Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர் Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 04:54 PM யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இதன் போது சீன அரசின் உதவியுடன் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசியும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்- யாழ் குடாநாட்டின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்தார். பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக உள்ளூராட்சி நிர்வாக பகுதியில் கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான விசேட ஏற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளோம். பிரதமர் என்ற வகையில் நீங்கள் அனைவரும் அடைந்துள்ள முன்னேற்றத்தை அவதானிக்கவும், வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நாம் இன்று இருக்கும் இடத்தைப் பற்றிய சில கருத்துக்களைப் பெறவும் இங்கு வருகைதர கிடைத்தமையை பாக்கியமாக கருதுகிறேன். சேவைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உறுதிபூண்டுள்ளனர். எனவே, அபிவிருத்திக்குத் தேவையான அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது இந்தப் பிரதேசத்திற்கு மிகவும் முக்கியமானது. விவசாயிகளின் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். அனைத்து விவசாயிகளும் தனியார் துறையை சேர்ந்தவர்கள். உரிமைகளின் அடிப்படையில் அல்லது சிறு விவசாயிகள் என்ற வகையில் அவர்கள் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட பங்களிப்பாளர்களாக உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதியும் அரசாங்கமும் கல்விக்கு அதிகூடிய முன்னுரிமையை வழங்குவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியைப் பெறுவதற்கும் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கும், பின்னர் புதிய நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் துறைகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். அதற்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும். எமது நாட்டில் வறுமை நிலை திருப்திகரமாக நிர்வகிக்கபட்டுள்ளது. எந்தவொரு பொருளாதாரத்திலும், எந்த நாட்டிலும் வறுமை ஒரு முக்கிய பிரச்சினை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். செல்வந்த நாடான அமெரிக்காவில் உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. எனவே, உலகின் அனைத்துப் பொருளாதாரங்களும் வறியவர்கள் தொடர்பில் இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளன. வடமாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேரந்த குறைந்த வருமானம் பெறும் மக்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும் - என்றார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், க.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யதாமினி குணவர்தன, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/188312
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES AND SOCIAL MEDIA 11 ஜூலை 2024 "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்." பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை. பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிடும் முடிவு ஜெனரல் ஜியா-உல்-ஹக்கிற்கு நேரடியாகப் பலனளித்தது' என்றும், சுல்பிகர் அலி பூட்டோ விடுவிக்கப்பட்டிருந்தால், 'அவர் ஜியா-உல்-ஹக்கிற்கு எதிராக ஒரு தேசத் துரோக வழக்கைத் தொடங்கியிருக்கலாம்' என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பில், ஃபெடரல் பாதுகாப்புப் படையின் (எஃப்எஸ்எஃப்- FSF) அப்போதைய தலைமை அதிகாரி மசூத் மஹ்மூத்தின் அறிக்கை மற்றும் அவரது முக்கியப் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் பாதுகாப்புப் படை பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபெடரல் பாதுகாப்புப் படை, அதாவது எஃப்எஸ்எஃப் என்பது சுல்பிகர் அலி பூட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு துணை ராணுவப் படை. பூட்டோ தூக்கிலிடப்பட்ட வழக்கில் வாதியாக இருந்த, அரசியல் தலைவர் அகமத் ரசா கசூரியை பூட்டோவின் உத்தரவின் பேரில் கொல்லச் சதி செய்ததாக எஃப்எஸ்எஃப் அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நவம்பர் 11, 1975 அன்று அகமத் ரசா கசூரியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை முகமது அகமத் கான் கசூரி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், எஃப்எஸ்எஃப் தலைமை அதிகாரி மசூத் மஹ்மூத் முக்கியமானவர். ராணுவப் புரட்சிக்குப் பிறகு மசூத் மஹ்மூத் கைது செய்யப்பட்டார். முதலில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். செப்டம்பர் 7, 1977இல், லாகூர் மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டப்பட்ட மசூத் மஹ்மூத்திடம் இருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். ஒரு வாரத்திற்குப் பிறகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது வாக்குமூலம் 1979இல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிடுவதற்கான அடிப்படையாக அமைந்தது. மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில், சுல்பிகர் அலி பூட்டோ தன்னிடம் அகமது ரசா கசூரியை கொல்ல உத்தரவிட்டதாகவும், "எனக்கு கசூரியின் இறந்த அல்லது காயப்பட்ட உடல் வேண்டும்" என்று கூறியதாகவும் தெரிவித்தார். அகமத் ரசா கசூரியின் தந்தை முகமது அகமத் கான், தனது தந்தையின் சிறந்த நண்பர் என்று மசூத் மஹ்மூத் கூறினார். இருப்பினும், அவர் தனது தந்தையின் சிறந்த நண்பரின் மகனைக் கொலை செய்ய உத்தரவிட்டார். 'மனசாட்சி கடுமையாக உறுத்தியது' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுல்பிகர் அலி பூட்டோ ஆனால் மசூத் மஹ்மூத்துக்கு ஏன் திடீரென்று மனமாற்றம் வந்தது என்றால், அவரது கூற்றின்படி, 'இந்தக் கொடூரமான குற்றத்திற்கு உத்தரவிட்டதால், தனக்கு மனசாட்சி கடுமையாக உறுத்தியது.' உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், "மசூத் சிறையில் இருந்தபோது அவருக்கு குற்றவுணர்வு தோன்றியது. இந்தக் குற்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது, அந்த நேரத்தில் அவரது மனசாட்சி அமைதியாக இருந்தது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டவுடன் அது உறுத்தியது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "அத்தகைய மனசாட்சி கொண்ட ஒருவர் யாரையாவது கொல்லுமாறு கட்டளையிடுவது என்பது வேறொருவரின் கட்டளையை நிறைவேற்றுவதாகும்" என்று கூறப்பட்டது. இந்தக் கடிதம் எழுதப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு, மசூத் மஹ்மூத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அன்றே அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. மசூத் மஹ்மூத் யார், பூட்டோவால் உருவாக்கப்பட்ட துணை ராணுவப் படைக்கு அவர் எப்படித் தலைவரானார் மற்றும் அவரது சாட்சியம் குறித்து உச்சநீதிமன்றம் என்ன கூறியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம். மசூத் மஹ்மூத் எஃப்எஸ்எஃப் தலைமை அதிகாரி ஆனது எப்படி? நீதிமன்றத்தின் முன் மசூத் மஹ்மூத் அளித்த பெரும்பாலான அறிக்கைகள் தேவையற்றவை என்றும், அதன் முதல் நான்கு பக்கங்களில் அவர் வகித்த பதவிகள் மற்றும் அவர் 21வது அளவை எட்டிய விதம் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த அறிக்கையில், அவர் ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸில் சில காலம் பணியாற்றியதால், போருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இந்திய காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறினார். பாகிஸ்தான் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, அவர் செப்டம்பர் 18, 1948 அன்று துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு ஏப்ரல் 12, 1974 அன்று, பிரதமர் பூட்டோ அவரை அழைத்து, அவரது 'நேர்மை, கடின உழைப்பு மற்றும் நல்ல குணத்தை' பாராட்டியதாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "உங்களுக்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நபரிடம், நேர்மை மற்றும் நல்ல குணத்தையா எதிர்பார்ப்பீர்கள் என்ற கேள்வி எழுவதாகக்" கூறியது. மசூத் மஹ்மூத் அறிக்கையில், பூட்டோ ஒரு மணிநேரம் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார், அதன் பிறகு அவர் ஃபெடரல் பாதுகாப்புப் படையின் (FSF) தலைமை அதிகாரி பதவிக்கு அவரை ஆதரித்தார். அந்தக் காலத்தில் படைக்குப் பயிற்சி அளித்து, அதை ஒழுங்கமைக்க மசூத் மஹ்மூத் பணியாற்றினார். பிரதமரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சயீத் அகமது கான் மற்றும் அவரது உதவியாளர் அப்துல் மஜீத் பஜ்வா ஆகியோர், பூட்டோ சொன்னதைச் செய்யாவிட்டால், "உன் மனைவியும் குழந்தைகளும் உன்னை மீண்டும் பார்க்க மாட்டார்கள்" என்று தன்னிடம் கூறியதாகவும் மசூத் கூறினார். இந்த வழக்கில் சயீத் அகமது கான் சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை என்றும், அப்துல் மஜீத் பஜ்வா ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றும், எனவே அவர்கள் கூறியதாகக் கூறப்படும் கூற்றுகள் செவிவழிச் செய்திகளைத் தவிர வேறில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதற்குப் பிறகு மசூத் மஹ்மூத் தனது கோழைத்தனத்திற்கான காரணத்தையும் விளக்கியதாகக் கூறிய நீதிமன்றம், "வக்கார் உங்களைத் துரத்துவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் அல்லவா?" என்று பூட்டோ தன்னிடம் கூறியதாக மசூத் கூறினார். இங்கு வக்கார் என்ற நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை மற்றும் தீர்ப்பின்படி, வக்காரும் சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை. கசூரியை கொல்வதற்கான உத்தரவு பட மூலாதாரம்,AHMED RAZA KASOORI படக்குறிப்பு,முகமது அகமத் கான், அகமத் ரசா கசூரியின் தந்தை இதேபோல், மசூத் மஹ்மூத் எந்த ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்ட மற்றொரு பெயர், குவெட்டாவில் எஃப்எஸ்எஃப்-இன் இயக்குநராக இருந்த எம்.ஆர்.வெல்ச் மற்றும் குவெட்டாவில் கசூரியை கொலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டவர். மசூத் மஹ்மூத், "மியான் முகமது அப்பாஸ் (இயக்குநர்- எஃப்எஸ்எஃப்), ஹக் நவாஸ் தவானா (முன்னாள் தலைமை அதிகாரி- எஃப்எஸ்எஃப்) மூலம் அகமத் ரசா கசூரியை கொல்லுமாறு பூட்டோ உத்தரவிட்டதாக" கூறினார். "அகமத் ரசா கசூரியின் உடலையோ அல்லது அவரது சித்திரவதை செய்யப்பட்ட உடலையோ முழுவதும் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வருமாறு மியான் அப்பாஸிடம் சொல்லுங்கள் என பூட்டோ பின்னர் என்னிடம் உத்தரவிட்டதாக" கூறுகிறார் மசூத். விசாரணை நீதிமன்றத்தில் மியான் முகமது அப்பாஸ் தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றதாகவும், முன்னாள் எஃப்எஸ்எஃப் தலைமை அதிகாரி ஹக் நவாஸ் தவானா சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் எழுதியது. பூட்டோ நீண்டகாலமாக கசூரியை கொல்ல விரும்பியதாகவும், இது தொடர்பாக அவர் ஏற்கெனவே மியான் அப்பாஸுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும், ஆனால் அவர் அந்த உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றும் மசூத் மஹ்மூத் கூறினார். இருப்பினும், மசூத் மஹ்மூத்திடம் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கப்பட்டபோது, அகமத் ரசா கசூரிக்கு பதிலாக அவரது தந்தை முகமது அகமது கான் கொல்லப்பட்டார். "மசூத் மஹ்மூத் தன்னை கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், ஒருவரைக் கொல்ல உத்தரவு பிறப்பிப்பது கடவுளின் ஆணைகளுக்கு எதிரானது என்பதை அறிந்தவராகவும் காட்டிக்கொண்டார். ஆனால், பூட்டோ அவருக்குக் கொலை செய்வதற்கான உத்தரவை அளித்தார். 