Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. (எம்.மனோசித்ரா) நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்படவில்லை என எதற்காக அரசாங்கம் பொய் கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன் 6 மாதங்களுக்கொருமுறை சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் கூறினர். 13 சதவீதம் தேசிய உற்பத்திக்கு சமாந்தர செலவு வரையறையின் கீழ் 3 நபர்கள் கையெழுத்திட்ட நிதி அமைச்சின் அறிக்கையையே கடந்த அமைச்சரவை சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்துக்காக பயன்படுத்திக் கொண்டது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கூடாக கட்டம் கட்டமாக சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது? எனவே அரசாங்கம் மக்களிடம் கூறும் அனைத்தும் உண்மையா என்ற பிரச்சினையும் ஏற்படுகிறது. இன்று சதொசவில் விற்பனை செய்வதற்கு அரிசி இல்லை. இதற்கு முன்னர் அரிசியை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டிருந்தாலும், எதிர்வரும் நாட்களில் இந்தியாவிலிருந்து 50 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதாக அறிவித்தாலும் ஆர்ச்சரியப்படுவதற்கில்லை. அரிசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்ற போதிலும், அதனைத் தீர்ப்பதற்கான இயலுமை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே மீண்டும் அரிசியை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு அரசாங்கத் தள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அரிசி பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறினர். செய்ய முடியாதவற்றைக் கூற வேண்டாமென அன்றே நாம் எச்சரித்தோம். ஆனால் இன்று கூறிய எதையுமே செயற்படுத்த முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/197446
  2. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலின் ஊடாக ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்து கூட ஒரு அரசியல் காரணத்திற்காக. குறிப்பிட்ட சிலரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தாமல் இவ்வாறான ஒரு விடயத்தை கூறியதாகவும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயலை ஒருபோதும் செய்யாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311308
  3. இஸ்ரேல் தாக்குதலில் இரான் ராணுவ தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? செயற்கைக்கோள் படங்கள் காட்டும் உண்மை எழுதியவர்,பெனடிக்ட் கார்மன் & ஷயான் சர்டரிசார்டெ பதவி,பிபிசி வெரிஃபை சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் ராணுவ தளவாடங்கள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்களுடன், இரான் முன்பு அணுசக்தி திட்டத்திற்கு பயன்படுத்திய இடமும் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பார்ச்சின் ராணுவத்தளம் பட மூலாதாரம்,PLANET LABS PBC இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும் போது, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கில் சுமார் 30 கி.மீ (18.5 மைல்கள்) தூரத்தில் உள்ள பார்ச்சின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய ஆயுத தளவாட உற்பத்தித் தளம் என்று நிபுணர்கள் அடையாளம் கூறுகின்றனர். மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த இடம் ராக்கெட் உற்பத்தியுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கின்றனர். செப்டம்பர் 9-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 27-ஆம் தேதி எடுக்கப்பட்ட தரம் மிக்க செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, குறைந்தது நான்கு கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பது தெரிய வருகிறது. தெலகான்2 என்றழைக்கப்படும் அந்த கட்டடங்களில் ஒன்று, இரானின் அணுசக்தித் திட்டத்தோடு தொடர்புடையதாக சர்வதேச அணு சக்தி அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டதாகும். அங்கு யுரேனியம் இருந்ததற்கான சாட்சிகளை 2016-ஆம் ஆண்டு அந்த அமைப்பு கண்டறிந்தது. தடை செய்யப்பட்ட அணு ஆய்வுகள் ஏதேனும் அங்கு நடைபெற்றனவா என்ற சந்தேகத்தை அது கிளப்பியது. கொஜிர் ராணுவத்தளம் பட மூலாதாரம்,PLANET LABS PBC பார்ச்சினின் வடமேற்கில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள கொஜிர், இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமடைந்த மற்றொரு இடமாகும். “இரானில் பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான கட்டமைப்புகள் அதிகம் கொண்டது கொஜிர்” என்று மூலோபாய படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார். 2020-ஆம் ஆண்டில் பெரிய மர்மமான குண்டுவெடிப்பு நடந்த இடமாகவும் இது அறியப்படுகிறது. இந்த இடத்தில் குறைந்தது இரண்டு கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன. ஷஹ்ரூத் ராணுவத்தளம் பட மூலாதாரம்,SENTINEL -2 டெஹ்ரானின் கிழக்கில் சுமார் 350 கி.மீ தூரத்தில் ஷஹ்ரூத்தில் உள்ள ராணுவ தளம் தாக்கப்பட்டிருப்பதும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது. செம்னான் என்ற வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் நீண்ட தூர ஏவுகணைகளின் பாகங்கள் தயாரிக்கப்படுவதால், இதுவும் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்திருக்கலாம் என்று ஃபேபியன் ஹின்ஸ் கூறுகிறார். அதன் அருகில் ஷஹ்ருத் விண்வெளி மையம் அமைந்துள்ளது, அங்கிருந்து தான் 2020-ஆம் ஆண்டு இரான் தனது ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. நக்ஜிர் ரேடார் தளம் பட மூலாதாரம்,PLANET LABS PBC இரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை பல இடங்களில் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் கிடைத்திருக்கும் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு இதை உறுதி செய்வது கடினம். ரேடார் பாதுகாப்பு அமைப்பு என நிபுணர்களால் கண்டறியப்படும் இடம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் காண முடிகிறது. இலாம் எனும் மேற்கு நகரத்துக்கு அருகில் ஷாஹ் நக்ஜிர் மலைகளில் இந்த இடம் அமைந்துள்ளது. ஜேன்ஸ் எனும் உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் ஜெரமி பின்னி, இது புதிதாக அமைக்கப்பட்ட ரேடார் பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்று கூறுகிறார். பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இடமாக இருந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த இடத்தில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பட மூலாதாரம்,PLANET LABS PBC தென்மேற்கு மாகாணம் குசெஸ்தானில் உள்ள அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு சேதமடைந்திருப்பதாக செயற்கைக்கோள் படத்தை காணும் போது தெரிய வருகிறது. எனினும் இந்த சேதம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இரானின் சில பகுதிகளில் கழிவுகள் காரணமாகவோ, பாதுகாப்பு தளவாடங்களின் தவறுதலான தாக்குதல் காரணமாகவோ சேதமடைய வாய்ப்புண்டு. சனிக்கிழமை காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தங்கள் இலக்குகளில் ஒன்று என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இரானிய அதிகாரிகள் குசெஸ்தானை இஸ்ரேல் தாக்கியதை உறுதி செய்தனர். அபதான் இரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். அது, ஒரு நாளுக்கு 5 லட்சம் பாரல்கள் தயாரிக்கக் கூடிய திறன் கொண்டது என அதன் செயல் தலைவர் தெரிவித்தார். செயற்கைக்கோள் படங்களால் சேதமடைந்த கட்டடங்களை துல்லியமாக அடையாளம் காண முடியாது. உதாரணமாக, ஹஸ்ரத் அமிர் பிரிகேட் வான் பாதுகாப்பு தளத்துக்கு அருகில் புகை எழும்புவதை புகைப்படங்கள் மூலம் உறுதி செய்த போது அந்த இடம் வெற்றிகரமாக தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் செயற்கைக்கோள் படங்களை பார்த்த போது அதனை நிழல் சூழ்ந்து இருந்ததால் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இஸ்ரேல் மீது இரான் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்பாக ஏப்ரல் மாதம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24vy5z6d9o
  4. மேலுள்ள திரியில் உள்ள காணொளியில் வெளிநாட்டு தனியார் கடன்கள் 700 மில்லியன் டொலர்கள் அடுத்த மாதமோ/ஆண்டோ திருப்பி செலுத்த வேண்டும் என பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் அவர்கள் கூறுகிறார். அத்தோடு தற்போதைய அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6 பில்லியன் டொலர்கள் எனவும் கூறினார்.
