Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,SOUTHERN TRANSPORT PROSECUTOR'S OFFICE படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட காணொளி ஒரு எண்ணெய் கப்பல் பாதியாக பிளவுபட்டதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர்,டாம் பென்னட் பதவி,லண்டனில் இருந்து கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தெற்கு போக்குவரத்து வழக்குரைஞர் அலுவலகத்தால் டெலிகிராமில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், பலத்த புயலுக்கு மத்தியில் கப்பல்களில் ஒன்று பாதியாக உடைந்து மூழ்கியுள்ளது, கடலில் எண்ணெய் கசிவின் சுவடுகள் தென்படுகின்றன. பிபிசியால் அந்த வீடியோவை சரிபார்க்க முடியவில்லை. ரஷ்யப் போர்க்கப்பல் மூழ்கியது: யுக்ரேன் தாக்கியதா? இந்த பிரம்மாண்ட கப்பலின் பலம் என்ன? யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான் சிரியா: பஷர் அல்-அசத்துக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா அந்த கப்பலில் இருந்த ஊழியர்களில் ஒருவர் இறந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இரண்டாவது கப்பல் சேதம் அடைந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்த வி.சி.க.வில் இருந்து முழுமையாக விலக ஆதவ் அர்ஜூனா முடிவு - திருமா பற்றி கூறியது என்ன?15 டிசம்பர் 2024 கூகுள் மேப் காட்டிய வழியில் கோவா செல்ல முயன்று நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கித் தவித்த 4 பேர் - என்ன நடந்தது?15 டிசம்பர் 2024 ரஷ்யாவுக்கும், யுக்ரேனிடம் இருந்து ரஷ்யா ஆக்ரமித்துள்ள கிரைமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் நீரிணையில் (Kerch Strait) இந்த சம்பவம் நடந்துள்ளது. இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "இன்று, கருங்கடலில் ஏற்பட்ட புயலின் விளைவாக, வோல்கோன்ஃப்ட்-212 மற்றும் வோல்கோன்ஃப்ட்-239 ஆகிய இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மூழ்கின" என்று ரஷ்யாவின் கடல் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிறுவனமான ரோஸ்மோரெக்ஃப்ளாட் (Rosmorrechflot) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இரு கப்பல்களிலும் 15 மற்றும் 14 பேர் குழுக்கள் இருந்துள்ளனர். கடலில் எண்ணெய் கசிவு பெரியளவில் ஏற்பட்டுள்ளது" என்று அது தெரிவித்துள்ளது. இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் சுமார் 4,200 டன் எண்ணெய் ஏற்றும் திறன் கொண்டவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைத் தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவுகளின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னதாக, 2007 ஆம் ஆண்டில், வோல்கோன்ஃப்ட்-139 என்ற எண்ணெய்க் கப்பல், கெர்ச் நீரிணையில் நங்கூரமிட்ட போது புயலின் தாக்கத்தால் பாதியாக உடைந்தது. அப்போது, கடலில் 1,000 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கசிந்தது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c3e3n12dnx2o
  2. ஜனாதிபதி அநுரகுமாரவை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்றனர் Published By: DIGITAL DESK 3 16 DEC, 2024 | 10:52 AM இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பு நிகழ்வு புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/201393
  3. Published By: DIGITAL DESK 3 16 DEC, 2024 | 09:29 AM சீன கடற்படையின் மருத்துவ கப்பலான 'பீஸ் ஆர்க்' விரைவில் இலங்கைக்கு தரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார்மனிக்காக புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201387
  4. 16 DEC, 2024 | 06:35 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து வருகின்ற இரு தினங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்வதோடு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு ,கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/201384
  5. சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும். கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து ரன்வல விலகியது பாராட்டுக்குரியது என சமல் ராஜபக்ச கூறினார். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/313726
  6. ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 15 DEC, 2024 | 09:49 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று (15 ) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201373 இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் - ஜனாதிபதியிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு Published By: VISHNU 15 DEC, 2024 | 10:01 PM இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201375
  7. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைகள் கடல் பகுதிகளுக்கு, • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடும் என்பதுடன் அந்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். அந்த கடல் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். • காங்கசன்துறையிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்பதால் சில சமயங்களில் சீற்றமாக காணப்படும். பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மீனவ மற்றும் கடல்வாழ் சமூகத்தினர் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பைப் பொறுத்தவரை, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த அமைப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=197351
  8. ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா 15 DEC, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது. ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது. உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும். அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும். https://www.virakesari.lk/article/201358
