Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்த விலங்கு வழக்கமான சாம்பல் நிற ஓநாய்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 21 ஜூன் 2024 சித்தேஷ் பிரம்மங்கர் புனே அருகே உள்ள மக்ரானா என்னும் நகருக்கு சென்ற போது, கொஞ்சம் வித்தியாசமான ஒரு மிருகத்தைப் பார்த்தார். “நாங்கள் அப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. அது ஓநாய் போல தோற்றமளித்தது, ஆனால் அது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது ஓநாய்களின் வழக்கமான சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால் ஒருவித மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்த சம்பவம் 2014 இல் இருந்து வந்தது." அந்த சமயத்தில், புனேவில் உள்ள மக்களால் நிறுவப்பட்ட `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளையைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சித்தேஷ் அந்த பகுதியில் நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது தான் அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. பின்னர், அந்த பகுதியில் பல நிறங்களில் விலங்குகள் காணப்பட்டது பற்றி அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்கள் அனைவரும் இதுகுறித்து மேலும் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்தனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளையின் நிறுவனர் மிஹிர் காட்போல் கூறுகையில், “ கொரோனாவின் போது பொதுமுடக்க நாட்களில், புனே அருகே மற்றொரு மஞ்சள் நிற விலங்கைப் பார்த்தோம். பின்னர் ஒரு பெண் விலங்கை பார்த்தோம். அது ஓநாய் போல தோற்றமளித்தது. ஆனால் அதன் தோலில் கோடுகள் இருந்தன. விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் மற்றும் வனத்துறையின் அனுமதியுடன், அவர்கள் விலங்குகளின் முடி மற்றும் மலம் ஆகியவற்றை சேகரித்தனர். நிச்சயமாக, இந்த பணி எளிதானது அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். மிஹிர் கூறுகையில், “ஓநாய் ஒரு உன்னதமான அதேசமயம் மர்மமான உயிரினம். அவை மனித குடியிருப்புகளுக்கு அருகில் ஒன்றாக வாழ்வதால், ஓநாய்கள் மக்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவை. எனவே, நாங்கள் அதை எளிதாக கண்காணித்தோம். "அவற்றின் நடமாட்டம், அவற்றின் இருப்பிடம் எங்கே, அந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறும்போது எங்கே செல்கிறது என்பதை கண்காணித்தோம். அதனால்தான் இந்த வினோதமான விலங்கின் முடி மற்றும் மலத்தை எங்களால் சேகரிக்க முடிந்தது.” என்கிறார். மரபணு வரிசைப்படுத்தலுக்குப் பிறகு, அவர்களின் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விலங்கு ஒரு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதியானது. இத்தகைய விலங்குகள் 'ஓநாய்-நாய்கள்' ('wolf-dogs') என்று அழைக்கப்படுகின்றன. இந்த கலப்பின விலங்கு `wolfdogs’ எனப்படும் இனங்களில் இருந்து வேறுபட்டது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற உறுதியான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த ஆய்வு மேலும் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளது - இந்த கலப்பின விலங்கு புதிய சந்ததிகளை உருவாக்கும். சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி அறிக்கை, தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட், அசோகா டிரஸ்ட் ஃபார் எக்காலஜி அண்ட் என்விரன்மென்ட் (ATREE) மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) ஆகியவற்றால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, ஓநாய் பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஓநாய்களுக்கும் நாய்களுக்கும் இடையில் இந்த கலப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த மதிப்பாய்வு, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமா என்றும், ஏன் அதிக ஆராய்ச்சி தேவை என்பதையும் ஆராய்கிறது. புல்வெளிக்காடுகளின் மன்னர்கள் பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,ஓநாய்-நாய் சாம்பல் ஓநாய்கள் (wolf) உலகெங்கிலும் புல்வெளிகள், காடுகள், பனிப்பிரதேசம் அல்லது பாலைவனங்கள் என பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிக்கின்றன. இந்தியாவில் சாம்பல் ஓநாய்கள் முக்கியமாக மனித குடியிருப்புகளை ஒட்டியுள்ள 'சவன்னா' என்னும் புல்வெளிக்காடுகளில் வாழ்கின்றன. கென்யாவைப் போன்ற ஒரு ஆப்பிரிக்க தேசத்தில் சவன்னா (Savannah) என்று அழைக்கப்படும் புல்வெளிக்காடு உள்ளது. இதேபோன்ற புல்வெளிகள் இந்தியாவில் இமயமலையை ஒட்டிய தெராய் பகுதியிலும், ராஜஸ்தானிலும், மகாராஷ்டிரத்திலும் (புனே-சாஸ்வாத், அகமதுநகர், சோலாப்பூர்) காண முடியும். "இந்திய புல்வெளிக்காடுகள் (சவன்னா) ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் கொண்ட பகுதி. பல விலங்குகள் அதில் வாழ்கின்றன . இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் ஓநாய்கள் உணவுச் சங்கிலியின் மிக உயர்ந்த மற்றும் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது" என்று மிஹிர் விளக்குகிறார். இந்தியாவில் இரண்டு வகையான ஓநாய்கள் உள்ளன. இமயமலை ஓநாய்கள் மற்றும் இந்திய ஓநாய் (Canis lupus pallipes) என்று அழைக்கப்படும் இந்திய சாம்பல் ஓநாய் ஆகியவை ஆகும். இந்திய ஓநாய் இனம் உலகின் முக்கியமான இனமாகும், ஏனெனில் இந்தியாவைச் சேர்ந்த இந்த சாம்பல் ஓநாய் இனம் உலகின் பழமையான சாம்பல் ஓநாய் இனங்களில் ஒன்று . அதாவது, ஒரு விதத்தில், அவை உலகின் சாம்பல் ஓநாய்களின் மூதாதையர்கள். அவை அழிந்துவிட்டால், பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கியமான சங்கிலி அறுந்துவிடும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) வகைப்பாட்டின் படி, சாம்பல் ஓநாய் அழிந்து வரும் உயிரினம் அல்ல. ஆனால் இந்தியா போன்ற சில நாடுகளில் இது ஆபத்துக்குள்ளாகிறது. இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனவிலங்கு சட்டத்தின் கீழ் ஓநாய்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் வாழ்விடங்களில் மனித தலையீடு அதிகரித்து வருவதால், அந்த விலங்குகள் ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஓநாய்களின் எண்ணிக்கை சுமார் 2,000 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த எண்கள் உண்மையல்ல என்கின்றனர். ஏனெனில் இந்த எண்ணிக்கை மதிப்பீடுகளாக கூறப்படுவது. புலிகளுக்கு செய்வது போல் கண்க்கெடுப்பு நடத்தப்படவில்லை. மகாராஷ்டிராவின் சவன்னா புல்வெளிகளில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புனே மாவட்டத்தில் மட்டும் 30 ஓநாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புனேவின் மல்ரான்ஸில் ஓநாய்-நாய் கலப்பின விலங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆய்வில் வெளிவந்த தகவல் பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,புனே அருகே புல்வெளியில் சுற்றித்திரியும் ஓநாய்கள் "நாய்கள் மற்றும் ஓநாய்கள் மரபணு ரீதியாக மிக நெருங்கிய உறவினர்கள்" என்கிறார் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் பல்லுயிர் ஆய்வாளர் அபி வனக். நாய்கள் ஓநாய்களிலிருந்து உருவானது - ஒரு விதத்தில் நாய்களை