ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடம் : இலங்கை பாஸ்போர்ட் 93 ஆவது இடம்
Everything posted by ஏராளன்
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாது - விஜித ஹேரத் உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி அபேசேகர, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாதுதென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196835
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா டெஸ்டில் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்தன: ரபாடா 300 விக்கெட்கள் பூர்த்தி (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் மிர்பூர், ஷியர் பங்க்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 16 விக்கெட்கள் சரிந்ததுடன் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. தனது 65ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கெகிசோ ரபாடா, எதிரணி வீரர் முஷ்பிக்குர் ரஹிமின் விக்கெட்டைக் கைப்பற்றியபோது தனது 300ஆவது டெஸ்ட் விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். அப் போட்டியில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய கெகிசோ ரபாடா, தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 302ஆக உயர்த்திக்கொண்டார். மேலும் 11,817 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற பெருமையை ரபாடா பெற்றுக்கொண்டார். இதன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக 300 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்தி செய்த 6ஆவது வீரரானார் கெகிசோ ரபாடா ஆனார். டேல் ஸ்டெய்ன் (439 விக்கெட்கள்), ஷோன் பொலொக் (421), மக்காயா என்டினி (390), அலன் டொனல்ட் (330), மோன் மோர்க்கல் (309) ஆகியோர் ஏற்கனவே 300 விக்கெட்களைப் பூர்த்திசெய்த தென் ஆபிரக்கா பந்துவீச்சாளர்கள் ஆவர். இப் போட்டியில் ரபாடாவை விட வியான் முல்டர் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கேஷவ் மகாராஜ் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் மஹ்முதுல் ஹசன் ஜோய் 30 ஓட்டங்களையும் தய்ஜுல் இஸ்லாம் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டமும் சிறப்பாக அமையவில்லை. முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டோனி டி ஸோர்ஸி 30 ஓட்டங்களையும் ரெயான் ரிக்ல்டன் 27 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/196816
-
9 மாதங்களில் இலஞ்சம், ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் பதிவு
இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 81 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகளும், 3 கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 45 அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 22 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் காணப்படுகின்றனர். இதேவேளை, கடந்த 9 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 68 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 237 நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/196829
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர். லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை பார்க்க கீழுள்ள பிபிசி தமிழ் இணைப்பை அழுத்துங்கள். https://www.bbc.com/tamil/articles/cje3qke2xzgo
-
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் ராஜபக்ஷர்கள் மீது பொறுப்பை சுமத்த ஒருசில மத தலைவர்கள் முயற்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன!
(இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது . அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குண்டுத்தாக்குதல்களின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மீது பொறுப்பாக்குவதற்கு ஒருசில மத தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2018 ஆட் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தியது. ஆகவே அரசியலுக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. குண்டுத்தாக்குதல்கள் குறித்து புலனாய்வு பிரிவு முன்னெச்சரிக்கை விடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அதனை கருத்திற் கொள்ளாது தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்திய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் செனல் - 4 தொலைக்காட்சி பொய்யான ஆவணப்படத்தை வெளியிட்டது. செனல் 4 யுத்த காலத்திலும் பொய்யான சித்தரிப்புக்களுடன் ஆவணப்படம் வெளியிட்டது. ஆகவே இமாம் விசாரணை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். அல்விஸ் அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பிலவுக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய மக்கள் சக்தி இந்த குண்டுத்தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கியே ஆட்சிக்கு வந்தது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததால் கத்தோலிக்கர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தார்கள். ஆகவே நம்பிக்கையளித்த மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/196822
-
தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து முதல்வர்கள் கவலை - மாற்றம் 2026-ல் நிகழுமா?
நீண்ட காலமாக தள்ளிபோடப்பட்ட அந்த மாற்றம் 2026-ல் நிகழுமா?- தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து முதல்வர்கள் கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக மக்கள் தொகையைப் பொறுத்தவரை, கடந்த 200 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 22 அக்டோபர் 2024, 03:27 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. ஆந்திரப் பிரதேச மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதேபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று, அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்துப் பேசும்போது ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படுமென்றும் குறிப்பிட்டார். "இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம்" என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1950களில் 6.2 சதவீதமாக இருந்தது தற்போது 2.1 சதவீதமாகக் குறைந்திருக்கும் நிலையில், ஆந்திராவில் இது 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, "ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாகப் பெற்றுக்கொள்வது இளம் வயதினரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும். இரண்டு குழந்தைகளுக்குக் கூடுதலாக பெற்றுக்கொள்வதே மாநில மக்கள் தொகையைத் தக்கவைக்கும். மக்கள் தொகை அதிகமாக இருப்பதன் பலன் (demographic dividend) 2047வரைதான் நமக்குக் கிடைக்கும். 2047க்குப் பிறகு, ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகம் இருப்பார்கள். ஜப்பான், சீனா, பல ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்துவிட்டது. அதிக குழந்தைகளைப் பெறுவது உங்கள் பொறுப்பு. இதனை உங்களுக்காக நீங்கள் செய்யவில்லை. தேசத்தின் நலனுக்காக செய்கிறீர்கள்” என்றும் குறிப்பிட்டார். திங்கட்கிழமையன்று காலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இதே தொனியில் கருத்து ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம்" என்று சொன்னவர் தொடர்ந்து, "ஆனால், இன்று நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறையும் நிலை வந்திருக்கும்போது, ஏன் அளவோடு பெற வேண்டும், நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது" என்று குறிப்பிட்டார். ஆந்திர முதலமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சரும் வெவ்வேறு நோக்கில், இந்த விவகாரத்தை அணுகினாலும் இந்தியாவின் தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது குறித்த கவலைகள் ஏற்கனவே பல முறை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தென்னிந்திய மாநில மக்களின் நடு வயது (median age), வட இந்திய மாநில மக்களின் நடு வயதைவிட அதிகமாக இருக்கிறது. 2011 கணக்கீட்டின்படி இது கேரளாவில் 31.9 ஆகவும் தமிழ்நாட்டில் 29.9ஆகவும் ஆந்திராவில் 27.6ஆகவும் கர்நாடகாவில் 27.4ஆகவும் தெலங்கானாவில் 26.7ஆகவும் இருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 21.5ஆகவும் பிஹாரில் 19.9ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் 1872-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2021-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அது நடக்கவில்லை. இந்நிலையில், 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே சமீபத்திய கணக்கெடுப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்னிந்திய மாநில மக்களின் நடு வயது (median age), வட இந்திய மாநில மக்களின் நடு வயதைவிட அதிகமாக இருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி, 'Precursor to Census 2024: The Fine Prints of a Rapidly Changing Nation' என்ற ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கை 2024ல் இந்தியாவின் மக்கள் தொகை 138 - 142 கோடிக்குள் இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பில் தென்மாநிலங்களின் பங்களிப்பு 14லிருந்து 12 சதவீதமாக குறையும் எனவும் வட மாநிலங்களின் பங்களிப்பு 27ல் இருந்து 29 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதம் 30.9ஆக இருந்த நிலையில், 2024ல் இது 24.3ஆகக் குறையும் எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் நடு வயது 24ஆக இருந்தது தற்போது 28-29ஆக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் வயதானவர்களின் சதவீதம் அதிகம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது குறித்து, அந்தந்த மாநில அரசியல் கட்சிகள் கவலையடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், வரிப் பகிர்வு. இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் வரி வருவாய் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கு முக்கியக் காரணியாக, அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1950களில் 6.2 சதவீதமாக இருந்தது தற்போது 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது இரண்டாவதாக, நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்படுவது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு பத்தாண்டிற்குப் பிறகும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் திருத்த முடிவுசெய்யப்பட்டது. 1975ல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2001ல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002ல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களால், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆலோசனை வழங்குவது சரியா? 2000வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டிற்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. 2026 நெருங்கும் நிலையில், மக்கள் தொகையை குறைத்த தென் மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள தொகுதிகள் குறையலாம் அல்லது வட மாநிலங்களில் உள்ள தொகுதிகள் அதிகரித்து, தங்கள் செல்வாக்கு குறைக்கப்படலாம் என அஞ்சுகின்றன. இந்தப் பின்னணியில்தான் இரு மாநில முதல்வர்களின் கருத்துகள் தற்போது பார்க்கப்படுகின்றன. ஆனால், அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தீர்வல்ல என்கிறார் 'SOUTH vs NORTH : India’s Great Divide' நூலை எழுதிய ஆர்.எஸ். நீலகண்டன். "பெண்களை படிக்கவைத்தால் மக்கள் தொகை குறைவது இயல்பாகவே நடக்கும். உலக மக்கள் தொகையைப் பொறுத்தவரை, கடந்த 200 ஆண்டுகளில்தான் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த 200 ஆண்டுகளில் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்தான் இதற்கு முக்கியக் காரணம். பெண்களை படிக்க வைக்கும்போது மக்கள் தொகை அதன் இயல்பான அளவை நோக்கி குறைய ஆரம்பிக்கும். உலகில் ஏற்கனவே சுமார் 800 கோடி பேர் வசிக்கும் நிலையில் கூடுதல் குழந்தைகள் தேவையில்லை" என்கிறார் நீலகண்டன். சென்னை பொருளியல் கல்லூரியின் கௌரவ பேராசிரியர் முனைவர் கே.