  9. ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு புதுடெல்லியில் சிறப்பான வரவேற்பு! 15 DEC, 2024 | 08:05 PM உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/201370 ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197352
  10. செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் மிகவும் கடினமான, வழுக்கக்கூடிய நிலப்பரப்பைக் கொண்ட ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறுவதைக் காட்டும் புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் செவ்வாய் கோளில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயின் ஜெஸிரோ கிரேட்டரில் ஆய்வு செய்துகொண்டிருந்த ரோவர், தற்போது அந்தப் பெரும் பள்ளத்தில் இருந்து மேலேறி அதன் முனைப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், இதுநாள் வரை செய்த ஆய்வுகளைவிட, செவ்வாயின் ஆதிகால பாறைகளை ஆய்வு செய்யவும், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதைக் கண்டறியவும் ஒரு புதிய பாதை திறந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தில் ரோவரை கண்காணித்து வரும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும், ரோவர் தரையிறங்கியதில் இருந்து இதுவரை காணாத மிகக் கடினமான நிலப்பரப்பில் அதைச் சாமர்த்தியமாக இயக்கி மேலே ஏற வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் திட்டத்தின் துணை மேலாளரான ஸ்டீவன் லீ தெரிவித்துள்ளார். பெர்சிவரன்ஸ் ரோவரின் இந்தப் புதிய பயணம் எவ்வளவு முக்கியமானது? அதன் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? செவ்வாயில் உயிரினங்கள்: 300 கிராம் மாதிரியை பூமிக்குக் கொண்டுவர ரூ. 91,800 கோடி செலவு - என்ன செய்யப் போகிறது நாசா? செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள் பூமியின் அடியாழத்தைப் போலவே, செவ்வாய் கோளிலும் பாறைக்கு அடியில் உயிர்கள் உள்ளனவா? நிலா, சூரியனுக்கு நாசாவை விட குறைந்த செலவில் இஸ்ரோ விண்கலனை அனுப்புவது எப்படி? பழங்கால ஏரிப் படுகையில் நடந்த ஆய்வுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை இறுதியில், செவ்வாய் கோளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ரோபோட்டை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விஞ்ஞானிகளால் இயக்கப்படுவது மட்டுமின்றி தானியங்கி செயல்திறனும் கொண்ட இந்த ரோவர், ஏழு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. ஒரு கோளின் மீது விண்கற்களோ சிறுகோள்களோ மோதும்போது, அதன் தாக்கத்தால் ஏற்படும் பள்ளமே கிரேட்டர் எனப்படுகிறது. செவ்வாயில் இருக்கும் அத்தகைய ஒரு பெரும்பள்ளமான ஜெஸிரோ கிரேட்டரில் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வைத் தொடங்கியது. பட மூலாதாரம்,ESA/DLR/FU-BERLIN படக்குறிப்பு, ஜெஸிரோ கிரேட்டரில் உள்ள ஒரு பழங்கால டெல்டா பகுதியின் எச்சங்களைக் காட்டும் புகைப்படம். இங்குதான் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஜெஸிரோ கிரேட்டர் பகுதியில் பழங்காலத்தில் ஒரு ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக, செவ்வாயில் உயிர்கள் இருந்திருந்தால் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சூழலில் இருந்தால் அதைக் கண்டுபிடிக்க இது சரியான இடமாக இருக்கக்கூடும் என்பதாலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த கிரேட்டரை பெர்சிவரன்ஸ் ரோவரின் ஆய்வுத் தளமாக முடிவு செய்தனர் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "செவ்வாயில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக, குறிப்பாக எந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் எதிர்பார்த்த தரவுகள் அதிகமாகக் கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டு, ஆய்வுப் பகுதி வரையறுக்கப்படும். அந்த வகையில், ஜெஸிரோ கிரேட்டரில் இருக்கும் ஒரு பழங்கால ஏரிப்படுகை தேர்வு செய்யப்பட்டது," என்று அவர் விளக்கினார். அங்கு தரையிறங்கியது முதல், செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறை மாதிரிகளைச் சேகரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது, ஆதிகால உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைத் தேடுவது போன்ற பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றின் தரவுகளை பூமிக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டும் இருக்கிறது இந்த ரோவர். செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படம் பிடித்த எமிரேட்ஸ் விண்கலம்15 பிப்ரவரி 2021 அறிவியல்: ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?30 மே 2024 ரோவரின் ஆய்வுப் பணியில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் ரோவரில் இருந்த கேமராக்களில் ஒன்று, ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறும்போது அது ஏற்படுத்திய தடங்களைப் படம் பிடித்துள்ளது. பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது முதல், ஜெஸிரோ கிரேட்டரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுக் காலமாக அந்தப் பெரும்பள்ளத்தின் பாறைகள், மண் பரப்பு, நிலவியல் ஆகியவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட நியூயார்க் நகரத்தின் பரப்பளவுக்கு நிகராக இருக்கும், 45 கி.