ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
Everything posted by ஏராளன்
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
டக்வேர்த் லூயிஸ் முறைமையில் மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட்களால் வென்றது இலங்கை; மதுஷ்க, அசலன்க ODI வெற்றியை சுலபமாக்கினர் (நெவில் அன்தனி) கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 5 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றிகொண்டது. அறிமுக வீரர் நிஷான் மதுஷ்க, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 137 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 38.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. ஷேர்ஃபேன் ரதபர்ட் 74 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்கள் இருவரைவிட கியேசி கார்ட்டி 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பிற்பகல் 5.00 மணிக்கு தடைப்பட்ட ஆட்டம் 3 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் இரவு 8.25 மணிக்கு தொடர்ந்தபோது இலங்கைக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இல க்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 31.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கை துடுப்பெடுத்தாடியபோது முன்வரிசை வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (5), குசல் மெண்டிஸ் (13), சதீர சமரவிக்ரம (18) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (45 - 3 விக்.) அறிமுக வீரரரும் ஆரம்ப வீரருமான நிஷான் மதுஷ்கவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 109 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபமாக்கினர். நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 69 ஓட்டங்களையும் சரித் அசலன்க 71 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 77 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே (18 ஆ.இ.), கமிந்து மெண்டிஸ் (30 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/196738
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன் ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதற்கிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்தது. இது குறித்து ரண்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா்” என்று தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310917
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196760 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21 திகதி வரை ரவி செனவிரத்னவுக்கு 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களின் பெயர்கள் இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் இவ்விரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. https://www.virakesari.lk/article/196758
-
இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது; ரவிகரன் தெரிவிப்பு
இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியை செய்ய முடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். எமது மதத்தை அழித்து பௌத்த மதத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல். பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம். எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராட வேண்டிய காலம் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தீர்வு தான் கிடைக்கவில்லை. மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒரு வருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று. எனவே வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சர்வதேசம் பாராமுகமாக இருக்க கூடாது. இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 வது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம். எமது நிலத்தை முழுவதுமாக பறித்து விட்டால் நாங்கள் என்ன எங்கயும் ஓடுவதா?. இலங்கை தமிழன் ஆண்ட பூமி எனவே எமக்கான தீர்வை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் தரத்தான் வேண்டும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே இதற்கு எதிராக எமது குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்றார். https://thinakkural.lk/article/310928
-
போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நிதி மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை
போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 9 டிப்போகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை புதுப்பிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாவை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி ஏமாற்றி இந்த நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களைச் சோதனையிட்ட போது அவை இறந்த நபர்கள் பயன்படுத்தியமை அல்லது சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் பயன்படுத்தியமை என தெரியவந்துள்ளது. எனவே, இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/196749
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இருபாலாரிலும் நியூஸிலாந்துக்கு முதலாவது உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த ரி20 மகளிர் அணி; அமேலிய கேரின் சகலதுறை ஆட்டம் வெற்றிக்கு அடிகோலியது (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் பத்து நாடுகள் பங்குபற்றிய 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் நியூஸிலாந்து உலக சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது. இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 32 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. உலக சம்பியனான நியூஸிலாந்து உலகக் கிண்ணத்துடன் சுமார் 70 கோடி ரூபா பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது. இதன் மூலம் இருபாலாருக்கும் வெவ்வேறாக நடத்தப்பட்டுவரும் இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நியூஸிலாந்துக்கு முதலாவது உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த வரலாற்றுப் பெருமை அந் நாட்டின் மகளிர் அணியை சாருகிறது. அமேலியா கேரின் அற்புதமான சகலதுறை ஆட்டம் நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது. இரண்டு நாடுகளினதும் ஆடவர் அணியோ மகளிர் அணியோ எந்தவொரு இருவகை உலகக் கிண்ணத்தையும் வென்றிடாத நிலையில் இரண்டு அணிகளும் முதல் தடவையாக ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற வைராக்கியதுடன் இன்றைய இறுதிப் போட்டியை எதிர்கொண்டன. தென் ஆபிரிக்கா தொடர்ச்சியான இரண்டாவது தடவையாகவும் (2023, 2024), நியூஸிலாந்து முதல் இரண்டு (2019, 2010) அத்தியாயங்களைத் தொடரந்து மூன்றாவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் ஒன்றையொன்று எதிர்த்தாடின. துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீராங்கனை ஜோர்ஜியா ப்ளிம்மர் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் அனுபவசாலிகளான சுஸி பேட்ஸ், அமேலியா கேர் ஆகிய இருவரும் பொறுமைகலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர். சுஸி பேட்ஸ் 32 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தபோது சொஃபி டிவைன் (6) ஆட்டம் இழந்தார். ஆனால், அமேலியா கேர், ப்றூக் ஹாலிடே ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சற்று பலமான நிலையில் இட்டனர். ப்றூக் ஹாலிடே 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் அமேலியா கேர் 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மெடி க்றீன் 12 ஓட்டங்களுடனும் இசபெல்லா கேஸ் 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவி இரண்டாவது நேரடியான தடவையாக உலகக் கிண்ணத்தைத் தவறவிட்டது. அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் 41 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், தஸ்மின் ப்றிட்ஸ் 17 ஓட்டங்களுன் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்காவின் அடுத்த விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்தன. 