Everything posted by ஏராளன்
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.
-
நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!
யாழில் ‘நமக்காக நாம்’ பிரச்சார நடவடிக்கை முன்னெடுப்பு 06 SEP, 2024 | 06:44 PM பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை (06) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இந்த பரப்புரை நடவடிக்கையின்போது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/193019
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தேனீ கொட்டினால் வாதம் வராதாம் அண்ணை.
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
அண்ணை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாவிற்கு கொஞ்சம் கூட அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் மதிய உணவுப் பார்சல் 250 ரூபா, காலை, மாலை உணவிற்கு 250 ரூபா, சவர்க்காரம், பற்பசை, உடுப்புத் தோய்க்க சவர்க்காரத் தூள் 17000 - 18000 ரூபா வரை குறைந்த பட்சம் மாதம் தேவை. கைதடியில் மாகாண சபையால் நடத்தப்படும் இலவச முதியோர் காப்பகம் உள்ளது. அங்கு டிசம்பர் வரை பராமரிப்பு பணிகள் இடம்பெறுவதால் புதிதாக ஒருவரையும் சேர்க்கவில்லை என தந்தையார் கூறினார். எமது கிராமத்தில் திருமணஞ் செய்யாத நடமாடித் திரியக் கூடிய முதியவர் ஒருவர் இருக்கிறார். அவரை கிராமசேவகர் ஊடாக கைதடி முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்றபோது மேலுள்ள தகவல் கிடைத்தது.
-
மாணவர் தற்கொலை: தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா? - அதிர்ச்சித் தகவல்
[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] தருமபுரியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அவர். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்கிறார்கள். ஆன்லைன் விளையாட்டில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், நாளொன்றுக்கு 18 மணிநேரம் அதை விளையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. விளைவு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார். "என்னையே நான் வெறுக்கிறேன். மொத்தமாக வீணா போயிட்டேன். நான் இருந்து என்ன ஆகப் போகிறது?" என சக நண்பர்களிடம் பேசி வந்தவர், இரண்டு முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். "அந்த மாணவர், உளவியல் ரீதியான முரண்பாடுகளுக்கு (conflict) ஆட்பட்டிருந்தார். மனச்சோர்வு மருந்துகளைக் கொடுத்து உரிய கவுன்சிலிங் கொடுத்த பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்," என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. தற்கொலை முடிவில் இருந்து தருமபுரி மாணவர் பின்வாங்கியது வரவேற்கக்கூடிய நிகழ்வு என்றாலும், நாடு முழுவதும் மாணவர் தற்கொலை தொடர்பாக வெளியான தரவுகள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக உள்ளன. மாணவர் தற்கொலைகளில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளதாக ஐசி3 என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பிட்டச் சில மாநிலங்களில் மட்டும் மாணவர் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்? 10 ஆண்டுகளில் 57 சதவீதமாக அதிகரிப்பு ‘மாணவர் தற்கொலை: இந்தியாவில் பரவும் தொற்றுநோய்’ (Student Suicides: An Epidemic Sweeping India) என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த ஆய்வறிக்கையை ஐசி3 வெளியிட்டது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக ஐசி3 கூறுகிறது. அதில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் (2012 முதல் 2021) 97,571 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2002 முதல் 2011 வரையிலான தரவுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 57 சதவீதத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2021-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 4.5% அதிகம். 2020-ஆம் ஆண்டில் 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 21.2% அளவு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், 24 வயதுக்குட்பட்டவர்களின் மக்கள்தொகை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாகக் குறைந்துள்ளது. ஆனால், மாணவர் தற்கொலை என்பது 7,696 முதல் 13,089 ஆக அதிகரித்துள்ளது. மாணவர் தற்கொலை விகிதம் 4% முதல் 7% உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் ஆண்டுதோறும் 2% உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் இது 5% ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம்,MOHANA VENKATACHALAPATHY படக்குறிப்பு, மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி 207% உயர்ந்த தற்கொலைகள் இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, மகாராஷ்ட்ராவில் 1,834 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 1,308 பேரும், தமிழ்நாட்டில் 1,246 பேரும் கர்நாடகாவில் 855 பேரும் ஒடிஷாவில் 834 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நாட்டில், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த மாநிலங்களில் பதிவானது மட்டும் 46% என ஐசி3 அறிக்கை கூறுகிறது. அதேநேரம், மக்கள்தொகை அதிகம் உள்ள உத்தரபிரதேசத்தில் மிகக் குறைவான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அங்கு 5.3% பதிவாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்டில் 207% அளவு மாணவர் தற்கொலைகள் அதிகரிததுள்ளன. ராஜஸ்தானில் 186% அளவு உயர்ந்துள்ளது. ஆனால், இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் 76% அளவுக்கு மாணவர் தற்கொலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக, 15 வயது முதல் 24 வயதுள்ளவர்களில் ஏழு பேரில் ஒருவர் மனஅழுத்தம், ஆர்வமின்மை ஆகியவற்றால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41% பேர் மட்டுமே சிகிச்சை எடுப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. தென்னிந்திய மாநிலங்கள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் நிகோபார், மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றில் 29% அளவுக்குத் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக ஐசி3 நிறுவனத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 7 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதில், 15-29 வயதுடையவர்களின் மரணத்திற்கு 4-வது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது. பட மூலாதாரம்,NEDUNCHEZIAN படக்குறிப்பு, கல்வியாளர் நெடுஞ்செழியன் காரணம் என்ன? தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படாமல் இருப்பது, மதிப்பெண் குறைவு, குடும்பம் மற்றும் ஆசிரியர்கள் தரும் அழுத்தம், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதில் குழப்பம், கல்வி நிறுவனங்களில் போதிய கவுன்சிலிங் கிடைக்காதது, கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புக் குறைபாடு போன்றவை தற்கொலைக்கு காரணங்களாக உள்ளதாக ஐசி3 அமைப்பு தெரிவிக்கிறது. இதுதவிர, ராகிங், மற்றும் மாணவரின் நன்மதிப்பைக் குலைக்கும் செயல்கள், சாதிரீதியான பாகுபாடு, இனப்பாகுபாடு, பாலினம், மற்றும் வர்க்கம் சார்ந்த பிரச்னைகள், நிதிப் பிரச்னை, கூட்டுக் குடும்பமாக இல்லாததால் போதிய ஆதரவின்மை, வேறுபடுத்திப் பேசுவது, மாணவர்-பெற்றோர்-ஆசிரியர் இடையே தகவல் பரிமாற்றம் குறைவு போன்றவற்றையும் அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், "பிள்ளைகளின் கல்விக்கு பெற்றோர் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிடுகின்றனர். ஆனால், அந்தப் பிள்ளை படிக்காமல் போகும்போது பிரச்னை ஏற்படுகிறது. இதில், பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கூட்டுக் குடும்பங்களில் வசித்தால் தாத்தா, பாட்டியிடம் குறைகளைக் கூற வாய்ப்புகள் அதிகம். தனிக்குடும்பங்களில் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன," என்கிறார். மேலும் பேசிய அவர், "மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. இவை வகுப்பறைகளை விடவும் கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வகுப்பறைகளில் பாடங்களுடன் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால் வெளி உலகை பயத்துடன் பார்க்கும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்,” என்கிறார் அவர். மேலும், “சொல்லப்போனால், பெற்றோருக்குத் தெரியாமலேயே குழந்தைகள் பாதிப்படைகின்றனர். பத்தாம் வகுப்புக்குள் நுழைந்துவிட்டாலே தங்கள் குழந்தையைக் குடும்ப நிகழ்ச்சிகளுக்குக்கூடப் பெற்றோர் கூட்டிச் செல்வதில்லை. ஓர் ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் பணியில் இருந்து நீக்கப்பட்டால் அவர் வேறு ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் சேர்ந்து அதே தவறைச் செய்கிறார்,” என்கிறார் அவர். “அவர் ஏன் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்ற விவரத்தைச் சொல்வதில்லை. இவரால் மாணவிகள் மீண்டும் பாதிக்கப்பட்டாலும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை," என்கிறார். பட மூலாதாரம்,MAALAYAPPAN படக்குறிப்பு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மையத்தின் இயக்குநர் மீ.மாலையப்பன் பெண்களைவிட ஆண்கள் தற்கொலை அதிகம் பெண்கள் அதிகம் பாதிப்படைவதாகக் கல்வியாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டாலும், ஆண் மாணவர்களே அதிகளவு தற்கொலை செய்து கொள்வதாக ஐசி3 வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் மாணவர் தற்கொலைகளில் 57% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது 113% அதிகரித்துள்ளது. பெண் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது 79% அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் திருநங்கைகள் தொடர்பான தரவுகள், ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகவும் ஐசி3 நிறுவனம் தெரிவித்துள்ளது. 2002 முதல் 2006 வரை 15,568 மாணவர்களும், அதே ஆண்டில் 12,481 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2007 முதல் 2011 வரை 18,777 ஆண் மாணவர்களும் 15,367 பெண் மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012 முதல் 2016 வரையில் 21,901 ஆண் மாணவர்களும் 19,655 பெண் மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். 