Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா - இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/196895
  2. சுழிபுரம் பறாளாய் வீதியை சேர்ந்த திருமதி சிவபுஸ்பா சுந்தரராஜன் அவர்கள் ஜேர்மனியில் காலமானார்கள். ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
  3. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்களால் வழங்கப்படும் பூக்களும், மாலைகளும் குப்பைகளாக ஆறுகளிலும், குளங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறது. மாநகராட்சியே நேரடியாக கோவில்கள் மற்றும் தர்க்காக்களுக்கு வண்டிகளை அனுப்பி குப்பைகளை சேகரிக்கிறது. அவை முறையே தரம் பிரிக்கப்படுகிறது. பிறகு மண்புழு உர ஆலைகளுக்கு அனுப்பி அங்கே அது மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 டன் உரத்தை தயாரித்துள்ளது சூரத் மாநகராட்சி. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை சூரத்தின் தோட்டக்கலை துறை அங்குள்ள பூங்காக்கள், சாலையோர பூங்காக்களில் பயன்படுத்துகிறது. செய்தியாளர்- ரூபேஷ் சோனாவானே படத்தொகுப்பு- சாகர் படேல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை பார்க்க கீழுள்ள பிபிசி தமிழ் இணைப்பை அழுத்துங்கள். https://www.bbc.com/tamil/articles/czege5wz53do
  4. காஸாவில் தினமும் 10 பேர் கை, கால்களை இழக்கும் அவலம்; செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை
  5. யாழ்ப்பாணத்தில் அதிகமாகப் பெய்துள்ள மழை(முளை வெள்ளம்) காரணமாக 7000ரூபா விற்ற 70கிலோ நெல் மூட்டை 12000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
  6. நாளை சிஐடியில் முன்னிலையாகவுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளார். தாக்கல் செய்த மனு குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று அழைக்கப்பட்டது. இதன்போது, சம்பவம் தொடர்பில் நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்க தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த மனுவை வரும் 25ம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/johnston-to-record-statement-at-cid-tomorrow-1729582937
  7. அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/196865
  8. 'நீங்கள் எங்கள் அரசர் அல்ல' - பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி கூச்சலிட்ட ஆஸ்திரேலிய செனட்டர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, செனட்டர் லிடியா தோர்ப் கட்டுரை தகவல் எழுதியவர், கேட்டி வாட்சன் மற்றும் டேனிலா ரெல்ஃப் பதவி, பிபிசிக்காக 22 அக்டோபர் 2024, 11:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பின்னர் செனட்டர் ஒருவர் அரசரை கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசர் சார்ல்ஸின் உரையை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பெண் செனட்டரான லிடியா தோர்ப் என்பவர் `நீங்கள் எங்கள் அரசர் அல்ல’ என்று கூச்சலிட்டார். செனட்டர் லிடியா தோர்ப் ஒரு பழங்குடியின ஆஸ்திரேலியப் பெண், தலைநகர் கான்பெராவில் நடந்த விழாவில் சுமார் ஒரு நிமிடத்திற்கு அரசர் சார்லஸுக்கு எதிராக கூச்சலிட்டார். அதன் பின்னர் அவரை காவலர்கள் அழைத்து சென்றனர். "எங்கள் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டு கூச்சலிட்ட லிடியா, "இது உங்கள் நிலம் அல்ல, நீங்கள் எங்களின் அரசர் அல்ல" என்றார். ஆனால், நிகழ்வின் தொடக்கத்தில் மூத்த பழங்குடியினப் பெண் ஆன்டி வயலட் ஷெரிடன், அரசர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலாவை வரவேற்றார். அவர் லிடியாவின் எதிர்ப்பு "அவமரியாதை செயல். லிடியா எனக்காக பேசவில்லை" என்று கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, 2022 செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அரசர் சார்ல்ஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார் திங்கட்கிழமை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரை நிகழ்த்தினார். அவர் வெள்ளை நிற சட்டை, நீல நிற டை மற்றும் சூட் அணிந்திருந்தார். அவரது கோட்டில் பல பதக்கங்கள் இருந்தன. கழுத்தில் ஒரு தங்க நெக்லஸ் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் ஒரு ஆஸ்திரேலியக் கொடி வைக்கப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அரசர் சார்ல்ஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார். ஆஸ்திரேலியா ஒரு காமன்வெல்த் நாடு, இதில் பிரிட்டன் அரசர் தலைவராக இருக்கிறார். ஆனால் சமீபக் காலமாக அந்த பதவியில் இருந்து பிரிட்டன் அரசரை நீக்குவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தைச் சேர்ந்த சுயேச்சையான செனட்டர் லிடியா தோர்ப், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அதன் பழங்குடி மக்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தவர்களில் முக்கியமான நபர். நியூசிலாந்து மற்றும் பிற முன்னாள் பிரிட்டன் காலனிகளைப் போலல்லாமல், ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. பல பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு மக்கள் தங்கள் இறையாண்மையையோ அல்லது நிலங்களையோ பிரிட்டன் மகுடத்திற்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். அரசருக்கு எதிராக கூச்சலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் பிபிசியிடம் பேசிய லிடியா தோர்ப் "அரசருக்கு நான் தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறேன்” என்று கூறினார். "இறையாண்மையாக இருக்க, நீங்கள் இந்த நிலத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல," என்று அவர் மேலும் கூறினார். பழங்குடி மக்களுடன் சமாதான உடன்படிக்கை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு அரசர் அறிவுறுத்த வேண்டும் என்றும் லிடியா விளக்கினார். "எங்களால் அந்த செயல்முறையை வழிநடத்த முடியும், அதைச் செய்ய முடியும், ஒரு சிறந்த நாடாக இருக்க முடியும் . ஆனால் ஒருபோதும் காலனித்துவத்திற்கு தலைவணங்க முடியாது. அரசர் குறிப்பிட்ட அவரின் மூதாதையர்கள், இனப் படுகொலைக்கு காரணமானவர்கள்” என்று அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் அரசர் சார்ல்ஸ் உரையாற்றிய நிகழ்வில் பங்கேற்ற லிடியா, பாரம்பரிய தோல் ஆடையை அணிந்திருந்தார், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு "காலனித்துவவாதி" என்று விமர்சித்தார். அவர் 2022 ஆம் ஆண்டு செனட்டராக பதவியேற்ற போது சொன்ன அரசியலமைப்பு உறுதிமொழியை மீண்டும் கூறினார். மற்றவர்களை ஒப்பிடுகையில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மோசமான சுகாதார சேவைகள், வசதியற்ற வாழ்க்கை, தரமற்ற கல்வி சேவை ஆகிய ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் அரசர் சார்ல்ஸ் உரையாற்றிய நிகழ்வில் பங்கேற்ற லிடியா, பாரம்பரிய தோல் ஆடையை அணிந்திருந்தார் அரசர் சார்ல்ஸுக்கு சில இடங்களில் எதிர்ப்பு இருந்த போதிலும், அரச குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து பலர் மகிழ்ச்சியடைந்தனர். மக்கள் நாடாளுமன்ற மாளிகைக்கு வெளியே காலை முழுவதும் வெயிலை பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டு ஆஸ்திரேலிய கொடிகளை அசைத்தனர். "போன முறை ஹாரி மற்றும் மேகன் கடைசியாக இங்கு வந்திருந்தபோது அவர்களை நான் பார்த்தேன். மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன்” என்று 20 வயதான ஜேமி கார்பாஸ் கூறினார். "திங்களன்று அரச தம்பதியினர் நகரத்திற்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் கருத்துப்படி, அரசக் குடும்பத்தினர் ஆஸ்திரேலிய கலாசாரத்தின் ஒரு பகுதி. அவர்கள் எங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்" என்றார் அவர். இதற்கிடையில், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அமெரிக்க-ஆஸ்திரேலிய மாணவர் சிஜே.