Everything posted by ஏராளன்
-
தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!
காவிரி பிரச்சினையில் கர்நாடகா முடிவை ஏற்க முடியாது; "உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” - முதல்வர் ஸ்டாலின் 16 JUL, 2024 | 02:30 PM சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தலைமையில் இன்று (ஜூலை 16) நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு தேவைப்படின், உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (ஜூலை 16) ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. தமிழகத்துக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரினை சென்ற ஆண்டு கர்நாடக அரசு விடுவிக்காததால் வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி அதன்பிறகு நீரை பெற்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழலிலும் கர்நாடக அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை தீர்மானங்களாக இயற்றப்பட்டுள்ளது. தீர்மான விவரம்... > காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் காவிரி நீர் ஒழுங்கற்று குழு தற்போது உத்தரவிட்டுள்ளவாறு தமிழகத்துக்கு காவிரி நீரை தரமுடியாது என மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. > காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்துகிறோம். > காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு தேவைப்படின், உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒருமனதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழு முயற்சியோடு மேற்கொண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/188604
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் - மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 16 JUL, 2024 | 07:52 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால் டிரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் துணை ஜனாதிபதி வேட்பாளர் செனெட்டர் ஜேடி வன்சுடன் மேடையில் தோன்றினார். மாநாட்டில் கலந்துகொண்டுள்ள குடியரசுகட்சியினர் அமெரிக்கா அமெரிக்கா எங்களுக்கு டிரம்ப் வேண்டும் என கோசமெழுப்பினர். துப்பாக்கி பிரயோகத்தினால் காதில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வலதுகாதில் பான்டேஜூடன் டிரம்ப் காணப்படுகின்றார். https://www.virakesari.lk/article/188561
-
ட்ரம்புக்கு எதிரான இரகசிய ஆவண வழக்கு தள்ளுபடி
Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:24 PM (ஆர்.சேதுராமன்) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான, இரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கை அந்நாட்டு நீதிபதி ஒருவர் நேற்று தள்ளுபடி செய்தார். ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர், அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்கள் பலவற்றை முறையற்ற வகையில் கையாண்டார் என்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மீது 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட விசாரணை அதிகாரி ஜெக் ஸ்மித்தின் நியமனமும், இவ்விசாரணைக்கான நிதியளிப்பும் சட்டவிரோதமானது என டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஆராய்ந்த, புளோரிடா மாநிலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றின் நீதிபதி அய்லீன் கெனோன் இவ்வழக்கை நேற்று தள்ளுபடி செய்தார். இத்தீர்ப்பு டொனால்ட் ட்ரம்புக்கு ஒரு பாரிய வெற்றியாக கருதப்படுகிறது. படுகொலை முயற்சியில் டொனால்ட் ட்ரம்ப் உயிர்தப்பிய சம்பவத்துக்கு 2 நாட்களின் பின் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/188621
-
கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு!
மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை பொலிஸார் கைப்பற்றினர். தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒப்பு கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/306142
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
அமைதியான தனிமையான தொடர்ந்து கேலி செய்யப்பட்ட சிறுவன் மேத்யூ.. டிரம்ப்பை சுட்ட இளைஞனின் பின்னணி! அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த தோமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும் இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர். அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது. https://thinakkural.lk/article/306146
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் அறிவிப்பு!
16 JUL, 2024 | 01:56 PM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, யாழ் மாவட்ட தனியார் பஸ் சங்கம், பிரதேச செயலகம் நல்லூர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை சாரணர் சங்கம், அன்னதான மடங்கள், தண்ணீர்பந்தல் என்பவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள். இக்கூட்டத்தில் திருவிழா புற ஏற்பாடுகள் தொடர்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1. ஆலயச் சூழலில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகள் 07.08.2024 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 04.09.2024 நள்ளிரவு வரை ஆலய வெளி வீதியின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும். 2. பிரதான வீதித்தடைகள் பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு முன்புறம் அரசடிச்சந்தி, கோயில் வீதியில் சங்கிலியன் வீதி சந்தி, பிராமணக்கட்டு குள வீதிச் சந்தி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். சுகாதார பாதுகாப்பு தேவைகளிற்கேற்ப மேற்படி வீதித்தடைகளின் அமைவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 3. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும் மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்னால் உள்ள குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதி ஊடாக ஆனைப்பந்திசந்தியை அடைந்து யாழ் நகரை அடைய முடியும். யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதை ஊடாக பருத்தித்துறை வீதியை அடைய முடியும். விசேட பெருந்திருவிழாக்களின் போது முத்திரைச்சந்தியில் திரும்பி கச்சேரி நல்லூர் வீதி ஊடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும். கோயில் வீதி வழியாக வரும் வாகனங்கள் சங்கிலியன் வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்தும், செட்டித்தெரு ஒழுங்கையூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து பயணிக்க முடியும். 4. தூக்குக் காவடிகள் வழமை போல் பருத்தித்துறை வீதி வழியாக உள்நுழைந்து ஸ்ரீமுருகன் தண்ணீர் பந்தலில் காவடிகள் இறக்கி டிராக்டர்கள் செட்டித்தெரு வீதியூடாக வெளியேற வேண்டும். 5. ஆலய வீதிச்சூழலில் வீதித்தடைகளுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல வாகன அனுமதி அட்டை மாநகர சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிரந்தர வியாபாரிகள் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 6. உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. 7. ஆலய வெளி வீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது. 8. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். 9. உற்சவ காலங்களில் ஆலய வெளி வீதி சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 10. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும். 11. உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. 12. ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு அமைவாக நல்லூர் திருவிழா நடைபெறுவதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188576