ஆர். ஷண்முகமும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "ஒரு மாநில மக்கள் தொகை அதிகரிக்க வேண்டுமென சொல்பவர்கள் இரு காரணங்களுக்காக இதைச் சொல்கிறார்கள். ஒன்று, அந்த மொழியை பேசும் மக்களின் தொகை குறைந்து வருவது. இரண்டாவதாக, இந்தியாவில் வரிப் பகிர்வுக்கு முக்கியமான அம்சமாக மக்கள் தொகை இருக்கிறது. முன்பு, 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது. இப்போது 1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கருதி, இந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்தியாதான் உலகிலேயே தற்போது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு. இதில், மேலும் மக்கள் தொகையை அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது. சில மாநிலங்கள் அப்படிக் கருதுகின்றன. மாறாக, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சொல்லலாம்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களை கூடுதல் குழந்தைகளைப் பெறச் சொல்வது சரியல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர் ஆனால், மக்கள் தொகை குறைந்துவருவதில் வேறு சில பிரச்னைகளும் இருக்கின்றன. மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். இதனால், அதிக எண்ணிக்கையிலான வயதானவர்களை, குறைவான எண்ணிக்கையிலான இளைஞர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். "இப்போது ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் முன்பு 58ஆக இருந்தது தற்போது 60ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. ஆகவே வயதானவர்கள் அவர்களே தங்களைப் பார்த்துக்கொள்வார்கள். மீதமுள்ள ஆண்டுகளுக்கான சமூகப் பாதுகாப்பை அரசு உறுதிசெய்தால் போதுமானது" என்கிறார் ஷண்முகம். வேறு சில விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறார் ஷண்முகம். "முன்பு ஒரு குடும்பத்தில் 4- 5 குழந்தைகள் இருந்தால், அதில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைத்தான் படிக்க வைக்க முடியும். மற்ற குழந்தைகள் விவசாயம் போன்ற தொழில்களைச் சார்ந்திருப்பார்கள். ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில் பார்க்கும்போது அது சரியானதில்லை. விவசாயத்தில் பொருளாதாரத்தின் பங்கு குறைவாக இருக்கும்போது, அதைச் சார்ந்திருப்பவர்களின் பங்கும் குறைவாக இருக்கவேண்டும். மக்கள் தொகையை அதிகரிப்பதன் மூலம் மீண்டும் 1950களுக்கு திரும்பிச் செல்ல நினைக்கக்கூடாது" என்கிறார் ஷண்முகம். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் வரி பகிர்வு, மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவை மக்கள் தொகையோடு தொடர்புபடுத்தப்படும் நிலையில், பாதிக்கப்படுவதாகக் கருதும் மாநிலங்கள் தத்தம் மக்கள் தொகையை அதிகரிக்க விரும்புகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? "இந்த இரு பிரச்னைகளையும் ஒன்றாக இணைக்கக்கூடாது. வரி பகிர்வை பொறுத்தவரை, தென் மாநிலங்கள், வட மாநிலங்களுடன் தங்கள் வளத்தை கூடுதலாக பகிர்ந்துகொள்வதாக கருதுகின்றன. அப்படியானால், ஒரே நிதிக் கட்டமைப்பிற்குள் இரு பிரிவினரும் இருப்பதுதான் பிரச்னை. அதை நிதி ஆணைய மட்டத்தில் ஆலோசித்துத் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து, பெண்களை கூடுதல் குழந்தைகளைப் பெறச் சொல்வது சரியல்ல" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgngvkeg1ro
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது கத்தோலிக்க திருச்சபை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் இரண்டு அரசாங்க அதிகாரிகளிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளது. நாங்கள் இன்று எங்களின் நிலைப்பாட்டினையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எங்களின் பதில்களையும் வெளியிடுவோம் என அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196818
-
பெருந்தோட்ட பகுதி பாடசாலைகளைத் தரமுயர்த்தல் : நன்கொடை உதவியை இரு மடங்காக அதிகரித்தது இந்தியா
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர ஆகியோர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி கைச்சாத்திட்டதுடன், அதற்கான இராஜதந்திர ஆவணங்களும் பரிமாறப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 600 மில்லியன் இலங்கை ரூபாவாக அதிகரித்துள்ளது. குறித்த ஒதுக்கீட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உத்தேசிக்கப்படுள்ளது. இவற்றில் மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பாடசாலையும் உள்ளடங்குகின்றன. இலங்கையில் கல்விசார்ந்த முக்கிய துறைகளில் கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அதேபோல தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி பங்குடைமை முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்ட பட்டியலில் இந்தத் திட்டம் இணைந்துகொள்கின்றது. இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி பங்குடைமை திட்டங்களில், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உபகரண விநியோகம் ஆகியவற்றுக்கான ஆதரவுக்கு சமமாக, பயிற்சி மற்றும் திறன்-மேம்பாடு ஆகியவையும் முக்கிய கவனத்தை பெறுகின்ற விடயங்களாக காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் புனரமைப்புப் பணிகள், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 இ-நூலகங்களை அமைத்தல், நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு 110 பஸ்களை வழங்கல், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில மொழி ஆய்வகங்களை அமைத்தல், ருஹுண பல்கலைக்கழகத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த கேட்போர் கூடம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் கேட்போர் கூடங்களை புதுப்பித்தல் மற்றும் நிறுவுதல், வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையொன்றை நிர்மாணித்தல், மத்திய மாகாணத்தில் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை மற்றும் ஓந்தாச்சிமடம் தொழிற்பயிற்சி நிலையங்கள் போன்ற பல தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ஆதரவு, தென் மாகாணத்தில் காலியில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணனி ஆய்வகங்கள் அமைத்தல், உள்ளிட்டவை இப்பட்டியலில் உள்ளடங்குகின்றன இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் முகமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 750 மில்லியன் இந்திய ரூபா பல்துறை நன்கொடை உதவியின் கீழ் STEM பாடங்களுக்கான 3 மாத ஆசிரியர் பயிற்சித் திட்டமும் அண்மையில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196809
-
மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
Elephant Rampage: கடந்த சில நாட்களாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது. யானைகள் பொதுவாக அமைதியான விலங்குகள். ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். ஆக்ரோஷமான யானையின் மீது சுமார் ஐந்து மணி நேரம் தாக்குப்பிடித்துள்ளனர் இந்த சிறுமிகள்.
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் விசாரணைகளை திரிபுப்படுத்தவா செனவிரத்ன, சானி மீளிணைப்பு ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்குங்கள் - உதய கம்மன்பில (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளார். அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும். குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ்' அறிக்கையை பகிரங்கப்படுத்தி அறிக்கையின் பிரதான உள்ளடக்கங்களை குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தகுதியற்றவர்களுக்கு உயர் பதவிகள் சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி சிறந்தவர்களையும், அறிவானவர்களையும் உயர் பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். ஜனாதிபதி பதவியேற்றவுடன் மூன்று உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்கினார். அதில் இரண்டு பதவிகளுக்கு நியமித்தவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள். ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நபர் அந்த பதவிக்கு தகுதியற்றவர். பதவிக்கான பொறுப்பினை ஜனாதிபதியின் செயலாளர் தெரிந்திருந்தால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிபுனராட்சி இன்று அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பார். பொதுத்தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் சூழல் காணப்படுகிறது. வாக்கெடுப்பு திகதியில் பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே தகுதியற்றவரே ஜனாதிபதி செயலாளராக உள்ளார். பொலிஸ் விசாரணையின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் நபரையே ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார். தேர்தல் காலத்தில் தனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களையே ஜனாதிபதி பாதுகாக்க முயற்சிக்கிறார்.இதுவே உண்மை. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஒருமாத காலத்திலேயே இந்த அரசாங்கம் பாரதூரமான தவறிழைத்துள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. தனது சகாக்களை பாதுகாக்க ஜனாதிபதி அறிக்கைகளை பகிரங்கப்படுத்தவில்லை. ஆகவே ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஜனாதிபதி நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை மீறியுள்ளார். ஆகவே ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளார். அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும். ரவி செனவிரத்ன, சானி அபேசேகரவை இணைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன ? குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான தொழிலதிபர் இப்ராஹிமை பாதுகாப்பதற்காக விசாரணைகளை திரிபுப்படுத்துவதற்காகவா ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகரவை ஜனாதிபதி தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது. ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்குங்கள் அஸ்விஸ் விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கு தண்டனையளிக்குமாறும், அத்துடன் பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய 17 உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். குற்றவாளி தலைமையில் எவ்வாறு நியாயமான விசாரணைகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். கத்தோலிக்க சபைக்கு மாத்திரம் தனியுரிமை கிடையாது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை தெரிந்துக் கொள்ளும் தனியுரிமை கத்தோலிக்க சபைக்கு மாத்திரம் கிடையாது. ஏனெனில் குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் கத்தோலிக்கர்களை போன்று ஏனைய மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுவதாக கத்தோலிக்க சபை குறிப்பிடுகிறது. விசாரணைகளை மேற்கொண்ட அறிக்கைகளில் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே இவர்களின் தலைமையில் சிறந்த விசாரணைகளை எதிர்பார்க்க முடியுமா ? என்றார். https://www.virakesari.lk/article/196800
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது: பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முழுவதும் பொய்யானதும் புனையப்பட்டதுமான செய்தியாகும். இந்த நியமனத்தால் அதிகாரிகள் சிலர் தங்களின் ஊழல் மோசடிகள் வெளிவருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்த நியமனம் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனினும் பணியாளர்களுக்கு அவ்வாறல்ல -என்றுள்ளது. (ப) https://newuthayan.com/article/பனை_அபிவிருத்திச்_சபைக்கு__புதிய_தலைவர்!
