - வியக்கும் விஞ்ஞானிகள் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்? அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் விண்வெளிக் குடியிருப்புகள் குறித்த இந்தத் திட்டத்திற்கான சோதனை முயற்சிகளும் தொடங்கியுள்ளன. சுமார் 400 கி.மீ. உயரத்தில், பூமியின் குறைந்தபட்ச சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கு விண்வெளியில் வீரர்களை நிலை நிறுத்துவதே இஸ்ரோவின் ககன்யான் திட்டம். இதற்கான அனைத்து செயல்முறையும் திட்டமிட்டபடி நடந்தால் இத்திட்டம் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும். இந்தியா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2040ஆம் ஆண்டிற்குள், மனிதனை நிலவுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகளும், விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதுபோன்ற பல 'விண்வெளி வாழ்க்கை' தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை சோதனை செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், ககன்யான் திட்டத்தில் பங்குபெறத் தேர்வாகியுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் இருவருக்கு தற்போது நாசாவில் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, நிலாவிலோ செவ்வாயிலோ நிலவும் சுற்றுச்சூழலில், அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஹேப்-1 வடிவமைக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா "விண்வெளி வாழ்வனுபவம் தொடர்பாகத் தனது சொந்த திட்டங்களை இந்தியாவால் செயல்படுத்த முடியுமானால், நமது விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கு மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டியதிலை," என்று லடாக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் படிப்புகளுக்கான துறைத் தலைவர் பேராசிரியர் சுப்ரத் ஷர்மா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் லடாக் பல்கலைக்கழகமும் கைகோர்த்துள்ளது. லடாக் பாறைகள் நிறைந்த ஒரு தரிசு நிலம் எனக் கூறுகிறார் அவர். "செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்புடன் லடாக்கின் நிலவியல் ஒத்திருக்கிறது. அதனால், இந்தப் பகுதி விண்வெளி ஆய்வுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இங்கு சோதனை செய்யப்பட்டது," என்று பிபிசியிடம் சுப்ரத் ஷர்மா தெரிவித்தார். இந்தச் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் விண்வெளியில் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விண்வெளியில் வீடுகளை அமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்கின்றனர். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, இந்தியாவின் சோதனை விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்களை செலவிட்ட விண்வெளி வீரர். இந்திய- சீனா எல்லையில் உள்ள இந்த இமயமலைப் பகுதி சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வானிலை மிகவும் தீவிரமாக இருக்கும். அதாவது ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சம் -18 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும். இது செவ்வாயின் வெப்பநிலைக்கோ (-153 செல்சியஸைவிட குறையலாம்) அல்லது நிலவின் வெப்பநிலைக்கோ (ஆழமான பள்ளங்களில் -250 செல்சியஸ் வரை இருக்கும்) எந்த விதத்திலும் பொருந்தவில்லை. ஆனாலும் ஒரு மனிதரால் எந்த அளவு வரையிலான வெப்பநிலையைத் தாங்க முடியும் என்பதை அறிவதற்கான முயற்சியே இந்தச் சோதனை. "ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சோதனைக்காக விண்வெளிக்குச் செல்ல முடியாது என்பதால், விண்வெளி போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சோதனை நிலையம் அவசியமாகத் தேவைப்படும்," என்றார் பேராசிரியர் ஷர்மா. மேலும், "லடாக்கில் தரிசு நிலங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், நீங்கள் விண்வெளியில் தனியாக இருப்பது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்," என்றார் அவர். தானும் இதே போலத்தான் உணர்ந்ததாக மூன்று வாரங்கள் இந்தக் கட்டமைப்பில் தங்கியிருந்த விண்வெளி வீரர் தெரிவித்துள்ளார். "மனித சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து நான் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது அன்றாடப் பணிகள், எப்போது எழ வேண்டும், எப்போது என்ன செய்ய வேண்டும், தூங்க வேண்டும் என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நான் செய்யும் அனைத்து வேலைகளும் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். எனது செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்," என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத, இந்தச் சோதனையில் பங்கெடுத்த 24 வயது நபர் ஒருவர் தெரிவித்தார். "ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் போகப் போக செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வது போல் இருந்தது. இது எனது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்தது. நான் தூங்கும் முறையைப் பாதித்தது, எனக்கு கவனக் குறைப்பாட்டை ஏற்படுத்தியது." விண்வெளி வீரரின் உடலில் பயோமெட்ரிக் சாதனங்கள் பொருத்தப்பட்டு அவரது தூக்க முறை, இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அவரது உடல் எந்த அளவிற்கு இந்த நிலையை ஏற்றுக்கொள்கிறது என்பதை அவரது ரத்தம் மற்றும் எச்சிலை தினமும் சோதனை செய்து கண்காணித்தனர். சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1969ஆம் ஆண்டு பஸ் ஆல்ட்ரின் நிலவில் நடக்கும் புகைப்படம் இது. விண்வெளியில் மனிதர்களைப் பாதிக்கும் உளவியல் காரணிகளைக் கண்டறிவதும் இந்தச் சோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிலையங்கள் தங்களுடைய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப, அவர்களுக்கென நிரந்தரமான தங்குமிடத்தை இனி வரும் காலங்களில் அமைக்க முயன்று வருகின்றன. அதனால் இதுபோன்ற திட்டங்கள் விண்வெளிக்கான ஆய்வுகளிலும் பயிற்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரேகன் என்ற இடத்தில் நாசாவின் லாஸீ என்ற இயந்திர நாயை நிலவின் மேற்பரப்பில் நடக்க வைப்பதற்கான சோதனைத் திட்டத்தை மேற்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நான்கு பேர், டெக்சாஸில் உள்ள விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வசதியில் தங்கியிருந்து வந்தனர். இந்தச் சோதனை பிரத்யேகமாக செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வை வழங்கும். எகனாமிஸ்ட் நாளிதழைப் பொருத்தவரை, நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு 3D அடித்தளத்தை நாசா அமைக்கப் போகிறது. அதேநேரத்தில் சீனாவும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றனர். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை இந்தியா பின்தங்கிய நிலையில் இருக்க விரும்பவில்லை. "லடாக்கில் சேமிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, நமது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு உதவ, சிக்கல்களைச் சமாளிக்க மருத்துவ தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு இது உதவும்" என்று பேராசிரியர் ஷர்மா கூறுகிறார். "பூமியைவிட இரவும் பகலும் அதிகமாக இருக்கும் நிலவிலும் அதேபோல ஆக்சிஜன் இல்லாத விண்வெளியிலும் வாழ்ந்தால் நமது மனித உடல் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgj6yqj7jz7o
  4. 19 DEC, 2024 | 07:51 AM மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர். இத்தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐஜி பிஷம் சர்மா கூறுகையில், “மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீல்கமல் என்ற படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார். https://www.virakesari.lk/article/201614
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹுசம் அசல் பதவி, பிபிசி அரபு சேவை, அமான் நகரிலிருந்து சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. ஒசாமா காணாமல் போய் 38 ஆண்டுகள் ஆகின்றன. பஷீர் தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அன்றிலிருந்து தொடர்ந்து தேடி வருகிறார். செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்' சிரியா: நகரின் மையத்தில் ரகசியமாக செயல்பட்ட உளவு அமைப்பின் சித்திரவதை சிறை- அங்கு இருந்தது என்ன? இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தது? - அந்த பணம் இனி என்னவாகும்? 'எலும்புக்கூடு போல் இருந்தார்' முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அல்-படாய்னேவும் அவரது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த செய்தியை அவர் கேள்விப்பட்டார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள செட்னயா சிறையிலிருந்து ஒரு நபர், "நான் இர்பிட்டை சேர்ந்தவன்" என்று கூறி சிறையிலிருந்து வெளியேறும் காணொளி வெளிவந்தது. பின்னர் ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம், ஜோர்டான் நாட்டவரான ஒசாமா, சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஜோர்டான் திரும்பினார் என அறிவித்தது. அந்த நபர் தனது நினைவுகளை இழந்திருந்தார். அதன் பிறகு, அதிகாரிகள் இர்பிட்டில் விடுவிக்கப்பட்ட கைதிக்கும் அல்-படாய்னே குடும்பத்தினருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். "அவர் என் கையை நீண்டநேரம் பிடித்து முத்தமிடத் தொடங்கினார்," என்று அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார். ஒசாமாவின் தோற்றத்தை "ஒரு எலும்புக்கூடு" என்று அல்-படாய்னே விவரித்தார். மேலும் "அவர் நினைவாற்றலை இழந்துவிட்டார் என்றும் ஒசாமாவின் தோற்றம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவருடைய எல்லா அம்சங்களும் மாறிவிட்டன" என்றும் அல்-படாய்னே தெரிவித்தார். ஒசாமா, தனது தாயின் பெயரைக் குறிப்பிட்டது, பழைய குடும்பப் புகைப்படங்களில் தன்னை அடையாளப்படுத்தியது ஆகியவற்றை ஒசாமாவின் சகோதரி பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோர்டானும் சிரியாவும் 360 கி.