  5. ஜி-7 கூட்டமைப்பில் உள்ள உலகின் மிக பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களில் இருந்து 5000 கோடி டொலர்களை உக்ரைனுக்கு கொடுக்க முடி வெடுத்துள்ளனர். இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்ககூடிய ஜி-7 நாடுகள் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு மாறாக மேலும் அதிகரிக்கவும் ரஷ்யாவின் கோபத்தை தூண்டும் வேலைகளையுமே செய்து வருகின்றன. 30 ஆயிரம் கோடி டொலர்களுக்கும் அதிகமான ரஷ்ய சொத்துக்களை மேற்கு நாடுகள் முடக்கி வைத்துள்ளன. இந்த பணத்தில் இருந்து தான் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஆயுதங்கள் வாங்குவதற்காக உக்ரைனுக்கு ஜி – 7 நாடுகள் கொடுக்க முடிவெடுத்துள்ளன. அந்தப் பணத்தையும் இலவசமாக அல்லாமல் கடனாக கொடுத்து மீண்டும் வசூலிக்க இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஜி – 7 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க தங்கள் சொந்த நாட்டின் மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் இருந்து எடுத்து தொடர்ந்து உக்ரைன் போருக்கு உதவி வருகின்றன. இந்நிலையில் உலகளவில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி, பொதுத்தேர்தல், உள்நாட்டு அரசியல் சூழல் மோசமடைந்து வரும் காரணத்தால் தங்கள் கஜானாவில் இருந்து பணத்தை கொடுப்பதற்கு பதிலாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை சூறையாடத் தொடங்கியுள்ளன. https://thinakkural.lk/article/311278
  6. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை, ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மோர்னிங் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சிவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். நம்பகதன்மை மிக்க தகவல்களை அடிப்படையாக வைத்தே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படாது எனஅவர் தெரிவித்துள்ளார். சட்டப்புத்தகங்களில் வேறு பல சட்டங்கள் உள்ளன, ஆனால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படிஅவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. எங்கள் நாட்டின் சட்டத்தில் மரணதண்டனையும் உள்ளது ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்தாமல் விடுவதற்கும் ஜனாதிபதிக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதி பொதுமன்னிப்பிற்கும் எங்கள் சட்டத்தில் இடமுள்ளது, ஆனால் பாரதூரமான தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டமும் ஒரு சட்டமே அது தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197366
  7. இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார். கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கடதாசியை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார், யார் இந்த பார் லைசன்ஸ்சை பெற்றுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல. ஆகவே, யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது. இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை என சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சாராயக் கடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார். எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் படித்துக் கொள்கின்றோம். எனவே, நாம் கேட்டது போல அவர் முன்மாதிரியாக ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர் அவர். அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை முன்மாதிரியாகச் செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம். https://thinakkural.lk/article/311262
  8. (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமான அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அவ்வாறான அனுபவமுள்ளவர்கள் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. எமது நாட்டின் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கே கட்டியெழுப்ப முடியும். நாடு வங்குராேத்தடைந்த போது, நாட்டை பொறுப்பேற்க அவர் மாத்திரமே முன்வந்தார். நாங்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது ரணில் விக்ரமசிங்கவாகும். என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக நாட்டு மக்கள் வேறு ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். தற்போது மக்கள் நியமித்திருக்கும் ஜனாதிபதியின் காலை வாரிவிட நாங்கள் நினைப்பதில்லை. இருந்தபோதும் ஜனாதிபதியின் சில தீர்மானங்கள் குறித்து எங்களுக்கு திருப்தியடைய முடியாது. அவருக்கு இருக்கும் அனுபவ குறைவே இதற்கு காரணமாகும். நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பது என்பது இலகுவான பொறுப்பல்ல. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொருளாதாரம் தொடர்பில் இருக்கும் திறமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவர அவருக்கு முடியுமாகியது. ஆனால் அநுரகுமார திஸாநாயக்க அன்று சொன்ன விடயங்களுக்கும் தற்போது தெரிவிக்கும் விடயங்களை பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இந்த தேர்தலிலாவது நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாங்கள் சிந்திக்க வேண்டும். அனுபவமில்லாத பிரிவினர் அரசாங்கத்துக்கு நியமிக்கப்பட்டால் அதனால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என நாங்கள் நினைப்பதில்லை. இன்று திசைகாட்டியில் இருப்பவர்கள் யார் என்றுகூட மக்களுக்கு தெரியாது. என்றாலும் எமது அணியில் திறமையான அனுபவமுள்ளவர்கள் இருக்கிறார்கள். தற்பாேதைய ஆட்சியாளர்களுக்கும் தங்களின் பொறுப்பை கைவிட்டு செல்ல நேரிட்டால், மீண்டும் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அனுபமுள்ள அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197363
  9. அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40 ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக இறக்குமதி செய்துள்ளது. அதன் பிரகாரம் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களுக்கு கடவுச்சீட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. என்றாலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் தொடர்ந்து அதிகளவான மக்கள் வருவதால் வரிசைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதுதொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ”கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய முறையின் கீழ் அத்தியாவசியமான அனைத்து நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும். குறிப்பிட்ட அளவான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளன. எதிர்காலத்தில் சில இலட்சம் கடவுச்சீட்டுகள் பெறப்படும். இதனால் அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் இக்காலப்பகுதியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லாதவர்கள் பெற வேண்டாம்.” எனவும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/311260
  10. எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ரிஷாத் பதுர்தீன் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உருவாக்கி அந்தத் திறமையை தான் வெளிப்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு மிகப்பெரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, அனுர ஜனாதிபதி என்பதாலேயே அவர் கோமாவில் இருந்து விழித்துக்கொண்டார் என்றார். https://thinakkural.lk/article/311258
  11. இஸ்ரேல் தாக்குதலில் இரானில் எத்தகைய சேதம் ஏற்பட்டது? பதிலடி பற்றி இரான் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எழுதியவர், ஈடோ வோக் பதவி, பிபிசி செய்திகள் இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். 'உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்' என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார். இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தத் தாக்குதலுக்கு இரான் 'தக்க பதிலடி கொடுக்கும்' என்று கூறினார். ஆனால் 'இரான் போரை விரும்பவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தது நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இரான் ஒப்புக் கொண்டுள்ளது. இரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனிக்கிழமை (அக்டோபர் 26) இரானின் பல இடங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்ததாக இஸ்ரேல் தரப்பு கூறியது. அக்டோபர் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), இரானிய வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகக் கூறினார். இந்தத் தாக்குதல் "இரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை கட்டமைக்கும் அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார். ‘இஸ்ரேலின் கொள்கை இதுதான்…’ இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, "இரான் ஒரு எளிய கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும். யார் எங்களைக் காயப்படுத்துகிறார்களோ, அவர்களை நாங்கள் காயப்படுத்துவோம்," என்று கூறினார். மறுபுறம், இரான் இந்தத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்னும் கூற்றை மறுத்துள்ளது. இஸ்ரேல் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன என்று இரான் கூறியுள்ளது. சில ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்பிற்குக் குறைவான சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இரானின் உச்ச தலைவர் அலி காமனெயி, இஸ்ரேல் அக்டோபர் 26-ஆம் தேதி இரான் மீது நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு, "இரானிய மக்களின் பலம் மற்றும் விருப்பத்தை இஸ்ரேலிய ஆட்சிக்கு காட்டும் நேரமிது. அதை எவ்வாறு தெரிவிப்பது என்பதை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். நமது நாட்டின் நலன்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கேட்டு கொண்டார். இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் இதே போன்ற கருத்தை முன்வைத்தார். ஒரு அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் தேசம் மற்றும் நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்," என்றார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரான் தலைநகரைச் சுற்றியுள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபின், அக்டோபர் 26-ஆம் தேதி டெஹ்ரான் நகரம் இஸ்ரேலின் தாக்குதல் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது? இம்முறை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன