Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/304090
  2. பூரன் துடுப்பாட்டத்திலும் மெக்கோய் பந்துவீச்சிலும் அபாரம்; ஆப்கனை 104 ஓட்டங்களால் வென்றது மே. தீவுகள் 18 JUN, 2024 | 10:04 AM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் 104 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. இந்தப் போட்டியுடன் ரி20 உலகக் கிண்ணத்தில் குழுநிலைக்கான முதல் சுற்று நிறைவுக்கு வந்தது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட சி குழுவிலிருந்து தகுதிபெற்றிருந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிக்கலஸ் பூரனின் அதிரடி அரைச் சதம், ஒபெட் மெக்கோயின் துல்லியமான பந்துவீச்சு என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்த 7 பந்துவீச்சாளர்களை ஆப்கானிஸ்தான் பயன்படுத்திய போதிலும் அது பலனளிக்கவில்லை. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். இங்கிலாந்துக்கு எதிரான பி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவும் நெதர்லாந்துக்கு எதிரான டி குழு போட்டியில் இலங்கையும் பெற்ற 201 ஓட்டங்களே இதற்கு முன்னர் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய இணை மொத்த எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ப்ரெண்டன் கிங் (7) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், அதன் பின்னர் நிக்கலஸ் பூரன், ஜோன்சன் சார்ள்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட மழை பொழிந்தனர். 2ஆவது விக்கெட்டில் ஜோன்ஸன் சார்ள்ஸுடன் 37 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்த நிக்கலஸ் பூரன் 4ஆவது விக்கெட்டில் ரோவ்மன் பவலுடன் மேலும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நிக்கலஸ் பூரன் சதம் குவிக்க 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது இல்லாத இரண்டாவது ஓட்டத்தை பெற முயற்சித்து 98 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். 53 பந்துகளை எதிர்கொண்ட நிக்கலஸ் பூரன் 6 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசியிருந்தார். நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தனி நபருக்கான அதிகூடிய ஓட்டங்களை நிக்கலஸ் பூரன் பெற்றதுடன் ஒரு போட்டி யில் அதிக சிக்ஸ்களை விளாசிய மைல்கல் சாதனையையும் நிலைநாட்டினார். அவரைவிட ஜோன்சன் சார்ள்ஸ் 27 பந்துகளில் 43 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 17 பந்துகளில் 25 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் 15 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் 7ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட குல்பாதின் நய்ப் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியைத் தழுவியது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும். இப்ராஹிம் ஸத்ரான் (38), அஸ்மத்துல்லா ஸத்ரான் (23), அணித் தலைவர் ரஷித் கான் (18), கரிம் ஜனத் (14) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஒபெட் மெக்கோய் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்கீல் ஹொசெய்ன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரன். https://www.virakesari.lk/article/186328
  3. இது ஒரு உண்மைச் சம்பவம் என்று நினைக்கிறேன். அடிக்கு மேல அடியா? எப்படித்தான் இவ்விழப்புகளில் இருந்து மீழ்வது.
  4. Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 04:17 PM இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை காணப்படுகின்றது என சமூக அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். மக்கள் போராட்ட முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. மக்கள் போராட்ட முன்னணிக்கு வடகிழக்கு மக்கள் போராட்ட ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். மிக நீண்டகாலமாக 25 வருடங்களிற்கு மேலாக தமிழர்கள் தங்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுதொடர்பிலும் தங்களிற்கு எதிராக தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைக்கு எதிராக தீர்வு தொடர்பாகவும் சிங்கள பேரினவாத அரசுகளோடு பேசி போராடி உயிர்களை இழந்து இறுதியாக ஒரு பெரும் விரக்திமனோநிலையை அடைந்துள்ளனர். இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை தான் காணப்படுகின்றது. ஏனென்றால் தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கோரிக்கைகள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாமல் வெறுமனே மீண்டும் ஒற்றையாட்சிக்குள் ஒரு மூன்றாம்தர இனமாக வடகிழக்கு மக்கள் நடத்தப்படவேண்டும் என்ற அதேசிந்தனையோடு பலர் தங்கள் அரசியல் விஞ்ஞாபனங்களை தயார் செய்துகொண்டிருக்கின்றார்கள். மறுபக்கத்தில் சிங்கள தலைவர்கள் தென்னிலங்கையில் ஒன்றை கூறிவிட்டு வடகிழக்கில் வந்து அதிகாரபரவலாக்கம் தொடர்பான நாடகங்களை ஆடுவது இன்றுவரை தொடர்கின்றது. மக்கள் போராட்ட முன்னணிக்கான களத்தை உருவாக்கும்போது என்னுடைய சிங்கள நண்பர்களிற்கு மிகத்தெளிவாக கூறிய விடயம் இதுதான்- முன்னர் செய்தது போல ஏனைய தலைவர்கள் செய்தது போல நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்ற முடியாது என்பதே. நாம் எமது விடயங்களை தெளிவாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறுவதோடு மாத்திரமல்லாமல் சிங்கள மக்களிற்கு அரசியல் அதிகாரபரவலாக்கம் தொடர்பான மிகத்தெளிவான விடயங்களை முன்வைக்கவேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்துள்ளேன். அந்த அடிப்படையில் சுயாட்சியுடன் கூடிய தன்னாட்சி அதிகாரம்மிக்க அலகுகளை சுய ஆட்சியொன்றை ஏற்படுத்தும் அலகுகளை உருவாக்குவதற்கான அடிப்படை வரைபுதிட்டம் முன்மொழியப்பட்டுள்ளது அது மாத்திரமின்றி ஒற்றையாட்சி முறை முற்றாக நீக்கப்பட்டு இந்த நாட்டில் எண்ணிக்கை அடிப்படையில் குறைவாகயிருக்ககூடிய மற்றைய இனங்கள் அரசியல் அதிகாரமொன்றை பெறும்வகையில் நாடாளுமன்றத்திற்கு சமமான அதிகாரம் உள்ள சபைகள் உருவாக்கப்பட்டு பௌத்தசிங்கள பேரினவாதத்தால் உருவாக்கப்படுகின்ற நாடாளுமன்றத்தினால் அவர்களை நசுக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் சார்பாக முடிவெடுக்க முடியாது என்ற அடிப்படையில் அதிகாரங்கள் மீளப்பெறமுடியாத ஒரு தீர்வுதிட்டம்முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் ஒருமொழிக்கான முன்னுரிமை ஏனைய மொழிகளை புறக்கணித்தல் போன்ற விடயங்கள் குறித்த சரியான திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்பிலே கூறப்பட்டுள்ள ஒரு மதத்திற்கான முன்னுரிமை என்பது நீக்கப்படவேண்டும். அனைத்து மதங்களிற்குமான சம உரிமை மற்றும் மதங்கள் அரசியல் தலையீடு செய்யக்கூடாது என்பவற்றை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அதுமட்டுமின்றி யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளான காணாமல் ஆக்கபட்டோர்இயுத்தக்குற்றங்கள் யுத்தத்தால் உயிரிழந்தவர்கள் அவர்களிற்கான பொறுப்புக்கூறல் ஏற்கனவே விட்ட பிழைகளை ஏற்றுக்கொள்ளுதல் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை முன்வைத்தல்அந்த தீர்வை தொடர்ந்து எங்களை அடுத்த கட்ட நிலைக்கு முன்னோக்கி கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் மிகவும் தீர்க்கமாக ஆராயப்பட்டு எழுத்துவடிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் மிகநீண்டகாலமாக கேட்டுக்கொண்டிருந்த மிக முக்கியமான விடயங்களிற்கு மிகவும் காத்திரமான பதில்கள்இநாங்கள் முன்னோக்கி செல்லக்கூடிய அணிகள் எங்களுடன் இணைந்திருக்கின்றன. ஒரு வடக்குகிழக்கு தமிழர் என்ற அடிப்படையில் இந்த கூட்டணியின் மேல் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஏற்கனவே நாங்கள் பல தரப்பட்ட ஏமாற்றங்களை சந்தித்திருந்தாலும் நான் மிக நீண்டகாலம் இவர்களுடன் இணைந்து செயற்படுகின்றேன்எங்களுடைய பிரச்சினைகளை இவர்கள் நன்கறிவார்கள்சரியான பாதையில் தமிழ் மக்களை ஏமாற்றாமல் இவர்கள் பயணிப்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன். இந்த நாடு முன்னேற சரியான ஒரு அதிகாரபரவலாக்கலை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் அது குறித்து இன்னமும் நாங்கள் பேசுவோம்வடகிழக்கு தமிழர்களுடன் நீண்ட உரையாடல்களி;ற்காக நாங்கள் காத்திருக்கின்றோம். https://www.virakesari.lk/article/186467