ஆடம்ஸ் கூறுகையில் "அவர் பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் தலைவர், அவர் கான்பெராவில் இருக்கும் போது உங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்றார். நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பாக உள்ள பூங்காவில் குறைந்த எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடியிருந்தனர். படக்குறிப்பு, ஆஸ்திரேலியக் கொடிகளை ஏந்தியபடி நிற்கும் பெண்கள் கான்பெராவிற்கு அரசர் வருகை தருகையில், ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களுடனான வரலாற்றை ஞாபகப்படுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் லிடியாவின் செயல், அரச தம்பதியர் எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலை ஏற்ப்படுத்தியது. அரச தம்பதியர் திங்கட்கிழமை கான்பெராவிற்கு வந்து சேர்ந்தனர், அவர்களை அரசியல் தலைவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதியான நுன்வாலின் மூத்த பெண் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வரவேற்றனர். கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற மாளிகையின் கிரேட் ஹாலில் அவர்களுக்கு டிஜெரிடூ இசைக்கருவி முழங்க பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசர் பழங்குடி சமூகங்களைப் பற்றியும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைப் பற்றியும் பேசினார். "தனது சொந்த அனுபவம் இந்த பாரம்பரிய அறிவால் வடிவமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது" என்று கூறினார். "ஆஸ்திரேலியாவிற்கு எனது பல பயணங்களின் போது, நல்லிணக்கத்தை நோக்கிய நாட்டின் நீண்ட, கடினமான பயணத்தை வழிநடத்திய தைரியத்தையும் நம்பிக்கையையும் நான் கண்டேன்" என்று அவர் பாராட்டினார். இவ்வாறு பேசி முடித்துவிட்டு அவர் உட்கார்ந்ததும், லிடியாவின் எதிர்ப்புக் குரல் கூட்டத்தில் ஒலித்தது. லிடியா இவ்வாறு செய்ததை சில பழங்குடி நிர்வாகிகள் விரும்பவில்லை. பழங்குடியின மூத்த பெண் ஷெரிடன், லிடியாவின் செயலை விமர்சித்தார். "இது அவமரியாதையான செயல். இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதற்கான இடம் இது இல்லை. லிடியா எனக்காக பேசவில்லை," என்று ஷெரிடன் கூறினார். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, அரச தம்பதியர் கான்பெராவில் உள்ள அரசு இல்லத்தின் மைதானத்தில் மரங்களை நட்டனர் "அரசருக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு கீமோதெரபி செய்யப்பட்டு வருகிறது. அவர் இதுபோன்ற சூழலை சந்தித்திருக்கக் கூடாது. அவர் இங்கு வந்ததை நிச்சயமாகப் பாராட்டுகிறேன். அவர் ஆஸ்திரேலியா வருவது கடைசியாகக் கூட இருக்கலாம். அவரை பார்க்கதான் மக்கள் கூடியுள்ளனர்” என்றார். பக்கிங்ஹாம் அரண்மனை லிடியா தோர்ப்பின் எதிர்ப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக கான்பெராவில் அரச தம்பதியைப் பார்க்க வந்த கூட்டத்தின் மீது கவனம் செலுத்தியது. அரண்மனை வட்டாரத்தின் கூற்றுப்படி, அரச தம்பதியர் தங்களுக்கு ஆதரவாக வந்த பல ஆயிரக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்டனர். நெகிழ்ச்சியடைந்தனர். காமன்வெல்த் நாடான ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் மன்னர் அரச தலைவராக இருக்கிறார். பல ஆண்டுகளாக, ஆஸ்திரேலியா முடியாட்சியைக் கைவிட்டு குடியரசாக வேண்டும் என்று விவாதம் ஆங்காங்கே எழுந்து வருகிறது. 1999 ஆம் ஆண்டு, இந்தக் கேள்வி பொது வாக்கெடுப்பில் வைக்கப்பட்டது. பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகளின் படி, ஆஸ்திரேலியாவில் சுதந்திரம் மற்றும் குடியரசாக மாறுவதற்கான இயக்கத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. செனட்டர் லிடியா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக அரசருடன் கைகுலுக்கிய நாட்டின் தற்போதைய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நீண்ட காலமாக குடியரசுக் கட்சியில் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அரசராக பதவியேற்ற பிறகு சார்ல்ஸின் முதல் ஆஸ்திரேலிய பயணம் இது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதால், அவரது உடல்நிலை காரணமாக கடந்த அரச வருகைகளை விட இந்த சுற்றுப்பயணம் குறுகியதாக இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwylygkrr9no
  9. அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள (Department of Agriculture) அதிகரரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ஒழுங்கமைக்கப்பட்ட விவசாய திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். நெல் கொள்வனவு மேலும் நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கும் முறையான பொறிமுறை அவசியம் என தெரிவித்தார். அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகால உத்தரவாத விலைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். உள்ளீட்டு விலைகளை குறைத்தல் மேலும் அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்து கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/no-change-in-the-rice-fixed-price-anura-announce-1729594957#google_vignette
  10. லலித்-குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் - யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய லலித், குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196875
  11. தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் தேங்காய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சசு நடமாடும் தேங்காய் விற்பனை வேலை திட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி, குறித்த திட்டம் நாளை முதல் (ஒக்டோபர் 23) நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் விலை இதேவேளை, தேங்காய் விற்பனை வேலைத்திட்டத்தில் கொழும்பு வெலிக்கடை, கிருலப்பனை மற்றும் நிதி அமைச்சினைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் ஊடாக தேங்காய் கொள்வனவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் போது, ரூ.100-120 வரையிலான தரமான தேங்காய்களை வாங்குவதற்கான வாய்ப்பு கொள்வனவாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://ibctamil.com/article/govt-to-control-rising-coconut-prices-1729606071#google_vignette
  12. இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2022 இல் சோசலிஸ மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் தாக்குதல் நடத்தியமை குறித்த மனுவிலேயே முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக சேர்ப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. இந்த மனுக்களை இன்று ஆராய்ந்தவேளை சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோள்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் ரணில்விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196861
  13. 29 வயதில் 300 விக்கெட்டுகள் டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய பங்களாதேஷ் அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் ககிசோ ரபாடா அவரது முதல் விக்கெட்டினை கைப்பற்றியபோது, தென்னாபிரிக்க அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்தார். தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் ககிசோ ரபாடா. தென்னாப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6-வது வீரராக ரபாடா மாறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் டேல் ஸ்டெயின் – 439 விக்கெட்டுகள் (93 போட்டிகளில்) ஷான் பொல்லக் – 421 விக்கெட்டுகள் (108 போட்டிகளில்) மக்காயா நிட்னி – 390 விக்கெட்டுகள் (101 போட்டிகளில்) ஆலன் டொனால்டு – 330 விக்கெட்டுகள் (72 போட்டிகளில்) மோர்னே மோர்க்கல் – 309 விக்கெட்டுகள் (86 போட்டிகளில்) ககிசோ ரபாடா – 303* விக்கெட்டுகள் (65 போட்டிகளில்) தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையையும் ககிசோ ரபாடா பெற்றுள்ளார். அவர் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். https://thinakkural.lk/article/310986
  14. மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) முற்பகல் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்காத வகையில் செயற்படுமாறும் வலியுறுத்தினார். அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதன்போது வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும் மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது. கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/196843
