ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
Everything posted by ஏராளன்
-
பிரதமராக தொடர்வேன்; ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ள நிலையில், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது எம்பிக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவுக்கான தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து லிபரல் கட்சியின் சில எம்பிக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த நிலையில், “கனடா மக்கள் ஜஸ்டின் பதவி விலக் விரும்புகிறார்கள்” என்று அக்கட்சியின் எபி சீன் கேஸே கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனிடையே, நேற்று முன்தினம் ஜஸ்டின் தலைமையில் லிபரல் கட்சி எம்பிக்களின் ரகசிய கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில், 25 முதல் 30 எம்பிக்கள் வரை ஜஸ்டினிடம் தங்களின் குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். மேலும், வரும் அக்டோபர் 28-ம் தேதியுடன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின், தான் பிரதமராக தொடர்வேன் என்றும் அடுத்த தேர்தலிலும் லிபரல் கட்சியை வழிநடத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு எதிராக எம்பிக்கள் போர்க் கொடி தூக்கினால், அவர்களை பேரவையிலிருந்து நீக்குவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வலுவான உரையாடல்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். https://thinakkural.lk/article/311151
-
யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பிரிவை தாங்கமுடியாமல் மனைவி எடுத்த தவறான முடிவு!
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். இந்நிலையில் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/197071
-
இந்தியாவில் சென்னை உட்பட நாடு முழுவதும் ஒரே நாளில் 80 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அதிலும் குறிப்பாக எக்ஸ் வலைதளத்தின் வழியாக அதிகமான மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஏர் இந்தியா விஸ்டாரா இண்டிகோ நிறுவனங்களைச் சேர்ந்த தலா 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோன்று ஆகாஸா ஏர் நிறுவனம் தனது 14 விமானங்களுக்கு இதேபோன்ற மிரட்டலை எதிர்கொண்டது. நேற்று ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானபாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. ஒரே சமூக வலைதள கணக்கிலிருந்து இதுபோன்று தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்படும்பட்சத்தில் விமானத்தை திருப்பிவிடாமல் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதாக இருக்கும். இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 11 நாட்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலை சந்தித்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் 160 மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விஸ்டாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “சோஷியல் மீடியா மூலமாக விஸ்டாராவின் சில விமானங்களுக்கு வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொண்டு அனைத்து வகையான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விஸ்டாரா நிறுவனத்தைப் பொருத்தவரை வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கே முன்னுரிமை" என்றார். புவனேஷ்வர் விமானநிலையத்துக்கு மிரட்டல்: புவனேஷ்வர் விமான நிலையத்துக்கு சமூக வலைதளம் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் பிரசன்னா மொஹந்தி கூறுகையில் “ எக்ஸ் வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆகாஸா ஏர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து நிலையான இயக்க விதிமுறை (எஸ்ஓபி) பின்பற்றப்பட்டு விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதில் மிரட்டல் புரளி என தெரியவந்ததையடுத்து விமானம் இலக்கு நோக்கி புறப்பட்டது. விமான நிலையத்துக்கு கூடுதல் பாாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார். முன்னதாக விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கடந்த வாரம் பேசுகையில் “ விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு எதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதுபோன்ற நபர்களுக்கு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார். இருப்பினும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது விமான பயணிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/197074
-
கடுமையாகும் சட்டம்; மீறுவோருக்கு 5 ஆண்டு சிறை
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/311157
-
நீங்கள் சாப்பிடும் உணவு மட்டுமல்ல, அதை சமைக்கும் முறைகூட 'சர்க்கரை அளவை உயர்த்தலாம்'
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? ஸ்வீட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். இப்போது அந்தப் பட்டியலில் கிரில் சிக்கன், பூரி போன்ற உணவுகளையும் சேர்க்க வேண்டியிருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. உணவை எப்படி சமைக்கிறோம் என்பது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்ததுள்ளது. உணவை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது, சர்க்கரை நோய்க்கு இட்டுச் செல்லக்கூடிய AGE (Advanced Glycation End products) எனும் கூட்டுப் பொருள் உருவாவதாக இந்திய உணவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் வராமல் ப்ரோக்கோலி தடுக்குமா? ஆய்வில் புதிய தகவல்8 அக்டோபர் 2024 கலப்பட நெய்யை வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிவது எப்படி?29 செப்டெம்பர் 2024 AGE (Advanced Glycation End products)என்றால் என்ன? இந்த ஆய்வு உணவிலும் உடலிலும் இருக்கும் AGE (Advanced Glycation End products) அளவைப் பொருத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு எப்படி மாறுகிறது என்று தரவுகளுடன் எடுத்துக் கூறியுள்ளது. AGEs என்பவை உணவுகள் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் போதும், உடலில் சில உயிரிவேதியியல் நிகழ்வுகளால் உருவாகும் கூட்டுப் பொருட்களா ஆகும். இவை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளுக்கு வழி வகுக்கக்கூடும். இந்தியாவில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்து வரும் நிலையில், சமையல் முறைகளை மாற்றுவது நீரிழிவு (வகை 2) போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தைக் குறைப்பதற்கான எளிய ஆனால் பயனுள்ள உத்தியாக இருக்கலாமென இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நீரிழிவு ஆய்வு மைங்களில் ஒன்றான மெட்ராஸ் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இந்த ஆய்வை நடத்தியது. அதிக மற்றும் குறைந்த AGE (அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட் ப்ரொடக்ட்ஸ்) கொண்ட உணவுகளின் விளைவுகளை இந்த ஆய்வு ஒப்பிட்டது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சிக்கன் பிரியாணி, ஆலூ பராத்தா, காபி, டீ உள்ளிட்ட46 உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டன. தென்னிந்தியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளில் AGE அளவை பற்றிய மேலும் விரிவான தரவுகளின் தேவையையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மருத்துவர் வி மோகன் “புரதங்கள் அல்லது கொழுப்புகள் ரத்த ஓட்டத்தில் சர்க்கரையுடன் இணையும்போது உருவாகும் கூட்டுப்பொருட்களே அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட் ப்ரொடக்ட்ஸ் (AGEs). கிளைகேஷன் என அழைக்கப்படும் இந்தச் செயல்முறை இயற்கையான நிகழ்வாகும். ஆனால் பொரித்தல் மற்றும் வறுத்தல் போன்ற அதிக வெப்பம் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளிலும் இவை உருவாகும். இவை உடலில் இன்சுலின் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், தொற்று ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இவை நீரிழிவு (வகை 2), இதய நோய்கள், வயது முதிர்ச்சி போன்றவற்றின் முக்கியக் காரணிகள் ஆகும்” என்கிறார், மெட்ராஸ் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் வி.