Everything posted by ஏராளன்
-
உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!
2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 8 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு 7 மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://thinakkural.lk/article/305491
-
தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது - பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை பட மூலாதாரம்,ANDRE PAIN/EPA-EFE/REX/SHUTTERSTOCK 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிக்குரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது. எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமைவதால், தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்) முன்னிலையில் இருந்த நிலையில், இறுதி முடிவில் இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. பிரான்ஸின் டிவி சேனல்களில், தேர்தல் முடிவுகளை காண்பித்தபோது, அதில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் மரைன் லே பென்னோ, அடுத்த பிரதமாவதற்கு காத்திருந்த அவரது கட்சியை சேர்ந்த ஜோர்டான் பர்டெல்லாவோ வெற்றியை கொண்டாடவில்லை. திடீர் திருப்பமாக, இடதுசாரி கூட்டணியே வெற்றியை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, தேசிய பேரணிக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது. தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர் என விமர்கர்களால் அழைக்கப்படும் மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் அதிக நேரம் காத்திருக்காமல் தங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் அணியாக உருவெடுத்துள்ளது. பட மூலாதாரம்,EPA ’’புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க அதிபர் அழைக்க வேண்டும்’’ என ஸ்டாலின்கிராட் சதுக்கத்தில் கட்சியின் ஆதரவாளர்களிடம் மெரான்ஷன் கூறினார். மேலும் தானும் தனது கூட்டணியும் தோல்வியடைந்ததை, அதிபர் எமானுவேல் மக்ரோங் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்த நிலையில், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகள் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை உருவாக்கின. ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமையவுள்ளது. 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 289 இடங்களைப் பெற்று, எந்த கூட்டணியும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி 168 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஒரு வாரத்திற்கு முன்பு வரை தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற பேச்சே இருந்தது. முதல் சுற்றுத் தேர்தலில் பெரும்பான்மையை நோக்கி தேசிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தது, ஆனால், இரண்டாவது மற்றும் இறுதிக் சுற்றில் அந்த கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா ஆகியோர் வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தங்கள் கட்சிக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். முடிவுகளை தைரியமாக எதிர்கொண்ட லே பென்,’’ இரண்டு வருடங்களுக்கு முன்பு நமக்கு 2 எம்.பிகள் மட்டுமே இருந்தனர். இன்று தேர்தலில் அதிக எம்.பிக்களை பெற்ற கட்சியாக உள்ளோம்’’ என கூறினார். கடந்த நாடாளுமன்றத்தில் 88 எம்.பி.க்களைக் கொண்டிருந்த தேசிய பேரணி கட்சி இப்போது 140க்கும் அதிகமான எம்.பி.க்களை பெற்றிருக்கிறது. லே பென் சொன்னதுபோல, இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியும் 100 இடங்களை தாண்டவில்லை. மக்ரோங் கட்சியும், பாப்புலர் ஃப்ரண்ட் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. இயற்கைக்கு மாறான "மரியாதையற்ற கூட்டணிகளால்" தனது கட்சி தோல்வியடைந்ததாக ஜோர்டான் பர்டெல்லா புகார் கூறினார். தற்போது வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை "குடியரசு முன்னணியின்" ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இடதுசாரிகளின் அடுத்த இடத்தில் இவர்கள் உள்ளனர். இதன் மூலம் தேசிய பேரணிக் கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றது. யாருக்கு எத்தனை இடம்? புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி- 182 மையவாத கூட்டணி- 168 தேசிய பேரணிக் கட்சி + கூட்டணி -143 குடியரசு + வலது- 60 பிற இடது- 13 பிற- 11 தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறை பிரான்ஸ் அரசியல் தற்போது நிலையற்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெருக்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாரிஸ் மற்றும் நான்டெஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. தற்போது உள்ள முட்டுக்கட்டையான நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்ரோங் கட்சியைச் சேர்ந்த தற்போதைய கேப்ரியல் அட்டல் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்தவரே அடுத்த பிரதமாவார் என மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cw5y7ryx7v0o
-
முடங்கிய மும்பை: 6 மணி நேரத்தில் 300 மிமீ மழைப் பதிவு!
08 JUL, 2024 | 11:14 AM மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 😎 காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில் கடந்த சனிக்கிழமை முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை பேருந்து சேவைகளும் முடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10 ஆம் தேதி வரை மழை தொடரவே செய்யும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முடங்கிய மும்பை: 6 மணி நேரத்தில் 300 மிமீ மழைப் பதிவு! | Virakesari.lk
-
தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது - பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி
Published By: RAJEEBAN 08 JUL, 2024 | 06:30 AM பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலாவது சுற்று தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதும் அதில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பிரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக தீவிரவலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சநிலை உருவானது. தீவிரவலதுசாரிகளின்ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது- பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி | Virakesari.lk
-
இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கர்ப்ப கால நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவ உலகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் இதய நோய்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் முன்பு கூறிவந்தனர். இந்நிலையில், இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இறப்பதைத் தடுக்கும் வகையில், இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தது. சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் 23 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்தின் போது இதய செயலிழப்பால் உயிரிழந்தார். முன் கூட்டியே அவர் இதய குறைபாட்டை கண்டறிந்திருந்தால் இறப்பை தடுத்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே கண்டறியப்படாத இத்தகைய இதய நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு ஐ.சி.எம்.ஆர்-யின் இந்த ஆராய்ச்சி உதவும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதில், கர்ப்ப காலத்தில் இதய நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுத்தல், முன்கூட்டியே இதய நோய்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை ஆராயப்பட உள்ளது. கர்ப்ப கால இறப்புகளை தடுக்க இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானதாக கருதப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கர்ப்பிணி பெண்கள் இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிவது எப்படி, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன என்பன குறித்து, சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழிடம் பேசினார். “முன்பு தீவிரமான இதய நோய்கள் உள்ளவர்கள், பின்னாளில் வளர்ந்து கருத்தரிப்பது மிகவும் கடினம். மருத்துவ துறையின் வளர்ச்சியால் இதய நோய்கள் உள்ளவர்களும் கர்ப்பமடைகின்றனர். இதய நோய்கள் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்தை சிக்கலாக்குகின்றன” என தெரிவித்தார். பிறவியிலேயே ஏற்படும் இதய நோய்கள் குறித்துப் பேசிய மருத்துவர் சாந்தி, “இதயத்தின் சுவர்களுக்கிடையே குழந்தை பருவத்திலேயே சிலருக்கு ஓட்டை இருக்கும். இதுதவிர, மிக தீவிரமான இதய நோய்களும் உண்டு. சயனோசிஸ் பிரச்னை (ரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை) இருந்தால் உடல் நீலமாகிவிடும். இதனால், மூச்சுவிடுவது கூட சிரமமாகிவிடும்” என்றார். பிறவி இதய நோய்களை தவிர்த்து ருமாட்டிக் இதய நோய் என்பது மூட்டு வீங்கி அதனால் இதயத்தில் பாதிப்பு ஏற்படுவது என்கிறார் அவர். “12-13 வயதில் கூட இது ஏற்படலாம். இதனால் இதயத்தின் அயோடிக் வால்வு சுருங்குவது உள்ளிட்டவை ஏற்படும்” என்றார். கர்ப்பமாக உள்ள பெண்கள் இத்தகைய இதய நோய்களை முன்பே கண்டறிந்திருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பர் எனக்கூறும் அவர், ஆனால், பல சமயங்களில் கர்ப்பமாகும் போது மூச்சு வாங்குவது உள்ளிட்ட பிரச்னைகளுக்காக மருத்துவர்களிடம் சென்று பரிசோதிக்கும் போதுதான் இத்தகைய பிரச்னைகள் தெரியவரும் என்றார். கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் இப்பிரச்னைகளை தீவிரமாக்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார். சாதாரணமாகவே கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு இயற்கையாக உடலில் சில மாற்றங்கள் நிகழும். “அவற்றில், ரத்தத்தின் அளவு அதிகமாகும். உதாரணத்திற்கு, சாதாரணமாக 5 லிட்டர் என்றால், கர்ப்பிணிகளுக்கு 5.5 லிட்டர் இருக்கும். இதய துடிப்பு அதிகமாகுதல், ரத்த அழுத்தம் (5-10 மி.