மீ தொலைவிலான நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன அந்த நபர் ஜோர்டானிய தலைநகர் அம்மானில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம், அவருக்கும் அல்-படாய்னே குடும்பத்திற்கும் இடையே எந்த மரபணு உறவும் இல்லை என்பது தெரிய வந்தது. சமூக ஊடகங்களில் பல முரண்பாடான கருத்துகள் எழுந்ததால், அந்த மனிதரின் அடையாளத்தைச் சுற்றி நிச்சயமற்ற தன்மை வளரத் தொடங்கியது. அந்தக் காணொளியில் இருப்பவர், சிரியாவில் உள்ள டார்டஸ் நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர்கள் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் முகநூலில் ஒருவர் கூறினார். மேலும், அந்த நபர் டார்டஸ் கிராமப்புறப் பகுதியில் உள்ள கஃப்ரூன் சாதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், "1986இல் பெய்ரூட்டில் இருந்து, சிரிய உளவுத்துறையால் கடத்தப்பட்டதாகவும்" அவர் குறித்துப் பேசிய மற்றொரு பெண், முகநூலில் கூறினார். கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு5 மணி நேரங்களுக்கு முன்னர் அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?18 டிசம்பர் 2024 மரபணு பரிசோதனை பட மூலாதாரம்,WHITE HELMETS படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை, மனித உரிமைக் குழுக்களால் "மனிதப் படுகொலை கூடம்" என்று குறிப்பிடப்படுகிறது லெபனான் தலைநகரில் இருந்து கடத்தப்பட்டு சிரிய சிறைக்கு மாற்றப்பட்டதாக நம்பும் ஹபீப் சாதே எனப்படும் தனது உறவினரைப் போல் அந்த நபர் இருப்பதாக கேடலினா சாதே கூறுகிறார். தனது தாத்தாவின் சகோதரரான சாதே, சிரிய அரசின் மீது குற்றம் சுமத்திய பல்லாயிரக்கணக்கான மக்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான ராணுவ வளாகமான செட்னயா சிறையில், இருப்பதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்திற்குச் செய்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார். அந்த நபர், கைது செய்யப்பட்டு காணாமல் போன தங்கள் உறவினர்தான் என்பதை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புகின்றனர். "காணாமல் போன அந்த நபர், தற்போது ஜோர்டானில் உள்ளார். ஜோர்டான் அதிகாரிகளிடம் சோதனை முடிவுகளைச் சமர்பிப்போம். காஃப்ரூன் சாதே கிராமத்தில் வசிக்கும் எங்கள் தாத்தாவிடம் இருந்து பரிசோதனைக்காக ஒரு மரபணு மாதிரி எடுக்கப்படும்" என்றும் பிபிசியிடம் சாதே தெரிவித்தார். "சகோதரரைக் கண்டுபிடித்தால், தன் தாத்தா நிம்மதியாக இருப்பார்" என்றும் அவர் கூறினார். ஜோர்டானுக்கு திரும்பிய கைதியுடன் சென்ற முன்னாள் ஜோர்டானிய தொழிலாளர் துறை அமைச்சர் 'நெடல் அல்-படாய்னே' பேசியபோது, விடுவிக்கப்பட்ட அந்தக் கைதி, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் என்று எண்ணிய நபர்களிடம் இருந்து தனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் அந்த நபருடன் தொடர்புடையவர்கள் என நம்பும் குடும்பங்கள், மரபணு பரிசோதனை செய்து, சோதனை முடிவுகளை அனுப்புமாறு நெடல் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செட்னயா சிறையில் உள்ள ஒரு ரகசிய அறை, பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு படம் பிடிக்கப்பட்டது இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், ஜோர்டானில் உள்ள பஷ்தாவியின் உறவினர் 'அகமது' என்று காசிம் பஷ்தாவி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். அவரது உறவினர் அகமது, லெபனானில் கடத்தப்பட்டு சிரியாவுக்கு மாற்றப்பட்ட ஒரு பாலத்தீன போராளி என்று பஷ்தாவி பிபிசியிடம் கூறினார். கடந்த 1995ஆம் ஆண்டில், அகமது, செட்னயா சிறையில் இருப்பதாக, விடுவிக்கப்பட்ட கைதி ஒருவர் அவர்களது குடும்பத்தினரிடம் கூறினார். சிறையில் அவரைக் கண்டறிய முயன்றபோது, சிரியாவில் உள்ள பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் பஷ்தாவி கூறினார். அந்த நபர் காணாமல் போன தங்கள் உறவினரா, இல்லையா என்பதை அறிய மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பஷ்தாவி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு6 மணி நேரங்களுக்கு முன்னர் '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்18 டிசம்பர் 2024 'கடவுளின் கருணைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை விடுவிக்கப்பட்ட அந்த கைதிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று மரபணு சோதனை முடிவில் தெரிய வந்தபோது, அவரைத் தனது மகன் ஒசாமா என்று நினைத்திருந்த அல்-படாய்னே குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர். "எங்களால் எதுவும் செய்ய முடியாது, நாங்கள் கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறோம்," என்று ஒசாமாவின் சகோதரர் முகமது அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார். மகனைப் பற்றிய தகவல்களைப் பெற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அவரது தந்தை மேற்கொண்டார். மகனை நினைத்து ஏங்கி, அந்த சோகத்தின் காரணமாக, அவரின் தாய் தனது கண் பார்வையை இழந்தார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் இறந்துவிட்டார் என்றும் அல்-படாய்னேவின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். "அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, நாங்கள் அவரைத் தேடுவதை நிறுத்தவில்லை, அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதைக் கண்டறிய சிரியாவில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முயல்கிறோம்," என்றும் முகமது அல்-படாய்னே கூறினார். செட்னயா சிறையில் உள்ளவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்படுவதாக ஊடகங்களில் பரவும் கதைகள் குறித்துக் கவலை அடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் தங்களது நம்பிக்கையைக் கைவிட மறுத்து, காணாமல் போன தங்கள் உறவினரைத் தொடர்ந்து தேடத் திட்டமிட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdx9ygg7d7po
  6. Update : முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம்! 19 DEC, 2024 | 03:54 PM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பேருடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகில், 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர். குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருக்கின்றனர். இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/201658
  7. எலிக் காய்ச்சல் விலங்குகளிலும் பரவக் கூடிய அபாயம்; சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பாக்டீரியாக்கள் வாழும். எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவானது மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து பரவ வாய்ப்புள்ளது. மழைக் காலங்களில் குடி நீர்க்கிணறுகளில் கூட தொற்றுக் கிருமிகள் கலக்கக்கூடும். தொற்றடைந்த நீரைப் பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் இந்த பாக்றீரியாக்கள் உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது. இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளன. குறித்த லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் பாற்றீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு விலங்குகளில் பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் குறிப்பிட்டுள்ளார். இவ் விலங்குகளின் மலம், சிறுநீர் போன்ற கழிவுகளில் இந் நோய்க்கிருமி வெளியேறி இவ் விலங்குகள் வாழும் சூழலில் நெருங்கி பழகும் மனிதனிலும் இந் நோயக்கிருமி பரவி நோய்ப்பாதிப்பை ஏற்படுத்தலாம். மனிதனின் குருதியில் நோய்கிருமிகள் உள்ளதை இரத்தப்பரிசோதனைகள் மேற்கொண்டு உறுதிப்படுத்துவதை போலவே வளர்ப்பு விலங்குகளின் குருதி, சிறுநீர் ஆகியவற்றை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தி நோய்கிருமியின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த முடியும். மேலும் வடக்கு மாகாணத்தின் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலத்தில் மனிதரில் அடையாளம் காணப்பட்ட இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வளர்ப்பு விலங்குகளில் இந்நோயின் கிருமிகள் தொற்றாது. பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய மற்றும் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடுகளில் நேரடியாக இணைந்து கொள்ளும் பொருட்டு 18.12.2024 திகதியன்று மத்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நோய் ஆராய்ச்சி நிபுணர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது ஆய்வுகளை மேற்கொண்டள்ளனர். பல்வேறு பகுதி பண்ணை விலங்குகளின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றன. இந்நோய் பரவாது தடுப்பதற்கு கொதிக்கவைத்த நீர் பருகுதல்,சுகாதாரம் பேணப்படாத உணவு நிலையங்களில் உண்பதை தவிர்த்தல், செருப்பு அல்லது பூட்ஸ் அணிந்து வெளியில் செல்லல், வெளியே போய் வந்த பின் கை, கால்களை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் கால்நடைகளை நீர் தேங்கியுள்ள பிரதேசங்களில் கட்டி வைத்தல் மற்றும் மேய்ச்சலுக்கு அனுப்புதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளல் அவசியம். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மனிதரில் தொற்றுக்களை தவிர்ப்பதற்கு விலங்குகளின் கழிவுகள் தேங்கும் பகுதிகளில் உடற்பகுதிகள் நேரடி தொடுகையுறுவதை தவிர்த்தல் அவசியமானது. இந்நோயானது நாய்களையும் தாக்க வல்லது என்பதால் வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களின் சிறுநீர் மற்றும் மலம் என்பன மனிதரில் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நினைவிற் கொள்ளல் அவசியம். நாய்களில் இந்நோய் ஏற்படாது தடுப்பதற்கான தடுப்பூசிகள் இலங்கையிலும் சகல பிரதேசங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/313962
  8. 19 DEC, 2024 | 01:50 PM வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய கால்நடை அபிவிருத்தி மிருகவள நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தர். இன்றைய தினம் (19) ஊடகங்களுக்கு அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் ஜூலி சங் உடன் தாம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் அமெரிக்காவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார். தேசிய விவசாய அமைப்புக்கள் தொடர்பான எண்ணக்கருக்களை முன்னெடுத்து தேசிய உற்பத்திக்கான சர்வதேச சந்தை வாய்ப்புக்கள் உருவாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தெங்கு தொடர்பான உற்பத்திகள் மற்றும் தேங்காய்ப்பால் போன்றவற்றை நவீன முறையில் பதப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக உள்ளூர் விவசாயிகளது எதிர்காலம் சிறப்பாக அமைய வழி பிறக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201638
  9. வடக்கை கிலிகொள்ள வைக்கும் எலிக்காய்ச்சல்; 24 மணிநேரத்தில் 11 பேர் பாதிப்பு யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் காரணமாக இதுவரை யாழில் 7 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், நேற்றுவரை ஏறத்தாழ 7,200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ளது. இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துச்செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/313932