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த தென் ஆபிரிக்கா, 9 விக்கெட்களை 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்து நியூஸிலாந்திடம் சரணடைந்தது. லோரா வுல்வார்ட் 33 ஓட்டங்களைப் பெற்றார். க்னோ ட்ரையொன் (14), ஆன்எரி டேர்க்சன் (10) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற மற்றைய இருவராவர். பந்துவீச்சில் அமேலியா கேர் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரோஸ்மேரி மாய்ர் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி மற்றும் தொ டர்நாயகி: (இறுதிப் போட்டியில் 43 ஓட்டங்கள், 24 - 3 விக்., தொடரில் 135 ஓட்டங்கள், 15 விக்கெட்கள்) அமேலியா கேர் இரண்டு அணிகளும் முதல் தடவையாக ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கின. துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. 159 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை யும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. https://www.virakesari.lk/article/196737
-
தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படினும் அரசியல் தீர்மானம்சார் அதிகாரங்கள் ஜே.வி.பி வசமே உள்ளன - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(நேர்காணல் - நா.தனுஜா) சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், பொதுத்தேர்தலின் பின்னர் நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் பின்னணியில், 'வீரகேசரி' வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு: கேள்வி - எதிர்வரும் பொதுத்தேர்தலில் எத்தனை ஆசனங்களை வென்றெடுக்கும் எதிர்பார்ப்புடன் பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறீர்கள்? பதில் - இம்முறை வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தெரிவுசெய்யப்படலாம். அதன்படி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் நாம் அவற்றில் 10 ஆசனங்களைக் குறிவைக்கிறோம். கட்சியை வளர்ப்பதும், நாங்கள் அறுதிப்பெரும்பான்மை எடுத்துவிட்டோம் என்று காண்பிப்பதும் அதற்குக் காரணம் அல்ல. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையுடன் ஸ்தம்பிதமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அந்த இடைக்கால அறிக்கையானது மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கியதாகவே அமைந்திருந்தது. தமிழிலும், சிங்களத்திலும் 'ஏக்கிய இராச்சிய' என்ற சொற்பதம் தான் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அச்சொல்லுக்கான தமிழ் சொற்பதம் 'ஒற்றையாட்சி' என்பதாகும். அதற்கு நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக ஏற்கனவே வலுவானதொரு அர்த்தம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இப்புதிய அரசியலமைப்பின் ஊடாகவும் 'ஏக்கிய இராச்சிய' என்ற 'ஒற்றையாட்சி' முறைமையே தொடரப்போகிறது. அதனைத் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் மூடிமறைக்கும் நோக்கில் 'ஒருமித்த நாடு' என்ற தமிழ் சொற்பதத்தைப் பிரயோகித்து, ஏமாற்றுவதற்கான முயற்சியொன்றைத் தமிழரசுக்கட்சி முன்னெடுத்திருந்தது. எனவே இந்த நடவடிக்கையைத் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முடிவுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றையாட்சியை உள்ளடக்கிய இப்புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கவில்லை. ஆனால் அவ்வேளையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் அம்முயற்சிக்கு ஆதரவளித்தன. தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமே தேவையில்லை என்று கூறியிருக்கிறார். எனவே வரப்போகிற பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்கையில், அதனை வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்துவிட்டால், அதற்குப்பிறகு இனப்பிரச்சினையொன்று நிலவுவதாக எப்போதும் பேசமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதுவரையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பையும் தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்பதனாலேயே போர் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னரும் இனப்பிரச்சினை குறித்துப் பேசுகிறோம். ஆகவே ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு ஏதுவான புதிய அரசியலமைப்பை தமிழ் மக்களின் அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரிப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோன்று அம்முயற்சியைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கே வாக்களிக்கவேண்டும். கேள்வி - அவ்வாறெனில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஆட்சிபீடமேறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்பதாகவே, அவர்களது ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிட்டாது என்ற தீர்மானத்தை எடுத்துவிட்டீர்களா? அந்தத் தீர்மானத்தை எம்முடன் பேசுவதற்கு முன்பதாக அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்னர் ரில்வின் சில்வா 13 ஆவது திருத்தமோ, அதிகாரப்பகிர்வோ தமிழ்மக்களுக்குத் தேவையில்லை எனவும், அரசியல் கட்சிகள் மாத்திரமே அதுபற்றிப் பேசுகின்றன எனவும் கூறுகிறார். எனவே தற்போது அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கான ஒட்டுமொத்த அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன. 'அரகலய' போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்தின் வசமிருந்தது. அப்போது தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்த்தர்களான ஹரினி அமரசூரிய மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் எம்மைச் சந்தித்தனர். அப்போது அவர்களது நிலைப்பாடுகள் கணிசமானளவு முற்போக்கு அடிப்படைகளைக் கொண்டிருந்த போதிலும், அரசியல் விவகாரங்கள் அனைத்தும் மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், அதில் தம்மால் ஆதிக்கம் செலுத்தமுடியாதிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அரசியல் தீர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் நாம் பங்கேற்காமைக்குக் காரணம் அது மக்களால் ஆணை வழங்கப்படாத ஜனநாயக விரோத ஆட்சி என்பதேயாகும். அவ்வேளையில் மக்களே கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் எவ்வாறெனினும் சிங்கள தேசத்துடன் தான் பேசவேண்டும். ஆனால் அச்சிங்கள மக்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு அரசாங்கத்துடன் நாம் பேசுவதென்பது, அம்மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகவே அமையும். என்னைப் பொறுத்தமட்டில் சிங்கள மக்களுக்குத் துரோகமிழைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்துப் பேசுவது முட்டாள்த்தனமான செயற்பாடாகும். இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை இல்லை என்று நாங்கள் கூறவரவில்லை. ஆனால் காலங்காலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படைக்கோட்பாட்டை அவர்கள் கருத்திலெடுக்கவே தயாரில்லை என்ற செய்தியை அவர்களாகவே வெளிப்படுத்திவிட்டார்கள். அதன் பின்னரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோமாயின், நாமும் அவர்களது நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவே கருதப்படும். ஆகவே இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அதன் கருத்துக்களை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். வட, கிழக்கில் அவர்களை எதிர்த்துத்தான் நாம் எம்முடைய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். கேள்வி - ஆக, தென்னிலங்கை சிங்கள அரசாங்கத்துடன் பேசித்தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெறமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?