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிணை; முகநூல் நேரலைக்கும் தடை Published By: DIGITAL DESK 3 16 JUL, 2024 | 03:48 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுத்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை (16) மன்றில் நடைபெற்றது. அதன் போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்தார். வழக்கு விசாரணைகளை அடுத்து, வைத்தியரை 75ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்த மன்று, வைத்தியசாலைக்கு செல்லவோ, நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் முகநூல் நேரலையிலையோ, பதிவுகள் ஊடாக கருத்து தெரிவிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் மன்று விதித்துள்ளது. அதேவேளை வைத்தியர் அர்ச்சுனா குற்றம் சாட்டிய மற்றைய வைத்தியர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலங்களை வழங்குமாறும் மன்று கட்டளையிட்டது. அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்க தவறினாலோ, அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினாலோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு மன்று பணித்துள்ளது. https://www.virakesari.lk/article/188616
-
நான் அரசியலில் இருக்கும் வரை அனுரகுமார ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்க மாட்டேன் - லொகான் ரத்வத்தையின் கருத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்
Published By: RAJEEBAN 16 JUL, 2024 | 12:27 PM நான் அரசியலில் இருக்கும்வரை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தேர்தல்களில் தலையீடுகள் வன்முறைகள் குறித்த இலங்கையின் வரலாற்றை கருத்தில்கொள்ளும்போது இந்த அறிக்கையில் ஆபத்தான தொனி தென்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதை தடுப்பதற்கான உரிமை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ளாத அதேவேளை தேர்தலில் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் அல்லது அனுமதிக்கும் உரிமை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார். நான் அரசியலில் இருக்கும்வரை ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார். அனுரகுமார திசநாயக்க தனது மக்களிற்காக சிறிய கால்வாயையாவது கட்டியிருக்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நான் அரசியலில் இருக்கும்வரை அவர் ஜனாதிபதியாவதற்கு அனுமதிக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/188591
-
மட்டக்களப்பில் வெடிப்புச் சம்பவம் : இராணுவம், பொலிஸார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டின் அறையொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாரிய சேதங்கள் ஏற்படாத நிலையிலும் பாரியளவிலான சப்தம் மிக நீண்ட தூரத்துக்கு கேட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பூமியில் இருந்து விழுந்த நீல நிறத்திலான பொருள் ஒன்று வீட்டின் ஓட்டை உடைத்துக்கொண்டு சென்றதாக வீட்டில் தங்கியிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/306134
-
உலகில் பாம்புகளே இல்லையென்றால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கலாசாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மிகம் என பல தளங்களிலும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் உயிரினங்களுள் ஒன்று பாம்பு. இந்தியாவில் ‘நாக வழிபாடு’ என்பது பல பண்பாடுகளில், வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது. ஆனால், பாம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவேளையில், அதன் உருவம், அமைப்பு, ஊர்ந்து செல்லும் தன்மை என, பல காரணங்களுக்காக பாம்பு என்ற சொல்லைக் கேட்டாலே, முகம் சுழிப்பவர்களும் உண்டு. அதிகம் வெறுக்கப்படும் அஞ்சப்படும் உயிரினமாகவும் பாம்புகள் இருக்கின்றன. சிலவகை நச்சுப்பாம்புகள் மனிதர்களுக்கு வேண்டுமானால் தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம். ஆனால், பாம்புகள் நம்முடைய சூழலியலுக்கும் பலவழிகளில் நன்மை பயப்பதை அறியாமலேயே, நம் வாழ்விடங்களில் அவை நுழைந்தவுடனேயே அவற்றை கொல்வதை மட்டுமே ஒரு தீர்வாக கொண்டிருக்கிறோம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். நேரடியாக தாக்கிக் கொல்வது ஒருபுறமென்றால், பெருகிவரும் நகரமயமாக்கலால் அவற்றின் வாழ்விட அழிப்பு காரணமாக மறைமுகமாகவும் மனிதர்கள் பாம்புகளுக்கு ‘பகைவர்களாக’ விளங்குவதாக காட்டுயிர் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ‘பாம்புக்கும் பகைவர் பலர். மனிதனே முதல் பகைவன்’ இது, 1960-களில் தமிழகம், கேரளாவில் பாம்புகள் குறித்து நீண்ட ஆராய்ச்சிகளை செய்தவரும், இன்றளவும் பாம்புகள் குறித்த கையேடாக விளங்கும் ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்ற நூலை எழுதியவருமான பேராசிரியர் எம்.வி. ராஜேந்திரன், அந்த நூலில் குறிப்பிட்டிருப்பது. சூழலியலுக்கும் பல்லுயிர் தன்மைக்கும் பாம்புகள் அளிக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில், பாம்புகள் சூழலுக்கு ஏன் முக்கியம், அவை இல்லையென்றால் என்னவாகும் என்பது குறித்து இங்கு அறியலாம். படக்குறிப்பு,இந்தியாவில் மனித குடியிருப்புகளில் இறப்புகளை ஏற்படுத்துவது நான்கு வகையான பாம்புகள் தான் பாம்புகள் என்றல்லாமல், எந்த ஒரு உயிரினத்திற்கும் ஆற்றல் சங்கிலியில் அதற்கென தவிர்க்க இயலாத இடம் உண்டு. பாம்புகள் உணவுச்சங்கிலியில் முக்கியமானவையாக உள்ளன. குறிப்பாக, பாம்புகள் ஊனுண்ணியாக இருப்பதால், அவை பல உயிர்களை உட்கொண்டு, மற்ற உயிரினங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. பாம்புகள் முழுமையான புரத உயிரியாக இருப்பதால், மற்ற உயிரினங்களுக்கும் இது இரையாக இருக்கிறது. “ஆற்றல் சங்கிலியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்படும் முக்கியமான உயிரினமாக பாம்புகள் இருக்கின்றன. எனவே, உணவுச் சங்கிலியில் பாம்புகள் விடுபட்டுப் போனால் மற்ற உயிரினங்களுக்கான ஆற்றல் பகிர்வில் ஒரு இடைவெளி ஏற்பட்டு மற்ற உயிரினங்களுக்கு இடைவெளியை ஏற்படுத்துகிறது” என, அகத்திய மலை இயற்கைவள பாதுகாப்பு மையத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் முனைவர் அ. தணிகைவேல் தெரிவிக்கிறார். ‘இயற்கை பூச்சிக்கொல்லிகள்’ பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,கண்ணாடி விரியன் இதுதவிர, விவசாய நிலங்களில் பாம்புகள் ‘இயற்கை பூச்சிக்கொல்லிகளாக’ விளங்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் விவசாய நிலங்களில் எலிகள் போன்ற கொறித்துண்ணிகளை உண்டு, அவற்றை கட்டுப்படுத்தும் உயிரினமாக பாம்புகள் இருக்கின்றன. “எலி வலைகளுக்குள்ளேயே சென்று அவற்றை சாப்பிடுவதற்கு பறவைகளால் முடியாது, அந்த பணியை பாம்புகளால் தான் செய்ய