Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 11 SEP, 2024 | 10:36 AM புதுடெல்லி: சிங்கப்பூரை சேந்த பயண வலைப்பதிவர் ஒருவர் இந்தியாவில் தனது பயண அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் டெல்லியில் தவிர்க்க வேண்டிய 3 விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் முதலாவதாக நடு இரவில் டாக்ஸியை அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தனது நண்பருடன் நள்ளிரவில் வந்திறங்கிய அந்த வலைப்பதிவர் ஊபர் டாக்ஸியை' பதிவு செய்யத் தவறியதால் ப்ரீபைடு டாக்ஸி ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது அதன் சாரதி ரூ.200 கூடுதலாக கேட்டபோது அதைகொடுக்க மறுத்ததால் தவறான இடத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார். இரண்டாவதாககையடக்க தொலைபேசி எண்ணை எண்ணை ரிக்‌ஷாசாரதி கொடுக்க வேண்டாம் என வலைப்பதிவர் பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் ஜும்மா மசூதிக்கு நண்பருடன் வலைப் பதிவர் பயணம் செய்தபோது இருவரும் தங்கள் செல்போன் எண்ணை ரிக்‌ஷா சாரதியிடம் ஒருவரிடம் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவருக்கு உபேர் கட்டணத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கான ரூ.1000 கொடுப்பது தாராளமானதாக இருக்கும் என அவர்கள் நம்பினர். ஆனால் பயணத்தில் முடிவில் ரூ.6000 என்ற மூர்க்கத்தனமாக கோரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக வலைப் பதிவர் கூறியுள்ளார். இறுதியாக பணத்துக்கு பதிலாக கிரெடிட் கார்டு மட்டும் கொண்டு செல்ல வேண்டாம் என வலைப்பதிவர் பரிந்துரை செய்துள்ளார். சிறிய கடைகளில் குறிப்பாக தெருவோர கடைகளில் பணம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவதால் அவர் இந்த யோசனையை கூறியுள்ளார். இவரது வீடியோ 20 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இதில் ஒருவர் “வெளிநாட்டுப் பயணிகளிடம் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “உங்கள் தொலைபேசி எண்ணை உலகின் எந்த மூலையிலும் கொடுக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது உதவி கோர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் அறிவுரை கூறியுள்ளனர். https://www.virakesari.lk/article/193380
  2. வியாட்நாமில் யாகி’ புயல்; 2 துண்டாக பாலம் உடைந்தது தெரியாமல் ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கிய வாகனங்கள் பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து தாக்கியது. இந்தநிலையில், மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி பின்னர் ஹனோயில் இப்புயல் கரையை கடந்தது. யாகி புயல் கரையை கடந்தாலும் வியட்நாமில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வியாட்நாமில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹேங் ஆற்றில் பாலம் ஒன்று இரண்டு துண்டாக உடைந்து, பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. இதில், ஏராளமான வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்தன. அப்போது, அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால், பொதுமக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வியட்நாம் அரசு உத்தரவிட்டுள்ளது. https://thinakkural.lk/article/309219
  3. யாழ்ப்பாணத்தில் (jaffna) பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.9.2024) கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே இதன்போது உயிரிந்துள்ளார். திடீர் மரண விசாரணை கொக்குவில் (Kokkuvil), ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவியை டிப்பர் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். https://ibctamil.com/article/a-student-hit-a-tipper-in-an-accident-in-jaffna-1725990378#google_vignette
  4. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு(Prabhakaran) பலமாக இருந்த கருணாவை உடைத்ததற்கு ரணில்(ranil) தான் காரணம் என்பதை அறிந்த பிரபாகரன் 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு முடிவு செய்தார் என தென்னிலங்கை கட்டுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளமை வருமாறு, 2002ஆம் ஆண்டு கருணாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பியது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு. கருணா தாய்லாந்துக்கு(thailand) சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற போது இரண்டு பேரை வைத்து அவரை சிக்க வைத்தார் ரணில். கருணாவை பிரித்த ரணில் ஒருவர் அப்போதைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிப்பாளராக இருந்த காமினி அபேரத்ன(Gamini Abeyratne), மற்றவர் ரணிலின் அரசாங்கத்தில் அரச அமைச்சராக இருந்த அலி சாஹிர் மௌலானா(Ali Zahir Moulana). அலி சாஹிர் மௌலானா கருணாவின் அண்டை வீட்டார், அண்மையில் அவர் கருணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கருணாவின் பிள்ளைகளை கொழும்பில் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுவார்த்தையின் போது பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து அப்போது பிரதமராக இருந்த ரணிலிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். தாய்லாந்து இரவு விடுதிகளில் கருணா சமாதானப் பேச்சுக்காக நாட்டை விட்டு வெளியேறிய கருணாவை காமினி அபேரத்ன, தாய்லாந்தில் உள்ள இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்றதுடன் இருவரும் நண்பர்களாகினர். பின்னர் தாய்லாந்து சென்று கருணாவை இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று இரவு வெகுநேரம் வரை விருந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமானபோது, கருணா கிழக்கிலிருந்து கொழும்புக்கு அலி சாஹிர் மௌலானாவின் வாகனத்தில் தப்பிச் சென்றார். இவை அனைத்தும் பிரபாகரனுக்கு தெரியும். சர்வதேச அழுத்தங்களை பொருட்படுத்தாமல், தனது நெருங்கிய கூட்டாளியை உடைத்ததற்கு பழிவாங்கும் வகையில் ரணிலை தோற்கடிக்க முடிவு செய்தார். ரணிலை ஜனாதிபதியாக்க ராஜபக்சாக்கள் விரும்பியது ஏன்..! கருணாவையும் பிரபாகரனையும் பிரித்து புலிகளை அழித்தவர் ரணில் என்பது ராஜபக்சாக்களுக்கு தெரியும். இதனால் தான் ரணிலை ஜனாதிபதியாக்க அவர்கள் விரும்பியதற்கு ஒரு காரணம், அவர் ‘அரகலய’வைப் பிளந்து அழித்துவிடுவார் என்று அவர்கள் நம்பியதே ஆகும். ரணில் இதை நிறைவேற்றினார். மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அச்சத்தினால், மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகளை உருவாக்கினார் ரணில். கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்திய ரணில் சிறிதரன்(Sritharan) உட்பட பல தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு மதுபானசாலை அனுமதி வழங்கியதும் தெரியவந்துள்ளது. மதுபான உரிமம் பெற்ற இந்த கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சி தலைவர்கள், தற்போது கூட்டமைப்பு வாக்குகள் ரணிலின் போட்டியாளரான சஜித்துக்கு(sajith) செல்வதை தடுக்க சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்கின்றனர். கருணாவை ரணில் பிரித்தது அவருக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. இல்லையேல் 2005ல் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார். இந்த தவறை சரிசெய்வதற்கான ரணிலின் அண்மைக்கால நடவடிக்கைகளும் பிழையானவை. மதுபான அனுமதிப்பத்திரங்கள் மூலம் தமிழ் வாக்குகளைப் பெற முடியுமா என்பது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரியவரும். https://ibctamil.com/article/night-club-for-karuna-liquor-licenses-for-tna-1726035309#google_vignette
  5. மொஸ்கோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்! ரஷ்யாவில் குடியிருப்புகள் மீதுடிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்சேதம் பொருள் சேதங்கள் ஏற்படுள்ளன. உலக நாடுகள் பலவும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் பிற எட்டு பகுதிகளின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. மாஸ்கோ நகரில் உள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில், 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், 12 பேர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆளில்லா விமானங்கள் உட்பட 124 ட்ரோன்கள் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் காரணமாக இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாக்குதலை தொடர்ந்து குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் அவசர, அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக மாஸ்கோ ஆளுநர் ஆண்டிரி வோரோப்யோவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ரஷ்யப் பகுதிகளில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாகும். உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலால் மாஸ்கோ நகரில் விமானசேவைகள் பாதிக்கப்பட்டன. மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாஸ்கோ நகர் வான்வெளியில் குறைந்த அளவிலான விமானங்களே காணப்பட்டது செயலிமூலம் தெரியவந்துள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309216
  6. தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தழிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாலுக்கு உட்பட்டு வருகின்றது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகிற்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்து விடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவ் அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது. நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறைபோட்டு சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று; பெற்று சகித்து வாழுவோம் என்ற என்ற மனநிலையில் இனத்தினை அடமானம் வைக்கின்றனர். நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது. சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப்பிழைப்பதில் முன்டியடிக்கின்றனர். மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில், எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும் எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான வேலைத்திட்டம் கிடையாது. சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய் நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிபாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும். தமிழ் மக்களைப் பொருத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றும் உள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309238
  7. 11 SEP, 2024 | 11:53 AM சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இருவரும் அரசியல் நோக்கங்களிற்காக கொலை செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். குருநாகலில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வாசிம் தாஜூதீன் படுகொலை விசாரணைகளை அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்கள் தடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் அந்த கொலை குறித்து உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவ்வேளை ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லைஎன அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193388
  8. 11 SEP, 2024 | 02:22 PM நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர். அத்துடன் நுவரெலியா வளையக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக்காத காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று புதன்கிழமை (11) குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பாடசாலையின் அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு மாணவர்களை பிரம்பால் தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் குறித்த அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் , தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கமாறும் கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறிப்பிட்ட அதிபரை இடமாற்றம் செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையால் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பாடசாலையில் இருந்து குறித்த அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/193404
  9. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்க முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களும் இலங்கை 263 ஓட்டங்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில், இங்கிலாந்துக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த பதும் நிசங்க ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்ச 1,135 ஓட்டங்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். பதும் நிசங்க – 1,135 ஓட்டங்கள் ( 25 இன்னிங்ஸ்) கமிந்து மெண்டிஸ் – 1,111 ஓட்டங்கள் (36 இன்னிங்ஸ்) ஜெய்ஸ்வால் – 1,033 ஓட்டங்கள் ( 19 இன்னிங்ஸ்) ரோஹித் சர்மா – 990 ஓட்டங்கள் ( 25 இன்னிங்ஸ்) ஜோ ரூட் – 986 ஓட்டங்கள் (20 இன்னிங்ஸ்) https://thinakkural.lk/article/309246