  10. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் சென்னை அருகே எண்ணூரை அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வழக்கறிஞர் ஆக வேண்டுமென்று கனவு காண்கிறார் அவர். "நான் வழக்கறிஞர் ஆகி எங்கள் ஊரில் எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற தொழிற்சாலைகளால் ஏற்படும் பிரச்னைகளை வரவிடாமல் தடுப்பேன். எங்கள் ஊருக்காகப் போராடுவேன்," என்று கூறுகிறார் கோகுல். எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு முழு ஆயுட்காலத்தை எட்டியதால் மூடப்பட்ட 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை, 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மக்கள் கருத்துகளின் அடிப்படையிலேயே திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்," என்று தெரிவித்தார். அனல் மின் நிலைய விரிவாக்கத்தை எண்ணூர் மக்கள் எதிர்ப்பது ஏன்? "சென்னைக்கு மின்சாரம், வடசென்னைக்கு நஞ்சா?" எண்ணூர் அனல்மின் நிலைய கழிவுகள்: அதிகரிக்கும் மாசுபாட்டால் கொந்தளிக்கும் மீனவர்கள் - கள நிலவரம் சென்னை: சர்வதேச சமூகம் கண்டு அச்சப்படும் நிலையில் இருக்கிறதா? என்ன பிரச்னை? காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து: ஐ.பி.சி.சி அறிக்கை தமிழக தலைநகரை எச்சரிப்பது ஏன்? இந்தத் திட்டத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. இதையொட்டி, வட சென்னையில் இந்தத் திட்டம் குறித்த விவாதங்கள் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 15ஆம் தேதி காட்டுக்குப்பம் கிராமத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், 'இதயத்தால் யோசித்து எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்யுங்கள், ஸ்டாலின் தாத்தா' என்று தங்கள் ஓவியங்களின் வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர். எண்ணூர் குழந்தைகளின் ஏக்கம் மீனவ சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாக முன்பு இருந்த பகுதி, கடந்த 50 ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் மையமாக மாறிவிட்டது. "இது எங்களுக்கு நல்லது செய்ததைவிட, பிரச்னைகளையும் நோய்களையும் கொண்டு வந்ததே அதிகம். அப்படியிருக்கும் சூழலில் நாங்கள் மீண்டும் இன்னொரு அபாயத்தை இங்கு அனுமதிக்க மாட்டோம்," என்கிறார் காட்டுக்குப்பம் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ். பெரியவர்கள் மட்டுமில்லை, எண்ணூரின் சூழல் குறித்து வருங்காலத் தலைமுறை மனதிலும் கவலை இருப்பது தெரிகிறது. "நாங்கள் விளையாடும் போது, மண்ணில் ஒருவித நாற்றம் வீசும். ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெந்நீர் கலப்பது, கழிவு வாடை வீசுவது என்றிருக்கும் என்பதால், எங்கள் வீட்டில் அங்கெல்லாம் அனுப்பவே மாட்டார்கள்," என்று கூறுகிறார் கோகுல். கோகுலுக்கு எண்ணூர் அனல்மின் நிலையம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அது அமல்படுத்தப்பட்டால் "தாங்கள் ஏற்கெனவே எதிர்கொள்ளும் மாசுபாடுகள் தீவிரமடையும் என்றால் தயவுசெய்து அதை அனுமதிக்காதீர்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். கோகுல் மட்டுமல்ல, எண்ணூரில் நான் சந்தித்த சிறுவர், சிறுமியர் பலரிடத்திலும், அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து நடக்கும் விவாதங்களின் தாக்கத்தைக் காண முடிந்தது. அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் கூறியது என்ன?18 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்கள்?18 டிசம்பர் 2024 படக்குறிப்பு, காட்டுக்குப்பம் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? சுமார் 40 ஆண்டுகள் எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் இயங்கி வந்த 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் கடந்த 2017-ஆம் ஆண்டில் முழு ஆயுள் காலத்தை எட்டியதால் செயல்பாட்டை நிறுத்தியது. அதை 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், டிசம்பர் 20ஆம் தேதியன்று எண்ணூரில் நடக்கவிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு எண்ணூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எண்ணூரைச் சேர்ந்த வனிதா, மூச்சுவிட முடியாமல் தமது மூன்று குழந்தைகளும் ஏற்கெனவே திணறிக் கொண்டிருப்பதாகவும், மீண்டும் அனல்மின் நிலையம் வந்தால் "இதை வாழவே தகுதியற்ற பகுதி என அறிவித்துவிட வேண்டியதுதான்" என்றும் காட்டமாகப் பதிலளித்தார். வனிதாவுக்கு 10 வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர். "நான் என் குழந்தைகளை தெருக்களிலோ, ஆற்றங்கரையிலோ விளையாட அனுமதிப்பதே இல்லை. ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் என் கணவரின் கால்களின் படிந்திருக்கும் சாம்பல் கழிவு எவ்வளவு கழுவினாலும் போகாது. அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியான புகையால் மூக்கு எரிச்சல் தாங்க முடியாது. அங்கிருந்து புகை வெளியாகும் போதெல்லாம், வீட்டின் கதவு, ஜன்னல் என அனைத்தையும் பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருந்துவிடுவோம். இப்படிப்பட்ட சூழலில் வாழும் நாங்கள் எப்படி இதே விளைவுகளை இன்னும் கூடுதலாக அளிக்க வல்ல மற்றுமொரு திட்டத்தை அனுமதிப்போம்," என்கிறார் வனிதா. ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?18 டிசம்பர் 2024 பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து? சிக்கிய இளைஞரின் பின்னணி என்ன?18 டிசம்பர் 2024 குழந்தைகள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகள் படக்குறிப்பு, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 'இதயத்தால் யோசிக்குமாறு' முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் எண்ணூர் மாணவர்கள் கடந்த 13ஆம் தேதியன்று, இந்தியன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்ற குழந்தைநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் குழந்தைநலம் என்ற பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனல்மின் நிலைய திட்டங்களுக்கான வல்லுநர் குழுவுக்கும் ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தின்படி, தீவிர காற்று மாசுபாட்டால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாசுபாடுகளின் மையமாகத் திகழும் பகுதிகளில் வாழும் குழந்தைகள் இதன் விளைவுகளை அதிகம் எதிர்கொள்கின்றனர். மேலும், "எண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் காற்று ஏற்கெனவே அதிக அளவில் மாசுபட்டுள்ளது. தற்போது அனல் மின் நிலையத்தை விரிவாக்கினால் காற்று மாசுபாட்டை அது மேலும் தீவிரப்படுத்தும். ஆகவே, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது" என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், அதன் உற்பத்தி வழிமுறைகளை, காற்று, சூரிய மின்சாரம் போன்ற பாதுகாப்பான அணுகுமுறைகளில் உற்பத்தி செய்வதே காலநிலை நெருக்கடியின் விளைவுகளைக் குறைக்க உதவும் என்று வலியுறுத்துகிறார் அகாடெமி ஆஃப் இந்தியன் பீடியாட்ரிக்ஸ் எனப்படும் குழந்தைநல மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் மருத்துவர் டி.எம்.ஆனந்தகேசவன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், காற்று மாசுபாட்டில் தீவிர பங்காற்றக் கூடிய அனல்மின் நிலையங்கள் காலநிலை நெருக்கடியை விரைவுபடுத்துவதாகவும், அதன் விளைவாக ஏற்படும் காற்று மாசு பெரியவர்களைவிட குழந்தைகள் மீதே அதிக தாக்கம் செலுத்துவதாகவும் கூறினார். "காற்று மாசுபாட்டால் கருவிலுள்ள குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் வெளியில் விளையாடுவதாலும், அவர்களின் செயல்பாடு அதிகம் என்பதாலும் அவர்களின் நுரையீரலை மாசுபட்ட காற்று அதிகம் பாதிக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார். "அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் சிந்திக்கும் திறன் குறைவதோடு, ஆஸ்துமா போன்ற நாள்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, நாளடைவில் புற்றுநோய் போன்ற நீண்டகால பாதிப்புகளையும் மாசடைந்த காற்று ஏற்படுத்துகின்றன," என்று எச்சரித்தார் ஆனந்தகேசவன். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கர்ப்பிணிகள் மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது, குழந்தையின் ஆரோக்கியத்தை அது பாதிக்கிறது. மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. சமீபத்தில், ஹெல்தி எனர்ஜி இனிஷியேட்டிவ் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில், எண்ணூரை சேர்ந்த 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் சென்னையின் மற்ற பகுதிகளில் காணப்படுவதைவிட 63 மடங்கு அதிகமான சுவாசப் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிய வந்தது. இந்த ஆய்வில் பங்கு வகித்த குழந்தைகள் சிலரின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது சுவாசப் பிரச்னை, சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஏதேனும் ஒரு பாதிப்புகளை எதிர்கொள்வதாகக் கூறினர். வனிதாவை போலவே பிபிசி தமிழிடம் பேசிய, இந்த ஆய்வில் பங்கெடுத்த ஜெயாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குழந்தைகளின் உடல்நிலை குறித்தும் அதில் எண்ணூரின் காற்று மற்றும் நீர் மாசுபாட்டின் விளைவுகள் குறித்தும் கவலை கொண்டுள்ளார். ஐந்து வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஜெயா, தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிதாக மற்றுமோர் அனல்மின் நிலையம் வருவதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 அனல்மின் நிலையம் ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள் என்ன? கிழக்கே வடசென்னை அனல்மின் நிலையம், காமராஜர் துறைமுகம், மேற்கே வல்லூர் அனல்மின் நிலையம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், தெற்கே எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவை எண்ணூரில் அமைந்துள்ளன. இவைபோக, மணலியில் தொழிற்பேட்டை, கோரமண்டல் உரத் தொழிற்சாலை, கோத்தாரி உரத் தொழிற்சாலை ஆகியவை அமைந்துள்ளன. "அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திச் செயல்முறையில் இருந்து சாம்பல் கழிவுகள், நுண்துகள்கள் எனப்படும் மாசுக் காரணிகள் கழிவுகளாக வெளியேற்றப்படும். கந்தக டைஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட் போன்ற நச்சு வாயுக்களும் காற்றில் வெளியேற்றப்படும்" என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் சுற்றுச்சூழல் பொறியாளரான துர்கா. ஏற்கெனவே இந்தப் பகுதியில் செயல்படும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகளும் நச்சு வாயுக்களும் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டும் துர்கா, இந்தப் புதிய திட்டம் ஏற்கெனவே மோசமடைந்து வரும் அப்பகுதியின் நிலைமையை அதிதீவிர அபாயத்தில் தள்ளும் என்று எச்சரிக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு அறிக்கைப்படி, கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் 8 அடி வரை சாம்பல் கழிவுகள் படிந்துள்ளன. அந்த அறிக்கைப்படி, எண்ணூரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிட அதிகளவில் காற்று மாசடைந்து இருப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. "எண்ணூரும் கொசஸ்தலை ஆறும் ஏற்கெனவே இந்த அளவுக்கு மாசுபட்டிருக்கும் நிலையில், எதற்காக இதே பகுதியில் மற்றுமோர் அனல்மின் நிலையம்?" என விமர்சிக்கிறார் துர்கா. ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 குடியிருப்புக்கு அருகிலேயே அனல்மின் நிலையமா? படக்குறிப்பு, விரிவாக்கம் செய்யப்படவுள்ள அனல்மின் நிலையத்தின் பின்புறத்தில், வெகு அருகில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் 2024-25 ஆண்டுக்கான கொள்கை அறிக்கைப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி அளவில் இதுவரை 67 சதவீதத்தையே எட்டியுள்ளன. "தற்போது மாநிலத்தில் இயங்கிவரும் அனல்மின் நிலையங்களே முழு திறனை எட்டாத நிலையில், அரசு ஏன் புதிதாக இன்னொன்றைக் கட்டமைக்க வேண்டும்," என்று கேள்வியெழுப்புகிறார் சுற்றுச்சூழல் பொறியாளர் துர்கா. அனல்மின் நிலையம் வரவுள்ள பகுதிக்கு மிகவும் அருகிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 6,877 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து மக்கள் வாழத் தொடங்கும் நேரத்தில் அதற்கு வெகு அருகிலேயே திட்டமிடப்படும் இந்த அனல் மின் நிலைய விரிவாக்கத்தால், அங்குக் குடியேறும் மக்களுடைய உடல்நிலைக்குத் தீங்கு ஏற்படும்" என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தது. இதுகுறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்றே மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழில்நுட்பக் கமிட்டியில் விவாதிக்கப்பட்டது. "குடியிருப்புகளுக்கு மிக அருகிலேயே அனல்மின் நிலையம் போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு வருவது, முன்னமே பாதிக்கப்பட்டுள்ள பகுதியின் மீதான விளைவுகளின் தீவிரத்தை விரைவுபடுத்தும். அந்தக் குடியிருப்புகளில் வாழப் போகும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்று மருத்துவர் ஆனந்தகேசவன் எச்சரித்தார். வீட்டுக்கடனுக்கும் வட்டி இல்லை: இஸ்லாமிய வங்கிகள் வட்டியே வசூலிக்காமல் லாபம் ஈட்டுவது எப்படி தெரியுமா?14 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 எண்ணூர் குழந்தைகளின் அச்சம் படக்குறிப்பு, "எங்களுக்கு புற்றுநோய் வேண்டாம் தாத்தா. எங்களுக்கு நோய்நொடிகள் பிரச்னை உள்ளது," என்று தனது சூழ்நிலையை விவரிக்கும் எண்ணூர் மாணவர் ஒருவரின் கோரிக்கை. இந்தத் திட்டத்திற்கு எழுந்து வரும் எதிர்ப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மக்களுடைய கருத்துகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் குறித்து அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார். ஏற்கெனவே நிலவும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, "எண்ணூர் மட்டுமன்றி மொத்த வடசென்னையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் சில திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், முதலமைச்சரின் அறிவுரைப்படி கூடுதலாக சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும்," பதிலளித்தார். அப்பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் குறித்த மக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரையும் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்கள் பதிலளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y8025p86yo
  11. 19 DEC, 2024 | 02:19 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் புதன்கிழமை (18) தெரிவித்தனர். ஆழியவளை பகுதியில் மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டபோதும் அவர்களால் அந்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. நள்ளிரவு நேரம் காவலாளர்கள் நிறுத்தப்பட்டு, JCB இயந்திரம் கொண்டு டிப்பர்கள் மூலம் மணல் கடத்தல்காரர்களினால் மணல் கொள்ளையிடப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணல் வளம் சூறையாடப்பட்டு, மணல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சீரற்று காணப்படும் அந்த பாதைகளில் தற்போது பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடிமனைகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, தமது கிராமத்தை பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/201647
  12. 19 DEC, 2024 | 01:30 PM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கியுள்ளனர். படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/201646
  13. மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, உயர்மட்ட அணு ஆயுதத் தலைவர் இகோர் கிரில்லோவ் கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி, ஐரோப்பா இணைய செய்திப் பிரிவு ஆசிரியர் ரஷ்யாவின் அணு, உயிரி மற்றும் ரசாயன ஆயுதப் படையின் (NBC) தலைவராக இருந்த இகோர் கிரில்லோவ், மாஸ்கோவில் ஒரு குண்டுவெடிப்பில் இறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, யுக்ரேன் போரில் கிரில்லோவ், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டதாகவும் மேற்கத்திய நாடுகள் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால், ரஷ்யாவில் அவர் ஒரு தேசபக்தராக பார்க்கப்பட்டார், உண்மைக்காக போராடுபவர் என்றும் மேற்கத்திய நாடுகளின் "குற்றங்களை" அம்பலப்படுத்தியவர் என்றும் பல ரஷ்யர்கள் கருதினர். தென்கிழக்கு மாஸ்கோவில் உள்ள `ரியாசான்ஸ்கி பிராஸ்பெக்ட்' என்னும் பகுதியில் அவர் வசித்து வந்த கட்டடத்தை விட்டு வெளியே வந்த போது, மின்சார ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் கிரில்லோவ் மற்றும் ஒரு உதவியாளர் கொல்லப்பட்டனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் - ரஷ்யா போர்: இந்த வடகொரியர்கள் செய்யும் செயல் ரஷ்யாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? 'இரண்டே நிமிடங்களில் செய்து முடிப்போம்' - ரஷ்ய அணு ஆயுத தளத்தின் தயார் நிலை பற்றி முன்னாள் அதிகாரி தகவல் யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்திய புதிய ஆயுதம் 'ஒராஷ்னிக்' எவ்வாறு செயல்படும்? புதிய ஆயுதம், அணு ஆயுத மிரட்டல்: ரஷ்யா - யுக்ரேன் போர் புது வடிவம் பெறுகிறதா? இகோர் கிரில்லோவ் யார்? கிரில்லோவ் 2017 ஆம் ஆண்டில் ரஷ்ய ராணுவத்தின் அணு ஆயுதம், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதப் படைக்கு தலைமை தாங்குவதற்கு முன்பு, ரஷ்யாவின் `டிமோஷென்கோ' பாதுகாப்பு அகாடமிக்கு தலைமை தாங்கினார். அவர் ரஷ்யாவில் பல உயர்மட்ட பொறுப்புகளில் இருந்தவர். பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் அவரை "கிரெம்ளின் பரப்பும் தவறான தகவல்களுக்கான முக்கிய ஊதுகுழல்" என்று கூறியது. நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிரில்லோவ் படக்குறிப்பு, மின்சார ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் கிரில்லோவ் மற்றும் ஒரு உதவியாளர் கொல்லப்பட்டனர் கிரில்லோவ் தலைமை வகித்த படையின் முக்கியப் பணிகள், ஆபத்துகளைக் கண்டறிதல் மட்டுமின்றி, ஆபத்தான வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் எதிரிக்கு இழப்பு ஏற்படுத்துவதும் அடங்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. கிரில்லோவ் கட்டளையிட்ட படை யுக்ரேனில் காட்டுமிராண்டித்தனமான ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் கூறியது. அவரது படை, மூச்சு திணறல் ஏற்படுத்தும் குளோரோபிரின் என்ற நச்சுப் பொருளை பயன்படுத்தியதாக பல அறிக்கைகள் சுட்டிக்காட்டின. கிரில்லோவ் கொலைக்கு முன்னதாக, யுக்ரேனில் கிழக்கு மற்றும் தெற்கு போர் முனைகளில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பெருமளவில் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருக்கும் நபராக அவரை யுக்ரேனின் எஸ். பி. யு ரகசிய பாதுகாப்பு சேவைப் பிரிவு அறிவித்தது. டிரோன் தாக்குதல்களிலும், கையெறி குண்டுகளிலும் ரஷ்யப் படைகள் நச்சு பொருட்களை பயன்படுத்தியதாக அது கூறியது. அமெரிக்கா, ஜெர்மனியில் மாறும் நிலவரம்: 2025-ஆம் ஆண்டில் மக்களின் இடப்பெயர்வு எப்படி இருக்கும்?17 டிசம்பர் 2024 இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன?17 டிசம்பர் 2024 கிரில்லோவ் முன்வைத்த விமர்சனங்கள் பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, இகோர் கிரில்லோவ் (வலது) ரஷ்யாவின் அணு, உயிரி மற்றும் ரசாயனப் படையின் தலைமை பொறுப்பில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். கிரில்லோவ் போரின் தொடக்கத்திலிருந்தே யுக்ரேன் மற்றும் மேற்கத்திய நாடுகளை நோக்கிய தொடர்ச்சியாக முன்வைத்த விமர்சனங்கள் மூலம் கவனம் பெற்றார். அவரின் கூற்றுகளில் எதுவும் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவரது கூற்றுகளில், "அமெரிக்கா யுக்ரேனில் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை உருவாக்கி வருகிறது" என்பதும் ஒன்று. 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா அதன் சிறிய அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நியாயப்படுத்தும் முயற்சியில் இந்த குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்பட்டன. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டவை என்று கூறி 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சில ஆவணங்களை வெளியிட்டார். அந்த ஆவணங்களை ரஷ்ய அரசு சார்பு ஊடகங்கள் பரப்பின. ஆனால், அவற்றை சுயாதீனமாக செயல்படும் நிபுணர்கள் நிராகரித்துவிட்டனர். யுக்ரேனுக்கு எதிரான கிரில்லோவின் மோசமான குற்றச்சாட்டுகள் இந்த ஆண்டும் தொடர்ந்தன. "ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் யுக்ரேன் நடத்தும் தாக்குதலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று குர்ஸ்க் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றுவது தான்" என்று கடந்த மாதம் அவர் குற்றம்சாட்டினார். அவர் யுக்ரேனிய அறிக்கை அடிப்படையில் ஒரு ஸ்லைட் ஷோவை (slideshow) வெளியிட்டார். அதில் விபத்து ஏற்பட்டால் ரஷ்யாவின் பகுதி மட்டுமே கதிர்வீச்சு ஆபத்துக்கு ஆளாகும் என்று குற்றம் சாட்டினார். யுக்ரேன் "dirty bomb" (அணுகுண்டை விட திறன் குறைந்த, ஆனால் கதிரியக்க தன்மை வாய்ந்த யுரேனியம் உள்ளிட்ட தனிமங்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆயுதம்)ஒன்றை உருவாக்க முற்படுகிறது என்பது கிரில்லோவின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் "யுக்ரேனில் உள்ள இரண்டு அமைப்புகள் 'டர்ட்டி பாம்' என்று அழைக்கப்படும் ஆயுதத்தை உருவாக்க குறிப்பிட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளன. அதன் உருவாக்கம் இறுதி கட்டத்தில் உள்ளது" என்று குற்றம் சாட்டினார். அவரது கூற்றுகள் மேற்கத்திய நாடுகளால் " பொய்" என்று நிராகரிக்கப்பட்டன. ஆனால் கிரில்லோவின் கூற்றுகள் யுக்ரேனின் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தது. "யுக்ரேன் அத்தகைய ஆயுதத்தை தயாரிப்பதாக ரஷ்யா கூறுகிறது எனில், அது ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கிறது, அதாவது ரஷ்யா ஏற்கனவே அதை தயார் செய்து வருகிறது." என்று அவர் கூறினார். உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்16 டிசம்பர் 2024 தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?15 டிசம்பர் 2024 `ரஷ்யாவுக்கு விழுந்த பலத்த அடி' கிரில்லோவ் கடந்த கோடையில் தனது 'டர்ட்டி பாம்' குற்றச்சாட்டை மீண்டும் சொல்லத் தொடங்கினார். இந்த முறை கிழக்கு யுக்ரேனில் ரஷ்யர்கள் கடந்த பிப்ரவரியில் கைப்பற்றிய நகரமான அவ்டிவ்காவிற்கு அருகில் ரசாயன ஆயுத ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். யுக்ரேன் சர்வதேச ரசாயன ஆயுத மாநாட்டு (CWC) விதிகளை மீறியதாக அவர் கூறினார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உளவியல் வேதியியல் போர் ஏஜெண்ட் BZ , ஹைட்ரோசயனிக் அமிலம் மற்றும் சயனோஜென் குளோரைடு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பயன்பாட்டை யுக்ரேன் செய்வதாக கிரில்லோவ் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவரது மரணம் யுக்ரேனுக்கு ரஷ்யாவில் உள்ள உயர் அதிகாரிகளை குறிவைக்கும் திறன் உள்ளது என்பதற்கான சான்றாகவும் பார்க்கப்படுகிறது. "அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபையின் துணை சபாநாயகர் கான்ஸ்டான்டின் கொசச்சேவ் தெரிவித்துள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e3z51lk45o