2017 முதல் 2021 வரையில் 30,488 (39%) ஆண் மாணவர்களும் 25,525 (30%) பெண் மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி, "படிப்பைத் தேர்வு செய்வதில் உள்ள குழப்பம், அவர்கள் விரும்பிய படிப்பு கிடைக்காதபோது, அதில் ஆர்வம் செலுத்த முடிவதில்லை. தவிர, மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதும் முக்கியக் காரணம். இதனால் மனப்பிறழ்வு அல்லது மனச்சோர்வு ஏற்பட்டு திறமையற்ற இளைஞராக மாறிவிடுகிறார். அது தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது. தற்கொலைகளில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்," என்கிறார். தொடர்ந்து, தற்கொலை எண்ணத்தில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளை பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார். "ஒரு மாணவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தால், 'நான் எதற்காக வாழ வேண்டும்?' என நண்பர்களிடம் கூறுவார். எஸ்.எஸ்.எஸ் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக இதைப் பற்றி தகவல் அனுப்புவார். தூக்க மாத்திரைகளை அருகில் வைத்துக் கொள்வது அல்லது தற்கொலை தொடர்பான வீடியோக்களை பார்ப்பது என செயல்படுவார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்போதே அவரை முழு உளவியல் பரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும்,” என்க்கிறார் அவர். மேலும், “தற்கொலை தொடர்பாக அவர்கள் சொல்லும் சிறிய சமிக்ஞைகளை எடுத்துக் கொண்டு தற்கொலை தடுப்பு மையங்களை நாட வேண்டும். ஒரு பிரச்னையைத் தெளிவாக ஆராய்ந்து தீர்வு சொன்னாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும் என மனநல மருத்துவம் கூறுகிறது. இது ஒரு பிரச்னையே அல்ல என அவர்களுக்குப் புரிய வைப்பது தற்கொலைகளை தடுக்கும்," என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி. இதே தீர்வுகளை ஐசி3 தொண்டு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையும் முன்வைக்கிறது. அவை: பள்ளிகளிலேயே மாணவர்களின் தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் வகையில் செயல்படுவது பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது முதல் பல்வேறு நிலைகளில் மாணவர்களின் விருப்பத்தை அறிவது மாணவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவது பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து சரியான நேரத்தில் தீர்வு சொல்வது பள்ளிகளில் மாணவர் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் உரிய பயிற்சி கொடுப்பது அதேநேரம், இந்த விவகாரத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மையத்தின் இயக்குநர் மீ.மாலையப்பனின் கருத்து வேறாக உள்ளது. "கல்வியின் மூலம் மனஅழுத்தம் வருவது என்பது இந்தியா முழுவதும் உள்ள பிரச்னைகள் தான். சில மாநிலங்களில் மட்டும் தற்கொலைகள் அதிகமாக வேறு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதை ஆராய வேண்டும்," என்கிறார். பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, "பொதுவாக, தமிழ்நாட்டு மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் சற்று அதிகமாகவே உள்ளது. அதற்கு படிப்பு மட்டும் காரணம் அல்ல. இங்குள்ள மக்களிடம் தற்கொலை எண்ணம் அதிகமாக வேரூன்ற கலாசாரம் முக்கிய காரணமாக உள்ளது,” என்கிறார். உதாரணமாக, வீட்டில் சாதாரண சண்டை வந்தாலே, 'செத்துப் போ' எனக் கூறுவது இயல்பாக உள்ளது. எதாவது ஒரு பிரச்னை வரும்போது அதற்கான தீர்வாக தற்கொலையை பார்ப்பது தான் காரணம். பிற சமூகங்களில் இது பெரிதாக இல்லை," என்கிறார் மீ.மாலையப்பன். பட மூலாதாரம்,MADHUMATHI IAS படக்குறிப்பு, பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ். 'மனம்' திட்டம், மனநலத் தூதுவர் இதுகுறித்து தொடர்ந்து பேசினார் மாலையப்பன். "இதைப் போக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மாதம்தோறும் மூன்று வகையான மனநல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட மனநல மருத்துவர்கள் இதற்கான பணிகளில் ஈடுபடுகின்றனர். மாணவர் தற்கொலையைத் தடுக்க ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுப்பது முக்கியமான பணியாக உள்ளது,” என்கிறார். “ 'மனம்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். அவர்கள், சக மாணவர்களில் யாராவது மனநல பிரச்னையில் இருப்பதைக் கண்டறிந்து அவர்களை கவுன்சலிங்குக்கு கொண்டு வருவார்கள். “இதற்குப் பாலமாக அதே மாணவர்களில் ஒருவர் மனநல தூதுவராக (Fear Ambassador) நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களிடம் கூறுவதைவிட சக மாணவர் என்றால் மனம் திறந்து பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் அவர். "பாடத்திட்டச் சுமை உள்பட மாணவர்கள் மத்தியில் ஏற்படும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு 'மனம்' போன்ற திட்டங்கள் முக்கியமானதாக உள்ளது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் போது தற்கொலைகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும்," என்கிறார். "மாணவர்களிடையே ஏற்படும் தற்கொலை எண்ணத்தைப் போக்கும் வகையில் பள்ளிகளில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கென ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்," என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார், பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ். மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgx9zj8439o
-
யாழ். சங்கானையில் ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை!
06 SEP, 2024 | 01:52 PM யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/192992
-
தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசியலமைப்புக்குட்பட்டது - மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு - இலங்கை அமைப்பின் மனு நிராகரிப்பு
Published By: RAJEEBAN 06 SEP, 2024 | 02:13 PM கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்திரம் சமத்துவ உரிமைகளை மீறுவதாக தெரிவித்திருந்த இலங்கை அமைப்பு தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத்துக்களை முடக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. எனினும் அந்த அமைப்பின் வேண்டுகோளை நிராகரித்துள்ள ஒன்ராரியோ மேல்முறையீட்டு நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது அது பாரபட்சமான தாக்கங்களை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. இந்த சட்டம் சிங்களபௌத்தர்களிற்கு எதிரான வெளிப்படையான இனவேறுபாட்டை கொண்டுள்ளது என திருஹேவகே சமர்ப்பித்துள்ளதை நாங்கள் நிராகரிக்கின்றோம், என கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் முன்னுரையில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கைகள் என குற்றம்சாட்டப்படும் கொள்கைகள் சிங்கள பௌத்த மையப்படுத்தப்பட்டவை என்றே குறிப்பிடப்படுவதாகவும், சிங்கள பௌத்தர்கள் ஒரு இனக்குழுவாக அதற்கு பொறுப்பாளிகள் என தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192996
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கிய விமானம் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும்!
கடல் பகுதிகள் எனும்போது சீன ஆராய்ச்சிக் கப்பல்களும் கண்காணிக்கப்படலாமே அண்ணை.
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
நாகபட்டினத்திற்கு செல்லவிருந்த படகு திடீர் ரத்து நாக பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் குழப்பகரமான நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகபட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்டு குறித்த கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் பயணிகளும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராக இருந்தனர். இருப்பினும் கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டதாக கப்பலின் கப்டன் அறிவித்தார். இதனையடுத்து பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் மத்தியில் பெரும் குழப்ப நிலை உருவாகியது. இந்நிலையில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது. https://thinakkural.lk/article/309042
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை அணி 06 SEP, 2024 | 06:22 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. அத்துடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க, சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய ஆகிய இருவரும் நீக்கப்பட்டு மீண்டும் குசல் மெண்டிஸ், விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். திமுத் கரணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ் ஆகிய 7 துடுப்பாட்ட வீரர்களும் மிலன் ரத்நாயக்க, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். அணியில் சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் நிரப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இலங்கை, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டவும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் புள்ளிகளைப் பெறவும் முயற்சிக்கும் என அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, போட்டிக்கு முன்னர் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். 'முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விகளுக்கு துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடத் தவறியமையும் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமையுமே காரணம். நான் உட்பட துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் முழுத் திறமையுடன் துடுப்பெடுத்தாட வேண்டும்' என தனஞ்சய டி சில்வா தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192960
-
சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி
சஜித்தின் வாக்குறுதி என்ன? - ஸ்ரீதரனுக்கு மனோ பதில் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவே சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இப்போது 13 ஆம் திருத்தம் கிடைக்கப்பெறுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்கும் பட்சத்தில், எதிர்வருங்காலங்களில் சமஷ்டியோ அல்லது அதற்கும் அப்பால் சென்ற மிகச்சிறந்த தீர்வோ கிடைத்தாலும் கூட அதன்கீழ் வட, கிழக்கில் வாழ்வதற்கு தமிழர்கள் எஞ்சியிருக்கமாட்டார்கள் என எச்சரித்திருக்கின்றார். எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்து அவர் வழங்கிய உத்தரவாதம் என்ன என்று தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாகக் கருத்து வெளியிட்டிருக்கும் மனோகணேசன், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முடிவுகள் குறித்தோ அல்லது அதன் உள்விவகாரங்கள் குறித்தோ நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. ஆனால் அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாஸ பல தேர்தல் பிரசார மேடைகளில் பகிரங்கமாக வாக்குறுதியளித்திருக்கின்றார். இதுவே அவர் தந்திருக்கும் உத்தரவாதம் ஆகும். அது இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கோ அல்லது ஏதேனும் சில கட்சிகளுக்கோ மாத்திரம் இரகசியமாக வழங்கப்பட்ட உத்தரவாதம் அல்ல. மாறாக வட, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கும் பொதுவாக அவர் அளித்திருக்கும் உத்தரவாதமாகும். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி, தேர்தலை விகிதாசார முறையில் நடாத்தி, வட, கிழக்கில் ஸ்தம்பிதமடைந்திருக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் உருவாக்கி, அதிகாரங்களை வட, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதிகளிடமே வழங்கி, அதன்மூலம் அங்கு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே சஜித் பிரேமதாஸவின் நோக்கமாக இருக்கின்றது. அதேவேளை சமஷ்டி குறித்தோ அல்லது 13 பிளஸ் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை என்ற உண்மையை நான் நேர்மையாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். அரசியலமைப்பில் இருக்கும் 13 ஐப் பெற்று, மாகாணசபை முறைமையின் ஊடாகத் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு பயணிக்கவேண்டிய கடப்பாடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் தலைமைகளுக்கும் தான் இருக்கின்றது. வட, கிழக்கு மக்களுக்கு மீளவும் மாகாணசபைகளைத் தருவதென்பது அம்மக்கள் மீண்டும் மூச்சுவிடுவதற்கு வாய்ப்பளிப்பதாகும். அவ்வாறிருக்கையில் சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து உத்தரவாதம் அளித்தாரா எனக் கேட்பது பொருத்தமற்றதாகும். வட, கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறைமை உருவாக்கப்படவேண்டும் என்பதும், இலங்கை ஓர் சமஷ்டி நாடாக மாற்றப்படவேண்டும் என்பதுமே தனிப்பட்ட முறையில் எனது கொள்கையாக இருக்கின்றது. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையிலே நாம் குறைந்தபட்ச நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் ஏனைய பிரதான வேட்பாளர்கள் அளித்திருக்கும் உத்தரவாதங்களை விட சிறப்பானதாக இருக்கின்றது. ஈழத்தமிழ் மக்கள் மீது எனக்கு அதிக உரிமை இருப்பதாக நான் கருதுகின்றேன். அந்த உரிமையில் ஒரு விடயத்தைக் கூறவிரும்புகின்றேன். இன்றளவிலே வட, கிழக்கிலே வாழும் தமிழ் மக்களின் சனத்தொகை சடுதியாகக் குறைந்துவருகின்றமை அங்கு நிலவுகின்ற மிகமுக்கிய சவாலாகும். அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் கனடா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்து செல்கின்றனர். இது சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சகல தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் இதுபற்றி அவர்கள் பகிரங்கமாகக் கலந்துரையாடுவதில்லை. எனவே வட, கிழக்கில் மாகாணசபை நிர்வாகத்தை ஏற்படுத்தி, சுமுகமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழலைக் கட்டியெழுப்பினால் மாத்திரமே அம்மாகாணங்களில் தமிழர் சனத்தொகை சடுதியாக வீழச்சியடைந்துவருவதைத் தடுக்கமுடியும். மாறாக 13 கிடைக்கப்பெறுவதை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுத்தோமேயானால், எதிர்வருங்காலங்களில் சமஷ்டியோ அல்லது அதற்கும் அப்பால் சென்ற தீர்வோ கிடைத்தாலும் கூட அதன்கீழ் வட, கிழக்கில் வாழ்வதற்கு தமிழர்கள் எஞ்சியிருக்கமாட்டார்கள். இதனை சிறிதரன் மாத்திரமன்றி சகல தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/309046
-
தென் சீனாவை நோக்கி நகரும் யாகி சூறாவளி : பாடசாலைகளுக்கு பூட்டு, விமான சேவைகள் இரத்து
Published By: DIGITAL DESK 3 06 SEP, 2024 | 10:26 AM தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான யாகி ஹைனானின் வெப்பமண்டல கடற்கரையில் நிலச்சரிவை எற்படுத்ததும் என தெரிவிக்கப்படுகிறது. 245 கிலோ மீற்றர் அதிக வேகத்தில் தொடர்ந்து காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் பெரில் சூறாவளிக்கு பின்னர் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியாக யாகி பதிவுசெய்யப்பட்டுள்ளது. வடக்கு பிலிப்பைன்ஸை தாக்கிய பலம் வாய்ந்த யாகி சூறாவளி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஹைனான் தீவில் உள்ள வென்சாங்கிலிருந்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லீஜோ வரை சீனாவின் கடற்கரையோரம் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வியட்நாம் மற்றும் லாவோஸை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹனோயின் நொய் பாய் இன்டர்நேஷனல் உட்பட வடக்கில் உள்ள நான்கு விமான நிலையங்கள் சனிக்கிழமை மூடப்படும் வியட்நாமின் சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரை காற்று வீசியதோடு, கடும் இடி மின்னலுடன் மழைபெய்துள்ளது. ஹைனான், குவாங்டாங், ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை தெற்கு சீனா முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. உலகின் மிக நீளமான கடற்பரப்கை கடந்து செல்ல ஹொங்கொங்கை மக்காவுடன் இணைக்கும் பிரதான பாலம் மற்றும் குவாங்டாங்கில் உள்ள ஜுஹாய் ஆகியவை மூடப்பட்டன. https://www.virakesari.lk/article/192970
-
காற்று மாசுபாடு எனும் சத்தமில்லா கொலையாளி - உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரம் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாசுபடுத்திகளால் அதிக தூரம் பயணிக்க முடியும். எனவே அவை அசல் மூலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளையும் பாதிக்கிறது. தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு தாக்கத்தையே ஏற்படுத்தமுடியும். இந்தச்சிக்கலை உண்மையிலேயே சமாளிக்க, அரசுகள் மற்றும் பெருவணிகங்களின் நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொண்டு சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2020-ஆம் ஆண்டில் ஐநா பேரவை, செப்டம்பர் 7-ஆம் தேதியை ’நீல வானத்துக்கான தூய காற்றின் சர்வதேச தினமாக’ (International Day of Clean Air for Blue Skies) அறிவித்தது. இப்போது சிக்கலின் அளவு என்ன என்பதையும், இதை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பார்ப்போம். பிரச்னை எவ்வளவு பெரியது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கதேசத்தின் டாக்காவில் போக்குவரத்து நெரிசலில் மூச்சு விட முடியாமல் தவிக்கும் பயணிகள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) காற்று மாசுபாட்டை, "உலக அளவில் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்" என்று அழைக்கிறது. இது உலகம் முழுவதும் எழுபது லட்சம் அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது என்று அது கணக்கிட்டுள்ளது. இதன் காரணமாக மனித உயிர்கள் மட்டுமே பறிபோவதில்லை. 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் காற்று மாசுபாட்டின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கான மருத்துவ செலவு 8.1 டிரில்லியன் டாலர்கள் என்று உலக வங்கி கணக்கிடுகிறது. இது உலக நாடுகளின் மொத்த உற்பத்தியில் 6.1% க்கு சமம். "காற்று மாசுபாடு உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும், அது வளரும் நாடுகளில் வாழ்பவர்களை குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கிறது" என்று யுஎன்இபி தெரிவித்துள்ளது. அரசுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ன? "காற்று மாசுபாடு என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இயற்கையானது மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படுவது என்று இதில் பல வகைகள் உள்ளன. அவை இதன் மேலாண்மையை சிக்கலானதாக ஆக்குகின்றன" என்கிறார் யுஎன்இபியால் உருவாக்கப்பட்ட, ’காலநிலை மற்றும் சுத்தமான காற்றுக்கான செயலகத்தின்’ தலைவர் மார்டினா ஓட்டோ. "பல நாடுகளில் தேவையான அளவுக்கு காற்றின் தர கண்காணிப்பு உள்கட்டமைப்பு இல்லை. இதை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவு பிடிக்கிறது.” என்கிறார் அவர் சுத்தமான காற்றுக்காக முதலீடு செய்வது மிகவும் முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்க அணுகுமுறையில் பெரிய மாற்றம் தேவை என்று அவர் நம்புகிறார். "கூடுதலாக, ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் செயல்திறன் மாறுபடலாம். மேலும் சில பிராந்தியங்களில் போதுமான சட்டங்கள் அல்லது அமலாக்க வழிமுறைகள் இல்லை,” என்றார் அவர். "அரசியல் ரீதியாக செயல்படுவதற்கான உறுதி மற்றும் நிதி ஆகியவையும் முக்கியமான தடைகள்," என்றார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தா உலகளவில் மோசமான காற்றின் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது காற்று மாசுபாடு எப்படி ஏற்படுகிறது? காற்று மாசுபாடு என்பது திட துகள்கள், திரவ துளிகள் மற்றும் வாயுக்களின் சிக்கலான கலவையாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இது PM அதாவது ’பர்டிகுலேட் மேட்டர்’ (துகள்கள் மாசுமாடு) என்று அளவிடப்படுகிறது. 