  5. நாடுமுழுவதும் பதிவு செய்யப்படாத சுமார் 5,000 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட 19,000 பாரம்பரிய வைத்தியர்களும், 4,500 பதிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்களும், 3,000 டிப்ளோமா ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத வைத்திய சபைக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் பாரம்பரிய வைத்திய முறையை முறைப்படுத்தும் வகையில், உள்ளுர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து பாரம்பரிய வைத்தியர்களை பதிவு செய்யும் பணியை எதிர்வரும் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304086
  6. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 02:29 PM யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/186459
  7. 18 JUN, 2024 | 12:18 PM அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்று (ஜூன் 17) அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் உலக நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளன. அந்த வகையில் இந்த நாடுகளின் வசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஆண்டுதோறும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் கைவசம் உள்ள நியூக்கிலியர் வார்ஹெட்டின் எண்ணிக்கை 172 என உள்ளது. இது கடந்த ஜனவரி மாத கையிருப்பின் தகவல். பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதத்தின் எண்ணிக்கை 170 என உள்ளது. கடந்த 2023-ல் இந்தியா தனது அணு ஆயுதங்களை விரிவு செய்ததாகவும், இதற்கு நவீன முறையை பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை எட்டும் வகையில் அணு ஆயுதம் சார்ந்த மேம்பாடுகளை இந்தியா மேற்கொண்டு உள்ளதாகவும் தகவல். உலகளவில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வசம் அணு ஆயுதங்கள் அதிகம் உள்ளன. மேலும், உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை இந்த இரண்டு நாடுகளும் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும் போது சீனாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்காக கடந்த ஓராண்டில் மட்டும் உலக நாடுகள் சுமார் 91.3 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா சுமார் 2.7 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 51.5 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள சீனா 11.9 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. உலக அளவில் தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9,585 என உள்ளது. இதில் சீனா வசம் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 410 என இருந்துள்ளது. https://www.virakesari.lk/article/186352
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜூனா மூன் பதவி, பிபிசி கொரியா 18 ஜூன் 2024 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வட கொரிய பயணம் செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது பல மாத ஊகங்களுக்குப் பிறகு ரஷ்ய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. புதின் கொரிய நகரமான பியாங்யாங்குக்கு செல்லவிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் (Vostochny Cosmodrome) நடந்த உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, `கிம் ஜாங் உன்’னின் அழைப்பை புதின் ஏற்றுக்கொண்டார். கொரியாவில் புதின் பங்கேற்க இருக்கும் உச்சி மாநாடு உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரஷ்யா-வடகொரியா நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் அளவு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட கொரியாவின் அணுசக்தி வளர்ச்சி மற்றும் மேம்பட்ட ஆயுதப் பரிமாற்றங்களை புதின் எவ்வாறு கையாள விரும்புகிறார் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும். தென் கொரியாவில் உள்ள வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் கிம் டோங்-யுப் கூறுகையில், "இந்த உச்சி மாநாடு, உறுதியான விளைவுகளை உருவாக்கும் ஆழமான உரையாடல்களுக்கான இடமாக இல்லாமல் ஒரு நிகழ்வாக இருக்க கூடும்” என்றார். ராணுவம் : ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை, வடகொரியாவுக்கு தொழில்நுட்பம் தேவை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்யாவின் எல்லையில் அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் விளைவாக வட கொரியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் அதிகம் சார்ந்துள்ளன. கொரியா பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் துறையின் பேராசிரியரான டாக்டர் நாம் சுங்-வூக்கின் கருத்துப்படி, "அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய தலைப்புகளில் ஒன்று, வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு எவ்வளவு அதிகமாக வழங்கப்படும்" என்பதுதான். வழக்கமான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு அப்பால் இம்முறை பேச்சுவார்த்தை சில முக்கிய முடிவுகளை எட்டக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாடு உட்பட நெருக்கமான ராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார் அவர். ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஈடாக வட கொரியா உணவு, எரிபொருள் ஆகியவற்றை விட அதிகமாக எதிர்பார்க்கும் என்று நம்பப்படுகிறது. மே மாதம் வடகொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த சந்திப்பின் போது, விண்வெளி தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் உதவியை வடகொரியா கோரக்கூடும் என்று டாக்டர் நாம் சுங் கணித்துள்ளார். விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா, வடகொரியாவின் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவியாக இருக்கும். வடகொரியா தனது உளவு செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவும் ரஷ்யாவின் ஆதரவை நாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அணு ஆயுதங்கள் பற்றிய எந்த பேச்சுவார்த்தையும் வெளிப்படையாக நடக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் நாம் சுங் நம்புகிறார். மேற்கத்திய ஆயுதங்கள் யுக்ரேனுக்குள் நுழைவது மற்றும் ரஷ்ய நிலப்பரப்பை அச்சுறுத்துவது குறித்து புதின் முன்னெச்சரிக்கை உணர்வு கொண்டவர். எனவே அணு ஆயுதங்களின் சாத்தியமான பயன்பாடு குறித்து ஆலோசனைகளை அவர் வழங்கி உள்ளார். எவ்வாறாயினும், கொரியாவிலும் வடகிழக்கு ஆசியாவிலும் அணுசக்தி தொடர்பான ஒத்துழைப்பு அல்லது அணு ஆயுதங்களைப் பகிர்வது என்பது ரஷ்யாவுக்கு அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்” என்று டாக்டர் நாம் கூறுகிறார். எனவே, இந்த உச்சிமாநாட்டில் அணுஆயுதங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் வெளிவர வாய்ப்பில்லை. பொருளாதார ஒத்துழைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாஸ்கோவில் முன்பு இயங்கி வந்த வடகொரிய உணவகம் ‘கொரியோ’ ரஷ்யாவும் வடகொரியாவும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. டோங்-ஏ பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான டாக்டர் காங் டோங்-வான் கருத்துப்படி, "வடகொரியாவிற்கு ரஷ்யாவிடம் இருந்து தற்போது மிகவும் தேவைப்படுவது தொழிலாளர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயம் ஆகும். இதனால் வடகொரியா அதிகளவிலான தொழிலாளர்களை ரஷ்யாவிற்கு அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்றார். ரஷ்யாவை பொருத்தவரை போரினால் சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் உள் கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவும் சீரமைக்கவும் அதன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் தொழிலாளர்கள் தேவை. "யுக்ரேன் போருக்காக புதிய படைகள் திரட்டப்பட்டதாலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்றதாலும் ரஷ்யா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், வட கொரியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று டாக்டர் காங் கூறுகிறார். எவ்வாறாயினும், வட கொரியாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதாரத் தடைகளின்படி வட கொரிய தொழிலாளர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் 22 டிசம்பர் 2019 க்குள் திருப்பி அனுப்புவதை அது கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, வட கொரிய தொழிலாளர்களை பணியமர்த்த அதிகாரப்பூர்வமாக முயற்சிகள் மேற்கொண்டால், அது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். சர்வதேச பின்னடைவு மற்றும் ராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை சர்வதேச அளவில் அனைவரும் உற்று நோக்குகின்றனர். கலாசார பரிமாற்றம்: வட கொரியாவின் சுற்றுலா வளர்ச்சியடைகிறதா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வட கொரியாவையும் சீனாவையும் பிரிக்கும் யாலு ஆற்றின் மீதுள்ள ப்ரோக்கன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்கின்றனர் கோவிட் -19 தொற்றுநோய் சூழல் காரணமாக பிப்ரவரி 2020 இல் இருந்து இடைநிறுத்தப்பட்ட வட கொரியாவிற்கு செல்லும் `குழு சுற்றுலா’ பயணங்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது. வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக ஜூன் 6 ஆம் தேதி வடகொரியா - ரஷ்யா இடையிலான ரயில் சேவைத் தொடங்கியது. 