வளர்ப்பு ஓநாய் என்று கூட சொல்லலாம்" அபி வனக் மேலும் கூறுகையில், “உலகம் முழுவதும் ஓநாய்-நாய் கலப்பினங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் சில புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. ஏனென்றால், ஒரு இடத்தில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்தால், அவற்றால் புதிய துணையை கண்டுபிடிக்க முடியாது. அந்த நேரத்தில் அவை நாய்களுடன் கலப்பினம் செய்கின்றன. சமீப காலமாக, புல்வெளிக்காடுகளில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயம், கால்நடை மேய்ச்சல், குப்பை கொட்டுதல் போன்ற செயல்பாடுகளால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். நகரமயமாக்கல் விரிவாகும் போது, தெருநாய்களுக்கு காட்டு ஓநாய்களுடனான தொடர்பு அதிகரிக்கிறது." என்றார். கடந்த காலங்களில், நாய்களின் சில இனங்களை உருவாக்க நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையில் மனித கலப்பின வழக்குகள் உள்ளன, மேலும் இதுபோன்ற இனப்பெருக்கம் பல இடங்களில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது . "ஆனால் காடுகளில் இத்தகைய கலப்பினம் உருவாவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது ஓநாய் இனத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அவற்றின் தனித்துவமான மரபணு அடையாளம் அழிந்துவிடும்." இது குறித்து மூலக்கூறு சூழலியல் நிபுணர் உமா ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில் (NCBS) பேராசிரியராக உள்ளார். உமாவின் சொந்த ஆய்வகம் ஓநாய்-நாய் கலப்பின விலங்கின் மரபணு வரிசைமுறையைச் செய்து, இந்தியாவில் அத்தகைய கலப்பின விலங்கு இருப்பதை நிரூபித்தது. உமா கூறுகையில், “நீங்கள் இரண்டு வண்ணங்களை எடுத்து அவற்றை ஒன்றாக கலந்தீர்களானால் இறுதியில் கிடைக்கும் வண்ணங்கள் முதலில் இருந்ததைப் போலவே இருக்காது. இதேபோல் கலப்பினமானது ஒரு இனத்தின் மரபணு பண்புகளை நீர்த்துப்போகச் செய்கிறது.” "இங்கு நாய்களைப் போல ஓர் இனத்தில் அதிக விலங்குகள் இருக்கும் உயிரினம் ஓநாய்கள் போல குறைவாக இருக்கும் இனத்துடன் கலப்பினம் செய்யும் போது, நாய்கள் ஓநாய்களின் மரபணு பண்புகளை அழித்து, இறுதியில் ஓநாய் இனத்தையே அழித்துவிடும்." என்கிறார். அபி வனக் விவரிக்கையில், “நாய்க்கும் ஓநாய்க்கும் மரபணு வேறுபாடு உள்ளது. மனிதர்களால் வளர்க்கப்படுவதால், நாய்கள் ஓநாய் போன்ற குணங்களை இழந்துவிட்டன. அதாவது, அவை அளவு சிறியதாகி, அவற்றின் வலிமை குறைந்துவிட்டது. கலப்பினம் ஏற்பட்டால், நாய்களின் குணங்கள் ஓநாய்களுக்குள் செல்லலாம், இது ஓநாய்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்." ஆனால் அத்தகைய கலப்பினம் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியாது. மிஹிர் காட்போல் கூறுகையில், “நாய்கள் ஓநாய்களுக்கு ரேபிஸ் போன்ற நோய்களையும் வைரஸ்களையும் கடத்தும். இந்த வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை, இதுபோன்ற தொற்று அந்த பகுதியில் உள்ள அனைத்து காட்டு ஓநாய்களையும் கொல்லக்கூடும். ஓநாய்கள் உணவாக சாப்பிடும் சிறிய விலங்குகளைத் தெருநாய்கள் கொல்கின்றன. நிச்சயமாக, ஓநாய்களை ஆபத்தில் ஆழ்த்துவது நாய்கள் மட்டுமல்ல. `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளையில் மிஹிரின் குழு நடத்திய மற்றொரு ஆய்வில், ஓநாய் வாழ்விடங்களில் சிறுத்தைகள் இருப்பதும் அந்த வாழ்விடங்களின் சமநிலையை சீர்குலைப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இன்னும் இந்திய ஓநாய்களைப் பாதுகாக்க போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,ஓநாய்கள் மகாராஷ்டிராவின் புல்வெளி காடுகளில் உணவுச் சங்கிலியின் முக்கிய அங்கமாகும். ஓநாய்கள் மற்றும் மான்களின் பாதுகாப்பு பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்திய ஓநாய் மிகவும் பழமையான ஓநாய் இனங்களில் ஒன்றாகும். அபி வனக் கூறுகையில், “புலிகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் அதே வழியில், ஓநாய்களைப் பாதுகாக்க நினைத்தால் அது நடக்காது. ஓநாய்களுக்கு தனியாக பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களை உருவாக்க முடியாது. ஏனெனில் அவை கலவையான நிலப்பகுதியில் வாழ்கின்றன. அவை பெரும்பாலும் வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்கிறார். `கிராஸ் லேண்ட்’ அறக்கட்டளை தற்போது ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இது கிராமவாசிகள் மற்றும் அனைத்து பிரமுகர்களையும் உள்ளடக்கியது. இந்த புல்வெளிக்காட்டின் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக இது செயல்படுகிறது. மாநிலத்தில் ஓநாய் பாதுகாப்புக்காக வனத்துறைக்கு ஒரு திட்டத்தை அவர்கள் முன்மொழிந்துள்ளனர். ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளதாக உமா ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார். "நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று இந்த கலப்பின விலங்கை எவ்வாறு வகைப்படுத்துவது? வனவிலங்கு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறதா? அத்தகைய விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை என்ன செய்வது? இவை நெறிமுறைகள் மட்டுமல்ல, சூழலியல் மற்றும் உயிரியல் பற்றிய கேள்வியும் கூட. "பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்கிறோம். ஆனால் எதிர்காலத்திலும் பரிணாமம் நிகழும். உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியின் திசையை மனிதர்களாகிய நாம் தீர்மானிக்கப் போகிறோமா?" https://www.bbc.com/tamil/articles/cl7755w2vkjo
  2. சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்; சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் அமெரிக்காவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் 22 JUN, 2024 | 11:11 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கு (USA) எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்ரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் (WI) 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இங்கிலாந்துக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள், நிகர ஓட்ட வேகத்தை அதிகரிப்பதைக் குறியாகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி அதனை நிறைவேற்றுக்கொண்டது. ரொஸ்டன் சேஸ், அண்ட்றே ரசல் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகளும் ஷாய் ஹோப்பின் அதிரடி துடுப்பாட்டமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்தப் போட்டியில் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் நிலையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறி அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது. ஐக்கிய அமொரிக்காவை 128 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள், 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றியீட்டியது. அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப் 39 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 82 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆரம்ப விக்கெட்டில் ஜோன்சன் சார்ள்ஸுடன் 42 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாய் ஹோப், பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 23 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் 15 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆறு பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அண்ட்றீஸ் கௌஸ் (29), நிட்டிஷ் குமார் (20) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 51 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், அதன் பின்னர் 9 விக்கெட்கள் 78 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. கௌஸ், குமார் ஆகியோரை விட மிலிந்த் குமார் (19), ஷெட்லி வன் ஷோக்வைக் (18), அலி கான் (14 ஆ.இ.), அணித் தலைவர் ஆரோன் ஜோன்ஸ் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அண்ட்றே ரசல் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: ரொஸ்டன் சேஸ். https://www.virakesari.lk/article/186685
