Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.
  2. சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 02:26 PM மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் 15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம் ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186564
  3. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 03:01 PM கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாக உயர்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் கள்ளச்சாராய வணிகர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது. கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இவ்விவகாரம் குறித்து சட்டபேரவையில் எதிர்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பக்கூடும என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் தர ஆளும் திமுகவும் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186568
  4. 20 JUN, 2024 | 10:15 AM புதுடெல்லி: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில்மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா பதிலடி கொடுத்தது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளகுருத்வாரா அருகே மர்ம நபர் களால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அபத்தம் என்றும் இந்தியா மறுத்துவிட்டது. இதனால் இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதற்கு பதிலடியாக 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 அப்பாவிகள் நினைவாக மௌன அஞ்சலி கூட்டம் நடத்தப்போவதாக கனடா நாட்டின் இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது. இது குறித்து வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்க மாக இந்தியா பணியாற்றி வருகிறது. கடந்த 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39-வது ஆண்டு நினைவு நாள் ஜூன் 23-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 86 குழந்தைகள் உட்பட 329 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில் கொடூரமான தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/186525
  5. Published By: RAJEEBAN 20 JUN, 2024 | 11:29 AM எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலத்தையும் பாலின சமத்துவ சட்டமூலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் இந்த சட்டமூலம் எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் உள்நாட்டு கலாச்சாரம் நெறிமுறைகள் விழுமியங்களை சமரசம் செய்யும் என தெரிவித்துள்ளது. மேற்குலகில் கூட பிள்ளைகள் பால் மாற்றத்தில் ஈடுபடுவதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸின் தலைவர் சந்திரா நிமல் வகிஸ்ட தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு குடும்ப அடிப்படையிலான தாய்வழி சமூகம் என தெரிவித்துள்ள அவர் இந்த சட்டமூலங்கள் இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை நிச்சயம் சமரசம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். வெவ்வேறு பாலியல்நோக்குநிலையை கொண்டவர்கள் உள்ளனர் அவர்களின் சார்பில் தனிதனி சட்டங்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்துள்ள அவர் எனினும் அனைவரையும் சமமமாக நடத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமூலங்கை நடைமுறைப்படுத்தினால் அதன் காரணமாக கலாச்சார சட்ட குழப்பங்கள் ஏற்படும் இது இலங்கை ஜனாதிபதி அன்னிய கருத்துக்களை எம்மீது திணிக்க முயலக்கூடாது அவர் தன்னை இலங்கையராக பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186539
  6. முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவம் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 10:18 AM முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு செவ்வாய்க்கிழமை (18) தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஔி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்து கொண்டிருந்தது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/186524
  7. இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 10:32 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக்கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன், இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏனைய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த விஜயம் மேலும் உத்வேகமளிக்கும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமாகும். அது தவிர இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக வலுச்சக்தியை கொள்வனவு செய்தல், அதற்காக இந்தியா - இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மன்னார், பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், இந்தியா - இலங்கைக்கு இடையிலான தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்திக்கூறுகள் என்பன தொடர்பிலும் இவ்விஜயத்தில் ஆராயப்படவுள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்தால் திருகோணமலையை கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில் வலயம் தொடர்பிலும், விவசாய நவீன மயமாக்கல் தொடர்பிலும் முக்கியமாக இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள லயன் அறைகளை பெருந்தோட்டக் கிராமங்களாக்கிய பின்னர் அவற்றின் அபிவிருத்திகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186518
  8. Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 09:13 AM வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம் விடத்தல் தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மே மாதம் 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு விடத்தல் தீவு பகுதியில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் கடல்சார் பூங்கா/கடல் வேளண்மைக்கு விடுவிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் இடம் பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையான கண்டல் காடுகளை அழித்து மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து அமைக்கப்படும் கடல்சார் பூங்காவிற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருந்தார். அதே நேரம் மீனவர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட போது இந்த 400 ஏக்கர் நிலமும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பண்ணை அமைப்பதற்கு வழங்குவதற்காகவே விடுவிக்கப்பட்டதாக சந்தேகம் மீனவர்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவித்தனர். வெறுமனே அதை 400 ஏக்கர் பிரச்சினையாக கருத கூடாது எனவும் அதை தொடர்ந்து விடத்தல் தீவு பகுதியோடு சேர்ந்த 1400 ஏக்கர் காணிகள் ஆபத்தில் இருப்பதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் ஆலம் குறிப்பிட்டிருந்தார். அதே நேரம் குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனவும் 1000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அளவீடுகள் இடம் பெற்ற நிலையில் 400 ஏக்கராக குறைக்கப்பட்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அதே நேரம் மன்னார் மாவட்ட காணிகளுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் இது தொடர்பாக தெரிவித்த போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து மன்னார் வனவள திணைக்கள அதிகாரிகளிடமும் கொழும்பு மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அறிய முற்பட்ட வேளை குறித்த அறிவித்தல் தொடர்பில் அவர்களுக்கே தெரியாத நிலையே காணப்படுவதாக தெரிவித்தார். மேலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சிங்கள மொழியிலே காணப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்ட இணைப்புகள் எதுவும் வர்த்தமானியில் காணப்படவில்லை எனவும் அதில் ஒழுங்கான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவ் வர்த்தமானி தொடர்பில் யாருக்கும் ஒழுங்கான விளக்கம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகள் வேறு எந்த உள்ளூர் நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்காது அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது இருந்தது. இந்த நிலையில் நேற்று புதன்கிழமை (19) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் "விடத்தல் தீவு விடுவிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு பயன்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது. எங்களை பொறுத்த வரையில் விடத்தல் தீவு என்பது கடலால் சூழப்பட்ட பிரதேசம் .அது பூகோள ரீதியில் பெறுமதியான பிரதேசம். பருவ காலத்தில் மீன் இனங்கள் அந்த பிரதேசத்திலேயே இனப்பெருக்கம் செய்து ஆழ்கடலுக்கு செல்கின்றன. இலங்கையின் மிகப்பெரிய மீன் உற்பத்தி வங்கி அதாவது இந்த திணைக்களங்களினால் அறியப்படாத மீன் உற்பத்தி வங்கியும் இதை எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்துவதாக கூறி மிக பலம் பொருந்திய பல்தேசிய கம்பெனிகளுக்கு மக்கள் என்ற போர்வையில் மக்களை பினாமியாக வைத்து விற்பனை செய்வதற்கான மறைமுகமான திட்டமாகத்தான் இது இருப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தப்பட்ட அமைச்சாலோ அமைச்சராலோ வழங்கப்படாத நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க வேண்டாம் எனவும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரி விரைவில் விடத்தல் தீவு மக்களால் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186514
  9. 20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் நியூஸிலாந்து வெளியேறியது. எவ்வாறாயினும் தொடர்ந்து நடைபெறவுள்ள எட்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியிலும் நியூஸிலாந்துக்காக விளையாட அர்ப்பணிப்புடன் இருப்பதாக கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார். ஒரு புறத்தில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயார் எனவும் அவர் கூறினார். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிவருவதால் மத்திய ஒப்பந்தத்தை நிராகரிக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 'நியூசிலாந்துக்காக விளையாடுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். அணிக்கு பிரதியுபகாராமாக எதையாவது கொடுக்க வேண்டும் என்ற எனது ஆவல் இன்னும் குறையவில்லை. 'கிரிக்கெட்டுக்கு வெளியே எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதால் எனது வாழ்க்கை மாறிவிட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ குடும்ப உறுப்பினர்களுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்' என்றார் கேன் வில்லியம்சன். வில்லியம்சனின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நியூஸிலாந்து கிரிக்கெட் (NZC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் வீனிங்க், 'நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ நிறைவேற்றியுள்ள அவர் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் குடும்பக் கடமைகள் உட்பட பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்குவது மிகவும் பொருத்தமாகும்' என்றார். 'கேனை (கேன் வில்லியம்சன்) சர்வதேச விளையாட்டில் தக்கவைத்துக்கொள்வது இது ஒரு சிறந்த வழியாகும், இதன் மூலம் அவர் இப்போதும் அடுத்து வரும் வருடங்களிலும் பிளாக் கெப்ஸுக்கு பிரதான பங்கு வகிப்பார்' என வீனிங்க் கூறினார். நியூசிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களின் இறுதி பட்டியல் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இல்லாத மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர் லொக்கி பெர்கசன் ஆவார். அவர் மத்திய ஒப்பந்தத்தை ஏற்கப் போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/186523
  10. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைதூர மற்றும் உள்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மாவட்ட தலைநகரிலேயே இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி? என்ன நடந்தது? கள்ளச்சாராயம் அருந்தியதால் அடுத்தடுத்து உயிரிழப்பு கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர். ஆனாலும், நேற்று (19/06/2024) நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் மூன்று பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் விவரம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன் தினம் முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்(29), சுரேஷ்(46), மற்றொரு சுரேஷ்(45), சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மணி(58), கிருஷ்ணமூர்த்தி(62), இந்திரா(48) ஆகிய 3 பேர் இறந்தனர். மேலும் 47 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக மேலும் பலரும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாராய வியாபாரி கைது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். படக்குறிப்பு,பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன் காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் படக்குறிப்பு,சஸ்பெண்ட் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி சமய்சிங் மீனா "காவல்துறையின் கவனக்குறைவே காரணம்" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அடுத்தடுத்து நேரிடும் உயிரிழப்புகளால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்ததால் 72 பேர் உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையில், "மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது." என்று கூறப்பட்டுள்ளது. a சிபிசிஐடி போலீசார் விசாரணை விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் பெயரில் விழுப்புரம் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் இந்த விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்க உள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி? இந்த உயிரிழப்புகளுக்கு, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம். "கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nnxx4j8j8o