  15. நவம்பர் 21இல் பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் அரசியல் கட்சிகள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பதை தாமதப்படுத்தினால், நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 15 அல்லது 16 ஆம் திகதிகளில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகும் எனவும், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவிற்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் ரத்நாயக்க, தேர்தல் திகதிக்கும் பாராளுமன்றம் கூடும் திகதிக்கும் இடையில் சுமார் ஒரு வாரகாலம் உள்ளதால் எதிர்வரும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை பரிந்துரைப்பதில் தாமதம் செய்தால், பாராளுமன்றம் கூடும் திகதிக்கு முன்னர் இந்தப் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட முடியாது. இதனால், நவம்பர் 21ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள். முந்தைய பாராளுமன்ற கூட்டத்தொடரிலும், முதல் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களின் முழு பிரதிநிதித்துவம் இல்லை. கணிசமான காலதாமதத்தின் பின்னரே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில், தேசியப் பட்டியலில் பெயர் உள்ளவர் அல்லது தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க முடியும். ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் தேசியப்பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வர அனுமதித்திருந்தார். தேர்தலில் போட்டியிடாத அல்லது தேசியப்பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் முதலில் பொதுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் இராஜினாமா செய்ததன் காரணமாக ஒரு ஆசனம் வெற்றிடமானால் மட்டுமே எம்.பி.யாக நியமிக்க முடியும். https://thinakkural.lk/article/310979
  16. கட்டுரை தகவல் எழுதியவர், நேதன் வில்லியம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு ரஷ்யச் சிறுமி, ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுப்பதை எதிர்க்கும், சமாதானச் செய்தியுடனான ஒரு ஓவியத்தை வரைந்தார். அதற்கு அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் உலகளாவிய செய்தியானது. இப்போது அந்தத் தந்தை, ‘தண்டனை காலனி’ என்றழைக்கப்படும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அலெக்ஸி மொஸ்கலேவ் என்ற அந்த நபரின் மகள் மாஷா வரைந்த அந்த ஓவியத்தில் ‘போர் வேண்டாம்’ என்றும் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தைக் குறித்து 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அதன்பின்னர், மொஸ்கலேவ் மீது சமூக ஊடகங்களில் ரஷ்ய ராணுவத்தைப் பலமுறை விமர்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம், ராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி இணையத்தில் சில காட்சிகள் பகிரப்பட்டன. அவற்றில் ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் உள்ள ஒரு தண்டனைக் காலனியை (சிறை) விட்டு வெளியேறிய பிறகு, சிறைச் சீருடையில் இருக்கும் மொஸ்கலேவ் தனது, மகளைத் தழுவிக்கொள்வதைக் காட்டுகிறது. ‘அது ஒரு சித்திரவதைக் கூடம்’ மோஸ்கலேவ் தனது இரண்டு மாதச் சிறை அனுபவத்தைக் குறித்து விவரித்தார். "அது ஒரு சித்திரவதைக் கூடம். அது சித்திரவதைக் கூடம்தான். எனது அறை இரண்டு மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்டது. உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” என்றார். "முதலில், நான் எனது அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். பின்னர் அவர்கள் இரண்டாவது நபரை உள்ளே அனுப்பினார்கள். நாங்கள் இருவரும் இரண்டு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு செல்லில் அமர்ந்திருந்தோம்,” என்கிறார் மோஸ்கலேவ். "தரை அழுக்கடைந்திருந்தது. எங்கும் எலிகள் இருந்தன. சாக்கடைகளில் இருந்தும் மற்ற எல்லா இடங்களில் இருந்தும் பெரிய எலிகள் வந்தன," என்றார் அவர். இதுகுறித்து ரஷ்யாவின் மத்திய சிறைத் துறை கருத்து தெரிவிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை விளக்கம் கேட்டதற்கும் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,OLGA PODOLSKAYA படக்குறிப்பு, மாஷா வரைந்த ஓவியத்தில் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும், ‘போர் வேண்டாம்’ என்றும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன 12 வயதுப் பெண் வரைந்த படம் 2022-ஆம் ஆண்டு, 12 வயதான மாஷா, யுக்ரேன் கொடியை வரைந்து ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும், ரஷ்ய கொடி மற்றும் ராக்கெட்டுகளை வரைந்து ‘போர் வேண்டாம்’ என்றும் எழுதியிருந்தார். அப்போது துவங்கின இந்தக் குடும்பத்தின் பிரச்னைகள். தனது மகள் வரைந்த ஓவியத்தைப் பற்றி அவரது பள்ளி காவல்துறையிடம் புகார் அளித்ததாக மொஸ்கலேவ் கூறினார். அதன் பிறகு, போருக்கு எதிரான அவர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவு இட்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது. மேலும், அதற்கு முன்னரே இதேபோன்ற மற்றொரு வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் மீது மீண்டும் ரஷ்யாவின் குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அதிகாரிகள், மாஷாவை அவரது தந்தையிடமிருந்து பிரித்து ஒரு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் பிரிந்த போன அவரது தாயிடம் ஒப்படைத்தனர். மொஸ்கலேவுக்கு 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்படும்போது அவர் ஆஜராகவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பி அண்டை நாடான பெலாரூஸுக்கு சென்றதாக OVD-Info தெரிவித்துள்ளது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, அடுத்த மாதம் ரஷ்யாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார், என்று அக்குழு மேலும் கூறியது. மொஸ்கலேவ் வசிக்கும் பகுதியின் கவுன்சிலர் ஓல்கா பொடோல்ஸ்கயா கடந்த ஆண்டு பிபிசியிடம் பேசினார். அப்போது அவர் மொஸ்கலேவின் கைது குறித்து ‘அதிர்ச்சியில்’ இருப்பதாகக் கூறினார். "உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதற்காகச் சிறை தண்டனை விதிக்கப்படுவது என்பது ஒரு கொடுமையான விஷயம். இரண்டு வருட சிறைத்தண்டனை என்பது ஒரு கொடுங்கனவு." பட மூலாதாரம்,OVD-INFO படக்குறிப்பு, ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் உள்ள ஒரு தண்டனைக் காலனியை (சிறை) விட்டு வெளியேறிய பிறகு, சிறைச் சீருடையில் இருக்கும் அலெக்ஸி மொஸ்கலேவ் ரஷ்யாவில் ஒடுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கியது. அப்போதிருந்து ரஷ்யாவில் மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, என்று ஐ.நா-வின் ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மொஸ்கலேவின் வழக்கு இந்தப் பின்னணியில்தான் நிகழ்ந்திருக்கிறது. அந்த அறிக்கையில் காவல்துறையின் வன்முறை, சுதந்திர ஊடகங்கள் மீதான பரவலான அடக்குமுறை, மற்றும் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி ரஷ்ய அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவது ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் ஆர்டியோம் கமர்டின் என்பவரது வழக்கும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொது இடத்தில் போர் எதிர்ப்புக் கவிதையைப் படித்ததற்காக அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது செயல் ‘வெறுப்பைத் தூண்டுவதாக’ அதிகாரிகளால் கருதப்பட்டது. பள்ளிப் பாடங்கள் மூலம் யுக்ரேன் மோதல் குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களை குழந்தைகளிடையே பரப்புவதற்கு ரஷ்ய அரசாங்கம் முயல்வதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்தப் பாடங்கள் ‘முக்கியமான உரையாடல்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. "அத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்ள மறுக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அழுத்தம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்," என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/c1l4lzplz20o
  17. இனி கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் (எம்.மனோசித்ரா) கடவுச்சீட்டு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படவுள்ளது. இன்று 42,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதோடு, நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் அந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம். கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பபெற்றன. இன்று புதன்கிழமை 42,000 கடவுசீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளன. எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாரத்துக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறும். நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே மக்கள் அவசரப்பட்டு கொழும்புக்கு வர வேண்டிய தேவை இல்லை. மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார். https://www.virakesari.lk/article/196867
