Everything posted by ஏராளன்
-
கவாய் (Hawaii)பயணம்.
எனக்கு ஊரிலிருந்தே ஹவாய்த்தீவை சுற்றிக்காட்டியதற்கு நான் தான் நன்றி சொல்லவேணும்! நன்றி அண்ணை.
-
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 30 நாட்கள் கடந்தும் முடிவே தெரியாத கேள்விகள் - வழக்கு என்ன ஆகும்? பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், தினசரி கைதுகள், விசாரணை என வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. தனிப்படை போலீசாரின் விசாரணை, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருமா? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் அவர் புதிதாகக் கட்டி வந்த வீட்டின் முன்பு வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் கைதான திருவேங்கடத்தை மாதவரம் ஏரிக்கரை அருகே உள்ள பகுதிக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கொலை வழக்கில் சரணடைந்த நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அதில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரனும் ஒருவர். கொலைக்குப் பயன்படுத்திய 6 செல்போன்களை அவரிடம் கொலையாளிகள் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. இவற்றில் 3 செல்போன்களை கொசஸ்தலை ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். இவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. வீடு இல்லாதவர்கள் விருப்பப்பட்டு சிறை செல்கின்றனரா? - தமிழகச் சிறைகளில் என்ன நடக்கிறது?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB தொடரும் கைதுகள் இதன்பின்னர், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் மலர்க்கொடி, பா.ஜ.க முன்னாள் பிரமுகர் அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பொன்னை பாலு, அருள், ராமு உள்பட 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், தமிழக இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் மகன் ஆவார். வேலூர் சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக நாகேந்திரன் அடைக்கப்பட்டுள்ளார். நிலத் தகராறு ஒன்றில் ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமனுக்கு முன்விரோதம் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் 'சம்போ' செந்தில் என்ற ரவுடியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, 'சம்போ' செந்திலின் கூட்டாளியும் சேலம் சிறைக் கைதியுமான ஈசாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் 3 நாள்கள் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படக்குறிப்பு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலரும் வழக்கறிஞருமான எஸ்.ரஜினிகாந்த் 200 பேரிடம் விசாரணை தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் வழக்கறிஞர்கள். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. "இந்த வழக்கில் இன்னமும் விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நபர்கள், கொலைக்காகப் பெரும் தொகையைச் செலவு செய்யக் கூடியவர்கள் கிடையாது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலவழித்த நபர் யார் என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம்," என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலரும் வழக்கறிஞருமான எஸ்.ரஜினிகாந்த். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது, அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது என இந்த நிமிடம் வரையில் சரியான திசையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது,” என்கிறார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? எதிர்ப்பு எழுவது ஏன்?8 ஆகஸ்ட் 2024 ஒன்று சேர்ந்த பகையாளிகள் மேலும் பேசிய ரஜினிகாந்த், "தனிப்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இதன் பின்னணியில் பலம் வாய்ந்த சக்தி ஒன்று உள்ளது. அந்த நபர் தான், ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான பகையாளிகளை ஒன்றிணைத்துள்ளார்,” என்கிறார். "தொடக்கத்தில் இந்தச் சம்பவத்தில், தங்க நகை மோசடியில் சிக்கிய ஆருத்ரா நிறுவனத்தின் பெயர் அடிபட்டது. அந்நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் பணம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிறுவனத்தின் பின்னணியில் சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டன. இதன் பின்னணியில் கொலை அரங்கேற்றப்பட்டதா என்பதை போலீஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்," என்கிறார். "கூலிப்படை கலாசாரத்துக்கு சாதி, மதம், கட்சி ஆகியவை கிடையாது. அவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம். அதற்காக உறவினர்கள், சொந்த சாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். கைதான தாதாக்களும் ரவுடிகளும் ஓராண்டாக ஆம்ஸ்ட்ராங்கை பின்தொடர்ந்துள்ளனர். வெடிகுண்டுகள் கைமாற்றப்பட்டுள்ளன. அவரின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. இதை உளவுத்துறை கவனிக்கத் தவறியதா என்ற கேள்வியும் எழுகிறது," என்கிறார், ரஜினிகாந்த். படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ் சிக்கல் மிகுந்த வழக்கு "ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏராளமான கைது சம்பவங்கள் நடக்கின்றன. கொலையின் பின்னணியில் இவர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது முக்கியமானது," என்கிறார், மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ். "நேரடி சாட்சியங்கள் இல்லாவிட்டால், அதை ஈடுசெய்வதற்கு கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் தான் வழக்கு நீதிமன்றத்தில் எடுபடும். ஆனால், இந்த வழக்கு சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது" எனக் குறிப்பிடும் செல்வராஜ், "ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை விசாரித்து தொடக்கத்திலேயே 13 பேரை கைது செய்துவிட்டனர். அதன்பின்னர், அஞ்சலை, மலர்க்கொடி என கைதுப் படலம் விரிவடைந்து, அடுத்தகட்டத்துக்கு வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்கிறார். மேலும், "காவல்நிலையங்களில் எழுதி வாங்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் எடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள முடியாது. நீதிமன்றத்துக்கு வலுவான ஆதாரம் தேவைப்படும். அதை நிரூபிக்காதவரை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. "உதாரணமாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜா என்பவரை கைது செய்தனர். நேரடியாக அவர் யாரையும் வெட்டவில்லை. ஆனால், அவர் கூறித் தான் வெட்டியதாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். அதனால் அவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். "கொலையின் பின்னணியை விவரிக்கும் சாட்சியங்கள் சரியாக இல்லாவிட்டால், தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கும் பொருந்தும்" என்கிறார் செல்வராஜ். தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா? இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் இன்று புளியந்தோப்பு போலீசார் முன்னிலையில் செயலிழக்க வைக்கப்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், "ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கொலையாளிகளும் பணத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இயங்கியவர்கள் குறித்தும் சட்ட உதவிகளை செய்தவர்கள் பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அதுகுறித்த விவரங்கள் வெளிவரும்," என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cj35my6mkyyo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர் தொடர்பான மரபு அறிவை மிகவும் சீர்குலைப்பதாக நிரூபித்த கசப்பான சண்டையை அடுத்த இரண்டு ஆண்டுகள் கண்டன. ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது "ட்ரோன்கள்", கவச வாகனங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் அதிகரித்த ஆற்றல் மற்றும் விமான எதிர்ப்பு பாதுகாப்புகளின் அதிகரித்த வினைத்திறன் ஆகிய மூன்று காரணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்பட்டுள்ளன. இவை இராணுவக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், தற்போதுள்ள இராணுவ தளவாடங்களைப் பயன்படுத்துவதையும் பாதித்துள்ளன. மேலுள்ள திரியும் இந்த யுத்தத்தோடு தொடர்புடைய தகவல்களைக் கொண்டுள்ளது.
-
கவாய் (Hawaii)பயணம்.
படங்களுக்கும் காணொளிகளிற்கும் நன்றி அண்ணா.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவின் கேர்க்ஸ் பகுதிக்கு ஊருடுவிய உக்ரைன் படையினர் - மூன்றாவது நாளாக கடும் மோதல் - ரஸ்ய இராணுவ வீரர்கள் பலர் கைது Published By: RAJEEBAN 09 AUG, 2024 | 12:04 PM ரஸ்யாவின் கேர்ஸ்க் பகுதிக்கு ஊருடுவியுள்ள உக்ரைன் படையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஸ்ய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கேர்க்ஸ் பிராந்தியத்தில் 13 கிலோமீற்றர் உள்ளே உள்ள கிராமமொன்றை நோக்கி உக்ரைனிய படையினர் முன்னேறிச்செல்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேர்க்ஸ் எல்லையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொரெனெவோ என்ற பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாக ரஸ்யாவின் புளொக்கர்கள் தெரிவித்துள்ளனர். ரஸ்யாவிற்குள் ஆறுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சுட்ஜாவின் மேற்குபகுதி உக்ரேனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கேர்ஸ்க்கில் அவசர நிலைமையை ரஸ்யா அறிவித்துள்ளது. அந்த பகுதியிலிருந்து 3000க்கும் அதிகமான பொதுமக்கள்வெளியேற்றப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமை திடீர் தாக்குதலை மேற்கொண்டு சுட்ஜாவினை கைப்பற்றிய உக்ரைன் படையினர் வடமேற்கு வடக்கு திசை நோக்கி முன்னேறியுள்ளனர். சுட்ஜாவின் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட ரஸ்ய படையினரை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/190640
-
அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த, இஸ்ரேலால் தேடப்படும் ஒருவரை ஹமாஸ் தலைவராக்கியது ஏன்?
பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,உயிரிழந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது), புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட யஹ்யா சின்வார் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலாஃப் பதவி, பிபிசி செய்திகள், காஸா 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் திட்டமிட முக்கியப் பங்காற்றியவர் யஹ்யா சின்வார். தற்போது, ஹமாஸ் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டப் பிறகு, அவரது இடத்துக்கு சின்வார் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இது இஸ்ரேலுக்கு ஹமாஸ் அனுப்பும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், சின்வார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. என்ன நடக்கிறது? ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக கத்தாரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அவர்களது அரசியல் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர்கள் அனைவரும் கத்தார் தலைநகர் தோகாவில் கூடினார்கள். ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் காஸா போர் துவங்கி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், மத்தியக் கிழக்கு பிராந்தியங்களில் இருந்து ஹமாஸ் தலைவர்கள் கத்தாருக்கு விரைந்துள்ளனர். பலரும், அவர்களது அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட செய்தியால் மனமுடைந்து போய் இங்கே வந்துள்ளனர். அவரை இஸ்ரேல் கொலை செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்பார்வையிட்டு வந்தவர் ஹனியே. போரில் முனைப்பு காட்டிய ஆயுதப் பிரிவினரை சமாதானம் செய்து, இஸ்ரேலுக்குச் சென்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றினார் ஹனியே. தற்போது வெற்றிடமாக உள்ள அவரது பதவியை நிரப்பப்பட வேண்டும். கூட்டம் எப்படி நடந்தது? தோஹாவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் ஹமாஸ் தலைவர்கள் தோளோடு தோள் நின்று ஹனியேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில், தரைவிரிப்புகள், அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், திரும்பிய திசைகளில் எல்லாம் மாட்டப்பட்ட புகைப்படங்களுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. வந்திருந்த தலைவர்கள், ஹனியேவுக்கும் தாக்குதலில் அவரோடு கொல்லப்பட்ட அவரது பாதுகாவலருக்கும் மரியாதை செலுத்தினார்கள். ஆனால் இது வெறும் நினைவு நிகழ்வு மட்டுமல்ல. ஒரு சகாப்தத்தின் முடிவும் மற்றொன்றின் துவக்கத்தையும் குறிக்கும் முக்கியமான கட்டமாகப் பார்க்கப்பட்டது. ஹமாஸ் தலைவர்கள் மறைந்த பின்னர், புதிய தலைவரை ஹமாஸின் மூத்த தலைவர்கள் தேர்வு செய்வதைப் பார்ப்பது எனக்கு ஒன்றும் புது நிகழ்வல்ல. 2004-ஆம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பின் நிறுவனரான ஷேக் அஹமது யாசின் இஸ்ரேல் நாட்டால் கொல்லப்பட்ட பிறகு அவருடைய வீட்டில் இது போன்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. அங்கே புதிய தலைவராக அப்தெல் அஸிஸ் அல் ரந்திஸி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவேறாத நிலையில் அவரையும் இஸ்ரேல் கொன்றது. ஆனால் இம்முறை கூடிய ஹமாஸ் தலைவர்கள் தற்போதுள்ள பிரச்னை குறித்தும் அவர்கள் சந்திக்கும் இதர சவால்கள் குறித்தும் விவாதித்தனர். ஹமாஸ் தலைவரை கொன்றதன் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா?5 ஆகஸ்ட் 2024 ஹமாஸ் தலைவர் கொலைக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்படும்' - இரான் கூறியது என்ன?8 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியேவின் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க மத்திய கிழக்கில் இருந்து கத்தாருக்கு விரைந்த ஹமாஸ் தலைவர்கள் புதிய அரசியல் பிரிவு தலைவரை தேர்வு செய்த ஹமாஸ் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில் 1,200 நபர்கள் கொல்லப்பட்டனர். 251 நபர்கள் பிணைக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29,600-க்கும் நபர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறது ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம். காஸாவில் அமைந்துள்ள கட்டடங்களில் பாதிக்கு மேல் சேதப்படுத்தப்பட்டுள்ளது அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையும் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு இடம் மாறியுள்ளனர். காஸாவை 2007-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் மீதான எதிர்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த அமைப்பும் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது. அதில் மிக முக்கியமானது ஜூலை 31-ஆம் தேதி அன்று, பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட தெஹ்ரானில் வைத்து இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாகும். இது இந்த அமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ், ஹனியே அவருடைய அலைபேசியில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, anti-personnel missile என்ற ஏவுகணை மூலமாகக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கிறது. இரானின் புரட்சிப்படை அமைப்பினர் 7 கிலோ மதிப்பிலான ஏவுகணை மூலம் அவர் கொல்லப்பட்டார் என்கிறது. சில மேற்கத்திய ஊடகங்கள், அவர் வருகைக்கு முன்பே அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். ஹனியேவின் அஞ்சலி நிகழ்வுக்கு தோஹா வந்தவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஒருவர், வெள்ளை முடியுடன், அளவான தாடி வைத்துக் கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார். "அவரை உன்னிப்பாகக் கவனி," என்று ஹமாஸின் ஊடக அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். நான் யார் என்றேன். "அவர் நிழல் போல் ஆரவாரம் இல்லாமல் இருக்கும் நபர். பெயர் அபு ஒமர் ஹசன்," என்றார் அவர். ஹமாஸின் முதன்மை ஆலோசனை குழுவான சுரா கவுன்சிலின் தலைவர் தான் அபு ஒமர் ஹசன் அல்லது முகமது ஹசன் தர்விஷ். ஹமாஸின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் வரை அந்த குழுவின் இடைக்கால தலைவராக பணியாற்ற இருக்கும் நபர். பெரிய கனவுகளைக் கொண்ட நபர் அவர் என்று என்னிடம் கூறினார்கள். 2012-ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் அரசியல் பிரிவு செயல்பட்டு வரும் தோஹாவில், அஞ்சலி நிகழ்வுக்குப் பிறகு பல மூத்த தலைவர்கள், அமைதியாகச் செயல்பட்டு வரும் தலைவர்கள் பலரும் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனையை நடத்தினார்கள். இஸ்ரேல் vs இரான்: ஹமாஸ் தலைவர் கொலைக்கு 'சரியான நேரத்தில் பதிலடி'8 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காஸாவை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது யார் இந்த யஹ்யா சின்வார்? அவர்கள், ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பில் தலைவராக இருந்த யஹ்யா சின்வாரை தலைவராகத் தேர்வு செய்தனர். இந்தத் தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித்தை விடுதலை செய்து, இஸ்ரேலின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட சின்வாரின் அரசியல் வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் தெரியும், ஒரு நாள் அவர் ஹமாஸ் அமைப்பின் தலைவராவார் என்று. இதற்கு முன்பு ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்கள் யாரும் ஆயுதப் பிரிவினருடன் அவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. சின்வாரின் சகோதரர் முகமது, ஹமாஸின் மிகப்பெரிய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கி வருகிறார். ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவராக 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த, கடந்த ஆண்டு இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக கூறப்படும் முகமது டெய்ஃப், சின்வாரின் நண்பர். பள்ளிக் காலத்தில் உடன் படித்தவர். அவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர். காஸாவின் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள். இத்தனைக்கும் பிறகு, பலரும் சின்வாருக்கு முக்கியப் பொறுப்பு வழங்குவது பைத்தியக்காரத்தனம் என்று கூறுகின்றனர். இஸ்ரேலின் பாதுகாப்பு முகமைகள், தெற்கு இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர் சின்வார் தான் என்று நம்புகின்றனர். தேடப்படும் நபர்கள் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார். ஹமாஸ் தலைமையில் உள்ள அனைவரும் இந்த முடிவை ஆதரிக்கவில்லை என்று என்னிடம் கூறினார் ஹமாஸ் தலைவர் ஒருவர். "சில தலைவர்கள் அவர்களது கருத்துகளை முன்வைத்தனர். ஒரு சிலர் அதிக தீவிரம் இல்லாத நபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் இறுதியில் அவருக்கே பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன," என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பங்கு பெற்ற மற்றொரு ஹமாஸ் தலைவர், அபு ஒமர் ஹாசனைத் தேர்வு செய்ய முடியாத சூழல் நிலவி வருவதாகத் தெரிவித்தார். இந்த இயக்கத்தைத் தாண்டி அவருக்குப் பொதுவெளியில் அறிமுகம் இல்லை. ஆனால் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் மூலம் உலக நாடுகளால் அறியப்பட்ட நபராக மாறியுள்ளார் யஹ்யா சின்வார். அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு ஒரு 'டிரேட்மார்க்'காக மாறிவிட்டார் சின்வார். அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் அவர் பிரபலம் அடைந்துள்ளார் என்றும் அவர் கூறினார். "அவர் இரானால் ஆதரிக்கப்படும் எதிர்ப்பின் மையத்தில் உள்ள நபர்களுடன் நெருங்கிய உறவில் உள்ளார். மேலும் காஸாவில் போர் நடைபெற்று வருகின்ற சூழலில், அவரது நியமனம் இஸ்ரேலுக்கு பலமான எதிர்ப்பு செய்தியை அனுப்பும்," என்றும் அவர் கூறினார். எதிர்ப்பின் மையம் (axis of resistance) என்பது இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதமேந்திய குழுக்களின் கூட்டமைப்பாகும். இஸ்ரேலுக்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் லெபனானை தலைமையாகக் கொண்டு செயல்படும் ஹெஸ்பொலாவும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளது. இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு: குடிமக்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் எச்சரிக்கை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?4 ஆகஸ்ட் 2024 இஸ்ரேல் vs இரான்: அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் விரைவு - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?3 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சேதம் அடைந்துள்ள வாகனங்கள் சின்வாருக்கு எதிர்ப்பு எழுவது ஏன்? அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சின்வாருக்கு இருக்கும் தொடர்பால், அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலரும் சின்வாரை அந்தப் பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர். மேற்கத்திய நாடுகள், சின்வாரையும் அவர் தற்போது தலைமை தாங்கி வரும் அமைப்பையும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. அவர் தாக்குதல் திட்டங்களின் 'மாஸ்டர்மைண்டாக' செயல்பட்டதால் அவரை கவுரவிக்கவே நாங்கள் அவருக்கு வாக்களித்தோம் என்றார் மற்றொரு ஹமாஸ் தலைவர். அக்டோபர் 7-ஆம் தேதி அவருக்கானது. அவர் இந்த இயக்கத்தை வழி நடத்த தகுதியானவர் என்றும் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல் நடைபெற்று பத்து மாதங்கள் ஆகியுள்ளன. போர் நிறுத்தம் தொடர்பான அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இரண்டு முக்கியஸ்த நாடுகள் கத்தார் மற்றும் எகிப்து, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று பிபிசி புரிந்து கொண்டுள்ளது. தற்போது கசிந்துள்ள போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையின் முன்மொழிவு வரைவில், இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்குப் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இரானிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும், இதற்குப் பதிலாக இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்கவும், பிலாடெல்ஃபி எல்லையில் நிறுத்தப்பட்ட ராணுவத்தினரை திரும்பப் பெறவும் இரான் வலியுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிலாடெல்ஃபி காரிடர் என்பது ஒரு 100 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டுள்ள, 8 கிலோ மீட்டர் நீளம் கொண்டுள்ள பரப்பாகும். இது காஸா மற்றும் எகிப்தின் எல்லைப்பகுதிக்கு மத்தியில் செல்லும் பாதையாகும். காஸாவின் மற்றொரு நில எல்லையானது இஸ்ரேல். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து நன்றாக அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர் தோஹாவில் என்னிடம் பேசிய போது, "எகிப்து நாட்டின் உளவுத் துறை ஏற்கனவே தோஹாவுக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தவிர்த்து அதற்குப் பதிலாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வருகின்ற நாட்களில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்," என்றார். தற்போது, ஹமாஸில் மிகத் தீவிரமாகச் செயல்படும் யஹ்யா சின்வார் போன்ற ஒருவரை தலைவராகக் கொண்டிருக்கையில் இரு நாட்டுப் பிரச்னையின் சத்தம் மட்டுமே அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் அவர் உயிர் பிழைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் தான் அந்தக் குழுவை வழி நடத்துவார். https://www.bbc.com/tamil/articles/cx2l8em4l3go
-
இலங்கைக்கு 24.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது அமெரிக்கா
09 AUG, 2024 | 04:01 PM இலங்கை மக்கள் மற்றும் அவர்களுடனான எமது பங்காண்மை ஆகியவற்றில் நாம் நீண்டகாலமாக மேற்கொள்ளும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்காக அமெரிக்க மக்களிடமிருந்து 24.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 7.2 பில்லியன்) வழங்குவதற்கான ஒரு மேலதிக உறுதிப்பாட்டினை அறிவிப்பதில் அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஆசிய பணியகத்திற்கான உதவி நிர்வாகியான மைக்கல் ஷிஃபர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நிதியமைச்சில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் இந்த மேலதிக நிதியளிப்பு தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற அந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹவுடன் USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவும் கலந்து கொண்டார். USAIDஇற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தினூடாக உறுதியளிக்கப்பட்ட இந்நிதியானது இலங்கையின் சந்தை உந்துதலால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்தும், சுற்றுச்சூழலின் நிலைபேறான தன்மை மற்றும் அதன் மீண்டெழும் தன்மை ஆகியவற்றைப் பேணி வளர்க்கும் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும். அரசாங்க நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றுடன் எமக்கிருக்கும் பங்காண்மைகளின் ஒரு விளைவாக, இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற எமது கூட்டு முயற்சிகளுக்கு இந்த நிதி உதவி செய்கிறது. இம்மேலதிக நிதியளிப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லாட்சியில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் : “அமெரிக்காவானது 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்களில் முதலீடு செய்துள்ளதுடன், தமது தொழில்முனைவு நோக்கங்களில் இலங்கை மக்களை வலுவூட்டுகின்ற, காலநிலை மாற்றங்கள் மற்றும் பேரினப்-பொருளாதார அதிர்ச்சிகளின் போதான இலங்கையின் மீண்டெழும் தன்மையினைப் பலப்படுத்துகின்ற, மற்றும் நாடு முழுவதுமுள்ள மக்களின் வாழ்வை வளப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இம்மேலதிக நிதியளிப்பானது இலங்கையிலுள்ள எமது உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் கொண்டுள்ள நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதுமுள்ள சமூகங்கள் நீடித்த ஸ்திரத் தன்மையினையும், செழிப்பான வாழ்க்கையினையும் அனுபவிப்பதற்கான ஒரு அடித்தளத்தை ஒன்றாக இணைந்து நாங்கள் உருவாக்குகிறோம்.” எனத் தெரிவித்தார். “இலங்கையுடனும் அதன் மக்களுடனும் எமக்கிருக்கும் பங்காண்மை குறித்து அமெரிக்காவும் அமெரிக்க மக்களும் பெருமையடைகிறார்கள்” என USAIDஇன் ஆசிய பணியகத்திற்கான உதவி நிர்வாகியான ஷிஃபர் கூறினார். “இலங்கையின் அபிவிருத்திச் சவால்களுக்கான நிலைபேறான தீர்வுகளுக்கு ஒரு உந்து சக்தியினை வழங்குவதற்காக, உள்நாட்டில் வழிநடத்தப்படும் முன்முயற்சிகளுக்கு மேலும் உதவிசெய்வதற்கான ஒரு முதலீடாக இந்நிதியளிப்பு அமைகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், நீர், துப்புரவுப்பணிகள், உட்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் வணிக அபிவிருத்தி மற்றும் தேவையுடைய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு உதவியாக 16956 ஆம் ஆண்டு முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (ரூ.598 பில்லியன்) அதிகமான பெறுமதியுடைய உதவிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. கடந்த ஏழு தசாப்தங்களாக, இலங்கையின் டீசல் புகையிரதங்களை நவீனமாக்குதல், இலங்கையின் திரிபோஷா குறைநிரப்பு போசாக்கு நிகழ்ச்சித்திட்டம், மின்சார வாகன மின்னேற்றல் நிலையங்களை விருத்தி செய்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுதல் போன்ற பல விடயங்களுக்கு அமெரிக்கா உதவி செய்துள்ளது. இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு https://lk.usembassy.gov/ மற்றும் https://www.usaid.gov/srilanka ஆகிய இணையத் தளங்களைப் பார்வையிடுவதுடன், சமூக ஊடகங்களில் @USEmbassySL மற்றும் @USAIDSriLanka ஆகியவற்றைப் பின்தொடரவும். https://www.virakesari.lk/article/190660
-
இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் யார் யார்? யாருக்கு இடையே அதிக போட்டி?
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கையில் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 8 ஆகஸ்ட் 2024 இலங்கையில் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது கட்டுப்பணம் செலுத்தி வருகின்ற நிலையில், எதிர்வரும் 14ஆம் தேதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நிறைவு பெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, எதிர்வரும் 15ஆம் தேதி கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள், வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுக்க கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த நிலையில், இலங்கையின் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசியலில் என்ன நடக்கின்றது என்பது குறித்து இந்தச் செய்தியில் முழுமையாக ஆராயலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், இதுவரை 18 வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார். அத்துடன், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன், முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். இவர்கள் தவிர, சரத் கீர்த்திரத்ன, ஓசல லக்மால் அனில் ஹேரத், ஏ.எஸ்.பீ.லியனகே, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, கே.கே.பியதாஸ, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, கே.ஆர்.கிரிஷான் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியைக் கலைப்பதற்காக நடத்தப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் வழக்கறிஞர் நுவன் போபகே இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளார். யார் யாருக்கு இடையில் அதிக போட்டி? பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த முறை தேர்தலில் போட்டியிடும் முக்கிய ஐந்து வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி காணப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மக்கள் போராட்ட முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் நுவன் போபகே போராட்டக்காரர்களின் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் நுவன் போபகேவிற்கு வாக்களிப்பாளர்கள் எனப் போராட்டக்காரர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நுவன் போபகேயின் பெயரும் பேசுபொருளாகக் காணப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரம்? பட மூலாதாரம்,NPP MEDIA படக்குறிப்பு,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இலங்கை 2022ஆம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டைவிட்டுத் தப்பியோடியிருந்தார். அதன் பின்னர், இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, 2 வருட காலத்திற்குள் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்து தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக் காணப்பட்ட வரிகளை இல்லாது செய்து, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருகின்றார். இந்நிலையில், நாடாளுமன்றத்திலுள்ள சுமார் 100ற்கும் அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வந்த ரணில் விக்ரமசிங்க, இம்முறை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சஜித் பிரேமதாஸவின் பிரசாரம் பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,சஜித் பிரேமதாஸவிற்கு ஆட்சியை ஒப்படைக்கும் பட்சத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ களமிறங்கியுள்ளார். ராஜபக்ஸ குடும்பம் மற்றும் ஊழல்வாதிகளின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரசிங்க, ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட ஊழல்வாதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதான எதிர்கட்சி குற்றம் சுமத்துகிறது. நாடு வழமைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டாலும், நாட்டு மக்கள் வாழ முடியாத நிலையை எதிர்நோக்கி வருவதாக சஜித் பிரேமதாஸ தரப்பினர் கூறி வருகின்றனர். இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவிற்கு ஆட்சியை ஒப்படைக்கும் பட்சத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,நாடாளுமன்றத்தில் உள்ள சுமார் 100க்கும் அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்கின்றார்? நாட்டு மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ஸ குடும்பத்துடன் கைகோர்த்து, ராஜபக்ஸ மற்றும் அவர் சார்ந்த ஊழல்வாதிகளை ரணில் விக்ரமசிங்க காப்பாற்றி வருவதாக தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. அத்துடன், பொருளாதார வளர்ச்சி என அரசாங்கம் காண்பிக்கின்ற போதிலும், நாடு தொடர்ச்சியாகக் கடன் சுமையிலேயே இருந்து வருவதாக அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். பொருட்களின் விலை குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற வகையிலேயே தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது. ஏனைய வேட்பாளர் என்ன சொல்கின்றார்கள்? சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, நுவன் போபகே உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மும்முரமாக ஆரம்பிக்கவில்லை. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் ஏனையோரின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இதுவரை ஆட்சி பீடம் ஏறிய பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தற்போது பிளவடைந்துள்ளன. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்த்துள்ளனர். அத்துடன், இலங்கையின் பிரதான கட்சியாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று முழுமையாகப் பிளவடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு குழு சஜித் பிரேமதாஸவுடனும், மற்றுமொரு குழு ரணில் விக்ரமசிங்கவுடனும் கைகோர்த்துள்ளனர். அத்துடன், கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறிய ராஜபக்ஸ குடும்பம் தலைமையிலான உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று பாரிய பிளவைச் சந்தித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமக்கான வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகிறார். படக்குறிப்பு,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகின்றார். தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், வியாழேந்திரன், வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளைச் சேர்ந்தோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்குப் பிரதான தமிழ் கட்சிகள் இதுவரை தமது ஆதரவை வெளியிடவில்லை. தமிழ் பொது வேட்பாளர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர். எனினும், தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. தமிழ் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகளால் களமிறக்கப்படவுள்ள பொது வேட்பாளருக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமது ஆதரவை வழங்கவில்லை. தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளரின் பார்வை பட மூலாதாரம்,YASI படக்குறிப்பு,சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.யசி 'கட்சிகளை நம்பி இல்லை. நபர்களை நம்பிய தேர்தலாகவே இம்முறை இருக்க போகிறது" என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.யசி தெரிவிக்கின்றார். ''நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு பாரிய சவால்களைச் சந்தித்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகள் என அடையாளப்படுத்தக்கூடிய அனைத்துக் கட்சிகளும் உடைந்து போட்டியிடுகின்றன. ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஸ என யாராக இருந்தாலும் சரி எல்லோரும் தனித்து நிற்கின்றார்கள். கடந்த தேர்தல்களைப் பார்தால், இரண்டு அணிகள் மிகவும் பலமான அணிகளாகப் போட்டியிட்டன. பிரதான இரண்டு வேட்பாளர்கள் பலமான வேட்பாளர்களாக இருந்தனர். ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. உண்மையில் இந்தத் தேர்தல் நடக்கனுமா என்ற கேள்வி அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயே இருக்கிறது," என்றார். எனினும், தேர்தல் நடைபெற வேண்டும் என்ற தேவை பிரதான எதிர்கட்சிகளுக்கு இருக்கின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் எவருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரிகின்றது. மக்களின் வாக்குகளை ஆளும் தரப்பு சிதரடிக்கச் செய்கிறார்கள். இதில் தனித்து நிற்கின்ற பிரதான எதிர்கட்சி அல்லது போராட்டங்களை நடத்தி வரும் புரட்சிகர கட்சிகளுக்கு வாய்ப்பு காணப்படுகின்றது. காரணம், ஆளும் தரப்பு தனித்து உடைந்து உடைந்து தேர்தலில் போட்டியிடுகின்றமையாலேயே இந்த நிலைமையைப் பார்க்க முடிகின்றது, என்றும் மேற்கோள்காட்டினார். "இது ஆரோக்கியமான நிலைமை இல்லை. நாடு வங்குரோத்து நிலையை அடைந்த நேரம், அப்போதைய ஜனாதிபதி நாட்டை விட்டுப் போகும் நேரம், பிரதமர் கைவிட்ட நேரத்தில் யாராவது அரசாங்கத்தை எடுக்குமாறு கூறியபோது பிரதான எதிர்கட்சி அரசாங்கத்தை எடுத்து நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஜே.வி.பி போன்ற கட்சிகளும் அதிகாரத்தைக் கையில் எடுத்துச் செய்து காட்டவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் இருந்த ரணில் விக்ரமசிங்க தனித்து வந்து இரண்டு ஆண்டுகளில் நாட்டை வழமைக்குக் கொண்டு வந்துள்ளார்," என்றார் ஆர்.யசி. "ஒரு கட்சியால் நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை என்பது தெரிகிறது. அந்தச் சந்தர்ப்பதில் பல கட்சிகளில் இருந்தவர்களை ஒன்றிணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை வைத்து ரணில் விக்ரமசிங்க நாட்டைச் சரிசெய்தார். இந்த ஜனாதிபதித் தேர்தல் எப்படி இருக்கப் போகின்றது என்றால், கட்சிகளை நம்பி இல்லை. நபர்களை நம்பிய தேர்தலாகவே இருக்கப் போகின்றது" என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.யசி தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cq82xz94q90o
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் கடற்பரப்பில் 35 இந்திய மீனவர்கள் கைது! Published By: DIGITAL DESK 3 09 AUG, 2024 | 04:34 PM மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 35 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190679
-
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த 5 டிப்பர்கள் மடக்கி பிடிப்பு - ஐவர் கைது!
09 AUG, 2024 | 04:05 PM யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன அவர்களின் தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்று (08) மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்றுமுந்தினம் (07) இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/190661
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று!
09 AUG, 2024 | 04:03 PM காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (09) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதானிகள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொண்டதோடு விடயங்களையும் கேட்டறிந்திருந்தனர். இதன்போது 62 பேருக்கு கடிதங்கள் தபால் மூலமாகவும் கிராம சேவையாளர் ஊடாகவும் அனுப்பப்பட்டு இந்த பதிவு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர், எதிர்வரும் மாதம் அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களுக்காக நஷ்ட ஈடும், சான்றிதழும் வழங்குவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தங்களிடம் அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/190658
-
சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/307581
-
கட்சி தாவலை தடுக்க தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய சட்டம் - அனுர குமார
அரசியல் கட்சிகளில் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவும் தவளைகள் அதிகம் - கட்சி தாவலை தடுக்க தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய சட்டம் - அனுரகுமார 09 AUG, 2024 | 04:47 PM தேசிய மக்கள் அரசாங்கத்தில் கட்சிதாவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். பிரதான வேட்பாளர்களின் குடும்ப உறவுகள் காரணமாக இந்த தேர்தல் வித்தியாசமானது என தெரிவித்துள்ள அவர் இந்த ஒரு காரணத்திற்காகவே நீங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளில் ஒருபக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவும் தவளைகள் நிறைய உள்ளன என தெரிவித்துள்ள அவர் கட்சி தாவலில் அவர்கள் ஈடுபடும் கடைசி தடவை இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் இதன் காரணமாகவே ஊழலில் சிக்குண்டது என மேலும் தெரிவித்துள்ள அவர் இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டங்களை கொண்டுவரும்,19வது திருத்தத்தில் இது தொடர்பில் சில விடயங்கள் காணப்பட்டன, விஜயதாச அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் தினேஸ் குணவர்த்தன அதனை நீக்கவேண்டும் என்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190682
-
மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்: பிரிட்டனில் கலவரமாக மாறிய போராட்டம் - என்ன நடக்கிறது?
"இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. ஆனால்.. ” - வன்முறையால் அச்சத்தில் இருக்கும் பிரிட்டன் முஸ்லிம் சமூகம் படக்குறிப்பு,கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார் ஹுமா கான் கட்டுரை தகவல் எழுதியவர், ரேடா எல் மாவி, மான்செஸ்டரில் இருந்து பதவி, பிபிசி அரபி 3 மணி நேரங்களுக்கு முன்னர் "மக்கள் எதை போராட்டங்கள் என்கிறார்கள், நான் உண்மையில் இந்த போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று அழைப்பேன்” என்கிறார் ஹுமா கான். ஹுமா கான் கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார். உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். பிரிட்டன் நகரங்களில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அவர் சாதாரணமாக எடுத்து கொண்டு அன்றாட பணிகளை தொடர தீர்மானித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அவ்வப்போது மன பதற்றம் அடைந்தார். "போராட்டங்களை பார்த்த போது முதலில் அதிர்ச்சியாக இருந்தது. வன்முறையை மக்கள் போராட்டங்கள் என்று சொல்கின்றனர். நான் உண்மையில் அதை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று சொல்வேன். சமூக ஊடக வதந்திகளிலிருந்து அது எப்படி பொய்யாக உருவானது என்பது அதிர்ச்சியாக உள்ளது” என்று அவர் பிபிசியிடம் கூறினார். அவர் தனது வழக்கமான பணிகளை இப்போதைக்கு மாற்றப்போவதில்லை என்று கூறினாலும், எச்சரிக்கையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார். "என் மத நம்பிக்கைகளுக்காகவும், என் தோற்றத்துக்காகவும், என் உடைகளுக்காகவும் நான் குறி வைக்கப்படுகிறேன். துன்புறுத்தலுக்கு ஆளாகிறேன்.” “நான் பயங்கரவாதத்தை பார்த்து பயப்பட மாட்டேன்… ஆனால் ஒவ்வொரு முறையும் நான் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது என் மனதில் அந்த அச்ச உணர்வு இருக்கிறது. எனக்கு ஏதாவது நடந்துவிடுமோ, ஆபத்தில் இருக்கிறேனா என பதற்றமடைகிறேன்" என்று அவர் விவரித்தார். இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?7 ஆகஸ்ட் 2024 பிரிட்டனின் என்ன நடக்கிறது? ஜூலை 29 அன்று இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டதில் இருந்து பரவலான கலவரம் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களில் பரவியுள்ளது. ஆன்லைனில் தவறான தகவல், தீவிர வலதுசாரிகள் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றால் வன்முறை தூண்டப்பட்டு அரங்கேறியது. சவுத்போர்ட் கத்தி குத்து நிகழ்வுக்கு பிறகு, இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒரு படகில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரவியது. அவர் முஸ்லிம் என்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவின. விரைவில், வன்முறை வெடித்தது. 