  10. 11 SEP, 2024 | 10:16 AM புதுக்குடியிருப்பு கைவேலி பாடசாலையில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி 4 மின் விசிறிகள் திருடப்பட்டுள்ளது. அதனையடுத்து பாடசாலை சமூகத்தினரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பாடசாலை மின்விசிறிகளை களவாடிய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இருநபர்களுக்கு தலா 3000 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து மின்விசிறிகளை வாங்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று (11) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். களவாடிய குறித்த சந்தேகநபர் பொருட்களை விற்று அதிலிருக்கும் பணத்தினை போதை பொருளுக்கு பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/193375
  11. "கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது" - நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பும் கமலா ஹாரிசும் 11 செப்டெம்பர் 2024, 01:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் இந்த விவாதத்தை நடத்தியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது. நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிக்கப் போகும் மக்கள் மனதில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த விவாதம் உலகம் முழுவதுமே உற்றுநோக்கப்பட்டது. ரஷ்யா - யுக்ரேன் போரை நிறுத்த டிரம்ப் விருப்பம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, "போரை நிறுத்த நான் விரும்புகிறேன்" என்று டிரம்ப் பதிலளித்தார். ரஷ்யப் படையெடுப்பை சமாளிக்க யுக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா அதிகம் செலவிடுவதாக குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா மிகக் குறைந்த அளவே நிதி அளிப்பதாக கூறினார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரையும் எனக்கு நன்றாக தெரியும் என்று அவர் குறிப்பிட்டார். "கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது" - டிரம்ப் காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கமலா ஹாரிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போரை எப்படி அவர் கையாள்வார் எனவும், எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் எனவும் கேட்கப்பட்டது. இதுகுறித்து பிரசாரத்தில் தான் முன்பு கூறிய கருத்துகளை மீண்டும் கூறிய ஹாரிஸ், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை அந்நாடு எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். “இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்,” எனவும் அவர் கூறினார். “உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.” என்று அவர் உறுதிபடக் கூறினார். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஹாரிஸ், காஸாவை மறுகட்டமைக்கவும், இருநாடுகள் தீர்வையும் வலியுறுத்தினார். காஸா போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றும் ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்களை எப்படி மீட்பார் என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தான் அதிபராக இருந்திருந்தால், இந்த போரே “தொடங்கியிருக்காது” என அவர் கூறினார். “அவர் (கமலா ஹாரிஸ்) இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என்று கருதுகிறேன்,” என்றார் அவர். தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷ்யா - யுக்ரேன் போரும் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் கமலா ஹாரிஸ், டிரம்பின் கூற்றை மறுத்தார். “டிரம்ப் பிளவுபடுத்த முயல்வதாகவும் உண்மையிலிருந்து திசை திருப்புவதாகவும்” ஹாரிஸ் கூறினார். “அவர் சர்வாதிகாரிகளை போற்றுபவர் என்பதும் அவர் சர்வாதிகாரியாக விரும்புவதும் நன்றாகவே தெரியும்” என கமலா ஹாரிஸ் கூறினார். ராணுவ தலைவர்கள் டிரம்ப் “அவமானகரமானவர்” என கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வரிவிதிப்பு - கமலா குற்றச்சாட்டும் டிரம்ப் பதிலும் விவாத மேடைக்கு வந்ததுமே கமலா ஹாரிசும், டிரம்பும் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் விவாதம் தொடங்கியது. முதல் கேள்வி பொருளாதாரத்தில் இருந்து கேட்கப்பட்டது. அதாவது, அமெரிக்கர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது நன்றாக இருப்பதாக கருதுகிறார்களா? என்பது கேள்வி. முதலில் பதிலளித்த கமலா ஹாரிஸ், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புவதாக கூறினார். இளம் தம்பதியரின் குடும்பத்திற்கும், அதிகரித்து வரும் வீட்டு விலை மற்றும் வாடகை பிரச்னையைத் தீர்க்கவும் அவர் உறுதியளித்தார். பின்னர் டிரம்ப் மீதான தாக்குதலைத் தொடுத்த கமலா, டிரம்ப் முன்பு அதிபராக இருந்த போது கோடீஸ்வரர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் வரிச் சலுகை அளித்ததைப் போலவே அடுத்தும் தொடர விரும்புவதாக கூறினார். டிரம்ப் அதிபரானால், அமெரிக்கர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் 'டிரம்ப் விற்பனை வரியை' செலுத்த வேண்டியிருக்கும் என்றார் கமலா ஹாரிஸ் . கமலாவுக்கு பதிலளித்த டிரம்ப், மற்ற நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப் போவதாக கூறினார். "உலகிற்கு இதற்கு முன்பு நாம் செய்ததற்கு அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று அவர் கூறினார். சீனாவைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், அந்த நாட்டில் தயாராகும் பொருட்கள் மீது தனது ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகளால் தற்போதும் கூட அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக கூறினார். டிரம்பின் பொருளாதார கொள்கை மீது கமலா ஹாரிஸ் சாடல் அமெரிக்காவுக்கு நெருக்கடியான கால கட்டமான பொருளாதார பெருமந்தத்திற்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் டிரம்ப் ஆட்சியை விட்டுச் செல்லும் போது நிலவியதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். டிரம்ப் ஏற்படுத்திய பிரச்னைகளை பைடன் அரசே சரி செய்ததாக அவர் கூறினார். டிரம்ப் முன்வைக்கும் பொருளாதார கொள்கைகளை கமலா ஹாரிஸ் சாடினார். டிரம்ப் செய்யப் போவதாக வாக்குறுதியளிக்கும் திட்டங்களை நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார நிபுணர்கள் விமர்சித்ததை அவர் சுட்டிக்காட்டினார். டிரம்ப் கூறுவதை அமல்படுத்தினால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று அவர் அச்சம் தெரிவித்தார். "மக்களுக்கான திட்டங்கள் ஏதும் டிரம்பிடம் இல்லை. ஏனெனில், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் தன்னை தற்காத்துக் கொள்வதிலேயே டிரம்ப் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்" என்று கமலா விமர்சித்தார். பட மூலாதாரம்,BERND DEBUSMANN JR/BBC NEWS டிரம்ப் பதில் "எனது ஆட்சியில் பணவீக்கம் உச்சத்தில் இருந்ததாக கமலா ஹாரிஸ் கூறுவத தவறு" என்று டிரம்ப் கூறினார். பைடன் ஆட்சியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலுமே விலைவாசி உயர்வு பெரும் பிரச்னையாக இருந்தது. அமெரிக்க வரலாற்றில் அதற்கு முன்பு 1981-ம் ஆண்டுதான் பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உச்சம் தொட்ட பணவீக்கம் பின்னர் படிப்படியாக குறைந்து இந்தாண்டு மே மாதத்தில் 3.3 சதவீதத்தை எட்டியது. ஆனாலும், விலைவாசி உயர்வு என்பது கணிசமான வாக்காளர்களின் மனதில் உள்ள பிரச்னைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் கருக்கலைப்பு - கமலா, டிரம்ப் கருத்து என்ன? பின்னர், அமெரிக்காவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக பார்க்கப்படும் கருக்கலைப்பு உரிமை பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. கருக்கலைப்பு உரிமை குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், 9-வது மாதத்தில் கூட கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனநாயக் கட்சி விரும்புவதாக விமர்சித்தார். ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு அதீதமான ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸின் தேர்வான டிம் வால்ஸ் 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பு செய்ய ஆதரவாக இருப்பதாக கூறினார். கருக்கலைப்பைப் பொருத்தவரை, பாலியல் குற்றங்கள் போன்ற சில விதிவிலக்குகள் தவிர்த்த மற்ற தருணங்களில் மாகாணங்களில் முடிவுக்கே விட்டுவிட உதவியதாக டிரம்ப் தெரிவித்தார். சில மாகாணங்களில் குழந்தை பிறந்த பிறகு கொன்றுவிட அனுமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், "அமெரிக்காவின் எந்தவொரு மாகாணத்திலும் பிறந்த குழந்தையை கொல்ல சட்டம் அனுமதிக்கவில்லை" என்றார். கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES விவாதத்தின் விதிகள் என்ன? 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடக்கும் இரண்டாவது விவாதம் இதுவாகும். முதல் விவாதம் ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடனுக்கு இடையே நடைபெற்றது. அதன் பின்னர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்தார். இந்த விவாதத்தில் நேர வரம்புகள் கடுமையாகப் பின்பற்றப்படும். மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதன் பின்னர் எதிர் வேட்பாளரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும். ஒரு வேட்பாளர் பேசும்போது மற்றொரு வேட்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்து வைக்கப்படும். மேலும் விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள். கமலா ஹாரிஸ் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படக் கூடாது என்று விரும்பினார், ஆனால் சமீபத்தில் விவாத விதிகளுக்கு ஒப்புக் கொண்டார். இந்தக் குறிப்பிட்ட விதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான முதல் விவாதம் பல்வேறு குறுக்கீடுகள் மற்றும் வாக்குவாதங்களால் நிறைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இது கொண்டு வரப்பட்டது. இந்த விவாதம் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகிய இரண்டு மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இருவரும் ஏபிசி ஊடகத்தின் செய்தியாளர்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy4y9j7w7v9o
  12. Published By: VISHNU 11 SEP, 2024 | 02:15 AM வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலுடன் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை (10) மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில் புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரயில் பாதையில் நடந்து சென்ற பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தார். உயிரிழந்தவர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193364
  13. போலிகள் கல்லா கட்டும் மண் பள்ளியில் தத்துவக் கல்வி இல்லாததன் போதாமையையே ஜக்கி, நித்தி, இப்போது மகாவிஷ்ணுவைப் போன்ற மோசடிக்காரர்கள் நிரப்புகிறார்கள். தத்துவம் என்பது ஆன்மீகம் அல்ல. பக்தி யுகத்திலும் பின்னர் கண்ணதாசன் பாடல்களாலும் அப்படி ஒரு மயக்கம் இங்கு ஏற்பட்டிருக்கிறது. தத்துவக் கல்வியானது வாழ்க்கை நெறிக்கல்வியோ யோகா பயிற்சியோ அல்ல. தத்துவம் என்பது தர்க்கம், அறம், உளவியல், பிரக்ஞையியல், தோற்றப்பாட்டியல் என பல விசயங்களை போதிப்பது. அது நம் மாணவர்களை புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்த்தும். வாழ்வின் சாராம்சம் என்ன, பொருள் என்ன, நோக்கம், இலக்கு என்ன, சுயம், மனம், உடல் என்றால் என்ன ஆகிய கேள்விகளை புறவயமாக ஆராய தத்துவக் கல்வி உதவும். தத்துவம் பயிலாமல் நேரடியாக மாணவர்கள் அறிவியலுக்கும் தொழில்நுட்பக் கல்விக்கும் போகும்போது ஒரு பெரும் வெற்றிடத்தை அகத்தே உணர்வார்கள். அதை அவர்கள் போதைப் பழக்கம், உடலீர்ப்பின் மயக்கம், பொழுதுபோக்கு மயக்கத்தின் பாற்பட்டு நிரப்ப முயல்வார்கள். அப்போதும் நுட்பமானவர்களுக்கு போதாமை தென்படும். அவர்கள் கள்ள சாமியார்களிடம் சிக்குவார்கள். அடிமையாகி அழிவார்கள். ஆனால் தத்துவப் பயிற்சி தரும் சிந்தனைத் தெளிவும் மொழிக்கூர்மையும் மகத்தானது, ஒப்பற்றது. இந்தியா முழுக்க எந்த பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவர்களுக்கு இப்பயிற்சி தரப்படுவதில்லை. அதை பயன்படுத்தித் தான் ஜக்கி மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் ஆந்திராவில் இருந்தும் காஞ்சியில் இருந்தும் மகத்தான தத்துவவாதிகள் நளந்தாவுக்கு சென்று வாயிலில் காற்று நிற்கும் தத்துவவாதி காவலர்களை வாதில் வென்று உள்நுழைந்து பயின்று பெரும் பௌத்த மெய்யியலாளர்களாகி உலகையே வெல்லும் தத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாகார்ஜுனர் ஒரு உதாரணம். திக்நாகர், தம்மபாலர் வேறு சில முக்கிய மெய்யியலாளர்கள். பௌத்த ontologistகளின் சாயலில் தோன்றிய ஹுசர்ல், ஷோப்பன்ஹெர், நீட்சே, ஹைடெக்கர் போன்றோரை உலகமே இன்று படிக்கிறது. ஆனால் நாம் மகாவிஷ்ணு போன்றோர் உளறுவதை கேட்டுக்கொண்டு குழப்பமாக வீற்றிருக்கிறோம். ஊழ் என ஒன்று உண்டா என்பதற்கே நம்மால் தர்க்கரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதை சரியாக பொருள்படுத்தி வாயை அடைக்க முடியவில்லை. வெறும் தொழில்கல்வியில் மட்டும் கவனம் செலுத்தியதன் விளைவே இது. முன்பு தத்துவம் பொன்போல விளைந்த மண் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. இப்போது கோமாளிகள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். பெரும் அதிகாரமும் பணமும் படைத்த போலிகள் மெய்யியல் முகமூடி அணிந்து கல்லா கட்டுகிறார்கள். Posted 19 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post_9.html