  11. டி20 உலகக்கோப்பை: சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 20 ஜூன் 2024, 04:39 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் கத்துக்குட்டி அமெரிக்க அணிக்கு எதிராக போராடித்தான் தென் ஆப்ரிக்க அணியால் வெல்ல முடிந்துள்ளது. ரபாடா, நோர்க்கியா மட்டும் கடைசி இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்திருந்தால், தென் ஆப்ரிக்காவின் தோற்றுப் போயிருக்கும். சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய ஆன்ட்ரிஸ் கோஸின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆட்டத்தில் என்ன நடந்தது? ஃபார்முக்கு வந்த டீ காக் நார்த் சவுண்ட் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குருப்-பி பிரிவில் தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அமெரிக்காவில் இருந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சொதப்பலாக பேட் செய்த தென் ஆப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் ஃபார்முக்கு திரும்பினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தொடக்கத்தில் திணறிய டீ காக், பவர்ப்ளேயில் 4 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ஜஸ்தீப் சிங் ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்த அவர் அதனைத் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ஃபார்முக்கு திரும்பினார். ஜஸ்தீப் சிங் தனது முதல் ஓவரிலேயே 28 ரன்களை வாரி வழங்கினார். பவர்ப்ளே முடிவில் டீகாக்கின் அதிரடியால் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக ஆடத் தொடங்கிய டீ காக், கோரி ஆன்டர்சன் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அணியின் ஸ்கோர் உயர்வுக்கு துணை செய்த டீ காக் 74 ரன்கள் (5சிக்ஸர்,7பவுண்டரி) சேர்த்து, டி20 உலகக் கோப்பையில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கிளாசன், ஸ்டெப்ஸ் கூட்டணி தென் ஆப்ரிக்காவின் ரன் குவிப்பில் கேப்டன் மார்க்ரம்(46), கிளாசன்(36நாட்அவுட்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(20நாட்அவுட்) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். அதிலும் கிளாசன், ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது பெரிய ஸ்கோர் கிடைக்க உதவியாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் அபாரப் பந்துவீச்சு அமெரிக்கா அணியும் பந்துவீச்சு, பேட்டிங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு சவலாக விளங்கினர். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், அடுத்த 7 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே அமெரிக்க அணியினர் சேர்க்கவிட்டனர். குறிப்பாக நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் இருவரும் சேர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். நெட்ராவல்கர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் 4 ஓவர்கள் வீசி 24ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்து தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவாக அமைந்தனர். மற்ற 5 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 10 சிக்ஸர்கள், 9பவுண்டரி உள்பட 148 ரன்களை வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES சொந்த நாட்டை மிரட்டிய கோஸ் தென் ஆப்பிரிக்காவில் டீன் எல்கர் பிறந்த அதே நகரில்தான் ஆன்ட்ரிஸ் கோஸ் பிறந்தார். கொரோனா காலத்தில் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட பல சிறிய லீக் ஆட்டங்களில் கோஸ், பலவீரர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் கோஸ், சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். கோஸின் பேட்டிங் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. கோஸ் தான் சந்தித்த 6வது பந்திலேயே பவுண்டரிவிளாசினார். யான்சென் ஓவரில் சிக்ஸரும், நோர்க்கியா ஓவரில் 18 ரன்களும் கோஸ் நொறுக்கினார். அதிரடியாக ஆடிய கோஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்கா வெற்றி்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஹர்மீத் ஒரு சிக்ஸர் என 22 ரன்களை சேர்த்து தென் ஆப்ரிக்க அணிக்கு கிலி ஏற்படுத்தினார். கோஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து(5சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை போராடியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஹர்மீத் சிங்குடன் சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோஸ் ஆட்டத்தைப் பார்த்த போது, ஆட்டம் தென் ஆப்ரிக்காவின் கையைவிட்டு சென்றுவிட்டது என்று ரசிகர்கள் எண்ணினர். அமெரிக்க அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஒருவர் கூட சிறப்பான பங்களிப்பை அளிக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். கேப்டன் ஜோன்ஸ்(0), அனுபவ வீரர் கோரி ஆன்டர்சன்(12), நிதிஷ் குமார்(8), ஜகாங்கிர்(3) ஆகிய 4 பேட்டர்களும் சொதப்பிவிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ரபாடா தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் ரபாடா, கேசவ் மகராஜ் பந்துவீச்சுதான் நேற்றைய ஆட்டத்தின்” டாப் கிளாஸ்”. இருவரும் வீசிய 8 ஓவர்கள்தான் அமெரிக்காவின் பேட்டிங்கை புரட்டிப்போட்டு, ரன்ரேட்டை இறுகப்பிடித்தது. ரபாடா 4 ஓவர்கள் வீசி18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மகராஜ் 4ஓவர்கள் வீசி24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து 21 டாட் பந்துகளை வீசினர். ஏறக்குறைய 3.3 ஓவர்களை டாட் பந்துகளாக வீசிய நிலையில் 5 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் அமெரிக்கா வெல்ல 50ர ன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரை வெளுத்து வாங்கிய கோஸ, ஹர்மீத் சிங் சிக்ஸர்களா விளாசினர். ஹர்மீத் ஒரு சிக்ஸர், கோஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர். கடைசி 2 ஓவர்களில் அமெரிக்கா வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 19-வது ஓவரை மிகத் துல்லியமாக, கட்டுக்கோப்பாக வீசி அமெரிக்காவிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். அது மட்டுமல்லாமல் ரபாடா 19-வது ஓவரில் ஹர்மீத் சிங்(38) விக்கெட்டையும் வீழ்த்தி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடி ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் அமெரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. நோர்க்கியாவும் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றியை உறுதி செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "பந்துவீச்சில் கோட்டை விட்டோம்" அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறுகையில் “ வெற்றிக்கு அருகே வந்தபின் தோற்றது வேதனையாக இருக்கிறது. பந்துவீச்சில் நாங்கள் கோட்டைவிட்டுவிட்டோம், இன்னும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இருக்க வேண்டும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கிவிட்டால், உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும். அதற்கு எங்களிடம் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அதிகமான ஒழுக்கம் அவசியம்” எனத் தெரிவித்தார் சூப்பர்-8 சுற்றில் முதல் வெற்றி இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி 2 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை 0.90 ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.90 ஆகக் குறைந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cnkk5yze7zqo
  12. Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 08:47 AM யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது, குறித்த சம்பவத்தை தொடர்ந்து இரு குழுக்களுக்கு இடையே இன்றையதினம் அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நெடுந்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தின் போது, 23 வயதுடைய அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/186513
  13. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்ம வெளிச்ச உருவங்கள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மர்ம வெளிச்சங்கள் தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/304171