என்று சில வல்லுநர்கள் கூறிகின்றனர். எண்ணெய்க் கிடங்கு மற்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்க வேண்டாம் என்று அமெரிக்கா இஸ்ரேலுக்கு பகிரங்கமாக அழுத்தம் கொடுத்தது. அமெரிக்காவின் ஆலோசனையை இஸ்ரேல் கருத்தில் கொண்டிருக்கிறது. இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, ஞாயிற்றுக்கிழமை, “தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தகவல் கிடைத்தது," என்று கூறினார். "அன்றிரவு தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாக எங்களுக்கு மாலையில் சில தகவல்கள் கிடைத்தன,” என்று அப்பாஸ் அராக்ச்சி செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் அவர் மேற்கொண்டு அதை பற்றி விவரிக்கவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என மேற்கத்திய நாடுகள் இரானிடம் கேட்டு கொண்டன. இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களை அது பெரிதுப்படுத்தும், பெரியளவிலான பிராந்தியப் போருக்கு வழிவகுக்கும் என்று கவலைத் தெரிவித்தன. “இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை. இரானில் மக்கள் அன்றாட வாழ்க்கையை எப்போதும் போல இயல்பாக தொடர்கின்றனர்,” என குறிப்பிட்டு இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இரானின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்களையும் பதிவிட்டுள்ளனர். அதாவது இஸ்ரேலியத் தாக்குதல் பெரிய சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை வெற்றியாக சித்தரிக்க ஊடகங்கள் நினைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொடரும் மோதல்கள் லெபனானில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்கும், காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), தெற்கு லெபனானில் உள்ள சிடோன் நகரத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் கூறியது. காஸாவில், அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பள்ளிக்கூடம் அகதிகள் தஞ்சம் புகும் இடமாக இருந்தது. இறந்தவர்களில் மூன்று பேர் பாலத்தீன ஊடகவியலாளர்கள் என்று பாலத்தீனிய ஊடகங்களும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன. மேலும் இஸ்ரேலில், டெல் அவிவ் நகருக்கு வடக்கே இஸ்ரேலிய ராணுவத் தளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் டிரக் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலில், டெல் அவிவ் நகருக்கு வடக்கே இஸ்ரேலிய ராணுவத் தளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் டிரக் மோதியது நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா? எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) காஸாவில் இரண்டு நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார். இந்த நடவடிக்கையில், சில பாலத்தீனிய கைதிகளுக்கு ஈடாக நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறான ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்திய 10 நாட்களுக்குள், நிரந்தரமான ஒரு போர் நிறுத்தத்தை அடையும் நோக்கில் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் பிபிசி-யின் அரபு சேவையிடம் பேசிய மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி, போர் நிறுத்தத்திற்கான அதன் நிபந்தனைகள், இஸ்ரேலால் பல மாதங்களாக நிராகரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். சமி அபு சுஹ்ரி கூற்றுபடி, ஹமாஸ் அமைப்பு முழுமையான போர்நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுதல் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஆகியவற்றை தொடர்ந்து கோரி வருகிறது என்றார். "இந்த நிபந்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்காத எந்த ஒப்பந்தமும் எந்த மதிப்பையும் கொண்டிருக்காது," என்றும் அவர் கூறினார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் முன்னறிவிப்பில்லாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அன்றிலிருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42,924-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0gnl0kwjro
  12. (எம்.ஆர்.எம்.வசீம்) அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை. பிராந்திய நாடுகள் மற்றும் வெளிநாடுகளுடன் இருந்துவந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறும் அங்கு தாக்குதல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்களின் பிரஜைகளுக்கு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. எமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியாக கவனம் செலுத்த தவறியிருக்கிறோம் என்ற செய்தியையே இது உலகுக்கு வெளிப்படுத்துகிறது. அந்த நிலைக்கு நாங்கள் செல்லக்கூடாது. எமது காலத்திலும் இவ்வாறான பல அச்சுறுத்தல்கள் வந்தன. அப்போது நாங்கள் எமது புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்பட்டு, புலனாய்வு தகவல்களுக்கு பதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு. நாட்டின் பாதுகாப்பு, எமது மக்களின் பாதுகாப்பு மற்றும் எமது நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம். உதாரணமாக ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆரம்ப கட்டத்தில், இலங்கையில் இருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நினைத்து, நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, இஸ்ரேல் மக்களை விசேட விமானம் மூலம் அவர்களின் நாட்டுக்கு அனுப்பிவைத்தோம். இந்த விடயத்தை நாங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து, பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது இதுவே முதல்தடவையாகும். இதன் மூலம் எமது சுற்றுலா துறை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கவில்லை. என்றாலும் அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை என்றே எமக்கு தோன்றுகிறது. ஏனெனில் இவ்வாறான புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும் நாங்கள் அது தொடர்பில் நாங்கள் எமது பிராந்திய நாடுகள், வெளிநாடுகளுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து செயற்பட்டுவந்தோம். ஆனால் தற்போது அந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று வெளிநாட்டு தூதரகங்கள் இந்த தகவலை வெளிப்படுத்தும்வரை அரசாங்கமோ எமது பாதுகாப்பு பிரிவோ இது தொடர்பில் முன்கூட்டி அறிந்து செயற்படுவதை எங்களால் காண முடியவில்லை. இந்த அச்சுறுத்தல் அறிவிப்பு வெளிப்பட்ட பின்னரே பாதுகாப்பு தரப்பினர் அது தொடர்பில் செயற்பட ஆரம்பித்ததாகவே எமக்கு தகவல் கிடைத்தது. எனவே யார் அரசாங்கம் செய்தாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு தகவல் கிடைத்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக அதனை அரசியலாக்கிக்கொண்டு ஊடக களியாட்டம் மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/197339
  13. வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம மக்களின் உதவியுடன் 78 இலட்சம் ரூபா செலவில் போடப்பட்ட கொடுக்குளாய்-இயக்கச்சி அபாயவெளி பாதை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. கையிருப்பில் உள்ள சிறு நிதியை கொண்டு பள்ளங்களை கிரவல் மூலம் மூடுவதற்கு தீர்மானித்து இரண்டு நாட்களுக்கு குறித்த அபாயவெளி பாதை முற்றுமுழுதாக மூடப்படுகின்றது. இது குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டு கழக தலைவருமாகிய கணேஸ்வரன் மேலும் கூறுகையில், இந்த அபாயவெளி பாதை சில நாட்களுக்கு முன்பு திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது பெய்த கடும் மழையால் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். இந்த வேலையை மேற்கொண்டு தொடர்வதற்காக நாளையும்(29) நாளை மறுதினமும்(30) இரு தினங்கள் அபாயவெளி பாதையை மூடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளோம். இந்த அபாயவெளி பாதையால் நாளாந்தம் இரண்டாயிரம் மக்களுக்கு மேல் பயணித்துவருவதால் இதை முற்றுமுழுதாக மூடுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவார்கள். இதை மூடி திருத்தம் மேற்கொள்ளாவிடில் அபாய நேரத்தில் வெளியேற முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு பாதையை மூடவுள்ளோம். இந்த அபாய அபாய வெளி பாதை இருந்திருந்தால் வடமராட்சி கிழக்கில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த பலரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். இதனை கருத்தில் கொண்டு மேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காக 78 இலட்சம் ரூபா செலவில் மக்கள் நாம் உருவாக்கினோம். வர்த்தக போக்குவரத்து, அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மருத்துவ நோயாளிகள் என பலர் இந்த பாதையால் பயணிப்பதை அரசாங்கமும்,அரசியல்வாதிகளும் அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் சிறு உதவிகள் செய்த போதும் மேற்கொண்டு இந்த பாதையை புனர்நிர்மானம் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் ஒரு முறையாவது எமது பிரதேசத்திற்கு வந்து இந்த அவல நிலையை பார்வையிடவேண்டும். மழைக்காலம் என்பதால் அவசரமாக இந்த வீதியை கிரவல் கொண்டு செப்பனிட இருப்பதால் முடிந்தவர்கள் உதவி புரிந்து வடமராட்சி கிழக்கு மக்களின் உயிர் கேடயமாக காணப்படும் கொடுக்குளாய்-இயக்கச்சி பாதையை புனரமைப்பு செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார். https://thinakkural.lk/article/311269