மீ அதிகமாகும்) ஆகியவற்றில் சிறிதாக மாற்றங்கள் இருக்கும். இத்தகைய பிரச்னைகள் கர்ப்பிணிகளிடையே வழக்கமானது என்பதால், இதய நோயாளிகளை கண்டுபிடிப்பது கடினம். அதனால், சென்னை மாதிரியான நகரங்களில் கர்ப்பிணிகளுக்கு எக்மோ, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்வது அரசு மருத்துவமனைகளிலேயே உண்டு” என்கிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். கர்ப்பிணிகள் இதய நோய்கள் உள்ளதை கண்டறிவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES அதிகமான அசதி, சிறிய வேலை செய்தாலே சோர்வு ஏற்படுதல் இருமல் நெஞ்சு வலி மூச்சு வாங்குதல் படுத்தால் மூச்சு வாங்குதல் இரவில் இருமல் இருமலில் லேசாக ரத்தம் வருதல் கால் வீங்குதல் நியூயார்க் இதய சங்கம் இந்த அறிகுறிகளை வகைப்படுத்தியுள்ளது. இந்த அறிகுறிகள் லேசாக இருந்தால் ஸ்டேஜ் 1, அன்றாட வேலைகளின் போது அறிகுறிகள் ஏற்பட்டால் ஸ்டேஜ் 2, எழுந்திருக்கவே முடியாமல் படுக்கையிலேயே கிடந்தால் ஸ்டேஜ் 3. “இதைவிட தீவிரமாக ஸ்டேஜ் 4 ஏற்பட்டால், கர்ப்பிணிகள் எந்த வாரமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். லேசாக இருந்தால் புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், மருத்துவர் சாந்தி. இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES இதய நோய் உள்ள கர்ப்பிணிகள் சாதாரண ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுக்கக் கூடாது. அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவக் கல்லூரிகளில் தான் தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவர், மருத்துவர்கள், இதய மருத்துவர் உள்ளிட்ட நிபுணர்கள் அங்கு இருக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதய நோய் இருக்கும் போது ரத்த சோகை இருக்கக் கூடாது. ரத்த சோகை இருந்தாலும் மூச்சு வாங்கும். இதனாலும் இதய துடிப்பு அதிகமாகும். இதனால் இதய நோய் தீவிரமாகும். எனவே, ரத்தசோகையை கட்டுப்படுத்த வேண்டும். காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனாலும் இதய படபடப்பு ஏற்படும். அதிகமாக உடற்பயிற்சி செய்வது, மாடிப்படி ஏறுவது கூடாது. அதிக வேலைகளை செய்யக் கூடாது. ஏனெனில் இது மிகவும் ஆபத்து நிறைந்த கர்ப்பமாகும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ரத்தப் பரிசோதனைகள், எக்மோ, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளை தவறாமல் எடுக்க வேண்டும், அதில் அலட்சியம் கூடாது. ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். புகைப் பழக்கம், மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். கர்ப்ப காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இதய நோயின் அறிகுறிகள் லேசாக தொடங்கி 32வது வாரத்தில் அதிகமாகும். ஏனெனில், 32ம் வாரத்தில் ரத்தத்தின் அளவு உச்சக்கட்டத்தை அடையும். அப்போது கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்காவிட்டால் இதயம் செயலிழந்து இறப்பு ஏற்படலாம். மிகவும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிடாமல் பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே சாப்பிட வேண்டும். சரிவிகித உணவை கடைபிடிக்க வேண்டும். கஷ்டப்பட்டு மலம் கழிக்கக் கூடாது. சுடுதண்ணீரை குடிக்க வேண்டும். பிரசவத்தின் போதும் அதற்கு பின்னரும் என்ன செய்ய வேண்டும்? கர்ப்பமாகி ஐந்து வாரங்கள், பிரசவத்திற்கு முன்பான ஐந்து வாரங்கள், பிரசவத்திற்கு பிறகு ஐந்து மணிநேரம், ஐந்து நாட்கள், ஐந்து வாரங்கள் மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். அவர்களின் நாப்கின் முதற்கொண்டு தனிநபர் சுகாதாரத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும். ஆபத்துகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES “சில குறிப்பிட்ட இதய நோய்களிலும் தீவிரமான இதய நோய்களில் மட்டுமே கர்ப்பத்தை தொடரக் கூடாது என்பதால், முன்பே கருக்கலைப்பு செய்ய வேண்டும். அதுவும் தாமதமாக வந்தால் கருக்கலைப்பு செய்ய முடியாது. கர்ப்பமாக இருக்கும்போது கூட இரண்டாம் மூன்று மாத காலத்தில் (second trimester) சில முக்கியமான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மற்றும் அவசர இதய அறுவை சிகிச்சைகளை செய்கின்றனர்” என்கிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். கர்ப்ப காலத்தில் இதய நோய் ஆபத்துகள் குறித்து சென்னையை சேர்ந்த மற்றொரு மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி கூறுகையில், “மைட்ரல் ஸ்டீனோசிஸ், ஏஎஸ்டி (ஏட்ரியல் செப்டல் குறைபாடு), விஎஸ்டி (வெண்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு) போன்ற இதய நோய்களுடன் சிலர் பிறப்பார்கள். ஏ.எஸ்.டி இருப்பவர்களுக்கு சுகப்பிரசவம் கூட ஆகியிருக்கிறது. ஆனால், வி.எஸ்.டி இருப்பவர்களுக்கு இதயத்தில் எவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என்றார். அதேபோன்று, மைட்ரல் ஸ்டீனோசிஸ் இருப்பவர்களுக்கு மைட்ரல் வால்வு சுருங்கியிருக்கும். முன்பே இதற்கு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஆபத்தில்லை எனக்கூறும் மருத்துவர் நித்யா, இல்லையென்றால் அவர்களின் கர்ப்பம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார். மேலும், "அயோர்டிக் வால்வு ஸ்டீனோசிஸ் இருந்தாலோ, சயனோட்டிக் இதய நோய் இருந்தாலோ இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மார்பான் சிண்ட்ரோமும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு" என்கிறார் அவர். இதுதவிர, கர்ப்ப காலத்தில் மோசமாக ரத்த சோகை இருந்தால், புதிதாகவே இதயப் பெருக்கம் (heart enlargement) பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என்கிறார் அவர். இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன? - BBC News தமிழ்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டம் : சாவகச்சேரி நகரெங்கும் கதவடைப்பு 08 JUL, 2024 | 11:21 AM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக ஞாயிற்றுக்கிழமை (7) இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமையும் (08) மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, "பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன்" என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய பதில் அத்தியட்சகருக்கான கடிதம் கிடைத்தவுடன் விரைவில் நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டம் : சாவகச்சேரி நகரெங்கும் கதவடைப்பு | Virakesari.lk
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!
08 JUL, 2024 | 10:59 AM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! | Virakesari.lk
-
இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
08 JUL, 2024 | 10:41 AM நாடளாவிய ரீதியில் 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் (08) நாளையும் (09) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால், விவசாய ஒழுங்குமுறை, நில அளவையாளர், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பல்வேறு அரச துறையினர் வேலை நிறுத்தப் போட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Virakesari.lk
-
ஜிம்பாப்வே - இந்தியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
இந்தியா vs ஜிம்பாப்வே: டக் அவுட் ஆன மைதானத்தில் அதிரடிக்கு மாறிய தருணம் பற்றி அபிஷேக் சர்மா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அறிமுக போட்டியில் 4 பந்துகளில் டக்அவுட் ஆனார். 2-ஆவது ஆட்டத்தில் முதல் 20 பந்துகளில் 8 டாட் பந்துகளை விட்டார். ஆனால் இறுதியில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அற்புதமான முதல் சதத்தை நிறைவு செய்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அபிஷேக் சர்மா. டி20 சாம்பியன் பட்டம் வென்றபின், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி முதல் டி20 ஆட்டத்தில் சனிக்கிழமை ஆடி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2-ஆவது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. அதிலும் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கிய நிலையில் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்தது. 235 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து100 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஆட்டநாயகன் அபிஷேக் இந்திய அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது அபிஷேக் ஷர்மாவின் சதமாகும். அறிமுகப் போட்டியில் டக்அவுட்டாகி, அடுத்த போட்டியிலேயே அபிஷேக் ஷர்மா 33பந்துகளில் அரைசதமும் அடுத்த 13 பந்துகளில் 50 ரன்கள் என 46 பந்துகளில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணி இமாலய ரன் குவிப்புக்கு முக்கியக் காரணம் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டமும், ரிங்கு சிங் (22பந்துகளில் 48) கேமியோவும், கெய்க்வாட் (77) நிதான ஆட்டமும் காரணமாகும். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் குவித்த 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராக இது மாறியது. 10-ஓவர்களுக்குப்பின் விஸ்வரூபம் நிதானமாகத் தொடங்கிய இந்திய அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் கில் விக்கெட்டை இழந்து 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 7 ஓவர்கள் முதல் 10 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி 34 ரன்களை இந்திய அணி சேர்த்தது. ஆனால், அபிஷேக் ஷர்மா அதிரடிக்கு மாறி, ரிங்கு சிங் களத்துக்கு வந்தபின் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 161 ரன்கள் குவித்தது, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. இந்த 10 ஓவர்களில் மட்டும் 12 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கடைசி 30 பந்துகளில் மட்டும் 82 ரன்களை இந்திய பேட்டர்கள் குவித்தனர். ஹராரே மைதானத்தில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 229 ரன்கள் சேர்த்திருந்தது. போதனா சிவானந்தன்: பிரிட்டன் நாட்டுக்காக செஸ் விளையாடப் போகும் 9 வயது சிறுமி5 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் மட்டும் 161 ரன்கள் குவித்தது, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது அபிஷேக் சர்மா கூறியது என்ன? ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா கூறுகையில் “ தோல்விக்குப்பின் இது மிகச்சிறந்த ஆட்டமாக உணர்கிறேன். எங்களை நாங்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அதிக அவகாசம் இல்லை. என்னைப் பொருத்தவரை டி20 ஆட்டம் என்பது தருணங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்று என்னுடைய நாள். அடுத்தது யாருடையதோ. பயிற்சியாளர், கேப்டனுக்கு நன்றி. எனக்கு கேட்சை நழுவவிட்டபின் என்னுடைய நாள் என உணர்ந்து அதன்பின் அதிரடிக்கு மாறினேன். எனக்கு ஸ்ட்ரைக்கை வழங்குவதில் ருது நன்கு உதவி செய்தார். என்னுடைய பவர் ஹிட்டிங் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். 