  3. புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிசிச்செலவில் அமைக்கப்பட்ட புதிய மாவட்ட செயலக கட்டிட தொகுதியை திறந்து வைத்துள்ளார். இன்றும், நாளையும் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304310
  4. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 10:55 AM வெப்ப அலையில் தத்தளிக்கும் நான்கு பால்கன் நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அல்பேனியா, போஸ்னியா, மொண்டினீக்ரோ மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளின் கரையோரப் பகுதிகள் பிற்பகலில் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நிலவும் கடும் வெப்பத்தினால் வீடுகளில் குளிரூட்டும் கருவிகளை பயன்படுத்தியமையின் பின்னர் மின்பாவனை அதிகரித்த நிலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மின் தடையினால் போஸ்னியா மற்றும் குரோஷியாவில் போக்குவரத்து சமிக்ஞைகள் தடைப்பட்டு, சரஜேவோ, ஸ்பிலிட் மற்றும் பிற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வேளையில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டதாகவும், ஆனால் நான்கு நாடுகளின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின்சக்தி அமைப்புகளில் எங்கே பிரச்சினை ஏற்பட்டது என்பதை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும் மின்சாரம் வழங்குனர்கள் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 13:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதோடு, மொண்டினீக்ரோவின் தலைநகரான போட்கோரிகாவில் நீர் விநியோக தடையும் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த குரோசியா நாட்டில் உணவகங்கள், கழியாட்ட விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மின்சார தடையால் மூடப்பட்டதால் விடுமுறைக்கு சென்றவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். அப்பகுதி முழுவதும் பகல் வேளையில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக மின் நுகர்வு திடீரென அதிகரித்தது மின் தடைக்கு காரணம் என மொண்டினீக்ரோவின் எரிசக்தி அமைச்சர் சாசா முஜோவிக் தெரிவித்துள்ளார். அல்பேனியாவில், அரை மணி நேரத்திற்குள் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டது, ஆனால் மின்சார பயன்பாடு அதிகமாக இருப்பதால், மேலும் மின்தடை ஏற்படும் அபாயம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/186673
  5. ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் நாற்பது வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தக் கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/304298
  6. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 10:40 AM அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. காயமடைந்த 10 பேரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். தெற்கு ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஃபோர்டைஸ் நகரத்தில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்ததாகவும் ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் என்ற அமைப்பு, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுவரை 234 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 21 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/186675
  7. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 04:33 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஜனாதிபதி அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனும் இச்சத்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/186705
  8. நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். "இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார். பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள். காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர். "தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார். கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார். பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார். "அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார். கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன. மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன. பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார். "ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார். "ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c4nnq1glz9no
  9. Published By: VISHNU 22 JUN, 2024 | 12:37 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார். தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார். இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். 3 அரைச் சதங்களுடன் 196 ஓட்டங்களைப் பெற்ற அவர், 5 விக்கெட்களையம் கைப்பற்றியிருந்தார். அணியில் இடம்பெறுவோரில் புலிந்து பெரேரா, விஹாஸ் தெவ்மிக்க ஆகியோரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மற்றைய இரண்டு வீரர்களாவர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு முன்னாள் தேசிய வீரரும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார். துடுப்பாட்டப் பயிற்றுநராக தம்மிக்க சுதர்ஷனவும் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக ஒமேஷ் விஜேசிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுப் பயண தெரிவாளராக டில்ருவன் பெரேரா இங்கிலாந்து செல்லவுள்ளார். போட்டி விபரங்கள் இங்கிலாந்துக்கு சனிக்கிழமை (22) காலை புறப்பட்டுச் செல்லவுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி அங்கு முதலாவதாக 50 ஓவர் பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடும். பயிற்சிப் போட்டி லோபரோ பல்கலைக்கழக மைதானத்தில் ஜூன் 25ஆம் திகதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து செல்ஸ்போர்ட், க்ளவ்ட் கவுன்டி மைதானத்தில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நடைபெறும். தொடர்ந்து ஹோவ் செஞ்சரி கவுன்டி மைதானத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜூலை 1ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது நான்கு நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வோர்ம்ஸ்லியில் ஜூலை 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரையும் இரண்டாவது போட்டி செல்டன்ஹாமில் ஜூலை 16ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரையும் நடைபெறும். 