2011 ல் நடந்த கலவரங்களுக்குப் பிறகு காணப்படாத அளவுக்கு அழிவுக் காட்சிகளை காண முடிந்தது. படக்குறிப்பு,மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா பிரிட்டன் முஸ்லிம்கள் என்ன கூறுகிறார்கள்? வன்முறையால் ஏற்படும் அமைதியின்மை அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும், ஆனால் எல்லா நேரங்களிலும் அது பேரழிவை ஏற்படுத்தக் கூடியது அல்ல. செவ்வாயன்று , மான்செஸ்டரின் புறநகரில் நகரின் வடமேற்கில், உள்ள சால்ஃபோர்ட் ஷாப்பிங் சென்டருக்கு மதிய வேளையில் சென்றபோது, அது மிகவும் அமைதியாக இருந்தது. அந்த நாளின் பிற்பகுதியில் போராட்டங்கள் நடைபெறும் என்று ஆன்லைனில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தததை அடுத்து வணிக வளாகங்களை முன்கூட்டியே மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த பெரிய, காலியான வளாகத்தில் ஒரு சிலரை மட்டுமே காண முடிந்தது. ஒரு சில முகமூடி அணிந்த இளைஞர்களை மட்டுமே போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், அவர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர், ஆனால் போராட்டம் நடத்தும் அறிகுறி இல்லை. மான்செஸ்டரின் தெற்குப் பகுதியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மோஸ் சைட் (Moss Side) என்னும் பகுதியில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அதிகளவிலான முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தன. அப்பகுதியில் வேலை செய்யும் மற்றும் வசிக்கும் பலர் "எந்த பிரச்னையும் இல்லை, பாதுகாப்பாக உணர்கிறோம் " என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளை கவலையுடன் கண்காணித்து வருகின்றனர். "நான் 2018 இல் சிரியாவிலிருந்து இங்கு வந்தேன், நானும் எனது குடும்பமும் இங்கு பாதுகாப்பான இருப்பிடத்தை கண்டடைந்தோம்" என்று மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா கூறுகிறார். "சமீபத்திய நிகழ்வுகள் நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தற்போதைக்கு, நான் பெரிதாக யார் கவனத்திலும் விழாமல் அமைதியாக வசித்து வருகிறேன். நான் மீண்டும் ஒரு துன்புறுத்தலை உணர விரும்பவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார். படக்குறிப்பு,அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர். அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர். தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் முஸ்லிம் குழுக்களுடன் மோதுவதைக் குறித்து அவர் கவலைப்படுகிறார். "இந்த இரண்டு குழுக்கள் சந்தித்தால், அவர்கள் ஒரு கலவரத்தை உருவாக்கலாம், உள்நாட்டுப் போரை உருவாக்கலாம். சோமாலியாவிலிருந்து இந்த மான்செஸ்டருக்கு என்னைத் துரத்தியது போலவே மீண்டும் ஒரு நிகழ்வு நடக்கலாம்" மசூதிகள், வணிகங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாக்க முஸ்லிம் சமூகத்தின் அழைப்பு குறித்தும் அலா வருத்தப்படுகிறார் - "தேவைப்பட்டால் வன்முறையைப் பயன்படுத்துங்கள்” என்னும் அழைப்பு அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. “இதில் எனக்கு உடன்பாடு இல்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்தும் நடக்க வேண்டும்.” "எங்கள் மசூதிகளைப் பாதுகாக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன், மேலும் நமது நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் பாதுகாக்க வேண்டும், ஆனால் இதை நாமாக செய்தால், நம்மை பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவார்கள். அதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது." என்றார். இந்த கலவரத்தால் இளைய தலைமுறையினருக்கும் பாதிப்பு உள்ளது என்கிறார் ஹுமா கான். “எனது நெருங்கிய உறவுக்கார சிறுவர்களிடம் நடக்கும் நிகழ்வுகளை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கடினமாக இருப்பது அவர்களுக்கு விவரித்துக் கூறுவதுதான். அவர்கள் 12, 10 மற்றும் 7 ஆகிய வயதில் இருக்கும் சிறுவர்கள். அவர்களிடம் மான்செஸ்டரின் எங்கள் தெருக்களில் நடப்பதற்கு அனைவரும் காரணமல்ல, அனைவரும் தீங்கு விளைவிப்பவர்கள் அல்ல என்று எப்படி உறுதியளிக்க போகிறேன்? இந்த பன்முக கலாச்சார சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் இந்தப் போராட்டம் பிரதிபலிக்கவில்லை” என்றார். ‘இங்கு இனவெறியை நான் அனுபவித்ததே இல்லை’ படக்குறிப்பு,"கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்கிறார் டாக்டர் ஜவாத் அமீன் சிரியாவைச் சேர்ந்த சயீத், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து, ஐரோப்பாவைச் சுற்றிப் பயணங்களை மேற்கொண்டார். "நான் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தேன், என்னிடம் ஸ்வீடிஷ் பாஸ்போர்ட் உள்ளது. நான் வேண்டுமென்றே இந்த நாட்டிற்கு [பிரிட்டன்] வந்தேன், ஏனென்றால் அனைத்து தரப்பின் நம்பிக்கைகளும் மதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் - அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.” “சமீபத்திய இனவெறி நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் இங்கு இனவெறியைக் கண்டதில்லை. இந்த செய்தியைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் கொஞ்சம் பயந்தோம், இது எங்களுக்கு அசாதாரணமான ஒன்று, ஏனென்றால் நாங்கள் இப்படி நிகழ்வை பார்ப்பது அல்லது கேட்பது இதுவே முதல் முறை." "நான் மூன்று ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் உதவும் பண்பு கொண்டவர்கள். அவர்கள் என் மொழி தடையை உடைக்க உதவுகிறார்கள், ஆனால் நான் செய்திகளில் பார்த்தது உண்மையில் நான் பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது." கிரேட்டர் மான்செஸ்டர் முஸ்லிம் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் டாக்டர் ஜவாத் அமீன் கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். "சவுத்போர்ட்டில் இந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றிய கவலை என்னவென்றால், ஆன்லைனில் வெறுப்பை பரப்ப விரும்புபவர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் இந்த கலவரம் தூண்டப்பட்டது என்பது தான்" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "தாக்குதல் நடத்தியவர் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் பார்த்த அந்த வன்முறைக்கு அது அடிப்படையாக இருக்கக்கூடாது." என்றார். https://www.bbc.com/tamil/articles/cy4ld3dzyrpo
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 08:23 PM (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த விடயத்தில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மரணம் குறித்து துரிதகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணை அறிக்கையை இதுவரை ஆராயவில்லை. குறித்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம். இதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே புதிய சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/190580
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி; நதீமும் என் மகனே - நீரஜின் தாய் பெருமிதம் பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஆகஸ்ட் 2024, 01:13 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதையடுத்து, ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் உள்ள நீரஜ் சோப்ராவின் வீட்டில் இருந்தவர்கள் கொண்டாடத் தொடங்கினர். நீரஜ் சோப்ரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நதீம் தங்கப்பதக்கம் பற்றி நீரஜ் கூறியது என்ன? வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, நாட்டிற்காக எப்போதெல்லாம் பதக்கம் வெல்கிறோமோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வோம் என கூறினார். ''நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால், இது அர்ஷத் நதீமின் நாள்'' எனவும் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார். ''இன்று போட்டி நன்றாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு தடகள வீரர்களுக்கும் அவர்களுக்கான நாள் இருக்கும். இன்று அர்ஷத் நதீமின் நாள். எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும். நமது தேசிய கீதம் ஒன்று ஒலிபரப்பப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் வேறு எங்காவது ஒலிபரப்பப்படும்'' என ஏஎன்ஐ செய்தி முகமையிடம் நீரஜ் சோப்ரா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார் நதீமும் என் மகனே - நீரஜ் சோப்ராவின் தாய் பெருமிதம் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். "வெள்ளி பதக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தங்கப் பதக்கம் வென்றவரும் (அர்ஷத் நதீம்) என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மட்டுமின்றி அவரின் தாத்தா தர்ம் சிங் சோப்ரா, அப்பா சதீஸ்குமார் ஆகியோரும் நீரஜ் சோப்ராவின் வெள்ளிப் பதக்க வெற்றியை அவர்களின் கிராமத்தில் கொண்டாடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார் வரலாறு படைத்த அர்ஷத் நதீம் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் சரியாக வீசவில்லை. பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார். இரண்டாவது சுற்றில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதுநாள் வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இது வரலாற்று சாதனையாகும். அவர் தங்கம் வென்றதன் மூலம் பாகிஸ்தானின் 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் தங்கக் கனவு நிறைவேறியுள்ளது. இரண்டாவது முயற்சியில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தொலைவு 89.45 மீட்டர். அவரது நெருங்கிய போட்டியாளரான பீட்டர்ஸின் தொலைவு 88.54 மீட்டர். ஜெர்மனியின் வெபரிடம் இருந்து அவருக்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெபர் 87.40 மீ., புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார். இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார், இது போட்டியின் இரண்டாவது அதிகபட்ச தொலைவாகும். 26 வயதான நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 89.34 மீட்டர் தூரம் எறிந்து தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை உயர்த்தினார். சோப்ராவின் கிராமத்தில் ஒரு பெரிய திரை அமைக்கப்பட்டது, அதில் அனைவரும் நிகழ்வைப் பார்த்து வெற்றிகரமான தருணத்திற்காக காத்திருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில், ஆகஸ்ட் 6ம் தேதி பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். 