Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அடுத்த ஜனாதிபதி யார்?; வெளியாகியுள்ள இன்னுமொரு கருத்துக் கணிப்பு முடிவுகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டிஜிட்டல் தளம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவு அறிக்கை இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 79 வீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 14 வீத மக்கள் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐந்து வீத மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் 50,087 ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அவர்களில் 87 வீதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுளு்ளது. ஓகஸ்ட் மாதத்திற்கான இந்த கருத்துக்கணிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதுடன், https://hela.page.link/vimasuma என்ற இணைப்பின் மூலம் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307242
  2. இந்திய மீனவர் உயிரிழந்த விவகாரம் - இலங்கையின் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கண்டனம் 01 AUG, 2024 | 04:09 PM இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்றவேளை படகு கவிழ்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் பிரியங்க விக்கிரமசிங்கவை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை கண்டனத்தை வெளியிட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துரதிஸ்டவசமான இந்த உயிரிழப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்துகின்றோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா இந்த விவகாரம் குறித்து நாளை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190012
  3. பத்திரன, மதுஷங்க விலகல் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மத்தீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/307250
  4. Published By: VISHNU 01 AUG, 2024 | 01:37 AM கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு பணி கைவிடப்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றிருந்தனர். மீண்டும் பிறிதொரு இடத்தில் குறித்த திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் கனிய மணல் ஆய்வில் ஈடுபட சென்றபோது அங்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திணைக்களத்தினருடன் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்தும் குறித்த ஆய்வு நடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்ததுடன் தாம் அவ்விடத்திலிருந்து செல்வதாக கூறி குறித்த ஆய்வு திணைக்களத்தினர் சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கனிய வள மணலை அகழ்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (31.07.2024) முல்லைத்தீவு மாவட்ட. செயலகத்தில் இடம்பெற்றதனை தொடர்ந்து இரகசியமான முறையில் முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இருந்து தீர்த்த கரைவரை ஆய்வு பணியினை மேற்கொள்ள சென்றிருந்தார்கள். குறித்த ஆய்வு பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடலோர பாதுகாப்பு திணைக்களம் , கனிய மணல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் , சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வள முகாமைத்துவத்தினர், புவிசரிதவியல் திணைக்களம் இவர்களுடன் இணைந்து கரைதுரைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர், ஆகியோர் இணைந்து ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக குறித்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/189952
  5. இலங்கையை சேர்ந்தவரின் பல்பொருள் அங்காடியை சூறையாடியது காடையர் கும்பல் - பிரிட்டனின் சௌத் போர்ட்டில் கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வன்முறை Published By: RAJEEBAN 01 AUG, 2024 | 09:39 AM பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையை சேர்ந்த ஒருவரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று சூறையாடி பெரும் சேதத்தையும் நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. சானகபலசூரிய என்பவரின் வர்த்தக நிலையம் சூறையாடப்பட்டது என பிபிசி தெரிவித்துள்ளது. வின்ட்ஸர் மினிமார்ட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்த வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்வின் பின்னர்மெனேசைட் பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்த பகுதி பாதுகாப்பனதாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக தனது வர்த்தக நிலையத்தையை மூடிக்கொண்டு அன்று மாலை வீடு திரும்பிய இலங்கையரான பாலசூரிய வீட்டில் உள்ள சிசிடிவி கமராவின் மூலம் தனது வர்த்தக நிலையம் சூறையாடப்படுவதை பார்த்துள்ளார். அவர்களிற்கு வர்த்தக நிலையத்தை உடைத்து உள்ளே செல்வதற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே தேவையாகயிருந்தது அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை காலால் உதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையத்தின் வெளியே தீயை பார்த்தேன் அவர்கள் கார்ட்போர்ட்டினை கொழுத்தினார்கள் நான் அவர்கள் எனது வர்த்தக நிலையத்தை தீயிடப்போகின்றார்கள் என அச்சமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். நான் 999 அழைத்தேன் சிசிடிவியில் எனது பிள்ளைகளும் அதனை பார்த்தார்கள் அலறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மறுநாள் காலையே சேதங்களை பார்த்தேன் என தெரிவித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தை,அது பயங்கரமானதாக காணப்பட்டது அனைத்து பொருட்களும் தரையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைத்தையும் எடுத்துச்சசென்றுள்ளனர் அவர்கள் வர்த்தக நிலையத்திற்குள் சாப்பிட்டார்கள் அது பெரும் பயங்கரம் நான் காப்புறுதி செய்யவில்லை என இலங்கையரான சானக பாலசூரிய தெரிவித்துள்ளார். இதுமிகவும் மோசமான விடயம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி எனக்கு உதவப்போகின்றார்கள் - குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/189954