-
ஐஸ்லாந்தில் சீறும் எரிமலையில் துளையிடும் விஞ்ஞானிகள் - எதற்காக தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அட்ரியன் முர்ரே பதவி, பிபிசிக்காக வடகிழக்கு ஐஸ்லாந்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் நான் உலகின் எரிமலை ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான, வடகிழக்கு ஐஸ்லாந்தின், `கிராஃப்லா’ எரிமலைக்கு அருகில் இருக்கிறேன். சிறிது தூரம் தள்ளி என்னால் எரிமலையின் விளிம்பை பார்க்க முடிகிறது. கடந்த 1,000 ஆண்டுகளில் கிராஃப்லா சுமார் 30 முறை வெடித்துள்ளது, கடைசியாக 1980 களின் நடுப்பகுதியில் வெடித்தது. ஜார்ன் குமுண்ட்சன்(Bjorn Guðmundsson) என்னை ஒரு புல்வெளி மலைக்கு அழைத்துச் சென்றார். அவர் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவை நிர்வகிக்கிறார். "துளையிடப் போகும் இடத்தில் தான் நாம் தற்போது நின்று கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார். `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ (KMT) ஆய்வு, `மாக்மா’ அல்லது `உருகிய பாறை’ நிலத்திற்கு கீழே எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய புரிதலை மேம்படுத்த செய்யப்படுகிறது. இந்த ஆய்வு விஞ்ஞானிகளுக்கு எரிமலை வெடிப்புகளின் அபாயத்தை முன்னறிவிப்பதற்கு வழிவகுக்கும். விஞ்ஞானிகளுக்கு அதிக வெப்பமான எரிமலை ஆற்றலை அணுக அனுமதிப்பதன் மூலம் புவி வெப்ப ஆற்றலை (geothermal energy) பயன்படுத்த புதிய சாத்தியக்கூறுகளை கண்டறிய உதவும். `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ ஆய்வின் முதற்கட்டமாக 2027-ஆம் ஆண்டு, முதல் குழுவானது இரண்டு போர்ஹோல்களில் முதலாவது துளையிடும் பணியைத் தொடங்கும். அதன் பின்னர் ஒரு தனித்துவமான நிலத்தடி மாக்மா ஆய்வகம் உருவாகும். இது நிலத்தடியில் சுமார் 2.1 கிமீ (1.3 மைல்) ஆழத்தில் இருக்கும். "இது நிலவுக்கு விண்கலம் அனுப்புவது போன்றது. அதாவது இந்த ஆய்வு விஷயங்களை மாற்றப் போகிறது” என்கிறார் யான் லாவல்லீ. இவர் மியூனிச்சில் உள்ள லுட்விக்ஸ்-மாக்சிமிலியன் பல்கலைக் கழகத்தில் மாக்மடிக் பெட்ரோலஜி மற்றும் எரிமலையியல் பேராசிரியராகவும், கேஎம்டியின் அறிவியல் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். எரிமலைகளின் செயல்பாடு பொதுவாக நிலநடுக்கமானி (seismometers) போன்ற கருவிகளால் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் மேற்பரப்பில் உள்ள எரிமலைக் குழம்பு பற்றி நமக்கு தெரிந்த அளவுக்கு பூமிக்குக் கீழே உள்ள மாக்மாவைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது என்று பேராசிரியர் லாவல்லி விளக்குகிறார். படக்குறிப்பு, ஜார்ன் குமுண்ட்சன் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவை நிர்வகிக்கிறார். "நாங்கள் மாக்மாவைக் கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறோம், அதன் மூலமாக பூமியின் துடிப்பைக் கேட்க முடியும்" என்று அவர் கூறினார். `மோல்டன் ராக்ஸ்’ எனப்படும் உருகிய பாறையில் அழுத்தம் மற்றும் வெப்பநிலை கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்படும். "இவை நாம் ஆராய வேண்டிய இரண்டு முக்கிய அளவுருக்கள், இதன் மூலம் மாக்மாவில் என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே சொல்ல முடியும்," என்று அவர் விவரித்தார். உலகெங்கிலும் 80 கோடி மக்கள், எரிமலைகளில் இருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அபாயகரமான சூழலில் வாழ்கின்றனர். தற்போது முன்னெடுத்திருக்கும் துளையிடல் பணி மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்ற உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் (Active Volcano) உள்ளன. அவை யூரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தட்டுகள் பிரிந்து செல்லும் பிளவின் மீது அமைந்துள்ளன. மிக சமீபத்தில், ரெய்கேன்ஸ் தீபகற்பத்தில் எட்டு எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்து அப்பகுதியின் உள்கட்டமைப்பை சேதப்படுத்தின. மக்களும் பாதிக்கப்பட்டனர். குமுண்ட்சன் மேலும் எய்யாஃப்லட்யோகுச் (Eyjafjallajökull) என்னும் பகுதியை சுட்டிக்காட்டினார். இது 2010-இல் பேரழிவை ஏற்படுத்தியது. எரிமலையின் சீற்றத்தால் மேகங்கள் சாம்பல் நிறமாயின. 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் £3 பில்லியன் ($3.95bn) மதிப்பிலான நஷ்டம் ஏற்பட்டது. "அந்த எரிமலை வெடிப்பை நாம் சிறப்பாகக் கணிக்க முடிந்திருந்தால், நஷ்டம் ஆகாமல் தவிர்த்திருக்கலாம்" என்று அவர் கூறுகிறார். மாக்மா ஆற்றலில் இருந்து மின்சாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிராஃப்லா `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ ஆய்வின் இரண்டாவது போர்ஹோல் புதிய தலைமுறை புவிவெப்ப மின் நிலையங்களுக்கான சாத்தியங்களை உருவாக்கும். இது மாக்மாவின் தீவிர வெப்பநிலையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனுமதிக்கும். "மாக்மா மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பொதுவாக நீர்ம வெப்ப ஆற்றல் அமைப்புகளில் (hydrothermal systems) வெப்ப மூலமாக மாக்மா பயன்படுகிறது. எனவே நேரடியாக மாக்மாவை ஆற்றல் மூலமாக ஏன் பயன்படுத்தக் கூடாது? " என்று பேராசிரியர் லாவல்லி கேள்வி எழுப்புகிறார். ஐஸ்லாந்தின் 25% மின்சாரமும், 85% வீட்டுக்கு தேவையான வெப்ப ஆற்றலும் புவிவெப்ப மூலங்களிலிருந்து தான் வருகிறன. இந்த செயல்பாட்டில் ஆழமான நிலத்தடியில் இருக்கும் வெப்பமான திரவங்களின் மூலம், நீராவியை உருவாக்கி டர்பைன்களை இயக்கி மின்சாரத்தை உருவாக்குகிறது. கிராஃப்லா மின் உற்பத்தி நிலையம் சுமார் 30,000 வீடுகளுக்கு சுடு நீர் மற்றும் மின்சாரம் வழங்குகிறது. "மாக்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக துளையிடுவதே எங்களின் திட்டம்" என்று பிஜார்னி பால்சன் புன்னகையுடன் கூறுகிறார். இவர் தேசிய ஆற்றல் வழங்குநரான லாண்ட்ஸ்விர்க்ஜுனில் புவிவெப்ப வளர்ச்சியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். மாக்மாவை நிலத்தடியில் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் 2009 இல் ஐஸ்லாந்திய பொறியாளர்கள் தற்செயலாக ஒரு மாக்மாவை கண்டுபிடித்தனர். அந்த பொறியாளர்கள் 4.5 கிமீ ஆழமான ஆழ்துளைக் கிணற்றை உருவாக்கி மிகவும் சூடான திரவங்களைப் பிரித்தெடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆழமற்ற மாக்மாவை கண்டறிந்தனர். இதனால் துளையிடும் செயல்பாடு நிறுத்தப்பட்டது. "2.1 கிமீ ஆழத்தில் மாக்மா தட்டுப்படும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று பால்சன் கூறுகிறார். மாக்மாவை கண்டறிவது அரிதானது. இதுவரை ஐஸ்லாந்து, கென்யா மற்றும் ஹவாய் பகுதிகளில் மட்டுமே இது நிகழ்ந்துள்ளன. நிலத்தடி புவி வெப்ப ஆற்றல் உலகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட புவிவெப்ப மின் நிலையங்கள் காணப்படுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த கார்பன் கொண்ட ஆற்றலுக்கான தேவை அதிகரித்து வருகிறது. புவி வெப்ப ஆற்றலை பிரித்தெடுக்க அமைக்கப்படும் கிணறுகள் பொதுவாக சுமார் 2.5 கிமீ ஆழத்தில் இருக்கும். மேலும் 350°C க்கும் குறைவான வெப்பநிலையைக் கொண்டிருக்கும். பல நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக் குழுக்கள், 5 முதல் 15 கிமீ ஆழத்தில் 400 டிகிரி செல்சியஸைத் தாண்டும் `சூப்பர்-ஹாட் ராக்’ என்று அழைக்கப்படும் மிகவும் மேம்பட்ட மற்றும் தீவிர ஆழமான புவிவெப்ப ஆற்றலை நோக்கி முன்னேறுகின்றன. மிகவும் ஆழமான பகுதி நோக்கி ஆய்வுகள் விரைவடையும் போது, அங்கு கிடைக்கும் வெப்ப ஆற்றல் பொக்கிஷம் போன்றது" என்று கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் டீனும், நியூசிலாந்தில் உள்ள புவிவெப்ப நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ரோசாலிண்ட் ஆர்ச்சர் கூறுகிறார். "இந்த ஆய்வில் நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் மெக்சிகோ ஆகியவையும் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ தான் துளையிடும் செயல்பாட்டை நெருங்கி உள்ளது" என்று