முடியும்” என கூறுகிறார், தணிகைவேல். இறப்புகளை ஏற்படுத்தும் பாம்புகள் என்னென்ன? இந்தியாவில் மட்டும் 351 வகையான பாம்புகள் காணப்படுவதாகவும் அவற்றில் 141 பாம்புகள் தமிழ்நாட்டு பகுதிகளில் காணப்படுவதாகவும் கூறும் அவர், இந்தியாவில் 62 வகையான பாம்புகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளன என்கிறார். “இந்தியாவில் மனித குடியிருப்புகளில் இறப்புகளை ஏற்படுத்துவது நான்கு வகையான பாம்புகள் தான்” என கூறுகிறார் தணிகைவேல். அந்த நான்கு பாம்புகள்: கண்ணாடி விரியன், நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகம், சுருட்டை விரியன், கட்டு விரியன் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் பாம்புகள் குடியிருப்புக்குள் நுழைந்தால் என்ன செய்வது? முதலில் அச்சப்படாமல், பதற்றம் இல்லாமல் அவற்றுக்கு வெளியே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார், சென்னையை சேர்ந்த 24 வயதான பட்டதாரி மாணவி வேதப்பிரியா கணேசன். தன்னுடைய 14 வயதிலிருந்து பாம்புகளை மீட்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். “மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். அப்போதுதான் பாம்புகளை காயப்படுத்த மாட்டார்கள், கொல்ல மாட்டார்கள். பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்தால் ஜன்னல், கதவை பூட்டக் கூடாது. அப்படியே விட்டாலே அது பெரும்பாலும் வெளியே சென்றுவிடும்” என்கிறார் அவர். குடியிருப்புக்குள் கட்டட பொருட்கள், குப்பை கூளங்கள் இருந்தாலோ, சுவர்களில் ஓட்டை, இருட்டான பகுதிகள், புதர்களுக்குள்ளோ பாம்புகள் வருவதற்கான வாய்ப்புண்டு. எனவே, அவற்றை மக்கள் கவனிக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்புகளுக்கான ஆபத்துகள் பாம்புகளுக்கு நகரமயமாக்கத்தால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகிறார் முனைவர் தணிகைவேல். “மலைகளில் காணப்படும் பாம்பு வகைகளை நிலத்தில் காண முடியாது. குறிப்பாக நன்னீரும் கடல்நீரும் கலக்கும் கழிமுக பகுதியில் மட்டும் காணப்படும் பாம்பு வகைகள் உள்ளன. மரங்கள் அடர்ந்த பகுதிகளில் தான் பச்சை பாம்பு, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட பாம்பு வகைகள் இருக்கும். இப்படி குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே வாழக்கூடிய பாம்புகளின் வாழ்விடங்கள் நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் அழிக்கப்படுகின்றன. சாலை விரிவாக்கம் காரணமாக சாலை விபத்துகளாலும் பாம்புகள் இறக்கின்றன” என்கிறார் அவர். ஒருபுறம் மனிதர்கள் பாதிக்கப்படுவதுபோல் மறுபக்கம் பாம்பினங்கள் அரிதாகிப் போகின்றன. மனிதர்கள் கண்ணில்பட்டு பாம்புகள் மடிவதும், விவசாயத்தில் தெளிக்கப்படும் ரசாயனங்களும், காடுகள் சுருங்கி மனித குடியிருப்புகள் பெருகி வாழிடச்சூழல் அழிக்கப்படுவதால் பாம்பினங்கள் அருகிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. பாம்புகள் குறித்த விரிவான ஆய்வுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனடிப்படையில் மனித முரண்பாடுகளால் பாம்புகள் கொல்லப்படுவதும், பாம்புகள் கடித்து மனிதர்கள் இறப்பதையும் தடுக்க வேண்டும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். “இயற்கை வாழ்வியலில் இருந்து அந்நியப்பட்டு போன தலைமுறையினால் இப்பூவுலகில் பல்லுயிர் பெரும் அழிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் ஊர்வன இனத்தில் பாம்பினங்களும் அடங்கும்” என, விஸ்வா நாகலட்சுமி எழுதிய ‘ஐ பாம்பு’ புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ce7848ejly9o
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வைத்தியர் அர்ச்சானா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்துகள் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. தடை உத்தரவு மேலும், வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு அமைய இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதை வைத்தியர் அர்ச்சானா உறுதிப்படுத்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். https://tamilwin.com/article/doctor-ramanathan-archchuna-court-case-1721119677
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 02 யாழ் வைத்தியத்துறையில் மாத்திரமல்ல இலங்கை முழுவதிலும் பாரிய பிரளயத்தை ஏற்படுத்திவிட்டுள்ள வைத்திய காலநிதி அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய தேடல்களை மேற்கொண்டபோதுஇ பல அதிர்ச்சிகரமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. மருத்துவத்துறையை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற ஏராளமான சீர்கேடுகள்இ முறைகேடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்கள், குற்றச்சாட்டுக்கள்இ சந்தேகங்கள் போன்றனவற்றின் தொகுப்பு இது: தங்கமுட்டையிடும் வாத்து ஏக காலத்தில் உள்ளூர் தென்மராட்சி அபிவிருத்திக்கழகம் என்பதன் தங்கமுட்டையிடும் வாத்து என்ற தத்துவத்தினை அப்போதைய தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியின் குறிப்பாக மறைந்த ஒரு சாவகச்சேரி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தவிர வேறு யாருக்கும் இதன் விளைவுகளும் விபரங்களும் தெரியாது இருந்துள்ளனர். இன்று தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினை வைத்திருப்பவர்கள் நகரசபை ஆட்சியில் காத்திரமான இடங்களைப் பெறமுடியும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு உடைய சில பிரமுகர்கள் மல்லுக்கட்டி தென்மராட்சி அபிவிருத்தி கழக நிர்வாகத்திற்குள் நுழைந்திருக்கின்றார்கள். தற்போது நகர சபையை கைப்பற்ற வேண்டும் என்ற மமதையில் தமிழரசுக் கட்சியானது தனது வேட்பாளர் பெருமக்களையும் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வேட்பாளராக தென்மராட்சியின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவர் தலைமையில் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது. அவர்களது துரதிஸ்டம் தேர்தல் பின்சென்று விட்டது, இந்த ஊழல் முன்வந்து விட்டது. இது அவர்களது அரசியல் கனவில் நிச்சயம் மண் அள்ளிப்போடும் என்பது தவிர்க்க முடியாதது. தென்மராட்சி அபிவிருத்திக் கழகமானது உத்தியோக பற்றுடைய வகையில் தனது கணக்கிற்குள் உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது றோட்டறிக் கழகம் வழங்கிய நன்கொடைச் சாதனங்களுக்கு சொந்தங்கொண்டாடிக்கொண்டு அவை இயங்கவில்லை எனவும், அதற்கான சூழல் இல்லை எனவும் வைத்தியசாலை புதிய அத்தியட்சகர் தொடர்பில் பல விமர்சனங்களை தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் முன்வைக்கின்றது. அபிவிருத்தி கழக நிலைப்பாடுகள் அதன் விளைவே வைத்தியரது செயற்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி தென்மராட்சி அபிவிருத்தி கழக நிலைப்பாடுகளை பெறுநர் முகவரி அற்ற கடிதமாகவும் கையொப்பம் இட்டவரது பெயர், பதவி அற்ற கடிதமாகவும் வைத்திய அத்தியட்சகரை மலினப்படுததும் ஒரு ஆவணமாக வைத்திய அத்தியட்சகரது முகநூலில் அணைக்கப்பட்டிருந்தது. ஒரு பொது அமைப்பின் செயற்பாடு என்ன? சமூகத்தில் அதன் நோக்கம் என்ன? சமூகம் நோக்கிய அமைப்பின் தேவை என்ன? அதன் நிர்வாக ஒழுங்குகள் என்ன? என்பவற்றை அறிந்திராத ஒரு கட்டமைப்பே தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பதை இச்சிரத்தையல்லாத நடைமுறைகள் அனைத்தும் நிறுவி நிற்கின்றன. தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வைத்திய அத்தியட்சகருக்கு கடமை உத்தரவு இடும் அதிகாரம் உடைய வகையில் செயற்பட ஆரம்பிக்கும் போது வைத்திய அத்தியட்சகர் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கு எதிராக தனது கருத்துக்களை பகிர ஆரம்பிக்கின்றார். உண்மையில் சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழக நிர்வாகத்தினர் இது விடயம் தொடர்பில் கிலி கொள்ள தேவையிருக்கவில்லை, காரணம் அவர்களிடம் யாரும் நன்கொடையை வழங்கவும் இல்லை அவர்கள் யாருக்கும் நன்கொடைகள் வழங்கவும் இல்லை, அது தொடர்பில் அவர்களிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. இது எவையும் முறையாக கணக்கு வழக்கிற்குள் இலங்கையில் அகப்படவில்லை இவற்றுக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரிக்கும் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை. திட்டமிட்டு நடைபெறாத சத்திரசிகிச்சை மாறாக வைத்தியர் அருச்சுணா வெளியிட்ட காணொளியில் சத்திரசிகிச்சைக் கூட செயற்படுநிலை மற்றும் தென்மராட்சி அபிவிருத்திக கழக நன்கொடை பொருட்களது நிலை தொடர்பான அறிவித்தலைக் கண்டு பிரித்தானிய தென்மராட்சி அபிவிருத்தி கழக அறக்கட்டளைத் தலைவர் வைத்தியர் கடும் குழப்பம் அடைகின்றார். 2024 ம் ஆண்டு இவ்வருடம் அவுஸ்திரேலிய றோட்டறிக் கழகத்தின் பிரதிநிகள் இருவரும், இலங்கை றோட்டறிக் கழகத்தினரும் இணைந்து செயற்திட்ட இறுதிப்பாடுகள் மற்றும் இயங்குநிலை தொடர்பிலான இறுதி அறிக்கைக்கான அவதானத்திற்காக கள விஜயத்தினை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மேற்கொள்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் வெலவெலத்துப்போன பிரித்தானிய அறக்கட்டளைத் தலைவர் உடனடியாக அப்போது வைத்தியசாலையில் அத்தியட்சகராக இருந்த வைத்தியர் குமாரவேள் அவர்களைத் தொடர்புகொண்டு உடனடியாக இந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக்கூடம் இயங்குவதை போன்றதொரு ஏற்பாட்டினை மேற்கொண்டு ஆய்வுக்கு வருபவர்களுக்கு அதனை இயங்கு நிலையில் உள்ளது என்ற தோரணையில் அறிக்கையிட அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் வண்ணம் மன்றாட்டமாக வேண்டிக்கொள்கின்றார். உடனடியாகவே வைத்தியசாலை சத்திரசிகிச்சைக்கூடம் தயாராகின்றது. சத்திரசிகிச்சைக்கு உட்படும் நோயாளியைத் தவிர ஏனைய விடயங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றது. இந்த செக்கனில் நோயாளி உள்ளீர்க்கப்பட்டாலும் சத்திரசிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக உணரவைப்பதற்காக உள்ளிருந்த வைத்தியர்கள் தாதியர்கள் முகக் கவசம் கூட அணிந்து தயார்நிலையில் நோயாளிக்காக காத்திருப்பதுபோல் களவிஜயக் காரருக்காக காத்திருக்கவைக்கப்பட்டனர். முகக்கவசம் அணிவிக்கபட்டது, கிருமித் தொற்றுக்காக அல்ல களவிஜயகாரருக்கு காண்பிக்கப்பட்ட போலி ஆளணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுவிடக்கூடாது என்ற உத்திக்காக ஏற்பாடுகள் என்பது பின்நாட்களில் தான் தெரியவந்தது. இவ்வாறு திட்டமிட்டு நடைபெறாத சத்திரசிகிச்சையை நாடகமாக நிகழ்த்திக்காட்டிய பிரித்தானிய அறக்கட்டளைத் தலைவர் இவ்விடயம் தற்போது வெளிவருவது தனக்கு ஆபத்து என உணர்ந்து தற்போதைய சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருடன் சாவகச்சேரியில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் எவ்வதிதத்திலும் கருத்து மோதலிலோ சேறு பூசலிலோ முற்படவேண்டாம். அமைதி காத்து நடவுங்கள் என அறிவுறுத்தி பல சூம் கூட்டங்களையும் வைத்தியர் மேற்கொண்டிருந்தார். புனிதராக்கும் பணி இதில் ஒரு சாரார் பிரித்தானியாவில் இருந்து நிதி கிடைக்காவிட்டால் இங்கே நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால் அமைதியாக அவரது கருத்தை செவிமடுத்து அவரைப் புனிதராக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இன்னும் ஒரு சாரார் வைத்தியசாலைக்குள் இருக்கும் ஏனைய வைத்தியர்கள் குறிப்பாக பொது வைத்திய நிபுணரது ஆலோசனைக்கு அமைவாக பொது மக்களது எண்ணக் கருத்துக்களை பிரதிபலிப்பது போன்றதொரு அழுத்தத்தினை தென்மராட்சி அபிவிருத்தி கழகம் ஊடாக வைத்திய அத்தியட்சகர் மீது பிரயோகித்தர்கள். இவைஅனைத்தும் ஒரு கட்டத்திற்கு மேல் எடுபடவில்லை. வைத்திய அத்தியட்சகர் தனது செயற்பாடு மக்கள் வரவேற்பை பெற்றுக்கொள்கின்றது என்பதையும் தனது நியாயமான செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிக்கின்றார்கள். மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றார்கள் என்றவிடயத்தினை அறிந்து தனது நிர்வாகப் படிமுறைகளை தாண்டியும் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார். நிர்வாக சிக்கல்கள் இவ்வாறு நாட்கள் நகர நகர உள்ளக சிக்கல்கள் வலுத்தவண்ணம் முன்னகர்கின்றது. 03.07.2024 மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவை நியமித்து ஒரு கடித்துடன் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்கின்றார். ஏற்கனவே மத்திய அரசால் பெயர் குறித்து பதவியில் ஒருவர் உள்ள நிலையில் மேலும் ஒரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து நிர்வாக சிக்கல்கள் ஒன்றினை தனக்கு இல்லாத அதிகாரத்தினை அமுல்ப்படுத்தி உருவாக்கியிருக்கின்றார். இதனை மேற்கொள்ளுமாறு எந்தவொரு உத்தியோகப்பற்றுடைய அறிவுறுத்தல்களும் மத்திய அரசில் இருந்து மாகாண சபைக்கு அத் திகதிவரை உத்தியோகபற்றுடையவகையில் அனுப்பிவைக்கப்பட்டிருக்கவில்லை. மத்திய சுகாதார அமைச்சின் வைத்திய அத்தியட்சகர் குறித்த கடிதத்திற்கு அமைவாக மாகாண பணிப்பாளரது வைத்திய அத்தியட்சகருக்கு கடமைகளை கையளிக்க முடியாது என்றும், தனக்கு நியமனம் வழங்கிய மத்திய அரசினால் அந் நியமனம் மீளப்பெற்று அல்லது மாற்றத்திற்கு உட்பட்டால் மாத்திரமே தான் அதனை கவனத்தில் கொள்வேன் எனவும் இவர்களைத் திருப்பி அனுப்பிவைக்கின்றார். தவறான அதிகாரப்பிரயோகத்தினால் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பத்திற்குள் கொண்டுசென்றது மாகாண சுகாதார வேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவே. நிர்வாக ரீதியாக மாகாணம் மற்றும் மத்திய அரசு மோதலை தனக்குரிய அதிகாரக் கையளிப்பு அற்ற நிலையில் தவறாக பிரயோகித்து திட்டமிட்ட முறையில் வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் செயற்பாடுகளுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே அழைத்துச் சென்றிருக்கின்றார். இவ்வாறு இருக்கையில் மறுநாள் 04 ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலைக்குரிய கடமை வைத்தியர்கள் அனைவரும் கடமையை புறக்கணித்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அறிக்கையிடுகின்றார்கள். அவர்கள் அனைவரும் விடுதி கண்காணிப்பு, வெளியக நோயளர் பிரிவு மற்றும் கிரமமான சிகிச்சைக்குரிய நோயாளர்கள் அனைவருக்குமுரிய சேவைகள் அனைத்தையும் முடக்கிவிடுகின்றார்கள். குறித்த தினத்திலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் தனியான வைத்திய அத்தியட்சகரால் கவனிக்கப்படுகின்றது. விடயம் அடுத்த நிலைக்கு சென்று பணிப்பகிஸ்கரிப்புக்கள் தொடரும் நிலையிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்ப்பாண தொழிற்சங்க நிர்வாகத்தினர் சிலர் மறுதினம் சாவகச்சேரி வைத்திய சாலைக்குள் சென்று அங்கே ஒரு குழுக்கலந்துரையாடலை மேற்கொள்கின்றார்கள். இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர், மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் உட்பட ஒரு தொழிற்சங்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு அலுவலக வளாகத்தினுள் தொழிற்சங்க நிமித்தம் பிற அங்கத்தவர்கள் கலந்துகொள்வதாயின் குறித்த நிறுவனத் தலைவரது அனுமதிபெற்றே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தவிர அன்றைய தினம் குறித்த தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது கடமைகளில் முறையாக விடுப்பு பெற்றே கலந்துகொண்டிருக்க வேண்டும். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகள் பதிவு தனது வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்தறிய சென்ற வைத்திய அத்தியட்சகர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.மாவட்ட பிரதிநிதி சட்டவைத்திய அதிகாரி மயூரன் அவர்களால் தாக்கப்பட்டு அவரது பணமும் கையடக்க தொலைபேசியும் மாகாணப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனையவர்கள் முன்னிலையில் பறித்தெடுக்கப்படுகின்றது. இவ்விடயம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒரு முறைப்பாடும் வெளியில் இருந்து வருகை தந்தவர்கள் இரண்டு முறைப்பாடும் மேற்கொண்டுள்ளனர். இங்கே கவனிக்க வேண்டிய விடயம் நிர்வாக கட்டமைப்புக்கு உட்பட்டு வைத்திய அத்தியட்சகருக்கு மாத்திரமே பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளும் தகுதி இருந்திருக்கின்றது. ஏனைய இருவரும் பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்வதாயின் சில அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ள முடியும். சமநிலையற்ற நீதியின் ஆரம்பம் அந்த வகையில் எவையும் இடம்பெறவில்லை. காரணம் மாகாண சுகாதார வைத்தியப் பணிப்பாளர் ஒரு சகோதர மொழிக்குரியவர் என்பதால் ஏனைய இரு முறைப்பாடுகளும் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்டன. குறைந்தபட்சம் கடமையில் உள்ள ஒருவர் மீது அவரது வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் கடமைக்கு பங்கம் விளைவித்தல் என்பன உறுதிசெய்யப்பட்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றததில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இங்கே அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் பொலிஸாரல் மேற்கொள்ளப்படவில்லை.பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டுள்ளனர் என்பது மிகவும் உறுதியாகின்றது. தொடரும்..... https://tamilwin.com/article/background-chavakachcheri-hospital-controversies-1721005850
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா! இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு முதன்முறையாக ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ் – பாரிஸ் நகரில் நேற்று (15) அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஒலிம்பிக் தீபத்தை 2.5 கிலோமீற்றர் தூரம் அவர் ஏந்திச் சென்றதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் சுவையான பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306160
-
ஆனைக்கோட்டையின் தொன்மையான நாகரிகம் பற்றிய உண்மைகள் வெளிவரும் - பேராசிரியர் புஸ்பரட்ணம்
ஆனைக்கோட்டையின் பூர்வீக - தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது - ஆனைக்கோட்டையில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகுறித்து - வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் 16 JUL, 2024 | 11:55 AM ஆனைக்கோட்டையின் பூர்வீகதொன்மையான நாகரீகம் எப்போதிலிருந்து வளர்ந்து வருகின்றது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளதாக வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் பூர்வீகக் குடியிருப்பு மையங்கள் பற்றி தென்னாசிய தொல்லியலாளர்களால் அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 1980 ஆம் ஆண்டு பேராசிரியர் ரகுபதி அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் பேராசிரியர் இந்திரபாலா பேராசிரியர் சிற்றம்பலம் பேராசிரியர் கிருஷ்ணராஜா பல்கலைக்கழக நூலகராக இருந்த ஆ.சிவனேசசெல்வன் ஆகியோரும் மற்றும் பொருளியல் புவியியல் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தும் மாணவர்களதும் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரண்டு மனித எலும்பு கூடுகளும் அதன் ஒரு எலும்புக்கூட்டின் தலை மாட்டுப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முத்திரை மோதிரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தொல் பொருட்களையும் 1988 ஆம் ஆண்டு நாம் முழுமையாக இழந்துவிட்டோம். கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்கு பிறர் வருகின்ற போது பெருமையோடு காட்டக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஆனைக்கோட்டையின் அகழ்வு இடம் கருத்தில் கொள்ளக்கூடியதாக இன்று வரை இருக்கவில்லை. இந்த நிலையில் தான் 1980 களின் பின்னர் பலரால் ஆனைக்கோட்டையில் அகழ்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்பி இருந்தாலும் அந்த விருப்பம் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. 1980 களில் இலங்கையில் மட்டுமின்றி தென்னாசியாவிலும் அகழ்வாய்வுக்குரிய நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கவில்லை. இப்பொழுது நவீன தொழில் நுட்பவசதிகள் பல மாற்றங்களோடு வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த வசதிகள் அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம் என்று பெருமை கொள்ளாவிட்டாலும் முடிந்த அளவு நவீன வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் ஒரு விஞ்ஞான பூர்வமான மிகப்பெரிய ஒரு அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதில் நாம் திருப்தி அடைய இடம் உண்டு. ஆனைக்கோட்டையில் இந்த அகழ்வாராய்ச்சியானது 20.06.2024 இல் சம்பிரதாய பூர்வமாகத் தொடங்கிய பொழுது அதனை முக்கியப்படுத்தி ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தும் அங்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி பலருக்கு எழுகின்ற அதே நேரத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தான் ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை என்ற விமர்சனங்களும் வருகின்றன. இந்த நிலையில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பிருந்து பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் எனப்பலரும் அங்கு வருகைதந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கு வந்து சில புகைப்படங்களை எடுத்து தமது முக நூல்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் எனினும் நாங்கள் எங்களுடைய செய்திகளை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இலங்கைத் தொல்லியல் சட்டத்தில் ஓர் அகழ்வாய்வுக்கு அனுமதி வழங்குகின்ற பொழுது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் பொதுவானவை. அதில் ஒரு நிபந்தனை அகழ்வாய்வு முடிந்து அதன் பெறுபேறுகள் சரியாக