Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உங்கள் தலைமையில் கைலாசா போல ஒரு நாட்டை உருவாக்குவம் என்று கேட்டால் நித்தி வழியில் நடப்போம் என துடிக்கிறீர்களே!!
  2. புரிந்துகொள்கிறேன் அண்ணை.
  3. எனது தந்தை இதற்கு எதிர்மாறு! தொழிலாளர் நியாயமன்றில் சாதரண எழுதுவினைஞராக கடமையாற்றியபோது தொழிலாளர் நியாயமன்றின் நீதிபதி தனது தனிப்பட்ட வேலைகளுக்கு மன்றின் அலுவலக உதவியாளரை உபயோகித்தமையை சுட்டி எதிர்த்தமையால் 8 ஆண்டுகள் வேலையால் இடைநிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் வழக்காடி வெற்றிபெற்று மீளப்பணியில் இணைந்து சிரேஸ்ட எழுதுவினைஞராகவும் பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தன்னளவில் நேர்மையாகவும் தனக்குத் தெரிய ஊழல்கள் இடம்பெறாத வண்ணமும் பார்த்துக் கொண்டார். வேலை நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதை கட்டாயமாகப் பின்பற்றுவார். பிழை என்றால் நேரடியாகவே கண்டித்துவிடுவார். இதனால் மேலதிகாரிகளில் இருந்து சிற்றூழியர் வரை அவரில் அச்சம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
  4. பிணையில் விடுதலையான வைத்திய அர்ச்சுனாவுக்கு மக்கள் அமோக வரவேற்பு! மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை இன்றைய தினம் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார். வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். மன்னார் நீதவானின் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்தார். இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேர்த்தனர். பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூரைக்கு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307502
  5. Published By: DIGITAL DESK 7 07 AUG, 2024 | 06:48 PM இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்ததை நடைமுறைபடுத்துங்கள் அதுமட்டுமன்றி இந்திய மீனவர்கள் வடபகுதிக்கு நேரில் வந்து எமது வாழ்கை முறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கு விரைவான ஏற்பாடுகளை செய்யுமாறு யாழ்.மாவட்ட கடற்மொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் முன்னாள் தலைவரும் அகில இலங்கை மீனவ மக்கள் தொழில் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தொரிவித்தார். இலங்கை இந்திய பிரதிநிதிகள் இடையே சந்திப்பை ஏற்படுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் என்.ஜெய்சங்கர் உறுயளித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறைகளால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவது மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிற்கான வாழ்வாதாரம் பொருளாதரம் பாதிக்கப்படுகின்றது கடற்தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவேண்டிய சூழலே தோன்றியுள்ளது. இந்திய மீனவர்களது அத்துமீறல்களை நிறுத்தக்கோரி போராட்டங்கள் கோரிக்கைகள் என பலவிதமான போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டோம். பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு இருதரப்பு போச்சுவார்த்தையில் பல இணக்கம் காணப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தினாலே தீர்வினை ஏட்டக்கூடியதாக இருக்கும். 2016 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட தீர்மானங்களில் குறிப்பாக இழுவைமடி தொழில் முறைக்கான மாற்றத்தினை துரிதமாக மேற்கொள்ளுதல், ரோந்து நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை ஆராய்தல், கைதான மீனவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கடினமாக்குதல், கைதான மீன்பிடி படகுகளை விடுவிக்கும் பிரச்சினைகள் குறித்து ஆழமாக அவதானம் செலுத்துதல் போன்றன இணக்கம் காணப்பட்டது. இவற்றை நடைமுறைபடுத்தினாலே மீனவர்கள் பிரச்சினைகளை குறைத்துகொள்ள முடியும். இது மட்டுமன்றி தமிழ்நாட்டு மீனவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விஐயம் செய்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களை அறிவதற்கு கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலமும் இந்த பிரச்சினைகளை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் இது எவ்வாறு இருப்பினும் வெகு விரைவில் ஒரு தீர்வினைக்கண்டு வடகிழக்கு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வினை கண்டுக் கொள்ள இந்தியா உதவி செய்யவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/190531
  6. அண்ணை நான் உக்ரேனிய ஆதரவாளனோ ரஸ்யாவிற்கு எதிர்ப்பாளனோ அல்ல. அப்பாவி மக்களின் சாவினை ஆதரிக்காதவன்.
  7. வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் இந்த 'ஏழைகளின் வங்கியாளர்' யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி எங் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா பதவி, பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்றவரும், ஷேக் ஹசீனாவின் நீண்டகால அரசியல் எதிரியுமான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பதவி விலக வேண்டும் என்று பல வாரங்களாக வங்கதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே, 84 வயதான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா. யூனுஸ் மீது பல வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆறு மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மேல் முறையீடு செய்து, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் யூனுஸ். ‘அரசியல் ரீதியாக என் மீது போடப்பட்ட வழக்கு’ என்று யூனுஸ் அதை விவரித்திருந்தார். வங்கதேச மாணவர்களின் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய மாணவர்கள், ராணுவம் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை ஏற்க மறுத்து, பேராசிரியர் யூனுஸ் இடைக்கால அரசை வழிநடத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர். அதிபர் முகமது ஷஹாபுதீன், இராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பேராசிரியர் யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. "இவ்வளவு தியாகம் செய்த மாணவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் அரசை வழிநடத்துமாறு என்னைக் கோரும் போது, நான் எப்படி மறுக்க முடியும்?" என பேராசிரியர் யூனுஸ் கூறியிருந்தார். மருத்துவ சிகிச்சைக்காக பாரிஸ் சென்றுள்ள யூனுஸ், உடனடியாக டாக்கா திரும்புவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வங்கதேசத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், ஒரு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது. அரசுப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. திங்கட்கிழமை மட்டும், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது வங்கதேசத்தின் கறுப்பு நாளாக அமைந்தது. நூற்றுக்கணக்கான காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வங்கதேசத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷேக் ஹசீனா தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா சென்றார். இதன் மூலம் அவரது 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளில் ஒருபுறம் வங்கதேசத்தின் பொருளாதாரம் வளர்ந்தாலும், மறுபுறம் முன்னாள் பிரதமர் ஹசீனா தன்னை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்கி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்ததாக அதிக விமர்சனங்களுக்கு ஆளானார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் சமூக ஆர்வலர் அஹ்மத் பின் குவாசெம் போன்றோர் ஹசீனா அவசரமாக வெளியேறிய உடனேயே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஹசீனா ஆட்சியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்று கூறி, 2014 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களைப் புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான ‘பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்’ தலைவர் தான் கலீதா ஜியா. 