அவர் கூறுகிறார். "இது எளிதான செயல்பாடு அல்ல, அதே சமயம் மலிவானதும் அல்ல." என்றார். படக்குறிப்பு, புவிவெப்ப சக்திக்கு அதிக தேவை உள்ளது துளையிடுவதில் இருக்கும் சவால்கள் இது போன்ற தீவிர சூழலில் துளையிடுவது தொழில்நுட்ப ரீதியாக சவாலானதாக இருக்கும், மேலும் அதி நவீன உபகரணங்கள் தேவைப்படும். "அது சாத்தியம். ஜெட் என்ஜின்கள், அணுசக்தி பணிகள் ஆகியவற்றிலும் தீவிர வெப்பநிலை காணப்படுகிறது. அங்கு பணிகள் தடங்கல் இன்றி நடக்கின்றன. எனவே இதுவும் சாத்தியம் தான்” என்று பேராசிரியர் லாவல்லி நம்பிக்கை கொண்டுள்ளார். "நாங்கள் புதிய மற்றும் அதிக அரிப்பை எதிர்க்கும் உலோகக் கலவைகளை ஆராய வேண்டும்" என்கிறார் ஐஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் தொழில்துறை மற்றும் இயந்திர பொறியியல் பேராசிரியரான சிக்ருன் நன்னா கார்ல்ஸ்டோட்டிர். அவரது ஆய்வகத்தின் உள்ளே, ஆராய்ச்சியாளர்கள் குழு தீவிர வெப்பம், அழுத்தம் மற்றும் அரிக்கும் வாயுக்களை தாங்கும் உலோக கலவைகளை சோதித்து வருகிறது. புவிவெப்ப கிணறுகள் பொதுவாக கார்பன் எஃகு மூலம் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் வெப்பநிலை 200 ° C ஐ தாண்டும் போது அது விரைவாக வலிமை இழக்கிறது. "நாங்கள் உயர் தர நிக்கல் உலோகக் கலவைகள் மற்றும் டைட்டானியம் உலோகக் கலவைகளில் கவனம் செலுத்துகிறோம்" என்று அவர் கூறுகிறார். எரிமலை மாக்மாவில் துளையிடுவது ஆபத்தானதா? எரிமலை மாக்மாவில் துளையிடுவது ஆபத்தானதாகத் தெரிகிறது. ஆனால் குமுண்ட்சன் வேறு கோணத்தில் அணுகுகிறார். "ஒரு பெரிய மாக்மா அறைக்குள் ஒரு சிறிய ஊசியை உள்ளிடுவதன் மூலம் ஒரு பெரிய விளைவை உருவாக்கும் என்று எங்களுக்கு தோன்றவில்லை," என்று அவர் நம்புகிறார். "துளையிடுதலால் ஆபத்தான விளைவு ஏற்பட்ட சம்பவம் 2009 இல் நடந்தது, மேலும் அவர்கள் இதனை முன் ஆராய்ச்சி இல்லாமல் செய்திருக்கலாம். எங்களை பொருத்தவரை இது பாதுகாப்பானது என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறியுள்ளார். பூமியில் துளையிடும் போது நச்சு வாயுக்கள், நிலநடுக்கங்களை ஏற்படுத்தும் விளைவுகளை போன்று மற்ற அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஆர்ச்சர். இந்த பணிக்கு பல ஆண்டுகள் எடுக்கும், ஆனால் மேம்பட்ட சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட எரிமலை சக்தியைக் கொண்டு வர முடியும். "ஒட்டுமொத்த புவிவெப்ப உலகமும் `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ திட்டத்தை உற்று நோக்குகிறது என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராசிரியர் ஆர்ச்சர். "இது மாற்றத்தை ஏற்படுத்தும்." என்பது அவரது நம்பிக்கை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpdqw225p4yo
-
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா; வடக்கு, மத்திய மாகாண வீரர்கள் அசத்தல்
சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை அபிஷாலினி தங்கம் வென்றார் (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணத்திற்கு 4ஆவது தங்கப் பதக்கத்தை சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி பெற்றுக்கொடுத்தார். 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி அபிஷாலின தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அண்மையில் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பிலும் அபிஷாலினி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப் போட்டியில் 3.01 மீற்றர் உயரத்தைத் தாவிய அபிஷாலினிக்கு இம்முறை 3.00 மீற்றர் உயரத்தை எட்ட முடியாமல் போனது. https://www.virakesari.lk/article/196781
-
எயார் இந்தியா விமானங்களில் பயணிப்போருக்கு குர்பத்வந்த் பன்னுன் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஒரே வாரத்தில் 30 வெடிகுண்டு மிரட்டல்கள் - இந்திய விமான சேவைத் துறையில் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பிராங்பர்ட் நோக்கிச் சென்ற விஸ்தாரா விமானம் துருக்கிக்கு திருப்பி விடப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஷௌதிக் பிஸ்வாஸ் பதவி, இந்தியா செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப நாட்களாக, இந்திய விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இதனால், விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன, விமானப் பயணங்கள் தாமதமாகின்றன. கடந்த வாரம், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, பயணிகள் கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு, ஏர் இந்தியா விமானத்தின் உறைந்த படிக்கட்டுகளில் இறங்குவதைக் காட்டியது. அது கனடாவில் உள்ள தொலைதூரக் குளிர் நகரமான இகலூயிட். முதலில் மும்பையில் இருந்து சிகாகோ செல்லும் போயிங் 777 விமானத்தில் இருந்த 211 பயணிகள், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அக்டோபர் 15-ஆம் தேதி இங்கு திருப்பி விடப்பட்டனர். “நாங்கள் 200 பயணிகளுடன் அதிகாலை 5 மணி முதல் விமான நிலையத்தில் சிக்கியுள்ளோம். என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் சிக்கித் தவிக்கிறோம்,” என்று ஹரித் சச்தேவா என்ற பயணி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அவர் ‘கனிவான விமான நிலைய ஊழியர்களைப்’ பாராட்டினார். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்குப் போதுமான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். சச்தேவாவின் இந்தப் பதிவு, அறியப்படாத, தொலைதூர இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட பயணிகளின் விரக்தியையும் கவலையையும் பிரதிபலித்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு கனடா விமானப்படை விமானம் சிக்கித் தவித்த பயணிகளை சிகாகோவிற்கு அழைத்துச் சென்று அவர்களது வருத்தத்தை முடித்து வைத்தது. ‘ஆன்லைனில் வெளியான பாதுகாப்பு அச்சுறுத்தல்’ காரணமாக விமானம் இகலூயிட்-க்கு திருப்பி விடப்பட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. ஆனால், அந்த அச்சுறுத்தல் பொய்யானது. சமீபத்தில் இந்தியாவின் விமான நிறுவனங்களைக் குறிவைத்து விடுக்கப்பட்ட போலி அச்சுறுத்தல்களைப் பிரதிபலிக்கின்றன . கடந்த வாரம் மட்டும், இதுபோல குறைந்தது 30 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதன் விளைவாக விமானங்கள் திசைதிருப்பப்படுவது, விமானச் சேவைகள் ரத்தாவது, தாமதங்கள் ஆகியவை ஏற்பட்டன. ஜூன் மாதம், ஒரே நாளில் 41 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று இந்திய விமான சேவையில் என்ன பாதிப்பு? இதனைப் புரிந்துகொள்ள, இந்தத் தரவுகளைப் பார்க்கலாம். 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், விமான நிலையங்களில் 120 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். இவற்றில் கிட்டத்தட்ட பாதி, நாட்டின் மிகப்பெரிய விமான நிலையங்களான டெல்லி மற்றும் மும்பைக்கு அனுப்பப்பட்டன. இது, சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற அச்சுறுத்தல்களின் அடிக்கடி வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் இந்த ஆண்டு இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். "இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேசச் செயல்பாடுகளை பாதிக்கும் சமீபத்திய சீர்குலைவு செயல்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். இதுபோன்ற குறும்புத்தனமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிகவும் கவலைக்குரியவை. எங்கள் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டின் நேர்மையை சமரசம் செய்யும் முயற்சிகளை நான் கண்டிக்கிறேன்," மத்திய அரசு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். அதனால் என்ன நடக்கிறது? விமான நிறுவனங்களைக் குறிவைக்கும் புரளி வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும்பாலும் தீங்கிழைக்கும் நோக்கம், கவன ஈர்ப்பு, மனநலப் பிரச்னைகள், வணிக நடவடிக்கைகளில் இடையூறு, அல்லது குறும்புச் செயல்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2018-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் விமானப் பயணிகள் வெடிகுண்டுகளைப் பற்றி