  14. Published By: DIGITAL DESK 7 09 SEP, 2024 | 09:22 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ' மத்திய செயற்குழு ' அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர். சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான அரசியல் கட்சிகள் மத்தியில் தமிழரசு கட்சியே ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக இறுதியாக அறிவித்த கட்சியாகும். மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளாகும். எனவே பிரேமதாசவுக்கு முக்கியமான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்பது தெளிவானது. ஜனாதிபதி தேர்தல் அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெருமளவு வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தனதாக்கிக்கொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர் சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசமானவர் என்ற நற்பெயரை நீண்டகாலமாகக் கொண்டிருப்பவர் என்பதும் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவை அனுபவித்தவர் என்பதுமே அதற்கு காரணமாகும். மேலும், அவரின் தலைமையிலான அரசாங்கங்களில் சில சிறுபான்மைச் சமூகக்கட்சிகள் பங்காளிகளாக இருந்தன. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் வெளியேறிய செல்வாக்குமிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறார்கள். சஜித் பிரேமதாச முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் 2020 பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டன. அவை தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்துவந்தன. ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டபோது இந்த கட்சிகள் ரணிலின் பக்கத்துக்கு வந்துவிடும் என்று பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால் சிறுபான்மைச் சமூகங்களின் பெருமளவு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரணில் முகாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தது. சிறுபான்மைச் சமூகங்களின் கட்சிகள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நடைமுறையில் சாத்தியமாகவில்லை. முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் அணி மாறுவதற்கு பதிலாக சஜித் பிரேமதாசவுடன் பக்கத்திலேயே தொடர்ந்தும் இருந்தன. இந்த கட்சிகள் பிரேமதாசவுடன் தனித்தனியாக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டன. இப்போது தமிழரசு கட்சியும் அவருடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளாமலேயே அவருக்கு அதன் ஆதரவை அறிவித்திருக்கிறது. எனவே பிரேமதாச இந்த கட்சிகளின் உதவியுடன் தமிழ்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளின் மிகவும் பெரும்படியான வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்று தோன்றுகிறது. ஆனால், இந்த சிறுபான்மைச் சமூக அரசியல் கட்சிகளின் ஆதரவின் விளைவாக தமிழர்களினதும் முஸ்லாம்களினதும் வாக்குகள் மீது பிரேமதாச ஒரு ஏகபோகத்தைக் கொண்டிருப்பார் என்று அர்த்தமாகிவிடாது. கடந்த காலத்தில் செய்தததைப் போன்று இந்த கட்சிகளினால் தங்களது மக்களின் வாக்குகளை தாங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளருக்கு மொத்தமாக பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பது நிச்சயமில்லை. தமிழ், முஸ்லிம் வாக்காளர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினருக்கு உறுதியான சொந்த அபிப்பிராயங்கள் இருக்கி்றன என்பதையும் அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் என்பதையும் தெளிவான குறிகாட்டிகள் மூலம் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. கட்சிகளின் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின் போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கும் நேர்மறையான படிமம் அவருக்கு சார்பாக வாக்காளர்கள் மீது செல்வாக்கைச் செலுத்தும் சாத்தியம் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கென்று சொந்த ஆதரவுத்தளம் ஒன்றும் இருக்கிறது. செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஏ.எச்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியவை விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு புறம்பாக தனிப்பட்ட சில தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரை ஆதரிக்கிறார்கள். இந்த கட்சிகளின் ஆதரவுக்கு மத்தியிலும், சிறுபானமைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலாக சஜித் பிரேமதாச அனுகூலத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஜனாதிபதியை ஆதரிக்கின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் விட பிரேமதாசவை ஆதரிக்கும் அந்த சமூகங்களின் கட்சிகள் பெரியவை என்பதே அதற்கு காரணமாகும். இருந்தாலும், இந்த கட்சிகள் வழங்கும் ஆதரவு ஒன்றும் ஒரே சீராக கெட்டியானவை அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட செல்வாக்குமிக்க சில உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளின் ஆணைக்கு பணியமறுத்து விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை அறிவித்திருக்கிற்ர்கள். அநுரா குமார திசாநாயக்க இத்தகைய பின்புலத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய அரசியல் அணியாக ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இருக்கிறது.ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அதன் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரா குமார திசாநாயக்காவுக்கு சிறுபான்மை இனத்துவ கட்சிகளின் ஆதரவை நேரடியாக நாடவில்லை. பதிலாக அது தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் நேரடியாக நேசக்கரத்தை நீட்டி ஆதரவைக் கோருகிறது. தமிழ், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்து உறுப்பினர்களைச் சேர்த்திருக்கும் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கிழக்கில் காத்தான்குடி உட்பட தமிழர்கள், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட பகுதிகளில் அதன் கட்சி அலுவலகங்களையும் திறந்திருக்கிறது. சஜித் அல்லது ரணில் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட அநுரா குமார திசாநாயக்கவும் குறிப்பிடக்கூடிய அளவு தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறுவார் என்றே தோன்றுகிறது. இத்தகைய பின்புலத்தில் வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய பாங்கு ( Potential voting pattern ) குறித்து கவனத்தை செலுத்துகிறது. குறிப்பாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள் பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வழங்கும் ஆதரவு மீது கட்டுரை பிரத்தியேக கவனத்தை செலுத்துகிறது. தமிழ் வாக்காளர்களைப் பற்றியும் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எவ்வாறு வாக்களிக்கக்கூடும் என்பதை விளக்குவதே நோக்கம். தமிழர்களின் வாக்குகளில் பெருமளவானவற்றை சஜித் பிரேமதாச பெறுவாரா என்பதே கேள்வி. மலையக தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என்று அறியப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் மூன்று இனத்துவச் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியிலும் சிறிய சனத்தொகையைக் கொண்டவர்கள்( 4.1சதவீதம் ) என்பதுடன் இலங்கையில் நான்காவது பெரிய இனக்குழுவினர். நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழும் அவர்கள் பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் சற்று பெரும்படியான அளவில் வசிக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களின் மிகப்பெரிய தொழிற் சங்கமாகவும் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகிறது.2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்துவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமானும் மருதுபாண்டி இராமேஸ்வரனும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டனர். காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். அதன் தலைவரான செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கிறார். தோட்டத் தொழிலாளர்களின் தினச்சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்தமை, முறையான வீடுகளுடன் கூடிய சமூகக் குடியிருப்புக்களை அமைப்பதற்கான திட்டத்தின் முன்னே்டியாக லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு அவற்றை உடைமையாக்கியமை, ' அஸ்வேசும ' வறுமை நிவாரணக் கொடுப்பைவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் விஸ்தரித்தமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக அண்மைக்காலத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுவில் மலையகத் தமிழர்களுடனும் குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனும் தனனை நேசமானவராக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் அவரை உறுதியாக ஆதரிக்கிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக தமிழ் மக்களின் முக்கியமான கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகின்ற போதிலும், பாராளுமன்ற ஆசனங்களைப் பொறுத்தவரை அது ஏகபோகத்தைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், தமிழ் முற்போக்கு கூட்டணியே பாராளுமன்றத்தில் பெரிய எண்ணிக்கையில் மலையக தமிழ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வி. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றை அங்கத்துவக் கட்சிகளாகக் கொண்டதே தமிழ் முற்போக்கு கூட்டணி. அதன் தலைவராக மனோ கணேசன் இருக்கின்ற அதேவேளை இணைச் செயலாளர்களாக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் உள்ளனர். 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் போட்டிரடடுைஆறு ஆசனங்களைக் கைப்பற்றியது. நுவரெலியாவில் இருந்து மூவரும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் தெரிவாகினர். பதுளையில் இருந்து தெரிவான உறுப்பினர் அரவிந்தகுமார் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அவர் இப்போது ஒரு இராஜாங்க அமைச்சர். தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியில் தொடர்ந்து இருந்து வருகின்றது என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அணைப்புக்குள் அதற்குள் அதிருப்தியின் குமுறல்களும் வெறுப்புணர்வான் முணுமுணுப்புகளும் இருந்தன. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பக்கத்தில் இருந்து ரணில் பக்கத்துக்கு மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாக பரவலாக ஊகங்கள் கிளம்பின. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது நுவரேலியா, இரண்டாவது கொழும்பு. நுவரேலியாவில் தேர்தல்களின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்கம் - மலையக மக்கள் முன்னணி கூட்டும் எதிரெதிராகவே போட்டியிடுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் இரு தரப்புமே இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக, 2020 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இரு ஆசனங்களும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ( தொழிலாளர் தேசிய சங்கம் - மலையக மக்கள் முன்னணி கூட்டு ) மூன்று ஆசனங்களும் கிடைத்தன. எதிரெதிராக போட்டியிடுவதன் மூலம் மாத்திரமே இரு தரப்பினரும் கூடுதல்பட்ச ஆசனங்களை பெறக்கூடியதாக இருக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் கூட்டாக ரணிலை ஆதரித்தால், அவர்கள் பாராளுமன்ற தேர்தலிலும் இணைந்தே போட்டியிடவேண்டியிருக்கும். அத்தகைய ஒரு சூழ்நிலை இரு தரப்பினருக்கும் குறைந்தளவு ஆசனங்களே கிடைப்பதற்கு வழிவகுக்கும். தவிரவும், நன்றாக நிறுவனமயமாக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இழப்பில் கூடுதல் ஆசனங்கள் பெறுவதை உறுதிசெய்யக்கூடியதாகவும் இருக்கும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த கணிப்பீடே ரணில் பக்கத்துக்கு மாறுவதை விடவும் சஜித்துடன் தொடர்ந்து இருப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியை நிர்ப்பந்தித்தது. மனோ கணேசன் இதே காரணம் கொழும்பில் மனோ கணேசனுக்கும் பொருந்துகிறது. கொழும்பு மாவட்டத்தில் மிகவும் பெரிய அளவில் வாக்குகளைக் கைப்பற்றி பல பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கான தகுதியைக் கொண்ட ஒரு கட்சியில் இருந்து அல்லது கூட்டணியில் இருந்தே போட்டியிட வேண்டிய தேவை மனோ கணேசனுக்கு இருக்கிறது. அவ்வாறு செய்தால்தான் தமிழ் வாக்குகளில் மாத்திரம் தங்கியிருக்கும் மனோ கணேசன் ஒப்பீட்டளவில் குறைந்தளவு விருப்பு வாக்குகளைபை் பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வாகக்கூடியதாக இருக்கும். கடந்த காலத்தில் மனோ ஐக்கிய தேசிய கட்சியுடன் அணிசேர்ந்து நின்றார். ஆனால்,2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் குறைந்தளவு வாக்குகளையே பெறப்போகின்றது என்பதை உணர்ந்த அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கத்துக்கு சென்றார். அவவாறு செய்ததன் மூலம் கொழும்பில் அவர் வெற்றிபெற்றார். எனவே கொழும்பு மாவட்டம் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்ற அபிப்பிராயம் மனோ கணேசனுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இருக்கின்றது போன்று தெரிகிறது. கொழும்பு மாவட்டத்தில் சஜித்தும் அநுரா குமாரவும் கூடுதல் எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதனால் பொதுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் குறிப்பாக மனோ கணேசனும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்கவும் பிறகு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி / ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடவும் விரும்பியிருக்கிறார்கள். 56 அம்ச சாசனம் ஒன்றில் சஜித்துடன் கைச்சாத்திட்ட அவர்கள் அவரை ஆதரிக்க உறுதியளித்திருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க சஜித்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வழங்கும் ஆதரவு எதிர்மறையான விளைவையும் கொண்டிருந்தது. அதன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகத் திரும்பி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டு அவரை ஆதரிக்கிறார். 2020 ஆம் ஆண்டில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ் முறாபோக்கு கூட்டணியில் இப்போது நான்கு உறுப்பினர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் இலங்கை தேசிய தோடடத் தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்குமிக்க செயலாளர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேலின் ஆதரவின் வடிவில் ரணிலுக்கு ஒரு ஊக்கம் கிடைத்தது.2020 ஆம் ஆண்டில் ரணிலைக் கைவிட்டு சஜத்துடன் இணைந்துகொண்ட சுரேஷ் பிறகு அவருடனும் முரண்பட்டுக்கொண்டார். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வந்த அவர் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனால் மலையக தமிழ் வாக்காளர்களைப பொறுத்தவரை ரணில் ஒரு வலிமையான நிலையில் இருப்பதாக தோன்றியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவும் அரவிந்தகுமார், வேலு குமார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. சஜித்தை விடவும் கூடுதலான இந்திய தமிழர்களின் வாக்குகளை ரணில் பெறுவது மிகவும சாத்தியம். இலங்கைத் தமிழர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இனத்தவர்களாக ( 11.1 சதவீதம் ) இருப்பதுடன் மூன்று சிறுபான்மை இனத்தவர்களில் அவர்களே பெரிய சனத்தொகையைக் கொண்டவர்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களே பெரும்பான்மை இனத்தவர்கள். திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய இனத்தவர்களாகவும் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெரிய இனத்தவர்களாகவும் அவர்கள் விளங்குகிறார்கள்.கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவர்கள் கணிசமான ஒரு சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அண்மைக்காலம் வரை இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டயைப்பே இருந்தது. 2020 பாராளுமன்ற தேர்தலில் அதற்கு பத்து ஆசனங்கள் கிடைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்து அதன் மூன்று அங்கத்துவ கட்சிகளில் ரெலோவும் புளொட்டும் இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற புதிய அணியை அமைத்திருக்கின்றன. கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசு கட்சி இப்போது தனியாக செயற்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழரசு கட்சிக்கு ஆறு பேரும் ரெலோவுக்கு மூன்று பேரும் புளொட்டுக்கு ஒருவரும் இருந்தனர். தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஐந்து அங்கத்துவ கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று அழைக்கப்படும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றன. 69 வயதான அரியநேத்திரன் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் தமிழரசு கட்சியில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார். அரியநேத்திரனை ஏழு தமிழ்க்கட்சிகள் ஆதரிக்கின்ற போதிலும், இவற்றில் எத்தனை கட்சிகள் அந்த ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகின்றன என்பது சந்தேகம் நிலவுகிறது. சில கட்சிகள் இரகசியமாக ரணிலை ஆதரிக்கின்றன என்று சந்தேகிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் அப்போது ஐக்கியமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை அல்ல அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்தது. இருந்தாலும், பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மாத்திரமே டலஸுக்கு தங்கள் வாக்குகளை அளித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அந்த நேரத்தில் தெரிவித்தன. எஞ்சியவர்கள் ஒன்றில் ரணிலுக்கு வாக்களித்தார்கள் அல்லது தங்கள் வாக்குகளை பழுதாக்கினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணிலே பகிடியாக கூறினார். தமிழரசு கட்சி அதேவேளை, பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்கள் தனியொரு பெரிய கட்சியாக விளங்கும் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு அதன் ஆதரவை அறிவித்திருக்கிறது. இது சஜித்துக்கு மனத் தைரியத்தை கொடுத்திருக்கின்ற அதேவேளை ரணிலுக்கு பெரிய தாக்கமாகப் போய்விட்டது ஆனால் தமிழரசு கட்சி இப்போது இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. ஒரு முகாம் சிவஞானம் சிறீதரனை ஆதரிக்கின்ற அதேவேளை அடுத்த முகாம் மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரனை ஆதரிக்கிறது. மேலும் தமிழரசு கட்சி தற்போது ஒரு சட்டச்சிக்கலிலும் அகப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு திர்மானித்திருக்கிறது. தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான அரியநேத்திரனை ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறும் மத்திய செயற்குழு கேட்டிருக்கிறது. அந்த குழு தீர்மானத்தை நிறைவேற்றிய போதிலும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ப உறுப்பினர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழரசு கட்சிக்குள் செல்வாக்குமிக்க ஒரு பிரிவினர் பிரேமதாசவுக்கு மேலாக அரியநேத்திரனை ஆதரிப்பார்கள் என்று தோன்றுகிறது. கடந்த வாரம் இந்த பத்தியில் குறிப்பிட்டதைப் போன்று பாரதூரமாக பிளவுபட்டிருக்கும் தமிழரசு கட்சி நிரந்தரமான ஒரு உடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழரசு கட்சியின் உள்ளக நெருக்கடி பிரேமதாசவையும் கடுமையாக பாதிக்கும். அவரை அந்த கட்சி ஐக்கியமாகவும் உற்சாகமாகவும் ஆதரிக்க இயலாமல் போகும். மேலும் கட்சிக்குள் இருக்கும் அரியநேத்திரன் ஆதரவுச்சக்திகள் பிரேமதாசவை தீவிரமாக எதிர்க்கும். அரியநேத்திரனுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டங்கள் தமிழரசு கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஏற்கெனவே கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றிருக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வழிகாட்டல்களை பின்பற்றிவந்திருக்கிறார்கள் என்று தமிழரசு கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அடிக்கடி கூறிவந்திருக்கிறார். அதற்கு சான்றாக 2010 தேர்தலில் சரத் பொன்சேகாவையும் 2015 தேர்தலில் மைத்திரபால சிறிசேனவையும் 2019 தேர்தலில் சஜித் பிரேமதாசவையும் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். தமிழரசு கட்சியின் அழைப்புக்கு சாதகமான முறையில் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் செப்டெம்பர் 21 ஆம் திகதி பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். தமிழரசு கட்சி ஒரு சிங்கள வேட்பாளருக்கு மேலாக இன்னொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கேட்பதற்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஒருவருக்கு மேலாக ஒரு சிங்களக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் மனதிற் கொள்ளவேண்டும். சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த தீர்மானம் ரணிலுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. தமிழரசு கட்சி சஜித்தை ஆதரிக்கின்ற அதேவேளை ஏனைய ஏழு தமிழ் கட்சிகள் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலையில் ரணிலின் நிலை சற்று பரிதாபத்துக்குரியதே. டக்ளஸும் பிள்ளையானும் ரணிலைப் பொறுத்தவரை, தனது சொந்த ஐக்கிய தேசிய கட்சியை தவிர தமிழ் கட்சிகளின் ஆதரவு என்று வரும்போது தற்போது நிச்சயமாக இருப்பது அவரது அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினதும் ஆதரவேயாகும். தேவானந்தா அமைச்சரவை அமைச்சராகவும் பிள்ளையான் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கிறார்கள். தேவனந்தாவின் கட்சி இரு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகள் பிளளையானுக்கே கிடைத்தன. தேவானந்தாவுக்கு வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஆனால் நிலையான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து 2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தற்போது ஒரு இராஜாங்க அமைச்சர். அவரும் ரணிலையே ஆதரிக்கிறார். 2020 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களில் வெற்றிபெற்ற ஒரேயொருவரான அங்கஜன் இராமநாதனும் ரணிலை ஆதரிக்கிறார். 2020 தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகள் அங்கஜனுக்கே கிடைத்தன. ரணில் முகாமின் நம்பிக்கை ரணிலுக்கான தமிழ்க்கட்சி ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் இலங்கை தமிழர்கள் தேர்தல் தினத்தன்று ரணிலுக்கு மிகவும் ஆதரவாக நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை அவரது முகாமுக்கு இருக்கிறது. தமிழ்க்கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டாலும் ரணில் தமிழ் மக்களின் ஆதரவை நேரடியாகப் பெற்று வாக்குகளைப் பெறமுடியும் என்று அந்த முகாம் கருதுகிறது. வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியில் ரணிலுக்கு இருக்கிற நேர்மறையான படிமத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்த நகர்வு வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் எனலாம். https://www.virakesari.lk/article/193187