'இதனால் கடவுளின் கட்டளையை மீறி, விலைமதிப்பற்ற மனித உயிரைப் பறிப்பதில் நான் முக்கியப் பங்காற்றினேன், கடவுளே என்னை மன்னியுங்கள்' என மசூத் தெரிவித்துள்ளார்", என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியது. “கடவுளின் கட்டளையை மறுத்ததற்கு மசூத் மஹ்மூத் கூறிய காரணம், அவர் திருமணமானவர். 'ஒருவேளை குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால், என் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த உத்தரவை நான் பின்பற்றியிருக்க மாட்டேன், வெளியேறியிருப்பேன்' என்றார்" என அந்தத் தீர்ப்பு கூறுகிறது. மசூத் மஹ்மூத்தின் நற்பெயர் குறித்து நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,SOCIAL MEDIA உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மசூத் மஹ்மூத்தின் நற்பெயர் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, "அக்கால நீதிமன்றங்களால் மசூத் மஹ்மூத்தின் நற்பெயரில் எந்தச் சந்தேகமும் தெரிவிக்கப்படவில்லை." மசூத் மஹ்மூத் தனது மனசாட்சியைப் பற்றிப் பலமுறை பேசியதாகவும், "அவரது மனசாட்சி அவரை மிகவும் குற்றவாளியாகக் கருதியது" என்றும், "இந்தச் செயல் (கொலை) எனது மனசாட்சிக்கு எதிரானது" என்றும் அவர் தெரிவித்ததாக நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர் சிறையில் சிறிது காலம் கழிக்க வேண்டியிருந்த போதுதான் அவரது மனசாட்சி விழித்துக்கொண்டது. அந்த மனசாட்சி முதலில் தனக்காக மன்னிப்பு கேட்டு இந்த குற்றவுணர்வில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் தனக்கான பாதுகாப்பும் வசதியும், தனது மனசாட்சியைவிட அவருக்கு முக்கியமாகத் தோன்றியுள்ளது. அப்படியிருக்க அவர் உண்மையைச் சொல்கிறாரா அல்லது சந்தர்ப்பவாதியா என்ற கேள்வி எழுவதாகவும் நீதிமன்றம் கூறுகிறது. பட மூலாதாரம்,SOCIAL MEDIA மசூத் மஹ்மூத் தொடர்பான விவாதத்தை முடித்துக்கொண்ட நீதிமன்றம், "அவர் தனது அறிக்கையில் வியத்தகு முறையில் தனது மதம் (இஸ்லாம்) குறித்த கருத்துகளை முன்வைத்தார், ஆனால் 'ஒரு நபரைக் கொல்வது என்பது முழு மனிதகுலத்தையும் கொல்வது' என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கட்டளையை அவர் மறந்துவிட்டார்" எனக் கூறியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மசூத் மஹ்மூத் மற்றும் மியான் முகமது அப்பாஸ் ஆகியோரது சாட்சியங்களின் அடிப்படையில் அரசுத் தரப்பு தனது முழு வழக்கையும் கட்டமைத்தது. ஆனால் மியான் முகமது அப்பாஸ் தனது சாட்சியத்தை வாபஸ் பெற்று, அதற்கு அப்படியே எதிரான ஓர் அறிக்கையை அளித்தார். இந்தக் காலத்தில் ஹக் நவாஸ் தவானாவும், அப்துல் ஹமீத் பஜ்வாவும் இறந்துவிட்டனர். எம்.ஆர்.வெல்ச் மற்றும் சயீத் அகமது கான் ஆகியோரை மன்னிப்பு கோரும் சாட்சிகளாக ஆக்காமல் அரசுத் தரப்பு சாட்சிகளாக ஆஜர்படுத்தினர். https://www.bbc.com/tamil/articles/c250p4nlx4qo
  3. எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள எழுத்து மூல கோரிக்கை Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 04:18 PM அரசியலமைப்பு சதிகளின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு விடுக்கப்படும் அழுத்தங்களை தடுக்குமாறும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சுயாதீன எதிர்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரின் கையொப்பத்துடனான கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று வெள்ளிக்கிழமை (12) கையளித்தார். https://www.virakesari.lk/article/188311
  4. கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு - அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர் 12 JUL, 2024 | 04:43 PM கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுபணிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதரகம் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆதரவை வெளியிடும் விதத்தில் முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழிகளை அகழும் பணிகளை தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர் என தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மை, பதிலுக்காக காத்திருப்பவர்களின் காயங்களை ஆற்றுதல் இந்த விடயத்தை முடிவிற்கு கொண்டுவருதல் ஆகியவற்றிற்கு இந்த நடவடிக்கை (மனித புதைகுழி அகழ்வு) முக்கியமானது என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்கின்றது அங்கீகரிக்கின்றது எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/188315
  5. ஜனாதிபதி தேர்தல்; நிதி சட்டரீதியான தடங்கல் எதுவும் இல்லை என்கின்றார் தேர்தல் ஆணையாளர் 12 JUL, 2024 | 03:20 PM ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சட்டரீதியான நீதிரீதியான தடங்கல்களை எதிர்கொள்ளவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டரீதியான மற்றும் நிதி ரீதியான தடைகள் காணப்படுகின்றமையினால் ஜனாதிபதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியுமா என பலதரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். தேவையான நிதிகள் எங்களிடம் உள்ளன மேலும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எங்களிற்கு சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து சட்ட அமுலாக்கல் தரப்பின் அதிகாரிகள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தரப்புடன் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஜூலை 17 ம் திகதி நிதியமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜூலை 14 ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பதற்கான அதிகாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர் மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188303
  6. 12 JUL, 2024 | 12:10 PM ரஷ்யாவை பிறப்பிடமாகக்கொண்ட இரு அவுஸ்திரேலிய பிரஜைகள் ரஷ்ய அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை வழங்கிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிஸ்பேர்னில் வசிக்கும் தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியினருக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் புதிய வெளிநாட்டு தலையீட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 இல் வெளிநாட்டு தலையீட்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தம்பதியினருக்கு எதிராகவே இச்சட்டம் முதன்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையிலும் இருந்துள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் நீண்டகால விடுப்பில் இருந்தபோது ரஷ்யாவுக்கு இரகசிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தம்பதியினர் ரஷ்ய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தகவல்களை வழங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர் பிணை மனு முன்வைக்கப்படவில்லை. அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அனுமதி பெற்றிருந்த ஒருவர் எவ்வாறு ரஷ்யாவுக்கு சென்றார் என்பது பற்றியும் ஆராயப்படுகின்றது. இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைப்புகளால்தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் விசாரணை தொடர்வதால் மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என தெரியவருகின்றது. https://www.virakesari.lk/article/188286
  7. 12 JUL, 2024 | 12:28 PM உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது. ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப் படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உக்ரைனின் அனைத்து அணுசக்தி நிலையங்களிலும் அணு விபத்து அல்லது விபத்து ஏற்படும் அபாயத்தை ரஷ்யா அதிகரிக்கிறது. எனவே, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைனின் இறையாண்மையின்கீழ், அந்நாட்டு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டிற்கு உடனடியாக ஆலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வரைவு தீர்மானத்தை ஆதரித்தன. இதையடுத்து, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபை, நேற்று (ஜூலை 11) இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, வங்கதேசம், பூட்டான், எகிப்து, நேபாளம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உட்பட 99 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன. https://www.virakesari.lk/article/188289
  8. உக்ரைன் ஜனாதிபதியை புட்டின் என அழைத்த பைடன் 12 JUL, 2024 | 11:33 AM வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் குழப்பமான பேச்சுக்கள் தொடர்கதையாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ‘புட்டின் ’ என சொல்லி அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ‘உக்ரைன் காம்பெக்ட்’ என்ற உடன்படிக்கையை நேட்டோ அமைப்பின் 32 உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில் பைடன் பங்கேற்றார். அப்போது ஜெலன்ஸ்கியை பேச அவர் அழைத்தார். அப்போது ‘புட்டின்’ என அவரை சொல்லி இருந்தார். “உக்ரைன் ஜனாதிபதியை நான் அழைக்கிறேன். அவர் தைரியம் மிக்கவர் மற்றும் உறுதித்தன்மை கொண்டவர்.ஜனாதிபதி புட்டினை வரவேற்கிறேன்” என பைடன் கூறினார். அதன் பின்னர் மேடையை விட்டு இறங்கிய போது தனது தவறை அறிந்து ‘ பைடன் புட்டினைஜெலன்ஸ்கி வீழ்த்துவார்’ என தெரிவித்தார். அதே போல பத்திரிகையாளர் சந்திப்பில் துணை அதிபர் ட்ரம்ப் என சொல்லி இருந்தார். அவர் கமலா ஹாரிஸை இப்படிச் சொல்லி இருந்தார். இது அவரது கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்களை அதிர்ச்சி கொள்ள செய்தது. அமெரிக்க ஜனாதிபதி 2024 தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராகர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். 81 வயதான அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. வயோதிகம் விவாதங்களில் பேசும் போது தடுமாறுவது அறவே தொடர்பு இல்லாமல் பேசுவது உடல் நலன் சார்ந்து இந்த விமர்சனங்கள் உள்ளன. https://www.virakesari.lk/article/188283
  9. அமெரிக்காவின் ரகசிய ராணுவ தளத்தில் சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மொரீஷியஸ் இந்த பவளத் தீவின் மீது இறையாண்மையைக் கோருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலீஸ் கட்டி பதவி, பிபிசி நியூஸ் 11 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் ``டியாகோ கார்சியா” - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. இந்தத் தீவில் புலம்பெயர்ந்தோர் குழுவை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை, பயோட் (British Indian Overseas Territory BIOT) எனப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் இந்த வாரம் நடைபெறவிருந்தது. இதில் பிபிசி செய்தியாளர்கள் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். இந்த வழக்கு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் பிரிட்டனில் விசாரணை நடத்துவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. பிபிசிக்கு கிடைத்த நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தடை செய்துள்ளனர். பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள இந்தத் தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்தப் பகுதிக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டியாகோ கார்சியாவின் வான்வழி காட்சி. நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த வாரம், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் "செய்தியாளர்கள்" (பிபிசி) தீவை அணுகுவதற்குக் கொடுத்த தங்களின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றதாக அறிவித்தனர். விசாரணையின் பங்கேற்பாளர்களை டியாகோ கார்சியாவிற்கு அமெரிக்க ராணுவ விமானங்களில் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் போதுமான அளவு கவனிக்கப்படும் வரை, தீவுக்குள் போக்குவரத்து, தங்குமிடம் அல்லது உணவு அவர்களுக்கு