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலைக்கு நீதி கேட்டு கனடாவில் சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. எழுதியவர், குஷ்ஹால் லாலி பதவி, பிபிசி செய்தியாளர், பிராம்டன் "நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல ஒரே வட்டத்தில் சிக்கியுள்ளோம்", என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் பிராம்டன் நகரில் வசிக்கும் 30 வயது டாக்ஸி டிரைவர் குர்ஜித் சிங் கூறினார். இந்தியா - கனடா இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில் கனடாவில் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ள காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ள பிராம்டனில் நான் பேசியவர்களில் குர்ஜித் சிங்கும் ஒருவர். காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தில் பொது மக்களின் பங்கேற்பு குறித்து பேசிய குர்ஜித் சிங், "நாங்கள் 'வார இறுதி சமூகம்' என்ற சமூகத்தில் வாழ்கிறோம். எங்கள் பிறந்தநாள் மற்றும் பிற நிகழ்ச்சிகளும் வார இறுதி நாட்களில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன" என்றார் அவர். கனடாவில் 'காலிஸ்தான்' ஆதரவு எந்த அளவு உள்ளது? கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரும், சீக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சர்ரே நகரில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய ஏஜென்டுகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அன்று முதல், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் விடத் தொடங்கியது. இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டனர். அக்டோபர் மூன்றாவது வாரத்தில், இரு நாட்டு உறவில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. அப்போது, ஒன்டாரியோ பகுதியை சேர்ந்த பல்வேறு மக்களிடம் நான் பேசினேன்,. அவர்களில் பெரும்பாலோர் கேமரா முன் பேச தயாராக இல்லை. நான் பேசியவர்கள் எவரும் காலிஸ்தானுக்கு ஆதரவாக எந்த ஒரு செயல்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள். ஆம், அவர்கள் அனைவரும் குருத்வாராக்களுக்குச் செல்கிறார்கள், நாகர் கீர்த்தனைகள் பாடுகிறார்கள் மற்றும் விழாக்களில் பங்கேற்கிறார்கள், மற்றும் சொற்பொழிவுகளை கேட்கிறார்கள். கனடாவில் காலிஸ்தான் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இந்தியாவில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல நான் வேறு எங்கும் கண்டதில்லை. பல குருத்வாராக்களுக்கு வெளியே காலிஸ்தான் கொடிகள் பறந்துகொண்டிருந்தன அல்லது லங்கார் மண்டபங்களில் 1980-களின் பஞ்சாபை சேர்ந்த ஆயுதக்குழுக்களின் போராளிகளின் படங்களை தவிர வேறில்லை. நான் பஞ்சாபிலும் இதுபோன்ற படங்களை பார்த்திருக்கிறேன் மற்றும் கோஷங்களை கேட்டிருக்கிறேன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடாவின் டொராண்டோவில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். கனடாவில் உள்ள குருத்வாராக்களில் நடக்கும் நிகழ்வுகளில், 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகல் தக்த் சாஹிப் மீது இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் நீண்ட காலமாக சிறையில் இருந்த சீக்கிய கைதிகளை விடுவித்தல் போன்ற பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பப்பட்டன. இந்த பிரச்னைகளின் தாக்கத்தை குருத்வாராக்களில் பாடப்படும் நாகர் கீர்த்தனைகளிலும், குருபர்வ் மற்றும் பிற பண்டிகைகளிலும் நாம் தெளிவாக பார்க்கலாம். காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் மிகவும் ஆவேசமான தொனியில் பேசுகிறார்கள் மற்றும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். அவர்களுக்கு பஞ்சாபில் இருப்பதைப் போலவே இங்கும் ஆதரவு கிடைக்கிறது. காலிஸ்தான் இயக்கத்திற்கு பெரிய அளவில் ஆதரவோ அல்லது எதிர்ப்போ இல்லை என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. குருத்வாராக்களில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் காலிஸ்தான் ஆதரவு மக்கள் மட்டுமே இருப்பார்கள், அவர்கள் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார்கள். இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்" குருத்வாராக்கள் மூலம் பிரசாரம் செய்வதால், அதன் தனிப்பட்ட வாக்கெடுப்புகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஓரளவு பெறுகிறது. சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்ய இந்தியா சதி செய்ததாக அந்த அமைப்பின் தலைவர்களும் அமெரிக்காவும் குற்றம் சாட்டினர். இதற்காக அமெரிக்க நீதித்துறை இந்திய குடிமகன் விகாஸ் யாதவ் மீது வழக்கு பதிவும் செய்தது. பஞ்சாபில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிம்ரஞ்சித் சிங் மன் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங் ஆகியோர் காலிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவிய பதற்றத்தின் போது, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் போராட்டம் விவாதப் பொருளாக மாறியது. காலிஸ்தான் பற்றிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் உண்மையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியபோது, அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்பாக கனடாவின் காலிஸ்தான் இயக்கமும் மற்றும் அதன் தலைவர்களும் இருந்தன. இதற்கு முக்கிய காரணம், கனடாவில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சாட்டியது. கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் ஒன்டாரியோ பகுதியில், இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பிபிசி பேசியது. இந்த உரையாடலில், கனடாவில் காலிஸ்தான் தலைவர்களின் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம். காலிஸ்தான் தலைவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கனடா அரசியலில் அதன் தாக்கம் என்ன? ஜஸ்டின் ட்ரூடோ போன்ற ஒரு தலைவர் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுடனான ராஜ்ஜீய உறவுகளை பணயம் வைத்து காலிஸ்தானை ஆதரிக்கும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு பெரிதா? கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு கனடாவில் பிரிவினைவாத சீக்கிய இயக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்டாரியோ குருத்வாரா கமிட்டி என்பது அங்குள்ள 19 முக்கிய குருத்வாரா அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய கூட்டமைப்பாகும். கனடாவின் அரசியலில் காலிஸ்தான் இயக்கம் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் அமர்ஜித் சிங் மன்னிடம் கேட்டோம். "இந்திய அரசியல் அமைப்பு அல்லது ஊடகங்கள் காலிஸ்தானை ஒருசில மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்று சொன்னாலோ அல்லது ட்ரூடோ அரசாங்கம் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வாக்குகளை பெறவே இந்தியாவுடன் மோதுகிறது என்று சொன்னாலோ, அவர்களது முதல் கருத்தே பயனற்றதாகி விடுகிறது", என்று அவர் கூறினார். இது குறித்து அமர்ஜித் சிங் மன் கூறுகையில், "கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒரு சிலரே இருந்தால், ட்ரூடோ ஏன் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்? எங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக முடியும்", என்றார். கனடா அரசியலில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு குறித்து பேசிய அவர், "எங்களுக்கு நிறைய செல்வாக்கு உள்ளது, முன்பு இருந்ததைவிட எங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது", என்றார். "ஆனால் நாங்கள் எந்த ஒரு கட்சியையும் சார்ந்து இல்லை. ஜக்மீத் சிங்கின் NDP கட்சியுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. பொலிவாரின் கன்சர்வேடிவ் கட்சியுடனும் நாங்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறோம்", என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். காலிஸ்தானிகளின் இயக்கத்தின் மறுபக்கம் கனடாவில் காலிஸ்தான் இயக்கம் மிகவும் வலுவாக இருப்பதால்தான், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியா மீது ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாரா? இந்தக் கேள்விக்கு, காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய மற்றொரு தலைவரான பகத் சிங் பராட் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கிறார். அவர் பிராம்டனில் கார் சர்வீஸ் ஏஜென்சியை நடத்தி வருகிறார். "கனடாவில் 7.71 லட்சம் சீக்கிய மக்கள் உள்ளார்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம். அவர்களுள் 1 சதவீதம் மட்டுமே காலிஸ்தான் ஆதரவாளராக இருப்பார்கள் என்று இந்தியா நம்பினால், இவ்வளவு சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களுக்காக உலகின் மூன்றாவது பெரிய சக்தியான நாட்டுடன் ட்ரூடோ ஏன் மோதலில் ஈடுபடபோகிறார்?" என்று அவர் தெரிவித்தார். “கனடாவில் உள்ள அனைத்து காலிஸ்தான் ஆதரவாளர்களும் ட்ரூடோவுக்கு ஆதரவாக இல்லை. கனடாவில் NDP, கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளனர். சீக்கியர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவாளர்களாக கூட இருக்கின்றனர். லிபரல் கட்சியினரின் மத்தியில் கூட, அனைவரும் ட்ரூடோவுக்கு ஆதரவாக இல்லை", என்று பகத் சிங் பராட் கூறுகிறார். "கனடா ஒரு ஜனநாயக நாடு. அங்கு சட்டத்தின் படிதான் ஆட்சி நடக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் போன்ற குடிமக்கள் சொந்த மண்ணில் கொல்லப்பட்டதை ஏற்க முடியவில்லை. குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு கனடாவுக்கு உள்ளது. அதைத்தான் அந்நாடு செய்து வருகிறது". என்றார் அவர். "ட்ரூடோ அரசாங்கம் எந்தவொரு காலிஸ்தான் இயக்கத்தையும் ஆதரரிக்கவில்லை. ஒரே ஐக்கிய இந்தியா என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதாக சமீபத்தில் அவர் கூறினார். நான் ட்ரூடோவுக்கு ஆதரவாக பேசவில்லை. எனக்கும் அவர் மீது பல அதிருப்திகள் இருக்கலாம். ஆனால் அவர் கனடா குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்", என்று பகத் சிங் பராட் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "கனடாவில் காலிஸ்தான் இயக்கம் தனக்கென ஒரு வலுவான தளத்தை உருவாக்கியுள்ளது", என்று கனடாவில் வசிக்கும் பத்திரிகையாளர் பால்ராஜ் தியோல் கூறுகிறார் எண்ணிக்கையை விட அரசியல் செல்வாக்கு முக்கியமா? பால்ராஜ் தியோல் கனடாவில் பிறந்த பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் காலிஸ்தான் இயக்கத்தின் விமர்சகர் ஆவார். "உள்ளாட்சி, மாகாணம், கூட்டாட்சி அரசியலாக இருந்தாலும் சரி அல்லது உளவுத்துறை, சிவில் சர்வீஸ் மற்றும் குடியேற்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி, கனடாவில் காலிஸ்தான் இயக்கம் தனக்கென ஒரு வலுவான தளத்தை உருவாக்கியுள்ளது", என்று பால்ராஜ் தியோல் குறிப்பிடுகிறார். "கடந்த சில ஆண்டுகளாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா அரசியலில் செல்வாக்கை பெற்றுள்ளனர். இதுவே தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் கசப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார். அவர்கள் வெறும் 'விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருப்பவர்கள்' என்ற வாதத்தை விட, அவர்களது அரசியல் செல்வாக்கு மிகவும் முக்கியமானதாக பால்ராஜ் தியோல் கருதுகிறார். "சீக்கிய சமூகத்தின் மத்தியில் பிரசாரம் செய்வதன் மூலம் வாக்கு அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு காலிஸ்தானுக்கு செல்வாக்கு உள்ளது", என்று அவர் கூறுகிறார். "1990களில் இருந்து லிபரல் கட்சியில், ஜான் கிறிஸ்டியன் முதல் ஜஸ்டின் ட்ரூடோ வரை, சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகளை கட்சித் தலைவர்களாக நிறுத்துவதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்", என்று அவர் கூறுகிறார். "அதேபோல், ஜக்மீத் சிங்கை NDP கட்சித் தலைவராக்கியதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பங்காற்றியுள்ளனர். காலிஸ்தான் பிரகடனம் செய்ததன் மூலம் ஜக்மீத் சிங் அக்கட்சித் தலைவரானார், அப்போது சீக்கியர்கள் அதிகம் உள்ள பகுதிகளான பிராம்டன், மால்டன் மற்றும் சர்ரே போன்ற இடங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக அப்போது பல கருத்துகள் எழுந்தன", என்று அவர் கூறினார். காலிஸ்தானுக்கு ஆதரவாக மிகச் சிறிய அளவிலே மக்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பால்ராஜ் தியோல் பேசுகையில், "வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் வைத்து எடைபோடுவது தவறானது. ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒரு வாக்காளர். அரசியல் செயல்பாடாக இருந்தாலும் சரி, சமூக சேவையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் காலிஸ்தான் முக்கியத்துவம் வகிக்கிறது", என்றார். கனடாவில் சீக்கிய குருத்வாராக்கள் உள்ளிட்டவை கூட காலிஸ்தானிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பால்ராஜ் தியோல் கூறினார். "கனடாவின் முக்கிய தலைவர்கள் பைசாகி ஊர்வலம் மற்றும் நகர் கீர்த்தனைகள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போது, அவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களை ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் முகமாக பார்க்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார். "காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். காலிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்கும் சீக்கியரைக் காண்பது அரிது, காலிஸ்தானுக்கு ஆதரவாக இல்லாதவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள்" என்று பால்ராஜ் தெளிவுபடுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடாவின் காலிஸ்தான் அமைப்புகள் இந்தியாவில் வன்முறையை தூண்டுவதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவில் வன்முறையைத் தூண்டியதற்காக கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்புகள் மீது இந்திய அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து அமர்ஜீத் சிங் மன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "அப்படி எந்தவொரு அமைப்பைப் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை", என்றார். ஜனநாயக வழிகளில் கனடா சட்டத்தின்படியே காலிஸ்தானுக்காக போராடுவதாக அவர் கூறுகிறார். நாகர் கீர்த்தனையில் காலிஸ்தான் ஆதரவாளர்களை பற்றி பாடுவது குறித்தும் இந்திரா காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் மூலம் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவது குறித்தும் பேசுகையில், "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. அமெரிக்காவிலும் இதுபோல நடக்கிறது", என்று அவர் தெரிவித்தார். "நாங்கள் எதையும் கற்பனையாக கூறவில்லை, உண்மையாக நடந்ததை கூறுகிறோம்", இது எங்கள் வரலாறு, போராளிகள் எங்கள் ஹீரோக்கள்", என்று அமர்ஜீத் சிங் மன் கூறுகிறார். இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பகத் சிங் பராட் நிராகரிக்கிறார். இந்திய அரசிடம் இதற்கான ஆதாரம் இருந்தால், அதை கனடா அரசிடம் ஒப்படைத்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் வர்மா தாயகம் திரும்பியதும், "26 பேரின் ஆவணங்களை இந்தியா கனடாவிடம் ஒப்படைத்துள்ளது, ஆனால் கனடா அதை கருத்தில் கொள்ளவில்லை", என்று கனடா தொலைக்காட்சி சேனலான C-TV-க்கு கூறியிருந்தார். "இந்தியாவில் நடந்த வன்முறைக்கு மிகப்பெரிய உதாரணம் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலை. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் தலைவர் கோல்டி ப்ரார் கனடாவில் உள்ளார்", என்று பால்ராஜ் தியோல் கூறுகிறார். "ஒருபுறம் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் இங்கு குற்றங்களைச் செய்கிறது என்று கனடா சொல்லிக் கொண்டிருக்க, மறுபுறம் கோல்டி ப்ரார் மற்றும் பிறரை வைக்குமாறு இந்தியா கேட்கிறது. அவர்களை ஏன் இந்தியாவிடம் கனடா ஒப்படைக்கவில்லை" என்று பால்ராஜ் தியோல் கேள்வி எழுப்புகிறார். "ஒரு இயக்கம் என்று இருக்கும்போது, தங்களது சொந்த நலனுக்காக சிக்கலை ஏற்படுத்த சிலர் இருக்கிறார்கள்", என்று காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்புபடுத்தப்படும் குற்றங்கள் பற்றி பால்ராஜ் தியோல் கூறுகிறார் இதுபோன்ற பல கும்பல்கள் இன்னும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர் நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023 ஆம் ஆண்டு நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், "வன்முறையை நிறுத்தவும், வெறுப்புகளுக்கு எதிராக செயல்படவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று பிரதமர் ட்ரூடோ கூறினார். காலிஸ்தான் பற்றிய கனடாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு கனடாவில் "சீக்கிய தீவிரவாதம்" பற்றிய இந்தியாவின் கவலை புதிது அல்ல, கனடா தரப்பு வாதமும் புதிதல்ல. 2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இந்தியா வந்த போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் "கனடாவில் இந்தியாவுக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகிறது" என்று கூறியதாக சிபிசி செய்திகள் கூறுகின்றன. ஒரே இந்தியா என்பதை ஆதரித்தாலும் காலிஸ்தான் இயக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க ஸ்டீபன் ஹார்பர் மறுத்துவிட்டார். 2023 ஆம் ஆண்டு நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், சீக்கிய தீவிரவாதம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் ஹார்பரின் நிலைப்பாட்டையே மீண்டும் முன்னிறுத்தினார். "வன்முறையை நிறுத்தவும், வெறுப்புகளுக்கு எதிராக செயல்படவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று பிரதமர் ட்ரூடோ கூறினார். சிலரின் செயல்பாடுகளுக்காக ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் குற்றம் சொல்ல முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை விட கனடாவில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் இவர்கள் காலிஸ்தான் பிரச்னையில் ஒருமனதாக இல்லை. "இந்தியாவில் இருப்பவர்களுக்கு இங்கு உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு பற்றி சரியாக தெரியவில்லை. காலிஸ்தான் தலைவர்கள் பிராம்டனில் 2-4 தொகுதிகளில் செல்வாக்கு பெற்றிருக்கலாம், ஆனால் கனடா போன்ற ஒரு பெரிய நாட்டில் காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதன் மூலம் ட்ரூடோ தனது தோல்வியை தேர்தல் வெற்றியாக மாற்றுவது சாத்தியமில்லை." என்று கனடாவில் 3 தசாப்தங்களாக வசிக்கும் பிரபல பஞ்சாபி வழக்கறிஞர் ஹர்மிந்தர் தில்லான் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c80lvypvxp5o
  15. தமிழக வெற்றி கழக மாநாடு - வெற்றிக் கொள்கை திருவிழா தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் - தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஒன்றி தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி எனும் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை எனும் கிராமத்தில் வெற்றி கொள்கை திருவிழா எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு மாலை நான்கு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொண்டர்கள் காலை 7:00 மணியில் இருந்து மாநாட்டு திடலில் திரண்ட ஆரம்பித்தனர். மதியம் ஒரு மணிக்குள் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அவர்களின் பாதுகாப்பு கருதி, மாநாடு மூன்று மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான - கலை வடிவங்களான பறை இசை, ஒயிலாட்டம் ,மயிலாட்டம் ஆகியவற்றுடன் மாநாடு தொடங்கியது. ஐந்து லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டனர்.‌ மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலையிலிருந்து விழுப்புரம் வரை ஏறத்தாழ ஆறு கி. மீ. அளவிற்கு நெடுஞ்சாலை முழுவதும் தொண்டர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.‌ மக்களுக்கான அரசியல் முன்னிலைப்படுத்துவோம் என கூறி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநாட்டு திடலில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தமிழகத்தை சார்ந்த தியாகிகள்- அவர்களின் கட் அட்டுகள் இடம் பிடித்திருந்தன. அத்துடன் அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் - பெருந்தலைவர் காமராஜர் - வீரமங்கை வேலு நாச்சியார்- சமூக நீதி வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து தலைவர்களின் கட் அவுட்களும் இடம் பிடித்திருந்தன. இந்த ஐவரும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைக்கான தலைவர்கள் என அக்கட்சியின் தலைவரான விஜய் அறிவித்தார். திட்டமிட்டபடி மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் நான்கு மணி அளவில் வருகை தந்தார். மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் வணக்கம் தெரிவித்த அவர் தொடர்ந்து மாநாட்டு திடலில் தொண்டர்களை பார்ப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதையில் பயணித்து தொண்டர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தார். இந்தத் தருணத்தில் தொண்டர்கள் அவரைக் கண்ட உற்சாகத்தில் தோளில் கிடந்த கட்சியின் துண்டை அவர் மீது வீச அதனை அவர் லாவகமாக கையால் பிடித்து தனது தோளில் அணிந்து கொண்டார். உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதனை பின்பற்ற அவற்றில் பல துண்டுகளை தன் கைகளால் எடுத்து தோளில் அணிந்து கொண்டார். அவரது இந்த செயல் தொண்டர்களிடையே உற்சாக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் - சுதந்திரப் போராட்ட தியாகிகள் - தமிழ் மொழிக்காக உயிர்த்திறந்த வீரர்கள் ஆகியோர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ராகுகாலம் நாலரை மணிக்கு தொடங்கி விடும் என்பதாலும் அவசரம் அவசரமாக ராகு காலத்திற்கு முன் அக்கட்சியின் கொடியை தலைவரான விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்றினார். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி உயர கட்சியின் கொடியை தலைவர் விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்ற மெல்ல மெல்ல உயர்ந்து பறந்தது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளும், செயல் திட்ட வரைவு அறிக்கையும் வாசிக்கப்பட்டது. இதில் பல விடயங்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக தமிழ் ஆட்சி மொழி - வழக்காடு மொழி - வழிபாட்டு மொழி மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்கப்படும். ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல். பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வைகை நதி நாகரீகம் வெளிக்கொணர முன்னுரிமை ஆவின் பால் நிறுவனம் கருப்பட்டி பால் விற்பனை துப்புரவு தொழிலாளிகளுக்கு கைத்தறி ஆடை- அரசு ஊழியர்கள் மாதம் இருமுறை கைத்தறி ஆடை- அணிய பரிந்துரை மாவட்டம் தோறும் காமராஜர் முன்மாதிரி பள்ளி தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி. என். ஆனந்த், தலைவர் விஜய்க்கு வீரவாள் ஒன்றை பரிசாக அளித்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் தலைவர் விஜய்க்கு இந்திய அரசியல் சாசன புத்தகம் - ஸ்ரீ மத் பகவத் கீதை - திருக்குர்ஆன்- பைபிள் - ஆகியவற்றை பரிசாக வழங்கினர். பின்னர் விஜய் பேசத் தொடங்கினார். அவரது உரையில், '' நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால் அவர் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக பேரறிஞர் அண்ணா சொன்ன 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் நம் கொள்கை. நேர்மையான நிர்வாகத்தை தந்த காமராஜர் - அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் - வீராங்கனைகள் வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய ஐவர்கள் தான் நம் கொள்கை தலைவர்கள். பிளவுவாத சித்தாந்த அரசியலையும், எளிதில் கண்டறியாத புரையோடி போன ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கரப்ஷன் கபடதாரிகள்- மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றி தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க போவது பெண்கள் தான். மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள். பெண்கள் -குழந்தைகள் பாதுகாப்பு - கல்வி -மருத்துவம் - பாதுகாப்பான குடிநீர் - ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நம்மை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பார்கள். மக்கள் தங்களுடைய ஒற்றை விரலால் அழுத்தம் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும். அதே தருணத்தில் நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம்முடன் வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்'' என்றார். மாநாட்டின் சிறப்பம்சங்கள்: மாநாட்டு திடலில் மேடையில் கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் - பொருளாளர் - தலைமை நிலைய செயலாளர்- கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் - என ஐந்து இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர்களான எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருடன் திரை உலகத்தைச் சார்ந்த நடிகர் ஸ்ரீமன் மற்றும் நடிகர் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவருடைய பேச்சு ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், உணர்ச்சி பெருக்குடனும் இருந்ததாக ரசிகர்கள்- தொண்டர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்தனர். எம்ஜிஆர் - என்டிஆர் - ஆகியோரையும் மறவாமல் தன் பேச்சில் குறிப்பிட்டார் விஜய். https://www.virakesari.lk/article/197343
  16. மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் , அரசாங்க திணைக்கள அதிகாரிகள் வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது கட்டுக்கரை குளத்தில் 8.3 அடி நீர் காணப்படுகிறது.மேலும் கட்டுக்கரை குளத்திற்கு நீர்வரத்து காணப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் வினியோகமானது இன்றையதினம் இடம் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/197330
  17. பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம் எழுதியவர்,ஆசிரியர் குழு பதவி,பிபிசி முண்டோ ‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக்கி இந்தாண்டு தன் பணியை தொடங்கியது. அதன் ஒரு சதவிகித பணிதான் இந்த முப்பரிணாம வரைபடத்தின் முதல் பகுதி. (ஓர் ஒளி ஆண்டு = ஓர் ஆண்டில் ஒளி கடக்ககூடிய தூரம் - அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்) ஆறு ஆண்டுகள் நீடிக்கும் இப்பணி மூலம், நுண்ணிய தகவல்களுடன் கூடிய பிரபஞ்சத்தின் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள். விண்வெளியின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த ஏராளமான தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும். எத்தனை கேலக்சிகள்? வரைபடத்தின் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒரு பகுதியில் மட்டுமே கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன, என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார் யூக்ளிட் காப்பகத்தின் பொறுப்பாளரான விஞ்ஞானி புரூனோ அல்டீரி. “பல்வேறு வகையான விண்மீன் திரள்கள் தொடர்புடைய இடங்கள், காலப்போக்கில் அவை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன, பல நூறு கோடி ஆண்டுகளாக அவை ஏன் நட்சத்திரங்களை உருவாக்கவில்லை என்பது பற்றிய புள்ளிவிவரங்களை இதன்மூலம் உருவாக்க முடியும்,” எனவும் அவர் தெரிவித்தார். விண்வெளியின் மூன்றில் ஒரு பகுதியை 2030-ஆம் ஆண்டுக்குள் வரைபடமாக்கும் தங்கள் இலக்கை அடைய முடியும் என, விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA படக்குறிப்பு, யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது பிரபஞ்சம் குறித்த மாபெரும் புதிர் தனது பணியின் முதல் படியில், யூக்ளிட் தொலைநோக்கி வானத்தின் தெற்கு அரைக்கோளத்தின் 132 சதுர டிகிரி பகுதியைப் படம்பிடித்தது. இது சந்திரனின் மேற்பரப்பை விட 500 மடங்கு அதிகம். இதன் மூலம் ‘பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் ஜிக்சா புதிரைப் போன்று’ இந்தத் தொலைநோக்கி உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் அந்த ஜிக்சா புதிரின் பகுதிகள் சேர்க்கப்படும். "இது பிரபஞ்ச வரைபடத்தின் 1% தான். ஆனால், இந்த ஒருபகுதி மட்டுமே பல்வேறு வகையான ஆதாரங்களால் நிரம்பியுள்ளது. இதன்மூலம் பிரபஞ்சத்தை விவரிக்கப் புதிய வழிகளை விஞ்ஞானிகள் கண்டறியக் கூடும்," என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் யூக்ளிட் திட்ட விஞ்ஞானி வலேரியா பெட்டோரினோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த வரைபடத்தின் மிக முக்கியமான விஷயம், அடர்த்தியான கரும்புள்ளிகளால் ஆன பிரகாசமான ‘கேலக்டிக் சிர்ரஸ் மேகங்கள்’ (galactic cirrus clouds) என்று அழைக்கப்படும் நீல ‘மேகங்கள்’. இவை, தூசி மற்றும் வாயுவின் கலவையாகும். “இவற்றிலிருந்து தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன,” என்கிறார், அல்டீரி. யூக்ளிட் தொலைநோக்கி என்ன காட்டுகிறது என்பதை 2 டிகிரி கோணத்தில் புலப்படும்படி இ.எஸ்.ஏ இந்த வரைபடத்தில் விளக்கியுள்ளது. இதனை 600 முறை பெரிதாக்குவதன் மூலம், பிரபஞ்சத்தின் சிறிய பகுதியில் இருக்கும் விண்மீன் திரள்களைக் காணலாம். பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA படக்குறிப்பு, யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம் மிக நுணுக்கமான வரைபடம் ஐரோப்பிய விண்வெளி முகமை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வரைபடம், முன்பு அரிதாகவே அடையப்பட்ட அதீதமான தெளிவுத்திறனைக் (resolution) கொண்டுள்ளது. அதாவது, 208 மெகாபிக்சல்கள் தெளிவுத்திறனை இந்த வரைபடம் கொண்டுள்ளது. இந்த வரைபடத்தை மேலும் ‘ஜூம்’ செய்ய முடிகிறது. அதன்மூலம், சுழல் விண்மீன் திரள்களின் (spiral galaxy) சிக்கலான கட்டமைப்பையோ இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதையோ உங்களால் காண முடியும். பிரபஞ்சம் குறித்த ஒரு விரிவான பார்வையை யூக்ளிட் தொலைநோக்கி வழங்குகிறது. இதன்மூலம், ஒரேயொரு படத்தின் மூலம் பிரபஞ்சத்தின் விரிவான காட்சியைக் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறுகிய பார்வையையே வழங்குகிறது. ஆனால், அதன்மூலம் விண்வெளியின் வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளைப் பார்க்க முடியும். பிரபஞ்சத்தின் மர்மம் அவிழுமா? பிரபஞ்சத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கான மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்குவது, இத்திட்டத்தின் இறுதி இலக்கு. ஆனால் அதனோடு சேர்த்து மிகப்பெரிய அறிவியல் புதிர்களில் ஒன்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறது இத்திட்டம். அது: ‘டார்க் மேட்டர்’ அல்லது ‘கரும்பொருள்’ (பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத, மர்மமான பொருள் - dark matter) மற்றும் ‘இருண்ட ஆற்றல்’. இவை பிரபஞ்சத்தின் 95%-த்தை உள்ளடக்கியுள்ளது. உண்மையில் இவைபற்றி நமக்கு எதுவும் தெரியாது. டார்க் மேட்டர் (25%) மற்றும் இருண்ட ஆற்றல் (70%) ஆகியவை எதிரெதிர் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. டார்க் மேட்டர் விண்மீன் திரள்களை ஒன்றாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில் இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறது. இந்த வரைபடம் மூலம், விண்மீன் திரள்களின் பரவல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ள முடியும். இது, அண்டத்தின் கருதுகோள் மாதிரிகளைச் செம்மைப்படுத்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c774j4rnd7xo
  18. ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக் கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும் இவர்கள்தான். ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும் சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/311246
