Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் இந்தியாவின் தீர்மானத்துக்கு மோடி மகிழ்ச்சி பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் இந்தியாவின் தீர்மானம் மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், “இந்திய அரசாங்கத்தால் பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் தீர்மானம் மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தபெருமானின் சிந்தனைகளை பின்பற்றும் மக்களிடையும் மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது. கொழும்பு, சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் புதன்கிழமை (23) ‘செம்மொழியாக பாளி” என்ற தலைப்பிலான குழுநிலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அறிஞர்களுக்கும் துறவிகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197016
  2. அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது. வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் பல வருடங்களாக அயராது விடை தேடி வரும் இந்த தாய்மார்கள், ஹரீஸ் இலகுவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 5, 2024 செவ்வாய் அன்று கமலா ஹரிசுக்கு ஆதரவாக வாக்களிக்க, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை, தாய்மார்களாகிய நாங்கள், எமது காணாமலாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரால் வேண்டி கொள்கிறோம். நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாற்றுப் பின்னணியில், நாம் கமலா ஹரிஸிற்கான ஆதரவு தெரிவிக்கிறோம். இங்கே வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாறு: முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி: தமிழ் இளைஞர்கள் இறையாண்மையுள்ள தமிழ் தேசத்தை அடைவதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார் மற்றும் முக்கிய உதவிகளையும் செய்தார். செயலாளர் ஹிலாரி கிளிண்டன்: சுதந்திரம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர் ஆயுதப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர் ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: இறையாண்மை மீதான தமிழர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார், இலங்கை ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார். ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்த மிசெல் பாச்சிலெ, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தார். லூயிஸ் ஆர்பர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற முறையில், தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோரி, போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றொரு ஐ.நா மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை, போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானங்களை முன்வைத்தார். தமிழ் மக்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸிடம் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலிமை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழர்களின் படுகொலைகள் தொடர அனுமதித்த உலகளாவிய செயலற்ற தன்மை குறித்து அவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர். https://thinakkural.lk/article/311114
  3. மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற மக்கள் கிராம நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், மன்னார் மாவட்டத்தில் அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/197010
  4. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/197009
  5. அனுர அரசு அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்; அமெரிக்க தூதுவரிடம் தமிழ்த்தரப்பு எடுத்துரைப்பு தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்தவேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க எப்படி தமிழர்களை கையாள்வார் என்பது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அந்தவகையில், கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் செய்த செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இவர்கள் அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம். அதேவேளை நாங்கள் அரசாங்கத்தில் சேர்வதோ அல்லது அதன் ஒரு அங்கமாக இருப்பதோ என்பது நடக்கமுடியாத விடயம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியான விடயத்தை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்தோம். இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311124
  6. சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படிஇந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து இன்று (அக்.24) அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 2 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த அக்.23-ம் தேதிஇ எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவது குறித்து நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன். இருப்பினும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன் அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் தமிழகத்தைச் சேர்ந்த 128 மீனவர்களையும் 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள் மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197006
  7. புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான டானா புயல் வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டானா புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின்பு ஒடிசாவின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருப்பர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. டானா புயல் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்றாலும் புயல் கரையைக் கடக்கும் நிகழ்வுகள் வியாழக்கிழமை இரவில் இருந்தே தொடங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் வீசும். அதனால் வியாழக்கிழமை (அக்.24) இரவு முதல் வெள்ளிக்கிழமை (அக்.25) காலை வரை கனமழை காற்று மற்றும் இடி போன்றவை உச்சத்தில் இருக்கும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டி.ஜி. மிருத்யுஞ்செய் மோஹபத்ரா தெரிவித்துள்ளார். டானா புயல் கரையைக் கடக்கும் போதுஇ ஒடிசா பல அபாயகரமான பாதிப்புகளைச் சந்திக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு எழும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்: "ஒரு சக்திவாய்ந்த புயல் தாழ்வான பகுதிகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகயில் புயல் தாக்கும் பகுதிகளில் இருந்து சுமார் 1.1 மில்லியன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி பாதிப்படலாம் என அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் இருந்து 30 சதவீத மக்கள் அல்லது 3 - 4 லட்சம் மக்கள் புதன்கிழமை மாலைக்குள் வெளியேற்றப்பட்டுவிட்டனர்" என்று தெரிவித்திருந்தார். பாதிக்கப்படும் இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி வியாழக்கிழமை காலையிலும் தொடர்ந்து நடைபெற்றது. டானா புயல் காரணமாக ஒடிசாவின் பத்ராக் பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திலிப் ரவுட்ராய் கூறுகையில் "பாதிக்கப்பட்டும் இடங்களில் இருந்து நாங்கள் மக்களை வெளியேற்றி வருகிறோம். சிலர் தாங்களாகவே முன்வந்து வெளியேறுகின்றனர். சிலர் தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற விரும்பாததால் அவர்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர். அதேபோல் டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் இருந்து 1.14 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தயார்நிலையில் ராணுவம் கடற்படைஇ பேரிடர் மீட்பு படை: டானா புயலின் பாதிப்பினை எதிர்கொள்ளும் வகையில் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாகஇ ராணுவம் கப்பற்படை மற்றும் கடலோர காவல் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. வியாழக்கிழமை இரவில் இருந்து வெள்ளிக்கிழமைக்குள் டானா புயல் எப்போது வேண்டுமானாலும் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில்இ மனிதாபிமான உதவிகள் செய்வதற்காக இந்திய கடற்படை தயாரகி வருகிறது. நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்பு குழுக்களை தாங்கிய படி கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை இந்திய கடற்படை உறுதிபடுத்தியுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்டிஆர்எஃப்: ஒடிசாவிலுள்ள மகாகல்பதா மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் டானா புயலின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே டானா புயல் எச்சரிக்கை காரணமாக வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/196998