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம் தினுர களுபஹன (தலைவர் - காலி மஹிந்த), சண்முகநாதன் ஷாருஜன் (உதவித் தலைவர் - கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர்), சதேவ் சமரசிங்க (நாலந்த), புலிந்து பெரேரா ஷேஷான் மாரசிங்க (இருவரும் கண்டி தர்மராஜ), ஹிரான் ஜயசுந்தர (மருதானை புனித சூசையப்பர்), தினிரு அபேவிக்ரமசிங்க (மாத்தறை புனித சர்வேஷஸ்), மஹித் பெரேரா, நேதன் கல்தேரா (இருவரும் கல்கிஸ்ஸை பரி. தோமா), கயன வீரசிங்க (குருநாகல் மலியதேவ), திசர ஏக்கநாயக்க (கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார்), யூரி கொத்திகொட (காலி றிச்மண்ட்), மஞ்சுள சன்துக்க (மொறட்டுவை புனித செபஸ்தியார்), விஹாஸ் தெவ்மிக்க (கொழும்பு தேர்ஸ்டன்), துமிந்து செவ்மின, ப்ரவீன் மனீஷ (இருவரும் கொழும்பு லும்பிணி), ஹிவின் கெனுல (களுத்துறை திருச்சிலுவை), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்) https://www.virakesari.lk/article/186671
  10. முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை காப்பாற்ற சென்ற பலர் இரண்டாவது தாக்குதலில் பலி - காசாவில் சர்வதேச செஞ்சிலுவை அருகில் இஸ்ரேல் தாக்குதல் Published By: RAJEEBAN 22 JUN, 2024 | 12:08 PM காசாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையலுவலகத்திற்கு அருகில் உள்ள கூடார முகாம்மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 25க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு தடவைகள் தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண்ணொருவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார். முதல் தாக்குதலை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது வெளிச்சம் வெளிவந்தது இதனை தொடர்ந்து என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக ஏனையவர்கள் சென்றவேளை இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றது என மொனா அசூர் தெரிவித்துள்ளார். நாங்கள் முகாம்களிற்குள் இருந்தோம் அவ்வேளை அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் உள்ள கூடாரங்கள் மீது சத்த குண்டுதாக்குதலை மேற்கொண்டனர் அவ்வேளையே எனது கணவர் வெளியே சென்றார் என கான்யூனிஸ் மருத்துவமனைக்கு அருகில் வைத்து அந்த பெண் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் இரண்டாவது தாக்குதலை மேற்கொண்டனர் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலக வாயிலிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார். முதல் தாக்குதல் காரணமாக பதற்றமடைந்த மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த தனது இரண்டு மகன்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என ஹசான் அல் நஜாய் தெரிவித்துள்ளார். பெண்களும் குழந்தைகளும் அலறியதை தொடர்ந்து எனது புதல்வர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்தனர் என அவர் மருத்துவமனையிலிருந்தவாறு தெரிவித்துள்ளார். அவர்கள் பெண் ஒருவரை காப்பாற்ற சென்றனர் அவ்வேளை இரண்டாவது ஏவுகணை தாக்கியது அவர்கள் தியாகினார்கள் என அந்த பெண் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186689
  11. 22 JUN, 2024 | 01:12 PM இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற 31 ஆவது ‘அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் – 2024’, இந்தியாவின் KPMG மற்றும் இலங்கையின் KPMG ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒத்துழைப்புத் திட்டங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட இந்திய பங்காளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Yezdi Nagporawalla மற்றும் KPMG இலங்கை முகாமையாளர் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினர். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க : ‘’இலங்கையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவையும் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம். அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்துநி லையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம். மேலும், வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி வருமானம் மற்றும் பல பரிமாண வறுமையைக் குறைப்பதற்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அவ்வாறு செய்யும் முதல் நாடு இலங்கை என்று நான் நம்புகிறேன். ஒரு அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தவுடன், அடுத்து வரும் அரசாங்கம் நிச்சயமாக அந்தக் கொள்கையை மாற்றியமைக்கின்றது. அப்போது நாம் ஒரு நாடாக முன்னேற முடியாது. நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்ற சட்ட மூலம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. நாங்கள் தயாரித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, முதலீட்டு சபையின் செயல்பாடுகளுடன் முழுமையான முதலீட்டு செயல்முறையையும் நிர்வகிக்கும் பொருளாதார ஆணைக்குழு போன்ற புதிய நிறுவனங்களும் இந்த சட்டத்தின் மூலம் நிறுவ எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு வலயங்களை முகாமைத்துவம் செய்ய ஒரு தனியான முகவர் நிறுவனம், நமது சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம், உற்பத்தித் திறன் மேம்பாட்டை உறுதி செய்ய தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான நிறுவனம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இது தொடர்பாக மேலும் கலந்துரையாட இலங்கைக்கு வருகை தந்தார். எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும். அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் திட்டம் எங்கள் வலுசக்திக் கூட்டாண்மைக்கு அடிப்படையாக அமைவதோடு, மேலும் காற்றாலை மற்றும் சூரிய சக்திக்கான பாக்கு நீரிணையை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இரு நாடுகளும் ஒன்றிணைந்து சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான பாரிய அளவிலான மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக, யாழ் குடாநாட்டின் பிரதான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து, இந்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் நாம் விரிவாகக் கலந்துரையாடினோம். திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தில் கைத்தொழில்களுக்கான முதலீட்டு வலயங்களும் உள்ளடங்கும். அதேபோன்று சுற்றுலாப் வலயத்தையும் கொண்டுள்ளது. மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான இறுதி கண்காணிப்பு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். மேலும், திருகோணமலையை எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக மாற்ற எதிர்பார்ப்பதுடன், துறைமுகங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதன் மூலம் திருகோணமலை துறைமுகம் வங்காள விரிகுடாவில் ஒரு பிரதான துறைமுகமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, முழு கிழக்கு கடற்கரையும் சுற்றுலாத்துறைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலி மற்றும் தெற்கு பிரதேசங்களில் ஹோட்டல்களுக்கு மேலதிக காணிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார். KPMG இந்தியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி யெஸ்டி நாக்போரேவெல்லா, ‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை மக்களின் நலனுக்கான இடைவிடாத அர்ப்பணிப்பும் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும். சிறந்த தலைமைத்துவம் இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துள்ளதை நாம் கண்டோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகள் இலங்கை மக்களிடம் மட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இலங்கை நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது.’’ என்று அவர் தெரிவித்தார். KPMG குளோபல் நெட்வேக்கின் ஏனைய உறுப்பு நிறுவனங்களின் பல பங்காளர்களும், முன்னணி இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/186693
  12. Published By: RAJEEBAN 22 JUN, 2024 | 10:35 AM ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் அது உதவும் அதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் இல்லை என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். இந்த பொறிமுறையால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவுமில்லை உள்நாட்டு பொறிமுறை குறித்த அர்ப்பணிப்பை இது முன்கூட்டியே தீர்மானம் செய்கின்றது,உறுப்புநாடுகளின் வளங்களை வீணடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்றவிதத்தில், தேர்ந்தெடுக்கப்படாத தன்மையுடன், புறநிலையுடன் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்து மதிப்பிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கோட்பாடுகளிற்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது மேலும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு உறுப்புநாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார். இது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186683
  13. 22 JUN, 2024 | 09:38 AM யாழில் இளைஞன் ஒருவரிடமிருந்து பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் நேற்று வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனமொன்றினை வழிமறித்துச் சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது. இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரது வீட்டிலிருந்து 5 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186674
  14. Published By: VISHNU 21 JUN, 2024 | 11:51 PM வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த வீதியில் நீண்டகாலமாக வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருகின்றது,இதனால் அந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் நோயாளர்காவு வண்டிகளும் சிரமத்துடனேயே பயணிக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் குறித்த வீதியானது எதிர்வரும் வாரங்களிலிருந்து ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா கண்டி வீதி வழியாக வருகைதரும் பொதுமக்கள் வழமைபோல வைத்தியசாலை சுற்று வட்டத்தினை பயன்படுத்தி வைத்தியசாலை வீதியால் தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும். அத்துடன் பூந்தோட்டம் பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள் கித்துள் வீதியினையோ அல்லது குளவீதியினை பயன்படுத்தி வைத்தியசாலைக்குச் செல்ல முடியும். இது தொடர்பான தீர்மானங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், நகரசபை,பிரதேசசெயலகம், பொலிசார் ஆகியவை இணைந்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/186664
  15. 22 JUN, 2024 | 12:27 PM பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186687
  16. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எளிய இலக்கை கோட்டை விட்டாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் குருப்-2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு முதல் அணியாக தென் ஆப்ரிக்கா தகுதி பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வென்றுவிட்டால் அந்த அணி அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும். அதிரடி நாயகன் டீ காக் மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த டி20 லீக் தொடர்களில் டீகாக் விளையாடிய அனுபவம் இருந்ததால், ஆடுகளத்தின் தன்மையை எளிதாகப் புரிந்து கொண்டு செட்டிலாகினார். டீகாக்கை 6 முறை டாப்ளியும், மொயின் அலியும் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், அவர்களை பந்துவீச கேப்டன் பட்லர் பயன்படுத்தினார். ஆனால் இருவரின் ஓவரையும் டீகாக் வெளுத்துவாங்கினார். குயின்டன் டீ காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து உலகக் கோப்பையில் குறைந்தபந்துகளில் அரைசதம் அடித்த ஆரோன் ஜோன்ஸ் சாதனையுடன் டீ காக் இணைந்தார். பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்திய டீகாக், தென் ஆப்ரிக்க அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி தென் ஆப்ரிக்க அணி 63 ரன்கள் சேர்த்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டீ காக் 58ரன்களில் இருந்தபோது, அதில் ரஷீத் வீசிய பந்தில், பேக்வார்ட் ஸ்குயர் திசையில் அடித்த ஷாட்டை மார்க் உட் கேட்ச் பிடித்தார். களநடுவர் அவுட் வழங்கியநிலையில், டீகாக் 3வது நடுவருக்கு அப்பீல் செய்தார். அதை ஆய்வு செய்த 3வது நடுவர் பந்தை கேட்ச் பிடித்தபோது, பாதி பந்து தரையில் பட்டவாறு இருந்ததால் அவுட் வழங்க மறுத்துவிட்டனர். இந்த முடிவு சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தி நடுவர்களிடம் இங்கிலாந்து வீரர்கள் விளக்கம் கேட்டனர். டீ காக் 38 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். டீ காக்கிற்கு அடுத்தபடியாக மில்லர் 43 ரன்கள் பங்களிப்பு செய்தார். ஆனால் மற்ற வீரர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் 163 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்தது. தென் ஆப்ரிக்க அணி பவர்ப்ளே முடிவில் 63 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 14 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து மந்தமான பேட்டிங் இங்கிலாந்து அணி 13-வது ஓவர் வரை மந்தமாக ஆடிவிட்டு, அதன்பின்புதான் ஆட்டத்தை வேகப்படுத்தியது, முதல்நிலை வீரர்கள் யாரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. 