மோகன். தெற்காசிய மக்கள்தொகை, குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு, இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உணவு காரணிகளால் இந்த நிலைமைகள் மோசமடையலாம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவது இன்சுலின் என்னும் கணையத்தில் சுரக்கும் ஹார்மோனின் வேலை. சில உணவுகள் உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கக்கூடும். அதாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்கள் எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு இட்டுச் செல்லும். இப்படியான நிலை உருவாக உணவுகள் எப்படி சமைக்கப்படுகின்றன என்பது ஒரு காரணியாக இருப்பதாக சமீபத்தில் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துக்கான சர்வதேச ஆய்விதழில் (International journal of Food Sciences and Nutrition) வெளிவந்துள்ள ஆய்வு தெரிவிக்கிறது. பொரித்தல், வறுத்தல், மற்றும் நேரடித் தீயில் சமைத்தல் போன்ற சமையல் முறைகள் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் என்றும் அதே நேரம் வேக வைத்து, கொதிக்க வைத்து சமைக்கப்படும் உணவுகள் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கின்றன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இன்சுலின் ஏற்பு, இன்சுலின் எதிர்ப்பு - என்ன அர்த்தம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இன்சுலின் ஏற்பு நிலை (insulin sensitivity) என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எந்த அளவுக்கு உடல் எடுத்துக்கொள்கிறது என்பதாகும். இதை அளவிடப் பல சோதனைகள் உள்ளன. பொதுவாக பல இடங்களில் பயன்படுத்தப்படுவது OGTT (Oral Glucose Tolerance Test) எனப்படும் பரிசோதனை. எட்டு மணிநேரம் தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கும்போது ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்படும். அதன் பிறகு, சர்க்கரை கொண்ட திரவம் ஒன்றைப் பருக வேண்டும். அதிலிருந்து 30 நிமிடங்கள் கழித்து ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்படும். பிறகு, மேலும் 30 அல்லது 60 நிமிடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்படும். இதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உடல் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைப் பரிசோதிக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலில் உள்ள செல்கள் எடுத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால் அது இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) எனப்படும். இந்த நிலைக்கு பொதுவாக அறிகுறிகள் இருக்காது. இதைக் கண்டறிய முக்கியமான பரிசோதனை HbA1C எனும் சோதனை. கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவின் சராசரி அளவை இந்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இன்சுலின் எதிர்ப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய்க்கு இட்டுச் செல்லும். உடல் பருமன், அதிக வயிற்று சுற்றளவு, அதிக ரத்த அழுத்தம், வெறும் வயிற்றில் பரிசோதிக்கும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஆகியவை இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வு முறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆய்வில் 25-45 வயதுக்குட்பட்ட, அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட 38 பேர் பங்கேற்றனர். இவர்களின் சராசரி உடல் நிறை குறியீடு (BMI) 23க்கும் அதிகம். (உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கொண்டு ஒரு நபர் உடல் எடை அதிகமானவரா இல்லையா என்று கூறுவது BMI எனும் அளவீடு. பொதுவாக 25க்கும் அதிகமான பி.எம்.ஐ கொண்டவர்கள் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.) இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இரண்டு குழுக்களுக்கான உணவுகளும் ஒரே மாதிரியான கலோரி மற்றும் ஊட்டச்சத்து கொண்டதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ஆனால் சமையல் முறைகளில் கணிசமாக வேறுபாடுகள் இருந்தன. ஒரு குழு வறுத்த, பொரித்த மற்றும் கிரில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டது. மற்றொரு குழு கொதிக்க வைத்த, ஆவியில் வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டது. ஒரே மாதிரியான ஊட்டச்சத்துகளைக் கொண்டபோதிலும் இந்த உணவுகள் அவற்றின் AGE உள்ளடக்கத்தில் பெரிதும் வேறுபட்டன. சிக்கன் பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகள் உணவகங்களில் இருந்து பெறப்பட்டன. இவை பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளைப் பிரதிபலிக்கின்றன. பன்னிரண்டு வாரக் காலத்தில், பங்கேற்பாளர்களின் இன்சுலின் உணர்திறன், கொழுப்பு விவரங்கள், தொற்றுக் குறியீடுகள் அளவிடப்பட்டன. வெவ்வேறு காலகட்டத்தில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வின் முடிவுகள் கூறியது என்ன? ஆய்வின் மிக முக்கியமான விளைவு குறைந்த AGE உணவை உட்கொண்டவர்களிடையே இன்சுலின் உணர்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அதாவது ரத்தத்தில் இருந்து சர்க்கரையை செல்களுக்குப் பயன்படுத்துவது அதிகரித்தது. இந்த ஆய்வில் மேலும் சில விசயங்கள் தெரிய வந்தன. கணையத்தில் உள்ள பீட்டா-செல்கள், இன்சுலினை உற்பத்தி செய்து உடலில் செலுத்துகிறது. குறைந்த AGE கொண்ட, அதாவது வேக வைத்த உணவை உட்கொண்டவர்களின் பீட்டா செல் செயல்பாடு, அதிக AGE கொண்ட, அதாவது வறுத்த, பொரித்த உணவை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருந்தது. அதாவது உடலில் இன்சுலின் செயல்பாடு மேம்பட்டது என்று இந்த ஆய்வு கூறுகிறது. சமையல் முறைகள் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்வின் காரணமாகவும் AGE உருவாகின்றன. ஆனால் இவை அளவுக்கு மீறி இருந்தால் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. வேக வைத்த உணவுகளைச் சாப்பிடும்போது, உடலில் உள்ள AGE-இன் அளவு, வறுத்த, பொரித்த உணவுகளைச் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைகிறது என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. “குறைந்த-AGE கொண்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களுக்கு உடலில் உள்ள AGE சராசரியாக 3.2 µg/ml குறைந்தது. அதிக-AGE உணவை உட்கொண்டவர்களுக்கு வெறும் 0.8 µg/ml மட்டுமே குறைந்தது” என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 'நீண்ட நேரம் அதிக வெப்பத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்' பட மூலாதாரம்,MDRF படக்குறிப்பு, மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நீரிழிவு மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா, நீண்டநேரம் அதிக வெப்பத்தில் சமைப்பது உணவில் AGE கூறுகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார். "பொரித்தல், வறுத்தல், வேக வைத்தல், என இந்திய உணவுகள் பல விதமான முறைகளில் சமைக்கப்படுகின்றன. நீண்ட நேரம் சமைக்கப்படும், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுகளில் dietary AGE உருவாகும். இதை இந்திய சமையலறைகள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பொரித்தல் மற்றும் நேரடி தீயில் சமைக்கும்போது நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார். குறைந்த வெப்பத்திலான திறந்த சமையல் முறையைவிட, பிரஷர் குக்கர் போன்ற மூடிய நிலையில் சமைக்கப்படும் உணவுகளில் அதிக AGE இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். “இந்த ஆய்வில் பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர், திறந்த சமையல் போன்ற சமையல் முறையின் வித்தியாசங்களை ஆராயவில்லை. எனினும், ஒன்றைக் கூற முடியும், திறந்த சமையல் முறையில் சமைப்பதைவிட பிரஷர் குக்கர் போன்று பாத்திரங்களை மூடி அழுத்தத்தையும் வெப்பத்தையும் அதிகரிக்கும்போது, அதில் அதிக AGE உருவாக வாய்ப்புண்டு. அதிக வெப்பத்தில் பிரஷர் குக்கரில் சமைக்கப்படும் அரிசி திறந்த சமையல் முறையில் சமைப்பதைவிட அதிக AGE கூறுகளைக் கொண்டிருக்கும்” என்று விளக்கினார். இந்த ஆய்வு 25முதல் 45 வயதுக்குள்ளான ஆண், பெண்களிடம் நடத்தப்பட்டது. பொதுவாக அவர்கள் சாப்பிடும் உணவுகள் குறித்துக் கேட்டறிந்த பிறகு, இரண்டு குழுக்களுக்கான உணவுப் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. "வயது வாரியாக எவ்வளவு AGE கூறுகளை ஒருவர் உட்கொள்ளலாம் என்று வரையறுக்கப்படவில்லை. ஆனால் அனைவரும் பொதுவாக குறைந்த AGE கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது" என்கிறார் அஞ்சனா. "இந்த முதல் கட்ட ஆய்வில் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளே பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. முறுக்கு, தட்டை, வடை போன்ற எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பல உணவுகள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. பல வகையான உணவு வகைகளுக்கான AGE கணக்கிடும் ஆய்வுகள் தேவை" என்கிறார் மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89lz0q887vo
-
ஜேவிபியின் கிளர்ச்சியின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை - ஜனாதிபதி கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு
ரத்தொலுவையில் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் கலந்துகொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1988-89ம் ஆண்டுகளில் ஜேவியின் கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் 33 வருடங்களாக நீதிக்காக போராடுகின்றனர். இந்த வருடம் 34வது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன ஜனாதிபதியை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜேவியின் இரண்டாவது கிளர்ச்சி காலத்தின் போது 60,000க்கும் அதிகமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர், கடத்தப்பட்டனர் அல்லது காணாமல்போயினர் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு முன்னைய அரசாங்கங்கள் எவற்றிடமும் இருந்ததில்லை என காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை வழங்குவேன் என்பது தற்போதைய ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் ஒன்று என காணாமல்போனவர்களின் குடும்பங்களின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். கடந்தகாலங்களில் இந்த நினைவுகூரும் நிகழ்விற்கு நாங்கள் ஜனாதிபதிகள் எவரையும் அழைக்கவில்லை அவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காணமுயலாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்கள் அலுவலகம், இழப்பீட்டிந்கான அலுவலகம் போன்றவற்றை அமைத்ததன் மூலம் சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் முன்னைய ஜனாதிபதிகளிற்கு இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாடு இருக்கவில்லை என பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். அவர்கள் சர்வதேச சமூகத்தினை திருப்திப்படுத்துவதற்காகவே இந்த அலுவலகங்களை அமைத்தனர், ஆகவே தற்போதைய அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு கடந்த காலங்களில் காணாமல் போனவர்களிற்கு நீதியை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம், நாங்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் ஜனாதிபதியை கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டிலேயே பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்து மக்கள் பேச ஆரம்பித்தனர், ஆனால் எத்தனை பேர் காணாமல்போகச்செய்யப்பட்டனர் என்பது குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் எதுவுமிருக்கவில்லை. 1989ம் ஆண்டிற்கு முன்னர் 1983 முதல் வடக்கிலிருந்து பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. கட்டுநாயக்க ஏற்றுமதி வர்த்தக வலயப்பகுதியில் காணாமல்போனவர்களிற்கு நீதி கேட்பதற்கான இயக்கமாக ஆரம்பித்தது, நாடாளாவிய ரீதியில் காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் இயக்கமாக பரிணமித்தது. பிரிட்டோ பெர்ணாண்டோ அதற்கு தலைமை தாங்கினார். நினைகூரல்கள் மனிதர்களிற்கு மிகவும் முக்கியமானவை, நேசிக்கப்பட்ட ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டார் என்றால் அது வாழ்நாள் சுமை, எங்களால் இறுதி நிகழ்வுகளை நடத்த முடியாது, அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்கின்றார் மனித உரிமை ஆர்வலர் சுனந்த தேசப்பிரிய. https://www.virakesari.lk/article/197090
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு?; கருத்து கணிப்பில் வெளியான தகவல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பின் முடிவுகளின் படி, முன்னால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப்புக்கு இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலா ஹாரிசுக்கு சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்தியாவை பொருத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது. வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை பயனுள்ளதாக அமைகிறது. அத்துடன், அதிக அளவில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதையும் உறுதி செய்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தொடர்பான கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 47 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகவும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவரைவிட 2 சதவீத வாக்குகள் குறைவாக அதாவது 45 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311149
-
வனவிலங்கு சட்டங்களை மீறியதாக வெளிநாட்டு யூடியூபர் மீது விசாரணை
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, இவர்கள் மீது மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தமை, தீ மூட்டடியமை, பாதுகாக்கப்படும் பறவை இனத்தை வேட்டையாடி கொன்றமை, அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளது. அதாவது, மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் மற்றும் தமபன பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வேடுவச் சமூகத்தினர் மயிலை வேட்டையாடி உட்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197059
-
தமிழ்த் தேசிய கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? கஜேந்திரகுமாரிடம் அமெரிக்க தூதுவர் கேள்வி
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஏன் பிரிந்து நின்று செயற்படுகின்றன என இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கஜேந்திரன் ஆகியோரை சந்தித்தவேளையிலேயே மேற்படி வினாவை தொடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்; ஏன் தமிழ்த் தரப்புகள் பிரிந்து நிற்கின்றன என்ற கேள்வியை தூதுவர் எழுப்பியிருந்தார்.எங்களைப்பொறுத்தவரை 13 ஆவது திருத்தம் என்ற விடயத்தினால் தான் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து பிரியவேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த விடயத்தில் நாங்கள் தொடர்ச்சியாக இறுக்கமாக இருந்துவருகிறோம். ஏனைய தரப்புகள் ஏன் பிரிந்து நிற்கிறார்கள் என்பது எங்களுக்கும் விளங்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கிடையில் கொள்கையளவில் எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆகவே ஏனைய தரப்பினர் ஏன் பிரிந்து நிற்கிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டுமென நான் தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறினேன். மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் ஏற்பட்ட மாற்றத்தைப் போல் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பொது தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படும். அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கணிசமாக தன்னுடைய பலத்தை முன்னேற்றும். அந்த அடிப்படையில், அந்த மாற்றம் வடக்கு-கிழக்கில் ஏற்படும்பொழுது தேசிய நிலைப்பாடு சம்பந்தமான ஒரு உறுதியான மனோநிலையாகவே அந்த மாற்றத்தை சர்வதேசமும் இலங்கை அரசும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். குறிப்பாக ஒற்றையாட்சியின் கீழ் இருக்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்கவில்லை. தமிழ் மக்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். குறைந்தபட்சம் சம்ஷடி அடிப்படையில் தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தீர்வை மாத்திரம் தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அந்த மாற்றம் காட்டும் என்பதையும் நாங்கள் எடுத்துக்கூறியிருக்கிறோம். அமெரிக்காவின் அரசியலமைப்பே சமஷ்டி ஆட்சி முறைமைல் இருப்பதனால், தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை பற்றி கதைப்பதை தவிர்த்துவிட்டு, மக்களுடைய ஆணைக்கு மதிப்பளித்து தெற்கில் சமஷ்டி தொடர்பாக இருக்கக்கூடிய தெளிவில்லா தன்மையை நீக்குவதற்கு அங்கு (தெற்கில்)இருக்கக்கூடிய ஆய்வு மையங்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு கூடுதலாக சமஷ்டி பற்றிய அறிவை வளர்ப்பதற்கு தேவையான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் இதன்போது தூதுவரிடம் வலியுறுத்தியிருந்தோம். அதேபோன்று பொறுப்புக்கூறல் விடயத்திலும் சர்வதேச குற்றவியல் விசாரணையூடாகத்தான் அதற்கு தீர்வை காணமுடியும் என்பது தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தோம். ஆகவே எதிர்வரும் தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டாவது அமெரிக்கா போன்ற நாடுகளுடைய நிலைப்பாட்டில் மாற்றம் வரவேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தியிருந்தோம். https://thinakkural.lk/article/311139
-
புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் - அனுர
புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் - செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதில்லை - அனுர புலனாய்வு தகவல்களை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். புலனாய்வு தகவல்கள் குறித்து நாங்கள் செய்தியாளர் மாநாடுகளை நடத்துவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாங்கள் துரிதமாக செயற்பட்டு சிலநபர்களை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். செய்திகளில் வெளிவராவிட்டாலும் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும், அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டனர், பலரை கைதுசெய்தனர், எந்த சம்பவமும் இடம்பெறுவதை தடுப்பதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197062
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
நிகழ்வு காணொளி வடிவில்
-
அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்; 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