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES 19 ஜூன் 2024 திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திப்பதற்காக, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஏழு பேர் கொண்ட இந்தக் குழு வியாழக்கிழமை (ஜூன் 20) புத்த மதகுரு தலாய் லாமாவைச் சந்திக்கவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, சீனா-திபெத் பிரச்னை தொடர்பாகச் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சீனா, திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கும் உறுதிமொழியை அமெரிக்கா மதிக்கவில்லை என்றால், சீனா 'கடுமையான நடவடிக்கைகளை' மேற்கொள்ளும் என்று எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சீனா எச்சரிக்கை அறிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லின் சியென், “14-வது தலாய் லாமா முழுமையான மதம் சார்ந்த நபர் அல்ல, மாறாக மதம் என்ற போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபடும் நாடு கடத்தப்பட்ட அரசியல் பிரமுகர் என்பது அனைவரும் அறிந்ததே,” என்றார். மேலும், குறிப்பாக, சீனா-திபெத் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் லின். "இந்தச் சட்டத்தில் அமெரிக்கா கையெழுத்திடக் கூடாது," என்றும் லின் கூறினார். "சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றும் கூறியுள்ளார் அவர். இந்தியாவிலுள்ள சீனத் தூதரகமும் இது குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “தலாய் லாமா குழுவின் சீன-எதிர்ப்பு பிரிவினைவாதத் தன்மையை அமெரிக்கத் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், ஜிசாங் (திபெத்தைக் குறிக்கச் சீனா பயன்படுத்தும் பெயர்) பிரச்னையில் அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழிகளை மதிக்கவும், உலகிற்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பாமல் இருப்பதை உறுதி படுத்தவும் வேண்டுகிறோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்." சீனா கூறியது என்ன? சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜிசாங் எப்போதும் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. ஜிசாங் முழுக்க முழுக்க சீனாவின் உள்விவகாரம். அதில் வெளியில் இருந்து எந்த தலையீடும் அனுமதிக்கப்படாது. சீனாவைக் கட்டுப்படுத்தும் மற்றும் அடக்கும் நோக்கில் எந்த ஒரு தனி நபரும், எந்த சக்தியும் ஜிசாங்கை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது. அத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது,” என்றார். “சீனாவின் ஒரு பகுதியாக ஜிசாங்கை அங்கீகரிப்பதுடன், 'ஜிசாங் சுதந்திரத்தை' ஆதரிக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம். சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்,” என்றார். தற்போது தலாய் லாமாவைச் சந்திக்க வந்துள்ள இந்தக் குழுவில் அமெரிக்கக் காங்கிரஸின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் டெக்சாஸின் குடியரசுக் கட்சியின் தலைவரும், அமெரிக்கக் காங்கிரஸின் வெளியுறவுக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் ஆகியோர் உள்ளனர். 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை, இந்த நடவடிக்கை சீனாவுடனான தனது உறவைச் சீராக்க ஜோ பைடன் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பின்னுக்குத் தள்ளும் என்று எழுதியுள்ளது. 2022-ஆம் ஆண்டில், நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் செய்தார், அவரது வருகைக்குப் பிறகு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அனைத்து மட்டங்களிலுமான ஒத்துழைப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நான்சி பெலோசி நாடுகடந்த திபெத் நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று உரையாற்றினார். இந்த உரை குறித்த வீடியோ பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அவர் தனது உரையில் என்ன பேசினார் என்பது குறித்து வெளியிடப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,“நாங்கள் சமீபத்தில் காங்கிரசில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார் மைக்கேல் மெக்கால். சீனா-திபெத் பிரச்னை மசோதா குறித்த விவாதம் தலாய் லாமாவைச் சந்திக்கும் இந்தத் தூதுக்குழு, ஜோ பைடன் விரைவில் கையெழுத்திட உள்ள மசோதாவைப் பற்றி விவாதிக்க உள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் திபெத்துடன் நடந்து வரும் சர்ச்சையைத் தீர்க்க சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை சமீபத்தில், 'திபெத்-சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்ட மசோதா’ ஒன்றை நிறைவேற்றியது. இந்த மசோதா ஏற்கனவே அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, திபெத்தின் வரலாறு, மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து சீனா பரப்பும் 'தவறான தகவல்களை' எதிர்த்துப் போராட அமெரிக்கா நிதி வழங்கும். இந்த மசோதாவின் மூலம் திபெத் தனக்குச் சொந்தமானது என்று உரிமைகோரும் சீனாவின் வாதம் எதிர்க்கப்படும். மேலும், திபெத் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படும் வகையில், 2010-இல் இருந்து முடங்கிக் கிடக்கும் திபெத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதனுடன், திபெத்திய மக்களின் வரலாற்று, கலாச்சார, மத மற்றும் மொழியியல் அடையாளம் தொடர்பான பிரச்னைகளை சீனா தீர்க்க வேண்டும். தலாய் லாமாவைச் சந்திப்பது குறித்து பேசியுள்ள மைக்கேல் மெக்கால், “நாங்கள் சமீபத்தில் காங்கிரசில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திபெத் மக்களுடன் அமெரிக்கா நிற்கிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தரம்சாலா வந்தடைந்த அமெரிக்கக் குழு இந்தியாவில் என்ன கருத்து நிலவுகிறது? இது ஒருபுறமிருக்க தலாய் லாமாவை ஒரு அரசியல் பிரமுகர் என்றும், மதத் தலைவர் அல்ல என்றும் சீனா கூறியதற்கு, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள அவர், “தலாய் லாமா ஒரு ஆன்மீகவாதி. திபெத்தின் நாகரீக அடையாளத்தை அழிக்கும் வகையில், திபெத்தின் மக்கள்தொகை, ராணுவ ஆக்கிரமிப்பு, திபெத்தின் நுட்பமான சூழலியல் ஆகியவற்றை மாற்றியமைப்பதற்காக ஹான் மக்களைக் கொண்டு வந்த போதிலும், அதைத் தடுக்க திபெத்திய மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை,” என்றார். “திபெத்தின் சுயாட்சியை சீனா ஏற்றுக்கொண்டால், சீனாவுடன் இணைய அவர் ஒப்புக்கொண்டார். சீனா இன்று அமைதியை உருவாக்கும் ஒரு நபராக தன்னைக் காட்டிக்கொள்கிறது. அப்படியானால், ஏன் அந்தக் கூற்றை உண்மையக்குவதற்காக தலாய் லாமாவுடன் சுமூகமாகி, பின்னர் அதன் வழியாக இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்தக்கூடாது?” என்றார். சர்வதேச உறவுகள் குறித்து எழுதி வரும் ஜோராவர் தௌலத் சிங், நான்சி பெலோசியின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “புவிசார் அரசியல் பார்வையில், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இருவருக்கும் இடையிலான போட்டி மிக வலுவானதாக உள்ளது. ஆனால் இப்போது அதிலிருந்து சீனாவின் கவனத்தைத் திசை திருப்பி, அதன் சொந்த நிலத்தின் தென்மேற்கு பகுதியின் மீது கொண்டு வருவதால் என்ன பயன்?” என்றார். “அதுவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் மூலோபாயக் கூட்டாளிகள் இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் பிரச்னை ஆகியவை நடந்துகொண்டிருக்கும் போது, இது நடக்கிறது,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மங்கோலிய மன்னர் குப்லா கான் யுவான் வம்சத்தை நிறுவி தனது பேரரசை திபெத் மட்டுமின்றி சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார். சீனா-திபெத் பிரச்னையின் வரலாறு சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையேயான சர்ச்சை, திபெத்தின் சட்ட அந்தஸ்து தொடர்பானது. 