78 வயதான அவர் 2018இல் ஊழல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறியிருந்தார். சமூக ஆர்வலர் குவாசெம் 2016ஆம் ஆண்டு காவலில் வைக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஹசீனாவின் பதவிக்காலத்தில் அரசால் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களில் குவாசெமும் ஒருவர். 'ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷேக் ஹசீனா மற்றும் யூனுஸ் (வலது ஓரம் இருப்பவர்) (2008- கோப்புப் படம்) தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக ஜனவரியில், பேராசிரியர் யூனுஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹசீனாவின் கோபத்திற்கு ஆளானவர்களில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அரசியல்வாதிகள் குறித்து அவர் அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 1983ஆம் ஆண்டில், அவர் கிராமின் வங்கியைத் தொடங்கினார். இது ஏழை மக்களுக்கு சிறு தொழில்களைத் தொடங்குவதற்கான குறுங்கடன்கள் மற்றும் நீண்ட காலக் கடன்களை இந்த நிதியமைப்பு வழங்குகிறது. அதன் பின்னர் இந்த திட்டம் உலகம் முழுவதும் பரவியது. அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், கட்டாய ஓய்வு வயதைத் தாண்டி கிராமின் வங்கியில் பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார், இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்று பேராசிரியர் யூனுஸ் கூறினார். "மிகவும் ஏழ்மையானவர்கள் கூட தங்களுக்கான வளர்ச்சியை உழைப்பின் மூலம் அடைய முடியும்" என்பதைக் காட்டினார் என 2006ஆம் ஆண்டு வங்கியுடன் இணைந்து அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சர்வதேச அளவில் ‘ஏழைகளுக்கான வங்கியாளர்’ என்று அறியப்பட்டார், ஆனால் ஹசீனா அவரை 'ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்’ என்று அழைத்தார் மற்றும் அவரது வங்கி அதிக வட்டி விகிதங்களை வசூலிப்பதாக குற்றம் சாட்டினார். ஹசீனாவுடனான பகையின் தோற்றம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஒரு அரசியல் கட்சியை அமைப்பதற்கான யூனுஸின் தோல்வி முயற்சிகள் தான் காரணம் என்று பலர் நம்புகிறார்கள். ஹசீனாவின் இறுதி இலக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES ஹசீனா இன்னும் இந்தியாவில் இருக்கிறார், ஆனால் அதுதான் அவரது இறுதி இலக்காக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பர் என்ற போதிலும் அது சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வங்கதேசத்துடன் 4,096-கிமீ (2,545-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, டாக்காவில் அமையவுள்ள புதிய அரசாங்கத்திடமிருந்து விலகி இருக்காது. எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பேராசிரியர் யூனுஸின் நியமனம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், வங்கதேசத்தில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "இடைக்கால அரசு எடுக்கும் எந்த முடிவும், ஜனநாயகக் கொள்கைகளை மதிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் மற்றும் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும்," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங், ‘வன்முறையில் இருந்து விலகி இருக்குமாறும், உலகளாவிய உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும்’, வங்கதேசத்தின் அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/clynlrvvv3do
  8. அண்ணை ரஸ்யாவிற்குள் ஊடுருவும் அளவிற்கு எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கே!
  9. அண்ணை மகிந்த ஐயாவின் வடக்கிற்கான இணைப்பாளராக முன்னர் இருந்ததாக நினைவு.
  10. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 வருடங்களின் பின்னர் கைப்பற்றி வரலாறு படைத்தது இலங்கை Published By: VISHNU 07 AUG, 2024 | 08:34 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 27 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இலங்கை. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (07) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 110 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது. இதன் மூலம் தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது. அப் போட்டியில் இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. அவிஷ்க பெர்னாண்டோ 96 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 45 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 26.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ரோஹித் ஷர்மா (35), விராத் கோஹ்லி (20), ரியான் பராக் (15), வொஷிங்டன் சுந்தர் (30) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்ட நாயகன்: அவிஷ்க பெர்னாண்டோ தொடர் நாயகன்: துனித் வெல்லாலகே https://www.virakesari.lk/article/190538
  11. 'உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு, பணம்'- அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்கிறார்கள்? - முக்கிய தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜூட் ஷீரின் பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன் 9 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்து வருகின்ற சூழலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பள்ளி ஆசிரியரும், கால்பந்து பயிற்சியாளரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான டிம் வால்ஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். மின்னசோட்டா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் டிம் வால்ஸை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கமலா ஹாரிஸ். "கமலா ஹாரிஸுடன் தேர்தலை எதிர்கொள்வது வாழ்நாள் கௌரவமாக கருதுகிறேன்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வால்ஸ். மேலும், "முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அனுபவத்தைப் போல் இது உள்ளது. இதை நிறைவேற்றுவோம்," என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்தடுத்த புதிய நிகழ்வுகள் அரங்கேறின. துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். துணை அதிபர் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்று ஜனநாயகக் கட்சியினர் யோசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த இடத்திற்கு டிம் வால்ஸ் வந்துள்ளார். துணை அதிபர் வேட்பாளர்களை அமெரிக்க கட்சிகள் எவ்வாறு தேர்வு செய்கின்றன? துணை அதிபர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? "நீங்கள் எப்போதாவது உடலுறவு வைத்துக் கொள்ள பணம் கொடுத்திருக்கிறீர்களா? கருக்கலைப்பு செய்ய எப்போதாவது பணம் செலுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது தன்பாலின ஈர்ப்பினருடன் தொடர்பு கொண்டீர்களா?" முந்தைய தேர்தலில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்வின் போது பங்கேற்றவர்களிடம் கேட்ட கேள்விகள் தான் இவை. ஒவ்வொரு முறையும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் இது போன்று 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின்புதான் அந்த நபரின் வேட்புமனு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். 