இணையவழி மோசடி; சீனப் பிரஜைகள் மூவர் கைது! விடுதியொன்றில் தங்கியிருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று வியாழக்கிழமை (24) காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொபே வீதி, கிந்தோட்ட பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்களாவார். 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/197050
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் கழுதை மற்றும் யானை ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதை உள்ளது. இது 1828இல் தொடங்கியதாக கருதப்படுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ ஜாக்ஸனை கழுதை என பொருள்படும் விதமாக ‘ஜாக் ஆஸ்’ என குடியரசுக் கட்சியினர் அழைத்தனர். இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அவர், கழுதையை பிரசாரங்களில் சின்னமாகப் பயன்படுத்திக்கொண்டார். கழுதை பிடிவாதம் நிறைந்தது, முட்டாள்தனமானது என விமர்சகர்கள் பார்த்தனர். ஆனால், அது அடக்கமானது மற்றும் புத்திசாலிதனமானது என ஜனநாயகவாதிகள் சிலர் கூறினர். இப்போது குடியரசு கட்சியினரின் யானையைப் பற்றி பார்க்கலாம். 1860களில் ஆப்ரஹாம் லிங்கனின் தேர்தல் பிரசாரங்களின்போது, செய்தித்தாள்களில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என சிலர் கூறுகின்றனர். ஒருவேளை வலிமையின் சின்னமாக இருக்கலாம். எனினும், கார்டூனிஸ்டும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான தாமஸ் நஸ்ட் 1874இல் இதை பத்திரிகையில் வரைந்த பின்னரே அது பிரபலமடையத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் யானையை முட்டாள்தனமானது, விகாரமானது எனக் கூறலாம். ஆனால், குடியரசுக் கட்சியினர் இதை வலிமை மற்றும் புத்திசாலிதனத்தின் சின்னம் என்று கூறினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த இரு சின்னங்களும் அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62j4yv844do
-
துருக்கியின் விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது தாக்குதல் - மூவர் பலி
காணொளி வடிவில் செய்தி
-
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா
இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும். அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்கியமை, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வலியுறுத்துவதோடு, மனித கடத்தலை தடுப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/197049
-
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நீதிமன்றப் பதிவாளருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்ததையடுத்து உடனடியாகப் பொலிஸாருக்கு அவர் அறித்துள்ளார் இதனையடுத்து நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குப் பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டடத்தைச் சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்தப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பில் சியோன் தேவலாய குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சாரான் காசிமின், ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311133
-
யாழில் எலிக்காய்ச்சலால் இளம் குடும்பஸ்தர் பலி!
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் திகதி சுகயீனம் அடைந்ததை அடுத்து மறுநாள் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த நபருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சலின் காரணமாக மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197053
-
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்; ரணில் விக்ரமசிங்க கோரிக்கை
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன். அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது. செனல் 4வில் ஒளிபரப்பப்பட்ட வௌிப்படுத்தல்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன். இதற்கு மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ், டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன ஆகியோர் அடங்கிய மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தேன். இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்ல. இந்த குழுக்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் பற்றி ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமைக்கான ஒரு காரணமாகும். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருந்ததா? என்று விசாரிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பொறுப்பாகும். வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்? அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது. அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலான அவதானிப்புகளும் மிக முக்கியமானதாகும். அந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பே கொலைகளை செய்ததாக முதலாவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தம்பிராச குமார் மற்றும் இராசநாயகம் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அறிக்கையின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது, பல முரண்பாடான விடயங்கள் வெளிவருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அப்போது சிறையில் இருந்த பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்ததாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வவுணதீவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரின் கணவரால் இந்த கொலைகள் இடம்பெற்றதாக இது தொடர்பான மற்றுமொரு புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹித் ஜமாத்தின் (NTJ) செயற்பாடுகளை புலனாய்வு அமைப்புக்கள் கண்டுபிடிக்க நான்கு மாதங்கள் ஆனதற்கு தேசிய புலனாய்வு அமைப்புகளிடம் தகவல்களைப் பெறுவதற்கான முறையான வலையமைப்பு இல்லாததே காரணம் என இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் (DMI) தெரிவித்துள்ளார். “Regarding the gap of four months until discovery of the NTJ, the DMI’s explanation was that it was attributable to the lack of network they had at the time to elicit the intelligence. “ REPORT OF THE COMMITTEE OF INQUIRY INTO INTELLIGENCE COORDINATION AND INVESTIGATIVE PROCESSES RELATED TO THE EASTER SUNDAY BOMBINGS OF 21ST APRIL 2019 (Page No 12) வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவாக இருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதியில் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாட்டில் கடும் வீழ்ச்சி காணப்படுவதைக் காணமுடிகிறது. பலமான புலனாய்வு வலையமைப்பு நம்மிடம் இல்லை என்பது ஒரு பயங்கரமான நிலையாகும். ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விடயத்தில் எனது கவனம் செலுத்தப்பட்டது. ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, சட்டமா அதிபரின் அறிக்கையுடன் புலனாய்வு பிரிவின் வீழ்ச்சி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவர் கொண்ட குழுவின் ஊடாக புலனாய்வு அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிவதற்கும் நான் உத்தேசித்திருந்தேன். ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவின் கடுமையான வீழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனது கைக்கு வந்த போதிலும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதால் அந்த அறிக்கைகளை நான் பகிரங்கப்படுத்தவில்லை. இது தொடர்பில் அறிக்கை கோர வேண்டிய தேவை இருந்தமையால் மேற்படி நடைமுறையை நான் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றேன். என்னைப் பற்றி பேராயர் கூறிய அனைத்து கருத்துக்களும் ஆதாரமற்றவை. ஈஸ்டர் அறிக்கைகள் குறித்து ஆயர்கள் பேரவை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈஸ்டர் அறிக்கையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன். https://thinakkural.lk/article/311131
-