  15. அமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் 7 மாகாணங்களில் முந்துவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தேர்தலில் இந்த ஆண்டு வாக்களிக்க சுமார் 24 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட சில மாகாணங்களை சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையே உண்மையிலேயே கடுமையான போட்டி நிலவுவது ஒரு சில மாகாணங்களில் மட்டுமே என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதில் ஏழு மாகாணங்கள் - அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை வெள்ளை மாளிகை யாருக்கு என்பதை தீர்மானிக்கும். தேர்தல் நெருங்கி வருவதால், இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாகாணங்களில் பிரசாரங்களை வேகப் படுத்தியுள்ளன. அரிசோனா 1990களுக்குப் பிறகு முதன் முறையாக இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியையும் கைப்பற்றியது. இந்த மாகாணம் மெக்சிகோவுடன் நூற்றுக்கணக்கான மைல் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டின் குடியேற்ற கொள்கைகள் தொடர்பான விவாதத்தின் மையப் புள்ளியாக இந்த மாகாணம் மாறியுள்ளது. சமீபத்திய மாதங்களில் இங்கு எல்லை தாண்டி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எல்லையில் நிலவும் சிக்கலான பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் கமலா ஹாரிஸை அதிபர் ஜோ பைடன் நியமித்தார். குடியேற்ற கொள்கை தொடர்பான கமலா ஹாரிஸின் கருத்துக்களை டிரம்ப் அடிக்கடி விமர்சித்து வருகிறார். அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் "மிகப்பெரிய அளவிலான வெளியேற்றும் நடவடிக்கையை" மேற்கொள்ளப் போவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார். அரிசோனாவில் கருக்கலைப்பு தொடர்பான ஒரு சர்ச்சையும் நிலவுகிறது. இந்த மாகாணத்தில் குடியரசுக் கட்சியினர் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு பழமையான, கருக்கலைப்பு தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயன்றனர். ஆனால் முடியவில்லை. பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டில் ரத்து செய்ததில் இருந்து இந்த பிரச்னை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஜார்ஜியா பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜார்ஜியாவில் ஒரு வழக்கு உட்பட டிரம்ப் நான்கு கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார் 2020 தேர்தலில் ஜார்ஜியாவின் ஃபுல்டன் கவுண்டியில், தேர்தல் நடைமுறையில் குறுக்கீடு செய்ததாக டிரம்ப் மீது வழக்கி பதிவானது. அவர் எதிர்கொள்ளும் 4 குற்றவியல் வழக்குகளில் இதுவும் ஒன்று. டிரம்ப் ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார், மீதமுள்ள வழக்குகள் நடந்து வருகின்றன. டிரம்பும் மற்ற 18 பேரும் மாகாணத்தில் பைடன் வெற்றியை முறியடிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுக்கிறார். இந்த வழக்கு தேர்தலுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை. ஜார்ஜியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இது நாட்டின் மிகப்பெரிய கறுப்பினத்தவர் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டில் பைடன் பெற்ற வெற்றியில் இந்த மாகாணம் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. அமெரிக்காவின் கறுப்பின வாக்காளர்களிடையே பைடன் மீதான சில ஏமாற்றங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் கமலா ஹாரிஸின் பிரசாரக் குழு இவர்களின் ஆதரவை உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறது. மிச்சிகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய கிழக்கு விவகாரத்தில் அதிபரின் கொள்கைகள் தொடர்பாக மிச்சிகனில் பின்னடைவை எதிர்கொண்டார் கிரேட் லேக்ஸ் மாகாணம் கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளருக்கு தான் அதிக வாக்குகள் அளித்திருந்தது. 2020 இல் பைடனை ஆதரித்த போதிலும், காஸாவில் இஸ்ரேலை அவர் ஆதரித்ததால் இங்கு அதிருப்தி நிலவியது. பிப்ரவரியில் மிச்சிகனின் ஜனநாயகக் கட்சியின் முதன்மைப் போட்டியின் போது, 100,000க்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டில் "உறுதியற்ற" (uncommitted) என்ற முடிவை தேர்ந்தெடுத்தனர். இது அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. மிச்சிகன் குறிப்பிடத்தக்க வகையில் நாட்டின் மிகப்பெரிய அரபு-அமெரிக்கர்களைக் கொண்டுள்ளது. இது பைடனுக்கு ஆதரவு கொடுப்பதில் சிக்கலை கொண்டுள்ளது. ஆனால் கமலா ஹாரிஸ் இஸ்ரேல் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். டிரம்ப் இந்த மாகாணத்தினருக்கு ஏற்றவாறு முக்கியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மத்திய கிழக்கின் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், காஸாவில் உள்ள ஹமாஸ் மீதான தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நெவாடா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நெவாடா கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தது. கடந்த பல தேர்தல்களில் இந்த `சில்வர் ஸ்டேட்’, ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்துள்ளது. ஆனால் குடியரசுக் கட்சிக்கு சாதகமாக திரும்பும் அறிகுறிகளும் உள்ளன. கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனமான `538’ வெளியிட்ட சமீபத்திய முடிவின் படி, அதிபர் பைடனை விட டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டின. ஆனால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆனதில் இருந்து முன்னிலை நிலவரம் மாறிவிட்டது. ஜனநாயகக் கட்சியினர் இளைய மற்றும் பலதரப்பட்ட வாக்காளர்களை ஈர்க்கும் ஒரு வேட்பாளர் அந்த இடைவெளியை சரி செய்வார் என்று நம்பினர். இரு வேட்பாளர்களும் மாநிலத்தில் கணிசமாக வசிக்கும் லத்தீன் இனத்தவரை வெல்ல போட்டியிடுகின்றனர். பைடன் அதிபராக பதவியேற்றதிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்தது. ஆனாலும், கோவிட் சூழலுக்கு பின்னர் இழப்புகளில் இருந்து மீள்வது மற்ற மாகாணங்களை விட நெவாடா பின்தங்கியுள்ளது. சமீபத்திய அமெரிக்க அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கலிபோர்னியா மற்றும் கொலம்பியாவுக்கு அடுத்தபடியாக, நெவாடாவில் 5.1% என்ற அளவில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வரிக் குறைப்புகள் மற்றும் குறைவான விதிமுறைகள் என்ற தனது இலக்கை மீண்டும் நிலைநிறுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார். வட கரோலினா ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வான பிறகு, `தார் ஹீல்’ என்று அழைக்கப்படும் வட கரோலினா மாகாணத்தில் கருத்துக் கணிப்புகள் இறுக்கமடைந்ததாகத் தெரிகிறது. சில ஆய்வாளர்கள் இப்போது இந்த பகுதியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்று தெரியாத சூழல் நிலவுவதாக கூறுகின்றனர். ஜூலை மாதம் டிரம்ப் மீது தாக்குதல் நடந்த பின்னர் அவர் மீண்டும் பிரசாரத்தை தொடர தேர்ந்தெடுத்த இடம் வட கரோலினா மாகாணம். "இந்த மாகாணம் வெற்றியை சாத்தியப்படுத்தும் மிகப் பெரிய மாகாணம்," என்று அவர் பிரசார கூட்டத்தில் பேசினார். தங்கள் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சியினர் தங்கள் கட்சி மாநாட்டின் இறுதி இரவில் மாகாண கவர்னர் ராய் கூப்பருக்கு ஒரு மேடை கொடுக்க முடிவு செய்தனர். வடக்கு கரோலினா ஜார்ஜியாவின் எல்லையாக உள்ளது. மேலும் மற்றொரு சன் பெல்ட் (Sun Belt) மாகாணமான அரிசோனாவை போலவே தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள சில முக்கிய பிரச்னைகளை கொண்டுள்ளது. 2020 இல் வட கரோலினாவில் அதிக வாக்குகளை பெற்ற டிரம்ப், வெறும் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வென்றார். இது இந்த "ஊதா" மாகாணம் என்று கருதப்படுகிறது. அதாவது குடியரசு அல்லது ஜனநாயகக் கட்சி இரண்டில் எது வேண்டுமானாலும் வெல்ல வாய்ப்புள்ள மாகாணம் இது. பென்சில்வேனியா பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த பேரணியின் போது, டிரம்ப் படுகொலை முயற்சியில் உயிர் தப்பினார். டொனால்ட் டிரம்ப் மீது படுகொலை முயற்சி நடத்தப்பட்ட இந்த முக்கிய மாகாணத்தில் இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 2020 தேர்தலில் பைடனை ஆதரித்த மாகாணங்களில் இது முக்கியமானது. பைடன் வளர்ந்தது இங்கு தான். தொழிலாளர் வர்க்க நகரமான ஸ்க்ராண்டனுடன் அவருக்கு ஆழ்ந்த உணர்வு ரீதியான தொடர்பு உள்ளது. பொருளாதாரம் இங்கே ஒரு முக்கிய பிரச்னை. பைடன் நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்த போது இங்கு அதிக தாக்கம் ஏற்பட்டது. பின்னர் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்தது. பணவீக்கத்தின் விளைவாக வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை அமெரிக்கர்கள் அனைவரும் அனுபவித்திருந்தாலும், பென்சில்வேனிய மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மளிகைப் பொருட்களின் விலை மற்ற மாநிலங்களை விட இங்கு வேகமாக உயர்ந்துள்ளது என்று சந்தை நுண்ணறிவு வழங்குநரான டேட்டாசெம்பிளி தெரிவித்துள்ளது. பென்சில்வேனியாவின் மற்ற பகுதிகளுக்கான `பெல்வெதர்’ கவுண்டியான எரே ( Erie) என்னும் பகுதியில் மக்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை பிபிசி முன்பு தெரிவித்தது, அங்கு எட்டு பேரில் ஒருவர் "உணவுக்கு உத்தரவாதம் இல்லாதவர்கள்" என்று கருதப்படுகிறார்கள். அதிக பணவீக்கம் அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிசுக்கான ஆதரவு தளத்தை பாதிக்கலாம். பைடன் ஆட்சியின் பொருளாதாரத்தை முன்வைத்து டிரம்ப், கமலா ஹாரிஸை விமர்சித்துள்ளார். விஸ்கான்சின் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, குடியரசுக் கட்சியினர் தங்கள் 2024 மாநாட்டை நடத்த மில்வாக்கியைத் தேர்ந்தெடுத்தனர் 2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளரை 20,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாகாணம் தேர்ந்தெடுத்தது. பெரிய இரண்டு வேட்பாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்யும் மூன்றாம் தரப்பு வேட்பாளர்களால் இதுபோன்ற மாகாணங்களில் ஏற்படுத்த முடியும் என்று ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுயேச்சை வேட்பாளரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியருக்கு கணிசமான ஆதரவு இருப்பது கமலா ஹாரிஸ் அல்லது டிரம்பின் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கலாம் என்று கருத்து கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை இங்கே வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்தக் கட்சி மாகாணத் தேர்தல் சட்டங்களுக்கு இணங்கவில்லை என்று கூறி, இடதுசாரி சார்பான கல்வியாளரான கார்னல் வெஸ்ட் மீது புகாரையும் ஜனநாயகக் கட்சி பதிவு செய்துள்ளது. டிரம்ப் அந்த மாகாணத்தை "உண்மையில் முக்கியமானது... நாங்கள் விஸ்கான்சினை வென்றால், முழு நாட்டையும் வெல்வோம்" என்று விவரித்தார். குடியரசுக் கட்சியின் கோடைக் கால தேசிய மாநாடு மில்வாக்கி நகரில் நடைபெற்றது. கமலா ஹாரிஸ் தன் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வான போது, இங்கு தான் முதன்முதலில் பிரசாரம் மேற்கொண்டார். https://www.bbc.com/tamil/articles/cgm7r2n4gero
  16. பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் ''சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியர் சிலர், கோவையில் ஒரு தோழியின் ‘பாசிங் அவுட்’டுக்காக வந்து, ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அதில் ஒரு மாணவி, தான் குளிக்கும்போது, யாரோ படமெடுத்தது போலத் தெரிந்ததாக ஒரு கல்லூரித் தோழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ‘போலீஸ் அக்கா’விடம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னார். உடனே நாங்கள் அந்த விடுதிக்குச் சென்று, அந்த மாணவி தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்த 27 வயது ஐ.டி., ஊழியர் ஒருவரை விசாரித்தோம். அவர் எங்களிடம், ‘அப்படி யாராவது வீடியோ எடுத்திருந்தால் கண்டுபிடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்’ என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார். அந்த பெண், தன்னைப் படமெடுத்த அந்த போன், சிகப்பு நிற ஐபோன் போல இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த இளைஞரிடம் சிமென்ட் நிறத்தில் வேறு ஒரு நிறுவனத்தின் போன் இருந்தது. நாங்கள் அவரிடம் அவருடைய அம்மாவின் போன் நம்பரை வாங்கினோம். அவருடைய அம்மாவிடம், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு போன் கிடப்பதாகச் சொல்லி, உங்கள் மகன் பயன்படுத்தும் போன் என்ன, நம்பர் என்ன என்று கேட்டோம். அவர் 'சிகப்பு நிற ஐபோன்' என்று சொல்லி விட்டார். அதன்பின் விசாரித்த போது, அந்த போனை காந்திபுரத்தில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் மூலமாக சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு அந்த இளைஞர் அனுப்பியிருப்பது தெரியவந்தது. அதில் அனுப்புநர் விலாசத்தை போலியாகக் கொடுத்து, பெறுநராக தனது அண்ணனின் பெயருக்கு முகவரி எழுதி அனுப்பியுள்ளார். எதிலும் அந்த இளைஞரின் பெயர் இல்லை. இரவு எட்டு மணிக்கு பார்சல் சர்வீஸ் அலுவலகத்திலிருந்து அந்த பார்சலைக் கைப்பற்றி, கொண்டு வந்து அதைப் பிரித்தபோது, அந்த சிகப்பு நிற ஐபோன் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றது தெரியவந்தது. அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால், வெறும் சிஎஸ்ஆர்(தினசரி நிகழ்வு குறித்து காவல் நிலைய பதிவு) போட்டு, போனில் உள்ளவற்றை அழித்து, எச்சரித்து அனுப்பினோம்!’’ இது கோவை மாநகர காவல்துறையில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் பணியாற்றும் காவலர் வள்ளியம்மை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு. போலீஸ் அக்கா திட்டம் என்பது என்ன? கோவையில் சீருடை அணிந்த ஒரு பெண் காவலர், மாணவிகளைத் தேடிச் சென்று, அவர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண்பதே போலீஸ் அக்கா திட்டம் என கோவை மாநகர காவல்துறை கூறுகிறது. ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த, கோவை மாநகர காவல் துறையின் சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பெண் காவலருக்கு தலா இரண்டு கல்லுாரிகளை கவனிக்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. புகார் வந்தால் கல்லூரிக்கு செல்லவும், புகார் இல்லாத நேரங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை கல்லுாரிக்குச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. இவர்களின் பெயர், தொடர்பு எண்களுடன் கூடிய விபரங்களைக் கொண்ட ‘க்யூ ஆர்’ கோட், கல்லுாரிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன. ''கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 24 காவல் நிலையங்களைச் சேர்ந்த 37 பெண் காவலர்கள் 71 கல்லுாரிகளில் பயிலும் 1,43,224 மாணவிகளுக்கு, ‘போலீஸ் அக்கா’வாக பணி செய்கின்றனர்'' என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாதிக்கும் மேலே பெண்கள்! கோவையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கோவை மண்டலகிளை உட்பட தற்போது 8 பல்கலைக்கழகங்கள், 207 கல்லூரிகள், 76 பொறியியல் கல்லூரிகள், 6 மருத்துவக் கல்லூரிகள், 36 மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 20 ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை வெளியிட்டுள்ள கோவை ஆவணப்புத்தகம். ‘‘கோவை அரசு கலைக் கல்லூரியில் 60-65% பெண்கள் படிக்கின்றனர். ஒட்டு மொத்தமாகப் பார்த்தாலும் அனைத்துக் கல்லூரிகளிலும் 50%-க்கும் அதிகமாக மாணவியர்களே படிக்க வாய்ப்புள்ளது. முதுநிலைக் கல்வி என்று எடுத்துக் கொண்டால் பெண்களின் பங்கு இன்னும் அதிகமாக இருக்கும்'’ என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் கனகராஜ். பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் நடவடிக்கை என்ன? மாணவிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கியதாகச் சொல்கிறார் துணை ஆணையர் சுஹாசினி. ‘‘இந்த திட்டத்தை சென்ற 2022 அக்டோபரில் துவக்கினோம். கல்லூரி மாணவிகளால் எங்குமே சொல்ல முடியாத பல பிரச்னைகளையும் ஒரு சொந்த சகோதரியிடம் சொல்லுவதைப் போன்று அச்சமின்றிச் சொல்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதே இந்த ‘போலீஸ் அக்கா’ திட்டம். இதுவரை 493 அழைப்புகள், மாணவிகளிடமிருந்து வந்திருக்கின்றன. அவை சார்ந்து, எட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு பலரையும் கைது செய்திருக்கிறோம். ஒரு போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்களில் ‘சிஎஸ்ஆர்’ பதிவு செய்திருக்கிறோம். ஏராளமான புகார்களில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருப்பது, எங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதற்கு இதுவே சான்றாகிறது!’’ என்று அவர் கூறினார். சுஹாசினி ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் பொறுப்பாளராக உள்ளார். பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி மாணவியர் மட்டுமின்றி பிற பெண்களின் பிரச்னைக்கும் தீர்வு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமின்றி, பிற பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. ‘‘அம்மா திடீரென இறந்து விட்டார். அப்பா பால் வியாபாரி. அவர் தன் மனைவியின் அக்கா அதாவது குழந்தைகளின் பெரியம்மா வீட்டில் இரண்டு மகள்களையும் கொண்டு போய் விட்டு விட்டார். அவர்கள் இருவருக்கும் சாப்பாடு கூட போடாமல், பல விதங்களிலும் துன்புறுத்தியுள்ளனர். அதை அப்பாவிடம் சொன்னால் அவர் புரிந்து கொள்ளவில்லை. அதில் பெரிய மகள், கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இரண்டாவது பெண், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி. கல்லுாரியில் படிக்கும் அந்த மாணவி வந்து எங்களிடம் தனக்கும், தன் தங்கைக்கும் பெரியம்மா வீட்டில் நடக்கின்ற கொடுமைகளைப் பற்றி கண்ணீரோடு தெரிவித்தார். நாங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசினோம். அவர்கள் எங்களையே மிரட்டுகிற தொனியில் பேசினார்கள். அதன்பின், சட்டம், வழக்கு என்று சொன்னதும், பின் வாங்கி விட்டார்கள். இரு தரப்பையும் பேசி சமாதானத்துடன் செல்லுமாறு அனுப்பி வைத்தோம். அந்தக் குழந்தைகள் இப்போது அவளுடைய தந்தையுடன் இருக்கிறார்கள். அந்த கல்லுாரி மாணவியே சமைத்துக் கொண்டு தன் தங்கையையும் பார்த்துக் கொள்கிறாள். சந்தோஷமாக இருக்கிறார்கள்!’’ என்று ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் பணியாற்றும் வள்ளியம்மாள். இதில் பணியாற்றும் பெண் காவலர்கள் இடமாறுதல் செய்யப்பட்டாலும், அவர்கள் ஏற்கனவே பார்த்து வந்த கல்லுாரிகளுக்கு மட்டும் இவர்களே போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற வேண்டுமென்ற உத்தரவையும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பிறப்பித்திருக்கிறார். பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ‘‘மாணவிகளுக்கு போலீஸ் அக்காக்கள் உதவுவதைப் பார்த்து, மாணவர்களும் ‘அக்கா’ எங்களுக்கும் உதவுங்கள் என்று கேட்டு வருகின்றனர். அவர்களில் பலர் சைபர் மோசடியில் ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களுடைய பிரச்னைகளுக்கும் நாங்கள் தீர்வு காண்பதோடு, தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.’’ என்கிறார் போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்றி வரும் காவலர் வேலுமணி கல்லூரி மாணவி கருத்து போலீஸ் அக்கா திட்டத்தால் தனது பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக பிபிசியிடம் பேசிய கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், "நான் டிகிரி படித்துக் கொண்டிருந்த போதே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. டிகிரி முடித்ததும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த கால இடைவெளியில் எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என் மீது சந்தேகப்பட்டார். இப்போதே சந்தேகம் கொள்பவருடன் இணைந்து வாழ்வது சரியாக இருக்காது என்று முடிவு செய்தேன். இதுகுறித்து வீட்டில் பேச பயமாக இருந்ததால் போலீஸ் அக்கா ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் என் பெற்றோரை அழைத்துப் பேசி எனது முடிவை அவர்கள் ஏற்க செய்தார்" என்றார். தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுமா? இந்த திட்டத்தை, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையரிடம் முன்மொழிவு கேட்டிருப்பதாக தமிழக காவல் துறை சட்டம்–ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார். அதற்கான முன்மொழிவைதயார் செய்து, அனுப்பி விட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ‘‘அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று அரசு முடிவெடுக்கும்!’’ என்று கூறினார். 'பக்கசார்புடன் காவல்துறை நடந்துக்கொள்ள கூடாது' போலீஸ் அக்கா திட்டத்தில் வந்துள்ள 493 அழைப்புகளில் உள்ள புகார்களின் அடிப்படையில், இதுவரை 8 முதல் தகவல் அறிக்கை, 50 சி.எஸ்.ஆர்.,(தினசரி நிகழ்வு குறித்து காவல் நிலைய பதிவு) போடப்பட்டுள்ளது என்று மாநகர காவல் துறை புள்ளி விபரம் கொடுத்துள்ளது. மற்ற புகார்களை பேச்சு வார்த்தை மூலமாக அல்லது நேரடி நடவடிக்கையால் வழக்கின்றி தீர்த்து வைப்பது சட்டரீதியாக சரியா என்று மூத்த வழக்கறிஞர் வெண்ணிலா கேள்வி எழுப்புகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘முதல் தகவல் அறிக்கை எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து, காவல் துறை ஆய்வு செய்வது அவசியம். அதே நேரத்தில், இந்த புகார்கள் வழக்காக மாறாமல் இருப்பதற்கு, காவல் துறை மட்டுமே காரணமாக இருக்குமென்று கருத முடியவில்லை. ஏனெனில், பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, புகார் வேண்டாம், வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே, இதில் பெற்றோரும், துணிவுடன் புகார் கொடுக்க முன் வரவும், இறுதி வரை நாங்கள் உங்களுடன் இருப்போம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஏற்படுத்தவும் வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது.’’ என்று தெரிவித்தார் மேலும் அவர், ''குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தை பார்த்து, பக்கசார்புடன் காவல்துறை நடந்துக்கொள்ள கூடாது. காவல்துறை நடுநிலையுடன் செயல்படுவது மிக முக்கியம்'' என்றார் ‘இது வெறும் விளம்பரத் திட்டம்தான்!’ பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராதிகா, ‘‘எங்களைப் பொறுத்தவரை, இது வெறும் விளம்பரத் திட்டம்தான். மொபைல் ஆப்களைத் துவக்குவது, விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது என்று கோவை மாநகர காவல் துறை வெளியில் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இது போன்ற திட்டங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதால் மட்டும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை’’ என்றார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crrly2pqpyko
  17. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஓ'கேலகன் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது. ஆனால் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய சூரிய நிகழ்வுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை. இன்று அத்தகைய ஒரு சூரிய நிகழ்வு ஏற்பட்டால், பூமியில் அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தக் கூடும். பூமியில் உள்ள மிகப் பழமையான மரங்கள் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. அனைத்து வகையான வரலாற்று நிகழ்வுகளையும் கடந்து இவை வாழ்ந்துள்ளன. ரோமானியப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, கிறித்தவத்தின் பிறப்பு, ஐரோப்பியர்கள் அமெரிக்காவை அடைந்தது மற்றும் முதன்முதலில் சந்திரனில் மனிதர்கள் தரையிறங்கியது ஆகிய நிகழ்வுகளின் சாட்சிகளாக அவை நிற்கின்றன. மரங்கள் நிலத்தடி மண்ணில் கூட படிமமாக்கப்படலாம். அது கடந்த 30,000 ஆண்டுகளுடன் நமக்கு ஒரு தொடர்பை அளிக்கிறது. நீண்ட காலமாக வாழும் இந்த மரங்கள் பூமியின் நிலையான பார்வையாளர்களாகத் தோன்றலாம். ஆனால் அவ்வாறு இல்லை. அவை வளரும்போது அசாதாரணமான ஒன்றைச் செய்கின்றன. நமது சூரியனின் செயல்பாட்டைப் பதிவு செய்வது. ‘சூரியனின் மூர்க்கமான கடந்த காலம்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மரத்தின் வளர்ச்சி ‘வளையங்களில்’ ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகி உள்ளன ஆண்டு முழுவதும் மரங்களில் ஒளிச்சேர்க்கை நடப்பதால், அவை பருவத்தைப் பொறுத்து நிறம் மாறி, வசந்த காலத்தில் இலகுவாகவும், இலையுதிர்காலத்தில் இருண்டதாகவும் தோன்றும். இதன் விளைவாக மரத்தின் வளர்ச்சி ‘வளையங்களில்’ ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகி உள்ளன. "இது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க காலப் பெட்டகத்தை (Time Capsule) சேமிப்பகத்தை அளிக்கிறது" என்று அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தின், 'மர வளையங்களை' ஆய்வு செய்யும் டென்ட்ரோக்ரோனாலஜிஸ்ட் (Dendrochronologist) சார்லோட் பியர்சன் கூறுகிறார். 20ஆம் நூற்றாண்டில், டென்ட்ரோக்ரோனாலஜி நிபுணர்கள் (மரத்தின் சுற்றுப் பட்டைகள் மூலம் அதன் வயதை அறிந்து கொள்ளும் அறிவியல்) பெரும்பாலும் மர வளையங்களைப் பயன்படுத்தி வரலாற்றின் பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். அதாவது பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால மாற்றங்களை அவர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சில கால கட்டங்களில், அவர்கள் ஆவணப்படுத்திய மாற்றங்கள் என்பது திடீரென நிகழக் கூடியதாகவும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. அவை சூரியனின் மூர்க்கமான கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய சூரிய நிகழ்வுகள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய வெடிப்பு "இப்படி ஒரு நிகழ்வு தோன்றும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை," என்று பாரிஸில் உள்ள ‘காலேஜ் டி பிரான்சின்’ காலநிலை நிபுணரான எட்வார்ட் பார்ட் கூறுகிறார். ஆனால் 2012 ஆம் ஆண்டில், பிஎச்டி மாணவராக இருந்த ஃபுசா மியாகே (இப்போது ஜப்பானில் உள்ள நகோயா பல்கலைக் கழகத்தில் காஸ்மிக் கதிர் இயற்பியலாளராக உள்ளார்), வியக்கத்தக்க ஒன்றை கண்டுபிடித்தார். ஜப்பானிய சிடார் மரங்களை ஆய்வு செய்த அவர், கிட்டத்தட்ட 1,250 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி.774 ) ஒரே வருடத்தில் கார்பன்-14 எனப்படும் ஒரு வகை கார்பனில் திடீரென மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் கண்டுபிடித்தார். "அதை கண்டறிந்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன்," என்கிறார் மியாகே. முதலில் கிடைத்த தரவை சந்தேகித்த பிறகு, மியாகே மற்றும் அவரது சகாக்கள் ஒரு குழப்பமான முடிவுக்கு வந்தனர். வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உயர் ஆற்றல் துகள்கள் தாக்கும் போது கார்பனின் இந்த கதிரியக்க ஐசோடோப்பு உற்பத்தி செய்யப்படுவதால், கார்பன்-14 இன் திடீர் அதிகரிப்பு நமது வளிமண்டலத்தில் ஏராளமான துகள்களை உட்செலுத்துவதில் இருந்து வந்திருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். இதை சூப்பர்நோவா போன்ற அண்ட நிகழ்வுகளுடன் இணைத்து ஆய்வுகள் மற்றொரு சாத்தியமான காரணத்தை பரிந்துரைத்துள்ளன, சூரியனால் வெளியேற்றப்பட்ட துகள்களின் ஒரு அசுர வெடிப்பு. இவை சூரிய வெடிப்புகளால் (Superflare) உருவாக்கப்படும். நவீன காலத்தில் நாம் காண கிடைக்கும் எல்லாவற்றையும் விட மிகப்பெரியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1859-இன் பெரும் புவி காந்த புயல் இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக் கழகத்தின் விண்வெளி இயற்பியலாளர் மேத்யூ ஓவன்ஸ் கூறுகையில், "நாம் கவனித்த எல்லாவற்றையும் விட குறைந்தது பத்து மடங்கு பெரிய நிகழ்வு அவற்றுக்கு தேவைப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட முதல் சூரிய வெடிப்பு 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு முந்தையது. 