மீ விட்டம் கொண்ட அந்தப் பெரும் பள்ளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவியல் மாதிரிகளைச் சேகரித்து பெர்சிவரன்ஸ் ரோவர் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று அதன் பாதையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்தப் பெரும் பள்ளத்தின் மேல் பகுதியான கிரேட்டர் ரிம்மில் (crater rim) வெற்றிகரமாக ஏறியுள்ளது. இந்த கிரேட்டர் ரிம் என்பது சிறுகோள் தாக்கத்தால் உருவான பள்ளத்தின் விளிம்புப் பகுதி என்று கூறலாம். "சிறுகோளோ, விண்கல்லோ மோதும்போது, அது ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது. அப்போது, அந்தக் குழி – அதாவது பள்ளம் – உருவாகும்போது, அந்த நிலப்பரப்பில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்படும். அவை ஒரு கூட்டாகச் சேர்ந்து, கிரேட்டரின் ஓரங்களில் மேட்டுப் பகுதியாக உருவாகியிருக்கும்," என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பூமியின் மையப் பகுதி எதிர்த் திசையில் சுழலத் தொடங்கியதா? இதனால் நடக்கப் போவது என்ன?10 ஜூலை 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH இதற்கு ஏரியின் அமைப்பை உதாரணமாகக் கூறுகிறார் அவர். ஒரு ஏரி அல்லது குளத்தின் விளிம்புகளில் அதன் கரைப்பகுதி சிறிது மேடாக இருப்பது போலவே, இங்கும் கிரேட்டரிலும் இந்த ரிம் என்ற அமைப்பு இருக்கும். அத்தகைய விளிம்புப் பகுதிதான் கிரேட்டர் ரிம் என்று அழைக்கப்படுகிறது. "சிறுகோள் தாக்கத்தால் ஏற்படும் பள்ளத்திற்குள், சிறுகோளின் பொருட்கள் மற்றும் செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள பொருட்கள் கலந்த நிலப்பரப்புதான் இருக்கும். அங்குள்ள மண், பாறை என அதன் நிலவியல் முழுக்க அப்படித்தான் இருக்கும்." ஆனால், "கிரேட்டர் ரிம் பகுதியில் அதற்கும் முந்தைய, மிகவும் பழமைவாய்ந்த பாறைகள் மற்றும் நிலவியல் அமைப்பைக் காண இயலும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாயின் நிலவியலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிய முடியும்," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன். இத்தனை காலமாக ஜெஸிரோ பெரும் பள்ளத்தின் உள்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருந்த ரோவர் தற்போது அந்தப் பள்ளத்தின் மேட்டில் ஏறி, கிரேட்டர் ரிம் எனப்படும் விளிம்புப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், செவ்வாய் கோளின் ஆதிகால பாறைகள் மற்றும் நிலப்பரப்பில் அதனால் ஆய்வு செய்ய முடியும். இதுகுறித்துப் பேசியபோது, "இளம் பாறைகளில் இருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் தனது கவனத்தை மிகப் பழமையான பாறைகளின் மீது திருப்பியுள்ளது" என்று கூறியுள்ளார் இந்த ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கென் ஃபார்லி. அவரது கூற்றுப்படி, ஜெஸிரோ பெரும்பள்ளத்தில் இருக்கும் இளம் பாறைகள், சுமார் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பிரமாண்ட சிறுகோள் மோதலில் விளைவாகத் தோன்றியவை. ஆனால், கிரேட்டரின் முனைப் பகுதியில் இருப்பவை, அதைவிடப் பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானவை. சூரியன் மட்டுமல்ல, மேலும் சில கோள்களுக்கும் குறி - இஸ்ரோ திட்டம் என்ன?6 ஜனவரி 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதால் என்ன பயன்? பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று பெர்சிவரன்ஸ் ரோவர் எடுத்த செல்ஃபி இதுவரை ஜெஸிரோ பெரும்பள்ளத்தின் ஏரிப்படுகையில் உள்ள பாறைகளை ரோவர் ஆய்வு செய்தது. அவையனைத்துமே இளம் பாறைகள் என வரையறுக்கப்படுபவை. அதாவது, சிறுகோள் மோதலில் இந்தப் பெரும்பள்ளம் தோன்றிய பிறகு உருவானவை. ஆனால், கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் அதைவிடப் பல கோடி ஆண்டுகள் பழமையான, செவ்வாயின் ஆழத்தில் புதைந்துகிடந்து சிறுகோள் மோதலின்போது வெளிவந்த பாறைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாறைகள், ஜெஸிரோ கிரேட்டர் உருவாகக் காரணமாக இருந்த சிறுகோள் மோதியதற்கும் நெடுங்காலம் முன்பே செவ்வாயில் தோன்றிய ஆதிப் பாறைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும். அதோடு, "இந்தப் பாறைகள் அந்த நிலப்பரப்பின் ஆழத்தில் முன்னர் புதைந்திருந்தவை. சிறுகோள் மோதலின் விளைவாக அவை மேலே வெளிப்பட்டிருப்பதால், ஆழத்திற்குத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவற்றை ரோவரால் ஆய்வு செய்ய முடியும்," என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன். இத்தகைய ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம், அந்த செவ்வாயின் பல கோடி ஆண்டுக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், "வளிமண்டலம், காலநிலை ஆகியவற்றின் விவரங்கள் உள்பட செவ்வாயின் ஆரம்பக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும். அதுமட்டுமின்றி, பூமியின் ஆதிகால நிலவியலை, சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதிலும் இந்த ஆய்வின் தரவுகள் உதவக்கூடும்," என்கிறார் வெங்கடேஸ்வரன். மேலும், செவ்வாயின் பழங்கால சுற்றுச்சூழல் உயிர்கள் வாழ ஏதுவானதாக இருந்திருக்ககூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, அங்கு உயிர்கள் வாழ ஏதுவான சூழல் வரலாற்றின் ஏதாவதொரு கட்டத்திலேனும் நிலவியதா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இந்தப் பாறைகள் உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் பெரிய இடையூறுகள் இல்லாத நிலவியலில் செயல்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் தற்போது மிகவும் கடினமான கிரேட்டர் ரிம் பகுதியில் ஏறும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளது. "இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், இந்த ரோவர் செவ்வாயின் நிலவியல் குறித்த இன்னும் பல அறியப்படாத தகவல்களை வழங்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c62w9d0v62wo
  11. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
  12. 15 DEC, 2024 | 11:12 AM யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201311
  13. 15 DEC, 2024 | 09:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான திட்டமாகவே இது உள்ளது. மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது துறைமுக நகர் குறித்தும் ஆலோசிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக துறைமுக நகர் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக துரிதப்படுத்த சீனா தீர்மானித்துள்ளது. மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் பல சீன கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவது ஒரு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது. அந்த கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன்படி ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும். ஆனால் சீன கப்பல்களுக்கு எத்தகைய அனுமதியை அரசாங்கம் கொடுக்கும் குறித்து உறுதியான நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. மறுபுறம் இலங்கையை மையப்படுத்திய இந்திய - சீன இராஜதந்திர அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்தின் விசேட குழு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201301