  6. 01 AUG, 2024 | 12:36 PM பாட்னா: பிஹாரில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவன் காயம் அடைந்தார். பிஹாரின் சுபவுல் மாவட்டத்தில் புனித ஜோன் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவன் நேற்று துப்பாக்கியை தனது புத்தகப் பையில் மறைத்து வைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். பிறகு அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 10 வயது மாணவன் கூறுகையில், “நான் எனது வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டான். நான் அவனை தடுக்க முயன்றபோது, அவன் எனது கையில் சுட்டான். எனக்கும் அந்த சிறுவனுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை” என்றார். கவனக்குறைவு: இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கியால் சுட்டசிறுவன் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குவிரைந்து சென்று, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களின் புத்தகப் பைகளை சோதிக்குமாறு மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். https://www.virakesari.lk/article/189987
  7. கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா? டிரம்ப் கேள்வியால் பெரும் சர்ச்சை 01 AUG, 2024 | 12:07 PM கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். கறுப்பின பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பல வருடங்களாக தனது ஆசிய பின்னணியை மறைத்து வைத்திருந்தார் என டிரம்ப் பிழையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். சிலவருடங்களிற்கு முன்னர் அவர் கறுப்பாக மாறும்வரை அவர் கறுப்பினத்தவர் என்பது எனக்குதெரியாது என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அவர் தன்னை தற்போது கறுப்பினத்தவர் என கருதவேண்டும் என விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் கறுப்பினத்தவரா இந்தியரா என்பது எனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது சட்டத்துறை வாழ்க்கையின் ஆரம்பத்தில் பரீட்சைகளில் தோல்வியடைந்தார், எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/189985
  8. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு 01 AUG, 2024 | 10:32 AM கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2-ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இரவு நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி குறித்து ராணுவ பிரிகேடியர் அர்ஜுன் சீகன் கூறியதாவது: தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், மாநிலபோலீஸார், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடற்படை வீரர்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால் மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ள நிலையில், முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டனரா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உறவுகளை பறிகொடுத்தவர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் மாயமான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முண்டக்கை பகுதியில் 500-க்கும்மேற்பட்ட வீடுகள் இருந்த நிலையில், தற்போது 50 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. தொடரும் மழையின் அச்சுறுத்தல்: வயநாடு, மலப்புரம், பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர்,காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/189967
  9. 01 AUG, 2024 | 10:21 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்ஜசீராவின் பத்திரிகையாளர் இஸ்மாயில் அல் கௌலும் கமரா ஊடகவியலாளர் ரமி அல் ரைவும் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. மேற்குகாசாவின் சட்டி அகதிமுகாம் பகுதியில் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த காரின் மீது தாக்குதல் இடம்பெற்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் வீட்டிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/189956
  10. 01 AUG, 2024 | 12:03 PM திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் விதமாக திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் புதிதாக டொல்பின் சிலை அமைக்கப்பட்டு நேற்று (31) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்க உத்தியோகபூர்வமாக இந்த சிலை திறக்கப்பட்டது. இதன்போது நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/189976
  11. இஸ்ரேல்: இறந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்கள் சேகரிப்படுவது ஏன்? இறந்த உடலில் விந்தணுக்கள் எவ்வளவு நேரம் உயிர்வாழும்? படக்குறிப்பு,"ரீஃப் குழந்தைகளை மிகவும் நேசித்தான்" என்கிறார் அவரது தந்தை அவி ஹருஷ் கட்டுரை தகவல் எழுதியவர், மைக்கேல் ஷுவல், ஆயிஷா கைரல்லாஹ் பதவி, பிபிசி அரபு 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய தங்களது மகன்களை இழந்த பெற்றோர், இறந்தவர்களின் உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை உறையவைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து இதற்கான நடைமுறையில் சில விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் விந்தணுக்களைப் பெற்று அவற்றை உறைய வைக்க தாங்கள் எதிர்கொள்ளும் நீண்ட சட்ட நடைமுறைகளால் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளதாக இறந்த இஸ்ரேலிய வீரர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். காஸா பகுதியில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த போரில் தனது 20 வயது மகன் ரீஃப் கொல்லப்பட்டதை அறிந்த தருணத்தை நினைவுகூரும் போது அவி ஹருஷின் குரல் நடுங்குகிறது. அன்று, அவரது வீட்டு வாசலுக்கு வந்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தனர். “ரீஃபின் விந்தணுவை மீட்டெடுக்க இன்னும் அவகாசம் இருக்கிறது, உங்களுக்கு அதில் சம்மதமா?”