400 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி மற்றும் மே 2024 க்கு இடையில் வட கொரியாவுக்குச் சென்றுள்ளனர் என்று ரஷ்ய பிராந்தியமான ப்ரிமோர்ஸ்கி க்ராயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய சுற்றுலா நிறுவனம் ஒன்று (Vostok Intur), அதன் இணையதளத்தில் 750 டாலருக்கு (ரூ.62,571) வட கொரியாவிற்கு நான்கு முதல் ஐந்து இரவு சுற்றுலாப் பயணத்தை வழங்குகிறது. இந்த சுற்றுலா ஏஜென்சி செப்டம்பர் மாதம் வரை வட கொரியாவிற்கு குழு சுற்றுப்பயணங்களை திட்டமிட்டு வருகிறது. இதில் பெக்து மலை, வட கொரிய வரலாற்று தளங்கள் ஆகிய பகுதிகளை பார்வையிடுவது, கொரியப் போரின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது ஆகியவை அடங்கும். "சுற்றுலா துறை என்பது வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, மக்களிடையே நேரடி பயணங்கள் மூலம் உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் டோங்-யூப் பிபிசியிடம் கூறினார். வட கொரியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சர்வதேச அளவில் அதன் மீதான ஆபத்தான நாடு என்னும் பிம்பத்தை மென்மையாக்க உதவும் என்றும் அவர் கருதுகிறார். எனவே, வட கொரிய சுற்றுலா என்பது சமூக-கலாசார பரிமாற்றத்தின் முக்கிய வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதன் பொருளாதார நன்மைகள் மட்டுமின்றி நாட்டின் பிம்பத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சில சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து, வட கொரியாவுக்கான குழு சுற்றுப்பயணங்களை ரத்து செய்த சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. மே 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நான்கு நாள் குழு சுற்றுப்பயணம் பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக ரஷ்ய பயண நிறுவனம் வோஸ்டாக் இன்டூர் சமீபத்தில் அறிவித்தது. வட கொரியாவின் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டினரின் சுதந்திர நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் சுற்றுலாத் துறையின் விரிவாக்கத்திற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. வட கொரியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் சுற்றுலா ஒத்துழைப்பைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பேராசிரியர் காங் நம்புகிறார். புதினின் 2020 பயணம் எப்படி மாறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வடகொரியாவுக்கு முதல்முறையாக சென்ற அதிபர் புதின், 2000-ம் ஆண்டு அந்நாட்டு தலைவர் `கிம் ஜாங் இல்' அவர்களை சந்தித்தார் 2000 ஆம் ஆண்டில், அதிபர் புதின் முதன்முறையாக வடகொரிய தலைநகரான பியாங்யாங்கிற்குச் சென்று வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-ஐ சந்தித்தார். பனிப்போர் முடிவடைந்த பின்னர் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு அது. அந்த நேரத்தில், ரஷ்யா சர்வதேச அரங்கில் மீண்டும் தலைதூக்க முயன்றது, அதே நேரத்தில் 1990களில் வட கொரியாவில் ஏற்பட்ட "தி ஆர்டியஸ் மார்ச்" என்று அழைக்கப்படும் பஞ்சத்தின் பாதிப்பில் இருந்து வெளிவர முயற்சி செய்து கொண்டிருந்தது. வெளி உலகத்துடன் அதன் தொடர்புகளை அதிகரிக்க முயற்சித்தது. இரு தலைவர்களும் ரஷ்ய-கொரிய கூட்டு பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர், இது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை மையமாக கொண்டிருந்தது. வட கொரிய ஏவுகணை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது, மேலும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாக பேசப்பட்டது. ராணுவ ஒத்துழைப்பைப் பொருத்தவரை, இரு நாடுகளும் ஆக்கிரமிப்பு அல்லது ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக இரண்டு நாடுகளும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். தொடர்பளவில் இருக்கும் ஒத்துழைப்பு இம்முறை இன்னும் முறையான கூட்டாண்மையை மேம்படுத்தும் என கருதுகின்றனர். "கடந்த காலங்களில், வட கொரியாவின் ராணுவ ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட போது புதின் வடகொரியாவுக்கு பயணம் செய்தார். இருப்பினும், யுக்ரேனில் நடந்த போரை அடுத்து வட கொரியாவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ராணுவ உறவுகள் வலுப்பெற்றுள்ளன" என்று டாக்டர் நாம் விளக்குகிறார். உச்சி மாநாடு "கடந்த காலத்தை விட மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பை, கிட்டத்தட்ட ஒரு கூட்டணியை" உருவாக்கும் என்கிறார் அவர். டாக்டர் நாமைப் பொறுத்தவரை, வட கொரியா இப்போது அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்பதே புதினின் கடந்த கால பயணத்துக்கும் 2024 பயணத்துக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு. ரஷ்யாவும் வட கொரியாவும் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைப்பதன் மூலம் அமெரிக்காவை மையமாக கொண்ட ஒற்றைத் துருவ அமைப்பு ( unipolar system) வீழ்ச்சியடைய தொடங்கும் போது, தேசிய நலன்களை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பின் புதிய வழிகளைக் கண்டறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று டாக்டர் கிம் கூறுகிறார். "கொரிய நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முறிவு காரணமாக, வட கொரியா புதிய ராஜதந்திர உத்தியை வகுக்கும் வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cl44xnlkr50o
  9. Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 12:45 PM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக அரகலய போராட்ட குழுவினர் மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே முன்னணி சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த புதிய அரசியல் இயக்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இன்று இந்த புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பிப்பது குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள வசந்த முதலிகே அரகலய போராட்டம் கடந்த காலத்தில் அமைப்புமுறை மாற்றத்தை கோரியே முன்னெடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஜனாதிபதி தற்போதைய முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். ஸ்திரதன்மை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ள வசந்த முதலிகே நாளாந்த வாழ்க்கையில் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்காலத்திற்கு புதிய அரசியல் அமைப்பினை அறிமுகப்படுத்தும் நோக்குடன் புதிய அரசியல் இயக்கத்தினை உருவாக்கியுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186441
  10. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 01:47 PM யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால், காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கல்லுண்டாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன், பௌசர் சாரதியையும் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பௌசர் பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் காரைநகர் பகுதிக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். அதனால், தண்ணீர் பௌசரை பொலிஸார் விரைவில் நீதிமன்றில் பாரப்படுத்தி, வாகனத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186450 தண்ணிச்சாமி முச்சக்கரவண்டிச் சாரதியின் தப்பிற்கு அப்பாவி மக்கள் குடிநீர் இன்றித் தவிக்கும் நிலை!