கோவையில் நாய் கடித்து இருவர் மரணம், எச்சரிக்கும் மருத்துவர்கள் - ரேபிஸ் தடுப்பூசி ஏன் அவசியம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 24 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையில் ஒரு இளம் பெண் உட்பட அடுத்தடுத்து இரண்டு பேர் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். சென்னையில் நாய்கடி சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசுபொருளான நிலையில், கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அது வராமல் தடுக்க நாய் கடித்த உடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்புகளை தவிர்க்கும் வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி 57 வயது ஆண் ஒருவர், நாய் கடித்து இறந்துவிட்டார். ‘‘அவருக்கு தெரு நாய் கடித்ததா, வீட்டு நாய் கடித்ததா என்று தெரியாது; ஆனால் தாமதமாக வந்ததால், அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் அவரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது’’ என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார். அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 9-ஆம் தேதி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், ரேபிஸ் நோய் ஏற்பட்டு இறந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் வீட்டில் மொத்தம் நான்கு நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு நாய் ஜூலை மாதத்தில் அவரைக் கடித்துள்ளது. அவர் அப்போது தனியார் கிளினிக்கிற்குச் சென்று டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, ரேபிஸ் நோய் ஏற்பட்டு அவர் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி. இவற்றைத் தவிர்த்து, பீளமேடு கிரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், ரோட்டில் பைக்கில் செல்லும்போது, அவரை ‘ராட்வீலர்’ நாய் துரத்திக் கடித்துள்ளது. அருண்குமாரின் மனைவி துர்கா அளித்த புகாரை ஏற்று, தடை செய்யப்பட்ட ‘ராட்வீலர்’ நாயை வளர்த்து வந்த மனோஜ் மற்றும் அவரின் மனைவி இருவர் மீதும், பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவதற்கான முகாம்களை, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தீவிரப்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அத்துடன், நாய்க்கடி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்துகின்றனர். படக்குறிப்பு, கோப்புக்காட்சி ஆய்வு சொல்வது என்ன? தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2023 வரை தமிழ்நாட்டில் 8,06,239 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டில், 3,65,318 என்றிருந்த நாய்க்கடிகளின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் பதிவான நாய்க்கடிக்கு பாதிக்கப்பட்டவர்களில் 60.2 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். 2022 - 2023 ஆண்டுகளில் 41–50 வயதுக்கு உட்பட்டோர் 16.33 சதவீதமும், 31-40 வயதுக்கு உட்பட்டோர் 16.19 சதவீதமும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15.42 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. “2023-ஆம் ஆண்டில், மாநிலத்தில் ரேபிஸ் பாதிப்பால் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி மரணம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார் தமிழக அரசின் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம். ‘‘நாய் கடித்தால் அச்சப்பட தேவையில்லை. அதே நேரத்தில் அஜாக்கிரதையாகவும் இருந்துவிடக்கூடாது. சரவணம்பட்டியில் வீட்டு நாய்தானே கடித்தது என்று அந்தப் பெண் பொருட்படுத்தவில்லை, அதுதான் அவரின் மரணத்துக்குக் காரணம். நாய்க்கடியைப் பொறுத்தவரை, நாமாகவே எதையும் முடிவு செய்யக்கூடாது.’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தனியார் கால்நடை மருத்துவர் சக்கரவர்த்தி. "நாய்க்குட்டி பிறந்ததும் முதலில் ஒரு தடுப்பூசியும், அடுத்து 21 நாட்களில் மற்றொரு தடுப்பூசியும் போட வேண்டும். தடுப்பூசியின் வீரியம் குறைந்து கொண்டிருக்கும் என்பதால், ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். நாயால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோயைப் பரப்ப முடியும். கடிக்கும் இடத்தைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். உதாரணமாக முகத்தில் கடித்தால், உடனே மூளைக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். எனவே, கடித்த 24 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போடுவது அவசியம்’’ என்றார் மருத்துவர் சக்கரவர்த்தி. நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கால்நடைத்துறை இணை இயக்குநர் திருமுருகன், ‘‘நாய் கடித்துவிட்டால், உடனே அந்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்கு சோப்புப் போட்டு 10-15 நிமிடங்கள் வரை கழுவுவதுதான் முதலில் செய்ய வேண்டிய காரியம். வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், நாய் கடித்த நபருக்கும் ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற நாட்களில் சரியாகப் செலுத்திக்கொள்வது அவசியம்’’ என்றார். பட மூலாதாரம்,DR.CHAKKARAVARTHY படக்குறிப்பு, தனியார் கால்நடை மருத்துவர் சக்கரவர்த்தி. தெருநாய்களை வளர்ப்போர் கவனத்திற்கு! ‘‘தெருநாய்க்குட்டிகளை சிலர் கொண்டு போய் வளர்ப்பார்கள். ஆனால் அதற்கு எந்தத் தடுப்பூசியும் போட மாட்டார்கள். அதன் தாய்க்கு ரேபிஸ் இருந்திருந்தால், அதன் பாலைக்குடித்த அந்தக் குட்டிக்கும் அதன் தாக்கம் இருக்கும். நாய் வளர்ப்பில் பராமரிப்புதான் முக்கியம். அதற்கு மாதந்தோறும் குடற்புழு நீக்கம் (deworming) செய்ய வேண்டும்; தடுப்பூசிகள் சரியாகப் போட வேண்டும். முக்கியமாக வீட்டு நாய்களை தெருநாய்களுடன் தொடர்பின்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.’’ என்று எச்சரிக்கிறார் பொள்ளாச்சி கால்நடை உதவி மருத்துவர் அசோகன். தொடர்ந்து பேசிய அவர், ‘‘வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், அது கடித்தாலும், பிராண்டினாலும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகள், வன விலங்குகள் கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். நாயின் உமிழ்நீரில்தான் ரேபிஸ் கிருமி இருக்கும். அதன் வழியாக தொற்றுப் பரவும் அபாயம் உண்டு. நாய்களுக்கு முத்தம் கொடுப்பது, வாயில் நக்க விடுவது கண்டிப்பாகக் கூடாது.’’ என்றார். வெயில் காலத்தில் அதிகம் தாக்கும் ரேபிஸ் பட மூலாதாரம்,மருத்துவர் அசோகன் படக்குறிப்பு, பொள்ளாச்சி கால்நடை உதவி மருத்துவர் அசோகன் தெருநாய்கள் வெயில் காலத்தில்தான் அதிகளவில் ரேபிஸ் தாக்கத்துக்கு உள்ளாவதாகக் கூறும் கால்நடை மருத்துவர் அசோகன், ‘‘கோடைக் காலத்தில் தெருநாய்கள் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் . நிற்க இடமிருக்காது. உணவு, தண்ணீர் கிடைக்காது. அப்போதுதான் ரேபிஸ் வைரஸ் பெருக்கம் அதிகமாக இருக்கும். ரேபிஸ் தாக்கிய நாய், அதிகபட்சமாக 10 நாட்கள் உயிரோடு இருக்கவே வாய்ப்புண்டு. அதனால் சாப்பிட முடியாது, தண்ணீரைக் கண்டால் பயம் வரும். நாக்கு சுழன்று விடும், குரைக்க முடியாது, ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த நேரத்தில் நாயுடன் தொடர்பில் வருபவர்களை கடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்’’ என்றார். நாய் கடிக்கும் இடத்தையும், அதன் அளவையும் பொறுத்து, ரேபிஸ் தாக்கம் ஏற்படும் என்று கூறும் கோவை கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், ''நாய் கடித்த முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21 ஆம் நாள் அல்லது 28 ஆம் நாளில் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். காயம் பெரிதாக இருந்தால், கடிபட்ட இடத்தைச் சுற்றிலும் HUMAN RABIES IMMUNOGLOBULIN (HRIG) தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.’’ என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரேபிஸ் நோய் பாதித்தவரைத் தனிமைப்படுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறுகிறார் டாக்டர் பக்தவத்சலம் ரேபிஸ் நோய் பாதித்தவரைத் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகக் கூறும் டாக்டர் பக்தவத்சலம், ‘‘நோய் பரவும் வாய்ப்பின் காலம் நாய் கடித்த நாளிலிருந்து 10 நாள் முதல் மூன்று மாதம் வரை என மாறுபடும். அதன் பின் அதற்கான அறிகுறிகள் தெரியும். காய்ச்சல் வரும், சோர்வு ஏற்படும், தண்ணீரைக் கண்டால் பயம் வரும். சில நாட்களில், பெருமூளைச் செயலிழப்பு, பலவீனம், பக்கவாதம், சுவாசிப்பது மற்றும் விழுங்குவதில் சிரமம், அசாதாரண நடத்தை என நிலைமை மோசமாகிவிடும். நோய் ஏற்பட்டால், உலகிலுள்ள நோய்களில் 100 சதவீதம் காப்பாற்ற முடியாத நோய் ரேபிஸ் என்பதால், விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும்தான் உயிரைக் காப்பதற்கான ஒரே வழி’’ என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvq0rxvnko
-
ஜனாதிபதியின் சம்பளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்துக்கு அன்பளிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி பதவிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளார். பொதுமக்களுக்கான நிதியுதவிகள் அதன் பிரகாரம் அவர் தனது சம்பளத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த நிதியத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான சம்பளம், பொதுமக்களுக்கான நிதியுதவிகள் என்பன மேற்கொண்டு வரப்படுகின்றமை குறி்ப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/president-donates-salary-to-parliamentarians-fund-1729742381
-
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? ஓர் அலசல்