  8. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் இலங்கையர்கள் - விஜித ஹேரத் அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை இலக்குவைப்பதற்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்ட்டுள்ள மூவரும் இலங்கையர்களே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூவரும் இலங்கையர்கள் விசாரணைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன, சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197002
  9. மலேசிய வர்த்தகரின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நாமல் விசாரணை செய்யப்பட்டார் - பொலிஸ் நிதிபரிமாற்றம் குறித்து மலேசிய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிஐடியினர் இன்று விசாரித்துள்ளனர். பொலிஸ்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். 2010முதல் 2015 வரை இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிதிபரிமாற்றம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196993 இரண்டரை மணி நேர விசாரணையின் பின் வெளியேறினார் நாமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். https://thinakkural.lk/article/311109
  10. கையடக்கத்தொலைபேசிகளிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தால் உங்கள் தொலைபேசிகள் வெடிக்கும் என வெளியாகியுள்ள வீடியோ செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என இலங்கையின் கணிணி அவசர தயார் நிலை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தவிடயம் குறித்து தங்களுடன் பலர் தொடர்புகொண்டுள்ளனர் என கணிணி அவசர தயார் நிலை குழுவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 13 அல்லது 4 என்ற இலக்கங்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றிற்கு பதில் அளிக்கவேண்டாம். அதற்கு பதில் அளித்தால் உங்கள் கையடக்க தொலைபேசி உடனடியாக வெடித்துச்சிதறும், இது ஏற்கனவே இடம்பெற்றுள்ளது சிங்கப்பூரிலும் உலகிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர், இலங்கையை இது பாதிக்குமா என்பது தெரியவில்லை என்ற வீடியோ செய்தி பரவிவருகின்றது. எனினும் இந்த செய்தியில் தெரிவிக்கப்படுவது போல எந்த கையடக்க தொலைபேசியும் வெடித்து சிதறவில்லை. தலைதுண்டிக்கப்பட்ட ஒருவர் இரத்த வெள்ளத்தில் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இது வட்ஸ் அப்பில் பரவும் குரல்பதிவுடன் தொடர்புடையது என பலர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை விசாரணைபிரிவிற்கு அனுப்பியுள்ளோம். அழைப்பின் மூலம் கையடக்க தொலைபேசியை வெடிக்கவைக்கும் தொழில்நுட்பம் எதுவுமில்லை. 13 மற்றும் 4 இல் ஆரம்பிக்கும் தொலைபேசி இலக்கங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த இவ்வாறான தகவல்களை பரப்புகின்றனர். கையடக்க தொலைபேசிகள் அழைப்பின் போது வெடித்தால் அதற்கு உள்வரும்அழைப்பு காரணமில்லை. இவ்வாறான விடயங்களை மக்கள் நம்பகூடாது. https://www.virakesari.lk/article/196990
  11. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் புதன்கிழமை (23) சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் ‘செம்மொழியாக பாளி” என்ற தலைப்பிலான குழுநிலைக் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். இந்திய அரசாங்கத்தால் பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் ஆரம்ப உரையினை கங்காராமை விகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸாஜி தேரர் வழங்கியதுடன் அதனை அடுத்து குறித்த தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் கீர்த்திமிக்க புலமையாளர்களான தென் பீஹாரின் புத்தகயாவிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஆனந் சிங் (வீடியோ மூலமாக), பாளி மற்றும் பௌத்த கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிலையத்தின் பௌத்த கலாசாரத் திணைக்களத்தின் சங்கைக்குரிய பேராசிரியர் மிரிஸ்வத்தை விமலஞான தேரர், இலங்கையின் பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் பாளி திணைக்களத்தின் பேராசிரியர் சங்கைக்குரிய கோனாதெனிய பன்ணரத்தன தேரர், களனி பல்கலைக் கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் திணைக்களத்தின் சங்கைக்குரிய கலாநிதி தெனியாயே பன்னலோக புத்தரகித்த தேரர் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் பௌத்த கற்கைகள் திணைக்கத்தின் சங்கைக்குரிய கலாநிதி எம் சுகதசிறி தேரர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற பேச்சாளர்கள் புத்தபெருமானின் போதனைகளை பிரசங்கம் செய்வதில் பாளி மொழியின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தினர். அத்துடன் பாளி மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவென இலங்கை அறிஞர்கள் பாராட்டியதுடன், பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இது அமைவதாகவும் அவர்கள் இந்த முயற்சியை சுட்டிக்காட்டியிருந்தனர். இந்திய அரசாங்கம் பாலி மொழியை ஒரு செம்மொழியாக அங்கீகரிப்பது, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த துறவிகள் மற்றும் கல்விசார் சமூகங்களின் மொழி ரீதியான ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்றும் இந்நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த நிகழ்வில் இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் நேபாளம் உட்பட்ட நாடுகளின் குருமார்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடந்த சர்வதேச அபிதம்ம திவாஸில் இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களின் செய்தியை வலியுறுத்தும் வகையில், பாளி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியமையானது புத்த பெருமானின் அமைதி, இரக்கம் மற்றும் மனித நல்வாழ்வு பற்றிய செய்தியின் தூய்மையைப் பேணவும், தலைமுறைகள் ஊடாக அதன் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவும் என்று இக்கலந்துரையாடல்களின்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/196986
  12. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண "கொழும்பு கூட்டத்தில் திட்டம் வகுத்திடுக” - அன்புமணி சென்னை: “கொழும்புவில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (அக்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீனவர்கள் நலனுக்கான இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29-ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையின் அத்துமீறல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஜூன் 16-ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 54படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தவிர இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள் நேற்று சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். சென்னை உயர்நீதிமன்றமும் இதே யோசனையை பல முறை தெரிவித்திருந்தது. கடைசியாக 2022-ஆம் ஆண்டில் இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப்பின் இந்தக் கூட்டம் நடைபெறுவது மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் கூடிக் கலையும் கூட்டமாக அமைந்து விடக் கூடாது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியதாக உள்ள நிலையில், அந்த எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இரு தரப்பு மீனவர்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி? என்பதை 29-ஆம் தேதி நடைபெறவுள்ளக் கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும். மீனவர் சிக்கலுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட, இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/196982