'வெட்டர்ஸ்’ (vetters) என்று அழைக்கப்படும் பிரசார அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் நேரத்தை செலவிட்டு, துணை அதிபர் தேர்வுமுறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அவர்களை அனைத்து தகவல்களையும் ஒரு மாத காலத்திற்குள் திரட்டுவார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துணை அதிபரை தேர்வு செய்யும் செயல்முறையின்போது, கமலா ஹாரிஸ் ஒரு டஜன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிம் வால்ஸ் சோதனைக்கு உட்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்கள் துணை அதிபர் வேட்பாளர் தேர்வை சவாலானதாக ஆக்குவது போட்டியாளர்களின் பின்புலத்தை ஆய்வு செய்வதுதான். அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டர்வர்களின் பின்புலத்தை ஆராய்வது போல, துணை அதிபர் போட்டியாளர்களின் பின்னணி பற்றிய சோதனைகளை அமெரிக்கப் புலனாய்வு முகமை செய்வதில்லை. ஒரு போட்டியாளரின் வருமானம், வரிக் கணக்குகள் மற்றும் மருத்துவ வரலாற்றை 'வெட்டர்ஸ்’ ஆராய்வார்கள். அவர்கள் போட்டியாளர்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் உள்நுழைந்து சோதனை செய்யலாம். போட்டியாளரின் மகன்/மகள்களின் சமூக ஊடக பதிவுகளை அலசுவார்கள். தேவை இருப்பின் பேரப்பிள்ளைகளின் சமூக ஊடகக் பக்கத்தை கூட அலசுவார்கள். திருமண உறவு பற்றிய விவகாரங்கள் அல்லது வேறு ஏதேனும் தீர்க்கப்படாத ரகசிய விஷயங்களும் முழுமையாக ஆராயப்படும். சாத்தியமான வேட்பாளர் கூறிய அல்லது எழுதிய ஒவ்வொரு பதிவின் வார்த்தைகளையும் அவர்கள் சரிபார்ப்பார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGE படக்குறிப்பு,2008இல், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் இவானும் இருந்தார். ஜான் கெர்ரி, பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு சாத்தியமான துணை அதிபர்களை தேர்வு செய்யும் செயல்முறையில் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞர் ஜிம் ஹாமில்டன், பிபிசியிடம் பேசுகையில், "இந்த செயல்முறைக்குப் பிறகு, ரகசியத்தன்மையை பாதுகாக்க, செயல்முறை குறிப்புகள் அழிக்கப்படுகின்றன” என்று கூறினார். அவர் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குறித்து மதிப்பீடு செய்துள்ளார், இந்த வழக்கறிஞர்கள் கிளிண்டனின் துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் செயல்முறையில் பங்காற்றினர். "துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி இருக்கும், அவர்கள் அவ்வளவு எளிதில் பேசி விடமாட்டார்கள். ஆனால் இந்த செயல்முறைக்கு உறுதியளித்தவுடன், அவர்கள் தங்கள் பதில்களில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கும்" என்று ஹாமில்டன் விவரித்தார். 2008 இல் பராக் ஒபாமா உடன் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதற்கான போட்டியில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் முக்கியமானவர் இவான் பேஹ். இந்த மதிப்பீடு செயல்முறை முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுத்ததாக அவர் நினைவு கூர்ந்தார். "என்னை ஆய்வு செய்ய ஒரு குழு ஒதுக்கப்பட்டது. ஒரு கணக்காளர், ஒரு வழக்கறிஞர், ஒரு மருத்துவர் இருந்தனர்" என்று முன்னாள் இந்தியானா செனட்டரும் ஆளுநருமான இவான் பேஹ் பிபிசியிடம் கூறினார். "அவர்கள் என் மனைவியுடன் பேசினார்கள், அவர்கள் என் தந்தையுடன் பேசினார்கள்." என்று இவான் பேஹ் விவரித்தார். இந்த செயல்முறைகளின் போது, வாஷிங்டன் டிசியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தொலைக்காட்சி குழுவினர் முகாமிட்டனர். அந்த சமயத்தில் பேஹ் மனநல சிகிச்சை பெற்றதாக ஒரு தவறான இணைய வதந்திப் பரவியது. அதை பற்றி அவரிடம் விசாரணைக் குழுவின் தலைவர் போன் செய்து விசாரித்தார். "இல்லை, அது உண்மையல்ல. நான் மனநல சிகிச்சை எடுக்கவில்லை. ஆனால் நீங்கள் சீக்கிரம் ஒரு முடிவெடுக்காமல் இருந்தால், அது உண்மையாகி விடும்'' என்று நகைச்சுவையாக பதில் அளித்ததை பேஹ் நினைவு கூர்ந்தார். இறுதியில் பைடனுக்கே வாய்ப்பு 20 பேர் கொண்ட பெயர் பட்டியலில், இறுதியில் டெலாவேர் செனட்டராக இருந்த ஜோ பைடனின் பெயர் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக பேஹ் விளக்கினார். அதன் பின்னர் வருங்கால அதிபரை அவரது ஹோட்டல் அறையில் சந்திப்பதற்காக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸுக்கு 'மிகவும் ரகசியமாக' விமானத்தில் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார். "ஒபாமா முன்பு சுமார் மூன்றடி உயரத்துக்கு ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன" என்று அவர் நினைவு கூர்ந்தார். "ஒபாமா அந்த ஆவணங்களை காட்டி 'நான் உங்களைப் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் பார்த்துவிட்டேன், அதில் எதுவும் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால் எங்கள் குழு கண்டுபிடிக்காத ஏதேனும் ரகசியம் இருந்தால், நீங்கள் இப்போது என்னிடம் சொல்ல வேண்டும், ஏனெனில் அது எப்படியும் வெளிவந்துவிடும்" என்றார். "நான் அவரிடம், 'உங்கள் அதிகாரிகள் மிகவும் முழுமையான ஆய்வை மேற்கொண்டார்கள். ஆனால் நான் உங்களிடம் குறிப்பிட வேண்டிய இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் இருக்கலாம்’ என்று சொல்லி விவரித்தேன்.'' "அவர் என்னைப் பார்த்து, 'அவ்வளவு தானா'? என்றார். நான் 'ஆம்', என்றேன். மேலும் அவர், 'சரி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை அதிகம் வாழவில்லை, இல்லையா?' என ஒபாமா கூறினார்'' என்கிறார் பேஹ். ஹோட்டல் அறையில், ஒபாமாவிடம் விவரித்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேஹ் தெரிவிக்கவில்லை. அது குடும்ப விவகாரம் என்று மட்டும் கூறினார். அந்த துணை அதிபர் போட்டியில் இறுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சில நேரங்களில் துணை அதிபர் செயல்முறையில் தேர்வு செய்யும் குழுவில் இருப்பவர்கள், போட்டியாளரிடம் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு கேள்வியை முன்வைக்க முடியும். அதற்கு கிடைக்கும் பதிலின் மூலம் கூட போட்டியாளருக்கு சிக்கல் ஏற்படும். கிளிண்டனின் 1992-ம் பிரசாரத்தில் பணியாற்றிய கெரி கின்ஸ்பெர்க், அல் கோரிடம் உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்ட போது அவர் வார்த்தைகளற்று நின்றதை நினைவு கூறினார். மிகவும் கூச்ச சுபாவமுள்ள அவரிடம் மீண்டும் கேட்ட போது அவரின் மைத்துனர் மற்றும் இரண்டு காங்கிரஸ் நபர்கள் தவிர அவருக்கு நண்பர்கள் வட்டம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். நண்பர்கள் வட்டம் இல்லாமல் இருப்பது பிரசார அலுவலர் ஒருவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. 50 பேர் கொண்ட நீண்ட பட்டியலிலிருந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் வெற்றியும் பெற்றனர். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும். சர்ச்சைக்குரிய தேர்வு இரண்டு நபர்களின் தேர்வு அமெரிக்க வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 1972ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜார்ஜ் மெக்கொவெர்ன் 18 நாட்களில் துணை அதிபராக தேர்வு செய்த வேட்பாளரை புறந்தள்ளினார். மிசோரி செனட்டர் தாமஸ் ஈகல்டனை 2 நிமிட அலைபேசி பேச்சுவார்த்தை மூலம் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார் அவர். அவரது பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. ஆனால், சில நாட்களில் தாமஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் சிகிச்சை வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகின. ஜார்ஜை எதிர்த்து போட்டியிட்ட நிக்ஸனும் அவரின் குழுவினரும், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கிய ஜார்ஜை இனி எப்படி நம்புவது என்ற கேள்வியை எழுப்பினார்கள். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் படுதோல்வி அடைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும். இதன் பின்னர், போட்டியில் உள்ள வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் 'வெட்டர்கள்' தங்களின் ஆய்வு வட்டத்தை பெரிதாக்கினார்கள். அந்த ஆண்டு ரொனால்ட் ரீகனுக்கு சவால் விடக்கூடிய வகையில் ஒரு துணை வேட்பாளர் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான வால்டர் மாண்லேவுக்கு தேவைப்பட்டார். எனவே ஜெரால்டின் ஃபெரார்ரோ என்ற பெண்ணை துணை அதிபர் வேட்பாளராக அவர் தேர்வு செய்தார். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு முக்கிய தேசிய கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்ட பெண் இவர். ஆனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த அவரின் கணவரின் நிதி தொடர்பாக விவகாரங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த தேர்தலில் 49 மாகாணங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ரீகன். சில நேரங்களில் இந்த தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் நபர்கள், அரசியல் தளங்களில் சொதப்புவதும் உண்டு. 2008ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கைன் சாரா பாலினை தேர்வு செய்தார். ஆனால் அவர்களின் பிரச்சார காலமானது வெறும் 72 மணி நேரமே நீடித்தது. வேட்பாளரை இறுதி செய்யும் செயல்பாடு மிகவும் கண்டிப்புடன் நடத்தப்பட்டாலும், இறுதி முடிவு எப்போதும் அதிபர் வேட்பாளருடையது தான். துணை அதிபராக இருந்து, பின்னர் அதிபர் பதவிக்கு சென்ற 15 நபர்களில் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷும் ஒருவர். 1988 இல் அதிகம் அறியப்படாத இந்தியானா செனட்டர் டான் குவேலைத் தனது துணை அதிபர் வேட்பாளராக தைரியத்துடன் தேர்வு செய்தார். அவர்கள் வெற்றி பெற்றாலும், கேட் ஆண்டர்சன் ப்ரோவர் எழுதிய 'ஃபர்ஸ்ட் இன் லைன்' புத்தகத்தில், 41 வயதான குவேல், அந்த பதவியில் ஒரு கூடுதல் பலமாக இருப்பதற்கு பதிலாக பொறுப்போடு பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய நபராகவே இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது 1988 இல் பிரசார விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நிருபர் துணை அதிபர் வேட்பாளரிடம் "உங்களுக்கு பிடித்த புத்தகம் எது? என கேட்டார். ஆனால் துணை அதிபர் வேட்பாளரான குவேலோ தனது மனைவி மர்லினிடம், "நான் படித்ததில் எனக்கு பிடித்த புத்தகம் எது?" என்று கேட்க, அருகிலிருந்த அரசியல்வாதி ஒருவர் குவேலின் செயலைக் கண்டு திகைத்துப் போனார். https://www.bbc.com/tamil/articles/cwy77eel729o
  12. கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதை இலங்கைக் கடற்படை பொழுதுபோக்காக செய்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், கடற்படை ஆணையினைச் செயல்படுத்தும் சிங்கள மீனவர்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது நமது இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்களிடம் இன்றைய போட்டியில் இலங்கை தோற்றுவிட்டால் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தப் போட்டியில் இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றது. அன்றே, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்தது. தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்.ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது 85 தமிழக மீனவர்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று குற்றச்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பிரதமர் நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து இந்த மோடி அரசு பாதகம் செய்கிறது. இந்த நிலைமை தொடர்ந்துகொண்டே இருந்தால், தமிழக மீனவர்களின் இளம் தலைமுறையினரிடம் இந்தியா மீது வெறுப்பு உருவாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். வைகோ தமது பேச்சை முடிக்கும் முன்னரே அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும், வைகோ சில நிமிடங்கள் தொடர்ந்து தமது கருத்தை முன்வைத்தார். இந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. https://thinakkural.lk/article/307459
  13. வங்கதேசத்தில் இந்துக்களின் நிலை என்ன? இந்துக்களுக்கு அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்- கள நிலவரம் படக்குறிப்பு,"வங்கதேச இந்துக்கள் எளிதாக குறிவைக்கப்படுகின்றனர்," என்கிறார் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்கார் கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த திங்களன்று வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். இது நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைநகர் டாக்காவில் வசிக்கும் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்காருக்கு அவரது உறவினரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் மிகுந்த பதற்றத்தில் பேசினார். அவிரூப் சர்க்கார் ஒரு வங்கதேச இந்து, 90% முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் வாழ்கிறார். அவிரூப் சர்க்காரின் அந்த உறவினர், டாக்காவுக்கு வடக்கே, சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள நெட்ரோகோனா என்ற மாவட்டத்தில் வசிக்கிறார். கணவரை இழந்த பெண்ணான அவர், ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். "அவர் பயத்துடன் பேசினார். வீட்டை ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்ததாக அவர் கூறினார்" என்று அவிரூப் சர்க்கார் டாக்காவிலிருந்து தொலைபேசியில் பிபிசியிடம் தெரிவித்தார். இந்தியாவுக்கு நெருக்கமான ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியா? ஓர் அலசல்6 ஆகஸ்ட் 2024 'அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் சுமார் 100 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களுடன், வீட்டிற்குள் நுழைந்து, வீட்டுப் பொருட்கள் மற்றும் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கியதாகவும்,. கிளம்பும் முன் பணம், நகைகள் அனைத்தையும் எடுத்து சென்றதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார். அங்கு வாழ்ந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் யாரையும் அவர்கள் தாக்கவில்லை. “நீங்கள் அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்! உங்களால் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளது. நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று அந்த கும்பல் கொள்ளையடித்து கொண்டு கிளம்பும் முன் குடியிருப்பாளர்களை நோக்கி சத்தம் போட்டது. சர்க்கார் பிபிசியிடம், ‘தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் இந்த சம்பவத்தால் முற்றிலும் ஆச்சரியப்படவில்லை என்றும்’ கூறினார். வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர், ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர் என்றும், இஸ்லாம் அரசு மதமாக இருக்கும் நாட்டில் அவாமி லீக் கட்சியின் போட்டியாளர்களால் அடிக்கடி அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் சர்க்கார் கூறுகிறார். ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சமூக ஊடகங்களில் இந்து சொத்துக்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக செய்திகள் அதிகமாக உலாவுகின்றன. 'உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு, பணம்'- அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளரை எப்படி தேர்வு செய்கிறார்கள்? - முக்கிய தகவல்9 மணி நேரங்களுக்கு முன்னர் 'அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது நடக்கும் தாக்குதல்கள்' படக்குறிப்பு,திங்கள்கிழமை மாலை தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் ஒரு கும்பல் நுழைய முயன்றதாக சர்க்கார் கூறுகிறார் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாயன்று இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, "மிகவும் கவலைக்குரியது என்னவென்றால், சிறுபான்மையினர், அவர்களது வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் கோயில்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானதுதான். சேதத்தின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை." என்றார். இருப்பினும், இளம் முஸ்லீம் குழுக்கள், இந்த செயல்களைத் தடுக்க இந்து வீடுகள் மற்றும் கோவில்களைப் பாதுகாத்து வருகின்றனர். "வங்கதேச இந்துக்கள்தான் எளிதான இலக்கு. ஒவ்வொரு முறையும் அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது, அவர்கள் தாக்கப்படுகிறார்கள்" என்று சர்க்கார் கூறினார். தனது உறவினரின் வீடு தாக்கப்படுவது இது முதல் முறையல்ல என்று சர்க்கார் கூறுகிறார். 1992ஆம் ஆண்டு இந்திய நகரமான அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இந்து கும்பல் இடித்ததை அடுத்து வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டனர். சர்காரின் சகோதரியின் வீடு ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. அதற்கடுத்து இந்துக்கள் மீது பல மதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வங்கதேச மனித உரிமைக் குழுவான ‘ஐன் ஓ சலிஷ் கேந்திரா’, ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2021 வரை இந்து சமூகத்தின் மீது குறைந்தது 3,679 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவித்தது. இதில் பொருட்களைச் சேதப்படுத்துதல், தீவைப்பு மற்றும் இலக்கு வன்முறை ஆகியவை அடங்கும். 'சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது' பட மூலாதாரம்,GETTY IMAGES 2021ஆம் ஆண்டில், நாட்டின் மிகப்பெரிய இந்து பண்டிகையான துர்கா பூஜையின் போது மற்றும் அதற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. "பல ஆண்டுகளாக, தனிநபர்களுக்கு எதிரான இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள், வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறுகின்றன, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதை இது காட்டுகிறது." என மனித உரிமைகள் குழுவான அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது. திங்களன்று, சர்க்கரின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் வன்முறைத் தாக்குதலுக்கான அபாயத்தை எதிர்கொண்டனர். டாக்காவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள கிஷோர்கஞ்சில் உள்ளது அவரது பெற்றோரின் வீடு. "நாங்கள் அக்கம் பக்கத்தில் நன்கு அறியப்பட்ட குடும்பம் மற்றும் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை.” என்கிறார் சர்க்கார். சர்க்காரின் தாயார், உள்ளூரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவரது நண்பரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, ‘யாரையெல்லாம் தாக்கவேண்டும் என்ற பட்டியலை உருவாக்குகிறார்கள்’ என்று அவர் கூறினார். மேலும் அந்த நண்பர், "உங்கள் பெயர் பட்டியலில் இல்லை. ஆனால் தயவுசெய்து கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார். அதன் பிறகு, சர்க்காரின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். வீட்டின் இரும்பு கேட்டிற்கு வெளியே ஒரு சிறிய கூட்டம் கூடுவதைக் கண்டார் சர்க்காரின் தந்தை. “யாரோ கூட்டத்தினரிடம் வந்து, 'இங்கே எதுவும் செய்யாதீர்கள், இங்கே வேண்டாம்' என்று சொல்வதை என் தந்தை கேட்டார். கும்பல் கலைந்து சென்றது." என்கிறார் சர்க்கார். ஆனால் சிறிது தொலைவில், கிஷோர்கஞ்சில் உள்ள நோகுவா பகுதியில், இந்து வீடுகள் சூறையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. “அங்கு 20-25 வீடுகள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். எனது இந்து நண்பரின் தங்கக்கடை உடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் நகைப் பெட்டகத்தை உடைக்கவோ அல்லது எடுத்துச் செல்லவோ முடியவில்லை”, என்று சர்க்கார் கூறினார். அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள் பட மூலாதாரம்,CASTAWAY ON THE MOON படக்குறிப்பு,வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், முஸ்லிம்கள் இந்து கோவில்களை பாதுகாத்து வருகின்றனர் டாக்காவில் இருந்து வடக்கே 200 கிமீ தொலைவில், ஷெர்பூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரின் மனைவியின் வீடும் தாக்கப்படும் அபாயத்தில் இருந்தது. பின்னர் அந்த வீடு தாக்குதலில் இருந்து தப்பித்தாலும், ஒரு கும்பல் பக்கத்து இந்து வீட்டை சூறையாடியது. ஆனால், இதில் ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், வன்முறை பற்றிய செய்தி பரவியதும், உள்ளூர் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இந்து வீடுகள் மற்றும் கோவில்களைச் சுற்றி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கினர். "இது வங்கதேசம் முழுவதும் நடந்துள்ளது. முஸ்லிம்களும் இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாத்துள்ளனர்" என்கிறார் சர்க்கார். ஆனால் விஷயங்கள் இதோடு முடிவடையவில்லை. திங்கட்கிழமை இரவில், டாக்காவில் சர்க்கார் தங்கியுள்ள 10 மாடி அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே ஒரு கும்பல் கூடத் தொடங்கியது. இங்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசிக்கிறார் சர்க்கார். அதே கட்டிடத்தில் வசிக்கும் அவாமி லீக்கின் கவுன்சிலரைத் தேடி அக்கும்பல் வந்ததாக அவர் கணித்தார். "நான் எனது ஆறாவது மாடி பால்கனியில் இருந்து வெளியே வந்தபோது, கூட்டத்தினர் கட்டிடத்தின் மீது கற்களை எறிந்து உடைக்க முயற்சிப்பதைப் பார்த்தேன். கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டிருந்தன, அதனால் அவர்களால் நுழைய முடியவில்லை. பார்க்கிங்கில் இருந்த சில கார்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன” என்று சர்க்கார் கூறுகிறார். நெட்ரோகோனாவுக்குத் திரும்பிய சர்க்காரின் உறவினர், குடும்பம் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகக் சர்க்காரிடம் கூறினார். சர்க்கார், ராணுவத்தில் உள்ள தனது நண்பரை அழைத்து, ராணுவ வேன் ஒன்று அக்கம் பக்கத்தில் தொடர்ந்து ரோந்து வருமாறு கேட்டுக் கொண்டார். "இது ஒரு மோசமான காலகட்டம். சட்டம் ஒழுங்கு இல்லை. நாங்கள் மீண்டும் குறிவைக்கப்படுகிறோம்," என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/czrgm7j77klo