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை என்ன?- ஓர் அலசல் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர். கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுக்கமாக இருந்த இந்தியா - சீனா உறவுகள், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொண்ட போது இளகியது. ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கிக் கொண்டனர். ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இரு தலைவர்களும், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை வரவேற்றனர். 'எல்லையில் அமைதியைப் பேணுவதே' முன்னுரிமை என இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் என மோதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். "இரு நாட்டு மக்களும் மற்றும் உலக மக்களும் நமது சந்திப்பை மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர், பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்" என்று ஷி ஜின்பிங் கூறினார். 2020-ஆம் ஆண்டில், கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், பல சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவுகள் நீடித்து வந்தன. சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையில் நிலவி வரும் பதற்றத்தைக் குறைப்பதற்காக மெய்யான கட்டுப்பாட்டு கோடு (LAC) குறித்த இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை திங்கட்கிழமை அன்று இந்தியா அறிவித்தது. சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் எனும் செய்தித்தாள், "இது இந்தியா- சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான முக்கியமான வாய்ப்பு, இதனை வரவேற்க வேண்டும்" என்று கூறியுள்ளது. இந்தியா- சீனா உறவுகளை நெருக்கமாகக் கவனித்து வரும் ஆய்வாளர்கள், மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய படி என்று கருதுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு எவ்வளவு முக்கியமானது? கடந்த ஐந்து ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கசப்பாக இருந்த நிலையில், இந்த பேச்சு வார்த்தை அரசியல் ரீதியாக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “ஒரு வாரத்துக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கிடையே இத்தகைய சந்திப்பு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. லடாக் எல்லையில் ராணுவ விலகல் குறித்து இரு நாடுகளும் அறிவித்த பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. லடாக் எல்லையில் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்திருந்தால், எல்லையில் வீரர்கள் இரு தரப்பில் நின்று கொண்டிருக்கும் போது சந்திப்பு நடக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கும். இதை வைத்து பார்க்கும்போது இதுவொரு முக்கிய சந்திப்பு” என்றார். சில ஆய்வாளர்கள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தையும், சீனாவை பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டுவந்ததையும் இந்தியாவின் 'பெரிய வெற்றியாக' பார்க்கின்றனர். புது டெல்லியை தளமாகக் கொண்ட ஆப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி. பண்ட், "இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மிகவும் முக்கியமானது", என்கிறார். "இது இந்தியாவின் பெரிய வெற்றி. இந்தியா நான்கு ஆண்டுகளாக ஒரு பெரிய சக்திக்கு எதிராக நின்று, எல்லையில் சூழ்நிலை இயல்பாகும் வரை மற்ற விவகாரங்களில் இயல்பு நிலை இருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறியது. சமீபத்திய ஒப்பந்தத்தில் சீனா இதை ஏற்றுக்கொண்டது" என பிபிசியிடம் கூறினார் "பரஸ்பர மரியாதை இல்லாவிட்டால் பரஸ்பர உறவுகள் முன்னேற முடியாது என பிரதமர் மோதி கூறியுள்ளார். நிச்சயமாக ஒரு தொடக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால் சீனா தனது அணுகுமுறையை ஓரளவு மாற்றிக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். இந்தச் சந்திப்பிலிருந்து வெளிப்படும் செய்தி இதுதான் என நான் நினைக்கிறேன்" என்கிறார் எனினும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், ''இந்தச் சந்திப்பின் மூலம் சில எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும், ஆனால் இதன் மூலம் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று புரிந்துகொள்ளக்கூடாது." என்கிறார். பட மூலாதாரம்,X/NARENDRAMODI படக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இரு நாட்டு உறவில் பொருளாதார அழுத்தங்களின் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இது பொருளாதார நலன்களை அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என்றாலும், உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருவதில் இரு தரப்பினருக்கும் பொருளாதார நலன்கள் உள்ளன. வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே ஒரு முக்கியமான விவகாரமாக இருந்து வருகிறது. ராஜன் குமார் கூறுகையில், "நாம் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறோம், ஆனால் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்னை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா விரும்புகிறது." என்றார். 2023ல் இரு நாடுகளுக்கிடையே 136 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது. இது மட்டுமல்ல, அமெரிக்காவை முந்தி சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நாடாக மாறியுள்ளது. ஆனால் கடந்த சில காலமாக சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வருகிறது. மறுபுறம், பதற்றம் காரணமாக இந்தியாவில் சீனாவின் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறைக்கு பெருமளவிலான மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், "இரு நாடுகளும் பொருளாதார உறவுகள் இயல்பாக இருக்க வேண்டும் என விரும்பின. வர்த்தகம் தொடர்ந்தாலும், சீன முதலீட்டில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கியது. இதனால் சீனாவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாகிவிட்டது." அவரது கூற்றுப்படி, "முதலீடு குறைந்தது மட்டுமல்லாமல், முக்கியமான உள்கட்டமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்தும் சீனா வெளியேறியது. 2020க்கு முன்பு, சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே இந்தியாவில் 5ஜி விரிவாக்கத்தில் பங்கேற்கலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால் சர்ச்சைக்குப் பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லை" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம் தற்போது சீனாவின் பொருளாதார நிலை அவ்வளவு சீராக இல்லை என்றும், இந்தியா போன்ற சந்தைகளில் தொடர்ந்து இடம்பெற அது நிச்சயமாக விரும்பும் என்றும் பேராசிரியர் பண்ட் கூறுகிறார். ஆனால் அரசின் நிலைப்பாட்டால் இந்திய தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹர்ஷ் பண்ட் கூறுகையில், "அரசாங்கத்தின் நிலைப்பாட்டால், இந்திய தொழில்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. சீனாவுடனான உறவுகள் சற்று இயல்பானால் இந்தியாவின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்று இந்திய தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது" என்றார். அதாவது, உறவுகள் இயல்பானால் இரு தரப்பினரின் வணிகமும் மீண்டும் சீராகும் என்ற விருப்பம் இரு தரப்பிலும் இருந்து வருகிறது. சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராகியுள்ளது. பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப மற்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தி வருகிறது என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தடுப்பை உருவாக்க விரும்புகிறது என்றும் கூறுகிறார். ஷி ஜின்பிங் மற்றும் மோதி இடையேயான சந்திப்புக்குப் பிறகு, சீனா தனது அறிக்கையில், "பல சக்திவாய்ந்த நாடுகளை கொண்ட பலதுருவ உலகம்" பற்றி பேசியுள்ளது என்றாலும், எந்தவொரு ராணுவக் குழுவிலும் சேராது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பேராசிரியர் பண்ட் கூறுகிறார், "பல துருவ உலகம் என்றுதான் சீனா பேசுகிறது. ஏனென்றால் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது. ஆனால் சீனா பல துருவ ஆசியா பற்றி பேசவில்லை, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் வழியாக இந்தியாவை இரண்டாம் சக்தியாக மாற்ற அது தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளது." "சீனாவின் அணுகுமுறை மூர்க்கதனமாக இருந்தால், அது இந்தியாவுடனான உறவுகளை மதிக்கவில்லை என்றால், இந்தியா மற்ற நாடுகளுடன் உறவுகளை உருவாக்க வேண்டியிருக்கும். இந்தியாவுடன் எத்தகைய உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறது என்பது சீனாவைப் பொறுத்தது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, 2019 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் மோதி மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்துகொண்டனர். மற்ற பிரச்னைகளில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்? சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள சர்ச்சை மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பற்றியது மட்டுமில்லை. “இரு நாடுகளுக்கு இடையே உள்ள பல