  13. பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 600 முறைப்பாடுகள் பதிவு பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 385 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/196983
  14. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் திசைகாட்டிக்கான வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம். பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை மக்களின் அத்தியாவசிய சேவைகள் சீர்குலையாமல், பொருளாதாரம் சீர்குலையாமல், நாட்டின் பாதுகாப்பு சீர்குலையாமல் பேணி வரவேண்டிய பொறுப்பு எம்மூவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர 14 ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பெருமளவிலான உறுப்பினர்கள் மத்தியில் இருந்து இருபத்து ஐந்து பேருக்கு குறைவான அமைச்சரவையொன்றை அமைத்துக் கொள்வோம். இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடையாது. அமைச்சுப் பதவிகளுக்கு ஒத்துவரக்கூடியதாக பிரதியமைச்சர் பதவிகள் இருக்கும். அது முதல் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்பி இந்தப் பயணத்தை தொடருவோம். நிலவிய பாராளுமன்றம் மக்கள் அனைவரினதும் எதிர்ப்பிற்கு அருவருப்பிற்கு இலக்காகியிருந்தது. கொவிட் பெருந்தொற்றின் போது வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது கூட அந்த எதிர்ப்பு மக்களிடமிருந்து தோன்றியது. ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கத்திகள், மிளகாய்த்தூளை எடுத்து வந்தார்கள். ஒருசிலர் புத்தகங்களை எறிந்து சண்டைபிடித்த விதத்தை நாங்கள் கண்டோம். எமது நாட்டில் மிருகக்காட்சிசாலை மக்களுக்கு தடைசெய்யப்படவில்லை. எனினும் பாராளுமன்றம் தடைசெய்யப்பட்டது. அந்தப் பாராளுமன்றம் மக்களுக்கு பொருத்தமற்ற பாராளுமன்றமொன்று அல்லவென்பது அதன் மூலமாக வெளிப்பட்டது. அந்தப் பாராளுமன்றத்தை சுத்தம் செய்து புதுப்பிக்க அணித்திரளுகின்ற வேளையில் முன்னாள் பாராளுமன்றத்திலிருந்த அறுபத்தியிரண்டு பேர் தன்னிச்சையாகவே நீங்கிச் சென்றிருக்கிறார்கள். திசைகாட்டியின் நேர்மையான, ஊழலற்ற, அதைப்போலவே மக்களுக்காக எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ளக்கூடியவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புங்கள். அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகச்சிறந்த பங்களிப்பினை பெற்றுக்கொடுங்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாரிய சக்தி வழங்கப்பட்டது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐயாயிரத்திற்கு குறைவான வாக்குகளே திசைகாட்டிக்கு கிடைத்திருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பதாயிரத்தை விட அதிகமானதாகும். அப்படியானால் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும்? ஏனைய கட்சிகள் தேர்தல் இயக்கத்தை தொடங்கும்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டன. எமது நாட்டில் நிலவுகின்ற பல பிரதான சவால்களை வெற்றிக்கொள்ள திருகோணமலை மாவட்டத்திலிருந்து திசைகாட்டிக்கு பலம்பொருந்திய வெற்றி தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகாலமாக சந்தேகம், பகைமை, குரோதம், அவநம்பிக்கை பரப்பப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை நோக்கியும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளை நோக்கியும் தள்ளப்பட்டார்கள். அதன்பின்னர் அந்தக் கட்சிகளின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்வதற்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்துவந்தார்கள். திருகோணமலை நகரமும் மாவட்டமும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்ற நிலைமைக்குப் பதிலாக மக்களை பிரித்து மோதல்களை ஏற்படுத்தி அவர்களின் ஆட்சியை கொண்டு நடத்தினார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கான கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாம் வெற்றிபெறுவோம் என நம்பவில்லை. அதனால் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு பிரவேசிப்பது நாங்கள் வெற்றிபெற்றுள்ள ஒரு பின்புலத்துடன்தான். அனைத்து மக்களும் ஒற்றுமைக்கான ஒரே குடையின் கீழ் வந்து நிழல் பெறவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனை சாதிக்க முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மீதான பாரிய எழுச்சி தோன்றியுள்ளது. நம்பிக்கை வளர்ந்துள்ளது. பிரிந்து ஒதுங்கியிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒற்றுமையைக் கொண்ட அரசாங்கத்தை நிறுவ வேண்டிய விசேட பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு இருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும். நாங்கள் நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவருகின்ற வேலைத்திட்டத்தை அமுலாக்குகையில் திருகோணமலையின் கனிய மணல் படிவை முறைப்படி பாவனைக்கு எடுத்து பெறுமதி சேர்க்கின்ற கைத்தொழிலாக மாற்றுவோம். அதைப்போலவே, எமது கண்ணெதிரே இற்றுப்போகின்ற எண்ணெய்க் குதங்களை புனரமைத்து தேசிய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்ற நிலைமைக்கு கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த எண்ணெய்க் குதங்களை சார்ந்ததாக தூய்மையகமொன்றை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். மரபார்ந்த மீன்பிடித் தொழில்துறையை ஆக்கவிளைவுமிக்க தொழிலாக மாற்றும்பொருட்டு ஏற்கெனவே எரிபொருள் மானியம் வழங்கியிருக்கிறோம். அதைப்போலவே, கால்நடை வளங்களை விருத்தி செய்தவற்கான பாரிய வாய்ப்பு வளம் திருகோணமலை மாவட்டத்தில் நிலவுகின்றது. அதற்கு மேலதிகமாக 23 ஆயிரம் ஏக்கர் கரும்பு செய்கையைக் கொண்டதாக கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிலவியது. அந்த இயந்திர சாதனங்கள் அழிவடைந்து வருகின்றன. கரும்பு விளைநிலங்கள் யானைகளின் வாழிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகளில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர்களை தற்காலிகமாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். கரும்புச் செய்கையை மீண்டும் ஆரம்பித்து தொழில்சாலையை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் வரை விவசாயிகள் இந்தக் காணிகளில் பயிர் செய்வார்கள். அதைப்போலவே, அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்த வேளையில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதில்லை என எமக்கு தெளிவாகியது. எமக்கும் அவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் அடிப்படை அணுகுமுறையை தொடங்கினோம். சட்டத்தை அமுலாக்குவதைப் பார்க்கிலும் புரிந்துணர்வு முக்கியமானது. நாட்டில் அரிசி தட்டுப்பாடு கிடையாதென்பதால் சுற்றுலாத் தொழில்துறைக்கு அவசியமான அரிசியை தவிர்ந்த வேறு அரிசி மணி ஒன்றைக் கூட இறக்குமதி செய்ய நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரூபா 15 ஆயிரமாக நிலவிய உரமானியத்தை ரூபா 25 ஆயிரமாக அதிகரித்தது அதற்காகத்தான். அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதமளவில் எங்களுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்கு குறுங்கால ரீதியாக மானியங்களை வழங்குவோம். அதன் பின்னர் நீண்டகால ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர் மக்களை சுயசக்தியுடன் நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவோம். உலகில் விசேடமான ஒரு நிலைமை உருவாகாவிட்டால் 2025 ஆம் ஆண்டை இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வருகை தந்த நாடாக மாற்றுவோம். அதேவேளையில் எதிரிகள் அரசாங்கம் மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் வீழ்ந்து விடுவதாக சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்ப ஆட்சி சிதைவடைந்து இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள். மக்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் முன் சமமானவர்களாக மாற்றுவோம். 