  14. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு 18 DEC, 2024 | 07:15 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் புதன்கிழமை (18) பிற்பகல் அறிவித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. இவ்வருடத்திற்கான பொதுப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் பரீட்சை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசி எண்கள் – 1911, 0112784208, 0112784537, 0112786616 தொலைநகல் எண் - 0112784422 பொதுத் தொலைபேசி இலக்கங்கள் - 0112786200, 0112784201, 0112785202 மின்னஞ்சல் முகவரி - gceolexamsl@gmail.com https://www.virakesari.lk/article/201608
  15. 18 DEC, 2024 | 05:19 PM (நமது நிருபர் ) இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் 'இருதரப்ப-கூட்டுவெற்றி' என்ற கோட்பாட்டுடன் அனைத்து நாடுகளுடன் உறவுகளை பேணவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்தியன் பவுண்டேசனில் ஒழுங்கப்பட்ட நிகழ்வென்றில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு நாங்கள் ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும், அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வட கொரியா போன்ற பிற நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவே விரும்புகின்றோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை மேற்கோள்காண்பித்து வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கான ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் விஜயத்துக்குப் பிறகு, அவரது அடுத்த பயணம் அடுத்த மாதம் சீனாவுக்காகும். திசாநாயக்க இந்திய வருகையை முதலில் முன்னுரிமைப்படுத்தியிருந்தாலும், எமது அரசாங்கம் டில்லி மற்றும் பீஜிங் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்கின்றது. கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதர் கீ சென்கொங், இலங்கைக்கு அருகில் உள்ள அண்டை நாடு என்பதால் திசாநாயக்கவின் இந்தியா விஜயத்தை சீனா வரவேற்றுள்ளது. திசாநாயக்கவின் பீஜிங் பயணம் 'சீனா - இலங்கை'யின் பாரம்பரிய நட்பை மேம்படுத்தும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்பதோடு அது எமது மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதாக இருக்கும் என்றுள்ளது. சுற்றுலாத்துறை சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் அமைச்சர் ஹேரத், 2018 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தை எட்டிய பின்னர் தொடர்ச்சியாக பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. 2019இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 2020-2021 இல் கொரோனா தொற்றுநோய் மற்றும் 2022இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை ஆகியவை காரணமாக அமைகின்றது. இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக்கும் வர்த்தமானி அறிவிப்பை திசாநாயக்க அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு இந்தியா பிரதிபலிப்பு செய்ய வேண்டும். இரு நாடுகளிலும் சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும் என்றார். ஆராய்ச்சிக்கப்பல்கள் அத்துடன், இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள், குறிப்பாக சீனக் கப்பல்கள், உட்பட அனைத்து ஆராய்ச்சி கப்பல் பயணங்களுக்கும் இலங்கையால் விதிக்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 31 அன்று காலாவதியான பிறகும், இலங்கை துறைமுகங்கள் வருகை தருவதற்கும் நிறுத்துவதற்கும் அனுமதிக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டபோது, இந்த விவகாரத்தில் ஒரு 'தேசியக் கொள்கையை' உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார். அகதிகள் விடயம் இதேநேரம், குறித்த நிகழ்வின் பின்னர் 'தி இந்து நாளிதழ் ஊடகவியலாளரிடம் உரையாடிய அமைச்சர் ஹேரத், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் 'பரிசீலனை செய்யும்' என்று கூறினார். 1980களில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பல அகதிகள், இந்தியாவில் குடியுரிமை பெறத்தகுதியற்றவர்கள், இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவை தளமாகக்கொண்ட ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர், அதேநேரத்தில் சுமார் 34,000பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201588
  16. ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் என்பது 'ஜனநாயகத் திருவிழா'வாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரம், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், வாக்குறுதிகள், விநோதமான தேர்தல் பிரசார உத்திகள் என அனைத்தும் தேர்தல் ஒரு 'ஜனநாயகத் திருவிழா' தான் என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கும். கடந்த டிசம்பர், 2023 முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான ஓர் ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல், எட்டு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக சுமார் 45 நாட்கள் நடைபெற்றன. சுமார் 100 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சட்டமன்ற தேர்தல்களையும் கருத்தில் கொண்டால், இந்த ஓராண்டின் பெரும்பாலான நாட்கள் தேர்தல் காலமாகத்தான் சில மாநிலங்களில் இருந்திருக்கும். இத்தகைய தேர்தல்களை நடத்துவதற்கு அதிக காலமும் பணமும் செலவாகிறது என்பதே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்ன? எத்தனை கட்சிகள் ஆதரிக்கின்றன? ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகளை நெருக்கடியில் தள்ளுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம் இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன? ஹரியாணாவில் காங்கிரஸை தோற்கடித்த பாஜகவின் நுட்பமான உத்திகள் - 5 முக்கிய அம்சங்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்ட காலமாகக் கூறி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் 'இது ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சட்டம்' மூன்றுக்கும் எதிரானது என்ற குரலை எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகள் நியாயமானவைதானா? அரசியலை கடந்து சாமானியர்கள் மீது இந்த மசோதா ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இது குறித்து நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். மசோதா அறிமுகம் பல காலமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதரித்து வரும் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறைக்கான மசோதா செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 17) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 எதிர்க்கட்சிகளின் கவலை என்ன? பட மூலாதாரம்,X/PRESIDENT OF INDIA படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு 'ஒரே நாடு, ஒரே தேர்தலை' அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, "நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றழித்து, நாட்டை ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் தள்ளிவிடும்," என 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்ற தேர்தல்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோன்று, இத்திட்டம், 'ஜனநாயகத்திற்கு எதிரானது' எனக் கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, மக்களவையில் செவ்வாய்க் கிழமை பேசுகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்" என்றார். இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 ஆதரிப்பவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இந்த நடைமுறை தேர்தல் செலவுகளை குறைக்கும் என்கிறார், கோபால்சாமி கடந்த ஐந்து ஆண்டுகளில் "800 நாட்கள்" தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது தாமதமானதாக பாஜக கூறி வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த பரிந்துரைகளுக்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 47 கட்சிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தன. அவற்றில் 32 கட்சிகள் ஆதரவாகவும் 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தன. தேர்தல்களுக்கான நேரம், செலவினங்கள், வளங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவுக்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கவலைகள் நியாயமானதா? "எதிர்க்கட்சிகளின் பயம் நியாயமானதுதான்" என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். நேரம், செலவினங்களைத் தாண்டி, தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் தலையாயது என்கிறார் அவர். இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை மாற்றும் மசோதா குறித்து வெற்றிச்செல்வன் கேள்வியெழுப்புகிறார். பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் எனும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான முக்கியமான நடவடிக்கை என்கிறது மத்திய அரசு "இந்த நடைமுறையே ஆளுங்கட்சிக்கு சாதகமானவரை தேர்தல் ஆணையராக நியமிப்பதற்கான முடிவுதான்" என்கிறார் வெற்றிச்செல்வன். எனினும், இந்த மசோதாவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போது, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகளை தாமதமாகப் பதிவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். "தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்வி பல காலமாக இருக்கிறது. எனவே, இந்த