Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. உலக இரத்த தானம் செய்பவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்களின் உன்னத பணியை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இரத்த தானம் செய்பவர்கள் தினத்தின் கருப்பொருள் ‘கொடையாளர்களுக்கு நன்றி’ என்பதாகும். தேசிய இரத்த கொடையாளர் விழா இன்று (14) காலை 10.00 மணிக்கு கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்ததான நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303724
  2. மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆண் குட்டியை ஈன்றெடுத்தது. அத்துடன் அதற்கான பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்துள்ளனர். முதல் குட்டியை கழுவி சுத்தம் செய்து, தாய் யானையின் காலடியில் நிக்க வைக்க முயலும்போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்போது சாம்சூரிக்கு இரண்டாவது பெண் குட்டி யானை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்தின்போது தாய் யானை சற்று பீதியில் ஆழ்ந்ததால், ஈன்ற பெண் குட்டியை மிதித்து விடாமல் பராமரிப்பாளர்கள் காக்க வேண்டியிருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒரு பராமரிப்பாளர் காயமடைந்தார். யானைப் பிறப்புக்களில் இரட்டைக் குட்டிகள் என்பது மிகவும் அரிது. அதிலும் ஒரு ஆண் மற்றும் பெண் என்பது அரிதிலும் அரிதானது சேவ் தி எலிஃபண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட பூங்காவை பார்வையிட வருபவர்களுக்கு யானைக் குட்டிகளைப் பார்ப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால், அவர்களின் பாதணிகளை கழற்றி வைத்து விட்டு, கைகளை நன்றாகக் கழுவிவிட்டே உள்ளே வர வேண்டும். அங்கே ‘யானைக் குட்டிகளை தொட வேண்டாம்’ என்று பலகையில் எழுதப்பட்டிருக்கும். பிறந்து ஏழு நாட்களின் பின்னரே யானைக் குட்டிக்கு பெயர் வைக்கப்படும். இரண்டாவதாக பிறந்த பெண் யானைக்குட்டி 55 கிலோகிராம் எடை கொண்டது. ஆண் யானைக் குட்டி 60 கிலோகிராம் எடை கொண்டது. https://thinakkural.lk/article/303745 வித்தியாசம் 5கிலோகிராம் போல தெரியவில்லை!
  3. மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை முன்னே இருத்திப் பயணிப்பதும் பாதுகாப்பற்றது. ஆனால் பலரும் செய்கிறார்கள்.
  4. யாழ்.ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் ; நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் - பலரும் கண்டனம் தெரிவிப்பு Published By: VISHNU 14 JUN, 2024 | 02:56 AM யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டமேற்படுத்தப்பட்டுள்ளது. "திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் காலை பொலிசாரின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடயங்களைச் சேகரித்தனர். அத்துடன் பொலிஸ் விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெற்றோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீதியூடாக தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டும் பொலிசார் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன், குறித்த தாக்குதல் சம்பவம் ஊடகவியலாளருக்கு அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே குறித்த விடயம் தொடர்பில் அரச தரப்பினர், உரிய அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். அத்துடன் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே.சிவஞானம், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலே குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரச்சனை தொடர்பில் நேரில் பேசி ஆராயப்பட வேண்டும் வன்முறை என்றும் தீர்வாகாது என்ற கருத்தினை முன் வைத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் குறித்த தாக்குதலுக்குக் கண்டனம் வெளியிட்டதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/186039
  5. Published By: VISHNU 14 JUN, 2024 | 02:52 AM தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(13) இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/186038
  6. பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 13 ஜூன் 2024 கோவையில் தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானையை முதுமலை முகாமில் வைத்து வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். தாயைப் பிரியும் குட்டி யானைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? தாய் யானையைப் போல் வனத்துறையால் குட்டியை வளர்க்க முடியுமா? கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் மே 30-ஆம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 40 வயதான பெண் யானையையும், மூன்று மாதங்களேயான அதன் குட்டி யானையையும் வனத்துறையினர் ரோந்து பணியின் போது கண்டறிந்தனர். வனக்கால்நடை மருத்துவர்கள் குழுவினர், 5 நாட்கள் அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர், சிகிச்சையில் இருக்கும் போதே தாய் யானையிடம் குட்டி யானை பால் குடித்து வந்தது. தாய் யானையின் உடல் நலம் தேறியதால், அதனை அதன் குட்டியுடன் சேர்த்து வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்திருந்தனர். இந்த நிலையில், குட்டி யானை தாயிடம் இருந்து பிரிந்து, தனியார் தோட்டத்தினுள் சுற்றித்திரிந்தது. குட்டி யானையை மீட்டு, ட்ரோன் மூலம் தாய் யானையை கண்டறிந்து பல முறை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டும், தாய் யானை குட்டியைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக கடந்த, 9-ஆம் தேதி குட்டி யானையை, நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துக் குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு,தாய் யானையிடம் பால் குடிக்கும் குட்டி யானை கடந்த மார்ச் 5-ஆம் தேதி இதேபோன்று, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையையும், அதன் குட்டியையும் மீட்ட வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை கொடுத்தனர். தாய் யானை இறந்த நிலையில், குட்டியை தெப்பக்காடு முகாமில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். கோவை, ஈரோட்டில் மீட்கப்பட்ட இரு குட்டி யானைகள் உள்பட தற்போது, மூன்று குட்டி யானைகளை வளர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தாய் யானையைகளை விட்டு குட்டிகள் பிரிவதற்கான காரணம் என்ன? தாய் மற்றும் தன் கூட்டத்தை இழக்கும் குட்டி யானைகளின் மனநிலை எப்படி இருக்கும்? தாய் யானையைப் போல் குட்டி யானையை வனத்துறையினர் வளர்க்க முடியுமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகள் குறித்து, பல ஆண்டுகளாக யானைகள் குறித்து ஆய்வு செய்து வரும் சில ஆய்வாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் வனத்துறையினரிடம் பிபிசி தமிழ் பேசியது. ‘உணவு கிடைக்காத பகுதியில் இது நிகழ்கிறது’ பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு,பால் குடிக்கும் குட்டி யானை தாய் யானைகள் குட்டியைப் பராமரிக்காமல் தனித்து விடுவது, உணவு பற்றாக்குறை உள்ள வனப்பகுதிகளில் அதிகம் நிகழ்வதாக தெரிவிக்கிறார், ஊட்டி அரசு கலைக்கல்லூரியின் வன உயிரியல் துறையின் தலைவரும், யானைகள் ஆய்வாளருமான முனைவர் ராமகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "யானைகள் தனது குட்டியைப் பராமரிக்காமல் தனித்து விடுவதற்கு தாய் யானையின் உடல் நிலை, வயது மூப்பு, மரணம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. தனித்து விடப்பட்டாலும் அந்தக் குட்டி