Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனைன் மச்சின் பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ் 24 அக்டோபர் 2024, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது. தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிடிக்கப் பல கோடிகள் நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சுற்றியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மறதி, மன அழுத்தம் மற்றும் நாள்பட்ட வலியை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கேம்பிரிட்ஜ் குழுவிலுள்ள முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸ் இந்த அறிவிப்பு தனது புதிய திட்டத்தை ஆதரிக்கும் என்று நம்புகிறார். மனநலப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம் ஐந்தில் நான்கு பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்னைகள் எனச் சிலவற்றை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சைகளை வழங்க உதவும், அளவில் சிறிய கருவிகளை பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸின் குழு ஆய்வு செய்து வருகிறது. "சிகிச்சையே அளிக்க இயலாத, அல்லது மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூளைக்குள் பொருத்தும் சிப் போன்ற சாதனங்கள் மூலம் (Brain Implants) ஒரு புதிய சிகிச்சையை வழங்க முடியும்" என்று பேராசிரியர் மேல்லியராஸ் விளக்குகிறார். "அத்தகைய நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால் நாம் இங்கே குறிப்பிடுவது, மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்கள், நடுக்குவாதம் (Parkinson), மறதி, மன அழுத்தம், அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு (OCD) பற்றியது. மேலும் இது முடக்கு வாதம் (Rheumatoid Arthritis), முதல் நிலை நீரிழிவு நோய்களுக்கும் (Type 1 diabetes) சிகிச்சை அளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார். மேலும், இதுவொரு பயனுள்ள ஆய்வு என்றும் இதில் ஈடுபடுவது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் அவர் குறுப்பிட்டார். நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றம் பட மூலாதாரம்,MARTIN GILES/BBC படக்குறிப்பு, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வகையில் இந்த சிகிச்சை அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பேராசிரியர் ஜார்ஜ் உடலில் பொருத்தப்படும் இந்தச் சாதனங்கள் சிறிய மின்சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் நம் உடலில் நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் நமது உடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு மின் சமிக்கை மூலம் செய்திகளைக் கடத்துகின்றன. அவை, நம்முடைய நடை, பேசுதிறன், உணவு உட்கொள்ளுதல் மற்றும் சுவாசிக்கும் முறைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த நியூரான்கள் வேலை செய்யும் முறையை மாற்றுவதன் மூலம் வலியைக் குறைக்கவோ, மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தூண்டவோ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். "மின் தூண்டுதல்களைப் பயன்படுத்தி நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நடுக்கத்தைக் குறைக்க முடியும் என்று நமக்கு ஏற்கெனவே தெரியும்," என்று கூறும் பேராசிரியர் மேல்லியராஸ், "ஆனால், இந்த வகையான தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிரிட்டன் முழுவதும் உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்துறையினரை ஒரு குழுவாக ஒருங்கிணைக்க வேண்டும்," என்கிறார். சவால்கள் என்ன? பட மூலாதாரம்,MARTIN GILES/BBC படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மருத்துவர் சௌகுன் டோங் இந்தக் கருவியின் அளவு என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. "இந்த சாதனத்தில் இருந்து வெளிவரும் மின்முனைகள் ஒரு நியூரானைவிட பெரியதாக இருக்கக்கூடாது. இந்த அளவானது மனித முடியின் விட்டத்தைவிட ஐந்து மடங்கு சிறியது," என்று மேற்கோள் காட்டுகிறார் பேராசிரியர் மேல்லியராஸ். "ஆனால், இந்தக் கருவி மிகச் சிறியதாக இருந்தால் அது உடலுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். மருத்துவர்கள் இதை நோயாளிகளின் உடலில் பொருத்துவதில் சிரமங்களை உணரலாம். இரண்டு பிரச்னைகளுக்கும் சமமாகத் தீர்வு காணும் வகையில் இது அமைய வேண்டும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும், உள்ளீட்டு சாதனம் அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும், குறைந்த செலவுடன் இருப்பதையும், நோயாளிகளுக்கு முடிந்த வரை பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதையும் அவர்கள் நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும். உந்துதல் சமிக்ஞைகளை உருவாக்கும் கருவி பட மூலாதாரம்,UNIVERSITY OF CAMBRIDGE படக்குறிப்பு, நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் உள்ளீட்டு சாதனம் மருத்துவ உள்ளீட்டு சாதனங்களை (Medical implants) பொருத்துதல் இந்தப் பொறியாளர்களுக்குப் புதிதல்ல. மருத்துவர் சௌகுன் டோங் பலவீனமான நரம்புகளைச் சேதப்படுத்தாமல் அவற்றைச் சுற்றிக் கொள்ளும் சாதனத்தை உருவாக்கி வருகிறார். கண்ணாடிக் குமிழில், சிறிய ரிப்பன் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொருளை ஆராய்ச்சி செய்து வருகிறார் டோங். இது தங்கத்தால் கோடிடப்பட்ட பாலிமரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் செலுத்தும்போது, இது தன்னிச்சையாகச் சுருண்டு கொள்கிறது. இந்தக் கருவிகள், சிக்கலான அறுவை சிகிச்சையின்போது நரம்புகளில் இருந்து வரும் உந்துதல் சமிக்ஞைகளைக் கண்காணிக்கவும், அந்த நரம்பைத் தூண்டவும் உதவும். பட மூலாதாரம்,MARTIN GILES/BBC படக்குறிப்பு, பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சக்தி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சாரம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மனச் சோர்வு, இருதுருவ மன நோய் ( bipolar disorder) ஆகியவற்றுக்குரிய சிகிச்சையான எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT) பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்த அறுவை சிகிச்சை முறை பின்பற்றப்பட வேண்டும் என்றாலும், அந்த நோய்களுக்கான ஒரே ஒருமுறை வழங்கும் சிகிச்சையாக அது நன்மை அளிக்கும் என நம்புகிறார் மேல்லியராஸ். உடலில் பொருத்தப்படும் சாதனங்கள் மூளையைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிந்து தேவைப்படும்போது மென்மையான முறையில் சரிசெய்யலாம் என்கிறார் அவர். கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள், கடுமையான மனச் சோர்வுக்கு சிகிச்சையளிக்க மூளையில் உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தன. ஏ.ஆர்.ஐ.ஏ(ARIA) என்ற அரசு ஆதரவு நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் உடன்பாட்டிற்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவி செய்யவுள்ளது. இந்தக் காலகட்டத்திற்குள், புதிய சிகிச்சை முறை குறித்த ஆய்வுகளில் அவர்கள் நெடுந்தூரம் வந்துவிட முடியும் என்று பேராசிரியர் மேல்லியராஸ் நம்பிக்கையுடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dyzen3w52o
  2. 16 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் புதன்கிழமை (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்துள்ள கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் வி.பி.சேசுராஜா மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய மீன்வளத் துறையிடம் அனுமதி டோக்கன்களைப் பெற்று, இரண்டு இயந்திரப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் கடலுக்கு புதன்கிழமை சென்றனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவிக்க மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196965 கண்டனங்களைப் பார்க்கும்போது இலங்கைக் கடற்படை அத்துமீறி இந்தியக் கடலில் போய் கைது செய்துவிட்டதோ?!
  3. இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணைக்கு முல்லைத்தீவு பத்திரிகையாளர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதன் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக, தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2004 முதல் 2009 வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 48க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களில் 41 தமிழர்களும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. முல்லைத்தீவு செய்தியாளர் சங்கம், கொலைகள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறல் இல்லாமையானது தண்டனையிலிருந்து விடுபடும் கலாச்சாரத்துக்கு இடமளிக்கிறது, “குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் செயற்பட அனுமதிக்கிறது" என தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/311083
  4. அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் - இலங்கையை எச்சரித்த இந்திய புலனாய்வு பிரிவினர் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வுபிரிவுகள் இலங்கை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளன. இந்திய புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இதேவேளை இரண்டு இலங்கையர்கள் இந்த தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் இவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களிற்கு ஐந்து மில்லியன் வழங்கப்பட்டிருந்ததாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/196962
  5. கமலா ஹாரிஸை ஆதரித்து நன்கொடை அளித்த பில்கெட்ஸ்; எத்தனை கோடி தெரியுமா? அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தொழிலதிபர் பில்கேட்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து, ரூ.420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நன்கொடை குறித்த தகவலை பில்கேட்ஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பில்கேட்ஸ், நன்கொடை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தொழிலதிபர் பில்கேட்ஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இந்தத் தேர்தல் வித்தியாசமானது. நான் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கிறேன். நான் நீண்ட காலமாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பயணித்துள்ளேன்” இவ்வாறு தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரசாரக் குழுக்களுக்கு அதிகளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளார். கமலா ஹாரிசுக்கு இதுவரை 50 க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல், தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311098