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து திபெத் தனது ஒரு பகுதியாக இருந்து வருவதாக சீனா கூறுகிறது. ஆனால் திபெத்தியர்கள், பல நூற்றாண்டுகளாகவே திபெத் ஒரு சுதந்திர நாடாக இருந்து வருவதாகவும், அதன் மீது சீனாவுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்றும் கூறுகின்றனர். மங்கோலிய மன்னர் குப்லா கான், யுவான் வம்சத்தை நிறுவி, தனது பேரரசை திபெத் மட்டுமின்றி சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார். பின்னர் பதினேழாம் நூற்றாண்டில், சீனாவின் சிங் வம்சம் திபெத்துடன் உறவுகளை ஏற்படுத்தியது. 260 ஆண்டுகள் உறவுக்குப் பிறகு, சிங் ராணுவம் திபெத்தைக் கைப்பற்றியது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் அவரது ஆட்சி திபெத்தியர்களால் வெளியேற்றப்பட்டது. 1912-இல் பதின்மூன்றாவது தலாய் லாமா திபெத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். பின்னர் 1951-இல், சீன ராணுவம் மீண்டும் திபெத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. திபெத்தின் இறையாண்மை சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூறி திபெத்திய தூதுக்குழுவை நிர்பந்தித்தது. 1959-ஆம் ஆண்டு இந்தியா வந்த தலாய் லாமா, திபெத்தின் சுயாட்சிக்காகப் போராடி வருகிறார். https://www.bbc.com/tamil/articles/cv220kld41ko
  15. நகர்ப்புற சதுப்பு நிலங்களின் தேவை பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட முகாமைத்துவம் அவசியம் - சர்வதேச சதுப்பு நில பூங்கா பிரதிநிதிகள் Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 10:24 AM சர்வதேச சதுப்பு நில பூங்காவின் பிரதிநிதிகள் நகர்ப்புற சதுப்பு நிலங்களின் தேவை பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்று வரும் சர்வதேச சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தின் முதலாவது அவுஸ்திரேலிய நியூசிலாந்து மற்றும் ஆசிய மாநாட்டில் அவர்கள் இதனை வலியுறுத்தினர். சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இது நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 100 சதுப்பு நில பூங்கா பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தக் குழுவும் இன்று காலை தலங்கமவைச் சுற்றிப் பறவைகள் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து கொண்டது. உலகின் முதல் நகர்ப்புற சதுப்பு நில பெருநகரமான கொழும்பின் சதுப்பு நிலங்களை தற்போது சதுப்பு நில பிரதிநிதிகள் கண்காணித்து வருகின்றனர். தலங்கம ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நிலப்பகுதியை அவதானித்தனர். அதனுடன் தொடர்புடைய பறவைகளின் நடத்தை மற்றும் அப்பகுதியைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்கள். மாநாட்டின் மூன்றாவது நாளான புதன்கிழமை (19), முதல் முறையாக இணைந்த பல வெளிநாட்டு சதுப்பு நிலப் பூங்காக்களுக்கு ஆசியா - அவுஸ்திரேலிய சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தில் அங்கத்துவம் வழங்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு விழா இன்று வியாழக்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. அங்கு, பத்தரமுல்லை தியசரு சதுப்பு நிலப் பூங்கா, நாட்டின் முன்னணி சதுப்பு நில பூங்காவாக அறிவிக்கப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/186520
  16. பட மூலாதாரம்,SPUTNIKKREMLIN POOLEPA-EFEREXSHUTTERSTOCK 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்கிறது இந்த ஒப்பந்தம். புதினின் வடகொரிய சுற்றுப்பயணம் குறித்து தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷ்யா - வடகொரியா இடையிலான ராணுவ ஒப்பந்தம் எத்தகையது? கிம் ஜாங் உன்னுக்கு புதின் பரிசு சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வட கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வட கொரிய தலைநகர் பியாங்யோங்கில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்னுக்கு புதின் ரஷ்யாவின் விலை உயர்ந்த சொகுசு காரான ஆரஸ் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியதாக ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதின் கிம்முக்கு ஆரஸ் காரை பரிசளிப்பது இது முதல் முறையல்ல . கடந்த பிப்ரவரியில் அவருக்கு ஆரஸ் லியூமோசின் காரை புதின் பரிசளித்தார், இருப்பினும் இந்த முறை எந்த மாடலை பரிசாகக் கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் காரில் ஒன்றாக சென்றதை காண முடிந்தது. பட மூலாதாரம்,REUTERS ரஷ்யா - வட கொரியா ராணுவ ஒப்பந்தம் ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களுக்கு எதிராக "ஆக்கிரமிப்பு" நடந்தால் ஒருவருக்கு ஒருவர் "பரஸ்பர உதவி" வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று புதினை மேற்கொளிட்டு ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் எதிராக "ஆக்கிரமிப்பு" ஏற்பட்டால் "பரஸ்பர உதவியை" புதிய ஒப்பந்தம் வழங்கும் என்று புதின் தெரிவித்தார். யுக்ரைன் மீதான வடகொரியாவின் நிலைப்பாட்டை "அதன் இறையாண்மைக் கொள்கையின் மற்றொரு சான்று" என்றும் புதின் கூறியுள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ரஷ்யாவுக்கு கிம் புகழாரம் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிம் ஜாங் உன் , "வட கொரியா தனது நாடு அல்லது ரஷ்யா எதிர்கொள்ளும் "சம்பவங்கள் அல்லது போர்களுக்கு" "தயக்கமின்றி" பதில்கொடுக்கும்" என்றார். அந்த பதில் என்னவாக இருக்கும் அல்லது "சம்பவம் அல்லது போர்" என்று அவர் கருதுவது எது என்று கிம் ஜாங் உன் விவரிக்கவில்லை. "இரு நாடுகளும் ஏற்கனவே எதிர்கொள்ளும் அல்லது எதிர்காலத்தில் நம்மை எதிர்கொள்ளும் பல்வேறு சம்பவங்கள் அல்லது போர்களுக்கு கூட்டு முயற்சியில் பதிலளிக்கும் கடமையை நிறைவேற்றுவதில் எந்த வித்தியாசமும், தயக்கமும், அலைச்சல்களும் இருக்காது" என்று கிம் ஜாங் உன் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் "முற்றிலும் அமைதியானது மற்றும் தற்காப்புத்தன்மை கொண்டது" என்று கிம் மேலும் கூறினார். எந்தவொரு மேலாதிக்க நாடும் மேலாதிக்க சக்தியைப் பயன்படுத்த முடியாத ஒரு "பல்முனை உலகத்தை" உருவாக்குவதை இந்த ஒப்பந்தம் துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார். "கிம் ரஷ்யாவை "மிகவும் நேர்மையான நண்பர் மற்றும் கூட்டாளி" என்று அழைத்தார். புதினை "கொரிய மக்களின் அன்பான நண்பர்" என்று குறிப்பிட்டார்" என்று அரசு ஊடகமான ஆர்.ஐ.ஏ.யின் அறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ரஷ்ய அதிபர் புதின் பேசியது என்ன? புதின் தனது பேச்சில் ரஷ்யா - வட கொரியா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பகிரங்கப்படுத்தினார். அத்துடன், பரஸ்பர உதவி, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுத விநியோகம் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முன் முயற்சியால் வட கொரியா மீது காலவரையற்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ரஷ்ய பிரதேசத்திற்குள் தாக்குதல் நடத்த வல்ல துல்லியமான நீண்ட தூர ஆயுத அமைப்புகள், எஃப்-16 விமானங்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது பற்றிய அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளின் சமீபத்திய அறிக்கைகளை புதின் தனது பேச்சில் குறிப்பிட்டார். வட கொரியாவுடன் "ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பதையும் அவர் நிராகரிக்கவில்லை. 