யானையின் கூட்டம் அதைப் பராமரிக்கும்,” என்றார். குட்டிகள் தாய் யானையைப் பிரிந்து செல்வதற்கு அதன் வாழிடம் ஒரு முக்கியக் காரணம் என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT முதுமலை போன்ற வனப்பகுதிகளில் யானைகளுக்குப் போதிய உணவு ஒரே இடத்தில் அல்லது சிறு தொலைவுக்குள்ளேயே கிடைத்து விடுகிறது. இதனால், யானைகள் பெருங்கூட்டமாக ஒரே பகுதியில் அல்லது சிறு தொலைவுக்கு உள்ளேயே நகர்கின்றன. இதுபோன்ற கூட்டத்தில் இருந்து ஒரு குட்டி யானை தனித்து விடப்படுவது அரிதாகவே நடக்கிறது. ஏனெனில், “தாய் யானை இறந்தாலோ, பராமரிக்காமல் விட்டாலோ அந்தக்கூட்டத்தின் பெண் யானைகள் குட்டியை பார்த்துக்கொள்ளும்," என்கிறார் ராமகிருஷ்ணன். மாறாக, கோவை, ஈரோடு, ஓசூர் போன்ற பகுதிகளில், யானைகளுக்குப் போதிய உணவு ஒரு சிறு நிலப்பரப்பில் கிடைக்காததால், உணவு மற்றும் நீர் தேடி அவை நீண்ட தொலைவிற்குப் பயணிக்கின்றன. இதனால், யானைகள் பெருங்கூட்டமாக இருக்காது, மிகச்சிறு குழுக்களாகத்தான் சுற்றித்திரியும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இதுபோன்ற வனப்பகுதிகளில், கூட்டத்தில் இருந்து குட்டி யானை தனித்து விடப்படுவதையும், குட்டி யானை பிரிந்து சென்று மீண்டும் சேர முடியாத சூழல்களைப் பார்க்க முடிவதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். "எனினும் தாய் யானையை பிரிந்தாலோ, இறந்தாலோ, குட்டி யானை சில நாட்களுக்கு மன வேதனையில் சுற்றித்திரியும். தாய் யானையும் இதே மன வேதனையைச் சந்திக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்திலும், கோபத்துடனும் இருக்கும்," என்கிறார் அவர். ‘குட்டி யானையின் மனநிலை விரைவில் மாறும்’ படக்குறிப்பு,மனோகரன் தாயைப் பிரியும் குட்டி யானையின் மனநிலை வெகுவிரைவில் சாதாரண நிலைக்கு மாறிவிடும் என்கிறார், மூத்த வனக்கால்நடை மருத்துவரும் கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குநருமான மனோகரன். "தாய்மை உணர்வு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. தாயும் குட்டியும் பிரிந்தால் இரண்டும் மன ரீதியில் பாதிப்பைச் சந்திப்பது உண்மை தான், ஆனால், அந்த பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்காது," என்கிறார் அவர். “குட்டி யானைக்கு பால் கிடைக்காத வரையில் அவை மனரீதியில் பாதிக்கப்படும், பின்பு வேறு யானைகளின் பராமரிப்பு கிடைத்ததும் பாதிப்பை மறந்து விடும். தாய் யானையும் சில நாட்கள் குட்டி பிரிந்த வேதனையில் இருக்கும், ஆனால் விரைவில் இனப்பெருக்கம், உணவு தேடி அலைவதென சாதாரண நிலைக்கு மாறிவிடும்," என்கிறார் மனோகரன். மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிரினமும், இது போன்ற சூழல்கள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து வெகுவிரைவாக வெளிவந்து சாதாரண மனநிலைக்கு மாறிவிடும் என்கிறார் அவர். குட்டி யானையை வனத்துறை என்ன செய்யும்? பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு,பாகன் பராமரிப்பில் உறங்கும் குட்டி யானை தனித்து விடப்பட்ட குட்டி யானையைக் கண்டறிந்தால், வனத்துறை என்ன செய்வார்கள்? எப்படி வளர்ப்பார்கள் என்பதையும் விவரிக்கிறார் மருத்துவர் மனோகரன். "தாயால் தனித்து விடப்பட்டக் குட்டியைக் கண்டறிந்தால் உடனடியாக அந்தப்பகுதி முழுவதிலும் வனத்துறையினர் அதன் தாய் மற்றும் கூட்டம் இருக்கிறதா எனத் தேடுவார்கள். குட்டிக்குப் பால் அல்லது உணவு கொடுத்துப் பராமரித்து, கூட்டத்தைக் கண்டறிந்த பின் தாயுடன் அல்லது கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்," என்றார். மனித வாசனை குட்டி மீது பரவாத வகையில் தான் உணவு வழங்கப்படும். தாய், கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பல முறை தோல்வியில் முடிந்தால் தான், குட்டி யானையை மருத்துவக் குழு உதவியுடன் வளர்க்கும் முடிவை வனத்துறை எடுக்கும், என்கிறார் அவர். வனத்துறை அளித்த தகவல்களின்படி, ஒரு குட்டி யானை பிறக்கும் போது 90 - 100 கிலோவும், ஆறு மாதத்தில் 200 கிலோவிற்கு மேலும் இருக்கும். ஒரு நாளைக்கு அதன் உடல் எடையில் 5% அளவுக்கு (சுமார் 10 - 15 லிட்டர்) பால் கொடுக்கப்படும். யானையின் தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் அளவுக்கு வனக்கால்நடை மருத்துவக் குழு மூலம் பால் தயாரிக்கப்பட்டு, பிரத்யேக புட்டி தயாரிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 10 - 15 முறை பால் வழங்கப்படும். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். விளையாடுவதற்கு தனி இடம், உறங்குவதற்கு மரக்கூண்டில் பாகன்கள் பராமரிப்பில் இருக்கும். ஆறு மாதம் பால் அதன்பின் மெல்ல மெல்ல புற்கள் வழங்கப்பட்டு குட்டி வளர்க்கப்படும், என்கிறார் மருத்துவர் மனோகரன். ‘நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது’ படக்குறிப்பு,கோவை சதாசிவம் குட்டி யானையை வனத்துறையினர் எப்படி வளர்த்தாலும், இயற்கையாக அதன் தாய் வளர்ப்பது போன்று இருக்காது, குட்டி யானைக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது, என்கிறார் சூழலியலாளர் கோவை சதாசிவம். நம்மிடம் பேசிய அவர், "ஒரு தாய் யானை தனது தாய்ப்பால் மூலம் தன் குழந்தைக்கு தேவையான சத்துக்களை வழங்குவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாசத்தையும் சேர்த்து தான் வழங்குகிறது. பிறந்தது முதல் ஏழு மாதங்கள் வரையில் தாய்ப்பாலும், அதன்பின் தாய்ப்பாலுடன் சேர்த்து புற்களை தன் குட்டிக்கு வழங்கும்,” என்றார். யானையின் உணவில், 60% செரிமானமாகுமே தவிர பழங்கள், விதை மற்றும் புற்கள் போன்ற 40% உணவு அப்படியே தான் வெளியேறும் என்றும், ஆறு மாதமான குட்டி தனது கூட்டத்தில் உள்ள யானைகள் வெளியிடும் கழிவில் உள்ளவற்றை உட்கொள்ளும் என்றும் கூறுகிறார் அவர். ஏற்கனவே பெரிய யானையின் வயிற்றில் நொதிப்புக்குள்ளாகி செரிமானமான கழிவை குட்டி உண்பதால் அது விரைவில் குட்டிக்கு செரிமானமாகும் என்கிறார். மேலும், தன் கூட்டத்துடன் கிடைக்கும் விளையாட்டு என இயற்கையான எதுவும் கிடைக்காத சூழலும் குட்டிக்கு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். குட்டி யானைகள் தனித்து விடப்படும் சம்பவங்கள் தொடர்பாக, வனத்துறை பிரத்யேகமான ஆய்வு ஒன்றை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார் சதாசிவம். 'யானைக் கூட்டங்கள் சுருங்கிவிட்டன' பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT 16 - 22 யானைகள் சேர்ந்தது ஒரு கூட்டம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இதுபோன்று கூட்டமாக இருந்த யானைகளை தற்போது காண்பது அரிதாகிவிட்டதாகவும், வனத்தினுள் ஆய்வு செய்த போது பல இடங்களில், இரு குட்டிகளுடன் ஒரு யானை, 4 - 8 யானைகள் கொண்ட கூட்டம் என, கூட்டமே சுருங்கிவிட்டதை காண முடிந்ததாகவும் கூறுகிறார் சதாசிவம். வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்பு, உணவுப் பற்றாக்குறை, என பல காரணங்களால் யானைக்கூட்டங்கள் சுருங்கி விட்டதாகச் சூழலியல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் யானைகள் கூட்டத்தின் எண்ணிக்கை, ஏன் யானைகள் குட்டிகளை தனித்து விடுகின்றன, வலசைப் பாதைகள் எப்படி இருக்கின்றன, வலசைப் பாதைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா எனப் பல கோணங்களில் வனத்துறையினர் பிரத்யேக ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. குட்டி யானைகளை வனத்துறை எப்படி வளர்க்கிறது? பட மூலாதாரம்,SUPRIYA SAHU படக்குறிப்பு,தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முகாம்களில் குட்டி யானைகள் எப்படி வளர்க்கப்படுகின்றன