  6. தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சண்முகம் குகதாசன் இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப் பெறலாம் வன இலாகா 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் 2600 ஏக்கர்களையும் இது போன்று இலங்கை துறை முக அதிகார சபை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர். இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை. எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும். பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன, தமிழ் வாக்குகளில் மொத்தமாக 98ஆயிரம் வாக்குகள் காணப்படுகிறது. இதில் சுமாராக எழுபதாயிரம் வாக்குகளையாவது தமிழ் மக்கள் அளிக்க வேண்டும். வாக்குகளை அளிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் 80 வீதமான வாக்குகளை அளிக்கின்றனர். தமிழ் மக்கள் 65 வீதமான வாக்குகளையே அளிக்கின்றனர். எனவே இம் முறை 85 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அப்போது தான் நம் மண்ணின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு உரிமைகள் அபிவிருத்திகளை பெற முடியும். இந்தியாவில் 15 பேரை வைத்து மோடி ஆட்சி நடத்துகிறார் தெலுங்கான மக்கள் ஒற்றுமை காரணமாகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது மொத்தமாக 545 உறுப்பினர்களை வைத்து அங்கு ஆட்சி இடம் பெறுகிறது அது போன்று இங்கு 225 உறுப்பினர்களில் நாம் 25 தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும். இவ்வாறாக தான் நாம் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ, புளட், ஈபிஆர்எல் எப் போன்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம். இதனால் நம் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/196958
  7. துருக்கி விமான நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலி, 22 பேர் காயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், விக்கி ஜான் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் துருக்கி நாட்டின் தலைநகர் அன்காராவில் உள்ள ஒரு விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், கொல்லப்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குர்திஷ் புரட்சிக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வட இரான் மற்றும் வட சிரியா பகுதிகளில் உள்ள குர்திஷ் புரட்சிக் குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை மாலை தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்துப் பல வீடியோக்கள் வெளியாகின. துர்கிஷ் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் எனும் விமான நிறுவனத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருப்பதை அந்த வீடியோக்களில் காண முடிந்தது. இந்த நிறுவனம் துருக்கி தலைநகரில் இருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்) தொலைவில் உள்ளது. இந்தத் தாக்குதலில் விமான நிறுவனத்தின் நான்கு ஊழியர்களும் டாக்சி ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்ததாக துருக்கி துணை அதிபர் செவ்தித் இல்மாஸ் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள், டாக்சி ஓட்டுநரை கொன்றுவிட்டு, அவரது வாகனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. வேலை பார்த்து வந்த ஊழியர்கள் தங்கள் பணிநேரம் முடிந்து, அடுத்த பணி நேரத்திற்கான ஊழியர்கள் தங்கள் பணியைத் தொடங்கும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. மேலும், சிறப்புப் படைக்குழுவைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்துள்ளதை உள்துறை அமைச்சர் உறுதி செய்தார். பதிலடி கொடுத்த துருக்கி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா துருக்கியில் உள்ள முக்கிய சிறுபான்மையினக் குழுவான குர்திஷ் மக்களின் உரிமைகளுக்காக 1980கள் முதல் துருக்கி அரசை எதிர்த்து பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி போராடி வருகிறது. துருக்கி, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் `பிகேகே' தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. துருக்கி அதிபர் ரெசப் தய்யிப் எர்துவான் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமர் புதினுடனான சந்திப்பின்போது இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அவர், இதை “மோசமான தீவிரவாதத் தாக்குதல்” என்று கூறினார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் சம்பவம் குறித்து விரிவாகப் பதிவு செய்திருந்த துருக்கி அதிபர், தங்கள் பாதுகாப்புப் படைகள் உடனடியாக பதிலடி கொடுத்ததாகவும், “நமது பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும், எந்தவொரு தீய சக்தியும் தங்கள் இலக்குகளை அடைய முடியாது” என்றும் தெரிவித்திருந்தார். செய்திகளை முடக்கிய துருக்கி அரசு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாக்குதல் சம்பவம் குறித்த ஊடக செய்திகளை துருக்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். துருக்கியில் பெரும்பாலான பகுதிகளில் வசிப்பவர்கள் யூட்யூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த இயலவில்லை என்று தெரிவித்திருந்தனர். தாக்குதல் சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை நிர்வகிக்கும் சுப்ரீம் கவுன்சிலின் தலைவர் எபுபகிர் ஷஹின் எச்சரித்திருந்தார். அவற்றைப் பகிர்வதன் மூலம் தீவிரவாதத்தின் நோக்கத்திற்குத் துணை போக வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். துர்கிஷ் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் துருக்கி நாட்டின் வான்வழித் துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு விமானங்களை வணிக ரீதியாகவும் ராணுவ பயன்பாட்டிற்காகவும் வடிவமைத்து, தயாரிக்கிறது. அமெரிக்கா வடிவமைக்கும் F-16 போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக நாட்டோ உறுப்பினரால் இந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பழைய விமானங்களை துருக்கி ராணுவ பயன்பாட்டிற்காகப் புதுப்பித்துத் தரும் பணியையும் இந்த நிறுவனம் செய்கிறது. துருக்கி ஆயுதப் படை இந்த நிறுவனத்தின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒன்று. துருக்கியின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தவும், ராணுவ உபகரணங்கள் பெறுவதையும் நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்ட துருக்கி அரசின் குடிமக்கள் அமைப்பு இதன் மற்றோர் உரிமையாளராக உள்ளது. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் பாதுகாப்பு மற்றும் வான்வழி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5l49qq799o
  8. ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனிடம் இருந்து 840 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் ஏற்கனவே போதை மாத்திரைகளுடன் கைதாகி அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை செவ்வாய்க்கிழமை (22) மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 1400 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196959
  9. வயநாடு நிலச்சரிவு - குடும்பத்தையே இழந்த இளம்பெண் ஸ்ருதிக்கு மீதமுள்ள நம்பிக்கை என்ன? படக்குறிப்பு, நிலச்சரிவுக்கு பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ருதிக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘‘புதிதாகக் கிடைத்த உறவாவது என்னோடு தொடரும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது’’ மிகவும் மெல்லிய குரலில் பேசினார் ஸ்ருதி. ஸ்ருதி, வயநாடு நிலச்சரிவில் தன் தாய், தந்தை, தங்கை ஆகியோரைப் பறி கொடுத்த 24 வயது இளம் பெண். வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த அவர், கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பினார். ஸ்ருதியின் தாய் சபிதா, தந்தை சிவண்ணா, தங்கை ஸ்ரேயா ஆகியோரைத் தவிர்த்து, பெரியப்பா, பெரியம்மா, அவர்களின் பேரன்கள் இருவர், சித்தப்பா, சித்தி என அவரின் குடும்பத்தில் மட்டும் 9 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர். இத்தனை துயரத்துக்குப் பின்னும் ஸ்ருதி, தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கு ஒரு நம்பிக்கையாக இருந்தவர் ஜென்சன், ஸ்ருதியின் காதலர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், போராடி இரு வீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர். வரும் டிசம்பரில் இருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்பே நிலச்சரிவில் தன் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் இழந்தார் ஸ்ருதி. இந்த சூழலில் ஸ்ருதிக்கு முழு ஆறுதலாய் இருந்து அவரைத் தேற்றியது ஜென்சன்தான். வயநாடு நிலச்சரிவின்போது முகாமில் தங்கியிருந்த ஸ்ருதிக்கு அருகிலேயே இருந்து, அவரைக் கவனித்து கொண்டார் ஜென்சன். பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, ஜென்சன் மற்றும் ஸ்ருதி இந்தநிலையில் தாய், தந்தை, தங்கை மற்றும் உறவினர்கள் எல்லோருக்கும் 40வது நாள் காரியம் செய்வதற்காக, ஸ்ருதியின் தந்தை வழிப் பாட்டி மாதேவி, மற்றும் உறவினர்கள் என பலரும், மாருதி ஆம்னி வேனில் கல்பெட்டாவுக்கு அருகிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மினி பஸ் –ஆம்னி வேன் மோதிய விபத்தில் எல்லோரும் காயங்களுடன் தப்பி விட, ஒருவர் மட்டும் உயிரிழந்தார். ஸ்ருதியின் காதலர் ஜென்சன்தான், அந்த விபத்தில் உயிரிழந்த ஒரே நபர். அந்த விபத்தில் ஸ்ருதிக்கும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பெரும்துயர், கேரளாவில் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெருமளவில் பேசுபொருளானது. ஸ்ருதிக்காக பலர் தங்கள் ஆறுதலை, பிரார்த்தனைகளை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்தனர். இதையறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்ருதிக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். அவருக்கு வீடு கட்டித்தருவதாக