வழங்கப்படாது என்று பிராந்தியத்தின் துணை ஆணையர் நிஷி தோலாகியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்தப் பயணம் இருந்ததாக கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அபாயங்கள் பட மூலாதாரம்,COURTESY OF MIGRANTS IN DIEGO GARCIA படக்குறிப்பு,டியாகோ கார்சியாவில் புலம்பெயர்ந்தோர் முகாம் புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று அக்டோபர் 2021இல் ஒரு மீன்பிடிப் படகில் டியாகோ கார்சியா தீவுக்குள் நுழைந்தது. அவர்கள் தஞ்சம் கோருவதற்காக கனடாவுக்கு செல்ல முயன்றபோது,அவர்களது படகு டியாகோ கார்சியா அருகே சிக்கி கொண்டது. அதன் பிறகு அவர்கள் அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினர். கடந்த வியாழன் இரவு - நீதிபதி, பிரிட்டன் அரசு வழக்கறிஞர்கள், புலம்பெயர்ந்தோருக்கான பிரதிநிதிகள் மற்றும் பிபிசி பிரதிநிதிகள் ஆகியோர் விசாரணையில் கலந்துகொள்ள விமானத்தில் ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு - விசாரணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. புலம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் டியாகோ கார்சியாவின் பிற பகுதிகளை உள்ளடக்கிய விசாரணையில் பங்கேற்பதற்காக திட்டமிடப்பட்ட பயணத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்கா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. புலம்பெயர்ந்தவர்களில் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டிஷ் நிறுவனமான லீ டேயின் வழக்கறிஞரான டாம் ஷார்ட், ``விசாரணையை ரத்து செய்தது அங்கு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் எங்கள் வழக்குதாரர்களுக்கு ஒரு பேரழிவைத் தரும் செயல்பாடு” என்று கூறி, மீண்டும் வழக்கு விசாரணையைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டார். பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய செவ்வாயன்று மெய்நிகர் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. லண்டனில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் டியாகோ கார்சியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சர்ச்சைக்குரிய பிரதேசம் டியாகோ கார்சியா சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதி, இது 1965இல் பிரிட்டன் அரசு அதன் காலனியான மொரிஷியஸில் இருந்து தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது. பின்னர் ராணுவ தளத்தை அமைப்பதற்காக 1,000க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றியது. கடந்த 1966ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், 50 ஆண்டுகளுக்கு இப்பகுதியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தது. அதன் பின்னர் கூடுதலாக 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. பயோட் இணையதளத் தகவலின்படி, ஒப்பந்தம் 2016இல் நீட்டிக்கப்பட்டது மற்றும் 2036இல் காலாவதியாகிறது. இந்தப் பிரதேசம் லண்டனில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் பிரிட்டனில் இருந்து "அரசமைப்பு ரீதியாக வேறுபட்டது" என்று விவரிக்கப்படுகிறது. கடந்த 1968இல் சுதந்திரம் பெற்ற மொரிஷியஸ், இந்தப் பவளத் தீவு தனக்கு சொந்தமானது என்று கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நீதிமன்றம் "பிரிட்டனின் நிர்வாகம் சட்டவிரோதமானது. தீவில் அதன் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று தீர்ப்பளித்தது. அதே நேரம் டியாகோ கார்சியாவின் பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தங்குமிடம், போக்குவரத்து உணவகங்கள், கடைகள் என அனைத்தையும் நிர்வகிப்பது அமெரிக்காதான். பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்க ராணுவத்தால் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் மக்களை அனுமதிக்க அமெரிக்கா மறுத்து வருகிறது. அதிகாரப்பூர்வ பயோட் இணையதளம், "ராணுவ நிறுவல் அல்லது தீவின் அரசு நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு" மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. முக்கியமான போர் தளம் டியாகோ கார்சியா அமெரிக்காவின் முக்கியமான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான மூலோபாய தளமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பி-52 குண்டுவீச்சு விமானங்கள் பயிற்சிக்காக டியாகோ கார்சியா பகுதிக்கு அனுப்பப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் மீது குண்டு வீசுவதற்காக அமெரிக்க விமானங்கள் இந்தத் தளத்திலிருந்துதான் புறப்பட்டுச் சென்றன. கடந்த 2002ஆம் ஆண்டில் குறைவான சட்டக் கட்டுப்பாடுகளுடன் பயங்கரவாத குற்றங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரகசிய `ரெண்டிஷன் விமானங்கள்’ (rendition flights) நாட்டில் தரையிறக்கப்பட்டதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் டியாகோ கார்சியாவில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப் படுபவர்களுக்கு அடைக்கலம் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக் ஹைடன் மறுத்துள்ளார். புலம்பெயர்ந்தோர் முகாம் பட மூலாதாரம்,COURTESY OF MIGRANTS IN DIEGO GARCIA படக்குறிப்பு,புலம்பெயர்ந்தோர் தீவுக்குள் வருவதற்கு முன்பு படகில் எடுத்துக்கொண்ட புகைப்படம். கடந்த 2021 அக்டோபரில் 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இந்தத் தீவில் தரையிறங்கினர். இந்த பிரிட்டிஷ் பிரதேசத்தில் புகலிட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த முதல் மக்கள் குழு அவர்கள்தான். குறைந்தபட்சம் 16 குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் இங்கு தங்கியுள்ளனர். இங்கு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பல்வேறு சிக்கலான சட்ட மோதல்கள் நடந்து வருகின்றன. தனியார் பாதுகாப்பு நிறுவனமான `G4S’ இன் கண்காணிப்பின் கீழ் வேலி அமைக்கப்பட்ட முகாமுக்குள், அவர்கள் கூடாரங்களில் தங்கியுள்ளனர். இந்தத் தீவில் பல தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பதாகவும் முகாம்களுக்குள் புலம்பெயர் மக்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. சில புலம்பெயர்ந்தோர் தற்கொலை முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் "பாதுகாப்பான மூன்றாம் நாட்டில்" (safe third country) மீள்குடியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர். 'கூண்டுக் கிளிகள்' போன்ற முகாம் வாழ்க்கை கடந்த ஆண்டு இறுதியில் ஐநா குழு இந்த முகாமுக்குச் சென்று ஆய்வு செய்தது. ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்குள்ள நிலைமைகள் சிறைவாசத்திற்குச் சமம் என்று கருதினர். பிபிசி உடனான நேர்காணல்களில், புலம்பெயர்ந்தோர் அந்தத் தீவின் நிலைமைகளை ``நரகம் போன்றது’’ என்று விவரித்துள்ளனர். "நாங்கள் ஒரு கூண்டுக் கிளிகளாக அடைப்பட்டு இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு முகாமில் தங்கியிருக்கும் ஒருவர் கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை நடந்த மெய்நிகர் விசாரணையின் போது, தீவிலுள்ள முகாமில் வசிக்கும் ஒருவர் மயங்கி சரிந்து விழுந்தார். பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் முன்பு பிபிசியிடம் இந்தப் பகுதி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று கூறியது. மேலும் "புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும், விண்ணப்பங்கள் ஏற்கப்படுபவர்களுக்குப் பொருத்தமான மூன்றாவது நாட்டைக் கண்டறியவும் அயராது உழைத்து வருவதாகவும்" கூறியது. "பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் புலம்பெயர்ந்தோரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமை," என்றும் அவர் கூறினார். கூடுதல் தகவல்கள்: சுவாமிநாதன் நடராஜன் https://www.bbc.com/tamil/articles/c3gd1plkv33o
  10. Published By: DIGITAL DESK 7 12 JUL, 2024 | 12:43 PM இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் இதுவரை காணப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது. இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும். இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டுள்ளது. எனவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சை பிரிவு சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவால் எதிர்வரும் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/188282
  11. பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு,ஜொனாதன் ஜேகப் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவன் மாக்கென்டோஷ் பதவி, சினிமா செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சில குடும்பங்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறும் அதே வேளையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறுகிறார். இங்கு நாம் பேசுவது ஜொனாதன் ஜேகப் மெய்ஜேர் பற்றித்தான். கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானம் செய்யக்கூடாது என்று 2017ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது 43 வயதான இவர் வெளிச்சத்திற்கு வந்தார். நெதர்லாந்தில் விந்தணு தானம் செய்பவர்கள், 25 குழந்தைகளின் பிறப்புகளில் மட்டுமே பங்கு வகிக்கும் வகையில் சட்ட விதி அமலில் உள்ளது. ஆனால், அந்நாட்டில் மட்டும் 100 குழந்தைகள் பிறப்பதற்கு ஜொனாதன் 'பங்காற்றினார்' என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட 'குற்றச்சாட்டு'. மறுபுறம் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தான் விந்தணுக்களை தானம் செய்த காரணத்தால் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஜொனாதன் கூறுகிறார். கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை என்று தகவல் வெளியானபோது ஜொனாதன் விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. ஜொனாதன் தொடர்ந்து விந்தணுக்களை விற்றார் என்றும் அந்த ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 1,000 குழந்தைகளின் பிறப்பில் அவர் 'பங்களித்தார்' என்றும் டச்சு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த காலத்தில் எத்தனை குழந்தைகளின் கரு உருவாக விந்தணுக்களை அவர் தானம் செய்துள்ளார் என்பது பற்றிய தகவல்களைப் பொறுத்தவரை, நூற்றுக்கணக்கான குடும்பங்களிடம் தெரிந்தே பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெதர்லாந்தில் ஒருவர் 25 குழந்தைகள் பிறப்பதற்காக மட்டுமே விந்தணு தானம் செய்ய முடியும். சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான புதிய ஆவணத் தொடரில், ஜொனாதனின் விந்தணுவைப் பயன்படுத்திய பல பெண்கள் இந்த விஷயத்தில் தங்கள் தரப்பை முன்வைத்துள்ளனர். ஜொனாதனின் தந்திரம் எப்படி பிடிபட்டது என்பதை இந்தப் பெண்கள் ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஜொனாதனுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பதைக் கண்டுபிடித்த பிறகு தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக அந்தப் பெண்களில் ஒருவர் கூறினார். தான் மிக வருத்தமாகவும் கோபமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜொனாதன் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத் தொடரில் பங்கேற்க மறுத்துவிட்டார். ஆனால் ’தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை’ பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் நிராகரித்தார். ’தனது விந்தணுவைப் பெற்றதன் காரணமாகப் பலர் மகிழ்ச்சியாக உள்ளனர்' என்று கூறி அவர் தனது செயலை நியாப்படுத்தினார். ஜொனாதனின் விந்தணு தானம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜொனாதன் ஜேக்கப்பின் விந்தணு தானத்தால் சுமார் 1,000 குழந்தைகள் பிறந்ததாக நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜொனாதன் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக விந்தணுக்களை