1859இன் பெரும் புவி காந்த புயலுடன் தொடர்புடையது.” என்கிறார். மர வளையங்கள் பற்றிய மற்ற ஆய்வுகள் மற்றும் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து போன்ற இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய பனித் துகள்களின் பகுப்பாய்வு மூலம் மியாகேவின் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மியாகே நிகழ்வுகளைப் போல மேலும் பல நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், நன்கு ஆய்வு செய்யப்பட்ட ஏழு நிகழ்வுகள் கடந்த 15,000 ஆண்டுகளில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. அதே சமயத்தில் வேறு பல கார்பன்-14 தொடர்பான நிகழ்வுகள், மியாகே நிகழ்வுகள் தானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மிகச் சமீபத்திய நிகழ்வு 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கிபி.993-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இவை அரிதாகவே நிகழ்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் ஓரளவு சீரான இடைவெளியில், அதாவது ஒவ்வொரு 400 முதல் 2,400 ஆண்டுகளுக்கும் ஒருமுறை. 14,300 ஆண்டுகளுக்கு முந்தைய, தெற்கு பிரான்சில் உள்ள புதைபடிவமான ‘ஸ்காட்ஸ் பைன் மரங்களில்’ கார்பன்-14 அதிகரிப்பு நிகழ்ந்ததைக் கண்டுபிடித்ததாக பார்ட் மற்றும் அவரது சகாக்கள் 2023இல் அறிவித்த போது, மிகவும் சக்திவாய்ந்த ஒரு மியாகே நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது . விண்வெளியில் இருந்து தோன்றிய இந்த ‘சூப்பர் புயல்’ குறித்து கண்டுபிடித்த குழு, புதைபடிவ மரங்களுக்காக தெற்கு பிரெஞ்சு பகுதியில் ஆல்ப்ஸைத் தேடியது. சில புதைபடிவ மரங்கள் நதிகளால் வெளிப்பட்டதைக் கண்டறிந்தது. அதிலிருந்து அவர்கள் மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் மிகப்பெரிய அளவிலான கார்பன் -14 அதிகரிப்பிற்கான ஆதாரங்களைக் அவர்கள் கண்டுபிடித்தனர். "நாங்கள் ஒரு புதிய மியாகே நிகழ்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கனவு கண்டோம், அது நிறைவேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக் கழகத்தின் டென்ட்ரோக்ரோனாலஜிஸ்ட் மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான சிசில் மியாமோஹ் கூறுகிறார். அப்படியொரு நிகழ்வு இன்று மீண்டும் நடந்தால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் அரோராவைப் (துருவ ஒளி) பார்த்திருப்பார்கள், வானத்தில் வெளிச்சங்களைப் பார்த்திருப்பார்கள்" என்கிறார் பியர்சன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரோரா எனப்படும் துருவ ஒளிகள் புவி காந்தப்புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்தும் நமது சூரியன் தற்போது 11 வருட சுழற்சியில், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செயல்பாட்டின் காலகட்டங்களை கடந்து செல்கிறது. அப்போது கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (CMEs- சிஎம்இ) எனப்படும் பிளாஸ்மாவின் மிகப்பெரிய வீச்சுகளையும், சூரிய வெடிப்பு எனப்படும் கதிர்வீச்சின் மிகப்பெரிய வெடிப்புகளையும் சூரியன் வெளியேற்றும். சூரியனின் சிஎம்இ- சுழற்றி பூமியைநோக்கி திரும்பினால் புவி காந்த புயல் ஏற்படும். நமது வளிமண்டலத்தில் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பாய்வதால், வடக்கு மற்றும் தெற்கு துருவ ஒளிகள் எனப்படும் அரோரா தோன்றலாம், இந்த புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்தும். புவி காந்தப் புயல்கள் நமது வளிமண்டலத்தை விரிவடையச் செய்து, செயற்கைக்கோள்களில் ‘வளிமண்டல பின்னிழு விசையை’ அதிகரிக்கும் (உதாரணமாக, மே 2024இல் புவி காந்தப் புயல்களின் போது ஹப்பிள் தொலைநோக்கி ஒரு நாளைக்கு 40-80 மீட்டர் (141-262 அடி) கீழே சென்றது). சமீபத்திய வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த சூரியப் புயல், 1859இன் கேரிங்டன் நிகழ்வு, பூமியின் இரு அரைக்கோளங்களிலும் தீவிரமான அரோரா துருவ ஒளிக் காட்சிகளைத் ஏற்படுத்தியது மற்றும் உலகெங்கிலும் உள்ள தந்திச் சேவையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காலத்தில், கேரிங்டன் அளவிலான நிகழ்வின் விளைவுகள் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். செயற்கைக்கோள்கள் அதன் இடத்திலிருந்து தள்ளப்படுவதால் அல்லது அவற்றின் நுட்பமான மின்னணு சாதனங்கள் சேதமடைவதால் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) சீர்குலையும். அதே நேரத்தில் பூமியில் உள்ள பல மின் கட்டமைப்புகள் மற்றும் இணைய சேவைகள் செயலிழக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், மியாகே நிகழ்வுகள் என்பவை ஒரு வித்தியாசமான ராட்சசன் போன்றவை. அவை கேரிங்டன் நிகழ்வை விட குறைந்தது பத்து மடங்கு பெரிய துகள்களின் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. உண்மையில், அதனுடன் ஒப்பிடுகையில் கேரிங்டன் நிகழ்வு மிகவும் சிறியதாக இருந்தது, அது உற்பத்தி செய்யும் கார்பன்-14 இன் அதிகரிப்புகள் மர வளையங்களில் பெரியளவில் பதிவாகவில்லை. மார்ச் மாதத்தில், ஒரு ஆய்வில் கார்பன்-14 அதிகரிப்பின் மிக நுட்பமான பதிவு கேரிங்டன் நிகழ்விலிருந்து கண்டறியப்பட்டது. ஆனால் மியாகே நிகழ்வுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை. 14,300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நடந்த ஒரு நிகழ்வு இன்று நடந்தால், நாம் சார்ந்திருக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கு அது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதை நம்மால் தாங்க முடியாது. ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் சூரிய விஞ்ஞானி ரைமண்ட் மஸ்ஷலர் கூறுகையில், "கேரிங்டன் நிகழ்வே மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே கேள்வி என்னவென்றால், அதைவிட மோசமான ஒன்று உண்மையில் இருக்க முடியுமா?" என்கிறார். சில நட்சத்திரங்கள், குறிப்பாக நமது சூரியனை விட சிறிய மற்றும் மங்கலான சிவப்பு ‘குள்ள’ நட்சத்திரங்கள், தங்களுக்கு அருகில் சுழலும் கிரகங்களின் வளிமண்டலங்களை அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த ‘சூப்பர்ஃப்ளேர்களை’ எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதை என்பதை நாம் அறிவோம். நமது சூரியன் எனும் நட்சத்திரம், பூமிக்கு அத்தகைய ஆபத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. ஆனாலும் கூட மியாகே நிகழ்வுகளின் இருப்பு என்பது, கேரிங்டன் நிகழ்வை விட அதிக சக்தி வாய்ந்த ஆபத்தான நிகழ்வுகளுக்கான சாத்தியம் உள்ளதைக் குறிக்கிறது. மியாகே நிகழ்வுகள்- புவி காந்தப் புயல்கள் இடையேயான தொடர்பு மியாகே நிகழ்வுகளுக்கும் புவி காந்தப் புயல்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இந்த இரு நிகழ்வுகளில் உற்பத்தி செய்யப்படும் கார்பன்-14 அதிகரிப்புகள், சூரியனில் இருந்து வெளிப்படும் அதிக ஆற்றல் வாய்ந்த துகள்களின் வெடிப்பிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் இந்த நிகழ்வுகள் எப்போதும் பூமியில் சக்திவாய்ந்த புவி காந்த புயல்களை ஏற்படுத்தும் சிஎம்இ-களுடன் தொடர்புடையதா என்பது உறுதியாகத் தெரியவில்லை . "சூரியனில் மிகப் பெரிய புயல்கள் ஏற்படும் போது, நீங்கள் அடிக்கடி ஆற்றல்மிக்க துகள்கள் மற்றும் சிஎம்இ-களை எதிர்கொள்வீர்கள்," என்கிறார் சென்ட்ரல் லேன்கஷெர் பல்கலைக்கழகத்தின் சூரிய இயற்பியலாளர் சில்வியா டல்லா. ‘ஆனால் அந்த இணைப்பு ‘ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது இல்லை’ என்று அவர் குறிப்பிடுகிறார். உயர் ஆற்றல் துகள்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் ஒரு சரமாரியான தாக்குதலை பூமி எதிர்கொண்டால், நமது சிறந்த கவச உபகரணங்களைத் தவிர மற்ற அனைத்தும் பாதிக்கப்படலாம். "செயற்கைக்கோள்கள் அழிந்துவிடும்," என்கிறார் முஷெலர். பூமியின் உள்கட்டமைப்பிற்கு ஆபத்து ஏற்படும். அதுமட்டுமல்லாது மியாகே நிகழ்வு பல சேதங்களை ஏற்படுத்தும். பூமியின் மின்னணுவியல் அமைப்புகள் பயன்படுத்த முடியாததாகிவிடும் அல்லது அதன் மென்மையான சுற்றுகள் அழிந்துவிடக்கூடும். "ஒரு அணுமின் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் ஒரு மின்னணு அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டால், நீங்கள் உண்மையில் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் அல்லவா" என்கிறார் ஓவன்ஸ். "விண்வெளிச் சூழலில் நாம் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேச முனைகிறோம். ஆனால் அணுசக்தித் துறையில் 1,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இது அத்தகைய ஒரு விஷயம்." என்கிறார் ஓவன்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியாகே நிகழ்வுகளால், பூமியின் மின்னணுவியல் அமைப்புகள் பயன்படுத்த முடியாததாகிவிடும் அல்லது அதன் மென்மையான சுற்றுகளை அழிந்துவிடக்கூடும் சூரியத் துகள்களின் வெடிப்புகள் விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த துகள்கள் சூரியனிலிருந்து பூமியை நோக்கி ‘ஒளியின் வேகத்திற்கு’ மிக அருகில் பயணிப்பதைக் கருத்தில் கொண்டால், அதை எதிர்கொள்ள தயாராவதற்கு நமக்கு வெறும் எட்டு நிமிடங்களே இருக்கும்." என்று ஓவன்ஸ் கூறுகிறார். நிச்சயமாக, மர வளையங்கள் என்பது ஒரு மியாகே நிகழ்வு நிகழ்ந்த முழு வருடத்தின் சில குறிப்புகளை மட்டுமே நமக்குத் தருகின்றன. எனவே அந்த நிகழ்வுகள் ஒரே ஒரு சூரிய வெடிப்பின் விளைவாக இருக்குமா அல்லது ஒரு வருடத்தில் பல முறை ஏற்பட்ட வெடிப்புகளின் விளைவாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "அது ஒரே நாளில் நடந்த ஒரு நிகழ்வா அல்லது அந்த ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மிகப் பெரிய துகள் புயல்கள் ஏற்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று ஓவன்ஸ் கூறுகிறார். இருப்பினும், அந்த புயல்கள் ஒவ்வொன்றும் இன்னும் பெரியதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். மியாகே நிகழ்வுகள் தொடர்பான புதிய பதில்களை வழங்கும் என்ற நம்பிக்கையில் மர வளையங்கள் மற்றும் பனிக்கட்டிகள் பற்றிய கூடுதல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. "அதிகமான நிகழ்வுகள் மறைக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் மியாகே. கடந்த 5,000 ஆண்டுகளில் 95% மர வளைய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று சுவிட்சர்லாந்தில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமான இடிஎச் சூரிச் சூரிய விஞ்ஞானி நிக்கோலஸ் பிரெம் கூறுகிறார், அதாவது சமீபத்திய வரலாற்றில் புதிய மியாகே நிகழ்வுகள் காணப்பட வாய்ப்பில்லை. இருந்தபோதிலும், மியாகே நிகழ்வுகளை கண்டுபிடிப்பதற்கான வேட்டை தொடர்கிறது. பார்ட், கடந்த ஜூன் மாதத்தில் பிரெஞ்சு ஆல்ப்ஸுக்குத் திரும்பி, புதைபடிவ மரங்களின் மாதிரிகளைச் சேகரித்தார். இந்த மாதிரிகள் ஆய்வகத்தை அடைந்தவுடன் அவர் மர வளையங்களை ஆய்வு செய்யும் ‘அலுப்பான வேலையை’ தொடுங்குவேன் என்று அவர் கூறுகிறார். அந்த ஆய்வு வேலை பல மாதங்களுக்கு நீளக்கூடும். ஒரு நாள், 14,300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததை விட மிகப்பெரிய பெரிய மியாகே நிகழ்வு கண்டுபிடிக்கப்படலாம். நிச்சயமாக, மீண்டும் மியாகே நிகழ்வுக்கான வாய்ப்பும் உள்ளது. அதற்கு மனித இனம் தயாராக இருக்க வேண்டும். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gq17yvy8po
  18. யாகி சூறாவளி : வியட்நாமில் 64 பேர் பலி Published By: DIGITAL DESK 3 10 SEP, 2024 | 11:21 AM பிலிப்பைன்ஸில் உருவான யாகி சூறாவளி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி வீசியது. மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி சூறாவளி கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது. இந்நிலையில் அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே அங்கே ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு தூண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. அப்போது அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வியட்நாமில் சூறாவளி பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. வியட்நாமைத் தாக்கும்முன், யாகி புயல் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் நான்கு பேரையும் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193301
  19. பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு https://www.facebook.com/reel/514151514703981