க்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைக் கண்டடைவதற்கும், ஒரே நாட்டுக்குள் இரு தேசங்கள் ஒன்றாக இருப்பதற்கும் அவர்களுடன் பேசித்தான் ஆகவேண்டும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அப்பேச்சுவார்த்தை மூலம் எவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரப்போகிறீர்கள் என்பது தான் முக்கியமானது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு நாம் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியும். கடந்த காலங்களில் இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் தேவைப்பாடுகளுக்கு ஏற்றவாறு செயற்படக்கூடிய அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது, அந்நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஓரளவுக்குத் தளர்வாகப் பேசினர். பின்னர் அந்நாடுகள் வலியுறுத்தும்போது காட்டமாகப் பேசினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் விளையவில்லை. ஆகையினாலேயே இதுவரை தாம் ஆணை வழங்கிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் என அடையாளப்படுத்தப்படும் தரப்புகள் மீது தமிழ் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். கேள்வி - உங்களது கட்சி உட்பட? பதில் - எம்முடைய கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. இதுவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமே தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தான் எமக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. நாங்கள் அவ்விரண்டு ஆசனங்களை வெல்வதற்கு முன்னரும், வென்றதன் பின்னரும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதற்கு முன்னர் இனப்படுகொலை, சமஷ்டி, தமிழ்த்தேசம் போன்ற வார்த்தைகளையே உச்சரிக்காதவர்கள், இப்போது அவ்வார்த்தைகளின்றி தமிழ்மக்கள் மத்தியில் செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர். அந்த மாற்றத்துக்கு அடித்தளம் இட்டவர்கள் நாங்கள் தான். எனவே தமிழர் நலனை முன்னிறுத்திய பேரம் பேசலை முன்னெடுப்பதற்கு இம்முறை தேர்தலில் மக்கள் எமக்கு ஒரு வாய்ப்பளித்தே ஆகவேண்டும். கேள்வி - வட, கிழக்கில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களுடன் மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், அடுத்துவரும் பாராளுமன்றப் பதவிக்காலத்துக்குள் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்ற உத்தரவாதத்தை வழங்குவீர்களா? பதில் - இங்கு இரண்டு விடயங்கள் மிகமுக்கியமானவை. முதலாவது எமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நகர்வுகளை முழுமையாகத் தடுக்கவேண்டும். ஆகக்குறைந்தபட்சம், அந்நகர்வுகள் எம்முடைய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். அதற்கு அப்பால் தமிழ் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு வழங்கப்படும் பட்சத்தில், அதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம். கேள்வி - இருப்பினும் ஜனாதிபதித்தேர்தலின்போது தேசிய ரீதியில் எழுச்சியடைந்த மாற்றத்துக்கான கோஷம், வட, கிழக்கு மாகாணங்களிலும் எதிரொலிப்பதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, அவர்கள் சிங்கள தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடிய நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இம்மாற்றத்தின் எதிர்கால சவால்களை எவ்வாறு கையாளப்போகிறீர்கள்? பதில் - எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அதுவொரு திட்டமிட்ட கருத்துருவாக்கமே தவிர, உண்மையான களநிலைவரம் அதுவல்ல. குறிப்பாக நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வட, கிழக்கு மாகாணங்களில் குறைந்தளவு வாக்குகளைப்பெற்று கடைசி இடத்திலேயே இருந்தார். கேள்வி - ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு சிங்கள தேசிய கட்சியல்லவா? வட, கிழக்கு மாகாணங்களில் அக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தானே முன்னிலையில் இருந்தார்? பதில் - ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு ஒரு பாரம்பரிய தமிழ்த்தேசிய கட்சி தான் கேட்டுக்கொண்டது. அதேபோன்று தமிழ்மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் பார்க்கும் விதத்தில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அதனைத் தத்துவார்த்த ரீதியாக நியாயப்படுத்துவதில் மக்கள் விடுதலை முன்னணியின் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவும், ஜாதிக ஹெல உறுமயவுமே முக்கிய பங்காற்றினர். வட, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரிப்பதற்கு முன்நின்று செயற்பட்டார்கள். போரின் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு விடயத்திலேனும் மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்ததா? எனவே தமிழ் மக்கள் அதன் நீட்சியாகவே தேசிய மக்கள் சக்தியைப் பார்க்கிறார்கள். எனவே அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா எனும் தெரிவுகளில், தமிழர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். கேள்வி - ஆக, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்? பதில் - ஏனைய பழக்கப்பட்ட அரசியல் கலாசாரத்திலிருந்து மாறுபட்டு நாம் எம்மைக் கட்டமைத்து வெளிப்படுத்திவரும் தமிழ்மக்கள் மைய அரசியல் கலாசாரம், தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் என அடையாளப்படுத்தப்பட்ட தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய நீக்க அரசியலுக்கு எதிரான எமது நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள், நேரடியாகவும், தமிழ்மக்களின் நிதியுதவி மூலமும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்துவரும் உதவிகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் என்பன உள்ளடங்கலாக நாம் நீண்டகாலமாக தமிழ்மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே செயலாற்றிவருகிறோம். இவற்றின் அடிப்படையில் தமிழ்மக்கள் எமக்கு வாக்களிக்கவேண்டும். https://www.virakesari.lk/article/196742
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
இலங்கையில் முடிவுக்கு வந்துள்ள கடவுச்சீட்டு வரிசை இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும். இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கொள்வனவு தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310930
-
ரணில் விக்கிரமசிங்க பல சலுகைகளை கோரினார்; அவற்றை நிராகரித்துவிட்டேன் - அனுர
ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை - சாகல ரத்நாயக்க (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்க வாகனங்களில் அதிகமானவை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வாகனங்களே இருக்கின்றன. 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை. அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரே தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்கத்தின் 11 வாகனங்கள் இருப்பதாகவும் அதனை உடனடியாக கையளிக்குமாறு தெரிவித்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரிடம் கேட்டபோது, அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்கள். ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களில் அதிகமான வாகனங்களை மீள கையளித்திருக்கிறோம். இன்னும் சில வாகனங்களே இருக்கின்றன. அவை முன்னாள் ஜனாதிபதி என்றவகையில், அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களே இருக்கின்றன. அதேநேரம் ரணில் விக்ரமசிங்க 30 குடைகளை கேட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு பிரிவினர் தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது. அது பாதுகாப்பு பிரிவினர் கேட்டிருக்கிறார்களே தவிர ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை. அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர் என்றவகையில், அந்த பதவிக்குரிய கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் எனக்கு வழங்கப்பட்டன. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவை எதனையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தையும் அப்போதே திருப்பிக்கொடுத்தேன் என்றார். https://www.virakesari.lk/article/196740
-
வடக்கு ரயில்களை குறைந்த வேகத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இயக்க நடவடிக்கை
வடக்கு புகையிரத மார்க்கத்தை திறப்பதற்கு அதிகாரிகள் போர்க்கொடி நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை 22ஆம் திகதி திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். 3,000 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தை, குறைபாடுகளுடன் ரயில்வே துறை கையகப்படுத்தியதே இதற்கு காரணம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நேற்று தெரிவித்தார். இந்த பாதை நவீனமயப்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக இருந்த சமிக்ஞை அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நான்கு புகையிரத கடவைகளில் கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தலாவ, தம்புத்தேகம, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள கடவைகள் கையால் இயக்கப்படும் வாயில்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் இதுவரை பாதுகாப்பு கதவுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். உரிய தரம் இன்றி மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் பணிகளால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத சாரதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார். இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களை தாம் பொறுப்பேற்கப்போவதில்லை எனவும், அதற்கமைய பயணச்சீட்டு வழங்கப்படவோ, பொதிகள் மற்றும் பொருட்கள் பெறப்படவோ அல்லது புகையிரத திணைக்களத்திற்கு வருமானம் அறவிடப்படவோ மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310933
-
வடக்கு ரயில்களை குறைந்த வேகத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இயக்க நடவடிக்கை
யாழ் - கொழும்பு தொடருந்து மார்க்கம் தொடர்பில் வெளியான தகவல் கொழும்பில்(Colombo) இருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதி திட்டமிட்டபடி மீண்டும் திறக்கப்படாது தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொடருந்து பாதையானது நாளை(21) திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு குறித்த மார்க்கத்தினூடாக தொடருந்து சேவையை முன்னெடுக்க முடியாது என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று(20.10.2024) தெரிவித்துள்ளனர். வடக்கு தொடருந்து மார்க்கம் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாகக் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது தொடருந்து சேவை முன்னெடுக்கப்படுகிறது. இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்கக்கூடிய வகையில் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தினூடாக தொடருந்து சேவையை முன்னெடுக்க முடியாது என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://ibctamil.com/article/jaffna-to-colombo-train-service-postponed-1729427973
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
How Israel assassinate Hassan Nasrallah in Lebanon?
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா; வடக்கு, மத்திய மாகாண வீரர்கள் அசத்தல்
(நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.90 மீற்றர் உயரம் தாவிய அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிருஷிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவரது சக பாடசாலை வீராங்கனை எஸ். டிலக்ஷிகா (2.70 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 4.30 உயரத்தைப் பாய்ந்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் எஸ். துஷாந்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதேவேளை, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் எஸ். ஜே. சஞ்சீவன் (7.13 மீ.), 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜனன் (4.00 மீ.), 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பளை மத்திய கல்லூரி வீரர் கே. தனாதீபன் (46.71 மீ.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை வீ. சங்கீதா (32.31 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். இது இவ்வாறிருக்க மத்திய மாகாணத்தின் மாத்தளை இந்து தேசிய பாடாசாலை வீரர் எஸ். துதிஹர்ஷிதன் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4:06.11 நிமிடங்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/196733
-
இலங்கை தொடர்பில் இந்தியா விட்ட மாபெரும் தவறு : ஒத்துக்கொள்ளும் கலாநிதி ஜெய்சங்கர்
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் மாபெரும் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்(dr.s.jaishakar) தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட தி இந்தியா வே(The India way ) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளையால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 'இந்திய மாவத்தை' ('Indian Mawatha')என்ற புத்தகம் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது சாதாரணமான நடவடிக்கையல்ல ஆரம்பம் முதலே இலங்கை(sri lanka) இந்தியாவுக்கு(india) சவாலாக இருந்தது. நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை கொண்டு, இந்தியாவினால் உத்தரவாதமான தீர்வைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சி ஆரம்பத்திலேயே தவறாகிவிட்டது. ஆனால் இது சாதாரணமான நடவடிக்கையல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி காக்கும் நடவடிக்கை அத்துடன், இலங்கையில் அமைதி காக்கும் நடவடிக்கைக்காக இந்தியா கடுமையாக உழைத்த போதிலும், அது குறைவான கவனத்தையே பெற்றது என வெளிவிவகார அமைச்சர் தனது நூலில் வலியுறுத்தியுள்ளார். 37 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா தலையிட்டமை குறித்து வெளிவிவகாரத்துறையில் உலகப்புகழ்பெற்ற அறிஞரான இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sri-lanka-india-was-wrong-1729431996
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. கடந்த தினத்தில் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196735
-
மாயபிம்பம்
இக்கரைக்கு அக்கரை பச்சை போல! சிலவற்றை தூர இருந்தே இரசித்து விலகுவதே மகிழ்ச்சி....