தானம் செய்து வந்தார். பல நேரங்களில் அவர் ரகசியமாக இதைச் செய்தார். கருவுறுதல் கிளினிக்குகளுக்கு செல்வதற்குப் பதிலாக விந்தணுவுக்கான தேடலில் உள்ள குடும்பங்களை நேரடியாகத் தொடர்புகொண்டார். நெதர்லாந்தில் அவர் 102 குழந்தைகளின் பிறப்புக்குப் பங்களித்தார். இதற்காக 11 கருத்தரிப்பு கிளினிக்குகள் அவரிடம் இருந்து விந்தணு தானம் பெற்றன. 2017ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் அவர் விந்தணு தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர் 2023ஆம் ஆண்டு வரை தனது விந்தணுக்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதைத் தொடர்ந்தார். அதே ஆண்டில் ஒரு பெண்மணியும், அமைப்பு ஒன்றும் அவருக்கு எதிராக சிவில் வழக்கு பதிவு செய்தது. ஜொனாதனின் இந்த நடவடிக்கையானது தங்கள் குழந்தைகளுக்கு ’இன்ஸெஸ்ட்’ (உறவினர்களுக்கு இடையிலான பாலியல் தொடர்பு) அபாயத்தை அதிகரித்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், 550 முதல் 600 குழந்தைகள் பிறந்ததற்குத் தானே காரணம் என்று ஜொனாதன் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் ஜொனாதனுக்கு பல துணைக் கண்டங்களில் சுமார் ஆயிரம் குழந்தைகள் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது. ஜொனாதனின் வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மேலும் பெற்றோர்களுக்கு விந்தணு தானம் செய்யத் தடை விதித்தார். ஒவ்வொரு விந்தணு தானத்திற்கும் அவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 'தி மேன் வித் 1000 கிட்ஸ்' பட மூலாதாரம்,NETFLIX நெட்ஃப்ளிக்ஸில் அவர் குறித்து வெளியாகியுள்ள ஆவணத் தொடரின் தலைப்பு 'தி மேன் வித் 1000 கிட்ஸ் (The Man with 1000 Kids)'. தங்களுக்கு விந்தணு தானம் செய்த ஜொனாதன் ஜேக்கப்பிற்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருப்பதைத் தெரிந்துகொண்ட குடும்பங்கள் மற்றும் பெண்களின் நேர்காணல்கள் இந்த ஆவணப்படத்தில் உள்ளன. விந்தணுவை தானம் செய்யும்போது ஜொனாதன் தங்களிடம் இருந்து இந்தத் தகவலை மறைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். "விந்தணுவை தானம் செய்யும்போது ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரை விந்தணு தானம் செய்ததாக அவர் கூறினார். எனவே இப்போது நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்" என்று ஒரு பெண் குறிப்பிட்டார். நதாலி என்ற அந்தப் பெண் பிபிசியிடமும் பேசினார். தனது டோனர் என்ன செய்தார் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாக அவர் கூறினார். "என் மிகப்பெரிய கவலை என்னவென்றால் இந்தக் குழந்தைகள் ஒரு நாள் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கக்கூடும். மேலும் தாங்கள் ஒரே டோனர் மூலம் பிறந்தவர்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்," என்று நதாலி குறிப்பிட்டார். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத்தொடர் தனது விந்தணு தானத்தில் மகிழ்ச்சி அடையாதவர்களின் கதையில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறும் ஜொனாதன், தன் மீது நன்றியுடன் இருக்கும் பல குடும்பங்களை இந்த ஆவணத்தொடர் புறந்தள்ளியுள்ளதாகவும் கூறுகிறார். பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு,ஜொனாதன் தானம் செய்த விந்தணு மூலம் கருத்தரித்த பெண்களில் சூசன் (இடது), நதாலி ஆகியோரும் அடங்குவர். ”ஆவணத் தொடருக்கு 'தி மேன் வித் 1000 கிட்ஸ் (The Man with 1000 Kids)' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் ’550 குழந்தைகள் கருத்தரிக்கப் பல குடும்பங்களுக்கு விந்தணு தானம் செய்து உதவியவர்' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்லி வந்திருக்கிறார்கள், வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள்,” என்று ஜொனாதன் பிபிசியிடம் கூறினார். நூற்றுக்கணக்கான குழந்தைகளை உருவாக்க உதவிய விந்தணு தானத்தில் "எந்தத் தவறும் இருப்பதாக” தான் கருதவில்லை என்றும் ஜொனாதன் பிபிசியிடம் கூறினார். தனது விந்தணுவில் இருந்து பிறந்த குழந்தைகளிடையே பாலியல் தொடர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் மறுக்கிறார். ஏனெனில் தனது அடையாளத்தைத் தாம் ஒருபோதும் மறைத்ததில்லை என்று அவர் தெரிவித்தார். "இப்போது மலிவான விலையில் டிஎன்ஏ சோதனைக் கருவிகள் கிடைக்கின்றன. என் ரெக்கார்ட் டிஎன்ஏ தரவுத் தளத்தில் உள்ளது. அதனால் யார் வேண்டுமானாலும் என்னைக் கண்டுபிடிக்க முடியும்," என்று அவர் கூறுகிறார். நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்கு தொடரப் போவதாக ஜொனாதன் கூறியுள்ளார். ஜொனாதனின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க நெட்ஃப்ளிக்ஸ் மறுத்துவிட்டது. இந்த ஆவணப்படத்திற்காக தான் நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததாகவும், பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுடன் பேசியதாகவும் இந்தத் தொடரின் நிர்வாகத் தயாரிப்பாளரான நதாலி ஹில் கூறினார். "ஐம்பது குடும்பங்கள் அவரது பொய்கள் குறித்து நீதிமன்றத்தில் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்களை அளித்துள்ளன. ஜொனாதன் விந்தணு தானம் செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று நீதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜொனாதன் தரப்பை ஆவணப்படத்தில் சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று நதாலி குறிப்பிட்டார். (இந்தக் கட்டுரை பிபிசியின் ஸ்பானிஷ் மொழி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.) https://www.bbc.com/tamil/articles/c2x0r08n8e8o
  12. Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 09:43 AM வேலை நிறுத்தம் நேற்று வியாழக்கிழமை (11) இரவு முதல் கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னரே ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சில ரயில் கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் நிலைய அதிபர்கள் வேலைக்கு திரும்ப வேண்டியுள்ளதாகவும், பல ரயில்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, நண்பகல் 12 மணிக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/188268
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் சமீபத்திய அறிக்கை உலக மக்கள் தொகையானது 820 கோடியில் இருந்து 1030 கோடியை அடையும் என்று கணித்துள்ளது. வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் (World Population Prospects) என்ற தலைப்பில் உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2080ம் ஆண்டு மக்கள் தொகை உச்சத்தை தொட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளது. இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.4 ஆண்டுகள் அதிகம் என்றும் குறிப்பிடட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் வெளியிடும் உலக மக்கள் தொகை தரவு, பிறப்பு - இறப்பு விகிதங்கள், மற்றும் மக்கள் தொகை சார்ந்த இதர கணக்கெடுப்புகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு அறிக்கையை தொடர்ச்சியாக, கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது ஐ.நா. ஆனால் ஐ.நா வெளியிடும் மக்கள் தொகை தொடர்பான தரவுகள் துல்லியமானதா என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை. துல்லியமில்லாத அறிவியல் நடைமுறை இந்த உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது என்பது துல்லியமற்ற அறிவியல் செயல்முறை என்று விளக்கமளிக்கிறார் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் ஜாகுப் பிஜாக். மக்கள் தொகை ஆய்வுகளில் பயிற்சிபெற்ற பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான பிஜாக், சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். கணிக்கப்படும் எண்கள் நிச்சயமற்ற தன்மையை கொண்டிருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்று சுட்டிக்காட்டுகிறார் பிஜாக். "நாம் மாயாஜால பந்தை வைத்து இதைக் கணிப்பதில்லை," என்கிறார் வாஷிங்டன் டிசியில் உள்ள பாப்புலேஷன் ரெஃபெரன்ஸ் பீரோ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் தொஷிகோ கனேடா. அதே சமயத்தில் எந்த பணியும் செய்யாமல் வெறுமனே மக்கள் தொகை இவ்வளவு இருக்கும் என கணிக்கிறார்கள் என்றும் நாம் அர்த்தம் கொள்ளக் கூடாது என்கிறார் டாக்டர் கனேடா. எங்களின் அறிவு, அனுபவம், கைவசம் இருக்கும் தரவு என அனைத்தின் அடிப்படையில் தான் இந்த முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இது ஒரு சவாலான பணி என்றும் மேற்கோள் காட்டுகிறார் டாக்டர் கனேடா. மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்பவர்களான டெமோகிராஃபர்கள் (Demographers) தொடர்ச்சியாக தங்களின் கணிப்புகளை புதுப்பித்து வருகின்றனர். உதாரணமாக, 2100-ன் மக்கள் தொகை பற்றிய கணிப்பை ஐ.நா தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த மதிப்பானது ஒரு தசாப்தத்திற்கு முன்பு நாம் கணித்த மக்கள் தொகையைக் காட்டிலும் 6 சதவீதம் குறைவாக உள்ளது. தரவுகள் இப்படி முன்னுக்குப் பின்னாக இருப்பினும் எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்க இந்த தரவுகளை அரசாங்கங்களும் கொள்கை அளவில் முடிவு எடுப்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES உலக அளவில் மக்கள் தொகை பரவவ்ல எப்படி உள்ளது? உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் ஏற்கனவே மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்கிறது வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் 2024. இருப்பினும் மக்கள் தொகை, 126 நாடுகளில் அடுத்த முப்பது ஆண்டுகள் வரை அதிகரிக்கும். ஏற்கனவே மக்கள் தொகையை அதிகமாக கொண்டுள்ள இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இதில் அடக்கம். கொரோனாவுக்கு பிறகு மக்களின் ஆயுட்காலம் மீண்டும் அதிகரித்துள்ளது என்பதையும் காட்டுகிறது இந்த அறிக்கை. உலக அளவில், இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 ஆண்டுகள் உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டு இருந்த சராசரி ஆயுட்காலத்தைக் காட்டிலும் 8.4 ஆண்டுகள் அதிகம். மேலும், இறப்பு விகிதம் குறைகின்ற போது, 2054ம் ஆண்டுவாக்கில் மனிதர்களின் ஆயுட்காலமானது 77.4 ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் ஐ.நா கணித்துள்ளது. புலம் பெயர்வதால் சில நாடுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை பட மூலாதாரம்,GETTY IMAGES உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அங்கோலா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, நைகர், சோமாலியா போன்ற நாடுகளில் அடுத்த முப்பது ஆண்டுகளில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாடுகளில் மக்கள் தொகை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நாவின் அறிக்கை, சில நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு புலம்பெயரும் மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறது. 