அடித்த ஒரு பொறுப்பற்ற ‘ஜோக்’-ஆல் விமானப் பயணம் தடைபட்டது. விமானப் பயணம் செய்பவர்கள் கூட இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு, விரக்தியடைந்த பயணி ஒருவர், இந்தியாவின் பீகாரில் உள்ள விமான நிலையத்தில் சரியான நேரத்தில் செக்-இன் செய்யத் தவறியதால், வெடிகுண்டு புரளியைக் கிளப்பி ஸ்பைஸ்ஜெட் விமானத்தைத் தாமதப்படுத்த முயன்றார். இந்தப் புரளிகள் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு 15 கோடிக்கும் அதிகமான பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 33 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இருந்து தினமும் 3,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, ஒரே நாளில் சுமார் 4.8 லட்சம் பயணிகளை (இது அதிகபட்ச எண்ணிக்கை) இந்தியாவின் விமான நிறுவனங்கள் ஏற்றிச் சென்றன. அந்த வாரத்தில்தான் வெடிகுண்டுப் புரளிகள் உச்சத்தை எட்டின. இந்தியாவில் 700 பயணிகள் விமானங்கள் சேவையில் உள்ளன. மேலும் 1,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்கப்படுவதற்கான ஆர்டர்கள் உள்ளன என்று, சிரியம் ஆலோசனை நிறுவனத்தின் ராப் மோரிஸ் கூறுகிறார். "இவை அனைத்தும் இந்தியாவை இன்று வேகமாக வளர்ந்து வரும் வணிக விமானச் சந்தையாக மாற்றும்," என்கிறார் மோரிஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துருக்கியில் இருந்து மற்றொரு விஸ்தாரா விமானத்தில் ஏறும் பயணிகள். விமான நிறுவனங்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன போலி வெடிகுண்டு மிரட்டல்களால் என்ன பாதிப்பு? இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களால், ஒரு விமான நிறுவனம் என்ன விளைவுகளை எதிர்கொள்கிறது? விமானம் வானில் பறந்துகொண்டிருந்தால், அது அருகிலுள்ள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட வேண்டும். கடந்த வாரம் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம், அல்லது செப்டம்பரில் துருக்கிக்குத் திருப்பி விடப்பட்ட மும்பையிலிருந்து பிராங்பர்ட் சென்ற விஸ்தாரா விமானம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள். கடந்த வாரம் நார்ஃபோக் வழியாக ஹீத்ரு சென்ற ஏர் இந்தியா விமானம், சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்கு நடந்ததைப் போல, வெடிகுண்டு மிரட்டல்களைச் சமாளிக்க போர் விமானங்களை சில நேரங்களில் ஈடுபடுத்துகின்றனர். விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் இறங்குகின்றனர். விமானத்தில் இருக்கும் அனைத்து சாமான்களும், சரக்கு மற்றும் கேட்டரிங் ஆகியவை முழுமையான தேடலுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தச் செயல்முறை முடிய பல மணிநேரம் ஆகலாம். மேலும் பணி நேர வரம்புகள் காரணமாக ஒரே குழுவினரால் தொடர்ந்து இதைச் செய்ய முடியாது. இதன் விளைவாக, மாற்றுக் குழுவை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் மேலும் தாமதமாகும். "இதற்குக் குறிப்பிடத்தக்க செலவு ஆகிறது. விமானச் சேவைகளின் இணைப்பில் தாக்கங்களைக் கொண்டுள்ளன. திசை திருப்பப்படும், அல்லது தாமதமாகும் ஒவ்வொரு விமானமும் கணிசமான செலவினங்களைச் சந்திக்கிறது. ஏனெனில், தரையிறக்கப்பட்ட விமானங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும். தாமதங்கள் பயணங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் விமானச் சேவை அட்டவணைகள் முழுவதும் பாதிக்கப்படுகின்றன," என்று சுயாதீனமான விமானப் போக்குவரத்து நிபுணரான சித்தரத் கபூர் கூறுகிறார். அநாமதேயக் கணக்குகளில் இருந்து வரும் சமூக ஊடக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்திருப்பது குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகிறது. குறிப்பாக, மின்னஞ்சல்கள் நேரடியாக விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் போது. அச்சுறுத்தல்கள் ஒரு தனிநபரிடமிருந்து வந்ததா, ஒரு குழுவிடமிருந்தா, அல்லது வெறுமனே மற்றொரு சம்பவத்தைப் பார்த்து அதேபோலச் செய்யப்படுபவையா, என்பது போன்ற நோக்கங்கள் தெளிவாக இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் கடந்த ஆண்டு 15 கோடிக்கும் அதிகமான பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது என்ன தண்டனை? கடந்த வாரம், இதுபோன்ற பொய்யான வெடிகுண்டு அச்சுறுத்தல்களை விடுப்பதற்க்காக ஒரு சமூக ஊடகக் கணக்கை உருவாக்கிய, 17 வயதான பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் நான்கு விமானங்களைக் குறிவைத்து பொய்யான வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாக நம்பப்படுகிறது. அவற்றில் மூன்று சர்வதேச விமானங்கள். இதன் விளைவாக இரண்டு விமானங்கள் தாமதமாயின, ஒரு விமானம் திசைதிருப்பப்பட்டது, ஒன்று ரத்தானது. சில போலி வெடிகுண்டு மிரட்டல்களின் ஐ.பி., முகவரிகளைக் கண்டறிந்த பின்னர், சில லண்டன் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். புரளிகளைக் கண்டுபிடிப்பது சவாலானது. இந்தியச் சட்டம், விமான நிலைய பாதுகாப்பு அல்லது சேவை சீர்குலைவுக்கான அச்சுறுத்தல்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. ஆனால், இந்த தண்டனை புரளிகளுக்கும் பொலி மிரட்டல்களுக்கும் மிகக் கடுமையானது. இது சட்ட விசாரணைகளின் முன் நிற்காது. இதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விமானங்களில் பறக்கத் தடை விதிப்பது மற்றும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில், இதுபோன்ற மிரட்டல்கள் பயணிகளுக்குக் பெரும் கவலையை ஏற்படுத்தும். “இந்த மிரட்டல்களால் முன்பதிவு செய்த விமானத்தில் செல்ல வேண்டுமா என்று என் அத்தை அழைத்தார். 'அல்லது நான் ரயிலில் செல்லட்டுமா?' என்று கேட்டார். நான் அவரிடம், 'தயவுசெய்து விமானத்திலேயே செல்லுங்கள்' என்று கூறினேன்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விமான ஆலோசகர் கூறுகிறார். இதுபோன்ற போலி அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வாழ்க்கையைச் சீர்குலைத்து, அச்சத்தை விதைக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8707g1dd8xo
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்ல்சினை பார்த்து நீங்கள் எனது மன்னரில்லை என அவுஸ்திரேலிய செனெட்டர் ஒருவர் கோசமிட்டுள்ளார். அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் நீங்கள் எனது மன்னரில்லை என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டு;ள்ளார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள செனெட்டர் மன்னர் சார்ல்சிற்கு தெளிவான செய்தியை தான் தெரிவிக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். இறையாண்மையிருக்கவேண்டும் என்றால் நீங்கள் இந்த நிலத்தவராகயிருக்கவேண்டும், மன்னர் இந்த நாட்டவர் இல்லை, அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளுடன் சமாதான உடன்படிக்கை குறித்து காலணித்துவ ஆட்சியாளர்களிற்கு தலைவணங்க நாங்கள் தயாரில்லை, சார்ல்ஸின் மூதாதையர்களே இனப்படுகொலையில் ஈடுபட்டனர், பாரிய படுகொலைகளில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடான அவுஸ்திரேலியாவின் அரசதலைவராக சார்ல்ஸ் விளங்குகின்றார், எனினும் குடியரசு குறித்த விவாதங்கள் அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்துள்ளன. https://www.virakesari.lk/article/196792
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு எதிரானது; நீதிமன்றில் மனு தாக்கல் பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம். பிரியந்த ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார். தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடையும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட விடயத்தை சரி செய்வதற்கு ஏற்ற உத்தரவாக இருந்தால், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/310964
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
கிருபன் அண்ணாவே இந்தப் பாராட்டுக்கு உரித்தானவர், நான் அவர் இணைத்த பின்பே செய்தியை இணைத்தேன் அண்ணை.