  14. வடகிழக்கு இளைஞர்களின் ஆதரவு நாமலுக்கு! : கீத்நாத் காசிலிங்கம் நம்பிக்கை Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 11:04 AM பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவுக்கு வட கிழக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ வடகிழக்கு மாவட்டங்களில் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளவர் என்பதால் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் ஆதரவை பெறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ விளங்குவார் என கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். 2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் துயரங்களை அறிந்துகொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ அங்கு சென்றார், அந்த பகுதியின் அரசியல் பொருளாதார சமூக நிலை குறித்து நாமல் ராஜபக்ஷ ஆழ்ந்த அறிவை பெற்றுக்கொண்டுள்ளார் என கீத் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கும் இளம்தலைமுறையினர் நாமல் ராஜபக்ஷவை ஆதரிப்பார்கள் எனவும் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190473
  15. 07 AUG, 2024 | 12:52 PM நாட்டில் இவ்வருடத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 197 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 73 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 479 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், யானைகளின் தாக்குதல்களினால் 169 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190487
  16. பட மூலாதாரம்,FACEBOOK/KNNEHRU படக்குறிப்பு,கோவை மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் களம் இறங்கியவர்கள் வெற்றி பெற்றபோதிலும், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலம் உள்பட மாநிலம் முழுவதும் பெருவாரியாக தி.மு.க., வெற்றி பெற்றதால், 'மக்கள் பணிகளில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கவுன்சிலர்கள் நடந்து கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார். இதையும் மீறி நெல்லை, கோவை, காஞ்சிபுரம் உள்பட சில மாநகராட்சி மேயர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதில், நெல்லை மேயர் பி.எம்.சரவணன் மீது மாநகராட்சி பணிகளை முடிக்காமல் இழுத்தடிப்பதாகவும் ஒப்பந்ததாரர்களை இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரையை அழகுபடுத்தும் பணி, பாளையங்கோட்டை சந்தை கட்டுமானப் பணி, நெல்லை டவுன் சந்தை கட்டுமானப் பணி உள்ளிட்டவை ஆமை வேகத்தில் நடைபெற்றது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மீது, மாநகராட்சி பணிகளில் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நெல்லை, கோவை மாநகராட்சிகளின் மேயர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், 'இரு மாநகராட்சிகளுக்கும் அடுத்த மேயர் யார்?' என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சைக்கிளில் வந்த மேயர் இந்நிலையில், 'ஆகஸ்ட் 5 அன்று நெல்லை மாநகராட்சிக்கு மறைமுக தேர்தல் நடக்கும்' என மாநகராட்சி ஆணையர் என்.ஓ.சுகபுத்ரா அறிவித்தார். இந்தப் பதவியைக் கைப்பற்ற பலரும் முயற்சி செய்த நிலையில், கிட்டு என்கிற ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக தி.மு.க தலைமை அறிவித்தது. வார்டு பணிகளை கவனிக்க, சைக்கிளில் மட்டுமே ராமகிருஷ்ணன் பயணிப்பதாக புகைப்படங்களும் வெளியாயின. வேட்புமனு தாக்கலின் போதும் சைக்களிலேயே மாநகராட்சிக்கு வந்தார். நெல்லைக்கு மறைமுக தேர்தல் தேதியை மாநகராட்சி ஆணையர் அறிவித்தாலும், அவ்வளவு எளிதாக தேர்தலை நடத்த முடியவில்லை. காரணம், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக களமிறங்கியதுதான். சிறுவனை கொன்று உடலை சூட்கேஸில் வைத்து பேருந்தில் விட்ட பெண் - முன்கூட்டியே விடுதலை6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,RAMAKRISHNAN படக்குறிப்பு, திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் ஆதரவும் எதிர்ப்பும் மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க.,வுக்கு 44 பேரும் அ.தி.மு.க.,வுக்கு 4 பேரும் உள்ளனர்., காங்கிரஸ் கட்சிக்கு 3 பேரும் ம.தி.மு.க.,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 கவுன்சிலரும் உள்ளனர். சுயேச்சை கவுன்சிலராக தேர்வான ஒருவர், தி.மு.க., ஆதரவாளராக அறியப்படுகிறார். இவர்களில் சிலர், போட்டி வேட்பாளரான பவுல்ராஜுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அது மறைமுக தேர்தலில் எதிரொலித்துள்ளது. திங்கள் கிழமையன்று (ஆக.,5) நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளைப் பெற்றார். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தேர்தலில் பங்கேற்கவில்லை. முன்னாள் மேயர் சரவணன் தாமதமாக வந்ததால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தாமதத்துக்கான காரணத்தை அவர் எழுதிக் கொடுக்கவே, ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டார். இந்த தேர்தலில் ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மறைமுக தேர்தலுக்கு முன்னதாக, நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிப் பேசினர். கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுமாறு அறிவுறுத்தியும், 23 வாக்குகள் தி.மு.க.,வுக்கு எதிராகப் போனது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமை அறிவித்த வேட்பாளருக்குப் போட்டியாக களமிறங்கியது ஏன்? என, பவுல்ராஜிடம் கேட்டபோது "எனக்கு வாக்களித்த 23 பேரும் கட்சித் தலைமையை எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. அவர்கள், நான் மேயராக வர வேண்டும் என விரும்பி வாக்களித்துள்ளனர். மேயராக சரவணன் இருந்த காலகட்டத்தில் மாமன்றத்தில் ஏராளமான பிரச்னைகள் நடந்தன. அதைத் தீர்ப்பதற்கு அமைச்சர் நேரு வந்திருந்தார்.'' ''சரவணன் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டேன். இதர கவுன்சிலர்களும் என்னைப் போல புகார்களை தெரிவித்தனர். ஆனால், நான் பிரச்னை செய்வதாக தவறாக புகார் கூறப்பட்டிருந்ததை அமைச்சர் நேருவும் அறிந்து கொண்டார்.'' பட மூலாதாரம்,PAULRAJ படக்குறிப்பு, ராமகிருஷ்ணனுக்கு எதிராக, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் இந்த மேயர் தேர்தலில் போட்டியிட்டார் கவுன்சிலர்களுக்கு பணம் கைமாறியதா? ''இதன் பின்னர், 'வார்டுக்கு 1 கோடி ரூபாயை உடனே ஒதுக்குகிறேன். அதற்கு ஆணையாளர் தான் பொறுப்பு' என அமைச்சர் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அடுத்த மூன்றே நாளில் ஆணையரை மாற்றிவிட்டனர். ஆணையரை மாற்றாமல் இருந்திருந்தால் மறைமுக மேயர் தேர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.'' ''என்னை ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து நீக்கினர். கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க முடியாததால், அறிவாலயத்தில் மனு கொடுத்தேன். என்னுடைய கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது" என்கிறார். கவுன்சிலர்களில் சிலருக்கு நீங்கள் பணம் கொடுத்ததால்தான் உங்களுக்கு ஆதரவாக அவர்கள் ஓட்டுப் போட்டதாக சொல்லப்படுகிறதே? என கேட்டதற்கு, "அது தவறான தகவல். நான் மனுத்தாக்கல் செய்த பிறகு எந்த கவுன்சிலரிடமும் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்யவில்லை. எந்த மாமன்ற உறுப்பினரையும் தனியாக அணுகிப் பேசவில்லை. என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கவே மனுத்தாக்கல் செய்தேன்" என்றார். அதேநேரம், தற்போதைய மேயருக்கு எதிராக 23 கவுன்சிலர்கள் வாக்களித்திருப்பதால், வரும் நாள்களில் மாமன்ற கூட்டத்தை நடத்துவதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சிக்கு மாணவர்கள் ஒரே மாதத்தில் முடிவு கட்டியது எப்படி?6 ஆகஸ்ட் 2024 30 வருடத்தில் 50 வேலைகள் சொற்ப ஊதியம் : ஒரு இந்தியப் பெண் தொழிலாளியின் கதை6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,TKS