ஒரு தனியார் அமைப்பும் அறிவித்திருக்கிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, வீடிழந்தவர்களை சில நாட்கள் முகாம்களில் தங்க வைத்திருந்த கேரள அரசு, அதன்பின் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை, ஒரு நாளுக்கான செலவுத் தொகை 300 ரூபாய் வீதமாக மாதம் ரூ.15 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கி வருகிறது. நிலச்சரிவுக்குப் பின், முகாம், மருத்துவமனை என்றிருந்த ஸ்ருதி, கல்பெட்டாவின் அம்பலேரி என்ற பகுதியில், ஒரு வீட்டில் தன்னுடைய உறவினர்களுடன் இணைந்து குடியிருக்கிறார். படக்குறிப்பு தாய், தந்தை, தங்கையுடன் ஸ்ருதி ஒரே புகைப்படம்...9 பேரின் நினைவுகள் தன் 3 மகன்களையும் நிலச்சரிவில் பறி கொடுத்த தாயும், ஸ்ருதியின் தந்தை வழிப்பாட்டியுமான மாதேவி, ஸ்ருதிக்கு துணையாக உடனிருக்கிறார். அதே வீட்டில் ஸ்ருதியின் பெரியப்பா மகள் ஹரிதா, தன் இரண்டு குழந்தைகளுடன் அங்கு இருக்கிறார். இவருடைய மூன்று குழந்தைகளில் மூத்த மகன் 13 வயது அஸ்வந்த் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளார். தாய், தந்தையை நிலச்சரிவில் பறி கொடுத்த ஸ்ருதியின் சித்தப்பா மகன் அருண்குமாரும் அங்கே வசிக்கிறார். புதிதாக இவர்கள் குடியேறியுள்ள அந்த வாடகை வீட்டில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டுள்ளது. அதில் நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள். வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்குப் பின், ஸ்ருதியை பல்வேறு மலையாள தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்கள் சார்பில் பேட்டி எடுத்தபோது, ‘‘ஸ்ருதியை ஆதரவற்றவளாக விட்டு விட மாட்டேன். அவளுக்கு நானே இனி தாயும், தந்தையும், எல்லாமுமாக நான் இருப்பேன்,’’ என்று ஸ்ருதியின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு கூறியுள்ளார் ஜென்சன். படக்குறிப்பு, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த ஸ்ருதியின் குடும்பத்தினர் சிகிச்சையில் ஸ்ருதி ஸ்ருதியின் தற்போதைய நிலையை அறிவதற்காக, பிபிசி தமிழ் அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, காயமடைந்த கால்களை நீட்டிய நிலையில் கட்டிலில் அமர்ந்தவாறு காதலனுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ருதி. நீண்ட யோசனைக்குப் பின், பிபிசியிடம் பேசிய ஸ்ருதி, தன்னுடைய தந்தை, அவரின் சகோதரர்கள் என மூவருடைய வீடுகளும் அருகருகில் இருந்ததையும், தீபாவளியின்போது மூன்று குடும்பத்தினரும் ஒன்று கூடி பெருமகிழ்வோடு கொண்டாடுவதையும் நினைவு கூர்ந்தார். ஜென்சனைப் பற்றிப் பேசத் துவங்கிய அவர், ‘‘எல்லா உறவுகளும் என்னை விட்டுப் போய் விட்டன. புதிதாக வந்த உறவு எனக்கு நிலைக்கும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது,’’ என்று கூறி, தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தினார். தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்த ஸ்ருதியின் சகோதரர் அருண்குமார், ‘‘ஸ்ருதியின் நிச்சயதார்த்தமே, திருமணம் போலத்தான் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. வரும் டிசம்பரில் திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்த நினைத்திருந்தோம். எல்லாம் கனவாகக் கலைந்துவிட்டது.’’ என்றார். ஸ்ருதியின் பாட்டி மாதேவி, மூன்று மகன்களின் வீடுகளிலும் மாறிமாறி இருந்துள்ளார். நிலச்சரிவு நடந்த போது, அவருடைய ஒரே மகளின் வீட்டிற்குச் சென்றிருந்ததால், உயிர் தப்பியுள்ளார். ஆனால் ஜென்சன் உயிரிழந்த விபத்தில், இவருடைய கையும் உடைந்து கட்டுப் போட்ட நிலையில் இருக்கிறார். ‘‘என்னோட மகன்கள் கடுமையாக உழைத்து, அந்த வீடுகளைக் கட்டினார்கள். ஒரே இரவில் எல்லாமே முடிந்துவிட்டது. இனிமே இந்த பிள்ளைங்களுக்கு யார் இருக்கா? எனக்கும் எங்க போறது, என்ன செய்யுறதுன்னு தெரியலை. இப்போதைக்கு இவளுக்குப் பக்கத்துல இருக்குறது மட்டும்தான் என்னால முடிஞ்சது,’’ என்றார் அவர். கேரள முதல்வரின் அரசு வேலை அறிவிப்பும், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டித்தரப்படும் வீடும் ஸ்ருதிக்கு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பது அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டன. ஸ்ருதியின் சகோதரி ஹரிதா, தன் இரண்டு குழந்தைகளுடன், ஸ்ருதியையும் ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக் கொள்கிறார். ‘‘அரசு வேலை அறிவித்திருப்பது கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. என்ன வேலை என்று தெரியவில்லை. அந்த அறிவிப்புக்குப் பின் யாரும் எனக்குத் தொடர்பு கொள்ளவுமில்லை. கால் குணமானதும் அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார் ஸ்ருதி. அரசுப் பணி கிடைத்தபின், எதிர்காலத் திட்டம் குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, ‘‘இப்போது வரையிலும் எதிர்காலம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை. காலில் ஒரு ஆபரேஷன் முடிந்து இருக்கிறது. இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும். நடப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதமாகும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்பே எழுந்து நடக்க முயற்சி செய்கிறேன்!’’ என்றார் ஸ்ருதி. முன்பு காலில் மிகவும் வலி இருந்ததாகக் கூறிய ஸ்ருதி, இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார். மலையாளத்தில் ‘ஒரு கொழப்பமும் இல்ல’ என்று அவர் சொல்லும் வார்த்தை, காலத்தின் ஓட்டத்தில் எல்லா வலிகளும் குறையும் என்ற அவரிடம் முளைத்தெழுகின்ற நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly2wel0yq7o
  10. காணாமல்போன அரச வாகனங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச வாகனங்கள் காணாமல்போனமை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 அரச வாகனங்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேலதிக தகவல்களை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/196926
  11. பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய ஜனாதிபதிக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஜனாதிபதியை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்ததால், பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார அரசின் கூட்டாளியான தற்போதைய அதிபர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்தது. தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து முகமது சகாபுதீன் அதிபராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/311053
  12. துருக்கி அரசாங்கத்திற்கு சொந்தமான விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் ஏரோஸ்பேஸ் சிஸ்டத்தின் தலைமையகத்தின் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அலியெர்லிகயா தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதை சிசிடிவி காண்பித்துள்ளது. தலைநகரிலிருந்து 40கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/196953
  13. "உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது" அருகம்குடாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலியர்களிற்கு ரெஹான் எச்சரிக்கை இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெலிகமவின் முன்னாள் மேயரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அருகம்குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலின் சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இதற்கு தீர்வை காணவேண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வை காணுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ள அவர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம் என தெரிவித்துள்ளார்.. 'ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்து கொள்ளவிரும்புகின்றேன், உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களிள் வாய்ப்புகளை அழிக்க முடியாது, நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்க வேண்டும்"என ரெஹான் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196914
  14. அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாது, அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைகளை முன்னிலைப்படுத்தி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இலங்கையர்களின் முக்கிய இடங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்திலுள்ள வராலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டேன். இலங்கையின் பன்முகப் பாரம்பரியத்திற்கான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இது போன்ற கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. இந்த விஜயத்தின் போது இங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அமெரிக்க எவ்வாறு தொடர்ந்து உதவலாம் என்பதை அவதானிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196908
  15. அறுகம்குடாவில் அதிகளவில் இஸ்ரேலியர்கள் - கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் - பொலிஸ் பேச்சாளர் இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அவர்கள் அறுகம்குடாவில் ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகவும் அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலியர்கள் அதிகளவில் அறுகம்குடாவிற்கே செல்கின்றனர். அந்த பகுதியே அவர்களின் அதிக விருப்பத்திற்குரிய பகுதியாக காணப்படுகின்றது, அவர்கள் அங்கு நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அங்கு சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் அங்கு கட்டிடமொன்றை ஆக்கிரமித்துள்ளனர், இந்த பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது என சமீபத்தில் எங்களிற்கும் தகவல்கள் கிடைத்தன. ஆரம்பகட்ட நடவடிக்கையாக நாங்கள் ஏற்கனவே வீதிதடைகளை அமைத்துள்ளோம், வாகனங்களையும் பொதுமக்களையும் சோதனையிடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம். பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் இராணுவத்தினர் அரசபுலனாய்வு திணைக்களத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/196901