  18. பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாயுக்களையும் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பெரும் கருந்துளை தான் அதன் இதயம். இதுதான் நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் பிறப்பையும், அதன் 1,300 கோடி ஆண்டுகால வரலாற்றையும் நமது சூரியக் குடும்பத்தின் தோற்றத்தையும் இயக்குகிறது. சில நேரங்களில், ஏதேனும் நட்சத்திரம் அதன் அருகில் சுற்றிச் செல்லலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் அது உடைந்து, அதன் இருப்பின் அடையாளமே இல்லாமல் மறைந்துவிடும். கருந்துளைகள் இயற்கையின் அச்சுறுத்தும் அம்சங்கள். மிகப் பிரமாண்டமான அளவில் ஆக்கவும் அழிக்கவும் வல்லவை. கிட்டத்தட்ட எல்லா பெரிய நட்சத்திர மண்டலமும் தன் மையத்தில் ஒரு பெரும் கருந்துளையைக் கொண்டுள்ளது. பால்வெளி மண்டலம் என்றழைக்கப்படும் நமது நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளை ‘சஜிடேரியஸ் ஏ*’ (Sagittarius A* - ‘Sagittarius a star’) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் எடை குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் 'அல்ட்ராமாஸிவ் ப்ளாக் ஹோல்ஸ்' என்று அழைக்கப்படும் மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் உட்பட பல கருந்துளைகளைக் கண்டறிந்துள்ளனர். சில கருந்துளைகள் சஜிடேரியஸ் ஏ*-வைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பெரியவை. சில நம்முடைய சூரியக் குடும்பத்தைக் காட்டிலும் மிகப்பெரியவை. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி தற்போது வெளியிட்டுள்ள காட்சிகள், காலம் துவங்கும் போது இத்தகைய பிரம்மாண்டமான கருந்துளைகள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி அறிய புதிய தகவல்களை வழங்குகிறது. ஆனால் இவை எங்கே இருந்து வந்தன? இவை இன்னும் எவ்வளவு பெரிதாக இருக்கக்கூடும் என்பவையெல்லாம் புரியாத புதிராகவே உள்ளன. மிகப்பெரிய கருந்துளை எது? கருந்துளைகளின் அளவை மதிப்பிடுவது (அதன் நேரடி வரையறையின் படி கணிக்க இயலாது) அவ்வளவு எளிமையானது அல்ல. ஆனால் மிகப்பெரிய கருந்துளைகள் பற்றி நாம் அறிவோம். இதுவரை கண்டறியப்பட்ட கருந்துளைகளில் மிகவும் பெரியது டான் 618 ஆகும். புவியிலிருந்து 18 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் அது அமைந்துள்ளது. சூரியனைக்காட்டிலும் 66 பில்லியன் எடை கொண்டது இது. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்று 40 மடங்கு அகலம் கொண்டது. நம்முடைய பால்வெளி குழுமங்களின் மத்தியில் ஹோம் 15ஏ என்ற கருந்துளை உள்ளது. அதனுடைய எடை சூரியனைப் போன்று 44 பில்லியன் அதிகமாக இருக்கும் என்றும் அதன் தூரம் நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்று 30 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இவை மறுக்க முடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஆனால் அதனைக் காட்டிலும் மிகப்பெரிய கருந்துளைகள் அங்கே இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கண்காணிப்பு அண்டவியல் நிபுணரான ஜேம்ஸ் நைட்டிங்கேல், "கோட்பாடுகள் என்ற கோணத்தில் பார்த்தால் கருந்துளையின் அளவு இவ்வளவுதான் என்று மதிப்பிட இயலாது," என்று கூறுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சூரியனைப் போன்று 33 பில்லியன் அதிக எடை கொண்ட கருந்துளையை கண்டுபிடித்தவர். நாம் இது நாள் வரை அறிந்திருக்கும் கருந்துளைகள் பல்வேறு அளவைக் கொண்டவை. மிகச்சிறிய கருந்துளைகள் ஒரு அணுவின் அளவிற்கு சிறியதாக இருக்கும். நட்சத்திரங்கள் அழிந்து உருவாகும் ஸ்டெல்லர் மாஸ் கருந்துளைகள் அதிக பரிட்சயமானவை. இவை சூரியனின் எடையைப் போல் மூன்று மடங்கு முதல் 50 மடங்கு வரை பெரியவையாக இருக்கலாம். ஆனால் அவை 'லண்டன் அளவுடைய கருந்துளைகள்' என்ற பொருள்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார் கனடாவில் உள்ள மாண்ட்ரியால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஜூலி ஹ்லாவசெக் லாரோண்டோ. அவர் அங்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். இதற்கு அடுத்த வகை கருந்துளைகள் 'இண்டர்மீடியேட் மாஸ்' கருந்துளைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சூரியனைக்காட்டிலும் 50 ஆயிரம் மடங்கு எடை கொண்டவை. வியாழன் கோளின் அளவுக்கு விரிந்து காணப்படுகின்றன. அடுத்தது 'சூப்பர்மாஸிவ்' கருந்துளைகள். அவை சூரியனைக் காட்டிலும் பல மில்லியன், பில்லியன் எடைக் கொண்ட கருந்துளைகள் ஆகும். பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வீதியின் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையை சுற்றிக் கொண்டிருக்கும் வாயு வளை அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் என்றால் என்ன? 'அல்ட்ராமாஸிவ்' கருந்துளைகளுக்கான வரையறை ஏதும் இதுவரை இல்லை என்ற போதும் அவை பொதுவாக சூரியனைக் காட்டிலும் 10 பில்லியன் அதிகம் எடையில் துவங்கும் என்ற கருத்தை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்கிறார் லாரோண்டோ. கருந்துளைகள் அவ்வளவு பெரியதாக மாறாது என்று கோட்பாட்டு அளவில் கூற இயலாது. ஒப்பீட்டளவில் பிரஞ்சத்தின் இளம்வயது என்பது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பதையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதை கருத்தில் கொண்டால், அவற்றின் இருப்பானது மனித எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களை ஈர்ப்பு விசையினால் உள்ளிழுத்துக் கொள்கிறது கருந்துளைகள். இதனை மேற்கோள்காட்டி பேசும் லாரோண்டோ, "இந்த பாரம்பரிய கருத்தாக்கத்தை கணக்கில் கொண்டால் அதிக எடையிலான கருந்துளைகள் உருவாவது சாத்தியமற்றது," என்கிறார். மக்கள் இதன் இருப்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். கோட்பாடு அளவில், தொடர்ச்சியாக கருந்துளைக்குள் அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகள் சென்று கொண்டே இருக்கும் போது அது அளவில் பெரிதாகிக் கொண்டே இருக்கும். நடைமுறையில், பிரபஞ்சத்தின் வயது மற்றும் நாம் ஒரு கருந்துளை வளரும் விகிதமாக நாம் கருதும் விகிதம் கருந்துளைகளின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். கோட்பாட்டளவில், காலம் கணக்கிடப்பட்ட நாளில் இருந்து கருந்துளைக்குள் நட்சத்திர கழிவுகளும் இதர வானியல் கூறுகளும் சென்று கொண்டே இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு அந்த கருந்துளையானது 270 பில்லியன் சோலார் எடை கொண்ட கருந்துளையாக அது மாறியிருக்க வேண்டும். ஆனால், கருந்துளைகள் அவ்வாறு வளரும் என்று யாரும் கருதவில்லை அதனால் தான் 'அல்ட்ராமாசிவ்' கருந்துளைகள் எனப்படும் பாரிய கருந்துளைகள் யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள், சில கருந்துளைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை ஈர்ப்பு விசை மூலம் கிரகித்துக் கொண்டு, நவீன பிரபஞ்சத்தில் டிரில்லியன் சோலார் எடை கொண்ட கருந்துளைகளாக மாறியிருக்கலாம் என்று கருதுகின்றனர். மிகப் பெரிய கருந்துளைகள் என்ற முத்திரை குத்தப்பட்ட இவை, ஒரு ஒளி ஆண்டின் ஆரத்தைக் கொண்டிருக்க கூடும். ஆனால் அத்தகைய கூறுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில நட்சத்திர மண்டலங்களின் மையங்களில் அவை மறைந்திருக்கலாம் என்ற கருத்தையும் நம்மால் நிராகரிக்க இயலாது. 2010களில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் முதல் 'அல்ட்ராமாசிவ்' கருந்துளைகளைக் கண்டறிந்தனர். பிறகு, 2023ம் ஆண்டில் நைட்டிங்கேல் மற்றும் அவருடைய குழு கண்டறிந்த கருந்துளை உட்பட கிட்டத்தட்ட 100 கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெகு தூரத்தில் உள்ள விண்மீன் மண்டலத்தில் கருந்துளையைச் சுற்றி ஒளி வளைந்து சென்றதன் விளைவாகவே இத்தகைய கருந்துளைகள் கண்டறியப்பட்டன. "இது மிகவும் தற்செயலான கண்டுபிடிப்பு" என்கிறார் நைட்டிங்கேல். "அவை பிரபஞ்ச வரலாற்றின் ஆரம்பத்தில் பிறந்து, பின்னர் மூர்க்கமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை விழுங்கியிருக்கக் கூடும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,SLOAN DIGITAL SKY SURVEY படக்குறிப்பு, குவாசர் அருகே நிலை கொண்டிருக்கும் டான் 618 அல்ட்ராமாஸிவ் கருந்துளை கருந்துளைகள் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் இயற்பியல் என்ன? கருந்துளைகளை அவற்றின் இயல்பின் காரணமாக நாம் நேரடியாகப் பார்க்க முடியாது. ஈவன்ட் ஹொரைசன் (Event Horizon) என்று அழைக்கப்படும் கருந்துளைகளின் எல்லையில், ஈர்ப்பு விசை மிகவும் தீவிரமாக இருக்கும். அதில் இருந்து எதுவும் தப்பிக்க இயலாது. ஒளியும் கூட. எனவே கருந்துளையால் ஈர்க்கப்படும் அதனைச் சுற்றியுள்ள