19ம் நூற்றாண்டில் அதிக மக்கள் தொகை கொண்டிருந்த நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, ரஷ்யா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை மிக முன்னதாகவே உச்சத்தை அடைந்துவிட்டது என்றும், அதில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது அறிக்கை. சில நாடுகளில் நிலையான மக்கள் தொகை வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர்தல் நிகழ்வு 2054ம் ஆண்டுக்கு பிறகு உச்சத்தை தொடும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவற்றில் ஆஸ்திரேலியா, கனடா, கத்தார், சவுதி அரேபியா, அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும். மக்களின் புலப்பெயர்வு தற்போது அதிகரித்து வருகிறது என்று கூறும் பிஜாக், "புலம் பெயர்ந்தவர்கள் பற்றிய தரவுகள் அதிகம் இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மட்டுமே அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்," என்று கூறினார். வெகுசில நாடுகள் மட்டுமே கணக்கெடுப்புகள் அல்லது மக்கள்தொகை பதிவேடுகளைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளில் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. மேலும் சில நாடுகள் "அலைபேசி லொக்கேட்டர்கள் போன்ற மாற்று முறைகளை பயன்படுத்த முயல்கின்றன. ஆனால் இது செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு நன்றாக மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்தத் தரவை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்," என்கிறார் பிஜாக். கருவுறுதல் விகிதங்களை விட மிக வேகமாக மாறக்கூடியது என்பதால், இடம்பெயர்வு முறைகளை கண்காணித்தல் அவசியமாகிறது என்கிறார் டாக்டர் கனேடா. "கருவுறுதல் விகிதங்களை மிகக் குறைவாக கொண்டுள்ள நாடுகளில் கூட, அவ்விகிதம் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அவ்வளவு வேகமாக அத்தகைய மாற்றங்கள் அரங்கேறாது. ஆனால் புலம் பெயர்தல் அப்படி இல்லை. போர் அல்லது இயற்கை சீற்றங்கள் காரணமாக ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்," என்றும் கூறுகிறார் கனேடா. ஆனால், சர்வதேச அளவில் நடைபெறும் புலம்பெயர்வு நிகழ்வை எளிமையான காரணியாக பார்க்கக் கூடாது என்கிறார் கிளேர் மெனோசி. அவர் ஐ.நா.வின் மக்கள்தொகைப் பிரிவின் மக்கள்தொகைப் பகுப்பாய்வுதுறை தலைவராக பணியாற்றுகிறார். உலகளாவிய அதே நேரத்தில் ஈடுகட்ட முடியாத மக்கள்தொகை மாற்றத்திற்கு ஒற்றை காரணமாக, மக்கள் தொகை சரிவையோ, மக்கள் தொகையின் நீண்ட ஆயுட்காலத்தையோ முன் வைக்க இயலாது என்கிறார் அவர். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் முக்கியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கொள்கையை அறிவிக்கவும், வகுக்கவும் மக்கள் தொகையை கணக்கெடுக்கும் செயல்பாடானது வரலாற்றில் வெகு காலமாக நடந்து வருகிறது. டெமோகிராஃபர்கள் இந்த நடைமுறை குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயலில் உள்ளது என்று நம்புகின்றனர். இன்று ஈராக்காக இருக்கும் அன்றைய மெசபடோமியாவில் பாபிலோனியன் அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நம்பப்படுகிறது. மக்கள் தொகையை கணக்கெடுக்கும் நுட்பம் வெகுதூரம் வந்துவிட்டது. ஆனால் டெமோகிராஃபர்களின் வேலை தான் எளிமையானதாக இன்றும் மாறவில்லை. மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, அரசாஙம் மீது குறைந்து வரும் நம்பிக்கை, தனியுரிமை பற்றிய கவலை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று டாக்டர் கனேடா கூறுகிறார். வளர்ந்த நாடுகளில் தரவு சேகரிப்பு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் டாக்டர் கனேடா. மக்கள்தொகை தரவுகளை சேகரிப்பதற்கான செலவு ஏழை , நடுத்தர நாடுகளுக்கு இன்னும் சவாலாக உள்ளது. இருப்பினும், தரவுகளை வலுப்படுத்த முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் 32 டாலர் மதிப்பிலான பொருளாதார நன்மைகளை வழங்குகிறது என்று ஐ.நா கூறுகிறது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் இருந்து தரவுகளை சேகரிக்க முன்னுரிமை அளிக்கவேண்டுமென வலியுறுத்துகிறது ஐ.நா. உதாரணமாக, இளம் தாய்மார்கள் (வயது 15-19) பற்றிய குறைவான தரவுகளைக் கொண்ட இடங்களில் தான் இளம்வயது பிரசவங்கள் பொதுவாக அதிகம் நடைபெறும் இடங்களாகும்," என்று மேற்கோள்காட்டுகிறது ஐ.நா. அதிகாரப்பூர்வ ஐ.நாவின் மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின் 28வது பதிப்பு தான் சமீபத்திய வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் அறிக்கை. 1950-2023 ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட 1,700-க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளிலிருந்தும், முக்கிய பதிவுகள் மற்றும் 2,890 தேசிய பிரதிநிதித்துவ மாதிரி ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட்ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவாலியூஷன் (Institute of Health Metrics and Evaluation (IHME)) மற்றும் வியன்னாவில் உள்ள IIASA-Wittgenstein மையம் ஆகியவை உலக மக்கள்தொகை கணிப்புகளை தயாரித்து வெளியிடும் இரண்டு இதர முக்கிய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cne41e388x1o
  14. Published By: VISHNU 12 JUL, 2024 | 01:56 AM வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளுக்கு வியாழக்கிழமை (11) விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பர்வையிட்டு கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் உள்ள 9 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்தேன். வெலிக்கடையில் தங்கவேலு நிமலன் (47)ஜோ.கொ.வலன்ரினோ (41)மகசீன் சிறையில் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) கடந்த மார்ச் 26இல் கைது) மகசீன் சிறையில் 15 - 29 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரன் ஆகியோரைப் பார்வையிட்டேன். அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கைகளும் அக்கறையுடன் முன்னெடுக்கப்படவில்லை என்ற கவலை அவர்களுக்கு அதிகமாக உள்ளது. எம்மைப்பொறுத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அதன்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். ஆனந்தவர்ணன் வழக்கினை முன்னெடுக்க முடியாத நிலைமையில் உள்ளார். அவர் வேண்டுமென்றே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்டவர்களின் விடுதலைக்காக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/188263
  15. Published By: VISHNU 12 JUL, 2024 | 01:51 AM (நா.தனுஜா) காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதே வேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தின் அழைப்பின்பேரில் தூதுவர் ஜுலி சங்குக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (11) மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் அதன் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த மற்றும் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்த அலுவலக அதிகாரிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இருதரப்புப் பங்காண்மை மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து விரிவாக ஆராய்ந்தனர். அதே போன்று மனிதப்புதைகுழி அகழ்வு உள்ளடங்கலாக காணாமல்போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் மனித எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய அவசியமிருப்பதனால், இவ்வனைத்து செயன்முறைகளுக்கும் அமெரிக்காவின் நிதி, தரவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதேவேளை காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனும் தனது நிலைப்பாட்டை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர், 'காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதற்கான பதிலையும், ஆறுதலையும் வழங்குவதற்கு முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188262
  16. ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடந்தே ஆகும்; அமைச்சர் அலி சப்ரி சபையில் உறுதி Published By: VISHNU 12 JUL, 2024 | 01:41 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் 1931ஆம் ஆண்டில் இருந்து சர்வஜன வாக்குரிமையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் நாடாகும். உரிய காலத்தில் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தடவை மட்டுமே உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படவில்லை. 1981ஆம் ஆண்டிலேயே தேர்தல் நடத்தப்படாது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. எனினும் 83 (ஆ) சரத்தில் அது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. அதனை மாற்றுவதற்காகவே அமைச்சரவையில் யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடக்கும். தற்போதைய ஜனாதிபதிக்கு முன்னால் செல்ல முடியும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. அவர் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை முன்வைப்போம். அவர் வேண்டுமா என்று மக்கள் தீர்மானிப்பர். இல்லாவிட்டால் பதவியில் இருக்க மாட்டார். நாங்கள் தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம். நாங்கள் தேர்தலுக்கு பயப்பட வேண்டிய எந்தக் காரணமும் கிடையாது. வரிசை யுகத்தை இல்லாது செய்துள்ளோம். 24 மணிநேரமும் மின் விநியோகத்தை வழங்குகிறோம். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். டொலர் இருப்பை அதிகரித்துள்ளோம். இதனால் தேர்தலுக்கு அஞ்சவில்லை. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்றார். https://www.virakesari.lk/article/188261
  17. Published By: DIGITAL DESK 7 12 JUL, 2024 | 11:51 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் வந்து, இரத்த தானம் வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/188277
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனா ஃபாகுய் & கிறிஸ்டல் ஹேய்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 12 ஜூலை 2024, 08:31 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வயது மற்றும் மனநலம் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வயது 81. அவருக்கு எதிராகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் வயது 78. கடந்த மாதம் பைடன் நடத்திய மிகவும் பலவீனமான விவாத நிகழ்வு, இந்த விவகாரத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக இருக்கிறார் பைடன். தற்போது டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இரண்டாவது வயதான அதிபராக அறியப்படுவார். அறிவாற்றல் பரிசோதனை எனப்படும் காக்னிடிவ் சோதனையை மேற்கொள்ள மறுப்பதாக ஏ.பி.சி. நியூஸின் நேர்காணலில் பேசிய பைடன், தினம் தினம் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாகவும், அவரின் மருத்துவர்கள் மேலும் ஒரு சோதனை தேவையில்லை எனப் பரிந்துரை செய்ததாகவும் குறிப்பிட்டார். டிரம்போ அதிபர் பதவியில் இருந்த போது, மிக சமீபத்தில் என இரண்டு முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அதில் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் கூறினார். அறிவாற்றல் சோதனை என்றால் என்ன? அது எதற்காகச் செய்யப்படுகிறது? அது எவ்வளவு கடினமாக இருக்கும்? இங்கு விரிவாகக் காண்போம். அறிவாற்றல் தேர்வு என்ன செய்யும்? மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ளப் பல்வேறு சோதனைகள் இருக்கின்றன. இவை குறிப்பிட்ட நோய்களைக் கண்டறியாது. ஆனால், நோய் அறிதலுக்கு மேலும் பல பரிசோதனைகள் தேவையா இல்லையா என்பதை உறுதி செய்ய உதவும் என்கிறது க்ளீவ்லாண்ட் கிளினிக். இந்த அறிவாற்றல் பரிசோதனைகளை யாருக்குப் பரிந்துரைக்கலாம்? பொதுவாக நினைவாற்றல், தனிமனித செயல்பாடுகளில் மாற்றங்கள் அல்லது சமநிலையாகச் செயல்படுவதில் ஒருவர் பிரச்னைகளைச் சந்திக்கும் பட்சத்தில் கடந்த காலத்தின் சில பகுதிகளை மறந்துவிடும் பட்சத்தில் அல்லது, ஒரு தகவலைப் புரிந்துகொள்வதில் சவால்களைச் சந்திக்கும் பட்சத்தில் இத்தகைய பரிசோதனைகளை பரிந்துரை செய்யலாம். மான்ட்ரியல் காக்னிடிவ் அசெஸ்மெண்ட் (Montreal Cognitive Assessment (MoCA)) என்ற சோதனை பரவலாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்துப்படி இது சந்தேகத்திற்குரிய குறைபாடுகளைக் கொண்டிருக்கும் மக்களின் அறிவாற்றல் திறனை விரைவாகச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் பரிசோதனை ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தச் சோதனை ஒருவரின் நோக்குநிலை, நினைவு, கவனம் மற்றும் பொருள்களுக்குப் பெயரிடும் திறன், வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட வாசகங்களைப் பின்பற்றுதல் போன்றவற்றை மதிப்பிடுகிறது. இத்தகைய