என்பதை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார், தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு. நம்மிடம் பேசிய அவர், "தமிழ்நாடு வனத்துறை 70 ஆண்டுகளுக்கும் மேலாக குட்டி யானைகளை வளர்க்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளது. அறிவியல் ரீதியில் குட்டி யானைகளை வளர்ப்பது தொடர்பாகத் தனி செயல்முறைகளே நம்மிடம் உள்ளன. பாகன்களுக்குப் பயிற்சியும் உள்ளது. அறிவியல் ரீதியில் நாம் குட்டியை ஒரு குழந்தை போல வளர்க்கிறோம். நோய் எதிர்ப்பு திறனுக்கான சத்துக்கள், மருந்துகள் வழங்கப்படுகின்றன," என்றார். "கோவையில் மீட்கப்பட்ட குட்டியை 12 முறை தொடர்ந்து அதன் தாய், கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தோம். ஆனால், தாய் குட்டியை சேர்த்துக்கொள்ளவில்லை," என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த சுப்ரியா சாஹு, "தாய் யானையின் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கலாம், வயது மூப்பு காரணமாக இருக்கலாம், அல்லது குட்டி மீது மனித வாசனை இருந்திருக்கலாம், இது போன்ற பல அறியப்படாத காரணங்களால் குட்டியை தாய் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் தான் குட்டியை முகாமில் வைத்து வளர்க்கிறோம்," என்றார் யானைகளின் வலசைப் பாதைக்கும் குட்டிகள் தாய் யானையிடமிருந்து பிரிந்து செல்லும் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறுகிறார் சுப்ரியா சாஹு. குட்டி யானைகள் தனித்து விடப்படும் சம்பவங்கள் குறித்தும், அதன் காரணங்களை அறிய பிரத்யேக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் சுப்ரியா சாஹு தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cx99024g5zdo
  7. பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப் அல் ஹசன், ரிஷாத் ஹொசெய்ன் அதிகரிக்கச் செய்தனர் Published By: VISHNU 14 JUN, 2024 | 01:42 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென் வின்சன்ட் கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள பங்களாதேஷ் தனது சுப்பர் 8 சுற்ற வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. சுப்பர் 8 சுற்றுக்கு செல்ல நேபாளத்துடனான போட்டியில் பங்களாதேஷுக்கு ஒரு புள்ளியே தெவைப்படுகிறது. இதேவேளை இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த தெர்லாந்து சுப்பர் 8 சுற்றுக்கு செல்வது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகையில் 5 ஓவர்கள் பூர்த்திசெய்யப்பட்டபோது முதல் சுற்றுடன் இலங்கை வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது. ஷக்கிப் அல் ஹசன் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், ரிஷாத் ஹொசெயனின் சிறந்த பந்துவீச்சு என்பன பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. முதலிரண்டு விக்கெட்கள் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட பின்னர் தன்ஸித் ஹசனும் ஷக்கிப் அல் ஹசனும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர். தன்ஸித் ஹசன் 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து தௌஹித் ரிதோய் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் முன்னாள் தலைவர்களான ஷக்கிப் அல் ஹசனும் மஹ்முதுல்லாவும் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். மஹ்முதுல்லா 25 ஓட்டங்களைப் பெற்றார். ஷக்கிப் அல் ஹசன் 64 ஓட்டங்களுடனும் ஜாக்கர் அலி 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டத் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நெதர்லாந்து வேகமாக ஓட்டங்களைப் பெற்ற போதிலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. மைக்கல் லெவிட் (18), மெக்ஸ் ஓ'தௌத் (12) ஆகிய இருவரும் பவர் ப்ளேக்குள் ஆட்டம் இழந்தனர். விக்ரம்ஜித் சிங், சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 10ஆவது ஓவரில் 69 ஓட்டங்களாக உயர்த்தியபோது விக்ரம்ஜித் சிங் 28 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து எங்க்ள்ப்ரெச், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர். ஆனால், எங்கள்ப்ரெச் அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து 33 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அடுத்த பந்திலேயே பாஸ் டி லீட் ஆட்டமிழந்தமை நெதர்லாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மேலும் 6 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ஸ்கொட் எட்வேர்ட்ஸ் கவனக்குறைவான அடி மூலம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவரது அணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது. பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போக நெதர்லாந்து தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷக்கிப் அல் ஹசன். https://www.virakesari.lk/article/186033
  8. Published By: VISHNU 14 JUN, 2024 | 02:20 AM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (14) மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டுக் கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டிலிருந்த இரண்டு இலட்சத்துப் பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுன் சங்கிலி மற்றும் இரண்டு பவுன் காப்பு என்பவற்றைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அயல் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் பார்வையிட்டுக்கொண்டு இருந்தவேளை, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்தவேளை பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/186034
  9. ஆப்பிள் நிறுவனம் குறித்து ஈலோன் மஸ்க் பகிர்ந்த மீமின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன், லிவ் மக்மஹோன் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அறிமுகத்தை கேலி செய்து தமிழ்பட மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார் ஈலோன் மஸ்க். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் அந்த மீம் வைரலானது. அதற்கு காரணம் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் செய்லபாடுகளை ஓபன்ஏஐ (OpenAI) இன் சாட்ஜிபிடி(ChatGPT) தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்தும் முடிவை எடுத்ததுதான். பட மூலாதாரம்,ELON MUSK / X படக்குறிப்பு,எலான் மஸ்க் பகிர்ந்த மீம் ஆப்பிள் தன் சிரி (Siri) குரல் உதவியாளர் மற்றும் இயக்க முறைமைகளை ஓபன்ஏஐ (OpenAI) இன் சாட்ஜிபிடி(ChatGPT) உடன் மேம்படுத்த உள்ளது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான பந்தயத்தில் முன்னேறத் திட்டமிடுகிறது. ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தன் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் பல புதிய அம்சங்களுடன் ’சிரி’ மேம்படுத்தப்படும் என்று கடந்த திங்களன்று அறிவித்தது. இது "ஆப்பிள் நுண்ணறிவு" என்று அழைக்கப்படும் ஒரு புதிய தனி செயற்கை நுண்ணறிவு அமைப்பின் ஒரு பகுதியாகும். பயனர்கள் ஆப்பிள் சாதனங்களை மிக எளிதாக பயன்படுத்துவதற்கான வழியை அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐபோன் மற்றும் மேக் (Mac) ஆகியவற்றின் இயக்க முறைகளுக்கான அதன் புதுப்பிப்புகள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்த முடியும். உரை மற்றும் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தலாம். இதன் சோதனை பதிப்பு செப்டம்பர் முதல் டிசம்பர் மாத்திற்குள் வெளிவரும். இந்த நடவடிக்கை தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை "புதிய உயரத்திற்கு" கொண்டு செல்லும் என்று கலிஃபோர்னியாவின் கூபர்டினோவில் உள்ள ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையகத்தில் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசிய அதன் தலைமை நிர்வாகி டிம் குக் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான திங்களன்று பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் விலை 1.91% சரிந்தது. இந்த கூட்டுத் திட்டத்தை டெஸ்லா மற்றும் ட்விட்டர்/எக்ஸ் உரிமையாளர் ஈலோன் மஸ்க் வரவேற்கவில்லை. "தரவு பாதுகாப்பு" காரணங்களுக்காக தனது நிறுவனங்களில் இருந்து ஐபோன்களை தடை செய்யப்போவதாக அவர் அறிவித்தார். "உங்கள் தரவை ஓபன்ஏஐ-யிடம் ஒப்படைத்த பிறகு உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆப்பிளுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உங்களை குளத்தில் இறக்குகிறார்கள்,” என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் எந்த பதிலையும் அளிக்கவில்லை. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மற்றொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் தனது போட்டியாளரின் அறிவிப்பை கேலி செய்துள்ளது. "ஆப்பிள் என்று சேர்த்து ஆப்பிள் நுண்ணறிவு என்று பெயரிடுவதால் மட்டும் அது புதியதாகவோ, புதிய கண்டுபிடிப்பாகவோ ஆகிவிடாது. செயற்கை நுண்ணறிவுக்கு வரவேற்கிறோம் ஆப்பிள்", என்று அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் கூறியது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் தனது சக போட்டியாளரான ஆப்பிளை கேலி செய்வது இது முதல் முறை அல்ல. இருப்பினும் இந்த தொழில்நுட்பத்தை விரைவாக தனதாக்கிக்கொண்ட போட்டி நிறுவனங்களை தன் புதிய ஏஐ (AI) கருவிகளால் எட்டிப்பிடிக்க முடியுமா என்பதுதான் ஆப்பிளின் பெரிய கவலை. ஜனவரி மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாஃப்ட், உலகின் மிக அதிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆனது. ஜூன் தொடக்கத்தில் சிப் தயாரிப்பாளரான என்விடியாவும் ஆப்பிளை முந்தியது. பட மூலாதாரம்,APPLE படக்குறிப்பு,சிரியுடன் சாட்ஜிபிடி எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்டும் ஆப்பிளின் விளக்கப்படம் 'ஆப்பிள் நுண்ணறிவு' என்றால் என்ன? ”ஆப்பிளின் புதிய தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏஐ அமைப்பு, தற்போது பதற்றத்தில் இருக்கும் அதன் முதலீட்டாளர்களை அமைதிப்படுத்த உதவும். அதே வேளையில் அதன் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பானது நிறுவனத்திற்கு ஆழமான பிரச்னைகளை உருவாக்கலாம்,” என்று சிசிஎஸ் இன்சைட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் பென் வுட் கூறினார். "ஆப்பிள் நுண்ணறிவு" என்பதை ஒரு தயாரிப்பு அல்லது செயலி என்று சொல்லமுடியாது. நீங்கள் டைப் செய்யும்போது, உங்கள் நாட்காட்டி நிகழ்வுகளை செம்மைப்படுத்தவும் ஆப்பிள் தயாரிப்புகளில் இது உதவும். அந்த வகையில் இது மைக்ரோசாஃப்டின் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் ’கோ பைலட்’ போன்றது இது. ஆனால் அதைச் செயல்படுத்த நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 2010 இல் ஆப்பிள் வாங்கிய குரல் உதவியாளரான ’சிரி’, பயனர்கள் தங்கள் சாதனங்கள் மற்றும் பயன்பாடுகளை மிகவும் எளிதாகப் பயன்படுத்த உதவுகிறது. "ஒரு பயனருக்கு ’சிரி’ உதவ முடியாத கட்டத்தில் ’சாட்ஜிபிடி’ அந்தப்பணியை மேற்கொள்ளும் என்று கூறுவதன் மூலம் தன்னுடைய வரம்புகளை ஆப்பிள் ஒப்புக் கொள்வது போலத் தோன்றுகிறது," என்று பென் வுட் பிபிசியிடம் கூறினார். திங்கட்கிழமை ஆற்றப்பட்ட முக்கிய உரையின் போது ஆப்பிள் நிறுவனம், ’ஆப்பிள் நுண்ணறிவின்’ பாதுகாப்பை வலியுறுத்துவதில் ஆர்வமாக இருந்தது. ”சில செயலாக்கங்கள் சாதனத்திலேயே மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் அதிக சக்தி தேவைப்படும் பெரிய செயல்கள் ’க்ளவுடுக்கு’(cloud) அனுப்பப்படும். ஆனால் தரவு எதுவும் அங்கு சேமிக்கப்படாது,” என்று ஆப்பிள் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் ஒப்பந்தம் என்றால் என்ன? ஓபன்ஏஐ அமைப்பின் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் ஆப்பிளின் முடிவு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன் சொந்த தயாரிப்புகள் பற்றிய விவரங்களை மிக ரகசியமாக பாதுகாக்கும் ஒரு நிறுவனத்திற்கு இது ஓர் அசாதாரண நடவடிக்கையாகும். தங்கள் ஏஐ தயாரிப்புகளால் செய்யப்பட்ட பிழைகள் குறித்து கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் கேள்விகளை எதிர்கொண்டன. தனது செயற்கை நுண்ணறிவு அளித்த தவறான பதில்கள் வைரலானதை அடுத்து கூகுள் நிறுவனம் மே மாதத்தில் தனது புதிய அம்சத்தை திரும்பப்பெற்றது. பல ஆண்டுகளுக்கு ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களை ஆப் ஸ்டோருக்கு வெளியே எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. ஏனெனில் அவை பாதுகாப்பானவை அல்ல என்று அது கூறியது. மேலும் அதே காரணத்திற்காக தன் சொந்த சஃபாரியைத் தவிர வேறு எந்த ப்ரெளசரையும் அது அனுமதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு அது இந்தக்கொள்கையை மாற்றியது. திங்களன்று அறிவிக்கப்பட்ட பிற புதிய அம்சங்கள் பின்வருமாறு: • செயற்கைக்கோள் வழியாக உரைகளை (Text) அனுப்புதல் • ஏர்பாட்ஸ் ப்ரோவை (AirPods Pro) கட்டுப்படுத்த தலை சைகைகளை பயன்படுத்துதல் (ஆம் என்று தலையை அசைத்தல் அல்லது இல்லை என்பதற்கு தலையை அசைத்தல்) • எல்லா சாதனங்கள் மூலமும் அணுகக்கூடிய, கடவுச் சொற்களுக்கான பிரத்யேக செயலி. • ஃபேஸ் ஐடி அல்லது கடவுக்குறியீடுகளுக்குப் பின்னால் குறிப்பிட்ட ஆப்ஸை மறைத்துவைக்க அல்லது பூட்டி வைக்கும் திறன். https://www.bbc.com/tamil/articles/cd11qeg25gjo
  10. Published By: DIGITAL DESK 3 14 JUN, 2024 | 09:58 AM நாட்டில் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகளினால் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், உடம்பில் நஞ்சேற்றம் இடம்பெற்றதால் 2 யானைகளும், ரயில் விபத்தால் 3 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், நீரில் அடித்துச் சென்று 7 யானைகளும், ஏனைய விபத்துக்களால் 4 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் வயதுடையவை ஆகும். இதேவேளை, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அதிகரித்துவரும் முரண்பாடுகளினால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் காரணமாக 488 யானைகள் உயிரிழந்துள்ளன. இதேவேளை, 184 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/186044
  11. சஜித்துடன் கைகோர்த்த அங்கஜன் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் திறன் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர்சஜித் பிரேமதாச கலந்து கொண்டு, திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், "மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான இப்பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன். இதன்போது, எமது மக்களின் கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் இலக்கில் நாம் இருவரும் பயணிப்பதே எமக்கிடையேயான ஓர் ஒற்றுமையாக உள்ளது. அதேவேளை, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், அதனை வரவேற்பதுடன் எமது மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதனை நாம் வரவேற்போம் " என தெரிவித்தார். எம்.றொசாந்த் https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சஜித்துடன்-கைகோர்த்த-அங்கஜன்/71-338704
  12. வெள்ளந்தி மனிதர்கள் எங்கும் இருக்கலாம். பேரூந்துக் காதல் கதைக்கு நன்றி ஐயா.