  11. ஜப்பான் முழுவதும் தற்போது பரவிவரும் “சதை உண்ணும் பக்டீரியா“ நோய் தொடர்பாக இலங்கை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை இந்த நோயால் சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமிதாகினிகே, இந்த நோய் கடுமையாக பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் இது ஒரு அசாதாரணமான நிலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர், பல்வேறு வகையான பக்டீரியாக்கள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவுகின்ற போதிலும் அதில் சில வகையான பக்டீரியாக்கள் சிகிச்சையளிக்க கூடியது என்பதை பொதுமக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் குறித்த தொற்று பரவல் ஆபத்தை ஏற்படுகிறது. மற்றும் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு விரைவாக முன்னேறலாம். ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும், இது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த இரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு மற்றும் விரைவான இதய துடிப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு ஆளாக்கலாம். பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் தோராயமாக 30 சதவிகிதம் என்றும் ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 30 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும், வெளிவரும் எந்தவொரு சுகாதார அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வைத்தியர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304073
  12. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 03:41 PM திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கமைய நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை பெறுவதற்கு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அனுமதி வழங்கியுள்ளார். பியூமி ஹன்சமாலியின் இந்த வங்கி கணக்குகள் எட்டு முன்னணி வங்கிகளில் உள்ளன. 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொழும்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பியூமி ஹன்சமாலியின் பல வங்கிக் கணக்குகளில் குறுகிய காலத்தில் வைப்பிலிப்பட்ட நிதியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186463
  13. Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 11:29 AM ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான முழுமையான யுத்தம் குறித்து இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் இராணுவ சிவில் கட்டமைப்புகளை காண்பிக்கும் வீடியோக்களை ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையே ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளது. நாங்கள் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் லெபானிற்கும் எதிரான விளையாட்டின் விதிமுறைகளை மாற்றும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். முழுமையான யுத்தமொன்றில் ஹெஸ்புல்லா அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். லெபனான் மோசமாக தாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் இஸ்ரேலின் ஹெய்பா நகரின் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை காண்பித்துள்ளது.வணிக வளாகங்கள் உயர்மாடிக்கட்டிடங்கள் போன்றவற்றையும் ஹெஸ்புல்லா அமைப்பு காண்பித்துள்ளது.இந்த நகரம் லெபான் எல்லையி;ல் தென்பகுதியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹெய்பா நகரில் உள்ள இஸ்ரேலின் இராணுவகட்டுமானங்களையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் காண்பித்துள்ளது. ஹெய்பா நகரில் உள்ள இஸ்ரேலின் இராணுவகட்டுமானங்களையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் காண்பித்துள்ளது. ஏவுகணை பாதுகாப்பு ஐயர்ன் டோம்கள் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் ராடர் பகுதிகள் கடற்படை படகுகள் கப்பல்கள் போன்றவற்றையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது வீடியோவில் காண்பித்துள்ளது. ஹெய்பா துறைமுகத்தின் சில பகுதிகளை படம்பிடித்துள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு பெருமிதம் வெளியிட்டுள்ளது ஹெய்பா துறைமுகத்தினை சீனா இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் இயக்குகின்றன என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186429
  14. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு Published By: VISHNU 19 JUN, 2024 | 02:29 AM இலங்கைக்கு எதிர்வரும் 20ஆம் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவாகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காலநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/186414
  15. வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய வரி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது; எதிர்க்கட்சித் தலைவர் 18 JUN, 2024 | 03:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரி செலுத்த வேண்டிய பல முன்னணி வியாபாரிகள் பலர் வரிக்கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் அவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு இலட்சத்தி 20ஆயிரம் கோடி ரூபா வரை வரி செலுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதனால் வரி அறவிடும் முறையை முறையாக மேற்கொண்டால் புதிய வரி கொள்கைகளை அறிமுகப்படுத்த தேவை ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், அரச வருமானத்தை அதிகரித்து ஒரு இலக்குக்கு கொண்டுவர வரி அதிகரிப்பு பிரேரணைகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரி செலுத்த முடியுமான பலர் வரி கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர். அவர்களை உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி அறவிடும் நடவடிக்கையை மிகவும் செயற்திறமையாகவும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். அதனை டிஜிடல் மயமாக்க வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துபவர்களை முறையாக இனம் கண்டு அதன் நடவடிக்கைகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியும். ஆனால் கடந்த வருடம் மாத்திரம் ஒரு கோடிக்கும் அதிக வரி செலுத்த வேண்டிய முன்னணி வியாபாரிகள் ஒரு இலட்சம் பேருக்கு வரி சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரி சலுகை வழங்காமல் இருந்தால் புதிய வரி அறிமுகப்படுத்த வேவைப்பாடு இருக்காது. புதிய வரி மூலம் அரசாங்கம் 60ஆயிரம் கோடி இலாபத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு இலட்சத்தி 20ஆயிரம் கோடி ரூபா வரி செலுத்துவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் வரி செலுத்தாமல் இருப்பது, வரி செலுத்துவதை தவிர்த்து வருவது மற்றும் வரி நிவாரணம் வழங்குதல் இவற்றை சரி செய்துகொண்டால், அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் வரி தேவைப்படாது என நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒரு கோடி ரூபாவை தாண்டிய 4200பேர் வரி செலுத்துவதை தவிர்த்துள்ளனர். அவர்களின் வரிகளை அறவிட்டுக்கொள்ள ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என கேட்கிறேன். அதேபோன்று சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 23 பேர்களில் 5பேர் வரி செலுத்துவதை தவிர்த்து வரும் சந்தர்ப்பத்தில் அவர்களின் சாராய விற்பனை அனுமதி மத்திரத்தை இரத்து செய்யக்கூட அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. இவர்கள் 700கோடி ரூபா வரி செலுத்துவதை தவிர்த்துள்ளனர். இவர்களின் அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்தால், நிச்சயமாக இவர்கள் வரி செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள். எனவே வரி செலுத்துவதை தவிர்த்து வருபவர்களிடமிருந்து முறையாக வரியை அறவிட்டுக்கொள்ளவும் வரி செலுத்த தகுதி இருந்தும் அவர்கள் இதுவரை வரி கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் இருப்பவர்களை வரி கொள்கைக்குள் உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு தேவையான வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம். அதனை ஏன் அரசாங்கத்தினால் செய்ய முடியாது என்பதை நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/186372