-
பணப்பறிப்பு(Pig Butcher)
அடப்பாவிங்களா எப்படியெல்லாம் ஏமாத்திருக்காங்க.. 😮 | Neeya Naana | Episode Preview
-
வாட்ஸ்அப் உங்களுக்கு இலவசம்தான்; பிறகு எங்கிருந்து அந்த நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வாட்ஸ்ஆப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அவை ஒன்றும் உற்சாகமானவை கிடையாது. எனது குடும்பத்துடன் பேசினேன், வேலை தொடர்பாக எனது சகப் பணியாளர்களிடம் காலந்துரையாடினேன், சில செய்திகள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைப் பற்றி எனது நண்பர்களுடன் பேசினேன். ஆனால், இவ்வாறான சலிப்பூட்டும் குறுஞ்செய்திகளைக் கூட வாட்ஸ்ஆப் தானாகவே என்க்ரிப்ஷன் எனும் முறையில் பாதுகாக்கிறது. இதற்காக உலகம் முழுதும் உள்ள அதன் டெட்டா மையங்களில் இருக்கும் அதி ஆற்றல் வாய்ந்த கணினி சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மலிவாகச் செய்யக்கூடிய ஒரு செயல்முறை இல்லை. இதைப் பயன்படுத்த நானோ, அல்லது நேற்று என்னுடன் பேசிய யாருமே இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை. இந்தச் செயலியை உலகம் முழுவதும் 300 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படியென்றால், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? வணிகக் கணக்குகளின் மூலம் வருமானம் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ உள்ளதால் இது சாத்தியம் ஆகிறது. என்னுடையது போன்ற தனிநபர் வாட்ஸ்ஆப் கணக்குகள் இலவசமானவை. ஏனெனில், என்னைப்போன்ற தனி நபர்களுடன் பேச விரும்பும் வணிகக் கணக்குகளிடமிருந்து வாட்ஸ்ஆப் கட்டணம் வசூலிக்கிறது. கடந்த ஆண்டு முதல், இந்த நிறுவனங்கள் இலவசமாக வாட்ஸ்ஆப் சேனல்களைத் துவங்கி, அவற்றுக்கு ‘சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்குச்’ செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் இந்த நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும். பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் பயன்பாடு குறைவாக இருந்தாலும், இந்தியாவின் பெங்களூரு போன்ற நகரங்களில் பேருந்துப் பயணச்சீட்டு, பேருந்தில் விருப்பப்பட்ட இருக்கை என எல்லாவற்றையுமே வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பட மூலாதாரம்,META படக்குறிப்பு, மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன் ‘அனைத்தும் ஒரே Chat-இல்’ “ஒரு வாட்ஸ்ஆப் சாட்டின் (chat) மூலம் ஒரு வணிக நிறுவனமும் அதன் வாடிக்கையாளரும் அவர்களுக்குத் தேவையான வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்கிறார் மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன். “அதாவது, உங்களுக்கு ஒரு டிக்கெட் பதிவு செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் துவங்கவோ, பணம் செலுத்தவோ, ஒரு சாட்-ஐ விட்டு வெளியே செல்லாமலேயே செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அவரவர் வாழ்க்கையின் மற்ற உரையாடல்களை கவனித்துக் கொள்ளலாம்,” என்கிறார். "ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ள ஆன்லைன் விளம்பரத்தை கிளிக் செய்பவர்களுக்கு நேரடியாக தனிப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்ப தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் மட்டுமே பல கோடி டாலர்களை இந்தச் செயலி ஈட்டுகிறது," என்கிறார் நிகிலா ஸ்ரீநிவாசன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாட்ஸ்ஆப்பில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும் சிக்னல், ஸ்னாப்சாட் ஆகியவை என்ன செய்கின்றன? மற்ற மெசேஜிங் செயலிகள் வேறு வழிகளில் செயல்படுகின்றன. உதாரணமாக ‘சிக்னல்’ செயலியின் பாதுகாப்பு வழிமுறைகள் பெரிதும் அறியப்பட்டவை. இவை தொழில்முறையில் நேர்த்தியானவை. ஆனால் இது லாப நோக்கமற்ற அமைப்பு. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து எந்தக் நிதியும் பெறுவதில்லை என்று கூறுகிறது.(ஆனால், டெலிகிராம் செயலி முதலீட்டார்களிடம் இருந்து வரும் நிதியை எதிர்பார்த்து இருக்கிறது.) மாறாக, சிக்னல் செயலி நன்கொடைகளின் மூலம் செயல்படுகிறது. இதில், 2018-ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப்-இன் துணை நிறுவனர்களில் ஒருவரான ரையன் ஆக்டன் வழங்கிய 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 420 கோடி ரூபாய்) நிதியும் அடங்கும். “எங்களது நோக்கமே, சிக்னலின் மீது அக்கறை உள்ள சிறிய நன்கொடையாளர்கள் கொடுக்கும் பங்களிப்புகளைக் கொண்டு முழுமையாகச் செயல்படுவதே,” என்று கடந்த ஆண்டு தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டார் சிக்னல் நிறுவனத்தின் தலைவர் மெரிடித் விட்டேக்கர். கேம் விளையாடும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசெஜிங் செயலி ‘டிஸ்கார்ட்’. இதை இலவசமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதன் சிறப்பம்சங்களைப் பெற, சில ‘கேம்’களை விளையாடப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் இது ‘நைட்ரோ’ (Nitro) என்னும் சந்தா வசதியையும் வழங்குகிறது. இதில் மாதம் 9.99 டாலர்களைச் செலுத்தி (இந்திய மதிப்பில் சுமார் 840 ரூபாய்) உயர் தர வீடியோக்களையும், நமக்கேற்ற எமோஜிக்களையும் பெறலாம். ‘ஸ்னாப்சாட்’ செயலியின் நிறுவனமான ‘ஸ்னாப்’, இந்த வழிமுறைகளில் பலவற்றை ஒருசேரப் பயன்படுத்துகிறது. இதில் விளம்பரங்கள் உள்ளன, இதற்கு 1.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர் (ஆகஸ்ட் 2024-இன் படி). மேலும் இது மெய்நிகர் கண்ணாடிகளை (augmented reality glasses) ஸ்னாப்சாட் ஸ்பேக்டகல்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இதனிடம் மேலும் ஒரு தந்திரம் உள்ளது. ஃபோர்ப்ஸ் வலைதளத்தின் அறிக்கைபடி 2016-2023 ஆண்டுகளில், இந்த நிறுவனம் கிட்டதட்ட 300 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபாய்) வட்டியின் மூலம் மட்டுமே சம்பாதித்துள்ளது. ஆனால், இதன் முக்கிய வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 33,600 கோடி ரூபாய்) ஈட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta) உள்ளது விளம்பரங்கள் எப்படி அனுப்பப் படுகின்றன? பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமான எலிமெண்ட் அதனுடைய பாதுகாக்கப்பட்டத் தகவல் பரிமாற்றச் செயலியைப் பயன்படுத்த அரசாங்கங்களிடமும், பெரிய நிறுவனங்களிடமும் பணம் வசூலிக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்கள் தனிப்பட்ட சர்வர்களில் பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகள் முன் துவங்கப்பட இந்த நிறுவனம், தற்பொழுது ‘பல கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது’ என்றும் ‘லாபம் அடையும் நிலையை நெருங்குகிறது’ என்றும் அதன் இணை நிறுவனர் மேத்தியூ ஹாஜ்சன் என்னிடம் கூறினார். விளம்பரங்கள் மூலமே ஒரு வெற்றிகரமான தகவல் பரிமாற்று செயலியை இயக்க முடியும் என்று அவர் நம்புகிறார். “பெரும்பாலான மெசேஜிங் செயலிகளில் ஒருவர் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று ஆராய்ந்த பிறகே அவர்களுக்கு ஏற்றார் போல விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன,” என்கிறார் அவர். ‘என்கிரிப்ஷன்’ பாதுகாப்பு, அடையாளம் வெளியிடப்படாமல் இருப்பது ஆகியவை இருந்தாலும், இந்தச் செயலிகள் பயனர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களது மெசேஜ்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது தரவுகளை (டேட்டா) வைத்தே விளம்பரங்களை விற்கலாம். “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள்தான் விற்கப்படுகிறீர்கள்,” என்கிறார் ஹாட்சன். https://www.bbc.com/tamil/articles/ce9jklp74evo
-
தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?
இலங்கை தமிழ் அரசு கட்சி தனி நபரின் கம்பனியாக மாறிவிட்டது - கே.வி.தவராசா ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், 16 ஆண்டுகள் தமிழரசு கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் ஆஜராகியுள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறியிருக்கிறது. அந்த நபர் இவ்வாறு சர்வாதிகாரம் மிக்க நிலையில் செயற்படுவதற்காக தலைமைத்துவமும், சம்பந்தரும் காரணமாக உள்ளனர். கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கிறார். கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தமிழ் தேசியம் தான் எமது தமிழ் அரசு கட்சியின் தாரக மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால், தமிழ் அரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை. கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்கக்கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன். நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர், பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விலகுகிறார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் கோரினார். ஆனால், அவருக்கான பதவி மறுக்கப்பட்டது. இதன்போது சுமந்திரன் அவர்கள் நாங்கள் இரண்டு அணி என கூறினார். இப்போது தேர்தல் வரும்போது நாங்கள் ஒரு அணி என கூறுகின்றார். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/196778
-
யாழ். தெல்லிப்பளையில் பற்றைக்காட்டில் சொகுசு கார் மீட்பு
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/196773
-
சென்னையில் நீல, பச்சை வண்ணத்தில் மின்னிய கடல் - காரணம் என்ன? இது ஆபத்தானதா?