சோதனைகளை நீங்கள் ஆன்லைனிலும் செய்து கொள்ளலாம். அறிவாற்றல் குறைகள் இல்லாத நபர்களுக்கு இது மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும். ஆனால் மனநலம் குறையத் துவங்கும் நபர்களுக்கு இந்தச் சோதனைகள் மிகவும் கடினமானதாக இருக்கலாம். இந்தச் சோதனைகளைக் கண்டறிந்த கனடாவை சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஜியாத் நஸ்ரெதின், இது அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அதே நேரத்தில் குறைபாடுகள் இருந்தால் அதையும் கண்டறிய முடியும் என்பதால் பைடன் இந்தச் சோதனையை மேற்கொள்வது நல்லது என்று பிபிசியிடம் கூறினார். அறிவாற்றல் சோதனை எப்படி இருக்கும்? கற்றல் மற்றும் நினைவாற்றல் தொடர்பான கேள்விகளை மருத்துவர்கள் நோயாளிடம் இந்தச் சோதனையின்போது கேட்பர். நீண்ட மருத்துவ மதிப்பீடு என்பது அறிவாற்றல் சோதனைகளுடன் உடல் மற்றும் நரம்பியல் சோதனைகள், நோயாளிகளின் ஆரோக்கிய பிரச்னை குறித்த முழு விவரங்களை உள்ளடக்கியது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் டேவிஸ் அல்சைமர்ஸ் நோய் ஆராய்ச்சி மையத்தின் இணை பேராசிரியர் டான் மங்கஸ், இந்த இரண்டாவது சோதனையானது பைடன் மற்றும் டிரம்பின் முழுமையான அறிவாற்றல் செயல்பாடுகள் குறித்த ஒரு முழுமையான தகவல்களை வழங்கும் எனக் குறிப்பிடுகிறார். முதலில் MoCA சோதனைகளைத்தான் மருத்துவர்கள் துவங்குவார்கள். அதன் முடிவுகள் சிறப்பானதாக இல்லாத பட்சத்தில் மிகவும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மிக நுட்பமான அந்தப் பரிசோதனைகளில் ஒருவரின் மொழி, செயல்படும் திறன், பார்வை மற்றும் இடம் சார்ந்த திறன்களை மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள். உதாரணத்திற்கு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கதைகளை வாசித்து அதில் வரும் பகுதிகள் பற்றிய கேள்விகளை எழுப்பி அவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைச் சோதிப்பார்கள். சில வார்த்தைப் பட்டியல்கள், படங்களில் உள்ள பொருட்களின் பெயர்கள், குறிப்பிட்ட எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் மற்றும் பொருட்களைக் கூறச் சொல்வார்கள். நோயாளிகளிடம் கேள்விகளைக் கேட்பது மட்டுமின்றி, நோயாளிகளிடம் அதிகமாகப் பேசும் நபர்களும் நோயாளிகள் அறிவாற்றலை இழக்கிறார்களா என்பதைக் கூற இயலும் என்று டாக்டர் மங்கஸ் பரிந்துரை செய்கிறார். குறிப்பிட்ட காலத்தில் நோயாளியின் அறிவாற்றலில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதையும் காண வேண்டும் எனக் கூறும் டாக்டர் மங்கஸ் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் மதிப்பீடானது தவறான பாதையில் இட்டுச் செல்லலாம் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவர் முன்பிருந்த அறிவாற்றலை இழக்க ஆரம்பித்திருக்கிறார் என்றால் அவர் முன்பு எந்த நிலையில் இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் மங்கஸ், அறிவாற்றல் சோதனை மட்டுமே அனைத்தையும் முடிவு செய்வதில்லை என்றும் குறிப்பிடுகிறார். "என்னுடைய காலம் முழுவதும் நான் அறிவாற்றல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். ஒரு சாதாரண அறிவாற்றல் பரிசோதனை முடிவுகள் மட்டுமே ஒருவர் நல்ல அதிபராக இருப்பதை முடிவு செய்ய இயலும் என்பது ஏற்புடையதாக இல்லை," என்று கூறுகிறார் அவர். பைடன், டிரம்பின் வயது இந்தப் பரிசோதனைகளில் தேர்ச்சி அடையும் வாய்ப்புகளை வழங்குகிறதா? சுமார் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, அவர்களின் அறிவாற்றலை அறிந்துகொள்ள இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்கிறது அமெரிக்க நரம்பியல் அகாடெமி. வயது அதிகரிக்க அதிகரிக்க குறைபாடுகளும் அதிகரிக்கும் என்று பிபிசியிடம் கூறுகிறார் டாக்டர் நஸ்ரிதீன். 75 வயதாகிறபோது, 25% நபர்களுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் அவர். "அறிவாற்றல் குறைபாடுகள் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் மக்கள் இந்தக் குறைபாடுகள் இருப்பதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி இருக்கின்றனர்" என்று கூறும் அவர் அதிபரைப் பார்க்கவும் இல்லை, அவருக்கு சிகிச்சையும் வழங்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில் பைடனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்ததாகக் கூறுகிறார் அவர். "மக்கள் சந்திப்பின்போது அவர் மெதுவாக நடக்கிறார். அவரின் பேச்சு குறைந்துவிட்டது. அவரின் குரல் மிகவும் பலவீனமாக உள்ளது. சில நேரங்களில் அவர் வார்த்தைகளை முணுமுணுக்கிறார்" என்கிறார் நஸ்ரிதீன். பைடனின் வயதில் யாரும் இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணியை மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடும் அவர், இந்த வயதில் ஒருவரின் இயல்பு நடவடிக்கைகளை விவரிப்பது கடினமான ஒன்றாக இருப்பதாகவும் கூறுகிறார். அதிபரின் இத்தகைய செயல்பாடுகள் சமீபத்தியதாகவே இருக்கின்றன என்று கூறும் அவர் இத்தனை ஆண்டுகளில் அவர் இப்படியாக இல்லை என்றும் குறிப்பிடுகிறார். இருப்பினும்கூட, பைடனை காட்டிலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறியவராக இருக்கும் டிரம்ப் மிகவும் வேகமாகச் செயல்படுவதாகவும் மேற்கோள் காட்டுகிறார் நஸ்ரிதீன். 25வது சட்ட திருத்தம்: அதிபருக்கு டிமென்சியா அல்லது அல்சைமர் நோய் இருந்தால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க அரசமைப்பின் சட்டத் திருத்தம் 25, ஒரு அதிபர் இறந்துவிட்டால் அவருக்குப் பின் அந்தப் பதவியை வகிப்பது யார், அதற்கான செயல்முறைகள் என்ன, அவர் தன் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. அதிபர் ஒருவர் தன்னுடைய பதவியில் இருந்து விலகும்போது, பணி நீக்கம் செய்யப்படும்போது, உயிரிழக்கும்போது அல்லது பணி செய்ய இயலாதபோது இந்தச் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தலாம். சமீபத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கும் இந்தச் சட்டத் திருத்தம் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலைக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டது. டிரம்ப் ஆட்சியின்போது, அமெரிக்க கூட்டாட்சி உறுப்பினர்கள், அதிபரின் உடல் தகுதியை உறுதி செய்ய மருத்துவக் குழு ஒன்றை உருவாக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தலைநகர் கலவரத்துக்குப் பிறகு இந்தத் தீர்மானத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் ஒப்புதல் வழங்கி, 25ஆம் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அன்றைய துணை அதிபராக இருந்த மைக் பென்சிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பைடனின் விவாத நிகழ்வில் ஏற்பட்ட தொய்வுக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பைடனின் அமைச்சரவையில் இருக்கும் நபர்களிடம் இந்தச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்தச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 4இன் படி, துணை அதிபரும், அமைச்சரவையின் பெரும்பான்மையினரும், அதிபர் அவருடைய பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனும் பட்சத்தில், துணை அதிபர் அதிபராகப் பதவி ஏற்கலாம். ஆனால், அறிவாற்றல் குறைவதைக் கருத்தில் கொண்டு இதுநாள் வரை இந்தச் சட்டதிருத்தம் பயன்படுத்தப்படவில்லை. https://www.bbc.com/tamil/articles/c047dxrej21o
  19. Published By: DIGITAL DESK 3 12 JUL, 2024 | 01:00 PM பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். அவற்றினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார். https://www.virakesari.lk/article/188295
  20. கிளிநொச்சியில் (Kilinochchi) 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டு நீர்பாசனமுறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுவரை காலமும் இறைப்பு முறை மூலம் நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மரக்கறிச் செய்கை இதனையடுத்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சாத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைமை மூலம் மரக்கறி செய்கைக்கு பயன்படுத்தப்படும் நீரை 90 வீதம் வரை மீதப்படுத்தலாம் எனவும், தேவையான பசளையை கரைசலாக நீருடன் சேர்த்து நீர் பாய்ச்சுவதனாலும், புற்கள் வளர்வதை தடுப்பதனாலும் செலவும் மீதப்படுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அரசகேசரி தெரிவிக்கின்றார். குறைந்த செலவில் உற்பத்தி குறைந்த செலவில் உற்பத்தி அத்தோடு, குறைந்த செலவில் அதிக உற்பத்தியை பெற முடியும் எனவும், மிக முக்கியமாக நீர் விரயமாவதையும், நீர் பாய்ச்சலுக்காக செலவிடும் நேரத்தையும் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை விவசாய திணைக்களத்தினரும் இன்று சென்று பார்வையிட்டுள்ளனர். https://ibctamil.com/article/good-news-for-farmers-from-jaffna-university-1720709331
  21. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு; மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு Published By: VISHNU 11 JUL, 2024 | 09:16 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஏழாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஏழாம்நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஜூலை.11 வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவதலைமையிலான குழுவினர் தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரால் பங்குபற்றுதல்களுடன் இந்த ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. அதேவேளை மூன்றாவது நாளாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின், மனித உரிமைகள் அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகளும் அகழ்வு பணிகளை கண்காணிப்புச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வாய்வுப்பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இவ்வாறு மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 43மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188257
  22. Published By: VISHNU 11 JUL, 2024 | 07:42 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, “போக்குவரத்துத் துறையில் செயல்திறனை உருவாக்க பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். இதேவேளை, கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2023 இல் 2214 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டும் கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை 1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது. அத்துடன், போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன், வீதி வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது. மேலும், பாடசாலை மட்டத்தில் வீதிப் பாதுகாப்பு கழகங்களை (Road Safety Club) நிறுவுவதற்கு தேவையான கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இணைச்செயற்பாடாக பாடசாலைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக பதக்கம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், புகையிரத பணிப்பகஷ்கரிப்பு தொடர்பான தீர்வுகளை வழங்குவதில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 05 வருடங்களுக்கு ஒருமுறை நிலைய அதிபர்களின் பதவி உயர்வுக்கு தேவையான அனுமதியை அரச சேவை ஆணைக்குழு ஏற்கனவே வழங்கியுள்ளது. அதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகஷ்கரிப்பு வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே என்பது தற்போதுது மக்களுக்கு தெளிவாகியுள்ளது. வேலைநிறுத்தங்கள் உண்மையான தொழிசங்க உரிமைகளுக்காக நடத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188255
  23. தேசம்நெற் ஜெயபாலன் முகப்புத்தகத்தில் நட்சத்திரன் செவ்விந்தியனின் பகிர்வைப் போட்டவர். அதில் நிறைய குற்றச்சாட்டுகளை ஆறு திருமுருகன் ஐயா மீதே வைக்கிறார்.