  16. Published By: VISHNU 19 JUN, 2024 | 01:28 AM விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த சம்பவமொன்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் காணாமல் போன நிலையில் காட்டுப்பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்ஸபான தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய சிறுவனே டங்கல் காட்டுப்பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (18) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (17) மாலை சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பதற்றமடைந்த ஊர்மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததுடன் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். டங்கல் மேற் பிரிவில் திருமண நிகழ்வொன்றுக்கு லக்ஸபான தோட்டத்திலிருந்து வந்த உறவினர்களின் பிள்ளையான சிவதாஸ் அபிசான் என்ற நான்கு வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான். இந்நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் வனபாதுகாப்பு துறையினரால் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ டி.வி காணொளியில் சிறுவன் ஒருவன் காட்டுப்பகுதியில் நடந்து செல்வது பதிவாகியிருந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த சிறுவனை கண்டுபிடித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்குட்படுத்த டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிறுவன் காணாமல் போனமை யாராயின் திட்டமிட்ட செயல்பாடா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186409
  17. Published By: VISHNU 18 JUN, 2024 | 08:03 PM ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார். ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பௌத்த மதத்தின் இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மறுசீரமைப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (18) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட புதிய பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் இன்று கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆண், பெண் சமத்துவச் சட்டமூலம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அதுதொடர்பில் கிடைத்துள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்களுக்கு சம உரிமை இல்லை. நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான பெண்களால் அந்த உரிமையைப் பெற முடியாது என்பது, இந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரான தீர்மானமாகவே கருத முடியும் என நான் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து ஒப்பந்தங்களிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது வேறு எந்த அமைப்பும் தலையிட முடியாது. அந்தப் பணியை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். எனவே இது தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இன்று நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று, அந்தத் தீர்மானத்தினால் பௌத்த மதத்தின் பாதுகாப்பு நீக்கப்படலாம் என்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாம் அதுகுறித்து அவதானம் செலுத்தி செயற்பட்டு வருகிறோம். https://www.virakesari.lk/article/186408
  18. பட மூலாதாரம்,NASA/GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவை சேர்ந்த ஃபிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் கிரே பதவி, பிபிசி 18 ஜூன் 2024 விண்வெளியில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர், 371 நாட்கள் பயணம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு சுற்றுப்பாதையில் இருப்பது, விண்வெளி வீரர்களின் தசைகள், மூளை, குடல் பாக்டீரியா ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் உடலை சில ஆச்சர்யகரமான வழிகளில் மாற்றும். சில கைகுலுக்கல்கள், சின்ன ஃபோட்டோஷூட் மற்றும் கையசைத்தலுடன், 371 நாட்கள் தனக்கு வீடாக விளங்கிய, அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அளவையொத்த விண்கலம் மற்றும் சோலார் பேனல்களுக்கு பிரியாவிடை அளித்தார் நாசா விஞ்ஞானி ஃபிராங்க் ரூபியோ. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பிய அவருடைய பயணத்தின் நிறைவு, இதுநாள் வரை அமெரிக்கர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட விண்வெளிப் பயணமாக உள்ளது. விண்வெளியில் 355 நாட்கள் பயணம் என்பதே அமெரிக்கரின் முந்தைய சாதனை ஆகும். மார்ச் 2023-ல் ஃபிராங்க் ரூபியோவும் அவருடைய குழுவும் மீண்டும் பூமி திரும்பும் தருணத்தில், அவர்களின் விண்கலத்திலிருந்து குளிர்விப்பான் (coolant) கசிந்ததால், அவர்களின் விண்வெளிப் பயணம் நீட்டிக்கப்பட்டது. விண்வெளியில் கூடுதலாக தங்க நேர்ந்ததால், ரூபியோவால் பூமியை சுற்றி 5,963 சுற்றுகளும் 157.4 மில்லியன் மைல்களும் (253.3 மில்லியன் கி.மீ) பயணிக்க முடிந்தது. இருந்தாலும், மனிதரால் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணத்தை முறியடிக்க அவருக்கு சுமார் இரண்டு மாதங்கள் குறைவாக உள்ளன. ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி போல்யகோவ், 1990களின் மத்தியில் மிர் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு விண்வெளியில் 437 நாட்கள் தங்கினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சோயுஸ் எம்எஸ்-23 எனும் விண்கலம் மூலம் ரூபியோ பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினார். குறைவான புவி ஈர்ப்பு சூழல் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கியதால் அவரின் உடலில் ஏற்பட்ட விளைவால், கேப்ஸ்யூலில் இருந்து அவர் மீட்புக்குழுவினரால் தூக்கிக் கொண்டு வரப்பட்டார். நீண்ட கால விண்வெளிப் பயணங்களை எப்படி சமாளிப்பது என்பதற்கான முக்கியமான தகவல்களையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் அவருடைய இந்த பயணம் வழங்கியுள்ளது. விண்வெளியில் குறைவான ஜிம் உபகரணங்களுடன் உடற்பயிற்சி செய்வது மனித உடலை எப்படி பாதிக்கும் என்ற ஆராய்ச்சியில் பங்கேற்ற முதல் விண்வெளி வீரர் இவரே. ஆனால், விண்வெளியில் நீண்ட காலம் தங்குவது மனித உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? தசைகள் மற்றும் எலும்புகள் பட மூலாதாரம்,NASA/GETTY IMAGES படக்குறிப்பு,துணை உந்துகலன்கள் மற்றும் பாராசூட்கள் ஆகியவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு இறங்குவதை மெதுவாக்கினாலும், அந்த பயணம் மிகவும் கடினமாக இருக்கும் நம் கை, கல்களில் தொடர்ச்சியாக புவி ஈர்ப்பு விசையின் இறுக்கம் இல்லாததால், தசைகள் மற்றும் எலும்புகளின் எடை விரைவிலேயே குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக, முதுகு, கழுத்து, பின்னங்கால், தொடையிலிருந்து காலை நீட்டிக்கும் தசை ஆகியவை பாதிப்படைந்து, மெலிய ஆரம்பிக்கும். வெறும் இரண்டு வாரங்களிலேயே தசைகளின் எடை 20% வரை குறைந்துவிடும். விண்வெளியில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தங்கியிருக்கும்போது 30% வரை குறையும். அதேபோன்று, பூமியில் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசை காரணமாக எலும்பு மண்டலத்திற்கு போடப்படும் அதிக வலுவை விண்வெளியில் விஞ்ஞானிகள் அளிக்காததால், எலும்புகளில் கனிம நீக்கம் நடைபெற்று, அவை வலுவிழக்க