. அவி ஹருஷ் உடனடியாக “ஆம்” என்று பதில் அளித்தார். விந்தணுக்கள் பிரித்தெடுக்கும் செயல்முறை படக்குறிப்பு,அந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் “எனது வாழ்க்கையின் நோக்கம்" என்று அவி ஹருஷ் கூறுகிறார் “என் மகன் ரீஃப் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான். அவனது இழப்பை ஈடுசெய்யமுடியாது என்ற போதிலும், நாங்கள் இதைச் செய்ய விரும்புகிறோம்." என்று கூறுகிறார் அவி ஹருஷ். "ரீஃப் குழந்தைகளை மிகவும் நேசித்தான், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினான். எனவே நான் இந்த முடிவைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். ரீஃப்க்கு மனைவியோ காதலியோ இல்லை. ஆனால் அவி ஹருஷ் தனது மகனின் கதையைப் பகிர்ந்த பிறகு, அதைக் கேள்விப்பட்ட பல பெண்கள் ஹருஷைத் தொடர்பு கொண்டு, ரீஃபின் குழந்தையைச் சுமக்க முன்வந்தனர். இப்போது அந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் “எனது வாழ்க்கையின் நோக்கம்" என்று அவர் கூறுகிறார். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலியக் குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன. அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, காஸாவில் ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது, இதில் 39,000 க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரில் சுமார் 400 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 7 முதல், கிட்டத்தட்ட 170 இளைஞர்களின் (பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள்) உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் விகிதத்தை விட தோராயமாக 15 மடங்கு அதிகமாகும். இந்த விந்தணுக்கள் பிரித்தெடுக்கும் செயல்முறை என்பது, உடலின் விதைப்பையில் இருந்து ஒரு சிறிய திசுவை எடுப்பதாகும். பின்னர் அதிலிருந்து உயிருள்ள விந்தணுக்கள் பிரிக்கப்பட்டு, ஆய்வகத்தில் உறைய வைக்கப்படும். இறந்த உடலில் விந்தணுக்கள் 72 மணிநேரம் வரை உயிர்வாழும் என்றாலும் கூட, 24 மணி நேரத்திற்குள் அவற்றை பிரித்தெடுப்பது சிறந்தது. இந்த நடைமுறைக்காக பெற்றோர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும் என்ற விதியை கடந்த அக்டோபரில் நீக்கியது இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம். சமீப காலங்களில், மகன்களை இழந்த பெற்றோருக்கு இந்த நடைமுறையை எளிதாக்குவதில் அதிக முனைப்பு காட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது. விந்தணுவை உறைய வைப்பது சுலபமாகிவிட்டது. ஆனால் அதைப் பயன்படுத்த விரும்பும் கணவனை இழந்த மனைவியோ அல்லது பெற்றோரோ, இறந்த போன நபருக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இந்த செயல்முறை முழுமையடைய பல ஆண்டுகள் ஆகலாம். படக்குறிப்பு,ரேச்சல், இறந்துபோன தனது மகனின் குழந்தையைப் பெற்றெடுக்க தாய் தேவை என விளம்பரம் செய்தார். 'அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தோம்' ரேச்சல் மற்றும் யாகோவ் கோஹன், தங்களது இறந்த மகனின் விந்தணுவை உறையவைக்க முன்வந்த இஸ்ரேலின் முதல் பெற்றோர் ஆவார்கள். அவர்களின் மகன் கீவன், 2002இல் காஸா பகுதியில், ஒரு பாலத்தீனிய துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்தது. இவர்களது பேத்தி ஓஷர், கீவனின் உயிரணுக்களில் இருந்து பிறந்தவர். அவருக்கு இப்போது 10 வயதாகிறது. “ஆனால் நாங்கள் அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தோம்” என ரேச்சல் கூறுகிறார். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு, நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதன் பிறகு ரேச்சல் தனது மகனின் குழந்தையைப் பெற்றெடுக்க தாய் தேவை என விளம்பரம் செய்தார். படக்குறிப்பு,ஓஷருக்கு (இடதுபுறம் இருப்பவர்), இரு தரப்பிலிருந்தும் தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக ஐரிட் கூறுகிறார். ஐரிட், தனது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ரேச்சலின் விளம்பரத்திற்கு பதிலளித்த பெண்களில் அவரும் ஒருவர். கீவனின் குழந்தையைத் பெற்றெடுத்தவர். ஐரிட் திருமணம் ஆகாதவர். ஒரு உளவியலாளர் மற்றும் ஒரு சமூக சேவகர் உடனான கலந்தாய்வுக்குப் பிறகு, கருவுறுதல் சிகிச்சையைத் தொடங்க நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது. “நாங்கள் கடவுள் போல என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் கூறுகிறார். "தனது தந்தை யார் என்பதை அறிந்த குழந்தைக்கும் விந்தணு தானம் மூலம் கருத்தரிக்கும் குழந்தைக்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் ஐரிட். தன் தந்தை கீவன் ராணுவத்தில் கொல்லப்பட்டது குறித்து 10 வயதான ஓஷருக்குத் தெரியும். அவருடைய அறை டால்பின் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கீவன் டால்பின்களை நேசித்தார் என்பது எனக்குத் தெரியும் என்று ஓஷர் கூறுகிறார். "என் தந்தையின் உயிரணுக்களை பிரித்தெடுத்து, என்னை இந்த உலகிற்கு கொண்டு வர சரியான தாயைத் தேடினர் என்பதும் எனக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். ஓஷருக்கு, இரு தரப்பிலிருந்தும் தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக ஐரிட் கூறுகிறார். அதே சமயத்தில், “அவளை நாங்கள் ‘உயிருள்ள நினைவுச்சின்னமாகக் கருதி வளர்க்கவில்லை’. ஒரு சாதாரண பிள்ளையைப் போலதான் வளர்த்து வருகிறோம்” என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு,தன் தந்தை கீவன் ராணுவத்தில் கொல்லப்பட்டது 10 வயதான ஓஷருக்குத் தெரியும் ‘குறிப்பிடத்தக்க கலாசார மாற்றம்’ “விந்தணுவைப் பாதுகாப்பது, மகன்களை இழந்த குடும்பங்களுக்கு ‘வாழ்க்கைக்கான அர்த்தத்தை அளிக்கிறது” என்று ஷமீர் மருத்துவ மையத்தின் விந்தணு வங்கியின் இயக்குனர், மருத்துவர் இட்டாய் காட் கூறுகிறார். அவரே இதற்கான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார். "எதிர்காலத்தில், இனப்பெருக்கம் மற்றும் கருவுறுதல் தொடர்பான மக்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க இதுவே கடைசி வாய்ப்பு," என்று அவர் கூறுகிறார். இந்த செயல்முறையை மக்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வதை சுட்டிக்காட்டிய அவர், சமீபத்தில் ‘குறிப்பிடத்தக்க கலாசார மாற்றம்’ ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். “பெரும்பாலும் இந்த நடைமுறைக்கு ‘இறந்தவர்களின் ஒப்புதல்’ பற்றிய தெளிவான பதிவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஏற்கனவே மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் குடும்பங்கள், விரக்தி