2015 நல்லாட்சி அரசாங்கம் மோசடிப்பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு பதிலாக வெறும் காட்சிக்காக மாத்திரம் செயலாற்றி வந்தது. அந்த நிலைமையை மாற்றியமைத்து எல்லா விதத்திலும் நிறைவான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக இந்தப் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை திசைகாட்டியின் பிரதிநிதிகளால் நிரப்புங்கள். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ் தோழர் ஒருவரை, முஸ்லிம் தோழர் ஒருவரை, சிங்கள தோழர் ஒருவரை என்ற வகையில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒரே கொடியின் நிழலில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்தும் செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196973
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி, இந்தியா செய்தியாளர் 24 அக்டோபர் 2024, 06:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் இரு பெரும் பணக்காரர்களான ஈலோன் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானிக்கு இடையே ஒரு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையை யார் கைப்பற்றுவது என்பதுதான் அந்தப் போட்டி. இந்தப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக இருந்து வந்தது. ஆனால், பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை, ஏலத்தின் மூலமாக இல்லாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்த பிறகு, இந்தப் போர் மேலும் சூடுபிடித்துள்ளது. இதற்கு முன்னர், அம்பானியை ஆதரிக்கும் வகையிலான ஏல முறையை ஈலோன் மஸ்க் விமர்சித்திருந்தார். செயற்கைக்கோள் பிராட்பேண்ட் தொழில்நுட்பம், ஒரு செயற்கைக்கோளின் பரப்பு முழுதும் இணைய சேவையை வழங்குகிறது. தொலைதூர இடங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இது நம்பகமான தேர்வாக இருக்கிறது. தொலைபேசி, கேபிள் போன்ற பாரம்பரிய தகவல் தொடர்பு சேவைகள் அடைய முடியாத இடங்களிலும் சேட்டிலைட் சேவையைப் பெற முடியும். இது டிஜிட்டல் சேவைகள் சென்று சேராத இடங்களையும் இணைக்க உதவுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனம் இந்த அலைக்கற்றைக்கான விலையை இன்னும் அறிவிக்கவில்லை. வணிகரீதியான செயற்கைக்கோள் இணைய சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் உள்ள செயற்கைக்கோள் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டளவில் 20 லட்சத்தை எட்டும் என்று கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. (ICRA) தெரிவித்துள்ளது. கடும் போட்டி இந்தச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தலைமையில் சுமார் அரை டஜன் முக்கிய பங்குதாரர்கள் இந்தப் போட்டியில் உள்ளனர். தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்த அலைக்கற்றை ஏலங்களில் பல நூறு கோடிகளை முதலீடு செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, இப்போது லக்சம்பர்க்கை தளமாகக் கொண்ட முன்னணி செயற்கைக்கோள் சேவை வழங்குநரான SES அஸ்ட்ராவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 6,419 செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது. 100 நாடுகளில் 40 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், பூமியின் மேற்பரப்பில் இருந்து 160 கி.மீ முதல் 1,000 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட பூமியின் தாழ்வான சுற்றுப்பாதை (low-Earth orbit - LEO) செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி அதிவிரைவு இணைய சேவையை வழங்குகிறது. ஆனால், எஸ்.இ.எஸ் நிறுவனம் பூமியின் நடுப்பகுதி சுற்றுப்பாதை (medium-Earth orbit - MEO) செயற்கைக் கோள்களை அதிக உயரத்தில் இயக்குகிறது. இது செலவு குறைந்த அமைப்பு. பூமியிலுள்ள பயனர்கள் செயற்கைக்கோள் சிக்னல்களை பெற்று, அதை இணைய டேட்டாவாக மாற்றுகிறார்கள். ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதையில் 6,419 செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 100 நாடுகளில் 40 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். ஈலோன் மஸ்க் 2021 முதல் இந்தியாவில் இணைய சேவைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் ஒழுங்குமுறைத் தடைகள் அவரது திட்டத்தைத் தாமதப்படுத்தியது. இம்முறை அவரது நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைந்தால், அந்நிய முதலீட்டை ஈர்க்கும் பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சிகளுக்கு அது ஊக்கமளிக்கும் எனப் பலர் கூறுகின்றனர். தனது அரசின் கொள்கைகள் அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாக உள்ளதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் மோதி, வணிகங்களுக்குச் சாதகமானவர் என்ற பிம்பத்தை மேம்படுத்தவும் அது உதவும். முகேஷ் அம்பானி vs ஈலோன் மஸ்க் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்த முகேஷ் அம்பானி பல நூறு கோடிகளை அலைக்கறை ஏலத்தில் செலவிட்டுள்ளார் கடந்த காலங்களில் ஏலங்கள் மூலம் லாபம் பார்த்த இந்திய அரசு, இந்த முறை செயற்கைக்கோள் அலைக்கற்றையை நிர்வாக ரீதியாக ஒதுக்க முடிவெடுத்திருக்கிறது. இது சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப் போவதாக இந்திய அரசு கூறுகிறது. செயற்கைக்கோள் அலைக்கற்றை பொதுவாக ஏலத்தில் ஒதுக்கப்படுவதில்லை, ஏனெனில் அதற்கு ஆகும் செலவுகள் நிதி நியாயத்தை, முதலீட்டை பாதிக்கலாம், என்கிறார் கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்சின் தொழில்நுட்ப ஆய்வாளர் கேரத் ஓவன். இதற்கு நேர்மாறாக, நிர்வாக ஒதுக்கீடு ‘தகுதியுள்ள’ போட்டியாளர்களிடையே அலைக்கற்றை நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இது ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய பந்தயத்தில் நுழைவதற்கான வாய்ப்பை வழங்கும். ஆனால், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவது குறித்து இந்தியாவில் தெளிவான சட்ட விதிகள் இல்லை. அதனால் நியாயமான போட்டியை உறுதிப்படுத்த ஏலம் அவசியம் என்று அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கூறுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அக்டோபர் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளருக்கு எழுதிய கடிதங்களை பிபிசி பார்த்தது. அதில் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் ‘செயற்கைக்கோள் மற்றும் தரைவழி இணைய சேவைகளுக்கு இடையே ஒரு சமமான போட்டியை’ உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது. "செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்கள், செயற்கைக்கோள் மற்றும் தரைவழி நெட்வொர்க்குகளுக்கு இடையே உள்ள எல்லையைப் பெருமளவு மங்கவைத்துவிட்டதாக," அந்தக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், "செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகள் இனி தரைவழி நெட்வொர்க்குகள் சென்றடையாத பகுதிகளுக்கு மட்டுமானவையல்ல," என்றும் அந்நிறுவனம் கூறியது. அலைக்கற்றை ஒதுக்கீடு, இந்தியாவின் தொலைத்தொடர்பு சட்டங்களின் கீழ் ஏலங்கள் மூலம் செய்யப்படுகிறது. ‘பொதுநலன், அரசுச் செயல்பாடுகள், தொழில்நுட்பம், அல்லது பொருளாதாரக் காரணங்களால் ஏலம் தடைபடும்’ சந்தர்ப்பங்களில் மட்டுமே நிர்வாக ஒதுக்கீடு அனுமதிக்கப்படுகிறது. தனது எக்ஸ் பக்கத்தில், ஈலோன் மஸ்க், அலைக்கற்றையில் "செயற்கைக் கோள்களுக்கான பகிர்வு ஸ்பெக்ட்ரம் என ஐ.