'எல்லை மீற வேண்டாம்' - தென் கொரியா புதின் - கிம் சந்திப்புக்கு முன்னதாக, இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தென் கொரியா கூறியது. "ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால்" செல்ல வேண்டாம் என்று ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ-ஜின் கேட்டுக் கொண்டார். ரஷ்யாவுக்கான முன்னாள் தென் கொரிய தூதரான சாங் ஜின், "உக்ரைனுடனான தனது போரை ரஷ்யா முடித்தவுடன், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் எது முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார். "புதின் - கிம் சந்திப்பு கெட்ட செய்தி" - முன்னாள் சிஐஏ ஆய்வாளர் யுக்ரேன் போரில் இராணுவ உபகரணங்களுக்காக வட கொரியாவை ரஷ்யா நாடியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஒரு முன்னாள் சிஐஏ ஆய்வாளருக்கு, புடினின் பியோங்யாங்கிற்கான விஜயம், சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் இரண்டு "பரியா மாநிலங்கள்" எவ்வாறு தங்கள் உறவுகளை உறுதிப்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. "புடின் தனது போர் முயற்சிக்கு உதவ உலகில் 198 வது பொருளாதாரத்தை நம்பியிருப்பது மிகவும் பரிதாபகரமானது என்று நான் நினைக்கிறேன்," என்று அமெரிக்க உளவு நிறுவனமாக சிஐஏ-வின் ஆய்வாளர் சூ மி டெர்ரி, பிபிசியிடம் கூறினார். "உலகின் மற்ற பகுதிகளுக்கு இது மோசமான செய்தியாக இருக்கிறது. ரஷ்யாவுடனான கூட்டாண்மை வட கொரியா தனது ஆயுதங்களை திறம்பட சோதிக்க அனுமதிக்கிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS ரஷ்யா - வட கொரியா கூட்டணியின் எல்லை எது? வட கொரியாவும் ரஷ்யாவும் நெருங்கிய நண்பர்கள், ஆனால் அவை உறுதியான நண்பர்கள் அல்ல என்கிறார் பிபிசியின் சீன செய்தியாளர் லாரா பிக்கர். "ரஷ்யா - வடகொரியா உறவின் முக்கிய வரம்புகளில் ஒன்று சீனாவுடனான அந்நாடுகளின் சொந்த உறவாகும், அதை அவர்கள் ஆபத்தில் ஆழ்த்த முடியாது. அதனால் அமெரிக்கா மட்டும் கவலைப்படவில்லை. சீனாவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும்." என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த அவர், "ரஷ்யா வட கொரியாவுக்கு கூடுதல் தொழில்நுட்பத்தை வழங்கப் போகிறது என்றால் அது சீனாவைக் கவலையடையச் செய்யும். புவிசார் அரசியலில் அமெரிக்காவின் இடத்தைப் பிடிக்க சீனா விரும்புகிறது. அது இன்னொரு பனிப்போரை விரும்பவில்லை. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு நாடுகளுடனும் வணிகத்தை விரும்புகிறது, மேலும் ரஷ்யா மற்றும் வட கொரியாவைப் போலவே உலகத்துடனான உறவிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளவும் சீனா விரும்பவில்லை." என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjqqjg1n8w3o
  17. இலங்கையின் உச்ச முனைகள் பின்வரும் பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. வடக்கில் பருத்தித்துறை(திக்கம்), தெற்கில் தேவேந்திரமுனை ஆகியவையும், கிழக்கில் சங்கமன் கண்டியும் மேற்கில் கச்சத்தீவும், மேற்கு பெருநிலப்பகுதியில் கல்பிட்டியும் காணப்படுகின்றன. 2524 மீ உயரமுள்ள பிதுருதலாகலை உயரமான முனையாகவுள்ளது.[1] இலங்கையின் வரைபடம் முனைகள்[தொகு] முனை இடம் ஒருமுக இணைவு வடக்கு திக்கம், பருத்தித்துறை 9°50′8″N 80°12′44″E தெற்கு தேவேந்திரமுனை 5°55′7″N 80°35′29″E கிழக்கு சங்கமன் கண்டி, அம்பாறை மாவட்டம் 7°1′20″N 81°52′45″E மேற்கு கச்சத்தீவு 9°23′N 79°31′E மேற்கு (பெருநிலப்பகுதி) கல்பிட்டி, (புத்தளம்) 8°12′40″N 79°41′33″E உயரம்[தொகு] உயரமான முனை: பிதுருதலாகலை (Mount Pedro), 2,524 m (8,281 அடி) 7°0′3″N 80°46′26″E ஓமண்ணை, நானும் இது எங்க இருக்கு என்று குழம்பி நண்பரிடம் விசாரித்து அறிந்துகொண்டேன்.
  18. South Africa (20 ov) 194/4 United States of America U.S.A. chose to field. Current RR: 9.70 • Last 5 ov (RR): 53/0 (10.60)
  19. உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பிற்கு வடகொரியா முழுமையான ஆதரவு - வடகொரிய ஜனாதிபதி 19 JUN, 2024 | 12:19 PM உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பை முழுமையாக ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்தவேளை கிம்ஜொங் உன் இதனை தெரிவித்துள்ளார். வடகொரியாவில் புட்டினிற்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரோஜா மலர்களுடன் அவரை வரவேற்றுள்ளனர், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் புட்டினிற்கு வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186435
  20. பட மூலாதாரம்,TAWANA MUSVABURI கட்டுரை தகவல் எழுதியவர், போனி மெக்லாரன் பதவி, பிபிசி நியூஸ்பீட் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 21 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, தவனாவின் திட்டத்தில் இல்லை. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக, விருந்துகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு சென்று சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறுகிறார் அவர். ஆனால், அதெல்லாம் அவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு வரைதான். அவருக்கு என்ன ஆயிற்று என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால், இன்னும் நான்கு வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாக மருத்துவர்கள் அவரிடம் கூறினர். "எனக்கு பதற்றத்தில் உடல் உதற தொடங்கி விட்டது” என்று பிபிசியிடம் கூறினார் அவர். அந்தத் தகவல் அவரை இருட்டுக்குள் தள்ளியது போல் ஆக்கிவிட்டது. அதற்கு காரணம், "ஒருவர் உங்களிடம் வந்து உங்களது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுக்கு, இன்னும் நான்கு வாரம் மட்டுமே இருக்கிறது என்று கூறுவது எப்படி இருக்கும்?" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு முன்பு, கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு தவானாவிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் மருத்துவர்களின் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். அவர் கருவுற்றிருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக(negative) வந்தபோது, தவனா தான் நினைத்தது சரி என்று மேலும் உறுதியாக நம்பினார். ஆனால் நர்ஸ் ஒருவரோ தவனா கர்ப்பமாக இருக்க கூடும் என்று உறுதியாக சந்தேகிக்க, அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து பார்க்க மருத்துவரிடம் வலியுறுத்தினார். ரிவரின் தந்தை இம்மானுவலிடம், முதலில் தான் குழந்தை பெற்றெடுக்க போவதை தவனா கூறிய போது, அதை அவர் முதலில் நம்பவே இல்லை. "இது சுத்தமாக புரியவில்லை," என்று கூறும் அவர், "இது மிகவும் அதிசயமான நிகழ்வு" என்கிறார். வாந்தியெடுத்தல் அல்லது கவனிக்கத்தக்க அளவுக்கு வயிறு பெருத்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் குழந்தையைப் பெற்றெடுப்பது கிரிப்டிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அந்த பெண்ணுக்கே தெரியாமல் அவர் கர்ப்பமடைதல். இது அரிதானதே, ஆனாலும் "கறுப்பின