அடைகின்றனர்” என்கிறார் மருத்துவர் இட்டாய் காட். படக்குறிப்பு,“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவருக்கும், விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது" என்கிறார் மருத்துவர் இட்டாய் காட் “விந்தணுக்களை உறைய வைத்துவிடலாம், ஆனால் அதை கருத்தரிப்பதற்கு பயன்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது” என்கிறார் மருத்துவர் இட்டாய் காட். "நாங்கள் இனப்பெருக்கம் பற்றி விவாதிக்கிறோம், ஒரு பையன் அல்லது பெண்ணை உலகிற்கு கொண்டு வருகிறோம். அந்தக் குழந்தை தந்தை இல்லாமல் வளரப் போகிறது என்பதும் எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். “பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவருக்கும், விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது” என்று கூறும் இட்டாய் காட், குழந்தையின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான அனைத்து முடிவுகளும் தாயால் எடுக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இறந்தவர்களின் விந்தணுக்களை உறையவைப்பதை தான் முன்பு எதிர்த்ததாகவும், ஆனால் போரில் இறந்த குடும்பங்களை சந்தித்து பேசிய பிறகு, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார். "இது அவர்களின் வாழ்வை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது, சில சமயங்களில் அது அவர்களுக்கு எப்படி ஆறுதல் அளிக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு,கீவன், 2002இல் காஸா பகுதியில், ஒரு பாலத்தீனிய துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார் 'யூத சட்டத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகள்' டெல் அவிவில் உள்ள யூத நெறிமுறைகளுக்கான சோஹார் மையத்தை வழிநடத்தும் தாராளவாத, யூத மத ஆசிரியரான ரப்பி யுவல் ஷெர்லோ, “இறந்தவர் இதற்கு முன்பே ஒப்புதல் கொடுத்துள்ளாரா என்பது ஒரு முக்கியமான விஷயம்தான்” என்கிறார். ஒரு மனிதனின் வம்சாவளியைத் தொடர்வது மற்றும் அவரது உடலை முழுவதுமாக புதைப்பது என யூத சட்டத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் விளக்குகிறார். படக்குறிப்பு,அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலியக் குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன. இந்த நடைமுறையில் இறப்பதற்கு முன்பாக ஒருவர் கொடுக்கவேண்டிய ஒப்புதல் குறித்தும், ராணுவச் சேவையில் கொல்லப்பட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் பலன்களை இந்தக் குழந்தைகளும் பெறுமா என்பது குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக இதைக் கவனித்து வரும் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர். உறையவைக்கப்பட்ட விந்தணுக்களைக் கருத்தரிக்க பயன்படுத்த வேண்டுமா கூடாதா என்பதில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன, குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள அந்த கணவனை இழந்த பெண்கள் விரும்பவில்லை எனும்போது. அவி ஹருஷைப் பொறுத்தவரை, மகனை இழந்த துக்கத்திலும் அவர் உறுதியாக இருக்கிறார். அவர் தனது இறந்த மகனின் டைரிகள், ஆல்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நிரப்பப்பட்ட ஒரு அட்டைப்பெட்டியை பார்க்கிறார். ரீஃபுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கும் வரை தான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்று கூறும் அவர், "அது நடக்கும். அவனுடைய குழந்தைக்கு இந்த பெட்டியைப் பரிசளிப்பேன்." என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c98qz0elzdlo
  12. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களிடையே 50 சதவிகித வாக்கை பெறக்கூடியவர்கள் என எவருமில்லை - சி.வி.விக்னேஸ்வரன் Published By: DIGITAL DESK 7 01 AUG, 2024 | 12:15 PM ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய ஆபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (31) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்:- நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை. உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள். ஆனால் இத்தேர்தலில் பலபேர் போட்டியிடுவதாக கூறினாலும் ரணில், சஜித், அனுர என்ற மூன்று போர் தான் முக்கியமானவர்கள். இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்க போகிறது. இந்த தேர்தலில் மொட்டு கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகிறேன். அதாவது தெற்கிலே இருக்கிற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜேவிபி கட்சிக்கு போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவிற்கு இந்த நாட்டிற்கு இவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது. குறிப்பாக இந்த நாட்டை சூறையாடி இருக்கின்றார்கள், போர் போர் என்று போரின் காரணமாக தங்களை தங்கள் வளர்த்து கொண்டார்கள். இவை எல்லலாம் மக்ளுக்கு இப்போது நன்றாகத் தெரியும். ஆகவே எந்த விதத்திலும் தற்போது இருக்கிற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர். அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.இப்போது மொட்டு கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்து கட்டி வேறொரு வேட்பாளரை போடக்கூடும். ஆனால் அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என்று தான் நான் நம்புகின்றேன். எனினும் முழுமையாக ரணிலிடம் தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கிறோம் என்று காட்டுவதற்க்கு பலதும் பேசுவார்கள். இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகிறேன். ஏனெனில் ராஜபக்சாக்களோடு இருப்பவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் இதன் பின்னர் பாராளுமன்றம் போக கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் என அவர்மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/189963