84 மீட்டர் தூரத்தை அடையும் பட்சத்தில் நேரடியாக போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற விதியின் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த சுற்றில் அவர் 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் தெரிவித்த மோதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நீரஜ் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை படைத்தவர். மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தைப் பெற்று வெற்றியுடன் வீடு திரும்புவதால் இந்தியா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்கி நமது தேசத்தை பெருமைப்படுத்துவார்," என்று குறிப்பிட்டார். நீரஜ் சோப்ராவின் தங்கக் கனவு நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறையும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவர் களம் இறங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 87.58மீ தொலைவிற்கு ஈட்டி எறிந்து தங்கத்தை உறுதி செய்தார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் பெற்றது அதுவே முதல்முறை. அந்த போட்டியில் ஜேக்கப் வாத்லேஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். விதேஸ்லாவ் வெசெலி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார். துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்திராவை தொடர்ந்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். 120 ஆண்டு கால வரலாற்றில், ட்ராக்-அண்ட்-ஃபீல்ட் (track-and-field) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் படைத்தார் நீரஜ் சோப்ரா. பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் வயதிலிருந்தே பயிற்சி பெறும் நீரஜ் நீரஜ் சோப்ரா, ஹரியானாவின் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் பிறந்தவர். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். 13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா. உடல் எடை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்த விளையாட்டை தேர்வு செய்தார் அவர் என்று ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்முறையாக பானிபட்டில் உள்ளா சிவாஜி மைதானத்தில் ஈட்டி எறிதல் போட்டியை பார்த்து உத்வேகம் அடைந்தார் அவர். இந்திய ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர் சவுத்ரி, நீரஜிடம் இருந்த திறமையை பார்த்து வியந்து போனார். பிறகு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகளையும் வழி காட்டுதல்களையும் வழங்கினார் ஜெய்வீர் சவுத்ரி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ராவின் நீளும் பதக்கப் பட்டியல் அதன் பின்னர் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற துவங்கினார் நீரஜ். 2016ம் ஆண்டு போலாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதினருக்கான ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார் நீரஜ். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது. அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார். பிறகு 2018ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும், 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார். டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த அவர், 2022ம் ஆண்டு ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 2023ம் ஆண்டு புதாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டு ஹாங்க்ஜூவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் பாகிஸ்தான் வீரர் நீரஜ் பற்றி கூறுவது என்ன? நீரஜ் மற்றும் அர்ஷத் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை 9-0 என்ற கணக்கில் மலைக்க வைக்கும் வெற்றியை பதிவு செய்திருந்தார் நீரஜ். முதல் முறையாக நீரஜுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டி 2016-ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. தெற்காசிய போட்டிகளில் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். அதில் நீரஜ் முதல் இடம் பிடித்தார். அர்ஷத் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கூட, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு ஆன நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் அர்ஷத். "தெற்காசியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் இரண்டு வீரர்கள் நானும், நீரஜும் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறிய அர்ஷத், நாங்கள் தத்தம் நாடுகளுக்காக உலக அரங்கில் போட்டியிட்டு, நாட்டுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித் தருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நீரஜ் சோப்ராவுடன் விளையாடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதில் கூறிய அர்ஷத், "ஒவ்வொரு தடகள வீரரும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். நான் நீரஜுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் எங்களின் நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்போம்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cwyjl44l4g1o
-
Factum Perspective: உக்ரைன் - மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஹாட்ஹவுஸ்
Published By: VISHNU 09 AUG, 2024 | 01:36 AM வினோத் மூனசிங்க பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனின் "இராணுவமயப்படுத்தலின் நீக்கத்தை" இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது "விசேட இராணுவ நடவடிக்கையை" (Spetsialnaya Voennaya Operatsiya - SVO) ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் 2014 இல் கிறிமியாவில் மேற்கொண்டதைப் போலவே தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தன. உக்ரேனியப் படைகள் எதிர்க்கவில்லை. ரஷ்யர்கள் தாங்கள் எதிர்கொண்ட எதிர்ப்பின் அளவை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. வடக்கில், ரஷ்யர்கள் உக்ரேனிய தலைநகரான கியிவ் அருகே அடையும் வரை நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர், அங்கு வான்படைத் துருப்புக்கள் அன்டோனோவ் விமான நிலையத்தை கைப்பற்ற முயன்றனர். இங்கே, வலுவான உக்ரேனிய எதிர்ப்பு அவர்களை அவர்களின் வழிகளில் நிறுத்தி, இறுதியில் அவர்களை பின்னோக்கி தள்ளியது. தெற்கில், ரஷ்யர்கள் ஆழமாக ஊடுருவி, மைக்கோலேவுக்கு வெளியே உள்ள உயர் படைகளால் தடுத்து நிறுத்தப்பட முன்னராக டினீப்பர் ஆற்றைக் கடந்து, கெர்சனைக் கைப்பற்றியதால் மரியுபோல் துறைமுகத்தை ஈரூடகப் படைகள் தாக்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர் தொடர்பான மரபு அறிவை மிகவும் சீர்குலைப்பதாக நிரூபித்த கசப்பான சண்டையை அடுத்த இரண்டு ஆண்டுகள் கண்டன. ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது "ட்ரோன்கள்", கவச வாகனங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் அதிகரித்த ஆற்றல் மற்றும் விமான எதிர்ப்பு பாதுகாப்புகளின் அதிகரித்த வினைத்திறன் ஆகிய மூன்று காரணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்பட்டுள்ளன. இவை இராணுவக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், தற்போதுள்ள இராணுவ தளவாடங்களைப் பயன்படுத்துவதையும் பாதித்துள்ளன. ஆழமான நடவடிக்கைகள் 1940-42 இல், ஜெர்மானிய போர் படையணி வெண்ணையை கத்தியால் வெட்டியதை போல தனது எதிரிகளை தாக்கியது. நாஜிக்கள் மற்ற ஆயுதங்களுடன் இணைந்ததாக பெரிய கவச வாகனங்களைப் பயன்படுத்தி, எதிரிகளின் எல்லைகளில் ஊடறுப்புகளை மேற்கொண்டு தளவாடங்களையும் உள உறுதியைத் தாக்கினர். தாக்குதல் விமானம் நீண்ட தூர பீரங்கியாக செயற்பட்டதுடன், முன்னேறும் கவச வாகனங்களுக்கு ஆதரவை வழங்கியது. சோவியத் யூனியன் இதேபோன்ற "ஆழமான நடவடிக்கைகளுடன்" பதிலளித்ததுடன், முதலில் 1920 மற்றும் 30களில் மார்ஷல் துகாசெவ்ஸ்கி உருவாக்கப்பட்டது. கவச வாகனம் போர்க்களத்தின் ராணியாக மாறியதுடன், அனைத்து படைகளும் சோவியத் T-34 நடுத்தர கவச வாகனத்தை பின்பற்ற முயற்சித்ததுடன், இது நகர்வு, பாதுகாப்பு மற்றும் சுடுதிறன் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை மேம்படுத்தியது. இந்த வகையான விரைவான, ஒருங்கிணைந்த நடவடிக்கைப் போர் 1973 அரபு-இஸ்ரேல் போர் வரை தொடர்ந்தது. இஸ்ரேலியர்கள் தங்களது கவச வாகன தாக்குதல்கள் கவச வாகன எதிர்ப்பு வழிப்படுத்தப்பட்ட ஆயுதங்களால் எதிர்க்கப்படுவதைக் கண்டதுடன், அவர்களின் வான்வழித் தாக்குதல்கள் விரைவான விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் மேற்பரப்பில் இருந்தான வான் ஏவுகணைகளால் வரையறுக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் "வான்வழிப் போர்" என்ற எண்ணக்கருவை உருவாக்கியதுடன், நேரடி மோதல், சுடுதிறன் மற்றும் ஆயுத தளவாடத்தின் மேம்பட்ட திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிரியை வெல்ல வேகம், நுணுக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைறை ஒருங்கிணைத்து எதிரியின் போரிடும் திறனை சீர்குலைத்தது. இந்த எண்ணக்கருவை சோதிக்க அமெரிக்காவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் அனைத்துப் போர்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் தளவாட ரீதியாகவும் தாழ்ந்த எதிரிகளான சிறிய கிரெனடா, பனாமா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிற்கு எதிராக இருந்தன. உதாரணமாக, ஈராக்கியர்கள், பொருளாதாரத் தடைகள் காரணமாக, பயிற்சி பெறவில்லை மற்றும் கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள், மதிவெடிகள் அல்லது வினைத்திறனான விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைகள் எதுவுமில்லை. எனவே, அமெரிக்க கவச வாகன பிரிவுகள் பாக்தாத் வழியாக "இடி போன்ற நகர்வுகளை" (கவச மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட படைகளைப் பயன்படுத்திய தாக்குதல்கள்) ஆரம்பித்தபோது, அவர்கள் சிறியளவான எதிர்ப்பையே சந்தித்தனர். புதிய தொழில்நுட்பங்கள் இருப்பினும், இந்த விடயம் 1973 முதல் எழுத்திலேயே இருந்தது. 1995 ஆம் ஆண்டு செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னியில் (கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்திருந்த எதிரிக்கு எதிராக) ரஷ்ய "இடி ஓட்டம்" அதன் 80 சதவீத கவச வாகனங்களை இழக்க வழிவகுத்தது. ஹெஸ்பொல்லா போராளிகள் 2006 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பை முறியடித்ததுடன், கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களை, குறிப்பாக கவச எதிர்ப்பு ஏவுகணைகளை நன்கு பயன்படுத்தினர். அமெரிக்கா தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" போக்கில், கணிசமான வினைத்திறனுடன் தொலைதூரத்தில் இயக்கப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தியது. 