  14. மஹிந்தவின் பாதுகாப்புக்காக மாத்திரம் 326 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தகவல்! 14 DEC, 2024 | 05:37 PM (எம்.வை.எம்.சியாம்) முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபாவும் அதில் 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மாத்திரம் செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 116 பேர் பொலிஸ் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடமொன்றுக்கு 1100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் அதில் வருடமொன்றுக்கு 326 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதம் ஏந்திய படை தொடர்ந்தும் கடமையில் இருக்கும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் பொலிஸ் சேவையில் 24 ஆயிரம் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவுகளில் கடமையாற்றிய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிமித்தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீள பெறப்படவில்லை எனவும் அதனையும் பரிசீலனை செய்து குறைப்பதன் ஊடாக குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட இதர பொலிஸ் கடமைகளுக்காக அவர்களை ஈடுபடுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201275
  15. பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்", என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார். "அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்", என்றும் அவர் கூறினார். அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். என்ன நடந்தது? "வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.'' பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை. மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், "இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். பட மூலாதாரம்,ATULSUBASH/X படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் - சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்14 டிசம்பர் 2024 'நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)' என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார். அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார். கடிதத்தில் என்ன இருக்கிறது? அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது. தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ளம்: எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?13 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன? அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள். இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன. ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?14 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 அதுலின் கோரிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும். அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், "என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார். ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது. காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், "காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது" என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது. அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது. குகேஷ் தொம்மராஜு: மகனின் சதுரங்க கனவுக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட தந்தை13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார். "தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?" என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார். "ஒன்றல்ல இரண்டல்ல... அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது," என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார். இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 50 பேர் மீது புகார் - கணவரின் உத்தரவின் பேரில் செய்ததாக வாக்குமூலம்13 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். "சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,'' என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். " விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்," என விளக்கமளித்தார். "அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்" என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார். புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?5 டிசம்பர் 2024 நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார். "நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசியவர், "எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும். இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. " என்று பிபிசியிடம் தேவி கூறினார். "தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்," என்று தேவி கூறினார். முக்கியத் தகவல் மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn4xwe28lp2o