ELANGOVAN படக்குறிப்பு,தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் நெல்லை மேயர் சொல்வது என்ன? இதுகுறித்து, நெல்லை மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, "எனக்கு எதிராக சிலர் வாக்களித்தாலும் அவர்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான கவுன்சிலர்கள்தான். அதனால் மாமன்றத்தை நடத்துவதில் எந்தவித இடையூறும் இருக்காது. தேர்தலுக்குப் பிறகு கவுன்சிலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.'' ''கவுன்சிலர்கள் அனைவரும் என்னுடன் உறவு முறையில் பழகக் கூடியவர்கள்தான். மேயர் தேர்தலில் தலைமையின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் குறித்து மேல்மட்ட நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள். இதுகுறித்து கருத்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். இதே கருத்தை ஆமோதிக்கும் பவுல்ராஜ், "இவ்வளவு நாள்களாக மாநகராட்சியில் நடந்த பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் வரக் கூடிய மாமன்ற கூட்டங்கள் அமையும்" என்கிறார். இந்தநிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். முன்னதாக, மேயர் பதவியைக் கைப்பற்ற ஆளும்கட்சியின் அதிகார மையங்களை நோக்கி கவுன்சிலர்கள் பலரும் முற்றுகையிட்டாலும், வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். 2036-இல் ஆமதாபாத் நகரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?4 ஆகஸ்ட் 2024 ஷேக் ஹசீனாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் - என்ன நடந்தது?6 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,FACEBOOK / KNNEHRU சமாதானம் செய்த கே.என்.நேரு ரங்கநாயகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை சீனியர் கவுன்சிலர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோபத்தை தேர்தலுக்கு முன்னதாக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தனர். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், "கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். கோடிக்கணக்கில் இழந்துள்ளோம். இதையெல்லாம் எங்களால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என ஆவேசப்பட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "நானும் சேர்மனாக இருந்துதான் வந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உள்ளாட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியும். முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எவ்வளவு ஒதுக்குகிறார் என்பதும் தெரியும். கடந்த 10 ஆண்டுகளாக விடுபட்டிருந்த பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிப்பது என்பது இயலாத காரியம். நீங்கள் எழுதிக் கொடுப்பதை செய்து கொடுக்கறோம். சற்று பொறுமையாக இருங்கள்" என சமாதானப்படுத்தினார். இதன்பிறகும், 'நெல்லையை போன்ற சூழல் வந்துவிடக் கூடாது' என்பதில் தி.மு.க., நிர்வாகிகள் கவனமுடன் இருந்தனர். தேர்தல் முடிவில் மாநகராட்சியின் புதிய மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை ஆணையர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார். நெல்லை, கோவை மேயர் தேர்தல் சர்ச்சை குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், "நெல்லையில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக கட்சியின் கவுன்சிலர்கள் சிலர் வாக்களித்தது தவறான விஷயம். அவ்வாறு வாக்களித்தவர்கள் குறித்து குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்படும். அதன் அடிப்படையில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும். ஒரு சில அதிருப்திகள் இருந்தாலும் மாமன்றத்தை நடத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது" என்றார். https://www.bbc.com/tamil/articles/cr40070lnd6o
  17. எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து உக்ரைன் படையினர் தாக்குதல் - பல மணிநேரம் மோதல் 07 AUG, 2024 | 01:20 PM உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து வந்து ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என ரஸ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டனர் இவர்கள் 10 கிலோமீற்றர் வரை ஊடுருவினர் என ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 டாங்கிகள் 20க்கும் மேற்பட்ட கவசவாகனங்களின் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைனியபடையினர் முன்னெடுத்தனர் என ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லை கிராமங்களிலும்,முன்னரங்குகளில் இருந்து பத்து கிலோமீற்றர் உள்ளேயும் பல மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/190492
  18. வங்கிக்கணக்கில் ஊடுருவி 65 இலட்சம் ரூபாய் கையாடல் : கைதான இருவருக்கு விளக்கமறியல் 07 AUG, 2024 | 12:06 PM வங்கிக்கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பண மோசடி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது : வங்கிக்கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்யப்பட்டதாக, பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டுள்ளார். அந்தத் தொலைபேசி அழைப்பில் பேசியவர்கள், வங்கிக்கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிலிட வேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதி, அடையாள அட்டைப் பிரதி உட்பட பல ஆவணங்களை குறிப்பிட்ட கொழும்பு விலாசமொன்றுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்கு மீதி விபரங்களை புகைப்பட வடிவில் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது. சில நாட்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக்கணக்கிலிருந்த 65 லட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதையடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேக நபர்களால் பெறப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மை பெற்றுள்ளார். அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. தாம் சேகரித்த ஆவணங்கள், தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேக நபர்களில் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக்கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் மற்றவரின் வங்கிக்கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதையடுத்து, நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/190477
  19. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் சரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த சனிக்கிழமை வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்தனர். இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை நீதிமன்றத்துக்கு கையில் விலங்கிடப்பட்ட நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அழைத்துவரப்பட்டிருந்தார். வைத்தியர் அர்ச்சுனா இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. https://thinakkural.lk/article/307483