  13. “ காணொளி வேண்டாம்” மிரட்டிய சஜித்தின் பாதுகாப்பாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை புதன்கிழமை (12) வழங்கியுள்ளார். பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது, உடனே அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பு. கஜிந்தன் https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கணள-வணடம-மரடடய-சஜததன-பதகபபளரகள/71-338867
  14. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க-வை ஆதரிக்கும் இலங்கையின் சிவசேனை அமைப்பு சிங்களர்கள் தமிழர்களின் இடங்களை ஆக்கிரமித்துக் கட்டும் பௌத்த விகாரைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. என்ன நடக்கிறது இலங்கையில்? இந்திய - இலங்கை உறவானது பல நூற்றாண்டு காலங்களை கடந்து இன்றும் அவ்வாறே தொடர்ந்து வந்தாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட உறவுகள் இலங்கைக்கு பாரிய வலுவை சேர்த்தது. நரேந்திர மோதி தற்போது மூன்றாவது முறை பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அது எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பது தொடர்பில் தற்போது இலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இந்திய வெளியுறவுக் கொள்கையில், அருகிலிருக்கும் அயல் நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இந்தியா எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி வந்துள்ளது. குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியில் இலங்கை மக்கள் வாழ்வதற்கே முடியாத சூழ்நிலை காணப்பட்ட போது, 4 பில்லியன் அமெரிக்க டாலரை உதவியாக வழங்கி, இலங்கையின் பொருளாதாரத்தையும், இலங்கை மக்களின் வாழ்க்கையையும் அந்த சந்தர்ப்பத்தில் முன்னேற்றமடைய செய்ய பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. அது மாத்திரமன்றி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றமடைய செய்வதற்கான உதவிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி, மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில், நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளரின் கருத்துக்களை பிபிசி தமிழ் பெற்றுக்கொண்டது. பட மூலாதாரம்,SENTHIL THONDAMAN படக்குறிப்பு,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் மோதி குறித்து இலங்கை அரசியல்வாதிகள் சொல்வது என்ன? இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மேலும் வலுப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். அவர் பேசுகையில், மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மோதி அடுத்த ஐந்து வருடங்களில் உதவுவார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். நரேந்திர மோதி அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், மலையக மக்களுக்கு 10,000 வீட்டுத் திட்டங்களும், கல்வி வளர்ச்சிக்காகவும் உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார். ஈழத் தமிழர்களின் இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு நரேந்திர மோதி முன்வர வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன், பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், மோதி தனது முன்னிரண்டு பதவிக் காலங்களில் இலங்கைக்கு வருகை தந்து ஒரு சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திலும் கருத்துக்களை தெரிவித்திருந்தார், என்றார். இருந்தாலும் கூட, மாகாண சபைகளை உருவாக்க அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தை அமல்படுத்த முடியாத நிலைமை இருக்கிறது என்கிறார் அவர். “அதை இந்தியா செய்ய வேண்டும் என்ற சூழலில் எங்களுடைய மக்கள் இருந்து வருகின்றார்கள். எனினும், அது காலம் கடந்து போகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது,” என்கிறார் அவர். படக்குறிப்பு,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் ‘பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க’ இலங்கையில் நரேந்திர மோதிக்கு ஆதரவான கருத்துக்கள் இருக்கும் அதேவேளையில், விமர்சனங்களும் இருக்கின்றன. இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குறிப்பிடுகின்றார். இந்த நிலையில், பா.ஜ.க இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பை இலங்கையில் கொண்டு வர உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார். இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி நடக்கையில் இலங்கையில் மற்றுமொரு விஷயம் நடப்பதாக அவர் கூறுகிறார். “இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்ற பொழுது, இந்தியாவின் இந்த பா.ஜ.க-வின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகினற பௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்,” என்கிறார் அவர். “இவர்கள் மூலம் சிங்கள பௌத்தப் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தி, ‘இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்திற்கு எந்தவித இடையூறும் இல்லை. இந்தியா சிங்கள பௌத்த விரிவாகத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும், சிங்கள பௌத்த விரிவாக்கத்திற்கு சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை’ என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையை தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றது,” என்று குற்றம் சாட்டுகிறார். “இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசியலமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும். அதற்கு இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்,” என்று கூறுகிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,FACEBOOK/MARAVANPULLAVU SACHCHITHANANTHAN படக்குறிப்பு,இலங்கையின் சிவசேனை அமைப்பின் தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தன் ‘பௌத்தர்கள் தமிழர்கள் மீது மதத்தைத் திணிக்கவில்லை’ பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில், இலங்கையின் சிவசேனை அமைப்பு மற்றும் உருத்திரசேனை அமைப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெற்றி கொண்டாட்டங்களை நடாத்தியிருந்தது. யாழ்ப்பாணம் நகரிலுள்ள வைரவர் ஆலயத்தில் கற்பூரம் கொளுத்தி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடுகளை நடத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலுக்கு சிவசேனை அமைப்பு உதவி புரிந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு அந்த அமைப்பின் தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். அவர் பேசுகையில், இலங்கையில் இந்துக்களை பௌத்தர்கள் மத மாற்றத்திற்கு உட்படுத்தவில்லை, என்றார். “பௌத்தர்கள் எந்த இடங்களில் விகாரையை கட்டவிரும்புகின்றார்கள்? சோழர்களால், தமிழர்களினால் கட்டப்பட்ட பழைய விஹாரைகள் இருந்த இடங்களிலேயே புதிய விஹாரைகளை கட்டவிரும்புகின்றார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கந்தரோடைக்கு வந்து சென்றவர் மணிமேகலை. நான் சொல்லவில்லை, மணிமேகலை காப்பியம் சொல்கின்றது. அப்படியென்றால், அந்த காலத்தில் பௌத்த கோவில்கள் இருந்திருக்கின்றன. தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கின்றோம். தமிழ் பௌத்தர்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன,” என்றார் அவர். “அந்த எச்சங்கள் தான் வெடுக்குநாறி மலையிலும் இருக்கின்றது. குருந்தூர்மலையிலும் இருக்கின்றது. அவை தமிழ் பௌத்த எச்சங்களே தவிர, சிங்கள பௌத்த எச்சங்கள் கிடையாது. போரில் நாங்கள் தோற்றபோது வெற்றிக் களிப்பில் இருந்த போர்த்துகேயர் அரசு, 400 இந்து கோவில்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் இடித்தார்கள். இதனை போர்த்துகேயர்களே எழுதியுள்ளார்கள். போர்த்துகேயர்கள் எங்கள் மீது மதத்தை திணித்தார்கள். ஆனால், பௌத்தர்கள் எங்கள் மீது மதத்தை திணிக்கவில்லை," என சிவசேனை அமைப்பின் தலைவர் மரவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,NIKSHAN படக்குறிப்பு,அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் ‘இந்துத்துவப் போக்கும் வலுப்பெற வாய்ப்புள்ளது’ இலங்கை மீதான இந்த ஆக்கிரமிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக் காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் பிபிசி தமிழுக்கு கருத்துரைத்தார். அவர் பேசுகையில், இந்தப் போக்கு இன்னும் வலுப்பெற வாய்ப்புள்ளது. என்றார். “இலங்கையில் இன்றும் ராமாயணத்தின் சுவடுகள் என்று சொல்லப்படும் 9 இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் கண்டிருக்கின்றார்கள். அதனூடாக இந்துத்துவ கொள்கையை பரப்பக்கூடிய விடயங்கள் மேற்கொள்ளப்படலாம். சைவ மக்களின் பண்பாடுகளைத் தாண்டி, வட இந்திய வழிபாடுகளை இலங்கைக்கு கொண்டு வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றது, என்றார். “இது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பௌத்த சமயத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால்,பௌத்த சமயத்துடன் தொடர்பிருப்பதாக சில கதைகளைப் புனைகிறார்கள். இது தொடர்பான விவகாரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால், இலங்கையில் இந்த மதம் சார்ந்த விவகாரத்திற்கு பௌத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என சொல்ல முடியாது. ஆனால், இந்துத்துவ கொள்கையின் வளர்ச்சி என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கலாம்,” என்றார். மேலும், “அதானி குழுமத்தின் முதலீட்டு அபிவிருத்திகள் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cjqq4v8endyo