14,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்களில், இவற்றில் 21,000 பேர் வரை உயிரிழந்ததுடன், இதில் ஐந்தில் ஒரு பங்கு பொதுமக்களாவர். குறிப்பிடத்தக்க வகையில், 2010களில், இஸ்லாமிய அரசு (ISIS) என அறியப்படும் டேஷ், சிரிய மற்றும் ஈராக் இலக்குகளுக்கு எதிராக பேரழிவு விளைவைக் கொண்ட மலிவான குவாட்காப்டர் ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றைய சிரிய குழுக்கள் 2018 இல் ரஷ்ய தளங்களுக்கு எதிராக ட்ரோன்களின் குவியல்களை ஏவியது. யேமனில் உள்ள அன்சரல்லா படைகளும் அமெரிக்க ஆதரவு கூட்டணிக்கு எதிரான போராட்டத்தில் அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தன. 2020 ஆம் ஆண்டில், சிரிய இராணுவத்தைத் தாக்க துருக்கி ட்ரோன்களின் குவியல்களை பயன்படுத்தியது. துருக்கி முன்பு விலையுயர்ந்த இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ட்ரோன்களை நம்பியிருந்தது, ஆனால் பொருளாதாரத் தடைகள் அதன் சொந்த, மிகவும் மலிவான பதிப்புகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தியது. பின்னர் 2020 இல் அஜர்பைஜான் ஆர்மீனியாவிற்கு எதிராக ட்ரோன்களை உளவு பார்த்தல், தரை பீரங்கிகளைக் கண்காணித்தல், எதிரி நிலைகள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் தரைப்படைகளுக்கு பாதுகாப்பு வழங்குதலுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. விமானத்தை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஆர்மேனிய வான் பாதுகாப்பு, ட்ரோன்களுக்கு எதிராக வினைத்திறனற்றதாக நிரூபிக்கப்பட்டது. தந்திரோபாய மாற்றங்கள் ரஷ்யர்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போதும் சோவியத்தினுடைய ஆழ்ந்த ஊடுருவல் கோட்பாட்டைக் கடைப்பிடித்தனர். ஒருங்கிணைந்த கவச மற்றும் காலாட்படை வரிசைகள் தரை வழியான படையெடுப்பை முன்னெடுத்தன. உக்ரைனின் ஆயுதப் படைகள் (AFU), கவச வாகனங்கள், பீரங்கி, விமானம் மற்றும் கப்பல்களில் பலவீனமாக இருந்தபோதும், படையெடுப்பு தரைப்படையை விட மூன்றுக்கு ஒன்றாக காணப்பட்டது. அவர்கள் ஈட்டி "உயர் தாக்குதல்" கவச எதிர்ப்பு ஏவுகணைகள், கொடிய புதிய பைரக்டர் TB-2 ட்ரோன்கள் மற்றும் ஓர் "ரகசிய ஆயுதமான" Mass of First-person view (FPV) குவாட்காப்டர் ட்ரோன்கள் ஆகியவற்றையும் வைத்திருந்தனர். இந்த ஆயுதங்கள் ரஷ்ய தரை தாக்குதலை நிறுத்திய அதே நேரத்தில் வலுவான வான் பாதுகாப்பு ரஷ்ய விமானங்களை நடுநிலைப்படுத்தியது. இதற்கிடையில், உக்ரேனிய கடல் ட்ரோன்கள் ரஷ்ய கடற்படையின் ஆதிக்கத்தை ஈடுகட்டுகின்றன. ட்ரோன்கள் எங்கும் பரவியிருப்பதால், செயற்கைக்கோள் கண்காணிப்பு, பெரிய அளவிலான துருப்புக்கள் அல்லது கவசங்கள் உடனடி இலக்குகளாக மாறுகின்றன. தாக்குதல் மற்றும் தற்காப்பு இரண்டிலும், சண்டையின் தாக்கம் அணிகள் அல்லது படைப்பிரிவு அளவிலான அலகுகள் தாங்கப்பட்டுள்ளன. ஐந்து அல்லது ஆறு கவச வாகனங்களை விட பெரிய எண்ணிக்கையிலான கவசத் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலையில், அதிக பயிற்சி பெற்ற பிரிவுகளின் சிறிய குழுக்கள் மிகவும் வினைத்திறனானதாக இருந்தன. ஆயுதமேந்திய காலாட்படை யுத்த வாகனங்களான மேம்படுத்தப்பட்ட லொறிகள் செலவழிக்கக்கூடிய துருப்பு போக்குவரத்துகளாக மாறியுள்ள அதே நேரத்தில் கவச வாகனங்கள் காலாட்படை ஆதரவுக்கான நடமாடும் பீரங்கிகளாக செயற்படுகின்றன. போரானது மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக, இரு தரப்பிலும் உள்ள சிறிய பிரிவுகளின் கடுமையான போட்டித் தாக்குதல்களின் தொடராக மாற்றமடைந்தது. AFU குறைந்த எண்ணிக்கையில் இருந்த ரஷ்யப் படைகளை கிய்வ், கார்கிவ் மற்றும் கெர்சனில் இருந்து பின்னோக்கி தள்ள முடிந்ததுடன், ரஷ்யர்கள் டான்பாஸில் சில வெற்றிகளைப் பெற்றதுடன் குறிப்பாக செவெரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க் மற்றும் பாக்முட் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நேட்டோ ஆயுதங்களால் பெரிதும் வலுப்படுத்தப்பட்ட, நேட்டோ பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட அல்லது மீள் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவப் பிரிவுகளுடன், AFU அதன் கோடைகால எதிர் தாக்குதலை ஆரம்பித்தது. அஸோவ் கடலை அடையும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, முழுவதுமாக நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு மீட்டர் பிரதேசத்திற்கும் மெதுவாக, இரத்தக்களரியாக ஆக்கப்பட்டது. விலையுயர்ந்த, மிகவும் புகழ் பெற்ற மேற்கத்திய ஆயுத அமைப்புகள் அவற்றின் மிகவும் மலிவான ரஷ்ய எதிரமைப்புக்களைப் போலவே பாதிக்கப்படக்கூடியவை என்பதை நிரூபித்தன. ரஷ்யர்கள் தங்களது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதுடன், உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்து பாரியளவான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். எவ்வாறாயினும், ரஷ்ய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளில் போருக்கு முன் திட்டமிடப்பட்ட விரைவான, ஆழமான ஊடுருவல் சூழ்ச்சி நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மற்றும் நகர்ப்புற மாவட்டங்கள், காடுகள் மற்றும் மர எல்லைகளினூடாக போர்கள் நடந்துள்ளன. தற்காலிக கோட்டைகளை உருவாக்குவதற்காக வலுவாக கட்டப்பட்ட உயரமான கட்டிடங்களை ஒன்றிணைத்து குழுவாக்கும் சோவியத் நடைமுறை இந்த செயன்முறைக்கு உதவியது. ட்ரோன்கள், ஆமை கவச வாகனம், கண்ணிவெடிகள் மற்றும் குண்டுகள் பிரமிக்கதக்க காணொளி அமைப்புக்களுடனான உக்ரேனிய ஆளில்லா விமானங்கள், அதிகமான ஊடகங்களைத் தூண்டின. இருப்பினும், ரஷ்யர்கள் ஈரானிய வடிவமைப்பிலான "காமிகேஸ்" ட்ரோன்கள் மற்றும் FPV ட்ரோன்கள் மற்றும் பெரிய வழக்கமான ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்தனர், இருப்பினும் அவர்களின் அதிர்ச்சியூட்டும் காணொளிப் பதிவுகள் குறைந்த ஊடக கவனத்தையே பெற்றன. ஆயினும்கூட, ட்ரோன் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் வினைத்திறனானதாக நிரூபிக்கப்பட்டாலும், வெற்றிகரமான தாக்குதல்களின் ஒளிபரப்பு காட்சிகள் அவற்றின் தாக்கத்தை மிகைப்படுத்தின. கவச வாகனத்தை முடக்க அல்லது அழிக்க சராசரியாக பத்து FPV ட்ரோன் தாக்குதல்கள் தேவைப்படலாம். திறந்தவெளியில் உள்ள காலாட்படைக்கு எதிராக ட்ரோன்கள் மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கவச வாகனங்கள் வான் தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக கவச வாகனங்களின் மேலே பொருத்தப்பட்ட "தணிக்கும் கூண்டுகள்", மேம்படுத்தப்பட்ட உலோகக் கூண்டு போன்ற கட்டமைப்புகள் போன்ற எதிர் நடவடிக்கைகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. ரஷ்யர்கள் உலோக உறைகள் கொண்ட தொட்டிகளை மாற்றியமைப்பதன் மூலம் இதை ஒரு படி மேலே கொண்டு சென்றதுடன், அவர்களின் ஆமைக் குடும்ப தோற்ற அமைப்பால் அவை "ஆமை கவச வாகனங்கள்" என்ற புனைப்பெயரைப் பெற்றன. ட்ரோன்களுக்கு எதிரான இலத்திரனியல் எதிர் நடவடிக்கைகள் இலத்திரனியல் போர் தந்திரோபாய அளவில் அதிக தீவிரத்தை எட்டியுள்ளதால் மாறுபட்ட வெற்றியைப் பெற்றுள்ளன. கண்ணிவெடிகள் ஓர் பெரிய போரில் குறிப்பாக கவச வாகனங்களுக்கு எதிராக வெற்றி பெற்ற ஆயுதமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை நிலைநிறுத்துவதற்கான புதிய மற்றும் விரைவான முறைமைகள் கண்ணிவெடிகள் மூலமாக அழிக்கப்பட்ட பாதைகள் நீண்ட காலத்திற்கு அகற்றப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இதற்கிடையில், கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள், விலை உயர்வானதாக இருப்பதால், ட்ரோன்கள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றின் தாக்குதலுக்கான பிரதான இலக்குகளாக மாறியது. வான் பாதுகாப்பின் வலிமையானது தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை போர்க்களத்தில் இருந்து தொலைவில் இருக்க கட்டாயப்படுத்தியதுடன், fire-and-forget ஏவுகணைகள் மற்றும் ஸ்மார்ட் குண்டுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்தது. முன்னரங்கில் வான்வழியின் மேன்மையை நிலைநிறுத்திய ரஷ்யர்கள் முன்னரங்கிற்கு பின்னால் மிகத் தொலைவிலிருந்து தங்கள் இலக்குகளை நோக்கிச் சென்று தாக்கத்தில் பேரழிவை ஏற்படுத்தும் திறன் கொண்ட FAB 500, 1500 மற்றும் 3000 ஸ்மார்ட் குண்டுகளை மேலும் மேலும் சார்ந்து இருந்தனர். தொழிற்துறைப் பலம் இருப்பினும், போரின் போக்கு பெரும்பாலும் பீரங்கிகளால் தீர்மானிக்கப்பட்டது. துப்பாக்கிகள் மற்றும் பல்குழல் ஏவுகணை செலுத்தி (MBRL) அமைப்புகள் இரண்டும் அதிகரித்த துல்லியம் மற்றும் எல்லையுடன் அதிநவீனமாக வளர்ச்சியடைந்துள்ளன. ஏறக்குறைய நிலையான, முற்றுகை போன்ற போர்கள், தற்காப்புப் படையின் எழுச்சியின் விளைவாக, வீரர்கள் அல்லது கவச வாகனங்களின் எண்ணிக்கையை விட டன் கணக்கில் குண்டுகள் முக்கியமானவை என்று வெளிப்படுத்துகினறன. உதாரணமாக, அதிக எண்ணிக்கையிலான ரஷ்யப் படை வடக்கு கார்கிவ் பகுதியில் கசப்பான AFU தாக்குதல்களை முதன்மையாக பீரங்கிகளைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது. ரஷ்யப் படைகளின் அண்ணளவான 10,000 குண்டுகளுடன் ஒப்பிடும்போது AFU தினமும் சுமார் 2,000 குண்டுகளை வீசுகிறது. இந்த எண்கள் பெரும்பாலான நாடுகள் திட்டமிட்டதை விட அதிகமாக உள்ளதுடன், அதனால் இருப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. நேட்டோ இந்த ஆண்டு 1.2 மில்லியன் குண்டுகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே தென் கொரியாவிலிருந்து 300,000 கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 800,000 குண்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் உக்ரைனுக்கான சோவியத் பாணியிலமைந்த வெடிமருந்துகளை குறிப்பிடப்படாத அளவு தயாரித்து வருகிறது. மறுபுறம், ரஷ்யா கடந்த ஆண்டு மூன்று மில்லியன் குண்டுகளை உற்பத்தி செய்ததுடன், இந்த ஆண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, இருப்பினும் அதன் இலக்கு தெரியவில்லை. மேலதிகமாக, ரஷ்யா ஈரான் மற்றும் வட கொரியாவில் இருந்து வெளிப்படுத்தப்படாத ஏழு இலக்க குண்டுகளை ஒதுக்கியுள்ளதுடன், மேலும் இந்தியா, பெலாரஸ் மற்றும் சீனாவிலிருந்து இன்னும் அதிகமாக வாங்கலாம். இறுதிப் பகுப்பாய்வில், இந்தப் போர் தொழிற்துறை வலிமையின் மீது தங்கியிருக்கிறது. ரஷ்ய (முக்கியமாக அரசுக்கு சொந்தமான) இராணுவ-தொழிற்துறை வளாகமானது ஷெல்கள், குண்டுகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் முழு மேற்கையும் விஞ்சியிருக்கிறது. இது தரப்படுத்தல், மையப்படுத்தப்பட்ட திசைப்படுத்தல் மற்றும் தேவைக்கு ஏற்ற உற்பத்தி ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டுள்ளது. மாறாக, மேற்கத்திய இராணுவ-தொழிற்துறை வளாகம், இலாப உந்துதல் காரணமாக, தேவையான கூடுதல் உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்ய மறுத்தது. இது போரிலிருந்து வெளிப்படும் மிகப்பெரிய மூலோபாய பாடமாக இருக்கலாம். இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், இந்த மோதல் எதிர்காலத்தில் போர்கள் நடத்தப்படும் விதத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமச்சீரற்ற தன்மையை சமன் செய்துள்ள அதே நேரத்தில் பீரங்கிகளைப் பயன்படுத்துவது வேறுபாட்டை விரிவுபடுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த இரத்தக்களரி மோதலில் இருந்தான மிகவும் நம்பிக்கையூட்டும் விடயம் என்னவென்றால், இப்போது வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகக் கருதப்படுகின்ற போர்கள் மனித உயிர்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்தவையாகும். வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. https://www.virakesari.lk/article/190617