  19. டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்த நியூசிலாந்தின் சான்ட்னருக்கு சி.எஸ்.கே உதவியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர்,போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற மிட்செல் சான்ட்னர் முக்கியப் பங்காற்றினார். 69 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரிக்குப் பின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் புகழ்பெற்றுள்ளார். உண்மையில் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின் நியூசிலாந்து அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அணியில் சேர்க்கப்பட்டவர் சான்ட்னர். ஆனால், அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆகச்சிறந்த பந்துவீச்சு வெளிப்படவில்லை என்பதால், அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்கூட நியூசிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை எடுக்கவே அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மேலும், ப்ளேயிங் லெவனில் அஜாஸ் படேல், பிரேஸ்வெலுக்குதான் முக்கியத்துவம் அளிக்க முடிவுசெய்திருந்தது. ஆனால், சொந்தப்பணி காரணமாக பிரேஸ்வெல் தொடரில் இடம் பெறமுடியாததால் சான்ட்னர் ப்ளேயிங் லெவனில் நியூசிலாந்து அணிக்குள் வந்தார். யார் காரணம்? ஆசிய நாடுகளில் கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து அணி பயணம் செய்யத் தொடங்கிய பின்புதான் சான்ட்னரின் பந்துவீச்சுத் திறமை மெருகேறி, அவரைச் சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியது. சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென ஏற்பட்ட முன்னேற்றம், நுணுக்கம், துல்லியம் ஆகியவை மெருகேற இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஒருவரும், ஐ.பி.எல் டி20 தொடரும், சி.எஸ்.கே அணியும்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர் புனே டெஸ்ட்: முன்பும்- பின்பும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, சான்ட்னர் டெஸ்ட் அரங்கில் ஒருமுறைகூட ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. சான்ட்னரின் அதிகபட்சமே ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள்தான். உள்நாட்டுப் போட்டிகளிலும் ஒருமுறைதான் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 42.16 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 91.60 ஆகவும் இருந்தது. இலங்கை சென்றிருந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை இழந்துதான் இந்தியாவுடன் களமிறங்கியது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்கூட சான்ட்னர் வெகு சிறப்பாக பந்து வீசவில்லை. கல்லே டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே சான்ட்னர் வீழ்த்தியிருந்தார். ஆனால், புனேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, முத்தையா முரளிதரன், மறைந்த ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக், நேதன் லயன் ஆகியோரின் சாதனைக்கு இணையாக சான்ட்னர் உள்ளார். ஆனால் புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் டெஸ்ட் வாழ்க்கையே தலைகீழாக மாறி, அவரது பந்துவீச்சுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னரின் பந்துவீச்சு சராசரி 36.32 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 78.2 ஆகவும் மெருகேறியுள்ளது. ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தாத சான்ட்னர் புனே டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் என 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு 5 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்துள்ளார். உங்களை பிரமிக்க வைக்கும் உலகின் 8 அசாதாரண ஹோட்டல் அறைகள் - புகைப்படத் தொகுப்பு24 அக்டோபர் 2024 3 நாட்களில் 'தேசிய ஹீரோ' நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் லான் ஸ்மித் வர்ணனையின்போது கூறுகையில் “புனேவில் நடந்த 3 நாட்கள் டெஸ்ட் போட்டிக்குப்பின் நியூசிலாந்தின் தேசிய ஹீரோவாக சான்ட்னர் மாறிவிட்டார்,” என்று பெருமையோடு குறிப்பிட்டார். கடினமான இந்திய ஆடுகளம் சான்ட்னரின் பந்துவீச்சில் திடீரென இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஒரு விதத்தில் ஐ.பி.எல் டி20 தொடரும், இந்தியப் பந்துவீச்சாளர்களும், சி.எஸ்.கே அணியும் காரணமாகியுள்ளது என்பதை சான்ட்னரே பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டவை. இங்கு வந்து வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர் சாதிப்பது கடினம்தான். ஏனென்றால் ஆடுகளத்தின் தன்மை, எவ்வாறு பந்துவீசுவது, எந்த வேகத்தில் வீசுவது, பந்துவீச்சில் எத்தகைய மாறுபாட்டை வெளிப்படுத்துவது என்பதைத் தெரிந்து பந்துவீச வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் மிகச்சில வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்தான் இந்திய மண்ணில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளனர். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், மெக்கஃபே, நேதன் லயன், ஸ்வான், சக்லைன் முஸ்தாக் என சிலர்தான் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். மற்றவகையில் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களால் இந்திய மண்ணில் சாதிப்பது கடினம். ஆனால், இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருப்பது கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்படைய வைத்துள்ளது. இந்திய ஆடுகளங்களின் தன்மையை வெகு எளிதாக சான்ட்னர் அறிந்து கொள்ள அவருக்கு ஐ.பி.எல் தொடரும், சி.எஸ்.கே அணியில் எடுத்த பயிற்சியும், ஐ.பி.எல் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்களுடன் ஏற்பட்ட பழக்கமும் காரணமாகியுள்ளது. பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER ஐ.பி.எல், சி.எஸ்.கே எப்படி உதவின? 'கிரிக்இன்போ' இணையதளத்துக்கு சான்ட்னர் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளராக நான் உருமாறுவதற்கு எனக்கு ஐ.பி.எல் டி20 தொடர் வெகுவாக உதவியது. சி.எஸ்.கே அணியில் நான் இடம் பெற்றபோது அதில் இருந்த ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் நட்பும் அவர்களின் பந்துவீச்சு நுணுக்கமும் என் பந்துவீச்சை மெருகேற்ற உதவியது,” என்று தெரிவித்தார். "இந்திய ஆடுகளங்களைப் பற்றி பெரிதாகத் தெரியாது. ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஆடியபின் இந்திய ஆடுகளங்களின் தன்மையை நான் புரிந்துகொண்டேன். அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச்சை மாற்ற முடிந்தது. குறிப்பாக நான் கேரம்பால் பந்துவீச்சை அஸ்வின் பந்துவீச்சு முறையைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார். யார் அந்த இலங்கை வீரர்? அது மட்டும்லலாமல் ஆசியாவில் வங்கதேசம், இலங்கை, இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் சென்று விளையாடத் துவங்கியதிலிருந்து அந்த அணிக்குப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டார். ஹேரத்தின் ஏராளமான ஆலோசனைகள், அவர் கற்றுக்கொடுத்த நுணுக்கங்கள் ஆகியவை சான்ட்னரின் பந்துவீச்சு மெருகேறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது. புனே டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஃபுல் டாஸில் ஆட்டமிழக்கச் செய்யக்கூட ஹேரத்தின் ஆலோசனையில் வீசப்பட்ட பந்துவீச்சுதான் காரணம் என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார். புனே டெஸ்ட் போட்டிக்குப்பின் சான்ட்னர் அளித்த பேட்டியில் “என்னுடைய சுழற்பந்துவீச்சு மெருகேறியதற்கு ஹேரத்தின் ஆலோசனை முக்கியக் காரணம். ஹேரத் உண்மையில் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் எவ்வாறு வேகக்தைக் குறைப்பது, ஒவ்வொரு பந்திலும் வேகத்தில் மாறுபாட்டை எவ்வாறு கொண்டுவருவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார். "புனே டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் இதேபோன்று பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்துப் பந்துவீசிய முறையைக் கண்டேன். அதேபோன்று ஹேரத்தும் கற்றுக்கொடுத்தது எனக்கு உதவியது. விராட் கோலியை 'ஃபுல் டாஸில்' ஆட்டமிழக்கச் செய்ய நான் பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வீசியது காரணம். இந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தது ஹிராத் தான்,” எனத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெட்டோரிக்குப் பின் கிடைத்த அடையாளம் இந்தியத் தொடருக்கு சான்ட்னர் வருவதற்கு முன்புவரை பெரிதாக அறியப்படாத வீரராகவும், பந்துவீச்சாளராகவும் இருந்தார். ஆனால் ஒரே டெஸ்டில் உச்சத்துக்கு சென்றுவிட்டார். கடந்த 1992-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி ஹேமில்டன் மாகாணத்தில் வைகடோ நகரில் மிட்செல் சான்ட்னர் பிறந்தார். சிறுவயதிலிருந்தே பந்துவீச்சு, பேட்டிங்கில் தீவிரமாகப் பயிற்சி எடுத்த சான்ட்னர், பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே வளர்ந்தார். கிரிக்கெட் விளையாடாத நாட்களில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 2011-ஆம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து வடக்கு மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சான்ட்னர் விளையாடி வந்தார். 2014-15 ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சான்ட்னரின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டதையடுத்து, நியூசிலாந்தின் தேசிய அணிக்குள் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டேனியல் வெட்டோரி ஓய்வு பெற்றபின், இடதுகை சுழற்பந்துவீச்சாளரை அந்த அணி தேடிக்கொண்டிருந்தபோது, சான்ட்னர் அடையாளம் காணப்பட்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார். முதல்முறையாக 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கான நியூசிலாந்து அணியில் சான்ட்னர் அறிமுகமாகி ஆக்டோபர் 24-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். அதற்குமுன்பாக உள்நாட்டில் சோமர்செட் கவுன்டி அணிக்கு எதிராக சான்ட்னர் 94 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து நிர்வாகத்துக்கு வெகுவாக நம்பிக்கையளித்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. சர்வதேசப் போட்டியில் சான்ட்னர் விளையாடுவதற்கு முன்பாக அவர் 19 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாம் பில்லிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சான்ட்னர் முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்தார். நான்காவது ஒருநாள் போட்டியில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பட மூலாதாரம்,INSTAGRAM/MITCHSANTNER படக்குறிப்பு, 2018-இல் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் விளையாட முடியாமல் போனது. பகலிரவு டெஸ்டில் அறிமுகம் இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சான்ட்னர் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. அதே 2015-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவுடெஸ்ட் போட்டியில் சான்ட்னர் அறிமுகமாகினார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியது இதுதான் முதல்முறையாகும். அதன்பின் நியூசிலாந்தின் நேதன் மெக்கலம், ஜீத்தன்படேல், அஜாஸ் படேல் ஆகியோருடன் சேர்ந்து சுழற்பந்துவீச்சு வீசும் வாய்ப்பும் சான்ட்னருக்கு கிடைத்தது. இருப்பினும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சான்ட்னரின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை, வெற்றி நாயகனாக வலம்வர முடியாமல் பெரிதும் அறியப்படாத வீரராகவே இருந்து வந்தார். ஐ.