2.5 மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் (PM2.5), மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. துகள்களின் நுண்ணளவு காரணமாக அவை ரத்த ஓட்டத்தில் நுழைகின்றன. இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளில் குவிந்துவிடுகின்றன. சராசரி மனித முடி சுமார் 70 மைக்ரோமீட்டர்கள். அதை ஒப்பிடும்போது இந்த துகள்கள் மனித முடியின் அளவில் முப்பதில் ஒரு பங்கு ஆகும். அவை புகைக்கரி, மண் தூசி, சல்பேட்டுகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நியூயார்க் நகரின் சுதந்திர தேவி சிலையைச் சூழ்ந்துள்ள காட்டுத்தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் வாகனங்களின் இயக்கம் மற்றும் வெப்பமாக்கலின் ஆபத்துகள் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மின்சாரத்தை உருவாக்குதல், போக்குவரத்து (டயர் மற்றும் பிரேக் தேய்மானம் உட்பட) மற்றும் வீட்டிலிருந்தான மாசுபாடு (பெரும்பாலும் சமையல் மற்றும் வெப்பமூட்டுதலில் இருந்து) போன்றவை, நுண்ணிய துகள்களின் முக்கிய ஆதாரங்கள். பாலைவனங்களுக்கு அருகில் உள்ள இடங்களில், காற்றால் பரவும் தூசியும், காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரமாக இருக்கலாம். காற்றால் பரவும் தூசியே தங்கள் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் என்று ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவும் கூறுகின்றன. வட அமெரிக்காவில் போக்குவரத்து அதற்கு காரணமாக உள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் காற்று மாசுபாட்டிற்கு தொழில்துறையே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் மாசுபாட்டின் முக்கிய காரணமாக வீட்டிலிருந்து வரும் மாசு உள்ளது. இது நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? நமது உறுப்புகள் செயல்படும் விதத்தை இந்த நுண்ணிய துகள்கள் மோசமாக பாதிக்கின்றன. ஆறு பொதுவான உடல் நலப்பிரச்னைகளில் ஏற்படும் இறப்புகளுக்கு காற்று மாசுபாடு எவ்வாறு பங்களித்தது என்பதை 2019-ஆம் ஆண்டின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக ஸ்ட்ரோக் காரணமாக ஏற்பட்ட இறப்புகளில் 17% நுண்ணிய துகள் வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்பட்டவை என்று ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு தெரிவிக்கிறது. PM2.5 நுண்துகள்கள் மாசுபாட்டு சூழலில் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் இருப்பது, உடல்நலப் பிரச்னைகள் தீவிரமடைதலில் வேறுபட்ட பாத்திரத்தை வகிப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் உடல்நல பிரச்னைகளை குறுகிய கால வெளிப்பாடு மோசமாக்குகிறது. அதே நேரம் இந்த சூழலில் நீண்ட காலம் இருப்பது, பொதுவாக நோயை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அது தீவிரமாகும் விகிதத்தை அதிகரிக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காற்று மாசுபாடு காரணமாக மெக்சிகோ நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்தனர் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா? ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை கரியமில உமிழ்வைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன என்று யுஎன்இபி-இன் மார்டினா ஓட்டோ தெரிவிக்கிறார். லண்டனின் மிகக் குறைவான உமிழ்வு மண்டலத்தின் உதாரணத்தை அவர் தருகிறார். இது மத்திய லண்டனில் போக்குவரத்தின் அளவைக் குறைத்து, தலைநகரில் தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளை 50% குறைக்க வழிவகுத்தது. அரசு நடவடிக்கையால் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைக்கப்பட்ட மேலும் இரண்டு நகரங்களுக்கு மெக்ஸிகோ சிட்டி மற்றும் பெய்ஜிங் எடுத்துக்காட்டாகும். "பிராந்திய மேம்பாடுகள் பெரும்பாலும் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் செயல்திறன் மிக்க தேசிய கொள்கைகளுடன் தொடர்புடையவை" என்கிறார் ஓட்டோ. "குறிப்பாக, தெற்காசியா, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா (சீனா உட்பட), ஓஷியானியா( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்)மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா போன்ற பகுதிகள் அனைத்தும் கடந்த இரண்டு தசாப்தங்களாக PM2.5 வெளிப்பாட்டைக் குறைத்துள்ளன." 2020 ஆம் ஆண்டில், மக்கள்தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடப்படும் PM2.5-ன் ஆண்டு சராசரி, 5 μg/m3 ஐ விடக்குறைவாக இருந்த ஒரே நாடாக ஃபின்லாந்து இருந்தது. "பிரச்னை தீர்க்கப்படுவதற்கு இன்னும் முயற்சிகள் தேவையென்றாலும், தனி கவனத்துடன் கூடிய முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை இது நிரூபிக்கிறது," என்று அவர் வலியுறுத்துகிறார். மறுபுறம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் PM2.5 நுண்துகள் வெளிப்பாடு அளவுகள், அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த தசாப்தத்தில் இந்த நிலை ஏறக்குறைய ஒருபோலவே உள்ளது. “உலக அளவில் மிக அதிக PM2.5 நுண்துகள்கள் வெளிப்பாடுகளைக் கொண்ட பத்து நாடுகளில் எட்டு ஆப்பிரிக்காவில் உள்ளன. மீதமுள்ள இரண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளன" என்கிறார் மார்டினா ஓட்டோ. ''காற்று தரக் கட்டுப்பாடு வலுவாக இல்லாதது, பலவீனமான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த பிராந்தியங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்தும் திசையில் சவால்களை சந்தித்து வருகின்றன.'' "புதைபடிவ எரிபொருட்கள் மீதான சார்பு அல்லது வீடுகளில் பாரம்பரிய எரிபொருட்களின் பயன்பாடு, பழைய வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வசதி இல்லாமை, போதுமான கழிவு மேலாண்மை இல்லாததால் கழிவுகளை திறந்தவெளியில் எரித்தல் ஆகியவற்றால் இந்த பிரச்னை மேலும் அதிகரிக்கிறது,” என்று மார்டினா ஓட்டோ குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05jqnj873mo
-
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'The Mall' வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
06 SEP, 2024 | 11:06 AM கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'The Mall' வரியில்லா வர்த்தக தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று வியாழக்கிழமை (05) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கும். பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, வணிக வளாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டார். துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். வெளிநாட்டு கடன் வழங்குனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று துறைமுக நகரத்தில் இந்த வரியில்லா வர்த்தக தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும். இலங்கையின் சுற்றுலா துறை உலக அளவில் பிரசித்தம் பெற்றுள்ளது. இந்த வர்த்தகக் கட்டிட தொகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் வணிக வளாகங்களை நிர்மாணித்து இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்தியுள்ளோம். இது துறைமுக நகரத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும். துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமக்கு இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதன் காரணமாகவே இன்று இப்பணியை செய்ய முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு நாம் உடன்படிக்கை செய்துள்ளோம். அந்த ஒப்பந்தங்களை மாற்றாமல் தொடர்ச்சியாக கொண்டுச் சென்றால் இலங்கைக்கு நல்ல எதிர்காலம் கிட்டும். அந்த உடன்படிக்கைகளில் திருத்தம் செய்ய முற்பட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகும். குறிப்பாக 100 நிறுவனங்கள் இன்று துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அதில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளன. மேலும், கொழும்பு கோட்டையில் புதிய சுற்றுலா வலயத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதனால், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொலிஸ் தலைமையகம் இடம் மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது. குடியரசு சதுகத்தையும் புதுப்பித்து, அந்தப் பகுதியை சுற்றுலா வலயமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பழைய தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். பழைய துறைமுகம் மற்றும் அதன் இறங்குதுறை மற்றும் பழைய சுங்க கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் சுற்றுலா அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும். கடற்படைத் தலைமையகம் தற்போது அக்குரேகொடைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பழைய இடத்தில் புதிய ஹோட்டல்களை அமைக்கலாம். தற்போதுள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விரிவான சுற்றுலாத்துறையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய சுற்றுலா பயணிகளை அதிக அளவில் அழைத்து வர வேண்டும். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். இரண்டு வருடங்களில் இப்படியொரு வணிக வளாகத்தை ஆரம்பிக்க முடிந்ததற்கு பெருமைப்பட வேண்டும். 7000 சதுர மீட்டருக்குள் 03 உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் வர காத்திருக்கின்றன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து முன்னேறி இந்த துறைமுக நகரை உலகப்புகழ் பெற்ற மையமாக மாற்றுவோம் என்றார். முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; நகர மையத்தில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை திறந்துவைத்தமை அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். இதை நனவாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போதுள்ள சட்ட வரையறைகளுக்குள் செயற்படுவது மிகச் சவாலாக இருந்தது. அதுகுறித்து ஜனாதிபதியும், இதன் தலைவரும் அறிவார்கள். பழைய சட்டதிட்டங்களுக்கு அமைய இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறோம். நாம் தற்போது புதிய அத்தியாத்திற்குள் நுழைந்திருக்கிறோம். கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான சகல வங்கி சட்டங்களும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி கொழும்பு துறைமுக நகரம் முழுமையாக வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. நெருக்கடிகளுக்கு மத்தியில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலப்பகுதியில் இவ்வாறானதொரு கட்டிடத்தொகுதியை திறந்து வைப்பதற்கான சூழலை உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சாங் குய்பென்ங் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/192977
-
மாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பெண் பணியாளர்கள் படுகாயம்!