பிரகாசமான பொருட்களின் மீது விழும் அதனின் நிழலைக் கொண்டே கருந்துளைகளைக் காண இயலும். இருப்பினும், ஒரு பால்வீதியைப் பார்த்து அதில் மத்திய கருந்துளையின் விளைவுகளைக் குறிப்பிடுவதன் மூலம் அவற்றின் இருப்பை நாம்மால் எளிமையாக யூகிக்க இயலும். கருந்துளையின் துருவங்களிலிருந்து வெளியேற்றப்படும் பலமிக்க ஒளிக்கற்றைகளை காண்பது மற்றொரு வழி. "இது போன்ற ஒளிக்கற்றைகளை அது எவ்வாறு உருவாக்குகிறது என்று நமக்கு தெரியாது. ஆனால் அவற்றால் இதனை செய்ய இயலும்," என்கிறார் லாரோண்டோ. ரேடியோ ஜெட்கள் என்று அழைக்கப்படும் இந்த ஒளிக்கற்றைகள் மில்லியன் ஒளி ஆண்டுகள் நீளத்தை கொண்டிருக்கலாம். கருந்துளைகள் சூடான வளையங்களையும் உருவாக்கும். அக்ரிஷன் டிஸ்க்குகள் (Accretion disks) என்று அழைக்கப்படும் இந்த வளையங்கள் கருந்துளைகளைச் சுற்றி சுழலும் பொருட்கள் கருந்துளைக்குள் இழுக்கப்படும் போது உருவாகுகின்றன. கருந்துளையைச் சுற்றி பொருட்கள் அபரிமிதமான ஈர்ப்பு விசையால், "ஒளியின் வேகத்தில்" வேகமாகச் சுழல்கிறது என்கிறார் லரோண்டோ. கருந்துளையை நோக்கி பொருட்கள் விழும் போது, எக்ஸ் கதிர்கள் வெளியிடப்படுகிறது. ஈவன்ட் ஹொரைசன் எனப்படும் அதன் எல்லைக்கு அப்பால் பொருட்கள் விழும். மேலும் அதில் இருந்து தப்பிக்க இயலாது என்ற இயற்பியல் - அல்ட்ராமாஸிவ் மற்றும் சிறிய கருந்துளைகளுக்கு இடையே பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளது. அல்ட்ராமாசிவ் கருந்துளைகள் அவற்றின் அளவு காரணமாக ஒரு சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் துரதிர்ஷ்டவசமாக ஒரு நட்சத்திர தூசி கருந்துளையில் விழுந்தால், உங்கள் கால்களுக்கும் உங்கள் தலைக்கும் இடையே உள்ள ஈர்ப்பு வித்தியாசத்தின் காரணமாக, உங்கள் உடல் நீளமாக்கப்பட்டுவிடும். ஸ்பாகெட்டிஃபிகேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆனால் ஒரு அல்ட்ராமாசிவ் கருந்துளையில், ஈர்ப்பு மிகவும் குறைவாவும் செங்குத்தானதாகவும் உள்ளது, ஏனெனில் அது விண்வெளியில் மேலும் விரிவடைகிறது. ஈவன்ட் ஹொரைசன் எனப்படும் அதன் எல்லைக்கு அப்பால் விழுவதை நீங்கள் உணரக் கூட இயலாது. "உங்கள் உடல் நீட்டிக்கப்படாது" என்கிறார் நைட்டிங்கேல். கருந்துளையின் ஈர்ப்பு விசையின் காரணமாக உங்களைச் சுற்றியுள்ள நட்சத்திர ஒளியின் சிதைவுதான் உங்கள் விதியை மாற்றி அமைக்கும் ஒரே விசயமாக இருக்கும். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூப்பர்மாஸிவ் கருந்துளைகளில் இருந்து வெளியேறும் ஒளிக்கற்றைகள் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கிக்குத்தான் நன்றி கூற வேண்டும். பிரபஞ்சத்தின் எந்த மூலைகளில் இருந்தும் வரும் வெளிச்சம் நம்மை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் காரணமாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைதூரத்தில் உள்ள வானியல் கூறுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பிரபஞ்சத்தின் முதல் சில நூறு மில்லியன் ஆண்டுகள் வயதான விண்மீன் திரள்களைப் பார்க்க வழிவகை செய்கிறது இந்த தொலைநோக்கி. அவற்றில் சில ஏற்கனவே பெரிய கருந்துளைகளைக் கொண்டுள்ளன. இத்தகைய தொலைதூர கருந்துளைகள் இவ்வளவு பெரியதாக வளர, அவை பிரபஞ்ச வரலாற்றின் துவக்கத்திலேயே பிறந்திருக்க வேண்டும், பின்னர் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான வரம்புகளைப் பற்றி நமக்கு அறிந்த அனைத்தையும் மீறும் விதமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை கடுமையாக உள்வாங்கியிருக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், எதிர்பார்த்ததை விட மிகவும் பிரகாசமாக ஒளிரும் நூற்றுக்கணக்கான விசித்திரமான, சிறிய விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை பிக் பேங்கிற்கு சுமார் 600 மில்லியன் ஆண்டுகள் முதல் ஒரு பில்லியன் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். நிறம் மற்றும் அளவு காரணமாக அவை லிட்டில் ரெட் டாட் (Little Red Dot) விண்மீன் திரள்கள் என்று அறியப்படுகின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவை வெளியிடும் ஒளி, அவற்றுக்குள் ஏற்கனவே சூப்பர்மாஸிவ் கருந்துளைகள் இருப்பதை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. ஆராய்ச்சிகள், கருந்துளைகள் உண்மையில் விரைவாக வளரும் தன்மை கொண்டவை என்கின்றன. நமது பிரபஞ்சத்தில், விண்மீன் திரள்களின் மையங்களில் உள்ள பெரிய கருந்துளைகள் ஹோஸ்ட் கேலக்ஸியைக் காட்டிலும் விட சுமார் 1,000 மடங்கு சிறியதாக இருக்கும். ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கருந்துளைகள் பிரபஞ்சம் உருவான காலத்தில் இருந்தே அதன் பால்வீதி மண்டலங்களின் அளவைக் கொண்டுள்ளன என்று கண்டறிந்துள்ளது. பால்வீதி மண்டலங்கள் உருவாவதற்கு முன்பே அங்கு கருந்துளைகள் இருந்திருக்கக் கூடும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன. நம்முடைய பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில், இந்த கருந்துளைகளின் எடையானது நாம் எதிர்பார்ப்பதை விட பத்து முதல் சில நூறு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அண்டவியல் நிபுணர் ஹன்னா அப்லெர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வானியல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டன்கள் எனப்படும் ஆரம்பகால கருந்துளைகளை அதீத எடை கொண்ட கருந்துளைகள் என அழைக்கின்றனர் சூப்பர்மாஸிவ் கருந்துளைகள் எப்படி உருவாகியிருக்கக் கூடும்? கருந்துளைகள் எவ்வாறு வளருகின்றன என்பது புதிராக உள்ளதோ அவ்வாறே ஆரம்பகால பிரபஞ்சத்தில் எவ்வாறு இது தோன்றியது என்பதும் புதிராக உள்ளது. பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்கள் அழிந்த போது இது தோன்றியிருக்கக் கூடும் என்று ஒரு சிலர் நம்புகின்றனர். பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய நட்சத்திரங்கள் பாப்புலேசன் 3 ஸ்டார்கள் (Population III stars) என்று அழைக்கப்படுகின்றன. மிகப்பெரிய நட்சத்திரங்களான இவை சூரியனைக் காட்டிலும் 100 முதல் 1000 மடங்குகள் நிறை கொண்டவை. ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் அவை உருவானது. அந்த நட்சத்திரங்களின் இறுதி காலத்தில் ஏற்பட்ட சூப்பர்நோவா பெரும்வெடிப்பால் எடை கொண்ட பொருட்களாக அது வெடித்துச் சிதறியது. அவையே பிறகு இதர நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் நம்முடைய சூரியனாகவும் பூமியாகவும் உருப்பெற்றன. ஆனால் இதே நட்சத்திர அழிவு பெரிய கருந்துளைகளை உருவாக்கி ஈர்ப்பு விசைக் காரணமாக உள்புறமாக வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் இருந்து தோன்றிய கருந்துளைகள் நட்சத்திர நிறை கருந்துளைக் காட்டிலும் அதிக எடை கொண்டவை என்று விவரிக்கிறார் வானியல் இயற்பியலாளர் மர் மெஸ்குவா. ஸ்பெயினில் உள்ள வானியல் அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், "இந்த நிலையில் இருந்து வளர முடியும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதீத எடை கொண்ட சூப்பர்மாஸிவ் கருந்துளைகளாக மாற இயலும்," என்றும் தெரிவிக்கிறார். முதல் கருந்துளைகள் ஏற்பட்ட மற்றொரு சாதகமான சாத்தியக்கூறாக பின்வரும் கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது. முதல் கருந்துளைகள் நட்சத்திரங்களிலிருந்து உருவாகவில்லை. மாறாக, நேரடி வெடிப்பு கருந்துளைகள் (direct collapse black holes) எனப்படும் வாயு மேகங்களிலிருந்து உருவாகின என்பதாகும். வழக்கமாக, இந்த மேகங்கள் ஈர்ப்பு விசையால் அடர்த்தி அடையும் போது நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் வெப்பநிலை போதுமான அளவிற்கு அதிகமாக இருந்தால், சில மேகங்கள் நட்சத்திரங்களை உருவாக்காமல் நேரடியாக கருந்துளைகளாக வெடித்திருக்கலாம். "இது போன்ற சூழலை தற்போதைய பிரபஞ்சத்தில் நாம் காணவில்லை" என்கிறார் மெஸ்குவா. ஆரம்பகால வெப்பமான, கொந்தளிப்பான பிரபஞ்ச சூழ்நிலையில் அது சாத்தியமாகியிருக்கலாம் என்கிறார் அவர். பாப்புலேசன் 3 நட்சத்திரங்கள் (Population III stars) அல்லது நேரடி வெடிப்பு கருந்துளைகளை (direct collapse black holes) நாம் இன்னும் உறுதியாக காணவில்லை. எனவே ஆரம்பகால பிரபஞ்சத்தில் கருந்துளை உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவை இந்த இரண்டில் எது என்பதை நம்மால் துல்லியமாக கூற இயலாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விண்மீன் திரள்கள் அனைத்தும் பிரகாசமாக இருப்பதில்லை. பெரிய கருந்துளைகளை கொண்ட திரள்கள் அனைத்தும் இருண்டே இருக்கின்றன எப்படியாக கருந்துளைகள் உருவாகியிருந்தாலும் அவை பெரிய அளவில் வளர விரைவாக