Everything posted by ஏராளன்
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
"நாங்கள் அறுகம் குடா ஆபத்து குறித்து தகவல்களை வழங்கினோம் இலங்கை அரசாங்கம் துரிதமாக செயற்பட்டது - அமெரிக்கா பயண தடைவிதிக்கவில்லை" - ஜூலி சங் இலங்கையர்களினதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல்களிற்கு தீர்வை காண்பதில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன். அமெரிக்கா இலங்கை குறித்து போக்குவரத்து தடை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்கர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தனது கடமையை வலியுறுத்தியுள்ள அவர் நம்பகதன்மை மிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தூதரக பணியாளர்கள், அமெரிக்க பிரஜைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் நாடு ஆகிய தரப்புடன் தகவல்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் எச்சரிக்கும் கடமை கொள்கை குறித்த ஆணைபற்றியும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் எங்கள் தூதரகங்கள் எச்சரிப்பதற்கான கடமை என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்றன, அதாவது நம்பகதன்மை குறித்த எச்சரிக்கை கிடைத்தால் நாங்கள் எங்கள் பிரஜைகள் மற்றும் அந்த நாட்டின் அதிகாரிகளுடன் அந்த தகவலை பகிர்ந்துகொள்ளவேண்டும். இது அமெரிக்கா பின்பற்றும் உலகளாவிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டதும் நாங்கள் அது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தோம், இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்தது என ஜூலி சங் தெரிவித்துள்ளார். நாளாந்த அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம், இலங்கையின் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் அடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் வெளிப்படைதன்மை குறித்த இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு அதிகாரினதும் அர்ப்பணிப்பு குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மறுஅறிவித்தல் வரும் வரை அறுகம்குடாவிற்கு செல்லவேண்டாம் என அமெரிக்கர்களிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/197315
-
இலங்கையின் நிலபரப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார். கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை வரைபடம் சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் மஹியங்கனை வீதியின் இருபுறமும் வனப்பகுதியாக காணப்பட்டது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எனினும் தற்போது சில பிரதேசங்கள் குடியேற்றப்பட்டு, கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய வரைப்படம் தயாரிப்புக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக, நில அளவையாளர் நாயகம் சுதத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-new-land-space-map-2024-1730081112#google_vignette
-
லண்டனிலிருந்து உறவினரை பார்க்க வந்தவர் திடீரென உயிரிழப்பு
லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு திடீரென உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து வந்த இவர், கடந்த 17ஆம் திகதி பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, நேற்றுக் காலை (27) உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197314
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டியவராக மாறியுள்ள ஈழத்தின் பாடலாசிரியர்! தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் எழுதியுள்ளார். தமிழகத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில், குறித்த பாடலானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பன்முக திறன்கள் குறித்த பாடலாசிரியர் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர் அங்காளபரமேஸ்வரிக்கும் பாடலை எழுதியுள்ளதோடு, தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் G V பிரகாஸ் இன் தயாரிப்பில் "நாம்" பாடல் பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். இவர் சிறுவயது தொடக்கம் இசையின் மீதும் கலைத்துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சங்கீதத்தை முறையாக கற்றதோடு, தனது முயற்சிகளில் எப்போதும் பின்வாங்கியதுமில்லை. குறித்த பாடலாசிரியர் இதுவரைக்கும் 300ற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். "செஞ்சோலை பாடல்கள் தொடக்கம் ஆனையிறவு நாயகனே" பாடல் தொட்டு ஈழத்தின் முதன்மையான ஆலயங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இவர் நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் திரைகதை எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மட்டுமன்றி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வு எழுத்தாளர் என பன்முக திறன்களைக் கொண்டவராகவும் விளங்கி வருகின்றார். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், தலைமைத்துவ பயிற்சி நெறிகள் போன்றவற்றை பாடசாலைகள் மற்றும் கிராம மட்டங்களிலும் முன்னெடுத்துள்ளார். https://tamilwin.com/article/lyricist-eelam-become-must-celebrate-world-tamils-1730089943#google_vignette
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்காவை கிறிஸ்தவ நாடாக்க விரும்பும் இவர்கள் 'டிரம்ப் கடவுளின் பிரதிநிதி' என்று நம்புவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2017 செப்டம்பரில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் மதத் தலைவர்களுடன் டிரம்ப் எழுதியவர்,செசிலியே பேரியா பதவி,பிபிசி நியூஸ் முண்டோ இருந்துஓக்லஹோமாவிலிருந்து 28 அக்டோபர் 2024, அமெரிக்காவின் தெற்கு ஓக்லஹோமாவில் சுமார் 2,000 பேர் வசிக்கும் எல்ஜின் எனும் டவுன் பகுதி உள்ளது. அங்கு கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில், சனிக்கிழமை வழிபாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாதிரியார் டஸ்டி டெவர்ஸ் (36), பிரகாசமான முகத்துடன் பாதிரியார் உடையில் தோன்றினார். அங்கு கூடியிருந்த சுமார் 100 தேவாலய உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையினத்தவர். தேவாலயத்தின் லாபியில் சில துண்டுப் பிரசுரங்கள் இருந்தன. அவற்றில் இறந்த குழந்தைகளை சித்தரிக்கும் படம் இடம் பெற்றிருந்தது. "இதைப் படிக்கும் போது, அமெரிக்காவில் மூன்று குழந்தைகள் அநியாயமாக தாயின் வயிற்றில் படுகொலை செய்யப்பட்டது நினைவுகூரப்படும்" என்று அந்த புத்தகங்களின் தலைப்பு கூறுகிறது. கருக்கலைப்பை நம் காலத்தின் "ஹோலோகாஸ்ட்" என்று அவை விவரிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதாரம் மற்றும் குடியேற்றக் கொள்கை பிரச்னைகளை போன்று கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளும் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த பழமைவாத வலதுசாரி புராட்டஸ்டண்ட் வாக்காளர்கள் இடையே