06 SEP, 2024 | 10:32 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் - துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 43, 40, 39 வயதுடையவர்கள் என்பதுடன் இவர்களில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/192969
-
13ஐ நடைமுறைப்படுத்துவதாக வழங்கும் வாக்குறுதிகள் தேர்தல் கால வெற்றுக் காசோலைகள் - யாழில் அநுர தெரிவிப்பு
06 SEP, 2024 | 09:55 AM 13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழில் தெரிவித்தார். யாழ். விரசிங்கம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தனது ஜனாதிபதி பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு 13ஐ காட்டி வாக்குகளை பெறும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. நான் தமிழ் மக்களிடம் 13 தருகிறேன் என வியாபாரத்தை கூற மாட்டேன் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன். நாட்டில் நீண்ட காலமாக புரையோடி உள்ள இலஞ்சம், ஊழல் வாதிகளை அப்புறப்படுத்தி புதிய இலங்கையை உருவாக்குவதே எனது இலக்கு அதற்காகவே மக்கள் எங்களோடு அணி திரண்டுள்ளனர். நாட்டு மக்கள் எம்முடன் நடு திரண்டுள்ள நிலையில் சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீரழிக்கப் பார்க்கிறார். சஜித் பிரேமதாச 13 தரப் போகிறாரா அல்லது 13 பிளஸ் தரப் போகிறாரா என்பது தொடர்பில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை நாட்டு மக்களை கடனாளியாக்கவில்லை, நாட்டை கொள்ளையடித்தவர்களும் நாட்டை கடனாளியாக்கியவர்களும் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சஜித் மற்றும் ரணில் பக்கமே உள்ளனர். இது ஏன் கூறுகிறேன் என்றால் ராஜபக்சர்கள் நாட்டை கொள்ளை அடித்து விட்டார்கள் என கூறிய ரணில் தரப்பினரில் சிலர் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசா பக்கம் உள்ளனர். அதேபோல மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மூடி மறப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவருடன் ஊழல் மோசடிகளை தடுப்போம் என கூறி வந்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கம் பக்கத்தில் இருந்த சிலர் நாமல் ராஜபக்சவின் பக்கத்துக்கு சென்றுள்ளனர். ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் நாமல், சஜித், ரணில் அணிகள் நாட்டை திருடிய நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற நபர்களை உள்ளடக்கிய கூட்டமே பகுதி பகுதியாக மூவர் பக்கமும் பிரிந்து நிற்கின்றனர். இவர்களால் நாட்டை அழித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது ஏனெனில் மூவரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள். ஆகவே தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்து உள மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் வடக்கு மக்களும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க தயாராக வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/192967
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுகள் : சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது : பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு - தேர்தல்கள் ஆணைக்குழு 05 SEP, 2024 | 09:42 PM (இராஜதுரை ஹஷான்) தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய தபால்மூல வாக்களிப்பு நேற்று (4) ஆரம்பமானது. 1500 அதிகமான வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அரச சேவையாளர்கள் வாக்களித்துள்ளனர். தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட மூன்று தினங்கள் இன்றுடன் நிறைவடையும். இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும். தபால்மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைதியான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடளிக்கலாம். சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களால் அவர்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.ஆகவே அனைவரும் பொறுப்புடன் தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும். தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை வாக்கெடுப்பு நிறைவடைந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும். தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளோம். தவறான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/192953
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கிய விமானம் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும்!
06 SEP, 2024 | 11:18 AM இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித்திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட 2019இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நன்கொடை இலங்கை விமானப்படையுடன் காணப்படும் நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் இம்மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும். இலங்கை விமானப்படைக்கு எவ்வித செலவுகளுமின்றி, அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இம்மானியமானது, விமானம் மற்றும் அதற்கு தேவையான உதவிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இவ்விமானம் அது தொடர்பான அறிமுகம் மற்றும் அதை இயக்குவது தொடர்பான பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர், இவ்வாண்டின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை அதிகாரிகள் இவ்விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகள் மூன்று மாதகால பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துவார்கள். Beechcraft Textron Aviation நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டின் இறுதியில் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட இவ்விமானமானது 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி செய்யப்பட்ட ரேடார் மற்றும் புகைப்படக் கருவிகள் போன்ற கடல்சார் ரோந்துப் பணிக்கு தேவையான உணரிகளை நிறுவுதல் உட்பட மேலதிக மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டது. அடுத்த வாரம் வருகைதருமென எதிர்பார்க்கப்படும் விமானத்தின் வருகைக்குத் தயாராவதற்காக 2024 ஜூன் முதல் ஒகஸ்ட் மாதம் வரை, கன்சாஸ் மற்றும் புளோரிடாவில் இடம்பெற்ற பயிற்சிகளில் இலங்கை விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கையை வந்தடைந்ததும், திருகோணமலை சீனக்குடாவிலுள்ள Maritime Patrol Squadron 3உடன் இணைந்துகொள்வதற்கு முன்பாக இவ்விமானம் இரத்மலானையிலுள்ள விமானப் படைத்தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு உட்படும். https://www.virakesari.lk/article/192981
-
சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் எமக்கு தேவையில்லை; புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் - வவுனியாவில் அநுர
05 SEP, 2024 | 09:51 PM எங்களுக்கு தெற்கு சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமோ அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமோ தேவையில்லை. வடக்கு, கிழக்கு தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே தேவை என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டி வரமாட்டார். ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். ஆனால், அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை அரசியல். கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம். பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும். இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்கு நூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை. இப்போதே இந்த நாட்டை கட்டியெழுப்ப ஆரம்பிக்கவேண்டும். விவசாயத்தை பாதுகாக்கவேண்டும். உங்கள் ஆபரணங்கள் எங்கே? அவை வங்கிகளில் இருக்கின்றன. எனவே இந்த விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். விதை ஆராய்ச்சி நிலையங்களை புதுப்பிக்கவேண்டும். போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே. அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். எங்களுக்கு எவ்வாறான ஒரு அரசாங்கம் தேவை. தெற்கில் சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமா அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமா? அப்படியான அரசு எமக்கு தேவையில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே எங்களுக்குத் தேவை. இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் உருவானது தெற்கில் இருந்து மட்டுமே. இம்முறை வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யவேண்டும். ரணில் கடைசி நேரத்தில் என்ன செய்வாரோ என்று கூறுகின்றனர். ஒன்றுமில்லை. அவர் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று. இந்த கள்வர்களை, நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தவர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, உலகத்திடம் எங்களை அவமானப்படுத்தியவர்களை, போரை உருவாக்கியவர்களை, மூவின மக்களிடையில் சண்டைகளை உருவாக்கியவர்களை என அனைவரையும் ஒன்றாக தோற்கடித்து நாட்டை பசுமையாக்கி மக்களின் வாழ்க்கையினை அழகாக்கும் ஒரு புதிய அரசை கொண்டுவருவதற்காக நாம் பாடுபடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/192949
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு 05 SEP, 2024 | 11:02 AM கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறிவருகிறது. கொல்கத்தா காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைதான முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை 8 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. இந்த நிலையில், நிதி முறைகேடு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சந்தீப் கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சிபிஐ விசாரணையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் செப். 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனையொட்டி, புதன்கிழமை இரவு கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண்ணின் தந்தை, “போலீஸார் ஆரம்பத்திலிருந்தே, இந்த வழக்கை மூடிமறைக்க முயல்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போது எங்களை அவர்கள் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. நாங்கள் காவல் நிலையத்தில்தான் காத்திருந்தோம். பின்னர், உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்” என்றார். இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/192890