  13. இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது எப்படி? இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய சில தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவர் தங்கியிருந்த வீட்டின் மீது ராக்கெட் தாக்கியதில் அவரும் அவரது பாதுகாவலரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பொதுவாக வெளிநாட்டில் அதன் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், ஏப்ரல் 19 அன்று இரானில் அணுசக்தி நிலையத்தை சுற்றி வான் பாதுகாப்பை குறிவைத்து நடத்தப்பட்ட அதே முறையை இந்த தாக்குதலிலும் பின்பற்றியிருக்கலாம் எனத் தெரியவருகிறது. அந்த நடவடிக்கையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானிய வான்வெளிக்கு வெளியில் இருந்து ராக்கெட்டுகளை வீசியதாக நம்பப்படுகிறது. சௌதி அரேபியாவின் அல் ஹதாத் செய்தி நிறுவனமும் இதேபோன்ற தகவலைத் தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியேவின் இல்லம், வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் (Guided Missile) தாக்கப்பட்டதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானின் அரசு ஊடகமும் இதையே கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx92w88gd74o
  14. சிறிலங்கா கிரிக்கெட் அணி படைத்த மோசமான சாதனை இலங்கையில்(srilanka) நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கெதிரான மூன்று ரி 20 தொடர்களிலும் சிறிலங்கா கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இவ்வாறு தொடர் தோல்வியை சந்தித்த சிறிலங்கா கிரிக்கெட் அணி சர்வதேச ரி 20 போட்டிகளில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதிக தோல்விகளை சந்தித்த அணி அதாவது சர்வதேச ரி 20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை சிறிலங்கா அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை (105 தோல்வி) முதல் இடத்திலும், பங்களாஷே் (104 தோல்வி) 2வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் (101 தோல்வி) 3வது இடத்திலும் உள்ளன. சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் கண்ட முதல் ஐந்து அணிகள் (சூப்பர் ஓவர் உட்பட) வருமாறு, சிறிலங்கா -105 தோல்வி, பங்களாதேஷ் - 104 தோல்வி, மேற்கிந்திய தீவுகள்- 101 தோல்வி, சிம்பாப்வே - 99 தோல்வி, நியூசிலாந்து - 99 தோல்வி https://ibctamil.com/article/most-defeats-t20-cricket-sri-lankan-team-1722412747
  15. வவுனிக்குளத்திலிருந்து (Vavuni) நேற்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் நேற்று (30.07.2024) வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (29) இரவு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் நேற்று (30) அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் உடலமாக மீட்கப்பட்டார். உடற்கூற்று பரிசோதனை இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். இந்நிலையில் இன்று (31) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது. உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றார்கள். https://ibctamil.com/article/vavunikulam-murder-youth-strangled-police-investig-1722427603
  16. ரணிலுக்கு பெருகும் ஆதரவு: ஜனாதிபதி பக்கம் சாய்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். மகிந்தவுக்குக் பறந்த கடிதம் அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்திய 116 பேர் கொண்ட குழு இன்று (31) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை (Podujana Peramuna Party) பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனைத் தெளிவுபடுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga ) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். https://ibctamil.com/article/sri-lanka-freedom-party-support-ranil-election-1722436281
  17. வங்கதேசம்: மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த கொடூரம் - அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், அன்பரசன் எத்திராஜன் மற்றும் ஸ்ருதி மேனன் பதவி, பிபிசி நியூஸ் மற்றும் பிபிசி வெரிஃபை 30 ஜூலை 2024 ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை கூட ஒரு புகைப்படம் உணர்த்தி விடும் - சில சமயங்களில், அது ஒட்டுமொத்த தேசத்தையே அசைத்துவிடக் கூடும். வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஆயுதம் ஏந்திய காவல்துறையை எதிர்கொள்ள கையில் சிறிய தடியுடன் கைகளை விரித்தபடி நின்ற பல்கலைக்கழக மாணவர் அபு சயீத் போராட்டத்தின் முகமாக மாறினார். ஆயுதம் ஏந்திய காவலர்களை அவர் எதிர்கொண்டு நின்ற புகைப்படம் அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டிற்கு எதிராக அந்நாட்டில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின் திருப்புமுனையாக அது அமைந்தது. வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, சில நொடிகளில் அபு சயீத் மீது ரப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது , அப்போதும் அவர் தொடர்ந்து அந்த இடத்திலேயே நின்றார். அதன் பிறகு பலமுறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சத்தங்கள் ஒலித்தாலும் அவர் எதிர்கொண்டு நின்றார். ஆனால் சில நிமிடங்களில் அவர் சரிந்து விழுந்தார். வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தினர். பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்குவது பாரபட்சமானது என்று மாணவர்கள் கூறி போராட்டத்தில் குதித்தனர். ஜூலை 16 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் வைரலாகி மேலும் பல மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்தது. அதன் பிறகு வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வன்முறை, அமைதியின்மை நாட்கள் நீடித்தன. கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக வங்கதேச காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இறுதியாக அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பட மூலாதாரம்,SHARIER MIM படக்குறிப்பு,வங்கதேச காவல்துறையை அபு சயீத் எதிர்கொண்ட காட்சி என்று இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. பொறியியல் கலந்தாய்வில் சிறு தவறும் வாழ்க்கையையே மாற்றிவிடும் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்30 ஜூலை 2024 வெளிச்சத்துக்கு வந்த தாக்குதல்கள் பெங்காலி நாளிதழ் `Prothom Alo’ மற்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் ஆகியவை இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இதில் பல மாணவர்கள் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் அடக்கம். அந்நாட்டு உள்துறை அமைச்சரின் கூற்றுப்படி, அதிகாரப்பூர்வ அரசாங்க புள்ளிவிவரங்கள் 147 பேர் இறந்திருப்பதாக கூறுகிறது. ஆனால் சரியான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. உண்மையில் போராட்டத்தின் போது சாலைகளில் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோக்கள், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த இணைய முடக்கம் காரணமாக வெளிவருவது தாமதமானது. இருப்பினும், கடந்த வாரம் அங்கு இணையச் சேவை ஓரளவு மீண்டதால், போராட்டத்தின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அதிகமான காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தலைநகர் டாக்காவின் ஜத்ராபரி பகுதியில் காயமடைந்த தனது நண்பரை இளைஞர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து செல்ல முயலும் வீடியோ உண்மையானது என்று பிபிசி வெரிஃபை குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில், ஹெல்மெட்டுடன் சாதாரண உடையில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் அந்த இரண்டு இளைஞர்கள் இருக்கும் திசையில் சுடுவது போல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் படுகாயமடைந்த தனது நண்பரை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி ஓடுகிறார். இந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் சம்பவமும் அபு சயீத்தின் மரணமும் "சட்டவிரோதமான கொலைகள்" என்று கருத்து சுதந்திரத்தின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்கான சிறப்பு நிருபர் ஐரீன் கான், பிபிசியிடம் கூறினார். “அபு சயீத் காவல்துறைக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் காரணமேயில்லாமல் அவரை சுடுவது தெரிகிறது. இது நியாயமற்ற செயல். வன்முறையின் தெளிவான காட்சி” என்று கான் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போராட்டத்தில் காயமடைந்த மாணவி ஒருவரை சக மாணவர்கள் தூக்கிச் செல்லும் காட்சி. போலீஸின் சட்ட விரோத செயல்களை ஒப்புக் கொண்ட அமைச்சர் சயீத் மீது தாக்குதல் நடத்தியது "சட்டவிரோதமானது" என்று வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இளநிலை அமைச்சர் முகமது அலி அராபத் ஒப்புக்கொண்டார். "இது தெளிவாக தெரிகிறது. இளைஞர் அவர்கள் முன் நின்று, கைகளை நீட்டி நிற்கிறார், மிகக் குறுகிய தூரத்தில் நிற்கும் அவரை காவல்துறை சுடுகிறது." இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை நடத்த ஒரு சுயாதீன நீதித்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அராபத் கூறினார். பிபிசி வெரிஃபை குழுவால் சரிபார்க்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட மூன்றாவது வீடியோ, டாக்காவின் முகமதுபூர் பகுதியில் வெகு தொலைவில் போராட்டக்காரர்கள் குழுவை நோக்கி ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுடுவதைக் காட்டுகிறது. ஆனால், டாக்கா பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஃபரூக் ஹொசைன், காவல்துறையின் செயல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார். “உயிரையும் உடமையையும் காப்பாற்ற போலீசார் தங்கள் பலத்தை பயன்படுத்துகின்றனர். எந்தவொரு காவல்துறை அதிகாரியும் தங்கள் சொந்த பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழும் சூழல்களில் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்துவார்”என்று ஹொசைன் ஒரு வாட்ஸ்அப் செய்தியில் கூறினார். மற்றொரு சம்பவத்தின் வீடியோக்களை அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். அதில் டாக்காவின் உத்தரா பகுதியில் ஒரு போலீஸ் வேனை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குவதை காட்டுகிறது. பின்னர் வாகனத்தில் இருந்த அதிகாரியை அவர்கள் தாக்குவதும் பதிவாகி உள்ளது. “போராட்டக்காரர்கள் ஒரு போலீஸ் அதிகாரியைக் கொன்று, டாக்காவின் ஜத்ராபரி பகுதியில் தலைகீழாகத் தொங்கவிட்டனர்” என்று அராபத் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. "வன்முறை ஒருதலைப்பட்சமாக மட்டும் நடக்கவில்லை. மக்கள் இரு தரப்பையும் பார்க்க வேண்டும், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும்" என்று அராஃபத் கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதிக்கப்படாததால் பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் தாக்கப்பட்டனர்" என்றார் அவர். அரசாங்கத்தால் பகிரப்பட்ட இரண்டாவது காணொளி, காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரியை சக காவலர்கள் தூக்கிச் செல்வதைக் காட்டியது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்கள் மாணவர் போராட்டங்களில் ஊடுருவி, பாதுகாப்புப் படையினர் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தியதோடு, அரசு சொத்துகளுக்கும் தீ வைத்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றன. `இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஆளும் அவாமி லீக் கட்சியின் முயற்சி’ என்று எதிர்க்கட்சிகள் இந்தக் கூற்றை நிராகரிக்கின்றனர். போராட்டங்கள் ஓய்ந்த பின்னர், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் உட்பட 9,000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. மாணவர் போராட்டத் தலைவர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர். இது "தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக" எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு தரப்புக் கூறியது. போராட்டம் செய்தவர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்வதால் வங்கதேசத்தில் மேலும் அமைதியின்மை சூழல் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “அரசுக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கை உணர்வு இல்லை, இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் நம்பவில்லை. அது வெளிப்படையாக தெரிகிறது. அதனால்தான் இங்கு போராட்டமும் பயங்கரமான சூழ்நிலையையும் ஏற்பட்டது”என்று ஐ நா நிபுணர் (UN expert) கான் கூறினார். மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பின் யாமின் மொல்லா, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவாக உள்ளார். "அரசாங்கம் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c147j8pdy0do
  18. அமெரிக்கா 7ஆம் இடம் தங்கம் கூட வாங்கிய பட்டியலில்!