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாட்ரிக் ஜான்சன் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் கொண்ட, மதத் தலைவரை மூன்று வாரங்களுக்கு முன் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகரின் தெற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஹஷேம் சஃபியத்தீன் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், ஹெஸ்பொலா அமைப்பு இதுவரை ஹஷேம் சஃபியத்தீனின் இறப்பை உறுதி செய்யவில்லை. பெய்ரூட்டின் விமான நிலையத்திற்கு அருகில் அக்டோபர் 4ஆம் தேதி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு, சஃபியத்தின் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று ஹெஸ்பொலா அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தங்கள் குண்டுவெடிப்பின் இலக்காக இருந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பலத்த குண்டுவெடிப்புகள் நகரத்தையே உலுக்கிவிட்டன. அதனால் ஏற்பட்ட புகை மூட்டம் மறுநாள் காலை வரை நீங்கவில்லை. ஹெஸ்பொலாவின் உளவுத்துறை தலைமையகத்தின் படைத் தலைவர் அலி ஹுசைன் ஹசிமாவுடன் ஹஷேம் சஃபியத்தீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. ஹெஸ்பொலாவின் உளவுத்துறை தலைமையகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது. “இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதல்களை” பல ஆண்டுகளாக ஏவியதாக ஹஷேம் சஃபியத்தீன் மீது இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது. ஹெஸ்பொலாவின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது. ஹெஸ்பொலா, லெபனானில் அதிகாரம் செலுத்தும் ராணுவ, அரசியல் மற்றும் சமூக அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஹெஸ்பொலாவை தீவிரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. ஹஷேம் சஃபியத்தீன் யார்? பட மூலாதாரம்,REUTERS நஸ்ரல்லாவின் உறவினரான ஹஷேம் சஃபியத்தீன் இரானில் மத பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது மகன், இரானின் சக்தி வாய்ந்த ராணுவ படைத்தலைவர் ஜெனரல் கசெம் சுலைமானியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். ஜெனரல் கசெம் சுலைமானி 2020ஆம் ஆண்டு இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். ஹஷேம் சஃபியத்தீனை சர்வதேச தீவிரவாதி என்று அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் 2017ஆம் ஆண்டு அறிவித்திருந்தன. அவருக்கு 60 வயது இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் பெய்ரூட்டில் ஆற்றிய உரை ஒன்றில், ஹெஸ்பொலாவில் ஒரு தலைவர் மறைந்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்று ஹஷேம் சஃபியத்தீன் பேசியிருந்தார். “நமது இயக்கத்தில் ஒரு தலைவர் கொல்லப்பட்டால், மற்றொருவர் புதிய, தீர்க்கமான, உறுதியுடன் கொடியைக் கையில் ஏந்திக்கொண்டு வழிநடத்துவார்” என்று அவர் பேசியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை குறிப்பிட்டிருந்தது. காஸாவில் நடைபெறும் போரின் விளைவாக ஏற்பட்ட எல்லை தாண்டிய மோதல்கள் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, இஸ்ரேல் ஹெஸ்பொலாவை தாக்குகிறது. ஹெஸ்பொலாவின் ராக்கெட், ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால், எல்லைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்ர்ந்த மக்கள் மீண்டும் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது. கடந்த ஆண்டு லெபனானில் குறைந்தது 2,464 பேர் கொல்லப்பட்டதாகவும் 12 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதே காலகட்டத்தில் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. வடக்கு இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62l3ll7rg6o
  17. இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களை அடிப்படையாக வைத்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிப்படையான எதிர்கூறத்தக்க வர்த்தக சூழல் இல்லை என தெரிவித்துள்ள அவர் ஜப்பானிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இலஞ்ச ஊழல் அற்றவை என குறிப்பிட்டுள்ளார். அவை இலஞ்சம் பெறுவதில்லை என குறிப்பிட்டுள்ள தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார். கேள்வி - நாங்கள் தற்போது சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் நடுவில் உள்ளோம், தற்போதைய அரசாங்கம் இதனை தொடர்ந்து முன்னெடுக்கும் என்பது குறித்து எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்? பதில்- நான் ஏற்கனவே ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் புதிய அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் பிரதான கட்டமைப்பை பேணுகின்றது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இதனை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட திறைசேரியின் செயலாளரை அவர்கள் மீண்டும் அந்த பதவிக்கு நியமித்துள்ளனர். சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை புதிய அரசாங்கம் மதிக்கின்றது என்பதற்கான சிறந்த சமிக்ஞை இது. கேள்வி - சமீபத்தைய உரையொன்றின் போது நீங்கள் ஊழல் குறித்து கருத்து தெரிவித்தீர்கள் - இலங்கையில் இது எவ்வளவு தூரம் பிரச்சினைக்குரிய விடயம்? பதில்- இந்து சமுத்திரத்தில் அதன் அமைவிடத்தை கருத்தில் கொள்ளும்போது இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கான அதிக சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது என நான் கருதுகின்றேன். 90 வீத சர்வதேச வர்த்தகத்தின் மையமாக இலங்கை காணப்படுகின்றது, இந்த பிராந்தியத்தின் ஊடாகவே 70 வீத பெட்ரோல் கொண்டு செல்லப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கைக்கு ஜப்பான் உட்பட உல நாடுகளிடமிருந்து வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஜப்பானிய வர்த்தகர்களை செவிமடுத்தால் அவர்கள் இலங்கையில் தாங்கள் வெளிப்படையற்ற வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு சுங்கம் பொருட்களை வெளியில் கொண்டு செல்வதற்கு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவதில்லை. அதிகாரிகள் அதிக ஆவணங்களை கோருகின்றனர். அனைவருக்கும் நியாயமான வெளிப்படையான எதிர்வுகூறக்கூடிய வர்த்தக சூழலை இலங்கையில் ஜப்பானிய முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் அந்த சூழல் இல்லை. இந்த விடயத்தில் இலங்கை முன்னேற்றம் காண்பது அவசியம். ஊழலை ஒழிப்பதற்கான மக்கள் ஆணையுடனேயே புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்டார், இதுவே அவரது முக்கியமான பிரதானமான நிகழ்ச்சி நிரல். பழைய நடைமுறைகளை கைவிட்டுவிட்டு புதிய வர்த்தக சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது. கேள்வி- நீங்கள் சுங்கத்தில் தாமதங்கள் குறித்து கருத்து தெரிவித்தீர்கள் இதற்கு அவர்கள் இலஞ்சம் கோருவது காரணமா? உங்களிற்கு இது தொடர்பில் ஏதாவது அனுபவம் உள்ளதா? பதில்- அவர்கள் வெளிப்படையாக இலஞ்சம் கோருவதில்லை, இலங்கை எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கை சிறுவர்களிற்காக துவிச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன். வீதிகளில் கைவிடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை ஜப்பான் மாநகரசபை இலங்கை சிறுவர்கள் பயன்படுத்துவதற்காக வழங்கியது. ஆனால் அது சுங்கதிணைக்களத்திலிருந்து வெளியே வருவதற்கு ஒருவருடமாகியது. அவ்வேளை சேமிப்பக செலவுகள் போன்றன காணப்பட்டன. ஆகவே ஜப்பான் மக்கள் இவ்வாறான விடயங்களை எதிர்கொள்ளும்போது இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுங்கள் என ஏனையவர்களிற்கு பரிந்துரை செய்ய முடியாது. ஜப்பானிய நிறுவனங்கள் இலஞ்ச ஊழலில் ஈடுபவதில்லை. அவை மிகவும் சுத்தமானவை இலஞ்சம் கோரினால் அவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறிவிடுவார்கள். கேள்வி - அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறானதாக காணப்படும்? பதில் - சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகவும் துரிதமாக செயற்படுவார்கள், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாலும் அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்கள் செயற்படுவதில்லை. கேள்வி - முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா ஜப்பான் நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் இலஞ்சம் கோரினார் என தெரிவிக்கப்பட்டது, இது இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு பாதித்தது? பதில்- குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை நான் தவிர்த்து விடுகின்றேன். அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக ஆதாயம் பெறமுயன்ற சந்தர்ப்பங்கள் சில உள்ளன. https://www.virakesari.lk/article/196900
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாள்: செப்டம்பர் 13. 'சென்னை துறைமுகத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கன்டெய்னரை காணவில்லை' என துறைமுகம் காவல் நிலையத்தில் சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பன் புகார் கூறியபோது, நேரம் இரவு 10 மணி. மனுவில், கன்டெய்னரில் இருந்த ரூ.35 கோடி மதிப்பிலான டெல் நிறுவன லேப்டாப் பெட்டிகள் காணாமல் போனதாகக் கூறப்பட்டிருந்தது. 'இவ்வளவு பெரிய தொகையா?' என அதிர்ச்சியுடன் விசாரிக்கத் தொடங்கிய போலீசாருக்கு கன்டெய்னர் கடத்தலின் மூளையாக இருந்து அரங்கேற்றிய நபரைக் கைது செய்யவே 30 நாட்கள் ஆகிவிட்டது. அதிக கெடுபிடிகள் நிறைந்த சென்னை துறைமுகத்தில் ஒரு கன்டெய்னர் மட்டும் களவாடப்பட்டது எப்படி? கன்டெய்னரை கடத்தியவர்கள் சிக்கியது எப்படி? சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இயங்கும் டெல் நிறுவனம், கடல்சார் சரக்குகளைக் கையாளும் முகவரான டி.பி.ஷென்கர் (DB Schenker) நிறுவனம் மூலமாகக் கடந்த ஜூலை மாதத்தின் பின்பகுதியில் கன்டெய்னர் ஒன்றை அனுப்பியுள்ளது. ஷாங்காயில் இருந்து சீ ஸ்பேன் (Sea span) என்ற கப்பலில் சுமார் 40 அடி நீளமுள்ள கன்டெய்னரில் டெல் நிறுவனத்தின் 5,230 நோட்புக் எனப்படும் லேப்டாப்கள் இருந்ததாகக் கூறுகிறார், துறைமுகம் காவல் உதவி ஆணையர் ராஜசேகரன். சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள டெல் நிறுவனத்தில் இதை ஒப்படைக்கும் பணியை டி.பி.ஷென்கர் நிறுவனம் எடுத்திருந்தது. செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்குள் நுழைந்த சீ ஸ்பேன் கப்பல், கன்டெய்னர்களை கையாளும் சி.ஐ.டி.பி.எல்-லின் (சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்ஸ் பிரைவேட் லிமிடெட்) டெர்மினலில் கன்டெய்னரை இறக்கிவிட்டது. கடத்தலை அரங்கேற்றியது எப்படி? "கன்டெய்னரை எடுப்பதற்கு சுங்கத்துறை நடைமுறைகளை டி.