டி.யூ-வால் நீண்டகாலத்திற்கு முன்பே நியமிக்கப்பட்டது" என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union - ITU) என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான ஐ.நா., அமைப்பு. இது உலகளாவிய விதிமுறைகளை அமைக்கிறது. இந்தியா இதில் உறுப்பினராக உள்ளது. முகேஷ் அம்பானி இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்தை வற்புறுத்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தபோது, ஈலோன் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவுக்கு இப்படிப் பதிலளித்தார்: “நான் [திரு அம்பானியை] அழைத்து, இந்திய மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கும் போட்டியில் ஸ்டார்லிங்கை அனுமதிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்குமா என்று கேட்கப் போகிறேன்.” நிர்வாக விலை நிர்ணய முறைக்கு அம்பானியின் எதிர்ப்பு ஒரு மூலோபாய நன்மையில் இருந்து உருவாகலாம் என்று ஓவன் கூறுகிறார். ஸ்டார்லிங்கை இந்திய சந்தையில் இருந்து விலக்கி வைக்க ஏலத்தைப் பயன்படுத்தி, ‘ஈலோன் மஸ்கை விஞ்சுவதற்கு’ அம்பானி தயாராக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். குறைந்த விலையில் செயற்கைக்கோள் இன்டர்நெட் தரப்போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய ஆன்டனா ஆனால் அம்பானி மட்டும் ஏல வழிமுறையை ஆதரிக்கவில்லை. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், நகர்ப்புற, உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் ‘தொலைத்தொடர்பு உரிமங்களை எடுத்து, மற்றவர்களைப் போல அலைக்கற்றைகளை வாங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய வயர்லெஸ் ஆபரேட்டரான மிட்டல், அம்பானியுடன் சேர்ந்து, நாட்டின் டெலிகாம் சந்தையில் 80 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறார். இத்தகைய எதிர்ப்பானது, "நீண்ட கால அச்சுறுத்தல்களாகக் கருதப்படும் சர்வதேச போட்டியாளர்களுக்குச் செலவுகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தற்காப்பு நடவடிக்கை" என்கிறார் தொலைத்தொடர்பு நிபுணர் மகேஷ் உப்பல். "உடனடிப் போட்டி இல்லை என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. [இந்தியாவில்] பெரிய தரைவழி இணைய வணிகங்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் செயற்கைக்கோள்கள் தொழில்நுட்பம் விரைவில் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறக்கூடும் என்று அஞ்சுகின்றனர்,” என்கிறார் அவர். செயற்கைக்கோள் இணைய சந்தை இந்தியாவில் பரவலாக வளரும் என்ற எதிர்பார்ப்பு, இந்தப் போட்டியை இயக்குகிறது. இந்தியாவின் 140 கோடி மக்களில் ஏறக்குறைய 40% பேருக்கு இன்னமும் இணையம் சென்றடையவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் என்று இ.ஒய்-பார்த்தெனன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா கிட்டத்தட்ட 109 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 75.1 கோடி பேர்தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவைவிட சீனா 34 கோடி இணைய பயனர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய ஆன்லைன் போக்குகளைக் கண்காணிக்கும் DataReportal நிறுவனத்தின் அறிக்கை இதைக் கூறுகிறது. இந்தியாவின் இணையப் பரவல் விகிதம் இன்னும் உலகளாவிய சராசரியான 66.2%-ஐ விடப் பின்தங்கியுள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள், இந்தியா இந்த இடைவெளியைச் சரிசெய்து வருவதாகக் கூறுகின்றன. சரியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டால், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் இந்த இடைவெளியைக் குறைக்க உதவும். அன்றாடப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பமான இன்டர்நெட்-ஆஃப் திங்ஸ் (IoT) இந்தியாவில் காலூன்றவும் இது உதவலாம். இந்தத் தொழில்நுட்பம் பொருட்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ள உதவுகிறது. இந்தியாவில் விலை நிர்ணயம் முக்கியமானதாக இருக்கும். உலகிலேயே மொபைல் டேட்டா மலிவாகக் கிடைப்பது இந்தியாவில்தான். ஒரு ஜிகாபைட்டுக்கு வெறும் 10 ரூபாய் (12 cents) என்று மோதி கூறுகிறார். "இந்திய இணைய சேவை வழங்குநர்களுக்கு இடையே விலைப் போர் தவிர்க்க முடியாதது. ஈலோன் மஸ்க்கிடம் பெரும் செல்வம் உள்ளது. இந்திய சந்தையில் காலூன்றுவதற்காக சில இடங்களில் அவரால் ஒரு வருட இலவச சேவைகளைக்கூட வழங்க முடியும்," என்கிறார் தொழில்நுட்ப ஆய்வாளர் பிரசாந்தா கே ராய். ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கெனவே கென்யா, மற்றும் தென்னாப்பிரிக்காவில் இணைய விலைகளைக் குறைத்துள்ளது. செயற்கைக்கோள் இணையத்தின் விலை என்ன? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இந்தியாவின் பல தொலைதூரப் பகுதிகளுக்கு இன்னமும் இணையம் சென்று சேரவில்லை ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்காது. 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஸ்டார்லிங்கின் அதிக விலைகள் அரசாங்க மானியங்கள் இல்லாமல் போட்டியிடுவதைக் கடினமாக்கும் என்று EY-பார்த்தெனன் குறிப்பிடுகிறது. இந்தியாவின் முக்கிய பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களைவிட ஸ்டார்லிங்கின் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம். பல எல்.இ.ஓ (LEO) செயற்கைக்கோள்கள் - ஸ்டார்லிங்க் செயல்படும் வகை - எம்.இ.ஓ. (MEO) செயற்கைக்கோள்களை விட ஸ்டார்லிங்க் பயன்படுத்தும் தாழ்வான சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்கள் மூலம் உலகளாவிய இணைய கவரேஜ் வழங்க, அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் தேவைப்படும். அதாவது SES நிறுவனம் பயன்படுத்தும் நடுப்பகுதி சுற்றுப்பாதை (MEO) செயற்கைக்கோள்களைவிட அதிக எண்ணிக்கையில் செயற்கைக் கோள்கள் தேவைப்படும். இது செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் பராமரிப்பு செலவுகளை அதிகரிக்கும். அதுபோல் இந்திய இணைய நிறுவனங்களில் சில அச்சங்கள் ஆதாரமற்றவையாக இருக்கலாம். "தரைவழி இணைய சேவைகளை வழங்கவே முடியாது என்றாலொழிய இணைய நிறுவனங்கள் ஒருபோதும் முற்றிலுமாகச் செயற்கைக் கோளுக்கு மாறப் போவதில்லை. மக்கள்தொகை குறைவாக உள்ள பகுதிகளைத் தவிர தரைவழி நெட்வொர்க்குகள் செயற்கைக்கோளைவிட எப்போதும் குறைந்த விலையில்தான் இருக்கும்," என்று ஓவன் கூறுகிறார். ஈலோன் மஸ்க் செயற்கைக்கோள் இணைய சேவையில் முதல் போட்டியாளர் என்ற நன்மை இருக்கலாம். ஆனால் "செயற்கைக்கோள் இணைய சந்தைகள் மிக மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன,” என்கிறார் அவர். விண்வெளி இணைய சந்தையைக் கையகப்படுத்த உலகின் இரு பெரும் பணக்காரர்களுக்கு இடையிலான போர் துவங்கியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx24n83q09xo
  16. துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையகத்தில் தீவிரவாத தாக்குதல் துருக்கி அரசுக்கு சொந்தமான அங்காராவின் தலைநகரில் உள்ள துருக்கி விண்வெளி ஆய்வு மைய தலைமையக கட்டிடத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய இரண்டு பயங்கரவாதிகள் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் நுழைந்து கைக்குண்டுகளை வீசியதுடன் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் இருபத்தி இரண்டு பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் படையினர், பொலிஸார், தீயணைப்பு வாகனங்கள், அம்புலன்சுகள் விரைந்துள்ளன. இதனால் அப்பகுதி கலவர பகுதியாக காட்சி அளிக்கிறது. குர்தீஷ் அமைப்பினர் அல்லது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311121