  15. Published By: VISHNU 12 FEB, 2024 | 01:49 AM இலங்கையுடனான பூகோள அரசியல் ரீதியான செயற்பாடுகள் காரணமாக இந்தியாவும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கை கடைப்பிடிக்கின்றனவா என்ற சந்தேகம் தற்போது மேலெழுந்து வருகின்றது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் தமது அன்றாட பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வை கோரிவருகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். அன்று மிதவாத தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காகவும் அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டம் தமிழ் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மீளவும் ஜனநாயக ரீதியில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 80களில் தமிழ் இளைஞர்களின் போராட்டத்துக்கு இந்தியா பேராதரவு வழங்கியிருந்தது. தமிழ் போராளிகளுக்கு இந்திய அரசாங்கம் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியிருந்தது. இவ்வாறு போராட்டத்துக்கு உத்வேகம் அளித்த இந்தியாவானது ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ச்சியான அக்கறையினை பேணிவந்திருந்தது. இலங்கை அரசாங்கத்தரப்புக்கும் தமிழ் போராளிகள் தரப்புக்குமிடையில் திம்புவில் பேச்சுவார்த்தையினையும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக 1987ஆம் ஆண்டு இலங்கை–இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டதுடன் மாகாணசபை முறைமையும் அமுல்படுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஏதோ ஒருவகையில் அரசியல் தீர்வுக்கான மார்க்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழ் மக்கள நம்பிக்கைகொண்டிருந்தனர். இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமக்களு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்றுவரையில் அத்தகைய தீர்வு வழங்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீ்ரவு காண்பதற்கு 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவந்தது. ஆனாலும் இலங்கை அரசாங்கமானது 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கூட இன்னமும் தயாராக இல்லை. இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வாதார விவகாரத்திலும் இந்தியா தற்போது அக்கறையற்ற போக்கை கடைப்பிடிக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. பூகோள அரசியல் ரீதியான விடயங்கள் இதற்கு காரணமாக அமைவதற்கான சாத்தியம் குறித்தும் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது. இலங்கை விவகாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் இந்தியாவானது தனது பூகோள அரசியல் செயற்பாடுகளை மீளமைக்கும் வகையில் செயற்படுகின்றதோ என்று தற்போது எண்ணத்தோன்றுகின்றது. தமிழ் மக்களின் விவகாரத்தில் இதுவரை அக்கறை செலுத்தி வந்த இந்தியாவானது தற்போது தெற்கில் சிங்கள மக்களின் ஆதரவை திரட்டும் வகையிலும் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையிலும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றதோ என்ற எண்ணப்பாடு உருவாகிவருகின்றது. கடந்த வாரம் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினரை இந்திய மத்திய அரசாங்கம் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. அநுரகுமாரதிஸாநாயக் தலைமையிலான குழுவினர் ஐந்துநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லிக்கு சென்றிருந்தனர். இவர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , வெளியுறவு அமைச்சின் செயலாளர் வினய்மோகன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உட்பட்ட பலரும் சந்தித்து பேச்சுவாத்தை நடத்தியிருக்கின்றனர். ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அந்தக்கட்சியானது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரமாக செயற்பட்டிருந்தது. அத்துடன் மாகாணசபை முறைமையையும் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்திருந்தது. இந்தியா எத்தகைய திட்டங்களை மேற்கொண்டாலும் அதனை ஆக்கிரமிப்பாகவே அந்தக்கட்சி பிரசாரப்படுத்தியிருந்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அதிகாரங்களை பகிர்வதற்கான கொள்கையிலும் எதிர்நிலைப்பாட்டையே அந்தக்கட்சி கொண்டிருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த மாகாணசபையை உருவாக்கப்பட்டது. அந்த இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை பிரிக்கப்படுவதற்கு ஜே.வி.பி.யே மூலகாரணமாக செயற்பட்டது. உயர்நீதிமன்றத்தில் அந்தக்கட்சி வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததையடுத்தே 2005ஆம் ஆண்டு இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இவ்வாறு இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த இந்தியாவின் திட்டங்களை ஆக்கிரமிப்பு என்று வர்ணித்த ஜே.வி.பி.யினரை அழைத்து இந்தியா தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. ஜே.வி.பி.யானது சீன சார்பு கட்சியாகவே இதுவரை நோக்கப்பட்டது. சீனாவின் ஆதரவுடன் இந்தக்கட்சியின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பகிரங்கமாக குற்றச்சாட்டக்கள் சுமத்தப்பட்டிருந்தன. தற்போதைய நிலையில் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் கருத்தக்கணிப்புக்கள் தெதரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்தியாவானது ஜே.வி..யின் தலைவர்களை அழைத்து தற்போது கலந்துரையாடியிருக்கின்றது. இந்த செயற்பாடானது இலங்கை குறிப்பாக தெற்கில் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய மத்தி அரசாங்கமானது ஜே.வி.பி.யை அழைத்தமைக்கான நோக்கம் என்ன? அதன் பின்னணி என்ன என்பது குறித்து தெற்கின் அரசியல் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவின் இந்த செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நிலைபாட்டிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் தற்போதும் உள்ளன. 2022ஆம் ஆண்டு கூட 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதம் அனுப்பியிருந்தனர். அண்மையில் இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ்ஜாவை தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியபோது அரசியல் தீர்வின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் அரசியல் தீர்வை வலியுறுத்தும் விடயத்தில் இந்தியா தற்போது புதிய அக்கறை காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது மேலெழுந்து வருகின்றது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தெற்கின் அரசியல் கட்சிகளுடனும் அரசாங்கத்தரப்பினருடனும் நல்லுறவை பேணும் வகையில் இந்தியாவின் செயற்பாடு அமைந்திருக்கின்றதோ என்ற சந்தேகம் தமிழ் தேசியக் கட்சியினர் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இதேபோன்றே அமெரிக்கா உட்பட மேற்குலகநாடுகளும் தமிழர்களின் பிரச்சினையை விடவும் சீனாவுடனான போட்டிக்கு முன்னுரிமை அளிக்கின்றனவோ என்ற சந்தேகமும் தற்போது உருவாகியிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க காங்கிரஸ் .உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக சீனாவுடான போட்டியினால் அதனை கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவமளிக்கின்றன என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இலங்கையில் பூகோள போட்டித்தன்மை அதிகரித்திருக்கின்றது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய பூகோள ரீதியிலான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான இந்த நாடுகளின் முன்னைய நிலைப்பாடுகள் தற்போது மாற்றம் கண்டிருப்பதாகவே நோக்கவேண்டியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் இந்த பூகோள அரசியல் சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். https://www.virakesari.lk/article/176144
  16. இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது காசாவில் பட்டினியை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/303632
  17. சேனையூர் நெல்லிக்குளம் மலை விடயமாக 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு! Published By: VISHNU 13 JUN, 2024 | 04:25 AM திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்குச் சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன. ஆனால் செவ்வாய்க்கிழமை (11) காலை 9.45 மணிக்கு மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதிக்கு அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று எதிர்ப்பை வெளியிட்டனர். இதன் போது 1979 ஆம் ஆண்டின் 15 ம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 81 கீழ் சமாதான குழவை ஏற்படுத்தக் கூடிய செயல் ஒன்றைச் செய்த அடிப்படையில் சம்பூர் பொலிசார் 10 பேரை செவ்வாய்க்கிழமை (11) கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட 10 பேரும் மூதூர் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (12) மதியம் 12.20 மணிக்கு ஆஜர் ஆகினர் நீதிமன்றமானது இன்று இவர்கள் அனைவரையும் சொந்தப் பிணையில் விடுவித்ததோடு குறித்த பிரதேசத்தை இம்மாதம் 15 ம் திகதியன்று நீதிவான் பார்வையிடுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. 10 பேருக்கும் சார்பாகச் சட்டத்தரணிகளான பு. முகுந்தன், ந. மோகன் ஆகியோர் ஆஜர் ஆகியிருந்தனர். https://www.virakesari.lk/article/185960
  18. 13 JUN, 2024 | 03:55 PM கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சேவற்கொடியோன் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 30ஆம் திகதியினை கருத்திற்கொண்டு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இந்த திகதி மாற்றமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கால எல்லை போதாமல் உள்ளதாகவும் சமூக அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 2024.07.06 அன்று கதிர்காம கொடியேற்றம் நடைபெற்று, 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் கதிர்காமம் ஆலய உற்சவம் நிறைவடைகிறது. காட்டுப்பாதை திகதி மாற்றங்கள் தொடர்பில் லாகுகலை பிரதேச செயலாளர் நவேந்திரராஜா நவநீதராஜா கருத்து தெரிவிக்கையில், கதிர்காம உற்சவம் தொடர்பான கூட்டங்கள் மூன்று கட்டமாக இடம்பெறும் என குறிப்பிட்டார். அதன்படி, முதலாம் கட்ட கூட்டமானது கதிர்காமத்தில் இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படும் கால எல்லைக்குள் காட்டுப்பாதை திறந்து மூடப்படும் கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படும். அதன் பின்னர், அம்பாறை மாவட்ட ஆரம்ப கட்ட கூட்டம் உகந்தையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டு கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்படும். மூன்றாம் கட்டமாக, உகந்தையில் விளக்கமளிக்கப்பட்ட முடிவுகள் கதிர்காமத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், இவ்வருடத்துக்கான இறுதி முடிவுக்கான கூட்டம் கடந்த 12 ஆம் திகதி கதிர்காமத்தில் நடத்தப்பட்டபோது, பாதயாத்திரைக்கான உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி திறக்கப்பட்டு, ஜூலை 14ஆம் திகதி பூட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185989
  19. 2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303681
  20. ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதை என்று தமிழில் ஒரு சொலவடை இருக்கெல்லோ!