ஆரம்பிக்கும். விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் விண்வெளி வீரர்கள் 1-2% எலும்பின் எடையை இழக்கின்றனர், ஆறு மாத காலத்தில் சுமார் 10% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர். (பூமியில் வயதான ஆண்கள் மற்றும் பெண்கள், ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% வரை எலும்பின் அடர்த்தியை இழக்கின்றனர்). இது எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிலிருந்து குணமடைவதற்கான நேரம் அதிகமாவதற்கும் வழிவகுக்கிறது. பூமிக்குத் திரும்பிய பின்னர் அவர்களின் எலும்பின் அடர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம். இதனைத் தடுக்க சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் ஒருநாளைக்கு 2.5 மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில், ஸ்குவாட், எடை பயிற்சிகளும் அடங்கும். மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக சில மாத்திரைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இத்தகைய உடற்பயிற்சிகளும் தசை செயல்பாடு மற்றும் அதன் எடையில் ஏற்படுத்திய இழப்புகளை தடுப்பதில் போதுமானதாக இல்லை என சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. வலுப் பயிற்சியில் அதிக எடைகளை பயன்படுத்துதல், HIIT எனப்படும் அதி தீவிர பயிற்சிகள் இத்தகைய தசையிழப்பை தடுப்பதில் உதவுமா என்பதை பரிசோதிக்க வேண்டும் என அந்த ஆராய்ச்சி பரிந்துரைத்துள்ளது. விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும்போது, அவர்களின் முதுகுத்தண்டு சிறிது நீட்சியடைவதால் கொஞ்சம் உயரம் அதிகரிக்கவும் செய்கிறார்கள். இதனால், விண்வெளியில் இருக்கும்போது முதுகுவலி ஏற்படுகிறது. பூமிக்குத் திரும்புவதற்கு முன்னதாக, தனது முதுகெலும்பு வளர்ந்து வருவதாக ரூபியோ கூறினார். உடல் எடை குறைதல் பட மூலாதாரம்,NASA/GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்காட் கெல்லியின் 340 நாள் பயணம், பூமியில் உள்ள தனது இரட்டை சகோதரருடன் ஒப்பிடும்போது விண்வெளி அவரை எவ்வாறு பாதித்தது என்பதை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை அனுமதித்தது. சுற்றுப்பாதையில் இருக்கும்போது ஆரோக்கியமான எடையை பராமரிப்பது ஒரு சவால். நாசா அதன் விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையான சத்தான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய முயற்சிக்கிறது. மிக அண்மையில் விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்படும் சில சாலட் இலைகள் உட்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவையும் விண்வெளி வீரரின் உடலை பாதிக்கும். ஸ்காட் கெல்லி, ஒரு நாசா விண்வெளி வீரர். அவரது இரட்டை சகோதரர் பூமியில் தங்கியிருந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 340 நாட்கள் தங்கியிருந்த பின்னர், நீண்டகால விண்வெளிப் பயணத்தின் விளைவுகள் குறித்த மிக விரிவான ஆய்வில் பங்கேற்றார் கெல்லி. சுற்றுப்பாதையில் இருந்தபோது அவரது உடலின் எடையில் 7% இழந்தார். கண் பார்வை பூமியில், ஈர்ப்பு விசை நம் உடலில் உள்ள ரத்தத்தை கீழ்நோக்கி செலுத்த உதவுகிறது, அதே நேரத்தில் இதயம் அதை மீண்டும் மேலே செல்ல வைக்கிறது. இருப்பினும், விண்வெளியில், இந்த செயல்முறை குழப்பமடைகிறது (இதற்கு உடல் ஓரளவுக்கு தகவமைத்துக் கொள்கிறது என்றாலும்), இதனால் ரத்தம் சாதாரணமாக இருப்பதை விட தலை பகுதியில் குவிந்துவிடும். இதில், சிறிதளவு ரத்தம் கண்ணின் பின்புறம் மற்றும் பார்வை நரம்பைச் சுற்றி நிரம்புவதால், எடிமா எனப்படும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது பார்வை கூர்மை குறைதல் மற்றும் கண்ணில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த மாற்றங்கள் விண்வெளியில் இரண்டு வாரங்கள் கழிந்த உடனேயே கூட ஏற்படலாம், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதன் ஆபத்து அதிகரிக்கிறது. விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய ஒரு வருடத்திற்குள் சில பார்வை குறைபாடுகள் சரியாகின்றன, மற்றவை நிரந்தரமாக இருக்கலாம். விண்மீன்களில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் மற்றும் ஆற்றல்மிக்க சூரிய துகள்கள், மற்ற கண் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். பூமியின் வளிமண்டலம் இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது, ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் இந்த பாதுகாப்பு இருக்காது. அதிகப்படியான கதிர்வீச்சிலிருந்து விண்கலங்கள் கவசமளிக்க முடியும் என்றாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அவர்களின் கண்களில் ஒளி பிரகாசங்களைக் கண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், காஸ்மிக் கதிர்களும் சூரிய துகள்களும் விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளைத் தாக்குகின்றன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,சர்வதேச விண்வெளி நிலையத்தில் புவியீர்ப்பு விசை மிகக்குறைவாக இருப்பது, மனித உடலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் வெகுதூரம் ஆராயும்போது ஒரு சவாலாக இருக்கும். நரம்பு மண்டலத்தில் மாற்றம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கிய பிறகும் கெல்லியின் அறிவாற்றல் செயல்திறனில் சிறிதளவு மாற்றமே ஏற்பட்டது. ஒப்பீட்டளவில் பூமியில் இருந்த அவரது சகோதரரைப்போலவே அது ஏறக்குறைய இருந்தது. இருப்பினும் கெல்லி பூமிக்கு வந்து சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்கு அவரது அறிவாற்றல் செயல்திறனின் வேகமும் துல்லியமும் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். ஒருவேளை பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவரது வித்தியாசமான வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்திக்கொள்ள அவரது மூளைக்கு இந்தக்கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். 2014 இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 169 நாட்கள் செலவழித்த ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் பற்றிய ஆய்வு, அவர் சுற்றுப்பாதையில் இருக்கும்போது மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுவதை வெளிப்படுத்தியது. மோட்டார் செயல்பாடு தொடர்பான மூளையின் நரம்பு இணைப்புகளில் மாற்றங்கள் இருப்பதை அது கண்டறிந்தது. அதாவது, இயக்கம் மற்றும் நோக்குநிலையில் முக்கிய பங்கு வகிக்கும் வெஸ்டிபுலர் கோர்டெக்ஸில் மாற்றங்கள் இருந்தன. விண்வெளியில் இருக்கும்போது எடையின்மையின் விசித்திரமான தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு இல்லாமல் திறமையாக நகர்ந்து நங்கூரமிடவும், மேலே அல்லது கீழே என்று எதுவும் இல்லாத உலகத்தில் வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். நீண்ட கால விண்வெளிப் பயணங்களின் போது மூளையின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிற மாற்றங்கள் குறித்து மிக சமீபத்திய ஆய்வு கவலைகளை எழுப்பியுள்ளது. ரைட் லேட்ரல் மற்றும் தேர்ட் வென்ட்ரிக்கிள்கள் என அழைக்கப்படும் மூளையில் உள்ள குழிவுகள் (செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சேமிப்பது, மூளைக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவது மற்றும் கழிவுகளை அகற்றுவது ஆகிய வேலைகளை செய்கிறது) வீங்கக்கூடும். அவை சாதாரண அளவுவுக்கு சுருங்குவதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். நன்மை அளிக்கும் பாக்டீரியா பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,தசை வலுவையும் எலும்பின் அடர்த்தியையும் பராமரிக்க ஒரு நாளைக்கு 2.5 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம். நமது உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் அமைப்பும் பன்முகத்தன்மையும்தான் நல்ல ஆரோக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க