3-ஆவது அதிவேக சதம் ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற அபிஷேக் சர்மா 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி கடந்த சீசனில் 484 ரன்கள் குவித்தார், இதில் 237 பந்துகளில் 42 சிக்ஸர்கள், 78 பவுண்டரிகளை அபிஷேக் விளாசி இருந்தார். இதே ஃபார்ம் இந்திய அணிக்குள் வந்ததும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முதல் ஆட்டத்தில் டக்அவுட் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. ஆனால், 2-ஆவது ஆட்டத்தில் அபிஷேக் தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார். கடந்த முதல் ஆட்டத்தில் பென்னட் சுழற்பந்து வீச்சில்தான் அபிஷேக் ஆட்டமிழந்ததால் 2-ஆவது ஆட்டத்திலும் பெனட் முதல் ஓவரை வீசினார். ஆனால், இந்த முறை அபிஷேக் தகுந்த பதிலடி கொடுத்து, தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தன்னுடைய ஆட்டத்தின் போக்கை அறிமுகம் செய்தார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா அடுத்த 13 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து 46 பந்துகளில் 2வது அதிவேக அரைசதத்தை விளாசியுள்ளார். அபிஷேக் ஷர்மா முதல் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ஆனால், அடுத்த 23 பந்துகளில் மட்டும்72 ரன்களைக் அபிஷேக் குவித்தார். இதற்கு முன் ரோஹித் சர்மா 35 பந்துகளிலும், சூர்ய குமார் யாதவ் 45 பந்துகளிலும், கே.எல்.ராகுல் 46 பந்துகளிலும் சதம் அடித்திருந்தனர். அவர்கள் வரிசையில் அபிஷேக்கும் இணைந்தார். அதிலும் சதம் அடித்தபோது, அபிஷேக் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் எனும் பெருமையை அபிஷேக் பெற்றார். 2023ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சுப்மான் கில் இரட்டை சதம் அடித்தபோது இதுபோன்று தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி சதம் கண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கிய நிலையில் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். சுழற்பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள் ஜிம்பாப்வே சுழற்பந்துவீச்சில் முதல் ஆட்டத்தில் ஆட்டமிழந்த அபிஷேக், நேற்று சுழற்பந்துவீச்சை வெளுத்துவிட்டார். தனது சதத்தில் 63 ரன்களை 28 பந்துகளில் சுழற்பந்துவீச்சில்தான் அபிஷேக் பெற்றார். 238 ஸ்ட்ரைட் ரேட்டில் ஆடிய அபிஷேக், 6 சிக்ஸர்களையும், 4பவுண்டரிகளையும் சுழற்பந்துவீச்சில் அடித்தார். இதற்கு முன் 2012ல் ஆமதாபாத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 57 ரன்களை யுவராஜ் சிங் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை அபிஷேக் முறியடித்தார். பவர்ப்ளேயில் கட்டுப்பாடு இந்திய அணியை முதல் போட்டியில் சுருட்டியிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன்தான் ஜிம்பாப்பே பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதனால் பவர்ப்ளே ஓவருக்குள் சுப்மான் கில் விக்கெட்டை எடுத்ததால், இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அபிஷேக் ஷர்மாவும், கெய்க்வாட்டும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். அபிஷேக்23 பந்துகளில் 27 ரன்கள் என பொறுமையாக பேட் செய்தார். 11ஆவது ஓவரிலிருந்து ருத்ரதாண்டவம் 10 ஓவர்கள்வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்று இயல்பான ஸ்கோரை நோக்கித்தான் சென்றது. ஆனால், மேயர்ஸ் வீசிய 11-ஆவது ஓவரிலிருந்து இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அபிஷேக் ஷர்மா ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டார். மேயர்ஸ் வீசிய 11-ஆவது ஓவரில் மட்டும் அபிஷேக் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்களும், சிக்கந்தர் வீசிய 13-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்களைக் குவித்தார். மஸகட்சா வீசிய 14-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி சதம் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் மட்டும் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிங்குசிங் அதிரடி ஆட்டம் அடுத்துவந்த ரிங்கு சிங், தான் சந்தித்த 2-ஆவது பந்திலேயே சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்துவீசுவது என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் திணறினர். ஓவருக்கு 15 ரன்களுக்கு குறையாமல் சென்றதால், பந்துவீச்சை மாற்றியும் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 7 பந்து வீச்சாளர்கள் பந்துவீசியும் இந்திய பேட்டர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாதிக்க முடியாத வேட்கையை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திய ரிங்கு சிங், அதிரடியாக பேட் செய்தார். சதாரா வீசிய 18-ஆவது ஓவரில் கெய்க்வாட் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.முசாபர்பானி வீசிய 19வது ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்களையும், ஜாங்வி வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியையும் விளாசினர். கெய்க்வாட் 77 ரன்களிலும், ரிங்கு 48 ரன்களிலும் (2பவுண்டரி, 5சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசாரபர்பானி தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சராசரியாக 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். விக்கெட் சரிவு 234 ரன்களை சேஸ் செய்வது என்பது கடின இலக்கு என்பது ஜிம்பாப்வே அணிக்குத் தெரியும் இருப்பினும் போராடிப் பார்த்தது. ஜிம்பாப்வே பேட்டர் பெனட் அதிரடியாகத் தொடங்கி, சிக்ஸர், பவுண்டரி அடித்தார். ஆனால், முகேஷ் குமார் ஓவரில் க்ளீன் போல்டாகி 26ரன்களில் பென்னட் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகளை இழந்தது, 58 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் மதவரே(43), டெய்லண்டர் லூக் ஜாங்வி(33) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். நடுவரிசை பேட்டர்கள், கீழ் வரிசை பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆவேஷ்கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பீல்டிங் மோசம் இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் பீல்டிங்கும், கேட்ச் பிடிக்கும் திறனும் படுமோசமாக இருந்தது. அதிலும் ஆவேஷ் கான் நேற்று ஒரு கேட்ச், சில பவுண்டரிகளையும் கோட்டைவிட்டார். அதேபோல கெய்க்வாட்டுக்கு ஒரு கேட்சையும், அபிஷேக்கிற்கு இரு கேட்சுகளையும் ஜிம்பாப்வே வீரர்கள் தவறவிட்டு அதற்கான விலையையும் கொடுத்தனர். தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில் “உலக சாம்பியன் உலக சாம்பியன் போல் விளையாடினர். எங்களின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், 4 முக்கியமான கேட்சுகளை நாங்கள் தவறவிட்டோம். 200 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என நினைத்தேன், ஆனால் 20 ரன்கள் கூடுதலாக சென்றது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமானது என்பதால், இலக்கை விரட்டுவோம் என்று நினைத்தேன் ஆனால், பேட்டர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எங்களின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவிக்கவில்லை. அதிகமான அனுபவமின்மைதான் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டுவருவோம்” எனத் தெரிவித்தார். இந்தியா vs ஜிம்பாப்வே: டக் அவுட் ஆன மைதானத்தில் அதிரடிக்கு மாறிய தருணம் பற்றி அபிஷேக் சர்மா கூறியது என்ன? - BBC News தமிழ்
-
புதிய 'சீர்திருத்தவாதி' அதிபர் இரானை உலக நாடுகளுக்கு அருகில் கொண்டு வருவாரா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கெய்வன் ஹொசைனி பதவி, பிபிசி பாரசீகம் 7 ஜூலை 2024 50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் பெசெஷ்கியன் போன்ற சீர்திருத்தவாதி சிறந்த வேட்பாளர் இல்லை என்றாலும், அவரைக் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், இம்முறை தங்களுக்கு மெலிதான வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பெசெஷ்கியன், தன் முழு பலத்தை வெளிப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலி இரான் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பது ஏன்? இரானிய அரசியலமைப்பின் படி, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் சக்திவாய்ந்த 'கார்டியன்’ கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 1997 முதல் 2005 வரை நிர்வாகத்தை நடத்திய இந்த கார்டியன் கவுன்சில், சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக ஒரு சார்புடையதாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மூன்று தேர்தல்களில், சீர்திருத்தவாதிகள் தங்கள் உயர்மட்ட வேட்பாளர்கள் அனைவரும் இந்தக் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர். மேலும் அவர்களது குழுவில் இருந்து அதிகம் அறியப்படாத நபர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, ஒரு சமமற்ற களத்தில், பழமைவாதப் போட்டியாளர்களுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டு மே 19-ஆம் தேதி முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த போது, பலர் அதே கட்சியைச் சேர்ந்த அதிபர் வரலாம் என எதிர்பார்த்தனர். ஜூன் 9 அன்று கார்டியன் கவுன்சில் ரகசிய ஆய்வு முடிவுகளை அறிவித்த பிறகும், சீர்திருத்தவாதிகளின் குழு தேர்தலில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று யாரும் பெரிதாக நம்பவில்லை. மற்ற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாத சீர்த்திருத்தவாதிகள் ஆறு பேரில் மசூத் பெசெஷ்கியன் மட்டுமே அதிபர் தேர்தலின் வேட்பாளர் ஆனார். கொள்கைவாதிகள், சீர்திருத்தவாதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பழமைவாதச் சிந்தனைகளைக் கொண்டுள்ளனர். ஆட்சியின் இஸ்லாமியச் சித்தாந்தத்தின் தீவிரமான பதிப்பைக் கொள்கைவாதிகள் ஆதரிக்கின்றனர். இரானின் உச்சத் தலைவரான அலி கமேனி அந்தப் பிரிவிலிருந்து வந்தவர். எனவே தான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சீர்திருத்தவாதிகளை விடக் கொள்கைவாதிகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. சமீப ஆண்டுகளில் கொள்கைவாதிகள் எப்படிச் சீர்திருத்தவாதிகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதை நாடு பார்த்தது. ஊடகங்களின் கூற்றுபடி, 'ஒத்திசைவு' எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்டச் செயல்பாட்டின் வாயிலாகக் கமேனிக்கு ஆதரவாக இல்லாத எவரும் அவரது சகப் பழமைவாதிகளால் அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான கட்டுப்பாடு, வெடித்த போராட்டம் இது பலத்தரப்பில் இருந்தும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பைத் தூண்டியது, குறிப்பாக 2009-இல் சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, மில்லியன் கணக்கானவர்கள் எதிர்ப்பிற்கு வழிவகுத்தது. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (ஐ.ஆர்.ஜி.சி) இந்த எதிர்ப்புகளை வன்முறை என்று கூறி மிருகத்தனமான முறையில் கட்டுப்படுத்தி முற்றுப்புள்ளி வைத்தது. 