-
ஒரு புறம் பாலத்தீனர்களுக்கு எதிரான வன்முறை, மறுபுறம் நில ஆக்கிரமிப்பு - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் டச்சி, ஜியாத் அல்-கத்தான், எமிர் நாடர் மற்றும் மேத்யூ கேஸல் பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 4 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பாலத்தீனிய முதிர் பெண் ஆயிஷா ஷ்டய்யே, கடந்த அக்டோபரில் ஒரு நபர் தனது தலையை நோக்கி துப்பாக்கியை காட்டி, 50 ஆண்டுகளாக வசித்து வந்த தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக கூறினார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் தனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு சட்டவிரோத குடியேற்ற முகாம் நிறுவப்பட்ட பின்னர், 2021-ஆம் ஆண்டில் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் அதிகரித்தது என்றும், அந்த வன்முறை செயல்பாட்டின் உச்சக்கட்டமாக தற்போது ஆயுத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். சமீபத்திய ஆண்டுகளில் இந்த முகாம்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருப்பதை பிபிசியின் புதிய பகுப்பாய்வு காட்டுகிறது. மேற்குக் கரை முழுவதும் தற்போது குறைந்தது 196 முகாம்கள் உள்ளன, கடந்த ஆண்டு மேலும் 29 அமைக்கப்பட்டன. முந்தைய ஆண்டை விட இது அதிகம். அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் இல்லை குடியேற்ற முகாம்கள் என்பது பண்ணைகள், குடியிருப்புப் பகுதிகள் அல்லது கேரவன்களின் தொகுப்பாக இருக்கலாம். மேலும் இஸ்ரேலிய மற்றும் சர்வதேச சட்டத்தின்படி இந்த முகாம்கள் சட்டவிரோதமானவை. ஆனால் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்கள் புதிய சட்டவிரோத குடியேற்ற முகாம்களை நிறுவுவதற்கு பணத்தையும் நிலத்தையும் வழங்கியதை காட்டும் ஆவணங்களை பிபிசி உலகச் சேவை பார்த்தது. பிபிசி, திறந்த மூல நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (open source intelligence) பயன்படுத்தி அவற்றின் பரவலை ஆய்வு செய்தது, மேலும் ஆயிஷா ஷ்டயே தன்னை அச்சுறுத்தியதாகக் கூறும் குடியேற்றக்காரரையும் விசாரித்தது. குடியேற்ற முகாம்கள், குடியிருப்புகளை காட்டிலும் அதிக நிலப்பரப்புகளை விரைவாகக் கைப்பற்ற முடியும், மேலும் அவை பாலத்தீனிய சமூகங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,MATTHEW CASSEL / BBC படக்குறிப்பு, ஆயிஷா ஷ்டயே வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தன் வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்கிறார் குடியேற்ற முகாம்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால் பிபிசி ஐ (BBC Eye) அவற்றின் இருப்பிடங்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்தது. இந்த பட்டியல், இஸ்ரேலிய குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்புகளான பீஸ் நவ் மற்றும் கெரெம் நவோட் ஆகியவற்றுடன் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியை இயக்கும் பாலத்தீனிய அதிகார அமைப்பால் சேகரிக்கப்பட்டது. இந்த இடங்களில் குடியேற்ற முகாம்கள் கட்டப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கவும் அவை அமைக்கப்பட்ட ஆண்டை உறுதிப்படுத்தவும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தோம். இந்த தகவல்களை உறுதிப்படுத்தவும் குடியேற்ற முகாம் இன்னும் செயல்பாட்டில் உள்ளன என்பதைக் காட்டவும் சமூக ஊடகப் பதிவுகள், இஸ்ரேலிய அரசாங்க வெளியீடுகள் மற்றும் செய்தி ஆதாரங்களை பிபிசி சரிபார்த்தது. படக்குறிப்பு, மேற்கு கரையிலுள்ள சட்டவிரோத குடியேற்ற முகாம்கள் வன்முறைகளுடன் தொடர்புடைய முகாம்கள் நாங்கள் ஆய்வு செய்து சரிபார்த்த 196 குடியேற்ற முகாம்களில் கிட்டத்தட்ட பாதி(89), 2019 முதல் கட்டப்பட்டவை என்று எங்கள் பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இவற்றில் சில முகாம்கள், மேற்குக் கரையில் பாலத்தீன சமூகங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளுடன் தொடர்புடையவை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாலத்தீனியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதற்காக அல்லது வன்முறையில் ஈடுபட்டதற்காக கடும்போக்கு குடியேற்றவாசிகள் எட்டு பேருக்கு பிரிட்டன் அரசு தடை விதித்தது. இதில் குறைந்தது ஆறு பேராவது சட்டவிரோத குடியேற்ற முகாம்களை நிறுவியுள்ளனர் அல்லது அதில் வாழ்ந்து வருகின்றனர் . மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தின் முன்னாள் தளபதி அவி மிஸ்ராஹி, பெரும்பாலான குடியேற்றவாசிகள் சட்டத்தை மதிக்கும் இஸ்ரேலிய குடிமக்களாக உள்ளனர் என்று கூறுகிறார். அதே சமயம் குடியேற்ற முகாம்கள் இருப்பது வன்முறையை அதிகமாக்குகிறது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். "நீங்கள் அந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்ற முகாம்களை அமைக்கும் போதெல்லாம், அது அதே பகுதியில் வசிக்கும் பாலத்தீனியர்கள் உடனான பதற்றத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார். தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக ஆயிஷா கூறிய நபரான மோஷே ஷர்விட், பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்ட கடும்போக்கு குடியேற்றக்காரர்களில் ஒருவர். ஆயிஷாவின் வீட்டிலிருந்து 800 மீட்டர்(0.5 மைல்) தொலைவில் அவர் அமைத்த குடியேற்ற முகாம் உள்ளது. அந்த நபருக்கும், அந்த முகாமிற்கும் மார்ச் மாதம் அமெரிக்க அரசு தடை விதித்தது. அவரது முகாம் "பாலத்தீனியர்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும் தளம்" என்று விவரிக்கப்பட்டது. 'வாழ்க்கை நரகமாகி விட்டது' "அந்த நபர் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்" என்று ஆயிஷா கூறுகிறார், அவர் தற்போது நப்லஸுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். சாதாரண குடியேற்றங்களை போலல்லாமல், இந்த சட்டவிரோத குடியேற்ற முகாம்களுக்கு அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய கட்டுமான திட்டமிடலுக்கான அங்கீகாரம் இல்லை. சாதாரண குடியேற்றங்கள் பொதுவாக மேற்குக் கரை முழுவதும் நகர்ப்புறத்தில், பெரியளவில் கட்டப்பட்ட யூத மக்கள் வசிப்பிடங்களாகும். இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் இவை சட்டப்பூர்வமானவை ஆனால் இந்த இரண்டு குடியேற்றங்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கருதப்படுகின்றன, இது குடிமக்களை ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நகர்த்துவதை தடை செய்கிறது. ஆனால் மேற்குக் கரையில் வாழும் பல குடியேற்றவாசிகள் யூதர்களாகிய தங்களுக்கு அந்த நிலத்துடன் மத மற்றும் வரலாற்றுத் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர். ஜூலை மாதம், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் முன்வைத்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தில், இஸ்ரேல் அனைத்து புதிய குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியில் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று கூறியது. இஸ்ரேல் இந்த கருத்தை "அடிப்படையில் தவறானது" என்றும் ஒருதலைபட்சமானது என்றும் நிராகரித்தது. குடியேற்ற முகாம்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை என்ற போதிலும், அவற்றின் விரைவான வளர்ச்சியைத் தடுக்க இஸ்ரேலிய அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்பதற்குச் சிறியளவிலான சான்றுகள் கூட இல்லை. மேற்குக் கரையில் புதிய குடியேற்ற முகாம்களை அமைப்பதற்கு பணத்தையும், நிலத்தையும் இஸ்ரேலிய அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இரண்டு அமைப்புகள் எவ்வாறு வழங்கியுள்ளன என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களை பிபிசி கண்டது. பட மூலாதாரம்,MATTHEW CASSEL / BBC படக்குறிப்பு, குடியேற்ற முகாம்கள் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது உலக சியோனிச அமைப்பு (WZO), ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் நிறுவப்பட்ட சர்வதேச அமைப்பாகும். இது இஸ்ரேல் அரசை நிறுவியதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குடியேற்றத்திற்கான ஒரு பிரிவைக் கொண்டுள்ளது. 1967 முதல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை இப்பிரிவு மேற்கொள்கிறது. இந்த பிரிவு முற்றிலும் இஸ்ரேலிய பொது நிதியால் நிதியளிக்கப்படுகிறது. இது தன்னை "இஸ்ரேலிய அரசின் ஆயுதம்" என்று விவரிக்கிறது. பீஸ் நவ் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்கள் பிபிசியால் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அந்த ஒப்பந்தங்களின்படி, உலக சியோனிச அமைப்பின் குடியேற்றப் பிரிவால் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோத முகாம்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த ஒப்பந்தங்களின்படி உலக சியோனிச அமைப்பு அந்த நிலங்களில் எந்தவொரு கட்டமைப்புகளையும் கட்டுவதைத் தடை செய்துள்ளது. அந்த நிலத்தை மேய்ச்சலுக்கு அல்லது விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் செயற்கைக்கோள் படங்களை பார்க்கும்போது அந்த நிலங்களில் குறைந்தது நான்கு பகுதிகளில், சட்டவிரோத முகாம்கள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. அமானா அமைப்பு வழங்கிய கடன் இந்த ஒப்பந்தங்களில் ஒன்று 2018-இல், ஸ்வி பார் யோசெஃப்-ஆல் கையெழுத்திடப்பட்டது. இவரும் பாலத்தீனியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல்களுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டவர். மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட பல நிலப்பரப்புகள் சட்டவிரோத முகாம்களை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படுவது பற்றி தெரியுமா என்று கேட்க உலக சியோனிச அமைப்பை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் ஸ்வி பார் யோசெஃபிடம் கேள்விகளை எழுப்பினோம், ஆனால் பதில் வரவில்லை. மற்றொரு முக்கிய குடியேற்ற அமைப்பு - அமானா. இந்த அமைப்பு குடியேற்ற முகாம்களை நிறுவ உதவுவதற்காக பல்லாயிரக்கணக்கான ஷெக்கல்களை (இஸ்ரேலிய பணம்) கடனாக வழங்கியதை வெளிப்படுத்தும் இரண்டு ஆவணங்களையும் பிபிசி பார்த்தது. இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் ஒரு முகாமில் பசுமை இல்லங்களைக் கட்டுவதற்காக ஒரு குடியேற்றவாசிக்கு 1,000,000 ஷெக்கல்களை ($270,000/£205,000) கடனாக இந்த அமைப்பு வழங்கியது. அமானா 1978இல் நிறுவப்பட்டது. மேற்குக் கரை முழுவதும் குடியிருப்புகளை உருவாக்க இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அமானாவும் சட்டவிரோத முகாம்களை ஆதரிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2021இல் இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தின் போது பதிவு செய்தததை ஒரு ஆர்வலர் கசியவிட்டார். அதில் அமானாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீவ் ஹெவர் இவ்வாறு கூறுவதைக் கேட்க முடிகிறது: "கடந்த மூன்று ஆண்டுகளில்... நாங்கள் விரிவாக்கிய ஒரு விஷயம் மேய்ச்சல் பண்ணை [சட்டவிரோத முகாம்கள்]." "இன்று [அவர்கள் கட்டுப்படுத்தும்] அந்த பகுதி, கட்டமைக்கப்பட்ட குடியிருப்புகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது." இந்த ஆண்டு கனடா அரசு, "பாலத்தீனிய குடிமக்கள் மற்றும் மேற்குக் கரையில் உள்ள அவர்களின் சொத்துக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஸ்திரமின்மை நடவடிக்கைகளுக்கு" பொறுப்பான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக விதித்த தடைகளில் அமானா அமைப்பின் பெயரும் இருந்தது. ஆனால், அந்த தடைகளில் முகாம்களை பற்றிக் குறிப்பிடவில்லை. முகாம்களை அமைக்க, ஏன் கடன்களை வழங்குகிறது என்று கேட்க அமானாவை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், அவர்கள் பதில் அளிக்கவில்லை. இஸ்ரேலிய அரசாங்கம் குடியேற்ற முகாம்களை சட்டப்பூர்வமாக்கும் போக்கும் காணப்படுகிறது. திறம்பட அவற்றை குடியிருப்புகளாக மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு, அரசாங்கம் குறைந்தபட்சம் 10 குடியேற்ற முகாம்களை சட்டப்பூர்வமாக்கும் செயல்முறையைத் தொடங்கியது, மேலும் குறைந்தது ஆறு முகாம்களுக்கு முழு சட்ட அந்தஸ்தை வழங்கியது. பட மூலாதாரம்,MATTHEW CASSEL / BBC படக்குறிப்பு, பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்திலிருந்து தான் துரத்தப்பட்டதாக நபில் கூறுகிறார். தன்னை வெளியேற்றியதாக ஆயிஷா ஷ்டயே குறிப்பிட்ட குடியேற்றக்காரர் மோஷே ஷர்விட், பிப்ரவரி மாதம் தனது முகாமின் தொடக்க விழா நிகழ்வை நடத்தினார்.இது உள்ளூர் கேமரா குழுவினரால் படமெடுக்கப்பட்டது. அப்போது வீடியோவில் பேசிய அவர், நிலத்தைக் கைப்பற்றுவதற்கு குடியேற்ற முகாம்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கினார். "நாங்கள் [குடியேறுபவர்கள்] குடியிருப்புகளை கட்டியபோது மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், நாங்கள் வேலிகளுக்குள் சிக்கிக்கொண்டோம், மேலும் விரிவுபடுத்த முடியவில்லை," என்று அவர் அந்த நிகழ்வில் கூடியிருந்த மக்களிடம் கூறினார். "பண்ணைகள் மிகவும் முக்கியமானது, ஆனால் எங்களுக்கு அதைவிட மிக முக்கியமான விஷயம் அதனை சுற்றியுள்ள பகுதி." என்றார் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் அவர் இப்போது சுமார் 7,000 துனாம்கள் (7 சதுர கிமீ) நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறினார் - இது ஆயிரக்கணக்கான மக்கள்தொகை கொண்ட மேற்குக் கரையில் உள்ள பல பெரிய நகர்ப்புற குடியிருப்புகளைக் காட்டிலும் பெரியது. பெரும்பாலும் பாலத்தீனிய சமூகங்களை வெளியேற்றி, பெரிய பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெற்று, முகாம்களை அமைத்து அதில் வசிப்பதே சில குடியேறிகளின் முக்கிய குறிக்கோளாகும், என்கிறார் பீஸ் நவ்வின் ஹாகிட் ஆஃப்ரன். "மலை உச்சியில் [குடியேற்ற முகாம்களில்] வசிக்கும் குடியேற்றவாசிகள் தங்களை 'நிலங்களின் பாதுகாவலர்கள்’ என்று கருதுகின்றனர், மேலும் அவர்களின் அன்றாட வேலை பாலத்தீனியர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதாகும்," என்று அவர் கூறுகிறார். மோஷே ஷர்விட் 2021 இன் பிற்பகுதியில் தனது முகாமை அமைத்த உடனேயே துன்புறுத்தல் மற்றும் மிரட்டலை தொடங்கினார் என்று ஆயிஷா கூறுகிறார். பல ஆண்டுகளாக தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் நிலங்களில் தனது ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும்போது, ஷர்வித் ஒரு வாகனத்தில் வருவார் என்றும், அவரும் இளம் குடியேற்றவாசிகளும் கால்நடைகளை விரட்டுவார்கள் என்றும் ஆயிஷாவின் கணவர் நபில் கூறுகிறார். "அரசு, காவல்துறை அல்லது நீதிபதி எங்களிடம் சொன்னால் மட்டுமே நாங்கள் வெளியேறுவோம் என்று நான் பதிலளித்தேன்" என்று நபில் கூறுகிறார். "அதற்கு அவர் என்னிடம், 'நான்தான் அரசாங்கம், நான்தான் நீதிபதி, நான்தான் போலீஸ்’ என்றார்'' என்று கூறுகிறார் நபில் மேய்ச்சல் நிலத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மோஷே ஷர்விட் போன்ற குடியேற்றக்காரர்கள் பாலத்தீனிய விவசாயிகளை ஆபத்தான நிலைக்கு தள்ளுகின்றனர் என்று பாலத்தீனிய அதிகாரசபையின் காலனித்துவம் மற்றும் சுவர் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் மொயாத் ஷபான் கூறுகிறார். "இது பாலத்தீனியர்களுக்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துகிறது. அவர்களால் சாப்பிட முடியாது, மேய்ச்சலுக்கு செல்ல முடியாது, தண்ணீர் எடுக்க முடியாது, ”என்று அவர் கூறுகிறார். அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் மற்றும் காஸா போரை தொடர்ந்து, மோஷே ஷர்விட்டின் துன்புறுத்தல் இன்னும் ஆக்ரோஷமாக மாறியது என்று குடியேற்றவாசிகளின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் பாலத்தீனிய சமூகங்களை ஆதரிக்கும் ஏரியல் மோரன் கூறுகிறார். ஷர்வித் எப்பொழுதும் வயலில் ஒரு கைத்துப்பாக்கியை தன்னுடன் எடுத்து செல்வார். ஆனால் இப்போது அவரின் தோளில் ஒரு பெரிய தாக்குதல் துப்பாக்கியுடன், ஆர்வலர்கள் மற்றும் பாலத்தீனியர்களை எதிர்கொள்ள தொடங்கினார். மேலும் அவரது அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமாக மாறியது என்று ஏரியல் கூறுகிறார். "அவர் ஒரு குறுக்குவழியை தேர்வு செய்தார் என்று நான் நினைக்கிறேன், மேலும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் காத்திருக்காமல் படிப்படியாக அவர்களை [பாலஸ்தீனிய குடும்பங்கள்] வெளியே அனுப்ப முடிவு செய்தார்.'' “ஒரே இரவில் செய்ய முடிவு செய்யப்பட்டது. அது அவருக்கு நன்றாக வேலை செய்தது." மோஷே ஷர்விட்டின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷாவை போல, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு பல குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறின. மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ( OCHA) மேற்குக் கரை முழுவதும் குடியேற்றவாசிகளின் வன்முறை "முன்னெப்போதும் இல்லாத அளவை" எட்டியுள்ளது என்கிறது. கடந்த 10 மாதங்களில், பாலத்தீனியர்களுக்கு எதிராக 1,100 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை குடியேறிகள் நடத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது. அக்டோபர் 7 முதல் குறைந்தது 10 பாலத்தீனியர்கள் குடியேறியவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று OCHA கூறுகிறது. அதே காலக்கட்டத்தில் மேற்குக் கரையில் பாலத்தீனியர்களால் குறைந்தது ஐந்து குடியேறிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது. பட மூலாதாரம்,MATTHEW CASSEL / BBC படக்குறிப்பு, ஆயிஷா சேதப்படுத்தப்பட்ட தனது சோபாவை பிபிசி குழுவிடம் காட்டுகிறார் டிசம்பர் 2023 இல், அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக சொன்ன இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆயிஷாவும் நபிலும் அவர்களது உடைமைகளில் சிலவற்றைச் சேகரிக்கத் திரும்புவதை நாங்கள் படம்பிடித்தோம். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு சூறையாடப்பட்டிருப்பது தெரிந்தது. யாரோ ஒரு கத்தியை கொண்டு சோஃபாக்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருந்தனர். "நான் அவரை காயப்படுத்தவில்லை. நான் அவரை ஒன்றும் செய்யவில்லை. எனக்கு இப்படி ஏன் நடந்தது?” என்று ஆயிஷா கூறினார். அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது மோஷே ஷர்விட் ஒரு வாகனத்தில் வந்தார். சிறிது நேரத்திற்குள், இஸ்ரேலிய போலீஸ் மற்றும் ராணுவம் அங்கு வந்தது. அவர்கள் தம்பதியிடமும், அவர்களுடன் வந்த இஸ்ரேலிய அமைதி ஆர்வலர்களிடமும், தாங்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினர். "அவர் எங்களுக்காக எதையும் விட்டு வைக்கவில்லை" என்று ஆயிஷா பிபிசியிடம் கூறினார். மோஷே ஷர்விட்டிடம் பலமுறை தொடர்பு கொண்டு, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேட்க முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,YOTAM RONEN / BBC படக்குறிப்பு, மோஷே ஷர்விட்டை பிபிசி அணுகியபோது, அவர் வேறு யாரோ என்று கூறினார் ஜூலை 2023 இல், பிபிசி அவரது முகாமில் அவரை நேரில் அணுகி குற்றச்சாட்டுகளுக்கு அவரது பதிலைத் தேடியது. பாலத்தீனியர்களை குறிப்பாக ஆயிஷா போன்றவர்களை அப்பகுதிக்குத் திரும்ப அனுமதிப்பீர்களா என்று கேட்டது. நாங்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை என்று கூறிய அவர், தான் மோஷே ஷர்விட் அல்ல என்று மறுத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg170xdl25o
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் சென்றடைந்தனர் 05 SEP, 2024 | 04:25 PM இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் இன்று வியாழக்கிழமை காலையில் ராமேசுவரம் .சென்றடைந்தனர் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின் செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த ஜுலை 23-ம் தேதி அன்று கைப்பற்றப்பட்டது. படகுகளிலிருந்த 9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 7 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தது. அதேசமயம் ஹரி கிருஷ்ணன சகாய ராபர்ட் ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இரவு சென்னைசென்றடைந்தனர். . பின்பு மீனவர்கள் 7 பேரும் மீன்வளத்துறையினர் மூலம் தனி வாகனத்தில் ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை காலை அழைத்து செல்லப்பட்டனர். https://www.virakesari.lk/article/192937
-
கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?