  17. இலங்கை: அறுகம்பையில் இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் - புலனாய்வு தகவல் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 24 அக்டோபர் 2024, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள இஸ்ரேல் நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அமெரிக்க தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று காலை அவசர எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமது ஊழியர்கள் மற்றும் இலங்கையில் வாழும் அமெரிக்க பிரஜைகளை அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது. மீள் அறிவிப்பு விடுக்கப்படும் வரை அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,X 'அறுகம்பை பகுதியில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த அறிவிப்பு' அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பகுதி மற்றும் இலங்கை தென் மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இஸ்ரேல் பிரஜைகளுக்கு இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு தலைமையகம் நேற்றைய தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சுற்றுலா தளங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கருத்தில் கொண்டே இஸ்ரேஸ் தேசிய பாதுகாப்பு தலைமையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளையில், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது அவதானத்துடன் செயற்படுமாறு பிரிட்டன், தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், தமது நாட்டு பிரஜைகளை அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைக்கான ரஷ்ய தூதரகம், ஆஸ்திரேலிய தூதரகம் ஆகியன அறிவித்துள்ளன. இலங்கை போலீசாருக்கு முன்னதாகவே கிடைத்த புலனாய்வு தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அக்டோபர் மாதம் 7ஆம் தேதி புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக பதில் போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ''கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு சபையில் நாம் மிகவும் ஆழமாகக் கலந்துரையாடியிருந்தோம். அதற்கான ஆலோசனைகள் எமக்குக் கிடைத்தன. அந்த ஆலோசனைகளின் பிரகாரம், வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு, குறித்த பகுதிகளில் பாதுகாப்பு, மதத் தலங்களின் பாதுகாப்பு விசேட பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டது. போசார், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புலனாய்வு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்றைய தினம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார். மேலும், புலனாய்வுத் தகவல் சரியாகக் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்பு சபைக் கூட்டம் இணைய வழியாக நடத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். "முப்படைத் தளபதிகள், புலனாய்வுப் பிரதானிகள், பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். வெளிநாட்டுப் பிஜைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து தூதரகங்களையும் நாம் தெளிவூட்டியுள்ளோம்" என பதில் போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிக்கிறார். இலங்கையிலுள்ள இஸ்ரேல் பிரஜைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரஜைகளில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளும் குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகின்றனர். இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை 14,87,808 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த நிலையில், அவர்களில் 21,610 பேர் இஸ்ரேல் பிரஜைகள் என சுற்றுலாத்துறை அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இறுதி இரண்டு மாதங்களில் இஸ்ரேல் பிரஜைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள கட்டடம் ஒன்று உள்ளதாகவும், அந்த கட்டடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கிறார். இந்த நிலையில், குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறுகிறார். ''அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளால் கட்டடமொன்று கட்டப்பட்டுள்ளது. ஒரு மண்டபத்தைப் போன்றதொரு கட்டடம். அறுகம்பை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகள் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளின் கவனத்தை ஈர்த்த பகுதிகளாகும். கடல் சார் விளையாட்டுகளில் அவர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்" என அவர் கூறுகின்றார். ''இஸ்ரேல் நாட்டு பிரஜைகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்தது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக பிரதி போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வீதி சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, நபர்கள், வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன" எனவும் அவர் குறிப்பிடுகிறார். தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல் வழங்கியதா? பட மூலாதாரம்,POLICE MEDIA படக்குறிப்பு, போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறை இலங்கைக்கு தகவல் வழங்கியுள்ளதாக இலங்கையின் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தகவலானது, அக்டோபர் 19ஆம் தேதிக்கும், 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படக்கூடும் என இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியுதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை இரண்டு பேர் நடத்தவுள்ளதுடன், அதில் ஒருவர் இராக்கில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் அந்தப் புலனாய்வுத் தகவலை மேற்கோள்காட்டி உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விடயம் தொடர்பில் போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவவிடம் வினவினோம். ''அது தொடர்பிலான தகவல் என்னிடம் இல்லை. இந்தப் புலனாய்வுத் தகவல் வெளிநாடு ஒன்றிலிருந்து கிடைத்ததா அல்லது எமது புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்ததா என்பதைக் கூற முடியாது. எனினும், பதில் போலீஸ் மாஅதிபருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண பிரதி போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பகுதியிலுள்ள ஹோட்டல்களில் இஸ்ரேல் பிரஜைகள் வேலை செய்து வருவதாக பொத்துவில் பிரதேச செயலக பிரிவின் நிர்வாக அதிகாரி எம்.எம்.எம்.சுபைர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். குறித்த ஹோட்டல்களில் இந்த பிரஜைகளுக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், அவர்களின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களுக்கு வரவழைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். அத்துடன், இஸ்ரேல் நாட்டு பிரஜைகளால் இந்தப் பகுதியிலுள்ள சில கட்டடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குறித்த பகுதியில் மத ஸ்தலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் இந்தத் தகவலை பிபிசி சிங்கள சேவையால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் கடும் பாதுகாப்பு அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அறுகம்பை, பொத்துவில், காலி, மாத்தறை, எல்ல உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் இடங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட தேவாலயங்களில் பெரிய குழுக்களில் மக்கள் திரண்டிருந்த நிலையில் கொழும்பு நகரைச் சுற்றிப் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. மூன்று தேவாலயங்கள், மூன்று சொகுசு விடுதிகள் உள்படப் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62l34rnx9lo
  18. வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் பாஞ்ச் ஐயாவின் மனைவி திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன்.