பட மூலாதாரம்,PALAYAM/SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, நீல நிறத்தில் காட்சியளிக்கும் கடல் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நீங்கள் கவனித்திருந்தால், பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் பச்சை, நீல வண்ணத்தில் பிரகாசமாக மின்னும் வீடியோக்களை வரிசையாகப் பகிர்ந்திருந்ததைப் பார்த்திருக்கலாம். வண்ணமயமான விளக்குகளுடன் ஏதோ கண்கவர் நிகழ்வு நடைபெறுவது போல இருந்தது அந்தக் காட்சி. கடலில் ஏற்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பயோலூமினசென்ஸ்’ (Bioluminescence) என அழைக்கின்றனர். தமிழில் ‘உயிரொளிர்வு’ என்கின்றனர். பொதுமக்கள் பலரும் இந்தக் காட்சியை பார்க்கக் கடற்கரைகளுக்குச் சென்றனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்டோபர் 18, 19) நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இத்தகைய காட்சி தோன்றியது. இந்தக் காட்சியைக் காணவே, இரு தினங்களும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மரக்காணம், மாமல்லபுரம் கடற்கரைகளிலும் இரண்டாவது நாளாக அக்டோபர் 19-ஆம் தேதி இது தென்பட்டது. பாதுகாப்பு காரணமாக இரவு 11 மணிக்கு போல் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கும் கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என, இந்தக் காட்சியை நேரில் கண்ட பிபிசி தமிழ் செய்தியாளர் நித்யா பாண்டியன் கூறுகிறார். காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்கு நிறுத்தப்பட, கடல் நீரில் கால் வைக்க மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள், கூட்டமாகக் கடற்கரையில் நீண்ட தூரத்திற்கு நின்று கொண்டிருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடல் பச்சை நீல நிறத்தில் ஒளிர காத்துக் கொண்டிருந்தனர். கடலில் இருந்து வரும் அலைகள் ஒளிரத் துவங்கியதும் பொதுமக்கள் ஆர்வமாகக் கூச்சலிட்டு அந்த நிகழ்வைக் கொண்டாடினார்கள். தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் புகைப்படங்களாகவும் வீடியோக்களாவும் பதிவு செய்து மகிழ்ந்தனர். சென்னை திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் கடற்கரையில் பொதுமக்களின் தொடர் வருகை காரணமாக நள்ளிரவு 1.30 வரை கடற்கரையில் மக்கள் நடமாட்டம் இருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பட மூலாதாரம்,VELVIZHI/SPECIAL ARRANGMENT படக்குறிப்பு, உயிரொளிர்வு நிகழ்வை மக்கள் ஆர்வமாக பார்த்துச் சென்றனர் கடல் ஒளிர்வது ஏன்? ‘பயோலூமினசென்ஸ்’ என்றால் என்ன? அதன் தமிழ் வார்த்தையான ‘உயிரொளிர்வு’ என்ற வார்த்தையே அதன் அர்த்தத்தை விளக்கப் போதுமானதாக இருக்கிறது. அதாவது, கடலில் உள்ள, ஒளியை உமிழும் தன்மை கொண்ட நுண்ணுயிரிகள், வேதியியல் விளைவுகள் காரணமாக ஒளியை உமிழ்வதே ‘உயிரொளிர்வு’ என்கின்றனர், அறிவியலாளர்கள். ஆனால், அது ஏன் எப்போதும் நடப்பதில்லை? அரிதாக மட்டுமே நடப்பது ஏன்? அந்த உயிரினங்கள் எதற்காக சில நேரங்களில் மட்டுமே ஒளியை உமிழ்கின்றன? என்ற கேள்விகளை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ‘ஃபிஷ் ஃபார் ஆல்’ (Fish For All Centre) மையத்தை வழிநடத்திவரும் கடல் உயிரியலாளர் வேல்விழியிடம் முன்வைத்தோம். பட மூலாதாரம்,MSSRF படக்குறிப்பு, இது ஓர் இயற்கையான நிகழ்வுதான் என்கிறார், கடல் உயிரியலாளர் வேல்விழி “இது ஓர் இயற்கையான நிகழ்வுதான். பிளாங்டான் எனும் பாசி வகை (Plankton), பூஞ்சைகள், வைரஸ், பாக்டீரியாக்கள் போன்ற கடல்வாழ் நுண்ணுயிரிகளின் உடலில் நடக்கும் வேதியியல் மாற்றம் காரணமாக, அவை ஒளியை உமிழும்போது, இத்தகைய விளைவு ஏற்படுகிறது. இவற்றை, ஒளியை உமிழும் உயிரினங்கள் என்கிறோம்” என கூறுகிறார் வேல்விழி. கடலில் அதிகளவிலான இரையை எடுப்பதற்கோ அல்லது தன்னை கொல்ல வரும் பெரிய உயிரினத்திடமிருந்து (predators) காத்துக்கொள்ளும் பொருட்டோ அல்லது தன் இணையை கவரும் பொருட்டோ இத்தகைய வேதியியல் மாற்றம் ஏற்படுவதாக வேல்விழி கூறுகிறார். ஆனால், இது அரிதானது இல்லை என்கிறார் அவர். “பெரும்பாலும் ஆழ்கடலில்தான் இப்படி நடக்கும். அதனால், இந்த விளைவை பெரும்பாலும் நம்மால் பார்க்க முடிவதில்லை. பருவமழை மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடற்கரை பகுதியில் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அவர். 'உயிரொளிர்வு' என்றால் என்ன? ‘உயிரொளிர்வு’ ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து கடந்த இரு தினங்களாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நுண்ணுயிரிகள் இரை அல்லது ஆபத்து குறித்து தங்களுக்குள் செய்துகொள்ளும் சமிக்ஞை காரணமாகத்தான் இவ்வாறு கடல் ஒளிர்வதாக பலரும் பதிவிடுவதை பார்க்க முடிந்தது. ஆனால், “இதனை சமிக்ஞை என்று கூற முடியாது. அந்த நுண்ணுயிரிகளில் உள்ள லூசிஃபெரஸ் (Luciferase) எனும் நொதி மூலமாக இத்தகைய விளைவு ஏற்படுகிறது. இதன்மூலம்தான் ஒளி உமிழப்படும். அவற்றில் உள்ள லூசிஃபெரின் (luciferin) எனும் மூலக்கூறு ஆக்சிஜனுடன் சேரும்போது அது ஆசிஜனேற்றம் (Oxidised) அடைந்து ஆற்றல் வெளியாகும். அதுதான் நமக்கு ஒளியாக தெரிகிறது,” என்கிறார் வேல்விழி. பட மூலாதாரம்,PALAYAM/SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, இத்தகைய விளைவால் பெரும்பாலும் ஆபத்து இல்லை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர் சென்னையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயிரொளிர்வு நிகழ்வுக்கு மழை காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். டைனோஃப்ளாஜெல்லேட்ஸ் (dinoflagellates) எனும் இரு கசை உயிரிகளால்தான் சென்னையில் சமீபத்திய உயிரொளிர்வு நிகழ்வு ஏற்பட்டிருப்பதாக வேல்விழி கூறுகிறார். “சமீபத்தில் பெய்த மழையால், கடலில் அடித்து வரப்பட்ட உயிர்ச்சத்துக்களால் (Nutrients) இது நிகழ்ந்திருக்கலாம். இவை பெரும்பாலும் கடலின் மேல்மட்டத்தில் வசிக்கக்கூடிய உயிரினங்களாகும்” என்றார். இத்தகைய உயிரொளிர்வு பகலிலும் நடக்கலாம் என்றாலும், இரவு நேர இருளில்தான் அவை நன்றாக தெரிவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 'எந்த ஆபத்தும் இல்லை' இத்தகைய உயிரொளிர்வு நிகழ்வை கடல் மாசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சிலர் தொடர்புபடுத்துகின்றனர். ஆனால், இவற்றுடனான தொடர்பு குறித்து ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை என்றும் இது ஓர் இயற்கையான நிகழ்வுதான் என்றும் வேல்விழி கூறுகிறார். இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் தெரிவித்தார். “ஆனால், சில சமயங்களில் எந்த நுண்ணுயிரிகளால் உயிரொளிர்வு ஏற்பட்டது என தெளிவாக தெரியாது என்பதால், நஞ்சை உமிழும் சில நுண்ணுயிரிகளும் அவற்றில் இருக்கலாம். எனவே, அந்த நீரைத் தொடுவதைத் தவிர்க்கலாம்,” என்கிறார் வேல்விழி. கடந்தாண்டு அக்டோபர் மாதமும் சென்னையில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டதாக ஊடக செய்திகள் சில தெரிவிக்கின்றன. இதேபோன்று, புதுச்சேரி, மும்பை, கோவா கடற்கரைகளிலும் கடந்த காலங்களில் ‘உயிரொளிர்வு’ ஏற்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,PALAYAM படக்குறிப்பு, இதனை மீனவர்கள் 'கமரு' என அழைப்பதாக கூறுகிறார் பாளையம் உயிரொளிர்வு குறித்து பாரம்பரிய மீனவர் தனது 15 வயதிலிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருபவர் ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர் பாளையம். இவருக்கு தற்போது 60 வயது. ‘உயிரொளிர்வு’ குறித்து மீன்பிடி தொழில் மூலம் அவருக்கு கைவரப் பெற்ற தகவல்களை பகிர்ந்துகொண்டார். “உயிரொளிர்வு நிகழ்வை நாங்கள் ‘கமரு’ என்கிறோம். இருளில்தான் இது நன்றாக தெரியும். கடலில் வண்டல் நீர் வரும்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்” என்றார். இதுபோன்ற நிகழ்வுகளை வைத்து மீனவர்கள் மீன்வரத்து குறித்த பாரம்பரிய தகவல்களையும் பெற்றிருப்பதை பாளையம் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. “கமரு நேரத்தில் மீன்கள் கடலின் மேல்பகுதியில் இருக்கும். இதை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்கிறார் அவர். "இந்த நிகழ்வை கண்டு பயப்பட வேண்டியதில்லை" என்றார் அவர். [பிபிசி தமிழ் செய்தியாளர் நித்யா பாண்டியன் அளித்த கூடுதல் தகவல்களுடன்.] - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd981zn3w8go