  19. 'கேப்டனாக இருக்க விரும்பவில்லை' - இலங்கையை வென்ற பிறகு சூர்யகுமார் இவ்வாறு கூறியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றியது. இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவுக்கு முதல் தொடர் வெற்றி இதுவாகும். அது மட்டுமல்லாமல் புதிய தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ள கெளதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இந்திய அணி குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்திருந்த போதிலும் வெற்றிகரமாக அதை டிபெண்ட் செய்துள்ளது. இந்திய அணியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த 2 போட்டிகளைப் போன்று இந்த ஆட்டத்திலும் இலங்கை அணி நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் திணறினர். ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் இருவரும் முன்னெப்போதும் இல்லாமல் முதல்முறையாக கடைசிக் கட்டத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினர். இதனால், ஆட்டம் டையில் முடிந்தது. சூப்பர் ஓவரிலாவது இலங்கை சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கவே இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகன் ஸ்கை இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். 3 போட்டிகளிலும் 92 ரன்களும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் தொடர் நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை எந்த சர்வதேச டி20 போட்டியிலும் பந்துவீசாத சூர்யகுமார் இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல ரிங்கு சிங் முதல்முறையாகப் பந்துவீசி ஒரு ஓவரில் 3 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். "நான் கேப்டனாக விரும்பவில்லை" தோனி போன்றே புதுமையான முடிவுகளால் முதல் தொடரிலேயே முத்திரை பதித்த சூர்யகுமார் யாதவ் 'நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை' என்று கூறியுள்ளார். முதல் முறையாக கேப்டன் பதவி ஏற்று டி20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் சூர்யகுமார் கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் 140 ரன்களே வெற்றிக்கான ஸ்கோர்தான். கடைசி வரிசைவரை பேட்டிங்கிலும் எங்கள் வீரர்கள் சிறப்பானவர்கள் என்பதை நிரூபித்தனர். இதுபோன்ற ஆட்டங்களை பார்த்திருக்கிறேன் என்றும், முழுமனது வைத்து கடைசி வரை போராடினால் ஆட்டத்தை திருப்ப முடியும் என்று சக வீரர்களிடம் தெரிவித்தேன். அதிகமான திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் அனைத்தையும் எளிதாக்கும். ஒவ்வொரு வீரரும் சக வீரரை கவனித்துக் கொண்டதும், உதவியதும் நம்ப முடியாததாக இருந்தது. நான் பேட் செய்ய வந்தபோது எனக்கு சற்று அழுத்தம் இருந்தாலும் என்னை மட்டுமே வெளிப்படுத்தினேன். என் பணியை சக வீரர்கள் எளிதாக்கினர். நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,BCCI இலங்கை மோசமான பேட்டிங் இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கில் மோசமான சரிவை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் 37 ரன்களுக்கு 9 விக்கெட், 2வது ஆட்டத்தில் 31 ரன்களுக்கு 7 விக்கெட் , இந்த ஆட்டத்திலும் சூப்பர் ஓவரைச் சேர்த்து 29 ரன்களுக்கு 9 விக்கெட் என மோசமான சரிவை எதிர்கொண்டது. இலங்கை அணியின் பேட்டிங்கைப் பார்க்கும் போது கடந்த 1980கள் மற்றும் 1990களில் இருந்த இந்திய அணி நினைவூட்டுகிறது. அதாவது தொடக்கத்தில் சிறப்பாக ஆடும் இந்திய அணி திடீரென சரிவைச் சந்தித்து மளமளவென விக்கெட்டுகளை இழக்கும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்தது. அதேபோன்ற நிலையில் இலங்கை அணி இருக்கிறது. கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியைவிட தொடக்க வரிசை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இலங்கை சிறப்பாகவே செயல்பட்டாலும், கடைசி நேரத்தில் சந்திக்கும் மாபெரும் விக்கெட் சரிவு அந்த அணியை தோல்வியில் தள்ளியது. பட மூலாதாரம்,BCCI வெற்றியை தவறவிட்ட இலங்கை இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 2 ஓவர்களில் இலங்கை வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. இதற்கு முன் பந்துவீசிய அனுபவமே இல்லாத ரிங்கு சிங் ஓவரில் 3 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன, கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதுவரை சர்வதேச போட்டிகளில் பந்துவீசியதில்லை என்றாலும் கூட துணிச்சலாக பந்துவீசினார். பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு தண்டனையாக 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை இருந்தது. அப்படி இருந்தும், சூர்ய குமார் ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததுடன், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் ஆட்டம் டையில் முடிந்தது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்று வெற்றியை இழந்திருக்கிறது இலங்கை. ‘வயநாடு சம்பவம் நீலகிரிக்கான எச்சரிக்கை மணி’- மேற்குத் தொடர்ச்சி மலை நிலச்சரிவுகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?31 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES சூப்பர் ஓவரிலும் சொதப்பல் சூப்பர் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். முதல் பந்தை வைடாக, அடுத்த பந்தில் மென்டிஸ் ஒரு ரன் எடுத்தார். பெரேரா அடித்த ஷாட்டை பவுண்டரி எல்லையில் பிஷ்னோய் கேட்ச் பிடித்தார். அடுத்த பந்தில் நிசாங்கா பெரிய ஷாட்டுக்கு முயல, அதை ரிங்கு சிங் கேட்ச் பிடிக்கவே இலங்கை அதிர்ச்சியில் உறைந்தது. இதையடுத்து, 3 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தீக்சனா வீசிய முதல் பந்திலேயே சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி விளாச இந்திய அணி எளிதில் வென்றது. தொடரும் பேட்டிங் சரிவு இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் மோசமான பேட்டிங் சரிவைச் சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, பெரேரா, மென்டிஸ் ஆகியோர் கடந்த 2 போட்டிகளைப் போன்ற வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 110 ரன்கள் வரை இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றியின் பக்கத்தில் இருந்தது. ஆனால், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கே இந்த திடீர் சரிவுக்கு காரணம். இந்த