  20. வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஆகஸ்ட் 2024, 06:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மீண்டு வாருங்கள் வினேஷ் போகாட்' என ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகளிர் மல்யுத்தம், 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் குழுவால் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது என்றும், வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேச்சு பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசினார். மக்களவையில் பேசிய அவர், "வினேஷ் போகாட்டின் எடை இன்று 50 கிலோ 100 கிராம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, பாரிஸில் இருக்கிறார். அவருடன் பிரதமர் பேசியுள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட உதவியாளர்கள் உள்பட வினேஷ் போகாட்டிற்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து கொடுத்தது." என்று கூறினார். பட மூலாதாரம்,SAMSAT வினேஷ் போகாட் தகுதி நீக்கம் நேற்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்தச் சாதனையை அவர் படைத்திருந்தார். இந்த நிலையில், அவர் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால், அவரது பதக்க கனவு பறிபோயுள்ளது. “வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என இந்திய அணியின் பயிற்சியாளர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். வினேஷ் பொகாட்: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குரல் முதல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை4 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: அன்று புல்லட் வாங்கவே கடன், இன்று துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் - ஸ்வப்னில் குசாலேவின் பின்னணி1 ஆகஸ்ட் 2024 '50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம்' பட மூலாதாரம்,EPA புதன்கிழமை காலை பிபிசி இந்தி நிருபர் அபினவ் கோயலுடன் பேசிய, இந்திய மல்யுத்த பஜ்ரங் புனியாவும் வினேஷ் போகாட்டின் எடை குறித்து கவலை தெரிவித்திருந்தார். "எந்த வீரரும் வெற்றியை முதலில் கொண்டாடுவதில்லை, முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனத் தெரியும். ஆனால் 50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம். ஆண்களுக்கு விரைவில் உடல் எடை குறையும், காரணம் அதிகமாக வியர்க்கும். பெண்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். 50 கிலோவுக்கும் கீழ் எடையைக் கொண்டுவர அவர்கள் போராட வேண்டியுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, "வினேஷ் கடந்த 6 மாதங்களாக உடல் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஒரு ரொட்டி அல்லது இரண்டு ரொட்டிகள் மட்டுமே சாப்பிட்டார். ஆனாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் தான்" என்றார். வினேஷ் போகாட் இறுதிப்போட்டி வரை சென்றதே எங்களுக்கு பதக்கம் வென்றது போல தான் என்றும் அவர் கூறினார். பாலின பரிசோதனை சர்ச்சை: 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினி2 ஆகஸ்ட் 2024 பாரிஸ் ஒலிம்பிக் 2024: தடகளத்தில் புதிய சாதனைகள் படைப்பது ஏன் அரிதாகிவிட்டது?1 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,@WEARETEAMINDIA படக்குறிப்பு,இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பிரதமர் மோதி கூறியது என்ன? பட மூலாதாரம்,@NARENDRAMODI பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் வேதனை உணர்வை, என் வார்த்தைகள் வெளிப்படுத்தும் என நம்புகிறேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவிடம் பேசிய பிரதமர் மோதி, இந்த விவகாரம் மற்றும் வினேஷின் பின்னடைவை அடுத்து, இந்திய அணியின் முன் உள்ள வழிகள் குறித்து நேரடியாகத் தகவல்களைக் கேட்டறிந்தார் என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. வினேஷுக்கு உதவுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராயும்படி அவர் பி.டி.உஷாவிடம் கூறியுள்ளார். மேலும் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும் அவர் பி.டி.உஷாவிடம் வலியுறுத்தியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. வினேஷ் போகாட்டின் குடும்பத்தினர் கூறுவது என்ன? “நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நாடே தங்க பதக்கத்தை எதிர்பார்த்தது. இவ்வளவு தூரம் வந்தபிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நான் மட்டுமல்ல நாடே வருத்தத்தில் உள்ளது. அவர் எதிர்காலத்தில் பதக்கம் வெல்வார்'' என வினேஷ் போகாட்டின் மாமா மகாவீர் போகாட் கூறியுள்ளார். அரசியல் தலைவர்களின் கருத்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவமானம் என கூறியுள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது வினேஷ் போகாட்டுக்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே அவமானம். உலக சாதனை படைக்கவிருந்தார் வினேஷ் போகாட், 100 கிராம் எடை அதிகம் என்பதைக் காட்டி தகுதி நீக்கம் செய்தது மிகப்பெரிய அநீதி. ஒட்டுமொத்த நாடும் வினேஷுடன் நிற்கிறது. இந்திய அரசு இதில் தலையிட வேண்டும், தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். "வினேஷ் போகாட் இறுதிப்போட்டியில் விளையாட முடியாதது பற்றி விசாரிக்கப்பட வேண்டும், மேலும் அதன் உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்." என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார் https://www.bbc.com/tamil/articles/c303ln2812jo
  21. 07 AUG, 2024 | 12:01 PM 2022 அரகலயவின் போது இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இராணுவபுரட்சிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் அது மீண்டும் இடம்பெறுவதற்கு அனுமதிக்க கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2022 இல் இராணுவதலைவர்களாலும் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத்தினராலும் நாட்டின் தலைவரை பாதுகாக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவ்வேளை இராணுவதளபதியாக பதவிவகித்த சவேந்திரசில்வாவை விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே 2022 இல் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு சவேந்திர சில்வா பாதுகாப்பை வழங்க மறுத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வேளை முன்னாள் ஜனாதிபதி என்னை அழைத்து மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு இராணுவதளபதியிடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக்கொண்டார்இராணுவ வாகனங்களை பயன்படுத்தி மிரிஹானவிற்கு செல்லும் வீதிகளை மூடுமாறு நான் கேட்டுக்கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சவேந்திரசில்வா எங்கள் ஆட்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் விடயங்களில் இராணுவம் தலையிட முடியாது என சவேந்திரசில்வா தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/190484
  22. Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 11:11 AM பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் ஹசீனா அவரை பொதுமக்களின் எதிரி என கருதினார்,யூனுஸ் தற்போது ஆறு மாத பிணையில் விடுதலையாகியுள்ளார். ஹசீனாவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் யூனுசின் பெயரை முன்மொழிந்திருந்தனர். https://www.virakesari.lk/article/190478
  23. ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தெரிவு ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரான், தெஹ்ரானிலுள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து கொல்லப்பட்ட நிலையில்,ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக் கொலையை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா முனை பிரிவுக்கு மட்டும் தலைவராக செயற்பட்டு வந்த யாஹ்யா சின்வார் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் ஆயுதக் குழு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/307455

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.