  19. மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும். இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது. இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக்கு களம் அமைத்தது. இந்த நீண்ட வரலாற்றைக் கொண்ட நாசா ஆய்வு மையம் இன்று வரை விண்வெளி தொடர்பாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நாசா லேசர் தகவல் தொடர்பு மூலம் அற்புதமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது. முதன்முறையாக, லேசர் தகவல்தொடர்புகள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இந்த தொழில்நுட்பம் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே தரவு எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதில் புரட்சியை ஏற்படுத்துவதாக தொழிட்நுட்ப வல்லுனர்கள் உறுதியளிக்கின்றனர். பாரம்பரிய ரேடியோ அலைகளை விட கணிசமாக வேகமான மற்றும் திறமையான பரிமாற்றங்களை இது வழங்குகிறது. இந்த முன்னேற்றங்கள் நாசாவின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆழமான விண்வெளி ஆய்வுக்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் இன்று நாசா மிகத் துல்லியமான விண்வெளி தகவல்தொடர்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான புதிய பாதைகளைத் திறக்கிறது. நாசாவின் இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ப்ளு ஆரிஜினின் புதிய க்ளென் ரொக்கெட், ஒக்டோபர் 13, 2024 அன்று செவ்வாய் கிரகத்திற்கான நாசா பயணத்துடன் அறிமுகமாக இருந்தமையாகும். ESCAPADE (Escape and Plasma Acceleration and Dynamics Explorers) என பெயரிடப்பட்ட இந்த பணி, செவ்வாய் கிரக ஆய்வில் ஒரு முக்கிய படியைக் குறிக்கும் ப்ளூ ஆரிஜினின் புதிய ஹெவி-லிஃப்ட் ராக்கெட்டின் சோதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ESCAPADE அல்லது எஸ்கேப் அண்ட் பிளாஸ்மா ஆக்சிலரேஷன் மற்றும் டைனமிக்ஸ் எக்ஸ்ப்ளோரர்ஸ் என்பது, நாசாவின் ஒரு இலட்சியப் பணியாகும் . மேலும் உலக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற நாசாவின் மற்றுமொரு மயில்கல்லாகும். இது செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். செவ்வாயக்கிரகம், ஒரு காலத்தில் பூமியைப் போன்றது, அதன் வளிமண்டலத்தின் பெரும்பகுதியை இழந்து, குளிர்ந்த, தரிசு நிலப்பரப்பு தற்போது எஞ்சியுள்ளது. ESCAPADE என்பது NASA இன் Mall Innovative Missions for Planetary Exploration (SIMPLEx) திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சிறிய, செலவு குறைந்த விண்கலத்தைப் பயன்படுத்தி முக்கிய அறிவியல் கேள்விகளுக்கு பதிலளிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். இந்த பணி இரண்டு சிறிய, ஒரே மாதிரியான விண்கலங்களைக் கொண்டுள்ளது, இவை “இரட்டை ஆய்வாளர்கள்” என்று விவரிக்கப்படுகின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய முக்கியமான தரவுகளை சேகரிப்பதாகும். பல பில்லியன் ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தரவு அவசியமாகிறது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் நீண்ட காலமாக அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தில் தடிமனான வளிமண்டலம் மற்றும் பூமியைப் போன்ற ஒரு காந்தப்புலம் இருந்ததாக நம்பப்படுகிறது. இது மிகவும் மிதமான காலநிலையை கொண்டதாகும். இருப்பினும், அதன் காந்தப்புலம் பலவீனமடைந்து மறைந்ததால், கிரகத்தின் வளிமண்டலம் சூரியக் காற்றால் அரிக்கப்பட்டு, அதன் வளிமண்டலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை அகற்றி, மெல்லியதாகவும், மேற்பரப்பில் திரவ நீரை பிடித்து வைத்திருக்கும் திறனற்றதாகவும் ஆகியது. இந்த வளிமண்டல இழப்பின் பின்னணியில் உள்ள செயல்முறைகளைப் புரிந்துகொள்வது செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, எதிர்கால ஆய்வு முயற்சிகளைத் தெரிவிப்பதற்கும் மற்ற கிரகங்களின் வாழ்விடத்தை ஆய்வு செய்வதற்குமாகும். கிரகங்களில் வளிமண்டலங்கள் எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான ஒரு சிறந்த ஆய்வை செவ்வாய் கிரகம் வழங்குகிறது. மேலும் வளிமண்டலத்தில் காந்த மண்டலத்தின் பங்கைப் பற்றிய நமது புரிதலில் உள்ள சந்தேகங்களை நிரப்ப நாசாவின் இந்த நுளுஊயுPயுனுநு பணி தயாராக உள்ளது. ESCAPADE பணியானது பல முக்கிய அறிவியல் நோக்கங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தின் இயக்கவியல் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. செவ்வாய் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை அளவிடுவதன் மூலம், காலப்போக்கில் கிரகத்தின் வளிமண்டலத்தில் எவ்வளவு விண்வெளியில் தொலைந்து போனது என்பதைக் கணக்கிட இந்த ESCAPADE உதவும். செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காந்தப்புலம் இல்லை என்றாலும், அது குறிப்பிட்ட மேற்பரப்புக்களில் காந்தப்புலங்களைக் கொண்டுள்ளது. ESCAPADE இந்த காந்த முரண்பாடுகள் சூரியக் காற்றுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்கிறது. ESCAPADE பணியானது ஒரே மாதிரியான இரண்டு விண்கலங்களைக் கொண்டுள்ளது, அவை ஒரே ராக்கெட்டில் ஒன்றாக ஏவப்பட்டு பின்னர் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி தனித்துவமான, நீள்வட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்படும். சற்று வித்தியாசமான பாதைகளில் சுற்றுவதன் மூலம், இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் செவ்வாயின் காந்த மண்டலத்தை வெவ்வேறு பார்வை புள்ளிகளில் இருந்து அளவிட முடியும். சூரியக் காற்று என்பது சூரியனால் உமிழப்படும் சக்தியேற்றப்பட்ட துகள்களின் (பிளாஸ்மா) நிலையான பரவுதல் ஆகும், மேலும் அது ஒரு கிரகத்தின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அது காலப்போக்கில் வளிமண்டலத் துகள்களை அகற்றும். செவ்வாய் கிரகத்தைப் பொறுத்தவரை, காந்தப்புலம் இல்லாததால், வளிமண்டலம் இந்த வகையான அரிப்புக்கு ஆளாகிறது. இவ்வகையில், ESCAPADE ஆனது சூரியக் காற்று எவ்வாறு அயனோஸ்பியருடன் (செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் சக்தியேற்றப்பட்ட அடுக்கு) தொடர்பு கொள்கிறது என்பதனையும் அளவிடுகிறது. கிரகத்தின் பின்னால் உள்ள ஒரு பகுதி, சூரியக் காற்று கிரகத்தின் காந்தப்புலக் கோடுகளை நீட்டி, வால் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இங்குதான் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறுவதைத் துரிதப்படுத்தும் பல செயல்முறைகள் நடைபெறுகின்றன. ESCAPADE குறிப்பாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் கண்டுபிடிப்புகள் கிரக அறிவியலுக்கும் வெளிக்கோள்களின் ஆய்வுக்கும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/196922