அரசியலும் மதமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கான தெளிவான அடையாளமாக இந்த துண்டுப்பிரசுரங்கள் உள்ளன. படக்குறிப்பு, கிரேஸ் சீர்திருத்த பாப்டிஸ்ட் தேவாலயத்தில் கருக்கலைப்புக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன ஒரு கோடை நாளில், பலத்த மழை பெய்து கொண்டிருக்கையில், உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு பிரார்த்தனை தொடங்கியது. தேவாலயத்தின் போதகர் கிடார் வாசித்து சபை உறுப்பினர்களுடன் பாடல்களைப் பாடினார். டஸ்டி டெவர்ஸ் எல்ஜினில் பிறந்தவர். செனட்டரான அவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். மதம் தொடர்பான படிப்பு மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்தில் நற்செய்தி போதிப்பார்; ஆனால், ஞாயிற்றுக்கிழமையில் அவர் ஓக்லஹோமா கேபிட்டலில் முன்மொழிவுகளை முன்வைப்பார். ஓக்லஹோமாவில் அரசியல்வாதிகள் உள்ளூர் தேவாலயங்களில் அதிகாரம் செலுத்துவதும், நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் சகஜம். அமெரிக்க 'பைபிள் பெல்ட்’ என்றழைக்கப்படும் மாகாணங்களில் இல்லினாய்சும் ஒன்று. இங்கு பல ஆளுமைகள், அரசியலிலும் அதே சமயம் மதம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இரட்டை தலைமை பொறுப்பில் இருப்பது பொதுவான ஒன்று. இப்பகுதியில் மக்கள் பிரதானமாக புராட்டஸ்டண்ட் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர். அமெரிக்காவில் `பைபிள் பெல்ட்’ மாகாணங்கள் எனப்படும் மாகாணங்களில் குறைந்தது 9 மாகாணங்கள் புராட்டஸ்டண்ட்கள் மற்றும் குடியரசுக் கட்சி சார்ந்த ஆதரவாளர்களை உள்ளடக்கியது. முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த தேர்தலில் இந்த மாகாணங்களில் தான் வெற்றி பெற்றார். (ஜார்ஜியா மட்டும் ஒரே விதிவிலக்கு) தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள எல்ஜின் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க பழமைவாத புராட்டஸ்டண்ட் தலைவர்களின் எழுச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது. இதில் முக்கியமான மையப் பகுதியாக ஓக்லஹோமா உள்ளது. இது ஒரு தீவிர மதம் சார்ந்த மாகாணம். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேபிடல் உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஓக்லஹோமா அரசியலில், கடவுளும் நாடும் மிகவும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஏனெனில் மரபுவழி கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை தாராளவாத இடதுசாரிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்று நம்புகிறார்கள். மதம் மற்றும் அரசியலின் இணைப்பு படக்குறிப்பு, அமெரிக்காவின் அதிகார அமைப்புகள் மாற வேண்டும் என போதகர் டஸ்டி டெவர்ஸ் வாதிடுகிறார் "என்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி அறிய அன்றைய திருச்சபை வழிப்பாடு எப்படி இருந்தது?" என்று என்னிடம் டெவர்ஸ் கேட்டார். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, கருக்கலைப்பை முடிவுக்குக் கொண்டு வருவது, ஆபாசப் படைப்புகளை நிறுத்துவது மற்றும் வருமானம், சொத்து வரிகளை வசூலிப்பதை நிறுத்துவதுதான் அவரது அரசியலின் முக்கிய நோக்கம் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் டெவர்ஸின் நீண்ட கால இலக்கு இன்னும் சுவாரஸ்யமானது. அமெரிக்காவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்றுவதே அவரது குறிக்கோள். அந்த பணியை நிறைவேற்றுவதற்கான வழிகளில் முக்கியமானது, உயர் அரசியல் பதவிகளை ஆக்கிரமிப்பது தான். "வெள்ளை மாளிகையை கடவுளின் தேசமாக மாற்ற விரும்புகிறீர்களா?" என்ற கேள்வியை நான் அவரிடம் முன்வைத்தேன். "பூமியில் உள்ள அனைத்துமே கடவுளின் பிரதேசம் தான்” என்று பதிலளித்தார். குடியரசுக் கட்சியின் செனட்டர் டெவர்ஸ் தற்போதுள்ள கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார். டிரம்ப் தங்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று டெவர்ஸ் நினைக்கிறார். பைபிள் பெல்ட்டில் உள்ள மற்ற போதகர்களின் கருத்தும் அதே தான். டிரம்ப் குடியரசுக் கட்சியை இடதுசாரி பக்கம் சாய்ப்பதாக அவர் கூறுகிறார். 37 வயதான ஆரோன் ஹாஃப்மேன், டெவர்ஸுடன் பணிபுரிகிறார். அவர் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை. அவர் தற்போது ஓக்லஹோமாவில் உள்ள புதிய பாப்டிஸ்ட் தேவாலயத்தில் போதகராக தயாராகி வருகிறார். தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையிலான கோடு மங்கலாக இருக்கக்கூடாது என்று அவர் நம்புகிறார். "கிறிஸ்துவத்தை அரசியலில் இருந்து பிரிக்க முடியாது. அமெரிக்க மக்கள் இயேசு கிறிஸ்துவை மறந்துவிட்டார்கள்" என்று அவர் கண்ணீருடன் என்னிடம் கூறினார். மதம் செல்வாக்கு செலுத்துகிறதா? படக்குறிப்பு, ஓக்லஹோமாவில் ஆசிரியர் பணியிலிருந்து சுஜி ஸ்டீபன்சன் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் இந்த கலாசார மோதல் சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இந்த கேள்விக்கான பதில் `ஆம் பாதிக்கும்’. இந்த ஆண்டு மட்டும், குறைந்தது மூன்று `பைபிள் பெல்ட்’ மாகாணங்களில் மத சார்பு கொண்ட முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. லூசியானாவில் அனைத்து பள்ளி வகுப்பறைகளின் சுவர்களிலும் கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அலபாமா மாகாணத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் உறைந்த கரு முட்டைகள் சிசுக்களே என்று தீர்ப்பளித்ததை அடுத்து செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதேபோல், ஓக்லஹோமாவில், உயர் கல்வி அதிகாரி ரியான் வால்டர்ஸ் எடுத்த முடிவு மிகவும் விவாதத்திற்கு உட்பட்டது. ஜூன் மாதம், மாநிலத்தின் பொதுப் பள்ளிகளில் பைபிள் கற்பித்தலைக் கட்டாயமாக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும், ஓக்லஹோமா மிகப்பெரிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாகாணமாகும். இந்த முடிவு மத சுதந்திரத்திற்கு எதிரானது என பல ஆசிரியர்கள் தெரிவித்தனர். "நாம் தேவாலயத்தையும் மாகாணத்தையும் தனித்தனியாக அணுக வேண்டும்” என்று புராட்டஸ்டன்ட் மற்றும் முன்னாள் ஆரம்ப பள்ளி ஆசிரியரான 44 வயதான சுஜி ஸ்டீபன்சன் கூறுகிறார். சுஜி கடந்த ஆண்டு, குடியரசுக் கட்சி ஆதரவாளரான வால்டர்ஸை கடுமையாக விமர்சித்தார். வால்டர்ஸ் கடந்த மே மாதம் ஓக்லஹோமா ஆசிரியர் சங்கத்தை `பயங்கரவாத அமைப்பு’ என்று அழைத்தார். இதுதொடர்பாக வால்டர்ஸ் பிபிசியிடம் பேச மறுத்துவிட்டார். பள்ளியின் இந்த முடிவுக்கு பல பெற்றோர்களும் உடன்படவில்லை. கிறிஸ்தவரான எரிகா ரைட்டும் அதில் ஒருவர். பைபிள் போதிப்பதற்கு பதில், அவர்களின் ஏழ்மை நிலையை மாற்ற வழி செய்யலாம் என்று அவர் கருதுகிறார். ஓக்லஹோமா கிராமப்புற பள்ளிகள் கூட்டணியின் நிறுவனர் மற்றும் குடியரசுக் கட்சி ஆதரவாளரான ரைட், அரசுப் பள்ளிகளில் போதுமான நிதி இல்லை என்றும், பல மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும் கூறினார். அவர்களின் வீட்டில் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார். "ஓக்லஹோமாவின் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் பேர் ஏழைகள். பல பகுதிகளில் அதிகமான வறுமை உள்ளது" என்று அவர் கூறுகிறார். ஓக்லஹோமா பல்கலைக்கழக பேராசிரியர் சாமுவேல் பெர்ரி அரசியல் மற்றும் மதம் பற்றிய பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பள்ளியில் பைபிள் கற்பிக்க வேண்டும் போன்ற முடிவுகள் ஒரு பெரியளவிலான செயல்திட்டத்தின் கீழ் எடுக்கப்படுகின்றன என்று அவர் நம்புகிறார். இந்த கொள்கைகள் தீவிர மத நம்பிக்கை கொண்ட தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ தேசியவாதத்தின் கொள்கைகளை பரப்பும் நபர்களால் இயக்கப்படுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த சித்தாந்தம் அமெரிக்க குடிமை வாழ்க்கை மற்றும் மரபுவழி ஆங்கிலோ-புராட்டஸ்டண்ட் கலாசாரத்தை ஊக்குவிக்கிறது. "கிறிஸ்தவ தேசியவாதம் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று அவர் கூறுகிறார். "டிரம்ப் கடவுளால் அனுப்பப்பட்டவர்” பட மூலாதாரம்,JACKSON LAHMEYER படக்குறிப்பு, "இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர் டிரம்ப்" என்கிறார், ஜாக்சன் லஹ்மியர் பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள இத்தகைய போதகர்கள் மிகவும் ஏழ்மையான சமூகங்கள் மத்தியில் சிறிய தேவாலயங்களை நிறுவுவதன் மூலம் அவர்களைப் பின்பற்றுபவர்கள் இடையே பெரும் செல்வாக்கு கொண்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் இந்த குழு முன்னேற டிரம்பை தங்களுக்கான சிறந்த தேர்வாக கருதுகின்றன. ஓக்லஹோமா பாதிரியாரான ஜாக்சன் லஹ்மியர் ஒரு தீவிர டிரம்ப் விசுவாசி. "டிரம்ப் இந்த நாட்டை ஆள கடவுளால் அனுப்பப்பட்டவர்" என்று அவர் கூறுகிறார். இவர் டிரம்பிற்கான போதகர்கள் குழுவை நிறுவியவர். வரவிருக்கும் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக கிறிஸ்தவ வாக்குகளை திரட்டுவதே அவர்களின் நோக்கம். டிரம்ப் மீதான தாக்குதலில் அவர் உயிர் பிழைத்ததை 'கடவுளின் அற்புதம்' என்று லாஹ்மியர் கூறுகிறார். "எங்கள் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதற்கு மிக அருகில் இருந்தோம்" என்று ஓக்லஹோமாவின் துல்சா பகுதியை சேர்ந்த முன்னாள் செனட் வேட்பாளரான லாஹ்மியா தொலைபேசி உரையாடலில் கூறினார். இருப்பினும், புராட்டஸ்டண்ட் மத போதகரான லாஹ்மியா தன்னை ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கிறார். "கிறிஸ்தவ தேசியவாதி என்ற பட்டத்தின் மூலம் எங்களை ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அது உண்மையல்ல" என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசியலில் செல்வாக்கு செலுத்தியதாக பாதிரியார் பால் பிளேயர் வாதிடுகிறார் ஓக்லஹோமா நகரத்தின் புறநகர்ப் பகுதியான எட்மண்டில் உள்ள ஃபேர்வியூ பாப்டிஸ்ட் தேவாலயத்தின் தலைவரான பாஸ்டர் பால் பிளேயரும், தன்னை அப்படி அடையாளப்படுத்துவதை எதிர்க்கிறார். "நான் ஒரு கிறிஸ்தவனா? என்றால் ஆம் என்பேன். நான் ஒரு தேசியவாதியா? என்றாலும் ஆம் என்பேன். அதற்காக சிலர் எங்களை கிறிஸ்தவ தேசியவாதியாக சித்தரிப்பதை நான் ஏற்கவில்லை. இந்த நாட்டில் ஒரு கிறிஸ்தவ தேசியவாதியாக இருப்பது ஒரு களங்கமாக மாறி வருகிறது" என்று அவர் தெரிவித்தார். 1980களில் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருந்த போது எடுத்த படங்களையும் அவர் காட்டினார். தற்போது லிபர்ட்டி பாஸ்டர் பயிற்சி முகாமின் பொறுப்பாளராக பிளேயர் உள்ளார். புராட்டஸ்டண்ட் தலைவர்கள் அரசியலில் தங்கள் மதக் கொள்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை அங்கு கற்றுக்கொள்கிறார்கள். "இந்தப் பயிற்சி போதகர்களுக்கு வாழ்வின் அனைத்து கட்டங்களையும் பைபிள் ரீதியாக சிந்திக்க உதவுகிறது. அவர் அமெரிக்கா முழுவதும் உள்ள புராட்டஸ்டண்ட் உள்ளூர் தலைவர்களின் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். அவர்கள் தங்களை 'தேச பக்தி கொண்ட போதகர்கள்' என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களில் பலரைப் போலவே, அமெரிக்கா மீண்டும் பாரம்பரிய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிளேயர் விரும்புகிறார். 1776 இல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது இந்த மதிப்புகள் கையெழுத்திடப்பட்டன. "வரலாற்று ரீதியாக, கிறிஸ்தவர்கள் எப்போதும் அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று அவர் கூறுகிறார். கடந்த 2020 தேர்தலில் நியாயமாக டிரம்ப் தான் வெற்றியாளர் என்றும், 2021 ஜனவரியில் தலைநகர் மீதான தாக்குதலில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 'அரசியல் கைதிகள்' என்றும் பிளேயர் நம்புகிறார். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி ஓக்லஹோமாவில் நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக வருவார் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. பைபிள் பெல்ட் மாகாணங்களில் உள்ள கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் அரசியல் தலைவர்கள் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் நம்பிக்கைகளைப் பரப்புவதாகும். இதனை அவர்கள் 'தெய்வீக பணி' என்கின்றனர். டிரம்ப் மற்றும் கருக்கலைப்பு பிரச்னை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தன் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தார், அத்தகைய நீதிபதிகளை நியமித்தார் டிரம்பின் ஆதரவாளர்கள் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வரலாற்று நியமனங்கள் மற்றும் அவரது பதவிக்காலத்தில் பிற முடிவுகளுக்காக அவரைப் பாராட்டினர். இந்த நியமனம் பல ஆண்டுகளாக நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பில் கன்சர்வேடிவ் பெரும்பான்மையை உறுதி செய்தது. அந்த கன்சர்வேடிவ் பெரும்பான்மை காரணமாகவே, 2022 இல் உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திய தீர்ப்பை ரத்து செய்தது. உச்சநீதிமன்றம் அந்த முடிவை மாகாணங்களின் கைகளில் விட்டு விட்டது. ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் போன்ற பைபிள் பெல்ட் மாகாணங்கள் கருக்கலைப்புக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளன. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அங்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும். இருப்பினும், அதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இத்தேர்தலில் `கருக்கலைப்பு’ பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பைபிள் பெல்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த குடியரசுக் கட்சியின் கன்சர்வேடிவ் பிரிவு, கருக்கலைப்புக்கு முழுமையான தடையைக் கொண்டுவர விரும்புகிறது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சாத்தியமாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முன்னாள் அதிபர் டிரம்புடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், டிரம்ப் தனது நிர்வாகத்தின் போது முக்கிய கன்சர்வேடிவ் புராட்டஸ்டண்ட் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் கொடுத்தார். ஏராளமான கிறிஸ்தவ மத குருமார்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார். வெள்ளை மாளிகையில் போதகர்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2020ம் ஆண்டு தங்கள் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரி டிரம்ப் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைகளில் பைபிளுடன் தெருக்களில் இறங்கினர் டிரம்ப் பதவிக்காலத்தில், 'ஃபெயித் அண்ட் ஆப்பர்சூனிட்டி இனிஷியேட்டிவ்' (Faith and Opportunity Initiative) என்ற புதிய அரசாங்க அலுவலகத்தை உருவாக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். ஆவணத்தில் கையொப்பமிடும் போது அவர், "நம்பிக்கை என்பது அரசாங்கத்தை விட சக்தி வாய்ந்தது, கடவுளை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை" என்றார். ஓக்லஹோமா தொழிலதிபர் க்ளே கிளார்க் நிறுவிய புதிய தீவிர வலதுசாரி 'ரீவேகன் அமெரிக்கா டூர்' (ReAwaken America Tour movement) முன்னெடுப்பில் பலர் சேர்ந்தனர். இன்று இந்த இயக்கத்தில் போதகர்கள், குடியேற்ற எதிர்ப்பு, பால்புதுமையினர் (LGBTQ+) எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளனர். டிரம்ப் அவர்களை வழிநடத்துவதாக உணரும் பலர் இதில் கலந்து கொள்கின்றனர். இடதுசாரிகளுக்கு எதிராக ஆன்மீகப் போரை நடத்தும் கடவுளின் வீரர்கள் என்று இந்த இயக்கத்தினர் தங்களை சொல்கின்றனர். இந்த இயக்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை ‘பிராஜக்ட் - 25’ இல் சேர்த்துள்ளதாக கருதப்படுகிறது. அமெரிக்க பெடரல் அரசையும், அமெரிக்கர்களின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களையும் சீர்திருத்த வேண்டும் என்று கூறும் டிரம்பின் முன்னாள் ஆலோசகர்களின் சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளை உள்ளடக்கியதே பிராஜக்ட்-25 ஆகும். டிரம்ப் இந்தத் திட்டத்தில் இருந்து விலகியிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வெள்ளை மாளிகையில் கால் பதித்தால், இந்த முயற்சிக்குப் பின்னால் உள்ள செல்வாக்குமிக்க மதக் குழுக்கள் அந்த செயல்திட்டத்தை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c238877vrlyo
-
அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது
சனல் 4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படுபவர் யார்? விசாரணையை கோருகின்றார் உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சனல்4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார். சனல் 4இன் வீடியோ குறித்து விசாரணை செய்த விசேட குழுவின் அறிக்கையை இன்று செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். முன்னைய அரசாங்கம் நியமித்த ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் ஐ இமாம் குழுவின் அறிக்கையை உதயகம்மன்பில வெளியிட்டுள்ளார். உதயகம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது, அந்த வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுக்கின்றேன். சனல் 4இன் வீடியோவில் புலனாய்வு அதிகாரிகளையும் இராணுவத்தினரையும் குற்றம்சாட்டும் நபர் தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி என்ற தோற்றத்தை உருவாக்குகின்றார், அந்த நபர் தற்போது அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றார் - அரசாங்கம் தேசத்துரோகத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/197311
-
5 வயது பேரனின் கேள்வி
அவருக்கு ஏன் அந்த கேள்வி வந்தது என கேளுங்க ஐயா? இந்தக் கேள்வி எமது புலம்பெயர் சந்ததிகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம்!
-
அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியதாக 'செனல் 4' சுட்டிக்காட்டியிருந்தது. அரசியல்வாதிகளின் கடமை 'செனல் 4' என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த ஜக்கிய இராச்சியத்தின் ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் என்பதோடு அது இதுவரை காலமும் இலங்கைக்கு எதிரான அணுகுமுறைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இராணுவம் தவிர கோட்டாபய இராஜபக்ச மீதும் செனல் 4 பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவை இப்போது நமக்கு தேவையில்லை. கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் முன்வைத்தமைக்காக அவர் என்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் அமைச்சரவையிலிருந்து துரத்தியதோடு அவர் எழுதிய புத்தகத்திலும் எங்களை சாடியிருந்தார். ஆகவே, அவரை காப்பாற்ற நாம் முன்வர மாட்டோம். எனினும், நாட்டினுடைய உளவுத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவது அந்நாட்டினுடைய அரசியல்வாதிகளின் கடமையாகும். பொய்யான குற்றச்சாட்டு 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் ஆகியோர் புத்தளத்தில் உள்ள சஹ்ரானின் வீட்டில் வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டதாக அஸாத் மௌலானா எனப்படுபவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலேயே இந்த வீடு கட்டப்பட்டதாக தெரியவந்தது. எனவே, அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என இதிலிருந்து தெரிய வருகின்றது” எனக் கூறியுள்ளார். https://tamilwin.com/article/udaya-gammanpila-on-channel-4-easter-attack-video-1730095618#google_vignette
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
'திராவிடம், தமிழ் தேசியம், ஆட்சியில் பங்கு' - விஜய் பேச்சு பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,TVK 2 மணி நேரங்களுக்கு முன்னர் “கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு”, “திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். அவருடைய கருத்துகள் குறித்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், ““கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார். மேலும், “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார். யாரையும் தாக்கி அரசியல் செய்யப் போவதில்லை என்றும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார். “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர். விஜயின் இத்தகைய கருத்துகளுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். அவர்கள் என்ன கூறியுள்ளனர்? தமிழ்நாடு அமைச்சர் எஸ். ரகுபதி கூறியது என்ன? தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “திராவிட மாடலின் கொள்கைகளை தமிழக மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று விஜய் பேசியதில் இருந்து தெரிகிறது. அது நகல்தான். தமிழக மக்களின் இதயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கென தனி இடம் நிச்சயம் உண்டு. உழைப்பின் மற்றொரு வடிவமாக துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கிறார். அவருக்கும் மக்கள் மனதில் இடமுண்டு. இரவு, பகல் பாராமல் அரசியலில் உழைக்க