பி.ஷென்கர் நிறுவனம் தரப்பில் முடிக்க வேண்டும். பின்னர் துறைமுகத்தில் பொருள்களை இடமாற்றம் செய்வதற்கான ரசீதை (Equipments interchange receipt) சி.ஐ.டி.பி.எல் நிறுவன பிரதிநிதிகள் வழங்கிய பிறகே கன்டெய்னர் வெளியில் செல்லும். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை" என்கிறார் போலீஸ் உதவி ஆணையர் ராஜசேகரன். செப்டம்பர் 8ஆம் தேதியன்று சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்துக்கு டி.பி.ஷென்கர் நிறுவனம் இமெயில் ஒன்றை அனுப்பியது. அதில், கன்டெய்னரை எடுப்பதற்கு சுங்கத்துறைக்கு கட்டணம் செலுத்தியது உள்பட முக்கிய ஆவணங்களை இணைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 'போதிய ஆவணங்கள் இல்லை' எனக் கூறி டி.பி.ஷென்கர் நிறுவனத்துக்கு சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தின் ஆவண சரிபார்ப்பு பிரிவின் ஊழியரான இளவரசன் பதில் அனுப்பியுள்ளார். அதேநேரம், துறைமுகத்தில் இருந்து கன்டெய்னரை வெளியே எடுப்பதற்கு டி.பி.ஷென்கர் அனுப்பிய ஆவணங்களைத் தனது கணினியில் இளவரசன் பதிவேற்றிக் கொண்டதாகக் கூறுகிறார், உதவி ஆணையர் ராஜசேகரன். புகார் மனுவில் என்ன உள்ளது? படக்குறிப்பு, துறைமுகம் காவல் உதவி ஆணையர் ராஜசேகரன். இந்தப் பதிலை எதிர்பார்க்காத டி.பி.ஷென்கர் நிறுவன பிரதிநிதிகள், செப்டம்பர் 11ஆம் தேதியன்று சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்துக்கு நேரில் வருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், 10ஆம் தேதி இரவே லேப்டாப் கன்டெய்னர் கடத்தப்பட்டுவிட்டது. "செப்டம்பர் 10ஆம் தேதி இரவுப் பணியில் இளவரசன் இருந்தார். கன்டெய்னரை எடுத்துச் செல்வதற்கு அவரின் உயரதிகாரி ஒப்புதல் அளித்தது போல இளவரசன் ஆவணங்களைத் தயாரித்தார். அதைக் காட்டியே கன்டெய்னரை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டார்" என்கிறார் ராஜசேகர். இதை அப்படியே தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார், சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன்.இசக்கியப்பன். அந்த மனுவில், கன்டெய்னரை வெளியே எடுத்துச் செல்வதற்காக சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட்ராமனின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை இளவரசன் பயன்படுத்தியதாகவும் கன்டெய்னரில் 34 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்புள்ள 5230 டெல் நோட்புக் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கடத்தப்பட்ட கன்டெய்னரில் இருந்த லேப்டாப்களை பெங்களூரு கொண்டு செல்வதற்காக இரண்டு லாரிகள் வரவழைக்கப்பட்டன. அதேநேரம், "டி.பி.ஷென்கர், சி.ஐ.டி.பி.எல் ஆகிவற்றுக்கு இடையே நடந்த இமெயில் உரையாடல்களை இளவரசன் அழித்துவிட்டதால், துறைமுகத்திற்குள் கன்டெய்னர் வந்த ஆவணங்கள் மட்டுமே இருந்தன. செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 12.38 மணிக்கு துறைமுகத்திற்குள் ஒரு லாரி வந்து சென்றதாக மட்டும் பதிவாகியிருந்தது" என பிபிசி தமிழிடம் ராஜசேகர் குறிப்பிட்டார். ஆனால், கன்டெய்னரை கடத்திய இளவரசன் குழுவுக்கு அதன் பிறகே அதிர்ச்சிகள் காத்திருந்ததாகக் கூறுகிறார், துறைமுகம் காவல்நிலைய ஆய்வாளர் சிலம்பு செல்வன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " கடத்தலுக்கு முன்னதாகப் பல்வேறு ஒத்திகைகளை இளவரசன் பார்த்துள்ளார். தனக்கு உதவியாக முத்துராஜ், திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், அரசுச் பேருந்து கழக ஓட்டுநர் சங்கரன் உள்பட சிலரைக் கூட்டு சேர்த்துக் கொண்டார்" என்று விவரித்தார். ஜி.பி.எஸ் கொடுத்த அதிர்ச்சி பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இளவரசன் மேற்கொண்டு விவரித்தவர், "இவர்களில் சிலர் கன்டெய்னரை வேறு லாரிகளில் ஏற்றுவதற்காக உதவி செய்ய வந்தவர்கள். துறைமுகத்தில் இருந்து லாரி வெளியே வந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தோம். அதற்குள் ஜி.பி.எஸ் கருவி இருந்ததாகக் கூறியதால் அதைப் பின்தொடர்ந்தோம். திருவொற்றியூர் வழியாகக் கிளம்பிய லாரி, திருவள்ளூரில் மணவாளன் நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. லாரியின் உரிமையாளரை வரவழைத்து விசாரித்தபோது, முழு விவரமும் தெரிய வந்தது" என்றார். துறைமுகத்தில் இருந்து வெளியே வந்தபோது, கன்டெய்னரின் மேற்புறத்தில் ஜி.பி.எஸ் கருவி இருந்ததைக் கவனித்த இளவரசன், அதை உடைத்த பிறகே லாரியை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார் சிலம்பு செல்வன். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,கடத்தப்பட்ட கன்டெய்னரில் 5,230 டெல் நோட்புக் வகையைச் சேர்ந்த லேப்டாப்கள் இருந்துள்ளன. இருப்பினும் அதன் பிறகு, 40 அடி நீள கன்டெய்னரில் இருந்த பொருள்களை இரண்டு 20 அடி நீளமுள்ள வாகனங்களில் ஏற்ற முயன்றபோது, உள்ளே மேலும் சில ஜி.பி.எஸ் கருவிகள் இருந்ததைப் பார்த்து இளவரசன் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார் சிலம்பு செல்வன். "இந்த இரண்டு லாரிகளையும் பெங்களூரு செல்வவதற்காக ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை பேசி வரவழைத்துள்ளார். கன்டெய்னரை உடைப்பதற்கே இவர்களுக்கு 45 நிமிடம் ஆகியுள்ளது. ஜி.பி.எஸ் கருவியைப் பார்த்த பிறகு, 'எப்படியும் சிக்கிவிடுவோம்' எனப் பயந்து லாரியை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்" என்கிறார் சிலம்பு செல்வன். 'எஞ்சியது 4 லேப்டாப்கள்' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, துறைமுகம் காவல்நிலைய ஆய்வாளர் சிலம்பு செல்வன் இரண்டு லாரிகளையும் துறைமுகத்திற்குக் கொண்டு வந்து லேப்டாப் பெட்டிகளை எண்ணிப் பார்த்தபோது, 5,207 லேப்டாப்கள் இருந்துள்ளன. சென்னையில் இருந்த தப்பிய இளவரசன், கையில் 23 லேப்டாப்களை எடுத்துக் கொண்டு மும்பைக்குச் சென்றதாகக் கூறுகிறார் சிலம்பு செல்வன். "தன்னிடம் இருந்த லேப்டாப்களை வெறும் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். ஆனால் அதன் மதிப்பு தலா ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் வரும். காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் சிக்கும்போது அவரிடம் நான்கு லேப்டாப்கள் மட்டுமே இருந்தன," என்று சிலம்பு செல்வன் இளவரசன் கைது செய்யப்பட்ட தருணத்தை விவரித்தார். பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் "ஏன் இப்படியொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட வேண்டும்?" என துறைமுகம் காவல் உதவி ஆணையர் ராஜசேகரனிடம் கேட்டோம். அதற்கு, "கடன் நெருக்கடிகள்தான் காரணம். சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக இளவரசன் வேலை பார்த்து வந்துள்ளார்" என்கிறார். "அவருக்கு 15 லட்ச ரூபாய் கடன் உள்ளது. மாத சம்பளமாக 33 ஆயிரம் ரூபாய் வருகிறது. மாத வட்டிக்கே 15 ஆயிரம் ரூபாய் கட்டுவதாகக் கூறுகிறார். இந்நிலையில், இந்த ஒரு கொள்ளையை நடத்தி செட்டில் ஆகிவிடலாம் என்று அவர் கணக்கு போட்டுள்ளார். ஆனால், இன்வாய்ஸ் இல்லாமல் லேப்டாப்களை விற்க முடியவில்லை. சிக்காமல் இருந்திருந்தால் மும்பை வழியாக வெளிநாடு தப்பிச் செல்வதுதான் அவரின் திட்டமாக இருந்தது" என்றும் கூறுகிறார் ராஜசேகரன். இந்தக் கடத்தல் சம்பவத்தில் கைதானவர்கள் மீது பிஎன்எஸ் 2023ஆம் ஆண்டு சட்டத்தின்படி 305, 306 ஆகிய பிரிவுகளின்கீழ் துறைமுக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். "இதற்கு முன்பு துறைமுகத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை" எனக் கூறிய உதவி ஆணையர் ராஜசேகரன், "பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும் ஆவணங்கள் முறையாக இருந்ததால் எந்தவித சிக்கலும் இல்லாமல் கன்டெய்னரை கடத்தியுள்ளனர். இனி வரும் நாட்களில் பாதுகாப்பு தொடர்பாகப் புதிய நடைமுறைகளை சி.ஐ.டி.பி.எல் நிறுவனம் கடைப்பிடிக்க உள்ளது" என்றார். சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "காவல்துறையில் அனைத்து விவரங்களையும் தெரிவித்துவிட்டேன். இந்த விவகாரம் குறித்துப் புதிதாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0k84462jd6o
  19. சில நாட்களுக்கு முன்னரே கிடைத்த தகவல்! அறுகம்பைக்கு அனுப்பப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள் அறுகம்பை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனினும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கிடைத்த தகவல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் அலைச் சறுக்கு விளையாட்டுக்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக ஈடுபடுவதாகவும், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் இதேவேளை, கொழும்பு அல்லது வேறு எந்த பிரதேசங்களிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறவுள்ளதாக எவ்வித புலனாய்வுத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கிழக்கு இலங்கையின் அறுகம்பை தொடர்பில் இவ்வாறான பயணக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/police-strengthen-security-in-arugam-bay-1729665124#google_vignette