-
National People's Power
From Wikipedia, the free encyclopedia National People's Power ජාතික ජන බලවේගය தேசிய மக்கள் சக்தி Abbreviation NPP Leader Anura Kumara Dissanayake General Secretary Dr. Nihal Abeysinghe Founder Anura Kumara Dissanayake Founded 13 July 2019 (5 years ago)[1] Preceded by National Movement for People's Power Headquarters 464/20 Pannipitiya Road, Pelawatta, Battaramulla, Sri Lanka. [2] Youth wing NPP Youth[a] Women's wing Progressive Women’s Collective Ideology Socialism[3][4] Left-wing populism[5][6][7] Factions: Progressivism Marxism Reformism Political position Left-wing[8] Colors Pink Slogan Let The Real People Win Parliament of Sri Lanka 3 / 225 Provincial Councils 15 / 455 Local Government 436 / 8,356 Election symbol Compass Website npp.lk Politics of Sri Lanka Political parties Elections The National People's Power (NPP) or Jathika Jana Balawegaya (JJB) is a socialist political alliance in Sri Lanka led by the Janatha Vimukthi Peramuna. It was established in 2019.[1][9] The NPP consists of 21 political parties and other organisations.[10] It contests in elections under the compass symbol. President Anura Kumara Dissanayake is the current leader of the electoral coalition and Dr. Nihal Abeysinghe is the general secretary.[11][12] History [edit] The NPP was formed by the members of the leftist Janatha Vimukthi Peramuna and over 20 other parties, worker unions, women's rights groups and youth organizations including members of ethnic communities. Opposition (2019–2024) [edit] During the 2020 parliamentary elections, the NPP aimed to surpass the ruling Sri Lanka Podujana Peramuna and win a majority of seats in parliament.[citation needed] However, the SLPP achieved a landslide victory in the elections as the ruling party, while the Samagi Jana Balawegaya became the main opposition party. The NPP only secured 3 seats and remained a third party. Dissanayake later said in a speech that he was not satisfied with the SLPP's victory and the NPP's defeat. When the 20th Amendment to the Constitution of Sri Lanka was announced, the NPP launched a protest against it.[13][14] In government (2024–present) [edit] Main article: 2024 Sri Lankan presidential election Anura Kumara Dissanayake, 10th President of Sri Lanka The NPP saw a surge in popular support during the 2022 Sri Lankan protests, amid dissatisfaction with the incumbent political establishment and the economic crisis. In the first vote count of the 2024 presidential election, NPP presidential candidate Anura Kumara Dissanayake won a plurality of the vote, with 42.31%.[15] Once the second round of vote counting concluded, Dissanayake was declared the winner and elected president, securing 55.89% of the vote.[16] The following day, Dissanayake formed an interim 3-member NPP government.[17] Ideology [edit] The National People's Power is ideologically left-wing populist[18] and working-class centred. The NPP is led by the Janatha Vimukthi Peramuna, the main communist party of Sri Lanka.[19] The NPP promotes a unique Sri Lankan economic model based on socialist principles and considers both neoliberalism and 'classical socialism' to be failures.[20] The NPP claims to oppose excessive privatization[21] and supports the state maintaining a role in energy, financial markets, and sectors directly related to national security while limiting involvement in profit-driven businesses.[22] Members [edit] The NPP is composed of 21 groups, including political parties, youth organizations, women's groups, trade unions, and civil society organizations.[10] Janatha Vimukthi Peramuna Aluth Parapura Ethera Api Public Servants for Public Service National Bhikkhu Front National Trade Union Centre Sri Lanka Communist Party (Alternative Group) Doctors for Social Justice Samabhimani Collective United Left Power Inter Company Employees' Union 71 Sahodrathwa Sansadaya Aluth Piyapath Mass Guiding Artists Janodanaya National Intellectuals Organization Dabindu Collective University Teachers for Social Justice Progressive Women's Collective Husmata Husmak All Ceylon Estate Workers' Union Structure [edit] Office bearers [edit] As of 5 October 2024[23] Position Name Party Leader Anura Kumara Dissanayake General Secretary Dr. Nihal Abeysinghe Treasurer Eranga Gunasekara Deputy Secretary Dr. Harini Amarasuriya Deputy Secretary Lal Wijenayake Electoral history [edit] Presidential [edit] Election Candidate First round Second round Result Ref Votes % Votes % 2019 Anura Kumara Dissanayake 418,553 3.16% — Lost 2022 Anura Kumara Dissanayake 3 (E.V) 1.37% — Lost 2024 Anura Kumara Dissanayake 5,634,915 42.31% 5,740,179 55.89% Won [24] Parliamentary [edit] Parliament of Sri Lanka Election Leader Votes Seats Result Ref No. % No. +/– % 2020 Anura Kumara Dissanayake 445,958 3.84% 3 / 225 3 1.33% Opposition [25] 2024 TBD https://en.wikipedia.org/wiki/National_People's_Power தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி (National People's Power, தேமச (NPP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில்[2] மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்டது.[3][4][5] இக்கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் உள்ளன. திசைகாட்டி சின்னத்தில் இக்கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது. அனுர குமார திசாநாயக்க இதன் தலைவராகவும், விஜித ஹேரத் செயலாளராகவும் உள்ளனர்.[6][7] இக்கூட்டணி இலங்கை அரசியலில் மூன்றாவது பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக உள்ளது. தேர்தல் வரலாறு இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் தேர்தல் ஆண்டு தேர்தல் தலைவர் வாக்குகள் வாக்கு % வென்ற தொகுதிகள் +/– அரசு 2020 அனுர குமார திசாநாயக்க 445,958 3.84% 3 / 225 3 எதிர்க்கட்சி நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத் (கம்பகா மாவட்டம்) 2000–இன்று இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்கள் தேர்தல் ஆண்டு வேட்பாளர் வாக்குகள் வாக்கு % முடிவு 2019 அனுர குமார திசாநாயக்க 418,553 3.16% தோல்வி 2022 அனுர குமார திசாநாயக்க 3 1.37% தோல்வி 2024 அனுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி National People's Power ජාතික ජන බලවේගය சுருக்கக்குறி தேமச (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்க பொதுச் செயலாளர் நிகால் அபேசிங்க நிறுவனர் அனுர குமார திசாநாயக்க குறிக்கோளுரை "உண்மையான மக்கள் வெற்றி பெறட்டும்" தொடக்கம் 2015 (9 ஆண்டுகளுக்கு முன்னர்) முன்னர் மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் தலைமையகம் 464/20 பன்னிப்பிட்டி வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை இளைஞர் அமைப்பு தேமச இளையோர்[a] கொள்கை சமூக மக்களாட்சி சமூகவுடைமை பிரிவுகள்: சீர்திருத்தம் நடைமுறைவாதம் முற்போக்குவாதம் சமூகத் தாராளவாதம் அரசியல் நிலைப்பாடு இடதுசாரி[1] நிறங்கள் செவ்வூதா இலங்கை நாடாளுமன்றம் 3 / 225 மாகாணசபைகள் 15 / 455 உள்ளூராட்சி சபைகள் 436 / 8,356 தேர்தல் சின்னம் திசைகாட்டி இணையதளம் npp.lk இலங்கை அரசியல் https://ta.wikipedia.org/wiki/தேசிய_மக்கள்_சக்தி
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.