பிரச்னைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் பேராசிரியர் பண்ட். உண்மையில், சீனா இந்தியப் பகுதிக்கும், அருணாச்சல பிரதேசத்திற்கும் உரிமை கொண்டாடி வருகிறது. சீனா அருணாச்சல பிரதேசத்தை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது. பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகையில், “இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாகப் பார்க்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. பாகிஸ்தானை பயன்படுத்தி அல்லது இந்தியப் பெருங்கடலில் இருதரப்பு சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, அல்லது இந்தியாவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சேர அனுமதிக்காமல் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சீனா இந்தியாவை இரண்டாம் நிலையில் உள்ள நாடாக முன்னிறுத்த முயன்றது” என்றார். மேற்கொண்டு பேசிய அவர், “இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நிறைய மாறிவிட்டது என்றோ அல்லது சீனாவின் தரப்பில் ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவோ இந்தியா எந்த மாயையையும் கொண்டிருக்கக்கூடாது,” என்று தெரிவித்தார். அதிக நம்பிக்கையை வெளிப்படுத்துவது குறித்து ராஜன் குமார் எச்சரிக்கிறார். அவர், “அருணாச்சல பிரதேசத்திற்கும் பூட்டானுக்கும் இடையே நடக்கும் ரோந்து எப்போதும் மோதலாகவே இருக்கும் என்பதால், எல்லைப் பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஒப்பந்தத்திற்குப் பிறகு, சீனா தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் உள்கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியது,” என்று கூறினார். “தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது, அது நீண்டதூரம் செல்லக்கூடும்,” என்றும் முனைவர் ராஜன் குமார் கூறுகிறார். மேலும் பேராசிரியர் பண்ட் கூறுவது போல், “மெய்யான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் குறைந்ததால், இரு நாடுகளுக்கும் தேவைப்படும் வர்த்தகத்திலும் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்”. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmzw0e0mw4o
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
ஒற்றைப் பனை மரம் படத்திற்கு சீமான் எதிர்ப்பு - என்ன சர்ச்சை? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புதியவன் ராசைய்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஒற்றைப் பனை மரம்' படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். என்ன காரணம்? புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், 'ஒற்றைப் பனை மரம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா என்பவர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட நிலையில், பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்தப் படம் தமிழ்நாட்டில் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக்கடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், "ஈழத் தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப் பரப்பரையையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. மண் விடுதலைக்குப் போராடி வீர காவியங்களான மாவீரர் தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன். ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனை மரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார். படக்குறிப்பு, புதியவன் ராசைய்யா என்ற இயக்குநர், 'ஒற்றைப் பனை மரம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தமிழ் பெண்களை மோசமாக இந்தப் படம் சித்தரிப்பதாகக் கூறி செய்தியாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், இந்தப் படம் ஈழத் தமிழர்களை மோசமாகச் சித்தரிப்பதாகக்கூறி, அதனை வெளியிடக்கூடாது என சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தை எதிர்ப்பது ஏன் எனக் கேட்டபோது, "போர் முடிந்துவிட்ட நிலையில், எல்லோரும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் படம் எடுத்தால் அதை ஏற்க முடியாது" என பிபிசியிடம் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தொடர்பாளர் சே. பாக்கியராசன். "நாங்கள் யாரும் படம் பார்க்கவில்லை. ஆனால், பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் படம் பார்த்த சில பத்திரிகையாளர்கள் அதிர்ந்துபோய், எங்களிடம் சொன்னார்கள். இந்தப் படத்தை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டார்கள். இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற பெயரில், தொடர்ந்து அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயல்படுகிறார்கள். போர் முடிந்து, அதில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டு நிற்கும்போது, அதற்கு உதவும் வகையிலான கதைக் களம் இருக்க வேண்டும். இது போன்ற கதைக் களத்தைக் கொண்ட படங்கள் இந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும். அதனால்தான் எதிர்க்கிறோம்" என்கிறார் பாக்கியராசன். படக்குறிப்பு, இந்த படத்தின் இயக்குநர் புதியவன் ராசைய்யா இது குறித்து பிபிசியிடம் பேசிய படத்தின் இயக்குநர் புதியவன் ராசைய்யா, "அவர்கள் ஈழ விடுதலை போராட்டத்தை மையமாக வைத்து ஒரு அரசியலைச் செய்கிறார்கள். அவர்கள் இந்தப் போராட்டம் குறித்து பரப்பிவருவதற்கு மாறான கருத்தை இந்தப் படம் சொல்கிறது. அதுதான் அவர்களுக்குப் பிரச்னை" என்கிறார். "போர் முடிவடைந்த பிறகு ஈழத் தமிழர்கள் மிக மோசமான வாழ்வை இலங்கையில் எதிர்கொண்டுவருகிறார்கள். அதைப் பற்றித்தான் இந்தப் படம் சொல்கிறது. போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டுவாக்கில் முள்வேலி முகாம்களில் இருந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அப்படிச் செல்லும் கதாநாயகி எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படம். போருக்குப் பிந்தைய இலங்கையில், கணவனை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறெல்லாம் சிரமப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். மேலும், இஸ்லாமியர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டதும் படத்தில் வருகிறது. இதில் தமிழர்களுக்கு எதிராகவோ, இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ எதையும் சொல்லவில்லை. என் மண் சார்ந்து, எங்களுடைய பிரச்னை சார்ந்து படமெடுப்பது எனது உரிமை. எங்கள் பிரச்னையை நான் விரும்பியபடி சொல்ல இவர்கள் அனுமதி தேவையில்லை. என் சமூகத்தை என் பார்வையில் பதிவுசெய்வேன்" என்கிறார் இயக்குனர் புதியவன் ராசைய்யா. ஆனால், தங்கள் எதிர்ப்பைக் கைவிடப்போவதில்லை என்கிறது நாம் தமிழர் கட்சி. "எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கும் என்பது சரிதான். ஆனால், அவரது கருத்து பொதுக் கருத்துக்கு எதிராக இருந்தால், அதை எதிர்க்கத்தானே முடியும்? ஆகவே நாங்கள் எதிர்ப்போம். கடைசிவரை கடுமையாக எதிர்ப்போம்" என்கிறார் பாக்கியராசன். ஒற்றைப் பனை மரம் படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கிளிநொச்சியிலும் 10 சதவீத காட்சிகள் தமிழ்நாட்டிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. புதியவன் ராசைய்யா இதற்கு முன்பாக, 'மண்', 'யாவும் வசப்படும்' ஆகிய இரு படங்களை இயக்கியிருக்கிறார். 'மண்' திரைப்படம், இலங்கையில் பூர்வீகத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடைப் பற்றிப் பேசிய திரைப்படம். 'ஒற்றைப் பனை மரம்' திரைப்படம், இதுவரை இலங்கையில் வெளியாகவில்லை. இலங்கையில் வெளியிடுவதற்காக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்தக் குழு படத்தை அக்டோபர் 14-ஆம் தேதி பார்த்துவிட்டது என்கிறார் ராசைய்யா. ஆனால், இதுவரை முடிவு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. "ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் மூன்று நாட்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். ஏன் இன்னும் தெரிவிக்கவில்லை என எனது சட்டத்தரணி மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்" என்கிறார் ராசைய்யா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gxvm52y31o
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத்தேர்தல் வாக்களிப்பு : வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது அடையாளமிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு (இராஜதுரை ஹஷான்) பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளமிடப்பட்டது. அத்துடன் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின் போது வாக்காளிப்பதை அடையாளப்படுத்துவதை அடையாளமிடுவதில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைப்பெறவுள்ள பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்காளருக்கு இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும். பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தேர்தல்கள் ஆணைக்குழு சனிக்கிழமை (26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது. இதற்கதைய வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (27) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் விநியோகித்து நிறைவு செய்ய தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை (30) மற்றும் நவம்பர் மாதம் 1, 4 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளது. இத்தினங்களில் வாக்களிக்காதவர்கள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும். https://www.virakesari.lk/article/197033