  20. இலங்கையின் 5 விக்கெட் வெற்றியில் முக்கிய பங்காற்றிய தீக்ஷன, ஹசரங்க, அசலன்க; தொடரும் இலங்கை வசமானது (பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி) கண்டி, பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதம் இருக்க 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை தனதாக்கிக்கொண்டது. மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகளும் அணித் தலைவர் சரித் அசலன்கவின் திறமையான துடுப்பாட்டமும் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின. இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் ஆட்டத்தை ஆரம்பிப்பதில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. போட்டி பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அணிக்கு 44 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளால் நிர்ணயிக்கப்பட்ட 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 38.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இலகுவாக வெற்றிபெற்றது. அவிஷ்க பெர்னாண்டோ (9) குசல் மெண்டிஸ் (3) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். (25 - 2 விக்.) இந் நிலையில் நிஷான் மதுஷ்கவும் சதீர சமரவிக்ரமவும் ஜோடி சேர்ந்து 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர். நிஷான் மதுஷ்க 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 112 ஓட்டங்களாக இருந்தபோது சதீர சமரவிக்ரம (38) அநாவசியமாக சுவீப் ஷொப் அடிக்க விளைந்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து அணித் தலைவர் சரித் அசலன்கவும் ஜனித் லியனகேயும் 5ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜனித் லியனகே 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸுடன் இணைந்து வெற்றியை உறுதிசெய்தார். சரித் அசலன்க 61 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 36 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க ஆகியோரின் சுழற்சியில் சிக்கித் திணறிய மேற்கிந்தியத் தீவுகள் 16ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. முன்வரிசையில் ப்றெண்டன் கிங் (16) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களாக இருந்தபோது அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி (31) கொடுத்த மிக உயரமான, ஆனால் இலகுவான பிடியை ஜனித் லியனகே தவறவிட்டது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட், குடாகேஷ் மோட்டி ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 119 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். நியூஸிலாந்துக்கு எதிராக ப்றிஜ்டவுனில் 2022இல் அல்ஸாரி ஜோசப், யனிக் காரியா ஆகியோர் பகிர்ந்த 85 ஓட்டங்களே இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளின் 9ஆம் விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்ட சாதனையாக இருந்தது. ரதர்ஃபர்ட் 82 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் மோட்டி 6 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மஹீஷ் தீக்ஷன https://www.virakesari.lk/article/196956
  21. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பர வாகனத்திற்கும் லண்டனில் திருடப்பட்ட வாகனத்திற்கும் தொடர்புள்ளது - பொலிஸ் பேச்சாளர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பரகாருக்கும் லண்டனில் காணாமல்போன வாகனமொன்றிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் அமைச்சரின் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ஆடம்பர கார் லண்டனில் திருடப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட வாகனம் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக இன்டபோலின் இணையத்தளம் தெரிவிக்கின்றது. இந்த வாகனத்திற்கும் 2021 இல் லண்டனில் காணாமல்போன வாகனத்திற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், இன்டபோல் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் இது குறித்து விசாரணை செய்துள்ளனர். இரண்டு வாகனங்களின் செசிஸ் மற்றும் இயந்திரங்களின் இலக்கங்களிற்கு இடையில் தொடர்புள்ளது, இதனை அடிப்படையாக வைத்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன. முன்னாள் அமைச்சரின் ஆடம்பர வாகனம் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டது என்பதை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196975
  22. செப்பு குாழாய் பொருத்திகளை கப்பலில் ஹொங்கொங்கிற்கு அனுப்புவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 23,000 தொன் செப்பு உலோகத்தை அனுப்பத் தயாராகிக்கொண்டிருந்த போது சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (23) கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்றுமதி முனையத்தில் வைத்து செப்பு உலோகம் அடங்கிய கொள்கலன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். பேலியகொட பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து செப்பு உலோகங்களை உருக்கி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட செப்பு கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/196968
  23. இல்லையண்ணை இந்த முறை எல்லாக் கட்சியும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக தேர்தலில் நிற்பதால் அதிசயமாக 2 வேட்பாளர் தெரிவு செய்யப்படலாம்!
  24. இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதன் பெரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். மறுபுறம், உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. ரஷ்யாவுடன் உக்ரைன் போர் துவங்கிய பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது. உக்ரைன் பிறப்பு விகிதம் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் நாடு. இங்கு சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதாவது பிறப்பு விகிதம் ஒரு சதவீதம். மக்கள்தொகையின் தற்போதைய சூழ்நிலையை பராமரிக்க, குறைந்தபட்ச பிறப்பு 2.1 சதவீதம் தேவைப்படுகிறது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைனில் மக்கள்தொகை நிலைமை மோசமடைந்து வருவதாக கிழக்கு ஐரோப்பாவுக்கான ஐநா மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் புளோரன்ஸ் பாயர் ஜெனீவாவில் நடந்த மாநாட்டில் கூறினார். இந்த காலகட்டத்தில் உக்ரைனில் பிறப்பு விகிதம் ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார். 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதைந்த பிறகு உருவான உக்ரைன், அப்போது ஐந்து கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு இங்கு மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. உண்மையில், உக்ரைனை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது. ரஷ்யாவுடனான போர் காரணமாக மக்கள் தொகை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை குறைவதற்கு உக்ரைனில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்ததே மிகப்பெரிய காரணம். தற்போது சுமார் 67 லட்சம் உக்ரைனியர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோன்று, உக்ரைனில் உள்ள கிராமங்கள் காலியாக தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் முதியவர்கள் மட்டுமே உள்ளனர். இளம் தலைமுறையினர் வேகமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதால், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/311104
  25. இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம் - இருவர் கைது இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படும் சந்தேகத்தில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/196963

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.