  24. 10 ஜூலை 2024 திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் சசிகாந்த் செந்தில். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன்னுடைய பணியை துவங்கிய அவர், 2019-ல் தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார். "பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள் சமரசம் செய்யப்படும் போது, அரசு அதிகாரியாக பணியை தொடர்வது நியாயமற்றது’’ என அப்போது அவர் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி நடத்திய பிரத்யேக நேர்காணலில் காங்கிரஸின் அரசியல், இந்தியா கூட்டணி, வெறுப்பு அரசியலுக்கு எதிரான கொள்கைப் போர், தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி குறித்து சசிகாந்த் செந்தில் விவரித்துள்ளார். அந்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இங்கே! மக்களை மதிக்கும் மனிதர் ராகுல் பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி : காங்கிரஸை வழிநடத்துவதற்கான முழுத் தகுதி ராகுல் காந்தியிடம் இருக்கிறதா? பதில்: முதலில் ஒருவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். மக்களைப் பற்றிய உணர்வு இல்லாதவர்கள் எப்படி தலைமையேற்று நடக்க முடியும்? (ராகுல்) மக்களை மதிக்கும் மனிதர். தலைவர் என்பதைக் காட்டிலும் தோழர் எனலாம். ராகுல் `இந்தியா’ என்னும் சிந்தனையை புரிந்து கொண்டவர். இந்த நாடு எத்தகைய அடிப்படை தத்துவத்தில் உள்ளது. இந்த நாட்டை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்தவர். பாரத் ஜோடோ யாத்திரைக்காக 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்தார். இன்றைய கால கட்டத்தில் எந்த தலைவர்கள் இப்படி நடந்தார்கள் என்று கூறுங்கள்? காங்கிரஸின் முக்கியமான ஆயுதமே நடைதான். கிராமம் கிராமமாக சென்று மக்களோடு இருந்து பழகுவதுதான் காங்கிரஸ். காங்கிரஸ் என்னும் உள்ளுணர்வுடன், தலைமையேற்று நடத்துகூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது ராகுல் காந்தி மட்டும்தான். கேள்வி : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் ஆற்றிய முதல் உரையில் இந்துக்கள் குறித்து அவர் பேசியது விவாதப் பொருளானது. முதல் உரையில் இது குறித்துதான் பேசியிருக்க வேண்டுமா? முக்கிய மக்கள் பிரச்னைகள் இல்லையா? படக்குறிப்பு,காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுடன் பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி நடத்திய நேர்காணல் பதில்: நாட்டில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்துகின்றனர். அதில் அரசியல் ஆதாயம் காண்கிறார்கள். தேர்தலில் வெற்றியடைகிறார்கள். வெற்றி பெற்று நீங்கள் பதவிகளை பெறலாம். ஆனால் சமுதாயத்தின் இழை உடைகிறது. என்னுடைய பக்கத்துவீட்டுக்காரர் என்னை எதிரியாக பார்க்கிறார். இந்த பொறி பற்ற வைக்கப்பட்டால் அதை யாராலும் நிறுத்த இயலாது. மணிப்பூர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இவர்களே (பாஜக) கொளுத்திப்போட்டார்கள். அதை இவர்களால் நிறுத்த முடியாது. அப்படி இருக்கும் போது எப்படி மனிதர்களின் உயிர்களையும், எதிர்காலத்தையும் மதிக்காமல் அவர்களால் அரசியல் செய்ய முடியும்? அதற்கு அவர் எடுத்துக்காட்டாக கூறிய விஷயத்தை மடைமாற்றிவிட்டனர். அவர் இந்துக்கள் என்று கூறவில்லை. இந்து மதம் மட்டுமல்ல அனைத்து மதமும் அமைதியையும் அகிம்சையையும் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. எந்த ஒரு இந்துவும், கிருஸ்தவரும் பிரச்சனைக்கு போவதில்லை. பிரச்சனைக்கு போவது பாஜக மட்டும்தான். அப்படி கருத்தில் கொண்டால், அவர்கள் இந்த மதத்திற்கு உண்மையாக இருக்கின்றார்களா என்ற கேள்வியைத்தான் அவர் எழுப்பினார். அதை அப்படியே மடை மாற்றி இந்துக்களுக்கு எதிராக ராகுல் பேசினார் என்றனர் அதற்கு அவர் பதிலும் கொடுத்தார். நீங்கள் (பாஜகவினர்) இந்துக்களுக்கு பிரதிநிதிகள் கிடையாது. இங்கு இருக்கும் நாங்களும் இந்துக்கள்தான். நாங்கள் இந்து மதமட்டுமல்ல, அனைத்து மதத்தையும் கொண்டாடும் நாட்டில் இருந்து வருகின்றோம். இதில் நீங்கள் (பாஜகவினர்) பிரித்து பேச வேண்டாம் என்று ராகுல் கூறினார். பாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல் அதுதான். குடியரசுத் தலைவரின் உரையை எடுத்து பாருங்கள். அதே பழைய பாட்டு தான்.. ராகம் தான். நான்கு வார்த்தைகள்தான், ’ஸ்டேன்டப் இந்தியா, சிட் அப் இந்தியா, ட்ரான்ஸ்ஃபார்ம், ரிஃபார்ம்’ என்று நகைச்சுவையாகிவிட்டது. என்னதான் செய்யப்போகிறீர்கள் நீங்கள்? வெறுப்பை வளர்ப்பதை தாண்டி, பயத்தை உருவாக்குவதை தாண்டி, நீங்கள் (பாஜகவினர்) என்னதான் செய்யப் போகிறீர்கள்? ராகுல் காந்தி செய்தது சரி தான்! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராகுல் காந்தி கேள்வி : ஒரு எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகர் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் விதம் போன்ற விவகாரங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டுமா? பதில்: பொதுவெளி விமர்சனம் என்பது நீங்கள் எதை காட்டுகிறீர்கள், கூறுகிறீர்கள் என்பதை பொறுத்துதான். நாடாளுமன்றம் அப்படி கிடையாது. அங்கே நிகழும் அனைத்தையும் பார்க்க வேண்டும். சன்சாத் டிவி என்று ஒன்று இருக்கிறது. எத்தனை முறை எதிர்க்கட்சியை காட்டுகிறது? எத்தனை முறை எதிர்கட்சியினரின் விவாதத்தை காட்டுகிறது? சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு அவைக்கு வந்த முதல்முறையே, பட்டியலில் இல்லாத விவகாரம் குறித்து அவர் (ஓம் பிர்லா) பேசினார். அவையில் அன்றைய நாளுக்கான நிரல் இருக்கும். என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்த பட்டியல் இருக்கும். அதன்படியே அவையின் பணிகள் துவங்கும். ஆனால் அவர் (ஓம் பிர்லா) யாருக்கும் தெரியாமல், ’அவசரகாலம்’ குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போகிறோம் என்கிறார். எதிர்க்கட்சியினருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் இது குறித்து ஆளும் கட்சியினருக்கு தெரிந்திருக்கிறது. இவையெல்லாம், ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் நிகழ்வு. உ.பி தேர்தல் முடிவுகளை யாருமே சரியாக கணிக்கவில்லை! பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி : கர்நாடகா, ராஜஸ்தானில் தேர்தல் யுக்திகளை வகுக்கும் காங்கிரஸ் அணியின் தலைவராக இருந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. அந்த வாக்குகள் எங்கே கை நழுவிப் போனது என்று நினைக்கிறீர்கள்? பதில்: பெரிய அளவில் போகவில்லை. கர்நாடகத்தை பொறுத்தவரை, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களை ஒப்பிட்டு பார்க்க கூடாது. அங்கே இந்துத்துவத்தை மிக தீவிரமாக பரப்பியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் அதை பார்த்தோம். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இவ்வாறு இருக்காது என்பது எங்களின் கணிப்பும் கூட. பயத்தையும், மக்களை மக்களிடம் இருந்து பிரிக்கும் அரசியலையும் செய்ய, மக்கள் பயத்தினால் அவர்களுக்கு வாக்களித்தார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைத்தது. இம்முறை நாங்கள் 12 - 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 9 இடங்களில் வெற்றி பெற்றோம். இது சாதாரண விஷயம் இல்லை. மதசார்பற்ற ஜனதா தளம் இடம் மாறியதும் இதற்கு காரணம். ஆனால் இதனை நான் பின்னடைவாக காணமாட்டேன். ராஜஸ்தானிலும் பெரிய அளவில் எங்களுக்கு பின்னடைவு கிடையாது. உ.பி முடிவுகளை யார் எதிர்பார்த்தது. நாங்கள் கூட சரியாக கணிக்கவில்லை. அப்படி இருக்கின்ற சூழலில், ஒடிஷாவைத் தவிர இந்தியா முழுவதும் மக்கள் பாஜகவைப் பற்றி புரிந்து கொண்டனர். மக்களை எவ்வளவு நாள்தான் ஏமாற்ற முடியும். எவ்வளவு நாள்தான் வெறுப்பை பரப்பிக் கொண்டே இருக்க முடியும். இந்த வெறுப்பு அரசியல், ஒரு மனநிலையில் இருந்து வருகிறது. அந்த மனநிலை நான் மேலே, நீ கீழே என்பதுதான். இந்து சமூகம்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்து சமூகத்தில் பெருவாரியாக இருக்கும் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த 50 ஆண்டுகளில், சமூக நீதியால், அரசியலமைப்பு சட்டத்தால் யார் முன்னேறியுள்ளார்களோ அவர்கள்தான் இதில் பாதிக்கப்பட கூடியவர்கள். நல்லதை பரப்புவதற்கும் கெட்டதை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசம் கேள்வி : இரண்டு முறை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும், காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 99. நரேந்திர மோதி என்ற பிம்பத்தை உடைக்கமுடியவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், அவர்களின் வெற்றியை சிறுமைப்படுத்தி, 90 இடங்களில் பெற்ற வெற்றியை பெரிய அளவில் கொண்டாடுகிறீர்களா? பதில்: நாங்கள் யாரை எதிர்த்து போட்டியிட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. சம்பளம் கொடுக்க காசில்லை. எந்த ஊடகங்களிலும் எங்களை காட்டவில்லை. எங்களின் எந்த வார்த்தையும் வெளியே போகவில்லை. எங்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது. நல்லதை பரப்புவதற்கும், கெட்டதை பரப்புவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் கெட்டதையும் பயத்தையும் பீதியையும் பரப்ப நினைக்கின்றார்கள். அது எளிமையாக பரவும். அதை எதிர்த்து போராடும் போது நாங்கள் பலமடங்கு வேலை செய்ய வேண்டியது இருக்கிறது. இப்படி இந்தியா முழுவதும் பணியாற்றியதால்தான் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. படக்குறிப்பு,சசிகாந்த் செந்தில் பேட்டி கேள்வி : காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி கட்சி என்று நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்திருக்கிறார் பிரதமர் மோதி. சொந்த காலில் நிற்கும் அளவிற்கு பலமில்லை. கூட்டணி கட்சிகளின் பலத்தில்தான் காங்கிரஸினர் வென்றுள்ளனர். இல்லையென்றால் இந்த வெற்றியும் இல்லை என கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்தார். இன்னும் காங்கிரஸ், தன்னுடைய கூட்டணி கட்சிகளை நம்பித்தான் இருக்கிறதா? அல்லது கூட்டணிக்கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறதா? பதில்: காங்கிரஸை பற்றி பிரதமர் இவ்வளவு பேச வேண்டிய அவசியம் என்ன? இன்று ஒரு கொள்கை போராட்டம் நடக்கிறது. பல கட்சிகள் மட்டுமின்றி, பல சமூக இயக்கங்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எங்களுடன் நிற்கின்றனர். அவர்கள் ஏன் நிற்க வேண்டும்? ஏன் என்றால் இது ஒரு கொள்கை போராட்டம். இந்த போராட்டத்தில் நீ எந்த கட்சி, நான் எந்த கட்சி என்பதெல்லாம் கிடையாது. கேள்வி : கொள்கைப் போராட்டம் என்றாலும் கூட, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் நிலைப்பாடும், டெல்லியில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருக்கிறது. இந்த ஒற்றுமை என்பது தற்காலிகமானதா? பதில்: இது தற்காலிகம் கிடையாது. இது ஒரு அரசியல் முதிர்ச்சி. நான் தமிழக காங்கிரஸில் இருக்கின்றேன். நான் அனைத்திந்திய காங்கிரஸின் அனைத்து முடிவுகளுடனும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன் என்றால் காங்கிரஸிலும் ஜனநாயகம் உண்டு. தமிழகத்திற்கு என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் செய்வோம். அது போல்தான் கூட்டணியினரும் அவர்கள் கட்சியில் அவர்களின் அரசியல் எதையோ அதை செய்யலாம். ஆனால் நாங்கள் யாரும் மக்களை மக்களிடம் இருந்து பிரிக்கும் அரசியலை செய்பவர்கள் இல்லை. Play video, "நரேந்திர மோதி பிம்பத்தை ராகுல் காந்தியால் உடைக்க முடியவில்லையா?", கால அளவு 22,14 22:14 காணொளிக் குறிப்பு,சசிகாந்த் செந்தில் எம்.