14-வது ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 6 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டன. ரபாடா வீசிய 15-வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸரும், ப்ரூக் 2பவுண்டரிகளும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். நோர்க்கியா வீசிய 16-வது ஓவரில் ப்ரூக் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர், ப்ரூக் ஒரு பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகே கொண்டு வந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், 17-வது ஓவரிலிருந்து சுதாரித்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துவந்தனர். ரபாடா வீசிய 18-வது ஓவரில் லிவிங்ஸ்டன், நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ஹேரி ப்ரூக் இருவரும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், யான்சென், ரபாடா, நோர்க்கியா ஆகிய 3 அதிவேகப் பந்துவீச்சாளர்களும் துல்லியத் தாக்குதல் தொடுத்து தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் இங்கிலாந்து பேட்டர்களின் மந்தமான ஆட்டமும், பொறுப்பற்ற பேட்டிங்கும்தான். தொடக்கத்திலேயே பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தால் கடைசி நேரத்தில் நெருக்கடி வந்திருக்காது. 13வது ஓவர்களுக்குப் பின்புதான் இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தையே கையில் எடுத்தனர். பட்லர்(17), பேர்ஸ்டோ(16), மொயின் அலி(9) என யாரும் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கவில்லை. கடைசி நேரத்தில் ஹேரி ப்ரூக் 37 பந்துகளில் 53, லிவிங்ஸ்டோன் 33 ரன்கள் ஆகியோரின் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தில் பரபரப்பைச் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் அபாரம் அதேசமயம், கிடைத்த வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பயன்படுத்தினர். அவர்கள் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை டிபெண்ட் செய்து அசத்தினர். 18-வது ஓவரை வீசிய ரபாடா, லிவிங்ஸ்டோனை டீப் பேக்வார்ட் ஸ்குயர் திசையில் ஷாட் அடிக்க வைத்து கேட்சாக்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். 12 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய யான்சென் 4 ரன்களை மட்டுமே வழங்கினார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. 20வது ஓவரை வீசிய நோர்க்கியா செட்டில் பேட்டர் ஹேரி ப்ரூக்(53) விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் களத்தில் இருந்த சாம் கரனால் 5 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். சுழற்பந்துவீச்சாளர்கள் அதில் ரஷித், மொயின் அலி இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரீஸ் டாப்ளியும் 4 ஓவர்களில் 23 ரன்கள் என கட்டுக்கோப்புடன் வீசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் “ பவர்ப்ளேயில் டீ காக்கை அடிக்கவிட்டதுதான் நாங்கள் தோல்விக்கான காரணமாகப் பார்க்கிறோம். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தோடு டீகாக் இருந்தார். எங்களால் அவரின் ஆட்டத்துக்கு தடைபோட முடியவில்லை. 160 ரன்களை எளிதாக சேஸ் செய்துவிடலாம் என மகிழ்ச்சியுடன்தான் களமிறங்கினோம், ஆனால், தென் ஆப்ரிக்க பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றி வெற்றிக்கு அருகே கொண்டு சென்று நாங்கள் வெல்லக்கூடிய நிலையில் இருந்தோம். ஆனால், டி20 கிரிக்கெட்டில் எதுவுமே நம் கைகளில் இல்லை. நாங்கள் இன்னும் தொடரில் உயிர்ப்புடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அரையிறுதி செல்லுமா தென் ஆப்ரிக்கா? இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சூப்பர்-8 வரை தோல்வி அடையாத அணி என்ற பெயரை தென் ஆப்ரிக்கா தக்கவைத்துள்ளது. சூப்பர்-8 சுற்றில் குரூப் 2 பிரிவில் 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன், 0.625 நிக ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வென்றுவிட்டால் தென் ஆப்ரிக்க அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தென் ஆப்ரிக்கா அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தால், அமெரிக்க அணியை மேற்கிந்தியத்தீவுகளும், இங்கிலாந்து அணியும் வென்றால் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குப் போட்டியிடும். அப்போது நிகர ரன்ரேட் கவனிக்கப்படும். ஆனால், தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை அதன் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை, 0.625 என்ற நிலையில்தான் இருக்கிறது. இந்த ரன்ரேட்டை இங்கிலாந்து அணியாலும் கடைசி லீக்கில் பெறும் வெற்றியால் கடக்க முடியும், மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்தடுத்து வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்காவுக்கு கடும் போட்டியளிக்க முடியும். ஆதலால், தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டதேத் தவிர இன்னும் உறுதி செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தினால், தென் ஆப்ரிக்கா அரையிறுதி செல்வது உறுதியாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வி என 2 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டாக 0.412 என வைத்துள்ளது. அடுத்துவரும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டால், 4 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் செல்ல முடியும். அமெரிக்காவை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெல்வது ஏறக்குறைய உறுதிதான் என்றாலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவு வெற்றி அமைவது அவசியம். தமது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து அணி அமெரிக்காவையும் சந்திக்கவிருப்பதால் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c2xx3dn326no
  17. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 01:40 PM பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க அரபு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் சராசரியாக 200 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் குறைந்தது 25 சதவீதமான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலை பெற்றுக் கொள்வதற்கான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தரவுகள் காட்டுவதால் இன்னும் பலர் அவர்களை பின்பற்ற வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது ஓமான் நாடுகளில் வைத்திய துறையில் ஈடுபட வைத்தியர்களுக்கான பிரத்தியேகமான பரீட்சைக்கு தோற்ற வேண்டும். இங்கிலாந்தில் வைத்திய துறையில் ஈடுபட தொழில்முறை மற்றும் மொழியியல் மதிப்பீட்டு குழுமத்தின் பரீட்சைக்கு தோற்றவேண்டும். அவுஸ்திரேலியாவில் அவர்கள் அவுஸ்திரேலிய மருத்துவ சபையின் பரீட்சைக்கு தோற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186695
  18. நன்றி அக்கா. இரண்டு கண்களும் தெரியாத நிலையில் விக்ரோறியாக் கல்லூரியின் முன்னாள் அதிபர்(1965ஆம் ஆண்டளவில் பதவி வகித்தவர்) ஒருவர் இருந்திருக்கிறார். அவருடன் கற்பித்த ஆசிரியர் சென்று சந்தித்து உரையாடுகையில் பார்வைப் பிரச்சனையால் சிரமப்படுகிறீர்களா என வினவியபோது இல்லை நான் செய்த நற்செயல்களை நினைத்து மகிழ்வாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
  19. அண்ணை #132# என்ற இலக்கத்திற்கு அழைத்தால் உங்கள் பெயரில் எத்தனை இலக்கங்கள் பாவனையில் உள்ளது என தெரியவரும். அத்துடன் உங்கள் பெயரிலா அல்லது வேறொருவர் பெயரிலா சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் முகவரியையும் சரி பார்க்கலாம்.