முறை செயல்பாட்டுக்கு வந்தால், தேர்தல் சுதந்திரமானதாக, நியாயமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் நியாயமானதாக நடைபெறும் என்ற நம்பிக்கை முதலில் மக்களுக்கு இருக்க வேண்டும்," என்கிறார் அவர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா? தேர்தல் தேதிகூட மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்ற கவலையை அவர் எழுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு உரிமை எனக் கூறும் வெற்றிச்செல்வன், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' செயல்படுத்தப்பட்டால், சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும் அல்லது அந்த சட்டமன்றங்களின் கால அளவை நீட்டிக்க வேண்டியிருக்கும், இரண்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்கிறார் அவர். பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் - மனைவி, மகனை காப்பாற்ற உயிர்விட்ட தந்தை10 டிசம்பர் 2024 செலவினங்களைக் குறைக்க உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் மற்றொரு பிரச்னை, நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்தும்போது இரு தேர்தல்களுக்கும் பிரசாரம் உள்ளிட்ட செலவுகளை தேசிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மாநில கட்சிகளால் மேற்கொள்ள முடியாது என மாநில கட்சிகள் பல கூறுகின்றன. "இது பொய்யான வாதம். ஒரே பிரசாரத்தில் இரு தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க முடியுமே. அதனால் இது தவறான வாதம்" என்கிறார், பிபிசியிடம் பேசிய இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி. அதேபோன்று, சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுக் காலம் முடிவுறாமலேயே தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படுவதற்கு இது வழிவகுக்குமே என அவரிடம் கேள்வி எழுப்பினோம். "அப்படி ஒருமுறைதானே நடக்கும். அடுத்த 50-100 ஆண்டுகளுக்கு நல்லது நடக்கும் என்பதால் இவ்வாறு செய்யலாம். 'ஒரே நாடு, ஒரே தேர்தலால்' எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது" என்கிறார் கோபால்சாமி. இந்த நடைமுறை செலவினங்களைக் குறைக்கும், தேர்தல்களில் சீர்திருத்தங்களை உருவாக்கும் என்பதிலும் மிகுந்த ஆதரவாக இருக்கிறார் அவர். சிரியாவில் இருந்து தப்பி சென்ற பிறகு அசத் வெளியிட்ட முதல் அறிக்கை - அவர் கூறியது என்ன?17 டிசம்பர் 2024 "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோவிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?16 டிசம்பர் 2024 'நியாயமான தேர்தல்தான் முக்கியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு மாதமும் எங்காவது தேர்தல் நடக்கும் என்ற நிலையை விடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பல விதங்களில் நன்மைகளையே விளைவிக்கும் எனக் கூறும் கோபால்சாமி, "எனினும், இந்த முறையால் சில நடைமுறை சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், அவை நன்மைக்கே" என்கிறார். ஆனால், இந்த வாதங்களில் இருந்து மாறுபடுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். "தேர்தல்களால் செலவுகள் அதிகரிக்கிறது என்பதால் இந்த முறையைக் கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனநாயகத்திற்கு சில விலைகள் கொடுத்துதான் ஆக வேண்டும். நியாயமான தேர்தல்தான் இலக்காக இருக்க வேண்டும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வந்தால் தேர்தல்கள் நியாயமாக இருக்குமா என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தைக் காக்கும். அதைவிடுத்து, தேர்தல் செலவைக் குறைப்பதற்காகக் கொண்டு வரக்கூடாது" எனத் தெரிவித்தார் வெற்றிச்செல்வன். இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால் எழும் மற்றொரு பிரச்னையையும் சுட்டிக் காட்டுகிறார் அவர். "ஒருவேளை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடனும் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களிலும் ஒரே கட்சியோ அல்லது ஒரு கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியோ ஆட்சியைப் பிடிக்கிறது என வைத்துக்கொண்டால், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடலாம், சர்வாதிகாரமாக மாறிவிடும்" என்ற கவலையை எழுப்புகிறார். தேர்தல்கள் என்பது அதிபர் முறையாக மாறும் என மு.க.ஸ்டாலின் கூறிய அச்சம், "நியாயமானதுதான்" என்கிறார் அவர். நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர்போன 'கோட்டா கோச்சிங் தொழில்' வீழ்ச்சி அடைகிறதா?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களின் மீதான தாக்கம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்த நடைமுறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய உரிமை மக்களுக்கு உள்ளது. "இது மக்களை மறைமுகமாக அதிகாரப்படுத்துகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், ஒரே நேரத்தில் இரு அவைகளுக்கும் வாக்களித்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் மீண்டும் காத்திருக்க வேண்டும்" என்கிறார் வெற்றிச்செல்வன். ஆண்டு முழுதும் தேர்தல்கள் என்பது மக்கள் நலத்திட்டங்களை தாமதப்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். "தேர்தல் என்பதே ஜனநாயக நடைமுறைதானே. தனித்தனியாக நடைபெறும் போதுதான் மக்களுக்கு பிரதிநிதிகள் வாக்குறுதி அளிப்பார்கள், ஏற்கெனவே வாக்குறுதி அளித்த திட்டங்களின் நிலை என்ன என்பதற்கான பதில் மக்களுக்கு அப்போதுதான் கிடைக்கும். ஒரே நேரத்தில் வாக்களித்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றுமே நினைக்கக்கூடாது என்பதே அரசியலற்ற, ஜனநாயகமற்ற நிலையை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்" எனத் தெரிவித்தார். 'மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது' ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது மக்களைக் குறைவாக எடைபோடும் எண்ணம் என்றும், அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கிறது என்றும் வாதிடுகிறார் கோபால்சாமி. "நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்களோ, அதே கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்பதே தவறு. அதை எத்தனையோ தேர்தல்களில் மக்கள் நிரூபித்திருக்கின்றனர்" என்றார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுவதும் மிகையான வாதம் என்கிறார் அவர். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்போது, பிரதிநிதிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் கட்சித் தலைமைகள் உன்னிப்பாகக் கவனிக்கும், தேர்தல் அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும், மக்களுக்கு பதில் கூற வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர்கள் அதிகமாக உழைப்பார்கள், மக்கள் நலப் பணிகள் சீராக நடக்கும் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgq1n74w7zeo
  17. 18 DEC, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார். முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.பி. அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் கடுமையாக விமர்சித்தார். இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார். ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின் நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தார். https://www.virakesari.lk/article/201578
  18. 18 DEC, 2024 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட தேவைக்கு உட்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஓய்வூதிய தொகையை மூவாயிரம் ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களுக்கு நீண்டகால பிரச்சினைகள் காணப்படுகின்றன. 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த காலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விசேட தேவைக்கு உட்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக விசேட திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. ஆகவே அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இதேவேளை வன்னியில் விவசாயிகள் யானை தொல்லையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 11 பேர் யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கே யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/201598
  19. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர். மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் திகதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிச் சென்ற பஷார் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு ரஷ்யா அரசாங்கம் அடைக்கலம் தந்துள்ளது. இந்த நிலையில், தப்பிச் சென்ற அசாத் முதல்முறையாக சிரியா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், “என்னைப் பொறுத்தவரை கிளர்ச்சியாளர்களை எதிர்த்துச் சண்டையிடத்தான் விரும்பினேன். நான் சிரியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பவில்லை. அதேபோல், என் பதவியை ராஜினாமா செய்து, இன்னொரு நாட்டிடம் தஞ்சமடைய கோர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. நாடு தற்போது பயங்கராவதிகளின் கைகளில் சிக்கி உள்ளது. தனிப்பட்ட ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் பதவியை விரும்பவில்லை. சிரியா மக்களின் நம்பிக்கையுடன் அவர்களால் ஆதரிக்கப்படும் பாதுகாவலராக நான் இருப்பதாகக் கருதுகிறேன். சிரியா மீண்டும் சுதந்திரமாகச் செயல்படும்” என அதில் தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் கிளர்ச்சிப் படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது. குறிப்பாக, சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தாக்குதலின் அதிா்வுகள் அருகிலுள்ள நிலநடுக்க ரிக்டா் அளவுகோல்களில் பதிவாகின. இஸ்ரேல் நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தில் 3.1 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிரியாவில் நடத்தப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த தாக்குதலாகும் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று கிளா்ச்சிப் படையின் தலைவா் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/313879