  21. சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நன்றி தெரிவிப்பு Published By: DIGITAL DESK 3 13 JUN, 2024 | 10:04 AM விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்களுக்கும் அதன் பணிக்குழாமினருக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்குமான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த செயற்பாடு குறித்து நிற்கின்றது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டார். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 2 ஆவது மதிப்பாய்வை நிறைவேற்றி 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185972
  22. Published By: RAJEEBAN 12 JUN, 2024 | 10:58 AM Neve Gordon and Nicola Perugini www.aljazeera.com அனைவரினதும் கவனமும் ரபாவின் மேல் காணப்பட்ட வேளை, இஸ்ரேல் காசாவின் தென்பகுதியில் உள்ள சிறிய பகுதியை பாதுகாப்பான மனிதாபிமான வலயம் என மே 22 ம் திகதி அறிவித்துவிட்டு நான்கு நாட்களின் பின்னர் அந்த பகுதி மீது குண்டுதாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேல் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது மேற்கொண்ட தாக்குதில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், 15 வருடத்திற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டுபோரின் இறுதி தருணங்களில் பொதுமக்களின் அவலநிலையை விவரிக்கும் இரகசிய கேபிள்களை விக்கிலீக்ஸ் இடைமறித்த வேளை தெரியவந்த விபரங்களை நினைவுபடுத்துகின்றன. 2009 மே மாதம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கேபிள்கள் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள ஏழு கத்தோலிக்க மதகுருமார்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க தூதரகம் தலையிடவேண்டும் என மன்னார் ஆயர் எவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் என்பதை தெரிவிக்கின்றன. இந்த பகுதியை பொதுமக்கள் தங்குவதற்கான பாதுகாப்பான இடம் என இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது. குறிப்பிட்ட பகுதிக்குள் 60,000 முதல் 70,000 வரையிலான பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என மன்னார் ஆயர் மதிப்பிட்டிருந்தார். இது மான்கட்டனின் மத்திய பூங்காவை விட இரண்டு மடங்கு பெரிய பகுதி, அழகிய கடற்கரை பகுதியில் அமைந்திருந்தது. ஆயர் தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதை தொடர்ந்து அமெரிக்க தூதுவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை தொடர்புகொண்டார், பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ளவர்களில் அனேகமானவர்கள் பொதுமக்கள் என இலங்கை இராணுவத்தினருக்கு உடனடியா தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள கடும் ஆட்டிலறி தாக்குதல்கள் காரணமாக குறிப்பிட்ட பகுதி பொதுமக்களின் மரணப்பொறியாக மாறக்கூடும் என அமெரிக்க தூதுவர் அச்சமடைந்திருந்தார். காசா பள்ளத்தாக்கிலிருந்து பொதுமக்களை ரபாவின் மனிதாபிமான வலயத்திற்குள் வரச்செய்வதற்கான இஸ்ரேலிய இராணுவத்தின் முயற்சிகளை போல அல்லாமல், ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் விமானங்கள் மூலம் துண்டுபிரசுரங்களை வீசுவதன் மூலமும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதன் மூலம் பொதுமக்களை பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 மக்கள் இந்த பகுதிகளிற்கு சென்றனர், ஐநா தற்காலிக முகாம்களை உருவாக்கியதுடன் பல மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து மிகவும் நெருக்கடியான நிலையிலிருந்த மக்களிற்கு உணவையும் மருந்தையும் வழங்க ஆரம்பித்தது. இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போரிட்ட தமிழ் புலிகள் என்ற ஆயுத அமைப்பும் இந்த பகுதிகளிற்குள் பின்வாங்கியது போல உள்ளது. போராளிகள் மிகவும் நவீனமான தொடர் பதுங்குழிகளை பாதுகாப்பு அரண்களை இந்த பகுதியில் அமைத்திருந்தனர், அங்கு இராணுவத்திற்கு எதிரான தமது இறுதி தாக்குதலை மேற்கொண்டனர். இலங்கை இராணுவம் தான் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொதுமக்களை மீட்டதாகவும் தெரிவித்தாலும் செய்மதிப் படங்களை ஆய்வு செய்தவேளையும், நேரில் பார்த்தவர்கள் பலரின் பெருமளவு சாட்சியங்களும் பாதுகாப்பு வலயம் என தெரிவிக்கப்படுவதன் மீது இலங்கை இராணுவம் மோட்டர்கள் ஆட்டிலறிகளை பயன்படுத்தி தொடர்ச்சியான மிகக்கடுமையான தாக்குதலை மேற்கொண்டதையும் அந்த பகுதியை கொலைகளமாக மாற்றியதையும் வெளிப்படுத்தியுள்ளன. பாதுகாப்பு வலயங்கள் என தெரிவிக்கப்படும் அந்த பகுதிகளில் சிக்குண்டிருந்த பத்தாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரையிலான பொதுமக்கள் அழிக்கப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அனைத்து தற்காலிக அல்லது நிரந்தர வைத்தியசாலைகளும் ஆட்டிலறி தாக்குதலிற்கு உட்பட்டதால் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ வசதிகள் இன்றி பல மணித்தியாலங்கள்- நாட்களிற்கு காத்திருக்கவேண்டிய நிலை காணப்பட்டது. இலங்கை 2009க்கும் காசா 2024ம் ஆண்டிற்கும் இடையிலான சமாந்திரங்கள் விசித்திரமானவை. இரண்டு சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்துவிட்டு இரண்டு நாட்டின் இராணுவங்களும் அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டன, கண்மூடித்தனமாக ஏராளமான பொதுமக்களை கொலை செய்தன, காயப்படுத்தின. பொதுமக்களை காப்பாற்றுவதற்கான மருத்துவபிரிவுகள் மீது இரண்டு சந்தர்ப்பத்திலும் தாக்குதல் இடம்பெற்றது. இரண்டு சந்தர்ப்பத்திலும் இராணுவபேச்சாளர்கள் தங்கள் தாக்குதல்களை நியாயப்படுத்தினர், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதை ஏற்றுக்கொண்ட அவர்கள் , ஹமாசும்; தமிழ் புலிகளும் பொதுமக்கள் மத்தியிலிருந்தனர் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர் என தெரிவித்தனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் மேற்குலக நாடுகள் அப்பாவிபொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தன, எனினும் இரண்டு நாடுகளினதும் இராணுவங்களிற்கும் ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து ஆதரித்தன. இலங்கையை பொறுத்தவரை அந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இரண்டு சூழ்நிலைகளிலும் மோதலில் ஈடுபட்ட தரப்பினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐநா தெரிவித்துள்;ளது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் தங்களின் படுகொலைகளை நியாயப்படுத்த சர்வதேச சட்ட நிபுணர்களை இரண்டு நாடுகளும் பயன்படுத்தின. இரண்டு சந்தர்ப்பங்களிற்கு இடையிலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. காசா இனப்படுகொலை இருளில் இடம்பெறவில்லை. இலங்கையை பொறுத்தவரை உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நீண்டகாலம் எடுத்தது. ஆனால் காசாவை பொறுத்தவரை சர்வதேச கவனமும், கருப்பு 2371 இல் தலைதுண்டிக்கப்பட்ட குழந்தைகளினதும் கரிய உடல்களினதும் படங்களும் (நேரடியாக ஒலிபரப்பானவை) இலங்கையின் நிகழ்ந்த கொடுரங்கள் மீண்டும் நிகழ்வதை தடுக்க முடியும். https://www.virakesari.lk/article/185888
  23. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்திய வழக்கு விசாரணை - ஹண்டர் வழக்கின் பின்னணி பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்டனி சர்ச்சர் பதவி, பிபிசி வட அமெரிக்க நிருபர் 27 நிமிடங்களுக்கு முன்னர் கைத்துப்பாக்கி உரிமம் பெறும் விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக பொய் சொன்னதற்காக அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஜோ பைடனுக்கு பேரிடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினருடன் எப்போதுமே நெருக்கமான பிணைப்பை கொண்டிருக்கும் பைடன், தன் மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி மற்றும் சோகத்தால், ஒரு குடும்பத் தலைவராக இரு மடங்கு துயரத்தை கொண்டிருக்கிறார். தற்போது அவரது மகன் அமெரிக்க சட்டத்துக்கு புறம்பான மூன்று குற்றங்களில் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். எனவே அவருக்கு நீண்ட கால சிறை தண்டனை கிடைக்கக்கூடும். அதே சமயம் ஹண்டர் பைடனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நவம்பர் தேர்தலில் அமெரிக்க மக்கள் வாக்களிக்கும் போக்கை மாற்ற வாய்ப்பில்லை. வாக்குச் சீட்டில் இருக்கப்போவது ஹண்டரின் பெயரல்ல, அவருடைய தந்தையின் பெயர் தான். எனவே இந்த