பி நேர்காணலின் முதல் பாகம் தீய சக்தியாக பார்க்கப்படும் பா.ஜ.க கேள்வி : தமிழகத்தில் புதிய கட்சிகள் வந்த வண்ணம் உள்ளனர். விஜய்யின் புதிய கட்சி வந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்த்தை பெற கூடிய அளவிற்கு வாக்குகளை மக்களவை தேர்தலில் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் உள்ளது? பதில்: காங்கிரஸின் சித்தாந்தம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் கூட சிறிய சிறிய கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கட்டமைப்பாக ஒரு சில பணிகளை நாங்கள் செய்துதான் ஆக வேண்டும். அதற்காக நாங்கள் பல இடங்களுக்கு செல்ல வேண்டும், மக்களுடன் இருக்க வேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும். ஆனால் காங்கிரஸ் என்ற சித்தாந்தம் இந்த மண்ணை விட்டு மறையவே மறையாது. அது சமத்துவத்தை எதிர்த்து நிற்கும் நபர்களுடன் சண்டை போட நிற்கும். கட்சியில் நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றேன். வெறுப்பை மிக எளிதாக பரப்பிவிடலாம். ஆனால் அன்பையும் அரவணைப்பையும் பரப்ப வேண்டும் என்றால் நாங்கள் 10 மடங்கு வேலை செய்ய வேண்டும். கட்சியை தூக்கி நிறுத்த, அந்த காலகட்டத்தில் இளைஞர்களும் நல்லுள்ளங்களும் ஒன்று சேர்வார்கள். கேள்வி : காங்கிரஸை தூக்கி நிறுத்த உங்களைப் போன்ற இளம் தலைவர்கள் எப்போது முன்வர முடியும்? எந்தெந்த நடவடிக்கைகள் காங்கிரஸை முன்னிலைக்கு கொண்டுவரும்? பதில்: காங்கிரஸின் பேச்சே நடைதான். நாங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மக்களுடன் வாழ வேண்டும். காமராஜர் ஆட்சி காலம் குறித்து இன்றும் பேசுகிறார்கள் என்றால் அவர் அப்படி ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டினார். அப்படி மக்களை அணுகும் போதுதான் மக்கள் காங்கிரஸை சரியாக பார்ப்பார்கள். மக்களும் அதனை எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு ஒரு 10 வருடத்திற்கு முன்பு இருந்ததா என்று கேட்டால், அது சந்தேகம்தான். இன்று தமிழகத்தில், பாஜகவை மிகப்பெரிய தீய சக்தியாக மக்கள் பார்க்கின்றனர். அக்கட்சியை எதிர்த்து நிற்கும் முதல் கட்சியாக காங்கிரஸ் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். கேள்வி : நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றீர்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதே 10 இடங்களை கணக்கு வைத்து 60 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சியிடம் வலியுறுத்துவீர்களா? பதில்: அது குறித்து இப்போது ஏதும் தெரிவிக்கும் எண்ணம் இல்லை. அந்த காலகட்டத்தில் அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும். தமிழகத்தில் தலித்களின் நிலை எப்படி இருக்கிறது? கேள்வி : தமிழகத்தில் தலித்களின் நிலை எப்படி இருக்கிறது? பதில்: தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் தலித்களின் நிலை சரியாக இல்லை. என்னுடைய புரிதலின் படி, நாம் பிராமணியத்தை எதிர்த்துவிட்டோம். ஆனால் சாதியை எதிர்க்கவில்லை. சாதியை நாம் இன்னும் தூக்கி சுமந்து கொண்டுதான் இருக்கின்றோம். சாதிய கட்டமைப்பின் முழு வலியையும் தாங்குவது தலித் சமூகம்தான். அவர்களுக்கு பெரிய அளவில் விமோட்சனம் கிடைத்துவிட்டதாக கூற முடியாது. கேள்வி : சாதிய கட்டமைப்பை உடைபடும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? பதில்: நிச்சயமாக இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறாரே, சாதிய கட்டமைப்பு என்பது மதில் சுவர் கிடையாது. ஒவ்வொரு கல்லாக உடைப்பதற்கு. அது ஒரு சித்தாந்தம். ஒரு நிமிடத்தில் அதை யோசித்தால் உடைத்துவிடலாம். தேர்தல் லாபங்களுக்காக பாஜக போன்ற கட்சிகள் எண்ணெய் ஊற்றி வளர்க்கும் வேலையை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம். மெதுவாக பயணித்தாலும் அந்த பாதை சரியானதாகதான் இருக்கிறது. Play video, "முஸ்லிம்கள்தான் புதிய தலித்துகள்- சசிகாந்த் செந்தில் பேட்டி", கால அளவு 12,57 12:57 காணொளிக் குறிப்பு,சசிகாந்த் செந்தில் எம்.பி நேர்காணலின் இரண்டாம் பாகம் பாஜகவின் உண்மையான எதிரிகள் கேள்வி : ஒருபுறம் சாதிய கட்டமைப்பு ஒழிய வேண்டும் என்கிறீர்கள் மற்றொரு புறம் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை உள்ளது. இதை எப்படி புரிந்து கொள்வது? பதில்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்டவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகள் (Affirmative Actions) மூலமே சாதியை ஒழிக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என்பதை அறியத்தான். பாஜக ஏன் அதனை எதிர்க்கிறது. இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பால் பயனடைபவர்கள் யார்? இந்துக்கள்தான். இந்து மக்களுக்கு பலன் தரும் விசயத்தை பாஜக ஏன் எதிர்க்கிறது? அவர்கள் சாதிய கட்டமைப்பை விரும்பும் நபர்கள் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு இஸ்லாமியர்கள் எதிரிகள் கிடையாது. தேர்தல் ஆதாயங்களுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அவர்களின் (பாஜகவின்) உண்மையான எதிரிகள், நான்கு வர்ணங்களுக்குக்குள் வகைப்படாத அவர்னாக்கள்தான் (தலித்கள், பட்டியல் பழங்குடியினர்). அவர்கள் மேலே வந்துவிட்டார்கள் என்ற கோபம்தான். அவர்கள் நாம் எல்லாம் இந்துக்கள், அவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று 80:20 என்ற ஃபார்முலாவை தேர்தலுக்காக, வாக்குகளுக்காக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த 50 வருடங்களாக மக்களுக்கு சமத்துவத்தை கொடுத்த அரசியலமைப்புச்சட்டம் , இட ஒதுக்கீடு, சாதிக்கணக்கெடுப்பு என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதுதான் அவர்களின் வேலை. அந்த வேலையை முன்னின்று செய்பவர் யார் என்றால் மற்றொரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்தான். இந்த வகுப்பை சேர்ந்தவர் (மோதி) இந்த வகுப்பினருக்கு நலன் தரும் சாதிவாரி கணக்கெடுப்பை ஏன் எதிர்க்க வேண்டும்? இந்த கேள்வியை கேட்டாலே மக்களுக்கு புரிந்துவிடும். இவர்கள் யாரும் இந்துக்களுக்கான ஆட்கள் கிடையாது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ். இவர்களின் எண்ணமே ஒரு சாதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்,அதன் மேலே நாம் உக்காந்திருக்க வேண்டும், அந்த கட்டமைப்பில் கீழே வரும் அனைத்து மக்களிடம் இருந்து படிப்பை எடுக்க வேண்டும் என்பதுதான். நீட்டை ஏன் கொண்டு வருகிறார்கள்? ஏன் படிப்பை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஏன் பல்கலைக்கழகங்களை கையில் எடுக்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி : இஸ்லாமியர்களை ஏன் புது தலித்துகள் என்று குறிப்பிடுகிறீர்கள்? பதில்: சாதிய கட்டமைப்பில் முக்கியமான விசயங்கள் இருக்கின்றன. அதில் (மாற்று சாதியினருக்கு இடையேயான) திருமணங்களை, அன்பு பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும், சுத்தம் அசுத்தம் என்பவற்றை உருவாக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது. இவையெல்லாம்தான் சாதிய கட்டமைப்பை வலுவாக்குகின்றன. முன்பெல்லாம் இஸ்லாமியர்களை வேறு மதத்தினர் என்று கூறிவிடுவார்கள். ஆனால் தற்போது அவர்களை அசுத்தம் என்று சித்தகரிக்கின்றனர். (இஸ்லாமியர்கள்) கோவிட்டை பரப்புகின்றனர், இங்கே வியாபாரம் செய்யக்கூடாது, இவர்களை தொடக்கூடாது என்று பரப்பி தற்போது சாதிய கட்டமைப்புக்குள் கொண்டு வருகின்றனர். இதனால்தான் இஸ்லாமியர்களை புது தலித்துகள் என்று குறிப்பிடுகிறேன். பெண்களுக்கும் இத்தகைய கட்டமைப்பு இருக்கிறது. சுத்தம் அசுத்தம் என்றும், எப்படி வாழ வேண்டும், அவர்களின் பண்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சாதிய கட்டமைப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்று பாஜகவை எதிர்க்கும் முக்கிய கடமை பெண்களுக்கு இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த உடனே செய்து கொண்டிருக்கும் வேலை என்னவென்றால், 50 ஆண்டுகளாக பெண்கள் பெற்ற சுதந்திரத்தில் இருந்து பின்னோக்கி தள்ளுவதுதான். இவர்கள் (பாஜக) நம்மை பின்னோக்கி எடுத்துச் செல்லும் மன நிலை கொண்டவர்கள். கேள்வி : மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? பதில்: அது என்ன சட்டமென்று யாருக்குமே தெரியவில்லை. 150 எம்.பிக்களை அவையில் இருந்து வெளியேற்றிவிட்டு இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜூலையில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறீர்களே, அதை மக்களுக்கு தெரியப்படுத்த முயற்சிகளை ஏற்படுத்தியிருக்கிறீர்களா என்றால் கிடையாது. எதை கேட்பது, எதை விவாதிப்பது என்ற கொந்தளிப்பிலேயே இருக்கிறோம். மணிப்பூரைப் பற்றி பேசுவதா, நீட் குறித்து விவாதிப்பதா, இல்லை இந்த சட்டங்களைப் பற்றி கேள்விகள் கேட்பதா? இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/cevwd0nzvd0o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.