சமூகத்தில் இது மிகவும் பொதுவானது" என்று மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தவானா கூறுகிறார். "நமது இடுப்பு மற்றும் எலும்பு அமைப்பு காரணமாக இப்படி நிகழ்வதாக என்னிடம் கூறப்பட்டது. குழந்தை வெளிப்புறமாக வளராமல், உள்நோக்கி வளர்கிறது. இதனால் பிரீச் நிலை எனப்படும் தலைகீழ் பிரசவம் நடக்க வாய்ப்புள்ளது," என்று அவர் கூறுகிறார். "பிரசவம் நடக்கும் போது, மகள் பிரீச் நிலையில் இருக்கப் போகிறாளா என்பதுதான் எனது மிகப்பெரிய கவலை." இந்த புதிரான கர்ப்பம் பற்றிய தரவு உடனடியாக கிடைக்கவில்லை என்றாலும், லண்டன் சவுத் பேங்க் பல்கலைக் கழகத்தின் சுகாதாரப் பேராசிரியரான அலிசன் லியரி, "பெண்கள், குறிப்பாக கறுப்பினப் பெண்கள், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் அடிப்படையில் மோசமான விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் காட்டும் நிறைய ஆய்வுகள் உள்ளன," என்று அவர் பிபிசி நியூஸ்பீட்டிடம் தெரிவித்தார். மேலும் புதிரான கர்ப்பம் குறித்த கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார் அவர். "இது சிறிய அளவிலான மக்களைப் பாதித்தாலும் இது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். ஏனெனில் நல்ல மகப்பேறு பராமரிப்பு, முறையான பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு ஆகியவை முன்கூட்டியே உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் மோசமான விளைவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்." என்று அவர் கூறினார். குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நான்கு வாரங்கள் மற்றும் நான்கு நாட்கள் சென்ற பின், தனது வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிறகு குழந்தையை பெற்றெடுத்தார் தவானா. பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுடன் தான் போராடியதாகவும், இளம் தாயாக மாறுவதற்கான ஆலோசனையைப் பெற டிக்டாக்கைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணைத் தவிர, இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட வேறு யாரையும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார் அவர். "எனக்கு எந்த அறிவுரையும் வழங்க யாரும் இல்லாததால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். இது எப்படிப்பட்டது என்று யாருமே பேசவில்லை. பின்னர் நான் ஒரு வீடியோவைப் கண்டுபிடித்தேன். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இதைப் பற்றி பேசி வீடியோ ஒன்றை போட்டிருந்தார். அதை 100 பேர் பார்த்திருந்தனர்.அவர்தான் உண்மையிலேயே எனக்கு இதுகுறித்து ஆலோசனை கூறிய ஒரே ஒரு நபர்" என்று தவானா கூறினார். இதற்கு பின்னர் தனது தனிப்பட்ட அனுபவத்தை தவானா வீடியோ மூலம் இணையத்தில் பகிர்ந்தார். இன்று வரை அது 400,000 லைக்குகளை பெற்றுள்ளது. அவள் மற்ற தாய்மார்களுடன் பேசுவதற்காக , பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கினார். தனது கதையை பகிர்வதன் மூலம், கடைசி நேரத்தில் தான் கர்ப்பமாக உள்ளதை தெரிந்து கொள்ளும் இளம் தாய்மார்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்று தான் நம்புவதாக கூறுகிறார் தவானா. என்னதான் தனது தாயிடம் இருந்து தவானாவுக்கு பொருளாதார ரீதியாக உதவி கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் இருந்தாலும், எல்லா இளம் தாய்மார்களுக்கும் அந்த வசதி இருக்காது என்று அவருக்கு தெரியும். எனவே, ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். "உதவி இல்லையென்றால், ஏதாவது நடக்கும் போது நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்?" கிரிப்டிக் கர்ப்பம் என்றால் என்ன? இந்த வார்த்தை தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரியாமலே கர்ப்பமாக இருக்கும் பெண்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இதில் சில பெண்களுக்கு பிரசவத்திற்கு போகும் வரை தாங்கள் கர்ப்பமாக இருப்பதே தெரியாது. 2,500 பிரசவங்களில் ஒன்று இப்படியானதாக இருக்கிறது. இது பிரிட்டனில் ஒரு வருடத்திற்கு சுமார் 300 பிறப்புகளுக்கு சமம். சில பெண்கள் கர்ப்பத்தின் அறிகுறிகளை பெறாமல் இருப்பது, மன அழுத்தத்தோடு தொடர்புடையது. ஒழுங்கற்ற அல்லது மாதவிடாய் ஏற்படாத பெண்கள் கூட, ஒரு சில கர்ப்பத்திற்கான அறிகுறிகளை பெறுகிறார்கள். ஆதாரம்: ஹெலன் செய்ன், மருத்துவ பேராசிரியர் ஸ்டிர்லிங் பல்கலைக் கழகம். https://www.bbc.com/tamil/articles/c511exk40lwo
  21. 19 JUN, 2024 | 04:37 PM புதிய மகசீன் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை நேரில் சந்தித்து உரையாடினார். குறிப்பாக, புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று 15 வருடங்களாக அரசியல் கைதியாக கொடுஞ்சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுருக்கும் கிருபாகரனுடன் (மொறிஸ்) தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தார். அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு 15ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கிருபாகரனுடன் உரையாடினேன். குறிப்பாக கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகளே நீடிக்கின்றன. விசேடமாக, ஒரு வழக்கிற்கு மேலதிகமாக பல வழக்குகளை அவர்கள் மீது தொடுத்து மரணிக்கும் வரையில் அவர்களை சிறைக்குள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இரட்டை ஆயுள்காலத்தினை சிறையினுள் கழித்துள்ள போதும் அவர்களை விடுவிக்காது மேலதிக வழக்குகளை தொடுக்கின்ற நிலைமைகள் துரதிஷ்டமானது. சர்வதேச சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறும் வகையிலான பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையும், ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் அதனை கருத்தில் கொள்ளாத நிலைமை தொடர்கின்றது. இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/186457
  22. நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்
  23. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/304141
  24. LIVE 41st Match, Super Eights, Group 2, North Sound, June 19, 2024, ICC Men's T20 World Cup South Africa (12.5/20 ov) 126/3 United States of America U.S.A. chose to field. Current RR: 9.76 • Last 5 ov (RR): 45/2 (9.00) Live Forecast:SA 205
  25. 44 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் பாதுகாப்பு படையின் தலைமையகங்களில் இரண்டு முக்கிய தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒரு பகுதி வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மற்றொன்று யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன. மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கரா என்பவர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் விக்ரமசிங்கே யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியாகவும் உள்ளனர். போர்ச்சூழல் காரணமாக 40 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான ராணுவ மற்றும் காவல்துறை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படையினரின் முகாம்களினால் பூர்வீக நிலங்களை இழந்த பெருமளவிலான மக்கள் இன்னமும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து அல்லது வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாணம் பலாலி, காங்கேசன்துறை, பெதுருதுடுவ, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மக்கள் பலரும் தமது நிலங்களை இழந்துள்ளனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வடக்கு மாகாணத்தில் ராணுவத்திடம் எவ்வளவு நிலம் உள்ளது? படக்குறிப்பு,போர் காரணமாக 40 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான ராணுவ மற்றும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. போர்ச் சூழலின் போது ராணுவம் வட மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான முகாம்களை நிறுவியது. 