  20. மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக பிரிஸ்பேனில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாளான இன்று பிற்பகலுக்கு பின் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, 3வது டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்டின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சாளர் பும்ரா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா இளம் வயதில் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்த குகேஷ் கடைசி நாளில் என்ன நடந்தது? ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 260 ரன்கள் சேர்த்து பாலோ-ஆனைத் தவிர்த்தது. 185 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய நிலையில், 2.1 ஓவர்களில் 8 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்டநேரமாகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. மைதானத்தில் வெளிச்சமும் குறைவாக இருந்ததால் ஆட்டத்தை முடிப்பதாக நடுவர்கள் அறிவித்தனர். கடைசி நாளான இன்று வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 8 விக்கெட்டுகள் வீழ்ந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவின் வியூகம் என்ன? இந்திய அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய பின், விரைவாக ஒரு பெரிய ஸ்கோரை அடித்து பெரிய இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். கடைசி நாளில் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருப்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்திவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதிரடியாக பேட் செய்து, ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ஆடினர். புதிய பந்தில் ஆடுகளம் வேறுவிதமாக செயல்படும் என்பதைத் தெரிந்தும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் விக்கெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் பேட் செய்தனர். 18 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மீதமுள்ள 54 ஓவர்களில் 275 ரன்களை இலக்காக நிர்ணயித்து இந்திய அணியை சுருட்ட ஆஸ்திரேலிய அணி வியூகம் அமைத்தது. ஆனால், மழை காரணமாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. அடுத்ததாக வரும் 26-ஆம் தேதி மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 'பாக்ஸிங் டே டெஸ்டை எதிர்பார்க்கிறோம்' போட்டி முடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "போட்டியின் இடையே மழையின் இடையூறுகள் இருந்தன. மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் மெல்போர்ன் டெஸ்டை எதிர்கொள்வோம். அணியில் ஏதாவது ஒருவீரர் நிலைத்து நின்று, ஆட்டத்தை கொண்டு செல்ல விரும்பினோம். ஜடேஜா, ராகுல் இருவரும் பொறுப்புடன் பேட் செய்தனர். பந்துவீச்சில் பும்ரா, ஆகாஷ் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஆகாஷ் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர் என்றாலும், பல விஷயங்களை ஆகாஷ் கற்றுக்கொடுத்தார். மற்ற 2 பந்துவீச்சாளர்கள் அவருக்கு துணையாக இருந்து அவருக்கு உதவி செய்தனர்" எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, இரு அணிகளின் நிலையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. இந்திய அணி 17 போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்வி ,2 டிராவுடன் 114 புள்ளிகளுடன் 55.89 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 106 புள்ளிகளுடன், 58.89 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் 76 புள்ளிகளுடன், 63.33 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன மதுரை கிரிக்கெட் வீராங்கனை - 16 வயதில் சாதித்தது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி 3-வது முறையாக தகுதி பெறுமா? இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 3வது முறையாக விளையாட அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும். அப்போது இந்திய அணியின் வெற்றி சதவீதம் 60க்கு மேல் உயரும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றினாலும் அந்த அணியால் பைனலுக்கு தகுதி பெற இயலாது. இந்திய அணி அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை டிரா செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். அதற்கு இலங்கை அணி உதவ வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்று, மற்றொன்றை இலங்கை டிரா செய்தால் இந்திய அணி பைனலுக்குச் செல்லும். இந்திய அணி கடைசி இரு டெஸ்ட்களிலும் தோற்றால் பைனல் வாய்ப்பு சாத்தியமில்லை. ஒருவேளை கடைசி இரு டெஸ்ட்களில் இந்திய அணி ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோல்வி அடைந்தால். இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை 2-0 என தோற்கடிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால், இந்திய அணி பைனலுக்குச் செல்லும். தென் ஆப்பிரிக்க அணி பைனலுக்குள் செல்ல ஒரு வெற்றி மட்டுமே தேவை. பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வென்றாலும் தென் ஆப்பிரிக்கா பைனலுக்குச் சென்றுவிடும். ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என தொடரை இழந்தால், இந்திய அணி பைனலுக்குள் செல்ல இன்னும் ஒரு வெற்றி மட்டும் பெற்றால் போதுமானது. இலங்கை-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முடிவு பைனலில் ஆடும் 2வது அணி யார் என்பதை முடிவு செய்யும். ஆதலால், இந்திய அணி 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது. இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால்கூட பைனலுக்கு முன்னேறலாம். ஆனால், அதற்கு பிற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியிருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yg3yq0yzqo
  21. 18 DEC, 2024 | 03:31 PM நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், சரியான முறையில் கணக்காய்வு விடயங்களை முகாமை செய்யும்போது ஐய வினாக்களைத் தவிர்க்கலாம் எனவும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன் கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுகளை தற்துணிவுடன் எடுப்பதனால் சில இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் சுனில் ஜெயசேகர நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாக கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கணக்காய்வாளர் அத்தியட்சகர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201574
  22. ஆஸ்திரியாவில் ஒரு ஜோடி, கடந்த 43 ஆண்டுகளில், 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறை விவாகரத்து செய்து கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அத்தம்பதி உதவித்தொகை வாங்கி பயனடைந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… ஆஸ்திரிய பெண் ஒருவர் 1981ல் தனது முதல் கணவர் இறந்ததற்கு பிறகு, ஆஸ்திரிய அரசாங்க சட்டத்தின்படி கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்திருக்கிறார். அதன் பிறகு 1982ல் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அரசாங்கம் கொடுத்து வந்த கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த மறுமணம் பற்றி அரசாங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அரசாங்கம் அந்த கைம்பெண் ஓய்வூதியத்தை நிறுத்தியது. இதனால் கைம்பெண்ணாக இருந்தால்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நினைத்த அப்பெண், தனது இரண்டாம் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் அந்த நபரையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். மீண்டும், அரசாங்கத்திற்கு இவர்களின் திருமணம் தெரியவரவே… அப்பெண்ணுக்கு கொடுத்து வந்த கைம்பெண் பணத்தை நிறுத்தியது. மீண்டும் கைம்பெண் பணத்தை வாங்க நினைத்த அப்பெண் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அரசாங்கத்திடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, பிரிந்த கணவரை மீண்டும் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதே போன்று அரசு எப்போதெல்லாம் கைம்பெண் பணத்தை நிறுத்துகிறதோ அப்போதெல்லாம் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு கைம்பெண் பணத்தை பெற்றுக்கொண்ட கையோடு மீண்டும் கணவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இப்படி கைம்பெண் ஓய்வூதியத்தைப்பெற கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து வாங்கிக்கொள்வது – மீண்டும் திருமணம் செய்துக்கொள்வது என 43 ஆண்டுகளாக, 12 முறை அவர் இந்த நாடகத்தை அறங்கேற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் இவரின் நாடகம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு தெரியவர, அப்பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட ஓய்வூதியத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தியது. ஆனால், அப்பெண்ணோ விக்கிரமாதித்தன் வேதாளம் கதையைப்போன்று, 13வது முறையாக தனது கணவரை விவாகரத்து செய்து மீண்டும் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். இம்முறை சுதாரித்துக்கொண்ட அரசாங்கம், அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை விசாரிக்கையில், இருவரும் வெளி உலகிற்கு பிரிந்ததைப்போன்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு, ஒரேவீட்டில் கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பெண்ணிற்கான ஓய்வூதியத்தை அரசாங்கத்தை முற்றிலும் நிறுத்தியது. இதனை எதிர்த்து அப்பெண் 2022ல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். இவர்களின் வழக்கை விசாரித்த ஆஸ்திரியா உச்சநீதிமன்றம் மார்ச் 2023 இல், இவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து, “மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொள்வதும் இப்படி விவாகரத்து செய்து கொள்வதும் தவறானது. ஏனெனில் உங்களின் விவாகரத்துகளும் திருமணமும் கைம்பெண் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே நிகழ்ந்துள்ளன” என்று தீர்ப்பளித்தது. இப்படி இவர் தனது 73ம் வயதுவரை மொத்தமாக அரசிடமிருந்து பெற்ற ஓய்வூதியமானது 3,42,000 டொலர் என்பது தெரியவந்துளது. https://thinakkural.lk/article/313890