  20. டூம்ஸ்டே பனிப்பாறை: உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர் எலிசபெத் ரஷ் பட மூலாதாரம்,ELIZABETH RUSH கட்டுரை தகவல் எழுதியவர், எலியட் ஸ்டெய்ன் பதவி, பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் தனது சமீபத்திய புத்தகமான ‘தி குயிக்கனிங்’-இல் (The Quickening), உலகின் மிக முக்கியமான, ஆனால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒன்றுக்கு தான் மேற்கொண்ட அரிய பயணத்தை விவரித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், 57 விஞ்ஞானிகளும் அவர்களது குழுவினரும், அன்டார்டிகாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்குத் தங்கள் 54 நாள் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது நோக்கம்: மிக வேகமாக உடைந்து கொண்டிருக்கும் ’த்வைட்ஸ் பனிப்பாறை’-யை (Thwaites Glacier) ஆய்வு செய்வது. இது உலகின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1990களில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது தற்போது 8 மடங்கு குறைந்துள்ள த்வைட்ஸ் பனிப்பாறை உருகுவதால், ஒவ்வோர் ஆண்டும் 8,000 கோடி கிலோ பனிக்கட்டி கடலில் கலக்கிறது. இந்த அளவு, பூமியின் 4% வருடாந்திர கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. அதன் மாபெரும் அளவு மற்றும் விரைவாக உருகுவதன் காரணமாக இந்தத் தொலைதூரப் பனிப்பாறை பிரதேசம் பூமியின் பயங்கரமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், கூடவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் திகழ்கிறது. ஏனெனில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் துவக்கப்புள்ளி இது. த்வைட்ஸ் முழுவதுமாக உருகினால் கடல் மட்டம் 10 அடி உயர்ந்துவிடும். அது நினைத்துப் பார்க்க முடியாத உலகளாவிய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ உருகி வரும் போதிலும், அனைவரும் அஞ்சிய அளவிற்கு வேகமாக மறைந்துவிடாது என்று இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. பனிப்பாறை தொடர்ந்து உடைந்து கடலில் விழக்கூடும் என்ற அச்சத்தை இந்த ஆய்வு சிறிதே குறைக்கிறது. அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. "த்வைட்ஸ் பனிப்பாறை தொடர்பாக இப்போது நாம் பார்ப்பது ‘ஸ்லோ மோஷ’னில் நடக்கும் ஒரு பேரழிவு,” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய துருவ விஞ்ஞானி மேத்யூ மோர்லிங்ஹாம் ‘தி கான்வர்சேஷன்’ இணையதளத்திடம் கூறினார். கடந்த 2019இல் த்வைட்ஸுக்கு பயணம் செய்தவர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் எழுதிய காலநிலை மாற்றம் பற்றிய புத்தகமான ‘ரைசிங்’, புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியில் இருந்தது. அவருடைய சமீபத்திய புத்தகம், ‘தி குயிக்கனிங்,’ த்வைட்ஸின் உடைந்த பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பயணத்தை விவரிக்கிறது. இது மனிதர்கள் இதுவரை சென்றிராத உறையும் குளிர் வாட்டும் தொலைதூர இடமாகும். ‘விண்வெளியைவிட தனித்திருக்கும் இடம்’ பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, த்வைட்ஸ் பனிப்பாறையின் உடைந்த பனிக்கட்டிகள் சூழ்ந்த இடத்திற்கு இதற்கு முன் மனிதர்கள் சென்றதில்லை ரஷ் தனது அன்டார்டிகா பயணத்தின் சுவாரஸ்யமான விவரங்களை பிபிசி டிராவலுடன் பகிர்ந்துகொண்டார். உலகத்தைப் பற்றிய தனது பார்வையை அது எவ்வாறு மாற்றியது மற்றும் பூமியின் மிகவும் மென்மையான, எளிதில் உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் வழியாக மேற்கொண்ட பயணம், பயண நெறிமுறைகளை எப்படி மாற்றியது என்பதையும் அவர் விவரித்தார். கேள்வி: த்வைட்ஸ் பனிப்பாறை எங்கே உள்ளது, இந்தப் பயணத்தைப் பற்றி முதலில் எப்போது கேள்விப்பட்டீர்கள்? பதில்: "த்வைட்ஸ் பனிப்பாறை அன்டார்டிகாவில் மிகவும் மர்மமான இடம். இது அமுண்ட்சென் கடலின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளது. அருகிலுள்ள ஆராய்ச்சித் தளத்தை அடைய நான்கு நாட்கள் ஆனது. ‘உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு உதவி கிடைக்கச் செய்வதைக் காட்டிலும் விண்வெளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்வது சுலபம். அது உங்களுக்குத் தெரியுமா?’ என்று ஆய்வுத் திட்ட அதிகாரி என்னிடம் கேட்டார். த்வைட்ஸ் விரைவாகப் பேரழிவை நோக்கிச் செல்கிறது என்ற கவலைகள் உள்ளன. ஆனால் உண்மையில் யாரும் இதற்கு முன் அது சிதையும் இடத்திற்குச் சென்றதில்லை. ‘அன்டார்டிக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக என்னைச் சேர்த்துக்கொள்ள நான் விண்ணப்பித்தேன். அவர்கள் வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை அன்டார்டிகாவிற்கு அனுப்புவார்கள். நான் 60 பக்க விண்ணப்பத்தைத் தயார் செய்தேன். எனது விண்ணப்பத்தில் ஒரு பத்தி நீள அடிக்குறிப்பு இருந்தது: ‘நான் கடல் மட்ட உயர்வு பற்றி எழுதுகிறேன். நான் அன்டார்டிகாவில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கடல்மட்ட உயர்வை நேரடியாகப் பார்க்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பயணத்தில் அவர்கள் என்னைச் சேர்த்துக்கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம்." அன்டார்டிகா பற்றிய உண்மைகள் பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, எலிசபெத் ரஷ், பூமியின் 'டூம்ஸ்டே பனிப்பாறை' பகுதிக்கு பயணம் செய்தார் கேள்வி: கடல் மட்டம் 10 அடி அல்லது அதற்கு மேல் உயர்ந்தால் அது உலக அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? பதில்: "இது நடக்கும் வேகம் நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இரண்டு நூற்றாண்டுகளில் உயரும் 10 அடிக்கும், 40 ஆண்டுகளில் உயரும் 10 அடிக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. உண்மையில் கவலை என்னவென்றால், இதற்காக மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நான் ‘திட்டமிட்ட பின்வாங்கலை’ (தாழ்வான பகுதிகளில் இருந்து உயரமான பகுதிகளுக்குக் குடிபெயர்வது) ஆதரிக்கிறேன். அதில் ஒரு அரசு நிறுவனம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளை, வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முந்தைய விலைமதிப்பில் வாங்குகிறது. அந்தப் பணத்தை வைத்து மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நியூயார்க் நகரம் ஏற்கெனவே சில திட்டமிட்ட பின்வாங்கலை ஸ்டேட்டன் தீவில் செய்துள்ளது. ஸ்டேட்டன் தீவில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை அரசாங்கம் தலையிட்டு, விலைக்கு வாங்கி இடித்தது. அந்தக் குடியிருப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தங்கள் வீட்டிற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஸ்டேட்டன் தீவில் வேறு இடத்திற்குச் செல்ல முடிந்தது. திட்டமிட்ட பின்வாங்கல் சமூகங்களைச் சிதைப்பது போன்றது என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட சிதைவு உண்மையில் நடந்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை, இத்தகைய இடப்பெயர்வுகளின்போது அப்படி நிகழாமல் தவிர்க்க முடியும். ஆகவே, நாம் தயார்நிலையில் இருக்கும்பட்சத்தில் கடல்மட்ட உயர்வு ஒரு பேரழிவாக இருக்கப் போவதில்லை. ஆனால், அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி." கேள்வி: இந்தப் பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். இது பற்றி நிங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பதில்: "இந்தப் பயணம் பற்றிய என்னுடைய பார்வை என் கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். கூடவே அந்த இடங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் குழுவினரின் கருத்துகளையும் அதில் இடம்பெறச் செய்வேன் என்று என் விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டேன். அன்டார்டிகா பற்றித் தெரிவிக்கப்படும் பொதுவான கூற்றுகளில் இருந்து விலகி அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்குவதே எனது குறிக்கோளாக இருந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் அன்டார்டிகாவை கண்டார். இந்த மிகக் குறுகிய காலகட்டத்தில் அன்டார்டிகாவை பற்றி மிகவும் குறைவான தகவல்களே தெரிய வந்துள்ளன. அங்கு சென்றது மனிதர்களால் சிந்திக்கவே முடியாத மாபெரும் வெற்றி என்றும் பல இன்னல்களைக் கடந்து அங்கு சென்றடைந்தது எப்படி என்பதையுமே அவை பெரும்பாலும் விளக்கின. அங்கு சென்ற பெரும்பாலானவர்கள் உலகின் வடபகுதியைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர்கள். அன்டார்டிகாவை பற்றிய எல்லா கதைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. ஆனால் நான் அனைவருடைய கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு கதையை உருவாக்க விரும்பினேன். பயணத்தில் உடனிருந்த சமையற்காரர்கள், பொறியாளர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோரையும் நேர்காணல் செய்ய நான் முன்பே முடிவு செய்தேன். என் விண்ணப்பம் தெரிவு செய்யப்படுவதில் இது குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், நான் அறிவியலைப் பற்றி பேசப் போகிறேன். ஆனால் அன்டார்டிகா பற்றி பொதுவாகச் சொல்லப்படும் கதைகளைக் கேள்வி கேட்கும் வகையில் அதைச் செய்யப் போகிறேன்." ‘மனிதர்களிடமிருந்து வெகு தூரம்’ பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, ஐஸ் பிரேக்கர் கப்பலில் பயணித்த குழுவினர் த்வைட்ஸ் பனிப்பாறையை அடைய மூன்று வாரங்கள் ஆனது கேள்வி: அன்டார்டிகா பற்றிய கதையில் பொதுவாக இடம்பெறாத பயணிகள் உலகத்தைப் பார்க்கும் விதத்தை இந்த அரிய பயணம் எப்படி மாற்றியது என்பதை விளக்கும் ஏதேனும் கதைகள் உங்களிடம் இருக்கிறதா? பதில்: "கப்பலில் சமையல்காரராக இருந்த ஜாக் என்பவரிடம் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் நியூ ஆர்லியன்ஸை சேர்ந்தவர். பொருளாதார ரீதியாகத் தனது தாத்தாவை நன்றாக கவனித்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்தப் பயணத்தில் சமையல்காரராக இருக்க அவர் முடிவு செய்தார். ஆனால் எங்கள் பயணம் துவங்க இரண்டு வாரங்கள் இருந்த நிலையில் அவரது தாத்தா காலமாகிவிட்டார். ஆனாலும் ஜாக் எங்களுடன் வந்தார். அவர் இதுவரை விமானத்தில் கூடச் சென்றதில்லை. அவர் மூன்று வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்து நியூ ஆர்லியன்ஸில் இருந்து, சிலியில் இருக்கும் புன்டா அரீனாஸுக்கு வந்தார். அங்கிருந்துதான் எங்கள் கப்பல் பயணம் துவங்க இருந்தது. அவர் கப்பலிலும் சென்றதில்லை. பெங்குவின் பறவைகளையும் பார்த்ததில்லை. நியூ ஆர்லியன்ஸை சேர்ந்தவர் என்றாலும்கூட அவர் இதுவரை கடல்மட்ட உயர்வு பற்றி ஒருபோதும் தீவிரமாகச் சிந்தித்ததில்லை. இந்த முழு அனுபவமும் அவருக்குப் பல ’முதல்’களை உள்ளடக்கியதாக இருந்தது. காலநிலை மாற்றம் பற்றிச் சிந்திக்க அவருக்கு அவகாசம் இருந்ததில்லை. ஆனால் அவர் த்வைட்ஸை பார்த்ததும், 'ஓ, எனக்குப் புரிகிறது' என்று கூறினார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதையில் இருக்கும் சுவர் போல அந்தப் பனிப்பாறை இருந்தது. அது மிகவும் பெரியதாக இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைய மூன்று வாரங்கள் ஆயின. மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து வெகுதொலைவில் இருக்கும் நம்முடைய செயல்கள் இந்தப் பனிப்பாறை சுவரின் மீது எப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்துகிறது என்று சிந்திக்கும்போது மயிர்கூச்சல் எடுத்தது." கேள்வி: பூமியில் நாம் எந்த வகையான இடங்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து நடக்கிறது. எளிதில் அடைய முடியாத, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகள் அமைந்துள்ள