திறவுகோல் என்பது சமீபத்திய ஆண்டுகளின் ஆராய்ச்சியில் இருந்து தெரிகிறது. இந்த மைக்ரோபயோட்டா, நாம் உணவை எவ்வாறு ஜீரணிக்கிறோம் மற்றும் நம் உடலில் ஏற்படும் அழற்சியின் அளவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கூடவே நமது மூளை வேலை செய்யும் விதத்தையும் அது மாற்றக்கூடும். கெல்லியின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு அவரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவரது குடலில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அவர் விண்வெளிக்கு பறப்பதற்கு முன்பு இருந்ததை விட அதிகம் மாறியிருப்பதைக் கண்டறிந்தனர். அவர் உண்ட வித்தியாசமான உணவு மற்றும் அவர் தனது நாட்களைக் கழித்த மாறுபட்ட நபர்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது அவ்வளவாக ஆச்சயத்தை அளிக்கவில்லை. (நாம் சேர்ந்து வாழும் நபர்களிடமிருந்து குடல் மற்றும் வாய்வழி நுண்ணுயிரிகள் அதிக அளவில் நம் உடலுக்குள் செல்கின்றன). ஆனால் கதிர்வீச்சின் வெளிப்பாடு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடு ஆகியவையும் அவரது உடல் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் பங்கு வகித்தன. தோல் இப்போது ஐந்து நாசா விண்வெளி வீரர்கள் 300 நாட்களுக்கு மேல் சுற்றுப்பாதையில் செலவிட்டிருந்தாலும், சுற்றுப்பாதையில் இருக்கும்போது தோலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பது பற்றிய நுண்ணறிவுக்கு நாம் கெல்லிக்கு மீண்டும் நன்றி சொல்ல வேண்டும். அவர் விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய ஆறு நாட்களுக்குப் பிறகு அவரது தோலில் அதிக உணர்திறன் மற்றும் சொறி (rashes) இருப்பது கண்டறியப்பட்டது. விண்வெளி பயணத்தின்போது தோலில் தூண்டுதல் இல்லாதது இதற்குக்காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர். மரபணுக்கள் கெல்லியின் நீண்ட கால விண்வெளி பயணத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று அது அவரது டிஎன்ஏவில் ஏற்படுத்திய விளைவுகள் ஆகும். டிஎன்ஏவின் ஒவ்வொரு இழையின் முடிவிலும் டெலோமியர்ஸ் எனப்படும் கட்டமைப்புகள் உள்ளன. அவை நமது மரபணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்று கருதப்படுகிறது. நமக்கு வயதாகும்போது, இவை குறுகியதாகின்றன. ஆனால் விண்வெளி பயணம் இந்த டெலோமியர்களின் நீளத்தை மாற்றுவதை, கெல்லி மற்றும் பிற விண்வெளி வீரர்கள் மீதான ஆராய்ச்சி தெரிவிக்கிறது. "விண்வெளிப் பயணத்தின் போது நீளமான டெலோமியர்களைக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்" என்று கெல்லி மற்றும் அவரது சகோதரரை ஆய்வு செய்த குழுவில் ஒரு பகுதியாக இருந்த கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கதிரியக்க ஆரோக்கியத்தின் பேராசிரியர் சூசன் பெய்லி கூறுகிறார். சுமார் ஆறு மாத குறுகிய பயணங்களில் பங்கேற்ற, ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத மேலும் 10 விண்வெளி வீரர்களுடன் அவர் தனி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். "பூமிக்கு திரும்பிய பிறகு எல்லா விண்வெளி வீரர்களின் டெலோமியர் நீளமும் விரைவாகக் குறைந்தது எதிர்பாராதது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்கள் முன்பு இருந்ததை விட நீளம் குறைவான டெலோமியர்களைக் கொண்டிருந்தனர். நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் வயதாகும் செயல்முறையில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.” இது ஏன் நடக்கிறது என்பது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று அவர் கூறுகிறார். "எங்களிடம் சில தடயங்கள் உள்ளன. ஆனால் ஒரு வருடத்தை விண்வெளியில் கழித்த ரூபியோ போன்ற அதிக காலம் விண்வெளியில் இருந்தவர்கள், அதன் சாத்தியமான ஆரோக்கிய விளைவுகளையும், அவற்றை வகைப்படுத்துவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்." விண்வெளியில் இருக்கும்போது அவர்கள் சந்தித்த கதிர்வீச்சின் சிக்கலான கலவை இதற்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். சுற்றுப்பாதையில் இருக்கும் போது நீண்டகால கதிர்வீச்சை அனுபவிக்கும் விண்வெளி வீரர்கள் டிஎன்ஏ சேதத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று அவர் கூறுகிறார். மரபணு வெளிப்பாட்டிலும் சில மாற்றங்கள் இருந்தன. உயிரணுக்களில் புரதங்களை உருவாக்க டிஎன்ஏவைப் படிக்கும் பொறிமுறையானது, கெல்லியிடம் காணப்பட்டது. இது அவரது விண்வெளி பயணத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இவற்றில் சில டிஎன்ஏ சேதத்திற்கு உடலின் பதில், எலும்பு உருவாக்கம் மற்றும் மன அழுத்தத்திற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் பதில் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருப்பினும், இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை அவர் பூமிக்கு திரும்பிய ஆறு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. 2024 ஜூன் இல் ஒரு புதிய ஆய்வானது, ஆண் மற்றும் பெண் விண்வெளி வீரர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் விண்வெளிப் பயணத்தின்போது செயல்பட்ட விதத்தில் சில சாத்தியமான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. 2021 செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கும் குறைவாக இருந்த ஸ்பேஸ் எக்ஸ் இன்ஸ்பிரேஷன் 4 பணித்திட்ட குழுவினரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து மரபணு வெளிப்பாடு தரவைப் பயன்படுத்தி, நோயெதிர்ப்பு அமைப்பு, முதுமையடைதல் மற்றும் தசை வளர்ச்சி தொடர்பான 18 புரதங்களில் மாற்றங்களை அந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. முந்தைய பயணங்களில் இருந்த மற்ற 64 விண்வெளி வீரர்களின் மரபணு செயல்பாட்டை ஒப்பிடுகையில், விண்வெளி பயணத்திற்கு முன்பு இருந்ததை விட அழற்சியில் பங்கு வகிக்கும் மூன்று புரதங்களின் வெளிப்பாட்டில் மாற்றத்தை ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மரபணு செயல்பாட்டிற்கு அதிக இடையூறு ஏற்பட்டது மற்றும் பூமிக்குத் திரும்பிய பிறகு அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்தனர். குறிப்பாக, உடலில் ஏற்படும் அழற்சியின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இன்டர்லியூகின்-6 மற்றும் நோய் எதிர்ப்புச் செல்களை நோய்த்தொற்று உள்ள இடங்களுக்குச் செலுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் இன்டர்லியூகின்-8 ஆகிய இரண்டு புரதங்களின் மரபணு செயல்பாடு, பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் அதிக விளைவைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ரத்த உறைதலில் பங்கு வகிக்கும் ஃபிர்பிரினோஜென் எனப்படும் மற்றொரு புரதமும் ஆண் விண்வெளி வீரர்களில் அதிகம் பாதிக்கப்பட்டது. ஆனால் விண்வெளிப் பயணத்தின் இந்த குறிப்பிட்ட விளைவுகளுக்கு பெண்கள் ஏன் குறைவான உணர்திறன் கொண்டவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பது ஆராய்ச்சியின் கீழ் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது மன அழுத்தத்தை சமாளிக்கும் அவர்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நாசா விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், விண்வெளியில் 675 நாட்கள் இருந்துள்ளார். அவர் மற்ற எந்த ஒரு அமெரிக்கரையும் விட சுற்றுப்பாதையில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இருப்பினும் உலக சாதனை தற்போது ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோவாவிடம் உள்ளது. அவர் 878 நாட்கள் விண்வெளியில் இருந்தார். நோய் எதிர்ப்பு அமைப்பு கெல்லி தனது விண்வெளி பயணத்திற்கு முன்பும், அதன் பின்னரும் தொடர்ச்சியான தடுப்பூசிகளைப் பெற்றார். அவரது நோயெதிர்ப்பு அமைப்பு சாதாரணமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. ஆனால் விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் இருக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவுகளுக்கு ஏற்ப வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதாக பெய்லியின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இருப்பினும் பூமியில் வாழ்வதற்காக பரிணாம வளர்ச்சியடைந்த இரு கால், பெரிய மூளை உயிரினங்களில் விண்வெளி பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டி உள்ளது. 371 நாட்கள் விண்வெளியில் இருந்த ரூபியோவின் மருத்துவப் பரிசோதனைகள், ரத்த மாதிரிகள் மற்றும் ஸ்கேன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராயும்போது அவர்களுக்கு மேலும் பல விஷயங்கள் தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை. https://www.bbc.com/tamil/articles/c033yj4dx3eo