ஒரு வழியை கண்டுபிடித்திருக்கின்றன. அதற்கான சாத்தியமான கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிக அளவில் அவை உருவாக்கப்பட்டு பிறகு ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய கருந்துளைகளை அவை உருவாக்கியிருக்க வேண்டும். முதலில் இடைநிலை நிறை கொண்ட கருந்துளைகள். பின்னர் சூப்பர்மாஸிவ் கருந்துளைகள். பின்னர் அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள். இது பாப்புலஸ் 3 நட்சத்திரங்களிலிருந்து தோன்றிய கருத்தாக்கத்தை ஆதரிக்கும். "இன்று நாம் பல இடைநிலை கருந்துளைகளைக் கண்டால், அவை பாப்புலஸ் 3 நட்சத்திரங்களின் மூலம் உருவாகின்றன என்று அர்த்தம்" என்கிறார் மெஸ்குவா. சிறிய விண்மீன் திரள்கள் மத்தியில் ஒரு சில இடைநிலை எடை கொண்ட கருந்துளைகளைக் கண்டறிந்தால் அவை பெரிதாகும் என்று சில வானியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அல்ட்ராமாசிவ் கருந்துளைகள் வெடிப்புகளில் அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகளை விரைவாக உட்கொள்வதன் மூலம் விரைவாக வளர்ந்திருக்கலாம். இதற்கான ஆதாரங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்து வருகிறது. பிரகாசமான மற்றும் சுறுசுறுப்பான சில ஆரம்பகால விண்மீன் திரள்களை வானியலாளர்கள் கவனித்துள்ளனர். ஆனால் மற்ற பெரிய கருந்துளைகளுடன் உள்ள விண்மீன் திரள்கள் அனைத்தும் செயலற்றதாகத் தோன்றுகின்றன. இவை இவ்வாறு செயலற்று போவதற்கு முன்பு அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகளை ஈர்ப்பின் காரணமாக உட்கொண்டிருக்கக் கூடும் என்று பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். "இந்த சுழற்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்கிறார் லாரோண்டோ. இருப்பினும், வேகமாக அனைத்தையும் உள்ளே கிரகித்துக் கொள்ளும் போக்கானது அரிதாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார். "கருந்துளையின் வாழ்நாளில் 1% இருக்கலாம்." நவீன பால்வெளியில் எவ்வளவு பெரிய கருந்துளைகள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "பிரபஞ்சத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டே அதன் எடையானது 270 பில்லியன் சோலார் நிறை கொண்டதாக இருக்கலாம் என்று நாங்கள் தோராயமாக மதிப்பிட்டுள்ளோம்" என்று லாரோண்டோ கூறுகிறார். "ஒருவேளை பிரபஞ்சம் நம்மை மீண்டும் ஆச்சரியப்படுத்தும்." என்று கூறினார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvglgr50lz0o
  19. அரசியல் நோக்கத்துடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்- விஜித ஹேரத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கைகள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இரண்டு அறிக்கைகளும் அரசியல் நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் பூர்த்தியான பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவேண்டுமா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனினும் விசாரணைகளின் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும். 2019 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் உயர்நீதிமன்றமும் இரண்டு சிஐடி உத்தியோகத்தர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. உயர்நீதிமன்றமும் ஆணைக்குழுவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல அரசாங்க அதிகாரிகள் தாக்குதலை தடுக்க தவறியமையால் குற்றவாளிகள் என தெரிவித்திருந்தது. உரிய புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்த தவறினார்கள் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அவர்களை நஷ்ட ஈட்டை செலுத்துவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் எந்த இடத்திலும் ஷானி அபயசேகரவும் ரவி செனிவிரட்ணவும் குற்றவாளிகள் என தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/196839
  20. அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதியலில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இன்றிரவு இது ஒரு சோகமான நிகழ்வு. இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். இருப்பினும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்று தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை. தற்போது வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. https://www.virakesari.lk/article/196823
  21. அதுவும் சரி தான் அண்ணை. ஒரு தடவை மகிழ்ந்து, 2 தடவை நெகிழ்ந்து! நான் மொத்தமாக வழங்கினதை நினைத்து எழுதிவிட்டேன் அண்ணை.
  22. (எம்.மனோசித்ரா) இலங்கை துறைமுக அதிகாரசபையால் கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுக அதிகாரசபைக்கு முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக இயக்குவதற்கு கடந்த 2021 பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கொள்கலன் முனையத்திற்குத் தேவையான பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் தனியார் கொள்கலன் இயக்குபவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டு சபைச் சட்டத்தின் கீழ் காணப்படும் பல்வேறுபட்ட வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை 'விசேட கருத்திட்டமாக' நிதி விடயதான அமைச்சரால் வெளியிடுவதற்காக போக்குவரத்து, அதிவேக வீதி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196846
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control - LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும் சீனாவுடன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனாவில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், இந்த முயற்சி இந்திய - சீன உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர். திங்களன்று (அக்டோபர் 21), இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு செய்தியாளர் சந்திப்பில், ''கடந்த பல வாரங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் ராணுவ மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த 'ராணுவ விலகல்' உடன்பாடு எட்டப்பட்டது'' என்றார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் திங்களன்று தனியார் செய்தி சேனலான என்.டி.டி.வி-யின் நிகழ்ச்சியில், "2020-ஆம் ஆண்டு, சீன எல்லையில் இந்திய வீரர்கள் எல்லையில் எதுவரை சென்றனரோ, மீண்டும் அதுவரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்," என்று கூறினார். மேலும், “பதற்றத்தைக் குறைக்கும் வகையில், இந்தியா-சீனா இடையேயான பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ளது. இரு தரப்பினரும் இன்று பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும்,” என்றார். இருப்பினும், "எல்லை கட்டுப்பாடு கோட்டில் 2020-க்கு முந்தைய நிலைமை மீண்டும் கொண்டுவரப்படும். இது ஒரு முக்கியமான முன்னேற்றம். ஆனால் இதன் முழு தாக்கத்தை இப்போது மதிப்பிட முடியாது. அதற்குக் காத்திருக்க வேண்டும்," என்றார். பட மூலாதாரம்,REUTERS இந்தியா-சீனா ஒப்பந்தம் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன? இந்தியா-சீனா விவகாரங்களில் நிபுணரும், கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தோ-பசிபிக் ஸ்டடீஸின் நிறுவனர்-தலைவருமான பேராசிரியர் சிந்தாமணி மொஹபத்ரா இதுகுறித்து பிபிசி இந்தியிடம் பேசினார். "இது ஒரு நல்ல தொடக்கமாகும். ஏனெனில், கடந்த சில மாதங்களாக ராஜ்ஜீய மற்றும் ராணுவ மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் பற்றி விவாதித்தன,” என்றார். “ஒரே ஒரு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து பதட்டங்களையும் தீர்த்துவிடாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை, உறவுகளை இயல்பாக்குவதற்கான முதல் படியாகக் கருதலாம்,” என்றார். அவர் மேலும் பேசுகையில், “இப்போது ‘ராணுவ விலகல்’ ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதாவது இது சில பகுதிகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் சில பகுதிகளில் நடக்க வேண்டும். கடந்த மாதம், இந்திய ராணுவத் தளபதி, ‘எளிதான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி வரும் காலங்களில் சிக்கலான பிரச்னைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார்'' என்றார். சில வல்லுநர்கள் இந்த அறிவிப்பை எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர். ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரான தன்வி மதன், தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில், “2017-ஆம் ஆண்டின் டோக்லாம் பிரச்னையும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்புதான் தீர்க்கப்பட்டது. அதுதான் பிரதமர் மோதி சீனாவுக்குச் செல்ல வழிவகுத்தது. அப்போதும் சீனா புவிசார் அரசியல் பிரச்னைகளைச் சந்தித்தது,” என்று பதிவிட்டிருக்கிறார். தக்ஷிலா இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் நிதின் பாய், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தியா - சீனா எல்லையில் அமைதியை ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் உடனே மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனெனில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதற்கு அதன் கொள்கைகளில் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார். வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை அன்று, ராணுவ விலகல் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக மட்டுமே கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் மீதமிருக்கும் சர்ச்சைகளில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் இருக்கும் டெப்சாங் பகுதி பற்றி குறிப்பிடும் விதமாக, மற்ற பகுதிகளிலும் ராணுவ ரோந்து இருக்கும் என்று கூறினார். சமீபத்திய அறிவிப்பில் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிகிறது என்று பேராசிரியர் சிந்தாமணி மொகபத்ரா கூறுகிறார். "இந்தியா, சீனா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கு இது மிகவும் நல்ல செய்தி," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டம் இப்போது ஏன் இந்த ஒப்பந்தம்? இதற்குமுன், ஆகஸ்ட் 2023-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தின் போது பிரதமர் மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையே கடைசி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இரு நாடுகளும் பரஸ்பர உறவை மேம்படுத்த விரும்புவதாகக் கூறப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே 3,488கி.மீ., தொலைவுக்குப் பொதுவான எல்லை உள்ளது. இப்பகுதியிலிருந்து ராணுவத்தை அகற்றிப் பதற்றத்தைக் குறைப்பது இரு நாடுகளுக்கும் நல்லது. முன்னதாக, 2022-இல், இரு தலைவர்களும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். ஆனால் அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை. சமீபத்திய மாதங்களில் உலக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சுமுகமாக இல்லை. ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், சீன விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் ஜபின் டி ஜேக்கப், இதுகுறித்து பிபிசி ஹிந்தியிடம் பேசினார். "இந்தியாவுடனான உறவைச் சீர்படுத்துவதற்கான முயற்சிக்கு சீனாவின் சூழ்நிலைகளும் ஓரளவு காரணமாகும். அமெரிக்காவுடனான சீனாவின் உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது,” என்கிறார். “அடுத்த அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் அவருடனான உறவில் எந்த வித்தியாசமும் இருக்காது என்பதை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. யுக்ரேன் போரின் போது ரஷ்யாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க சீனா செய்த ஒப்பந்தம், சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலையும் அதிகரித்துள்ளது,” என்கிறார் அவர். சீனா தற்போது சர்வதேச அளவில் சிக்கலில் உள்ளதாகவும், உள்நாட்டிலும் அதன் பொருளாதார முன்னேற்றம் குறைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். “இந்தச் சூழ்நிலையில், சீனாவுக்குத் தனது வெளியுறவுக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசரத் தேவை இருப்பதுடன், வளைந்து கொடுக்கும் மனப்பான்மையைக் காட்டுவதும் அவசியமாகும்,” என்கிறார் அவர். பேராசிரியர் ஜேக்கப் மேலும் கூறுகையில், “இந்த அறிவிப்பு திடீரென வந்ததல்ல. இதற்கு முன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதை அறிவிப்பதற்காக பிரிக்ஸ் மாநாட்டின் சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்கிறார். கடந்த காலங்களிலும் இது போன்ற பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றைச் சீனா மீறியதால், இந்த ஒப்பந்தத்தை சீனா நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 'இந்தியா எதிர்பார்த்தது போல் மேற்கு நாடுகளில் இருந்து முதலீடு வரவில்லை. ஆனால் சீனாவில் இருந்து முதலீடு வருகிறது' வணிகத்தில் என்ன தாக்கம் இருக்கும்? 2020-இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானில் நடந்த வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல சீன வீரர்களும் இறந்தனர். எனினும், இதனால் இரு நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. 2022-இல் 135.98 பில்லியன் டாலர்களாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 2023-இல் 136 பில்லியன் டாலராக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 11.4 லட்சம் கோடி ரூபாய்). பேராசிரியர் ஜேக்கப், "மேம்பட்ட உறவுகள் வர்த்தகத்தின் மீதும் தாக்கம் செலுத்தும். சீன முதலீடு தொடர்பாக இந்தியா வளைந்துகொடுக்க வாய்ப்புள்ளது. தற்போது சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மேற்கத்திய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,” என்கிறார். மேலும், “இந்தியா எதிர்பார்த்தது போல் மேற்கு நாடுகளில் இருந்து முதலீடு வரவில்லை. ஆனால் சீனாவில் இருந்து முதலீடு வருகிறது. உதாரணமாக, மின்சார வாகனங்கள், அதிநவீன தொழில்நுட்பம், அரிய கனிமங்கள். இந்தியாவுக்குத் தேவையான அத்தியாவசிய இறக்குமதிகள் சீனாவிலிருந்து மட்டுமே வரும், மேற்கு நாடுகளிலிருந்து அல்ல,” என்கிறார். இது, மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மாறப்போகிறது என்று இது அர்த்தப்படாது, என்று பேராசிரியர் ஜேக்கப் கூறுகிறார். “இந்தியா தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப தனது கொள்கைகளை நிர்ணயித்து வருகிறது,” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2020-க்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் சில முக்கிய விஷயங்களை 'தி பிரிண்ட்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. "ஒப்பந்தத்தின்படி, 2020-க்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். டெப்சாங்கைத் தவிர, இதில் PP10 முதல் PP13 வரையிலான பகுதியும் அடங்கும். மேலும், மாதம் இருமுறை ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். மோதல்களைத் தவிர்க்கும் வகையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரோந்துப் பணியைத் தொடங்குவதற்கு முன், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தகவல்களை வழங்க ஒப்புக்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டளை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. 'தி பிரிண்ட்' செய்தியின்படி, சீன வீரர்கள் முந்தைய நிலைக்குத் திரும்புவார்கள், இந்திய வீரர்கள் 'ஒய்' சந்திப்பில் ரோந்து செல்வதை அவர்கள் தடுக்க மாட்டார்கள். "ராணுவ விலகல் முடிந்த பாங்கோங் த்சோ, கால்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவின் வடக்குக் கரைகள் ஆகிய பகுதிகளில் இருபுறமும் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்குவர்," என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில், ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலந்து கொள்வார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. சிந்தாமணி, "இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பால், இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இயல்பாகவே நடக்கும் என்பதுபோலத் தெரிகிறது. அது நடக்கக் கூடும். ஆனால், பிரிக்ஸ் மாநாடு காரணமாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது என்று கூற முடியாது. அது தற்செயலானது," என்கிறார். அவர் மேலும், “பிரிக்ஸ் விரிவடைந்து வரும் ஒரு அமைப்பு. இந்தியாவும் சீனாவும் அதன் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பது பிரிக்ஸ் அமைப்புக்கு ஒரு நல்ல செய்தி. இது பிரிக்ஸ் அமைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பெரிதும் உதவும். பிரிக்ஸ் முன்னேற வேண்டுமானால், அதன் முக்கிய உறுப்பினர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம்," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c5y0ypppp0ro
  24. மன்னன் மனங் குளிர்ந்ததால் மொத்தமாக 15000 பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது சிறி அண்ணை! தலையங்கம் பிழை!!