இடங்களை அப்படியே விட்டுவிடவேண்டும் என்பது ஒரு கருத்து. அவற்றின் மென்மையான தன்மையை அருகிலிருந்து பார்ப்பது அவற்றைப் பற்றி இன்னும் ஆழமான அக்கறையை ஏற்படுத்த வழிவகுக்கிறது என்பது மற்றொரு பார்வை. நாம் செல்லக்கூடாத இடங்கள் என்று ஏதாவது இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: "இதுவொரு நல்ல கேள்வி. என்னுடைய கருத்தை மட்டுமே நான் இங்கு சொல்ல முடியும். நாங்கள் திரும்பும் வழியில் தெற்குப் பெருங்கடலைக் கடந்தபோது, ‘இனி நான் ஒருபோதும் இங்கு [அன்டார்டிகாவுக்கு] வரப் போவதில்லை’ என்ற எண்ணம் தோன்றியது. இது என் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் பயணம். நான் திரும்பி வந்து ஐந்து ஆண்டுகள் உழைத்து அந்தப் பயணத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். பயணத்தின் பின்னால் அந்த ஆழமான அர்த்தம் அல்லது உந்துதல் இல்லாமல் இருந்திருந்தால் நான் அதைச் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. சாதாரண சுற்றுலா போல நாம் அன்டார்டிகாவுக்கு செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பயணக் கப்பல்கள் அங்கு போக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ‘தீண்டப்படாத’ அல்லது ‘தொலைதூர’ இடங்களுக்குச் சாதாரண சுற்றுலாப் பயணங்கள் அதிகரிக்கக்கூடாது. இந்தக் கட்டத்தை அன்டார்டிகா, அமேசான் போன்ற இடங்கள் அடைந்துவிட்டன. நாம் ஒன்றை நேரில் பார்க்கும்போது அதன் மீது அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதே என் பொதுவான எண்ணம். எனக்கு வயதாகும்போது அந்த ஆர்வத்தை வீட்டிற்கு நெருக்கமாக உள்ள இடங்களுக்கு மாற்ற முயல்வேன். என் மூன்று வயதுக் குழந்தையுடன் என் சுற்றுப்புறத்தில் நான் நடக்க முடியும். மேலும் என் அண்டை வீட்டு முற்றங்களில் காணப்படும் அற்புதமான பட்டாம்பூச்சிக் கூட்டம், சிறிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பார்க்க முடியும். அன்டார்டிகா அல்லது அமேசானை எவ்வளவு ஆச்சரியத்துடனும் வியப்புடனும் நாம் பார்க்கிறோமோ அதேபோல இந்த இடங்களையும் கருதலாம் என்று நான் நினைக்கிறேன்." அன்டார்டிகாவிற்கு செல்லும் முன்… பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, முதன்முதலில் மனிதர்கள் அன்டார்டிகாவை பார்த்து 200ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதை இப்போதும் 'யாராலும் தீண்டப்படாத இடம்' என்று சொல்வது சரியல்ல என்று ரஷ் கருதுகிறார் கேள்வி: அன்டார்டிகாவிற்கு பயணம் செய்யும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன? பதில்: "அன்டார்டிகாவை 200 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒருவர் சென்றடைந்தார். மனித வரலாற்றின் பெரும்பகுதி காலத்திற்கும் அது மனிதர்களத் தன் பக்கம் அண்ட அனுமதிக்கவில்லை. இந்த பூமியில் வேறு எந்த இடமும் அப்படி இல்லை. நீங்கள் செல்லும் ஒவ்வோர் இடம் குறித்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைய பூர்வீகக் கதைகள் இருக்கும். பூமியில் அப்படி எதுவும் இல்லாத ஒரே இடம் இதுதான். எனவே இதுவொரு குறிப்பிட்ட அளவுக்கு மரியாதை மற்றும் விழிப்புணர்வைக் கோருவதாக நான் நினைக்கிறேன். அதை நெருங்குவது இந்தக் கோளின் வரலாற்றில் மிகவும் அரிதானது, மிகவும் புதியது. எனவே நீங்கள் அங்கு செல்லப் போகிறீர்கள் என்றால், அந்தப் பயணம் அசாதாரணமானது. நீங்கள் பார்க்கப் போகும் அன்டார்டிகா எவ்வளவு சக்தி வாய்ந்த இடம் என்பது பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." கேள்வி: இந்த மாபெரும் பனிப்பாறை மெதுவாக உருகுவதைப் பார்த்தது உங்களை எப்படி பாதித்தது? பதில்: "நாங்கள் த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அருகே சென்றடைந்த அந்த நாள் மிகவும் அமைதியாக இருந்தது. எங்கள் கப்பலின் கேப்டன் பனிப்பாறையின் முன்புறமாக எங்களை அழைத்துச் சென்றார். அதுவோர் அற்புதமான நாள். பின்னர் நிலைமை மாறியது. ஆறு நாட்களுக்கு நாங்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டி வந்தது. வண்டல் மண்ணை [பூமியின் கடந்த கால புவியியல் மற்றும் காலநிலையை வெளிப்படுத்தும் கடற்பரப்பிற்கு அடியில் இருந்து மாதிரிகள்] பக்கவாட்டிற்குத் தள்ளுதல், எலிஃபெண்ட் சீல்களுக்கு முத்திரைக் குறியிடுதல், பனிப்பாறையின் கீழே நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புதல் போன்ற வேலைகளைச் செய்தோம். அங்குள்ள பனி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக இருந்தது. ஏழாவது நாள், நான் விழித்தெழுந்தவுடன், கப்பலின் இயங்குதளத்திற்குச் சென்றேன். அங்கிருந்து பார்த்தபோது, முன்பைவிட அதிகமான பனிப்பாறைகள் காணப்பட்டன. ஆனால் எனக்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை. நான் என் வேலையைத் தொடர்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு கப்பலில் இருந்த தலைமை விஞ்ஞானி இரண்டு செயற்கைக்கோள் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்று த்வைட்ஸ், அதில் ஒரு திடமான மாபெரும் பனிப்பாறை காணப்பட்டது. அடுத்த படத்தில் கோபமடைந்த கடவுள் பனிப்பாறையை ஒரு சுத்தியலால் அடித்து 300 பனிக்கட்டிகளாக உடைத்தது போல் இருந்தது. 15 மைல் அகலமும் 10 மைல் ஆழமும் கொண்ட பனிப்பாறையின் ஒரு பகுதியைப் பற்றி இங்கு நாம் பேசுகிறோம். முதல் படம் நாங்கள் அங்கு சென்று சேர்ந்த நாளில் எடுக்கப்பட்டது. இரண்டாவது படம் ஏழாவது நாள் காலையில் எடுக்கப்பட்டது. தலைமை விஞ்ஞானி அவற்றைப் பார்த்து, ‘அடக் கடவுளே, த்வைட்ஸ் விரைவான சரிவின் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. அது நம் கண் முன்னே நடக்கிறது’ என்றார். அவர் அந்தத் தகவலை கேப்டனுக்கு அனுப்பினார். ஆய்வுப் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேரழிவுகரமான நிகழ்வு உண்மையில் என் கண்களுக்கு முன்னால் நடந்துள்ளது. அதை நான் உணரவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களுக்கு முன்னால் ஒரு பனிப்பாறை துண்டு துண்டாக உடைந்து கிடப்பதை உங்களால் கண்டு உணர முடியவில்லை என்றால் அந்த நிகழ்வு நீங்கள் முதலில் கற்பனை செய்ததைவிடப் பெரிய அளவில் உள்ளது என்றும், அதைப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் தவறு என்றும் அர்த்தம். இது காலநிலை மாற்றத்திற்கான ஒரு சிறந்த உருவகம் என்று நான் நினைக்கிறேன். அதை உணர்வது மனிதர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது." 'நம்பிக்கை உள்ளது’ பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, கடந்த 1990களில் இருந்ததைவிட த்வைட்ஸ் இப்போது 8 மடங்கு வேகமாக உருகி வருகிறது கேள்வி: பூமியின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வது மனித குலத்தைப் பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றியது? பதில்: "அது வேறு உலகமாக இருந்தது. நம்முடைய இருப்பு எவ்வளவு மதிப்புமிக்கது மற்றும் அதிசயமானது என்பதையும் இது எனக்கு உணர்த்தியது. வேறொரு கிரகத்தைத் தொடும் தூரத்திற்கு நெருங்கிவிட்டதாக நான் உணர்ந்தேன், மற்றொரு கிரகத்தில் மனித இருப்பை நிலைநாட்டுவது எவ்வளவு கடினம் என்பதை உணரும்போது அந்த உணர்வானது இங்கு நமது வாழ்க்கைக்கு நன்றியுள்ளவர்களாக நம்மை ஆக்குகிறது. அன்டார்டிகாவில் நடப்பது அந்தப் பகுதிக்கு மட்டுமானது அல்ல. அன்டார்டிகாவை சுற்றிச் சுழலும் கடல் நீரோட்டங்கள் பிஸ்டன் போல உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை இயக்குகின்றன. அதை நாம் மாற்ற ஆரம்பித்துள்ளோம். நாம் அதை மாற்றுவதால், உலகம் முழுவதும் உள்ள உலகளாவிய கடல் வடிவங்கள் மாறுகின்றன. அன்டார்டிகாவை பார்த்து, அங்கு அதிக நேரம் செலவிட்டதன் மூலமாக, ஒரு பெரிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் வலையில் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு எனக்குள் நிச்சயமாக வளர்ந்தது." கேள்வி: உங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு எதிர்காலத்தைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்? பதில்: "ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததை, எதிர்காலத்தைப் பற்றிய என் நம்பிக்கையின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன். இப்போது எனக்கென்று ஒரு குழந்தை உள்ளது. என் வாழ்நாளில் இருப்பதைவிட அவனுடைய வாழ்நாளில் நிலைமை மோசமாகலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குக் கொண்டு வரும் என் முடிவை அது மாற்றவில்லை. ஆனால் என் வாழ்நாளுக்குள் ஓர் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துவதில் அது உதவியது. சங்கடமான சூழ்நிலைகள் மற்றும் பெரிய மாற்றங்களின்போது எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவனுக்குக் கற்பிப்பதில் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படும் தேவை இருப்பதாக உணர்கிறேன். ஏனென்றால் அந்தச் சூழ்நிலைகள் வரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன். மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்படி, கூட்டாண்மை மற்றும் விசுவாசத்தை உருவாக்குவது எப்படி என்பதை அவனுக்குக் கற்பிப்பது இன்னும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நெகிழ்வுத்தன்மையுடனும், எதையும் சமாளிக்கும் திறனுடனும் அவன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் அதே நேரம், ஒருவர் மற்றவரை கவனித்துக் கொள்ளும் மனித சமூகத்தின் ஒரு பகுதியாக அவன் இருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். https://www.bbc.com/tamil/articles/c98yj85p1ryo
  21. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக தவறியதை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/196896
  22. நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் : சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - பொலிஸ் திணைக்களம் நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைந்துள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் திணைக்களம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏதேனும் அவசரநிலை அல்லது தகவல்களை ‘1997’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/196894
  23. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (23) முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு மூலம் அளிப்பதற்காக வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிணை தொடர்ந்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். https://www.virakesari.lk/article/196890