  20. "நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன்" - "குறை நல்லது" என்ற தலைப்பில் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ். This is from the "நல்லவை கேட்பின் - Chennai Special Peecharangam". Featuring Raja, Bharathi Baskar and many others as Speakers.
  21. வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா கடும் கரிசனை 21 JUN, 2024 | 03:24 PM வடகொரியாவிற்கு ரஸ்யா ஆயுதங்களை வழங்கலாம் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளமை குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புட்டின் வெளியிட்டுள்ள இந்த கருத்து ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கான ரஸ்ய ஆயுதங்கள் என்பது கொரிய தீபகற்பத்தை பலவீனப்படுத்தும் ஸ்திரமிழக்கச்செய்யும் என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் வழங்கும் ஆயுதங்களை பொறுத்து அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை மீறும் நடவடிக்கையாக அமையும் ரஸ்யாவே இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரஸ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலானது என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் தென்கொரிய வெளிவிவகார அமைச்சும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186638
  22. Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 02:09 PM இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இன்று வெள்ளிக்கிழமை (21) சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை (20) சிறிய ரக ராணுவ விமான மூலம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு வந்த மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய கடற்படை மற்றும் கடலோர கடற்படை காவல் படை முகாம் களை ஆய்வு செய்த பின்னர் ராமேஸ்வரம் கடல் பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நடைபெற்ற யோகா தினத்தில் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். அதனை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வரை சென்று கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள மணல் திட்டில் இறங்கினார். பின்னர் சர்வதேச கடல் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கண்காணிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தவுடன் கண்காணிப்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து இந்திய எல்லையில் வைக்கப்பட்டிருந்த இந்தியா என்ற பெயர் பலகைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் மீண்டும் ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்து சாலை மார்க்கமாக ஐ என் எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு சென்றார். முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திற்கு சென்று அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஆய்வின் போது அவருடன் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமின் நிலைய கமாண்டர் வினைக்குமார் மற்றும் கடற்படை தளத்தின் நிலையை கமாண்டர் கேப்டன் அஸ்வின் மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர். https://www.virakesari.lk/article/186631
  23. For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood. Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban. நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.
  24. கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நினைத்ததை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு வங்கிகளின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25 வீதமான கனடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வறியவர்களின் எண்ணிக்கை 10 வீதம் என அறிக்கையிட்டிருந்தது. உண்மையில் வறியவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, பாதணிகள், புரதச்சத்து, விசேட வைபவங்கள், பரிசு பொருட்கள், ஆடைகள், பற்சுகாதாரம், எதிர்பாராத செலவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மக்களின் வறுமை நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான காரணிகளின் அடிப்படையில் கனடாவில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை மேலும் ஆறு மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வறுமை நிலையை தீர்மானிக்காது மக்களின் கொள்வனவு இயலுமை அடிப்படையில் வறுமை குறித்த தகவல்களை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 30 வயதானவர்களில் 30 வீதமானவர்களும் ஒற்றை பெற்றோரைக் கொண்ட குடும்பங்களில் 45 வீதமான குடும்பங்களும், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களில் 42 வீதமானவர்களும் வறுமையில் வாடுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304264
  25. 21 JUN, 2024 | 04:38 PM நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அத்தோடு, கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது வேறிடங்களுக்கு தப்பித்து ஓடாமல், அந்த சூழ்நிலையை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு ஜனாதிபதி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2015 புதிய மருந்துகள் சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது. நாட்டில் மருந்து விலையை கட்டுப்படுத்தல், மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்குதல், அரசின் சிறுநீரக நிதி, சுகாதார நிதியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு இந்தச் சங்கம் பங்களித்துள்ளது. அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கிவைத்தார். மேலும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது. அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “கடந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை வழங்கிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு அரசின் சார்பில் எனது விசேட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு அரச நிறுவனங்கள் வீழ்ந்து கொண்டிருந்தபோது நீங்கள் முன்வந்து உங்களது பொறுப்பை நிறைவேற்றினீர்கள். தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து உங்களின் சங்கம் அளித்துள்ள அறிவிப்பின்படி, அவை குறித்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இன்று இந்த நாட்டில் பலர் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு உங்கள் முயற்சிதான் காரணம் என்று கூற வேண்டும். கடந்த காலங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளைப் பெற பணம் இருக்கவில்லை. ஆனால், அந்த கடினமான நேரத்தில் நீங்கள் தப்பி ஓடவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள். அதைத்தான் நம் நாட்டில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறுவதில்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று உங்களுக்கோ எனக்கோ தெரியாது. நாம் அனைவரும் எம்மால் இயன்ற வரை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நான் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது. நாட்டில் அந்நிய செலாவணி இல்லை. தேவையான மருந்துகள், எரிபொருள் கொண்டு வர பணம் இல்லை. கிடைக்கும் பணத்தை எரிபொருளுக்கு வழங்குவதா அல்லது உரத்துக்கு வழங்குவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால், நாம் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை ஆரம்பித்தோம். அதன் ஊடாக உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு மருந்து மற்றும் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அத்தகைய கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வந்தோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தால், இந்தியாவிலிருந்து