  23. இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக "சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது" இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வினின் வார்த்தைகள் இவை. உண்மையில் சுழற்பந்துவீச்சில் அஸ்வின் ஒரு மாஸ்டர்தான் (நிபுணர்தான்). ஏனென்றால் அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால் அதில் 6 பந்துகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அஸ்வின் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தபின், ஊடகத்தினரைச் சந்தித்த ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார். ஆஸ்திரேலியத் தொடருக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த அடிலெய்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் பெரிதாக ஒத்துழைக்கும் மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்களால் சோபிக்க முடியவில்லை. அஸ்வினுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தும் உடனடியாக அஸ்வின் இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்று கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா இளம் வயதில் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்த குகேஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக கடைசிநாள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் " சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய வீரராக நான் பங்கேற்பது இதுதான் கடைசி நாள். கிரிக்கெட் வீரராக எனக்குள் இன்னும் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். ஆதலால் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன், என்னை வெளிப்படுத்துவேன்" என்று தெரிவித்தார். கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு நன்றி கூறுவதாக குறிப்பிட்ட அஸ்வின் " இந்திய அணியில் எனக்கு ஏராளமான இனிமையான அனுபவங்கள், நினைவுகள் இருந்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் சக வீரர்களுடன் நான் மிகுந்த விளையாட்டுத்தனமாக இருந்தேன். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக என் சக வீரர்கள் ஓய்வு பெற்று சென்றனர். இந்திய கிரிக்கெட்டில் கடைசி சில ஒரிஜினல் கேங்ஸ்டர்கள் நாங்கள்தான், நாங்களும் ஓய்வறையைவிட்டு சென்றுவிட்டோம். வயதான வீரர்களில் நானும் ஒருவன். என்னுடைய ஓய்வு நாள் இன்றுதான் என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித், கோலி, ரஹானே, புஜாராவுக்கு அஸ்வின் நன்றி உண்மையில் இந்த நேரத்தில் ஏராளமானோருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆனால், பிசிசிஐ மற்றும் சக வீரர்களுக்கு நான் நன்றி கூறாவிட்டால் நான் என் கடமையிலிருந்து நழுவியவனாகிவிடுவேன். அதில் சிலரின் பெயர், பயிற்சியாளர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக ரோஹித், விராட் கோலி, ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிரணி பேட்டர்களின் பேட்டிலிருந்து தெறித்துப் பாய்ந்த கேட்சுகளை பிடித்து எனக்கு விக்கெட்டுகளை வாரிக் கொடுத்தவர்கள்" எனத் தெரிவித்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட அஸ்வின் மேலும் கூறுகையில் " அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர்களுடன் நான் தீவிர கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ரசித்து ஆடியிருக்கிறேன். இந்த ஓய்வு முடிவை எடுக்க நான் நீண்டகாலம் எடுக்கவில்லை. சிறிது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் இருப்பதால் நான் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை. என்னைப் பற்றி நல்லவிதமாகவும், விமர்சித்தும் எழுதிய, பேசிய ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி " என்று தெரிவித்தார். ஐபிஎல் ஏலம்: சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் யாரை வாங்கின? நடராஜன், அஸ்வின் எந்த அணிக்கு?25 நவம்பர் 2024 போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர்11 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் இந்தியக் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பின் சுழற்பந்துவீச்சில் சர்வதேச அரங்கில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர். இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சுழற்பந்துவீச்சில் புதுமை தொடக்கத்தில் மித வேகப்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், தனது பயிற்சியாளர் சி.கே.விஜயகுமார் அறிவுரையின்படி சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் வீரர் டபிள்யு வி ராமன் ஆகியோரிடம் அஸ்வின் பயிற்சி பெற்றார். அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சவாலான பந்துவீச்சாளராகவே இருந்து வந்துள்ளார். அஸ்வினின் புத்திக்கூர்மை, பேட்டர்களின் மனநிலை அறிந்து பந்துவீசுவது, அவரின் நுணுக்கமான 'கேரம் பந்துவீச்சு', 'ஆர்ம் பந்துவீச்சு', ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் 'லைன் மற்றும் லென்த்தில்' வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் இந்திய அணிக்குள் அஸ்வின் வருவதற்கு முன்பாக ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அவரின் பந்துவீச்சு பலராலும் பேசப்பட்டது, கவனிக்கப்பட்டது. அஸ்வின் அசாத்திய பந்துவீச்சுத் திறன், சுழற்பந்துவீச்சு ஆகியவை இந்தியத் தேர்வாளர்களைத் ஈர்த்தது. இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அஸ்வின் 32 பந்துகளில் 38 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அடுத்த ஒரு வாரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அஸ்வின் அறிமுகமாகி விளையாடினார். அன்றே கூறிய கம்பீர் 2010-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். 2010-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 5-0 என தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது கேப்டனாக இருந்த கெளதம் கம்பீர் அஸ்வின் குறித்து கூறுகையில் " பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சரியான வீரர் அணிக்கு கிடைத்துவிட்டார்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார். ஆனாலும், அஸ்வினுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். 2011-ஆம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் அறிமுகமானார். குர்ஜப்னீத் சிங், அன்சுல் கம்போஜ்: அனுபவமில்லாத இரு பவுலர்களை சிஎஸ்கே வாங்கியது ஏன்? தோனியின் அணுகுமுறை என்ன?3 டிசம்பர் 2024 ஐ.பி.எல்: தோனி, ரோகித் ஊதியம் குறைப்பு - இந்த இளம் வீரருக்கு 70 மடங்கு கூடுதல் சம்பளம்3 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தவர் இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம். பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். அஸ்வின் படைத்த சாதனைகள் அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் உலகளவில் 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையோடு விடை பெற்றார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 8 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அஸ்வின் சாதனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகளவில் அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 66 போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 45 போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி முதலிடம் பிடித்திருந்தார். 98 போட்டிகளில் 500-வது விக்கெட்டை வீழத்தி, அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். 116 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஆல்ரவுண்டர்' அஸ்வின் அஸ்வின் பேட்டிங்கிலும் பிரகாசித்துள்ளார். 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3503 ரன்களை குவித்துள்ள அவரது ரன் சராசரி 25 ஆகும். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 707 ரன்களும், டி20 போட்டியில் 184 ரன்களும் அஸ்வின் சேர்த்துள்ளார். பந்துவீச்சாளராக அடையாளம் காணப்பட்ட தன்னை கடைசியில் ஆல்ரவுண்டர் எனும் நிலைக்கு படிப்படியாக அஸ்வின் உயர்த்திக்கொண்டார். அது மட்டுமல்லாமல் 11 முறை தொடர்நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரன் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இலங்கை ஜாம்பவான் முரளிதரன் 64 தொடர்களில் ஆடி 11 தொடர்நாயகன் விருதுகளை வென்ற நிலையில் அஸ்வின் 44 தொடர்களில் விளையாடி 11 தொடர்நாயகன் விருதுகளை கைப்பற்றியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - என்ன கூறினார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட் அஸ்வின் தனது ஓய்வு அறிவிப்பின் போது குறிப்பிட்டதைப் போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் ரசித்து ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 23 டெஸ்ட்களில் 115 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 24 போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப் பின் அஸ்வின் முறியடித்தார். அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இதையும் அஸ்வின் முறியடித்து, 383 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியும், கோலியும் இந்திய கேப்டன்களில் எம்எஸ் தோனி, விராட் கோலி இருவரும் அஸ்வினின் திறமையை நன்கு பயன்படுத்தினர். தோனி கேப்டன்ஷியில் 3 ஆண்டுகளில் மட்டும் 22 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் விராட் கோலி கேப்டன்ஷியில் 7 ஆண்டுகளில் 55 போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அஸ்வின் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 255க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255க்கும் விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 51% ஆக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டர் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த இடதுகை பேட்டர்களின் பெயர் பட்டியல் நீள்கிறது. குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?13 டிசம்பர் 2024 மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வின் வாழ்க்கையில் முக்கிய கட்டம் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2015-16 சீசன் முக்கியமானது. 8 டெஸ்ட் போட்டிகளில் 336 ரன்கள் குவித்து 48 விக்கெட்டுகளையும் எடுத்தார். அந்த காலகட்டத்தில் 19 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்தார். அந்த ஆண்டில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும், 2016-இல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அஸ்வின் பெற்றார். ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் 5 முறை அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு அஸ்வினுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. பயணங்கள் முடிவதில்லை... இந்திய வீரராக அஸ்வின் பந்துவீச்சை இனி ரசிகர்கள் காண முடியாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரராக, டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரராக அவரின் பந்துவீச்சைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czxdyz9gw1yo
  24. 18 DEC, 2024 | 01:42 PM கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 5,000க்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் இருக்கின்ற போதும் அந்த மொழிகள் அங்கீகரிக்கப்படாது இருக்கின்றது. அவர்கள் அரச தினைக்களங்களிலும் ஏனைய இடங்களிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார் தொடர்ந்து ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிக்கட்டது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சைகை மொழி பேசுவபவர்கள் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/201570
  25. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சேவை ஏற்றுமதி மீதான வரி 15 சதவீதமாக அமுல்படுத்தப்படும் என்றும், குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/313902

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.