2009 ஆம் ஆண்டளவில், வடக்கு மாகாணத்தில் 73,016.50 ஏக்கர் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 12,236.69 ஏக்கர் நிலமும் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இந்த தகவல்களை ராணுவ பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ராணுவத்தினர் வசம் இருந்த நிலப்பகுதியில் இருந்து தற்போது 63,187.91 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டு 9,828.67 ஏக்கர் நிலம் ராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமாரா பிபிசி சிங்களத்திடம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ராணுவத்தினர் வசமுள்ள நிலங்களில் இருந்து 8772.62 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு 3464.07 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவத் தளங்களை அமைப்பதற்காக 2009 ஆம் ஆண்டளவில் வட மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் 86.54% விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13.46% விடுவிக்கப்படவுள்ளது. அதே போன்று கிழக்கு மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு ராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 71.70% விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மேலும் 28.30% நிலம் விடுவிக்கப்பட உள்ளதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். படக்குறிப்பு,பாதுகாப்புப் படையினரின் பிடியில் இருந்த பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்காக சிறிய ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அந்த சிறிய முகாம்களில் இருந்த காவலர்கள் பிரதான முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆயுதப்படைகள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கர்னல் நளீன் ஹேரத் மற்றும் மேலும் சில அதிகாரிகளிடம் பிபிசி சிங்களம் கேள்வி எழுப்பியது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படை செயல்பாடுகளுக்காகவும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் நிலம் குறித்து அவர்களிடம் பிபிசி கேட்டது. "போரின் தொடக்கத்தில் இருந்து முப்படையினருக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இதுவரை பெருமளவிலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27,496.72 ஏக்கர் நிலம் ஆயுதப்படைகள் வசம் இருக்கிறது” என்று நளீன் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படை வசம் இருக்கும் நிலங்கள் படிப்படியாக மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வடக்கு மாகாணத்தில் எத்தனை முகாம்கள் அகற்றம்? கடந்த ஓராண்டில் வடக்கு மாகாணத்தில் இருந்து எத்தனை பாதுகாப்பு படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி சிங்களம் கேட்டது. வடக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் இருந்து இரண்டு பிரதான பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த போது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதான பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் இயங்கின. இதுவரை இரண்டு முக்கிய பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. அதன்படி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் என்ற பெயர் நீக்கப்பட்டு, முக்கியமான முகாம்கள் தற்போது வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக எல்லை தம்புள்ளாவில் இருந்து கிளிநொச்சி வழியாக வடக்கே தலைமன்னாரிலிருந்து புல்முடே வரை நீண்டுள்ளது. இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் இருந்த தலைமை பாதுகாப்பு படைத் தளபதியின் இரண்டு பதவிகள் நீக்கப்பட்டுள்ளன. போர் காலத்தில் பொதுமக்களின் நிலங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பல முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. "கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அமைந்திருந்த சிறிய முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார். "யாழ் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சொந்தமான சிறிய முகாம்கள் அகற்றப்பட்டு, பொதுமக்களின் நிலங்கள் தற்போது திரும்ப வழங்கப்படுகின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டார். முகாம்கள் அகற்றப்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறுமா? பாதுகாப்புப் படையினர் கைவசப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்காக ராணுவத்தின் சிறிய முகாம்கள் அகற்றப்பட்டு, அதில் இருந்த பாதுகாப்பு படையினர் பிரதான முகாம்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். "சிறிய முகாம்கள் அகற்றப்பட்டாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்படவில்லை. எந்த ஒரு தீவிரவாத தாக்குதலையும் எதிர்கொள்ள பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கின்றனர். பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படை முகாம்களை அகற்றுவது நல்லதா? வட மாகாணத்தில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான முகாம்களை அகற்றி, ராணுவத்தினரை வெளியேற்றுவது சரி வருமா என்று வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த என்.மனோகரன் என்பவரிடம் பிபிசி சிங்களம் கேள்வி எழுப்பியது. "இப்போது போர் இல்லை. போர் நிறைவடைந்து சுமார் 15 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே தேவையற்ற பாதுகாப்பு முகாம்களை அகற்றுவது நல்லது. ஏனெனில் அந்த ராணுவ முகாம்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்களின் உரிமையாளர்கள் தற்போது வேறு இடங்களில் வசிக்கின்றனர். போர் இல்லாத காரணத்தினால் பொதுமக்களின் நிலங்களில் உள்ள முகாம்களை அகற்றி அவற்றை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்கினால் நல்லது.” என்று என்.மனோகரன் விவரித்தார். "நிலங்களை ஒப்படைக்க அரசு முயற்சி செய்யவில்லை" வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாதது குறித்து மாற்றுக் கொள்கை மையத்தின் வழக்கறிஞர் பவானி பொன்சேகாவிடம் பிபிசி சிங்களம் கேட்டது. "இப்போது போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக அளவிலான பொதுமக்களின் நிலங்களை பாதுகாப்பு படையினர் இன்னமும் வைத்துள்ளனர். பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட சில பொதுமக்களின் நிலங்களில் பாதுகாப்புப் படையினர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அதன் விளைச்சல் நிலத்தின் உரிமையாளர்களுக்கு போய்ச் சேரவில்லை.” என்று அவர் சொன்னார். "பொதுமக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாமல் இருப்பது தவறு. பொதுமக்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும், நிலங்களை மக்களிடம் ஒப்படைப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார் பவானி பொன்சேகா. https://www.bbc.com/tamil/articles/c6ppx435dd1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.