  24. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது. இந்தியக் கடன்உதவிகள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் ஆராயப்பட்டதுடன், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/196891
  25. டிரம்பை ஆதரித்தும் எதிர்த்தும் WWE வீரர்கள் பிரசாரம் - அண்டர்டேக்கர், ஹல்க், பட்டிஸ்டா ஆதரவு யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்பிற்கு ஆதரவாக ஹல்க் ஹோகன் பிரசாரம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஸாம் காப்ரல் பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன் 22 அக்டோபர் 2024 டொனால்ட் டிரம்ப் கடைசியாக WWE போட்டிகளில் (World Wrestling Entertainment - WWE)) சிறப்பு விருந்தினராக தோன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு முன்னாள் WWE வீரர்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். 'ஹல்க் ஹோகன்' என்று அழைக்கப்படும் டெர்ரி போல்லியா ஒரு பிரபல WWE வீரர் ஆவார். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தனது சட்டையை கீழித்து, உள்ளே அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையை வெளிக்காட்டினார். அதில் "டிரம்ப் 2024" என்று எழுதியிருந்தது. அவர் "டிரம்ப்மேனியா (trumpmania) உலகெங்கும் பரவட்டும்" என்று கோஷமிட்டார். (Wrestlemania என்பது பிரபலமான ஒரு மல்யுத்த போட்டி, அதுபோல ஹல்க் ஹோகன் "டிரம்ப்மேனியா" என்ற சொல்லை குறிப்பிட்டார்) அமெரிக்காவில் மதம் ஒரு கேலிக்குள்ளாக்கப்படுகிறது என்று கடந்த வாரம், முன்னாள் மல்யுத்த வீரராக இருந்து ஊடக ஆளுமையான டைரஸ் உடனான நேர்காணலில் டிரம்ப் தெரிவித்தார். சமீபத்தில் பல்வேறு ஊடகங்களுடனான நேர்காணல்களுக்கு வர மறுத்த டிரம்ப், WWE பிரபலமான 'தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் மார்க் காலவே தொகுத்து வழங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். "நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அரசியலை மீண்டும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிட்டீர்கள்", என்று மார்க் காலவே கூறினார். அதை டிரம்ப் ஆமோதித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டிரம்ப் இவ்வாறு பிரசாரம் செய்வது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக கருதப்படுகிறது. "பெரும்பாலான அமெரிக்க மக்கள் தேர்தல் நெருங்கும் போது மட்டுமே நாட்டின் அரசியல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கவனிக்கிறார்கள். அவர்கள் சமீபத்திய விஷயங்களை கருத்தில் கொண்டே வாக்களிக்கின்றனர்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார். இவர் ஒரு தன்னார்வ பத்திரிகையாளர் மற்றும் Ringmaster: Vince McMahon and the Unmaking of America என்ற நூலின் ஆசிரியர். "இந்த மல்யுத்த வீரர்களின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை பலரும் கேட்கிறார்கள். இதன் மூலம் அரசியல்மயப்படாதவர்களையும், புதுமையான எண்ணங்களை கொண்டவர்களையும் அவர் ஈர்க்கலாம்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் டிரம்பின் இந்த உத்தி குறித்து கூறினார். இதுபோன்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் மல்யுத்த வீரர்களை வைத்து பிரசாரம் செய்வதன் மூலம் டிரம்ப் இளைஞர்களை கவர முயற்சித்து வருகிறார். இது போன்ற தளங்கள் டிரம்பின் பிரசாரத்திற்கு மிக முக்கியமாக இருப்பதாக, அவரது ஆலோசகர்கள் செமாஃபோர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். டிரம்ப் 'ஒரு நட்சத்திரம்' என்று மூத்த தகவல் தொடர்பு ஆலோசகர் அலெக்ஸ் புரூஸ்விட்ஸ் அந்நிறுவனத்திடம் தெரிவித்தார். "டிரம்பின் முந்தைய பிரசாரத்தை விட தற்போது நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். டிரம்பை ஒரு தனி நபராக முன்னிறுத்தி வருகிறோம். இது டிக்டாக்கில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார். அமெரிக்க அரசியலில் 78 வயதாகும் டிரம்பின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மறுபிரவேசம் ஆகியவற்றை மல்யுத்தத்துடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம் என்று ரிங்மாஸ்டர் என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது யதார்த்தத்தையும், கற்பனையையும் இணைக்கும் ஒரு கலை, உணர்ச்சிகளை உயர்த்தும் ஒரு உளவியல் மற்றும் தவறுகளை சரியாக மாற்றும் ஒரு திறன் என்று அவர் விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் மார்க் காலவே "சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அரசியலில் ஒருவர் உண்மைகளையும், பொய்களையும், சில நேரம் பாதி உண்மையை மட்டும் சரியான அளவில் உற்சாகத்துடனும் நேர்மையுடனும் கூற வேண்டும்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் தெரிவித்தார். "ஆனால் அரசியல் விதிகள் மற்றும் கொள்கைகள் சார்ந்து அல்லாமல் மல்யுத்தம் போல உற்சாகமும், சுய அடையாளம் சார்ந்ததாக மாறலாம்", என்று அவர் எச்சரித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன், டிரம்ப் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் சிறுவயதில் மல்யுத்தம் பார்த்து வளர்ந்தார். அவர் எப்பொழுதும் மல்யுத்த வீரர்களை பொழுதுபோக்காளர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையையும் அளித்தார். ஒரு காலத்தில் சிறிய நிறுவனமாக இருந்த WWE, அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் கென்னடி மக்மஹோனின் கீழ் உலகின் மிகப் பெரிய மல்யுத்த நிறுவனமாக மாறியதைப் போன்றே டிரம்பும் தொழிலதிபராக வளர்ந்து வந்தார். இருவருமே குடும்ப நிறுவனங்களில் அதிகாரத்திற்கு வந்து, அதை அதிக அளவில் வளர்த்தெடுத்தனர். அதிபர் ரீகனுக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் கீழ் இந்த நிறுவனம் செழித்து இருந்தது. இவர்கள் இருவரும் விசாரணையில் இருந்து தப்பினர். இதற்கு பிறகே டிரம்ப் அவரது தொழிலாளர்களுக்கு கடுமையான விதிகளை விதித்ததாகவும், வின்சென்ட் கென்னடி மக்மஹோன் WWE விளையாட்டு வீரகளுக்கு வழங்கும் சுகாதார சலுகைகளை நிறுத்தியதாகவும் ஜோசஃபின் ரைஸ்மேன் குற்றம் சாட்டினார். 1980களின் பிற்பகுதியில், நியூ ஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஹோட்டலில் டிரம்ப் WWE-இன் மார்க்கீ ரெஸில்மேனியா நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தினார். அப்போது தான் இந்த இருவரின் பாதைகள் ஒன்றிணைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வின்சென்ட் மக்மஹோனை (கீழே நடுவில் இருப்பவர்) பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரரான பாபி லாஷ்லியை (வலது) தோற்கடித்த டிரம்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரர் 2007 ஆம் ஆண்டு, இருவரும் ஒரே போட்டிக்குள் நுழைந்தனர். அதில் டிரம்ப் WWE-யின் தலைமை அதிகாரிக்கு சவால் விடுத்தார். அவர் அரங்கின் கூரையின் மேல் இருந்து ரசிகர்களின் மீது அமெரிக்க டாலர்களை பொழிந்தார். "ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் முதல்முறையாக டிரம்ப் பேசியது இதுவே முதல் முறை", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார். இருவருக்கும் இடையேயான பகை 2023 ஆம் ஆண்டு 'ரெஸில்மேனியா' மல்யுத்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியான 'பாட்டில் ஆஃப் பில்லியனர்ஸ்' -இன் போது தொடங்கியது. அதில் இருவரின் சார்பாக மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த போட்டியில் தோல்வியடையும் போட்டியாளரின் உரிமையாளர் தலை மொட்டையடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. இந்த ஒரு போட்டி மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வருவாயை எட்டியது என்று மல்யுத்த பத்திரிக்கையாளரும் பாட்காஸ்டருமான பிரையன் அல்வாரெஸ் தெரிவித்தார். இந்த மல்யுத்த நிகழ்ச்சியில் எத்தனையோ போட்டி நடந்தாலும், மக்கள் ஒருவர் தலையை மொட்டையடித்துக் கொள்ளும் நிபந்தனையினால் இந்த போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். டிரம்ப் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு WWE போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பிலும் இல்லை. ஆனால் அவர் அதிபரான பிறகு மக்மஹோனின் மனைவி லிண்டாவை தனது அமைச்சரவையில் சிறு வணிக நிர்வாகியாக பணியமர்த்தினார். தற்போது டிரம்ப் சார்பு கொண்ட ஃபர்ஸ்ட் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் தலைவராக லிண்டா உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் மீண்டும் அதிபராவது குறித்து, WWE-யை சேர்ந்தவர்களில் சிலருக்கு உடன்பாடு இல்லை. 'தி அனிமல் பட்டிஸ்டா' என்று அழைக்கப்படும் டேவ் பட்டிஸ்டா, கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஜிம்மி கிம்மலின் நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டிரம்பை கேலி செய்தார். "டொனால்ட் டிரம்ப் ஒரு வலிமையான மனிதர் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். அவர் அப்படி இல்லை", என்று அவர் கூறினார். ஆயினும்கூட, சில பிரபல மல்யுத்த வீரர்கள் வழக்கத்திற்கு மாறான வழிகளில் டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள். "தெருவில் இருக்கும் ஒரு சாதாரண நபரிடம் ஹல்க் ஹோகனைத் தெரியுமா என்று நீங்கள் கேட்டால், மல்யுத்த ரசிகர் அல்லாத ஒருவர் கூட ஆம் என்று சொல்வார். டிரம்ப் இது போன்ற மிக பிரபலமான நபர்களை தனது பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்", என்று அல்வாரெஸ் பிபிசியிடம் கூறினார். "டிரம்ப் மல்யுத்தத்தை போலவே அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்", என்று அல்வாரெஸ் கூறினார். திங்கட்கிழமையன்று டிரம்புடனான தனது நேர்காணலின், "அரசியல்வாதிகளைப் போலவே மல்யுத்த வீரர்களும் மக்கள் கவனத்தை பெற்றால்தான் உண்மையிலேயே சிறந்து விளங்க முடியும்", என்று அவர் தெரிவித்தார். டிரம்ப் ஆர்வத்துடன் முன்னோக்கி சாய்ந்த போது, "நீங்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்" என்று அல்வாரெஸ் குறிப்பிட்டார். "நீங்கள் ஒரு வழி அல்லது வேறு வழியில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளீர்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/creje14374no

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.