  20. யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி குறித்த சாதனையை புரிந்துள்ளார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடிகாமத்தில் உள்ள வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்களின் பின் world guiness assesment commity மூலம் இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு 28/8/2024 அன்று நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே வேளை கின்னஸ் சாதனை படைத்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியிருந்தார். https://thinakkural.lk/article/309201
  21. கடந்த சில தினங்களுக்கு முன் பிரேசிலிய புவியியல் சேவை, அமேசான் படுகையில் உள்ள அனைத்து ஆறுகளும் வரலாறு காணாத அளவில் குறையும் என்றும் இதனால் உள்ளூர் சமூக மக்கள் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இத்தகைய சூழலில், அமேசான் மழைக்காடுகளின் வழியாக செல்லும் ஆறுகளில் நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கமாக ஜூன் கடைசி வாரத்தில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் இங்கே வறட்சிக் காலம் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில், ஜூன் முதல் பாதியிலேயே நீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சராசரியை விட குறைவாக காணப்படுகிறது. நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை அமேசான் பகுதிகள் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவை பெற்றுள்ளது. வறட்சி காரணமாக ஆறுகளில் பயணம் மேற்கொள்வது கடுமையாக இருப்பதாகவும், நீர் உட்கொள்ள முடியாத அளவிற்கு கலங்கலாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக வெளியில் இருந்து வரும் நீரை நம்பியுள்ளனர். இப்பகுதிகளில் வசிக்கும் வயதானவர்கள் கூறுவது இன்னும் மோசமானதாக இருக்கிறது. 57 வயதான மீனவர் இதுதொடர்பாக கூறுகையில், “இங்கிருக்கும் வயதானவர்கள் யாரும் இதுபோன்ற வறண்ட நதியைக் கண்டதில்லை. என் தந்தை கூட இதுபோன்று தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என கூறினார்” என்றுள்ளார். ஏனெனில், 121 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக இதுபோன்ற வறட்சி அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வறண்ட கால நிலையால், அங்கு காட்டுத்தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக, மோட்டார் படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆறுகளில் நீர் குறைந்தது, தங்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், விளைப்பொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்வது சாத்தியமற்று இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏனெனில், அப்பகுதி மக்களுக்கு ஆற்றுப் பயணங்களே மிக வசதியானதாக இருக்கிறது. சாலைப் போக்குவரத்து என்றால், அடர்ந்த மழைக்காடுகளுக்கு ஊடாக செல்லும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன. ஆறுகளை நம்பி மீன்பிடிக்கும் தொழிலை செய்யும் சமூகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் பயிர்களுக்கு தண்ணீர் இன்று சமீப நாட்களில் தத்தளித்து வருகின்றனர். இருக்கும் தண்ணீரும் அதிகளவில் சூடாக காணப்படுவதால் நீர்வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கவலை அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பேரழிவிற்கான சாத்தியமாகவும் இதைக் கருதுகின்றனர். https://thinakkural.lk/article/309196
  22. Published By: DIGITAL DESK 7 10 SEP, 2024 | 10:59 AM பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக படுகொலை ஞாபகார்த்த தூபியானது புனரமைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரியினால் திறந்துவைக்கப்பட்டது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பும் வகையில் அருட்தந்தை க.ஜெகதாஸிடம் வழங்கப்பட்டது. குறித்த நினைவுத்தூபியில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அங்குவந்த பொலிஸார் நினைவுக்கல்லை உடைத்தெறிந்து அங்கு பணியிலீடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய நிலையில் நேற்றையதினம் நினைவேந்தல் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/193293
  23. ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள், விலை என்ன? இந்தியாவில் எப்போது கிடைக்கும்? பட மூலாதாரம்,APPLE NEWSROOM படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 10 செப்டெம்பர் 2024, 06:55 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கியூபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு "இட்ஸ் க்ளோடைம்" என்று ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐபோன்கள் மற்றும் இதர தயாரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டது. ஐபோன் 16 சீரிஸில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற கருவிகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? ஐபோன் 16 வரிசையில் நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை முறையே ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகும். செயற்கை நுண்ணறிவுடன் (Artificial Intelligence (AI)) கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப, தங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ஆப்பிள் இண்டலிஜன்ஸுடன் இந்த போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆப்பிள் இண்டலிஜன்ஸுடன் புதிய வடிவமைப்பில், சிறப்பம்சங்களைக் கொண்ட ஐபோன்களை நாங்கள் வெளியிடுகின்றோம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டிம் குக் தெரிவித்தார். "ஜூன் மாதத்தில் இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸை வெளியிட்டோம். மிகவும் சக்தி வாய்ந்த எங்களின் இண்டலிஜன்ஸ் மென்பொருள் பல்வேறு வகையில் மிகவும் வித்தியாசமானது" என்றும் அவர் கூறினார். எழுத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸின் பங்களிப்பை பயனாளர்கள் நன்றாக உணர முடியும். இது மட்டுமின்றி, போனின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் உதவிக்கான சிரியின் செயல் திறனும் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸ் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் கூட, உடனடியாக பயனாளர்கள் இதனை பயன்படுத்த இயலாது. ஆப்பிள் இண்டலிஜென்ஸை சில மாதங்கள் கழித்தே இந்த போன்களில் அப்டேட்டாக வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. முதலில் இதன் 'பீட்டா' அம்சம் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, மற்ற நாடுகளுக்கு கொஞ்சம்கொஞ்சமாக விரிவுபடுத்தப்படும். சிறப்பம்சங்கள் என்ன? பக்கவாட்டில் கேமராவின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பட்டனுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமரா செயலிக்குள் நுழைவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது, ஸூம் செய்வது, ஒளி அளவைக் கூட்டுவது, குறைப்பது போன்ற அனைத்தையும் இந்த பட்டன் மூலமே செய்ய முடியும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையாக எடுக்க இந்த சிறப்பம்சம் உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிள் இண்டலிஜன்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, விஷூவல் இண்டலிஜன்ஸையும் பயனாளர்கள் பயன்படுத்த இயலும். ஆக்‌ஷன் பட்டன் இந்த போனில் மற்றொரு சிறப்பம்சமாக ஆக்‌ஷன் பட்டனை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஒரே நேரத்தில் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற இந்த பட்டனை அழுத்தினால் போதும். உதாரணத்திற்கு இந்த பட்டனை அழுத்தி நீங்கள் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்ய இயலும். கேமராவை இயக்க முடியும். போனை சைலண்ட் மோடுக்கு மாற்ற இயலும். இவை தவிர்த்த, கூடுதல் அம்சங்களும் இருக்கிறது. ஏ18 சிப் ஆப்பிள் இண்டலிஜென்ஸை இயக்கும் வகையில் ஏ18 மைக்ரோசிப்பை இந்த சீரிஸில் உள்ள போன்களில் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வந்த ஐபோன் சீரிஸ் போன்களைக் காட்டிலும் இரண்டு தலைமுறை முன்னிலையில் உள்ளது இந்த மைக்ரோசிப். ஐபோன் 15 சீரிஸில் ஏ16 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏ18 மைக்ரோசிப், பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும். கேமரா ஐபோன் 16 சீரிஸில் இடம் பெற்றுள்ள ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்‌ஸல் இரட்டை கேமராக்களை கொண்டுள்ளது. டெலிபோட்டோ லென்ஸ் 2 மடங்கு காட்சியை விரிவுபடுத்தும் திறன் கொண்டது. ஐபோன் 16 ப்ரோவில் 5 மடங்கு காட்சியை விரிவுப்படுத்த இயலும். பட மூலாதாரம்,APPLE NEWSROOM படக்குறிப்பு, ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரி, நிறம், திரை, சேமிப்புத்திறன் என்ன? வீடியோ ப்ளேபேக்குடன் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 27 மணி நேரம் இயங்கும். ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 33 மணி நேரம் இயங்கும். ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஆகிய இரண்டு போன்களும் கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, டீல் நீலம், அல்ட்ராமரைன் நிறங்களில் கிடைக்கும். ஐபோன் 16 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் போன்ற போன்கள், கருப்பு மற்றும் வெள்ளை டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், டெசர்ட் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. போனின் திரையைப் பொருத்தவரை, ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 6.1 அங்குலம் அளவுடையது. ஐபோன் 16 ப்ளஸ் - 6.7 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ 6.3 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 அங்குலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் சேமிப்பு திறனானது 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபியாக உள்ளது. ஐபோன் ப்ரோவில் 1 டிபி (1TB) சேமிப்பு திறன் கொண்ட போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் ப்ரோ மேக்ஸ் போனில் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்புத் திறன் கொண்ட போன்கள் கிடைக்கின்றன. பட மூலாதாரம்,APPLE NEWSROOM படக்குறிப்பு, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 1,44,900 இந்தியாவில் எப்போது கிடைக்கும்? விலை என்ன? இந்த அனைத்து ஐபோன்களையும் வாங்க நீங்கள் இந்தியாவில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும். இந்தியாவில் ஐபோன் 16 போனின் விலை ரூ. 79,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ளஸ் போனின் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 16 ப்ரோ போனின் விலை ரூ. 1,19,900 ஆகவும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 1,44,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் அறிமுகப்படுத்திய இதர தயாரிப்புகள் என்ன? இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு வெளியான இதர கடிகாரங்களைக் காட்டிலும் இது மிகவும் மெல்லியதாக இருக்கும் என்று தெரிவித்த ஆப்பிள் நிறுவனம், இந்த கடிகாரத்தின் செயல்திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. உடற்பயிற்சியின் ஈடுபடும் போது பயன்படுத்திக் கொள்ள ஏற்ற கடிகாரமாக இது அறியப்படுகிறது. ஆரோக்கியம் குறித்த தரவுகளையும் பயனாளிகள் அறிந்து கொள்ள இயலும். செப்டமர் 20-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த கடிகாரத்தின் விலை ரூ. 46,900 ஆகும். இது மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற கடிகாரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 - இயர்போன்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பட மூலாதாரம்,APPLE NEWSROOM படக்குறிப்பு, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 கடிகாரம் முதல் ஐபோனின் விலை என்ன தெரியுமா? 2007-ஆம் ஆண்டு மேக்வேர்ல்ட் எக்ஸ்போ என்ற கண்காட்சியில் முதன்முறையாக ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். அப்போது அது பலராலும் விமர்சனம செய்யப்பட்டது. ஆனால் இன்று உலகில் மிகவும் செல்வ செழிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஆப்பிள். ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோனில் தொடுதிரை, அகலமான திரை, ஐபாட் மற்றும் இணைய ப்ரவுசர் சிறப்பம்சங்களாக இடம் பெற்றிருந்தன. 16 ஜிபி சேமிப்பு திறன் மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவை கொண்டிருந்தது அந்த முதல் ஐபோன். இந்த நாளுக்காக நான் இரண்டரை ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்தேன் என்று அறிமுக விழாவின் போது சி.என்.என். இதழிடம் பேசிய ஜாப்ஸ் கூறினார். முதல் ஐபோனின் விலை ரூ. 16,500 ஆக இருந்தது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgrx2n0z64o
  24. Published By: DIGITAL DESK 3 10 SEP, 2024 | 03:14 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு மீண்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193331

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.