விவகாரம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் ஹண்டரின் குற்றங்களில் பைடனுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை தொடர்புப்படுத்தும் எந்த ஆதாரமும இல்லை. பொதுமக்கள் இது தொடர்பான வழக்கு விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். "நான் ஒரு அப்பாவும் கூட.. " ஹண்டரின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், பைடன் தனது இரட்டைக் கடமைகளை சுட்டிக்காட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "நான் அதிபர், ஆனால் நான் ஒரு அப்பாவும் கூட" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் தனது மகனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக கூறினார். மேலும் தன் மகன் உறுதியான ஆணாக வளர்ந்து நிற்பதை பார்த்து பெருமைக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். விசாரணையின் தொடக்கத்தில், ஜோ பைடன் மகனின் வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறினார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, பைடன் தனது அரசுக் கடமைகளை மேற்கொண்டார். தேர்தல் பரப்புரைகளையும் செய்தார். ஆனால் வாரக்கணக்கில் நடைபெற்ற அவரது மகனின் நீதிமன்ற விசாரணை பற்றிய கேள்விகள், எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்தன. அதே போன்று, ஹண்டர் தொடர்பான வழக்குகளும் தீர்ப்பும், இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள மிக முக்கியமான அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்திற்குத் தயாராகி வரும் பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் வழக்கு விசாரணையில் இருந்து பைடன் மகனின் வழக்கு வேறுபடுவது எப்படி? பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது, முதல் இரண்டு ஆண்டுகள் அவரது மனைவி ஜில் பைடனின் பத்திரிகை செயலாளராக பணியாற்றிய மைக்கேல் லாரோசா, இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்தார் : "இது, நிச்சயமாக, எந்த ஒரு தந்தைக்கும் தனிப்பட்ட முறையில் அதிக பாதிப்பாக ஏற்படுத்தும்." என்கிறார். மேலும் பேசிய அவர், "ஒரு அதிபராக பைடன் அவரது கடமைகளில் இருந்து தவறமாட்டார். இவ்வழக்குகள் அவரை கடமையில் இருந்து திசைத்திருப்பாது. ஆனால் அது குடும்பத்தில் உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தும்.” என்றார். கடந்த வாரம் டி-டே (D-Day) நினைவேந்தல் நிகழ்வுக்காக பிரான்சில் இருந்தபோது, பைடன் தனது மகனை மன்னிக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று கூறினார். மேலும் அவர் ஜூரியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கூறினார். டொனால்ட் டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முறைக்கேடான வழக்கு என்று மறுத்ததற்கு மாறாக பைடனின் பேச்சு அமைந்திருக்கிறது. ஹண்டர் பைடன் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக டிரம்ப் இவ்வழக்கு கண் துடைப்பு என்று கூறினார். பரப்புரைக்காக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், பைடன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட கடுமையான குற்றங்களில் இருந்து மக்களை திசைத்திருப்பவே ஹண்டர் மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்றார் டிரம்ப். இதே கருத்தை பல குடியரசுக் கட்சியினரும் எதிரொலித்தனர். தெற்கு கரோலினாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி மேஸ், இந்த தீர்ப்பு "நியாயத்தின் மீது போர்த்தப்பட்ட முக்காடு" என்று கூறினார். டிரம்பின் வழக்கு விசாரணைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சண்டையும் சச்சரவும் ஆக இருந்தது. குடியரசுக் கட்சி பிரமுகர்கள் தங்களின் முன்னாள் அதிபர் டிரம்பின் விசாரணை நடவடிக்கைகளை கண்டித்து கொண்டிருந்தனர். ஹண்டரின் வழக்கு விசாரணை வேறுபட்ட உணர்வைக் கொண்டிருந்தது, ஒரு பைடன் குடும்பம் ஒரு இருண்ட காலத்தை சந்திக்க தயாராக இருப்பதை பிரதிபலித்தது. அவர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தவில்லை. ஹண்டர் பைடன் போதைக்கு அடிமையானது ஏன்? பட மூலாதாரம்,REUTERS ஹண்டர் பைடன் தனது சகோதரர் பியூ மூளை புற்றுநோயால் இறந்த காலக்கட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானார். விசாரணையின்போது, ஹண்டரின் நினைவுக் குறிப்புகள், அவரது குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சாட்சியங்கள் ஆகியவற்றின் மூலம் போதைப் பழக்கத்துடனான அவரது போராட்டம் தெரியவந்தது. மேலும் ஹண்டரின் போதை பழக்கம் அவரது குடும்ப உறவுகளின் ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் விசாரணைகளின் போது வலி மிகுந்த சாட்சியங்களாக வழங்கப்பட்டன. வழக்கு விசாரணையின் எல்லா நேரங்களிலும், ஹண்டர் பைடனின் குடும்ப நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள், அவரின் தாய் ஜில் பைடன் மற்றும் அவரது மனைவி மெலிசா கோஹன் உட்பட அனைவரும் அவருக்குப் பின்னால் அமர்ந்து, அவரை பார்த்து கொண்டனர். சில சமயங்களில் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தனர். விசாரணையின் இடைவேளையின் போது அவரது கைகளை பிடித்து தைரியம் சொன்னார்கள். வழக்கறிஞரின் இறுதி வாதங்களின் போது அவரது சகோதரி ஆஷ்லே அழுதார். "நானும் எனது மனைவி ஜில்லும் எப்போதும் எங்கள் அன்பு மற்றும் ஆதரவை ஹன்டருக்கும் எங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுப்போம். எந்த சூழலிலும் இது மாறாது" என்று பைடனின் தீர்ப்புக்கு பிந்தைய அறிக்கையின் முடிவில் எழுதப்பட்டிருந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் அவரது இறுதி வாதத்தின் போது, இது மிகப்பெரிய வழக்கு என்றும், ஹண்டர் பைடன் ஒரு கைத்துப்பாக்கிக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தபோது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தே பொய் சொல்லி இருக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இறுதியில், நீதிக் குழு (Jury) ஹண்டர் மீது தவறு இருப்பதை உறுதி செய்தது. இதனால் ஹண்டர் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹண்டர் பைடன் அதிபர் பைடனின் முதல் மனைவியின் மகன் ஆவார். அரை நூற்றாண்டுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் தனது கைக்குழந்தையுடன் பைடனின் முதல் மனைவி இறந்து போனார். கார் விபத்தில் ஹண்டரும் அவரது சகோதரர் பியூவும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஆனால் பியூ சில ஆண்டுகளுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். முதல் மனைவியின் ஒரே வாரிசாக இருப்பது ஹண்டர் மட்டும் தான். ஹண்டர் பைடன் தற்போது தண்டனைக்காக காத்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் தனது தண்டனையை முடிவு செய்த பிறகும் அவருக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்துவிடாது. 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மத்திய வருமான வரியாக செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் செப்டம்பர் மாதம் மேலும் ஒரு வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணை டெலாவேர் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளை கொண்டிருக்காது. ஆனால் அது அதிபருக்கு அரசியல் ரீதியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஹண்டரின் வெளிநாட்டு வணிக பரிவர்த்தனைகள் மற்றும் அதிபருடனான நிதி உறவுகள் பற்றி எதிரணியான குடியரசுக் கட்சி விமர்சகர்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது. போதைப் பழக்கமும் அது ஏற்படுத்தும் விளைவுகளும் பல அமெரிக்கர்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. எனவே ஹண்டர் பைடனின் வழக்கு மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், நிதி முறைகேடு மற்றும் வரி மோசடி குற்றச்சாட்டுகள் வாக்களிக்கும் பொதுமக்களிடமிருந்து பெரிதாக அனுதாபத்தை உருவாக்காது. https://www.bbc.com/tamil/articles/c0661d572rko
  24. Published By: DIGITAL DESK 7 13 JUN, 2024 | 11:02 AM கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து. இதன்போது இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இ.போ.சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். மேலும், இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் போதிய பஸ்கள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர். இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பஸ்களும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/185971

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.