  25. வீரகத்தி தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தியின் (ஜே.வி.பி.) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்கள். தேர்தல்களில் தோல்வியடைந்தால் அல்லது இறந்து போனால் மாத்திரமே கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வுபெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை அரசியலில் ஓய்வு என்ற சொல்லை தேசிய மக்கள் சக்தியினால் இப்போது அறிமுகப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது என்று கூறியிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தலில் இருந்து விலகியிருப்பது மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களில் ஒன்று என்று குறிப்பிட்டார். அதேவேளை, ஊழல்தனமான அரசியல்வாதிகளும் இனவாதிகளான அரசியல்வாதிகளும் தோல்வியை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததாகவும் அத்தகைய அரசியல்வாதிகள் வேட்பாளராக வருவதற்கு கூட நினைத்துப் பார்க்காமல் இருப்பதை உறுதிசெய்ததன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றியைப் பெற்று விட்டது என்றும் ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிமால் இரத்நாயக்க கூறினார். "அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததன் மூலம் ஊழல்காரர்களினதும் இனவாதிகளினதும் அரசியலுக்கு முடிவு கட்டியதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம். அந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. திசாநாயக்கவுக்கு வாக்களித்த மக்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்றியதன் மூலம் மகத்தான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்" என்று இரத்நாயக்க மேலும் கூறினார். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை அரசியலில் முன்னென்றுமே இவ்வாறு நடந்ததில்லை. அவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகிறார்கள். சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். தங்களது தீர்மானத்துக்கு இந்த அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களை கூறுகின்ற போதிலும், மக்கள் தங்களை நிச்சயம் நிராகரிப்பார்கள் என்ற பயம் காரணமாகவே அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஓய்வுபெறவேண்டிய வயதில் உள்ள சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, இளையவர்களும் கூட தங்களது கட்சிகளின் தேசியப்பட்டியலுக்குள் புகுந்துகொண்டார்கள். சில அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டு தாங்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். குடும்ப அரசியலை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை இது வெளிக்காட்டுகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் குடும்ப ஆதிக்க அரசியலின் பிரத்தியேகமான அடையாளமாக விளங்கிவந்த ராஜபக்சாக்கள் சிங்கள மக்கள் தங்களைப் பற்றி உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். ராஜபக்ச சகோதரர்களில் எவருமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச நேரடியாக போட்டியிடாமல் தேசியப் பட்டியலுக்குள் பாதுகாப்பு தேடிக்கொண்டார். அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியிருப்பதாக கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி எளிதாக வெற்றிபெறும் என்று கூட நம்பிக்கை வெளியிட்டிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். விடுதலை புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக தங்களை சிங்கள மக்கள் நெடுகவும் ஆதரிப்பார்கள் என்றும் தங்களது முறைகேடுகளைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்றும் ராஜபக்ச்க்கள் நம்பிக்கையை வளர்த்திருந்தார்கள். ஆனால், அவர்களின் தவறான ஆட்சியே இறுதியில் குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு எதிராகவும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் மக்கள் கிளர்ந்தெழுவதற்கும் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் வழிவகுத்தது. 2022 மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்தபோது பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய பிறகு பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றிய அவரது மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமால் ராஜபக்ச தனது சகோதரர் ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தபோது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார். சகோதரரின் ஆலோசனையை மகிந்த ராஜபக்ச இன்று வரை கருத்தில் எடுக்கவில்லை. ராஜபக்சாக்களும் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகளும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு எடுத்த தீர்மானத்தையே ஜே.வி.பி.யின் தலைவர்கள் இனவாத அரசியலின் முடிவாகக் கூறுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இடையறாது பேசிவரும் உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் இருப்பதோ அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குவதோ இனவாத அரசியலின் முடிவாக அமைந்துவிடப் போவதில்லை. இனவாத அரசியலின் வெளிப்பாடுகளான அவர்கள் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக விதைத்த நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் எதிராக உணர்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. அந்த துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தில் ஓரளவுக்கேனும் மாற்றம் ஏற்படாதவரையில் புதிய அரசியல் கலாசாரத்தைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக நெடுகவும் நியாயமற்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கும் தடையாக இருந்துவருகிறது என்ற புரிதலை இனிமேலாவது பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு வரவேண்டும். தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. 1957 பண்டா - செல்வா ஒப்பநந்தமும் 1965 டட்லி - செல்வா ஒப்பந்தமும் கைச்சாத்திட்டபோது ஜே.வி.பி. தோன்றியிருக்கவில்லை. ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம் 1981ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மாவட்ட சபைகள் தொடக்கம் இந்தியாவின் தலையீட்டையடுத்து அதே ஜெயவர்தன அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தின் ஊடாக கொண்டுவந்த மாகாணசபைகள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வரை சகல அரசியல் தீர்வு முயற்சிகளையும் ஜே.வி.பி. எதிர்த்தது.அதன் அரசியல் அகராதியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமிருந்ததில்லை. அரசைக் கவிழ்ப்பதற்காக இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி.பி.யின் வன்முறைக் கடந்த காலத்துக்கு அதை பணயக்கைதியாக வைத்திருக்காமல் தென்னிலங்கை மக்கள் மாற்றத்துக்கான தங்கள் வேட்கையில் அதை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜே. வி.பி.யினர் இதுகாலவரையில் கொண்டிருந்த எதிர்மறையான நிலைப்பாடுகளுக்கு அவர்களை பணயக் கைதியாக வைத்திருக்காமல் அவர்களுக்கு சிறுபான்மைச் சமூகங்கள் நேசக்கரம் நீட்டுவதற்கான வழியை அதன் தலைவர்கள் திறந்துவிடவேண்டிய காலம் வந்துவிட்டது. பெரும்பான்மைச் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் மாறியிருக்கும் தற்போதைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை இனப்பிரச்சினை தொடர்பிலும் தென்னிலங்கையில் ஆரோக்கியமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டும். ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்க வெற்றிபெற்று பதவிக்கு வந்ததை தொடர்ந்து இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே.வி.பி.யின் நிவைப்பாட்டில் ஓரளவுக்கேனும் நெகிழ்ச்சித்தன்மை ஏற்படக்கூடும் என்று கணிசமான ஒரு பிரிவினர் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் ஒரு கணிசமான பிரிவினர் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களிடம் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவதைப் போன்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்கள் அமைந்திருந்தன. "அரசிலமைப்புக்கான 13வது அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக 13வது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் கூறினார். ஜனாதிபதி திசாநாயக்கவை பதவிக்கு கொண்டுவந்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் கொண்டுவந்திருப்பதாக கூறப்படும் மாற்றத்தில் தங்களது நீண்டகால அரசியல் அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு இடமளிக்கப்படும் என்பதில் தமிழ் மக்களுக்கு ஏற்கெனவே இருக்கும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜே.வி.பி. செயலாளரின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் அல்ல தமிழ் அரசியல்வாதிகளே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் இனவாதிகள் நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள். அது ஒன்றும் ரில்வின் சில்வாவின் கண்டுபிடிப்பு அல்ல. ஜே.வி.பி. தலைவர்கள் ஒருபுறத்தில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு இனவாத அரசியல் முடிவுக்கு வருவதாக கூறுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் இனவாதிகளின் பழையை கருத்தை தாங்களே திருப்பிக் கூறிக்கொண்டிருப்பது விசனத்துக்குரியது. மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகவும் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாகவும் சூளுரைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இனவாதிகள் காலங்காலமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்கு கூறிவந்த கருத்துக்களையே நம்பிக்கை வைப்பதாக இருந்தால் மாற்றம் என்பதில் அர்த்தமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. தலைவர்கள் இதுகாலவரையில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளில் மாற்றம் செய்யாதவரை அவர்கள் பெருமையுடன் பேசுகின்ற மாற்றம் முழுமைடையப் போவதில்லை. குறைந்த பட்சம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கேனும் வசதியான சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றவில்லை என்றால் ஜனாதிபதி திசாநாயக்க கூறுகின்ற புதிய கலாசாரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்த பயனையும் கொண்டு வரப்போவதில்லை. மாற்றத்தின் மட்டுப்பாடுகள் மாத்திரமே அம்பலமாகும். இலங்கையின் இதுகாலவரையிலான இனஉறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்தி இலங்கையர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்துவது என்பது வெறுமனே ஒரு சுலோகமாகவே இருந்து வந்திருக்கிறது. சிறுபானமைச் சமூகங்களுக்கு எதிராக படுமோசமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்க தலைவர்களும் கூட அந்த சுலோகத்தை தாராளமாகப் பயன்படுத்தினர். சமூகங்களின் கலாசார தனித்துவங்களைப் பேணக்கூடியதாகவும் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வசதி செய்யக்கூடியதாகவும் ஒரு சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாத்திரமே இலங்கையர்கள் என்ற தேசிய அடையாளத்தை சகல சமூகங்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வழிசெய்யமுடியும். அதற்கான நேர்மறையான சமிக்ஞை தென்னிலங்கையில் இருந்து புதிய ஆட்சியாளர்ளிடம் இருந்தே வரவேண்டும். https://www.virakesari.lk/article/196727

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.