2021-இல் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றபோது, சில ஆய்வாளர்கள் 'எல்லாமே முடிந்தது' என்று அறிவித்தனர். இரானின் 'இஸ்லாமியக் குடியரசின்' ஒவ்வொரு பிரிவும் உச்ச தலைவரோடு ஒத்த எண்ணம் கொண்ட பழமைவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அவர்கள் தங்களை 'புரட்சி முன்னணி அமைப்பு’ (Revolution Front) என்று சொல்லி கொள்கின்றனர். முன்னாள் அதிபர் ரைசி, உச்சத் தலைவர் கமேனியைப் போன்று ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளுடனும் ஒத்துப் போனார். ரைசியின் செயல்பாடுகள் கமேனி செய்வதை போலவே இருந்தன: தற்சார்பு பொருளாதாரத்திற்காகப் பாடுபடுதல், சீனா மற்றும் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் குறிக்கும் 'கிழக்கைப் பார்' என்ற முழக்கத்தை கொண்டிருந்தது, வெளியுறவுக் கொள்கை கோட்பாடுகள் என அனைத்தும் கமேனியைப் போலவே இருந்தன. சமூகத்தின் மீதான 'இஸ்லாமியக்' கட்டுப்பாடுகள் அவர்களின் கொள்கைகளின் முக்கியத் தூணாக இருந்தன. பெண்களைக் கடுமையாக நடத்துவதும் இதில் அடக்கம். 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் காவலில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவரின் மரணம் மற்றும் இரானில் முழு 'இஸ்லாமியக் குடியரசு' ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது. ஆளும் மதகுருமார்களின் எதிர்வினை 2009-இல் நிகழ்ந்ததை விட அதிக ஆக்கிரோஷமாக இருந்தது. சுமார் ஆறு மாத காலம் நடந்த போராட்டங்களின் போது, 60-க்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் உயிர்களை இழந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அதிகரித்த இணைய கட்டுப்பாடு, பெரும் எண்ணிக்கையிலான கைதுகள், இளம் எதிர்பாளர்களுக்கான சோதனைகள் மற்றும் அவர்களில் நான்கு பேரின் மரணதண்டனை ஆகிய அரசின் நடவடிக்கைகளால் 2022-2023 ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்ராஹிம் ரைசி இவ்வாறான அரசியல் அடக்குமுறைகளின் விளைவாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. கடுமையான அடக்குமுறையின் மீதான கோபம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அச்சமயத்தில் தான் ரைசியின் இறப்புச் செய்தி ஆளும் அரசின்மீது பேரிடியாய் விழுந்தது. மேலும் புதிதாக அதிபர் தேர்தல் நடத்துவது என்பது சிம்மசொப்பனமாகத் தோன்றியது. நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி உட்படப் போராட்டத்தின் பல முக்கியப் பிரமுகர்கள் இப்போது சிறையில் உள்ள நிலையில், மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பதைப் புறக்கணிக்க பலர் முடிவு செய்தனர். தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தத் தேர்தல் ஒரு அமைதியான இடமாக மக்களுக்குத் தோன்றியது. பெசெஷ்கியன் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? பெசெஷ்கியன் கொடுத்த முக்கிய தேர்தல் வாக்குறுதியானது பழமைவாதிகளின் மேற்கத்திய எதிர்ப்பு வெளியுறவுக் கொள்கையைத் தாக்குவதாகும். சீர்திருத்தவாத அரசியல்வாதிகளின் ஒரு சிக்கலான குழுவுடன், நாட்டின் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஜரீப்பையும் பெசெஷ்கியன் நியமித்திருக்கிறார். ஜாவத் ஜரீப், 2015-இல் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்கான ஒரு வரலாற்று ஒப்பந்தத்தைக் முன்னெடுத்தவர் ஆவார். ஜரீப் ஒரு சீர்திருத்தவாதியாக இல்லாவிட்டாலும், அவர் கல்வித்துறையில் தனது அமைதியான வாழ்வில் இருந்து வெளியேறி பெசெஷ்கியனுக்காகப் பெரிதும் பிரசாரம் செய்தார். அவரது தேர்தல் அறிக்கையில், பெசெஷ்கியன் ஜரீப் உடன் இணைந்து அவரது வெளியுறவுக் கொள்கைகள் "மேற்குக்கு எதிரானது அல்ல, கிழக்குக்கு எதிரானது அல்ல," என்று அறிவித்தார். நாட்டை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக வழிநடத்திச் செல்லும் ரைசியின் கொள்கைகளை இருவரும் விமர்சித்தனர், மேலும் மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டின் அணுசக்தி முட்டுக்கட்டைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கும் பொருளாதாரத் தடைகளை எளிதாக்குவதற்கும் வழிவகை செய்யப்படும் என்றனர். பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய ஒரே குழு தாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்று இருவரும் வாக்குறுதி அளித்தனர். மற்ற வேட்பாளர்கள் மற்றும் உச்ச தலைவர் கமேனி ஆகியோர் இந்த வாக்குறுதிகளை விமர்சித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முகமது ஜாவத் ஜரீப் அமெரிக்காவுடனான நட்புறவு மூலம் பொருளாதாரம் செழிப்படையும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் ‘ஏமாந்தவர்கள்’ என்று கமேனி குறிப்பிட்டார். இரானுடன் இணக்கம் இருந்தபோதிலும் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை விலக்கிக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டி கமேனி விமர்சித்தார். கமேனியின் அரசியலமைப்பு அதிகாரம், மற்றும் சர்வதேச உறவுகளில் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக வெளியுறவுக் கொள்கை குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பெசெஷ்கியன் மற்றும் அவரது பிரசாரம் பல்வேறு எதிர்புகளைச் சந்தித்தது. அவருக்கு எதிராகத் தேர்தல் புறக்கணிப்புப் பிரசாரங்கள் நடந்தன. மேலும், இரானின் அரசியல் கட்டமைப்பில் அதிபருக்கு வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க அதிகாரம் இல்லை என்று கமேனி வலியுறுத்தினார். அதற்கு அவர் தரப்பில் வலுவான ஆதாரங்கள் இருந்தன. இரானின் கொள்கைகளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான குட்ஸ் படை (Quds Force) இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) ஐந்து வெளிப்புறப் பிரிவுகளில் ஒன்றாகும். இதனை அதிபரால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை உச்சத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். கமேனி மீண்டும் மீண்டும் இதனைக் குறிப்பிட்டார். குத்ஸ் படையின் செயல்பாடு நாட்டின் பாதுகாப்புக் கோட்பாட்டிற்கு இன்றியமையாதது என்று அவர் கூறினார். கடந்த வருடன் அக்டோபர் 7-ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகான மத்தியக் கிழக்கின் சூழ்நிலையால், இரானிய ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் லெபனான், சிரியா, இராக் போன்ற நாடுகளில் இரானியப் படைகளின் செயல்பாடுகள் தொடர்பான மாற்றங்கள் இன்னும் சவாலானதாக மாறிவிட்டன. கமேனிக்கு எதிராகச் செல்வாரா? கடந்த எட்டு மாதங்களில், இரான் ஹமாஸின் முக்கிய ஆதரவாளராக இருந்தது. மேலும் ஏமனில் உள்ள ஹூதிகள் போன்ற அதன் கூட்டாளிகள், இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய நலன்களைச் சேதப்படுத்த, செங்கடலின் வர்த்தக பாதையைச் சீர்குலைக்க முயன்றனர். இரு நாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவிலான மோதலின் போது இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை நேரடியாக இஸ்ரேலைத் தாக்கியது. இனி வரும் காலங்களில் நாட்டின் அதிபர் ஒரு திசையிலும், வெளியுறவு அமைச்சகம் மற்றொரு திசையிலும் பயணித்தால் சூழல் கடுமையாகி விடும். ஆயினும்கூட அதிபர் பதவி என்பது மிக உயர்ந்த இரானிய ராஜதந்திரிக்கான பதவியாகும். அதிபரின் அலுவலகம் மட்டுமல்ல, அவரின் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கும் அவற்றை வடிவமைப்பதற்கும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது. 2015-இல் அப்போதைய நடுநிலையான அதிபர் ஹசன் ருஹானி, கமேனி உட்பட கடும்போக்கு அதிகாரிகளை ஒரு ஒப்பந்தத்தை ஏற்கும்படி சமாதானப்படுத்தினார். அதேபோல் மறைவான அரசியல் பரப்புரையின் மூலம் கமேனி உள்ளிட்டவர்களுக்கு பெசெஷ்கியன் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இரானின் புதிய நிர்வாகம் மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு ஆட்சியை முன்னெடுக்கலாம். கமேனியின் நிலைப்பாட்டுடன் 100% ஒத்துப்போகாத கொள்கைகளை ஊக்குவிக்கலாம். இத்தகைய நுணுக்கங்களால் சீர்திருத்தவாதிகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பெசெஷ்கியன் கூறியது போல் நாட்டைச் சுற்றி கொள்கைவாதிகளால் எழுப்பப்பட்டச் சுவர்களை உடைத்தெறியவும் வாய்ப்புகள் உருவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் இந்த முறை, முந்தைய காலக்கட்டத்தில் சீர்திருத்த நிர்வாகத்தைம் அளித்ததுபோலச் சுதந்திரமான, ஜனநாயகத் தன்மைமிக்கச் சமூகத்திற்கான வாக்குறுதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. காரணம், சீர்திருத்தவாதிகள் கடுமையான அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர். முக்கியமான சிந்தனையாளர்களைக் கடும்போக்காளர்கள் படுகொலை செய்தல், செய்தித்தாள் அலுவலங்களை மூடுதல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், உச்சத்தலைவர் அலுவலகம், கார்டியன் கவுன்சில் மற்றும் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சில் போன்ற முக்கியமான அதிகார மையங்களில் அதிபருக்குச் செல்வாக்கு இல்லை. பெசெஷ்கியன் ஆட்சி அமைப்பால், சுதந்திரமான தேர்தல்களை நடத்தவோ, தணிக்கைச் சட்டங்களை மாற்றவோ, அறநெறிக் காவல்துறையைக் கட்டுப்படுத்தவோ முடியாது. மிக முக்கியமாக, பெசெஷ்கியன் 6.2 கோடி வாக்காளர்களில் தோராயமாக 1.6 கோடி வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். இதற்கு மாறாக 27 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 2 கோடி (3.5 கோடியில்) வாக்குகளைப் பெற்று சீர்த்திருத்தவாதிகள் குழு வெற்றி பெற்றது. 1.3 கோடிக்கும் அதிகமானோர் அவரது போட்டியாளரான சயீத் ஜலிலிக்கு வாக்களித்துள்ளனர். இரான் தனது நலன்களைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று ஜலிலி கூறிவருவது குறிப்பிடத்தக்கது. மசூத் பெசெஷ்கியனின் வெற்றி இரான் அரசியலைப் புரட்டிப்போட்டது எப்படி? - BBC News தமிழ்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்ற முயற்சி! Published By: VISHNU 08 JUL, 2024 | 01:51 AM சாவகச்சேரி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண இரவு 7 மணியளவில் குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகாரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும, அவருடைய தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும, பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பனிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர். எனவே இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து. மறுநாள் காலை 8:00 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் எனஅரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம் : பதில் வைத்திய அத்தியட்சகரை இரவோடு இரவாக அங்கிருந்து அகற்ற முயற்சி! | Virakesari.lk
-
பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வுகாண இரா. சம்பந்தனும் நானும் எப்போதும் பணியாற்றினோம் - ஜனாதிபதி
Published By: VISHNU 07 JUL, 2024 | 07:42 PM மறைந்த இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரா.சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள், ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இரா. சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜனாதிபதி, அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பு எனவும் குறிப்பிட்டார். இரா. சம்பந்தன் எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்பிக்க தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வனவளத் திணைக்களத்துடன் இருக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்க்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பிரதமர் என்று குறிப்பிட்டதுடன், இரா. சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இதேவேளை, தேர்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரா. சம்பந்தனின் மறைவால் நீண்டகால நண்பரை இழந்துவிட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் புதிய சட்டத்தரணியாக செயற்பட்டபோதே ஒரு சட்டத்தரணியாக நான் அவரை சந்தித்தேன். 1977 ஆம் ஆண்டு நானும் சம்பந்தனும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு வந்தோம். அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலையில் எமது கட்சியின் செயற்குழு உறுப்பினர் நவரத்தினம் ராஜாவை நான் ஆதரித்தேன். ஆனால் அந்த போட்டியில் இரா. சம்பந்தன் வெற்றி பெற்றார். குறிப்பாக தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையின்படி பாராளுமன்றம் இரு தரப்பாக பிரிந்தது. இரா. சம்பந்தன் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் சிறப்பான உறவைக் கொண்டிருந்தார். இந்த நாட்டைப் பிரிக்க முடியாது என்பதால், சமஷ்டி ஆட்சி முறையில் அல்லது மாவட்ட சபை முறையை விட அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து தொடர்ந்து கலந்துரையாடி வந்தோம். எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. திருகோணமலையில் ஒரு காணியை நான் இளைஞர் சேவை மன்றத்திற்கு வழங்கிய போது பாராளுமன்றத்தில் கூட எமக்கிடையில் விவாதங்கள் இடம்பெற்றன. இதைக் கட்டுப்படுத்த அவர் எடுத்த முயற்சியும், நாங்கள் எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. அவர் 1983 இல் இலங்கையை விட்டு வெளியேறினார். மறுபடியும் அவர் பாராளுமன்றத்துக்கு வந்த பிறகு, நாங்கள் மீண்டும் தொடர்புகளைப் பேணினோம். 2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மீண்டும் அவருடன் இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் கூறினார். தமிழ் மக்கள் துன்பப்படுவதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். நாங்கள் தேர்தலில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன், பொது வேட்பாளர்களை ஆதரித்துள்ளோம். குறிப்பாக மைத்திரிபால சிறிசேனவுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டோம். அதற்கு முன் சரத் பொன்சேகாவுக்காக செயற்பட்டோம். கடந்த கால நிகழ்வுகள் மற்றும் அரசியல் குறித்து அவரிடம் எப்போதும் நான் கதைப்பேன். 1948 இல் இந்த நாடு சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பார்த்த ஒரே எம்.பி. அவர். மேலும் அரசியல் பற்றியும் நாம் கதைப்போம். அதன் பிறகு அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அதன்போது தனது சிறப்பான குணத்தை எடுத்துக் காட்டினார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியதோடு, அதற்காக பாடுபட்டார். அது மாத்திரமன்றி அனைத்து இலங்கையர்களின் பிரச்சினைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் முன்வைத்தார். அப்போது அவர் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் ஆவார். 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடி நேரம், நான் பிரதமர் பதவியை இழந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக அவர் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். வேறு காரணங்களால், எங்களது கலந்துரையாடல் வெற்றியடையவில்லை, குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், அரசியல் தீர்வுகளை முன்வைப்பதற்கான பின்னணி எம்மிடம் இருக்கவில்லை. நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த விடயங்களை அவருடன் கலந்துரையாடினேன். மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்பட்டது. மிக முக்கியமான சில கருத்துகள் அங்கு பேசப்பட்டன. பிரிக்கப்படாத இலங்கையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். இப்பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நான் முன்னுரிமை வழங்க வேண்டியிருந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக எங்களது கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியவில்லை. இந்த கலந்துரையாடல்களை இந்த பாராளுமன்ற வாரத்தில் மீண்டும் தொடங்க முடியுமா என்று நான் விசாரித்தேன். ஆனால் அந்த வாய்ப்பிற்கு முன்னரே சம்பந்தன் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் இந்த கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு சென்று நிறைவு செய்ய வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகியுள்ளது. சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம்கள் தமது கிராமங்களை சுவீகரிப்பது தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அந்தப் பிரச்சினைகளை சட்டத்தின் மூலம் தீர்க்க இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவது என கலந்துரையாடி தீர்மானித்துள்ளோம். யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடமே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். புதிய முறைமையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக எங்களுக்குள் உட்னபாடு ஏற்பட்டிருந்தது. பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை வழங்குவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கத்துவத்தை வைத்துக்கொண்டு இதற்காக போட்டியிட அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் மத்திய அரசிடம் இருந்து வேறு பல அதிகாரங்களை பெற்றுக்கொள்ள இப்போது பாராளுமன்றத்தில் இருக்கும் பிரதான உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். ஏனைய அதிகாரங்கள் பற்றி பின்னர் கலந்துரையாடலாம். புதிய பரிந்துரையாக, அதிகாரப் பகிர்வில் 13 ஆவது திருத்தத்தின் கட்டமைப்பிற்குள் அதிகபட்ச அதிகாரத்தை பரவலாக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், நவாஸ் ஆணைக்குழு அறிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட மூலத்தை (TRC) முன்வைக்கத் தயார் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மக்கள் சபை முறை குறித்தும் இப்போது கலந்துரையாடி உடன்பாடு எட்டியுள்ளோம். இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு சென்று நிறைவு செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட தலைவர். சம்பந்தன் இலங்கை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர். நாம் இருவரும், பிரிக்கப்படாத இலங்கைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அதற்காக நாங்கள் இருவரும் உடன்பாட்டுடன் கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு சென்றதுடன் இப்பணியை நிறைவு செய்ய அனைவரும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை உட்பட பல வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகளும் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதுர்தீன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, எஸ். இராசமாணிக்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/187928
-
சம்பந்தர் காலமானார்
இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இராஜவரோதயம் சம்பந்தனின் உடல் திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்ட்டுள்ளது. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், தமது இரங்கல்களையும் தெரிவித்தனர். இரண்டாம் இணைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது. முதலாம் இணைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியை நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு முன்னனெடுக்கப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திருகோணமலை நகர் முழுதும் குறித்த பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளனர். சம்பந்தன் அவர்களின் இறுதி கிரியைகளுக்கு மக்களை ஏற்றுவதற்காக கிழக்கு மாகாண பேருந்து சாலைகளில் இருந்து பேருந்துகளை கிழக்கு மாகாண சபை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது. இறுதி கிரியை குறித்த இறுதி கிரியை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இறுதி கிரியைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரங்கல் பதாகை மேலும், திருகோணமலை நகர் முழுதும் இரங்கல் தெரிவித்து இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்த பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/security-to-be-strengthened-in-trincomalee-1720335489
-
குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்
அண்ணை நடிகை மீனாவின் கணவரும் புறா எச்சத்தால் வரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக நினைவு.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்திய சாலை விடயத்தில் எட்டப்பட்டுள்ள இரண்டு முடிவுகள் யாழில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் இரண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவக்கச்சேரி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. விசாரணை செய்தல் மற்றும், நடவடிக்கை எடுத்தல் என்பன பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனினும், சேவை பெறுனர்களின் நலன் முக்கியமானது எனவும் மருத்துவர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில், முதலாவதாக வைத்தியர் அர்சுனாவின் சேவையை நீடிக்க விட்டு ஒரு கால அவகாசம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். ஆனால் தனிப்பகை தீர்ப்பதாக இருக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக அனைவரும் விரும்பாவிடில் வைத்தியர் அர்ச்சுனாவை மீள அனுப்புவது தொடர்பிலும், வேறு ஒருவரை நியமித்த பின்னும் அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிவுசெய்து நோயாளர்கள் பிரதேச மக்கள் ஆகியோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இவை அனைத்துக்குமான சுயாதீன விசாரணை செய்து உண்மைகள் இருப்பின் உரியவர்கள் தண்டிக்கப்பட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும் எனவும் மருத்துவர் சங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் சாவகச்சேரி வைத்தியர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர்களுடைய காணொளி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@nilmini அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