  16. 15 DEC, 2024 | 10:50 AM பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை தொடர்ந்து அரசபடையினர் மிக மோசமான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டனர். அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை டெராவில் எவராவது கொண்டாடவேண்டுமென்றால் அது கட்டிபின் குடும்பத்தவர்களே. ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்கு சென்றவேளை யாரும் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை எவரும் கொண்டாடுவதை காணமுடியவில்லை. அதற்கான காரணங்கள் அச்சமூட்டுபவை . சில நிமிடங்களிற்கு முன்னர் அசாத்தின் கொடுரமான சைட்னயா சிறைச்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அந்த குடும்பத்தினருக்கு சிலர் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆவணத்தில் ஹம்சாவின் மூத்த சகோதரர் ஒமாரும் சிரிய பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயம் காணப்படுகின்றது. ஒமார் 2019 ம் ஆண்டு பொலிஸாரின் தடுப்பில் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஒமார் சிறையிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாக அவர்களின் தாயார் சமீரா தெரிவித்தார். அவர் பெரும் துயரத்தில் சிக்குண்டிருந்தார். இன்றோ நாளையோ எனது மூத்தமகன் வருவான் என காத்திருந்தேன், இன்று எனக்கு இந்த செய்தி கிடைத்தது என அவர் குறிப்பிட்டார். மூன்று மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த தனது கணவரிற்காக கருப்புஉடையணிந்து துக்கத்தை அனுஸ்டித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் அனுபவித்ததை அசாத்தும்அனுபவிக்கவேண்டும் என தெரிவித்தார். 'அசாத் அதற்கான விலையை செலுத்துவார் ஆண்டவன் அவரையும் அவரது பிள்ளைகளையும் தண்டிப்பார் என எதிர்பார்க்கின்றேன்" என்றார் சமீரா. சைட்னயா சிறைச்சாலையில் தங்கள் உறவினர்களை தேடுபவர்கள் சமீராவின் மூத்த மகனின் கைது குறித்த ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் சமீராவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒமார் குறித்த கோப்பினை கண்டுபிடித்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். அசாத்தின் வீழ்ச்சி அவரது மூடிமறைக்கப்பட்ட அவரது ஆட்சியின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவரும் சூழலை உருவாக்கியுள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் டமஸ்கஸினை கைப்பற்றியதை தொடர்ந்து பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியதை அறிந்த டெரா மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினார்கள் . பெரும்மகிழ்ச்சியுடன் அந்த நகரத்தின் பிரதான சதுக்கத்தில் ஆண்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூச்சலிட்டனர் தங்கள் கரங்களில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அசாத்தின் ஆட்சியின் போது அதனை எதிர்த்தவர்களின் கோட்டையாக இந்த பகுதியே விளங்கியது. பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமமும் தொடர்ச்சியாக டாங்கி தாக்குதல்களையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்கொண்டது. சிரியாவின் தென்பகுதியில் உள்ள அரச எதிர்பாளர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். ஹம்சாவின் மரணத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த நிலையிலேயே சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பு 2011 இல் இந்த நகரத்தில் போரிட ஆரம்பித்தது. சிரிய இராணுவத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த அமைப்புடன் இணைந்துகொண்டனர். அவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டவர்களில் ஒருவர் அஹ்மட் அல் அவ்டா பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயின்ற பின்னர் இராணுவத்தில்இணைந்துகொண்ட கவிஞர். தற்போது டெராவின் ஆயுதகுழுவின் தலைவர். 'நாங்கள் தற்போது எவ்வளவு தூரம் மகிச்சியுடன் இருக்கின்றோம் என்பது உங்களிற்கு தெரியாது" என பஸ்ரா நகரில் வைத்து அவர் எங்களிற்கு தெரிவித்தார். 'நாங்கள் பல நாட்களாக அழுதோம் கண்ணீர் சிந்தினோம், நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை உங்களால் உணரமுடியாது, இங்குள்ள அனைவரும் குடும்பங்களை இழந்தவர்கள் என அவர் தெரிவித்தார் பிபிசி Lucy Williamson தமிழில் ரஜீவன் https://www.virakesari.lk/article/201310
  17. விளிம்பில் கறுப்பாக தெரிவது கருக்கு என்று சொல்வோம் அண்ணை.
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன. புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட மனித இனத்தால் மட்டுமே செழித்து வாழ முடிந்தது, மற்ற மனித இனங்கள் அழிந்துபோயின என்று இந்த புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில், நாம் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத புதிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நியாண்டர்தால் மரபணுக்கள் முக்கியமானதாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. 48,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஹோமோ சேபியன்ஸ் (இன்றைய மனிதர்கள்), நியாண்டர்தாலுடன் குறுகிய காலத்திற்கு இனச்சேர்க்கையில் ஈடுபட்டதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதன் பிறகு இந்த மக்கள் உலகம் முழுவதும் சென்று வாழத் தொடங்கினர். "ஹோமோ சேபியன்ஸ் அதற்கு முன்பும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த மக்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு தான் அவர்களால் வெற்றிகரமாக உலகம் முழுவதும் சென்று வாழ முடிந்தது" என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜோஹன்னஸ் கிரவுஸ், பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில், நவீன மனிதர்களின் வரலாறு இனி மாற்றி எழுதப்பட வேண்டும் என்று கூறினார். "நாம் நவீன மனிதர்களை ஒரு பெரிய வெற்றிக் கதையாகப் பார்க்கிறோம், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, உலகெங்கும் சென்று வாழ்ந்து, இந்த கிரகத்தின் மிகவும் வெற்றிகரமான உயிரினமாக மாறியுள்ளோம். ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற நிலை இல்லை, நமது இனம் பல முறை அழிந்து போயிருக்கிறது.", என்று அவர் கூறினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 திண்டுக்கல்: தனியார் மருத்துவமனை தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் பலி - நடந்தது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,DAVID GIFFORD / SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, மனித இனத்தின் வரலாற்றை மாற்றி மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நீண்ட காலமாக, நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் புதைபடிவ எச்சங்களின் வடிவங்களை ஆராய்ந்து, அந்த மக்களின் உடற்கூறியல் காலப்போக்கில் எவ்வாறு மெதுவாக மாறியது என்பதை கவனித்ததன் மூலமும், எப்படி ஒரே ஒரு மனித இனம் உயிர் பிழைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை தெரிந்துகொள்ளமுடிந்தது. இந்த புதைபடிவ எச்சங்கள் அரிதானவை மற்றும் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் மட்டுமே கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புகளிலிருந்து மரபணு குறித்த தரவுகளை பற்றி செய்த ஆராய்ச்சி, மனித இனத்தின் மர்மமான கடந்த காலத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதைபடிவங்களில் உள்ள மரபணுக்கள் மூலம், அந்த மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தனர் என்பதை பற்றிய கதைகளை நமக்கு கூறுகிறது. நியாண்டர்தாலுடன் இந்த மக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த பிறகும், ஐரோப்பாவில் உள்ள இந்த மக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. நியாண்டர்தாலுடன் வெற்றிகரமாக இனச்சேர்க்கை செய்த முதல் நவீன மனிதர்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் சந்ததியினர் உலகம் முழுவதும் சென்று பரவி வாழத் தொடங்கியதற்கு முன்பு, ஐரோப்பாவில் முற்றிலும் அழிந்து போயினர். ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SPL படக்குறிப்பு, நியாண்டர்தால் மண்டை ஓடு நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த பிறகு நியாண்டர்தால்கள் ஏன் இவ்வளவு விரைவாக அழிந்துபோயினர் என்பதற்கான புதிய கண்ணோட்டத்தையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது. இது ஏன் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நம் மனித இனம் அவர்களை வேட்டையாடி அழித்தது அல்லது நாம் அவர்களைவிட எப்படியாவது உடல் ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ மேம்பட்டவர்கள் என்ற கோட்பாடுகளிலிருந்து புதிய ஆதாரங்கள் நம்மை வேறு பக்கம் திருப்புகின்றன. மாறாக, நியாண்டர்தால்களின் அழிவு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்பட்டது என்று பேராசிரியர் க்ராஸ் கூறுகிறார். "அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் ஐரோப்பாவில் ஹோமோ சேப்பியன்ஸ், நியாண்டர்தால் ஆகிய இரு மனித இனங்களுமே எண்ணிக்கையில் குறைந்து வந்துள்ளன. இன்றும் வெற்றிகரமாக இருக்கும் நமது இனமே( ஹோமோ சேப்பியன்ஸ்) அந்த பகுதியில் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில், அதைவிட குறைந்த எண்ணிக்கையில் இருந்த நியாண்டர்தால்கள் அழிந்து போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை," என்று அவர் கூறினார். அந்தக் காலத்தில் காலநிலை மிகவும் நிலையற்றதாக இருந்தது. சில சமயங்களில் இன்று இருப்பதைப் போலவே அப்போது சூழல் வெப்பமாக இருந்திருக்கலாம் அல்லது திடீரென கடுங்குளிராக மாறியிருக்கலாம், என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் கூறுகிறார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கண்காட்சி. "நியாண்டர்தால் மக்களின் இறுதி காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுடன் வாழ்ந்த நவீன மனிதர்களை (ஹோமோ சேப்பியன்ஸ்) விட அவர்கள் மரபணு ரீதியாக குறைவான வேறுபாடு கொண்டவர்கள். இதனால் அவர்கள் அழிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று இந்த ஆய்வு காட்டுகிறது", என்று அவர் கூறினார். "நியாண்டர்தால்களிடம் இருந்து நவீன மனிதர்கள் சில முக்கிய மரபியல் பண்புகளை பெற்றிருந்ததாக ஆய்வு கூறுகிறது. அது அவர்களுக்கு ஒரு பரிணாம நன்மையை அளித்திருக்கலாம்" என்று சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு மரபணு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஒன்று அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றிய போது, அவர்கள் இதுவரை சந்தித்திராத புதிய நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டனர். நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதே அவர்களின் சந்ததியினருக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது. "ஒருகட்டத்தில் நியாண்டர்தால் மரபணுவை பெற்றதன் மூலம் இந்த மனிதர்களால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே சென்று சிறந்த வாழ்க்கையை வாழ ஏதுவாக இருந்தத்து", என்று பேராசிரியர் ஸ்டிரிங்கர் கூறினார். "நாம் ஆப்பிரிக்காவில் உருவானோம், அதேநேரம் நியாண்டர்தால்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரிணாம வளர்ச்சியடைந்தனர்". என்றும் அவர் தெரிவித்தார். "நியாண்டர்தால்களுடன் இனச்சேர்க்கை செய்ததன் மூலம் நமது நோயெதிர்ப்பு சக்தி வலுவானது". என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/ceqlg03wg9wo