ஆட்டத்திலும் கூட நிசாங்கா(43) மென்டிஸ்(26) இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எனும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குஷால் பெரேரா(46), நிசாங்கா(26) ஆகியோர் நல்ல ஸ்கோர் செய்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் அசலங்கா(0), ஹசரங்கா(3), ரமேஷ் மென்டிஸ்(3), கமிந்து மென்டிஸ்(1) தீக்சனா(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி பதற்றத்தில் 4 விக்கெட்டுகளை இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மீண்டும் ஏமாற்றிய சாம்ஸன் இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரிஷப் பந்த், அர்ஷ்தீப், அக்ஸர், ஹர்திக் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன், கலீல் முகமது, ஷிவம் துபே, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். சுப்மான் கில், ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கத்திலிருந்தே கவனமாக பேட் செய்தனர். ஆனால், ஜெய்ஸ்வால் சிறிது முன்னெடுப்பு செய்து, தீக்சனா ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், ஜெய்ஸ்வால் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று கால் காப்பில் வாங்கி 10 ரன்னில் தீக்சனாவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த சஞ்சு சாம்ஸன் 4 பந்துகளைச் சந்தித்தும் ரன் எடுக்காமல் விக்ரமசிங்கே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து 2வது முறையாக டக்அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 4வது வீரராக களமிறக்கப்பட்ட ரிங்கு சிங்கும் ஜொலிக்காமல் 2 பந்துகளைச் சந்தித்து தீக்சனா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் சூர்யகுமாரும் 8 ரன்னில் பெர்னான்டோ ஓவரில் ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவரில் இந்திய அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. களத்தில் இருந்த சுப்மான் கில், ஷிவம் துபே இருவரும் சரிவிலிருந்து இந்திய அணி மீட்க முயன்றனர். ஆனால், துபே 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரமேஷ் மென்டிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில், ரியான் பராக் கூட்டணி நிலைத்து ஆடி இந்திய அணியின் ஸ்கோரை 9வது ஓவரில் 50 ரன்களை எட்ட வைத்தனர். 6 ஓவர்களாக பவுண்டரி இல்லை ஏறக்குறைய 6 ஓவர்களாக இந்திய பேட்டர்கள் பவுண்டரி அடிக்காத நிலையில் ரமேஷ் மென்டிஸ் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் பவுண்டரி அடித்து வறட்சியை போக்கினார். ஹசரங்கா வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸர்களை ரியான் பராக் பறக்கவிட்டார். ஹசரங்கா வீசிய 16-வது ஓவரில் கில்(39) 2வது பந்திலும், 5வது பந்தில் ரியான் பராக்கும்(26) விக்கெட்டை இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்திருந்தது. 120 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மானம் காத்த தமிழக வீரர் ஆனால், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என கேமியோ ஆடி 25 ரன்கள் சேர்த்து தீக்சனா ஓவரில் விக்கெட்டை இழந்தார். சுந்தரின் கேமியோதான் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாக அமைந்தது. இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்து 137 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோரை எட்டியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்களை வீசி 107 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். https://www.bbc.com/tamil/articles/c72vp532qz9o
  20. கடவுள் என்பவர் ஏன் அநியாயங்கள் நடக்கவிட்டு பிறகு பாவத்திற்கு தண்டனை என அளிக்கிறார்?! அவற்றை நடக்கவிடாது தடுக்க அவருடைய பேராற்றல்களை பயன்படுத்தலாமே! பகிர்விற்கு நன்றி ஐயா.
  21. 31 JUL, 2024 | 05:27 PM புத்தளம் பிரதேசத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 44 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவர். சந்தேக நபர்கள் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணினிகள் மற்றும் பல சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/189920
  22. Hamas Leader Killed: Iran-க்குள் புகுந்து கொன்றதா Israel? மத்திய கிழக்கில் போர் மூளும் அச்சம் Ismail Haniyeh Killed: Iran-க்குள் புகுந்து Hamas leader-ஐ கொன்றதா Israel? அடுத்தடுத்த கொலைகளால் Middle East-ல் பதற்றம் ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனிய கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
  23. Kerala-க்கு Warning கொடுத்தோம்; ஆனால்... Amit Shah பேசியது என்ன? மீட்புப் பணியில் என்ன சிக்கல்? Kerala Landslide: Amit Shah பேசியது என்ன? மீட்புபணியில் என்ன சிக்கல்? kerala Chief Minister இன்று பேசியது என்ன? கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக நொடிப் பொழுதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  24. Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 01:14 PM நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த கசிவால் அந்த நாய் இறந்து போனது. அதற்கு அதீத உடல் எடையே காரணமாக கூறப்படுகிறது. இதனால் மானுகா மாகாணத்தின் நீதிமன்றம் நாயின் உரிமையாளருக்கு 1,222 நியூசிலாந்து டொலர் அபராதமும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும் ஓராண்டு காலத்திற்கு நாய் வளர்க்கும் உரிமையையும் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. "துரதிஷ்டவசமாக குறைந்த எடையுடைய பிராணிகளே அதிக இன்னல்களுக்கு ஆளாகும். ஆனால் அதற்கு நிகராக அதிக எடை கொண்ட பிராணிகளும் பல இன்னல்க சந்திக்க நேரிடுகிறது என விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கத்தின் தலைவர் Todd westwood தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவர்களால் நுக்கியின் அதிக எடை காரணமாக அவரது இதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை. நாய்க்கு நிறைய தோல் வளர்ச்சிகள் இருந்தன, குறிப்பாக அவரது முழங்கைகள் மற்றும் வயிறு போன்ற தொடர்பு பகுதிகளில், மற்றும் அவரது நகங்கள் பெரிதாகி இருந்தது. மேலும், நுகிக்கு விழி வெண்படல அழற்சியும் இருந்துள்ளது. https://www.virakesari.lk/article/189886

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.