-
காஸா: பள்ளி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், 16 பேர் பலி
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்தத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுவலூஃப் மற்றும் டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, மத்திய காஸாவில் உள்ள நுசேராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டடம் தங்குமிடமாக இருந்தது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎப்) "அல்-ஜௌனி பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள கட்டமைப்புகளில் செயல்படும் பயங்கரவாதிகளைத்தான் தாக்கினோம்" என்று கூறியது. இதற்கிடையில், முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நுசேராத் பள்ளி தாக்கப்பட்டது குறித்து வெளியான காணொளியில், இடிபாடுகளால் உண்டான புகை வீதி முழுவதும் நிறைந்திருக்க, பெரியவர்களும் குழந்தைகளும் அலறுவதைக் காட்டுகிறது. சிலர் காயமடைந்தவர்களுக்கு உதவ ஓடுகிறார்கள். பரபரப்பான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள பள்ளியின் மேல் தளத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். 7,000 பேர் வரை இந்தக் கட்டடத்தைத் தங்குமிடமாகப் பயன்படுத்தியுள்ளனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 'பள்ளியின் மீதான நான்காவது தாக்குதல்' ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய ஒரு பெண், கட்டடம் தாக்கப்பட்டபோது குர்-ஆன் படித்துக்கொண்டிருந்த சில குழந்தைகள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பதைத் தெரிவித்தார். "முன்னறிவிப்பின்றி பள்ளியைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது இது நான்காவது முறை" என்று அவர் கூறினார். ஹமாஸ் காவல்துறை பயன்படுத்தியதாகக் கூறப்படும் அறைதான் இலக்கு என்று உள்ளூர் வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. பிபிசியால் இந்தக் கூற்றைச் சரிபார்க்க முடியவில்லை. சனிக்கிழமையன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து உள்ளூர் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) தெரிவித்துள்ளது. சமீபத்திய ஐந்து இறப்புகளையும் சேர்த்து, 158 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 'பாதுகாப்பற்ற, இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதான படுகொலை' பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிட்ட அறிக்கையில், பள்ளி கட்டடங்களைத் தாக்கியதை உறுதிப்படுத்தியது. 'துல்லியமான வான்வழிக் கண்காணிப்பு மற்றும் கூடுதல் உளவுத்துறையின் பயன்பாடு உட்பட பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயத்தைத் தணிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், இஸ்ரேலிய படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஹமாஸ் போராளிகள் அந்த இடத்தை மறைவிடமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும்' அது கூறியது. "இஸ்ரேல் அரசுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்கு சிவிலியன் கட்டமைப்புகளையும் பொதுமக்களையும் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சர்வதேச சட்டத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறுவதாகவும்," இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஹமாஸ் இந்தத் தாக்குதலை 'பாதுகாப்பற்ற, இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதான படுகொலை' என்று விவரித்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று ஹமாஸ் குழு தனது ஆங்கில டெலிகிராம் சேனல் மூலம் கூறியது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படலாம் என சமீபத்திய நாட்களில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. ஹமாஸுடன் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் பேச்சுவார்த்தை குழுவை அனுப்புவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஒரு மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி, போர் நிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டில் 'குறிப்பிடத்தக்க மாற்றங்களை' ஹமாஸ் ஒப்புக்கொண்டதை முன்னர் தெரிவித்திருந்தார். காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நோக்கில் ஒரு ஒப்பந்தம் முன்மொழியப்பட்டு 16 நாட்கள் கடந்துள்ள நிலையில், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தங்கள் குழு ஒப்புக்கொண்டதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் ஒருவர் சனிக்கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். ஏறக்குறைய எட்டு மாதங்களாக நீடித்து வரும் போரில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 17 லட்சம் மக்களால் பல பள்ளிகள் மற்றும் பிற ஐ.நா. கட்டமைப்புகள் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. படக்குறிப்பு,கடந்த ஜூன் மாதம் நுசேராத்தில் ஐ.நாவால் நடத்தப்படும் மற்றொரு பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக ஜூன் மாதம் நுசேராத்தில் ஐ.நாவால் நடத்தப்படும் மற்றொரு பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். பள்ளியின் மேல் தளத்தில் உள்ள வகுப்பறைகள் மீது போர் விமானம் இரண்டு ஏவுகணைகளை வீசியதாக உள்ளூர் செய்தியாளர்கள் அப்போது பிபிசியிடம் தெரிவித்தனர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம், இந்தப் பள்ளியில் உள்ள ஹமாஸ் வளாகத்தில் ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது. உள்ளே இருந்ததாக நம்பப்பட்ட 20 முதல் 30 போராளிகளில் பலரைக் கொன்றதாகவும் அது தெரிவித்தது. பள்ளியை நடத்தும், பாலத்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) தலைவர், ஜூன் சம்பவத்தை 'பயங்கரமானது' என்று விவரித்தார். "ஆயுதக் குழுக்கள் மக்களின் தங்குமிடத்திற்குள் இருந்திருக்கலாம் என்ற கூற்று அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று கூறினார். அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸின் முன்னறிவிப்பில்லாத தாக்குதலால் இந்தப் போர் தொடங்கப்பட்டது, இதில் ஹமாஸ் தலைமையிலான துப்பாக்கி ஏந்தியவர்கள் சுமார் 1,200 பேரைக் கொன்றனர் மற்றும் 251 பேரை பணயக் கைதிகளாக காஸாவிற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேலுடைய தாக்குதலின் விளைவாக காஸாவில் குறைந்தது 38,098 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/187863
-
புகலிடம் கோருபவர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசி சுனாக்கின் திட்டம் - கைவிடப்போவதாக பிரிட்டனின் புதிய அரசாங்கம் தெரிவிப்பு
Published By: RAJEEBAN 07 JUL, 2024 | 10:28 AM புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசி சுனாக் அரசாங்கத்தின் திட்டத்தினை தனது அரசாங்கம் தொடராது என பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டம் அது ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது அது ஒரு போதும் ஒரு தடுப்பு நடவடிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையை உண்மையில் கட்டுப்படுத்த எந்த போலியான நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு நான் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டத்தினை நாங்கள் உள்வாங்கும் பிரச்சினை என அவர் விபரித்துள்ளார். ருவாண்டா திட்டம் தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பே பரவலாக காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டம் மனித உரிமை அடிப்படையில் சட்டவிரோதமானது என பிரிட்டனின் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த போதிலும் ரிசி சுனாக் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அகதிகள் குடியேற்றவாசிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமொன்றை நிறைவேற்றியிருந்தது. இதனை தொடர்ந்து மே மாதத்தில்ரூ ருவாண்டாவிற்கு அனுப்புவதற்காக பலரை அதிகாரிகள் கைது செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறிய படகுகளில் குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்கு வருவதை தடுத்து நிறுத்தப்போவதாக தெரிவித்திருந்த ரிசி சுனாக் ருவாண்டா கொள்கையை வெளிப்படையாக முன்வைத்திருந்தார். புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கையை பிரிட்டனிலேயே ஆராய்வதற்கு பதில் அவர்களை மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற திட்டம் என தெரிவித்திருந்த மனித உரிமை அமைப்புகள் ரிசி சுனாக் அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக சாடியிருந்தன. https://www.virakesari.lk/article/187879
-
ஜிம்பாப்வே - இந்தியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஐபிஎல்-இல் கலக்கிவிட்டு சர்வதேச ஆட்டத்தில் சொதப்பிய இந்திய பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சந்தித்த முதல் போட்டி இவ்வளவு மோசமான முடிவாக இருக்கும் என இளம் இந்திய அணி எதிர்பார்த்திருக்காது. அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி என்று மார்தட்டி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற அணி, 116 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்களில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை இதே மைதானத்தில் வைத்து ஜிம்பாப்வே மீண்டும் வீழ்த்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியை ஜிம்பாப்வே தோற்கடித்திருந்தது. டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றபின், சந்தித்த முதல் ஆட்டத்தில் தோற்ற 2வது அணியாக இந்திய அணி மாறியுள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றபின், 2023 மார்ச் மாதம் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஹராரே மைதானத்தைப் பொறுத்தவரை, 116 ரன்கள் என்பதுதான் இதுவரை சேர்க்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர். ஐசிசியில் முழு உறுப்பினராக இருக்கும் இந்திய அணியால், அதைக்கூட சேஸ் செய்ய முடியாமல் போனது. இதற்கு முன்பு, 2016 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 127 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது. தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி இந்தத் தோல்விக்கு முன் அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து தொடர்ந்து 12 வெற்றிகளைப் பெற்றிருந்தது. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தது. அதன் பிறகு தோற்கவில்லை. அதேபோல இந்திய அணி 12 டி20 போட்டிகளாக எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் வந்தது. 2023, டிசம்பரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக கடைசியாக டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோற்றிருந்தது. இப்போது 6 மாதங்களுக்குப் பின் இந்திய அணி தோற்றுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி ஆட்டமிழந்த 102 ரன்கள் என்பது சேஸிங்கில் சேர்க்கப்பட்ட 2வது குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2016 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 76 ரன்களில் ஆட்டமிழந்தது. அதன் பிறகு 102 ரன்களில் இப்போது சுருண்டுள்ளது. கோலிக்கு போட்டியாக சிக்கந்தர் ராசா இந்திய அணியைத் தனது பந்துவீச்சு, பேட்டிங்கால் ஆட்டம் காண வைத்த கேப்டன் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது, டி20 போட்டிகளில் சிக்கந்தர் ராசா வாங்கிய 15வது ஆட்டநாயகன் விருது. இதற்கு முன் சூர்யகுமார் யாதவ் 15, கோலி 16 விருதுகளை வென்றுள்ளனர். சிக்கந்தர் ராசா வாங்கிய 6 ஆட்டநாயகன் விருதுகள், ஜிம்பாப்வே அணியை 20 ஆட்டங்களில் தலைமை ஏற்று நடத்தியபோது கிடைத்த விருதுகளாகும். ஏழு பேட்டர்கள் டக்-அவுட் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 7 பேட்டர்கள் டக்-அவுட் ஆயினர். இந்திய அணி தரப்பில் 3 பேட்டர்களும், ஜிம்பாப்வே அணியில் 4 பேட்டர்களும் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். உலகளவில் ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளின் அணிகளில் அதிகபட்ச டக்-அவுட் ஆனது இது 2வது முறை. 2010ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 8 டக்-அவுட்கள் வந்திருந்தன. ஜிம்பாப்வே வெற்றிக்கு என்ன காரணம்? ஜிம்பாப்பே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சதாராதான். இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுதவிர பிரெயின் பெனட் ஒரு ஓவரை மெய்டனாக வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆடுகளத்தைச் சரியாகக் கணித்துப் பயன்படுத்தி ஜிம்பாப்வே அணி பந்து வீசியதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம். அதிலும் ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஹராரே பழக்கப்பட்ட மைதானம் என்பதால், சரியான லைன் லென்த் நன்கு தெரிந்திருந்தது. இந்த லென்த்தில் இருந்து தவறி பந்துவீசாமல் துல்லியமாகப் பந்து வீசியதால், இந்திய அணியின் அனுபவற்ற பேட்டர்களால் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்ய முடியவில்லை. சுழற்பந்துவீச்சிலும் சிக்கந்தர் ராசா கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். குறிப்பாக பவர்ப்ளே ஓவரிலேயே பெனட், மசகாட்சா என இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கி கேப்டன் சிக்கந்தர் இந்திய அணியைத் திணறவிட்டார். அதற்கு ஏற்றார்போல் பெனட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் எட்ஜ் எடுத்து கேட்சாகி ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வேகப்பந்துவீச்சாளர் சதாரா வீசிய லென்த் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரியான் பராக் மிட்ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்தார், அடுத்த இரு பந்துகளில் ரிங்கு சிங் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் ஃபைன் லெக்கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதாரா வீசிய 5வது ஓவரில் இரு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. பவர்ப்ளேவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்திருந்தது. விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியை துருவ் ஜூரெலுடன் சேர்ந்து கேப்டன் கில் ஈடுபட்டார். ஆனால், இந்திய அணி பேட்டர்களை நிலைத்து ஆடவிடாமல் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் பந்துவீச்சைத் தொடர்ந்து மாற்றி வீசச் செய்து ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியளித்து சிறப்பாகச் செயல்பட்டார். ஆறாவது ஓவரிலிருந்து 10வது ஓவர் வரை இந்திய அணி 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் 10வது ஓவரில் ஜூரெல் 14 பந்துகளைச் சந்தித்து 6 ரன்னில் ஜாங்வீ வீசிய ஸ்லோவர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சிக்கந்தர் 11வது ஓவரை வீசினார். சாதாரண சுழற்பந்துவீச்சாளர் போல் இல்லாமல் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை சிக்கந்தர் வெளிப்படுத்தி இந்திய பேட்டர்களை திணறடித்தார். கேரம் பால், ஸ்லோவர் பால், கூக்ளி என வித்தியாசங்களை சிக்கந்தர் தனது பந்துவீச்சில் வெளிப்படுத்தினார். சிக்கந்தர் பந்துவீச்சுக்குத் திணறிய கில் 31 ரன்னில் கேரம் பாலில் க்ளீன் போல்டாகினார். 10.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 13வது ஓவரில் 7வது விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தாலும், ஜிம்பாப்வே வீரர்களின் தரமான பந்துவீச்சை எதிர்த்து பேட் செய்வது கடினமாக இருந்தது. கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கலீல் அகமது, சுந்தர் இருவரும் களத்தில் இருந்தனர். முசாபர்பானி வீசிய கட்டுக்கோப்பான ஓவரில் ரன் சேர்க்கத் திணறிய சுந்தர், 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. சதாராவின் சுழற்பந்துவீச்சிலும் ரன் சேர்க்க முடியாமல் சுந்தர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து, 5வது பந்தில் விக்கெட்டை இழக்கவே இந்திய அணி தோல்வி அடைந்தது. கடந்த மாதத்தில் உலகின் டி20 சாம்பியனாக உருவெடுத்த இந்திய அணியை, 116 ரன்கள் சேர்க்கவிடாமல் 102 ரன்களில் சுருட்டி டிபெண்ட் செய்தது ஜிம்பாப்வே அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சைக் காட்டுகிறது. 'பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம்' - சுப்மன் கிகில் பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம், ஆனால் பேட்டிங்கில் மோசமாகச் செயல்பட்டோம். பேட்டிங்கை ரசித்துச் செய்வதற்கு எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவையாக இருந்தது, ஆனால் அதற்கு வழியில்லை. முதல் 10 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. கடைசி வரை நான் பேட் செய்திருந்தால், சாதகமான முடிவு கிடைத்திருக்கும். பேட்டர்கள் ஆட்டமிழந்தவிதம் வேதனையாக இருந்தது. வாஷிங்டன் சிறப்பாக பேட் செய்தார், பந்துவீசினார். 115 ரன்களை சேஸ் செய்யும்போது, 10வது இடத்தில் இறங்கி பேட் செய்யும்போது, அணியை வெல்ல வைக்க முயல்வது சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார். இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? இந்திய அணியில் ப்ளெயிங் லெவனில் இருந்த பெரும்பாலான வீரர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், இதில் அனுபவம் இருக்கும் வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே. ஜிம்பாப்வே அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தபோதே தோல்வி அடைந்துவிட்டது. ஜிம்பாப்வே அணியில்கூட ஓரளவுக்கு பேட்டர்கள் பாட்ர்னர்ஷிப் அமைத்து பேட் செய்தனர். குறிப்பாக 2வது விக்கெட்டுக்கு பெனெட்-வெஸ்லி 34 ரன்களும், கடைசி விக்கெட்டுக்கு சதாரா, மந்தான்டே இருவரும் 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதுபோன்ற எந்தப் பெரிய பார்ட்னர்ஷிப்பும் இந்திய அணி பேட்டர்களிடம் இருந்து வரவில்லை. ஐபிஎல் டி20 தொடரில் பேட்டிங்கில் வலுவான அணிகளில் இடம் பெற்று கலக்கிய அபிஷேக் சர்மா(0), சிஎஸ்கே அணியின் கேப்டன் கெய்க்வாட்(7), ரியான் பராக்(2), ரிங்கு சிங்(0) ஆகிய 4 பேட்டர்களுமே பவர்பளே ஓவருக்குள் விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் சதாரா வீசிய 5வது ஓவரில் ரியான் பராக், ரிங்கு இருவருமே பெவிலியின் திரும்பினர். இந்திய அணியில் 3 பேட்டர்கள் டக்-அவுட்டிலும், 4 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய பலரும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஐபிஎல் நடத்தப் பயன்படும் இந்திய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டதால் இந்த பேட்டர்களின் பேட்டிங்கும், ஸ்கோர் செய்வதும் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால், இதுபோன்ற சவாலான ஆடுகளங்களில்தான் இந்த பேட்டர்களின் உண்மையான திறமை வெளிப்படும். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சாதித்த பேட்டர்கள் சர்வதேச களத்துக்கு வந்தபோது சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. இந்திய அணியில் சுந்தர், கில் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் களத்தில் 10 நிமிடங்கள்கூட தொடர்ந்து பேட் செய்யவில்லை. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில்(31), வாஷிங்டன் சுந்தர்(27), டெய்லண்டர் பேட்டர் ஆவேஷ்கான்(16) ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்காமல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சையும், இந்திய அணியின் விக்கெட்டுகளையும் பார்த்த உள்நாட்டு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி அந்த அணியை உற்சாகப்படுத்தினர். இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள் எடுத்து 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற வகையில் கலீல் அகமது, ஆவேஷ் கான் இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிக்கந்தர் ராசாவை மாற்றிய சுனில் நரேன் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே வந்திருந்தபோது, இதேபோன்ற அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. அப்போதேய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் வீரராக இடம் பெற்றிருந்தார், இப்போது கேப்டனாக வழிநடத்துகிறார். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் சிக்கந்தர் தன்னைச் சாதாரண சுழற்பந்துவீச்சாளராக மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கரீபியன் லீக் டி20 தொடரில் விளையாடத் தொடங்கிய பிறகு சிக்கந்தரின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஏராளமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் வந்தன. கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற சிக்கந்தர் ராசாவை செதுக்கி, அவரைச் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மாற்றியது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சுனில் நரைன்தான். சிக்கந்தரின் பந்துவீச்சில் கேரம்பால், ஸ்லோவர் பால், ரிஸ்ட் பால், கூக்ளி, லெக் ஸ்பின் எனப் பல்வேறு வேரியேஷன்களை புகுத்தி அவரின் பந்துவீச்சை ஒழுங்குபடுத்திய பெருமை நரேனுக்கே உரியது. உகாண்டாவிடம் தோல்வி அடைந்ததால், 2024 ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெறும் சுற்றில் ஜிம்பாப்வே வாய்ப்பை இழந்தது. ஆனால், மனம் தளராமல் போராடிய ஜிம்பாப்வே அணி உலக சாம்பயின் இந்திய அணியை முதல் ஆட்டத்திலேயே தோற்கடித்துள்ளது. உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியாத நிலையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து டேவ் காட்டன் விலகிய நிலையில், தென் ஆப்ரிக்காவின் ஜஸ்டின் சாமன்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், டியான் இப்ராஹிம் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாமன்ஸ் தனது முதல் தொடரிலேயே இந்திய அணியை வெல்ல வைத்து ஜிம்பாப்வே அணியை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cnd040317j2o