பி.எல் அறிமுகம் இதனிடையே 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு சான்ட்னரை வாங்கியது. ஆனால் அந்த ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சையால் சான்ட்னர் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்று விளையாட முடியாமல் போனது. அதன்பின் சிஎஸ்கே அணியில்தான் தொடர்ந்து விளையாடி வருகிறார். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணியை சான்ட்னர் வெற்றி பெறவைத்த ஆட்டமும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் வீழ்த்தியதும் அவரை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது. சான்ட்னர் தனக்கு பேட்டிங் செய்யக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாட்லிங்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சான்ட்னர் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் சதத்தை எட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங், சான்ட்னர் 261 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் அதிகபட்ச 7-வது விக்கெட் ரன் குவிப்பு என்ற சாதனையைப் புரிந்தனர். இதுவரை டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் ஒரு சதம், 3 அரைசதங்கள் உள்பட 941 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3 அரைசதங்கள் உள்பட 1,355 ரன்களும், டி20 போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 675 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சான்ட்னர் 67 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 107, டி20 போட்டியில் 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். புனே டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை பெரிதும் அறியப்படாத வீரராக இருந்த சான்ட்னரை உலகம் அறியச் செய்த பங்கு இந்திய வீரர்களுக்கும், ஐ.பி.எல், சி.எஸ்.கே அணியினருக்கும் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0qd0d0v471o
  20. (எம்.ஆர்.எம்.வசீம்) வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருப்பதாக அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும். அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வு துறையை பலப்படுத்த வேண்டும். அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும். ஆனால் எமக்கு கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வு துறையினரின் மன நிலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். புலனாய்வு பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம். முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்த பதவிக்கு வர இருப்பவருக்கு. அவரின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள சிறிதுகாலம் அந்த பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது. தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்காெள்கிறோம். அத்துடன் எமது நாடு சுவிட்சர்லாந்து அல்ல. அதனால் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்பு பிரிவினர் பிரதமருக்கு தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நாடு சுவிட்சர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பாகவும் அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், பாதுகாப்புக்காக செல்லும் வாகனம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்கள். ஆனால் அந்த பதவிக்கு வந்த பின்னர் அந்த பாதுகாப்பு வழங்கப்படுவது நபருக்கு அல்ல, அந்த பதவிக்கு என்பதை தற்போது பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு எப்படிவேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால் ஆட்சி செய்யும்போது, பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விடுதலை முன்னணி தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197348
  21. கடவுச்சீட்டுக்கான வரிசை தொடர்கிறது; நள்ளிரவு முதல் டோக்கனுக்காக மக்கள் காத்திருப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்கிறது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் “டோக்கன்” வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, நள்ளிரவு முதல் டோக்கன் பெறுவதற்காக மக்கள் குறித்த பிரதேசத்தில் காத்திருக்கிறார்கள். இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும், டோக்கன் பெறும் நபருக்கு இரண்டு வாரங்கள் கழித்தே கடவுச்சீட்டு பெறுவதற்கான “நாள்” வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311251
  22. இலங்கையில் அதிகளவில் வட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தின் (verification code) மூலம் வட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர். அண்மையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்பாராமல் வட்ஸ் அப் ஊடாக ஒரு தெரிந்த நபர்களிடம் இருந்து சரிபார்ப்பு குறியீட்டு இலக்கம் (verification code) அனுப்பப்படுகிறது. ஹேக்கர்கள் வட்ஸ் அப் ஊடாக தொடர்பு கொண்டு நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ தம்மை காட்டுடிக்கொண்டு சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தை கோருகின்றார்கள். அந்த இலக்கத்தை கோரும் நபருக்கு ஒரு முறை அனுப்பியதும் வட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. வட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கையில், எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மனைவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட பிறகு, அவள் தவறுதலாக ஒரு குறியீட்டை தனக்கு அனுப்பியதாகவும், அது மீண்டும் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது உண்மையானது என கருதி, குறியீட்டைப் பகிர்ந்து கொண்டேன். பின்னர் எனது வட்ஸ்அப் கணக்கு உடனடியாக ஹேக் செய்யப்பட்டது. எனது வட்ஸ் அப் கணக்கிலுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். அதாவது, தான் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி சிறிய தொகை பணத்தை கோரியுள்ளனர். இவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை பார்த்த நண்பர் ஒருவர் நான் நிதி நெருக்கடியில் உள்ளேனா என்பதை அறிய எனது மனைவியை தொடர்பு கோட்டு விசாரித்துள்ளார். இந்நிலையில், பலமுறை ஹேக் செய்யப்பட்ட வட்ஸ்அப்பை மீண்டும் நிறுவிய போதிலும், 72 மணிநேரமாகியும் என்னால் அணுகலை மீண்டும் பெற முடியவில்லை. பின்னர் பொலிஸ் நிலையத்திரல் முறைப்பாடு செய்து வட்ஸ் அப் உதவியை (WhatsApp support) நாடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், தடயவியல் சைபர் மோசடி நிபுணர்கள் ஹேக்கர்கள் பயன்படுத்தும் இரண்டு-படி முறையை விளக்கினர். அதாவது, முதலில், அவர்கள் சரிபார்ப்புக் குறியீடு மூலம் பயனரின் வட்ஸ்அப் கணக்கை அணுகுவார்கள். பின்னர் நிதி உதவிக்கான கோரிக்கைகளுடன் பயனரின் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் 50,000 முதல் 100,000 ரூபாய் வரை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறே அரசியல்வாதிகளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பசீர் சேகுதாவுத் ஆகியோரின் வட்ஸ் அப் கணக்கு இலக்கங்கள் ஹேக்கர்களால் ஹக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/197324
  23. ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது. பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளன. 2009ம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற தவறியமை இதுவே முதல் தடவை. லிபரல் ஜனநாயக கட்சி 1955 முதல் ஜப்பானை பலதடவைகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக லிபரல் ஜனநாயக கட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆதரவின்மை உட்பட பல குழப்பத்தில் சிக்குண்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் தொடர்ந்து ஆட்சி செய்யப்போவதாக பிரதமர் சிகேரு இஸ்கிபா தெரிவித்துள்ளார். சிகேரு இஸ்கிபா இந்த மாதமே ஜப்பான் பிரதமராக பதவியேற்றார். https://www.virakesari.lk/article/197327
  24. யாழ் - கொழும்பு புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்! கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான நேரடி புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 05.45 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் மதியம் 01.10 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவைகள் உள்நாட்டு யுத்தம் காரணமாக வவுனியாவுடன் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2014ஆம் ஆண்டு முதல் கொழும்பு - யாழ்ப்பாண சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடைப்பட்ட புகையிரத பாதை புனரமைப்பு பணிகளுக்காக கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் அனுராதபுரத்துடனும் , யாழில் இருந்து புறப்படும் புகையிரதம் வவுனியாவுடனும் சேவையை மட்டுப்படுத்தின. புனரமைப்பு பணிகளின் முடிவடைந்து பின்னர் மீண்டும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனுராதபுரம் மற்றும் மாகோ இடையிலான புகையிரத பாதை புனரமைப்பு பணிக்காக கொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதங்கள் மகோவுடனும் , யாழில் இருந்து புறப்படும் புகையிரதம் அநுராதபுரத்துடனும் தமது சேவையை மட்டுப்படுத்தின. அநுராதபுரம் - மாகோ புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், கொழும்பு - யாழ்ப்பாண புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுத்த போதிலும், புகையிரத சமிக்ஞை விளக்குகள் சீர்த்திருத்த பணிகள் உள்ளிட்ட தொழிநுட்ப ரீதியான வேலைகள் பூர்த்தியாகவில்லை என சேவை ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் கொழும்பு கோட்டை - யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197320

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.