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் 8 ஆகஸ்ட் 2024 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி. ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தன. ஆட்டத்தின் முதல் பகுதி வரை இரு அணிகளும் எந்த கோல்களையும் எடுக்கவில்லை. இரண்டாம் பகுதியில் முதல் கோலை பதிவு செய்தது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்த சில நிமிடங்களிலேயே சமன் செய்யும் வகையில் இந்தியா ஒரு கோல் அடித்தது. இலக்கை நோக்கி மூன்றாவது ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியா இரண்டாவது கோலை பதிவு செய்தது. அதன் பின்னர் ஸ்பெயின் அணியினருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தும், இந்திய அணியின் சாதுர்யமான ஆட்டத்தால், ஸ்பெயின் அணி கோல் அடிப்பது தடுக்கப்பட்டு பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். இரண்டாவது கோலையும் அவர்தான் அடித்தார். இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை அவர் 11 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது ஸ்பெயின் அணி. இந்திய அணியின் ஶ்ரீஜீஸுக்கு இது கடைசி சர்வதேச இறுதி போட்டி. பிரியாவிடை தரும் வகையில், அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் அவரை தோளில் தூக்கி வைத்து நடக்க, அவருக்கு அனைவரும் மரியாதை செலுத்தி போட்டி முடிவை மிகவும் நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டனர். இந்திய பிரதமர் வாழ்த்து இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய தலைவர்கள் தங்களில் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில், "எதிர்கால சந்ததியினர் அனைவரும் கொண்டாட இருக்கும் வெற்றி," என்று குறிப்பிட்டார். "ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பிரகாசமாக ஜொலிக்கிறது. தாய்நாட்டுக்கு வெண்கலப் பதக்கத்துடன் திரும்பி வருகிறது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி பதக்கம் வென்றிருப்பது கூடுதல் சிறப்பு" என்றும் மேற்கோள் காட்டினார். வீரர்களுக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்த அவர், இந்திய ஹாக்கி அணியினருடன் ஒவ்வோர் இந்தியரும் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதாகவும், இந்த வெற்றி இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டை மேலும் பிரபலமடைய வைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பட மூலாதாரம்,TWITTER/NARENDRAMODI படக்குறிப்பு,இந்திய அணியை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோதி பதக்கங்களை வென்று குவித்த ஹாக்கி அணி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது. இதுவரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 12 பதக்கங்களை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இன்றும் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நாஜி ஜெர்மனியில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண ஹிட்லர் நேரடியாக மைதானத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. 1960இல் வெள்ளிப் பதக்கத்தையும், நான்கு முறை வெண்கலப் பதக்கங்களையும் இந்திய அணி வென்றுள்ளது. இந்தியா இறுதியாக 1980இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. https://www.bbc.com/tamil/articles/cn02elg94qeo
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனின் அதிரடியால் கடும் அச்சத்தில் புடின் : அவசரகாலநிலை பிரகடனம் ரஷ்யாவிற்குள்(russia) சுமார் 15 கிலோ மீற்றர் வரை ஊடுவியுள்ள உக்ரைன்(ukraine) படையினர் அப்பகுதியிலுள்ள அணு உலையை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin) கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் 300 படைவீரர்களையும், 11 கவச வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய இராணுவமும் தெரிவித்துள்ளது. அவசர காலநிலை பிரகடனம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்ததால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், "எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற" இந்த நடவடிக்கை அவசியம் என்றார். ஊடுருவல் தொடங்கியதில் இருந்து குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு குழந்தைகள் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ஊடுருவிய உக்ரைன் படையினர் செவ்வாயன்று காலை 1,000 உக்ரைனிய படையினர், அத்துடன் 11 டாங்கிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், சுட்ஜா நகருக்கு அருகில் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முழுவதும் பல கிராமங்களில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது, உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை தங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தினர் மற்றும் அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டன. புடினுக்கு அச்சம் நேற்று (07)புதன்கிழமை அரசாங்க அதிகாரிகளுடனான ஒரு தொலைக்காட்சி சந்திப்பில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் "பெரிய ஆத்திரமூட்டல்" மற்றும் "கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு" நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதேவேளை, உக்ரைன் படைவீரர்கள், Kursk அணு உலையை கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்படி அந்த அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் (nuclear blackmail) என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. https://ibctamil.com/article/ukraine-launches-raid-into-russia-1723110104
-
யாழ் போதனை வைத்தியசாலையில் தவறிழைக்கும் சில வைத்தியர்கள்: உண்மையை உடைக்கும் முன்னாள் அதிகாரி
யாழ் போதனை வைத்தியசாலையில் 50 பேர் வைத்தியர்களாக இருக்கின்றார்கள் என்றால் அதில் 10 பேர் தவறு செய்பவர்களாக இருக்கின்றார்கள் என அந்த வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்ககூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருக்க கூடிய விடயங்களில் மிக முக்கியமானவை மருத்துவதுறை சார்ந்த விடயங்களாகவே காணப்படுகின்றது. இந்த பின்னணியில் மருத்துவதுறை சார்ந்த மற்றுமொரு விடயம் பேசுபொருளாகியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியிருக்க கூடிய முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இவற்றின் உண்மை தன்மை என்ன, இவற்றின் பின் இருக்ககூடிய விடயங்கள் என்ன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என இந்த காணொளியில் காணலாம். https://ibctamil.com/article/jaffna-doctor-allegations-exposed-1723125121
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
சீனாவைச் சேர்ந்த 11 வயது இளையவர் ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை சீனாவைச் சேர்ந்த 11 வயது ஸ்கேட்போர்டிங் வீரர், இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளையவர் என்ற வரலாறு படைத்தார். அவருக்கு 11 வயது என்பதுடன், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதற்கு முன்தினம் பிறந்துள்ளார். Zheng Haohao தனது ஸ்கேட்போர்டிங் போட்டியில் 63.19 புள்ளிகளுடன் 18வது இடத்தைப் பிடித்தார். https://thinakkural.lk/article/307516
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு; மீட்கப்பட்ட தகட்டு இலக்கங்களை பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை! Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 05:59 PM கே .குமணன் இன்று வியாழக்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் (ஓ.எம்.பி ) சார்பில் அந்த அலுவலகத்தின் சட்டத்தரணிகளும், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ரட்ணவேல் மற்றும் நிரஞ்சன் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் மன்றில் ஆஜராகி இருந்தார்கள். ஏற்கனவே நீதிமன்றால் இந்த புதைகுழி அகழ்வு தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிக்க கோரியிருந்தமை தொடர்பில் கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரால் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட இருபத்தைந்து வகையான எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ பீட கட்டடத்தில் உள்ள சட்ட மருத்துவ பிரிவுக்கு இடமாற்றப்பட்டு கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் அது சம்பந்தமான பகுப்பாய்வு பணிகள் இரு நாட்களாக இடம்பெற்றன. இப்பாகுப்பாய்வு பணிகளானது எதிர்வரும் வாரங்களில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது என இந்த புதைகுழி அகழ்வில் தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார். அத்தோடு காணாமல் போனோர் அலுவலகம் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற இடத்தை பூரணமாக பொதுமக்களிடம் கையளிப்பது சம்பந்தமாக அடுத்த வழக்கு தவணையில் முடிவுக்கு வருவதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் சில விண்ணப்பங்களை அவர்களது சார்பில் ஆஜரான சட்டதரணிகள் மன்றில் முன்வைத்திருந்தார்கள். அதாவது தடயவியல் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட குறிப்புகள் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள் மற்றும் சான்றுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு இந்த அகழ்வில் பொழுது பல இலக்கத்தகடுகள், இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை துலாம்பரமாக பத்திரிகைகளில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் பிரசுரிக்கப்படவேண்டும் என்றும் அந்த இலக்கங்கள் அதனோடு இணைந்த போராளிகளுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியும் என்ற அடிப்படையில் அவர்கள் அந்த தகவல்களை நீதிமன்றுக்கு தெரிவிப்பதன் மூலம் ஆய்வுப்பணிகளையும் அந்த புதைகுழி தொடர்பான காலப்பகுதியையும் கண்டுபிடிப்பதற்கு இலக்கு என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகளால் தெரிவித்ததன் அடிப்படையில் அது சம்பந்தமாகவும் கட்டளை ஆக்கப்படுள்ளது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி தவணையிடப்படுள்ளது. இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான விடயங்களை கண்காணிக்க இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுசாந்தி கோபாலகிறிஸ்ணன் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார். https://www.virakesari.lk/article/190603
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்து விளக்கமறியல் - இருவருக்கு பிணை Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 05:47 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை (08) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/190598
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
நல்லூர் கந்தனின் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்ட வீதித் தடை தொடர்பில் மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த. கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்; யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை வெள்ளிக்கிழமை மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமுகமளிக்குமாறு யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307544
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன்; தமிழ் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 04:26 PM (எம்.நியூட்டன்) தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும். தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது. சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர் முயற்சியாகும். பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன். இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன் என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/190586