  19. கட்சியின் தலைவர் விடயம்! நாள்முழுதும் பேசி முடிவுகள் எட்டப்படாமல் முடிந்த கூட்டம்! 14 DEC, 2024 | 06:31 PM இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சனிக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (14) காலை10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. இதன்போது கூட்டம ஆரம்பிக்கமுன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார்.இதனால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. பின்னர் மாவைசேனாதிராயா கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார். அதனைத்தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது. இந்தநிலையில் மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவர் தலைவராக நியமிக்கப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்டுக்கொண்டதுடன், மற்றொருதரப்பினர் அவரே தொடர்ச்சியாக தலைவராக செயற்படவேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதனால் இன்றைய கூட்டம் முழுவதும் அந்த விடயம் தொடர்பாகவே பேசப்பட்டதுடன், முடிவுகள் எடுக்கப்படாமல் பிறிதொருநாள் அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன்…. கட்சியின் கூட்டத்திற்கு தலைமைதாங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. மாவை சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் மாதத்திலே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன்பிறகு இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அது தொடர்பாக செயலாளர் அவரிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். கடிதமும் அனுப்பியிருந்தார். இருப்பினும்அவர் அதற்கு பதில் சொல்லியிருக்கவில்லை. இதனால் செயலாளர் அவரது ராஜினாமா நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்டநடவடிக்கையினை மேற்கொள்வதாக அவருக்கு அறிவித்திருக்கிறார். அதன்பின்னர் தனது ராஜினாமாவை மீள கைவாங்குவதாக அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளதாக காட்டப்படும் ஒரு கடிதம் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மூலம் செயலாளருக்கு அனுப்பபட்டிருந்தது. அதற்கு மறுநாள் மாவை அவர்களும் செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார். எனவே அவர் ராஜினாமா செய்திருப்பதால் கட்சியின் அடுத்த மாநாடுவரைக்கும் எஞ்சியிருக்கிற காலத்துக்கு மத்தியசெயற்குழு ஒருவரை தலைவராக நியமிக்க முடியும் என்ற எமது யாப்பின் அடிப்படையில் சிவிகே சிவஞானம் அவர்களை அந்த பதவிநிலைக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. இதேவேளை சேனாதிராஜா தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றிருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மாற்று முன்மொழிவும் சொல்லப்பட்டது. இதனால் குறித்த விடயம் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. எனவே இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடும்படியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தரப்பினர் கேட்டுக்கொண்டனர். இறுதியில் அது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் அதற்காக இன்னொரு கூட்டத்தை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டியநிலையில் இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/201292
  20. தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4 ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி தற்போது இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (13) பிற்பகல் வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197299
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இதன்படி, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 17-ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்திப்பார்." என அவர் கூறுகின்றார். இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்தப்படும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து, விஜயத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். ''இந்த விஜயத்தின் இறுதியின் இரு தரப்புக்களும் கருத்துக்கள் வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். இந்த விஜயத்தின் நேர அட்டவணையை வெளிவிவகார அமைச்சு வெளியிடும். இந்த தீர்மானங்கள் குறித்து இந்த விஜயத்தின் பின்னர் நாம் வெளியிடுகின்றோம்." என அவர் குறிப்பிடுகின்றார். இந்தியாவிற்கு முதலாவது விஜயம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன? இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனது முதலாவது விஜயமாக அயலாக நாடான இந்தியாவையே தெரிவு செய்வது வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நிலையில், அயல் நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திஸாநாயக்கவும், தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இலங்கை, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கடைபிடித்துவந்தாலும், அயல்நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக அரியணையேறும் அரச தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமை. ஆட்சிகள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையென்பது முழு அளவில் பெரும்பாலான நாடுகளில் மாறாது. அந்தவகையிலேயே தனது முதல் விஜயம் பற்றிய ஜனாதிபதி அநுரவின் தேர்வும் இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பியினர் (ஜனதா விமுக்தி பெரமுன கட்சியினர்) இந்திய எதிர்ப்புக் கொள்கையை ஆரம்ப காலப்பகுதியில் கடைபிடித்திருந்ததாலும், சீனாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாலும் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறும் என்ற அச்சத்தை இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன. எனவே தமது ஆட்சியிலும் இந்தியாவுக்குரிய முக்கியத்துவம் மாறாது என்ற செய்தி அநுரவின் பயணத்தில் உள்ளடங்கி இருப்பது எனது பார்வையில் ஒரு விசேட அம்சமாகும்." என ஆர்.சனத் குறிப்பிடுகின்றார். திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; சிறுமி உட்பட 6 பேர் பலி - தப்பித்தவர்கள் கூறுவது என்ன?13 டிசம்பர் 2024 தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் பலி: முழுதும் எரிந்த தரைத்தளம் - பிபிசி செய்தியாளர் கண்டது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,PMD MEDIA படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15ம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் (கோப்புப்படம்) ''ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே திஸாநாயக்க டெல்லி சென்று பேச்சு நடந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறி வைத்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. எனவே அது சார்ந்த விடயங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படக்கூடும்.'' என்கிறார் ஆர்.