அஜித்துக்கு மங்காத்தா போல, விஜய்-க்கு ‘தி கோட்’? ரசிகர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT படக்குறிப்பு, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று வெளியானது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘தி கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம், இன்று (வியாழன், செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். தமிழ்நாடு தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தவிர, நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி என ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்குச் சிறப்பு காட்சிகள் துவங்கின. ஆனால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காலை 4 மற்றும் 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டன. படம் பார்த்த ரசிகர்கள், அது குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT படக்குறிப்பு, இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். விஜய் நடிப்பு எப்படி? கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திரையரங்கங்களில் காலை 4 மணிக்கு ‘தி கோட்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் எல்லை கடந்து வந்திருந்தனர். முதல் காட்சி முடிந்த பிறகு பிபிசி தமிழிடம் பேசிய காஜா, விஜய் நடிப்பில் ‘தி கோட்’ திரைப்படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். “சின்ன வயது விஜய் கதாபாத்திரம் சூப்பராக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான நாளைய ‘தீர்ப்பு படத்தில்’ வரும் அவரது முகம் போல இந்தப் படத்தில் வரும் காட்சி நன்றாக உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு ‘நாளைய தீர்ப்பு’ படம் வந்த போது விஜய்யின் முகத்தை விமர்சனம் செய்தவர்களுக்கு ‘தி கோட்’ படம் அதே முகத்தை மீண்டும் திரையில் காட்டி பதிலடி கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார். “வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படம் மாதிரி இருக்கும் என்று நான் நினைத்து படம் பார்க்க வந்தேன். விஜய் ரசிகரான எனக்கு இந்தப் படம் திருப்தி அளிக்கவில்லை. விஜய்யின் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்,” என்றார் மற்றொரு ரசிகர். நடிகர் விஜய்யின் திரை அனுபவத்திற்காகப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிறார் மற்றொரு ரசிகரான ஜீவா. முதல்முறையாக ரசிகர்களின் சிறப்புக் காட்சியைக் காண வந்திருக்கிறேன். படம் நல்ல அனுபவமாக இருந்தது என்றார், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த அனுபமா. சென்னையில் படம் பார்த்து விட்டு வந்து பிபிசியிடம் பேசிய ரசிகை ஒருவர், “விஜய் அழுகும் அந்த காட்சி எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. நானும் அந்த காட்சியில் அழுதுவிட்டேன். ஓவ்வொரு படத்திற்கு புதிய உயரங்களை விஜய் அடைகிறார்,” என்று தெரிவித்தார். கோவையைச் சேர்ந்த ரசிகரான இளையராஜா, படம் குறித்து பிபிசி-இடம் பேசும் போது, “விஜய்யின் இந்த ‘கெட்டப்’ வித்தியாசமாக இருந்தது. முந்தைய படங்களை விட தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கோட் படத்தின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார். படம் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்ட பாடலில் வரும் விஜய்யின் கெட்டப் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன என்றும், ஆனால் படத்தில் அந்தப் பாடலைப் பார்க்கும் போது அந்த ‘கெட்டப்’ ஏன் வருகிறது என்று புரிகிறது என்றும் கூறினார் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர். “விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் படம் என்பதால் அரசியல் கருத்துகள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அரசியல் கலவையின்றி ரசிகர்களுக்காக இந்த படம் உள்ளது,” என்கிறார் என்றார் ஆஷிக் என்ற ரசிகர். பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT படக்குறிப்பு, விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளிவரும் படம் இது. பழைய கதை, ஆனால்… படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்ததால், 3 மணி நேரம் படம் நீளமாகத் தெரியவில்லை என்கிறார், பாலக்காட்டில் படம் பார்த்து விட்டு வந்த ஜோவிஷ். பிபிசி-இடம் பேசிய மற்றொரு ரசிகர், படத்தின் முதல் பாதி தனக்கு பிடித்திருந்தாகவும், இரண்டாவது பாதியில் நிறைய குழப்பமான காட்சிகள் இருந்தன என்றார். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குப் படம் பார்க்கச் சென்ற ரசிகரான மணி, தி கோட் படத்தின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாகக் கூறினார். “இரண்டாவது பாதியில் நிறைய கதபாத்திரங்கள் வருகின்றன. குறிப்பாக, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் வரும் காட்சி எனக்குப் பிடித்திருந்தது,” என்றார். பிபிசி-இடம் பேசிய சென்னையைச் சேர்ந்த கிஷோர், முதல் பாதி மெதுவாக நகர்ந்ததாகவும், . இரண்டாவது பாதி திருப்தியாக இருந்ததாகவும் தெரிவித்தார். “கதை எளிதில் கணிக்கும் வகையில் இருந்தது. நிறைய கதாபாத்திரங்கள் இருந்தது நினைவில் நிற்கவில்லை. எதிர்பார்த்து படத்துக்கு வந்த எனக்கு முழு திருப்தியில்லை,” என்றார். “ ‘தி கோட்’ படத்தில் பல்வேறு நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும், விஜய் மட்டுமே கதை முழுக்க வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் அளித்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் நினைவில் நிற்கும்படி காட்சிகள் இல்லை,” என்கிறார் கோவையைச் சேர்ந்த விக்னேஷ். தென்காசியில் இருந்து பாலக்காட்டில் உள்ள திரையரங்குக்கு நண்பர்களுடன் படம் பார்க்க வந்திருந்த குமரன் பிபிசி-இடம் பேசுகையில், “படத்தின் கதை பழைய கதையாக இருந்தாலும், அதனை சுவாரசியமாகப் படமாக்கி உள்ளனர். விஜய்யின் வேறொரு பரிணாமத்தை இந்தப் படத்தில் பார்க்க முடியும். நிறைய ஆச்சரியங்கள் படம் முழுக்க உள்ளது,” என்றார். கதை, திரைக்கதை சரியில்லை என்று பலரும் சொல்வார்கள். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் ரசிக்க முடியும், என்றார் ரசிகர் ஒருவர். விஜயகாந்த் ஒரு காட்சியில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவார். அந்தக் காட்சி நல்ல அனுபவத்தைக் கொடுத்தது என்றார் ஒரு ரசிகர். ஆனால், பிபிசி-இடம் பேசிய மற்றொரு ரசிகை, சில வினாடிகளே நீடிக்கும் அந்த விஜயகாந்த் காட்சி திரையில் எந்த தாக்கத்தையும் தனக்கு ஏற்படுத்தவில்லை, என்கிறார். பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT படக்குறிப்பு, பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர் மாஸ் காட்சிகள் உண்டா? படத்தில் வரும் இரண்டு விஜய் கதாபாத்திரங்களில், சின்ன வயது விஜய் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. அதே போல யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ராப்’ பாடல் சிறப்பாக உள்ளது என்றார் கேரளாவைச் சேர்ந்த ரசிகர். “இயக்குநர் வெங்கட் பிரபு காட்சிகளை விட தொழிநுட்பத்தை நம்பியிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு (AI), டீ-ஏஜிங் எனப் பல இடங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் காட்சிகள் அவ்வளவு தாக்கத்தை தனக்கு ஏற்படுத்தவில்லை,” என்கிறார் கேரளாவைச் சேர்ந்த ரெஜிஷ். சென்னையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பு குறைவாக இருந்தது. ஆனால் இப்போது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது, என்றார். ஆனால் மற்றொரு ரசிகர், அந்தக் கருத்தை ஏற்கவில்லை. படத்திற்குப் பொருந்தாத வகையில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இருந்ததாகவும், படத்தில் வரும் ஒரு ராப் பாடல் மட்டுமே ரசிக்கும்படி இருந்தது என்றும் தெரிவித்தார். “வெங்கட் பிரபு - விஜய் காம்போ முழுமையாக வொர்க் ஆகவில்லை. படத்தில் எந்த இடத்திலும் மாஸ் காட்சிகள் இல்லாமல் இருந்தது. அதை வெங்கட் பிரபு சரி செய்து இருக்கலாம்,” என்றார் சென்னையைச் சேர்ந்த கிஷோர். வெங்கட் பிரபு - விஜய் காம்போ மற்றொரு மங்காத்தா கேங் போல இருந்தது. படத்தில் சில இடங்களில் அஜித் படத்தின் சில குறியீடுகள் உள்ளன. அது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் என்றார் பிபிசி-இடம் பேசிய ரகு. டீ-ஏஜிங், செயற்கை நுண்ணறிவு என தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைக்கதையில் சுவாரசியமான காட்சிகளை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார், என்றார் ஒரு ரசிகர். “அடுத்த காட்சியில் என்ன டுவிஸ்ட் வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகர்ந்தது. நிறைய நடிகர்கள் கௌரவ கதாபாத்திரத்தில் படத்தில் வந்துள்ளனர். அது செயற்கையாக திணிப்பது போல இல்லாமல், படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவுகிறது என்றார்,” ரோஷிணி என்ற ரசிகர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ced1jngz0qdo
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
அண்ணை வயதுக்கேற்ப உடல் தளர்ந்து கொண்டு செல்லும்! ஆனால் மனம் என்றும் பதினாறு மார்க்கண்டேயனாக எண்ணும்.
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
என்ர காதில விழுந்ததால் உங்கள் ஆசையில் மண்ணைப் போட வாய்ப்புள்ளதாக நான் கனவிலும் எண்ணவில்லை அண்ணை. ஆனால் யாழைப் பார்த்தால் பாஸ்போட்டை பறித்து வீட்டுக் காவலில் வைக்க சந்தர்ப்பம் உள்ளதாகப் பட்சி சொல்லுது!