வேண்டும், அது போகப்போக விஜய்க்கு தெரியும்” என்றார். பட மூலாதாரம்,REGUPATHYMLA/X படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்கிறார் அமைச்சர் எஸ். ரகுபதி மேலும் தமிழக வெற்றிக் கழகம், “பாஜகவின் சி டீம்” என்றும் அவர் கூறினார். “தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ஆளுநரை எதிர்த்துப் பேசினால் தான் அரசியலில் எடுபடும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது” என்றார் அவர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விஜயின் கருத்து குறித்துப் பேசிய அவர், “ஆட்சிக்கு வரட்டும் பார்க்கலாம்” என்றார். அதிமுக குறித்து விஜய் பேசாதது குறித்து தெரிவித்த அவர், “அதிமுக தமிழகத்தில் எடுபடாது என்பது தெரிந்திருக்கிறது. அங்குள்ளவர்களை இழுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசாமல் இருந்திருக்கிறார்” என கூறினார். திமுக ஆட்சியில் எந்த தவறுக்கும்இ டம் கொடுக்கவில்லை என்றும் பெரியார், அண்ணா, திமுக குறித்துப் பேசாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் ரகுபதி கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்து விஜயின் கட்சி மாநாட்டால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக போராட்டக் களத்தின் மறுவடிவமாகவே தவெகவை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முதல் நிலையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். எங்கள் போராட்டக் களத்தின் மறு வடிவமாகத்தான் தவெக மாநாட்டை பார்க்கிறோம். எங்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கின்றன. எங்களுடைய எதிரிகள் ஒன்றாக இருக்கிறார்கள். மக்கள் நல சிந்தனை ஒன்றாக இருக்கிறது” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொன்னார்? “புதிய கட்சி தொடங்கியதற்காக விஜய்க்கு வாழ்த்துகள். உதயாவுக்கு ‘(உதயநிதி) எதிராக இக்கட்சி உதயமாகியிருக்கிறது. நல்ல முறையான தொண்டர்கள், எந்த வரம்பு மீறலும் இல்லை. தலைவர்களுக்கு மரியாதை, தாய், தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியிருப்பது ஆரோக்கியமானது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கருத்துகளை வரவேற்கிறேன். அம்பேத்கரை வரவேற்றதில் மகிழ்ச்சி” என்றார். “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி” என விஜய் குறிப்பிட்டது குறித்து பேசிய தமிழிசை, “பாஜகவை கொள்கை எதிரி என விஜய் சொல்வதாக பிறர் கூறுகின்றனர் பிரிவினைவாதத்தை நாங்கள் பேசவில்லை. வளர்ச்சித் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவர் சொன்ன பலவற்றை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. இதை நான் அவரிடம் எடுத்துச் சொல்வேன். நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல” என்றார். படக்குறிப்பு, அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான் என கூறுகிறார், தமிழிசை மேலும், பாஜக மீது தான் முன்வைக்கும் விமர்சனங்கள் உண்மையா இல்லையா என்பதில் விஜய்க்கு தயக்கம் இருக்கலாம் என்றும் தமிழிசை தெரிவித்தார். “அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருப்பதாக நினைக்கிறேன். இதே வீரியத்துடன் திமுக எதிர்ப்பில் விஜய் இருக்க வேண்டும்” என்றார். ஆளுநர் பதவியை விஜய் எதிர்ப்பது, இருமொழி கொள்கை ஆகியவை குறித்த விஜயின் கருத்துகளை எதிர்ப்பதாக தமிழிசை கூறினார். “ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று கூறுவது ஆரோக்கியமானது. தங்களுக்கு மாற்றே இல்லை என திமுக சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாற்றத்தைக் கொடுப்பேன் என வந்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறியது வரவேற்புக்குரியது” என்று அவர் கூறினார். விஜய் பற்றி சீமான் கூறியது என்ன? திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். “இக்கருத்து தெளிவாக இல்லை. குழப்பமான மனநிலை தான் இருக்கிறது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. அது இரண்டும் கண்களாக இருக்க முடியாது, கொடிய புண்ணாகத்தான் இருக்கும். எல்லோருக்குமான அரசியல் தமிழ் தேசிய அரசியல். நான் பேசுவது பாசிசமோ, பிரிவினைவாதமோ இல்லை. நாங்கள் பேசுவது தேவையான அரசியல்” என்றார. பட மூலாதாரம்,SEEMAN படக்குறிப்பு, “திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது" என்கிறார் சீமான் மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரே தராசில் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். “திராவிடத்தை ஏற்றுக்கொண்டு திமுகவை எதிர்க்கிறோம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. எங்களின் ஒரே அரசியல் எதிரி திமுக” என்று சீமான் கூறினார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் கருத்து குறித்துப் பேசிய சீமான், “தனக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என நிரூபித்தால்தான் கூட்டணிக்கு வருவார்கள். 8.2 விழுக்காடு வாக்கு வங்கி வைத்திருக்கும் நானே கூட்டணிக்கு அழைக்கவில்லை. தன் வலிமையை காட்டிய பிறகு அழைப்பதுதான் முதிர்ச்சி” என்றார். கொள்கையில் ஒத்த கருத்து இல்லாமல் கூட்டணியில் இணைய முடியாது என்று அவர் கூறினார். காங்கிரஸ் எம்.பி. கருத்து காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், "சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது" என ஒற்றை வரியில் பதிவிட்டுள்ளார். விஜய் பேச்சு பற்றி விசிக நிர்வாகி கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் விஜய். அவருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, அதிகாரத்தில் அனைவருக்கும் சம பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை விஜய் உணர்ந்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல் என்றும் தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy11ywgqe2o
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீட்டில் இலக்கத்தகடு அற்ற வாகனம் மீட்பு - எனக்கு எதுவும் தெரியாது என்கின்றார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மிரிஹானவில் இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை நிராகரித்துள்ளார். சமீபத்தில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட நபர் எனக்கு தெரியாமல் அந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எனக்கு வாகனத்தின் உரிமையாளரை தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லொகான் ரத்வத்தையின் மனைவியின் இல்லத்தில் சனிக்கிழமை பதிவு செய்யப்படடாத வாகனமொன்றை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வாகனம் குறித்து விசாரணை செய்தவேளையே அது லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீடு என்பது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/197310
-
தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண் - என்ன ஆனார்?
பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி பதவி, பிபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற போது கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். அவரை சுமார் ஏழு மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவினர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 500 கிலோ எடையுள்ள பாறையை வெளியே எடுத்த போதிலும், அப்பெண் சிக்கியிருந்த “எஸ்” வடிவிலான வளைவிலிருந்து அவரை மீட்க மேலும் பல பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. லேசான காயங்களுடன் பெண் மீட்பு “மீட்புப்பணி மருத்துவ உதவியாளராக என்னுடைய 10 ஆண்டுகால பணி வாழ்க்கையில், இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை. இப்பணி சவாலான, ஆனால் மனநிறைவு தருகிற பணியாக இருந்தது,” என நியூ சௌத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவையின் மருத்துவ உதவியாளர் பீட்டர் வாட்ஸ் தெரிவித்தார். அச்சேவையின் சமூக ஊடக பக்கங்களில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பெண் தலைகீழாக இருந்துள்ளார். அவரை மீட்பதற்கு அவரின் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆம்புலன்ஸ் சேவை பகிர்ந்துள்ள புகைப்படங்கள், அப்பெண் தலைகீழாக பாறைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்ததையும், பாறைகளுக்கு நடுவே பெரிய இடைவெளியை உண்டாக்கி, அவரை மீட்க அவசர சேவை குழுவினர் மேற்கொண்ட சிக்கலான முயற்சிகளையும் காட்டுகின்றன. பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, பாறைகளை நகர்த்த இழுவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது அப்பெண் ஒரு “குதிரைப்படை வீரர்” (trooper) என, ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகத்திற்கு வாட்ஸ் அளித்த பேட்டியில் விவரித்துள்ளார். “அங்கு எப்படி அந்த பெண் சென்றார், அவரை எப்படி மீட்கப் போகிறோம் என்பதுதான் எங்கள் எல்லோருடைய கேள்வியுமாக இருந்தது?” என்று அவர் கூறியுள்ளார். நம்ப முடியாத வகையில், அப்பெண் லேசான கீறல்கள் மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, அவசர குழுவினர் ஒன்றிணைந்து பெண்ணை மீட்க வேண்டியிருந்தது அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அவரது செல்போனை மீட்க முடியவில்லை. “என்னை காப்பாற்றிய குழுவினருக்கு நன்றி, அவர்கள் உண்மையிலேயே உயிர் காப்பாளர்கள்,” என அப்பெண் இணையம் வாயிலாக தெரிவித்துள்ளார். “ஆனால், என்னுடைய செல்போனை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது.” - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89vxw1ng3do
-
தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்; சிறீதரன்
“ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி – செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத் தேவை எழுந்துள்ளது. உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக் கடமை எமக்கு தரப்பட்டுள்ளதை உணர்ந்து, கொள்கை ரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும் உழைப்பேன்.” – என்றார். https://thinakkural.lk/article/311240
-
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டோம்; சஜித் வெற்றி பெறுவதை ரணில் விரும்பவில்லை - எஸ்.எம்.மரிக்கார்.
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்த 20 இலட்ச ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். தெஹிவளை பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை. திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டோம். நடுத்தர மக்களின் நலன் பற்றி பேசும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக கூடாது என்ற நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார். ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்து விட்டார். ராஜபக்ஷர்கள் உகண்டாவில் மறைத்து வைத்துள்ள நிதியை இலங்கைக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். உகண்டா விவகாரம் தேர்தல் மேடை பிரச்சாரம் மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதாகவும், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்கு விதித்துள்ள வெற் வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆகவே ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 20 இலட்சம் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளில் பதவி துறந்தார்.அரசியல் அனுபவமில்லாத கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற கூடாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல்வாதிகளை தண்டிப்பதாக குறிப்பிடுகிறார். இந்த கொள்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/197283
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமராட்சி, அச்சுவேலி, பலாலி பகுதி மக்கள் இரண்டு கிலோமீற்றர் பயணத்தில் சென்றடைய வேண்டிய விமான நிலையம் மற்றும் சில நிமிடத்தில் அடைய வேண்டிய யாழ். நகரத்தை 34 ஆண்டுகளாகப் பல கிலோமீற்றர் பயணித்தே தமது தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர். இதனைத் தடுக்க அச்சுவேலி – வசாவிளான் வீதியில் வெறும் 400 மீற்றர் பிரதேசத்தைத் திறப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும். கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை ஒட்டிய வீதி பாதுகாப்புக் காரணத்துக்காக 15 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதனைத் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, எமது மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு 34 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீதியையும் திறக்க உடன் உத்தரவிட வேண்டும்.” – என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311243
-
மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்) எழுதியவர், ரூஹான் அகமது பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பற்றி பேசி வருகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு மத்தியில், உலகின் மூன்று பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மோதல்களுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்? கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. காஸா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இந்த பதற்றம் இரான் வரை பரவிவிட்டது. இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், இஸ்ரேல் தனது எதிரிகளான ஹெஸ்பொலா, ஹமாஸ் மற்றும் இரான் உள்ளிட்டவற்றுக்கு எதிராக வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதைக் காண முடிந்தது. லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அமைப்பின் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவரைத் தவிர, ஹெஸ்பொலாவின் பல மூத்த தலைவர்களும் இதற்கு முன்னர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் இரான் தலைநகர் டெஹ்ரானில் இதேபோன்ற ஒரு தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் காஸாவில் மட்டுமல்ல, லெபனானிலும் போரை நிறுத்த முயற்சி செய்கின்றன. ஆனால் இந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. காஸா மற்றும் லெபனானில் நடைபெறும் போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுமைக்கும் பரவக்கூடும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் அஞ்சுகின்றன. கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `போர் சூழல் யாருக்குமே நல்லது கிடையாது’ என்று கூறினார். "இந்தப் பிரச்னைக்கு ராஜதந்திர தீர்வை எட்டுவது சாத்தியம் தான். நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி ராஜதந்திர தீர்வு எட்டுவது தான் " என்று அவர் கூறினார். ஆனால் அனைத்து ஆலோசனைகளையும் மீறி, காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் இரானைத் தாக்குவதாக அச்சுறுத்தியது. வெற்றி பெறும் நோக்கத்தில் முன்னேறும் இஸ்ரேல் ராணுவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சின் விளைவாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024 இல் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மறுபுறம், கடந்த ஆண்டு காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தரைப்படை நடவடிக்கைகளின் போது பல இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தொடர்ந்து வான் வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ஹெஸ்பொலா 8000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் வீசியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகிறார். காஸா போர் தொடங்கியதில் இருந்து ஏமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இரானின் புரட்சிகர காவலர் படையின் மூத்த தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேல்தான் இருந்தது என்பது பலர் நம்பினர். மத்திய கிழக்கில் தற்காப்புக்காக இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையின் போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் `அமைதி’ தீர்வை எட்ட தயாராக உள்ளது என்று கூறினார். "ஆனால் நம் அழிவை விரும்பும் காட்டுமிராண்டித்தனமான எதிரிகளை நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அவர்களிடமிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறினார். இரானை கடுமையாக விமர்சித்த அவர், ஏழு வெவ்வேறு முனைகளில் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்றார். அவர் தனது உரையின் முடிவில், இஸ்ரேல் இந்த போரில் வெற்றி பெறும், ஏனெனில் இந்த போரில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். இஸ்ரேல் பிரதமர் உரை பட மூலாதாரம்,GETTY IMAGES லெபனான் போர் சூடுபிடிப்பதற்கு முன்பு, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலை நிறுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. சமீப காலமாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கைகளைப் பார்க்கும் போது, மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது. கடந்த மாதம் 'எக்ஸ்' தளத்தில் இரானிய மக்களுக்கு மூன்று நிமிட வீடியோ செய்தி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். "மத்திய கிழக்கில் இஸ்ரேல் அடைய முடியாத இடம் என்று எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் மக்களையும் நாட்டையும் காக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம்" என்றார். அவர் அந்த செய்தியில், ஒவ்வொரு கணமும் இரானியஅரசாங்கம் 'மரியாதைக்குரிய இரானிய மக்களை' அழிவின் பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்று கூறினார். "இறுதியாக இரான் சுதந்திரம் அடையும்" போது, எல்லாச் சூழலும் மாறி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று நெதன்யாகு கூறினார். இஸ்ரேலிய பிரதமர் மேலும் பேசுகையில், “மதவெறி பிடித்த முல்லாக்கள் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் ஒடுக்க அனுமதிக்காதீர்கள். இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை இரானிய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான மற்றும் அமைதியான எதிர்காலத்தை ஒன்றாகக் காண்போம்." என்றார். இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் இந்த தீவிர மோதல்களை நிறுத்த, உலகின் பெரும் வல்லரசுகளால் ஏன் முடியவில்லை? இந்த மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளை சமாதானப்படுத்தி போரை நிறுத்த முடியாதது ஏன்? அமெரிக்காவைத் தவிர, ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலக வல்லரசுகளால் கூட இதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான ஒத்துழையாமை, அமெரிக்காவின் உள் அரசியல் போன்ற சில காரணங்களால் இஸ்ரேல்-இரான் இடையே சமாதான உடன்படிக்கை எட்ட முடியவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா, சீனா, ரஷ்யாவால் இதைத் தடுக்க முடியாதது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 8.7 பில்லியன் டாலர் உதவிகளைப் பெற்றுள்ளது ஒருபுறம், மத்திய கிழக்கில் ஏற்படும் மோதல்களை தடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மறுபுறம், நட்பு நாடான, இஸ்ரேலுக்கு ராணுவ வலிமையை அதிகரிக்க அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை வழங்குகிறது. கடந்த மாதம், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர அமெரிக்காவிடம் இருந்து 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவிகளைப் பெற்றதாகக் கூறியது. சீன சிந்தனைக் குழுவான `Taihe’ அமைப்பின் மூத்த அதிகாரி இன்னார் டான்சின் கூறுகையில், "ஒருபுறம், அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறது, ஆனால் மறுபுறம் அது ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவை வழங்கி பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குகிறது" என்றார். அமெரிக்கா தற்போது போரை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி பேசுகிறது. ஆனால் கடந்த காலங்களில் அது ஐக்கிய நாடுகள் சபையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை தடுத்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதிநிதி மார்கரெட் மெக்லியோட் பிபிசியிடம் கூறுகையில், "ஹமாஸ் பயங்கரவாதத்தை புறக்கணித்த தீர்மானங்களையும், இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமைகளை புறக்கணித்த முடிவுகளையும் மட்டுமே நாங்கள் எதிர்த்தோம்." என்றார். மறுபுறம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற பெரிய வல்லரசுகள் மோதல்களை தடுக்க அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகின்றன. அவை மத்தியக் கிழக்கில் பதற்றத்தை குறைக்க உதவாது. ஆனால் அந்த நாடுகள் போர் சூழலை நிறுத்த எந்த நடைமுறை நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. சீனாவின் அணுகுமுறை போரை நிறுத்த உதவுமா? சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் முயற்சியால், இரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது. இதுவே சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு சிறந்த உதாரணம். லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல மூத்த ஹெஸ்பொலா தலைவர்கள் கொல்லப்பட்ட போது, சீனா லெபனானின் சுயாட்சி மற்றும் பாதுகாப்பின் மீது நிகழ்த்தப்படும் 'அத்துமீறலை' எதிர்ப்பதாகவும், பொதுமக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும் மட்டுமே கூறியது. காஸா மோதல் காரணமாக லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து சீனா கவலைப்படுவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. "சீனா இந்த மோதலுக்கு காரணமான அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல் நிலைமையை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது." என்றார். ரஷ்யாவின் பங்கு என்ன? மத்திய கிழக்கில் ரஷ்யா இரானின் முக்கிய நட்பு நாடாக உள்ளது. மத்திய கிழக்கின் நிலைமைக்காக ரஷ்ய கண்டனம் தெரிவித்த போதிலும், இதுவரை இந்த மோதலைத் தீர்ப்பதில் எந்த பயனுள்ள பங்கையும் அது வகிக்கவில்லை. கடந்த மாதம் கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டதை ரஷ்யா கண்டிப்பதாக கூறியது. இது மத்திய கிழக்கில் ஒரு பெரியளவிலானப் போர் மூள்வதற்கான அச்சத்தை அதிகரித்துள்ளது என்றும் அது கூறியது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதலை மேலும் அதிகரிக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா கண்டிக்கிறது என்றார். கடந்த 2022 இல் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்தத் தடைகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கணிசமாக மோசமடைந்துள்ளன என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ஸ்டிம்சன் மைய அதிகாரி பார்பரா ஸ்லேவன் கூறுகிறார். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் பிரச்னை இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படியிருக்கையில், மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சீனா ஏன் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து இனார் கூறுகையில், "அமெரிக்காவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ ஆணையிடும் நிலையில் சீனா இல்லை. சீனா எப்போதுமே போரை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவுகளை ஆதரிக்கிறது. 'இருநாட்டு தீர்வு' (இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பிரச்னைக்கு) வழிவகுக்கும் பேச்சுவார்த்தைகளை ஆதரித்தது." என்றார். "பல தசாப்தங்களாக இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, ஆனால் அதை ஒருபோதும் இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை, அதேநேரத்தில் மறுக்கவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ’’ என்றும் அவர் கூறினார். இஸ்ரேலில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைய என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஸ்டிம்சன் மையத்தின் அதிகாரி பார்பரா ஸ்லேவன் கூறுகையில், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கு உண்மையான அழுத்தத்தைக் கொடுக்க ஜோ பைடன் தயக்கம் காட்டுவதை நாம் அனைவரும் அறிவோம்." என்றார். பார்பரா மேலும் கூறுகையில், "அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. இந்த சமயத்தில் பைடன் அல்லது கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான முடிவுகளை முன்மொழிவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது டிரம்ப் மீண்டும் அதிபராக வரும் சாத்தியங்களை அதிகரிக்கும்” என்றார். "கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு பல நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.” என்ற பார்பரா , "கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், காஸா மற்றும் லெபனானில் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கும். " என்று கூறினார். சர்வதேசத் தலைவர்கள் இரானையும் அதன் நட்பு நாடுகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவையும் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர். அப்படி பதிலடி கொடுக்கும் பட்சத்தில் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும். இரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒரு கூட்டு அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு இரானை வலியுறுத்தியது, ஆனால் இரான் இந்த கோரிக்கையை நிராகரித்தது. லெபனானில் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர், இரான் தனது ராணுவத்தை லெபனான் அல்லது காஸாவிற்கு அனுப்பாது என்று இரான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. லெபனான் மற்றும் பாலத்தீனத்தில் இருக்கும் படைகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனும் வலிமையும் கொண்டிருப்பதால், இரானிய பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நசீர் கனானி தெரிவித்தார். மறுபுறம், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்க நிர்வாகமும் நம்புகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதிநிதி மார்கரெட் மெக்லியோட், "போர் நிறுத்தம் ஏற்படும் வரை, அமெரிக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று நான் கூறமாட்டேன்." என்று கூறியுள்ளார். "இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு ராஜதந்திரம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறினார். இஸ்ரேல் மற்றும் லெபனானில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக அவர் விவரித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கிற்கு 11 பயணங்களை மேற்கொண்டுள்ளார், ஏனெனில் இந்த பிரச்னையை ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78ddvgyp1xo
-
வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது ; பிமல் ரத்நாயக்க !
வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தேசிய மக்கள் சக்திக்கு சிங்களக் கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இதேபோல் எங்கள் மேல் மற்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியானது சர்வதேச விசாரணைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எங்கள் மேல் விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். அமைச்சரவைத் தீர்மானங்களை முழுமையாக வாசித்துவிட்டு எங்கள் மீது விமர்சனங்களை முன்வையுங்கள். எங்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் கிடையாது. இதனால் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களை இனவாத ரீதியாகச் சூடாக்கி அதில் குளிர்காய்கின்ற வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்துவருகின்றன. எங்கள் மீது இனவாத சாயத்தைப் பூசுகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளார்கள். வெளிநாட்டுத் தலையீட்டின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்துவிட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. உதாரணமாக பலஸ்தீன பிரச்சினையைக் குறிப்பிடலாம். அங்கு இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. இப்படியான நிலைமை காணப்படுகையில் சர்வதேச நீதிமன்றத்திடம் சென்று நீதியைப் பெறுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கு ஒப்பானது. மேலும், புலம்பெயர் தமிழர்களிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். ஒரு சில அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தாங்கள் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எனக் கூறி அரசியல் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்கின்றார்கள். குறித்த கட்சிகளுக்கு எவ்வாறு நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது என்பது சந்தேகத்துக்கிடமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டு வந்து 70 வருடங்களுக்கு மேலான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கீழ்த்தரமான அரசியலை சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் செய்கின்றன. இவை அருவருக்கத்தக்க செயற்பாடுகளாகும். எனவே, புலம்பெயர் தமிழர்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றோம் எங்களுடைய பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/197292
-
முல்லைத்தீவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பரிதாப மரணம் !
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டு குளப்பகுதியில் நேற்றையதினம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து குறித்த இளைஞனும் யானையை விரட்டியுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது இந்த இளைஞனை யானை தாக்கியுள்ளது. அதனையடுத்து ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞன் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த குறித்த இளைஞன் ஒட்டுசுட்டான் முத்துவிநாயகபுரம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடையதுடையவர் ஆவார். மரணமடைந்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியாசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். https://www.virakesari.lk/article/197295
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் - அனுர
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பத்தேகமவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197299
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைச்சரவை அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸின் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் (BRICS) என்பது உலகின் முன்னணியாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த குழுவாகும். 16ஆவது உச்சி மாநாடு பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, குறித்த நாடுகளின் பெயர்களது முதல் எழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகும். இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக அடுத்த ஆண்டு பிரேசில் பொறுப்பேற்கும். பிரிக்ஸின் 16ஆவது உச்சி மாநாடு, ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ரஸ்யாவில் நடைபெற்றது. https://tamilwin.com/article/brics-rejected-sri-lanka-s-request-1730023922
-
அறுகம் குடா விவகாரத்தில் அநுரவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!
அண்மையில் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. இந்நிலையில், அறுகம் குடா உள்ளிட்ட பல உல்லாச பயணிகளுக்கான விடுதிகளுக்கும் கூட தற்போது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமானது பெருமளவு உல்லாச பயணிகளின் வருகையிலேயே தங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் டொலரின் வருமானம் பாதிப்புக்குள்ளாகுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறிருக்கையில், அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளுக்கு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இதன் விளைவுகளை கருத்திற் கொண்டு அதெனை மறைத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் முக்கிய தகவல்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு நிகழ்ச்சி, https://tamilwin.com/article/arugam-bay-issue-udaruppu-lankasri-1730045113
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களும் பாகிஸ்தான் 344 ஓட்டங்களும் எடுத்தன. 77 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 24 ஓடங்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 2, டென் டக்கெட் 12, ஆலி போப் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நோமன் அலி, சஜித் கான் ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 33, ஹாரி புரூக் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேமி ஸ்மித் 3, கஸ் அட்கின்சன் 10, ரேஹான் அகமது 7, ஜேக் லீகச் 10 ஓட்டங்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 36 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைம் அயூப் 8 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷான் மசூத் 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்துல்லா ஷபிக் 5ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் விளாசிய சவுத் ஷகீல் ஆட்ட நாயகனாக தேர்வானார். பந்து வீச்சில் 19 விக்கெட்களையும், பேட்டிங்கில் 72 ஓட்டங்களுடன் சேர்த்த சஜித் கான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. மசூத் தலைமையில் முதல் வெற்றி பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. அவரது தலைமையில் பாகிஸ்தான் வென்றுள்ள முதல் தொடர் இதுவாகும். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கிலும், வங்கதேசத்திடம் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. தற்போது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. https://thinakkural.lk/article/311226
-
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இரு நாட்டு உறவுகள் இனி மேம்படுமா? ஓர் அலசல்
புதிதாய் மலர்ந்துள்ள சீன - இந்திய உறவு லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர். பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன. அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும் கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள். இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது. ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும் முறுகல் நிலையிலேயே இருந்தன. இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன. கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும் இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன் நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும் தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது. இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர். அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார். இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார். அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும் தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர். அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட நாடுகளில் சீனா உள்ளது. சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில் இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்து சமுத்திரத்திலும் மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது. https://www.virakesari.lk/article/197258
-
சூடானில் நூற்றுக்கும் அதிகமானோரை கொன்ற துணை இராணுவப்படைகள்
சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது. 2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது. https://thinakkural.lk/article/311213
-
ஜாதகம் பார்க்க வந்த பெண் வீட்டிலிருந்தவர்களை மயக்கி தாலிக்கொடி அபகரிப்பு : மன்னாரில் சம்பவம்!
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்ளனர்.இதன் போது தான் ஜாதகம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு ஜாதகம் பார்த்துள்ளார். இதன் போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில் குறித்த இருவரும் சுய நினைவை இழந்த நிலையில் குறித்த பெண் அவர்களில் ஒருவர் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார். மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில் வீதியால் சென்ற சி்.சி.ரி.வி. காணொளி கட்சியும் வெளியாகி உள்ளது. https://www.virakesari.lk/article/197264
-
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
ஜனாதிபதியுடனான எமது சந்திப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம் என்கிறார் டக்ளஸ் ஜனாதிபதி அனுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்தவர் காத்தார் சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தார். அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம். இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது. இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன். ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர், அவரது அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும். நாம் வடக்குக்கிழக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சனையை பிரதானமாக முன் வைத்துள்ளோம். இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். சிலவேளை இந்தசந்தி்ப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம். நாங்கள் இருதரப்புமே ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இருதரப்பிற்கும் உள்ளது. அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்கமுடியும். இதேவேளை எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும் எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அவர்கள் பாராளுமன்றிலும் பெரும்பாண்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஜனாதிபதித்தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம்.என்றார். https://thinakkural.lk/article/311229