சனத் குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?13 டிசம்பர் 2024 அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD MEDIA படக்குறிப்பு, ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது(கோப்புப்படம்) உற்று நோக்கப்படும் அநுரவின் விஜயம்! திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் உற்று அவதானித்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில், இது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. டெல்லி விஜயம் முடிந்த கையோடு ஜனவரியில் திஸாநாயக்க பெய்ஜிங் செல்கிறார். இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் சீனாவுடனான நட்புறவிலும் மாற்றம் வராது என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படுகின்றது. இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் கவனம் செலுத்திவரும் நிலையில், அந்த தரப்புகள் பக்கம் இலங்கை முழுமையாக சாய்வதை தடுப்பதற்குரிய தேவைப்பாடு சீனாவுக்கு உள்ளது." என பத்திரிகையாளர் ஆர்.சனத் சுட்டிக்காட்டினார். குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,SANATH படக்குறிப்பு, பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு விஜயம் செய்வது முக்கியம்! "பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முன்னெடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்றைய உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது. பொருளாதார பலமும் உள்ளது. எனவே, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது முதல் இரு வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதி மேற்கொள்வது இலங்கைக்கு கூடுதல் பயனை தரக்கூடும். கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களில் அது கைகொடுக்கக்கூடும்." என பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமானது, உலக அரசியல் அரங்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது முதலாவது விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்வதோடு, அதனை தொடர்ந்து, சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c0kvx05mgldo
  22. இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தை அடைந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது. ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. - வவுனியா தீபன் - https://tamil.adaderana.lk/news.php?nid=4574&mode=head
  23. அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது ; அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறிதரன் எம் பி. கருத்து 14 DEC, 2024 | 08:01 PM அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். சனிக்கிழமை (14) வவுனியாவில் தமிழர் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம் பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வெள்ளிக்கிழமை (13) யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் முரண்பாடு என வருகின்ற செய்தி தொடர்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாக இருக்கிறார்கள். அறிவுபூர்வமாக படித்துத்தான் அவர்கள் அந்த பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது. மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும். எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகி செயல்படுவோம். சபாநாயகரின் இராஜினாமா தொடர்பில் கேட்டபோது, சபாநாயகராக இருப்பதற்கு கலாநிதி பட்டமோ எந்தவிதமான பதவி நிலைமைகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனினும் அவர் தனது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார். எனினும் அவர் அந்த பதவிக்கு உரியவர் அல்ல என்று சிலர் அடையாளப்படுத்துவதன் காரணமாக பெருந்தன்மையோடு ஜனநாயக முறைப்படி தனது கட்சியையும் மக்களையும் கருத்தில் கொண்டு தனது நல்ல மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கோடு ராஜினாமா செய்திருக்கின்றார். இது வரலாற்றில் முன்னுதாரணமாகும். இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு இடையில் அவர் பெற்ற பட்டம் உண்மையாக இருந்தாலும் கூட அந்தப் பட்டம் உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் தான் விலகி இருப்பேன் என்று கூறுவது மிகப்பெரும் ஜனநாயகமாகும். அந்த வகையில் சபாநாயகர் மேற்கொண்ட விடயத்தை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ் கட்சிகளோடு பயணிப்பது தொடர்பில் பதிலளிக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து பயணிக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்களுடைய மத்திய குழு மற்றும் அரசியல் குழுவிலே கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்பாக சேர்ந்து செயல்படுதல், இணைந்து பயணிப்பது தொடர்பான விடயங்களை பற்றி பேசலாம். நாங்கள் யாரையும் வெளியில் விடவில்லை. இப்போதும் ஒற்றுமையாக பலமாக செயல்படுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். தேர்தலுக்கு முன்னரும் பகிரங்கமாக கோரிக்கையை முன்வைத்தவர்கள் எங்களுடைய கட்சியினர் தான். பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்ற போது எல்லா மேடைகளிலும் அதனை தெளிவாக கூறியிருக்கிறேன். எங்களுடைய கட்சியை பலப்படுத்துவதற்கும் கூட்டமைப்பை உருவாக்கி மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆணையை தாருங்கள் என்று கேட்டிருந்தேன். அந்த ஆணையை மக்கள் தந்திருக்கிறார்கள். எனினும் தனி மனிதனாக நான் அதனை செய்ய முடியாது மத்தியகுழு மற்றும் அரசியல் குழுவின் கூட்டு முடிவின் பிரகாரம் அந்த ஒற்றுமைக்கான பாலத்தையும் பயணத்தையும் மேற்கொள்வோம். https://www.virakesari.lk/article/201294
  24. தன்னைப்பற்றிய சிவஸ்ரீ பிரசாத் அவர்களின் 20 நிமிட காணொளி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.