  19. 19 JUN, 2024 | 10:03 AM வவுனியா மற்றும் மதவாச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று (18) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஐன்னல்கள், கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர். வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை தாம் உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருதவேண்டியுள்ளதாக சர்வதேச நில அதிர்வுகளை ஆராய்ந்து பதிவிடும் மையமான Volcana Discovery தெரிவிக்கிறது. மேலும் இலங்கை நேரம் இரவு 11.02 மணியளவில் குறித்த நில அதிர்வு என உணரப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வவுனியா மாவட்டத்தின் வடமேற்கு பகுதியின் 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் அதிர்வுகளை அதிகமாக உணரக்கூடியதாக இருந்ததாகவும் volcana discovery தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/186417
  20. அதற்கான உள்ளார்ந்த விருப்பு அரசிலோ அதிகார மட்டத்திலோ இல்லை.
  21. Published By: DIGITAL DESK 3 18 JUN, 2024 | 01:23 PM குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடராக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்றையதினம் காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186363
  22. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது. இதற்கிடையில் ஆண்டு இறப்புகள் 2017இல் 146,000இலிருந்து 2023இல் 181,000ஆக அதிகரித்திருந்தன. திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304022
  23. Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காமல் 3 விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார். இதன் மூலம் ஆடவருக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஓவர்களில் ஓட்டம் கொடுக்காமல் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற அபூர்வ சாதனையை லொக்கி பேர்கசன் படைத்தார். பனாமாவுக்கு எதிராக கூலிஜ் விளையாட்டரங்கில் 2021இல் கனேடிய பந்துவீச்சாளர் சாத் பின் ஸபார் பதிவு செய்த 4 ஓவர்களில் ஓட்டமின்றி 2 விக்கெட்கள் என்ற முந்தைய சாதனையை பேர்கசன் இன்று முறியடித்தார். ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இது புதிய சாதனையாகும். எவ்வாறாயினும் இருபாலாருக்குமான சர்வதேச ரி20 போட்டியில் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா ரொஹ்மாலியா உலக சாதனைமிகு பந்துவீச்சுப் பெறுதியை தன்னகத்தே கொண்டுள்ளார். மொங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் அவர் 3.2 ஓவர்கள் வீசி ஓட்டம் கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்திருந்தார். இதேவேளை இன்றைய போட்டியுடன் ட்ரென்ட் போல்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். போட்டி முடிவில் ட்ரென்ட் போல்ட், அரங்கில் குழுமியிருந்த பாடசாலை மாணவர்களிடம் இருந்த பந்துகளில் தனது கையொப்பத்தை இட்டு அவர்களை மகிழ்வித்தார். இன்றைய போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பப்புவா நியூ கினி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது. சார்ள்ஸ் அமினி (17), நோமன் வனுவா (14), செசே பாவ் (12) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். உதிரிகளாக 11 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது. லொக்கி பேர்குசனை விட டிம் சௌதீ 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 79 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 12.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது. எனினும் அந்த வெற்றி நியூஸிலாந்துக்கு நினைத்த அளவு இலகுவாக அமையவில்லை. முதல் ஒவரின் 2ஆவது பந்திலேயே பின் அலன் (0) ஆட்டம் இழந்ததுடன் ரச்சின் ரவிந்த்ரா (8) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் களம் விட்டகன்றார். (20 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தபோது டெவன் கொன்வே 35 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் கேன் வில்லியம்சன் (18 ஆ.இ.), டெரில் மிச்செல் (19 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் கபுவா மொறியா 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: லொக்கி பேர்குசன். https://www.virakesari.lk/article/186317
  24. கடந்த சில மாதங்களில் 182 இந்திய மீனவர்கள் கைது! கடந்த சில மாதங்களில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 180க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த சில மாதங்களில் 182 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் வந்த 24 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் இன்று (18) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இந்நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் வந்த கப்பலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீன்பிடி படகு மற்றும் அதன் மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/304051
  25. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அதிகபட்ச வேதனமாக 1,200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விசேட நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலதிக தேயிலைக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளதாகவும் இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். முன்னர் 1,000 ரூபாவாக காணப்பட்ட வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதன் ஊடாக 70 சதவீதம் வேதன அதிகரிப்பு இடம்பெறும். தொழிற்துறையில் உள்ளவர்கள் வேதனத்தை அதிகரிக்குமாறு எந்தவித ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. முழுமையாக அரசியல் நோக்கத்திற்காக இந்த செயற்பாடு இடம்பெறுகிறது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவு வேதன அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவது நியாயமான விடயமாக கருத முடியும். எனினும் 1,700 ரூபாவாக வேதனத்தை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் வேதனத்தை கொண்டு வாழ்க்கையை முன்னோக்கி செல்வதற்கு பழக்கமடைந்துள்ளனர். இந்த நிலையில் தொழிற்துறைக்கு அமைய நாளாந்த வேதனமாக 1,200 ரூபாய் மாத்திரமே செலுத்த முடியும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். அத்துடன் மேலதிக தேயிலை கிலோவொன்றுக்கு 65 ரூபாய் செலுத்துவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஒன்றை இலக்கு வைத்தே அரசாங்கம் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கின்றது. இதற்கு முன்னரே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்க முடியும். அதேநேரம் நீதிமன்றம் உத்தரவிடுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் வேதனத்தை செலுத்த நேரிடும். எனினும் அதனைத் தொடர்ந்து தேயிலை தொழிற்துறையும் வீழ்ச்சியடையும் என இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303922

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.