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். https://www.virakesari.lk/article/196770
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய நியூசிலாந்து பெண்கள் அணி - ஆண்கள் அணியால் முடியாததை சாதித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தனது சக வீரர் ஜெஸ் காருடன் கட்டுரை தகவல் எழுதியவர், மனோஜ் சதுர்வேதி பதவி, விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது. நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றது நியூசிலாந்து மகளிர் அணி. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த பிறகும் தென்னாப்பிரிக்காவால் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனது. கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய 10 வீராங்கனைகள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். ஆனால் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். நியூசிலாந்து அணி சாம்பியன் ஆனதும், ஒட்டுமொத்த அணியும் கேப்டன் சோஃபி டிவைனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனைத்து வீராங்கனைகளின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. கேப்டன் சோஃபி டிவைன் என்ன சொன்னார்? இந்த வெற்றி குறித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், "முந்தைய நாள் இரவு எனது அணியுடன் கோப்பையை கைப்பற்றுவது போல் கனவு கண்டேன். பத்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு கோப்பையை வென்றிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சரியான திசையில் பயணித்தோம். அதன் பலன்தான் இது,” என்றார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், "இறுதி ஆட்டத்தில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஏழாவது ஓவருக்கும் 11-வது ஓவருக்கும் இடையே எங்களது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் வெற்றியின் பெருமை நியூசிலாந்து அணிக்கே சேரும்," என்றார். நியூசிலாந்துக்கு முதன்முறையாகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் ஒரு வீராங்கனை முக்கியப் பங்கு வகித்தார் என்றால், அது அமெலியா கெர்தான். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஐந்து விக்கெட்டுகளுக்கு 158 ரன்களை எட்டச்செய்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க அணியால் நியூசிலாந்தைத் தோற்கடிக்க இயலவில்லை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா முதல் விக்கெட் வீழ்ந்தபோது களம் இறங்கிய அமெலியா, விக்கெட்டில் திடமாக நின்று அணியை பலப்படுத்தினார். தொடக்கத்தில் உறுதுணையாக விளையாடிய அவர், கடைசி நிமிடத்தில் தனது கூர்மையான ஆட்டத்தால் அணி நல்ல ஸ்கோர் பெற உதவினார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் கூட ‘மேட்ச் சேஞ்சர்’ என்று கருதப்படும் ஒரு வீராங்கனை. அவர் விளையாடும் போதே தென்னாப்பிரிக்கா தனது கோப்பைக் கனவை நனவாக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் பத்தாவது ஓவரின் முதல் பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் தனது அணிக்குச் சாதகமாக மாற்றினார் அமெலியா. அமெலியா சிறப்பான சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெலியாவைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட்டுக்கு 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் அந்த அணியின் பவுலர் ரோஸ்மேரி மேயரும் முக்கியப் பங்காற்றினார். அவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெலியா, "இந்த வெற்றியைப் பற்றிப் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றி பெற்ற பிறகு நான் கொஞ்சம் உற்சாகமாக இருந்தேன். ஃபீல்டிங் செய்யும் போது எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் என்னால் எனது பொறுப்பை நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அமெலியா கெர் சிறப்பாக விளையாடினார் ஆண்கள் அணியால் செய்ய முடியாத சாதனை நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியால், ஒருமுறை மட்டுமே (2021-ஆம் ஆண்டு) ஐசிசி டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வர முடிந்தது. ஆனால் கோப்பையை வெல்லும் அதன் கனவு இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், நியூசிலாந்து மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சாதித்திருக்கிறது. பெண்கள் அணி சாம்பியனான நிலையில், இப்போது ஆண்கள் அணியும் இதிலிருந்து உத்வேகம் பெறக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவர் பிளேயிலும் தென்னாப்பிரிக்க அணி மோசமாகச் செயல்பட்டது பவர்பிளேயை இழந்த தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வோல்வார்ட் மற்றும் தாஜ்மின் பிரிட்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 51 ரன்கள் சேர்த்த போது, அணி வெற்றியை நோக்கி நகர்வது போல் இருந்தது. அந்த நேரத்தில் வூல்வர்ட் முழு ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த ஜோடியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். தஜ்மினின் விக்கெட் வீழ்ந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முறிந்த பிறகு, வோல்வார்ட் மூலம் நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், பத்தாவது ஓவரில் வோல்வார்ட், போஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அமெலியா போட்டியை ஓரளவு தனக்குச் சாதகமாக மாற்றினார். அடுத்த 13 பந்துகளில் மரிஜான் கேப் மற்றும் டி கிளர்க்கின் விக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டபோது போட்டியின் முடிவு பெரிதும் தீர்மானமாகிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது சிறந்த பீல்டிங்கால் உருவான அழுத்தம் நியூசிலாந்து ஆக்ரோஷமாகத் தொடங்க முயற்சித்தது. இதற்குச் சான்றாக இரண்டு ஓவர்களில் நான்கு பவுண்டரிகள் அமைந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களைச் சுதந்திரமாக ஷாட்களை விளையாட அனுமதிக்கவில்லை. நியூசிலாந்து பேட்டர்களான சுசி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் வெளியே வந்து ஷாட்களை ஆடிய போதெல்லாம், அவர்களால் எச்சரிக்கையான பீல்டர்களை ஊடுருவி வெற்றிபெற முடியவில்லை. பொதுவாக அணிகள் மிடில் ஓவர்களில் வேகமாக ரன்களை எடுக்க முயற்சிக்கும். ஆனால் தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக டிரையன் மற்றும் மலாபா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி ரன்களின் வேகத்தை அதிகரிக்காமல் தடுத்தனர். இதில், பேட்டர்களை பவுண்டரி அடிக்க விடாமல் தடுப்பது முக்கியப் பங்காற்றியது. எட்டாவது மற்றும் 13-வது ஓவர்களுக்கு இடையில் பவுண்டரிகள் அடிக்கப்படாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர். டி கிளர்க் வீசிய 15-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன் வேகத்தை அதிகரித்தார் ஹால்லிடே. இதன் பிறகு, மற்ற பேட்டர்களும் அடித்து ஆட முயன்றனர். இதன் காரணமாக அந்த அணி ஐந்து விக்கெட்டுக்கு 158 ரன்களை எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நியூசிலாந்தின் பேட்டிங்கிற்கு தென்னாப்பிரிக்க அணி ‘பிரேக்’ போட்டது நியூசிலாந்து அணி எப்படிச் சமாளித்தது? தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் சிறந்த பீல்டிங் காரணமாக, நியூசிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது. ஆனால் இதையும் மீறி விக்கெட்டுகளுக்கு இடையே தொடர்ந்து ஓடினர். ரன்களின் வேகத்தை அவர்கள் குறையவிடவில்லை. கடைசி 5-6 ஓவர்களில் நியூசிலாந்து அணி விரைவாக ரன்களைக் குவித்தது. அமெலியா கெர் ஒரு முனையைச் சமாளித்தபடி ரன்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். ப்ரூக் ஹால்லிடே அவருக்கு ஒரு நல்ல துணையாக இருந்தார். ஹால்லிடே 135 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்தது மட்டுமின்றி, அமெலியாவை வேகமாக ரன் எடுக்கத் தூண்டினார். https://www.bbc.com/tamil/articles/cg78ll2zk40o
-
அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்; 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
இணையவழி மோசடிகள், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன. இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி. இலக்கங்களுடன் தொடர்புடையவை ஆகும். தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன. இதனால், பொதுமக்கள் தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196775