-
ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல் அதிகரிக்கின்றது - இஸ்ரேலின் வடபகுதியில் தொழில்புரியும் இலங்கையர்களிற்கு தூதரகம் எச்சரிக்கை
07 JUL, 2024 | 10:05 AM இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிற்கு இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இஸ்ரேலிய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 150000 ஏக்கர் வறண்ட புல்வெளியும் விளைநிலமும் முற்றாக கருகி அழிந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் கடும் வரட்சி காணப்படுவதால் காட்டுதீ பரவியுள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான சூழ்நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தவேண்டும்,அவசியம் ஏற்பட்டால் மாத்திரமே தாங்கள் பணிபுரியும் பகுதியிலிருந்து வெளியே செல்லவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அவசர சூழ்நிலைகளில் தூதரகத்தை தொடர்புகொள்ளவும் என தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலின் வடபகுதியில் 2000 இலங்கையர்கள் தொழில்புரிகின்றனர். https://www.virakesari.lk/article/187876
-
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
சம்பந்தனின் இறுதி அஞ்சலியில் ஜனாதிபதி ரணில், பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை உட்பட்டோர் பங்கேற்பர் 07 JUL, 2024 | 10:55 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ராஜவரோதயம் சம்பந்தனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. திருகோணமலை தபால் கந்தோர் வீதியில் உள்ள அன்னாரது பூர்வீக இல்லத்தில் நண்பகல் 12 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சமயக் கிரியைகள் நடைபெறவுள்ளதோடு பிற்பகல் 1.30 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளன. அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து பூதவுடல் தகனத்துக்காக பிற்பகல் 3 மணிக்கு இந்து மயானம் நோக்கி பேரணியாக கொண்டு செல்லப்படவுள்ளது. இதேவேளை, அவருடைய இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதோடு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சரின் சார்பில் பிரதிநிதியொருவரும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தென்னிலங்கையைச் சேர்ந்த ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்கவுள்ள வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மலையக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். இதனைவிடவும், வடக்கு, கிழக்கில் இருந்து பெருமளவான பொதுமக்களும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது. 91 வயதாகும் இராஜவரோதயம் சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187874
-
தொழிற்கட்சியின் அமோக வெற்றி தமிழர் நலன் காக்க உதவும்; இனிவரும் காலங்களில் பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தம் வலுப்பெறும் - தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் நம்பிக்கை
06 JUL, 2024 | 06:47 PM (நா.தனுஜா) பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் அமோக வெற்றி ஈழத்தமிழர் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்வருங்காலங்களில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன முன்னேற்றகரமான மட்டத்தை நோக்கி நகரும் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிரிட்டன் பொதுத்தேர்தலில் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியிருக்கும் நிலையில், இவ்வெற்றி இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பல வருடங்களாக தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டும் எனவும், நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன் அதனை முன்னிறுத்தி சர்வதேச தளங்களில் அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றனர். அதுமாத்திரமன்றி இம்முறை பொதுத்தேர்தலில் பிரிட்டன்வாழ் ஈழத்தமிழ் பெண்ணான உமா குமாரனும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கின்றார். இவ்வாறானதொரு பின்னணியில் 14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடுமென எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியமையை தமிழர்கள் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்தார். அத்தோடு கடந்த காலங்களில் தான் தொழிற்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப்பேசிய வேளைகளில் அவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கறிந்திருந்ததாகவும், பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். 'ஆங்கிலேயர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியபோது, வடக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களைக் கருத்திற்கொண்டு நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக, இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே எதிர்வருங்காலங்களில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி குரலெழுப்பும் என நம்புகின்றேன். அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை அவர்கள் முனைப்புடன் முன்னெடுக்கவேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை பிரிட்டனின் புதிய பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கு தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தொழிற்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்து அக்கறையுடன் கருத்துக்களை வெளியிட்டுவந்திருப்பதன் காரணமாக, இனப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பன எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பு வெளியிட்டார். அத்தோடு கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தபோது அரசியல் தீர்வு குறித்த அவரது கேள்விக்கு, 'சமஷ்டி அடிப்படையிலான நியாயமான தீர்வு அவசியம்' எனத் தான் பதிலளித்ததாகவும், அதனை அவர் கரிசனையுடன் கேட்டுக்கொண்டதாகவும் சிறிதரன் தெரிவித்தார். ஆகவே எதிர்வருங்காலங்களில் சர்வதேச விசாரணையை ஊக்குவிக்கும் வகையிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பாதுகாப்புச்சபைக்குக் கொண்டுசெல்லும் விதமாகவும் பிரிட்டன் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில், அது தமிழர்களுக்கு மேலும் சிறந்த மாற்றமாகவே அமையும் என நம்பிக்கை வெளியிட்டார். https://www.virakesari.lk/article/187855
-
இலங்கை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா? தேர்தல் நடத்துவதில் குழப்பம் ஏன்?
எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே செயற்பட்டேன் - அரசியல் நோக்கம் எதுவுமில்லை - ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த வர்த்தகர் கருத்து Published By: RAJEEBAN 07 JUL, 2024 | 11:19 AM ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலிற்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என கோரும் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வர்த்தகர் சிடி லெனேவா தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19 வது திருத்தம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என தான் கருதுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த தவறு குறித்து தான் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திடமிருந்து தெளிவுபடுத்தல்களை பெறும் நோக்கத்துடன் நான் செயற்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். எனக்கு பின்னால் எந்த அரசியல் சக்தியும் இல்லை எனக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்தி முன்னணியின் தேசிய பட்டியலில் தனது பெயர் காணப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் அந்த கட்சியுடன் இணைந்து நான் அரசியலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி செயலாளரின் வேண்டுகோளை தொடர்ந்தே தேசிய பட்டியலில் தனது பெயரை சேர்ப்பதற்கு தான் அனுமதி வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் தனக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிப்பதை நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பலர் மனுதாக்கல் செய்வதை வரவேற்பதாக தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இந்த விடயம் குறித்து பரந்துபட்ட விவாதம் இடம்பெறும் கவனயீர்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187885
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்ற எவரையும் அனுமதிக்கக் கூடாது.
-
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB 7 ஜூலை 2024, 05:29 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பெரம்பூரிலிருக்கும் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். மாயாவதி பேசியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், "தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியைப் பலப்படுத்த சிறப்பாகப் பணியாற்றியவர் ஆம்ஸ்ட்ராங். பல ஏழைகளுக்காக இலவசமாக வழக்கை வாதாடியவர்." "அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலிக்காகக் கொலை செய்தவர்கள் மட்டுமே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் எங்களுக்கு நியாயம் வேண்டும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்கள் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துடன் துணை நிற்கும்" என்று கூறினார். மேலும் கட்சித் தொண்டர்கள் இந்தத் தருணத்தில் அமைதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாயாவதி அறிவுறுத்தினார். என்ன நடந்தது? பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அது அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டுசெல்லப் படுகிறது. அங்க்கிருந்து அவரது உடல், பெரம்பூரிலிருக்கும் பந்தர் கார்டன் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c1475g1drjko