ஆவணப்படுத்துவதற்கு முன்னர் அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்பதாகும். நாங்கள் ஒரு தொல்லியல் ஆய்வாளர் என்ற வகையில் தொல்லியல் கட்டுப்பாடுகளுக்கு கட்டுண்டு நடக்கும் பொருட்டு, நாங்கள் இதுவரை செய்திகளை வெளியிடவில்லை. எனினும் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதும் அதை இட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேள்வி எழுப்புவதும் விசாரணை செய்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவற்றை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் சில விடயங்களை இங்கே நாங்கள் குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது. இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. நாலாவது கலாச்சார மண்ணடுக்கில் பெறுமதியான பல தொல்பொருள் சான்றுகள் வருகின்றன. அந்தத் தொல்பொருள் சான்றுகளை தொடர்ந்து அகழ்வு செய்யப்படுகின்ற போது ஆனைக்கோட்டையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆதி இரும்புக்கால அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் முன்னைய ஆய்வுகளில் கிடைக்காத அரியவகையான பல சான்றாதாரங்களும் கிடைக்கின்றன. இதில் அயல் நாடுகளுக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடையிலான தொடர்புகளையும் உறவுகளை அறியக் கூடிய சான்றுகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆனைக்கோட்டையில் கிடைக்கின்ற சான்றுகளை வைத்து பார்க்கும் போதுஇ 1970களில் விமலா பேக்லி என்ற பெஞ்சில்வேனிய பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் கந்தரோடையில் அகழ்வு செய்த போது அவற்றின் கண்டுபிடிப்புகளை வைத்து கந்தரோடையில் வாழ்ந்த பூர்வீக மக்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கலாம் அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் தமிழகத்து மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம். இந்த பண்பாட்டுக்குரிய மக்கள், கந்தரோடையிலிருந்து புத்தளம் வரை பரவி வாழ்ந்திருக்கலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தார். அந்தக் கருத்தை எமது அகழ்வுகள் மேலும் உறுதி செய்கின்ற அதே நேரத்தில் இந்த பண்பாட்டுக்கு முன்னரும் மக்கள் வாழ்ந்து இருக்கலாம் என்ற ஒரு சமிக்ஞை அல்லது சில ஆதாரங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு உண்டு. தொடர்ந்தும் நாங்கள் அகழ்வு செய்யும் பொழுது தான் அவற்றை உறுதிப்படுத்தலாம். இந்த அகழ்வின் போது கண்டறியப்பட்ட சில மாதிரிகளை நாங்கள் நவீன காலக்கணிப்புக்கு உட்படுத்த இருக்கின்றோம். அந்தக் காலக் கணிப்புகள் மூலம் ஆனைக்கோட்டையின் பூர்வீக-தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அகழ்வாய்வு முடிந்து ஓரிரு வாரங்களுக்குள் நாங்கள் அறிக்கையாக நூலாக தொல்லியல் திணைக்களத்துக்கு சமர்ப்பிப்போம். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களுக்குமான உண்மைகளை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம். அதுவரை இந்த அகழ்வு பற்றி அங்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றி நாங்கள் வெளியிடுவது தொல்லியல் சட்ட விதிகளுக்கு முரணானது என்பதனால் அதை நாங்கள் மதித்து இந்த அகழ்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். புலம்பெயர் நிதிப்பங்களிப்புடனும் யாழ்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் இவ் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த 1980 ஆய்வுகளின் பங்கெடுத்தவரான வரலாற்றுத்துறையின் விரிவுரையாளராக அப்போதிருந்த சுப்பிரமணியம் விசாகன் தற்போது இலண்டனில் வசிப்பவர், இவ்விடத்தில் மீண்டும் ஓர் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தார் தற்போது இவ் எண்ணம் நிறைவேறி வருவதைக் காணலாம். இவ்வாய்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறையின் நான்காம் மூன்றாம் இரண்டாம் வருட மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாண தென்னிலங்கை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் பங்கு பற்றி வருகின்றனமை மகிழ்ச்சி அளிக்கின்றது. பட உதவி - ஈழத்துவரலாறும் தொல்லியலும் முகநூல் https://www.virakesari.lk/article/188585
-
யுத்தகுற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை - 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எங்கே? சரத்பொன்சேகா கேள்வி?
Published By: RAJEEBAN 16 JUL, 2024 | 10:56 AM முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா யுத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒருசம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் விசாரணையை தொடரமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதியுத்தத்தின்போது உயிர்தப்பினார்கள் அவர்களை நான் பாதுகாப்பாக வெளியேற்றினேன் முதலில் 2009 மே 19ம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலில் இருந்து 150,000 பேரை மீட்டேன், யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 85000 பேரை மீட்டேன் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா நாங்கள் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தவிர்த்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் கனரக ஆயுதங்களை ஆட்டிலறிகள் போன்றவற்றை மிகவும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினோம், குறிப்பாக 2009ம் ஆண்டின் ஐந்து மாதங்களில் அவ்வாறே போரிட்டோம் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009 இல் 2000 படையினரை இழந்தேன் என குறிப்பிட்டுள்ள அவர் 2008 ம் ஆண்டு முழுவதும் நான் 2000 படையினரை இழந்தேன் ஆனால் 2009 இன் நான்கரை மாதங்களில் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டதால் நான் 2000 படையினரை இழந்தேன் என தெரிவித்துள்ளார். அவர்கள் அந்த சிறிய பகுதிக்குள் முற்றுகையிடபட்டிருந்தார்கள் எங்களால் ஒரு மாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம் கண்மூடித்தனமாக பொதுமக்கள் உட்பட அனைவரின் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தால் ஒருமாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம், ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை நாங்கள் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டோம் அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக இந்த உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தகவல்கள் உண்மையென்றால் நீங்கள் அந்த பகுதியில் எங்கு சென்றாலும் மனித புதைகுழிகளை பார்க்க கூடியதாகயிருக்கவேண்டும், ஆனால் அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை என குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை நீங்கள் நம்பவில்லையா? பதில் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்னால் நிராகரிக்க முடியாது, நான் இது குறித்து நாடாமன்றத்திலும் பேசியுள்ளேன், இரண்டு முறை பேசியுள்ளேன். சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை மோதலின் போது இடம்பெறவில்லை யுத்தத்தின் பின்னரே இடம்பெற்றன. https://www.virakesari.lk/article/188578
-
இலங்கைக்கு வருகை தந்தார் யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம்!