-
சுயேட்சை குழுக்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன - கருணாகரம்
சுயேட்சை குழுக்கள் இம்முறை பல ஆயிரக்கணக்கான நிதிகளை செலவிட்டு தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துளார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷின் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுன்ற வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு இங்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலானது வட கிழக்குக்கு ஒரு முக்கியமான தேர்தலாக காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள் இம்முறை களமிறங்கப்பட்டுள்ளன. அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சியில் முதன் முறையாக ஒரு சிங்கள இனத்தவர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணிகளை நோக்கும்போது சுயேட்சைகள் தாங்கள் வாக்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழினத்துக்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை போட்டியிடுகின்றார்கள். மாவட்டத்திலுள்ள மக்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை தந்து இம்முறை தேர்தலில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/196716
-
ராஜபக்ஸ குடும்பம் கடந்த 87 ஆண்டுகளில் முதன் முறையாக சொந்த மண்ணில் போட்டியிடாதது ஏன்?
பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் 3 தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இலங்கையின் தவிர்க்க முடியாத ஆட்சியாளர்களாக ராஜபக்ஸவின் குடும்பத்தினர் விளங்கிய போதிலும், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மக்களால் தோற்கடிக்கப்பட்டார். எனினும், 2019-ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில், அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தனர். இதையடுத்து, 2022ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். ராஜபக்ஸ குடும்பத்தின் பிடியில் இருந்து ஆட்சி, அதிகாரம் மீண்டும் நழுவியது. அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் போட்டியில் வெற்றியடையவில்லை. இந்த நிலையில், தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அவர்களது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவில்லை. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஸ குடும்பம் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது காணப்படுகின்றது. எனினும், ராஜபக்ஸ குடும்பத்திலுள்ள ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரம் இம்முறை தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வி அடைந்தார். அத்தோல்வி ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வீழ்ச்சியின் முதல்படியாக காணப்பட்டது. ராஜபக்ஸ குடும்ப அரசியலின் ஆரம்பம் இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1931-ஆம் ஆண்டு இந்த அரசாங்க சபை உருவாக்கப்பட்டது. இந்த சபையில் இருந்தே, ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது. 61 உறுப்பினர்களை கொண்ட அரசாங்க சபையின் உறுப்பினராக, ராஜபக்ஸ குடும்பத்தின் முதலாவது அரசியல்வாதியாக கருதப்படும் டி.எம்.ராஜபக்ஸ அங்கம் வகித்தார். அன்று முதல் ராஜபக்ஸவின் குடும்பம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய அரசியலில் முக்கிய இடம் வகித்து வந்துள்ளது. டொன் மெத்திவ்ஸ் ராஜபக்ஸ என அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஸவின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்பட்ட டி.ஏ.ராஜபக்ஸ, டி.எம்.ராஜபக்ஸவின் மறைவுக்கு பின்னர் தனது செயற்பாடுகளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்திருந்தார். டி.ஏ.ராஜபக்ஸ அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். 1947-ஆம் ஆண்டு நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து. ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து 1951-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டு, அரசியலை தொடர டி.ஏ.ராஜபக்ஸ தீர்மானித்தார். அவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் தொடர ஆரம்பித்தது. சமல் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர் டி.ஏ.ராஜபக்ஸவின் மகன்கள். 1967-ஆம் ஆண்டு டி.ஏ.ராஜபக்ஸவின் மறைவுக்கு பின்னர், அவரது புதல்வரான மஹிந்த ராஜபக்ஸ 1970-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நேரடி அரசியலில் நுழைந்தார். அன்று முதல் மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். அவரை தொடர்ந்து, சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அரசியலுக்குள் பிரவேசித்தனர். நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ, உள்நாட்டு போரிலும் வெற்றி கண்டார். அதன் பின்னர், மஹிந்த, கோட்டாபயவை உள்ளடக்கிய ராஜபக்ஸ குடும்பம் அசைக்க முடியாத ஒரு அரசியல் குடும்பம் என்ற நிலையை எட்டியது. அந்த பின்னணியில், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைந்தார். அந்த தோல்வி ராஜபக்ஸ குடும்பத்தின் வீழ்ச்சியின் முதல்படியாக கருதப்பட்டது. பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து ராஜபக்ஸ குடும்பம் வெளியேறியது. பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பம் ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ராஜபக்ஸ குடும்பம், பின்னர் சுதந்திர கட்சியுடன் பல தசாப்தங்கள் தொடர்ந்தது. 2015 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான உறவை முடிவுக்கு கொண்டு வந்தது ராஜபக்ஸ குடும்பம். 2016-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறிய ராஜபக்ஸ குடும்பம், இதர உறுப்பினர்களின் அங்கத்துவத்துடன் இந்த கட்சியை ஆரம்பித்தது. தாமரை மொட்டு சின்னத்தை தேர்வு செய்த இந்த கட்சி, ஓரிரு வருடங்களிலேயே பாரிய வளர்ச்சியை எட்டியது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் தடவையாக போட்டியிட்டு, மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட்டு, மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். அத்துடன், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றது. இலங்கையில் ஆட்சியை ஒரு குடும்பம் வசப்படுத்திய பின்னணியில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸ குடும்பமே காரணம் என தெரிவித்து, மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடாத்த ஆரம்பித்தனர். இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிய நிலையில், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டு, பொருளாதார நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு, இதுவரை ஆட்சி பீடத்தை கைப்பற்றாத மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை மக்கள் தேர்வு செய்தனர். இந்த நிலையிலேயே, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SLPP MEDIA படக்குறிப்பு, இலங்கையில் ஆட்சியை ஒரு குடும்பம் வசப்படுத்திய பின்னணியில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத ராஜபக்ஸ குடும்பம் நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸவை தவிர வேறு எந்தவொரு ராஜபக்ஸ குடும்ப அங்கத்தவர்களும் போட்டியிடவில்லை. குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஸ குடும்பத்திலிருந்து எந்தவொரு வேட்பாளரும் களமிறக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் இம்முறை நாடாளுமன்ற பிரவேசத்தை தவிர்க்க முடிவெடுத்துள்ளதுடன், நாமல் ராஜபக்ஸவின் பெயர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நாமல் ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடாத தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முயற்சித்து வருகின்றார். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு வெகுவாக அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் போட்டியிட்டால் பாரிய தோல்வியை சந்திக்கும் என்ற அச்சமே போட்டியிடாததற்கு காரணம் என்று இலங்கை அரசியல் அரங்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழ், நாமல் ராஜபக்ஸவிடம் வினவினோம். தமது குடும்பத்திலுள்ள மூத்த பரம்பரையினர் தற்போது அரசியலில் இருந்து சற்று ஓய்வு பெற எண்ணியுள்ளமையினாலேயே இம்முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்ததாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் நோக்கிலேயே தாம் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு கட்சி தலைமை தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுகின்றார். ''எனது முந்தைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். ஒருவர் தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, ஏனையோர் பிரதேச அரசியலை முன்னெடுத்து வந்தார்கள். எமது பரம்பரையில் நான் மாத்திரமே அரசியலில் ஈடுபடுகின்றேன். இந்த கேள்வியை மறுபுறத்தில் கேட்க முடியும். அதாவது, எனது தந்தை, பெரியப்பா போன்றோர் இம்முறை தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஏன் வயதாகியும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என கேள்வி எழுப்புவார்கள். எனினும், யதார்த்தமான ஒரு விடயம் காணப்படுகின்றது. மூத்தவர்கள் வயதிற்கு செல்கின்றார்கள். இளைய சமூகம் அரசியலில் முன்னோக்கி வருகைத் தர வேண்டும். என்னை எடுத்துக்கொண்டால், தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துவதற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தமது இறுதித் தேர்தல் என்பதை சமல் ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கடந்த தேர்தலிலேயே அறிவித்து விட்டார்கள்." என நாமல் ராஜபக்ஸ கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdje124ey77o
-
எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது - டக்ளஸ்
நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது. இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில், நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. குறிப்பாக, எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. இதை ஏற்றுள்ள மக்கள் இம்முறை மத்தியில் உருவாகியுள்ள மாற்றம் போன்று வடக்கிலும் ஈபிடிபியிடம் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். மேலும் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்கள் மத்தியிலும் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது. அதனால்தான் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலத்தின் அடிப்படையிலேயே மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கும், பேரம் பேசலுக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிகரித்த ஆசனங்களை வழங்குங்கள் எனவும் கோரிவருகின்றேன். அதனடிப்படையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யதார்த்த அரசியலையும் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொண்டு உங்களது ஆதரவு பலத்தையும் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அந்த வகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/196707
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவின் உலக சாதனை பயணத்தில் சிக்கல் - சிஎஸ்கேவுக்கு ரச்சின் நன்றி பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்தின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்தது. ஆனாலும், நியூசிலாந்துக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு அது வெற்றி பெற போதுமானதாக இருக்கவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த ரன்களில் சுருண்டது ஒட்டுமொத்தமாக இந்த போட்டியையே தாரை வார்த்துவிட்டது. இந்த தோல்விக்கு இந்திய அணி மேற்கொண்ட தவறான முடிவுகளே காரணமாகிவிட்டன. இதனை கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? ஆட்ட நாயகன் விருது பெற்ற ரச்சின் ரவீந்திரா, ஐ.பி.எல். தொடரில் தான் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் என்ன சொன்னார்? இந்த தோல்விக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணியின் நிலை என்ன? கடைசி நாளில் என்ன நடந்தது? பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா சிறிது நேரத்திலேயே அந்த முடிவு தவறானது என்று உணர்ந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 46 ரன்களில் ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டத்தால் 402 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்த இந்திய அணி 462 ரன்களைக் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் 107 என்ற எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிரட்டினார். இரண்டாவது பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். ஒரு முனையில் பும்ரா மிரட்டலாக பந்துவீச, மறுமனையில் முகமது சிராஜூம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி தொடக்கத்தில் ரன்களை சேர்க்கவே சிரமப்பட்டது. குறிப்பாக, நியூசிலாந்து வீரர்கள் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ளவே மிகவும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 8 ஓவர்களில், அதாவது 48 பந்துகளில் 22 பந்துகளை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் தவறான ஷாட் ஆடினர். தனது இரண்டாவது பந்தில் டாம் லாதமை வீழ்த்திய பும்ரா, அடுத்த சிறிது நேரத்தில் டெவோன் கான்வேயையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அவர் 17 ரன்களை எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES எளிதாக ரன்களை சேர்க்க முடியாவிட்டாலும் கூட, குறைவான இலக்கு என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி களத்தில் இருந்தனர். அதேநேரத்தில், முதல் இன்னிங்ஸைப் போலவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா உணர்ந்தது. இதனால், வேகப்பந்துவீச்சைக் கொண்டு நியூசிலாந்து வீரர்களுக்கு தொடக்கத்தில் அளித்த நெருக்கடியை இந்திய அணியால் தொடர முடியவில்லை. அடுத்து வந்த சுழற்பந்து வீச்சாளர்களை நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி எதிர்கொண்டனர். ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் பந்துகளில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன் சேர்த்தனர். குறிப்பாக, முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரச்சின் ரவீந்திரா அச்சமின்றி ஆடினார். அவரும் வில் யங்கும் சேர்ந்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ரவீந்திரா 39 ரன்களும், வில் யங் 48 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மண்ணில் 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES "டாஸில் தோற்றது நல்லதாகி விட்டது" முதல் டெஸ்டில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், "நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். டாஸில் தோற்றது ஒரு வகையில் நல்லதாகிவிட்டது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துவீசினர். அதற்கான பரிசும் கிடைத்தது. இந்தியா வலுவாக மீண்டும் வரும் என்பது தெரியும். அவர்கள் அதனை செய்தார்கள். ஆனால், இரண்டாவது புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஓ ரூர்கி இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். டிம் சவுத்தி, ஹென்றி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் ரச்சினுடன் சவுத்தி அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியமானது. சில போட்டிகளே ஆடியுள்ள ரச்சின் கடந்த ஓராண்டாக அவரது பணியை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார். " என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸ், ரிஷப் பற்றி ரோகித் கூறியது என்ன? இந்திய அணியின் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இது ஒரு நல்ல முயற்சி. 350 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது, அதிகம் யோசிக்க முடியாது. ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. சற்று ரிஸ்க் எடுத்தாலும் கூட ரிஷப் பந்த் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்." என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், "நல்ல பந்துகளை தடுத்தாடியும், சில பந்துகளை விட்டும் ஆடிய பந்த், அவரது இயல்பான ஷாட்களையும் ஆடினார். சர்பராஸின் ஆட்டத்தை மறக்க முடியாது. நான்காவது போட்டியில் ஆடும் அவர் சிறந்த, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருக்கிறது. நீங்கள் மனதளவில் தெளிவாக இருந்துவிட்டால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தடையேதும் இருக்காது" என்று கூறினார். "முதல் போட்டியில் தோற்ற பிறகு பல முறை நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பிறகு அடுத்து வந்த 4 போட்டிகளையும் வென்றோம். இது நடக்கவே செய்யும். இன்னும் 2 போட்டிகள் இருக்கின்றன. நாங்கள் வலுவாக மீண்டு வருவோம்" என்று ரோகித் சர்மா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "சி.எஸ்.கே.வுக்கு நன்றி " முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற உதவிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர், "பெங்களூருவில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. என்னுடைய சிறப்பான ஃபார்மும், சரியான முன்தயாரிப்புமே இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். இந்த தொடருக்காக நான் கருப்பு மண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன்." என்று கூறினார். "(சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய போது) ஒவ்வொரு நாளும் வலைப் பயிற்சியின் போது பல வகையான வலைப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டேன். அது விலை மதிப்பில்லாத சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்த வசதிகளை செய்து தந்த சென்னைக்கு நன்றியுடையவனாக இருப்பேன். பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது." என்றும் ரச்சின் ரவீந்திரா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி கோட்டை விட்டது எங்கே? இந்த டெஸ்ட் தொடங்கும் முன்பே இந்திய அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை ஆட்டத்தின் முடிவு காட்டுகிறது. நியூசிலாந்து அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க, பெங்களூரு ஆடுகளத்தின் தன்மையை சரிவர கணிக்காமல் இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது தவறான முடிவாகிவிட்டது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் நியூசிலாந்து பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதேபோல், பெங்களூருவில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் தடைபட, இரண்டாவது நாளில் டாஸ் வென்றதும் பேட்டிங்கை இந்தியா தேர்வு செய்தது தவறாகிப்போனது. ஆடுகளத்தை சரியாக கணித்து திட்டமிட்டு பந்துவீசிய நியூசிலாந்து அணி, ஓரிரு செஷன்களிலேயே இந்த டெஸ்டின் முடிவை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இந்தியா மிகக் குறைந்த ரன்களில் சுருண்டதே மீண்டு வர முடியாத நெருக்கடியில் அணியை தள்ளிவிட்டது. இந்தியா உலக சாதனையை தொடர்வதில் சிக்கல் இந்திய அணி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனை படைத்துள்ளது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து பெற்ற வெற்றியால், இந்த சாதனையை இந்திய அணி நீட்டிப்பது இப்போது சவாலாக மாறியுள்ளது. அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை வென்று தனது உலக சாதனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்ற நிலையில் இருக்கிறது. இந்த வகையில், ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - அணிகளின் நிலை பட மூலாதாரம்,X/ICC இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற பின் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (44.44 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து (43.06 சதவீதம்) 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (34.38 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkdglnredpo
- புது வரவு.
-
றீ(ச்)ஷா பண்ணையில் விசேட தேவையுடையோருக்காக இடம்பெற்ற விழிப்புணர்வு கூட்டம்
சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில் இயலாமையுடன் கூடிய நபர்களின் சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும் நிகழ்வு இயக்கச்சி றீ(ச்)ஷா இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, நேற்றையதினம் (19.10.2024) இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றுள்ளது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் இயலாமையுடன் கூடிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இயலாமை உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி முன்மொழியப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்வைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கலந்து கொண்டோர் குறித்த பரிந்துரையாடலில் இயலாமையுடன் கூடிய நபர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தல், உரிமைகள், கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம் , மருத்துவம், சம்பந்தமாக அவர்கள் அடைய வேண்டிய தேவை, அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விடயங்கள், செய்ய இயலாமையாக, சவாலாக இருக்கும் விடயங்களை எவ்வாறு தீர்ப்பது தொடர்பான பரிந்துரையாடல் விழிப்புணர்வு செயற்பாடு நடைபெற்றுள்ளது. மேலும் இதன்போது, சிறப்பு விருந்தினராக றீ(ச்)ஷா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், பிரதம விருந்தினராக வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் வாகீசன், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/seminar-for-special-needed-people-in-reecha-1729425003
-
அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் - மன்னார் ஆயர்
நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் (2024) தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருக்கும் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இப்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என இரண்டிலும் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45 அரசியல் கட்சிகளும் 46 சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலானது இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியாகிய தமிழர் தாயகப் பகுதியில் பலத்த எதிர்பார்ப்புகள் நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது. உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து வகையான உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல் தான். இந்த அரசியல் பிரதிநிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் அதன் கனதியை உணர்ந்தவர்களா? என்பது கேள்விக்குறியே. தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மற்றும் வடக்கு, கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. அதேவேளை என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது, என்பதையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்கள் தமது கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 30 வருட அகிம்சை போராட்டமும் 30 வருட ஆயுதப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைகள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் அவற்றை மட்டும் கருத்திற்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடி வந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களாகிய நாம் நமது சுயநிர்ணய உரிமை உட்பட கால காலமாக நாம் வலியுறுத்தி வருகின்ற தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து முன்னகர்த்தி செல்லக்கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். உறவினர், நண்பர் போன்ற வட்டங்களை கடந்து செயற்படக்கூடிய தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய இலஞ்ச ஊழலற்ற செயல்திறன் வாய்ந்த சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்திசைவுள்ள நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். மாறிவரும் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நமக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு தீர்மானமிக்க தேர்தலாக இது அமைவதற்கு நாம் எல்லோரும் நமது வாக்குரிமையை பயன்படுத்துவோம். நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுவோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/196714