மருந்துகளைப் பெற முடிந்தது. மேலும், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட பணத்தால் உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது. எவ்வாறாயினும், ஒரு நாடாக நாம் முதல் 6 மாதங்களை மிகவும் சிரமத்துடன் கடந்தோம். அதன் பிறகு நாடு படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மக்கள் உங்களிடம் வந்து பணம் இல்லாமல் மருந்துகளைக் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்களுக்கு மருந்துகளை கொடுக்காமல் சாகச் சொல்வதா, நட்டத்தை அனுபவித்து மருந்து கொடுப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியேற்பட்டது. நாம் அனைவரும் அந்தக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நாம் அனைவரும் சிரமப்பட்டு அந்த முடிவுகளை எடுத்ததால்தான் நாம் ஒரு நாடாக முன்னோக்கி வருகிறோம். மேலும், VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளால் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது. கடந்த வாரம், IMF பணிப்பாளர்கள் குழுவின் இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நடத்தினோம். இலங்கையை வழிநடத்தும் திட்டம் சரியானது என்று அதன்போது சான்று கிடைத்துள்ளது. அதன்படி கடனைச் செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பணியை நிறைவுசெய்வது குறித்து தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருகிறோம். மேலும், பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்கிய தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்டவும் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாடு விழுந்த பாதாளத்தில் இருந்து இப்போது மீண்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் பயணம் முடிவதில்லை. ஆனால் ஒரு நாடாக நாம் ஏன் படுகுழியில் விழுந்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் ஏற்றுமதித் தொழிலை நாங்கள் உருவாக்கவில்லை. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நாங்கள் அனைத்தையும் தவறவிட்டோம். 1979இல் நான் சீனாவுக்குச் சென்றபோது, சீனா நம்மை விட ஏழ்மையான நாடாக இருந்தது. இப்போது சீனா நமக்குப் பணம் தருகிறது. 1991இல் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் என்னைச் சந்தித்தார். உங்களுக்கு எப்படி முதலீடுகள் வந்தன, எப்படி அன்னியச் செலாவணி கிடைத்தது, வர்த்தக வலயங்களை எப்படி உருவாக்கினீர்கள் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார். எனது அறிவுரைகளை அவர் கவனித்தார். ஆனால் இப்போது நான் வியட்நாம் சென்றால் அவரிடம் இது பற்றிக் கேட்கவேண்டியுள்ளது. கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டோம். இதைச் சரிசெய்து புதிய பொருளாதாரத்தை நோக்கிச் செல்லாவிட்டால் மீண்டும் ஒரு நாடு என்ற வகையில் பாதாளத்தில் விழுவோம். அந்த இருண்ட யுகத்துக்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டுமா? இப்போது நாட்டுக்கு புதிய செயற்றிட்டத்தை முன்வைத்துள்ளோம். பழைய முறையை விட்டுவிட்டு புதிய அமைப்பைக் கொண்டு முன்னேற வேண்டும். இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் முன்னேற்றத்துடன் நாமும் முன்னேற வேண்டும். போட்டி நிறைந்த பொருளாதாரத்துக்கு நாம் திரும்ப வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அங்கு பயன்படுத்தப்பட வேண்டும். புதிதாக சிந்தித்து புதிய நாட்டை உருவாக்குவோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கை சுகாதாரத்துறையின் தரத்தைப் பேணுவதில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பங்களிப்பை பாராட்டுவதற்கு நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். குறிப்பாக, இந்நாட்டில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும், மருந்து பற்றாக்குறையின்றி நாட்டைப் பேணுவதற்கும் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதை நான் நினைவுகூருகிறேன். இந்நாட்டு மக்களின் ஆரோக்கியமானது சுகாதாரத்துறையின் அனைத்து அம்சங்களிலும் சார்ந்துள்ளது. உலகத்துடன் ஒப்பிடும்போது, நமது நாடு சிறந்த சுகாதார சேவையை கொண்டுள்ளது. இந்நாட்டில் நோயாளிகளின் நல்வாழ்வுக்காக, நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். மேலும், புனர்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு ஒரு நாடாக முன்னேறுவதற்கான சவாலை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். சுதந்திர இலங்கையில் வைத்தியசாலைகள், வைத்தியர்கள், தாதியர்கள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்துள்ளனர். பௌதீக வசதிகள் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இலவச சுகாதாரத்தை பாதுகாக்க வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உங்கள் ஆதரவுடன் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறுகையில், "அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் என்பது தாம் நட்டம் அடைந்தேனும் நாட்டுக்கு இலாபம் ஈட்டித் தருவதற்காக செயற்பட்ட சங்கமாகும். கடந்த இக்கட்டான காலகட்டத்தில் இலாபம் பாராமல் சேவை வழங்கினர். அதைத்தான் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்து வருகிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நாமும் நினைக்கவில்லை. கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் முடிந்தவர் என்றால், நம் நாட்டை அவர் இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வங்குரோத்து அடைந்த நாடுகளுக்கு மத்தியில் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்த நாடு இலங்கை என்பதை உலகமே ஏற்றுக்கொள்கிறது. உலகமே பாராட்டுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டிருப்பது பொருளாதார அதிசயம் என உலக நாடுகள் கூறுகின்றன. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்வளவு சீக்கிரம் மீட்டெடுத்த நாட்டை நாங்கள் பார்த்ததில்லை என்கிறார்கள். எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளின்போது, இலங்கையின் ஜனாதிபதியை பார்க்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், நம் நாட்டு மக்கள் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் இந்த உண்மை நிலையை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்த தெரிவிக்கையில், "இரண்டு வருடங்களுக்கு முன் இந்நாட்டின் நிலைமை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அப்போது மருந்தகங்களைத் திறந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கப் பாடுபட்டோம். அப்போது, மருந்தகங்கள் முன்பு கிலோமீட்டருக்கு மேற்பட்ட நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால் மருந்து வாங்க பணம் இருக்கவில்லை. உயிர்பிழைக்க மருந்து இல்லாத காலம் ஒன்று இருந்தது. இவ்வாறானதொரு காலகட்டத்தில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். குடும்பத்தில் உறுப்பினர்கள் மூன்று பேர் இருந்தால் மூன்று வரிசைகளில் அவர்கள் இருந்தனர். மருந்துகளை விநியோகிக்க எரிபொருள் இருக்கவில்லை. இவ்வாறானதொரு யுகத்தை முடிவுக்கு கொண்டு வர, அதிஷ்டவசமாக ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றிருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். இல்லை என்றால் பாண் ஒன்றுக்காகக்கூட கொலைகள் இடம்பெறும் யுகத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கும் இவ்வேளையில், இன்று இவ்வாறாக எமது தொழில்துறையைப் பாதுகாக்க ஆதரவு வழங்கியமைக்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசகர், வண. குப்பியாவத்தை போதானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மருந்து இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186652

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.