16 JUL, 2024 | 10:30 AM ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை (16) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவருடன் மேலும் மூவர் வருகைதந்துள்ளதுடன் அவர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்தித்து இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். அதேவேளை இலங்கை யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கொழும்பிலுள்ள நெலும் பொக்குனவில் நடைபெறவிருக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்பவுள்ளார். அதுமாத்திரமன்றி யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். https://www.virakesari.lk/article/188568
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
உள்ளூரில் ஓரளவு ஆட்களை விசாரித்து உறுதிப்படுத்தலாம் அண்ணை. புதிய இடங்களில் அறிவு சொல்வதை விட மனம் இரங்கினால் செய்துவிட வேண்டியது தான். நண்பர் ஒருவர் கடன் தொகை கூடி(வட்டி குட்டி போட்டு) தற்கொலை செய்யும் நிலையில் இருந்தார். கனடிய நண்பன் ஒருவன் பல இலட்சம் கொடுத்து உதவியதோடு பகுதி பகுதியாகத் தருமாறு கூறி இருந்தான். 3 ஆண்டுகள் ஆகியும் ஒரு ரூபா கூட திருப்பி வழங்கவில்லை. இதே நண்பரின் நிலையை அறிந்து வேறு நண்பர்களிடம் அவர் பேசிய காணொளியை தனிப்படப் பகிரந்திருந்தேன். அவர்களும் உதவி இருக்கிறார்கள், ஆனால் இவர் எனக்கு சொல்லவில்லை. சற்று வருத்தமாக இருந்தாலும் அவருடைய நிலை இப்போது நன்றாகிவிட்டதை நினைத்து நிம்மதி.
-
யாழ். தீவகத்தில் திறந்து வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம்
யாழ்ப்பாணம் (Jaffna) தீவகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் (Disabilities) எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கான அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு - மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தில் நிறுவன ஸ்தாபகர் அன்ரன் செபராசா ஜெயானந்தன் தலைமையில் குறித்த அலுவலகம் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. மாற்றுத் திறனாளிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பொது அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், புலம்பெயர் உறவுகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை மாற்றுத் திறனாளிகள் மாற்றத்தை ஏற்படுத்த உருவெடுத்தவர்கள், இன்றைய சமூகத்தில் பல இழிவான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்ற காலகட்டத்திலும் முன்னுதாரணமாக செயற்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் என நிறுவன ஸ்தாபகரும் புங்குடுதீவு மாற்று திறனாளிகள் சங்க செயலாளரும் கருத்து தெரிவித்திருந்தார். https://ibctamil.com/article/office-for-disabilities-persons-opened-in-island-1721043232
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி : சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். சுகாதார அமைச்சு கோரிக்கை அவர் மேலும் தெரிவிக்கையில் ''அரசாங்கமும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மத்திய அமைச்சின் கீழ் இல்லாத அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான 2 அல்லது 3 வருட செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் இதற்கான நிதியுதவிக்கான கோரிக்கைகளை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அதற்கான பொறுப்பினை நான் எடுத்துக் கொள்வேன். அத்துடன் இந்த செயற்திட்டத்திற்கான தயாரிப்பாளராக என்னை இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதாரத் துறையில் மாற்றம் அடுத்து நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென கேட்டிருந்தேன். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது. அந்த செயற்திட்டத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்படும். என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே இது வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, தவறிழைக்கும் வைத்தியர்களுக்காகவும் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.'' என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/chavakachcheri-hospital-protest-win-doctor-archuna-1721031825
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி கொடுத்த 21 வயது இளைஞன்: விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2 6-2 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார். இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ் வெற்றிகொண்டுள்ளார். இதன்மூலம் 21 வயதான கார்லோஸ் அல்கராஸ் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், விம்பிள்டன் பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்த முதல் ஸ்பெயின் வீரர் என்ற சாதனையையும் கார்லோஸ் அல்கராஸ் பெற்றுள்ளார். அல்கராஸ் தற்போது பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் சாம்பியனாக உள்ளார், இந்த சகாப்தத்தில் இரண்டு போட்டிகளையும் வென்ற ஆறாவது நபர் பெருமையை அவர் பெற்றுக்கொண்டார். விம்பிள்டன் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுக்கு விம்பிள்டன் கோப்பையை பிரித்தானிய – வேல்ஸ் இளவரசி கேட் வழங்கினார். இதேவேளை, இறுதிப் போட்டியைக் காண குறைந்த டிக்கட் 10,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/306044
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
Trump-ஐ சுட்டது இவர் தான்; FBI சொல்லும் நபரின் பின்னணி என்ன? யார் இந்த Thomas Maththew crooks? அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 20 வயது மதிக்கத்தக்க தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரின் பெயரை எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரின் பின்னணி என்ன?
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
விம்பிள்டன் சம்பியனாகியதை நம்ப முடியவில்லை - பார்பரா க்ரெஜ்சிக்கோவா! 15 JUL, 2024 | 12:58 PM (ஆர்.சேதுராமன்) விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை நான் வென்றதை தன்னால் நம்ப முடியாதுள்ளது என விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் புதிய சம்பியன் பார்பரா க்ரெஜ்சிக்கோவா கூறியுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலிய வீராங்கனை ஜெஸ்மின் பவ்லினியை 6:2, 26, 64 விகிதத்தில் க்ரெஜ்சிக்கோவா வென்றார். 28 வயதான செக் குடியரசு வீராங்கனையான க்ரெஜ்சிக்கோவா விம்பிள்டன் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்றமை இதுவே முதல் தடவை. 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அவர் விம்பிள்டன் இரட்டையர் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தார் இரட்டையர் போட்டிகளில் 7 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். அதேவேளை இது அவரின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதற்குமுன் 2021 பிரெஞ்சு பகிரங்கத் தொடரின் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அவர் வென்றார். விம்பிள்டன் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் பார்பரா க்ரெஜ்சிக்கோவா பேசுகையில், நான் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியதை எவரும் நம்பமாட்டார்கள் என எண்ணுகிறேன். நான் விம்பிள்டன் பட்டத்தை வென்றதையும் எவரும் நம்பமாட்டார்கள். என்னாலும் இதை நம்ப முடியாதுள்ளது' என்றார். காயங்களினால் பாதிக்கப்பட்டிருந்த க்ரெஜ்சிக்கோவா கடந்த 5 மாதங்களில் 3 ஆட்டங்களில் மாத்திரம் வென்ற நிலையில் இவ்வருட விம்பிள்டனில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/188494
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
England-க்கு தொடரும் சோகம்; Messi-க்கு அடுத்தடுத்து Cup; Euro & Copa America Final-ல் என்ன நடந்தது? England-க்கு தொடரும் சோகம்; Messi-க்கு அடுத்தடுத்து Cup; Euro & Copa America Final-ல் என்ன நடந்தது? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