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஜோடி மட்டுமே வீழ்த்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனே நகரில் தொடங்கியது. தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அற்புதமான ஆஃப் ஸ்பின்னைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி முதல் நாளிலேயே முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினர். 197 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த நியூசிலாந்து அணி அடுத்த 62 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து சுந்தர், அஸ்வின் பந்துவீச்சில் பறிகொடுத்தது. அதிலும் கடைசி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூஸிலாந்து வாஷிங்டன் சுழற்பந்துவீச்சில் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் 23.1 ஓவர்கள் வீசிய வாஷிங்டன் சுந்தர் 59 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற்று இன்று களமிறங்கிய சுந்தர், இந்த போட்டியில் அருமையாக பந்து வீசினார். 4 டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தநிலையில் இன்று ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வின் முதலிடம் அனுபவ பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 24 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தில் முதல் இரு விக்கெட்டுகளை எடுத்து தொடங்கி வைத்தது அஸ்வின் என்றாலும் அதன்பின் விக்கெட் கிடைக்காமல் இந்திய அணியினர் திணறினர். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச வந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் கடந்த 2019-ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் சாதனை படைத்திருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் இன்று முறியடித்தார். அஸ்வின் 38 போட்டிகளில் 188 விக்கெட்டுகளை எட்டினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 38 டெஸ்ட் போட்டிகளில் 189 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் உலகளவில் முதல் இடத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்களில் நேதன் லேயனை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார். ஆஸ்திரேலிய வீரர் நேதன் லேயன் டெஸ்டில் 530 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அஸ்வின் 531 விக்கெட்டுகளை எட்டி 7-வது இடத்துக்கு முன்னேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் வலது ஆஃப் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இந்திய அணிக்காக முதல்முறையாக வலதுகை ஆஃப் ஸ்பின்னர்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும். தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களான அஸ்வின், சுந்தர் இருவரும் ஆட்டத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு ஆதிக்கம் செய்தனர். நியூசிலாந்து அணியின் சரிவைத் தொடங்கி வைத்தது அஸ்வின் என்றாலும், அதை வெற்றிகரமாக முடித்து வைத்தது வாஷிங்டன் சுந்தர்தான். டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்ஷெல் ஆகியோரின் கூட்டணியை உடைத்து நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டமிழக்க வைத்ததில் அஸ்வின், சுந்தர் இருவரின் பங்கு முக்கியமானது. நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 197 ரன்களுக்கு 3 விக்கெட் என வலுவாக இருந்ததால், 300 ரன்களைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 259 ரன்களுக்குள் இந்திய வீரர்கள் ஆல்அவுட் ஆக்கினார். உள்நாட்டில் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பந்துவீசி நல்ல ஃபார்மில் இருந்த வாஷிங்டன் சுந்தர் தனது பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை வெளிப்படுத்தி, பந்துவீச்சின் வேகத்திலும் மாறுபாட்டை காண்பித்ததால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைத்தது எளிதாகியது. நியூசிலாந்து அணி கடைசி 62 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. புனே ஆடுகளத்தில் பேட் செய்வது எளிதானது அல்ல என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்துவிட்டனர். நியூசிலாந்து ஸ்கோர்போர்டில் ரிஷப் பண்ட், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பெற்றிருப்பார்கள் வேறு எந்த பீல்டர் பெயரும் இடம் பெற்றிருக்காது என்பதே இருவரின் சிறப்பான பந்துவீச்சுக்கு சான்றாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES அஸ்வினை சாதனையை 5-வது டெஸ்டிலேயே சமன் செய்த சுந்தர் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாக இருந்த 7 விக்கெட் சாதனையை தனது 5வது டெஸ்டிலேயே வாஷிங்டன் சுந்தர் சமன் செய்துள்ளார். அஸ்வின் 2017-ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. அந்த சாதனையை தற்போது சுந்தர் சமன் செய்து, அவரும் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆறுதல் தந்த கான்வே, ரவீந்திரா நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு ஆறுதலாக இருந்தது கான்வே, ரச்சின் ரவீந்திராவின் பேட்டிங் மட்டும்தான். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் இருந்ததைப் போல ரவீந்திரா இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே 76 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கீழ்வரிசையில் களமிறங்கிய சான்ட்னர் 33 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. வில் யங் - கான்வே பார்ட்னர்ஷிப் 62 ரன்களையும், கான்வே - ரவீந்திரா பார்ட்னர்ஷிப் 59 ரன்களையும் அதிகபட்சமாகச் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ரவீந்திராவை பிரமிக்க வைத்த சுந்தர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் பேட் செய்தார். ஆகாஷ்தீப், ஜடேஜா, அஸ்வின் என மாறி, மாறிப் பந்துவீசியும் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அப்போது சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். சுந்தர் வீசிய ஓவரின் முதல் பந்தை ரவீந்திரா ஸ்ட்ரோக் வைத்து தடுத்தாட முயற்சிக்க, பந்து லேசாக டர்ன் ஆகி ஆஃப் ஸ்டெம்பில் பட்டு க்ளீன் போல்டாகியது. தன்னை போல்டாகிய பந்து குறித்து ரவீந்திரா சில வினாடிகள் பிரமித்து தனது பேட்டையும், ஸ்டெம்பையும் மாறி, மாறிப் பார்த்து செய்வதறியாது திகைத்து நடந்து சென்றார். இந்த விக்கெட்தான் சுந்தரின் விக்கெட் வேட்டைக்கு தொடக்கமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டக்அவுட் ஆன ரோஹித் சர்மா ரோஹித் சர்மா டக்அவுட் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்கினர். டிம் சௌதி வீசிய 3வது ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து, சுப்மான் கில் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் சேர்த்து, 243 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், சுப்மான் கில் 10 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c89vwnpnd2yo
-
அமெரிக்க தூதுவர் வடக்குக்கு விஜயம்
அமெரிக்கத்தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்! இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (24 ) காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால், யூ.எஸ். எயிட் நிதியுதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் மெய்யியல் துறையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் கீழ் நடாத்தப்படும் "அகம்" உளவளத்துணை நிலையத்துக்கே அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் உடன்,யூ.எஸ். எயிட் இன் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டத்தின் தலைமை அதிகாரி ஜெயதேவன் கார்த்திகேயன் மற்றும் தூதரக அதிகாரிகளும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் உயப் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோருடன் மெய்யியல் துறைத் தலைவர் அபிராமி ராஜ்குமார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கஜவிந்தன், உளவள ஆலோசகர் ஆர்.சாவித்திரிதேவி உட்படப் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உளவியல், மெய்யியல் துறைகளின் மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் "அகம்" உளவளத்துணை நிலையத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதோடு மாணவர்களுடன் அளவளாவி நிலைமைகளைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர் தற்கால நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/197023