யூரோ 2024 சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின், பலிக்காமல் போன இங்கிலாந்தின் 58 வருடப் போராட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணி என்ற சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஃபில் மெக்நல்டி பதவி, பெர்லினில் இருந்து 9 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் 58 ஆண்டுகாலக் கால்பந்துக் கனவு மீண்டும் பலிக்காமல் போயிருக்கிறது. யூரோ 2024 கால்பந்துக் கோப்பையை அந்த அணி ஸ்பெயினிடம் பறிகொடுத்தது. பெர்லினின் ஒலிம்பியாஸ்டேடியன் அரங்கத்தில் நடந்த யூரோ 2024 (Euro cup) கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. 58 ஆண்டுகால வலி மற்றும் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இங்கிலாந்து கால்பந்து அணியின் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 2020 யூரோ போட்டிகளில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து கோப்பையைப் பறிகொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றை பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் நிக்கோ வில்லியம்ஸின் கோல் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் விளையாடின. ஆனால் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர்கள் ஒன்றிணைந்து, இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த அணி முன்னணி பெற உதவினர். 47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ். தரையோடு தரையாக சென்ற அந்த பந்து கோல் ஆனது. லாமின் யமால் பந்தை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் பாஸ் செய்து இருந்தார். அதனை வில்லியம்ஸ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மீண்டும் ஏமாற்றமளித்தார், ஆட்டம் தொடங்கிய 61 நிமிடங்களில் அவர் வெளியேறினார். அவருக்கு மாற்றாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார். சரியாக ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில், கோபி மைனூவுக்கு பதிலாக உள்ளே நுழைந்த கோல் பால்மர், அடுத்த மூன்று நிமிடங்களில் ஒரு அபாரமான கோலை அடித்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். எவ்வாறாயினும், அடுத்த சில நிமிடங்களில் இங்கிலாந்து அணியிடமிருந்து வெற்றியைப் பறித்தது ஸ்பெயின். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சோகத்தில் இங்கிலாந்து அணி தகர்ந்த இங்கிலாந்தின் கோப்பை கனவு ஜெர்மன் தலைநகரில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், வலுவான ஸ்பெயின் அணி இங்கிலாந்தின் கோப்பைக்கான கனவைத் தகர்த்தது. அரங்கத்தில் ஸ்பெயின் ஆதரவாளர்களை விட இங்கிலாந்து ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இங்கிலாந்து அணியின் சீருடையில் ரசிகர்களைப் பார்க்கும்போது அரங்கமே வெள்ளைக் கடல் போலக் காட்சியளித்தது. தங்களது நீண்ட கால ஆவல் நிறைவேறி, இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அவர்கள் குவிந்திருந்தனர். 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மரின் அட்டகாசமான ஷாட் கோல் இங்கிலாந்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தது, ரசிகர்களின் நம்பிக்கையும் அதிகரித்தது. முன்னதாக யூரோ 2024 போட்டிகளில் ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்திற்கு எதிரான போட்டிகளில், சரிவிலிருந்து மீண்டு வந்து வென்றது இங்கிலாந்து. அதேபோல இம்முறையும் நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முறை தோல்வியிலிருந்து தப்பிக்க முடியவில்லை, 86-வது நிமிடத்தில் குர்குலே பாஸ் செய்த பந்தை ஸ்பெயினின் மைக்கெல் கோலாக மாற்றினார். அடுத்த நான்கு நிமிடங்களில் ஸ்டாப்பேஜ் டைம் நிறைவடைந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அதன் மூலம் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது உறுதியானது. சவுத்கேட் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இந்த எட்டு ஆண்டுகள் முழுவதும் அணியில் வளர்ச்சியும் நம்பிக்கையும் இருந்தபோதிலும், உண்மையான வெற்றியை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத்கேட் தொடரும் 58 ஆண்டுகால போராட்டம் இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிக்கு எதிராகவும், இந்த முறை வலுவான ஸ்பானிஷ் அணியுடனும். அத்துடன் இரண்டு உலகக் கோப்பை அரையிறுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது (2018 மற்றும் 2022-இல் கத்தாரில்). அடுத்த உலகக் கோப்பை வரை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் சவுத்கேட் இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி இங்கிலாந்தின் பயிற்சியாளருக்கு ஒரு பெரும் ஏமாற்றம் என்று தெரிகிறது. மூன்று கோல்களை அடித்ததன் மூலம் யூரோ 2024 'கோல்டன் பூட்' (Golden boot) விருது வாங்கிய வீரர்களில் இங்கிலாந்து கேப்டன் கேன் இடம்பெற்றிருந்தார். ஆனால் மற்ற எல்லா வகையிலும் இந்த போட்டி இங்கிலாந்து கேப்டனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இங்கிலாந்தின் ரசிகர்கள், இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அரையிறுதிப் போட்டியின் நட்சத்திர வீரரான ஒல்லி வாட்கின்ஸ்-ஐ ஆட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று சத்தமாக கோரிக்கை வைத்தனர். பெனால்டி சமயத்தில் கேன் மிகவும் மெதுவாக செயல்பட்டபோது, யாருக்கு பதிலாக வாட்கின்ஸை உள்ளே கொண்டுவர ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. பயிற்சியாளர் சவுத்கேட் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். கேன் வெளியேற்றப்பட்டார். அவர் தனது கால்பந்து பயணத்தில் முதல் பெரிய கோப்பையை வெல்லும் தருணத்திற்காகத் தொடர்ந்து காத்திருக்கிறார். ஆனால் உள்ளே வந்த வாட்கின்ஸால் இந்த முறை மேஜிக்கை நிகழ்த்த முடியவில்லை. சவுத்கேட் மற்றும் அவரது வீரர்கள் மீண்டும் ஒரு வலுவான அணியிடம் தான் கோப்பையை இழந்துள்ளனர். இப்போது அவர்கள் மற்றொரு வெற்றியைப் பெற 2026 உலகக்கோப்பை வரை காத்திருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை லமைன் யமால் வென்றார். ஸ்பெயினின் இளம் வீரர்கள் இந்தத் தொடரில் இங்கிலாந்து தோல்வியடைய மற்றொரு முக்கியமான காரணம் ஸ்பெயினின் இளம் வீரர்கள். இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது. யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் நிமிடத்திலிருந்தே ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டார். ஸ்பெயினின் மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரமான யமால் பந்தை பாஸ் செய்து, தொடக்க கோலுக்கான வாய்ப்பை வழங்கியபோது அதைத் தவறாமல் பயன்படுத்தினார் நிக்கோ வில்லியம்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் 22 வயதான நிக்கோ வில்லியம்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் தனது 17-வது பிறந்தநாளைக் கொண்டாடிய யமால், மீண்டும் ஒருமுறை தனது வயதுக்கு அப்பாற்பட்ட முதிர்ச்சியுடன் விளையாடி, ஸ்பெயின் அணி வெற்றிபெற உதவியுள்ளார். தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை லாமின் யமால் வென்றார். இந்த இறுதிப் போட்டியில் 22 வயதான நிக்கோ வில்லியம்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார். யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் படைத்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/czd9j2kk2l4o
-
தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவையில் போராட்டம்
Published By: DIGITAL DESK 3 15 JUL, 2024 | 04:54 PM மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று திங்கட்கிழமை (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிபடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது. இதன்போது பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரையின் உருவப்படம் எரிக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ ஹட்டன் வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சுமார் மூன்று மணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு,பொகவந்தலாவ நகர வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கினர். https://www.virakesari.lk/article/188528